TerrorisminFocus

Wednesday, June 06, 2007

ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொருவன் கன்னத்தை காட்டிக் கொடு - புதிய புரா

ந்த புறா இல்ல புறா.... வெள்ளையா இருக்கும். கக்கா போறது கூட வெள்ளையாவே கழியும்.... ஆங்.... நம்ம மாமா(நோ டபுள் மீனிங் ப்ளீஸ்) நேருகூட கையில வைச்சி சின்ன குழந்தைகள ஏமாத்துவாறே... அதே புறாதான். சமீபத்துல ஒரு புறாவ பத்தின கட்டுரைகள் சிலது படிச்சேன். உடனே மண்டக்குள்ளாற முதல்ல ஓடுனது மேல சொன்ன விசயங்கதான்.

அது வேற ஒன்னுமில்ல, சுயமரியாதை செம்மல் கீக்கீக்கீக்கீ வீரமணி அய்யா புறாவ வைச்சி ஏதோ செய்யிறாருன்னு படிச்சேன். எதோ பெரியார் புராவாம். கிரகத்துக்கு RSS அயோக்கிய பய புள்ளகளும் ஏதோ கோல்வால்கர் புரா அப்படின்னு புறா வளக்குறாங்கன்னு படிச்சவுடனே ரொம்ப குழப்பமாயிருச்சி. என்னாடாது தீடீர்னு புறாவுக்கு வந்த கேடு, ரெண்டு அயோக்கிய தறுதலைகளும் புறாவ வைச்சி ஏதோ முழு மூச்சா பன்றாய்ங்களே, உறுதியா நாட்டுக்கு நல்லது செய்யிற மாதிரி இருக்காதே அப்படின்னு.

RSSக்காரன விடுங்க அது பன்னி வாய் வச்ச வைக்கப்படப்பு மாதிரி எப்போதுமே புளுத்து நாறும், நம்ம வீரமணி அய்யா ஒழுங்கத்தான பொழப்ப ஓட்டிக்கிட்டு இருந்தாரு. ஏதோ அவருக்கு தெரிஞ்ச அளவுல திருகு வேலகள் பாத்துக்கிட்டு கண்ண மண்ண உறுத்தாமத்தான் அலஞ்சிக்கிட்டு இருந்தாரு. அப்பப்போ கொஞ்சம் கையறிப்பா இருந்தனா 'சுயமுன்னேற்றம்', 'கூட்டி கெடுத்தும்'.. சீ... 'கொடுத்தும் பிழைப்பது எப்படி?' அப்படிங்கற மாதிரி 'யு கென் வின்' பாணி கட்டுரைகள் எழுதிக்கிட்டிருந்தார். இலமர காய்மறயாத்தான் புண்ணாக்கு பாண்டி வேலைகள பாத்துக்கிட்டிருந்தாரு. ஆனா தீடீர்னு புறாவ வைச்சி என்ன பிசினஸ் கெட்ட கிரகத்த செய்றாங்கன்னு தெரியலயேன்னு ஒரே மண்ட குடைச்சல். ஏதுவும் புறாவுக் கூட்டிக் கொடுக்கிறாய்ங்களான்னு விபரீதமா நினைச்சி மனசு கெடந்து அடிச்சுக்கிது. சரி இத கண்டுபிடிச்சே தீர்ரதுன்னு எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரத்துக்கிட்ட கேட்டேன்.

அவன் வழக்கம் போல சம்பந்தமில்லாம கரடி விட்டைப் போட்டது, யானை முட்டைப் போட்டதுன்னு வாய்க்கு வந்தத அடிச்சு விட்டான். இவிங்கிட்ட எதுவும் தேறாதுன்னு நாமளா எங்கனா தேடி தெரிஞ்சுக்க வேண்டியதுதான்னும் முடிவு பன்னிட்டேன்.

சரி விளையாட்டை விடுவோம், விசயத்துக்கு வருவோம்.

சமீபத்தில வடகர்நாடகாவிலும், மஹாராஸ்டிராவிலும் இன்னும் பல பகுதிகளிலும் கரும்பு விளைவித்த விவசாயிகள் அதனை வாங்க ஆளில்லாமல், உற்பத்திச் செலவுக்கு ஈடான விலை கொடுக்க ஆளில்லாமல் கரும்புகள் விறகுகளாய் மாறுவதை காணச் சகியமால் தற்கொலை செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக விதர்பா பகுதி விவசாயிகளிடம் கரும்பு விளைவிக்கச் சொல்லி போன வருடம் கோரிக்கை விடுத்தார் மஹாராஸ்டிர முதலமைச்சர். அவரது சொல்லைக் கேட்டு கரும்பு விளைவித்த விவசாயிகள் அதனை வாங்க ஆளில்லாமல் தற்கொலை செய்து வருகின்றனர். தாங்கள் விளைவித்த கரும்பு காய்ந்து விறகாய் மாறிய பிறகு அதனை தீ வைத்து கொளுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கொளுத்தி வருகின்றனர்.

இதற்க்கு காரணமாக இந்த வருடம் வேறு எந்த வருடத்தையும் விட மிக மிக அதிகமாக கரும்பு விளைந்து விட்டது என்று ஒரு சொத்தை வாதத்தை வைக்கிறார்கள். அதிகமாய் என்றால்? தன்னிறைவை ஈடுக்கட்டுவதை மீறிய அளவு கரும்பு விளைந்து விட்டதா? அல்லது சர்க்கரை இந்தியாவில் எல்லாருக்கும் தேவையான அளவு கிடைத்துக் கொண்டிருக்கிறதா? இல்லையே?

உண்மையில் இந்தியாவின் தன்னிறைவை நிறைவு செய்யும் அளவு கரும்பு உற்பத்தி செய்வது என்றால் இதை விட அதிகப்படியாகவே உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். ஒரு பக்கம் கரும்பு குறைந்த பட்ச விலை கொடுத்து வாங்கவும் ஆளில்லை ஆனால் சந்தையில் மட்டும் சர்க்கரை விலை குறையக் காணோம்.

இதே நிலைமைதான் பிற தானிய வகையாறாக்களிலும். கரும்பு முதல் இன்னபிற அத்தியாவசிய விளை பொருள்கள் எல்லாம் இந்தியாவின் தன்னிறைவை ஈடு செய்யும் அளவு உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதற்க்கு எடுத்துக்காட்டு கோதுமையை நாம் இறக்குமதி செய்த அவலம். ஆனால் அரசோ இவற்றின் விளைச்சல் அளவை அதிகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதோடல்லாமல் விளைவித்த பொருட்களையும் அழிய விட்டு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அழிவு தக்காளியில் தொடங்கி, பருத்தியில் வீரியமாகி, விவசாயியின் தற்கொலை வரை நீடிக்கிறது

சும்மாவா சொன்னார் மார்க்ஸ், உற்பத்தி சக்திகளின்(உழைப்பில் ஈடுபடும் மனிதனின் அனுபவ அறிவு, உற்பத்திக்கு உதவும் பொருட்கள், உற்பத்தியாகும் பொருட்கள்) முன்னேற்றத்துக்கேற்ப உற்பத்தி முறையில்(நிலபிரபுத்துவ பாணி உற்பத்தி, சிதறிய உற்பத்தி, முதலாளித்துவ உற்பத்தி) மாறாவிடில், உற்பத்தி சக்திகளின் அழிவு ஏற்ப்படும் என்று.

இப்படி அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகமாக இருப்பினும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளவற்றை விநியோகம் செய்யவும் ஆளில்லை, உற்பத்தியை பெருக்கி எல்லாருக்கும் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க செய்யவும் ஆளில்லை. ஆனால் எந்த தறுதலைக்கும் உயிராதாரமான விசயமாயில்லாத மூங்கில் பயிர் வளர்க்க சொல்லி இந்த அரசும், NGO உளவாளிகளும் இந்திய விவசாயத்தின் முகத்தை மாற்றி வருகின்றனர்.

ஒரு சின்ன ஒப்பீட்டைப் பார்ப்போம். சர்க்கரைத் தேவைக்காக கரும்பு பயிர் செய்யும் இந்தியாவில் கரும்பு விவசாயம் செய்தவன் நாண்டு கொண்டு சாகும் நிலைதான் உள்ளது. ஆனால், ஒருவேளை இதே கரும்பை ஏகாதிபத்திய தரகு நிறுவனங்களுக்கு தேவையான ஏதோவொன்றை தாயாரிக்கும் விசயமாக இங்கு தயாரித்தால் நாண்டு கொண்டு சாகும் நிலையிருக்குமா?

இந்திய விவசாயிக்கு இருக்காது அன்பர்களே! ஆனால் இந்தியர்கள் என்ற வகையில் நாண்டு கொள்ள வேண்டிய நிலை நம்மெல்லோருக்கும் ஏற்ப்படும். இதோ இந்திய கரும்பு விவசாயத்தை பயோடீசல் தயாரிக்க பயன்படுத்தும் திட்டம் விரைவில் அமலாக இருக்கிறது. கரும்பு விவசாயம் நமது தேவைக்கு என்று இருந்த வரை ஆதரிக்க ஆளின்றி அழிந்த கதை போய் ஏகாதிபத்தியத்தின் தேவைக்கு என்று மாறிய பிறகு கொடுக்கப்படும் அதி அற்புத உபச்சாரத்தை நம் பார்க்க இருக்கிறோம்.

இதைத்தான் மறுகாலனியாதிக்கம் என்கிறோம். இந்திய வளங்களை நமது தேவைக்காக அன்றி ஏகாதிபத்தியங்களின் சந்தை தேவைக்காக சுரண்டும் இந்த அப்பட்டமான கொள்ளையைத்தான் மறுகாலனியாதிக்கம் என்கிறோம்.

நேற்று பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் அவனது சாயப் பட்டறைகளுக்கு தேவையான அவுரி செடி பயிரிடச் சொன்னான். பல்லாயிரம் வருடங்கள் பண்படுத்தப்பட்ட மண்ணும், நீரும், நிலமும் நாசமாகும் என்பதை உணர்ந்த விவசாயி உயிரை விட்டானே ஒழிய அவுரி பயிரிட ஒப்புக் கொள்ளவில்லை. அவன் தன்மானமுள்ளவன்.

இன்று நெல் பயிரிட்ட இடங்களிலெல்லாம் அவனது செண்ட் தொழிற்சாலைகளுக்கான பூ பயிரிடச் சொல்லி அரசும், NGO வும் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்திய மக்களின் தேவைக்கான விவசாய உற்பத்தி அனைத்தும் திட்டமிட்ட அழித்தொழிக்கப்பட்டு அதன் விளைவாய் விரக்தியில் இருப்பவனிடம் சென்று ஏகாதிபத்தியத்திற்க்கு விவசாயம் செய் என்று பிரச்சாரம் செய்யும் படு கேவலமான கைக்கூலிகளாக அரசும், NGOக்களும் செயலபட்டு வருகிறார்கள். பூ பயிரிட தேவைப்படும் தண்ணீரின் அளவு குறித்து ஒரு தோழர் என்னுடன் உரையாடும் போது விளக்கினார். கேட்க்க மலைக்க இருந்தது. ஒருவேளை இந்த அதீத சுரண்டலில் தண்ணீர் வற்றிப் போனால்? அவனுக்கென்ன வந்தது. இந்தியா இல்லாவிட்டால் ஒரு இலங்கை. அவனது பூ தேவையை உலகம் முழுவதும் இடம் தேடி கண்டுபிடித்து பூர்த்தி செய்து கொள்வான். நமது உணவு தேவை?

இதோ கரும்பு பயிர்களெல்லாம் அமெரிக்க கார்களில் கரியாகப் போகிறது. இதோ கண்முன்னே கோதுமை இறக்குமதி செய்கிறோம். நமது தேசம் இயறகை வளமில்லாத பாலைவனம் இல்லையா அதனால்தான் கோதுமையை, உணவை இறக்குமதி செய்கிறோம்.

இதோ கட்டாமணக்கு பயிரிடுகிறோம். கட்டாமணக்கு தட்டுப்பாட்டால்தான் உபியிலும், ஒரிஸ்ஸாவிலும் பட்டினி சாவுகள் நிகழந்தனவல்லவா? அதனால்தான்.

இதோ பெரியார் புரா சொல்கிறார் 'அன்பர்களே மூங்கில் பயிரிடுங்கள்' என்று. பெரியாரை அவமானப்படுத்த இதைவிட வேறு சிறந்த வழியிருக்குமா தெரியவில்லை. தன்மானமின்றி கூட்டிக் கொடுக்கும் தரகு வேலைக்கு பெரியார் புரா என்று பெயர். இவர்களும் கூட கோல்வால்கர் புரா என்றே பெயர் வைத்திருக்கலாம். கூட்டிக் கொடுக்கும் தொழிலுக்கேற்ற பொருத்தமான பெயராகவாவது இருந்திருக்கும்.

முப்போகம் நெல் விளைந்த தஞ்சை மண். ஆனை கட்டி போரடித்த மண். சோழ வள நாடு சோறுடைத்து என்று பண்டைய இலக்கியங்களிலெல்லாம் பாடல் பெற்ற பாரம்பரிய விவசாய பூமி. வெள்ளையன் ஆட்சியில் கூட இந்தளவு ஒவ்வொரு முக்குச் சந்தும் அவனது சுரண்டலுக்கு ஆளாகியிருக்குமா தெரியவில்லை ஆனால் மறுகாலனியின் ஆட்சியில் தஞ்சையிலும் கை வைத்து விட்டனர் ஏகாதிபத்தியங்கள். நெல் விளைந்த பூமி இனி மூங்கில் விளைவித்து கப்பலில் ஏற்றுமதி செய்யும்.
சாலையின் இருமறுங்கில் பயிர்கள் பரந்து விரிந்து எங்கே வாகனங்களின் சக்கரங்களை தொட்டு விடுமோ என்று பரிதவிப்பை ஏற்படுத்தும் அடர்ந்த பச்சை, தொடுவானம் வரை நீண்டு கிடக்கும் வயல் வெளிகள். சிறு குழந்தையின் வெற்றுடம்பில் இயற்கை அன்னை முத்தமிட்ட தடங்களோ என்று வியப்பை ஏற்படுத்தும் வெள்ளி மடைகள். அதிகாலையின் இளம்குளிரில் நீராவி மேக மூட்டமாய் குவிந்து பயிர்களின் மீது போர்வை போர்த்தியிருக்கும் அழகு. சோம்பல் முறித்து அந்த பயிர்கள் சூரியனின் அன்பு அரவனைப்பில் உருகி பனி நீரை சொறியும் அற்புதம். இவையெல்லாம் காப்பிய கனவுகளாய் மாறும் காலம் வெகு தூரமில்லை. மூங்கில் பயிரிடும் தஞ்சை எப்படியிருக்கும்? சென்னை உயிரியல் பூங்காவில் மூங்கில் காடுகளைப் பார்த்ததில்லை நீங்கள்? சென்னைவாசிகள் தஞ்சையின் அழகை சென்னையிலேயே ரசிக்கலாம்.

அஸ்ஸாம் தேயிலையின் நிறம் என்னவென்றே கூட தெரியாத இந்தியர்கள்தானே நாம். லாபம்... ஆம் லாபம் வருமென்றால் மூங்கில் பயிரிட வேண்டியதுதானே. பிழைப்புவாதம் பேசும் டாலர் கண்மணிகளே உங்கள் வீட்டுப் பெண்களை கொஞ்சம் கூட்டிக் கொடுங்களேன் சில எச்சில் டாலர்களை உங்கள் மணம் குளிரும் அளவு மலையாய் அள்ளி குவிக்கிறேன். செய்வீர்களா அடிவருடிகளே?

எதிர்காலத்தை விற்று நிகழ்காலத்தை கரியாக்கும் இந்த கேட்டிற்க்கு பெயர் திறமையாம், லாபமாம்.

இப்படி ஏகாதிபத்தியத்திற்க்கு இந்தியாவை கூட்டிக் கொடுக்கும் வேலையில்தான் இந்த எதிர்பாராத கூட்டணி ஏற்ப்பட்டுள்ளது. RSS, திராவிடர் கழகம் கூட்டணி. ஜார்ஜ் புஷ் செப் 11யை ஒட்டி சொன்னான் "ஒன்று நீங்கள் எங்கள் பக்கம் அல்லது பயங்கரவாதிகளின் பக்கம்" என்று. இதோ மறுகாலனியாதிக்கம் செவுளில் அறைந்து இதே கேள்வியை கேட்கிறது ஒவ்வொருவரையும். வீரமணியும் கூட அறை வாங்கியிருப்பார் உடனே சுயமரியாதை பொங்க முடிவெடுத்திருப்பார்: "பெருந்தகையீரே! ஏகாதிபத்தியமே! நாங்கள் உங்கள் பக்கம்" என்று. அவர் செயல் வீரர். தந்து விசுவாசத்தை நிரூபித்தும் காட்டுகிறார்

செவுளில் அறை வாங்குபவர் அவர் மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் நித்தம் வாங்குகிறோம். நாம் எந்த பக்கம் என்பதை உறுதியாக நாம் வாங்கும் அறை முடிவு செய்வதில்லை. அது ஒவ்வொருவரின் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம். நீங்கள் அறை வாங்கினீர்களா? நீங்கள் எந்த பக்கம்? உங்களுக்கு சுயமரியாதை உள்ளதா?

அசுரன்


Related Articles:

நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்
பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோஅடிமை நாடும், போலி சுதந்திரமும்
இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்
அவனுடைய உமியும் - நம்முடைய நெல்லும்!
India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா?

35 பின்னூட்டங்கள்:

said...

Test

said...

கீ.வி பற்றிய உங்கள் குற்றச்சாட்டு நியாயமானதே ஆனாலும் இங்கே பார்ப்பனிய எதிர்ப்பு என்கிற அளவிலாவது இன்னும் அவர்கள் சீரழிந்து போகாமல் ( கொஞ்சமாவது!?) இருக்கிறார்கள் அல்லவா? இந்த நிலையில் தி.க / தி.மு.க ( ஹி ஹி லிஸ்டுல சேர்த்துக்கற அளவுக்கு இவிங்களும் கொஞ்சம் போல பரவாயில்லை - நான் கீழ்மட்டத்தில் இன்னும் பகுத்தறிவு, சுயமரியாதை, மாநில சுயாட்சி போன்றவற்றை மறக்காமல் இருக்கும் ஒன்றிரண்டு தொண்டர்களை மனதில் கொண்டு சொல்கிறேன் )மேலான விமர்சங்களை பொது தளங்களில் செய்வது பார்ப்பனிய சக்திகளுக்கு கொண்டாட்டமாக போய் விடும் ஆபத்து இருக்கிறதே?

- இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

//உற்பத்தி சக்திகளின்(உழைப்பில் ஈடுபடும் மனிதனின் அனுபவ அறிவு, உற்பத்திக்கு உதவும் பொருட்கள், உற்பத்தியாகும் பொருட்கள்) முன்னேற்றத்துக்கேற்ப உற்பத்தி முறையில்(நிலபிரபுத்துவ பாணி உற்பத்தி, சிதறிய உற்பத்தி, முதலாளித்துவ உற்பத்தி) மாறாவிடில், உற்பத்தி சக்திகளின் அழிவு ஏற்ப்படும் என்று.//

அப்படி மாறாவிடில் என்னவாகும்? உற்பத்திப் பொருட்களின் வினியோகம் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும்.. அதாவது உற்பத்தி அபரிமிதமாக இருந்தாலும் அதை மக்களின் ( சந்தை ) தேவைக்கேற்ப வினியோகம் செய்ய நடைமுறையில் இருக்கும் இயந்திரம் மறுக்கும் - கொள்முதல் செய்வதை நிறுத்துவது போன்று.. அதே நேரத்தில் மறுகாலனியாதிக்க எஜமானர்களை திருப்திப்படுத்த வெளியே இருந்து இறக்குமதி செய்யும் ( கோதுமை )..

கரீட்டா..?


//எதிர்காலத்தை விற்று நிகழ்காலத்தை கரியாக்கும் இந்த கேட்டிற்க்கு பெயர் திறமையாம், லாபமாம்//

நல்ல கேள்விகளும் அருமையான ஒப்பீடுகளும் கொண்ட நல்ல பதிவு!

இங்கே உள்நாட்டிலேயே சோறில்லாமல் பட்டினியால் மக்கள் தவிக்கும் நிலையிலும் வெள்ளைக்காரன் கம்புக்கூடு மணக்க செண்ட் தயாரிப்புக்கு பூக்களை பயிரிடச் சொல்வது.. உள்ளே இருக்கும் வினியோகக் கோளாருகளைக் கலையாமல் வெளியே இருந்து தானியங்களை இறக்குமதி செய்து ஒரே நேரத்தில் விவசாயி/நுகர்வோர் இருவருக்கும் வேட்டு வைப்பது என்று மறுகாலனியாக்கத்தின் அம்சங்களை நன்றாக விளக்கி இருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள்!

said...

அசுரன் அய்யா,

ஆணையிடுங்கய்யா.நாமே ம க இ க பேர்ல சர்க்கரை ஆலை தொடங்கி,விவசாயிகளிடமிருந்து நல்ல விலை கொடுத்து கரும்பு வாங்கி சர்க்கரை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்வோம்;நம்ம விவசாயிகளைக் காப்பாத்துவோம்;மறு காலனி ஆதிக்க சக்திகளுக்கு செம்மையா பதிலடி கொடுப்போம்.நாமே இன்னொரு மறுகாலனி ஆதிக்க சக்தியா மாறிடுவோமய்யா;ஆனாக்க, வில்லன் மறு காலனி சக்தி அல்ல;ஹீரோ,அந்த காலத்து எம் ஜீ ஆர் மாதிரி.

said...

அசுரன்,
மூங்கில் வளர்ப்பது,பூ வளர்ப்பது, காட்டாமணக்கு வளர்ப்பது எல்லாமே துரைமார்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கே. இதில் புராக்கூட்டம் ஈடுபடுவது ஒன்றும் வியப்பல்ல.இவர் ஏன் இராமநாதபுர வறட்சிப்பகுதிகளில் விளையக்கூடிய பயிர்களை புராவில் எடுத்து செயல்படுத்தக்கூடாது? அப்படிச் செய்தால் நிச்சயம் புராவினால் நல்லது ஏற்படும்.அப்படிச் செய்தால் நல்லது. ஆனால் இவரால் முடியாதே :-) ஏன் என்றால் துரைமார்கள் சொல்படிதானே கேட்க முடியும்.
**
நெல் விளையும் பூமியை மலடாக்க இப்படிப் மூங்கில் வளர்ப்பது,பின்னால் நிலம் மலடாகிவிட்டது என்று கூறி அதில் கருவேலம்செடி வளர்க்கலாம்.அதற்கும் அடுத்து நிலம் பாலைவனம் ஆகிவிட்டது என்று ஒட்டகம் வளர்க்கலாம்.

பணம் மட்டுமே இவர்களின் குறிக்கோள்.

:-(((

said...

குரல்கள்

பார்ப்ப்னிய எதிர்ப்பில் கீ.வியின் செயல்பாடுகள் என்னவென்று எனக்கு தெரியவில்லை. அந்த வகையிலும் சரி, பார்ப்ப்னிய ஏகாதிபத்திய கள்ள உறவை புரிந்து கொண்ட வரையிலும் சரி ஓரளவு செயல்பாடுகளில் நேர்மை கொண்டவர்கள் பெரியார் திக என்று வேண்டுமானல் சொல்லலாம்.

பார்ப்ப்னிய எதிர்ப்பில் கொஞ்சம், அதிகம் என்று ஏதேனும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சமரசமற்ற எதிர்ப்பு என்பதை தவிர்த்து வெறொன்றும் பார்ப்ப்னிய எதிர்ப்பு என்ற வகையினத்தில் வருவது போல தெரியவில்லை. அப்படியொன்று இருந்தால் அது பார்ப்ப்னிய ஆதரவுதானேயன்றி வேறல்ல. பார்ப்ப்னியத்தின் வரலாற்றை படியுங்கள். அது எப்படி உள் நுழைந்து ஒவ்வொரு முறையும் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்கிறது என்று கவனியுங்கள்(ஜெயலலிதா). அப்புறம் கருணாநிதி, கி.வீ போன்றோரின் தரகு வேலைகளுக்கும் சமரசமான பார்ப்ப்னிய எதிர்ப்பிற்க்கும் ஒரு கள்ள உறவு இருப்பதை புரிந்து கொள்வீர்கள்.

இந்தியாவை பொறுத்தவரை எவனொருவன் ஏகாதிபத்தியத்தை நியாயப்படுத்துகிறானோ அவன் கட்டாயம் பார்ப்ப்னியத்தை தாங்கி நிற்க்கும் இடத்தில் சென்று நிற்பான். ஏனேனில் பார்ப்ப்னியத்தின் துணையின்றி ஏகாதிபத்தியத்தால் இங்கு சுரண்ட முடியாது. அசுரனில் முந்தைய கட்டுரைகள் சில இது குறித்து பேசியுள்ளன.

காங்கிரஸ், போலி கம்யுனிஸ்டுகளை நாம் விமர்சிக்கும் போது அந்த அமைப்புகளில் ஈடிணையற்ற தியாகங்கள் செய்த தொண்டர்களை விமர்சிப்பதாக கருதுவது தவறு என்கிறேன். ஏன் பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்ளும் உரிமையே திகவிற்க்கு இல்லையென்பேன்.

தொண்டர்கள் தமது எதிரிகளாய கருதுபவர்களை எதிர்த்து போராடுவதாக நம்பிக் கொண்டே இந்த போலி அமைப்புகளில் இருக்கின்றனர். அந்த வகையில் உளப்பூர்வமான அந்த செயல்வீரர்களை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்வது சம்பந்தப்பட்ட அந்த அமைப்புகளே. அந்த வகையில் அந்த அமைப்புகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி உண்மை தொண்டர்களுக்கு உதவுவதும் நமது கடமையாக உள்ளதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த கட்டுரை அந்த வகையே

உண்மையில் இது போன்ற போலி அமைப்புகளை இப்பொழுதே அம்பலப்படுத்துவதே நல்லது. ஏனேனில் நாளை இவர்கள் உறுதியாக பார்ப்ப்னியத்திற்க்கு சட்டி துக்குவார்கள் அப்பொழுது 'பார் திகவே பார்ப்ப்னியத்தின் செயலை நியாயம் என்கிறது' என்று வாதம் செய்வார்கள். அந்த காலக் கொடுமையை சந்திப்பதற்க்கு பதில் இப்பொழுதே இவர்களை ஒழித்து கட்டுவது நலம். இவர்கள் இல்லாவிட்டால் பார்ப்ப்னியத்தை அழிக்க முடியாதா? இவர்கள் இருந்து பார்ப்பினியத்திற்க்கு என்ன தீங்கு செய்து வருகிறார்கள்? ஒன்றுமில்லை.


//அப்படி மாறாவிடில் என்னவாகும்? உற்பத்திப் பொருட்களின் வினியோகம் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும்.. அதாவது உற்பத்தி அபரிமிதமாக இருந்தாலும் அதை மக்களின் ( சந்தை ) தேவைக்கேற்ப வினியோகம் செய்ய நடைமுறையில் இருக்கும் இயந்திரம் மறுக்கும் - கொள்முதல் செய்வதை நிறுத்துவது போன்று.. அதே நேரத்தில் மறுகாலனியாதிக்க எஜமானர்களை திருப்திப்படுத்த வெளியே இருந்து இறக்குமதி செய்யும் ( கோதுமை )..

கரீட்டா..?//

கரீட்.... இது அழிவு நடைபெறுவதின் ஒரு அம்சம். இது போல பல வழிகளின் உற்பத்தி சக்திகளின் அழிவு ஏற்ப்படும்(மனிதர்களின் தற்கொலை, வேலையிலிருந்தும் வறுமையிலிருப்பதும், underemployment, reserve forces இவையெல்லாம் கூட இந்த அம்சத்தில் வருபவையே, விளம்பரங்களும், இலவசங்களும், கடன் அட்டை பொருளாதாரங்களும் இதன் ஒரு விளைவே).

வாழ்த்துக்களுக்கு நன்றி குரல்கள்.

அசுரன்

said...

//நெல் விளையும் பூமியை மலடாக்க இப்படிப் மூங்கில் வளர்ப்பது,பின்னால் நிலம் மலடாகிவிட்டது என்று கூறி அதில் கருவேலம்செடி வளர்க்கலாம்.அதற்கும் அடுத்து நிலம் பாலைவனம் ஆகிவிட்டது என்று ஒட்டகம் வளர்க்கலாம்.
//

ஆம் சரியாக சொன்னீர்கள் கல்வெட்டு,

இப்படி வெட்டுக்கிளியாய மாறி எல்லாவற்றையும் ஒட்ட உறிஞ்சி சக்கையாய் தூக்கியெறிந்தால் கூட சில ஜென்மங்களுக்கு புத்தி வராது.

இதோ கண்முன்னே மக்கள் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் போராடி வருகிறார்கள். எந்த ஒரு அமைப்பு அணி திரட்டாமலேயே தாமே களத்திலிறங்கி அரசாங்கத்தை ஆயுதம் தாங்கி மோதுகிறார்கள் மக்கள். உலகம்யம் இனியும் எங்களால அனுமதிக்க முடியாது என்று எல்லா இடங்களிலும் போராட்டம். ஆனால் இங்கு கம்யுனிஸ்டு என்று பெயர் வைத்துக் கொண்ட சில போலிகள் உலகமயம் தவிர்க்க முடியாது என்று ஆளும் வர்க்க பாட்டை பாடுகிறார்கள். செவுளில் வசமாக அடி வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அடித்த அடியில் சுயமரியாதை உதிர்ந்து நொறுங்கி காற்றோடு காற்றாக இருந்து இடம் தெரியாமல் மறைந்திருக்கும் போல

அசுரன்

said...

Australia bans it, but indian president welcomes it

http://www.biofuelreview.com/content/view/28/2/

Western Australia bans Jatropha Curcas

Wednesday, 31 May 2006

Western Australia's Agriculture Protection Board has placed a state-wide ban on two plants being used as sources of biodiesel feedstock.WA claims the Bellyache bush and physic nut (Jatropha Curcas) are both invasive plants, highly toxic to humans and livestock.


Both plants are already on the WA declared plants list, but their status has been upgraded to ban them state-wide. Queensland's cattle industry claims the Bellyache bush in particular is a serious problem.


Jatropha Curcas is a primary feedstock in the biofuels industry, with rapidly expanding plantings in India, Indonesia and Africa.


David Smith, Singapore

said...

Australia bans it, but indian president welcomes it

http://www.biofuelreview.com/content/view/28/2/

Western Australia bans Jatropha Curcas

Wednesday, 31 May 2006

Western Australia's Agriculture Protection Board has placed a state-wide ban on two plants being used as sources of biodiesel feedstock.WA claims the Bellyache bush and physic nut (Jatropha Curcas) are both invasive plants, highly toxic to humans and livestock.


Both plants are already on the WA declared plants list, but their status has been upgraded to ban them state-wide. Queensland's cattle industry claims the Bellyache bush in particular is a serious problem.


Jatropha Curcas is a primary feedstock in the biofuels industry, with rapidly expanding plantings in India, Indonesia and Africa.


David Smith, Singapore

said...

அசுரன்,

விரிவான பதிலுக்கு நன்றி!

said...

குரல்களின் நன்றிக்கு நன்றி....

வேற என்ன செய்ய பின்னூட்ட காவளித்தனத்தின் தேவை இன்னும் இருக்கிறது.

அசுரன்

said...

http://www.theotherindia.org/workers/resisting-globalization-with-stones-and-potato-sacks.html


It is very clear which side the dice is loaded on- there are about 16,000 policemen in full gear protecting the Kempinski hotel at Heiligendamm in Germany, that anyway 10,000 protesters have managed to infiltrate upto 20 meters of the barricade. Kempinsiki hotel is where the the leaders of the G-8- the group of 8 industrial countries that account for 65% of the world’s economy, are meeting to confabulate over issues ranging from global climate change, to a follow up on the $50b aid to Africa to subtle messages from President Putin about the re- emergence of a a new Cold War. In the backdrop of center right coalitions in Germany under Angela Merkel and now France under Sarkozy, Putin is somewhat handicapped, but there is some indication of support coming from Merkel, who seems to be articulating a European viewpoint at least on climate.

The protests have become almost as ritualistic as Mr Bush’s statements on a techno- miracle to fight the environmental challenge. The protests are marked by near primitive methods of resistance even as they are highly planned and deliberately so. In Bad Dobean, for example, around 10,000 protesters entered the zone Wednesday morning by avoiding “police roadblocks by simply walking through fields and woods“, and then bombarded the police with stones. Also interesting were the other methods of resistance.

As they were being dragged away, the months of training many anti-globalization activists had participated in was obvious. It is not advised, many demonstrators said, to lock arms during such blockades as it just gives the police an excuse to take out their batons. Balling up and being carried away is the safest alternative. The “potato sack” method is also a possibility, though not guaranteed to be free of pain — police drag protesters away and don’t pay much attention to what part of the body is scraping along the asphalt. There is little defense against the disabling neck and nose grips often used by the police.

The protesters come from diverse backgrounds:

Groups range from the “Clandestine Insurgent Rebel Clown Army,” with its colorful rubber noses, to relatively established anti-globalization movements like Attac, to radical far-left anarchists. In the building’s 55 rooms, a myriad of different strategies for forms of action are debated. With so many divergent approaches under one roof, organizers have decided to call the school the “Convergence Center” — a place to meet and find common ground.

Why are these people protesting? The answer is very simple- even as globalization creates islands of the first world in the malls in Shanghai and Banglore, it is also creating a Third World-like underclass in the developed world. The BBC explains it in a much nicer way with this graph that shows a continuous decline in the share of workers’ wages as a percentage of total national income.Source

There is little expected from this meeting, most likely it will end with some declaration of the promised $50b aid to Africa- no one is demanding more than what was promised, and it is a mere fraction of the G-8’s economic might. Other issues, like climate change are likely to be pushed under the carpet, and form the topic for the next ritualistic meeting, slated to be in Toyako, Hokkaido in Japan in 2008.

A video on the riots in Rostok.

said...

///நெல் விளையும் பூமியை மலடாக்க இப்படிப் மூங்கில் வளர்ப்பது,பின்னால் நிலம் மலடாகிவிட்டது என்று கூறி அதில் கருவேலம்செடி வளர்க்கலாம்.அதற்கும் அடுத்து நிலம் பாலைவனம் ஆகிவிட்டது என்று ஒட்டகம் வளர்க்கலாம்.///

சரியாக சொன்னீர்கள் கல்வெட்டு..!!

said...

அசுரன்,

நீங்க கொடுத்த செய்தி சூப்பர்.. அப்படியே இந்த செய்தியையும் படிச்சுப் பாருங்க ( http://in.rediff.com/news/2007/jun/04inter1.htm ) கவுண்டனுக நம்ம ஊர்ல ஆடுறாங்கன்னா கேரளாவுல இன்னும் பாப்பானுகளே களத்துல ஆடுறானுக..

அப்புறம் உங்களுக்கு திறமையா பின்னூட்டக் காவாளித்தனம் பண்ணத் தெரியலை... இந்த மாதிரி காவாலி காமெண்டை உங்க பதிவு மறையும் நேரமா பாத்து ரிலீஸ் பண்ணனும்... அப்புறம் திரும்ப அது கீழே போகும் நேரமா பாத்து பின்னூட்டத்துக்கு ஒரு நன்றி சொல்லனும்..

ஓக்கேவா?

said...

//ஓக்கேவா? //

ஓக்கே...

செய்தி கொடுத்த அனானிக்கு நன்றிகள்.....

காவளித்தனம் குறித்து டிப்ஸ் கொடுத்தமைக்கு மிக்க நன்றி :-))

நீங்கள் குறிப்பிட்ட மெத்தேட் ஃபாலோ பன்னப்படுகிறது(எப்படி நம்ம தங்கிலீஸ்).

அசுரன்

said...

//எப்படி நம்ம தங்கிலீஸ்//

சூப்பர்!

சரி சும்மா காவாளித்தனம் பண்ண மனசில்லை..

இந்த பதிவுக்கு சம்பந்தமா - போன பதிவுல நீங்க சொன்னதை வைத்து ஒரு கேள்வி -

நீங்க சொன்னது -

//திராவிட அரசியல் தனக்கான அரசியல் காலகட்டத்தை தாண்டி நின்ற பொழுது அது அதற்கே உரிய வகையில் தரகு அரசியலாக திரிந்து விட்டது. இதுதான் அதன் சித்தாந்த அடிப்படைக்கான வரம்பு.//

கேள்வி -

1)திராவிட அரசிலின் காலகட்டம் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?

2)அப்படியான காலகட்டத்தில் திராவிட அரசியலுக்கு என்ன தேவையிருந்தது? ( பார்ப்பனிய ஆதிக்கம் என்றால் ஏன் பொதுவுடைமைக் கட்சிகளை மக்கள் நாடவில்லை / பொதுவுடைமைக் கட்சிகள் ஏன் இதனை முன்னெடுக்கவில்லை? )


பதிவுக்கு சம்பந்தமில்லாவிட்டால் பதில் சொல்ல வேண்டியதில்லை - அக்மார்க் பின்னூட்டக் காவாளித்தன லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம் ;)

said...

Instead of blaming darkeness Dravidar Kazhagam is lighting up many candles. As social revolutionaries we work in many fronts.Empty slogans
wont feed empty stomachs.
Under the able leadership of Dr.K.Veeramani these projects are undertaken by organizations set up by Periyar-Maniammai institutions with support from state and central governments.PURA is the brainchild of Abdul Kalam,Honorable President
of India.His Excellency Abdul Kalam
himself has praised the wonderful
work done by these organizations
under PURA in the villages.Please
visit the villages and see for
yourself.People are happy with
our work.Governments and funding agencies are happy.Then why are
you complaining.

said...

பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் இந்தியாவில் முதலாளித்துவ சூழலை அரைகுறையாக வளர்த்தெடுத்ததும், ஏற்கனவே இங்கு முதலாளித்துவம் வளர்வதற்க்க்கான் ஒரு நிலை பிரிட்டிஸார் உள்ளே நுழையும் போதே நிலவி வந்தததும்(திப்பு சுல்தான் கூட இந்த வகையில் சேர்க்க கூடியவர் - ஒரு முதலாளித்துவ வளர்ச்சிக்கு அடிப்படையானவராக), பிரிட்டிஸார் இந்த வளர்ச்சிக்கேற்ப வேறு வழியின்றி இங்கு அறிமுகப்படுத்திய சில ஜனநாயக நடைமூறைகளும் இங்கு ஜனநாயக(முதலாளீத்துவ கோரிக்கைகளை முன்னெடுக்கும்) சக்திகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.

இந்த காலகட்டம்தான் இந்திய சூழலை இறுக்கி சுரண்டி வந்த நிலபிரபுத்துவ சித்தாந்த்மாகிய பார்ப்ப்னியத்தை எதிர்த்து மாற்று காலாச்சாரம் வளர்ந்த சூழல். இந்த எதிர் நிலைப்பாடு பார்ப்ப்னியத்திற்க்கு எதிராக எல்லா பண்பாட்டு, வரலாறு விழுமியங்களையும் கண்டுபிடித்து கட்டியமைத்த சூழல்தான் திராவிட அரசியல் இங்கு வளர்ந்த காலகட்டம். அது இந்தியாவில் தவிர்க்க இயலாமல் நிகழ்ந்த அரைகுறை முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு விளைவே.

இதன் வளர்ச்சிக் கட்டம் முழுவதும் நிலபிரபுத்துவ பிற்போக்குத்தனத்தை விமரிசையாக எதிர்த்தது. இதன் மூலமே வளர்ந்தது. தேசியவாத கோரிக்கைககளின் மூலம் தமிழை பார்ப்ப்னியத்திடமிருந்து பாதுக்கும் வரலாற்று கடமையைச் செய்தது.

இது தன்னை அரசியல் சக்தியாக முன்னெடுத்த பொழுது அரசியல் அதிகாரத்தை பிடித்த பொழுது, தரகு வர்க்க அர்சியலுக்கேற்ப தனது முகத்தையும் மாற்றிக் கொண்டது. அதன் அரசியல் கடமையை அத்துடன் முடித்துக் கொண்டது. ஏனேனில் முதலாளித்துவம் என்பது ஏகாதிபத்திய சூழலில் ஒரு அளவுக்கு மேல் வளர்ந்தால் அது தரகு முதலாளித்துவமாக்வோ அல்லது ஏகாதிபத்தியமாகவோ திரியும்.(அளவு மாற்றம் பண்பு மாற்றம் - quantitative change is qualitative change). த்ரகு தாத்தா கருணாநிதியோ அல்லது டிரஸ்ட் நிர்வாகி NGO வீரமணியோ தற்போது கையாளும் மூலதனமும் அதிகார நாற்காலியும் அவர்கள் இனிமேலும் முதலாளித்துவ சக்திகள் என்று வரையறைக்கு உட்படுத்தும் அளவை தாண்டி உள்ளது.

இந்த இடத்தில் இந்தியாவின் பொதுவுடைமை கட்சி என்பது ஊச்லாட்ட குட்டிமுதலாளி அறிவுஜீவிகளீன்(முதல் கம்யுனிஸ்டு கட்சி சோசலிச ரஸ்யாவில் ஆரம்பிக்கப்பட்டது) கூடாராமாய் இருந்த படியால் ஒரு தீர்மானகராமான சித்தாந்தத்தின் அடிப்படையில் எதிரிகளை வரையறுத்துப் போராட அதனால் இயலவில்லை.

இந்த பதில் போதுமா?

அசுரன்

said...

//இந்த பதில் போதுமா?//

விளக்கமான பதிலுக்கு நன்றி!

கேள்விக்குக் காரணம் - திராவிட இயக்கங்களின் மேலான உங்களது கடுமையான விமர்சங்கள் அவ்வியக்கங்களின் சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ள நல்ல தொண்டர்கள் ( வலையில் எழுதுவோர்) இடையே கசப்புணர்வைத் தூண்டாமல் புதிய புரிதல்களுக்கான துவக்கமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

வாழ்த்துக்கள்

said...

Sugar mills are still controlled and licensed heavily. the govt policy over the decaded has made most of the sick. If there is no govt interference or minimum support prices (which induce more farmers to cultivate sugarcane than otherwise) then there would have been a balance between demand and supply and prices would have stabilised, which benefits all the
players. Hence the present mess and distress for sugar cane farmers.

In TN, most sugar mills are in the red. mainly due to such polices.
The co-op sugar mills are nearly bankrupt due to corruption and
mismangement, combined with MSP prices mandated by populist govts.
Ultimately, when mills become sick, they cannot pay the farmers nor buy more..

Capitalism works, only when there is real free enterprise. Lorry transport busienss is a good example of free enterprise succeeding, while bus trasport is
in a mess due to crony capitlaism
and license raj...

Athiyaman.K.R
athiyaman.blogspot.com

said...

//Sugar mills are still controlled and licensed heavily. the govt policy over the decaded has made most of the sick. If there is no govt interference or minimum support prices (which induce more farmers to cultivate sugarcane than otherwise) then there would have been a balance between demand and supply and prices would have stabilised, which benefits all the
players. Hence the present mess and distress for sugar cane farmers.
//


அது சரி,

கரும்பு ஆலைகளை பன்னாட்டு முதலாளிகளுக்குக் கொடுத்தால் அவன் அதிக விலை வைத்து வாங்கிச் செல்வானாக்கும்? இதோ கோதுமை கொள்முதலில் அம்பானி செய்த மோசடிகள் இரு மாதஙகள் முன்புதான் சந்தி சிரித்தன.

மேலும் கரும்பு முதல் எதையும் அவன் வாங்கிச் செல்வான் எப்பொழுது என்றால் அவனது சந்தைத் தேவைக்கு எனும் பொழுது. நான் இங்கு பேசுவது நமது சொந்த தேவைக்கு என்றூ இருந்த விவசாயம் ஏகாதிபத்தியத்தின் பின் நிலமாக உருமாறும் அவலத்தை. அதாவது விவசாயத்தை அடிமைப்படுத்தும் மறுகாலனியாதிக்கம் குறித்தும் அதில் பெரியார் புராவின் பங்கு குறித்தும் இந்த கட்டுரை பேசுகிறது.

கரும்பு உற்பத்திக்கு நீங்கள் குறிப்பிட்டது பிரச்சனை எனில் பருத்தி உற்பத்தியில் ஏற்ப்படும் பிரச்சனைக்கு யார் காரணம். கரும்பு மில்லா? அல்லது கோதுமை உற்பத்தியில் ஏற்ப்படும் பிரச்சனைக்கு யார் காரணம்? அதுவும் கரும்பு மில்லா?

இங்கு வெறுமனே கொள்முதல் பிரச்சனையை பேசவில்லையே இங்கு. கட்டுரையை முழுதாக படித்தீர்களா? பெரியார் புராவை முன்னிட்டு கிராம வளங்களை கையகப்படுத்தும் ஏகாதிபத்திய சதியை பேசுகிறேன். அது குறித்த கட்டுரையின் முதல் சில வரிகளை மட்டும் வைத்துக் கொண்டு நீங்கள் எதிர்வினை தொடுத்துள்ளீர்களோ என்று சந்தேகப்படுகிறேன்.

//Capitalism works, only when there is real free enterprise. //

இந்தியாவில் கேப்பிடலிசம் உள்ளதா?

லாரி ட் ராண்ஸ்போர்ட்டில் எந்த பன்னாட்டு கம்பேனி அல்லது தரகு கம்பேனி ஆதிக்கம் செலுத்துகிறது? இன்னமும் அது உள்நாட்டு சிறு முதலாளிகளில் கையிலேயே உள்ளது. ஆனால் நீங்கள் சொல்லுவது போல தானிய கொள்முதலை திறந்து விட்டால் தரகு மற்றும் பன்னாட்டு கம்பேனிகள் உள்ளே புகுந்து ஏற்ப்படும் விளைவு படு மோசமானதாக இருக்கும். அது எவ்வகையிலும் நீங்கள் குறிப்பிடும் லாரி டி ராண்ஸ்போர்ட் துறை போல இருக்காது,

பஸ் போக்குவரத்தை பொறுத்தவரை பிரச்சனை நிர்வாகம்தான். அது பொதுத்துறையாக இருப்பதுனால்தான் இலவச பஸ்பாஸ்களும், சாலை இல்லாத கிராமஙக்ளுக்கும் பஸ்களும், ஆளே இல்லாத நட்டு நடு ராத்திரியிலும் மினிமம் சர்வீஸ்களும் உள்ளன. பொது நன்மையை பலி கொடுக்க நான் விரும்பவில்லை.

அசுரன்

said...

////இந்த பதில் போதுமா?//

விளக்கமான பதிலுக்கு நன்றி!

கேள்விக்குக் காரணம் - திராவிட இயக்கங்களின் மேலான உங்களது கடுமையான விமர்சங்கள் அவ்வியக்கங்களின் சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ள நல்ல தொண்டர்கள் ( வலையில் எழுதுவோர்) இடையே கசப்புணர்வைத் தூண்டாமல் புதிய புரிதல்களுக்கான துவக்கமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
//

நல்லது அனானி அவர்களே!!

நான் இப்படி "@@இந்த பதில் போதுமா?@@" கேட்டதற்க்குக் காரணம் எனது விளக்கத்தில் எனக்கு திருப்தியில்லமல் இருந்ததுதான். வேறொன்றுமில்லை. வேறு ஏதேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த கட்டுரையின் விமர்சனத்தை சரியான அம்சத்தில் கொண்டு செல்லும் வகையில் கேள்வி கேட்டிருந்தமைக்கு நன்றிகள் பல.

அசுரன்

said...

எதிர்காலத்தை விற்று நிகழ்காலத்தை கரியாக்கும் ரவிசிரினிவாஸ்

நிகழ்காலத்தை விற்று எதிர்காலத்தை
கரியாக்கும் ரவிசிரினிவாஸ் என்பது இன்னும் பொருத்தம்?.
யார் எதிர்காலத்தை யார் விற்பது, யாருக்காக எதற்காக விற்பது
என்று சிந்தித்தால் .....

said...

அசுரன்,
அது ரவிசிரினிவாஸ் என்ற பெயரில் வந்திருக்கும் விஷமப் பின்னூட்டம் போல் தெரிகிறது.. உண்மையிலேயே ரவி அப்படித் தான் பேசுவார் என்றாலும், இது யாரோ இட்டிருக்கும் போலி வம்புப் பின்னூட்டம் - அதர் ஆப்ஷனிலிருந்து..

said...

அது விஷம பின்னூட்டம்தான். அதை நீக்கி விட்டேன்.

தெரியப்படுத்தியமைக்கு நன்றி அனானி.

அசுரன்

said...

பிரைவேட் மண்டிங்காறங்க வாங்கப் பிடிக்காம கோதுமைக்கு ஆப்படிக்கும் படலம். தனியார்மயம் இப்படித்தான் இழிக்கும். தேவையிருந்தால் கூட சந்தை இல்லை எனில் அழித்து கட்டும் இயல்புடையது. இதுதான் உற்பத்தி சக்திகளின் நாசம் என்ப்படுவது,

*****************

Farmers sell wheat to govt as private takers peter out
PRABHA JAGANNATHAN

TIMES NEWS NETWORK[ FRIDAY, JUNE 08, 2007 01:15:46 AM]

NEW DELHI: It’s the end of the road for wheat farmers hoping to get high open market prices. Off-mandi prices have plummeted significantly across the North’s wheatlands as Rabi Marketing Season (RMS) 2007-08 winds its way into tailend weeks and private sector peters out. With all other options scrunched out, the wheat farmer has no recourse but to sell to the government at the minimum support price (MSP) of Rs 850/qtl.

With the food ministry having now stretched RMS from the usual end May to mid-June, key mandis in Punjab such as Khanna are reportedly brimming over with farmers offloading stored wheat in the government’s extended procurement season. Across Wheatland India, including UP, arrivals have improved drastically at mandis at this late stage in RMS.

The Centre’s wheat buys have been so good that flush with the success of its wheat import tenders strategy in forcing wheat out from the farmer, it is now looking at least at a healthy 11 million tonnes in buys this season. The good buys mean the Centre’s import needs have eased off to an extent despite repeated assertions that 5 million tonnes may well be imported.

In fact, it won’t need to import more than two million tonnes to make up stocks of four million at the end of the year unless it means to allow bigger US wheat imports and shore up extra stocks to insulate the country against inflation shocks next April. Significantly, big arrivals at this late stage of RMS, along with nosediving open market prices, underscore the lack of private sector interest in the commodity.

Take a peek

At the plummeting open market prices in the two key procurement states of Punjab and Haryana, open market prices ruled at Rs 880/qtl and Rs 900/qtl compared to FCI’s Rs 850/qtl in April this year.

By Monday, open market prices had zoomed down to Rs 860/qtl and Rs 870/qtl respectively. But there are no private sector takers for the wheat offered any more. Daily arrivals at mandis in the two states by Monday stood at a whopping 12,193 tonnes and 17,749 tonnes, respectively.

said...

"பஸ் போக்குவரத்தை பொறுத்தவரை பிரச்சனை நிர்வாகம்தான். அது பொதுத்துறையாக இருப்பதுனால்தான் இலவச பஸ்பாஸ்களும், சாலை இல்லாத கிராமஙக்ளுக்கும் பஸ்களும், ஆளே இல்லாத நட்டு நடு ராத்திரியிலும் மினிமம் சர்வீஸ்களும் உள்ளன. பொது நன்மையை பலி கொடுக்க நான் விரும்பவில்லை."

Can't you see that the poor and middle class travel in jam packed tin cans, esp during peak hours in all urban areas. the vested intersts (crony capitalists) use people like you as a sheild to protect their intersts and monopolies. Liberalisation of telecom produced dramatic results and BSNL is much efficent now while tariffs and sevrvices are cheap and abundandant now, even in rural areas. same can be done for bus transport.

I own a two wheeler and need not bother about the wretched humans forced to travel in packed MTC buses in Chennai. but i am branded a reactionary while corrupt trade union leaders like Kannayan (of SRMU) who has amassed (or stolen)
a fortune (some Rs.15 crores and 2 engg. collages, benz car) are deemed to be your friends and proletariat...

said...

ஆமாம் பிரிட்டிஸ்க்காரன் வந்த பிறகுதான் இந்தியாவில் ரோடு வந்தது, மின்சாரம் வந்தது, அனைத்து நவீனங்களும் வந்தன எனவே அதியமான மீண்டும் பிரிட்டிஸ்க்கரன் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புவார்.

தொலைத் தொடர்பு முதல் அனைத்து உள்கட்டுமானங்களும் ஏகாதிபத்தியத்தின் தேவை எனும் பொழுது மட்டுமே போடப்பட்டுள்ளான. ஆனால் இந்த மக்களுக்கு அத்தியாவசியமானது என்று சொல்ல இயலா இந்த உள்கட்டுமானங்கள் அவனது தேவைக்காக வளர்த்தெடுக்கப்பட்ட அதே நேரத்தில், மக்களின் அடிப்படை தேவையான கல்வி, மருத்துவம், இருப்பிடம், உணவு முதலான அடிப்படை தேவைகள் பெரும்பான்மை மக்களிடமிருந்து கோடூரமான பறிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோடிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகமாகி உள்ளனர். இதனை அடிவருடிகளே ஒத்துக் கொள்கிறார்கள். (மன்மோகன் சிங் முதல் சமீபத்தில் ஜக்மோகன் வரை - http://readerswords.wordpress.com/2007/05/30/is-it-trickling/)

இப்படி ஆதாரப் பூர்வமாக அதியமானின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு டஜன் சுட்டிகளாவது இது வரை கொடுத்திருப்பேன்.

மக்கள் மருந்து இன்றி வாடுவதோ, கல்வியின்றி குழந்தைகள் ஹோட்டல்களிலும், கட்டுமான இடங்களிலும் கஸ்டப்படுவதோ, லட்சம் விவசாயிகளின் சாவோ அதியமானின் கண்ணுக்கு தெரியாது ஆனாலும் அவரது இந்த வார்த்தையை "Can't you see that the poor and middle class travel in jam packed tin cans" கொண்டு அவர ஒரு சிறந்த மனிதாபிமனி என்று கருத வேண்டும். எனக்கென்னவோ இந்த பஸ்களெல்லாம் ஒரு வேளை அம்பானியிடமும், சும்பானியிடமும் இருந்தால் அவர்கள் தங்களது கஸ்ட ஜீவனத்தை தவிர்த்துக் கொள்வார்களே என்றுதான் அதியமான் பாரப்பார் போல தோனுகிறது.

அதியமானினுடைய பார்வை தான் சொகுசாக செல்லும் இரு சக்கர ஊர்தியையும், அப்படி செல்லும் பொழுது அவருக்கு அருகே செல்லும் பேருந்தில் பயணம் செய்யும் கஸ்ட ஆத்மாக்களையும் தாண்டி செல்லாது மெச்சூரிட்டி வகையீனத்தில் சேரும்.

அதனை தாண்டி இந்தியாவின் 30% மேற்ப்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 12 ரூபாயில் உயிர் வளர்க்கும் கோடூரம் அவரது பார்வையில் விழாது.

அது சரி இங்க பஸ் போக்குவரத்தை எப்படி மேம்ப்படுத்துவது என்றா விவாதம் நடக்கிறது? ஒருவேளை அதியமானுக்கு தெரிந்த ஒரே விசயம் பஸ் போக்குவரத்து சம்பந்தப்பட்டதோ? அதனால்தான் திரும்ப திரும்ப அதே இடத்துக்கு விவாதத்தை கொண்டு செல்கிறாரோ?

இதோ மீண்டும் தனது மெச்சூரிட்டியை காட்டுகிறார் மேதகு அதியமான், அதாவது திருட்டுப்பயல் ஒருவனை நான் ஆதரிக்கிறேனாம். அப்படியெங்கும் நான் சொல்லாவிடினும் கூட அதியமான் அப்படித்தான் ந்ம்புவார் அதனை பிரச்சாரமும் செய்வார். அது அவரது கருத்தி மெச்சுரிட்டி எனப்படும். எனது கருத்தில் அதி அப்பட்டமான கவாளித்தனம். அதனை கேள்வி கேட்டு அதிலுள்ள முட்டாள்தனத்தை குத்திக் காட்டுவது இம்மேச்சுரிட்டி எனப்படும் அவரது கருத்தில். எனது கருத்தில் அது எனது சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம்.

அது சரி அதியமான் உங்களுக்கு கட்டுரைக்கு உட்பட்டு விவாதிக்கும் பழக்க்கமே கிடையாதா? அல்லது சர்க்கே அவ்வளவுதானா? ஏனேனில் மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியைத்தான் நீஙக்ள் அறிமுகமான காலத்திலிருந்து பாடிக்கொண்டிருக்கிறீர்கள். எதுவும் புதிதாக வாதம் வைக்கவும் இல்லை. உங்களுக்கு நான் வைத்த பதிலகளுக்கு எதிர்வினையும் புரியவில்லை. என்ன மெச்சுரீட்டியோ :-))

அசுரன்.

said...

yes, i am bored by you long winded
articles and i skim thru them.

cotton is grown in many parts of the nation. but only the cotton farmers in viddharba and AP are in distress. and Punjab farmers are
relatively better off. (water is one reason). it is a complex pheneomena. if there is no globalisation and capitalism, things will be much worse off.

interst rates are directly porportional to inflation rate which is again proportional to defict of govts. this is basic economics which you will never understand. poor farmers borrow at very high rates of interst due to this. and input costs in agriculture as well as cost of living is rising due to govt deficts. you do not have any economic sense nor decency.

i am busienssman trading from china. and my friend sold his bus route for 2 crores at karur last year on my advice. thanks to guys like you, we reap excellent profits in that bus deal. no new bus routes will be sanctioned by govt and the hell with the people who lack the buses to travel to their work places. i aim to be a big busienssmen soon.

and the hell with you too.
and goodbye forever.

said...

and it has been proved that this growth propelled by liberalisation since 1991 has reduced proverty rates than ever before. i read lot
about economics and knew this for sure. never confuse absolute poverty with relative poverty.
percentage of people below poverty line is much less than in 1991.

and i didn't support the British empire, only some side effects.

why don;t you emigrate to N.Korea or Cuba and leave us in peace ?

said...

அப்பாசொலிடு புவர்டி, ரிலேட்டிவ் புவர்டி என்று பொய்களை இங்கு சொல்லாதீர்கள். 30& இந்திய மக்கள் 12 ரூபாயில் உயிர்வாழும் அவலம் 1991க்கும் முன்பு கிடையாது. அரசு புள்ளிவிவரத்தின் படியே கூட 1986- 89 வருடங்களில்தான் இந்தியாவின் வறுமை கோடு நிலைமை கொஞ்சம் சொல்லிக் கொள்ளும் படி முன்னேற்றம் அடைந்தது. இதில் கூத்து என்னவென்றால் தனக்கு சாதகமான புள்ளிவிவ்ரம் வேண்டும் என்பதற்க்காக வறுமை கொடு குறித்து வரையைறையே இந்த அரசு மாற்றியமைத்துக் கொண்டது. அப்படியிருந்தும் நிலைமை படு மோசம்தான்.

இதோ உன்ன மாதிரியே ஒரு பூட்ஸ் நக்கி(குடும்பத்த கூட்டிக் கொடுக்குற தறுதல) ஏற்கன்வே இது மாதிரி பொய் சொல்லி அத இங்கன விரிவா அம்பலப்படுத்தி எழுதிருக்கேன் படிச்சு புரிஞ்சுக்க(ஒ.. ஸாரி உனக்குத்தான் படிக்கீற அளவுக்கு மூளை கிடையாதுல்ல... ஐ அம் ரியலி சோரி).(கெட்ட வார்த்தையில் திட்டுன உனக்கெல்லாம் எதுக்கு மருவாதி)
http://poar-parai.blogspot.com/2006/09/blog-post_26.html


மன்னுமோகன் சிங், ஜக்மோகன், அவன் பேரு என்னது.... ஏதோ ஒரு அய்யர்(தமிழ்நாட்டுக்காரன்) இவிங்க எல்லாம் வறுமைக் கோடு அதிகமாயிருக்குன்னு புலம்புறதுக்கு நீங்களே போய் பதில் சொல்லுங்க,.

காட்டன் பிரச்சனை கடந்த ரண்டு வருசமா விதர்பாவில் வீரியமா இருக்கு ஆந்திராவில் இன்னைய தேதி வரை பிரச்சனைதான். இந்தியாவிலேயே ஏதோ விதர்பாவில் மட்டுமே பிரச்சனை இருப்பது போல நீ பேசுவதிலிருந்தே உன்னோட பொருளாதார அறிவின் மேன்மை புரிகிறது. உலகமயமும், ஏகாதிபத்தியமும் இல்லையெனில் பிரச்சனை இன்னும் நல்லவிதமாக்வே சந்தித்து சரி செய்திருக்கலாம். அதைத்தான் கட்டுரைகள் பேசுகின்றன.

இன்ஃபேலேசன் ரேட், இன்ற்றெஸ்ட் ரேட் க்கு உள்ள தொடர்பை பத்தி பேசும் உனக்கு, GDPக்கும் ஸ்டாக் மார்க்கேட் இண்டெக்ஸ்க்கும் நமது மக்களின் வாழ்க்கை தரத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை எந்த காலத்திலும் புரிந்து கொள்ள முடியாது. ஏனேனில் உன்னோட பொருளாதார அறிவு உன்னுடைய கம்பேனியின் லாபம் சார்ந்தது என்ற வகையில் மிக மிக மிக மிக மிக குறுகிய அளவிலானதே. என்னுடையது உன்னை விட பல மடங்கு அதிகம் என்று சவால் விடுகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். செய்து காட்டு. பொருளாதாரம் பேசிய உன்னுடைய வாயை நீ சொன்ன மேப்படி 'ஊ' வேலையை செய்ய வைக்கும் அளவு வாதிடும் பொருளாதார அறிவு பலம் எனக்குண்டு.

எக்னாமிக்ஸ் அதிகம் படிச்சேன் படிச்சேன் சொல்றீங்க. இத நான் எப்படி எடை போடறது? நீங்க கம்யுனிஸம் தெரியும் தெரியும் என்று சொல்லிக் கொண்டே படு முட்டாள்தனமாக முன்பொருமுறை என்க்கு பின்னூட்டமிட்டீர்களே அதே அடிப்படைதான் தஙகளது எக்னாமிக்ஸ் விசயத்திலும் இருக்கும் என்றூ நினைக்கிறேன்.

ஏற்கனவே உன்னிடமே பலமுறை சொல்லியாகிவிட்டது க்யுபாவோ அல்லது வட கொரியாவோ கம்யுனிச நாடுகள் இல்லை என்று. அதற்க்கான காரணத்தையும் சொல்லியாகிவிட்டது. நீ அப்படித்தான் நம்புவேன் என்று பிடிவாதமாக இருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

இது போன்ற உனது படு முட்டாள்தனமான நம்பிக்கைகள் யாவை:
#1) 1990 க்கு முன்பிருந்த இந்தியா ஒரு சோசலிச இந்தியா.
#2) கம்யுனிஸ்டு என்பவன் பிற கருத்துக்களை பின்னூட்டமாக அனுமதிக்க மாட்டான்(இத்த சொல்ற இவனோட கருத்தையே அனுமதிச்சாக் கூட அவன் இப்படித்தான் நம்புவான்).
#3) கம்யுனிஸ்டு என்பவன் திருடும் தொழிற்சங்க தலைவர்களை ஆதரிப்பான்(இந்த மாதிரி யோசிக்கிற்துக்கெல்லாம் ஒரு அடிப்படையும் கிடையாது. சும்மா நீலகண்டன் பானியில போற போக்குல புளுதி வாரி இறைக்கிறது).
#4) வட கொரிய ஒரு கம்யுனிஸ்டு நாடு.
#5) ஒரு முட்டாள்தனத்தை முட்டாள்தனம் என்றூ தர்க்க ரீதியாக நிருப்பிப்பது இம்மெச்சுரிட்டி அதே நெரத்தில் 'ஊம்பு' என்று ஒரு வரியில் தனது தொழிலை பரிந்துரை செய்வது மெச்சூரிட்டி.
#6) இந்தியா ஒரு முதலாளித்துவ நாடு

இன்னும் ரெண்டு மூனு பாயிண்டு ஞாபகம் இல்லை.

சரி தம்பி போய் பகுமானமா பிசினஸ பாரு... இங்கன வந்து வாயில புண்ணோட போகத...

உன்ன மாதிரி ஆளுங்கள ராடு சொருவி ஊட விடுற வரைக்கும் நான் ஓயப் போறதில்ல. அதனால பெட்டர நீ எங்கனா அமெரிக்க, கனடானு சிட்டிஸன் சிப் வாங்கி வைச்சிகிற்து நல்லது. உன்னோட peaceful lifeகாண்டிதான் இந்த அறிவுரை.

அசுரன்

said...

Poverty in relative terms has reduced since 1991. All studies prove it. Of course in absolute terms it is huge ; if there were no reforms, things would have been worser.

Pls see :
http://fecolumnists.expressindia.com/full_column.php?content_id=134302

the cost of corruption, defence budget, and many other useless expenditure by govts contribute to huge deificts which are bridged by printing currency and by borrowing. all these,
combined with population explosion has a cumulative effect on
pverty and employment. blaming neo-liberal polcies for this
cumulative effect is not correct.

said...

க்ரோனி கேப்பிடலிசம் என்கிற இந்த புளுகை உங்காளுங்க எத்தினிதாப சொல்லி ஏமாத்திருக்காங்க தெரியுமா?

அர்ஜென்டினா, கிழக்காசிய நாடுகள், லத்தீன அமெரிக்க நாடுகள்... இப்படி ஒரு லிஸ்ட் இருக்கு. இது எப்படி நடக்குமுன்னா... உலகமயக் கொள்கைகளை அந்த நாடுகள் வீரியமா செய்யும் போது மிகச் சிறந்த நாடு என்று அவை தலைமேல் வைத்துக் கொண்டாடப்படும். அங்கு உலகமயத்தின் இயல்பால் பொருளாதாரம் சரிந்தவுடன் க்ரோனி கேப்பிடலிசம் என்று அவதூறு செய்யப்படும்.

நான் கேட்ட கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் நீங்க சொல்லப்போறது இல்ல. உங்க பல்லவியை பாடிக்கிட்டே இருக்கப் போறீங்க.....

நான் ஒரேயொரு கேள்விதான் கேட்டேன் இந்தியா ஒரு முதலாளித்துவ நாடா?

வறுமைக் கோடு பத்தின ஜல்லியெல்லாம் ஏற்கனவே அடிச்சி அதுல இருக்குற பொய்களை அம்பலப்படுத்திதான் வறுமைக் கோடு பத்தின் ஒரு கட்டுரை இங்கு பிரசூரிக்கப்பட்டது.
http://poar-parai.blogspot.com/2006/09/blog-post_26.html

அந்த கட்டுரையை படிச்சுப் பாருங்கன்னு சொல்லிக் கொடுத்தேன். அதப் பத்தி ஒன்னும் சொல்லாம நீங்க திரும்பவும் வறுமைக் கோடு கம்மியாயிருக்குன்னு கத வுடுறீங்க. வறுமைக் கோடு அரசாங்க புள்ளிவிவரத்தின் படியே 1985 -87,88(சரியா ஞாபகம் இல்ல) களில்தான், அதாவது 80களின் இறுதியில்தான் இதுவரை மிக நல்ல நிலையில் இருந்துள்ளது. இந்த புள்ளிவிவரப் படி பார்த்தாக்க் கூட உலகமயம் விசயங்களை மோசமாகக்கிருக்கு என்பதுதான் தெரிய்வருது.

நேபாளம் வளருது என்று நீங்க கொடுத்த சுட்டியில் இருந்த கட்டுரை சொல்லும் பொழுதே எனக்கு இங்க சிரிப்ப அடக்க முடியல....

ஒரு நாளைக்கு 10ரூபாய்க்கு மேல சம்பாதிச்சாக்க கிராமப் புறத்தில இருக்குறவன வறுமைக் கோடுக்கு மேல உள்ளாவன் என்றூ சொல்லும் ஒரு மிகப் பெரிய மோசடிதான் உங்களோட புள்ளீவிவ்ரம்.

இந்த இடத்தில் உங்க புள்ளிவிவ்ரம படு மோசடியானதாக இருக்க. வேறு சில விசய்ங்கள் மக்களோட பிரச்சனை அதிகமாயிருப்பதை புரிந்து கொள்ள உதவுகிறது.

விவசாய இடுபொருள்(உரம், பூச்சிக் கொல்லி மருந்து etc) 200 மடங்கு முதல் பல மடங்கு வரை அதிகரித்துள்ளது இந்த குறுகிய வருடங்களில். ஆனால் விவசாயி விளைவித்த பொருளுக்கு கொடுக்கப்படும் விலையோ சில பொருட்களில் குறைந்துள்ளது, சில பொருட்களில் அப்படியேதான் உள்ளது,. சில பொருட்களில் சிறிதளவு அதிகமாகியுள்ளது. இதே நேரத்தில் கிராமப் புறத்தின் மாத வருமானம் என்பது 10 லிருந்து 30% வரை மட்டுமே அதிகரித்துள்ளது. ஆக, எந்த வகையில் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும் என்று உங்களுக்கு கால்குலேட்டரில் கணக்குப் போட வருமென்றால் கணக்குப் பார்த்துச் சொல்லுங்கள்.

இந்த இடத்தில் இந்தியாவின் 30%க்கும் மேற்பப்ட்ட மக்கள் ஒரு நாளைக்கு 12ரூபாயில் உயிர்வாழும் அதிசயமும் நடந்து வருகிறது. இந்த புள்ளிவிவரத்தையும், இந்தியாவில் வேலையின்றி இருப்பவர் புள்ளிவிவரத்தையும் வைத்துப் பார்க்கும் பொழுது இந்தியாவில் Working Poverty மிக அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்க்குமான ஒரு நிலைமையாக இருக்கீறது. அதாவது வேலையிலிருந்தும் வறுமைக் கோட்டிற்ற்கு கீழ் இருக்கும் நிலைமை. This also the result of Globalisation. It is not me but UNO chief, UNO's Labour wing reports are saying this.

இவையத்தனையும் பிரதம்ர் முதல் பல்வேறு அரசு பிரதிநிதிகளும், ஃகோபி அன்னானும் ஒத்துக் கொள்ளும் விசயம்.

@@@* ஏழை பணக்காரன் பிளவு அதிகரித்து வருகிறது.

* ஏழைகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்க்கான, அவர்களது பிரச்சனைகளை காது கொடுத்து கேட்ப்பதற்க்கான சக்தியை அரசு இழந்து வருகிறது. மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளை போதுமான அளவு செய்து தருவதற்க்கு வக்கற்று உள்ளது.

* வளர்ச்சி கிராமங்களை அடைவதில்லை.

* இந்த மேற்சொன்ன காரணங்களால், மக்கள் அரசை வேறுக்க தொடங்கியுள்ளனர். இது மாற்றுமைப்பு தேடும் சக்திகளை வளர்த்தெடுக்கிறது. இது ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் அரசை தடுக்கிறது.

In many developing countries, growth is by-passing the rural areas.
@@

இத்த சொல்றவரு நம்ம பிரதமர்


@@The disparities of income are mounting. While one third of our rural population lives only on Rs 12 a day, a fresh graduate from a Management Institute can get an annual salary of Rs one crore, that is, about Rs 25,000 a day. A recent World Bank report titled Global Economic Prospect (2007) ஖ Managing the Next Wave of Globalisation, has observed: ஓIndia, a country with low initial inequality, is headed for one of the fast increase in income inequality anywhereஔ. In a country where millions remain hungry and diseased, the combined wealth of 36 richest Indians had touched dollar 191 billion in the year 2006@@@

இத்த சொலறவரு நம்ம ஜக்மோகன் அண்ணாச்சி

ஆனா இதே நெரத்துலதான் தம்மாந்துண்டு நாடு வெனிசுலா மக்களோட ஆயுதம் தாங்கிய முற்றுகைப் புரட்சி மூலமா ஆட்சிக்கு வந்து உலக வங்கியோட கடன எல்லாம் அடைச்சிட்டு அங்க இருக்குற அத்தன பொறம்போக்கு ஏகாதிபத்திய புடுங்கிகளையும் வெளியே போங்கடான்னு விரட்டி விட்டிருக்கு.

இதே இடத்துல வாழ்க்கைத் தரம் என்பது க்யுபாவில் மிக மிக முன்னேறிய நிலையில் இருக்கு. ஈராக் யுத்த தயாரிப்பு தருணத்தில் ஆக்ஸிஸ் ஆப் ஈவில் என்று க்யுபாவை பார்த்து உங்கள் மாதிரியே எந்த ஒரு அடிப்படை ஞானமும் இன்றீ அவதூறு பேசினான் ஜார்ஜ் புஷ். அந்த சமயத்தில் ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பு க்யுபாதான் உலகின் மிகச் சிறந்தஹ் ஜனநாயகம் என்று கூறியது ஏனேனில் அங்கு கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிக சிறந்த மூறையில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன என்று காரணம் சொல்லப்பட்டது. க்யுபா உலகமயத்தை அமல்படுத்தவில்லை மானமிகு அதியமான அவர்களே. கேத்ரினாவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கா மாகணத்திற்க்கு அருகில் இருந்து டெக்ஸாஸ் மாகாண கவர்னர் ஒரு துண்டு பீடி கூட பத்த வைக்க என்னால் உதவ முடியாது ஏனேனில் டெக்ஸாசில் எல்லாமே தனியார் மயம் என்று பேசினார். ஆனால் அதே நேரத்தில் க்யுபாதான் அதிகளவு தனது டாக்டர்களை அங்கு அனுப்பி உதவியது. அதே க்யுபா டாக்டர்கள்தான் காஸ்மீர் நிலநடுக்கத்தின் போதும் தன்னிகற்ற உதவி செய்தனர். இதே க்யுப டாக்டர்கள்தான் ஐநாவுக்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்க் நாடுகளில் அதிகளவு சேவை செய்து வருகின்றனர். இத்த்னைக்கும் அங்கு இருப்பது சோசலிச பொருளாதார கொள்கை அல்ல. ஆயினும் உலகமய சுரண்டலை தடுத்து தமது சொந்த பொருளாதாரத்தில் நிற்க்கும் அந்த தன்மானமும் சுயசார்ப்புமே இங்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டியது. இதே இடத்தில் போன பத்து ஆண்டுகளீல் உலகமயம் பரிசோதிக்கப்பட்டு தோல்வியடைந்த நாடுகள் அத்தனையையுமே க்ரோனி கேப்பிடலிசம் என்று உங்க ஆட்கள் பிறகு அவதூறு செய்து தப்பித்த திருட்டுத்தனத்தை இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

உங்களுக்கு புரியப் போறதே இல்ல... அது எனக்கு தெளிவா தெரியும். ஏன்னா இது மாதிரி விவரங்களை முதல் முறையாக உங்களுக்கு நான் சொல்லவில்லை. இத்ற்க்கு முன்பே வேறு சில விசயங்களிலும் ஓரளவு விரிவாக விளக்கியிருக்கிறேன். ஆயினும் அவற்றையெல்லாம் உள்வாங்காமலேயே வினை புரியும் உங்களது அதிசய திறமைதான் உங்களை செலுத்துகிறது.

அசுரன்

said...

சும்மா... சும்மா....

said...

அசுரன் அவர்களே...

எனக்கு புதியஜனநாயகம் புத்தகம் கிடைக்க வழி செய்ய இயலுமா ? பெங்களூரில் கிடைக்கிறதா ? எவராவது நன்பரிடம் கொடுத்து கொடுக்க இயலுமா ? மாத சந்தா கட்டி பெற இயலுமா ?

அன்புடன்
செந்தழல் ரவி
9886397051

said...

தோழர்,

அதியமானை ஒருவித அலட்சியத்துடன் அனுகி ஆதரப்பூர்வமாக வீழ்த்தும் உங்கள் வாதம் கலக்கலாக இருக்கிறது..

புரட்சிகர வாழ்த்துகள்!!!

தோழமையுடன்
ஸ்டாலின்

Related Posts with Thumbnails