கரண்டு இல்ல, பேனு சுத்தல அதனால வேல செய்யலை...
கரண்டு சப்ளை இல்லை, அதனால மின்விசிறி வேலை செய்யவில்லை. இதன் காரணமாக எனது வேலைகளை முடிக்க முடியவில்லை. ஒழுங்கு மரியாதையாக தங்கு தடையற்ற மின்சாரம், ஜெனரேட்டர் வசதிகளை செய்து கொடுத்து விட்டு பிறகு வேலைகளை முடிப்பது குறித்து என்னிடம் பேசு. வேக்காட்டுல உக்காந்துக்கிட்டு வேலய செய்ய சொன்னா எப்படி செய்யிறது?
இந்த மாதிரி எக்கத்தாளம் பிடிச்சு பேசுனா என்ன நடக்கும்? பொடதிலேயே அடிச்சு வெளியெ தொரத்திருவாங்க. இந்த மாதிரி அல்பத்தனமான கோரிக்கைகளை விடுங்கள். நியாயமான உரிமைகளுக்காக தொழிலாளர்களும், மக்களும் போராடினாலே கூட நீதிமன்றம் குறுக்கே பாய்ந்து குய்யோ முறையோ என்று அறிவுரை வழங்கி தண்டிக்கும்.
அப்படியாப்பட்ட நீநீநீநீநீதி மன்றத்தின் மாமாமாமாட்சிமை தாங்கிய நீதிபதிகள்தான் மேற்சொன்ன முதல் பத்தி அரை வேக்காட்டு காரணத்தை முன் வைத்து வழக்குகள் நிலுவையில் இருப்பதை நியாயப்படுத்துகிறார்கள். புச்சா எதுவும் சிக்கலையே கிசு கிசு பேசன்னு யோசிச்சு கொஞ்ச நா முன்ன மன்னுமோகன் சிங் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து கருத்துச் சொல்லியிருந்தார். இவற்றை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதுக்குத்தான் இப்படி சாமியிடிருக்கானுங்க நீதிபதிகள். அதுவும் கொஞ்சம் நஞ்சமில்ல 21 ஐகோர்ட் நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டில் ஒன்னு கூடி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
ஒரே வேக்காடா இருந்தாங்கண்டி வேல நடக்கிலன்னு சொல்வதை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்றால் கூட நிலுவையில் இருக்கும் வழக்குகளையும், அவற்றை வருடக் கணக்கில் இழுத்தடிக்கும் 'வாய்தா'பதிகளின் டிமிக்கிகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. குறைந்த பட்சம் வேக்காட்டின் காரணமாக வழக்குகள் தீர்க்கப்படாமல் போய்விட்டன என்பதற்கு ஆதாரம், புள்ளிவிவரம் கூட வழங்காமல் மிகத் திமிராக ஆணையிடுகிறார்கள் நீதிபதிகள். இவிங்க சொல்றத பாத்தா 24 மணி நேரமும் கோர்ட்டுல கரண்டு இல்லங்கற மாதிரி இருக்கு. இவர்கள் வேக்காட்டில் வாடுவதாக காரணம் கூறி இழுத்தடித்துள்ள லட்சக்கணக்கான வழக்குகளில் சிக்கிக் கொண்டு சிறைக் கொட்டடிகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் கொசுக்கடியிலும், வேக்காட்டிலும் வாழ்க்கையை இழுந்து வருகிறார்கள் ஆயிரக்கணக்கான அப்பாவிகள்.
ஆனா இதே நீதிபதிகள்தான் தமது உச்சானிக் குடுமியை சுருட்டி வைத்துக் கொண்டு, இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளின் வழக்குகளை ஞாயிற்றுக்கிழமை கூட கடைய திறந்து வைத்து விரைவாக முடித்து வைத்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
டேய்.. என்னப்பாத்தாடா கேள்வி கேக்குற மவனே ஒழுங்கா எனக்கு முதுகு சொறிஞ்சு விடுடா அப்புறம் வேல நடக்கிறத பத்தி பேசுன்னு சொல்லி ஆண்டைத்தனத்துடன் தாண்டவம் ஆடியுள்ளனர் நீதிபதிகள். அத்தோட சேந்து இதுதான் சாக்குன்னு சில பல சலுகைகளையும் கோரியுள்ளனர்.
ஏண்டா வேல நடக்கலன்னு கேட்டா காக்கா கத்துச்சு, குயில் கூவுச்சி, மூக்குல வேர்வைன்னு கதய விட்டுப்புட்டு அத்தோட சேர்ந்து மேற்கொண்டு சில பல சலுகைகளையும் கேக்கற மொள்ளமாறித்தனம் இருக்கே... அடேங்கப்பா... சும்மாவா சொன்னாய்ங்க.... ஒலகத்திலேயே பெரிய ஜனநாயகம் இந்தியா... இந்தியா... இந்தியான்னு....
ஜோய்ங் லந்து....(ஜெய் ஹிந்த தாம்பா அப்படி சொன்னேன்)
""Do you expect a trial court judge to achieve the case disposal target when he has to sit all day under a fan that stands still and a court room that is packed with litigants creating an unworkable condition ""
""As the state governments have been citing funds crunch to extend additional financial assistance to the subordinate judiciary, the CJs again suggested that financial autonomy be given to the HCs. ""
அசுரன்
27 பின்னூட்டங்கள்:
தோழர் அசுரன் ஸ்டாலின் குரு என்பவரிடம்
நீங்கள் என்ன விவாதம் செய்தீர்கள் ?
அவர் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை
என்று கூறுகிறார்.
கீழே அவருடைய தளத்தில் நாங்கள் இட்டிருக்கும்
பின்ணூட்டங்களும் அவருடைய பதிலும் அதற்கு
கடைசியாக நாங்கள் போட்டுள்ள பின்ணூட்டமும்
கொடுத்துள்ளேன்.
4 comments:
bagat said...
உங்களுடன் விவாதிக்க வேண்டும் ஸ்டாலின் குரு அவர்களே
விவாதத்தை துவங்கலாமா ?
உங்களுடைய தளத்திலேயே விவாதிக்கலாமா ?
உங்களுடைய விருப்பப்படியே பதிலுக்கு காத்திருக்கிறோம்.
August 12, 2009 1:04 AM
ஸ்டாலின் குரு said...
தாராளமாக இங்கேயே விவாதிப்போம்
August 12, 2009 1:30 AM
சர்வதேசியவாதிகள் said...
இந்த பதிலை தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தோம்
அதாவது இங்கேயே விவாதிப்போம் என்கிற பதிலை.
உங்களுடன் விவாதிக்கலாம் தான் ஆனால் அதை
எமது தளத்தில் வைத்துக்கொள்வதே நல்லது என்று கருதுகிறோம்.
ஏனெனில் 2007 ம் ஆண்டு ஆர்குட்டில் உங்களுடன் விவாதித்த
எங்களுடைய தோழர் ரஞ்சித் ஸ்டாலினுடைய அனைத்து
ஸ்கிராப்புகளையும் நீங்கள் நீக்கியுள்ளீர்கள்.
இல்லை அவ்வாறு நீக்கவில்லை என்றால் அந்த ஸ்க்ராப்களை
காட்ட முடியுமா ?
எனவே தற்போதைய இந்த விவாதத்ததிலும் அதுபோல எதுவும்
நடக்க வேண்டாம் என நாங்கள் விரும்புகிறோம்.அதனால் இந்த
விவாதத்தை எமது தளத்தில் நடத்துவதே சரி என்று கருதுகிறோம்.
உங்கள் கருத்து என்ன என்பதை சொல்லுங்கள்.
விவாதத்தை துவக்குவோம்.
http://vrinternationalists.wordpress.com
August 15, 2009 1:46 AM
ஸ்டாலின் குரு said...
ஸ்டாலின் ரஞ்சித்துடன் நான் ஸ்க்ராப் புக்கில் விவாதித்தேனா? எப்பொழுது அந்த சம்பவம் நடந்தது என்று சொன்னால் நன்றாக இருக்கும்
ஸ்க்ராப் புக்கில் உரையாட மட்டுமே செய்தோம்.எனது பதிவுகளைத் தவிர என் ஸ்க்ராபில் எந்த உரையாடலையும் நான் வைத்துகொள்வதில்லை,எனது ஸ்க்ராபில் எதை வைப்பது எதை நீக்குவது என்பது எனது விருப்பம்.
ஸ்க்ராப் புக்கை கண்காணிப்பு செய்யும் மக்கள் கமிசாராக உங்களை யார் நியமித்தது என்று அறியலாமா?
அது சரி புரளி பேசும் போலி தமிழ்தேசியவாதிகள் என்கிற தலைப்பில் என்னோடு விவாதித்த அசுரன் எனது கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாதபோது விவாதிக்க நேரம் இல்லை என்று சொல்லிய பிறகு தனது பிளாக்கில் எந்த பதிவுகளையும் இடாமல்தான் இருந்தாரா?
சிபிஎம் கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட நிலைப்பாடும் டவுசர் கழண்ட சந்திப்பும்
என்கிற தலைப்பில் நான் இட்ட பின்னூட்டங்களை இரண்டு நாட்கள் கழித்தே பிரசுரித்தாரே அப்பொழுது நான் ஏதும் கேள்விகள் கேட்டேனா உங்களை ?
அவ்வளவு பயத்துடன் வந்து என்னுடன் விவாதிக்குமாறு உங்களை வருந்தி அழைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை நீங்கள் தாராளமாக உங்கள் அன்பு
சர்வதேசியவாதிகளுடனே கூடிக் குலாவிக் கொண்டிருங்கள்
August 16, 2009 10:36 PM
சர்வதேசவாதிகள்:
ரஞ்சித் ஸ்டாலினுடன் நீங்கள் விவாதிக்கவே இல்லை,
அப்படி ஒன்று நடக்கவே இல்லை இல்லையா ?
நல்லது,சரி அது போகட்டும்.
உங்களுடைய பிளாக்கிலேயே விவாதம் செய்வோம் ஆனால்
அப்போது ரஞ்சித் ஸ்டாலினுடன் நீங்கள் 'சும்மா பேசியதை'
ஸ்கிராப் புக்கில் டெலிட் செய்ததை போல தற்போது உங்கள்
பிளாக்கில் நடக்கும் விவாத பின்ணூட்டங்களை அழிக்க மாட்டீர்களே?
அசுரன் இரண்டு நாட்கள் கழித்து பின்ணூட்டங்களை வெளியிட்டார்
இருந்தும் நான் எதுவும் கேள்வி கேட்டேனா என்று கேட்கிரீர்கள்
இதற்கு என்ன அர்த்தம் ?
நான் கேள்வி கேட்கவில்லை அதனால நீங்களும் கேட்காதீங்கன்னு
சொல்ல வர்றீங்களா ?
உங்கள் கேள்விகளுக்கு அசுரன் பதிலளிக்கவில்லை என்றால் ஏன்
பதில் சொல்லவில்லை என்று நீங்கள் தான் கேட்டிருக்க வேண்டும்.
நீங்கள் அப்படி கேட்டும் எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது எனவே
விவாதிக்க முடியவில்லை என்று அவர் பதிலளித்திருந்தால் அப்படியானால் மற்ற பதிவுகளை மட்டும் எப்படி எழுதுகிறீர்கள் என்று நீங்கள் தான் அவரை விடாமல் கேட்டிருக்க வேண்டும்.உங்களைப்பார்த்து அவர் பயந்து ஓடுகிறார்
என்றால் நீங்களும் ஏன் அதை அனுமதித்தீர்கள்.
அசுரன் விவாதிக்க வரவே முடியாது என்று சொல்லியிருந்தாலும் நீங்கள் அவரை அம்பலப்படுத்தி ஒரு பதிவு எழுதி அவரை பொது மேடைக்கு இழுத்திருக்க வேண்டியது தானே ?
இதையெல்லாம் நீங்கள் செய்தீர்களா ?
செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை ?
சரி பாவம் பொழச்சிபோகட்டும்ன்னு
பெருந்தன்மையோடு விட்டுட்டீங்களா!
ஆனால் எங்களையும் அப்படி பெருந்தன்மையுடன்
துரத்திவிடாதீர்கள்.
உங்களைப் போன்ற பெரியவர்களை கண்டு சின்னப்பசங்களான
எங்களுக்கு சற்று அச்சம் தான்,எனினும் உங்களிடமிருந்து துணிவை
கற்றுக்கொள்ள நாங்கள் முன் வருகிறோம்.
அசுரனிடம் நீங்கள் கேட்டு அவர் பதிலளிக்காமல் போன கேள்விகளுக்கு
நாங்கள் பதில் அளிக்கிறோம்.
விவாதத்தை துவங்கலாமா ?
ஸ்டாலின் குரு என்பவர் விவாதங்களில் நேர்மையற்றவர். வடிவேலு போல திரும்ப திரும்ப பேசுபவர். ஆயினும் அவருக்கு அசுரன் தளத்தில் தகுந்த முறைவில் பதிலளித்தே வந்துள்ளது.
கடைசியாக அவர் மக இக மீது அபாண்டமான ஒரு குற்றாச்சாட்டை வைத்தார் அதற்கு மன்னிப்பு கேட்டால் மேற்கொண்டு பேசலாம் என்றதற்கு ஓடிப் போய்விட்டார். அவருடன் நடந்த விவாத விவரங்கள் விரைவில் இடப்படும்
//அசுரன் இரண்டு நாட்கள் கழித்து பின்ணூட்டங்களை வெளியிட்டார்
இருந்தும் நான் எதுவும் கேள்வி கேட்டேனா என்று கேட்கிரீர்கள்
இதற்கு என்ன அர்த்தம் ?//
இதெல்லாம் சுத்த சிறுபிள்ளைத்தனம் எனக்கு எப்பொழுது ஓய்வு கிடைக்கீறதோ அப்பொழுது இணையம் வருகிறேன். பின்னூட்டங்களை வெளியிடுகிறேன்.
புரளி பேசும் போலித் தமிழ் தேசியவாதிகள் கட்டுரையில் என்னுடம் விவாதித்தார் ஸ்டாலின் குரு.
அவரது வடிவேலு பாணி திரும்ப திரும்ப திரிம்புதல்(திரிப்புதான்) தாங்க மாட்டாமல் கீழ்கண்ட பின்னூட்டத்தை போட்டிருந்தேன்.
அந்த குறிப்பிட்ட கட்டுரையில் பல்வேறு விசயங்களை முன் வைத்த போதும் அவை எதையுமே உள்வாங்கமால் கிளிப் பிள்ளை போல பேசிய ஸ்டாலின் குருவிடம் அப்போதைக்கு என்னால் கொடுக்க இயன்ற பதில் கீழே இருந்ததுதான்.
http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html
#############
Thozar Stalin Guru,
Very little time to spend in Web. So unable to respond to anything.
@@@
ஒரு தரப்புக்கும் மட்டும் செவி கொடுத்தால் இருளை அடைவாய்,இரு தரப்புக்கும் செவி கொடு அறிவு பெறுவாய்
@@@@@@
Hope you are following this advise and have digested my arguments so far.
I will be following this advise henceforth.
Asuran
###########
ஏனேனில் இந்த பின்னூட்டத்தை படித்த பிறகாவது நடந்துள்ள விவாதங்களை மெதுவாக அவர் பரிசிலிப்பார் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்தேன். அதையே பின்வாங்கி ஓடிவிட்டதாக கதை விடுகிறார்.
அந்த கட்டுரையில் நடந்துள்ள விவாதங்களை படித்தால் புரியும்.
ஸ்டாலின் குருவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இடப்பட்ட எனது பின்வரும் பழைய பின்னூட்டங்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதில் சொல்லாமலேயே வேறு தளங்களுக்கு அவர் பயனித்து சென்று கொண்டே இருந்தார். உண்மையிலேயே இப்படிப்பட்ட குரங்கு பல்டி விவாதக்காரருடன் விவாதிப்பது கடினமே. அந்த வகையில் எனது தோல்வியை ஒப்புக்கொள்ள நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.
ஸ்டாலின் குருவுடன் விவாதிக்க தயாராகும் தோழர்கள் கீழே உள்ள கேள்விகளை சுற்றி கறாரக விவாதம் நடத்தினால் அவரது புலம்பல் எல்லை மீறிப் போவதை கண்கூடாக காணலாம்.
Contn.....
அந்த பின்னூட்டங்கள் எல்லாம் மிகப் பெரிதாக இருப்பதால் இங்கு இட முடியவில்லை. எனவே தோழர்கள் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையிலேயே படித்து பார்க்கலாம்.
http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html
புரளி பேசும் போலித் தமிழ் தேசியவாதிகள்
அவர் ம க இ க மீது அபாண்டமாக புரளி பேசிய பதிவு
http://poar-parai.blogspot.com/2009/02/cpm_05.html
ஸ்டாலின் குரு எனது நண்பர்தான்
அவருடன் என்ன விவாதம் தோழர்
இங்கே ஸ்டாலின் குரு மற்றும் ஸ்டாலின் ரஞ்சித் எனும் இரு பெயர்கள்
இடப்பட்டுள்ளன
இருவரும் வேறு நபர்கள்
ஸ்டாலின் குரு மக இக தோழர் அல்ல
ஸ்டாலின் ரஞ்சித் மக இக ஆதரவாளர்
என்பதை தெரிவித்து கொள்கிறேன்
எனக்கு தெரிந்து தோழர் அசுரன் எந்த விவாதத்திலும் பின்வாங்கியதில்லை
ஏனெனில் அறிவுநாணயம் உள்ளவர்கள் பின்வாங்குவதில்லை
அந்த குறிப்பிட்ட விவாதங்களை தனிப் பதிவாக இட்டுள்ளேன்
http://tamilparai.blogspot.com/2009/08/blog-post.html
தோழர் அசுரன் உங்களுடைய பின்ணூட்டங்களை வாசித்தேன்.
ஸ்டாலின் குரு மான் கராத்தேயில் மாபெரும் வீரர் என்பதை
அறிய முடிகிறது.எனினும் வேலை இருப்பதாகவும் விவாதிக்க
நேரம் இல்லை என்றும் நீங்கள் தான் பதிவின் கடைசி
பின்ணூட்டத்தை போட்டுள்ளீர்கள்.அந்த விவாதத்திலேயே
அவரை அம்பலமாக்கி கிழித்து தொங்க விட்டிருக்க வேண்டும்.
அதற்கான நல்ல வாய்ப்பை நாம் தான் இழந்துவிட்டோம்.
என்றாலும் தற்போது
அத்தகையதொரு நல் வாய்ப்பை ஸ்டாலிகுரு நமக்கு அளிப்பார்
என்று கருதுகிறேன்.
தோழர் அசுரன் அவர்களே ! வணக்கம் நலமா ? நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவினை காண்கிறோம்.
அப்புறம், திருவாளர் அதியமானிடம் நான் வினவு தளத்தில் விவாதிப்பதற்கு உங்களுடைய பதிவுகளை பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் அதியமான் வழக்கம் போல, டாலர், 1991, சிலி என கிலி பிடித்து வட்டம் விட்டதால் தலை கிறுகிறுத்து என் பொன்னான நேரங்களை உங்களைப் போன்றவர்களின் பதிவுகளைப் படிக்க உபயோகித்து வருகிறேன். முடிந்தால் நேரில் சந்திப்போம்.
//""Do you expect a trial court judge to achieve the case disposal target when he has to sit all day under a fan that stands still and a court room that is packed with litigants creating an unworkable condition ""//
Indian judges and lawyers dress code is stupid and unsuitable for our climate. if this is changed to light cotton dress with no frills, then half the problem will be solved.
and DRT (debt recovery tribuinals) were constitued only in recent years. and many judicial reform reports are lying unimpmemented.
the lawyers themselves oppose many reforms which many speed up the process. vested interests...
புலிகள் தோற்றவுடன் விமர்சனம் செய்த
மக இக பேச்சு புலிகளுக்கு வணக்கம்
ஈழம் ஒரு மறு ஆய்வு புலிகள் செய்த தவறுகள்
என புத்தகம் போட்டு விற்ற நீங்கள்
இந்த அறிவுரையை தேர்தலுக்கு முன் ஏன் சொல்லவில்லை
ஸ்டாலின் குரு, ரஞ்சித் ஸ்டாலின் இவர்களை படித்திருக்கிறேன். (எத்தன ஸ்டாலிகள்ப்பா !!).
ஆர்குட் ஸ்டாலின் குருவோடு பல காலமாக, பல பல விவாதங்கள். !!
புலிகளை விமர்சித்தால், ம.க.இ.க தோழர்களை "பார்பனவாதிகள்" என்கிறார் ஸ்டாலின் குரு. மிகவும் எளிமைபடுத்தப்பட்ட அவதூறு. மாற்று கருத்துகள் வைத்தாலே, அவரை ஒரு "பார்பனவாதி: என்று முத்திரை குத்துவது தான் உண்மையான பார்பனவாதம். ம.க.இ.க தோழர்களோட பல விசியங்களில் கடுமையான கருத்து மாறுபாடு எமக்கு இருந்தாலும், சில முக்கிய விசியங்களில் அவர்கள் மிகச்சரியாகவே நிலைபாடு எடுக்கின்றனர். விடுதலை புலிகளை பற்றி அவர்கள் கருத்துக்கள் சரியே. முக்கியமாக ராயகரனில் நிலைபாடு மிகச் சரியானது மற்றும் தெளிவானது. ஃபாசிசம் என்றால் என்னவென்று புரியாதவர்களே, ஸ்டாலின் குரு போல கருதுவார்கள்.
//அப்புறம், திருவாளர் அதியமானிடம் நான் வினவு தளத்தில் விவாதிப்பதற்கு உங்களுடைய பதிவுகளை பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் அதியமான் வழக்கம் போல, டாலர், 1991, சிலி என கிலி பிடித்து வட்டம் விட்டதால் தலை கிறுகிறுத்து என் பொன்னான நேரங்களை உங்களைப் போன்றவர்களின் பதிவுகளைப் ////
:)))) good.
சிலி பற்றிய எமது பதிவுகளுக்கு பதில் சொல்லமுடியாவிட்டால் கிலிதான் பிடிக்கும் !!
டாலர் பற்றியும், 1991 சிக்கல் பற்றியும் எமது பதிவுகளுக்கு நேர்மையான பதிலகள் /
மறுப்புகள் சொல்லமுடியாவிட்டாலும் அப்படிதான் தலை சுத்தும்.
:))
//Indian judges and lawyers dress code is stupid and unsuitable for our climate. if this is changed to light cotton dress with no frills, then half the problem will be solved.//
சரியாகத்தான் சொல்றீங்க அதியமான். அப்படியே நீதிபதிகள் ஆண்டை மனோபாவத்தின் தேவையற்ற பிரில்களையும் கழற்றி வைக்க வேண்டும்
//இந்த அறிவுரையை தேர்தலுக்கு முன் ஏன் சொல்லவில்லை//
தேர்தலுக்கு முன்பு பேசப்பட்டதை எழுத்து வடிவில் கொண்டு வந்து தேர்தலுக்கு பின்பு வெளியிட்டுள்ளனர்
//)))) good.
சிலி பற்றிய எமது பதிவுகளுக்கு பதில் சொல்லமுடியாவிட்டால் கிலிதான் பிடிக்கும் !!
டாலர் பற்றியும், 1991 சிக்கல் பற்றியும் எமது பதிவுகளுக்கு நேர்மையான பதிலகள் /
மறுப்புகள் சொல்லமுடியாவிட்டாலும் அப்படிதான் தலை சுத்தும்.//
வினவின் ஆகஸ்ட் கவிதைப் பதிவில் உங்களுடைய சிலி பதிவிற்கு என்னுடைய பதில் :
நான் : //Standard of living has grown much higher in Chile now and is almost like France is some ways,// அடாஅடா நீங்கள் தான் மெச்ச வேண்டும். சிலி அரசினுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையின் படியே கால்வாசிப்பேர் வேலையின்றி உள்ளனர். மேலும், 10% பசிக்கொடுமையில் வாடுகின்றனர். அலண்டேயின் இடது அரசு இயங்குவதற்கு உள்ளேயே அவர் அரசு கவிழ்க்கப்பட்டு இராணுவக் கொடுங்கோல் ஆரம்பித்தது. நீங்கள் சொல்லிய அனைத்து சமூகக் கொடுமைகளும் இராணுவ அரசினால் ஏற்பட்டவை. நீங்கள் உங்கள் நண்பர் டோண்டு, சுயமோகன் முதலான முதலாளித்துவ வாதிகளைதான் நம்புவீர்கள். ஜப்பான் பொருளாதாரம் ஒரு chronical ecomomy. நம்மூர் ரியல் எஸ்டேட் போன்று பொருட்களை வாங்கி பின்பு அதிக விலைக்கு விற்பவர்கள். உங்களுடைய அனைத்து இடுகைகளுக்கும் எகனாமி டைம்ஸ் குருமூர்த்தி கட்டுரைகளுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது. நீங்கள் உங்கள் முதலாளித்துவதோடு நீடுழி வாழ்க. இனிமேல் உம்மோடு மல்லுகட்டி எங்கள் நேரத்தை விணாக்க விரும்பவில்லை. சூப்பர்லிங்க்ஸ், பகத் உங்கள் அனைவருக்கும் ஒரு தோழமையான வேண்டுகோள் : உங்கள் எந்த ஆதாரப்பூர்வமான தரவுகளையும் அதியமான் அவர்கள் படித்து தன்னை சுய பரிசோதனை செய்வதாகத் தெரியவில்லை. ஆகவே உங்கள் பொன்னான நேரங்களை நீங்கள் வீணாக்க வேண்டாம்.
நான் யாராக இருந்தால் என்ன
சரி முன்பு சொன்ன அறிவுரை சரியாக மே 17 க்கு பிறகு விற்பனைக்கு
வந்ததா நம்பிட்டோம்
புலிகள் தீர்வல்ல சரி என்ன தீர்வு
இரயாகரன் கூறும் தீர்வு சரியா அதாவது சிங்கள மக்களை உள்ளடக்கிய
வர்க்க போராட்டம் இலங்கை மேலாதிக்கத்தையும் இந்திய மேலாதிக்கத்தையும்
எதிர்த்து போராடி போராடி ஈழத்தை வெல்ல வேண்டும்
வெறும் காகித போராட்டமாக தெரியவில்லையா
///தோழர் அசுரன் அவர்களே ! வணக்கம் நலமா ? நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவினை காண்கிறோம்.//
வணக்கம் தோழர் அறிவுடைநம்பி,
நலமாக இருக்கிறேன். தொடர்ந்து உற்சாகம் குன்றாமல் விவாதியுங்கள். ஒவ்வொரு விசயத்தையும் விரிவாக ஆய்வு செய்து சரியான தரவுகளுடன் விவாதியுங்கள். மார்க்ஸியத்தை திட்டமிட்ட வகையில் ஊன்றிக் கற்றுக் கொண்டால், தெளிவான முடிவுகளை முன் வைக்க இயலும். மேலும், இப்படியான இணைய பயிற்சி, எதிர் விவாதம் செய்பவரை மாற்றுகிறதோ இல்லையோ நமது உலகறிவை விசாலப்படுத்திவிடும். :-)
வாழ்த்துக்களுடன்,
அசுரன்
/சரி முன்பு சொன்ன அறிவுரை சரியாக மே 17 க்கு பிறகு விற்பனைக்கு
வந்ததா நம்பிட்டோம்//
வாங்க சார்.... நல்லா இருக்கீங்களா... வேற என்ன விசயம்?
puraci kavi,
i had clearly stated that the poverty levels and hunger in Chile today is much much better than in 70s. have you any idea about the 400 % annual inflation rate that destroyed Chilean economy in early 70s due to Allende's socialsitc polices, which no idiot will now try to re-implement. Chile is not 100 % poverty free. i never said that. and you try to twist all that. what are you saying then ? chile is much worse off today than in 70s ? try to prove that with data. relative stat. or try to meet older people from Latin America who knew the past better.
you don't know what you are talking about. that is all.
அசுரன் அவர்களே
சர்வதேசவாதிகள் தளத்தில் விவாதிக்கிறேன்
முடிந்தால் பங்களிக்கவும்
-இந்தியன் காரல்மார்க்ச்
அசுரன் அவர்களே
சர்வதேசவாதிகள் தளத்தில் விவாதிக்கிறேன்
முடிந்தால் பங்களிக்கவும்
-இந்தியன் காரல்மார்க்ச்
//had clearly stated that the poverty levels and hunger in Chile today is much much better than in 70s. have you any idea about the 400 % annual inflation rate that destroyed Chilean economy in early 70s due to Allende's socialsitc polices, which no idiot will now try to re-implement. Chile is not 100 % poverty free. i never said that. and you try to twist all that. what are you saying then ? chile is much worse off today than in 70s ? try to prove that with data. relative stat. or try to meet older people from Latin America who knew the past
// அய்யா நீங்கள் தமிழரா அல்லது ஆங்கிலேயரா தமிழ் வராதா
தோழர் அசுரன்,
வணக்கம் தங்களின் மின்னஞ்சலின் முகவரியை தர இயலுமா?
தோழர் அசுரன்,
வணக்கம் தங்களின் மின்னஞ்சலின் முகவரியை தர இயலுமா?
kalagam.nation@gmail.com
முத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து !
நாம் நினைத்தது நடந்தது ! கீற்று நிர்வாகிகள் 'இந்திய ஜனநாய'கத்தின் கற்பை காக்கும் விதமாக அதற்கு தேவையான நேர்மையின்மையோடும், நாணயமற்ற முறையிலும் நடந்துகொண்டார்கள்.காலையில் இட்ட எமது பின்னூட்டம் இப்பொழுதுவரை வெளியிடப்படவில்லை.ஆனால் அதன் பிறகு வந்துள்ள பின்னூட்டங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
கீற்றுவின் யோக்கியதையில் ஏற்கெனவே எமக்கு முழு நம்பிக்கை இல்லாததால் முன் எச்சரிக்கையுடன் அங்கு இட்ட பின்னூட்டத்தை சிறு குறிப்புடன் வினவு தளத்திலும் பின்னூட்டமாக போட்டோம். இதோ அந்த பின்னூட்டம்.
இந்த பின்னூட்டம் கீற்று இணையத்தில் “தியாகி,இம்மானுவேல் படுகொலை- கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு” எனும் கட்டுரைக்கு போடப்பட்டது. ஒரு வேலை கீற்று அதை வெளியிடாமல் ‘தடை’ போடக் கூடும் என்று எண்ணியதால் பாதுகாப்பிற்காகவும், சாதி வெறிபிடித்த முத்துராமலிங்கனை பலர் அறிந்துகொள்ள பயன்படும் என்று கருதியதாலும் அந்த பின்னூட்டம் இங்கு பதியப்படுகிறது.
முத்துராமலிங்கம் என்பவன் ஒரு சாதிவெறி பிடித்த மிருகம். அன்றைக்கே அடித்து கொல்லப்பட்டிருக்க வேண்டிய காட்டுமிராண்டி.
ஆதாரங்கள் வாசிக்க
இணைப்புகள் கீழே
பசும்பொன்: முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்.
இந்த கட்டுரையின் பின்னூட்டங்களை(Comments) மிக முக்கியமாக படிக்கவும்.
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html
சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை… அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!
முத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை …
http://www.keetru.com/literature/essays/vinavu_2.php
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்!
http://mathimaran.wordpress.com/2009/08/27/article-233-2/
கீற்றில் குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கு இந்த பின்னூட்டத்தை போட இயலவில்லை எனவே வேறு கட்டுரைக்கான பினூட்ட பகுதியில் எனது பின்னூட்டம் போடப்பட்டுள்ளது. அதை கீற்றுக்கும் தெரிவித்துள்ளேன்.
/////////////
கீற்றுக்கு வணக்கம்.
எனது கமெண்ட்டை ‘இம்மானுவேல்’ பதிவில் போட இயலவில்லை அரைமணி நேரமாக லோட் ஆகிக்கொண்டே இருக்கிறது எனவே தான் இங்கு போட்டுள்ளேன். நீங்கள் வேண்டுமானால் மாற்றி போட்டுக்கொள்ளுங்கள்.
நன்றி
/////////////
முத்துராமலிங்கம் ஒரு சாதிவெறியன் என்பது ஒன்றும் புதிய விசயம் அல்ல.தென் மாவட்டம் முழுவதும் மக்கள் அறிந்த விசயம் தான்.அந்த சாதிவெறியனைப் பற்றி ஒரு பின்னூட்டம் போட்டால் கீற்றுக்கு ஏன் வலிக்கிறது ? ஏன் குத்திக்குடைகிறது.ஏன் அந்த பின்னூட்டம் வெளியிடப்படவில்லை ? இதற்கு கீற்று நேர்மையுடன் பதிலளிக்க வேண்டும்.
ஒரு பக்கம் எமது அமைப்பை அவதூறு செய்து எழுதுவதற்கு,இனவாத கும்பல் தமது காழ்புணர்வை கக்குவதற்கு களம் அமைத்துக்கொடுப்பது.அதற்கு தமிழ்தேசியம்,முற்போக்கு மண்ணாங்கட்டி என்றெல்லாம் விளக்கம் வேறு கொடுப்பது. இன்னொரு பக்கம் சாதிவெறியனான,தலித் மக்களையும் இம்மானுவேல் சேகரன் போன்ற தலைவர்களையும் கொன்ற கிரிமினலான பயலான முத்துராமலிங்கத்தை காப்பாற்ற எமது கருத்தை இருட்டடிப்பு செய்வது.இது தான் இந்த தமிழ்தேசியம் பேசும் மண்ணாங்கட்டிகளின் யோக்கியதை. இதற்கு கீற்று அடுதத ஒரு மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.மேலும் எமது பின்னூட்டம் அனுமதிக்கப்பட வேண்டும். பின்னூட்டம் ஏன் மட்டுறுத்தபட்டது என்பதற்கு விளக்கமும் வேண்டும். அந்த விளக்கத்தை கீற்று எப்படி வேண்ட்டுமானாலும் சொல்லலாம். எமது வார்த்தைகளில் 'நாகரீகம்' இல்லை என்றோ, ஒரு தலைவரை மரியாதை இல்லாமல் பேசினால் அவர் சார்ந்த சமூகத்தினரின் மனது புண்படும் என்றோ கீற்று கருதினால் அதை உள்ளது உள்ளபடி பொது அரங்கில் சொல்ல வேண்டும்.
இல்லையெனில் நாமே ஒரு முடிவிற்கு வந்து கீற்று தளத்திற்கு இன்னொரு பெயரை சூட்ட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
Post a Comment