TerrorisminFocus

Sunday, March 04, 2007

சோசலிச சமூகம் ஏன்? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பொருளாதார, சமூகப்பிரச்சனைகளில் நிபுனத்துவம் இல்லாத ஒருவர் சோசலிசத்தைப் பற்றிக் கருத்துக் கூறுவது சரியானதா? பல காரணங்களை முன்னிட்டு அது சரியே என்று நான் கருதுகிறேன்.
உலகத்திலுள்ள மிக முக்கியமான நாடுகள் மற்ற நாடுகளை அடிமைபடுத்தி வாழ்கின்றன. தோல்வி அடைந்த நாடுகளின் செல்வங்களைச் சுரண்டுவதோடு அங்கே தங்களுக்குச் சாதகமான ஒரு கல்வி அமைப்பையும் ஏற்படுத்தி அடிமைத்தனத்தை நிரந்தரமாக்கிவிடுகிறார்கள்.
இதை சமூக வளர்ச்சியில் 'காட்டுமிராண்டிக்கட்டம்" எனலாம். நாம் இந்தக் கட்டத்தைக் கடந்து விடவில்லை சோசலிசத்தின் நோக்கம் இந்த கட்டத்தைக் கடந்து சென்று உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகும். சோசலிசம் என்பது ஒருசமூக-அறவியல் இலட்சியத்தை நோக்கி முன்னேறுகின்ற இயக்கமாகும்.
மனிதசமூகம் ஒரு மாபெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது: அதன் கட்டுக்கோப்பு குலைந்துவிட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள் இத்தகைய சூழ்நிலையில் தனிநபர்கள் நாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின் மீது அக்கறையில்லாதிருப்பதும், சமூக நலங்களுக்கு எதிராக நடந்து கொள்வதும் இயல்பே.
மேலே கூறியதை விளக்கும் வகையில் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து ஒருஉதாரணத்தை தருகிறேன் இன்னொரு உலகப்போர் ஏற்படக்கூடிய அபாயத்தை பற்றியும் அத்தகைய போரில் மனித குலம் பூண்டற்றுப் போய்விடும் என்பதையும் அறிவும் பண்பும் அமையப் பெற்ற ஒருவரிடம் விளக்கி கூறினேன. "மனிதகுலம்அழிந்துவிடக்கூடாது என்று நீங்கள் கவலைப்படுவது ஏன்?" என்று அவர் என்னிடம் கேட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த மாதிரி அலட்சியமாக யாரும் பேசியிருக்க மாட்டர்கள். தன்னுடைய வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சித்து, அந்த முயற்ச்சியில் தோல்வி கண்ட ஒருவரின் அழுகுரல் என்று இதை கூற வேண்டும். நிராசையும், அவநம்பிக்கையும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கும் இன்று ஏராளமானவர்களிடம் காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? இதை மாற்றும் வழி என்ன? என்னாலியன்ற வரை இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்ச்சிக்கிறேன்.
மனிதன் ஒரே சமயத்தில் தனிநபராகவும் சமூகப் பிராணியகவும் இருக்கிறான். தனிநபர் என்ற முறையில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ளவும், தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும் பாடுப்படுகிறான். சமூகப்பிராணி என்றமுறையில் மற்ற மனிதர்களின் அங்கீகாரத்தையும் பாரட்டையும் பெறுவதற்கும், அவர்களுடைய சுக துக்கங்களில் பங்குகொள்ளவும் சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபடுகிறான். இந்த இருவகை தன்மைகளும் அடிக்கடி மோதிக்கொள்ள நேர்ந்தாலும், இவையே மனிதனின் சிறப்பியல்புகளாகும். இவை இரண்டும் எந்தஅளவில் இணைகின்றன் என்பதை பொறுத்தே மனிதனின் அக வாழ்க்கை அமைகிறது.
ஒரு தனிமனிதனுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படுக்கின்ற நேரடியான, மறைமுகமான உறவுகளின் மொத்ததையே "சமூக ம்" என்றகருத்து குறிப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. ஒரு தனி நபரால் சிந்திக்கவும் தானாக வேபாடுபடவும் முடியும். ஆனால் அவனுடைய உடல், உணர்ச்சி, அறிவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூகத்தினால் மட்டுமே முடியும். ஊடை, உணவு, வீடு, மொழி உழைப்பதற்கான கருவிகள் ஆகியவற்றை அவனுக்கு தருவது சமூகமே. அவனுடைய சிந்தனை வடிவங்களையும் உள்ளடக்கத்தையும் நிர்ணயிப்பது சமூகமே. "சமூகம்" என்ற சிறுவார்த்தையில் மறைந்திருக்கும் பல் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் சாதனைகளுமே அவன் வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றது. இந்த கோடிக்கணக்கான மக்களில் அவனுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்தவர்களின் பங்கும் உண்டு.
நம் காலத்திய நெருக்கடியின் தன்மையை சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். அது சமூகத்துக்கும் தனிநபருக்கும் உள்ள உறவு பற்றியதாகும். தனிநபர் அதிகமான அளவுக்கு சமூகத்தை சார்ந்திருக்க வேண்டியிருப்பதை அவன் உணர்கிறான். ஆனால் இது ஒரு இயல்பான பினைப்பு என்றோ, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி என்றோ, அவன் கருதுவதில்லை. தன்னுடைய நியாயமான உரிமைகளை கட்டுப்படுத்தும் சக்தியாகவே சமூகத்தை கருதுகிறான். மேலும் இன்றைய சமூகத்தில் தனிநபர் போக்குகள் தீவிரம்டைகின்றன: சமூகப் பிணைப்புகள் மேன்மேலும் பலவீனமடைகின்றன. மனிதர்கள் அனைவரும் இத்தகைய படிப்படியான சீர்குலைவுக்கு ஆளாகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் தனிமை சூழ்ந்து, கவலை அதிகரிக்கிறது எளிமையான வாழ்க்கையில் நிறைந்திருக்கும் பரிசுத்தமான் மகிழ்ச்சியை அவர்கள் பெறமுடிவதில்லை. வாழ்க்கை என்பது குறுகியதாகவும் ஆபத்துகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். ஆனால் மனிதன் தன்னைச் சமுதாயத்துக்கு அர்பணித்துக் கொள்வதன் மூலம்தான், வாழ்க்கையின் நிறைவை பெற முடியும்.
முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணம். உற்பத்திச் சாதனங்கள் தனிவுடைமையாக இருக்கின்ற சமுதயத்தில் நாம் வாழ்கிறோம். இவர்கள் சட்டபூர்வமாகவே மற்றவர்கள் தங்களுடைய பயனைப் பெறமுடியாதவாறு செய்கிறார்கள். உழைப்புச் சாதனங்களை உடைமையாக வைத்திருக்கின்ற காரணத்தால், இவர்கள் தொழிலாளர்களுடைய உழைக்கும் சக்தியை விலைக்கு வாங்குகிறார்கள். தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும்பொருள் முதலாளிக்குச் சொந்தமாகிறது. அந்தப் பொருளின் மதிப்பு அதிகம், ஆனால் அவனுக்குத் தரப்படுகின்ற ஊதியம் குறைவு. இந்த வேறுபாட்டை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். முதலாளிகளிடையே போட்டியினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மூலதனம் சிலரிடத்தில் குவிகிறது. இவர்களே அரசாங்கத்தை நடத்துகிறார்கள். சட்டமன்றத்தின் பிரதிநிதிகளை அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கின்றன. ஆனால் அரசியல் கட்சிகளை ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாண்மையான ஏழைகளின் பிரதிநிதிகள் அல்ல. மேலும் பத்திரிக்கைகள். வானொலி, கல்வி அமைப்பு ஆகியவற்றை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்வகிப்பதால். மக்களாலும் தங்கள் அரசியல் உரிமைகளைச் சரியான வழியில் பயன்படுத்த முடியவில்லை. மக்களுக்கு தேவையானவற்றை இவர்கள் உற்பத்தி செய்வதில்லை. அதிகமான லாபமே இவர்களது குறிக்கோள். எல்லோருக்கும் வேலை கிடைப்பத்தில்லை. வேலையில் இருப்பவர்களுக்கும் வேலை போய்விடுமோ என்ற பயம் நிரந்தரமாக இருக்கிறது. லாப நோக்கம், தங்கு தடையில்லாத போட்டி ஆகியவையால் உழைப்பு அதிகமான அளவுக்கு வீணாவதையும், தனி நபர்களின் சமூகஉணர்வு சிதைக்கப்படுவதையும் பார்க்கிறோம். இது முதலாளித்துவ சமூகத்தின் படு மோசமான நோய்.
சோசலிச அமைப்பு மூலம்தான் இவற்றை ஒழிக்கமுடியும் என்பதில் எனக்குசிறிதும் சந்தேகமில்லை. சோசலிசப் பொருளாதாரத்தில் சமூக உடைமையாக இருக்கின்ற உற்பத்தி சாதனங்கள் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன. சமூகத்தால் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி நடைபெறுவதால் வேலை பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண்-பெண், குழந்தை-வயோதிகர் அனைவருக்கும் வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரின் திறமையும் ஊக்குவிக்கப்படுகிறது. இன்றைய சமூகத்தில் பதவிக்கும் பணத்துக்கும் நடைபெறும் போட்டிக்கு பதிலாக, "மற்றவர்களுக்காக நான்" என்ற உணர்வு வளர்க்கப்படும். எனினும் திட்டமிட்ட பொருளாதரத்தில் தனிநபர் பரிபூரணமாக அடிமைப்டுத்தப்படும் அபாயம் இருக்கிறது. அரசியல் பொருளதார சக்தி அளவுக்குமீறி மையப்படுத்தப்படும் பொழுது, அதிகார வர்க்கம் சர்வ வல்லமை படைத்ததாக மாறுவதை எப்படித் தடுப்பது? அதிகாரவர்க்கத்துக்கு எதிராக தனிநபர் உரிமைகளை எப்படிக் காப்பது? சோசலிச அமைப்பு ஏற்படும்பொழுது இது போன்றசமூக-அரசியல் பிரச்சணைகள் தீர்க்கப்பட வேண்டும்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
(Monthly Review, May 1949)
**
முருகன் என்ற பெயரில் ஒரு அன்பர் இந்த கட்டுரையை எனக்கு அனுப்பியிருந்தார்

18 பின்னூட்டங்கள்:

said...

test

said...

எனினும் திட்டமிட்ட பொருளாதரத்தில் தனிநபர் பரிபூரணமாக அடிமைப்டுத்தப்படும் அபாயம் இருக்கிறது. அரசியல் பொருளதார சக்தி அளவுக்குமீறி மையப்படுத்தப்படும் பொழுது, அதிகார வர்க்கம் சர்வ வல்லமை படைத்ததாக மாறுவதை எப்படித் தடுப்பது? அதிகாரவர்க்கத்துக்கு எதிராக தனிநபர் உரிமைகளை எப்படிக் காப்பது? சோசலிச அமைப்பு ஏற்படும்பொழுது இது போன்றசமூக-அரசியல் பிரச்சணைகள் தீர்க்கப்பட வேண்டும்.

Yes, they were 'solved' through gulags, concentration camps and
mass killings.Stalin,Mao and Pol
pot remain as grim reminders about
the negative side of socialist
governments.Socialist governments
repressed individuals and the bureaucracy and party apparatus
including party officials at all
levels became parasites.As an idea it looked nice in theory but by and large it was a disaster for
human rights and freedom of individuals.

said...

வாங்க செக்கிழுத்தவரே. எத்தனை முறைதான் அரைத்த மாவையே அரைப்பீர்கள்.

மாவோவின் சீனா குறீத்து நான் சொன்னால் பொய் என்று சொல்வீர்கள் ஆனால் ஏகாதிபத்தியவாதிகள் ஆதரமின்றி கழிந்து விட்டுச் சென்றதை நாங்கள் நம்ப வேண்டும் என்பீர்கள். சரி ஹாலிவுட்டில் 10 ஆஸ்கார் வாங்கிய படத்தில் சொன்னால் நம்புவீரகளா?

கீழே உள்ள சுட்டியை படியுங்கள்.
http://poar-parai.blogspot.com/2006/10/blog-post_30.html

அப்புறம், மக்களை இப்படி வாட்டி வதைத்த சீனாதான், புரட்சியின் தருவாயில் இந்தியாவைவிட பல மடங்கு பின் தங்கிய நிலையிலிருந்து, அதை விட பல மடங்கு முன்னேறீ முதலாளித்துவ உற்பத்தி முறைகளை ஸ்தாபித்து பிறகு சோசலிச உற்பத்தி முறைகலையும் சாதித்தது. 1970கள் வரை அனைத்து ஐந்தாண்டு திட்டங்களின் இலக்குகளையும் மீறி அது சாதனை படைத்தது. மக்களை வாட்டி வதைத்து இந்த சாதனைகளை செய்ய முடியாது என்பதை பாவம் உங்களைப் போன்ற வாந்தியெடுக்கும் அனானிகளுக்கு புரிய நியாயமில்லை.

இரண்டு உலக யுத்தங்கள், ஐரொப்பாவின் சேரி என்று பெயர் குறிப்பிடும் அளவு மோசமான பிந்தங்கிய பொருளாதார நிலைமை. எல்லையில் 50 வருட யுத்த அபாயம், உள்நாட்டு வெளி நாட்டு சதிகள், ஒரு பஞ்சம், ஊடுரல் போர்கள், இரண்டாம் உலக் யுத்தத்தில் அதிக அழிவை சந்தித்தது. இவையணைத்தையும் மீறி ஒரு நாடு 30 வருடங்களில் அமெரிக்காவைவிட பெரிய வல்லரசாக மாறியது. அதுவும் அமெரிக்காவைப் போலவோ, பிரிட்டனைப் போலவோ 300 வருட்ங்கள் மற்ற நாடுகளை சுரண்டி அல்ல, மாறாக தனது சொந்த உழைப்பின் மூலமாகவே இந்த சாதனையைச் செய்தது ஒரு நாடு. இது அந்த நாட்டின் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களின் கொள்கைகளின் மீது நம்பிக்கை வைத்து அந்த நாட்டு மக்கள் செய்த ஈடு இணையற்ற சாதனை. அந்த நாடு ரஸ்யா. அதன் தலைவர் ஸ்டாலின். இதனைத்தான் வயிறெரிந்து இங்கு அடிப்படையற்ற அவதூறை அள்ளித் தெளிக்கிறார் ஒரு அனானி.....

இந்த சாதனைகளுக்கான காரணத்தை உங்கள் ஏகாதிபத்திய புளுகுனிகள் எழுதி வைக்கவில்லையா? எப்படி எழுத முடியும். பொய் சொல்லும் இடத்தில் உண்மையை சொல்வது சொந்த செல்வில் சூனியம் வைப்பது ஆகிவிடாது. இவர் மனித உரிமை, சுதந்திரம் என்று பேசுவதெல்லாம் வறிய விவசாயிகளையும், தொழிலாளர்களையும் உள்ளிட்ட மக்களின் பெரும்பகுதியினரை சிலர் சுரண்டி சுக வாழ்வு வாழ்ந்து - வார நாட்க்களில்,. வார விடுமுறைகளில் page-3 பக்கங்களை நிரப்பும் விழாக்கள் நடத்த முடியாததையேயும், மகாபலிபுரம் சாலை ஓரங்களில் ஐந்து நட்சத்திர விபச்சார விடுதிகள் ந்டத்த முடியாததையுமே சொல்கிறார்கள். ஆமாம், அனானி துரதிருஷ்டவசமாக இவற்றை நாங்கள் அனுமதிப்பதில்லை.

சோசலிசம் முதலில் முயற்சி செய்யப்பட்ட நாடு ரஸ்யா, அங்கு மிக இக்கட்டான நிலைமையில்(இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம், பஞ்சம் முடிந்திருந்த நேரம்) ஸ்டாலின் கையில் அதிகாரம் குவித்து தரப்பட்டது. இதனையொட்டி ஸ்டாலின் இரு தவறான அரசாங்க முடிவுகளை அமல்படுத்துகிறார். அதன் விளைவக கட்சிக்குள் ஏகாதிபத்திய ஆட்கள் நுழைகிறார்கள் சோவியத் ரஸ்யாவின் அழிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது பொன்ற தவறுகளை களைந்து கொண்டு அவற்றிலிருந்து கற்றுக் கொண்டு சரி செய்ய வேண்டும் என்று சொல்கிறார் விஞ்ஞானி ஐன்ஸ்டின். நம்ம அனானியோ இது போன்ற தவறுகளையே மிகப் பெரிதாக காட்டி ஒட்டு மொத்த மனித குல சமூகத்துக்கு சோசலிச செய்த சாதனைகளை மறைக்கப் பார்க்கிறார்.

ஜனநாயக மறுப்பையும், வன்முறையையுமே ஒரே வழிமுறையாகக் கொண்ட இவர்களின் அரசுகளிடம் அவற்றை எதிர்ப்பார்க்க முடியாது என்ற பொதுப் புத்தியும்,. அப்படியில்லாத ஒரு அரசை வலியுறுத்தும் சோசலிச அரசிடம் இவற்றை எதிர்பார்க்கலாம் என்ற பொது புத்தியுமே இவர்களின் ஆயுதம். இது ஒரு வகையில் சோசலிசம் அரசு ஜனநாயகம், மக்கள் சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்தும் என்ற நம்பிக்கைக்கு ஆதாரமே.

அசுரன்

said...

Even that Amartya Sen sympathetic to commies acknowledged that millions perished in famines in
Mao's china.About Stalin the less said the better it is.China gave up socialism and has embraced
capitalist models of development.USSR is dead and gone.
Vietnam has joined WTO and is all for liberalization.So the socialist project is practically dead now.The last conservative
marxist is likely to be a bengali
or malayalee or perhaps an unthinking Tamilian like you :).
Perhaps we can set up a Marxist museum in India.Your brand marxism
has been rejected by erstwhile communist nations.Even Cuba is opening up its economy now.So look
around and see the reality.Dont bury your head into the sand like
an ostrich.

said...

இவர் மனித உரிமை, சுதந்திரம் என்று பேசுவதெல்லாம் வறிய விவசாயிகளையும், தொழிலாளர்களையும் உள்ளிட்ட மக்களின் பெரும்பகுதியினரை சிலர் சுரண்டி சுக வாழ்வு வாழ்ந்து - வார நாட்க்களில்,. வார விடுமுறைகளில் page-3 பக்கங்களை நிரப்பும் விழாக்கள் நடத்த முடியாததையேயும், மகாபலிபுரம் சாலை ஓரங்களில் ஐந்து நட்சத்திர விபச்சார விடுதிகள் ந்டத்த முடியாததையுமே சொல்கிறார்கள். ஆமாம், அனானி துரதிருஷ்டவசமாக இவற்றை நாங்கள் அனுமதிப்பதில்லை.
For how long you will lie like this. We all know what has happened to marxists who
questioned stalin and mao.what happened to Vavilov, that great scientist.What happened to Bukharin and others.Who liquidated them.Was it not a fact that many writers and artists were victims of the actions of the party.The working class had no freedom to organize independant trade unions.

said...

சீனாவின் பஞ்சம் வந்ததையோ அல்லது ரஸ்யாவில் பஞ்சம் வந்ததையோ யாரும் மறுக்கவில்லையே. அவை அரசின் கொள்கை முடிவுகளால் வந்தவையா என்று எங்காவது சொல்லியிருக்கிறார்களா? அதனை ஏகாதிபத்தியவாதிகள் எண்ணிக்கையை பெருக்கி பொய்யையும் புரட்டையும் எழுதுவது உண்மையில்லையா?

ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியம்,. ஒரு நாட்டில் கம்யுனிசம் சாத்தியமில்லை என்று கூறித்தான் லெனின் ஏகாதிபத்திய காலத்திற்க்கான கம்யுனிச தத்துவ பங்களிப்பை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை நிகழ்த்தியும் காட்டினார்.

இப்படி செய்த லெனினும், மாவோவும், ஸ்டாலினும் தான் முதலாளித்துவம் மீளும் சாத்தியக் கூறுகள் மிக அதிகம் என்றூ வரையறுத்து அதற்க்கான சாத்தியக்கூறுகளையும், அடிப்படைகளையும்,. அப்படி வராமால் இருக்க செய்ய வேண்டிய விசய்ங்களையும் பற்றி எழுதியுள்ளார்கள். ஆனால், இந்த விசய்ங்கள் தெரியாத உங்களைப் போன்ற அரைகுறைகள்தான் கம்யுனிசம் தோற்றுவிட்டது தோற்றுவிட்டது என்று உங்கள் சுரண்டலை மறைக்கும் முகமாக கூவிக் கொண்டிருக்ககிறீர்கள்.

கம்யுனிச அரசு எனப்து அது நடைமுறைப்படுத்தும் பொருளாதார திட்டங்களை வைத்தே மதிப்பிடப்பட வேண்டும் இல்லையெனில் சோசலிச கட்சி என்று பெயர் வைத்த ஹிட்லரும் கம்யுனிஸ்டுதான். அப்படிப் பார்க்குமிடத்து ரஸ்யாவிலும் சீனாவிலும் நடைமூறைப்படுத்தப்பட்ட சோசலிச பொருளாதார திட்டங்கள் பெரும் வெற்றியைப் பெற்றதைத்தான் மேலே குறீப்பிட்டேன் இதன் அர்த்தம் அங்கு தவறுகளே நடக்கவில்லை என்பதல்ல. சீனா இன்றைக்கு தனது கதவுகளை திறந்து விட்டுள்ளதே சீனாவின் முதலாளீகள் உலக சந்தையை நுகர வழி ஏற்ப்படுத்திக் கொடுக்கத்தான். ஏனேனில் சீனாவின் வளர்ச்சி அதன் 1970 சோசலிச பொருளாதார திட்டங்களுக்கு பிறகு அபரிமிதமானது எனவே அதனால் உலக சந்தையில் போட்டிப் போடும் சக்தி உள்ளது. மாவோவுக்கு பிற்ப்பாடு அங்கு அதிகாரத்தை பிடித்த முதலாளித்துவ பாதையாளர்கள் சீனாவின் முதலாலிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக்வே தமது கத்வுகளை திறந்து விட்டுள்ளனர். இதனையும் இந்தியாவையும் ஒப்பிடுவதே மோசடியான விசயம்.

ரஸ்யாவை ஐரோப்பாவின் சேரி என்று யார் குறிப்பிட்டார்கள் நாமா? இல்லை மேலை நாட்டினர்தான் குறிப்பிட்டனர், சீனா விடுதலை பெற்ற பொழுது இந்தியாவைவிட மிக மோசமான நிலையிலிருந்தது இந்த வரலாற்று உண்மைகளை வசதியாக மறந்து விட்டால் சோசலிசத்தின் சாதனைகளை தூற்றவும், அதன் தவறுகளை பிரதானப்படுத்தவும் இயலும். சோசலிசம் இல்லாவிடில், சீனாவில் இதைவிட கேவலாமனதொரு நிலைமையே ஏற்ப்பட்டிருக்கும். பிற நாடுகளில் ஆதரவின்றி, இந்தியாவைவிட படு கேவலமாக இருந்த ஒரு நாட்டில், உலக்ப் போரினால் மோசமான பாதிப்பையும், உள்நாட்டுப் போரினால் உற்பத்தி சாம்பலாக இருந்த ஒரு நாட்டில் பஞ்சம் வந்தது எனப்து ஆச்சரியமான விசயமில்லை. ஆனால் இதை மீறி அந்த நாடு எப்படி வளர்ந்தது? உங்க ஏகாதிபத்திய பொருளாதாரம் வளர்த்தா?

அது சரி அனானி, சீனாவும், ரஸ்யாவும் சோசலிச பொருளாதாரத்தை அமலபடுத்தவில்லையா? அமல்படுத்தி சாதனை செய்யவில்லையா? ஏன் அது குறித்து பெருத்த மௌனம் சாதிக்கிறீர்கள். சிறுபான்மை சுரண்டல்காரர்கள் வயிறு வளர்க்க அந்த பொருளாதாரம் வாய்ப்பு கொடுக்காது என்பதாலா? பிற நாடுகளை சுரண்டாமல் சாம்பலிலிருந்து கிளம்பும் பினிக்ஸ் பறவையாக அந்த பொருளாதாரம் சாதனை படைக்கீறதே என்ற பயமா?

அம்ர்தியா சென் கம்யுனிஸ்டு சிம்பதைசர் என்ற உலக மகா புருடாவை இங்கு சுற்ற வேண்டாம். பாலியல் பலாத்காரத்தை பத்விசாக செய்யச் சொல்லும் வக்கிர பாண்டி அவர் என்பதைத் தவிர்த்து அவரிடம் ஒன்றும் கிடையாது.

ostrich is you. Please read History properly.. Don't relay on Imperialist verson of History. and please respond to my previous reply also ;-))

அசுரன்

said...

சொந்த நாட்டுக்கு துரோகம் செய்தவர்களுக்கு என்ன தண்டனையோ அதையே நீங்கள் குறிப்பிட்டவர்கள் அனுபவித்தார்கள். சீனாவில் புதிய ஜனநாயக புரட்சி நடந்தவுடன் மாவோ கூறுகீறார், எதிரி வர்க்கத்தாரிடமும் கருணையாக நடந்து கொள்ளுங்கள் என்று. ஏனேனில் இப்பொழுது ஆட்சியிலிருப்பது நாம் என்று கூறுகிறார். இதனைத்தான் ஹாலிவுட் படம் 'தி லாஸ்ட் எம்பரர்' கூறுகிறது. இதனைத்தான் நான் முந்தைய பின்னூட்டத்தில் கொடுத்துள்ள் சுட்டியிலுள்ள கட்டுரையும் பேசுகீறது. எதையுமே படிப்பதில்லை. சும்ம வீசுன கையும் வெறும் கையுமா வந்துட்டு வாயில புண்ணொட போறதே உங்க ஆட்களின் பொழப்பா போயிருச்சி ;-))

ஸ்டாலினுடைய ஆட்சியில் அவர் செய்த தவறுகளும் அதன் விளைவுகளும் எங்களுக்கு தெரிந்ததே ஆனால் அவற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்கிறோம். நீங்களோ அவற்றை மட்டும் பிரதானப்படுத்தி அதனுடன் உங்கள் பெருங்கதைகளையும் சேர்த்து புருடா பாண்டி வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்... ;-)) உலகப் போரின் மிக நெருக்கடியான தருணம், பஞ்சம், வெளி நாட்டு உள்நாட்டு சதிகள் இவையெல்லாம் சேர்ந்து ரஸ்யாவில் பல பாதகமான விளைவுகளை ஏற்ப்படுத்தியதையும், அவற்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தான் அத்தனை ஏகாத்பத்திய நாடுகளும் வேலை செய்தன் என்பதையும் மறந்துவிட்டால் இது போல அடிபப்டையற்ற குற்றச்சாட்டுகளை வாரியிறைக்க முடியும்.

சோசலிச நாட்டில் தண்டனைகள் இல்லையென்று யாரும் சொல்லவில்லையே? உங்க ஆட்கள் சோசலிச நாட்டில் எவனையாவது விலைக்கு வாங்கி சதி வேலை செய்வார்கள் நாங்கள் அதை பார்த்துக் கொண்டு மனிதாபிமானம் பேச வேண்டும் என்று நீஙக்ள் எதிர்பார்த்தால் மன்னிக்கவும் அனானி, எங்கள் துப்பாக்கிகள் துருப்பிடித்து விடும். எனவே சூட் அட் சைட்(விசாரனைக்கு பிற்கே).

மனித உரிமை, ஜனநாயகம் இவையெல்லாம் சோசலிசம் குறித்து நாங்கள் பேசும் போது மட்டும் உங்களுக்கு ஞாபகம் வரும் மர்மம் தெரியவில்லை. உலகின் மிக பெரிய சிறைச்சாலை அமெரிக்க கௌதனாமோ.

அனானி, சோசலிசத்தின் வெற்றி குறித்து ஏன் பதிலே சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். அது பீனிக்ஸ் பறைவையாக சோதனைகளை கடந்து சாதனை படைத்தது குறித்து ஏன் பதில் சொல்ல மறுக்கீறீர்கள்.


அசுரன்

said...

Socialist countries did succeed in
eliminating hunger and in meeting basic needs.But their economic and political models were so flawed that they could not continue to grow or innovate beyond a point.Dictatorship of the party and bureaucracy became a burden on the possible.Denial of fundamental rights, economic mismanagement and other facts resulted in their downfall.
China too would have faced more problems had it not opened up its economy and took advantage of global markets and investment.History shows that socialist models have
succeeded in the short term but failed in the long run.On the other hand some european countries
have ensured that their citizens enjoy high standards of living and
the welfare state takes care of basic needs and fundamental rights are assured.India should try to learn from them than from the socialist countries.You may have faith in socialist models and may think that Stalin and Mao are still
relevant.I dont think so.

said...

ஒரு விசயம் அனானி,

நீங்கள் ஏன் சோசலிச சமூகம் யாரையும் சுரண்டாமல் முன்னேறியதையும், நீங்கள் குறிப்பிட்ட சமூகஙக்ள் யாரையாவது நாசமாக்கியே இயங்கி வருவதையும் பற்றி பேச மறுக்கிறீர்கள். இதில்தான் வித்தியாசம் உள்ளது. எனது கிராமத்த்ல் கூட ஒரு நிலபிரபு நிலத்தில் காலே வைக்காமல் நகரத்தில் இருந்து கொண்டே வாழ்வாங்கு வாழ்கிறார். அந்த ஈனத்தனத்தை நானும் செய்ய எனக்கு சுயமரியாதையும் அடிப்படை மனிதாபிமானமும் நேர்மையும் இடம் கொடுக்க வில்லை. நீங்கள் எப்படி என்று தெரியவில்லை.

மற்றபடி அவற்றால் முன்னேற முடியவில்லை ஸ்டேக்னேட் ஆகி விட்டது எனப்தெல்லாம் சும்ம சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். முதலாளித்துவ முறைகளை அறிமுகப்படுத்தியதிலிருந்துதான் சோவியத் ரஸ்யாவின் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பிக்கீறது.. அது தனது தொங்கு தசை நாடுகளை சுரண்டுகிறது. யுத்தம் நடத்தி தனது நாட்டு மக்களையும் ஏமாற்றுகிறது.

சீனாவிலும் கூட வறுமையும், விபாச்சாரமும் அவர்களது நாட்டை திறந்துவிட்ட பிறகே ஏற்ப்பட்டது. உலகமயம் என்றும் உய்விக்க வந்ததல்ல. எனப்தற்க்கும் சோவியத் நாடுகளே உதாரணமாக இருக்கின்றன. கடைசியில் இப்படி லாங் ரன் சார்ட் ரன் என்று வந்து நிற்கிறீர்கள். லாங் ரன்னுக்கு அதை நல்லபடியாக கொண்டு செல்ல அதில் உள்ள குறைகள் களைந்தால் போதும் அல்லவா? அதைத்தான் நாங்களும் சொல்கீறோம். அதை விடுத்து ஒட்டு மொத்தமாக குறை கூறுவது பூனை கண் மூடிக் கொள்வது போலவே.

அசுரன்

said...

போலி கம்யுனிஸ்டு ஒருத்தர் இருந்தார். அவர்ட்ட போய் என்னாபா இப்படி அப்பட்டமா ஏகாதிபத்தியத்துக்கு சேவை
செய்யுறியே என்ன விசயம்? இதுக்கு மார்க்ஸியத்துல என்ன வியாக்கியனம் கொடுக்கப் போற என்று கேட்டேன்?

அந்த போலி கம்யுனிஸ்டுக்கோ ஒரே கோபம். என்னாடாதி நம்மள பாத்து கேள்வி கேட்டுட்டானே என்று தமது தத்துவ வியாக்கியானத்தை புரளி வடிவில் கொடுத்துள்ளனர்.

இவர்களின் இதே கட்டுரையை ஒரு அதிமுக அல்லது ஒரு திமுக காரர் இவர்களை தாக்கி எழுதுவதாகக் கொண்டால்
அப்படியே பொருந்தும். அதாவது இவர்களின் கட்டுரைப் படி இவர்களை விட சிறந்த கட்சி திமுக, அதிமுக உள்ளிட்ட
வோட்டுப் பொறுக்கி கட்சிகள்தான். வோட்டுப் பொறுக்கி என்று திமுக அதிமுக கட்சிகளை குறை கூறுவதை இந்த போலி
கம்யுனிஸ்டுகள் அனுமதிப்பதில்லை. என்ன செய்ய இந்த வரையறை அவர்களுக்கு பொருந்துகிறதே. இப்படி இவர்கள் காபந்து
செய்யும் ஆட்கள் நிறைய பேர் - சங்கராச்சாரி, டாடா, ஜார்ஜ் புஷ் etc.

மக்கள் பிரச்சனை, பொருளாதார கொள்கை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினால், அதில் என்ன தத்துவ அடிப்படை
உள்ளது என்று கேள்வி எழுப்பினால், அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் புரளி பேச விழைந்து தாம் உண்மையிலேயே
போலி கம்யுனீஸ்டுதான் என்று நிரூபிக்கிறார் இவர். ஏனேனில் மார்க்ஸியத்தை நடைமுறையில் கொண்டவர்கள் இல்லை
இவர்கள். அதனால்தான் தமது நடவடிக்கைகளுக்கு எந்த தத்துவ வியாக்கியானமும் கொடுக்க வழியின்றி இப்படி பொருமி
கொட்டுகிறார்கள்.

எண்ணிக்கைதான் அளவு கோல் எனில் அன்றைக்கு பகத்சிங் திண்னை புரட்சியாளந்தான். இன்றைக்கு அதிமுகதான் புரட்சிகர
கட்சி.

ஆனால் பகத்சிங்கை கண்டுதான் ஏகாதிபத்தியம் நடுங்கியது. மக இக வைக் கண்டுதான் இந்துத்துவம் தமிழக்த்தில் கதறியது
பின்வருமாறு, "தமிழக்த்தை பொறுத்த வரை மக இக தான் நமது முதன்மை எதிரி' என்று. இந்திய அளவிலும்
நக்சல்பாரிகளையே தமது முதல் எதிரிகளாக வரையறுத்துள்ளனர் இந்துத்துவாதிகள்.

ஏனேனில் மார்க்ஸிஸ்டுகளுக்கும், இந்துத்துவாதிகளுக்கும் அதிகார போட்டி தவிர்த்து சித்தாந்த போட்டி என்று ஏதுவுமில்லை
என்று இந்துத்துவவாதிகளுக்கு தெரியும். CPM தலைவர் ஒருவர் தன்னை பார்ப்பனன் என்ற பொழுதும், தீபாவளி, ரமலன்
விழாக்களுக்கு சிறப்பிதழ் வெளிய்யிட்ட போதும், சஙக்ராச்சாரிக்கு அரசு விருந்தினர் மரியாதை கொடுத்த போதும், CPM கூட
இந்த இந்துத்துவ கூட்டணியை மறைமுகமாக உறுதிப்படுத்தியது. ஏன் நக்சலிசம் குறித்த இன்னுமொரு துரோக
நடவடிக்கையில் நமது திரு போலி அவர்கள் கூட வஜ்ரா எனும் இந்துத்துவாதியிடம் சென்று அங்கீகாரம் கோரினார்.

மகஇகவைக் கண்டுதான் தாமிரபரணி கோக் பிரச்சனையில் போலிஸ் பேச்சு சுதந்திரத்தையே மறுத்து தொலைக்காட்சியில்
அம்பலமாகியது. மக இக அந்த பிரச்சனையில் இறங்கியாராவிடில் CPMன் அடையாள போராட்டத்தின் வீச்சு என்ன்வென்று
தெரிந்த அரசும், போலீசும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். இந்த சம்பவத்தில் தெரிய்வருவது ஒரு கட்சியின்
பலம் என்பது புரட்சிகர சித்தாந்தம் தான் என்பது மிகத் துலக்கமாக தெரிந்தது.

லெனின் ஒரு கட்சியின் பலம் என்பதாக புரட்சிகர சித்தாந்தையே சொல்கீறார். நானும் பல முறை இந்த போலிகளிடம்
உங்களின் புரட்சிகர சித்தாந்தம் என்னவென்று கேட்டுவிட்டேன். பதில் இல்லை. கடைசியில் MBA படிப்பில் சொல்லித்
தரப்படும் பிழைப்புவாதமே இவர்களின் புரட்சிக்ர சித்தாந்தம் என்று புரிந்து கொண்டேன். அது மார்க்ஸியம் அல்ல
என்பதுதான் எனது நிலைப்பாடு. அவர்களோ MBA படிப்புதான் மார்க்ஸியம் என்றூ சொல்லாமல் சொல்கிறார்கள்.

ஒரு புரட்சிகர சித்தாந்தம் மக்களின் கையில் கிடைக்கப் பெறும் போது பௌதீக சக்தியாகிறது - மக இக வின் புரட்சிகர
சித்தாந்தம் ஒரு பௌதீக சக்தியாக இன்னும் முழு அளவில் பரிணமிக்கவில்லை. ஆனால் புரட்சிகர சித்தாந்தத்தை தமது
கொள்கையாக அவர்கள் கொண்டுள்ளனர். CPM? வெறும் விசிலடிக்கும் குஞ்சுகளையும், RSSக்கு இணையாக பொறுக்கிக்
கூட்டத்தையுமே தமது பிரதான சக்தியாக கொண்டுள்ளது. புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை பிழைப்புவாத மோகத்தில்
மூழ்கடித்து, தொழிற்சங்கம் என்பத்ற்க்கே அவப் பெயரை உருவாக்கியுள்ளது.

முதலாளித்துவ பாரளுமன்றம் நடைமூறையில் உள்ள நாட்டிலேயே ஒரு கம்யுனிஸ்டு கட்சி என்பது தலைமறைவாக செயல்பட
வேண்டியதன் தேவை குறித்து லெனின் கூறுகீறார். மகஇக வெகு ஜன அமைப்புதான். தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும்
நக்சல்பாரி என்று எழுதியவர்கள்தான். ஒவ்வொரு பேரணியிலும் நக்சல்பாரி என்று முழங்கியவர்கள்தான். தமது பொருளாதார அர்சியல் கொள்கைகளை தமது ஒவ்வொரு போராட்டத்திலும் நேரடியாக மக்கள் முன் வைத்துதான் அவர்க்ளை அணி திரட்டுகீறார்கல் மக இகவினர். திரு போலி அவர்கள் கூறுவது போல பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கூட தெரியாமல் அரசியல் செய்துதான் மக இகவிற்கு அமைப்பு கடந்த ஆதரவு இன்று உருவாகியுள்ளதோ?

ஆனால், முல்லைப் பெரியாறு முதல், காவிரி வரை தமது நிலைப்பாட்டை மாநிலத்திற்க்கு ஒரு குரலில் பேசி புர்ட்சி செய்வது யார்? இந்தியாவெங்கும் ஸ்டைரைக் ஆனால் மே.வாவில் கிடையாது, இந்தியா முழுவதும் உலகமயத்திற்க்கு அடையாள எதிர்ப்பு ஆனால் மே.வாவில் பில் கிளீண் டனுக்கு வரவேற்ப்பு, இந்தியா முழுவதும் ஜார்ஜ் புஷ்க்கு எதிர்ப்பு மே.வாவில் அமெரிக்க ராணுவ பயிற்சிக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு - நல்ல புரட்சிகர கட்சி. இதைத்தான் வோட்டுப் பொறூக்கி அரசியல் என்கிறோம். மக்களை வெறும் வோட்டு போடும் மிசின்களாக கருதி நடக்கும் இவர்களைத்தான் நாம் போலி கம்யுனிஸ்டு என்கிறோம். மக்களிடமிருந்து கற்றுக்கொள் மக்களுக்கு கற்றுக் கொடு என்பதை இவர்கள் நடைமுறைப்படுத்தும் விதம் இதுதான். உண்மையில் கூரை ஏறி கோழி பிடிக்கும் விசயம் இவர்களுக்குத்தான் சாலவும் பொருந்தும். சாதாரண விசயங்களிலேயே மிக அற்பமாக சரணாகதி அடையும் இவர்கள் எந்த காலத்திலும் பாட்டளிக்கோ அல்லது விவசாயிக்கோ விடுதலை வாங்கி கொடுக்கப் போவதில்லை. இவர்களின் நில சீர்திருத்தத்தின் அவலம் வேலையின்மையிலும், கேரள வல்லநாடு உள்ளிட்ட இடங்களிலும், ரப்பர் தொழில் சரிவிலும் தெரிகீறது. நாடாளுமன்ற குண்டு சட்டிக்குள் புரட்சி செய்ய முனைந்து ஏகாதிபத்திய சேமியாவுக்கு கறிவேப்பிலையாக மணக்கும் CPMன் அவலம் உண்மையிலேயே மிக பரிதாபகரமானதுதான்.

அப்புறம் மாவோயிஸ்டுக்ள் குறித்த இவர்க்ளின் கொள்கை முரன்பாடுகளுக்கு மாவோயிஸ்டுகள்தான் வந்து பதில் சொல்ல வேண்டும். ஆனால் மாவோயிஸ்டுகளை விமர்சிக்க இவர்களுக்கு தகுதியில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். மம்தாவின் பின்னால் மக இக ஒளிவாதாக கூறுகிறார் மேலும் ஜெயலலிதா மே.வாவில் இருந்தால் அவர் பின்னாலும் ஒளிவோம் என்கீறார். உண்மையில் ஜெயலலிதா முதலானவர்களின் பின்னால் ஒளிந்து வோட்டு அரசியல் நடத்திய பிழைப்புவாதிகள் யார் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சரிதானே நான் சொன்னது. இவர்கள் இன்னும் ஏன் மார்க்ஸிஸ்டு என்று பெயர் தாங்கி அழைகிறார்கள் என்று தெரியவில்லை.
அதற்க்கு இது வரை திரு போலியிடம் இருந்து விளக்கம் வரவேயில்லை.

About Singur:
http://tamilarangam.blogspot.com/2007/03/blog-post_01.html

******************

இதற்க்கு முன்பே ஒரு முறை இந்த போலிகள் தங்களது தத்துவ ஓட்டாண்டித் தனத்தை விளம்பரப்படுத்தி அசிங்கப்பட்டுள்ளனர். அந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டம்,

//////
சல்வாஜூடம் போன்ற துரோக இயக்கங்களை சந்தித்து விடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் உள்ளிருந்து கழுத்தறுத்து அரசின் குரலாக ஒழிக்கும் தங்களைப் போன்றவர்களை என்ன செய்வது?


அதுவும் ஒரு இந்துத்துவவாதியிடம் சென்று அங்கீகாரம் கோரிய தங்களை போலி கம்யூனிஸ்டு என்று விமர்சனம் செய்வது எந்த வகையில் தவறு?


Maoist-னுடைய அரசியல் செயல்/போர் தந்திரம் சரியா, தவறா என்பது விவாதத்திற்க்கு உரியது. மாறாக கற்பிதமான அவதூறுகளைப் பரப்பி அரசியல் செய்தது CPM. அது CPMனுடைய தராதரம்.


Maoist பற்றி சொல்லுவத்ற்க்கு தங்கள் கட்சிக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா. Maoist னுடையது இடது சகாசவாதம் எனில் தங்களுடையது வல்து சந்தர்ப்பவாதம்.


மற்றபடி தங்களது பதிவிலேயே கிசு கிசு ரேஞ்சில் சில குற்றச்சாட்டுகள் வைத்துள்ளீர்கள். அதே போல் என்னால் ஆயிரம் உதாரணங்கள் தங்களது CPM மீது வைக்க முடியும். ஆனால் 'உலகின் மற்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்பு உள்ளது' என்ற வரிகளுக்கு நான ஆதாரம் கேட்டால் தங்களால் தரமுடியாது என்பதால்தான் கிசு கிசு பாணியில் அதை சொல்லியுள்ளீர்கள்.

************


உங்களது ஆதரவு பெற்ற சல்வஜூடம் இயக்கத்தைப் பற்றி நான் என்ன சொல்லுவது அந்த பகுதியின் போலி கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரே கூறிவிட்டார். ஒரு வேளை மாநிலத்துக்கு மாநிலம் மக்களை ஏமாற்ற கூட்டணி கட்டும், ஒரே விசயத்தை இரண்டு விதமாக விமர்சிக்கும் அணுகுமுறை இந்த விசயத்திலும் வேலை செய்கிறதா?(அதாவது சட்டீஸ்கரில் சல்வஜூடம் சரியில்லை என்று கூறுவது, இங்கு அதுதான் சரி என்று கூறுவது. இந்தியா முழுவது ஸ்டைரக், மே.வ. தில் முதலமைச்சரே ஸ்டைர்க்குக்கு தடை, மே.வா தனியார்மயம், உலகமயம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்ற மாநிலங்களில் எதிர்த்து பேச(மட்டும்) செய்வது).


CPM: வோட்டு சார் வோட்டு......

நாம்: அப்போ மக்கள்?

CPM: அவிங்க கிடக்கிறாங்க விடுங்க சார். ஜனநாயகம் என்றால் என்னானே அவிங்களுக்கு தெரியாது. அவங்ககிட்ட வைச்சு என்னாத்த விவாதம் செய்ய... நம்ம குறுக்கு வழியில சட்டமன்றத்த பிடிச்சு புரட்சி பன்னுவோம். அதுக்கு கொள்கையெல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு மத்த வோட்டு பொறுக்கி மாதிரியே நாமலும் மக்கள ஏமாத்தனும். இன்னைக்கு கருணாநிதின்னா நாளைக்கு ஜெயலலிதா.. ஆனா என்னைக்கும் நமக்கு 10 MLA சீட்டு உறுதி..


************


அப்புறம் இது வர்க்கப் போராட்டமா என்று கேட்டிருந்தீர்கள் வர்க்கப் போராட்டம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. துரோகிகள் காக்கி உடையிலும் வரலாம், இதுபோல தத்துவ மயக்கத்தில் சொந்த வர்க்கத்தில் இருந்தும் வரலாம். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்த இன்னொரு வர்க்கப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.


மே.வவின் முதல் கம்யுனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரசுக்கு கூஜா தூக்கி- நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த விவசாயிகள் புரட்சியை ஒடுக்கிய CPM-ன் நடவடிக்கை வர்க்கப் போராட்டமா?


இதற்க்கு தங்களிடம் பதில் இருக்காது. நானே சொல்கிறேன், அது வர்க்கப் போராட்டம்தான். அரசியல் தரகு வர்க்க CPM க்கும் வறிய விவசாயிகளுக்கும் நடந்த போராட்டம்தான் அது.


அங்கு ஒரு அரசின் கடமையை கிஞ்சித்தும் கவலையின்றி செய்த பாட்டாளி வர்க்க கட்சி?? - CPM.

பலியான விவசாயிகள் - உரிமைக்காக போராடியவர்கள்.


இங்கு சல்வாஜூடமில் போராடுபவர்கள் யாருடைய உரிமைக்காக போராடுகிறார்கள்? அரசு, ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்வேறு முற்போக்கு சக்திகள் சல்வாஜூடம் அமைப்பை கண்டிக்கும் பொழுது நீங்கள் ஆதரிப்பதில் உள்ள உள்நோக்கம் அவதூறு கிளப்பியே மாற்று தத்துவங்களை நிர்மூலமாக்கும் தந்திரம்தான் என்பது தங்களது அடிப்படையற்ற ஒரு கிசு கிசு பாணி குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகிறது.


அதுசரி இன்னோரு விசயத்தைப் பற்றியும் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. கேராளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் கம்யுனிஸ்டு அரசு களைக்கப்பட்டதே. அந்த அனுபவம் என்ன? நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஏனென்றால் எதையும் மக்கள் முன் வைத்து விவாதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களே. மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது மக்களுக்கு கற்றுக் கொடுப்பது என்பதை - மக்களிடமிருந்து பிற்போக்குத் தனத்தை கற்றுக் கொள், மக்களுக்கு பிழைப்புவாதத்தை கற்றுக் கொடு என்று புரிந்து கொண்ட அமைப்புதானே CPM என்ற போலி கம்யுனிஸ்டு கட்சி.


கேரள அரசு கவிழ்ப்பின் படிப்பினையாக CPM எடுத்துக் கொண்டது - நாய் வேசம் போட்டால் குரைக்க வேண்டும், பன்னி வேசம் போட்டால் சாக்கடையில் சவக்....சவக்...தான். அதாவது அரசு என்ற பாத்திரத்தை எடுத்துக் கொண்ட CPM அந்த அரசின் வேலைகளைச் செய்ய வேண்டும். கம்யூனிசம் எல்லாம் கோமனத்தை கழட்டி காயப் போட்டிருக்கிறோம் புரட்சிக்கான சூழல் வரும் பொழுது கட்டிக் கொள்வோம் என்ற அளவில்தான். இதைத்தான், அதாவது கேரள அனுபவத்தின் படிப்பினையைத்தான் மேற்கு வங்கத்தில், எந்த வர்க்கதின் பலத்தில் ஆட்சிக்கு வந்தார்களோ அந்த விவசாயிகளை நசுக்க அமல்படுத்தியது. அதாவது அரசின் அடக்குமுறை.


****************


புரட்சிகர கட்சியின் பாத்திரம் பற்றி லெனின் கூறுகிறார், ஒரு சிறப்பான கட்டமைப்பான புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி இருந்தால், எந்தவொரு சாதாரண சம்பவத்தையும் புரட்சிக்கான சம்பவமாக மாற்ற முடியும்.


புரட்சி என்பது மேலே பறந்து போகும் காக்கை போடும் எச்சமல்ல. காக்கை போடும் பொழுது பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பதற்க்கு.

அதற்க்கு அடிப்படையாக தேவைப்படுவது முரன்பாடுகளை கையாளும் துணிச்சலும், தத்துவ பலமும். இந்த இரண்டும் உறுதியாக CPM-க்கு கிடையாது. அதுவும் முரன்பாடுகளை கையாளும் துணிச்சல் உறுதியாக அதற்க்கு கிடையாது. மாறாக முரன்பாடுகளை பார்த்தால் வசதியாக ஒருக்களித்து படுக்கும் ஒரு இடுக்கு கிடைத்து விட்டது என்று சந்தோசப்படும். இதை அந்த கட்சி பல்வேறு பிற்போக்கு சக்திகளுடன் தத்துவ தளத்தில் வைத்திருக்கும் உறவுகளை பார்த்தால் புரியும்(இங்கேயும் நீங்கள் வக்ராவுடன் கொஞ்சிப் பேசி அணுகிய விதம் அந்த பண்பாட்டின் எச்சம்தான்).


எடுத்துக்காட்டுக்கு ஒரு முக்கியமான முரன்பாட்டை இவர்கள் கையாளும் விதத்தை பாருங்கள்.


தனிஉடைமை அரசு என்பது மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஒரு அமைப்புதான், ஆனால் தனது வாழ்க்கையை உத்திரவாதப்படுத்திக் கொள்ள அது மக்களுக்கான அரசு என்பது போல தோன்றச்செய்யும் நடவடிக்கைகளையும் அது செய்யும்.


அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை, முரன்பாட்டை(அதன் உண்மையான மக்கள் விரோத இயல்பு Vs மக்களை ஏமாற்றும் அதன் மக்கள் நல நடவடிக்கைகள்) சரியாக கையாள்வதன் மூலம் அதை மக்களிடம் அம்பலப்படுத்துவதும். இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு இடையில் அரசு சிக்கி தவிப்பதில் தனது ஜீவிதத்தை உறுதிப்படுத்திக் கொள்வதும் என்பதாகத்தான் ஒரு புரட்சிகர கட்சியின் நடவடிக்கை இருக்க வேண்டும்.


தங்களது அமைப்பு என்றைக்காவது இந்த முரன்பாடுகளுடன் விளையாண்டுள்ளதா? எங்கே விளையாட முரன்பாடுகளை கண்டாலே சம்ரசம் என்ற நியுட்ரல் கியர் போட்டு அங்கேயே ஐக்கியமாகிவிடும் அமைப்பல்லவா அது.


***********


அப்புறம் ஆயுதத்தை, சூழல் தீர்மாணிக்கும் என்று ஒரு வரி போட்டு நாங்கள் அசைவ புலிதான் என்ற ஒரு போலியான உண்ர்வை ஏற்படுத்த முயன்றிருந்தீர்கள். மாவோ சொல்கிறார் நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நமது எதிரி தீர்மாணிக்கிறான்.


புரட்சியின் தருவாயில் CPM மும் ஆயுதம் எடுக்கும் ஆனால் ஒரு அரசாக - அந்த புரட்சியை ஒடுக்கும் ஒரு ஆளும் வர்க்க கைக்கூலியாக ஆயுதத்தை எடுக்கும்.


********

வர்க்கப் போராட்டாம், வெகுஜன இயக்கம், ஹிந்துத்துவ எதிர்ப்பு என்று தங்களது நடைமுறைக்கு சம்பந்தமில்லாத விசயங்களைப் பற்றி பேசுகிறேர்கள். அப்படி என்ன விதமான போராட்டங்களை நடத்தி விட்டேர்கள் என்று நான் கேட்பதை விடுங்கள் மக்களுக்கு தெரியும். நான் சில தத்துவ அடிப்படை கேள்விகள் கேட்டால் என்ன என்று தோன்றுகிறது.


மக்களுக்கு ஜனநாயகமே அறிமுகமாகாத போது இடது தீவிரவாதம் பேசுவது ஆபத்து என்று முன்பொருமுறை சொன்னீர்களே? யாருக்கு ஆபத்து?


இந்த ஜனநாயகம் இல்லை என்ற காரணத்தினாலேயே காஸ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்து அவர்களை களாவானித்தனமாக இந்தியாவுடன் இணைப்பதை ஆதரிக்கிறேர்களே இது எந்த மார்க்ஸிய புத்தகத்தில் உள்ளது?(அய்யா, ஒழிந்திருக்கும் திரிபுவாதிகளே காஸ்மீர் இந்தியாவுடன் இருப்பதைத்தான் நானும் விரும்புகிறேன்.)


இந்திய புரட்சிக்கான தங்களது புரட்சிகர செயல் தந்திரம் என்ன?


இந்திய சமூகத்தைப் பற்றிய தங்களது வரையறை என்ன?


இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா? அதன் அளவு, வீச்சு என்ன?


ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் கடமை என்ன?


சரி, தங்களுக்கு CPI க்கும் என்னதான் வித்தியாசம்? சும்மா புத்தகத்தில் உள்ளதை ஒப்பிக்காமல் நடைமுறையில் உள்ள வேறுபாட்டுடன் சொல்லவும்.


*********


ஸ்டாலினை இன்னும் ஆதரிக்கிறீர்களா அல்லது ஆள் செர்க்கவும், தட்டி போர்டில் போட்டோ போடவும் மட்டுமே உபயோகப்படுத்துகிறீர்களா?


இந்த கேள்வி ஏனென்றால்..... இங்கே ஒருத்தன் ஸ்டாலினை கொலைகாரன் என்று மட்டமாக எழுதினான் அப்பொழுது தங்களது சுயமரியாதை ஒழிந்த இடம் எங்கே?


அல்லது மனிதருள் மிருகம் என்று ஸ்டலினை எழுதியவருக்கு விருது கொடுத்த பொழுது இனாமாக தங்களது கட்சி சுயமரியாதையையும் சேர்த்து கொடுத்து விட்டதா?


மனிதருள் மிருகம் எழுதியவரை கௌரவித்த CPM வர்க்க ஸ்தாபனம், மனிதருள் மிருகம் எழுதிய மிருகத்தையும் அதை வெளீயிட்ட பத்திரிக்கையையும் மன்னிப்பு கேட்க வைத்த நக்சல்பாரி ம.க.இ.க பயங்கரவாத அமைப்பு. பலே.... தங்களது கட்சியின் தனி சிறப்பு வாய்ந்த ஆய்வு முறை-வர்க்க பகுப்பாய்வு முறை, வக்ராவிடம் அங்கீகாரம் கோரியபோது மட்டுமல்ல மாறாக இது போல ஆயிரத்தெட்டு சம்பவங்களில் பளிச்சென்று அப்பட்டமாக வெளிவருகிறது.


***************


கோக்கோலா பிரச்சனையில் தங்களது வெகு ஜன நடவடிக்கை என்ன? ஒரு சிறிய நக்சல்பாரி அமைப்பான ம.க.இ.க மக்களை அங்கு திரட்டியதில், மாநிலம் முழுவதும் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கியதை வெகுஜன இயக்கமாக தங்களால் பார்க்க இயலாது. தங்களது பார்வையில் ஜனநாயாகத்தின் சுவை அறியாத மக்களுக்கு ஜனநாயகம் தேவையில்லையே. அதனால் சட்டமன்ற நாடாளுமன்ற நடவடிக்கையே ஜனநாயகம், தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்து மாற்றுக் கட்சி அன்பர்களுடன் மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதே வெகுஜன இயக்கம் போலும்.


தங்களது த.மு.எ.ச வெளியிட்ட மூழ்கும் நதி திரையிட தடை செய்யப்பட்டதே அதை என்ன சொல்கிறீர்கள்?


ஒரு ஜனநாயகத்துக்கு உரிய எல்லா அம்சங்களிலும் இந்த சட்டமன்ற/நாடாளுமன்ற அமைப்பு அம்பலப்பட்டு நிற்க்கும் பொழுதும் அதை முட்டுகொடுத்து அதில் இன்னும் எதோ பாக்கி இருப்பது போல் உணர்வு கிளப்பும் நீங்கள் இந்தியாவின் சாலச் சிறந்த முகமூடி என்பதில் தங்களுக்கு எந்த போட்டியும் இல்லை.


இந்துத்துவ எதிர்ப்பில் நடைமுறையில் என்ன செய்திருக்கிறீர்கள். இந்துத்துவம் BJP, RSS மட்டுமல்ல. அது அனைத்து கட்சி தழுவிய ஒரு தத்துவம்(CPM அதில் உண்டு). இதை பற்றி உங்களது 'மார்க்ஸீயம்' இதழிலிலேயே விரிவான கட்டுரைகள் வந்துள்ளன. சட்டமன்ற நாடாளுமன்ற வழிமுறை சும்மா பம்மாத்து என்பது உங்களுக்கு அப்பனான இந்துத்துவ சக்திகளுக்கு மிகவும் தெளிவாக தெரியும்.


இந்துத்துவம் பற்றி அப்படியொரு ஆழ்ந்த புரிதல் இருப்பதினால்தானோ தீபாவளி, ரம்ஜான் சிறப்பு இதழ்கள் ஆயுத பூசையன்று ஆட்டோ க்காரர்களுடன் சேர்ந்து சாமி படம் வைத்து கொண்டாடுவது, நாடாளுமன்ற கற்பின் காவலர் சோம்னாத சேட்டர்ஜியின் பேரனுக்கு பூணுல் கல்யாணம் செய்ய அவர் வருவது, தங்கள் கட்சி அணிகள் சாதி வெறியுடன் இன்னும் நிலபிரபுத்துவத்தை தாங்கி நிற்க்கும் பூத உடல்காலாக வலம் வருவது(சமீபத்திய புதிய ஜன நாயகம் இதழில் இந்த சாதி வெறி பற்றிய கட்டுரை வந்துள்ளது) என்று பல புதிய உத்திகளை கையாள்கிறேர்களோ. இந்துத்துவ எதிர்ப்பிற்க்கு நல்ல நடைமுறை, நல்ல வெகுஜன இயக்க தந்திரம்.


மாறாக இந்துத்துவ எதிர்ப்பில் முன்னனியில் இருக்கும் ஒரு அமைப்பு ம.க.இ.க. இங்கு வந்த பிரவீன் தோகாடியா சொன்னது தமிழ் நாட்டில் நமது முதல் எதிரி ம.க.இ.க என்றுதான்.


அய்யா, உங்களால் இந்த சமூகத்துக்கு விளைந்த ஒரே நன்மை பாட்டாளியின் போராடும் உணர்வை மழுங்கடித்து, பேரம் பேசுவதுதான் பாட்டாளி வர்க்க புரட்சி என்ற புரிதலுக்கு இட்டு சென்றதுதான். அதனால்தான் ஒரு தொழிற்சங்கத்தில் சேருவதற்க்கு அடிப்ப்டையாக ஒரு தொழிலாளி அந்த சங்கத்தின் பேரம் பேசும் திறமையை பார்க்கிறான். மிக நல்ல உதாரணம் அசோக் லேலான்ட் தொழிற்சாலை. பாட்டாளிகளுக்கு பிழைப்புவாதத்தையும், மற்ற வெகுஜனங்களுக்கு தொழிற்சங்கம் என்றால் கோமாளித்தனம் என்ற புரிதலையும் ஏற்படுத்தியதை தவிர்த்து என்ன செய்து விட்டீர்கள்.


தங்களது பதிவிலும் புரட்சி, பாட்டாளி என்று பல வார்த்தைகள் உள்ளன. ஆனால் நடவடிக்கையில் இவற்றை கோரும் போது வோட்டு போடு அத்தோடு நிறுத்திக் கொள். அரசை நிர்பந்திக்கும் போராட்டம் நடத்தாதே என்று இன்னோரு புதிய வகை புரட்சி பேசுவது தங்களது அமைப்பின் வாடிக்கை.


உங்களது குறைப் பிரசவ தத்துவத்தின் வறுமை கேரளாவின் வேலைவாய்ப்பில் தெரிகிறது. சீர்திருத்தவாதத்தின் அவலம் அப்படித்தான் இருக்கும். தங்களது நடவடிக்கைதான் கம்யூனிசம் பற்றி தவறான, கம்யூனிஸ்டுகள் என்றால் கோமாளி, ஸ்திர புத்தியில்லாதவன், வற்ட்டு சூத்திரதாரி, இழிச்சவாயன் என்ற பார்வையை இந்த சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.


கேரளா, மே.வத்திலும் கட்சியின் பலம் அது ஆளும் கட்சியாக இருப்பதுதான். அங்கேயும் அந்த கட்சியின் அடிமட்டம் அதிகார படிக்கட்டில் ஆதாயம் தேடும் போட்டிகள் பல்வேறு புகார்களில் சிக்கியுள்ளது.

********

நக்சலிசம் என்றால் ஆயுதப் போராட்டம் மட்டுமே என்ற தங்களது புரிதல் உண்மையிலேயே கம்யுனிசம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியுமா என்று சந்தேகத்தை கிளப்புகிறது.


ம.க.இ.க போன்ற அமைப்புகள் என்ன துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொண்டா திருநெல்வேலியில் ஆர்பாட்டம் நடத்தினார்கள்?


ஒஹோ... ஒரு வேளை அரசை அம்பலப்படுத்துவதே வன்முறை என்று தங்களது கட்சி தங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறதோ?


அய்யா... நக்சல்பாரிகளை நல்வழிப்படுத்தும் முன்பு அந்த தத்துவத்தை படித்து அது சரியா, தவறா என்பதை முடிவு செய்யவும். அப்புறம் தங்களது அமைப்பு ஆட்களிடம் தத்துவத்தை நடைமுறையுடன் படிக்கச் சொல்லி ஒரு விண்ணப்பமிடவும்.


மற்றபடி இந்திய நிலைமகளுக்கேற்ற மாவோ வழி புதிய ஜனநாயக பாதை எப்படி நடைமுறைக்கான பாதை என்பதை புரியவைக்கத்தான் இந்த வலைப்பூ உலகில் வலம் வருகிறேன். அது போன்ற எனது பதிவுகளை வாதம் செய்யுங்கள். பிறகு நானும் எனது புரிதலை திருத்திக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
அசுரன்
///////


அதே பதிவிற்க்கு தோழர் கட்டபொம்மன் என்பவர் அளித்த பின்னூட்டம்,

/////
நாடு மறுகாலனியாதிக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும்போதும், அரசின் அடக்குமுறை எல்லை மீறும்போதும் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை நமக்காக எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டு போராடும் வர்க்கப்போராளிகளின் கீழ்க்கண்ட பாதைகளைப் பின்பற்றினால்தான் மக்களின் போராட்டம் வெல்லும்.

சதீஸ்கர் தீவிரவாதிகள், சென்னைப் போராளிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன.

1) போயஸ் தோட்டத்துக்குப் புல்லறுக்கப் போய், அடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு மணியாட்டப் போய் விட்டு, இடையில் ஓய்வு கிடைக்கும் வேளையில், மெமோரியல் ஹால் அருகே பஸ்ஸே வராதபோது 'வெல்லட்டும்!
வெல்லட்டும்!' எனக் கத்தியபடியே கலைந்து போய்த் தமது போர்க்குணத்தை வெளிப்படுத்தலாம்.

2) சதீஸ்கரில் அரசின் அடக்குமுறைகளையோ, உலகமயமாக்கலின் கெடுபிடிகளையோ தீர்க்க, உயர்நீதி மன்றம் உச்சநீதி மன்றம் (இதனை உச்சிக்குடுமி மன்றம் என்று பெரியார் கட்சிக் காரர்கள் சொல்லினால் சொல்லட்டும் காம்ரேட்.) ஆகிய இரும்புக்கோட்டைகளில் ஏறி இறங்கி, மக்களுக்கு தெம்பூட்டலாம்.

3) அரசின் அனுமதியுடன் மக்கள் திரளைக் கூட்டி, மொட்டை அடிக்கும் போராட்டம், மணி அடிக்கும் போராட்டம், வாயில் கறுப்புத் துணி அணிந்து ஆர்ப்பாட்டம், ஒப்பாரிப் போராட்டம், அல்லது ஆளே நடக்காத ரோட்டில் (என் ஹெச் 7 மாதிரி) மனித சங்கிலி ஆகிய போராட்டங்களை திறம்பட நடத்தி விட்டால், மக்கள் விரோதிகள் எல்லாம் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட மாட்டார்களா?

4) பகத் சிங் படத்தை போஸ்டரில் போட்டுக் கொண்டு, பார்லிமெண்ட் தொழுவில் பஜனை பாடிக் கொண்டே வர்க்க எதிரிகளைப் பந்தாடி விடலாம், தோழர்!

துரோகிகளை உருவாக்கி அரசு கூலிப்படைகளை உருவாக்கும். நம் தோழர்களை அக்கும்பலே அரசுப் படையுடன் அழிக்கும். அதற்குப் பதிலடி கொடுக்கும்போது மீடியா அரசுடன் சேர்ந்து கொண்டு 'அப்பாவிகள்' படுகொலை என்று ஊளையிடும். உடனே 'பார்த்தீர்களா! தோழர்! இடது தீவிரவாதம் இதுதான்.! காலம் இன்னும் கனியலை தோழர்! (செங்காயா இருக்கும் போல)" எனப் பிதற்றுவது. இந்தப் பித்தலாட்டங்களை ஒழிக்க மக்களை அரசியல்மயமாக்குவதுடன் ஆயுதபாணியாக்க வேண்டும்.

kattabomman
http://www.blogger.com/profile/26954504
//////

அசுரன்

said...

Read Theekathir (http://theekathir.in) for a daily dose of CPI(M) comedy and PD
http://pd.cpim.org for a weekly
dose of the same.

said...

தீக்கதிரில் தலையங்கத்தில் வரதராசன் சில விசயங்களை குறிப்பிட்டு இதனாலேயே மக்கள் சீனம் உலகமயத்திற்க்கு தனது நாட்டை திறந்து விடுவதில் பிரச்சனை இல்லாமல் இருக்கீறது என்கிறார். இந்த விசயத்தில் எனக்கு மாற்று கருத்து உள்ளது என்பதிருக்க. அந்த கருத்தை அப்படியே உண்மை என்றூ கொண்டால் CPM-ன் மே.வா விவகாரத்தில் அவர்களது ஏகாதிபத்திய சேவை அம்பலமாகிறது.

கட்டுரையிலிருந்து
""
இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய ஒரு வித்தியாசம். அவர்கள் ஆழமான அடித்தளத்தை உருவாக்கி அதன் மேல் பிரம்மாண்டமான கட்டிடம் எழுப்புகிறார்கள்.
""

மே.வாவில் அப்படி என்னவிதமான ஆழமான அடித்தளம் உள்ளது?


""
1949 லிருந்து ஒரு 50 ஆண்டுகாலம் சீன மக்கள் நடத்திய போராட்டம் நம்முடைய உற்பத்தியை 56 மடங்கு உயர்த்தியுள்ளது. பொருளாதாரம், தேசப் பாதுகாப்பு, விஞ்ஞானம், மற்றூம் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இன்றைக்கு உலகின் முன்னணி நாடுகளின் இடத்திற்க்கு வந்துள்ளோம். ""

இந்த சாதனைகளின் பலத்திலேயே சீனா உலகமயத்திற்க்கு தன்னை திறந்துவிடுவதாக கூறுகிறார் சீனாவின் தலைவர். சரி இந்த அம்சத்தில் மே.வாவின் சாதனை என்ன?

எந்த அடிபப்டையில் சீனாவையும் மே.வாவையும் ஒப்பிட்டு திரிபு வேலை செய்கிறார்கள் இந்த போலிகள்?

போலிகளை அம்பலப்படுத்தும் விமர்சனங்கள் மேலும் வரும்...

சுட்டி கொடுத்த அனானிக்கு நன்றி

அசுரன்

said...

CPM போலிகள் தங்களது கலை நிகழ்ச்சிகளில் மக இக பாடல்கள் கட்டுரைகள் கவிதைகளை பெயர் குறீப்பிடாமல் உபயோகப்படுத்தும் நேர்மை குறித்தும் புரட்சிகர புரளி விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும்

அசுரன்

said...

தோழர் அசுரன்,

பாவங்க இந்த போலி கம்யூனிஸ்டு சந்திப்பு. 'புரட்சிதலைவி'யோடு கூட்டனி வைச்சு புரட்சி செஞ்சு போர்(bore) அடிச்சு போய் சரி 'புரட்சிகலைஞரோடு' சேர்ந்து புரட்சி பண்ணலாமானு யோசிக்கிற இடைப்பட்ட நேரத்துல் கொஞ்சம் இணையத்துலயும் வந்து புரட்சி செய்யலாம்னு வந்தா இப்படியா சந்தியில் நிறுத்திவைச்சு நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்பீங்க. CPM காம்ரேடுகள் ம க இ க மாதிரி தின்னை புரட்சியாளர்களோடெல்லாம் தத்துவ விவாதம் பண்னுவாங்களா? அவங்களே பாவம் தோழர்.டாடா, தோழர்.சங்கராச்சியார் போன்ற எத்தனையோ உழைக்கும் வர்கத்தின் இரட்சகர்கள்கிட்ட பேசவே நேரமில்லாம கவலைபடுறாங்க. ம க இ க மாதிரி ஒன்னுமில்லாததுங்கள்ட(துட்டு இல்லாத ஆளுங்க) பேசி நாட்டுல தொழில் வளர்ச்சியா கொண்டுவரமுடியும்? புரட்சிதான் கொண்டுவரமுடியும்!! புரட்சிதான் இப்ப முக்கியமா? நாட்டுக்கு தொழில் வளர்ச்சி கொண்டுவர்றத விட்டுட்டு மக்கள், புரட்சி, சோசலிசம், மார்க்சியம்னு, நீங்க வேற... மக்களை உய்விக்க வந்த மகராசா தோழர்.டாடா இருக்கும்போது மார்க்சியத்துகென்னங்க அவசியம். புரட்சிக்குதான் என்ன அவசியம். டாடாயிசம்தான் CPMன் உயிர்மூச்சு, டாடாயிசத்துக்கு எதிரா சிங்கூர் என்ன சிங்கப்பூரே வந்தா கூட சுட்டு பொசுக்கிடுவாங்க ஆமா? ஜாக்கிரதை!!

தோழமையுடன்
ஸ்டாலின்

said...

சந்திப்பினுடைய பதிவில் இரு முறை கீழ் கண்ட பின்னூட்டத்தை இட்டுவிட்டேன். ஏனோ இன்னும் வரவில்லை. அங்கு $சல்வன் எழுப்பியுள்ள அவதூறுகளுக்கு பதில் சொல்ல வேண்டியது அவசியம் என்று கருதுவதால அந்த பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்.

************

$சல்வன்,

குண்டு கட்டி வெடித்தது மக இக வா? இங்கு சந்திப்பு மக இக பற்றி புரளி பேசுகிறாரா அல்லது வேறு யாரையும் பற்றியா?

கோக் பிரச்சனையில் திருநெல்வெலியில் மக்களை திரட்டி போராடியது மக இகவா அல்லது உங்க அபிமான CPM ஆ? அங்கென்ன துப்பாக்கி துக்கியா போராடினார்கள்? ஏன் திரிபுவாதம். ஓ... பேசுவது $சல்வன் அல்லவா? அவருக்கு தெரிந்த ஒரே வாதம் திரிபுவாதம் அல்லவா? மறந்து விட்டேன். மன்னிக்கவும் :-)))

விசயம் மக்கள் பிரச்சனைகளில் கொள்கை அடிப்படையில் என்ன முடிவெடுக்கிறீர்கள் என்பதுதான்.

பொது மக்கள் பிரச்சனைகளை எல்லா கட்சிகளும் எடுத்துச் செய்து கொண்டுதானிருக்கின்றன. ஏன் மேவாவிலும், தில்லியிலும் கூட BJPதான் மக்கள் பிரச்சனைகளை எடுத்து போராடியது. இங்கு மார்க்ஸியர் என்று சொல்ல CPMக்கு என்ன அருகதை உள்ளது என்பது பற்றித்தான் பேச்சு.

மாவோயிஸ்டுகளின் இடது சந்தர்ப்பவாதம் தவிர்த்து உங்களது தவறுகளை மறைத்து புனித வட்டம் கட்ட எதுவும் இல்லை என்பது பெரிதும் பரிதாபத்திற்க்குரியதுதான். மாவோயிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம் உள்ளூர் அளவில் தேச வெறி கும்பலுடன் தூணை போவதிலும் வெளிப்படுகிறது. அவற்றையும் மிக கடுமையாகவே விமர்சித்து வருகிறார்கள் பிற புரட்சிகர அமைப்பினர். இது குறித்தெல்லாம் $சல்வனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. உட்கட்சி விமர்சனம் சுய விமர்சனம் கட்சிகளிடையேயான் விமர்சனங்கள் கருத்து, சித்தாந்த போராட்டங்கள் குறித்தேல்லாம் $சல்வன் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு ரொம்பவே கம்மிதான். அவர் அரசு பாடப்புத்தகத்தில் பைக் திருடியவர்கள் என்று குறிப்பிட்டதை மட்டுமே படித்து வளர்ந்த அறிவு ஜீவி அல்லவா :-))

CPM-ன் ஏகாதிபத்திய கூட்டு இணையத்திலும் பிரதிபலிக்கிறது :-))

$சல்வனுக்கு ஏகாதிபத்தியத்தின் உண்மையான எதிரிகளை எதிர்க்க ஒரு திரிபுவாதி வேண்டும். திரிபுவாதிகளுக்கு அவர்களை அம்பலப்படுத்துபவர்களை எதிர்க்க ஒரு ஆளும் வர்க்க கூட்டணி வேண்டும்.

வாழ்த்துக்கள் $சல்வன்-சந்திப்பு கூட்டணி. வாய்ப்பிருந்தால் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

அசுரன்

***************


//ஆனால், பொதுப்படையாக மார்க்சியம் பற்றி எதிர்ப்பவர்களுக்கெல்லாம் இது உரமாகிவிடும் என்பதால் இத்தகைய கேள்விகளை நாம் இணையத்தில் எழுப்புவதில்லை.//

இரா. சுகுமாரன்,

மேற்சொன்ன காரணத்தை இதற்க்கு முன்பே சந்திப்புவிடம் குறிப்பிட்டு CPMயை விமர்சிப்பதிலிருந்து என்னை கட்டுப்படுத்தியே வந்தேன். ஆயினும் பொது எதிரியை அம்பலப்படுத்துவது, பொது எதிரி யார், நமது சித்தாந்தம் என்ன என்பது குறித்தெல்லாம் எந்தவொரு அடிப்படை புரிதலும் இன்றி முதலில் சந்திப்பு ஒரு பதிவு போட்டு இந்துத்துவக்காரனுடன் கூட்டு சேர்ந்தார். இப்பொழுது ஏகாதிபத்தியவாதியிடம் கூட்டு சேர்கிறார். இவரது அமைப்பில் இன்னும் மார்க்ஸியம் என்று சொல்லிக் கொள்ள என்ன மிச்சமிருக்கீறது என்று இன்று வரை அவர் சொல்ல மறுக்கீறார். இதோ இன்று அத்துமீறி நுழைய முயன்ற போலிசுக்கும் பொதுமக்களுக்கும் மோதல் 11 பேர் பலி. CPM யாருக்கான கட்சி?

அசுரன்

*************

தோழா வாய்ஸ் ஆப் விங்க்ஸ்(இது நல்லாருக்கா?),

தொழில் வளம், வேலைவாய்ப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் அதில் உலகமய திட்டங்களுக்கு ஆதரவாக இது போல வைக்கப்படும் சப்பைக் கட்டுகளின் அடிபப்டையை கேள்வி எழுப்பியுள்ளேன்.

அந்நிய மூலதன்ம் என்பது எந்த வகையிலும் வளர்ச்சிக்கானது அல்ல. ஜனநாயகமில்லா இந்தியாவின் போலி பாரளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டால் இப்படி சீர்திருத்தவாத்ம்தான் பேச வேண்டும். அது போல பேசுவத்ற்க்கு மார்க்ஸியம் தேவையில்லை. காங்கிரஸும், BJPயும் இதையேதான் பேசுகீறார்கள். நான் குறிப்பிட்டதெல்லாம் கம்யுனீஸ்டு என்று கூறிக் கொள்வதற்க்கு அவர்களிடம் தற்போது எஞ்சியிருப்பது பெயர் பலகை மட்டும்தான்.

இதோ இன்று 11 பேர் CPMஆல் கொல்லப்பட்டனர். கம்யுனிஸ்டு கட்சி யாரை கொல்ல வேண்டும்? நிலபிரபுக்களை, பன்னாட்டு பன்றிகளை, தரகு முதலாளிகளை. மாறாக CPM ஆட்சிக்கு வந்த காலம் முதல் மே.வாவில் கொல்லப்படுவது விவசாயிகளும், தொழிலாளர்களும்தான்.

அசுரன்

said...

"எனினும் திட்டமிட்ட பொருளாதரத்தில் தனிநபர் பரிபூரணமாக அடிமைப்டுத்தப்படும் அபாயம் இருக்கிறது. அரசியல் பொருளதார சக்தி அளவுக்குமீறி மையப்படுத்தப்படும் பொழுது, அதிகார வர்க்கம் சர்வ வல்லமை படைத்ததாக மாறுவதை எப்படித் தடுப்பது? அதிகாரவர்க்கத்துக்கு எதிராக தனிநபர் உரிமைகளை எப்படிக் காப்பது? சோசலிச அமைப்பு ஏற்படும்பொழுது இது போன்றசமூக-அரசியல் பிரச்சணைகள் தீர்க்கப்பட வேண்டும். "
they have been resolved by eliminating those who ask such
questions.

said...

அசுரன் அவர்களே !

சந்திப்பு அவருடைய தளத்திலோ (அ) மற்ற எவரோ, லெனினுடைய 'இடதுவாத சந்தர்ப்பவாதம் ஒரு இளம்பிள்ளைவாத நோய்' என்ற நூலினை மேற்கோள் காட்டியுள்ளார்கள். அவர்களுடையக் கூற்றுப் படி, பாராளுமன்றத்தில் கம்பியுனிஸ்ட்கள் பங்கேற்க வேண்டும் என்று உள்ளது. இதனை நீங்கள் மறுத்து விளக்க முடியமா ?

அறிவுடைநம்பி

said...

சந்திப்பு அடிக்கடி மேற்கோள் காட்டும் இடதுசாரி இளம்பிள்ளைவாதம் புத்தகத்தை அவர் படித்ததில்லை என்பதை அவருடன் ஒரு அனானி நடத்திய விவாதம் அம்பலப்படுத்தியது, வெறுமே அவரது கட்சி தலைமை வாந்தியெடுத்ததை திரும்ப வாந்தியெடுக்கும் பரிதாபகரமான ஒரு பிறவி அவர்.

இடதுசாரி இளம்பிள்ளைவாதம் புத்தகம் உண்மையில் CPMயை அம்பலப்படுத்தியிருந்ததை சந்திப்பு உணர்ந்து கொண்டு கள்ளமௌனம் சாதித்து பின்வாங்கினார். அந்த விவாதங்கள் பின்வரும் சுட்டிகளில் இருக்கின்றன. ஆங்கிலத்தில் உள்ள அனானி பின்னுட்டங்களை படித்துப் பாருங்கள்

http://santhipu.blogspot.com/2008/04/blog-post_23.html

Related Posts with Thumbnails