TerrorisminFocus

Wednesday, October 16, 2013

அன்பான வாக்காள வடிவேலு பெருமக்களே....

எங்கூருல நான் பத்தாங்கிளாஸ கடேசி பரிட்ச்சேல மட்டும் பாஸாகி பிரமோசன் ஆன காலத்திலேயே பாராளுமன்றம், நீதிமன்றம்னு பஹுல் விட்டுட்டு திரிஞ்சவர்தான் அஸ்வின். இவருக்கு எங்கள விட ஒரு வயசுதான் அதிகம் (இப்ப வரைக்கும் அப்படித்தான்னா பாத்துக்கோங்களேன்) ஆனாப் பாருங்க சின்ன வயசுல இருந்தே ரொம்ப கருத்தாப் பேசுவாப்புல. ரொம்ப நா கழிச்சி போன வாரம் அவர பாத்தேன். இப்பயும் அதே கருத்தாப் பேசும் சுபாவம் மட்டும் மாறவில்லை.


பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பிறகு, இந்தியா இப்ப இருக்குற நிலமய நினைச்சி உச்சுக் கொட்டி பேசத் துவங்கினார். சமூக அக்கறையுடன் பேசுகிறார் கவனிப்போம் என்று கேட்கத் துவங்கினேன். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் தீர்வு என்று கடைசியாக ஒன்றைச் சொன்னார் பாருங்கள், நான் அப்படியே ஷாக்காயிட்டேன். அவர் சொன்ன தீர்வு இதுதான், இந்தியாவுல எங்கும் ஊழல், எதிலும் ஊழல், உலகத்துல இருக்குற அத்தன பேரும் இங்க வந்து ஆட்டையப் போடுறானுங்க அதுக்கு அரசாங்கமும் துணை போகுது. இதுக்கெல்லாம் காரணம்... மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸு அரசாங்கம் எனவே இந்தியாவ தூக்கி அப்படியே அலேக்கா மோடி கையில கொடுத்துட்டா நாடு இன்னைக்கோ நாளைக்கோ வல்லரசாயிடும் என்றார். இதச் சொன்னா என்ன பைத்தியக்காரன்னு சொல்றாய்ங்க என்று வடிவேலு போல அவர் பினிசிங் டச் வைக்காத ஒன்றுதான் குறை. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பாத்திரம் விளக்குவது போல என் தரப்பை விளக்கினேன்.



இவர் மட்டுமல்ல இந்தியாவின் நடுத்தர வர்க்கப் படித்த கும்பலில் ஒரு பகுதியினர் இப்படியான வாக்காள வடிவேலுகளாகவே தீர்வு சொல்லித் திரிகிறார்கள். அடிப்படை பொது அறிவு கூட இல்லாமல் கூட்டத்தோடு கோவிந்தா சொல்லும் மந்தை மனோபாவம் மேலோங்கிய நிலையில்தான் இத்தகையோர் இருக்கின்றனர். சில சுலபமான விவரங்களை பரிசீலித்தாலே தீர்வு என்ற பெயரிலான இத்தகைய அடி முட்டாள்தனங்கள் புரிபடும்.

முதல் விசயம்,  இந்தியத் தேர்தல் முறை விகிதாசார அடிப்படையிலானது அல்ல, பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவர் ஆட்சிக்கு வருகின்ற முறையிலான அமைப்பு அல்ல என்பதையெல்லாம் விட்டு விடுவோம். இவர்கள் வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பது மோடியையா? இல்லை குறைந்த பட்சம் பாஜகவையா? அல்லது இவர்கள் வோட்டு போட்டு நிராகரிப்பது காங்கிரசையா/மன்மோகனையா? இரண்டும் இல்லை என்பதே உண்மை. அவரவர் தொகுதியில் நிற்கும் அல்லக்கை நொல்லக்கை கிரிமினல் வேட்பாளர்களில் ஏதோ ஒரு பொறுக்கியைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். அமெரிக்கா போல நேரடியாக நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை இங்கிருந்தாலாவது யோசிக்கலாம். அதுதான் இங்கு கிடையாதே அதனால்தான் தேர்தலில் போட்டியே போடாத மன்மோகன் பிரதமராக முடிந்தது. நிலமை இப்படியிருக்க மக்கள் வோட்டு போடாம விட்டாத்தான் நாட்டுக்கு எதோ கெட்டது நடந்துடும் என்று நம்புகிறார்கள். அதனால் இருப்பதில் பெஸ்ட் பொறுக்கி யாருன்னு தேர்ந்தெடுத்து போறோம். அது இப்போதைக்கு மோடி என்பது வடிவேலுகளின் கருத்து.


இரண்டாவது விசயம். காங்கிரசுக்கு மாற்று என இவர்கள் முன் வைக்கும் பாஜக எப்படியாப்பட்டது? அவர்கள் ஆட்சி செய்த முந்தைய காலத்திலும், அவர்கள் தற்போது ஆட்சி செய்த மாநிலங்களிலும், இப்போது எதிர்கட்சியாக நாடாளுமன்றத்தை நாறடித்து வரும் நிலையிலும், காங்கிரசுக்கு போட்டியாக ஊழல்கள், கிரிமினல் வேலைகள் என்று பட்டையை கிளப்பி வருகிறார்கள். ஈயம் பித்தளையைப் பார்த்து இழித்த கதைதான் இது. மோடி மட்டும்தான் நல்லவன் என்று பாஜகவே சொல்கிறது. வாக்காள வடிவேலுகளுக்கும் இது புரிந்துதான் உள்ளது. மோடி நல்லவன் என்றே வைத்துக் கொள்வோம், தனிமனிதனால் நாட்டை நிர்வாகிக்க முடியுமா? ஒரு வேளை பாஜக நினைத்தால் மோடியை தூக்கியெறிந்து விட்டு இன்னொரு கேடியை பிரதமராக்க முடியுமே? அந்த மேற்படி கேடி தேர்தலில் போட்டி கூட இட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதானே இந்திய 'ஜனநாயகம்'  சொல்கிறது.

மூன்றாவது விசயம். மோடியே பெரும் கிரிமினல், ஊழல் பேர்வழியாக குஜராத்தை ஆட்சி செய்து வருவதும். பன்னாட்டு கம்பனிகளுக்கு பல லட்சம் கோடி குஜராத்து வளங்களை முறைக்கேடான முறைகளில் தாரை வார்த்துள்ளதும், ஐநா அவார்டு கொடுத்தாய்ங்க, எங்கூரு பஸ்ஸாடண்டு சும்மா ஏரோப்ளேன் இறங்குற ரேஞ்சுல இருக்கும், உலக வங்கியிலேயே கோடிக்கணக்குல டேபாசிட் பன்னிருக்கோம், பிரிட்டிஸ் தூதுவரே எங்கள ரொம்ப்பப நல்லவன்ன்ன்னு சொல்லிட்டாரு, ஜப்பானுல ஜாக்கிசானு கூப்பிட்டாஹ, அமெரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாஹ  என்பதாக வகை தொகையில்ல்லாம இவர்கள் கொடுத்த பில்டப்புகள் அனைத்தும் பச்சை பொய்கள் என்பதும் தொடர்ச்சியாக அம்பலமாகி வருகின்றன. காங்கிரசு அரசை மக்கள் வெறுத்து ஒதுக்க காரணமாக அமைந்த அதே சி ஏ ஜியின் அறிக்கைகள்தான் மோடியின் ஊழல்களையும் பட்டியலிடுகின்றன. ஆஹ இவன் ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் மாறப் போவதில்லை. என்ன, இவன் கொஞ்சம் மசாலா ஜாஸ்தி போட்டு படம் காட்டுவான். அவ்வளவுதான் வித்தியாசம்.



ஆனாப் பாருங்க வாக்காள வடிவேலுகள் ஒரு தடவ முடிவெடுத்துட்டா அத பிற்பாடு அவிங்களே நினைச்சாலும் மாத்திக்க மாட்டாய்ங்க. ஒரு அஞ்சு பத்து வருசம் பிஞ்ச செருப்பாலேயே அடி வாங்கின பிறகுதான் முடிவ மாத்திக்குவாய்ங்க. அதுவும் பிஞ்ச செருப்பு தூள் தூளாகிப் போயிருச்சி இதுக்கு மேல அடி வாங்க நினைச்சாலும் அது அந்த செருப்புக்கு ஆகாத காரியம் என்ற நிலையின் காரணமாகவே வேறு செருப்பைத் தேடும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மேற்கொள்வார்கள்.ஏன்னா, நாங்க கருத்தாப் பேசுவது  மட்டுமல்ல, கருத்தா அடியும் வாங்கவோம்.


ஆஹவே அன்பான வாக்காள வடிவேலு பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை இந்த முறையும் மறக்காமல் பிஞ்ச செருப்புக்கே குத்தி இன்னும் ஏழேழு ஜென்மங்களுக்கும் செருப்படி வாங்கி சாபல்யம் அடைவீர்.

அசுரன்
 

இதச் சொன்னா என்ன பைத்தியக்காரன்னு சொல்றாய்ங்க...



தொடர்புடைய பதிவுகள்:

Mr. NaMo NaNo

சு.சாமி, சோ ராமசாமி – இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை!


நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !

மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !

இவனுங்க அப்பனுங்க எல்லாம் குதிருக்குள்ளே இல்லையாம், அவனுங்களே சொல்றானுங்க!!!

2 பின்னூட்டங்கள்:

said...

வணக்கம்
பதிவு படைத்த விதம் நன்று வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவை.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

said...

நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி தோழர்.

Related Posts with Thumbnails