TerrorisminFocus

Wednesday, March 14, 2007

தேசத் துரோக அடிவருடிகளும், சுதந்திர வர்த்தகமும் - உலகமயம்!!

இன்றைக்கு சுதந்திர வர்த்தகம் குறித்து பேசும் ஏகாதிபத்திய அடிவடுடிகள், தொழில் வளர்ச்சி, தொழில் முதலீட்டிற்க்கான மூலதன்ம் இவற்றையே காரணமாக கூறி ஏமாற்றுகிறார்கள். ஆனால் உலகில் முன்னேறி நிற்க்கும் நாடுகளின் வரலாறை பார்க்கும் பொழுது இவர்களின் இந்த கூற்று பொய் என்று தெரிய்வருகிறது.

Free Trade குறித்து மார்க்ஸின் கட்டுரைக்கான ஏங்கெல்ஸின் முன்னுரை.

""After a long and violent struggle, the English industrial capitalists, already in reality the leading class of the nation, that class whose interests were then the chief national interests, were victorious. The landed aristocracy had to give in. The duties on corn and other raw materials were repealed. Free Trade became the watchword of the day. To convert all other countries to the gospel of Free Trade, and thus to create a world in which England was the great manufacturing centre, with all other countries for its independent agricultural districts, that was the next task before the English manufacturers and their mouthpieces, the political economists.""

பிரிட்டிஷ் முதலாளிகளின் இடத்தில் இன்றூ தேசம் கடந்த பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் உள்ளனர். மூன்றாம் உலக நாடுகளை தங்களது சந்தை மற்றும் உற்பத்திக்கான பின்நிலங்களாக வைத்துள்ளனர் என்ற அளவில் ஒப்பிட்டு புரிந்து கொள்ள இந்த வரிகள் உதவும்.

மேலும் இங்கு பிரிட்டனுக்கும் அதனுடன் சுதந்திர வர்த்தகம் செய்ய விழைந்த நாடுகளுக்கும் இடையிலான முதலாளித்துவ வளர்ச்சி வித்தியாசம் என்பது மிக குறைவு. எனவே இந்த வர்த்தக உறவால் ஏற்பப்டும் பாதிப்பு குறைவே. ஆனால் இந்தியாவுடன் பிற் ஏகாதிபத்தியங்களுக்கு உள்ள ஒப்பிட இயலா வித்தியாசத்துடன் பொருத்திப் பார்க்கும் பொழுது இந்தியாவுக்கு அது மரண அடியாக பாதிப்பு கொடுக்கும் என்பதை விவசாயிகளின் தற்கொலைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பிரிட்டனின் இந்த சுதந்திர வர்த்தக நோக்கத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஏனேனில், இது பிரிட்டனில் தொழில் வளர்ச்சியை மிக வேகமாக முடுக்கி விடும் எனவே புரட்சிக்கான சூழல் மிக வேகமாக வளரும் என்ற அடிபப்டையில். ஆக, ஏகாதிபத்தியத்தின் பொருளாதார் வளர்ச்சிக்கு சுதந்திர வர்த்தகம் உதவி புரிவதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இது எந்த வகையிலும் சுதந்திர வர்த்தகத்தில் இணையும் பிற நாடுகளுக்கு உதவிகரமானது இல்லை எனப்தை கீழே விவரிக்கிறேன்.

அன்றைய பிற முதலாளித்துவ நாடுகள் பிரிட்டனின் உலக மேலாதிக்க திட்டங்களைப் பார்த்துக் கொண்டு புளிய்ம பழமா பறித்துக் கொண்டிருந்தார்கள்? இல்லை மாறாக அவர்களும் தமது சொந்த உற்பத்தியை மிக வேகமாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுதந்திர வர்த்தகம் மூலமாக இல்லை, மாறாக தமது பொருளாதாரத்தை இறுக்க மூடி வெளி நாட்டு மூலதனத்திலிருந்த பாதுகாத்தன் மூலமே தமது பொருளாதாரத்தை வளர்த்தனர்.

""The foreign countries did nothing of the kind. France, for nearly 200 years, had screened her manufactures behind a perfect Chinese wall of protection and prohibition, and had attained in all articles of luxury and of taste a supremacy which England did not even pretend to dispute.""

இங்கு பிரான்ஸ் தேசம் தனது சொந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை புரொக்டசனிஸ்ட் முறை மூலம் காபந்து செய்து வளர்த்தது குறித்து ஏங்கெல்ஸ் சொல்கிறார். இது போலவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என எல்லா நாடுகளும் தமது தொழில் வளர்ச்சியை இப்படி பொத்தி பொத்தி பாதுகாத்துதான் வளர்த்தனர்.

ஏங்கெல்ஸ் ஒரு ரயில் பிரயாணத்தில் தன்னுடம் பயணம் செய்த சக பயனியான இரும்பு வியாபாரியிடம் பேசுகிறார். இரும்பு வியாபாரி அமெரிக்காவின் protectionist பொருளாதார கொள்கையை விமர்சித்து பேசுகிறார்.

"Was it not inconceivable that a nation of sharp businessmen like the Americans should pay tribute to indigenous ironmasters and manufacturers, when they could buy the same, if not a better article, ever so much cheaper in this country?"

அதாவது இரும்பை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யும் இங்கிலாந்திலிருந்து வாங்குவதை விடுத்து ஏன் உள்ளூர் இரும்பு உற்பத்தியாளர்களை அமெரிக்க ஊக்கப்படுத்துகிறது என்கிறார். மேலும் அவர் free trade என்ற இன்றைய உலகமயத்தின ஆதார நியதியை ஆதரித்து பேசுகீறார்.

இதற்கு எங்கெல்ஸ் பின்வருமாறூ கூறுகிறார்,

""Well," I replied, "I think there is another side to the question. You know that in coal, waterpower, iron, and other ores, cheap food, homegrown cotton, and other raw materials, America has resources and advantages unequalled by any European country; and that these resources cannot be fully developed except by America becoming a manufacturing country. You will admit, too, that nowadays a, great nation like the Americans' cannot exist on agriculture alone; that would be tantamount to a condemnation to permanent barbarism and inferiority; no great nation can live, in our age, without manufactures of her own. Well, then, if America must become a manufacturing country, and if she has every chance of not only succeeding but even outstripping her rivals, there are two ways open to her: either to carry on for, let us say, 50 years under Free Trade an extremely expensive competitive war against English manufactures that have got nearly a hundred years start; or else to shut out, by protective duties, English manufactures for, say, 25 years, with the almost absolute certainty that at the end of the 25 years she will be able to hold her own in the open market of the world. Which of the two will be the cheapest and the shortest? That is the question. If you want to go from Glasgow to London, you take the parliamentary train at a penny a mile and travel at the rate of 12 miles an hour. But you do not; your time is too valuable, you take the express, pay twopence a mile and do 40 miles an hour. Very well, the Americans prefer to pay express fare and to go express speed.""

அதாவது அமெரிக்காவில் அளப்பரிய வளங்கள் உள்ளன. இவற்றை வளர்த்தெடுக்க அமெரிக்க ஒரு உற்பத்தி பொருளாதாரமாக மாற வேண்டும். விவசாயத்தை மட்டும் நம்பி ஒன்றும் செய்ய முடியாது. இதை சாதிகக் இரு வழிகள் உள்ளன. ஒன்று தனது நாட்டை திறந்து விடுவதன் மூலம் இங்கிலாந்து முதலாளீகளுடன் முட்டி மோதி தந்து நாட்டு உற்பத்தியை வளர்ப்பது. இன்னொன்று தனது நாட்டை இறுக்கமாக மூடி சொந்த நாட்டு உற்பத்தியை வளர்த்தெடுப்பது.

நீ ஒரு இடத்துக்கு போக சாதா ரெயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் இருந்தால் காசு கொஞச்ம் கூட ஆனாலும் பரவாயில்லை என்று எக்ஸ்பிரஸ் ரெயிலில்தானே செல்வாய்? அதைத்தான் அமெரிக்க செய்கீறது. தனது நாட்டின் உற்பத்தியை வேகமாக வளர்த்தெடுக்க காசு அதிகமாகா செல்வனாலும் பரவாயில்லை என்று அமெரிக்க த்னது கதவுகளை மூடி கொண்டுள்ளது. என்று ஏங்கெல்ஸ் பதில் சொல்கீறார்.

இப்படி ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் தமது பொருளாதாரத்தை பொத்தி பொத்தி வளர்த்துவிட்டு இன்று இந்தியா போன்ற நாடுகளை கதவைத் திறந்து விடச் சொல்கின்ற்ன. அதற்க்கு சில அடிவருடிகளின் ஆதரவு வேறு.

இவர்களின் ஒரே வாதம், இந்தியாவில் தொழில் புரட்சி நடக்க இந்தியாவை திறந்து விட வேண்டும் என்பதுதான். ஆனால் இவர்களின் அப்பன் நாடுகள் எதுவும் இவர்களின் இந்த கூற்றை நடைமூறையில் இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றூம் கூட தனது விவ்சாய உற்பத்தியை protectionist கொள்கையின் மூலம் காத்து வருபவர்கள்தான் ஏகாதிபத்திய்ஙகள். அதாவது இந்தியாவை தமது குறை விலை பருத்தியால், பாலால் நிறைக்கும் ஏகாதிபத்திய்ங்கள், தமது நாட்டில் இந்திய விவசாய பொருட்களை அனுமதிப்பதில்லை. அனுமதித்தாலும் நாம் சந்தையில் நிற்க முடியாது ஏனேனில் ஒவ்வொரு நாடும் தனது உள்நாட்டு விவசாய உற்பத்தியாளருக்கு 100% வரை மானியம் தருகீறார்கள்.

ஆக நேற்றைய வரலாறு நமக்கு சொல்வது , "ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சி என்பது, உற்பத்தி வளர்ச்சி என்பது அதனை வெளிநாட்டு மூலதனத்திலிருந்து பாதுகாப்பதில் அடங்கியுள்ளது என்பதை" அதாவது உள்நாட்டு முதலாளிகளை வளர்ப்பதில் அடங்கியுள்ளது.

இன்றைய ஏகாதிபத்தியங்கள் தமது விவசாய உற்பத்தியில் நடைமுறைப்படுத்தும் கொள்கையும் இதையேதான் சொல்கீறது.

தமது சொந்த் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக பேசும் போது குறைந்த் விலை, தொழில்நுட்பம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டாமல் தமது பொருளாதாரத்தை கட்டி காத்து வளர்த்த அன்றைய முதலாளித்துவ நாடுகளும், இன்றைய் ஏகாதிபத்திய நாடுகளின் தேசபக்தி எங்கே? இதே தொழில் வளர்ச்சியை நாட்டை திறந்து விட்டு நாறடித்தால்தான் சாத்தியம் என்று கதை கட்டி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் அடிவருடிகளின் தேசத் துரோகம் எங்கே?

இவர்களின் யாருக்கு தேசப்பற்று உள்ளது? வெறுமனே சுதந்திர தின விழாவுக்கு கட்டுரை எழுதி மிட்டாய் கொடுத்தால் தேசப்பற்றா?

அடிவருடிகள் பதில் சொல்வார்களா அல்லது வழக்கம் போல ஓடி மறைந்து கொள்வார்களா?

இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி ஓரளவு நல்ல நிலையில், இங்கிலாந்துடன் போட்டி போடும் நிலையில் இருக்கும் பொழுதே அதன் சந்தையை இங்கிலாந்துக்கு திறந்து விடுவது அதன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பதுதான் உண்மை. இந்தியாவோ எந்த வகையிலும் உற்பத்தியில் ஏகாதிபத்திய நாடுகளின் அருகிலேயே இல்லை. இந்நிலையில் திறந்து விடுவது என்பது சுத்தமாக இந்தியாவை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும் என்பதுதான் உண்மை.

ஏகாதிபத்திய்ங்களின் இன்றைய கொள்கைகளும் சரி, நேற்றைய வரலாறும் சரி நமக்கு சொல்வது இதுதான், "சுதந்திர வர்த்தகம் என்பது உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு ஆபத்தே'. அது உண்மையான தொழில் வளர்ச்சியின் வேகத்தை முடக்கி போட்டு மந்தமான வளர்ச்சியையே உருவாக்கும் என்பதுதான் உண்மை. இந்த மந்தமான வேகத்தைத்தான் அடிவருடிகள் ஊதிப் பெருக்கி நம்மை ஏமாற்றுகிறார்கள். மாறாக 10 வருடங்க்ளில் 56 மடங்கு உற்பத்தியை வளர்த்திக் காட்டிய சோசலிச(1970's) சீனாவின் அனுபவ்ம் நமக்கு மாற்றுப் பாதையைக் காட்டுகிறது.
நாம் இழிச்சவாயர்களா? அடிவருடிகளா? தற்குறிகளா? பிழைப்புவாதிகளா? அலல்து சுயமரியாதை உள்ள தேச பக்தர்களா என்பதை அவரவர சொந்த முயற்சியில் பரிட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அசுரன்
Related Articles:

17 பின்னூட்டங்கள்:

said...

Test

said...

Do you know anything about the East Asian Miracle and how countries like South Korea gained through export promotion and free
trade policies.You better read a
good text book on international
trade and international economics.
Neither Marx nor marxists have a monpoly on wisdom.

said...

அது சரிதான் அனானி, அதான் நீங்க அறிவு ஜீவியா தெரியுறீங்களே இது குறித்து எதுனா எழுதி இங்கன இருக்குறவய்ங்களயும், என்னையும் காப்பத்துங்களேன்.

எதையாவது சொல்லி 'ஆன' தெரியுமா? 'பூன' தெரியுமா? என்று வார்த்தைகளில் மொக்கை அடிப்பதை நிறுத்தி உபயோகமா வாதம் பன்னுங்க.

இப்படி வாய்பந்தல் போடறதுல் ஒரு பிரயோசனமும் இல்லை.

தென் கொரியா நிலைமைகள் என்னவென்று எனக்கு முழுமையா தெரியாது. ஆனா அமெரிக்காகூட பொருளாதார ஒப்பந்தம் போடறதையும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் எதிர்த்து அங்குள்ள விவசாயிகளும், தொழிலாளர்களும் மிக கடுமையாக வருட வருடம் போராடுவதை நானும் படித்துதான் வருகிறேன்(இவை எதுவும் மார்க்ஸோ அல்லது மார்க்ஸியர்களோ எழுதுவது அல்ல சாமியோவ்). அதுவும் மெக்஦டொனால்ட் முதலான பன்னாட்டு கம்பேனிகளை டார்கெட் செய்து தீ வைப்பது, உடைப்பது என்று நடக்கும் போராட்டங்கள் அவை.

அசுரன்

said...

அன்பு தோழர்களே வண்க்கம்,
நான் கம்யூனிசத்தின் பால் பற்றுக்கொன்டவன்,
என்னுடைய அப்பாவும் கம்யூனிஸ்டில் இருந்தவர் தான்.
எனவே நான் சிறுவயதிலிருந்தே
மார்சை அளவற்று நேசிப்பவனாக வளர்ந்தேன்.

தமிழ் மனத்தில் அரவிந்தன் நீலகண்டன் என்பவரும்
இன்னும் பல மதவாத சக்திகளும் சேந்துகொன்டு
மார்க்சையும்,கம்யூனிசத்தையும் மிக மிக கேவலமாக
அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.

தற்போது கூட மர்க்சியம் அறிவியல் அல்ல என்ற ஒரு
பதிவை அ. நீ எழுதியுள்ளார். இ ந் நிலையில்
தோழமை சக்திகளான நீங்கள் ஒருவரை ஒருவர்
தாக்கிக்கொள்வது மிகவும் வேதனைளிக்கிறது.
என்ன இருந்தாலும் நீங்கள் அணைவரும் கம்யூனிஸ்டுகள்
மர்க்சும்,லெனினும் நம்முடைய தலைவர்கள்.
உங்களுடய நோக்கம் ஒன்றுதான் பாதைகள் தான்
வேறுபடுகிறது.

எனவே நீங்கள் தாக்கிக்கொள்வதை உடனே
நிறுத்துங்கள் ,அந்த பாசிச சக்திகளுக்கு
பதில் கூறுங்கள்,மார்க்சியத்தை காப்பாற்றுங்கள்,
மார்க்சியமே தீர்வு என்று நம்பும் என்னைப்போன்றவர்களின்
நம்பிக்கையயும் காப்பற்றுங்கள்,
விரைந்து செல்லுங்கள் தோழர்களே.

என்னுடைய தொடர்பு எண்னை தனி மடலில்
இட்டுள்ளேன்.

லெனின்

said...

தோழ்ர் லெனின்,

தங்களது ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். இதனை முன்னிட்டுத்தான் போலி கம்யுனிஸ்டுகள் குறித்து எந்த ஒரு கட்டுரையையும் இது வரை அசுரனில் பதியப் படவில்லை. ஆயினும், போலி கம்யுனிஸ்டுகள் கொஞச் நஞ்ச சுயமரியாதையையும் விட்டொழித்து விட்டு SEZக்கு ஆதரவாகவும், உலகமயத்தை நியாயப்படுத்தியும் தமது சொந்த மக்களை சுட்டு தள்ளி வரும் பொழுது அதனை விமர்சிக்காமல் இருப்பது சரியாகது. அதனைக் கூட அவர்களது தளத்தில்தான் செய்தேன். ஆனால் அதற்க்கு பதிலடியாக விமர்சனம் என்றா பெயரில் புரளியை எழுதி தமது வோட்டு பொறூக்கி அரசியலின் சீரழிவை விளம்பரப்படுத்தினர்.

கம்யுனிஸ்டு என்று பெயர் தாங்கி செல்லும் திரிபுவாத கட்சிகளினால் நேரிட்ட அபாயம் என்ன என்று தெரிந்தால் இவர்களை நாம் விமர்சிப்பதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்வீர்கள். இதோ போலி கம்யுனிஸ்டுகளுடன் கூட்டணி சேர்ந்து இன்று தமிழ் மணத்தில் பேசுபவர்கள் இந்துத்துவாதிகளும், ஏகாதிபத்தியவாதிகளுமே.

அவர்களை அம்பலப்படுத்துவதை விட்டு விட்டு இங்கு பிற்போக்கு சக்திகளை முழு பலத்துடன் எதிர்ப்பது சாத்தியமில்லை எனப்துதான் தமிழ்மணத்தை பொறூத்த வரை எனது அனுபவமாக இருக்கிறது.

இவர்களால் இந்துத்துவ எதிர்ப்பிலோ அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பிலோ பெரிய நன்மை நிகழ்ந்து விடவில்லை.

இது குறித்து உங்களது கருத்துக்களை தெரியப்படுத்தவும்.

அசுரன்

said...

//பதில் கூறுங்கள்,மார்க்சியத்தை காப்பாற்றுங்கள்,
மார்க்சியமே தீர்வு என்று நம்பும் என்னைப்போன்றவர்களின்
நம்பிக்கையயும் காப்பற்றுங்கள்,
//

அடடா, அடுத்த கடவுள்கள் உருவாகிறார்களோ ?

said...

போலி கம்யுனிஸ்டுகள் - You are talkig about கம்யுனிஸ்டுகள் from West Bengal Ex Jyothibasu, Battacharya.....


Bços their real face we are seeing in Nandhigram....

said...

தேசத் துரோக அடிவருடிகளும் (கம்யுனிஸ்டுகள்), சுதந்திர வர்த்தகமும்

Hope this is the correct Heading....Please try to change it...

said...

உங்களுடைய டஜன் கணக்கான கடவுளர்கள் தங்களுடைய கோடிக்கணக்கான பக்கதர்களில் ஒருவரை கூட எந்த ஆபத்திலிருநதும் காப்பாற்றியதில்லை. அவ்வாறு காப்பாற்ற கூடியவன் கடவுளுமல்ல அவன் பெயர் மனிதன். உங்களையும் சேர்த்தே காக்க போகின்ற மார்க்சியத்தை அவதூறுகளிலிருந்து காக்க வேண்டியது மனிதர்களான எங்களுடைய கடமை என்பதை பாவம் உங்களுக்கு சொல்லிதான் தெரிய வேண்டியிருக்கிறது!

பாவெல்

said...

தேசத் துரோக அடிவருடிகளும் (Brahmanists,CPM, NGOs), சுதந்திர வர்த்தகமும்

I think this more fitting. :-))

Asuran

said...

ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்

நேரம் இருந்தா என் பக்கம் வந்து உங்கள் கருத்துக்க்ளை சொல்லவும்

said...

//ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்

நேரம் இருந்தா என் பக்கம் வந்து உங்கள் கருத்துக்க்ளை சொல்லவும் ///

தகவலுக்கு நன்றி கார்த்திக் பிரபு,

கட்டாயம் தங்களது தளத்துக்கு வந்து கருத்து சொல்கிறேன்.

அசுரன்

said...

ஐந்திலக்க அல்பை ஒன்று தனது ஐந்திலக்கத்தின் பின்னால் உள்ள வக்கிரத்தை, சுரண்டலை மறைத்துவிட்டு டாலர் பணத்தில் கிடைக்கும் ரொட்டி துண்டை நக்கி தின்றுவிட்டு தனது நடுத்தர வர்க்க அல்பத்தனத்துக்கு புனித வட்டம் கட்டும் முயற்சி செய்கிறது.

இந்த நேர்மையற்ற டாலர் அடிமையை பல மூறை அம்பலப்படுத்தியும் கிஞ்சித்தும் மான ரோசமின்றி தனது அடிமை சேவகத்தை, பூட்ஸ் நக்கி வேலையை செய்து வருகிறது.

தானக்கு வசதியானதையே தேசம் என்று வரையறுப்பது, தனக்கு பிடித்தமான துரோக வேலை செய்பவர்களையே கம்யுனிஸ்டு என்று சொல்லுவது...

பிறகு அந்த பொய் தேசத்திற்க்கு விசவாசமாக தேசப்பற்று பஜனை அடிப்பது, துரோக வேலை செய்யும் போலிகளை கம்யுனிஸ்டு என்று சர்டிபிகேட் கொடுத்த அடிப்படையில் அவர்களின் துரோக நடவடிக்கைகளுக்கு ஒட்டு மொத்த கம்யுனிசத்தின் மீதும் செறு அடிப்பது என்று படு கேவலமான கயமைத்தனத்தில் ஊறித்திளைத்து வலம் வருகிறது அந்த டாலர் அல்பை.

படிக்கவும்:
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை! ==> http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_23.html


அசுரன்

said...

சும்மா.... அல்பை அடிவருடிக்காக

said...

சும்மா.... அல்பை அடிவருடிக்காக

படிக்கவும்:
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை! ==> http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_23.html

said...

அனானி ஒருத்தர் சந்திப்புக்கு ப்யூஸ் புடுங்கி விட்டுக்கிட்டு இருக்காரு. சந்திப்போ திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி திரு திருன்னு முழிச்சிக்கிட்டு இருக்குறாரு. அனானி சமீபத்தில் போட்ட சில பின்னூட்டங்களை இங்கும் இட்டுச் சென்றுள்ளார். அவற்றை பொருத்தமான இந்த பதிவில் மீண்டும் இடுகிறேன்.

Published this in Santhipu Blog:

//அனானி கட்டபொம்மன் அவர்களே! பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று கூறிய கதையாகத்தான் இருக்கிறது உங்களது நிலைபாடு. உங்களது கட்சித் திட்டம் எந்தவிதத்திலும் காலாவதியான ஒன்றாக பல்லிளித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை பாடுவதுதான் வருத்தமாக இருக்கிறது.//


Santhipu,

I exposed that your Party perceptions are Expired and MaKaEKa's plans are well within the ambit of Marxian perception.

You have no selfrespect to address my observation but continuing your lies.

Shame on You and Your party....


//சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி முதலாளித்துவ பாதையிலேயே நடைபோடுகிறது. //

//த்துவமாக வளர்ந்து விட்டது. கோரசை விழுங்கக் கூடிய அளவிற்கே கூட அது வளர்ந்து விட்டது. இந்த //


Santhipu,

Do you know what is Imperialism?

May be you want to fool your party members by giving this examples. But the underlying fact is Who is financing these deals?

Even the recent deal of TATA is also financed by Imperialist Institutions. For example TATA's total worth is nowhere near to these deals and they buy this Financed from the Imperialist institutions. You believe it is Indian capital venturing. But the truth is the Imperilist finance tightening its grip ove Indian market.

Capitalism Post lenin's era(ie: Imperialism) is Financial ஏகபோகம். And you like to assess Indian broker TATA by his industry whereas we see the Finance leverage behind him that controls the Entire country.

This is called Chilishness and Juvenility.

Do you mean to say the Agri sector where Majority of people involved in is following Capitalist production method?

Do you mean to say the small Capitalist improvement happened in India is not serving Imperialist and only in true capitalists sense?

You better read Marxism again and better ask your party heavy heads to read marxism again.

Marxism clearly says capitalism cannot grow in its real meaning under the influence of imperiaslist Finance.

I again remind you that if you belive you are so honest and have self respect please disprove my arguments and the proofs I have given(including the article by Suniti Kumar Ghosh).

said...

Test

Related Posts with Thumbnails