TerrorisminFocus

Wednesday, July 11, 2007

புரளி பேசும் போலி தமிழ தேசியவாதிகள்

குழலி அவர்கள் மக இகவின் இடஓதுக்கீடு நிலைப்பாடு குறித்து எதுவுமே எழுதாமல் வெறுமனே அது பார்ப்ப்னிய நிலைப்பாடு என்று மட்டும் எழுதி சென்றுள்ளார். என்ன நிலைப்பாடு என்று முதலில் எழுதட்டும் அவர். இடஓதுக்கீடு விசயத்தில் மக இகவின் நிலைப்பாட்டை ஒட்டி நான் இட்ட சில பல துணுக்கு கட்டுரைகள். ஒரு விரிவான ஆங்கில கட்டுரை இவற்றையெல்லாம் ஆதரித்தவர்கள்தான் இதே குழலி உள்ளிட்டவர்கள். அப்பொழுது அதிலிருந்த பார்ப்ப்னிய கருத்து அவர்களுக்கு தெரியாமல் போன மர்மம் என்ன? இப்பொழுதும் கூட அந்த கட்டுரைகளை அவர்களால் மறுக்க இயலாது. அந்த கட்டுரைகளுக்கான சுட்டி இங்கே உள்ளது. அதை படித்து விட்டு குழலி உள்ளிட்டவர்கள் எந்தளவுக்கு அரைகுறையாக உள்வாங்கி வாதிடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். சரி மகஇகவின் நிலைப்பாடு என்ன என்று சொல்லி அது எப்படி பார்ப்ப்னியம் என்று சொல்லியிருக்கலாம் குழலி. அதை செய்ய இயலவில்லை என்பது பரிதாபத்திற்க்குரிய விசயமே.

மேலும் வர்க்க பிரிவு குறித்து மகஇகவின் நிலைப்பாடு என்பதாக முதலாளி தொழிலாளி என்ற இரண்டை மட்டும் அங்கீகரிப்பதாக இன்னொரு அரைகுறை வாதம் வைத்துள்ளார். அசுரன் முதல் பல்வேறு மகஇக ஆதரவு தளங்களில் வந்துள்ள கட்டுரைகளை படித்தாலே இந்திய சூழலில் வர்க்க பிரிவினை என்பது தொழிலாளி, முதலாளி என்ற பிரிவுக்ளை கடந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். அதுவும் மிக மிக முக்கியமாக இந்த இரண்டு பிரிவும் சிறுபான்மை என்பதை பல இடங்களில் எழுதியுள்ளோம். ஆயினும் குழலி தனது தேவைக்காக தனக்கு புரிந்த ஏதோவொன்றை மகஇகவின் நிலைப்பாடு என்று முன்வைத்து வாதாடுகிறார். அவருக்கு ஒரேயொரு கோரிக்கை மட்டுமே வைக்க விரும்புகிறேன். ஒரு விசயத்தை விமர்சனம் செய்ய முற்ப்படும் போது வெறும் உணர்வுத் தளத்திலிருந்து அனுகாமல் அதனை முழுமையாக உள்வாங்கி பின்பு பரிசீலிக்க முயற்சிக்கவும்.

மேலும் இடஓதுக்கீடு விசயத்தில் வெறுமே ஒடுக்குமுறை செய்பவர்கள் எல்லாருக்கும் இடஓதுக்கீடு கொடுக்கப்படக்கூடாது என்பதாக மகஇக வின் நிலைப்பாட்டை சொல்லி, பிறகு அதை வைத்து தலித்துக்களில் சில பிரிவினருக்கும் இடஓதுக்கீடு கொடுக்கப்படக் கூடாது என்று ம க இக வின் நிலைப்பாடு வந்தடையும் என்று கற்பனையாக வாதம் வைக்கிறார். அவரிடம் மீண்டும் ஒரேயொரு கோரிக்கைதான் மகஇகவின் நிலைப்பாடு எனன்வென்பதை புரிந்து கொண்டு பேசுங்கள் அல்லது புரளி கிளப்பாமல் அமைதியாக இருங்கள். இடஓதுக்கீடு விசயத்தில் மகஇகவின் நிலைப்பாடை இவர்கள் திரிக்கும் இடம் ஒன்றேயொன்றுதான் அதனை இப்பொழுது வெளியிட்டு எதிர்வினை புரிபவர்களுக்கு சகாயம் செய்ய விரும்பவில்லை. அவர்களே கண்டுபிடிக்க இயலுமா என்று பார்க்கட்டும். அல்லது இன்னும் ஒரிரு வாரங்கள் பொறுத்திருந்தால் இதே அசுரனில் கட்டுரை வரும்.

இந்திய தேசியத்தை ஆதரிப்பதாக இன்னுமொரு ஜல்லி. இன்றைய இந்தியா என்பது தேசிய இனங்களில் சிறைக்கூடம் என்று சொன்ன ஸ்டாலின் வழி வந்தவர்கள் நாங்கள். இந்திய தேசியம் எனப்து பார்ப்ப்னியமே என்றும், இந்தி என்பது சம்ஸ்கிருத்தத்திற்க்கு பதிலியான தேசிய ஒடுக்குமுறை ஆயுதமே என்பதுமே மகஇகவின் நிலைப்பாடு. இந்தியா என்பது அனைத்து தேசிய இனங்களும் ஒற்றுமையுடன் இணைந்த ஒரு நாடாக இருப்பதையே குழலி உள்ளிட்ட யாருமே விரும்புகிறார்கள். ஆனால் யாதர்த்தத்தில் அப்படியில்லாமல் இந்தியா என்பது ஒடுக்குமுறை சிறைக்கூடமாக இருப்பதாலேயே இன்றைய இந்திய கட்டமைப்பை எதிர்க்கிறோம். இதில் எமக்குள் வேறுபாடு இல்லை. ஆனால் இதனை சரி செய்வதாக முன் வைக்கப்படும் தீர்வில் தான் வேறுபாடு உள்ளது. அதாவது ஒவ்வொரு இந்திய தேசிய இனமும் தனியாக தனக்கான விடுதலைக்காக போராட வேண்டும் என்று பேசுகீறார்கள். இது ஏற்கனவே இந்தியாவை மேலிருந்து சுரண்டும் பார்ப்ப்னியத்தையும், ஏகாதிபத்தியத்தையும் வலுப்படுத்தும் ஒரு தீர்வே ஆகும். ஏனேனில் நமது எதிரி இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்கள் எல்லாரையும் ஜாதி, மதம், இனம், மொழி(தேசியம்) என்ற பெயரில் பிரித்து வைக்கும் கருத்துக்களுக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதோடல்லாமல், பிற்போக்கு, கழிசடைத்தன, பிழைப்புவாத கருத்துக்களை ஆழ ஊன்றும் ஊடக பலத்துடன் இந்திய மக்களை தனக்கான ஒன்றிணைக்கும் மாற்று பண்பாட்டு கலாச்சார பலத்துடனும் இருக்கிறான். இந்தியாவில் ஏதாவதொரு இடத்தில் தேசிய இனக் கோரிக்கையை முன் வைத்து போராடி மக்கள் பலத்தை வென்றெடுக்க முடிந்துள்ளதா என்று ஒரு எ-கா கொடுக்கச் சொல்லுங்கள் குழலியை. அல்லது அப்படி போராடியவர்கள் எல்லாரும் தரகு வர்க்கமாக திரிந்த மர்மம் குறித்து கருத்துச் சொல்ல சொல்லுங்கள் குழலியை.

பிரிட்டிஸ் அதிகாரி ஒருவன் தன் மனைவியிடம் இந்திய பிரிவினையை ஒட்டி சொன்னானம் - "ஒரு வெற்றிகரமான ஆளும் வர்க்கம் என்பது மக்களை எப்படி ஒன்றிணைப்பதில் என்பதில் அல்ல மாறாக எப்படி பிரிப்பது என்பதில் நிபுனத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்' என்று. இவர்களின் தனித் தேசிய தீர்வு என்பது அப்படிப் பட்டதே. மாறாக பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தேசிய கூட்டு சர்வாதிகாரத்தை தீர்வாக முன் வைக்கிறது மகஇக. இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை தேசிய இன ரீதியாக பிரித்து ஒன்றுடன் ஒன்று மோத விடுவதை தவிர்க்கிறது. இங்கு மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இந்தியா போன்ற நாடுகளில் தேசிய இனக் கோரிக்கையை முன் வைத்து செய்யப்படும் எந்த போராட்டமும் வெற்றி பெறாது. ஏனேனில் தேசின இன உணர்வு என்பதே ஜனநாயகத்தின் சுவை அறிந்த சமூகத்தின் உணர்வு ஆகும். அப்படி ஒரு வரலாற்று கட்டத்தில் இந்தியா இல்லை. இன்றைக்கு கர்நாடகாவில் தேசிய இன வெறி என்பது நிலபிரபுத்துவ சக்திகள் தங்களின் கீழே ஜனநாயகமின்றி திரண்டுள்ள மக்களை ஆட்டு மந்தை கூட்டமாக பயனபடுத்தவே உபயோகிக்கிறதே அன்றி அது எந்த வகையிலும் தேசிய இனத்தின் வெற்றிக்காக அல்ல. இதனை கன்னட மொழி கலாச்சாரம், பண்பாட்டின் சிதைவிலிருந்தே புரிந்து கொள்ளலாம். மாறாக ஓப்பீட்டளவில் இந்தியாவிலேயே தேசிய முதலாளித்துவம் வளர்ந்துள்ள தமிழகத்தில்தான் தேசிய இன உணர்வு ஓரளவு வீரியமாக உள்ளது. இதனாலேயே பிற எந்த இந்திய மொழிகளையும் விட தமிழ் தனது தனித்துவத்தை பேணுவதில் ஒரு படி முன்னே இருக்கும் வாய்ப்பை பெற்றது.

அப்புறம் தமிழீழம் குறித்து கள்ள மௌனம் சாதிப்பதாக ஒரு ஜல்லி. ராமதாஸை விமர்சனம் செய்ததில் குழலி இந்தளவுக்கு கோபம் கொண்டவராய மாறிவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. தமிழீழத்தை பொறுத்தவரை விடுதலைப் புலிகளும் சரி, லங்காவின் தேசிய வெறி கும்பலும் சரி மக்களை பிரித்து ஏகாதிபத்திய சேவை செய்வதில் மட்டும் ஒன்றிணைந்துள்ளனர் என்பதை பல முறை எழுதியுள்ளது புதிய ஜனநாயகம் பத்திரிக்கை. விடுதலைப் புலிகளின் சுய அழிவுப் பாதையை பல முறை நட்பு ரீதியாக விமர்சித்துள்ளது புஜ பத்திரிக்கை. இந்திய தேசியம் துணை வல்லரசாக இங்கு செயல்பட்டு இலங்கையில் தனது அரசு நிறுவனங்களை சுரண்ட விடுவதற்க்கும், பன்னாட்டு, தரகு முதலாளிகள் இலங்கையின் வளங்களை சுரண்டுவத்ற்க்கும் புலிகளும் சரி, இலங்கை தேசிய வெறி கும்பலும் சரி எந்தவொரு இடைஞ்சலும் செய்வதில்லை. இதனாலேயே இந்த இரண்டு பேரும் ஏகாதிபத்தியங்களால ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள். புலிகள் வேண்டுமானால் தமது ஆட்சிப் பிரதேசத்தில் ஏகாதிபத்தியங்களீன் விருப்பத்திற்க்கு ஆபத்து விளைவிகக் முயலட்டும் பிறகு தெரியும் சேதி.

தமிழ் மொழி குறித்து, அதன் மீதான தாக்குதல் குறித்தும், தமிழர்களின் மீது தாக்குதல் நடக்கும் போது எல்லாம் வெகு விமரிசையாகவே எழுதியுள்ளது புஜ. குறிப்பாக தமிழர்களின் அமைதியில் தீ வைத்து கொளுத்து என்று மும்பையில் தமிழர்கள் சிவசேனா கும்பலால் தாக்கப்பட்ட போது உணர்ச்சி பொங்க எழுதியவர்கள்தான் மக இகவினர்(தமிழகம் அமைதிப் பூஙக் என்று பெயரெடுத்திருந்த அவமானத்தை குத்தி காட்டி).

இன்று தேசியம் குறித்து பேசும் இவர்கள் எல்லாருமே ராஜீவ் காந்தி ஈழ படுகொலைகளுக்காக பலி வாஙக்ப்பட்ட போது இந்திய தேசியத்தின் பாத தாங்கிகளாக மாறி பதுங்கிக் கொண்டார்கள். அப்பொழுதும் கூட ஈழத் தமிழர்களின் உரிமைக்காக மாநாடு நடத்தியது மகஇகதான். இத்தனைக்கும் ராஜீவ் கொலையில் மகஇக தொடர்பு படுத்தப்பட்டு அதன் சில தோழர்கள் சிறையில் இருந்து, அடக்குமுறைக்கு ஆளாகியது. இத்தனை நடந்த பிற்பாடும் உடனடியாக ஈழத் தமிழர்களின் உரிமைக்காக தைரியமாக, சுயமரியாதையுடன் மாநாடு நடத்தியது ம க இக. அப்படி ஒரு மாநாடு நடத்த அரங்கத்தை வாடகைக்கு கேட்ட பொழுது பயந்து கொண்டு தர மறுத்த சுயமரியாதை சிங்கம் வேறு யாருமல்ல நண்பர்களே அது கி. வீரமணீ அவர்கள் தான்.

இன்று இந்திய தேசியத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டப்படும் மக்இக தான் இந்தியா தேசியத்தின் ஒவ்வொரு ஒடுக்குமுறையின் மீதும் கருனையின்றி எதிர்வினை தொடுத்துள்ளது. எந்தவொரு இழப்புக்கும் அஞ்சாமல் செயப்பட்டுள்ளது. கடி நாய்கள் என்று பெயர் வாங்கிய மகஇக வினர்தான் எம்ர்ஜென்ஸி சமயத்திலும் சரி, ராஜிவ் பலிவாங்கப்பட்ட போதும் சரி தைரியமாக உரக்க ஈழத் தமிழர்களின் குரலையும், தேசிய உரிமையின் குரலையும் ஒலித்தனர். ஆனால் இன்று தேசியம் என்று ஜல்லியடித்த அத்தனை பேரும் இந்திய பார்ப்ப்னிய தேசியத்தின் அதிரடி தாக்குதலின் போது பதுங்கி ஒளிந்து கொண்டனர். வீரமணி உள்ளிட்டவர்கள் எமர்ஜென்ஸியை ஆதரித்து அறிக்கை விட்டனர். இதுதான் இவர்களின் அரசியல் நடைமுறை. இவரக்ள் நம்மை குற்றம் சொல்வது அதுவும் எதுவுமே புரிந்து கொள்ளாமல் அரைகுறை அறிவுடன் ஜல்லியடிப்பது ப்டு வக்கிரமானதாக இருக்கீறது.

இதே தமிழ்மணத்தில் திராவிட கருத்தாக்கத்தை மறுத்து வஜ்ரா என்பவன் எழுதிய பொழுது அதனை எதிர்த்து வாதிட்டவர்கள் யார் என்பதை கொஞ்சம் பிரட்டி பார்க்கட்டும் நண்பர் குழலி. ஆதாரம் வேண்டுபவர்கள் நண்பர் முத்து தமிழினியின் தளத்தில் எனது கருத்துக்களை பதிய வைத்து அதை அவரும் பாராட்டி எழுதியதை படித்துக் கொள்ளலாம்.

பார்ப்ப்னியத்தை எதிர்க்கும் கட்சிகள் என்று இவர் யாரை சொல்கிறார் என்றால் ராமதாஸ், திக, திமுக போன்றவற்றை. உண்மையில் பார்ப்ப்னியத்தை எதிர்க்கும் கட்சிகளுடன் மகஇக இணைந்து போராடி வருகிறது. பெரியார் திக முதல் சிதம்ப்ரம் ஆறுமுக சாமி வரை. நேற்றைய விடுதலை சிறுத்தைகள் முதல் தமிழ் தேசிய தோழர்கள் வரை பல அமைப்புகள் சமரசமின்றி பார்ப்ப்னியத்தை எதிர்த்த போதெல்லாம் துணை நின்று போராடியவர்கள் மகஇகவினர்தான்.

அல்பவாதம் என்பது மிடில் கிளாஸின் இயல்பு எனில் அதனை மிக வலுவாக தாக்கி கலாச்சார பிரச்சாரம் செய்யும் அமைப்பு மகஇகதான். மற்றபடி நக்சல்பாரி இயக்கங்கள் குறித்த வரலாறை தெளிவாக படிக்க குழலியை பரிந்துரைக்கிறேன். மார்க்ஸியம் குறித்தும் சித்தாந்த திரிபு குறித்தும், இடது வலது சந்தர்ப்பவாதம் குறித்தும் அவர் தனது அறிவை வளர்த்துக் கொண்டு விமர்சன்ம் செய்தால் எதிர்வினை எழுப்ப எமக்கு வசதியாக இருக்கும். அதை விடுத்து தனது அறிவு புலமை மீது வாசகர்கள் நம்பிக்கை வைத்து தமது ஆதரமற்ற கருத்துக்களை நம்ப வேண்டும் என்ற அடிபப்டையில் எழுதினால் அது வாரமலரில் வரும் கிசு கிசுவைவிட எந்த வகையிலும் உயர்ந்த தரமன்று.

தோழர்கள் கோபப்பட்டு தொலை பேசி செய்ததாக புரளி சொல்லும் குழலி அதற்க்கான ஆதரத்தை வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறேன். அதை செய்யும் நேர்மையிருந்தால் பேசட்டும்.

ஒட்டு மொத்தமாக ராமதாஸை விம்ரசனம் செய்ததை நேர்மையாக எதிர் கொள்ளும் நெஞ்சுரம் இன்றி இப்படி புரளிகளின் பின்னால் ஒளிந்து கொள்ளும் அவல நிலைக்கு குழலி தள்ளப்பட்டுள்ளது வருத்தம் தரும் விசயமே.

அசுரன்


இடஓதுக்கீடு முதல் தேசிய இன உரிமைகள், தமிழீழம் வரை இவர்கள் எம்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை தர்க்க ரீதியாகவும் தரவு ரீதியாகவும் பல முறை அம்பலப்படுத்தி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றுக்கு இதுவரை பதில் சொல்ல இயலாத தரகு வர்க்க அரசியல்வாதிகளின் ரசிகர்கள் வெறுமே ஒரு சில புரளிகளையே மீண்டும் மீண்டும் கடை பரப்புகிறார்கள். தமிழ் சர்க்கிள் தளத்தில் இது குறித்து சிறப்பான இரண்டு கட்டுரைகள வெளியாகியுள்ளன.

இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு : மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின்: சமரசம்!

70 பின்னூட்டங்கள்:

said...

எனக்கு ம க இ க வின் அரசியல் எல்லாம் தெரியும் அதன் மேல் நான் எப்போ பாய்வேன் என்றால் நான் ஆதரிக்கும் அக்கா சுக்கா தலைவனை கேள்வி நீ கேட்டாயானால் நான் உடனே மழுங்கட்டையாய் எதிர்ப்பேன்

உன்னை ஏற்கனவே எதிர்த்த பார்பனியர்களின் இடத்தில் உன்னை உக்காரவைப்பேன் .

ரொம்ப சிம்பிள் நீயும் எதிரிகளில் ஒருவந்தான் என சொல்லிவிட்டால்

நான் உன்கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியதில்லை .

வீரமணி சொன்னாராம் ,இவர்கள் எல்லாம் லெளகீக பார்பானுகன்னு அதேமாதிரி பலிய போட்டு தப்பிச்சுகுவேன் .

எனும் அந்த நண்பரை பற்றி என்னத்தை சொல்ல இருக்கிறது தோழர் .


நான் இடஒதுக்கீட்டின் ஆதரவாளன் - இடஒதுக்கீடு வாங்கும் சாதி ஏன் அடக்குமுறை செய்யுது ஏன் தனக்கு கீழானா சாதியை சுரண்டுத்துன்னு கேள்வி வந்தா ?

எல்லாரும் அடக்குமுறை செய்வதால்
நானும் செய்வேன் எனும் நேர்பதிலுக்கு
ஏன் சுத்தி சுத்தி வர்றார் ;)

பார்பனிய தலைமைன்னா -200 சதவீதம் நேர்மையா இருக்கனும்னா

தலைமைதான் கொள்கைகளை தீர்மானிக்குது என்ற தனது கட்சி நிலைபாட்டை வச்சு இதை தீர்மாணிக்கிறார்

பாவம் அவர் அப்படித்தானே சிந்திக்க முடியும் .

said...

ஷொபா சக்திக்கு கூஜா தூக்கியதாக இன்னொரு புரளி. அப்படி கூஜா எங்கே தூக்கப்பட்டது என்று கூட கவலைப்படவில்லை பாரி அரசு. அதனை முன் வையுங்கள் நண்பர்களே. ஏன் கிசு கிசு அளவிலேயே உங்களது வாதங்களை நிறுத்திக் கொள்கிறீர்கள்? ஆதாரம் வைத்து பேசுவதில் அவ்வளவு கஸ்டமா?

ம க இகவின் நிலைப்பாடு என்பதாக இவர்கள் எதையும் சொல்லவில்லை. வெறுமே மக இக நிலைப்பாடு பார்ப்ப்னியம் என்று மட்டுமே சொல்லும் நேர்மையாளர்களுக்கு தொலை பேசி செய்து மிரட்டுவதாகவும், ஷோபா சக்திக்கு கூஜா தூக்குவதாகவும் புரளி பேசுவது சுலபமான விசயமே.

நண்பர்களே விமர்சனம் செய்வதும் புர்ளி பேசுவதும் வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மகஇக ஆதரவாளர்களுக்கு,

இடஓதுக்கீடு குறித்து எதிர்வினை செய்யும் முன்பு ம க இக நிலைப்பாட்டை சரியாக உள்வாங்கி செய்யுங்கள் என்று எச்சரிக்கிறேன். அரைகுறையாக படித்து உள்வாங்கி எதிர்வினை செய்து பிறகு மன்னிப்பு கேட்பதில் பிரயோசனம் இல்லை. ஏனேனில் எதிர் வாதம் செய்ப்வர்கள் பல்வேறு திரிபுவாதஙக்ளை கைகொள்கிறார்கள். சிறு தவறையும் ஊதிப் பெருக்கி திர்க்கும் வாய்ப்புள்ளதை கவனத்தில் கொள்க.

அசுரன்

said...

அசுரன்,

ஆரோக்கியமாக நடைபெற்று இருக்க வேண்டிய உரையாடல்கள் எல்லாம் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற ரீதியில் நடைபெற்று வருவது எப்போதும் எதிர்தரப்பை வலுவடையவே செய்யும். உங்களை மட்டும் குறை கூறவில்லை. (இங்கு மட்டும் குறிப்பிட்டிருபதால் அப்படி ஒரு தோற்றம் வரக்கூடும் என்பதால்) தான் சார்ந்த சித்தாந்தம் மற்றுமே தீர்வை தரும் என்று நம்புவது அடிப்படையான நம்பிக்கை
என்ற போதிலும் மாற்று வழிமுறைகளில் வரக்கூடிய தீர்வுகளை மொத்தமாக புறக்கணிப்பது அறிவுடையது ஆகாது. தீர்வுகள் குறித்த ஒரு பரந்துபட்ட பார்வை, தீர்வுகளுக்குண்டான பன்முகத் தன்மையை ஆராய மறுப்பதும் சரியான வழிமுறையாக இருக்காது.

மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டவர்களின் முரண்கள் அந்த மக்களுக்கு பாதமான சூழலையே உருவாக்குகின்றன. தீர்வுகளை சித்தாந்த ரீதியில் பெற முனையும் போது அது எதார்த்தையும் ஒத்து இருக்க வேண்டும். காலம் என்பது எப்போதும் முக்கிய காரணியாகவே விளங்குகிறது. அதன் பங்கை நிராகரிப்பது தவறான ஒரு நிலையாகவே அமையும்.

வலுவில்லாத தேசிய இனம், வலுவான தேசிய இனத்தோடு இயந்து, ஒருங்கிணைந்து போக வேண்டும் என்பது மார்ஸியத்தின் ஒரு சிறுகூறு. சுற்றி வளைத்து பார்த்தால் வல்லவன் வாழ்வான் என்பது போன்றது. மார்ஸியத்தை தவறாக புரிந்து கொள்ளும் சூழல் இருப்பது அதன் அடர்த்தியான சித்தாந்தின் காரணமாக இருக்கலாம். மார்க்ஸியம் போன்ற மக்களுக்கான சிந்தாந்தங்களீன் மீது ஏற்படும் அவநம்பிக்கைகளை, சந்தேகங்களை, தவறான புரிதல்களை களைய வேண்டியது அதை பின்பற்றுபவர்களின் கடமை. அத்தகையதொரு பார்வையைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன். ஒரு ஜனநாயகத்தன்மையோடான அணுகுமுறை.

எதிர்ப்பு சக்திகள் எல்லாம் தங்களுக்குள் பிளவு பட்டிருப்பது மறையாத வரையில், அவர்களை ஒருங்கிணைந்து போராட்டங்களை முன்னெடுக்காத வரையில் தீர்வுகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும்.

//இங்கு மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இந்தியா போன்ற நாடுகளில் தேசிய இனக் கோரிக்கையை முன் வைத்து செய்யப்படும் எந்த போராட்டமும் வெற்றி பெறாது.//

தேசிய இனக்கொள்கை வெற்றி பெற இயலாத இந்திய நாட்டில் பிரிந்து போகக்கூடிய உரிமையுடைய தேசிய கூட்டு சர்வாதிகாரம் வெற்றி பெறுவதற்கு என்ன வகையான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை தெளிவு படுத்தினால் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். அதை நடைமுறைப்படுத்த எடுக்கபடும் வழிமுறைகள் என்னென்ன? தேசிய இனக்கொள்கையை பேசுபவர்கள் தரகு வர்க்கமாக மாறுவதைப் போல கூட்டுச் சர்வாதிகாரம் பேசுபவர்கள் மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன வகையான உத்திரவாதம் இருக்கின்றது. இந்திய சூழலில் அப்படி ஒரு நிலையை கொண்டுவர என்ன வகையான செயல்திட்டங்களை கொண்டிருக்கிறது

இந்தியக் கட்டமைப்பையும் எதிர்க்கிறீர்கள். தனித்த தேசிய இனங்களின் ஆளுமையையும் அதிகாரத்தையும் எதிர்க்கிறார்கள். அதிகாரங்கள் இல்லாது மக்களுக்கான தீர்வை எப்படித் தர இயலும்? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மூலம் மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என நம்பும் நீங்கள் அங்கும் போராடும் மக்கள் ஆட்டு மந்தைகளாகத்தானே உபயோகப்படுத்துகிறீர்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் முடிவுகளைத் தீர்மானிப்பது தலமைகள் தானே.

பார்ப்பனியத்தலைமையை குறித்து கேள்வி எழுப்பப்பட்டால் சாதியத்திற்குள் அடைக்கபடும் அளவில்தான் நிலமை இருக்கிறது என்பது வேதனையானது.


*
தொடர்ச்சியாக உங்கள் கட்டுரைகளை வாசித்தாலும் அவ்வளவாக பின்னூட்டம் இட்டதில்லை. தோழமை உணர்வுடனே மனதில் பட்டதை கேட்டிருக்கிறேன்.புரிந்து கொண்டால் மகிழ்ச்சி. இல்லை பட்டமளிப்பு விழா நடத்தி வாழ்த்துரை வழங்கினால் அதற்கும் முன்கூட்டிய நன்றி.

said...

தங்கள் ஆட்சி பகுதிகளில் உள்ள ஏகாதிபத்திய நிருவனங்கலுக்கு எந்த ஆபத்தும் விளைவிக்காதபோதும் புலிகல் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வதன் காரனம் என்ன அசுரன் அவ்ர்களே?

ஈழத்தை பொறுத்தவரை முதன்மை முரன்பாடு தேசிய இன ஒடுக்குமுறையா வர்க்க ஒடுக்கு முறையா ?

சிங்கள தரகு முதலாலித்துவத்துக்கு எதிராக சிங்கள இனத்தில் ஒரு வலிமையான மார்க்சிய கட்சி கட்டப்படும்வரை தமிழ் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகலை பொருத்துக்கொண்டிருக்க வேண்டுமா?

தேசிய இன விடுதலை போராட்டங்கள் மார்க்சியவாதிகளால் முன்னெடுக்கப்படுவது எப்படி பார்பனியத்தையும் ஏகாத்திபத்தியத்தையும் வளர்க்கும்

ஒப்பீட்டளவில் பலமான செயல்பாடுகளை கொண்டிருக்கும் சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்டுகள் தங்களது தேசிய இன சொத்துக்களான தாதுபொருட்களையும் இரும்பையும் ஏகாதிபத்தியங்கலும் தரகு முதலாலித்துவமும் கொள்ளையடிப்பதை தடுக்க தேசிய இன விடுதலை போராட்ட வழிமுறையை ஏற்றால் மக்களின் முழு ஆதரவையும் வென்றெடுக்க முடியுமா இல்லை இல்லை இந்திய புரட்சி என்னும் வழிமுறையாலா

said...

தங்கள் ஆட்சி பகுதிகளில் உள்ள ஏகாதிபத்திய நிருவனங்கலுக்கு எந்த ஆபத்தும் விளைவிக்காதபோதும் புலிகல் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வதன் காரனம் என்ன அசுரன் அவ்ர்களே?

ஈழத்தை பொறுத்தவரை முதன்மை முரன்பாடு தேசிய இன ஒடுக்குமுறையா வர்க்க ஒடுக்கு முறையா ?

சிங்கள தரகு முதலாலித்துவத்துக்கு எதிராக சிங்கள இனத்தில் ஒரு வலிமையான மார்க்சிய கட்சி கட்டப்படும்வரை தமிழ் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகலை பொருத்துக்கொண்டிருக்க வேண்டுமா?

தேசிய இன விடுதலை போராட்டங்கள் மார்க்சியவாதிகளால் முன்னெடுக்கப்படுவது எப்படி பார்பனியத்தையும் ஏகாத்திபத்தியத்தையும் வளர்க்கும்

ஒப்பீட்டளவில் பலமான செயல்பாடுகளை கொண்டிருக்கும் சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்டுகள் தங்களது தேசிய இன சொத்துக்களான தாதுபொருட்களையும் இரும்பையும் ஏகாதிபத்தியங்கலும் தரகு முதலாலித்துவமும் கொள்ளையடிப்பதை தடுக்க தேசிய இன விடுதலை போராட்ட வழிமுறையை ஏற்றால் மக்களின் முழு ஆதரவையும் வென்றெடுக்க முடியுமா இல்லை இல்லை இந்திய புரட்சி என்னும் வழிமுறையாலா

said...

இடஒதுக்கீடு தீர்வாகாது, பொருளாதார விடுதலைதான் தீர்வாக முடியும் என , ஈழத்தில் புலிகளும் சரி, சிங்கள ரானுவமும் சரி இரண்டுமே ஏகாதிபத்திய அருவருடிதானானுங்க என குழலியின் எல்லா போலி வாதத்துக்கு பதிலாக பு.ஜ , பு.க, பத்திரிக்கையில எத்தனையோ கட்டுரைகள் வந்தாச்சு.

இன்னமும் எவ்வளவு காலத்துக்கு கொஞ்சம் கூட ..... இல்லாம கிசு கிசு பாணியில மறைமுக பார்ப்பனியம், பார்ப்பன தலைமை, ஈழப்பிரச்சனையில் மெளனம் என வார்த்தைகளை வைத்து வித்தை காட்டுவார்களோ தெரியவில்லை.

நாட்டை காலனியாகிக்கிட்டு இருக்கானுங்க, மக்கள் அன்றாடம் வீதியில தூக்கியெறியப்பட்டுகிட்டு இருக்காங்க, இந்த நிலையை மாற்றனும், அதற்காக ஒரு சமூக மாற்றத்தை கொண்டுவரனும் என யோசிச்சாதானுங்க தெரியும் இடஒதுக்கீடு யாருக்கு, எவன் உண்மையிலே ஆள்றான், போலிகள் யாரு, போலி எதிர்ப்புகளுடைய சுமை எவ்வளவு என.

நாட்டை விக்கிறதுக்கு உடந்தையாக இருந்துக்கிட்டே (ராமதாஸீ) எதிர்க்குறது, மொழப்பு நடத்துறது எப்படி என யோசிக்கரவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

said...

போலிகளை அம்பலப்படுத்தி விவாதத்தை சிறப்பாக ஆரம்பித்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்.

said...

அசுரன்,

ஆரோக்கியமாக நடைபெற்று இருக்க வேண்டிய உரையாடல்கள் எல்லாம் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற ரீதியில் நடைபெற்று வருவது எப்போதும் எதிர்தரப்பை வலுவடையவே செய்யும். உங்களை மட்டும் குறை கூறவில்லை. (இங்கு மட்டும் குறிப்பிட்டிருபதால் அப்படி ஒரு தோற்றம் வரக்கூடும் என்பதால்) தான் சார்ந்த சித்தாந்தம் மற்றுமே தீர்வை தரும் என்று நம்புவது அடிப்படையான நம்பிக்கை
என்ற போதிலும் மாற்று வழிமுறைகளில் வரக்கூடிய தீர்வுகளை மொத்தமாக புறக்கணிப்பது அறிவுடையது ஆகாது. தீர்வுகள் குறித்த ஒரு பரந்துபட்ட பார்வை, தீர்வுகளுக்குண்டான பன்முகத் தன்மையை ஆராய மறுப்பதும் சரியான வழிமுறையாக இருக்காது.

மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டவர்களின் முரண்கள் அந்த மக்களுக்கு பாதமான சூழலையே உருவாக்குகின்றன. தீர்வுகளை சித்தாந்த ரீதியில் பெற முனையும் போது அது எதார்த்தையும் ஒத்து இருக்க வேண்டும். காலம் என்பது எப்போதும் முக்கிய காரணியாகவே விளங்குகிறது. அதன் பங்கை நிராகரிப்பது தவறான ஒரு நிலையாகவே அமையும்.

வலுவில்லாத தேசிய இனம், வலுவான தேசிய இனத்தோடு இயந்து, ஒருங்கிணைந்து போக வேண்டும் என்பது மார்ஸியத்தின் ஒரு சிறுகூறு. சுற்றி வளைத்து பார்த்தால் வல்லவன் வாழ்வான் என்பது போன்றது. மார்ஸியத்தை தவறாக புரிந்து கொள்ளும் சூழல் இருப்பது அதன் அடர்த்தியான சித்தாந்தின் காரணாமகவும் மார்க்ஸியம் போன்ற மக்களுக்கான சிந்தாந்தங்களீன் மீது ஏற்படும் அவநம்பிக்கைகளை, சந்தேகங்களை, தவறான புரிதல்களள களைய வேண்டியது அதை பின்பற்ற வேண்டியவர்களுன் கடமை. அத்தகையதொரு பார்வையத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன். ஒரு ஜனநாயகத்தன்மையோடான அணுகுமுறை. எதிர்ப்பு சக்திகள் எல்லாம் தங்களுக்குள் பிளவு பட்டிருப்பது மறையாத வரையில், அவர்களை ஒருங்கிணைந்து போராட்டங்களை முன்னெடுக்காத வரையில் தீர்வுகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும்.

//இங்கு மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இந்தியா போன்ற நாடுகளில் தேசிய இனக் கோரிக்கையை முன் வைத்து செய்யப்படும் எந்த போராட்டமும் வெற்றி பெறாது.//

தேசிய இனக்கொள்கை வெற்றி பெற இயலாத இந்திய நாட்டில் பிரிந்து போகக்கூடிய உரிமையுடைய தேசிய கூட்டு சர்வாதிகாரம் வெற்றி பெறுவதற்கு என்ன வகையான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை தெளிவு படுத்தினால் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். அதை நடைமுறைப்படுத்த எடுக்கபடும் வழிமுறைகள் என்னென்ன? தேசிய இனக்கொள்கையை பேசுபவர்கள் தரகு வர்க்கமாக மாறுவதைப் போல கூட்டுச் சர்வாதிகாரம் பேசுபவர்கள் மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன வகையான உத்திரவாதம் இருக்கின்றது. இந்திய சூழலில் அப்படி ஒரு நிலையை கொண்டுவர என்ன வகையான செயல்திட்டங்களை கொண்டிருக்கிறது

இந்தியக் கட்டமைப்பையும் எதிர்க்கிறீர்கள். தனித்த தேசிய இனங்களின் ஆளுமையையும் அதிகாரத்தையும் எதிர்க்கிறார்கள். அதிகாரங்கள் இல்லாது மக்களுக்கான தீர்வை எப்படித் தர இயலும்? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மூலம் மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என நம்பும் நீங்கள் அங்கும் போராடும் மக்கள் ஆட்டு மந்தைகளாகத்தானே உபயோகப்படுத்துகிறீர்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் முடிவுகளைத் தீர்மானிப்பது தலமைகள் தானே.

பார்ப்பனியத்தலைமையை குறித்து கேள்வி எழுப்பப்பட்டால் சாதியத்திற்குள் அடைக்கபடும் அளவில்தான் நிலமை இருக்கிறது என்பது வேதனையானது.


*
தொடர்ச்சியாக உங்கள் கட்டுரைகளை வாசித்தாலும் அவ்வளவாக பின்னூட்டம் இட்டதில்லை. தோழமை உணர்வுடனே மனதில் பட்டதை கேட்டிருக்கிறேன்.புரிந்து கொண்டால் மகிழ்ச்சி. இல்லை பட்டமளிப்பு விழா நடத்தி வாழ்த்துரை வழங்கினால் முன்கூட்டிய நன்றி.


*
என் முந்தைய பின்னூட்டம் வரவில்லையோ என்ற சந்தேகத்தின் காரணமாகவே மீள் பின்னூட்டம். முந்தையது வந்திருந்தால் இதை நிராகரித்துவிடவும்

said...

முத்துக் குமரன், மாற்று வழிகளை நான் என்றும் கடுமையாக விமர்சிப்பதில்லை. இதே குற்றச்சாட்டை வைத்த பொழுதெல்லாம் கல்வெட்டு முதல் அருந்ததி ராய் வரை புதிய ஜனநாயக புரட்சியை தீர்வாக ஏற்றுக் கொள்ளாத பலரை நட்பு சக்தியாக இணைத்து செல்லும் போக்கை உதாரணமாக கொடுத்துள்ளேன்.

மாறாக, தமது கொள்கைகளை அல்ல. தலைவர்களின் கொள்கை துரோகத்தை அம்பலப்படுத்தியதற்க்காக எம்மை எந்த ஒரு தர்க்க அடிபப்டையின்று விம்ர்சனம் செய்தது யார்?

இதோ ம க இக மீது குற்றச்சாட்டு வைத்துள்ல குழலி கூட ஆதர்ப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லையே. வெறும் புரளி பேசிச் சென்றுள்ளது எந்த வகையில் ஆரோக்கியம் என்று அவர்தான் சொல்ல வேண்டும்.

மற்றபடி உங்களது வருத்தம் எனக்கு புரிகிறது.

துரோகி யார் என்றூ சொல்கிறோம் நாங்கள். அவர்கள் கொண்ட கொள்கைக்கு உலை வைப்பவர்கள் யார் என்று சொல்கிறோம் நாங்கள். அதை நேர்மையாக எதிர்க் கொள்ள ஏன் அவர்களுக்கு தைரியமில்லை?

இத்தனை சொல்கிற அவர்கள் உண்மையில் இந்திய பார்ப்ப்னிய தேசியத்தை வலுப்படுத்தும் அமைப்புக்கு முட்டுக் கொடுக்கும் அவர்களின் தலைவர்களையல்லவா முதன்மையாக எதிர்த்து ஒதுக்க வேண்டும்?

அப்பொழுது மட்டும் எங்கே ஓடியது அவர்களின் தேசிய உணர்வும் ஒடுக்குமுறை குறித்த கோபமும்? சம்ரசமா?

யாருடன்? சக ஒடுக்கப்படும் தேசிய இனத்துடன் சம்ரசம் செய்து கொண்டு பொது எதிரியை ஒடுக்க முன்வராத ச்மரசம் பொது எதிரியுடன் சம்ரசம் செய்து கொண்டு சக ஒடுக்கப்படும் தேசிய இனத்தை ஒடுக்க முன் வருகீறது என்றால் அந்த அரசியலின் அர்த்தம் என்ன?

பிரிட்டிஸ் காரானிடம் சம்ரசம் பேசி மத சலுகைகள் வாங்க முற்பட்ட பார்ப்ப்னியவாதிகளுக்கும் இவர்களுக்கு என்ன வேறுபாடு?

தனித்த தேசிய இனங்களின் ஆளுமையையும் அதிகாரத்தையும் எதிர்ப்பதாக எங்கும் சொல்லவில்லையே.

தேசிய இனஙக்ளில் கூட்டுச் சர்வாதிகாரம் எனும் போது, பிரிந்து செல்லும் உரிமை எனும் போது அது எவ்வகையில் தேசிய இனத்தின் அதிகாரத்தைப் பறிக்கீறது?

சோவியத் ரஸ்யாவில் இணைவதும் பின்பு பிரிவதுமாக இருந்த தேசிய இன பிரதேசங்கள் இருந்தன என்பது தெரியுமா உங்களுக்கு?

அது எப்படி சாத்தியமானது எனில் அதுதான் தேசிய இனங்களை கம்யுனிசம் அனுகும் ஜனநாயக்ப் பூர்வமான செயல்தந்திரத்தின் வெற்றி.

எப்பொழுதுமே ஆளும் வர்க்கத்திலிருந்தே ஒலிக்கும் கிளர்ச்சி குரல்களின் ஆதரவு என்பது கொஞ்சம் வலுவானது என்ற அடிப்படையிலேயே ஒடுக்கும் தேசிய இனத்தின் ஆதரவுடன் ஒடுக்கப்படும் தேசிய இனம் போராட வேண்டும் என்று மார்க்ஸியம் கூறுகிறது. ஏனெனில் ஒடுக்கும் தேசிய இனம் என்பது எப்பொழுதும் பெரும்பான்மையாக இருப்பதாலேயே இந்த புரிதல்.

மாறாக இந்தியாவில் எந்த தேசிய இனம் எந்த தேசிய இனத்தை ஒடுக்கிறது?

இந்தி ஒரு தேசிய இனமா? அது பெரும்பான்மை தேசிய இனமா?

எல்லா தேசிய இனங்களுக்கும் பொது எதிரியாக பார்ப்ப்னியமும், அதன் உரிமைகளை மறுத்து சீரழிப்பதாக ஏகாதிபத்தியமும் இருப்பது உங்கள்க்கு தெரியவில்லை?

இந்தியாவின் பார்ப்ப்னிய கட்டமைப்பைத்தான் எதிர்க்கிறேன். இந்தியா என்ற பெயரில் நாம் எதிர்காலத்தில் ஒடுக்குமுறை இன்றி இணைந்து இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? சொல்லுங்கள் பிறகு பேசலாம்.

தனித்தனியாக ஒவ்வொரு தேசிய இனத்தையும் கொம்பு சீவி மோத விட்டு என்ன விடுதலை வாங்கிவிட முடியும் என்று நீங்கள் சொல்லுங்கள். யாருக்கு எதிராக அவர்களை கொம்பு சீவி விடுவது என்றாவது சொல்லுங்கள். கர்நாடகத்திற்க்கு எதிராகவா?

நாம் இந்திய தேசியங்கள் நமக்குள் ஒருவர் மீது ஒருவர் பலி போட்டு மோதிக் கொண்டிருக்கும் பொழுது ஏகாவும். நிலபிரபுத்துவமும் நமது இருவரின் வளங்களையும் இந்திய பார்ப்ப்னிய தேசியத்தின் மீது உட்கார்ந்து சுரண்டிக் கொண்டிருக்கும். அது குறித்து ராமதாஸ்களும், தமிழ் தேசியவாதிகளும் என்ன கருத்து கொண்டுள்ளனர்?

இதே விசயம் தானே கர்நாடக காவிரி தமிழ் நாடு விசயத்தில் நடக்கீறது.

கர்நாடகா ஆளும் வர்க்கஙக்ளின் தேசிய வெறி பிரச்சாரத்தை மறந்து விட்டு, அங்கு அந்த மக்களை உண்மையிலேயே சுரண்டும், ஏகாதிபத்திய நிலபிரபுத்துவம் கூட்டணியை மறைத்து விட்டு, அந்த மக்களின் ஜனநாயக பண்பு வளராத பிந்தங்கிய சமூக பொருளாதார சூழலை மறைத்துவிட்டு வெறுமனே தேசிய இன மோதல் என்று பேசுவதில் என்ன தீர்வு வந்து விடும் என்று நீங்களே சொல்லுங்கள்.

அப்ப்படி பேசுவதால் யாருக்கு நன்மை என்றும் சொல்லுங்கள். உறுதியாக அது இரண்டு மாநிலத்து மக்களுக்கும் நன்மை அல்ல.

பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தில் தலைமைகள்தான் முடிவெடுக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொண்டால் அதற்க்கு என்னால் பதிலளிக்க தற்போது முடியாது. ஏனெனில் இங்கு இப்பொழுது என்ன பெசுகிறோமோ அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். மற்றபடி அந்த அம்சத்தில் உங்களுக்கு தெரிந்து கொள்ள விருப்பமெனில் அசுரனில் சில கட்டுரைகள் இதே குற்றச்சாட்டிற்க்கு விரிவாக பதிலளித்து வந்துள்ளன(2006-ல்). படித்து பார்க்கவும். மார்க்ஸியத்தை விமர்சனம் செய்யும் முன்பு அது குறித்தான ஆளும் வர்க்க குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பெசுவது என்றால் சரியாக இருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பட்டமளீப்பு விழா உங்களுக்கு நடத்துவேன் என்ற எதிர்ப்பார்ப்புடன் பின்னூட்டமிட்ட உங்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு எமது அரசியல் மீது தர்க்க அடிப்படையற்ற பட்டமளிப்பு விழா நடத்தியவர்கள் மீது இதே குற்றச்சாட்டை வைக்கும் நேர்மையாளர் என்று இன்னமும் உங்களை நம்புகிறேன்.

அசுரன்

said...

//பட்டமளீப்பு விழா உங்களுக்கு நடத்துவேன் என்ற எதிர்ப்பார்ப்புடன் பின்னூட்டமிட்ட உங்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு எமது அரசியல் மீது தர்க்க அடிப்படையற்ற பட்டமளிப்பு விழா நடத்தியவர்கள் மீது இதே குற்றச்சாட்டை வைக்கும் நேர்மையாளர் என்று இன்னமும் உங்களை நம்புகிறேன்.

அசுரன்//

அந்த வாக்கியத்தை அதிகபட்ச அழுத்தமில்லாமல்தான் சொல்லியிருந்தேன். ஏனென்றால் வலையுலகின் இயக்கம் அத்தகையது. அதற்கு நீங்கள் ஆட்படாது இருப்பது மகிழ்ச்சியே

said...

சர்வதேச அழுத்தங்கள் புலிகள் மீது மட்டுமா அதிகரித்துச் செல்கின்றன ஸ்டாலின்?

லங்கா தேசிய வெறி ஆளும் வர்க்கத்தின் மீதும்தான் சர்வதேச நெருக்கடி அதிகரித்துச் சென்றுள்ளது.

ஏனேனில் இவர்கள் இருவரும் சர்வதேச சுரண்டல் தேசங்களின் விருபப்த்திற்க்கு முரனில்லாத அளவில் மோதிக் கொண்டு ஏகாதிபத்தியங்களின் ஆளுமையை உறுதி செய்யத்தான் அனுமதி உண்டு.

அதை மீறி சென்றால் நார்வே வந்து மத்தியஸ்தம் செய்யும்.

ஏன் சர்வதேசங்கள் நினைத்தால் விடுதலைப் புலிகளை ஒழிக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா?

உலகம் முழுவதும் சனநாயக சக்திகளிடமிருந்து அன்னியப்பட்டுப் போயுள்ளது புலிகள் அமைப்பு.

தமிழீழத்தின் மீது நாளை ஒரு பகுதி அளவிலான நாடுகளின் தாக்குதல் நடந்தால் ஐரோப்பா, ஆஸ்திரேலிய நாடுகளில் குடியேறிய ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு தவிர்த்து இந்திய துணைக் கண்ட பகுதியில் எந்த வொரு பெரிய எதிர்ப்பும் இருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

புலிகளின்/லங்கா தேசிய வெறி கும்பலின் இன்றைய உயிர்ப்பு என்பது ஏகாதிபத்தியங்கள கொடுத்துள்ள விசயம்தான்.

தேசிய இன முரன்பாடு என்பதன் மூலவேர் அங்கு வர்க்க முரன்பாடில் புதைந்துள்ளது. அதனால்தான் ஒரே தேசிய இனத்தை சேர்ந்த தமிழர் தொழிலாளர்களின் போராட்டத்தை இந்திய தரகு முத்லாளிகளின் தேவைக்காக
ஒடுக்க முன் வந்தது புலி அரசு.



//சிங்கள தரகு முதலாலித்துவத்துக்கு எதிராக சிங்கள இனத்தில் ஒரு வலிமையான மார்க்சிய கட்சி கட்டப்படும்வரை தமிழ் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகலை பொருத்துக்கொண்டிருக்க வேண்டுமா? //

சிங்கள் தரகு முதலாளித்துவதுக்கு எதிராக ஏன் ஈழத் தமிழர்களின், லங்கை சிங்களர்களின் நலனை முன்னிறுத்தும் ஒரு கட்சி கட்டக் கூடாது.

மன்னிக்கவும் ஸ்டாலின், ஈழப் பிரச்சனை குறித்து என்னிடம் விரிவாக விவாதம் செய்யலாம் என்று நினைத்தால் என்னால் இயலாது. ஏனேனில் ஈழத்தின் வரலாற்றில் பெரிய அறிமுகம் இல்லாதவன் நான்.

இதை சொல்வத்ற்க்கு வெட்கப்படுகிறேன். ஆயினும் இந்திய சூழலை புரிந்து கொள்வதே இன்னும் நான பெரிய அளவில் செல்லவில்லை எனும் போது ஈழத்தை புரிந்து கொள்வதில் இன்னும் நான் போக வேண்டிய பாதை பெரிய அளவில் உள்ளது.

இதனாலேயே ஈழம் குறித்த விவதாங்களை நான் தவிர்க்கிறேன்.


//ஒப்பீட்டளவில் பலமான செயல்பாடுகளை கொண்டிருக்கும் சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்டுகள் தங்களது தேசிய இன சொத்துக்களான தாதுபொருட்களையும் இரும்பையும் ஏகாதிபத்தியங்கலும் தரகு முதலாலித்துவமும் கொள்ளையடிப்பதை தடுக்க தேசிய இன விடுதலை போராட்ட வழிமுறையை ஏற்றால் மக்களின் முழு ஆதரவையும் வென்றெடுக்க முடியுமா இல்லை இல்லை இந்திய புரட்சி என்னும் வழிமுறையாலா
//

தமிழக்த்தில் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய கும்ப்லை தேசிய இனம் என்ற பெயரில் விரட்டிவிட்டு என்னவிதமான புரட்சிகர தேசியததை கட்டியமைக்க முடியும்? சொல்லுங்கள்.

இந்தியா அப்படியே தேசிய இனங்களாக வெகு தெளிவாக பிர்ந்துள்ளதா?

பிஹார் தொழிலாளியை அடித்து கொல்லும் அண்டை மாநிலக்காரக்களையும், தமிழர்களை அடித்து விரட்டும் அண்டை மாநில காரர்களையும் கொண்டுள்ள நாட்டில் இந்த பிரிவினையை இன்னும் இன்னும் வீரியமாக்குவது மக்களின் அரசியலை எந்த பக்கத்திற்க்கு கொண்டு செல்லும்?

சக தேசிய இனத்தின் மீதான விரோதத்தின் மீதா அல்லது பார்ப்ப்னிய ஏகாத்பத்தியத்தின் மீதா?

இது இந்திய தேசிய இனங்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு நிரந்தரமாக ரத்த குடிக்கும் இலங்கை நிலைமையை இங்கு உருவாக்காது என்பதற்க்கு எனன் உத்திர்வாதம் உள்ளது?

அசுரன்

said...

முத்துகுமரன்,

உங்களது கருத்துக்களை படித்துக் கொண்டே வந்தேன். நல்ல முறையில் நீங்கள் நம்புகின்ற கருத்துக்களை சொல்லி வந்தீர்கள். தீடீரென்று கடைசிப் பேராவில் பட்டமளிப்பு சூட்டாதீர்கள் என்ற வரியைப் பார்த்தவுடன் மிகவும் மன வருந்தினேன்.

இது வரை யார் மீதும் வெறுமனே போகிற போக்கில் விமர்சனம் வைத்ததில்லை எனும் போது நீங்கள் அது பொன்ற வரியை விட்டது எனக்கு வருத்தை அளித்ததாலேயே அந்த கடைசி வரிகளை நானும் சேர்த்தேன்.

நீங்கள் புரிந்து கொண்டு பின்னூட்டமிட்டது மகிழ்ச்சியே

அசுரன்

said...

திராவிட கழகம்
திராவிட முன்னேற்ற
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்

இவற்றுக்கு இடையே உள்ள கொளுகை வேறுபாடு என்னாகீதுப்பா !

said...

இல்லை என்று தெளிவாக பதில் சொன்ன நம்மை க்ரே லிஸ்டில் சேர்த்தவர்கள். இந்திய பார்ப்னிய தேசியத்தை வலுப்படுத்துவதும், பார்ப்னியத்துடன் கூடிக் குலாவுவதுமான தமது தலைவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்?

அதைப பற்றியெல்லாம் ரசிகர்களுக்கு கவலையிருப்பதில்லை.

அசுரன்

said...

களவாடபட்ட இசையே கர்நாடக இசை
தமிழ் இசைன்னு ஒன்னு இருந்தது
அதன் பண்களை திருடு பார்பானுக புருடா உடுறான்கன்னு சொன்னது

தமிழில் பாடியதற்கு தீட்டு கழித்த குடுமிகளுக்கு எதிரா தஞ்சையில்
மக்கள் இசைவிழா நடத்துவது இதெல்லாம்
பார்பனிய ஆதரவோ

said...

///thiyagu said...
திராவிட கழகம்
திராவிட முன்னேற்ற
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்

இவற்றுக்கு இடையே உள்ள கொளுகை வேறுபாடு என்னாகீதுப்பா !
////

அடப்பாவி மக்கா...இப்படி ஒரு கேள்விய கேட்டுப்புட்டியே...இந்தா வாங்கிக்க...

திராவிட கழகம் - சம்பாதிக்க வாய்ப்பே இல்லாம போச்சுப்பா..இருந்தாலும் மேனேஜ் பண்ணி மேட்டர் தேத்துறோம்...

திராவிட முன்னேற்ற கழகம்

சைண்டிபிக்கா அடிச்சோம்...இப்பவும் அடிக்கறோம்...இன்னும் அடிப்போம்...குடும்பத்துல கொஞ்சம் குயப்பம்...அதெல்லாம் சரியா பூடும் டோண்ட் ஒரி...தாயா புள்ளையா இருந்தாலும் வாயும் வவுறும் வேறதான..

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

நல்லா சம்பாதிச்சோம்...நல்லா சம்பாதிப்போம்...இப்ப கொஞ்சம் பிஸினஸ் டவுன்...ஆனா மறுபடி வருவோம்...லூட்டனி ச்சே கூட்டனிக்காக வெயிட்டிங்...(இது நம்ம ஏரியா உள்ள வராத)

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் - டேய் எங்களுக்கு ஒரு ச்ச்சான்ஸு குடுங்களேம்யா...நாங்களும் நாலு காசு பாத்த்த்துக்கறோம்...எலவு காத்த கிளியா இருந்து எழவே உழுந்துரும் போலிருக்கு...சரி அட்லீஸ்ட் தாவித்தாவியாவது கொஞ்சம் அமவுண்டு தேத்தனும்...பொழப்பு ஓடனுமில்ல...

said...

நன்பா,

'நீ' சாதி பார்க்க மாட்டாய் என்பது எனக்கு ' நன்றாகவே'
தெரியும்.

என்றாலும் கேட்கிறேன் உன் சாதிக்காரன் என் வாயில்
அடித்த மூத்திரத்தை " நீ " குடித்திருக்கிறாயா ?

ஆடு,மாடு, நாய்,பன்றி எல்லாமே "பீ" பேலும்
நன்பா நீயும் கூட பீ தான் பேலுவாயா....

நானும் கூட "பீ" தான் பேலுவேன்
ஆனால் பன்றிகளோடு சேர்ந்து
நீ அதை சுவைத்திருக்கிறாயா ?

'வாய்' ப்பிருக்காது உனக்கு அதை
"விருந்தளிக்க யார்" இருக்கிறார் !
ஆனால் நன்பா உன்னுடைய 'உறவுகள்' எனக்களித்த விருந்தில்
உண்மையிலேயே நான் மூச்சுமுட்டி தினறித்தான் போனேன்.

உன் வீட்டு மாட்டுக்கொட்டாய் தான்
என் வீட்டுக்கு மாளிகை
அதுவும் பொறுக்கவில்லை
தமிழ்குடியை தாங்க வந்த புடுங்கிக்கு
கொழுத்திவிட்டார்கள்,
பச்சைப்பிள்ளைகளோடு சேர்த்து!

குழந்தை வெந்த நாற்றம் அடித்ததா நன்பா,
சாதி பார்க்காத உன் தமிழ்தேச ரத்தம் கொதித்ததா?


என் சகோதரியின் யோனியை ரத்தம் உறைய
சாதி வெறி கொண்டு குதறிய குறிகளின்
பொட்டைத்தனத்தை
கேள்வி கேட்க்காத நன்பனே வா
போராடுவோம்....


நான் தின்ற "பீ" யும்,
மூத்திரமும் சீரனமாகி
பீயும்,மூத்திரமுமாக வெளியேறவில்லை,
வெண்மணி கங்கும் தனியவில்லை,
மேலவலவு ரத்தம் இன்னும் காயவில்லை....

வா போராடுவோம்

உனக்கு இடஒதுக்கீடு
மோடிக்கு ஜன நாயகம்.

பாவெல்

said...

செந்தழல் ரவி,

நல்ல விளக்கங்கள்..

அப்படியே இன்றைய தேதியில் திராவிட அரசியலை குத்தகை எடுத்து கல்லாக் கட்ட தயாராகவுள்ள பாமக குறித்தும் விளக்க்ம் கொடுத்தால் நாங்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் :-))

அசுரன்

said...

இடஓதுக்கீட்டில் ம க இகவின் எந்த நிலைப்பாடு பார்ப்ப்னியம் என்று சொல்ல தைரியமில்லாத கோழைகளாக புரளி பேசுப்வர்கள் பாவேல் கவிதைக்கு அர்த்தம் சொல்லும் தவறையும் செய்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் குறைந்த பட்ச சுயமரியாதை உள்ளவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அசுரன்

said...

புல்மோட்டையின் இலிமினைட்டுக்கும் மன்னாரில் தென்படும் எண்ணெய் வளத்துக்காகவும் வெறி பிடித்து அலையும் ஏகாதிபத்தியங்கள் புலிகலை வளர்த்து விடுவதா நல்ல கதைதான்

திரிகோனமலை துறைமுகத்தின் மீதான தன்னுடைய ஆதிக்கத்தை புலிகல் ஒப்புக்கொண்டால் தனி தமிழீழத்துக்கான முதல் குரல் எழுப்புவது அமெரிக்க ஏகாதிபத்தியமாகத்தான் இருக்கும், இதை உங்களால் மறுக்க முடியுமா

லங்கா தேசிய வெறி ஆளும் வர்க்கமா, இன வெறி ஆளும் வர்க்கமா தெளிவுபடுத்துங்கள்

லங்கா ஆளும் வர்க்கத்தின் மீதான ச்ர்வதேச அழுத்தங்கலுக்கு காரனம் தற்போது சிங்கள பகுதிகலின் வளங்களை சுரன்டுவதற்க்கான கிடைத்துள்ள உரிமையை பாதுகாத்துகொள்வதர்க்குத்தான் தமிழீழ பகுதிகலின் வளங்கலை சுரன்டுவதர்க்கு சிங்கள ஆளும் வர்க்கத்தை வலுப்படுத்துவதுதான் நிரந்த்ரமான வழி என்பதை ஏகாதிபத்தியங்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளன

இந்திய புரட்சி பற்றி நீங்கல் கூறியுள்ளவைகளை பற்றி பெரிதாக அலட்டி கொள்ள வேன்டியதில்லை என்றே நினைக்கிறேன்

இந்த வருடம் தஞ்சை தமிழ் மக்கள் இசை விழாவை விமர்சிப்பதே போதும் அதன் மூலம்
தமிழர்கலை இந்தியர்கலாக மாற்றி அனுப்பியதை தவிர என்ன சாதித்தீர்கல்

சாதாரன மனனிலையோடு வந்திருந்த ஒருவன் திரும்பி செல்லுகையில் நீஙகள் எதிர்க்கும் அதே பார்ப்பனிய தேசியத்தின் பற்றாலனாக திரும்பி சென்றிருப்பான் இதை உங்களால் மருக்க இயலுமா

ஏகாத்திபத்தியத்தாலும் பார்ப்பனியத்தாலும் ஒடுக்கப்படும் இந்திய தேசிய இனங்கலின் ஐக்கிய முன்னனி கட்டும் உங்கள் வழிமுறை புல்லரிக்க வைக்கிற்து

இந்த எனது கேள்வி ஏற்க்கனவே உங்கலுக்கு வந்திருக்கும் இருந்தாலும் மீண்டும் எழுப்புகிறேன்
சற்றேறக்குறைய ட்ராட்ஸ்கியின் உலக் கட்சி, புரட்சி என்கிற கற்பனாவாதமும் இந்திய பல் தேசிய சமூக அமைப்பில்( இந்தியாவும் ஒரு குட்டி உலகமாகத்தான் இருக்கிறது)புரட்ச்சி என்கிற உங்கள் வாதமும் ஒத்துப்போகிரதே

உங்களை ஏன் ட்ராட்ஸ்கியவாதிகல் என்று கூற கூடாது

ஸ்டாலின்குரு

said...

//உங்களை ஏன் ட்ராட்ஸ்கியவாதிகல் என்று கூற கூடாது //

உலக புரட்சி பேசிய முதல் ஆள் யார் தெரியுமா ஸ்டாலின் குரு?

மார்க்ஸ்தான்.

மார்க்ஸ் ஒரு முன்னாள் ட் ராஸ்டிகியவாதியா?

இயந்திரகதியாக முதலில் பொருத்திப் பார்த்து பேசும் பழக்கத்தை முதலில் விடுங்கள். அதுவும் ஒற்றை வார்த்தைகளை பொருத்திப் பார்ப்பது மிகவும் தவறானது.

சரி ட் ராஸ்டிகியை வித்தியாசப்படுத்தும் விசய்மாக இருப்பது உலக் புரட்சி குறித்த அவரது கருத்தா?

இல்லை நண்பரே விவசாயிகள் தொழிலாளிகள் குறித்த அவரது கருத்தே அவரது உலக புரட்சி குறித்த கருத்தின் அடிப்படை. எனவே அந்த அம்சத்தில் பார்க்க வேண்டும்.

அந்த அம்சத்தில் பார்க்கும் போதுதான் மார்க்ஸ் சொன்ன உலகப் புரட்சிக்கும், ட் ராஸ்டிகி சொன்ன உலக புரட்சிக்கும் வித்தியாசம் தெரியும்.

அதே போல தேசியஙக்ள் எல்லாம் தனித் தனியாக விடுதலை தேட வேண்டும் என்று ட் ராஸ்டிகியை எதிர்த்தவர்கள் சொன்னார்களா?

ஏன் தோழர் ஸ்டாலின் என்ற தேசிய இன பிரச்சனி நிபுனர் ஒருவரின் பெயரை வைத்துக் கொண்டு தேசிய இனப் பிரச்சனை குறித்து மார்க்ஸியமல்லாத ஒரு விசயத்தை பேசுகிறீரகள்?


//ஏகாத்திபத்தியத்தாலும் பார்ப்பனியத்தாலும் ஒடுக்கப்படும் இந்திய தேசிய இனங்கலின் ஐக்கிய முன்னனி கட்டும் உங்கள் வழிமுறை புல்லரிக்க வைக்கிற்து //

அது சரி தேசிய இனங்களை வைத்து கட்சி கட்டும் உங்களது நடைமுறை செல்லரித்து போய்விட்டது குறித்து என்ன கருத்து வைத்துள்ளீர்கள் ஸ்டாலின் குரு.?

இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் தேசிய இனக் கோரிக்கையின் கீழ் மக்களை அணி திரட்டி நிலபிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து புரட்சி செய்த ஒரேயோரு வரலாற்றை எனக்கு காட்டுங்கள் பிறகு தேசிய இனக் கோரிக்கையை பிரதானப்படுத்தும் உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

ஏன் அப்படி ஒரு உதாரணம் உங்களால் வைக்க இயலவில்லை ஸ்டாலின் குரு.


//சாதாரன மனனிலையோடு வந்திருந்த ஒருவன் திரும்பி செல்லுகையில் நீஙகள் எதிர்க்கும் அதே பார்ப்பனிய தேசியத்தின் பற்றாலனாக திரும்பி சென்றிருப்பான் இதை உங்களால் மருக்க இயலுமா//

ஒரு வேளை ம க இக ட் ராஸ்டிகியிஸ்டுகள் என்ற மனநிலையில் வந்த உங்களுக்கு இது பொன்ற அனுபவம் கிட்டியிருக்கலாம்.

மற்றப்டி பொதுவாக தமிழகத்தில் பார்ப்ப்னிய எதிர்ப்பு என்றால் உங்களது வார்த்தையில் பார்ப்னிய ந்ட்பு சக்தியான ம க இகதான் துரதிருஷ்டவசமாக முன்னணீயில் நிற்கிறது.

தமிழ் தேசியம் பேசிய கட்சிகள் எல்லாம் பெரியார சிலை உடைப்பில் தமது சொந்த அணிகளை காட்டிக் கொடுப்பது என்ற அளவில்தான் பார்ப்ப்னிய எதிர்ப்பை நடைமூறையில் கொண்டுள்ளன.

தஞ்சை தமிழ் மக்கள் இசை விழாவை விமர்சிப்பேன் என்று சொல்லி விட்டு வெறுமே கிசு கிசு போல கருத்து வைத்து சென்றுள்ளீரகள் தோழரே.

குறைந்த பட்சம் எந்த வகையில் தமிழ் மக்கள் இசை விழாவை பார்ப்ப்னிய எதிர்ப்பு அடிப்படையில் நடத்தலாம் என்று சொன்னாலாவது புண்ணியமாகப் போகும்.


//இந்திய புரட்சி பற்றி நீங்கல் கூறியுள்ளவைகளை பற்றி பெரிதாக அலட்டி கொள்ள வேன்டியதில்லை என்றே நினைக்கிறேன்//


தேசிய இன முரன்பாடுகள் குறித்து நீங்கள் குறீப்பிடுவனவற்றை நான் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியவை இல்லை என்று கருதுகிறேன்.

இப்படி முடி வெடுப்பதற்க்கு நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ஒரு விசயம் முக்கியமா இல்லையா என்பதை அது மக்களை பாதிக்கும் அம்சத்தை முன்னிறுத்தி முடிவெடுப்பதே மக்கள் விடுதலைக்கு போராடுப்வனின் அனுகுமுறையாக இருக்கும்.

தோழர் ஸ்டாலின் குரு இந்த அம்சத்தில் ஏகாதிபத்தியம், பார்ப்னியத்தை எதிர்த்து அகில இந்திய கட்சி கட்டுவதா அல்லது தேசிய இன ரீதியில் மக்களை பிரித்து இந்திய மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை திருப்பி விட்டு ஏகாதிபத்தியம், பார்ப்னியம் வயிறு வளர்க்க உதவி செய்வதா என்பதை சொல்லுங்கள்.

அல்லது போன முறை கேட்டது போல தமிழ் தேசிய கட்டியமைத்து இங்கிருந்து ஏகாவை விரட்டி விட்டு ஒரு சோசலிச குடியரசு அல்லது புதிய ஜனநாயக அமைப்பை நிறுவிய பிற்ப்பாடு எப்படி அதனை கட்டி காக்க முடியும் என்ற ரகசியத்தை சொல்லுங்கள்.

ஏனேனில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழக்ம் இந்திய சிறைக்கூடத்துடன் வெகு பலமாக இணைக்கப்ப்ட்டுவிட்டது. வேண்டுமானால் மக்களிடம் சென்று தனி தமிழ நாடு கோரி பிரச்சாரம் செய்யுங்கள் என்ன எதிர்வினை வருகிறது என்று பாருங்கள்.

அதிகப்ட்சம் தேசிய இனக் கோரிக்கை என்பது கர்நாடக் மக்களுக்கு எதிராக தமிழர்களை அணி திரட்ட மட்டுமே பயன்படும், அப்படி திரளும் கூட்டத்தை வைத்து ஏகா, நிபியின் ஒரு ம்சிரைக் கூட பிடுங்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

ஏனெனில் தமிழகம் முழுவதும் இருப்பவ்ர்கள் தமிழர்கள் அல்ல - அவர்கள் சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பிளவு பட்டுள்ளனர். அவர்கள் பார்ப்னியத்துடனும், நிலபிரபுத்துவத்துடனும் பல்வேறு வகையில் உறவு கொண்டுள்ளனர்.

இந்த உறவுக்கு குந்தகம் இல்லாத வகையில் தேசிய இனம் கோரிக்கை பயனப்ட்டால் வெற்றி தரும். இந்த உறவுக்கு குந்தகம் வரும் எனும் பொழுது தெரியும் சேதி தேசிய இன உணர்வின் உண்மையான அடித்தளம் எனன்வென்பது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக முக்கியமான தந்திரம் ஒரு நாட்டின் அனைத்து தரப்பு விருப்ப முரன் குழுக்களை பிரதிநிதித்துவ படுத்தும் கட்சி குழுக்களையும் ஊழல் படுத்தி தனது உளவு அமைப்பாக ஏதோ ஒரு வகையில் வைத்திருப்பதுதான்.

க்யுபா பிடல் காஸ்ட் ரோவை க் கூட அந்த வகையில் பயன்படுத்த விளைந்து(ஏனேனில் புரட்சிக்கு பின்புதான் கஸ்ட் ரோ தனது அமைப்பை கம்யுனிஸ்டு என்று அறிவித்தார்) அவருக்கு பணமும் ஆயுதமும் கொடுத்தது. இப்படி பிடல் காஸ்ட் ரோ நெருக்கடி கொடுத்தால்தான் பாடிஸ்டுடா அமெரிக்கா சொல்படி கேட்பார் என்பதுதான் லாஜிக்.

இதே விசயம்தான் இந்தியா, பாகிஸ்தான் விசயத்திலாகட்டும், சீனா இந்தியா முரன்பாடாகட்டும்,

வளைகுடா அரசியலாகட்டும், லங்கா-புலிகள் ஆகட்டும் எல்லா இடத்திலும் இதேதான் கதை.

புலிகளுக்கு CIA உதவவில்லை என்று சொல்கிறீர்களா?

CIA சமீபத்தில் தலிபானின் துணை அமைப்பு ஒன்றுக்கு மீண்டும் உதவி செய்து அம்பலமான கதை தெரியுமா உங்களுக்கு?

பிரிவினையை ஓட்டி மக்களை அவர்களுக்குள் மோத விட்டு ரத்தம் குடிப்பதுதான் ஆளும் வர்க்கங்களின் தந்திரம் அது புரியாமல் சக ஒடுக்கப்ப்டும் தேசிய இனத்துடன்தான் முதலில் முரன்படுவேன் என்று சொல்வது என்ன வகை தீர்வு என்று தோழர் நீங்களே சொல்லுங்கள்.

அப்புறம் தேசியம் என்பது தேசிய இனத்தையே குறிக்கிறது(பார்ப்ப்னிய தேசியம் என்று சொல்லும் இடம் தவிர்த்து). எனவே லங்க தேசிய வெறி கும்பல் எனும் போது அது இன வெறி கும்பலையே குறிப்பிடுகிறேன்.

அசுரன்

said...

//தமிழர்கலை இந்தியர்கலாக மாற்றி அனுப்பியதை தவிர என்ன சாதித்தீர்கல்//


தமிழர்களை தமிழர்களாக மாற்றும் தந்திரம் ஏதேனும் வைத்திருந்தால் சொல்லுங்கள் தோழர் ஸ்டாலின் குரு பசிரீலிக்கலாம்.

தமிழர்களை ஏமாளிகளாக மாற்றிய திராவிட தமிழ் தேசிய தரகர்கள் குறித்து என்ன கருத்து வைத்துள்ளீர்கள் ஸ்டாலின் குரு?

ஒரு வேளை இந்தியர்களாக இருப்பதை விட ஏமாளிகளாக இருப்பது எவ்வள்வோ மேல் ஏனேனில் எப்படிப் பார்த்தாலும், சுரண்டுவது ஒரு அமெரிக்கனோ அல்லது ஒரு கருணாநிதி, ராமதாஸ் என்ற தமிழனாகவோ இருக்கீறானல்லவா .

அது சரி தேசிய இனம் என்பதற்க்கு உஙக்ளது வரையறை என்ன தோழர் கொஞ்சம் சொல்லுங்கள் பேசலாம். விவாதத்தை முறையாக ஆரம்பிக்கலாம் என்று கருதுகிறேன்.

கருணாநிதி எந்த தேசிய இனம்? விஜயகாந்த எந்த தேசிய இனம்?

கர்நாட்க தமிழர்கள் எந்த தேசிய இனம்? ஈழத் தமிழர்கள் எந்த தேசிய இனம்?

பார்ப்ப்னியம் ஒரு தேசிய இனமா?

தேசிய இனம் என்பது சமூகத்தின் எந்த வரலாற்று கட்டத்தில் உருவாகும் ஒரு சமூக அலகு?

அசுரன்

said...

நீங்கள் கேட்க்கும் உதாரனம் இந்தியாவில் இல்லை இந்தோசீனாவில் இருக்கிறது

இந்தோசீனாவில் இருந்த வியட்னாம் தேசிய் இனம் த்னது பாதையை தேர்ந்தெடுத்து போராடி வென்றதை கூறலாம்

ஒட்டுமொத்த இந்திய பார்ப்பனிய கட்டமைப்புக்குல் உங்கலால் ஏகாதிபத்திய பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டம் நடத்த முடியுமென்றால் எங்களால் ஏன் அதையே தமிழகத்தில் செய்ய முடியாது சாதிகலாக வர்க்கங்கலாக பிளவுபடுத்தப்பட்டிருக்கும் மக்களை இணைத்து தேசிய விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தால் அது ஏகாத்திபத்தியத்தின் பார்ப்பனியத்தின் வலிமையை ஆட்டம் கான வைப்பதாகவும் ஒடுக்கப்படும் மற்ற தேசிய இனங்கலுக்கு வழிகாட்டியாகவும் அமையும்போது மற்ற தேசிய இன மக்களோடு என்ன முரன்பாடு இருக்க முடியும்

தமிழ் தேசியம் பேசும் ஓட்டுபொறுக்கிகலின் பிரதினிதியாக என்னை நீங்களே எப்படி முடிவு செய்தீர்கல்

எனது கேள்வி தெளிவானது தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர்கலை இந்தியனாக மாற்றி அனுப்பி உள்ளதாக கூறி உள்ளேன்
ஒடுக்கப்படும் பிற தேசிய இனங்கலின் மக்களோடு தமிழ் தேசிய பாட்டாளி வர்க்க ஐய்க்கியத்துக்கு நிகழ்ச்சி எவ்வாரு உதவியது என்பதுதான்

இந்திய தேசிய வெறியூட்டியதாக நான் உனர்கிறேன் தர்க்க ரீதியாக மருத்து காட்டுங்கள்

said...

புலிகள் ஏகாதிபத்திய தாசர்கள்தான் என்பதனை அவ்வமைப்பின் அரசியல் தரகர் அன்றன் பாலசிங்கம்தான் 2002 பத்திரிக்கையாளர் கூட்டத்திலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார். 'எங்களிட பொருளாதாரக்கொளுகை..தாராளமயம்தான்' என்பதை..

ஈழம் போய் வந்த அய்யா ஆனைமுத்து அங்கு கடைவீதி எங்கும் விற்கும் தண்ணீர் போத்தல்களையும், சுவைமிக்க கோக்,பெப்சி பானங்களையும் விவரித்து இருக்கிறார்.

நோர்வேயும், ஜப்பானும் அமைதிப்பேச்சில் இறங்குவதும், நோர்வே புலிகளை தீவிரமாய் ஆதரிப்பதும் எதற்காக? புலிகள் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளைகளாய் இருப்பதால்தானே?

குறுரக விமானத் தாக்குதல்களை புலிகள் தங்கள் பெரிய அண்ணன் புஷ்-ஷிடம் சொல்லாமலா நடத்தினார்கள்?

--கட்டபொம்மன்.---

said...

ரிலயன்சுக்கு எதிராக சவடால் அடித்த பேர்வழியான ராமதாசின் களவாணித்தனம் எப்படிப்பட்டது தெரியுமா?

அவரின் மகள் வயிற்றுப் பேரன் ..சுகந்த்..(இந்த ஏழைப் பையன் ராமச்சந்திரா மெடிகல் காலேஜில் ஒரு கோடி ரூபாய் மட்டும் கட்டி எம்.டி. படித்து வருகிறார்)...விரைவில் சென்னையில் மெக்டொனால்ட்ஸுக்கு ஏஜென்சியாகப் போகிறான். பேச்சு நடந்துகொண்டிருக்குது..இதுதான் தாராளமயத்தை எதிர்த்து தமிழ் தேசியம் செய்யும் புர்ர்ரட்சி...

சென்னையை அடுத்த ஓரகடம்,திருப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் வந்து கொண்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழர்களின் நிலங்களை வாங்கித் தரகு வேலை செய்பவன் யார் தெரியுமா?

தமிழ்தேசியவாதிகளின் புரவலரும், தேவரய்யாவுமான ந.அருணாசலத்தின் (நந்தன் பத்திரிக்கை, ஸ்டூடண்ட்ஸ் செராக்ஸ்) ஒரே மகன், சவுரி ராஜன். இந்த ஆசாமி ம.தி.மு.க.வில் இருக்கிறான். இதே கட்சியின் கே.எஸ்.ராதாகிருஷ்ணனோ சி.பொ.ம.வை கண்டித்து தினமணியில் கட்டுரை எழுதுகிறான்.

அருணாசலத்தின் காலடி மண்ணெடுத்து தமிழ்தேசியப் பொட்டு வைக்கிறவரோ பெ.மணியரசனும்,தியாகுவும்...இன்னும் தமிழ்சான்றோர் பேரவையின் லொட்டு லொசுக்குகளும் என்பது போலி தமிழ் தேசியவியாதிகளுக்கு தெரியுமா?

...அன்பரசன்..

said...

தமிழ் தேசியம்+தமிழ் இன மான உணர்வு + திராவிடம் + இட ஒதுக்கீடு for creamy layer = இந்திய தேசிய அமைச்சர் பதவி - இந்திய தேசியம்

எனக்கு புரியல. யாருக்காது புரியுதா?

said...

எனது அடுத்த பதிவு வந்ததா அதற்க்கு பதில் கொடுங்கள் பிறகு விவாதத்தை தொடருவோம்

said...

வன்னிய ஜாதியில் பிறந்து விட்டு எங்க ஜாதிக் கட்சித்தலைவந்தான் பெரிய தலைவன், மற்ற எல்லாரும் வெறும் பயலுங்க என்று புலம்பும் கேடுகெட்ட சிங்கப்பூர் புருஷோத்தமனை மதிச்சு நீங்க பதில் சொல்லி இருப்பது சுத்த வேஸ்ட்டு.

பாப்பார ஜாதியை டோண்டு ராகவன் எப்படி தூக்கிப்பிடிச்சு ஆதரிக்கிறானோ அதேபோல வன்னிய ஜாதியை ஆதரிச்சு பதிவு போடுற தாழ்ந்த புத்தி கொண்ட நாதாரி அது.

அவனுக்கு அடிவருடியும் முஸ்லிமிடம் எச்சில் கோழி பிரியாணி வாங்கித் தின்னும் முத்துக்குமரன் குழலிக்கு சப்போட் செய்வது மகா கேவலம்.

இப்பதிவில் தியாகு அவர்கள் கேட்டிருப்பது அற்புதம்.

ஆயா சட்டியை தொலைத்தவன் எல்லாம் இங்கே வந்து கும்மி அடிப்பது தேவை இல்லாத ஒன்று.

said...

ஸ்டாலின் குரு,

உங்களை வோட்டு பொறுக்கி கும்பலுடன் சேர்க்க வில்லை. தமிழ் தேசியம் பேசிய இது வரையான கட்சிகளின் நடவடிக்கை என்பது நிபி ஏகா எதிர்ப்பு என்று வரும் போது பம்மி பதுங்கும் அம்சத்தையே விமர்சித்திருந்தேன்.

அதை விட்டு விடுவோம். இப்பொழுது சில அடிப்படைக் கேள்விகள்

தேசிய இனமாகத்தான் பிரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமென்ன? அதன் முக்கியத்துவம என்ன?

நீங்கள் ஒரு கம்யுனிஸ்டா அல்லது வேறு ஏதேனும் மாற்று திட்டம் கொண்டவரா?

மாற்று திட்டம் கொண்டவர் எனில் தனி தேசியம் எனப்தில் உள்ள சிக்கல்கள் என்று நான் குறிப்பிடுபவை குறித்து கருத்துச் சொல்லவும்(ஏகாவுக்கும், நிபிக்கும் சாதகமாக மக்களை பிரிப்பது குறித்து).

காவெரி பிரச்சினைக்கு உங்களது தனித் தமிழ் தேசியத்தில் என்ன தீர்வு உள்ளது.

தனித் தேசியம் எனப்தை எத்தனை நாள் கொண்டு செல்வீர்கள்?

பிற தேசிய இனங்களுடனான உங்களது உறவு எப்படி இருக்கும்?(எ-கா கர்நாடகா)

அசுரன்

said...

தனிதமிழ் நாடுங்கற விசயம் பேசும் ஸ்டாலின் போன்றவர்கள் ,

மக இகவின் இந்திய தேசியத்தின்மீதான கருத்துக்களுக்கான நூல்களை படித்துவிட்டு பிந்தொடரலாம்

இங்கே மக இ க இந்திய தேசியம் எனும் பேசும் ஆர் எஸ் எஸ் களவானி பயல்களையும் ,

தேசிய ஜல்லிகளையும் அசுரனும் மற்ற தோழர்களும் அவர்களது இடத்திலேயே
போய் விவாதம் செய்த தளங்களை பார்வைஇடும்படி கேட்டுகொள்கிறேன்.

மேலும் பார்பனியத்தின் மீதான அதன் பண்பாட்டு அடக்குமுறைக்கு எதிரான போர்பிரகடணம் செய்துள்ள ம க இ கவின் கொள்கையை பார்பனியம் என வர்ணிக்கும் சக்திகள் இருக்கும் இடத்தில் விவாதம் நடத்துகிறோம் என்பதை தோழர் ஸ்டாலின் குரு உணரனும்

said...

இந்திய பிரச்சனை பற்றி பேசுய்யா என்று சொன்னால் குழலி உடனே தமிழிழத்தில் தன்னை மறைத்துக் கொள்கிறார்.

அவரது இயலாமை என்னை பரிதாபப்படச் செய்கிறது.

மன்னிக்கவும் குழலி, ஈழம் குறித்து விவாதம் செய்வதை என்றுமே நான் முன்னேடுப்பதில்லை. ஏனேனில் ஈழம் குறித்து எனக்கு போதிய அறிவில்லை.

ஆனால் போதிய அறிவில்லாமலேயே விமர்சனம் செய்யும் பழக்கம் உள்ள உங்களுக்கு அது வசதியானதாக இருக்கலாம்... ஒருவேளை...

இடஓதுக்கீடு குறித்தும், இந்தியாவில் தனி தமிழ் தேசியம் குறித்தும், திராவிட அரசியல் குறித்தும் ம க இக மீதான உங்களது புரளி குறித்தும் பதில் சொல்லுங்கள் என்றேன்.

இந்த கேள்விகளையெல்லாம் ஆரம்பித்தவன் நானல்ல நீங்கள்தான் ஆனால் அவற்றை நான் உடைத்து எதிர்வினை செய்தால் பதில் சொல்லாமாலேயே இன்னொரு தளத்துக்கு விவாதத்தை எடுத்துச் செல்வது எந்த ஊர் நேர்மை. ஒரு வேளை கட்சி மாறி கல்லா கட்டும் ராம்தாஸ் பாணி அரசியலோ?

உங்களது கருத்துக்கள் புரளி என்பதற்க்கு இந்த பதிவில் சில தகவல்களையும் கொடுத்திருந்தேன். ஆனால் அவை குறித்து கள்ள மௌனம் சாதிக்கும் குழலி விவாதத்தை வெகு வசதியாக நாடு கடத்துகிறார். அதனை என்னால் ஆதரிக்க முடியாது.

ஈழம் குறித்த எனது கருத்து இதோ இங்கு உள்ளது. இதனை இப்பொழுது விவாதம் செய்ய முடியாது. ஏனேனில் ஏற்கனவே ம க இக மீது அவதூறு கிளப்பி விட்டு அதற்க்கு பதில் சொல்லாமல் நழுவுகிறார் குழலி. ஒன்று அவரது புரளிக்கு அவர் வருத்தம் தெரிவிக்கட்டும் அல்லது விளக்கம் கொடுக்கட்டும் இரண்டும் செய்யாமல் நழுவி செல்வது திருடனுக்கு தேள் கொட்டியது போன்று உள்ளது.

தனித் தமிழீழம் தீர்வு கிடையாது. ஈழத்தை பொறுத்தவரை பிரச்சனை இலங்கை ஒரு காலனி நாடாக இருப்பதுதான். அதுதான் அங்கு இனப் பிரச்சனையாக மோத விடுகிறது.

அங்கு வளங்களை சுரண்டுவதிலும், மக்களை ஒடுக்குவதிலும் முன்னணியில் உள்ள ஏகாதிபத்தியத்தையும் அதற்க்கு துணை நிற்க்கும் நிலபிரபுத்துவம் சிங்கிள் பேரின வாதத்தையும் விரட்ட் ஜன்நாயக கூட்டணி ஏற்படாத வரை தீர்வு இல்லை. சிங்கள் பாசிசத்திற்க்கு பதில் புலி பாசிசமே வரும். அதன் அடிப்படைகள் இப்பொழுதே அங்கு தெரியத் துவங்கி விட்டன.

பிரபாகரனின் மகனுக்கு சிங்கள் அரசே விசா எடுத்துக் கொடுத்து அனுப்பிய மர்மம் குறித்தும், தராளமயமே எமது கொள்கை என்று தனி தமிழிழத்தை இப்பொழுதே அடிமை தேசமாக காட்டிக்கொடுத்த பால சிங்கத்தின் பொருளாதார திட்டத்திற்க்கும் என்ன கருத்து சொல்வார்கள் போலி தேசியவாதிகள்?

இப்படி தேசத்தை ஏகாதிபத்தியத்திற்க்கு அடிமைப் படுத்துவதைத்தான் தனி தேசியம் என்று சொல்வார்களோ?

இவர்களை தரகர்கள் என்று சொல்வதில் என்ன தவறுல்லது.

அசுரன்

said...

தோழர்,
புரளி கிளப்புவது புழுதிவாரி தூற்றுவது என்று புது அவதாரம் எடுத்திருக்கிறார் குழலி, மொழி வழி தேசியம், இனவாரி தேசியம், என்று ஏற்கனவே அவர் போட்டிருக்கும் காமெடி பதிவை ரசித்து முடிப்பதற்குள் அடுத்த பதிவு வந்திருக்கிறது பல நாள் வன்மங்கள் வார்த்தைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருகின்றன. கருணாநிதியின் ஆட்சிகாலத்தில் மட்டுமே கொஞ்சம் தைரியமாக புலிகள் பற்றி பேச வாயெடுக்கும் இவர்கள் புலிகள் ஆதரவு ஈழம் பற்றி கேள்வி எழுப்புகிறார்களாம் நல்ல காமெடி, ஈழப்பிரச்சனையில் புலிகளின் தலைமை ஏகாதிபத்தியத்திற்கு வழிவிட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறது என்பதனை நாம் கூறினால் அதெல்லாம் பேசாதே தமிழீழத்தை ஆதரிக்கிறயா இல்லையா இரண்டுல ஒன்னு சொல்லுனு, கேள்வி கேட்கிறார். சரிதான், இரண்டில் ஒன்று தெரிய வேண்டிய காலம் வந்துவிட்டது அது குழலி முற்போக்கானவரா அல்லது வன்னிய சாதி வெறியோடு தமிழ்தேசியத்திற்குள் பதுங்கி கொண்டு சமூக அரிப்பை தீர்த்துக்கொள்கிற நடுத்தரவர்க்க அல்பமா? என்பதுதான் இறுதியில் தெரிந்துதானே ஆக வேண்டும் இரண்டில் ஒன்று…

இரண்டில் ஒன்றை வெளிகொணரும் வேலையை அருமையாக செய்து கொண்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் தோழர், எனக்குத்தான் இந்த பாழாய் போன அலுவலகத்தில் இணையம் கூட பார்க்க விட மாட்டேங்குறானுங்க, ஆனால் குழலியின் முதல் பதிவுக்கு அவர் கேட்பது போல நச்’னு பதில் சொல்ல முடியாவிட்டாலும் என்னால் முடிந்த அளவில் விரைவில் சொல்ல முயற்சிக்கிறேன்.. ஆனா அதுக்குள்ள குழலி எத்தனை நச்’ கேள்வி வைக்கப்போறாரோ  ஓசை செல்லா கவனமா இருங்க குழலி நச்’னு ஒரு வலைபதிவு, நச்’னு ஐந்து கேள்விகள்னு உங்க ரேஞ்சுக்கு வந்துட போறாரு …. :-)

தோழமையுடன்
ஸ்டாலின்

said...

மரம் வெட்டி கும்பலைப் போலவே சாதித் திமிர் கொண்ட வென்னை வெட்டி கும்பலின் சாதிச் சங்கத் தலைவன் "மரக்கடை" மன்னாரு அரசுக்கு
இட ஒதுக்கீடு கேட்டு வரைந்த வின்னப்பம்..

முதல்வரய்யா சமூகத்துக்கு,

ஐயா எங்களப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் ஒரு சின்ன அறிமுகத்தோட எங்க சமூகத்து கோரிக்கைய உங்க முன்னாடி
வைக்கிறோமுங்க. நாங்க கவுண்டரோ, தேவரோ, கள்ளரோ, படையாச்சியோ வேறெந்த கருமாந்தரமோ பேரு கொண்ட சாதிக்காரவுங்க. வாழ்ந்து கெட்ட
சாதி சனமுங்க. முன்ன ஒரு காலத்துல நாங்க நாடாண்ட கதையென்ன, படைநடத்திய கதையென்ன... அதெல்லாம் இப்ப பழைய கதையாப் போச்சுங்க.
இப்ப நாங்க படை நடத்த முடியுதா, இல்ல நாட்டத் தான் ஆள முடியுதா.. எல்லாம் இந்த பாப்பாரப் பசங்களால வந்த வினைங்கைய்யா.

வெள்ளக்காரன் வாரதுக்கு மின்னயிருந்து இப்ப வரைக்கும் இந்த கீழ்சாதிப் பயபுள்ளைகளுக்கெல்லாம் எல்லாம் எங்க நெலத்துல தான் போனாப் போகுதுன்னு
வேல போட்டுக் குடுத்தமுங்க. ஆனாப் பாருங்க நெம்பக் கரீட்டா எல்லா வெளச்சலையும் எண்ணி அடு(மு!?)க்கிடுவோமுங்க. கணக்குல நாங்க தான் புலியாச்சே.
அப்பால... அவனுக்கும் போனாப்போகுதுன்னு அப்பப்பக் கொஞ்சம் படியளந்துடுவோமுங்க. என்னிக்காவது எதுக்கனுமின்னு நெனச்சா ஒரே.......
அமுக்கு.. பின்ன உடுவோமா...!? நாங்க தான் படைநடத்தி நாடாண்ட சாதியாச்சே?

அப்பவும் சரி, இப்பவும் சரி ஊரு நாட்டாமையெல்லாம் எங்க சாதி சனத்துக் கையில தானுங்க... நடுவுல நாட்டு நடப்பெல்லாம்
மாறிப்போச்சாமுங்க.. இப்பத்தான் இந்த கோர்ட்டு, சட்ஜு, கலிக்டருன்னு என்னனென்னவோ சொல்றானுவோ.. ஆனாலும் ஊருப்பக்கம் எப்பவும்
போல நம்ம நாட்டாம தானுங்க... ஆமா!

இந்த அதிகாரிமாருங்கெல்லாம் அய்யிரு சாதிக்காரவுகளாவே இருக்காங்களே.. எங்களும் ஒரு வாய்ப்புக் கொடுத்தீங்கன்னாக்க நாங்களும் நல்லாவே
அதிகாரம் பண்ணுவோமுங்க. ஆண்டத்தனம்ங்கறது எங்க ரத்தத்திலேயே இருக்குன்னு அய்யருமாருகளே எழுதி வச்சிருக்காங்களாமுல்ல? சட்டத்துல
அதுக்கு இடமில்லன்னா சட்டத்தையே மாத்துங்க. வேணுமின்னா எங்களையும் கீழ்சாதி லிஸ்டுல சேத்துப்போடுங்க.. போனாப்போவுது கீழ்சாதின்னு
பேப்பருல தான இருக்கப்போவுது... ஊருப்பக்கம் எப்பவும் போல நம்ம நாட்டாம தானுங்களே.

ஐயா மாரே, எங்க மக்கமாருக்கும் ஒரு சான்ஸு கொடுத்துப் பார்த்தீங்கன்னா, இந்த சர்ஜு, கலிக்டரு, டானாக்கார அதிகாரின்னு எல்லா வேலையும்
நல்லாவே செய்வோமுங்க.. பன்னாட்டுப் பான்றதுல மத்த சாதிக்காரவுகள விட எங்களுக்கு முன்னனுபவம் சாஸ்திங்கைய்யா.. காலகாலமா நாங்க படைநடத்தி
ஆண்ட ஆண்டைகளாச்சுங்களே.. அதனால அதிகாரிமாருங்க பன்ற ஆண்டத்தனத்துல எங்களுக்கும் ஒரு இடஒதுக்கீடு கொடுத்துப் பாருங்க ஐயா.

எங்களப் பாக்கவெச்சுட்டு அய்யிருமாருக மட்டும் திங்காதிங்கறாங்கையா.. எங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்தா..சேந்து பொழங்கிலாமுங்கையா

வணக்கத்துடன்

மரக்கடை மன்னாரு



++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நமது நன்பர் குழலி ஈழப்பிரச்சினை பற்றி ம.க.இ.கவின் நிலை பற்றி கேள்விகள் எழுப்பி இருக்கிறார். ஈழம் பற்றியும் புலிகள் பற்றியும் ஏற்கனவே பலவிடங்களில்
சொன்னபின்னும், இங்கே தமிழரங்கம் தளத்தில் விரிவான தெளிவான பல்வேறு பதிவுகள் இட்ட பின்பும் இந்தக் கேள்விகளை எழுப்புகிறார்.. அவருக்கு
பெரியார் சொல்லிச் சென்ற அறிவு நானயம் சிறிதளவேனும் இருப்பின் ராஜீவ் கொலையான பின் வந்த சில வருடங்களில் ஈழத்தமிழர்கள் பற்றி மரம் வெட்டி / காடு வெட்டி
போன்ற சூராதி சூரர்களெல்லாம் வாலை சுருட்டி தொடையிடுக்கில் சொருகிக் கொண்டு பம்மிக் கிடந்ததன் மர்மம் என்னவென்பதை அவர்களிடமே
கேட்டு நமக்குப் புரியும் விதத்தில் விளக்குவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

நமது அருமை நன்பர் வரவனையின் வார்த்தைகளில் சொன்னால்..ஈழப்பிரச்சினையிலும் புலிகள் குறித்தும் வெளக்கென்னையில் குண்டி கழுவுவதைப்
போன்றதொரு நிலையெடுத்திருக்கும் கருணாநிதியையும் இதே கேள்விகள் கேட்பார் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்..

அதே வேகத்தில் ஈழத்தில் தமிழர்களை ஒழிக்க ஆயுதம் வழங்கிக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கத்தை ( அதாவது தி.மு.க, பா.ம.க, வி.சி மற்றும்
இவர்களுக்கெல்லாம் அல்லக்கையாக செயல்பட்டு வரும் வீரமனியையும் சேர்த்தே ) நமது நன்பர் குழலி கேள்விகேட்பார் என்றும் கூட நாம் எதிர்பார்க்கலாம்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


தமிழ் தேசியம் பற்றி வீராவேசமாக பேசும் குழலி, பா.ம.க சொல்லி வரும் தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது எதன் அடிப்படையில் என்றும்..
அப்போ.. வடக்கும், தெற்கு இரண்டிலும் என்னென்ன தேசியங்கள் இருக்கும் என்பதையும் சேர்த்து விளக்கலாம்.. நாமக்கும் கொஞ்சம் விளங்கினாற்போலிருக்கும்.

வட தமிழ்நாடு என்பது வன்னிய தமிழ்நாடு என்பதாக ஆக்க முயற்சிக்கும் ராமனடிமையின் தேசிய நிலைப்பாடு பற்றியெல்லாம் கூட நமது அருமை
நன்பர் குழலி விளக்கலாம்.

said...

எனது கேள்வி தெளிவானது தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர்கலை இந்தியனாக மாற்றி அனுப்பி உள்ளதாக கூறி உள்ளேன்
ஒடுக்கப்படும் பிற தேசிய இனங்கலின் மக்களோடு தமிழ் தேசிய பாட்டாளி வர்க்க ஐய்க்கியத்துக்கு நிகழ்ச்சி எவ்வாரு உதவியது என்பதுதான்

இந்திய தேசிய வெறியூட்டியதாக நான் உனர்கிறேன் தர்க்க ரீதியாக மருத்து காட்டுங்கள் ?

இதற்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை

said...

இந்துன்னு சொல்லு
முஸ்லீம்னு சொல்லு
அதென்ன பெளத்தன்

புலின்னு சொல்லு
சிங்களம்னு சொல்லு
அதென்ன தமிழன்

பார்பான்னு சொல்லு
பறையன்னு சொல்லு
அதென்ன பாட்டாளி

சோறுன்னு சொல்லு
சாப்பாத்தின்னு சொல்லு
அதென்ன இட்டலி

ஒதுக்கீடுன்னு சொல்லு
இல்லைன்னு சொல்லு
அதென்ன தீர்வில்லைன்னு

மரம்வெட்டி
தலைவெட்டி
கழுத்துவெட்டி
கட்சியில்
அதென்ன
அறியாமைவெட்டின்னு
பேசுகிறாய் தோழா?

said...

இட ஒதுக்கீடு பற்றி ம.க.இ.க. முன்வைத்த வாதங்களுக்கு முதலில் குழலி பதில் சொல்லட்டும்.

முருகேசன் கண்ணகியை எரித்துக்கொன்ற வன்னிய சாதி வெறியர்களைக் காப்பாற்றத் துடிக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இட ஒதுக்கீட்டில்தானே படித்து முன்னேறி வந்திருக்கிறார்? இப்பேர்ப்பட்ட சாதி வெறி நாய்களுக்கு இட ஒதுக்கீட்டை இரத்து செய்யச் சொல்வதுதானே சரியாகும்?

கண்டதேவியில் தேர் இழுக்கப்படாது..வன்னியன் தெருவழியே பறையன்பிணம் வரப்பிடாது...கட்டினால் வன்னியகுல சத்திரியகுலத்திலேதான் செவப்பா அழகா கட்டுவோம் (இருப்பது இங்கிலாந்தில்) எனும் சாதி வெறியுடனும், பஞ்சாயத்து தலைவரா தலித் வந்தா ஆத்தாவுக்கு ஆகாது...ரெட்டை டம்ளர் டீ க்கடை... எல்லாவும் செஞ்சுப்புட்டு இட ஒதுக்கீடு வேணும்...நாங்கள்ளாம் மிகவும் பிற்பட்டவங்க என்பதும், சாதிக்கூட்டங்களிலே போய் நாங்க பல்லவர்களின் வழித்தோன்றல்...பாண்டிய மன்னர்கள்தான் எங்களோட 56 வது கொடிவழி பாட்டனாரு...ன்னு மீசையை முறுக்கறதும்... ஆண்ட பரம்பரைதானடா...உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு...

என்னக் கேட்டால், எவன் சாதி மறுப்பு திருமணம் செய்கிறானோ, ஆதிக்க சாதி சங்கத்திலே ஒட்டாம இருக்கிறானோ அவனுக்க மட்டுமே இட ஒதுக்கீடு தரணும்...ம.க.இ.க.வும் இதத்தான் சொல்லுதுன்னு நினய்க்கேன்.

அது கிடக்கட்டும்... பெரியாரின் கொள்கையில் இட ஒதுக்கீட மட்டுமே முன்னிறுத்தி வரும் ராமதாசும், ஆனமுத்துவும் ஏன் சாதி ஒழிப்பு பத்தி பேச மாட்டக்காக?

ராமதாசின் குடும்பத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணங்கள் எத்தனை?

ஆனைமுத்துவின் கட்சி ஏன் வன்னியர் சங்கம் மாதிரியே இருக்குது?

தமிழரசனின் தனித்தமிழ் நாடு படை ஏன் வன்னியர் படையாக மட்டுமே இருக்குது?

தமிழ் தேசியம் என்பது வன்னியர் தேசியமா?

ஆண்ட பரம்பரன்னு சொல்லுர ராமதாசு ரிலயன்சு போன்ற சேட்டுகிட்ட போய் நாய் மாதிரி வாலாட்டுறப்ப ஆண்ட பரம்பரையின் குலப்பெரும கெட்டுடாதா?

இதற்கெல்லாம் குழலி எனும் ஆண்டபரம்பரைகள் பதில் சொல்ல வேண்டும்..

அன்பரசன்.....

said...

பிற தேசிய இனங்களுடனான உங்களது உறவு எப்படி இருக்கும்?(எ-கா கர்நாடகா)


ஒட்டுமொத்த இந்திய பார்ப்பனிய கட்டமைப்புக்குல் உங்கலால் ஏகாதிபத்திய பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டம் நடத்த முடியுமென்றால் எங்களால் ஏன் அதையே தமிழகத்தில் செய்ய முடியாது சாதிகலாக வர்க்கங்கலாக பிளவுபடுத்தப்பட்டிருக்கும் மக்களை இணைத்து தேசிய விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தால் அது ஏகாத்திபத்தியத்தின் பார்ப்பனியத்தின் வலிமையை ஆட்டம் கான வைப்பதாகவும் ஒடுக்கப்படும் மற்ற தேசிய இனங்கலுக்கு வழிகாட்டியாகவும் அமையும்போது ////மற்ற தேசிய இன உழைக்கும் மக்களோடு என்ன முரன்பாடு இருக்க முடியும்///

said...

இந்தியன் - இந்தியா

பார்ப்பான் - பார்ப்பனியம்

என்பவைகலை அதன் அத்துனை தளங்கலிலும் பார்ப்பனிய தேசிய புரட்சியாளர்கலாகிய நீங்கள் எவ்வாரு வேருபடுத்தி காட்டுவீர்கள்

said...

தமிழகத்தில் ஒற்றை தேசிய இனத்தில் அமைப்பு கட்டுவதற்கே 30 ஆண்டுகள் உங்கலுக்கு தேவையென்றால் இன்னும் எத்துனை ஆண்டுகள் மக்கள் அவலம் சுமந்து காத்திருக்க வேண்டும்

said...

வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் மற்ற தேசிய இனங்கலுக்காக தமிழ் தேசிய இனம் தனது போராட்டத்தை ஏன் தள்ளிபோட வேண்டும்

said...

பத்து பக்கம் ஒரு கட்டுரை எழுதினால் எட்டாவது பக்கத்தில் இரண்டு வரிகலில் பார்ப்பனியத்தை எப்படி நுழைப்பது என்பதை தெரிந்த பார்ப்பனர்கலுக்கு எதிராக இத்தனை தேசிய இன மக்களின் முண்ண்னி சாத்தியமா

said...

100 கோடி பேருடைய இந்த அமெரிக்க சந்தையை மார்க்சியவாதிகலால் முன்னெடுக்கப்படும் படிப்படியான் தேசிய இன விடுதலை போராட்டங்கள் மூலம் உடைப்பது எளிதா இல்லை ஒட்டுமொத்த போராட்டம் என்கிற போகாத ஊருக்கு வழி சொல்லும் உங்கள் வழிமுறையாலா

said...

வடகிழக்கின் தேசிய இனங்கல் வளர்ச்சி கட்ட்த்திலேயே தேசிய விடுதலை போராட்டங்கலை முன்னெடுத்துள்ளார்களே அவர்களை எப்படி உங்கள் போராட்டத்துடன் இணைத்துகொள்வீர்கள்

said...

120000 இலட்சம் ஏக்கர் பாசனப்பரப்பை 180000 இலட்சம் ஏக்கராக விரிவுபடுத்திக்கொண்ட கருனாடக சிரு குறு விவசாயிகல் என்னுடன் ஏகாத்திபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் எப்படி இணைவான்

அரசால் வழங்கப்பட்ட சிறு துண்டு நிலமும் எப்படி புரட்ச்சிகர உணர்வை மழுங்கடிக்கும் என்பதை சே வின் பொலிவிய அனுபவங்கலிலிருன்து நீங்கள் அறிந்திருக்கலாம்

said...

அருமை நன்பர் குழலியின் பதிவில் நன்பர் லக்கிலுக் கருத்துக் கூற முடியாத அளவிற்கு கண்ணீர் பொங்கி வருவதாக சொல்லி இருக்கிறார்..

அவருக்கு இன்னும் கொஞ்சம் கண்ணீர் மிச்சமிருந்தால் இவைகளுக்கும் சேர்த்து கண்ணீர் சிந்த வேண்டியிருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறேன் -

1) 70 ஆண்டுகளுக்கு மேல் இடஒதுக்கீடு அமுலில் இருக்கும் தமிழ்நாட்டில், இன்னும் பரவலாக இருந்து வரும் சேரிகளைப் பார்த்து துயரத்தில் கண்ணீர் வர வேண்டும்

2) பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டு - தான் மட்டும் தின்று கொழுத்து வரும் மரம் வெட்டி கும்பலைப் பார்த்து ஆவேசத்தில் கண்ணீர் வர வேண்டும்.

3) காவிரியின் இரு முனைகளிலும் உலகமயமாக்கல் கொடுத்த அடியில் ரணப்பட்டு போயிருக்கும் விவசாயத்தைப் பார்த்து ஆற்றாமையால் கண்ணீர் வர வேண்டும்

4) நசுங்கிப் போன விவசாயத்தால், நகரங்களுக்கு வீசியெரியப்பட்ட கிராமப்புற விவசாயத் தொழிலாளிகள் கூலிகளாய் சாலையோரங்களில் வீடின்றி
படுத்துறங்கும் நிலை கண்டு ஆத்திரத்தில் கண்ணீர் வர வேண்டும்

5) பொறுக்கித் தின்ன நடந்த பதவிப்போட்டிக்கு பலியான சன் டீ.வியின் அப்பாவி ஊழியர்களைப் பார்த்து வருத்தத்தில் கண்ணீர் வரவேண்டும்

6) எலும்புத் துண்டுக்கு அமெரிக்க சேவை செய்து வரும் கால் செண்டர், பி.பி.ஓ தொழிலாளர்கள் இரவு / பகல் என்றில்லாமல்.. தூக்கம் கெட்டு, உறவுகள் இருந்து இல்லாமல் வாழ்ந்து, உணர்ச்சிகள் மரத்துப் போய் நடமாடும் இயந்திரங்களாக மாற்றியமைக்கப் பட்டு வருவதைக் கண்டு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற கையறு நிலையால் கண்ணீர் வரவேண்டும்

நன்பர் லக்கிலுக் அவர்களே, உங்கள் கண்ணீரைக் கொஞ்சம் மிச்சம் வையுங்கள்.. இங்கேயும் நிறைய பேர் இருக்கிறார்கள்..

அருமை நன்பர் குழலி, தானொரு கருப்பு பாப்பான் என்பதை வெட்கம் கெட்டத்தனமாக நிரூபித்து வருகிறார். தோழர் மருதையனின் சாதிப்பேரைப் போட்டு குரூர திருப்தியும் சுய இன்பமும் அடைந்து கொள்கிறார். இன்று வரையில் தோழர் மருதையனின் செயல்பாட்டில் இது தான் பார்ப்பனியம் என்று எதையும் சுட்டிக் காட்டி வாதாடும் நேர்மையோ அறமோ இல்லை இவர்களிடம்.. தான் சார்ந்திருக்கும் கட்சியின் நடத்தை போன்றே வார்த்தை விபச்சாரத்தில் ஈடுபடும் கீழான நிலைக்கு போனதற்காக அவருக்காக நான் பரிதாபப் படுகிறேன்.

said...

ஸ்டாலின் குரு,

எனது கேள்விகளும் வெகு எளிமையானவையே. நீங்கள் எழுப்பியவையெல்லம் இந்திய அரை நிபி சூழலினால் விளைந்த தேசிய இன பிரச்சனைகளே.

இவற்றை தனித் தேசியமாக இருந்து எப்படி தீர்ப்பீர்கள் என்று சொல்லுங்கள்.

இதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலவில்லையே?

வெறுமே இந்தியா என்று பேசுவதே தேசிய இன உரிமையை மறுப்பது என்றும் பார்ப்ப்னியம் என்றும் திரும்ப திரும்ப சொல்கிறீர்களே ஒழிய இதனை மறுத்து தேசிய இனங்களின் கூட்டுச் சர்வாதிகாரம் குறித்தும் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தேசியங்கள் கூட்டிணைவு குறித்தும் கருத்துச் சொல்ல மறுக்கிறீர்களே?

தேசியங்கள் தனியாக இருந்துதான் வளர வேண்டும் என்பது எந்த வரலாற்றுக் கட்டத்திற்க்கான பரிணாம வளர்ச்சி?

தேசியங்கள் பலவந்தமாக இணைக்கப்பட்ட ஒரு கட்டத்தில், முதலாளித்துவம் புரட்சி செய்வது என்பது இனிமேல் கனவில் மட்டுமே சாத்தியம் என்ற ஒரு வரலாற்று கட்டத்தில் தேசியங்கள் தனியாக புரட்சி செய்யும் என்று சொல்வது எனக்கு புரியாத விசயமாக இருக்கிறது.

தேசியங்கள் கூட்டு சர்வாதிகாரம் நடத்தியதற்க்கும், பிரிந்து செல்லும் உரிமையை வெகு விமரிசையாக பயன்படுத்தியதற்க்கும் எடுத்துக்காட்டுகளாக ரஸ்யாவை காட்டியதற்க்கும் பதில் சொல்ல மறுக்கிறீர்க்ளே?

ஒரு வேளை தேசியமாக இருந்து கொண்டு தேசத்தை எப்படி காக்க முடியும் என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கீறீர்களே?

கர்நாடகவில் காவிரி பிரச்சனைக்கு இந்தியா என்ற தேசிய கூட்டு சர்வாதிகாரத்தில் தீர்வு உண்டு என்று நான் சொல்கிறேன். நீங்கள் மறுக்கிறீரக்ள் எனில் தனித் தமிழ் தேசியத்தில் என்ன தீர்வு என்று சொல்லுங்கள்?

வெறுமே குற்றம் சாட்டுவது என்றால் இன வெறியருக்கும், சமூக அக்கறை கொண்டவருக்கும் என்ன வேறுபாடு இருந்து விடப் போகீறது?

கர்நாடகாவின் தேசிய உணர்வு என்பது பார்ப்ப்னிய சாதி கட்டுமாணத்துக்கு உட்பட்டு ஏகாதிபத்திய சேவை செய்ய மக்களை ஆட்டு மந்தை கூட்டமாக பயன்படுத்தும் ஒரு விசயமே அன்றி அது எந்த வகையிலும் கர்நாடக தேசியத்தின் வளர்ச்சிகான அரசியல் முன்னெடுப்பு அல்ல என்று நான் குறிப்பிட்டிருந்த விசயம் குறித்தும் உங்களிடம் எந்த எதிர்வினையும் இல்லையே?

உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் என்று சொன்ன மார்க்ஸ் பார்ப்ப்னிய வாதியா?

நீஙக்ள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியார்களாக சில நூறு ஆண்டுகள் இந்த நிலப்பரப்பு ஒன்றிணைந்தே உள்ளது. வட கிழக்கும் மகாணங்கள், காஷ்மீர் தவிர்த்து பிற பகுதிகளில் தேசிய இன கோரிக்கை என்பது வலுவானதாக நிற்கும் வரலாற்று பின்புலம் இல்லை. இப்படி இருக்க வரலாற்றை பின்னுக்கு இழுக்கும் முயற்சியினால் என்ன சாதிகக் விரும்புகிறீர்கள் என்பது எனக்கு புரியாத காரணத்தினாலேயே நான் திரும்ப திரும்ப சில கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

நீங்களோ தேசிய இன முரன்பாடு இருப்பதை மட்டும் மீண்டும் பிரதானப்படுத்தி பேசுகிறீர்கள். இந்த முரன்பாட்டை வளர்க்கும் காலனிய சூழல் குறித்தோ, உற்பத்தி சக்திகள் வளராமல் இருப்பது, இந்திய சமூகங்களின் ஒட்டு மொத்த ஜனநாயக மின்மை இப்படி விசயங்களை மறந்து விட்டு வெறுமே பக்கத்துக்கு தேசியத்தின் மீது பலி போட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்.

தமிழ் தமிழ் என்ற தமிழின் வளர்ச்சிக்கு உணர்வுப் பூர்வமாக உழைக்க முன்வருவது சரிதான். ஆனால் யாதார்த்தத்தை உள்வாங்காமல் என்ன செய்து விட முடியும் என்று தோழர் நீங்களே சொல்லுங்கள்?

முரன்பாடின்றி இந்தியாவில் உள்ள தேசியங்களிடையே உள்ள பிரச்சனைகளை தீர்ப்பது குறித்துதான் எனது பல கட்டுரைகளும் இங்கு பேசியுள்ளன.

ஒரே தேசியமாக இருந்து ஏகாதிபத்தியத்தையும், நிலபிரபுத்துவத்தையும் எதிர்த்து விரட்டும் கூட்டணி அமைக்க முடியுமெனில், பகுதி அளவிலான தேசிய இயக்கங்கள் இதற்க்காக தமது உள் முரன்பாடுகளை பின் தள்ளி ஒன்றிணைய முடியாது என்று ஏன் சொல்கிறீர்கள்?

//எனது கேள்வி தெளிவானது தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர்கலை இந்தியனாக மாற்றி அனுப்பி உள்ளதாக கூறி உள்ளேன்
ஒடுக்கப்படும் பிற தேசிய இனங்கலின் மக்களோடு தமிழ் தேசிய பாட்டாளி வர்க்க ஐய்க்கியத்துக்கு நிகழ்ச்சி எவ்வாரு உதவியது என்பதுதான்//

தேசியங்களின் புரட்சி காலவதியாவதற்க்கு முன்பே தேசிய்ங்களின் கூட்டுக்கு அழைப்பு விடுத்து ஒட்டு மொத்த இந்திய துணை கண்டத்திற்க்கும் விடுதலை கோரிய தென்னக விடுதலை மரபை முன்னிறுத்தியதுடன் அல்லாமல். தேசியம் எனற பெயரில் முன்னிறுத்தப்படும் முரன்பாடுகள் எல்லாமே வளங்களின் மீதான ஏகாதிபத்திய நிபி சுரண்டலையே அடிப்படைப் பிரச்சனையாக கொண்டிருப்பதையும் அம்பலப்படுத்தி, இந்தியா என்ற கூட்டிணைவின் கீழ் ஏகாதி, நிபி எதிர்ப்பு பொது நோக்கத்தின் கீழ் போராட வேண்டிய தேவையை முன்னிறுத்தியது தமிழ் மக்கள் இசை விழா. இது எந்த வகையில் நீங்கள் குறிப்பிட்ட விசயத்தை நிவர்த்தி செய்யவில்லை என்று நீங்களே சொல்லுங்கள்.

எனக்கு ஒரு விசயம்தான் புரியவில்லை. இந்தியாவில் தேசியம் என்ற பெயரில் நடைபெறும் முரன்பாடுகள் உண்மையில் தேசியத்தின் நலனுக்கானதாக இருக்கீறதா அல்லது வேறு ஏதேனுமா?
எ-கா: காவிரி பிரச்சனை.

தேசியம் என்பது அதன் முழு முதல் வடிவை இந்தியாவில் எங்காவது எடுத்துள்ளதா?

தேசியம் என்ற கோரிக்கை சில குறிப்பான விதிவிலக்குகள் தவிர்த்து யாருடைய அரசியல் ஆயுதமாக இந்தியாவில் உள்ளது?

இதற்க்கு நீங்கள் சொல்லும் பதில்தான் பிரச்சனைகள் குறித்த உங்களது புரிதல் மட்டம் என்ன என்பதனை தெரியப்படுத்துவதுடன், தீர்வு என்று நீங்கள் சொல்லும் விசயத்தின் சாத்தியப்பாடு குறித்தும் புரிந்து கொள்ள உதவும்.

அசுரன்

said...

தோழர் அசுரன்,
எந்தவித ஆதார அடிப்படையும் இல்லாமல் எழுதும் ஊரறிஞ்ச அயோக்கிய(ர்) மாலடிமையின் மரவெட்டி கும்பல், புரளி புலிகளின் உப்புச்சப்பில்லாத பிரச்சனைக்கிடையில் நண்பர் திரு.ஸ்டாலின் குருவோடு நீங்கள் செய்யும் விவாதம்தான் அருமையாக இருக்கிறது., புரட்சிகர வாழ்த்துக்கள்..

ஸ்டாலின்

said...

அன்பரசன் ம க இகவின் நிலைப்பாடு வெகு சுலபமானது - பிற்படுத்தப்பட்டோ ர் என்ற லிஸ்டில் உள்ள சாதிகளை சரியாக வகைப்படுத்தச் சொல்கிறது.

ஏனேனில் உண்மையிலேயே பார்ப்ப்னியத்தை நேரடியாக செயல்படுத்தி அதிகாரத்தில் இருந்த நிலபிரபுத்துவ ஆதிக்க சாதிகள் அனைத்தும் பிற்படுத்தப்பட்டவர் என்ற பெயரில் சலுகை அனுபவித்துக் கொண்டே தமது அதிகாரங்களை இன்றும் தொடர்வதை எதிர்த்தே ம க இகவின் அந்த கோரிக்கை.

மற்றபடி பிற்படுத்தப்பட்டவர் என்ற பிரிவில் வரும் ஒடுக்கப்பட்ட சேவை சாதியினர் உள்ளிட்டவர்களுக்கு இடஓதுக்கீடு போவதை ம க இக எதிர்ப்பதாக தெரியவில்லை.

இதனை ஒட்டி வந்த ஒரு தலையங்கத்தில் கூட இந்த அம்சத்தை வலியுறுத்தி சொன்னது புதிய ஜனநாயகம் பத்திரிக்கை.

இந்த அம்சத்தை மண்டல் கமிசன் அறிக்கையிலிருந்து எடுத்தாளப்பட்ட பல்வேறு ஆதரங்களுடனேயே முன் வைத்தது ம க இக.

அது குறித்து இன்னைய தேதி வரை எந்தவொரு தர்க்க ரீதியான வாதஙக்ளும் வைக்கும் திராணியில்லாதவர்கள். ம க இகவின் நிலைப்பாட்டை வெகு சுலபமாக பிற்படுத்தப்பாட்டோ ர் எல்லாருக்கும் இடஓதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று ம க இக சொல்வதாக திரிக்கீறார்கள்.

நல்ல நேர்மை.

அசுரன்

said...

எனது கேள்விகள் எங்கே போனது தோழா

வெறும் பதிலகளை மட்டும் இட்டு நிரப்பியிருக்கிறீர்கள்

படிப்பவர்கள் மன்டையை உடைத்து கொள்ளபோகிறார்கள்

பெருந்தன்மையோடு கேள்விகலயும் இணைத்திருக்கலாமே

தோழர் தியாகு என்ன சொல்ல வருகிறீர்கள் ஒரு மன்னும் விளங்கயில்லை

said...

தோழர் ஸ்டாலின்குரு,

தமிழ்மணத்தில் 40 பின்னூட்டம்தான் அனுமதி அதற்க்கு மேல் எனில் முகப்பில் வரும் வாய்ப்பு இல்லை.

நம்மிடையே விவாதம் நடப்பது என்பது பரஸ்பர புரிதலுக்கானது,

ஆனால் புரளிகளை கிளப்பி தரகு வரக்க தலைவர்களின் ரசிகர்கள் பதிவுகள் எழுதி வரும் போது அவர்களுக்கெதிரான முன்னெடுப்பே இப்போதையெ அவசியத் தேவை என்று கருதியே உங்களது சில பல பின்னூட்ட விவரங்களை பிரசூரிக்காமல் அதில் சாரமாக உள்ள விசயங்களை எதிர்வினை செய்துள்ளேன்.

புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இது நம்மிடையேயான் விவாதத்தின் மையமான விசயம் அனைவர் பார்வைக்கும் செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தும் என்ப்தாலேயே

அசுரன்

said...

40 பின்னூட்டங்களை ஏற்கனவே கடந்து விட்டபடியால் நிறுத்தி வைத்திருந்த பின்னூட்டங்கள் அனைத்தும் பிரசூரிக்கப்பட்டுவிட்டன

said...

அசுரன் 40 பின்னூட்டங்கள் கடந்தாலும் தமிழ்மணம் முகப்பிலே வரும். நீங்கள் 40+ என்பதை அல்லது அனைத்தும் என்பதை அழுத்தவேண்டும்

said...

சில கேள்விகளை எழுப்பிவிட்டு விவாதத்தை தத்துவார்த்த தளத்துக்கு எடுத்து செல்லலாம் என்று நினைகிறேன்

த்ல வீரப்பன் இருக்கும்வரை அவர் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் தேசிய இன சொத்தான காடுகலில் 15% சதவிகிதம் இன்று கன்னட பகுதிகலில் இருந்து வருப்வர்களால் அழிக்கப்பட்டுவிட்டதே இதை பற்றி என்ன கருதுகிறீர்கள் நீலகிரி வனப்பகுதிகலில் கேரள வனக்கொள்ளையர்களால் காடுகள் சூறையாடப்படுவதர்க்கு உங்கள் எதிர்வினை என்ன

தமிழின அடையாளத்தை சுமந்த ஒரே குற்றத்துக்காக சிங்கள வெறிநாய்கலால் கடலில் காவு கொடுக்கப்பட்ட மீனவ தமிழ் உயிர்கலும் அவர்கள் உறவுகலின் ஓலமும் உங்கல் செவிகலை அடைவதே இல்லையா

இத்துனை வெறியாட்டம் போடும் கன்னட இனவெறி கும்பலுக்கு ஒளியூட்டிக்கொண்டிருப்பது எனது நெய்வேலி நிலம்தானே இந்திய தகவல் தொழில்நுட்ப குடிசையின், த்ரகு பொருளாத்தாரத்தின் ஆனி வேரை அசைக்கும் போராட்ட வழிமுறை எது

ஏகாதிபத்தியம் பார்ப்பனியத்தோடு மூன்றாவதாக சக தேசிய இனங்கலின் வெறியால் ஒப்பீட்டளவில் நேரடி தாக்கத்தை உணர்வதும் பாதிக்கப்படுவதும் தமிழக விவசாயிகள்தானே அதிகம் இன்னும் எத்துனை காலத்துக்கு இதை பொருத்துக்கொன்டிருக்க வேண்டும்

பிற தேசிய இனத்தை சேர்ந்தவர்கலின் பெருமெடுப்பிலான தமிழக குடியேற்றஙலையும் உள்ளக அரசியலை அவர்கல் தீர்மானிபதை பற்றி என்ன கருதுகிறீர்கல்

கேரள தேயிலை தோட்டங்கலில் ஈழ மலயகத்தை விட மோசமான நிலையில் ஒடுக்கப்பட்ட தளத்தை சேர்ந்த தமிழர்கள் சுரன்டப்படுவதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா

இந்திய தேசியத்தின் சவளைபிள்ளைகளாக தமிழர்கள் இழிவு செய்யப்படுவதர்க்கும் சுரன்டப்படுவதர்க்கும் மற்ற தேசிய பாட்டாளி வர்க்க அமைப்புகலிடமிருந்து எதிர்வினை என்ன, முல்லை பெரியாரு, காவிரி ......

இந்திய புரட்சிக்காக சில காலம் ( அதயும் எத்துனை காலம் என்று நீங்கள் சொல்ல போவதில்லை) இத்தனை இழப்புகளோடும் சமரசம் செய்ய தமிழர்கல் முன்வரவேன்டுனென்றால்
போராட்ட நீட்சிக்காகவும் அமெரிக்காவின் நேரடி ஒடுக்குமுறயின் கீழ் தமிழ் மக்கள் பலியிடப்படக் கூடாது என்பதர்க்கான புலிகலின் சில விட்டுக்கொடுப்புகல் மீது நீஙள் இந்த அளவு பாய வேன்டிய தேவை என்ன

உச்சிமுடி நட்டுக்கொன்டு நிற்க்கும் அளவுக்கு தமிழ் தேசியம் பேசும் ஆதிக்க ஜாதிகலின் வர்க்க குனத்தை பற்றிய புரிதலும் எதிர்ப்புணர்வும் கொன்டவன்தான் நானும் என்கிற கன்ணோட்டத்தோடு எனக்கு பதில் தருதல் நலம்

said...

சில கேள்விகளை எழுப்பிவிட்டு விவாதத்தை தத்துவார்த்த தளத்துக்கு எடுத்து செல்லலாம் என்று நினைகிறேன்

த்ல வீரப்பன் இருக்கும்வரை அவர் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் தேசிய இன சொத்தான காடுகலில் 15% சதவிகிதம் இன்று கன்னட பகுதிகலில் இருந்து வருப்வர்களால் அழிக்கப்பட்டுவிட்டதே இதை பற்றி என்ன கருதுகிறீர்கள் நீலகிரி வனப்பகுதிகலில் கேரள வனக்கொள்ளையர்களால் காடுகள் சூறையாடப்படுவதர்க்கு உங்கள் எதிர்வினை என்ன

தமிழின அடையாளத்தை சுமந்த ஒரே குற்றத்துக்காக சிங்கள வெறிநாய்கலால் கடலில் காவு கொடுக்கப்பட்ட மீனவ தமிழ் உயிர்கலும் அவர்கள் உறவுகலின் ஓலமும் உங்கல் செவிகலை அடைவதே இல்லையா

இத்துனை வெறியாட்டம் போடும் கன்னட இனவெறி கும்பலுக்கு ஒளியூட்டிக்கொண்டிருப்பது எனது நெய்வேலி நிலம்தானே இந்திய தகவல் தொழில்நுட்ப குடிசையின், த்ரகு பொருளாத்தாரத்தின் ஆனி வேரை அசைக்கும் போராட்ட வழிமுறை எது

ஏகாதிபத்தியம் பார்ப்பனியத்தோடு மூன்றாவதாக சக தேசிய இனங்கலின் வெறியால் ஒப்பீட்டளவில் நேரடி தாக்கத்தை உணர்வதும் பாதிக்கப்படுவதும் தமிழக விவசாயிகள்தானே அதிகம் இன்னும் எத்துனை காலத்துக்கு இதை பொருத்துக்கொன்டிருக்க வேண்டும்

பிற தேசிய இனத்தை சேர்ந்தவர்கலின் பெருமெடுப்பிலான தமிழ குடியேற்றஙலையும் உள்ளக அரசியலை அவர்கல் தீர்மானிபதை பற்றி என்ன கருதுகிறீர்கல்

கேரள தேயிலை தோட்டங்கலில் ஈழ மலயகத்தை விட மோசமான நிலையில் ஒடுக்கப்பட்ட தளத்தை சேர்ந்த தமிழர்கள் சுரன்டப்படுவதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா

இந்திய தேசியத்தின் சவளைபிள்ளைகளாக தமிழர்கள் இழிவு செய்யப்படுவதர்க்கும் சுரன்டப்படுவதர்க்கும் மற்ற தேசிய பாட்டாளி வர்க்க அமைப்புகலிடமிருந்து எதிர்வினை என்ன, முல்லை பெரியாரு, காவிரி ......


இந்திய புரட்சிக்காக சில காலம் ( அதயும் எத்துனை காலம் என்று நீங்கள் சொல்ல போவதில்லை) இத்தனை இழப்புகளோடும் சமரசம் செய்ய தமிழர்கல் முன்வரவேன்டுனென்றால்

போராட்ட நீட்சிக்காகவும் அமெரிக்காவின் நேரடி ஒடுக்குமுறயின் கீழ் தமிழ் மக்கள் பலியிடப்படக் கூடாது என்பதர்க்கான புலிகலின் சில விட்டுக்கொடுப்புகல் மீது நீஙள் இந்த அளவு பாய வேன்டிய தேவை என்ன

உச்சிமுடி நட்டுக்கொன்டு நிற்க்கும் அளவுக்கு தமிழ் தேசியம் பேசும் ஆதிக்க ஜாதிகலின் வர்க்க குனத்தை பற்றிய புரிதலும் எதிர்ப்புணர்வும் கொன்டவன்தான் நானும் என்கிற கன்ணோட்டத்தோடு எனக்கு பதில் தருதல் நலம்

ஒட்டு மொத்த இலங்கை புரட்சி என்றால் மட்டும் புஷ் அண்ணன் கையை கட்டிகொண்டு வேடிகை பார்ப்பார இல்லை, நிஜமாகவே ஐயம்தான்

இரண்டுமுறை பதிவு வந்திருந்தால் ஒன்றை அழித்து விடுங்கள்

ஸ்டாலின்குரு

said...

தோழர் ஸ்டாலின் குரு மீண்டும் சில விசயங்களை உள்வாங்கவே மறுக்கிறீர்கள்.

இந்தியாவிலோ அல்லது வேறு எந்த காலனிய நாட்டிலோ தேசிய இனப் பிரச்சனை இருப்பதை எங்குமே நான் மறுக்கவில்லை. ஆனால் இதற்க்கு தனித் தேசியம் எந்த வகையில் தீர்வு எனப்தைத்தான் எனது கேள்விகள் முன்னிறுத்துகின்றன.

அவற்றை கொஞ்சம் பரிசீலியுங்களேன். அதை விடுத்து தேசிய இனப் பிரச்சனைகளை பட்டியலிடுவது எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

கன்னட வெறிக் கும்பல் தேசிய இன உரிமைக்கான கும்பலா என்பது எனது கேள்வி அதற்க்கு உங்களிடம் எதிர்வினை இல்லை.

பதிலையும் நானே சொல்லியுள்ளேன். அது ஒரு நிலபிரபுத்துவ கும்பல் என்று. அதை வலியுறுத்தும் சில விசயங்களையும் சொல்லியுள்ளேன். இதற்க்கும் உங்களிடமிருந்து எதிர்வினை இல்லை.

ஒரு நிலபிரபுத்துவ கும்ப்லை தேசிய கும்பல் என்று சொல்லி தமிழக மக்களை அணி திரட்டி என்ன சாதித்து விடமுடியும். எதிரியையே சரியாக வரையறுக்காத ஒரு போராட்டம் உண்மையில் யாருக்கெதிராக் கடைசியில் முடியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். இங்கு கடவுள் எல்லாவல்ல தரகு- ஏகாதிபத்திய கும்பல்தான்.


//இந்திய தகவல் தொழில்நுட்ப குடிசையின், த்ரகு பொருளாத்தாரத்தின் ஆனி வேரை அசைக்கும் போராட்ட வழிமுறை எது
//

புதிய ஜனநாயகப் போராட்டம் எதுவோ அதுதான் தீர்வு. விவசாயிகளை அணி திரட்டி தொழிலாளி வர்க்கம் நடத்தும் போராட்டமே அது. பிற அனைத்து ஜனநாயக சக்திகளையும் சேர்த்து செய்யப்படும் போராட்டமே அது.



//பிற தேசிய இனத்தை சேர்ந்தவர்கலின் பெருமெடுப்பிலான தமிழ குடியேற்றஙலையும் உள்ளக அரசியலை அவர்கல் தீர்மானிபதை பற்றி என்ன கருதுகிறீர்கல்

கேரள தேயிலை தோட்டங்கலில் ஈழ மலயகத்தை விட மோசமான நிலையில் ஒடுக்கப்பட்ட தளத்தை சேர்ந்த தமிழர்கள் சுரன்டப்படுவதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா //

கேரளத்தில் சுரண்டப்படும் தமிழருக்கு வருந்தும் உங்கள் உள்ளம். இதே போல, இதை விட கோடுரமாக தமிழகத்தில் தமிழரை சுரண்டும் தமிழ் தேசிய முதலாளிகளூக்காக வருந்துமா?

இந்த சுரண்டலை தீர்மாணிப்பதில் தேசியம் பிரதான பாத்திரமாற்றுகீறதா அல்லது வர்க்கம்-சாதியா?



//இந்திய தேசியத்தின் சவளைபிள்ளைகளாக தமிழர்கள் இழிவு செய்யப்படுவதர்க்கும் சுரன்டப்படுவதர்க்கும் மற்ற தேசிய பாட்டாளி வர்க்க அமைப்புகலிடமிருந்து எதிர்வினை என்ன, முல்லை பெரியாரு, காவிரி ...... //


சவளைப் பிள்ளை தமிழகம்தான் இந்தியாவிலேயே முதலாளித்துவம் அதிகம் வளர்ந்த மாநிலம்....

நகர்மயமாக்கம் அதிகம் நிகழ்ந்த மாநிலம். அதாவது தேசியம் பேசும் தேசிய முதலாளிகளின் இந்திய சமஸ்தானம் தமிழகமே.

இந்திய தேசியம் என்ற கூட்டிணைவின் அத்தனை வசதிகளையும், பிற எந்த மாநிலத்தையும் விட தமிழகம் அதிகப்படியாக்வே அனுபவித்துள்ளது. இதற்க்கு தமிழகத்தின் வரலாற்று பின்புலம் ஒரு காரணியாக இருந்தால் கூட, திராவிட கட்சிகளின் வலுவும், மாநில கட்சிகளின் வலுவும் பிரதான காரணீயாக இருக்கின்றன.

இவற்றையெல்லாம் மறந்துவிட்டால் இப்படிப் பேசலாம்.


//போராட்ட நீட்சிக்காகவும் அமெரிக்காவின் நேரடி ஒடுக்குமுறயின் கீழ் தமிழ் மக்கள் பலியிடப்படக் கூடாது என்பதர்க்கான புலிகலின் சில விட்டுக்கொடுப்புகல் மீது நீஙள் இந்த அளவு பாய வேன்டிய தேவை என்ன //

எது விட்டுக் கொடுப்பு? விட்டால் அமெரிக்கா, சிங்கள் இன வெறிக்கு எதிராக இருக்கீறது என்று சொல்வீர்கள் போல.

பாகிஸ்தானுக்கு, இந்தியாவுக்கும் இடையில் அமெரிக்காவின் பாத்திரம் என்னவோ அதுதான் சிங்கள் அரசிற்க்கும் புலிகளுக்கும் இடையில் இருப்பது.

என்ன ஒரேயொரு வித்தியாசம் புலிகள் இன்னும் இந்திய அரசு அளவுக்கோ அல்லது பாகிஸ்தான் அளவுக்கு சோரம் போகவில்லை. அல்லது அதற்க்கான ஧நேரடி வாய்ப்புகள் இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.

அமெரிக்காவின் நேரடி ஒடுக்குமுறை இலங்கையில் இல்லை என்கிறீர்களா? ஒரு வேளை புலிப் பகுதியில் பெரிய அளவில் இல்லாமலிருக்கலாம். அது யுத்த பூமியாக இருப்பதால்.

மற்றபடி அந்த பகுதிகளுக்கும் தமது சுரண்டலை விரிவுபடுத்துவதே அமெரிக்க அண்ணன்மார்களின் நோக்கம்.

யுத்தம் தமது வியாபார நலன்களுக்கு விரோதமாக இருப்பதாலேயே சமாதான பேச்சு வார்த்தைக்கு ஏகாதிபத்தியங்கள் இத்தனை முன்னெடுப்பு செய்கிறார்கள்.

விட்டுக் கொடுப்பது குறித்த உங்களது கருத்திலிருந்து தெரிய வருவது என்னவென்றால் சிங்கள் இன வெறி அரசு வலுவில்லாத அரசாக இருப்பதாலேயே அதனை எதிர்க்க துணிகிறார்கள் புலிகள். மாறாக அமெரிக்கா போன்ற வலுவான ஆள் வந்தால் சமரசம் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா?

சில கேள்விகள்,

சிங்கள் இன வெறி அரசு சிங்களர்களுக்கு நேர்மையாக இருக்கீறதா?

சிங்கள் இன வெறி அரசு சிங்கள் தேசிய இனத்தின் உண்மையான வளர்ச்சிக்கோ அல்லது உரிமைக்காகவோ செயல்படுகீறதா?

அது ஒரு பௌத்த பார்ப்ப்னியமாக இருக்கீற்தா இல்லையா?


//போராட்ட நீட்சிக்காகவும் //


போராட்ட நீட்சி என்றால் எத்தனை நாள்? தனி தமிழ் ஈழம் சாத்தியமா?

தனி தமிழிழம் வந்துவிட்டால் ஈழத்தின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா?

இன வெறி ஒடுக்குமுறை இருக்காது, மாறாக சாதிய, மத, ஏகாதிபத்திய ஒடுக்குமுறை சுரண்டல் இருக்குமா இருக்காதா?

இதனை எதிர்த்து புலிகளின் நீண்ட கால திட்டம் என்ன?

இவை எது பற்றியும் அவர்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லையென்பதாலேயே அவர்களின் சுய அழிவுப் பாதையை விமர்சிக்கிறோம்.

புலிகளை விமர்சித்தாலே ஈழத்தமிழர்களுக்கு விரோதியாக சித்தரிக்கும் பாசிச தந்திரம் இங்கும் அரங்கேறுவதில் எனக்கு வியப்பொன்றூமில்லை.

ஆனால் இதே புலிகளின் மீதான் ஒவ்வொரு அடக்குமுறையின் போதும், அது தேசியத்தின் மீதான அடக்குமுறையாக இருக்கின்ற பட்சத்தில் குரல் எழுப்பியுள்ளது ம க இக என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

புலிகளை விமர்சிப்பதும், தற்போதைய செயல் தந்திரத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவதும் ஈழத்திற்க்கான தியாகங்களையெல்லாம் குறைத்து மதிப்பிடுவதோ அல்லது அவற்றை அவமதிப்பதாகவோ கருதப்படுவது எனக்கு விந்தையாக இருக்கிறது. தீலிபனின் உண்ணாவிரதமும், தியாகமும் ஊட்டிய சுயமரியாதை உணர்வுக்கு ஈடு சொல்ல ஒரு உதாரணம் இன்றளவும் என்னால் சொல்ல இயலவில்லை.

இந்தியாவில் போலி சுதந்திரம் என்று நாம் சொல்வதன் அர்த்தம் 1947க்கு முன்பு போராடிய அத்தனை பேரையும் இழிவுபடுத்துவதாக அர்த்தம் கொள்வதற்க்கல்ல. மாறாக அவர்களின் தியாகங்களீன் மீது ஆதிக்க சக்திகள் சவாரி செய்வது கண்டு பொங்கியெழு என்று உணர்வூட்டவே பயன்படுகிறது.

அதே போலத்தான் நேற்றைய, இன்றைய ஈழப் போராளிகளின் தியாகங்கள் ஈழத்தை எங்கு கொண்டு செலகீறது என்ற கடினமான உண்மையை பாருங்கள் என்கிறோம். அதை பரிசிலித்து கூட பார்க்காமல் ஈழ விரோதி என்று பட்டம் கட்டுவதையே சிலர் செய்கிறார்கள்(தோழர் நான் உங்களை இங்கு குறிப்பிடவில்லை)

இன்று இலங்கையில் என்ன நடக்கிறது? அந்த பக்கம் புலிகளின் பெயரில் தனது பாசிசத்தையும், ஏகாதிபத்திய சேவையையும் கேள்வி முறையின்றி செயல்படுத்தி வருகீறது லங்கா இன வெறி அரசு.

இந்த பக்கம் புலிகளும் கூட சிங்கள அரசின் பெயரைச் சொல்லி ஏகாதிபத்தியத்திற்க்கு சேவை செய்து வருகின்றனர். இதன் அர்த்தம் சிங்கள் இன வெறி அர்சும், புலிகளும் ஒன்று என்பது அல்ல. மாறாக கூடிய விரைவில் அப்படியொரு வித்தியாசமற்ற நிலைக்கு புலிகள் வள்ர்ந்து செல்வர் எனப்தனை குறிக்கும் முகமாகவே சொல்கிறேன்.

ஆக மொத்தத்தில் ஈழத்தமிழர்களில் ஒரு பெரும் பிரிவினர், புலிகளின் ஆதரவாளர்கள் தவிர்த்து உலகில் எங்குமே புலிகள் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான இயக்கமாக இன்று பார்க்கப்படவில்லை. ஏற்றுக் கொள்ள கடினமானதாக இருந்தாலும் இதுதான் உண்மை.

எங்கு தோல்வி நிகழந்தது?

ஒரு தனியொரு தேசத்தின் விடுதலை என்பது அந்த தேசத்தின் மக்களை மட்டும் நம்பி ஏற்ப்பட்டுவிடுமா என்றால் ஆம் ஒரு 200 வருடத்துக்கு முன்பு சாத்தியம். இன்று ஏகாதிபத்திய காலகட்டத்தில் சாத்தியமில்லை. உலக ஜனநாயக சக்திகளின் ஆதரவு இன்றி ஒரு தனியொரு தேசத்தின் விடுதலை சாத்தியமில்லை. அப்படி ஒரு உலக ஆதரவை பெற புலிகளீன் செயல்பாடு திட்டம் எனன்வாக உள்ளது? அப்படி உலக சக்திகளை அணி திரட்ட பொது நலனாக முன்னிறுத்த புலிகள் எதனை கொண்டுள்ளன்ர்? தேசியமா?

தமது ஆதரவு சக்திகள் என்று புலிகள் யாரைத்தான் வரையறுத்துள்ளனர்?

வெறுமே ஈழத்தின் விடுதலை விடுதலை என்ற பெயரில் இன்னும் இன்னும் தனி தனிழிழத்திற்க்காக எத்தனை லட்சம் உயிர்கள் பலியிடப் பட காத்திருக்கின்றன. (மக்கள் யுத்தத்தை இங்கு ஒப்பிட காத்திருக்கும் திர்புவாதிகளே, அதனையும் சுய அழிவுப் பாதை என்றே விமர்சிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்).

உலகத்தின் இயக்கத்தில் ஒரு சிறு பகுதிதான் ஈழம் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் தோழர்.

அதனது இயக்கத்தை தனித்து ஆய்வு செய்து அதனது பிரச்சனைக்கு மட்டும் தனித்து தீர்வு சொல்வது இயலாத கற்பனை தீர்வாகவே இருக்கும்.

தேசியம் என்பதன் வரலாற்று கட்டம் என்னவென்பதையும். அப்படி ஒரு கோரிக்கையின் அடிப்படை சமூக அமைப்பு என்னவாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டால். தேசியம் என்ற பெயரில் எழுப்பப்படும் கோரிகைகைகள் எல்லாம் தேசிய கோரிக்கை என்ற புரிந்து கொள்வதில் உள்ள தவறை உணர்வீர்கள். தேசிய முகமூடி அணிந்து வலம் வரும் நிபி, ஏகா, தரகு கும்பலை புரிந்து கொள்வீர்கள்.

ஈழ அரசியல் என்பது நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது சிங்கள் இன வெறியும், தமிழர்களின் உரிமையும் மட்டும் சமபந்தப்பட்ட விசயமில்லை.

இந்த இரண்டையும் மட்டுமே வைத்து பரிசீலிப்பேன் என்றால் அது எப்படி சரியாக இருக்கும் என்று நீங்களே சொல்லுங்கள்.



//ஒட்டு மொத்த இலங்கை புரட்சி என்றால் மட்டும் புஷ் அண்ணன் கையை கட்டிகொண்டு வேடிகை பார்ப்பார இல்லை, நிஜமாகவே ஐயம்தான்//


வேடிக்கை பார்க்க மாட்டார். தனி ஈழத்திற்க்கு மட்டும் புரட்சி என்றால் மட்டும் அண்ணன் புஷ் வேடிக்கை பார்ப்பார? சொல்லுங்கள்.(புரட்சி என்பது சமூக மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல. புலிகள் ஆட்சிக்கு வந்தால் அது புரட்சி அல்ல. சமூக மாற்றம் கோரும் அடிப்படை பொருளாதார மாற்றம் கொண்டு வந்தால்தான் அது புரட்சி. அப்படி ஒரு சாத்தியமான புரட்சி என்பது ஏகா சுரண்டலை விரட்டுவது மட்டுமே. அதனை புலிகள் தற்போதைய தங்களது ஆட்சிப் பகுதியில் செய்து பார்க்கட்டும் பிறகு அமெரிக்க அண்ணான் எப்படிப்பட்டவன் என்பது தெரிய வரும்).

தமிழர்கள் செத்து மடிவதை தவிர்க்க அமெரிக்காவுடன் கைகலந்த புலிகளுக்கு ஏன இதே காரணத்திற்க்காக சிங்கள் உழைக்கும் மக்களுடன் கை கலக்க முடிவதில்லை. அதுவும் கூட தமிழர்க்ள் செத்து மடிவதை தடுக்கவே செய்யும். என்ன இதை செய்வத்ற்க்கும்('ம்' அழுத்தம்) நீண்ட கால போராட்டம் தேவைப்படும்.

27 வருட ஈழப் போராட்டம் இன்று சாதித்துள்ளதைக் காட்டிலும் ஈழ, சிங்கள் உழைக்கும் மக்கள் கூட்டணீக்கான முயற்சி சிறிது அதிகமாகவே சாதித்திருக்க்க வாய்ப்பிருந்தது. துரதிருஷ்டவசமாக ஈழத்தின் ஒரே பிரதிநிதியாக தம்மை முன்னெடுத்துக் கொள்ள பிற ஜனநாயக சக்திகள் அனைத்தையும் அழித்து நிர்மூலமாக்கினர் புலிகள்.

இவையெல்லம் பேசப்படக்கூடாது ரகசிய்ங்கள் ஏனேனில் இவற்றை இன்று பேசினால் அது ஈழத் தமிழர்களுக்கு எதிரானதாக முத்திரைக் குத்தப்படும்.

எனக்கு இப்பொழுது ஒரு சந்தேகம் வருகிறது. ஈழத் தமிழர்க்ள் என்பவர்கள் புலிகள் மட்டும்தானா?



//உச்சிமுடி நட்டுக்கொன்டு நிற்க்கும் அளவுக்கு தமிழ் தேசியம் பேசும் ஆதிக்க ஜாதிகலின் வர்க்க குனத்தை பற்றிய புரிதலும் எதிர்ப்புணர்வும் கொன்டவன்தான் நானும் என்கிற கன்ணோட்டத்தோடு எனக்கு பதில் தருதல் நலம் //

அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை தோழரே :-))

இதை உங்களுடனான எனது எதிர்வினைக்கும், புரளி பேசிய தரகு வர்க்க ரசிகர்களுக்கான எனது எதிர்வினைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.


அசுரன்

said...

தேசியம் குறித்த பார்வை. சில மாற்றுக் கருத்துக்கள் உள்ள போதும். இந்த கட்டுரை தேசியம் அரசியலில் உள்ள சில அடிப்படை சிக்கல்களை வெளிக் கொணருகிறது.

தமிழ் தேசியம் : ஒரு வறட்டு (தேசிய)வாதம்:
http://blog.tamilsasi.com/2007/07/tamil-nationalism-in-tamil-nadu.html

said...

/அசுரன் 40 பின்னூட்டங்கள் கடந்தாலும் தமிழ்மணம் முகப்பிலே வரும். நீங்கள் 40+ என்பதை அல்லது அனைத்தும் என்பதை அழுத்தவேண்டும்//

நன்றி பெயரிலி,

ஆனால் முகப்பில் வருவதில்லையில்லையா? முகப்பில் வருவதுதான் அதிகமான பார்வையாளர்களை சென்றடைகிறது என்பதாலும், இந்த பதிவு ஒரு மிக முக்கியமான விசயத்தை விவாதம் செய்கிறது என்பதாலும் அப்படி நடந்து கொள்ள வேண்டியதாகியது.

அசுரன்

said...

தனி தேசியம் என்று கூறவில்லை, தனி தேசியங்களில்தான் தீர்வு என்று கூறுகிறேன்,

இந்தியாவில் வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகலில் இருக்கும், உற்பத்தி முறைகலில் பாரிய வேறுபாடுகள் கொண்டுள்ள தேசிய் இனங்கலின்(முறையாக தேசிய இனங்கலை இனம் காண்பது கூட சாத்தியமற்ற நிலையிலிருப்பது யதார்த்தம்) ஒட்டுமொத்த போராட்டம் என்கிற வழிமுறை மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு என்கிற நிலையில்

ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தை அடைந்துள்ள தேசிய இனங்கலின் படிப்படியான போராட்டம் என்கிற வழிமுறைதானே சாத்தியமாக இருக்கும் ?

நான் பட்டியலிட்டுள்ள இழப்புககலை வெரும் தேசிய இன பிரச்சினை என்ற ஒற்றை வார்த்தைக்குல் சிறை வைப்பது எப்படி தோழா

நெய்வெலியை பற்றி நான் கூறியது வேறு அர்த்தத்தில், தமிழ் தேசிய உடைமையாக்குவதன் மூலம் தரகு பொருளாதாரத்தை சீர்குலைப்பதை கன்னட இனவெறி நிலபிரபுத்துவ கும்பலுக்கு பாடம் கற்பிக்கும் வழிமுறை பற்றி

தமிழ் தேசிய முதலாலித்துவம் வளர்ந்துள்ளதா ?

கருணானிதி அன்டு ஃபேமிலி,ஜெயா & கோ ராமதாஸ் &கோ மற்றும் ...... சில கம்பெனிகல் தவிர்த்து சில தமிழ் தேசிய முதலாலிகலின் பெயர்கலை தந்தால் எனக்கு வாதாடுதல் எளிது

சிங்கள அரசுக்கு சுய வழு என்ற ஒன்றே கிடையாது அமெரிக்கா முதல் பேச்சுவார்த்தை நாடகமாடும் நார்வே வரை செய்யும் உதவிகலால்தான் அது நிலைத்திருக்கிறது சிங்கள இனவெறீ அரச எதிர்ப்பு என்பதே அமெரிக்க எதிர்ப்புதான்

ஸ்டாலின் குரு

said...

27 வருட ஈழப் போராட்டம் இன்று சாதித்துள்ளதைக் காட்டிலும் ஈழ, சிங்கள் உழைக்கும் மக்கள் கூட்டணீக்கான முயற்சி சிறிது அதிகமாகவே சாதித்திருக்க்க வாய்ப்பிருந்தது.

இது எப்படி என்று விரிவாக கூறுங்கள்

ஸ்டாலின் குரு

said...

அது யாரு அது கட்டபொம்மன் அண்ணாச்சியோ

புலிகல் விமான தாக்குதலை புஷ்யிடம் கேட்டுக்கொன்டு நடத்தினார்களாம் என்னா கண்டுபிடிப்பு என்னா கண்டுபிடிப்பு புல்லரிக்குது போங்க

ஆயிரம் அமெரிக்க மரைன்கள் வந்திறங்கியிருக்கிறார்கல் திரிகோணமலையில்

தம்பியிடம் அனுமதி பெற்றுத்தான் வந்திருக்கிறாற்கலோ

பயிற்சி கொடுக்க ஆயிரம் பேர் ??????????

என்ன இழவு இது என்று உங்கலுக்கு விளங்கினால் எங்கலுக்கும் புரியும்படி வந்து விளக்கிவிட்டு போங்கள்

ஆயிரம் விமர்சனங்கல் இருந்தாலும் புலிகலின் விமான தாக்குதல் ஒட்டுமொத்த தமிழர்கலுக்கும் ஏற்ப்படுத்திய உணர்வெழுச்சி எனக்கும் உண்டு

இது போன்ற கீழ்தரமான குற்றச்சாடுகளை மீன்டும் வைக்காதீர்கள்

நாகரிகமாக அரசியல் தளத்தில் விவாதிக்க முயற்சியுங்கள்

ஸ்டாலின் குரு

said...

//27 வருட ஈழப் போராட்டம் இன்று சாதித்துள்ளதைக் காட்டிலும் ஈழ, சிங்கள் உழைக்கும் மக்கள் கூட்டணீக்கான முயற்சி சிறிது அதிகமாகவே சாதித்திருக்க்க வாய்ப்பிருந்தது.

இது எப்படி என்று விரிவாக கூறுங்கள்//


தமிழீழத்திற்க்கான போராட்டம் ஆரம்பித்த இந்த 27 வருடங்களில் அது என்னவிதமான நிலையை இன்று அடைந்துள்ளது என்று பார்க்கும் பொழுதும், புலிகளால் அழிக்கப்பட்ட பல ஈழத் தமிழ் ஜனநாயக சக்திகளை கணக்கில் கொள்ளும் போதும் அப்படியொரு வாய்ப்பிருந்ததை உணர்கிறேன்.

அப்படி ஒரு வாய்ப்பே இல்லை என்று மறுக்க இயலுமா?

அசுரன்

said...

தோழார் ஸ்டாலின் குரு,

//தனி தேசியம் என்று கூறவில்லை, தனி தேசியங்களில்தான் தீர்வு என்று கூறுகிறேன்,

இந்தியாவில் வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகலில் இருக்கும், உற்பத்தி முறைகலில் பாரிய வேறுபாடுகள் கொண்டுள்ள தேசிய் இனங்கலின்(முறையாக தேசிய இனங்கலை இனம் காண்பது கூட சாத்தியமற்ற நிலையிலிருப்பது யதார்த்தம்) ஒட்டுமொத்த போராட்டம் என்கிற வழிமுறை மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு என்கிற நிலையில்

ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தை அடைந்துள்ள தேசிய இனங்கலின் படிப்படியான போராட்டம் என்கிற வழிமுறைதானே சாத்தியமாக இருக்கும் ?//

ஏற்றத்தாழ்வான வளர்ச்சி என்பதுதான் ஏகாதிபத்தியத்தின், நிலபிரபுத்துவத்தின் இயல்பு. தமிழகத்தில் முதலாளித்துவம் ஒப்பீட்டளவில் வளர்ந்துள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால் அந்த வளர்ச்சி குறிப்பிட்ட பண்பு வகைப்பட்ட மாற்றத்தை கொண்டு வந்துள்ளதா? அதாவது மக்களின் ஜனநாயக பண்பில்?

ஏதோ சில வேறுபாடுகள்தான் உள்ளனவே அன்றி, இந்தியா முழுவதும் சமூக பொருளாதார வளர்ச்சி என்பது ஒரே அளவில்தான் உள்ளன. இன்னும் தெளிவாக சொன்னால் இந்தியா ஒரு அரைக் காலனிய, அரை நிலபிரபுத்துவம் என்ற வரையறை தமிழகத்திலோ அல்லது வேறு முன்னேறிய தேசியத்திலோ பொருந்தாது என்ற நிலையில் இல்லை.

எனவே வளர்ச்சியில் வெவ்வேறு நிலை என்று பேசினால் தர்மபுரியையும், தென் தமிழகத்தையும் பிரிகக் வேண்டி வரும். ராமநாதபுரத்தையும், சென்னையையும் ஒன்று சேர்த்து புரட்சியே செய்ய முடியாது என்றும் புரிந்து கொள்ள ஏதுவாகும்.



///
நான் பட்டியலிட்டுள்ள இழப்புககலை வெரும் தேசிய இன பிரச்சினை என்ற ஒற்றை வார்த்தைக்குல் சிறை வைப்பது எப்படி தோழா

நெய்வெலியை பற்றி நான் கூறியது வேறு அர்த்தத்தில், தமிழ் தேசிய உடைமையாக்குவதன் மூலம் தரகு பொருளாதாரத்தை சீர்குலைப்பதை கன்னட இனவெறி நிலபிரபுத்துவ கும்பலுக்கு பாடம் கற்பிக்கும் வழிமுறை பற்றி///

எனது கேள்வி ஒன்றுதான் இது கர்நாடகா ந்஢லபிரபுத்துவத்திற்க்கு என்ன பாடம் கற்றுத் தரும்? செப் 11 குண்டு வீசி அமெரிக்காவிற்க்கு கற்றுத் தரப்பட்ட பாடம் போலவா?

இது ஓப்பீடிற்க்குதான். இந்த நடவடிக்கை அங்குள்ள உழைக்கும் மக்களை கன்னட நிலபிரபுத்துவத்துடன் இன்னும் அதிகமாக ஒன்றிணைய உபயோகப்படுமே அன்றி அதனை தனிமைப்படுத்தி அழிக்க உதவாது. இன்னும் சொன்னால் இங்குள்ள தமிழர்கள் தேசியம் என்ற பெயரில் பிற உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுவர்.

இந்தியா முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக வேட்டையாடப்படுவர். இங்கு தமிழ் நாட்டிலோ அதே நிலபிரபுத்துவ சக்தி மக்களை சாதி ரீதியாக பிரித்து அதே சுரண்டலை செய்து கொண்டே இருக்கும்.

காவிரி பிரச்சனையும் தீராது, கர்நாடக, தமிழக விவசாயிகள் மீதான சுரண்டலும் தீராது.

நீங்கள் குறிப்பிட்டிருந்த இழப்புகள் தேசிய இன பிரச்சனை இல்லை என்று சொன்னால் தேசிய இன பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் அந்த பிரச்சனைகள் எப்படி தீரும்?

அவை தேசிய இனப் பிரச்சனைகள் மட்டுமில்லை என்று நீங்கள் சொன்னது சரியே. அவற்றிற்க்கான தீர்வு என்பதும் தேசிய இனப் பிரச்சனைகளை தீர்ப்பதால் மட்டும் கிட்டிவிடாது என்பதை புரிந்து கொள்ள இயலுகிறதா?



///
தமிழ் தேசிய முதலாலித்துவம் வளர்ந்துள்ளதா ?

கருணானிதி அன்டு ஃபேமிலி,ஜெயா & கோ ராமதாஸ் &கோ மற்றும் ...... சில கம்பெனிகல் தவிர்த்து சில தமிழ் தேசிய முதலாலிகலின் பெயர்கலை தந்தால் எனக்கு வாதாடுதல் எளிது///

நீங்களே சற்று முன்பு சொன்னது போல தமிழகத்தில் தேசிய முதலாளித்துவம் வளர்ந்துள்ளது எனில் நீங்கள்தான் உண்மையில் அதற்க்கான ஆதாரம் தர வேண்டிய நிலையில் இருக்கீறீர்கள் :-)))

தமிழ் தேசிய முதலாளித்துவம் வளர்ந்துள்ளது. ஒப்பீட்டளவி. ஆனால் அது சுதந்திரமாக வலுவான ஒரு வர்க்கமாக இருக்கீறதா? அப்படி இருந்தால் திருப்பூர்களும், ஓசூர்களும் ஏன் ஏகாதிபத்திய பின் நிலங்களாக நிலவுகின்ற்ன?

சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு கம்பேனி வருவதை எதிர்க்க ம க இக என்ற பாட்டாளி கட்சியின் துணையுடன் போரட வேண்டிய நிலையில் இருக்கும் மர்மம் என்ன?

மர்மம் ஒன்றுமில்லை. தமிழகம் ஓப்பிட்டளவில் முதலாளித்துவம் வளர்ந்துள்ளது என்பதன் அர்த்தம் ஏதோ மற்ற மாநில்ங்களை விட மிக மிக மிக மிக முன்னேறீயுள்ளது என்ற அர்த்தத்தில் அல்ல. மற்ற மாநிலஙக்ள் கழுத்தளவு சக்தியில் இருந்தால் தமிழகம் கழுத்துக்கு ஒரு ரண்டு இன்ச் கம்மியாக சக்தி இருக்கும் அளவு முன்னேறியுள்ளது என்ற அர்த்தத்திலேயே.

அதனாலேயே இந்தியா முழுவதற்க்குமான புரட்சியின் தன்மை மாறவில்லை. ஆனால் புரட்சிக்கு எதிரான வர்க்க சக்திகளுடன் போராடும் செயல் தந்திரம் மாறுவதற்க்கு இந்த ஏற்றத்தாழ்வான நிலை காரணமாகிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.



//
சிங்கள அரசுக்கு சுய வழு என்ற ஒன்றே கிடையாது அமெரிக்கா முதல் பேச்சுவார்த்தை நாடகமாடும் நார்வே வரை செய்யும் உதவிகலால்தான் அது நிலைத்திருக்கிறது சிங்கள இனவெறீ அரச எதிர்ப்பு என்பதே அமெரிக்க எதிர்ப்புதான்
//

இது சிங்கள் அரசுக்கு மட்டும் பொருந்தும் விசயமல்ல என்பதில்தான் நான் வேறுபடுகிறேன். விடுதலைப் புலிகள் ஜனநாயக சக்திகளிடமிருந்து அன்னியப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? உலக ஏகாதிபத்தியங்களின் மறைமுக ஆதரவு அதற்க்கு உண்டு என்பதனை இங்கு கொடுக்கப்பட்ட சில உதாரணங்களீலிருந்தே புரிந்து கொள்ளலாம்.(விமான தாக்குதல் சமபந்தப்பட்ட கட்டபொம்மன் சொன்னதை நான் இங்கு சொல்லவில்லை).


அசுரன்

said...

அப்பாவி தமிழ் மக்க்ள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஈனத்தனமான கொடூரங்கலை அம்பலப்படுத்தும் தார்மீக கடமைக்கு முகம் கொடுக்காமல் திரிந்த சிங்கள தமிழ் இடதுசாரிகளின் வக்கிரம்தான் இன்றய அனைத்து பிரச்சனைகலுக்கும் ஆனி வேர்( புலிகலின் அரசியல் பிழைகலுக்கும் சேர்த்து அவர்களைதான் கூண்டில் நிருத்த வேன்டும்)

நியாயமாக பார்த்தால் ஈழ விடுதலை போராட்டம் இடதுசாரிகளால்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்,

நீங்கல்தான் மீண்டும் சில விடயங்கலை உள்வாங்க மறுக்கிறீர்கல்

ஏகாதிபத்திய சூழலில் அரச எதிர்ப்பு என்பதே அமெரிக்க எதிர்ப்புதான்

அமெரிக்க கடற்ப்படை வீரர்கலின் வருகை யாரை வழுப்படுத்த

புலிகலையா

இனவெறி அரசாங்கத்தையா

இடதுசாரிகள் என்றும் எங்கள் நோக்கம் சோசலிச சமுதாயம் என்று புலிகல் அறிவித்தால் நான்கு பல்குழழ் எறிகணை செலுத்திகலின் இடத்தில் நாளை நாற்ப்பதை கொண்டு வந்து இறக்கும் அமெரிக்கா இதுதான் நீங்கள் வேண்டுவதோ

தன்மீது தினிக்கப்பட்ட போருக்கு முகம்கொடுத்துக்கொன்டிருக்கும் தேசிய இனமாக ஈழ் தமிழினத்தை புரிந்து கொண்டால் ஒழிய ஈழப்போராட்டத்தின் முழு பரினாமத்தை சரியாக மதிப்பிடுதல் சாத்தியமல்ல

கேனல் கிட்டு,ஆன்டன் பாலசிங்கம் போன்றவர்களின் எழுத்துக்கலை வாசிப்புக்கு உட்ப்படுத்துங்கல் புலிகல் பற்றிய சரியான மதிப்பீட்டுகு வருவீர்கள்

ஸ்டாலின் குரு

said...

தோழர் ஸ்டாலின் குரு,


// திரிந்த சிங்கள தமிழ் இடதுசாரிகளின் வக்கிரம்தான் இன்றய அனைத்து பிரச்சனைகலுக்கும் ஆனி வேர்//

அப்ப்டி ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. JVP பற்றி சொல்க்றீர்கள் எனில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் தமீழிழப் பிரச்சனையில் மாற்று திட்டம் கொண்டு போராடிய ஜனநாயக அமைப்புகளே இல்லையென்றோ அல்லது அப்படிப் பட்ட அமைப்புகளின் தலைவர்களை விடுதலை புலிகள் கொல்லவில்லையென்றோ சொன்னீர்கள் எனில் ஈழத்தின் வரலாற்றை கொஞ்சம் மீள் வாசிப்பு செய்யச் சொல்லி உங்களுக்கு நான் சொல்ல வேண்டி வரும்.

ஆம் உண்மைதான் ஈழம் குறித்து எனக்கு போதிய அறிவு கிடையாது. ஆனால் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட ஜனநாயக் புரட்சிகர சக்திகள் குறித்து ஓரளவு எனக்கு அறிமுகம் உண்டு.

இடதுசாரிகளின் தவறுகளை நான் மறுக்கவில்லை.


//ஏகாதிபத்திய சூழலில் அரச எதிர்ப்பு என்பதே அமெரிக்க எதிர்ப்புதான்
//

இது தவறான புரிதல் ஆகும். ஒரு தேசிய முதலாளி என்பவன் அரசை எதிர்க்கலாம் ஆனால் அவன் ஏகாதிபத்தியத்தை ஆட்சிக்கு வந்த பின்பு எதிரப்பானா என்றால் அதற்க்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. தேசியம் என்பது தேசிய முதலாளியின் கோரிக்கை என்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்த்தால் விடுதலை புலிகளின் பாலசிங்கம் தாராளமயத்தை தமிழிழத்திற்க்கான பொருளாதாரமாக சொன்னதன் மர்மம் புரியும்.

ஒரு வேளை தாராளமயமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தந்திர்மோ... சும்மா நக்கலுக்காக கேட்டேன். அரசு எதிர்ப்பு என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.


//அமெரிக்க கடற்ப்படை வீரர்கலின் வருகை யாரை வழுப்படுத்த
புலிகலையா
இனவெறி அரசாங்கத்தையா//

அமெரிக்காவிற்கு விடுதலை புலிகளை அழித்து இலங்கை அரசை வலுப்படுத்துவதுதான் நோக்கமா? இதனை கொஞ்சம் சொல்லுங்கள்.


//இடதுசாரிகள் என்றும் எங்கள் நோக்கம் சோசலிச சமுதாயம் என்று புலிகல் அறிவித்தால் நான்கு பல்குழழ் எறிகணை செலுத்திகலின் இடத்தில் நாளை நாற்ப்பதை கொண்டு வந்து இறக்கும் அமெரிக்கா இதுதான் நீங்கள் வேண்டுவதோ
//

ஒருவேளை தனித் தேசியம் அமைத்த பிற்பாடு அதனை சோசியலிசம் என்று அறிவித்தால் மட்டும் அமெரிக்க ரெண்டு மூனு ராக்கெட்டுகளை அனுப்பாதா? என்ன தோழர் சொல்லுங்கள்?

ஏகாதிபத்திய எதிர்ப்பில் சம்ரசம் செய்து கொள்வது எனில் எந்த காலத்திலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கப் போவதில்லை என்பதுதான் அர்த்தம்.


//தன்மீது தினிக்கப்பட்ட போருக்கு முகம்கொடுத்துக்கொன்டிருக்கும் தேசிய இனமாக ஈழ் தமிழினத்தை புரிந்து கொண்டால் ஒழிய ஈழப்போராட்டத்தின் முழு பரினாமத்தை சரியாக மதிப்பிடுதல் சாத்தியமல்ல//

தோழ்ர், விடுதலை புலிகளின் சுய அழிவுப் பாதையை விம்ர்சித்தாலே அதை ஈழ விடுதலையின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சியின் நியாயத்தை அசிங்கப்படுத்துவதாக புரிந்து கொள்ளும் மனப் போக்கை ஏற்கன்வே சுட்டிக் காட்டி விமர்சித்துள்ளேன்.

விடுதலை புலிகள் ஆயுதம் தாங்கியதையோ இன வெறி அரசுக்கு எதிராக போராடியதையோ யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால் இந்த போராட்டத்தை நட்பு சக்தி, பகை சக்தி ஆகிய விசயங்களாக தரம் பிரித்து, நீண்ட கால நோக்கில் ஒரு இனவெறீ முரன்பாடற்ற ஒரு சமுதாயம் அமைக்கும் நோக்கத்துடன் செலுத்தும் திட்டமின்றி வெறும் ஆயுத பலம் மட்டுமே விடுதலை வாங்கி தந்துவிடும் என்ற சுய அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறதே அதுதான் விமர்சக்கிப்படுகீறது. ஈழப் பிரச்சனையின் உலக பரிணாமம் ஒன்று இருப்பதையும் அதிலுள்ள ஏகாதிபத்திய அரசியல்களையும் புரிந்து கொள்ளாமல் வெறுமே சிங்கள் இன வெறி அரசு மட்டுமே எதிரி என்று முன்னிறுத்தும் சித்தாந்த குறைபாடு இருக்கிறதே அதுதான் விமர்சிக்கப் படுகிறது.

தனி தமிழிழத்தில் ஏகாதிபத்தியம் சுரண்டுவதை எப்படி தடுப்பீர்கள்?

ஈழப் பிரச்சனையில் என்னை விரிவாக பேச வேண்டும் என்று விரும்பினால் அது சாத்தியமில்லை. இதனை ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் இந்தியாவில் தனித் தேசியம் குறித்து எழுப்ப்பட்ட கேள்விகள் இன்னும் தொக்கி நிற்கின்றன. அவற்றுக்கு உங்களது எதிர்வினைகளை கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


அசுரன்

said...

ஒட்டுமொத்த இலங்கை, இந்திய புரட்சி உச்சத்தை தொடும்போதோ முடிந்த பிறகோ அமெரிக்காவால் ரெண்டு மூனு ராக்கெட்டுகலை ஏவ முடியாதோ சும்மா அதே நக்கலுக்காகத்தான் கேட்டேன்

விடயத்தை சரியான முறையில் உள்வாங்குங்கள்

அடிப்படை நம்பிக்கையே இல்லாமல் எந்த சமுதாய மாற்றமும் புரட்சியும் சாத்தியமில்லை அப்புறம் எல்லோரும் குவார்ட்டர் அடித்துவிட்டு குப்புற படுத்துக்கொள்ள வேண்டியதுதான்

புலிகல் யாரை எதித்து போரிட்டுக்கொன்டிருக்கிறார்கள் சாராம்சத்தில் சிங்கள தரகு முதலாலித்துவத்தோடுதானே(இன வெறி என்பது உப இணைப்பு) தரகு முதலாலித்துவம் என்பது ஏகாதிபத்திய வடிவெமென்றால் அரச எதிர்ப்பு எப்படி ஏகாதிபத்திய எதிர்ப்பாகாது

புலிகல் மீதான ஏகாதிபத்ய பாசம் பல்லிலித்த இடங்கலின் பட்டியள் வேண்டுமோ உங்கலுக்கு

பேச்சுவார்த்தை மேசையில் சமபலத்துடன் இருந்த புலிகலை தடை செய்தலிலிருந்து சமீபத்திய இணைதலைமை நாடுகலின் இனவெறி அரசாங்கத்துக்கான நிதி வழங்கல் நீட்டிப்பு தீர்மானம் வரை காட்டுவது என்ன?

சிங்கள கடற்படைக்கு பயிற்ச்சி கொடுக்க 1000 அமெரிக்க வீரர்கள் தேவையோ.படிப்படியாக திரிகோனமலை கடல் பகுதியில் அமெரிக்க ஆதிக்க வட்டம் விரிவடைவது தெரியவில்லையா உங்கலுக்கு

சமீபத்திய அமெரிக்காவுடனான இலங்கை அரசின் பாதுகாப்பு உடன்படிக்கை அமெரிக்க ரானுவ நடவடிக்கைகலுக்கு பின்தள சக்தியாக இலங்கை மாறுவதை உறுதிபடுத்துகிற்தா இல்லையா

இத்தனை பரிசுகள் கொடுத்திருக்கும் இலங்கை அரசுக்கு அமெரிக்க அரசின் கைமாறு புலிகலை ஒடுக்க இலங்கை அரசுக்கு உதவுவதை தவிற என்ன இருக்க முடியும்

கொலும்பில் தொடங்கி யாழ், மட்டக்களப்பு மலயகம் என்று விரிந்த சிங்கள இனவெறியாட்டமும் தமிழர்கலின் மீதான நரவெறியாட்டமும் உச்சம் தொட்டபோது இலங்கை ஐக்கியம் ஓங்குக என குரல் கொடுத்தவர்கல்தான் நீங்கல் கூரும் சனனாயக சக்திகள் என்றால் அவர்கல் மீதான புலிகலின் எதிர் வினை சரியானதே

இந்திய இலங்கை அரசுகலின் அடிவருடிகளான குழுக்கல் ஆரம்பித்துவைத்ததை புலிகல் முடித்து வைத்தார்கல் அவ்வளவே

ஏன் க்யுபா போன்றே ஈழம் மாறாத என்ன ஏகாதிபத்திய எதிர்ப்பில்

தன்மீது தினிக்கபட்ட போருக்கு முகம் கொடுத்து கொன்டிருப்பதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் ஈழத்தமிழினதில் அடுத்தகட்டம் வர்க்க போராடம் என்பதை நான் எங்கும் மருக்கவில்லையே

ஈழம் பற்றிய எனது கையிருப்பும் குறைவுதான் போதும் இதோடு ஈழம் பற்றிய விவாதத்தை நிறுத்திக்கொள்வோம்

பி.கு.

இந்த விவாதத்தில் இங்கே உலவிக்கொண்டிருக்கும் திராவிட சிங்கங்கலின் பங்களிப்பை பெரிதும் எதிர்பார்த்தேன்,வருத்தத்தோடு எனது ஏமாற்றத்தைய்யும் பதிவு செய்கிறேன்

ஸ்டாலின் குரு

said...

வளர்ச்சி வேறுபாடுகல் பற்றி நான் குறிப்பிட்டது உற்பத்தி சக்திகலிடையே இந்திய துணைகண்டத்தில் நிலவும் பாரிய முரன்பாடுகலை

தேசிய இன கூருகலை உடைய 200 க்கும் மேற்ப்பட்ட குழுக்கல் இங்கு இருக்கின்ற என்பதும் அவைகலை இந்தி,இந்தியமயப்படுத்தும் பார்ப்பன சதியும் நீங்கள் அறியாததல்ல

தேசிய இன பிரச்சனை என்கிற வார்த்தையை விட தேசிய இன சுரண்டல் என்ற வார்த்தை பிரயோகம் சரி என்பது எனது கருத்து

நெய்வெலி பற்றி நான் கூறியது வெகு சாதாரன அர்த்தத்தில்

தண்ணீரை கொடுத்துவிட்டு மின்சாரத்தை பெற்றுக்கொள் என்கிறமாதிரி

தமிழ் தேசிய முதலாலித்துவம் வளர்ந்துள்ளது அதன் விளைவுதான் தமிழ் தேசிய கோரிக்கை என்பது உங்கள் புரிதலானால் அடிபடையிலேயே அதில் நான் முரன்படுகிறேன்

தமிழகத்தில் இருக்கிற முதலாலிகலுக்கு இந்திய கூட்டினவை விட தனி தமிழ் தேசம் எந்த விதத்திலும் லாபகரமானதாக இருக்கப்போவதில்லை

தமிழ் தேசிய முதலாளிகலின் பெயர்களை நான் கோரியதன் நோக்கம் உங்கலுக்கும் புரிந்தே இருக்கிறது

அவர்களில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் தமிழை சமூக தாய்மொழியாக மட்டுமே கொண்டவர்கல்,சிலர் பார்ப்பனர்கல்,

அதிலும் இவர்கள் தங்கல் சொந்த மொழிக்காகரர்கலை தேசிய இன (சாராம்சத்தில் சாதியாக) ரீதியாக ஒன்று படுத்திகொண்டு தனித்தே நிற்க்கிறார்கள்

தங்கல் மொழி வளர்ச்சிக்காகவும் தேசிய இன அடையாளபடுத்தலை மேம்படுத்திக்கொள்ள இவ்ர்கள் செய்யும் வேலைகல் மறைமுகமாகவேனும் பன்பாட்டுத்தளங்கலில் தமிழர் வாழ்வியலில் தாக்குதல் நடத்துகிறது

அடித்தட்டு பாட்டளி வர்க்க, வீட்டு மொழியாக பிற மொழி பேசுபவர்களை நான் தனித்து நிறுத்தவில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கல்

ஸ்டாலின் குரு

said...

இப்படியே தத்துவம் கதைச்சுகொண்டே இருங்கள் இங்கயும் ஒருவன் அமைப்பு கட்டி உங்கல் சோலியை எல்லாம் புல்லட்டுகலால் முடித்து வைப்பான் அப்போ தெரியும் சேதி என்னானு மக்கா

said...

தத்துவ துறையில் மிகப்பெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார் செல்லா அவருக்கு எனது வாழ்த்துகள்

அதென்னங்க அது வர்க்க படுகொலை

ஆமா இந்த ஆர்குட்ல பெரியார் கம்ம்யூனிட்டில ஏதாச்சும் தலைப்புல விவாதத்தை ஆரம்பிச்சு மட்டும் வச்சுட்டு என்னை மாதிரி ஆளுங்கல பார்பானுங்கட்ட கொஞ்சம் விவாதிக்கவும் நிறைய திட்டும் வாங்க விட்டுட்டு கம்பி நீட்டுர அதே செல்லா அண்ணன்தானுங்கலா நீங்க

ஸ்டாலின் குரு

said...

என்ன தோழரே எனது பதிவுகள் எப்பொழுதும் அதற்குறிய எதிர்விணைகளோடுதான் உங்கள் தளத்தில் வரும்

இப்பொழுது எதிர்விணைகளை நான் கோர வேண்டியுள்ளது

உங்கலுக்காக தோழ்ர் 'யாய் சின்' வரிகள்

ஒரு தரப்புக்கும் மட்டும் செவி கொடுத்தால் இருளை அடைவாய்,இரு தரப்புக்கும் செவி கொடு அறிவு பெறுவாய்

said...

Thozar Stalin Guru,

Very little time to spend in Web. So unable to respond to anything.

@@@
ஒரு தரப்புக்கும் மட்டும் செவி கொடுத்தால் இருளை அடைவாய்,இரு தரப்புக்கும் செவி கொடு அறிவு பெறுவாய்
@@@@@@

Hope you are following this advise and have digested my arguments so far.

I will be following this advise henceforth.
Asuran

Related Posts with Thumbnails