TerrorisminFocus

Thursday, December 25, 2008

புதிய குற்ற பரம்பரைகள்!!!

வெள்ளைக்காரன் காலத்தில் குற்ற பரம்பரை சட்டம் என்ற பெயரில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களை ஒடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தினமும் இரவு காவல் நிலையத்தில் தங்கியிருந்து தான் அந்த இரவில் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று நீருபிக்க வேண்டும் அந்த சாதியைச் சேர்ந்த ஆண்கள். இந்த சட்டம் தற்போது இல்லை. ஆனால் குற்ற பரம்பரைகள் புதிய வடிவில், புதிய தேவைகளுக்காக தற்போது உருவாகி வருகின்றன. சமூகத்தை பாசிச மயமாக்கும் போது சட்டங்களின் தேவை என்பது இல்லாமல் போய் விடுகிறது என்பது ஒன்று மட்டும்தான் குற்ற பரம்பரை சட்டம் என்ற ஒன்றின் தேவையில்லாமல் போனதின் அடிப்படை. ஆனால் அப்படியொன்று வெகு நுட்பமாக நடைமுறையில் உள்ளது.

இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் வன்முறையும், ஆளும் கும்பல்களுக்கு எதிரான சமூக/தனிபட்ட வன்முறைகளும் மேலும், மேலும் அதிகமாகி வருகின்ற சூழலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஏதுவாக ஒட்டு மொத்த சமூகத்தையே இன்று குற்ற பரம்பரையாக்கி உள்ளது இந்த அரசு. குண்டு வெடிப்புகள் முதல், மக்களின் போர்குணமிக்க போராட்டங்கள், விவசாயிகள் தற்கொலை, பட்டினி சாவுகள், வேலையிழப்பு வரை மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான காரணங்களை மறைத்து அரசியல் செய்யும் ஆளும் கும்பல் தன்னை புன்னியாத்மாவாக காட்டிக் கொண்டு மக்களை குற்றவாளியாக்கும் மதி கெட்ட சூழல் நிலவுகிறது.


இது குற்ற பரம்பரைகளின் காலம்:

இணையத்தில் உலாவ இணையக் கடைக்கு செல்கிறாயா, அங்கு உனது அடையாள அட்டை, முகவரி, தொடர்பு எண்ணைக் கொடுக்க வேண்டும். செல்பேசி சிம் கார்டு வாங்குகிறீர்களா உங்களது அனைத்து விவரங்களும் வேண்டும். உங்களது தகவல் தொடர்புகள் அனைத்தும் ஒட்டு கேட்க்கபடும் என்பதை அறிவிக்கும் தேவை கூட இன்றி வெளிப்படையாகவே நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் நமது படுக்கையறையுள் நுழைவது போல நடைமுறைப்படுத்தும் சூழல் நிலவுகிறது. வாடகை வீடு தேடுகிறீர்களா, உங்களது அடையாள அட்டை, வேலை பார்க்கும் அடையாள அட்டை, வீட்டு முகவரி இத்யாதி விசாரணைகளை ஒரு குற்றவாளியை விசாரிப்பது போலவே விசாரித்து பிற்பாடே கொடுக்கப்படும், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் சோதனையிடப்படலாம், உள்ளாடையணியாமல் வெளியே செல்ல பயப்படும் அளவுக்கு நிலைமை கெடவில்லை என்பது என்னவோ வாஸ்தவம்தான்.



ஹோட்டலில் ரூம் எடுக்கிறீர்களா, உங்களுடன் ஒரு பை இருந்தால்தான் ரூம் கொடுப்போம் ஏனேனில் பை இருந்தால்தான் நீங்கள் வெளியூர்க்காரர் என்று நம்ப முடியும்(இப்படியும் சிலருக்கு அனுபவங்கள்), அப்புறம் வழக்கம் போல பிற விசாரணைகளும். பத்து இளைஞர்கள் கூடி நின்று பேச முடியாது. அப்படி பேசி களைந்த காலங்கள் எல்லாம் தொன்னெடுங்காலத்தைச் சேர்ந்த கதையாக மாறிவிட்டன. RSS ஆட்சி செய்யும் இடங்களிலோ காதலிப்பதும், பார்க்குகளில் தம்பதியர் உலாவுவதும் குற்றம். ஒவ்வொரு முக்குச் சந்திலும் ஒருவன் நின்று கொண்டு அடையாள அட்டை கோரும் காஸ்மீரத்து பாசிச சூழல் ஒன்று நாடு முழுவதும் விரைவில் உருவாகும் என்பதைத்தான் இவையெல்லாம் சொல்லுகின்றன. இப்படி தனிமனிதன் சமூகத்துடன் உறவாட இருக்கும் ஒவ்வொரு புள்ளியிலும் அவனை முதலில் குற்றவாளியாக்கி, நிரபராதி என்று நீரூபிக்க நிர்பந்திப்பதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் காயடிக்கப்பட்ட மலட்டு எருமையாக சோரனையின்றி ஆக்கப்படுகிறான். ஏரியா விட்டு ஏரியா போகும் ஒரு நாயை அங்குள்ள நாய்கள் மூத்திர மற்றும் பீத்திரக் குழாயை மோந்து பார்த்து அடையாளப்படுத்துவதை ஒத்த அருவெறுக்கத்தக்க சூழலாக இது மாறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்டுகளாக, உளவாளியாக மாற்றப்படுகிறான். ஜனநாயகமின்மைக்கும், பாசிசத்திற்க்கும் பழக்கப்படுத்தப்படுகிறான். புத்தகங்கள் படிப்பதே தீவிரவாதமாகவும், உண்மைகளை பேசுவதே பயங்கரவாதமாகவும் பீதியுடன் பார்க்கப்படும் உள்நாட்டு யுத்தங்களின் காலத்திற்க்கான நுழைவாயிலின் வெகு அருகே நெருங்கி விட்டோம் என்பதைப் போன்ற உணர்வையே இவை நமக்கு கொடுக்கின்றன. இந்தியாவே அறிவிக்கப்படாத அவசர காலநிலையை நெருங்கிவிட்டது போல உள்ளது.




டெல்லி பல்கலைகழகத்தில் பேசிய கிலானி மீது எச்சில் துப்புகிறார்கள் RSS குண்டர்கள், புஷ் மீது செருப்பு எறிந்தத விமரிசையாக புகழ்ந்து சுற்றியிருந்தவர்களின் கவனத்தை கவரந்த (அல்லது புண்படுத்திய) குற்றத்திற்காகவும், முஸ்லீமாக பிறந்த குற்றத்திற்காகவும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக விசாரிக்கப்படுகிறார். போலீசிடம் அவரை போட்டுக் கொடுத்தது அவருடன் வேலை பார்க்கும் ஒரு நல்ல இந்தியன் அல்லது 'இந்து'யன். கர்நாடகாவில் RSS சமூகத்தையே குற்றபரம்பரையாக்கியுள்ளதன், பாசிசமயமாக்கியுள்ளதன் அடையாளம் இது. மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினால் அடுத்த நிமிடமே போலீசுக்கும், ஊடகங்களுக்கும்(வீட்டுக்குள் இருக்கும் போலீசு இது) தகவல் கொடுக்கும் சேவையை இலவசமாக செய்கிறார்கள் ஆட்டோக்காரர்கள். ஆட்டோக்காரர்களுக்கும், போலீசுக்குமான இந்த வர்க்க பாச??!!! நட்புக்கு, பிணைப்புக்கு CPM கட்சி சாட்சி. இது சமூகத்தை கண்காணியாக, உளாவாளியாக இந்த அரசும், அவர்களது ஏஜெண்டுகளும்(எ-கா:CPM) மாற்றியுள்ளதற்கு அடையாளம்.




சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை சந்தேகத்துடன் கண்காணிக்கும் ஒரு பேரபாயகரமான சூழலைத்தான் இன்று நாம் காண்கிறோம். சாதி, இனம், மதம், நாடு, தோல், மொழி, ஆடை, வர்க்கம், பாலினம், பிராந்தியம் என்று பார்க்கும் மனிதரையெல்லாம் பிரித்து சுருக்கி சந்தேகத்துடனும், பீதியுடனும், முன் முடிவுடனும் அனுகுவதையே இன்று நாம் பெரு நகரங்களில் பார்க்கிறோம். ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்கி, அதே சமூகமே தனது ஒவ்வொரு உறுப்பினரையும் தானே கண்காணிக்கும் சூழலைத்தான் ஆளும் வர்க்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த குழப்பத்தில் இந்த குழப்பம் அனைத்திற்க்கும் காரணமான தனது தவறுகளையெல்லாம் மறைத்துக் கொள்கின்றன ஆளும் வர்க்கங்கள். நாமோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும், நான் குற்றவாளியில்லை என்று நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கும் வெட்கம் கெட்ட, சுயமாரியதையற்ற இழிநிலையில் உழல்கிறோம். இதுதான் குற்ற பரம்பரை என்று ஒன்று இருப்பதாக உணர்வதின் அடிப்படை. இதுதான் சமூகம் தன் மீது தானே பாசிசத்தை திணிக்கும் விதம்.

ஒரு சமூகமே குற்ற பரம்பரையாக, ஒரு நாடே குற்ற பரம்பரையாக காட்டப்பட்டு அந்த குற்றவுணர்வின் பின்னே இந்த சூழலுக்கு காரணமான ஆளும் வர்க்கங்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றன. அந்த குற்றவுணர்வின் பின்னே இந்த சமூகம் தன் மீதே பாசிசத்தையும், சுய கண்காணிப்பையும் செலுத்திக் கொள்கிறது. சமீபத்திய மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு பரவலாக உலாவும் கருத்துக்களை கவனித்தால் இது புரிபடும். இதனை இன்னும் வீரியமாக்க சட்டங்களும் இயற்றப்படுகின்றன. அதாவது விளக்குமாறுக்கு பட்டு குஞ்சலம்.







இந்த குற்ற பரம்பரை சூழல் இந்த சமூகம் ஒன்றிணைந்து இயங்கும் ஒவ்வொரு புள்ளியிலும் உறுதியாகி உள்ளதா என்றால் இல்லை. இன்னும் அப்படியொரு சூழல் பரவலாகவில்லை என்பதுதான் நேர்மையான பதில். சரியாகச் சொன்னால் குற்ற பரம்பரைச் சூழல் கண்ணையும், கருத்தையும், சுயமரியாதையும் உறுத்தும் அளவுக்கு பரவி இருக்கிறது என்பது மட்டும்தான் தற்போது உண்மை. ஆனால் இந்த குற்ற பரம்பரை சூழல் தனது விசக் கரங்களை மேலும் மேலும் விரிவாக்கி ஜனநாயகமாக மனிதர்கள் இந்த சமூகத்தில் உறவாடிக் கொள்ளும் ஒவ்வொரு புள்ளியையும், ஒவ்வொரு இடைவெளியையும் மிக வேகமாக தன்னுள் விழுங்கி வருகிறது என்பதுதான் நாம் இங்கு மிக கவலையுடன் கவனிக்க வேண்டியுள்ளது. அப்படியொரு சூழல் பரவலாக வலுப்பட வலுப்பட ஆளும் வர்க்கங்களின் வெட்கங்கெட்ட ஏகாதிபத்திய அடிவருடித்தனமும், பாசிச அடக்குமுறையும், இந்துத்துவ கொடுங்கோன்மையும் அதன் உடன் - எதிர் வினைகளும் இன்னும் பருண்மையான, நுட்பமான, ஆழமான வடிவங்களை எடுக்கும் என்பதுதான் நாம் இங்கு கவலைப்பட வேண்டிய முக்கிய அம்சம். இந்த கட்டுரையை படிப்பவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதும் இவற்றைத்தான்.

சமூகத்தை குற்றபரம்பரையாக்கும் இந்த போக்கை, ஏகாதிபத்தியங்களும், அவர்களின் அடிவருடிகளான ஆளும் வர்க்கங்களும் தமது உலகளாவிய சுரண்டலினாலும், உள்ளூர் அயோக்கியத்தனங்களினாலும் உருவாக்கியுள்ள இந்த சூழலை நாம் மாற்றியமைக்க முடியும். உண்மையான குற்றபரம்பரை யாரோ அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு தாம் குற்றவாளி இல்லை என்று நீருபிக்க கோரும் ஒரு சூழலை நாம் உருவாக்கினால் அது முடியும். யார் உண்மையில் இந்த படுபயங்கர சூழலுக்கு காரணமோ, அதாவது பெரும் பணக்காரர்கள், ஊரை அடித்து சாப்பிடும் டாடா, அம்பானி போன்ற கொழுத்த தரகு முதலாளிகள், பார்ப்பன கொழுப்பெடுத்த பெரும் ஊடகங்கள், RSS இந்துத்துவ பயங்கரவாதிகள், அவர்களின் ஏஜெண்டுகளான IAS, IPS உள்ளிட்ட பெரும் அதிகாரிகள், வோட்டு பொறுக்கி அரசியல் வியாதிகள், சாதி சங்கங்கள் இவர்களின் அடியாள் படையான கிரிமினல் தாதாக்கள், மபியாக்கள், போலீசு, நீதிபதி போன்றவர்கள், பிற மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்களை நாம் குற்ற பரம்பரையாக மாற்றினால்தான் உழைக்கும் மக்களாகிய நாம் குற்ற பரம்பரையாக கருதப்படுவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.




அதற்கு முதலில், குற்றபரம்பரையாக நாம் இல்லை என்ற உணர்வை பெற வேண்டும். பிள்ளை பெற்று வளர்க்கும் பன்றிகளாக அல்ல மாறாக சுயமரியாதையுள்ள மனிதர்களாக உணர வேண்டும். விவசாயி, தொழிலாளி, மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் கம்பேனி ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எல்லாருக்கும் பிரச்சினை ஒன்றுதான், எதிரி ஒருவர்தான் என்று உணர்ந்து அந்த அடிப்படையில் ஒன்று திரள வேண்டும். ஜனநாயகத்திற்க்கான ஒவ்வொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுக்காமல் உறுதிப்படுத்த போராட வேண்டும். தீர்வு தனிமனிதர்களிடம் இல்லை, ஒரு சமூகமாக நம்மிடம்தான் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

அப்படியொரு சூழலில் மக்களை குற்றவாளிகளாக்கி கண்காணித்த பொழுதெல்லாம் கண்டும் காணாமல் களிவெறியாட்டம் போட்ட ஊடகங்களும், ஆளும் வர்க்கங்களும் உண்மையான குற்றவாளிகள் குற்ற பரம்பரையாக நடத்தப்படும் அந்த சூழலில் 'குற்ற பரம்பரை' 'குற்ற பரம்பரை' என்று கதறி கூச்சலிடுவார்கள். அப்படித்தான் ரஸ்யா, சீனாவில் நடந்த பொழுது உலகெங்கும் ஆளும் ஏகாதிபத்திய கும்பல்களும் அவர்களின் ஆசன வாய்களாக செயல்பட்ட ஊடகங்களும் கூச்சலிட்டன. அப்படியொரு முடை நாற்றமெடுக்கும் கூச்சலே நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதற்கான அளவுகோல். அதுவே மக்களுக்கான புதிய ஜனநாயகம் உறுதிப்பட்டுள்ளதிற்கான அடையாளம்.

அசுரன்

Tuesday, December 23, 2008

ஜனநாயகம் என்பது RSS போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு மட்டுமே உரியது - கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !!!

டந்த மாதம் போரூரில் RSS கும்பலிடம் அடிவாங்கியது CPMன் தமுஎச. அடிவாங்கிய கையோடு அதை எதிர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லி போய் இன்னொரு முறை அடிவாங்கி வந்தார்கள். இதற்கு முன்பு டெல்லியில் CPM அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள் RSS கும்பல். இன்னும் பல இடங்களில் அடிவாங்கியிருக்கிறார்கள் CPM. ஆயினும் இந்த சம்பவங்களில் எல்லாம் CPM தனது பின்புறத்தையும், முன்புறத்தையும் மூடிக் கொண்டு சொறிநாயைப் போலவே வந்துள்ளது. கேட்டால் ஜனநாயகம் என்று ஒரு பதில் சொல்வார்கள். இவர்களின் சகலப்பாடி CPIயாவது RSS கும்பலின் சஹாவை எதிர்க்க ஜனநாயக முறையிலாவது போராடி அடிவாங்கியது. அந்த நடவடிக்கைகளையும் CPM செய்வதில்லை. நல்லது, இதே ஜனநாயக அனுகுமுறையைத்தான் அல்லது சரியாக சொன்னால் சொறிநாய்த்தனத்தைத்தான் எல்லாரிடமும் மேற்கொள்கிறார்களா CPM பாசிஸ்டுகள்? இல்லை நண்பர்களே.

சில நாட்களுக்கு முன்பு முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு குறித்து பல்லாவரத்தில் பிரச்சாரம் செய்யப் போன ம.க.இ.கவின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்களை CPM தோழர்கள் உருட்டுக் கட்டை ஜனநாயகத்தால் தாக்கியுள்ளனர். பதிலுக்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்கள் என்பதும், அது CPM ஏரியா என்பதும், அங்கு சமீபத்தில் CPMலிருந்து பிரிந்து வந்து புஜதோமுவில் இணைந்த கடுப்பு அவர்களுக்கு உள்ளது என்பதும் கிளை செய்திகள். இதே போலத்தான் காரப்பட்டில் ம.க.இ.க மீது தாக்குதல் நடத்தி தேமுதிக நண்பர் ஒருவரை கொன்றனர் CPM காலிகள்.

புரட்சிகர அமைப்பினர் மட்டுமல்ல, சிங்கூர், நந்திகிராம், தற்போது மேற்கு வங்க பழங்குடியினர், கேரள பழங்குடியினர், பிற புரட்சிகர-ஜனநாயக அமைப்பினரை CPM அனுகும் விதம் இப்படிப்பட்டதுதான். நமது கேள்வி ஒன்றுதான் RSSயின் அத்வானி என்ற பயங்கரவாதியை நண்பர் என்று புத்ததேவு அன்புடன் கூப்பிடுவதும், அவர்களுடன் பொது மேடைகளில் கூடிக் குலாவுவதும், RSSக்கு மட்டுமே ஜனநாயகம் என்று சொல்லுவதுமான ஒரு கட்சியை இந்துத்துவ அமைப்பின் தொங்கு சதை என்று அழைப்பதா அல்லது வேறு ஏதேனும் பெயரிட்டு அழைப்பதா?

RSSக்கும் இவர்களுக்குமான முரன்பாடு என்பது வோட்டு பொறுக்குவதில் மட்டும்தான். இன்னும் சரியாகச் சொன்னால் புரட்சிகர அமைப்புகளை கண்டுதான் CPM உண்மையில் பீதியடைந்துள்ளனர். நல்லது, உங்களது பய பீதி எங்களுக்கு புரிகிறது. உங்களுக்குள்ளேயே நீங்கள் நொறுங்க தொடங்கிவிட்டீர்கள். இனி அதை வீரியப்படுத்துவது மட்டுமே புரட்சிகர அமைப்புகளின் வேலை.

CPM கட்சியை அவர்களுக்கு புரிந்த மொழியிலேயே அனுகுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. இன்னும் சரியாகச் சொன்னால் தமிழகத்தின் பெரிய கட்சிகளே கூட ம.க.இ.க. விசயத்தில் எச்சரிக்கையாகவே நடந்து கொள்வர். ஏனேனில் ம.க.இ.க.வின் எதிர்வினை அப்படிப்பட்டதாக இருக்கு. அந்தவகையில் CPMயை சமீபத்திய தாக்குதல்களில் புரட்சிகர அமைப்புகள் அனுகவில்லை. CPM விசயத்தில் உடனடி எதிர்வினை என்பது அவர்கள் தனிமைப்பட ஏதுவானதாக இருப்பதுதான் நல்லது. அதற்கு பின்பு அவர்களை அடித்தால் அது தர்ம அடி என்பதைவிட சாவு மணி என்பதாகவே இருக்கும். கூடிய விரைவில் சாவு மணியை 'சந்திக்க'இருக்கும் சந்திப்பு போன்ற CPM அல்லக்கைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வினவுவில் வந்த கட்டுரையை இங்கு மறுபிரசூரம் செய்கிறேன்.

சொரனையுள்ள CPM உள்ளங்களை விவாதத்திற்கோ அல்லது CPMயை விட்டு வெளியே வரவோ அழைக்கிறேன்.

பய பீதி வரும் முன்னே!! CPMக்கு சாவுமணி வரும் பின்னே!!!

அசுரன்

நன்றி வினவு

____________________________________________________________

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது 24/12/2008 by வினவு

காரப்பட்டில் எமது தோழர்களின் குருதியைச் சுவைத்த சிபிஎம் குண்டர்களின் கோரப்பற்களில் ஒட்டிய உதிரம் உலர்வதற்குள், சென்னை பல்லாவரத்தில், அக்கம்யூனிஸ்டுக் கட்சியின் காலிகள் தமது வெறியாட்டத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர். போலி கம்யூனிஸ்டுகளான சிபிஎம் கட்சியினர் மாநிலத்திற்கு ஒரு வேசம் போடுவதாக பிற அரசியல் கட்சிகள் அவர்களை குற்றம் சாட்டுவது வழக்கம். ஆனால் எல்லா மாநிலங்களிலும் அவர்களிடம் காணப்படும் ஒரே ஒற்றுமையான அம்சம், பொறுக்கித்தனம். வங்கத்தின் நந்திகிராம் முதல் தமிழகத்தின் காரப்பட்டு வரை தமது கொலை வெறியாட்டத்தை நடத்தி, தமக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் கொடியின் நிறத்தில் மட்டுமே வேறுபாடு என்பதை நாள்தோறும் நிரூபித்து வருகின்றனர்

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இதுகாறும் காணாத வகையில், ‘தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்’ எனும் தாரக மந்திரத்தோடு, மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் சகல ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளாலும், கட்சி வேறுபாடின்றி அமல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை, நமது நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களது வாழ்க்கையை அழித்து, அவர்களை வீதிகளில் சக்கைகளாக வீசியிருக்கிறது. குறிப்பாக நமது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல் ஈவிரக்கமற்றது. நூற்றுக்கணக்கான அரசுடைமை ஆலைகள், தொழில் நிறுவனகங்கள் இழுத்து மூடப்பட்டன. அறுபதாண்டுகளாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை, அரசு காலில் போட்டு மிதித்து நசுக்குகிறது. அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்து வரும் தொழிலாளர்கள் கிளர்ந்து போராடினால்,ஹூண்டாய் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களைப் போல கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி ஒடுக்கி வருகிறது. மறுபுறமோ சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நிலக் கையகப்படுத்தல்கள், தொழிற்சங்கச் சட்டங்களை திருத்துதல், வரிச் சலுகைகள் என முதலாளிகளின் தாள் பணிந்து, குறிப்பறிந்து வேசித்தனம் புரிகிறது.

எனவே, நமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இம்முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து தொழிலாளி வர்க்கத்தையும், பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் அணிதிரட்டும் நோக்கத்தோடு, எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்ணணி (பு.ஜ.தொ.மு), வரும் ஜனவரி 25ஆம் தேதியன்று சென்னை அம்பத்தூரில் ’முதலாளித்து பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு’ என்ற தலைப்பில் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டு, மக்களிடையே முழுவீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(22-12-08) அன்று, இப்பிரச்சாரத்தையொட்டி தோழர் ஜெயராமன், தோழர் வெற்றிவேல் செழியன் முதலான ஆறு பு.ஜ.தொ.மு தோழர்கள் சென்னை பல்லாவரம் பகுதியில் பிரச்சாரம், நிதிவசூலுக்காக சென்றனர். கொடிகளோடு செஞ்சட்டையணிந்த நமது தோழர்கள் அப்பகுதிக்கு சென்றதுமே அவர்களை எதிர்கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட சி.பி.எம், DYFI கும்பல், தோழர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தோழர்கள் மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, தோழர்களுடைய சைக்கிளை எட்டி உதைத்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர். ‘கண்ணியமான’ ஜோதிபாசு, சுர்ஜீத், காரத் வழி வந்த அக்குலக்கொழுந்துகள் கேட்போர் கூசக் கூடிய கெட்ட வார்த்தைகளால் தமது அர்ச்சனையை துவங்கியுள்ளனர்.

“மரியாதையாக பேசுங்கள் தோழர்” என்று சொன்ன தோழர் ஜெயராமனை, “என்னடா தோழர்ரு, பூலுன்னுகிட்டு” (என்ன ஒரு பாட்டாளி வர்க்க பண்பாடு!) என்றவாறு கும்பலாக தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற தோழர் வெற்றி வேல் செழியனை ஒருவன் மிகக் கடுமையாக நெஞ்சில் தாக்கியுள்ளான். உருட்டுக் கட்டை கொண்டு ஒருவன் தாக்கியதில், தோழர் ஜெயராமனின் தோள்பட்டை இறங்கியுள்ளது. பொறுத்துக் கொண்டிருந்த இளம் பு.ஜ.தொ.மு. தோழரொருவர் உருட்டுக் கட்டையை பிடுங்கி திருப்பித் தாக்கியுள்ளார்.காயம்பட்ட நிலையிலும் அவரை தடுத்த தோழர் ஜெயராமன், “இவர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்கிறார்கள். திருப்பித் தாக்கினால் பிரச்சினை திசை திரும்பி விடும். வேண்டாம்” எனக் கூற, அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். உடனடியாக, நேரே பல்லாவரம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கே தோழர்கள் செல்வதற்கு முன்னரே, பல்லாவரம் பகுதி் சி.பி.எம் செயலாளர் ஜீவா என்பவர் தலைமையில் திரண்டு வந்த காலிக் கும்பல், நக்சலைட்டுகள் தங்களை தாக்கி விட்டதாகப் பொய்ப் புகார் கொடுத்தது. அந்த ஜீவாவிற்கும், இந்த ஜீவாவிற்கும் ஒரு வித்தியாசம்தான். அவர் கம்ப ரசம் குடிப்பார். இவர் எல்லா ரசமும் குடிப்பார். குடித்த கையோடு புரட்சியாளர்களை தேடிப் பிடித்து அடிப்பார். எல்லாம் மக்கள் ஜனநாயகப் புரட்சி நலனுக்காகவே! சப் - இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் எனும் சி.பி.எம் கைத்தடி அவர்களுக்கு ஒத்தூத, நீண்ட நேரம் வாதங்கள் நடந்துள்ளன. “திருட்டு வசூல் பண்ணி ஏண்டா எங்கத் தாலியறுக்கிறீங்க” என ஒரு பெண் எஸ்.ஐ சலித்துக் கொள்ள, “யார் திருட்டு வசூல் பண்றது, சிக்னலுக்கு சிக்னல் வசூல் பண்ணி பொழப்பு நடத்துறவங்க யாருன்னு ஊருக்கே தெரியும். நாங்கள் நக்சல்பாரிகள். உழைக்கும் மக்களின் நலனுக்காக, அவர்களது கோரிக்கைகளுக்காக, வெளிப்படையாக நிதிவசூல் செய்கிறோம்.” என காவல் நிலையத்தில் வைத்தே செருப்பாலடித்தது போல் பதில் கூறியுள்ளார் நமது தோழர். காலை 8 மணிக்கு தாக்கப்பட்ட தோழர்கள், மதியம் 1 மணி வரை அடிபட்ட நிலையிலேயே, போலிசின் கைக்கூலித்தனத்தை எதிர்த்து வாதிட்டுள்ளனர். பின்னரும் கூட தாக்கியவர்களை கண்டுபிடிப்பது சிரமம் எனக் கூறி, முதல் தகவல் அறிக்கை பதிய மறுத்து விட்டார் கைத்தடி பஞ்சாட்சரம்.

அடிபட்டால் ஓடி விடுவார்கள் எனத் தப்புக் கணக்குப் போட்ட சி.பி.எம், நிலைமை முற்றுவதை உணர்ந்து சமாதானமாகப் போய் விடலாம் எனக் கூறியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த தோழர்கள், குற்றத்தை பதிவு செய்யாமல் ஓய மாட்டோம், கட்டப் பஞ்சாயத்து செய்யும் போலிசை அம்பலப்படுத்தாமல் விட மாட்டோம் என தீர்மானகரமாக தெரிவித்துள்ளனர். அடுத்த நாளே சென்னை முழுதும் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விட்டன. மேலும் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. போலீசின் கைக்கூலித்தனத்தை தோலுரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்படவுள்ளது.

குரோம்பேட்டையில் போலி கம்யூனிஸ்டுத் தொழிற்சங்கத்தைப் புறக்கணித்து, பு.ஜ.தொமுவில் உணர்வுள்ள சி.பி.எம் அணிகள் இணைந்ததனால் ஏற்பட்ட எரிச்சலின் விளைவாகவே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது என அறிய வருகிறோம். “எங்க ஏரியா உள்ள வராதே!” என வெறியாட்டம் போடும் பல்லாவரம் குத்தகையாளர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்கிறோம். நந்திகிராமில் ‘வெளியாட்கள்‘‘ (OUTSIDERS) நடமாட்டத்தை தடுக்க, துப்பாக்கிச் சூடுகளும், குண்டுவெடிப்புகளும், கற்பழிப்புகளும். நடத்தி ஏரியாக்களை கைப்பற்றிய காலித்தனம் இங்கே எடுபடாது. உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் உள்ள நாங்கள் உங்களைப் புழுக்களைப் போல ஒதுக்கி விட்டு, எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். வழி மறித்து வம்பிழுப்பதே உங்கள் வேலையாக வைத்துக் கொள்வீர்களேயானால், காலால் மிதித்து நசுக்கி விட்டு கடந்து செல்ல கிஞ்சித்தும் தயங்க மாட்டோம். வார்த்தைச் சவடால்களில் எமக்கு நம்பிக்கையில்லை.உங்களை எரிச்சலில் தள்ளும், நீங்கள் புரியாதது போல் நடிக்கும் எமது சமரசமற்ற புரட்சிகர அரசியலோடும், உங்களுக்கு புரியக் கூடிய பொருட்களோடும் களத்தில் சந்திப்போம்.

பின்குறிப்பு:

புரட்சிகரப் பொழுதுபோக்கிற்காக அமைப்பு நடத்தும் சிபிஎம்மின் கலை இலக்கிய கதம்பம் தமுஎச, அதே நாளின் இரவில் சென்னை கோடம்பாக்கத்தில் தனது சினிமா மோகத்தை அடிப்படையாக வைத்து கலை இரவொன்றை நடத்தியுள்ளது. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை விற்பனை செய்வதற்காக ஒரே ஒரு பு.ஜ.தொ.மு தோழர் சாலையில் கடை பரப்பி வைத்துள்ளார். இரவு 12 மணிக்கு அங்கே வந்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 10 ‘குடிமகன்கள்’ - DYFI, சி.பி.எம் குண்டர்கள், போதைத் தலைக்கேற, பொதுமக்கள் முன்னிலையிலேயே கெட்ட வார்த்தைகளால் ஏசி, கடையை எடுக்கச் சொல்லி, காலித்தனம் செய்துள்ளனர். தள்ளுமுள்ளை தடுக்க வந்த SFI தோழர்கள், “இவர்களை ஏன் எடுக்கச் சொல்கிறீர்கள்? இவர்கள் பத்திரிக்கைகள் நல்ல பத்திரிக்கைகளாகத்தானே தெரிகின்றன” என்றதற்கு, “இல்லை, இல்லை, இவர்கல் நக்சலைட்டுகள், நமது எதிரிகள்” என ஆவேசக் கூச்சல் போட்டுள்ளன சிபிஎம்மின் குடிமகன்கள். பின்னர் தோழர் பத்திரிக்கைகளை எடுத்தும் கூட ஆத்திரம் அடங்காத கும்பல், தோழர் கையிலிருந்த விலைவாசி உயர்வுக்கு எதிரான 300 துண்டுப் பிரசுரங்களை பிடுங்கி, அங்கேயே தீக்கிரையாக்கியுள்ளது. சாராயம் குடித்து விட்டு சலம்பும் ‘தோழர்களுக்கு’ உழைக்கும் மக்களின் வியர்வையிலிருந்து பெறப்பட்ட நிதியில் தயாரிக்கப்பட்ட பிரசுரங்களின் வாசனை தெரியும் என நம்புவது மடமை. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த, கூடியிருந்த சிபிஎம் அணிகளும், SFI மாணவர்களும் நமது தோழரிடம் பின்னர் தமது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்வினையில்லாத வருத்தம் குற்றத்திற்கு ஒப்பாகும் என்பதை நேர்மையான சிபிஎம் அணிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இம்மாதம் போயஸ் தோட்டத்தில் அம்மாவை சந்தித்து பொக்கே கொடுத்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் பணிந்து தோழர்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். எல்லாம் காங்கிரசு, பா.ஜ.கவை எதிர்ப்பதற்கான தேர்தல் உத்திகளாம். மதமாற்ற தடைச்சட்டம், ஆடு கோழி பலியிடத் தடை சட்டம், சேதுசமுத்திர திட்டத்திற்கு ராமர் பாலம் என்ற புராணப் புரட்டின் மூலம் எதிர்ப்பு என்று இந்துத்வ வாதிகளை விட அதிக வேகத்தில் செல்லும் அம்மா மதசார்பற்ற சக்தியாம். மேலும் தேர்தல் முடிந்து அம்மா பா.ஜ.க பக்கம் சாயலாம் என்பதையும் “தோழர்கள்” உணர்ந்திருக்கிறார்களாம். அதேபோல தேர்தலுக்கு பின் சி.பி.எம் கட்சி மதவாத சக்திகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக காங்கிரசுக்கு ஆதரவு தருவதையும் தோழர்கள் மறுக்கவில்லை. இடையில் தமிழ்நாட்டில் இரண்டு சீட்டுக்கள் வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சி கொடுக்கும் அரசியல் விளக்கத்தைப் பார்த்தால் சந்தர்ப்பவாதத்தின் இலக்கணத்தை புரிந்து கொள்ளலாம். போயஸ் தோட்டத்தின் ஆசியில் போலிக் கம்யூனிஸ்டுகள் புரட்சியை முடிப்பதற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். தலைமையே இப்படி பிழைப்பு வாதத்தில் புரளும் போது அணிகள் ரவுடித்தனம் செய்வதில் என்ன வியப்பு? இல்லையென்று மறுக்கும் நேர்மை உள்ள சி.பி.எம் அணிகள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், புரட்சிகர அமைப்புக்களில் அணிதிரளுங்கள், இல்லையேல் வரலாற்றில் போலிக்கம்யூனிஸ்டுகள் என்ற பட்டத்தோடு நீங்கள் இடம் பெறவேண்டியிருக்கும்.




Related Articles:

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!
போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வ...
CPIயின் நூதனமான புரச்சிப் பணிகள்!!!
விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை ச...
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுட...
நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!
மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM...
மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத...

Sunday, December 21, 2008

இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!!

மீபத்துல அதாவது 2008 ஆரம்பத்துல ஏகாதிபத்திய பொருளாதாரம் டவுசர் கிட்டத்தட்ட கழன்று தொங்கிய நிலையில் இருக்கும் போது தனது டவுசரை காப்பாற்றும் கடைசி நிமிட போராட்டத்தின் ஒரு பகுதியாக கையில் கிடைத்த இடத்திலெல்லாம் தனது மூலதனத்தை போட்டு வைத்து சும்மா சுற்றி சுற்றி சூதாடியது(பங்கு சந்தை, முன்பேர வர்த்தகம்). குறிப்பாக முன்பேர வர்த்தகத்தில் சூதாடி அன்றாட பொருட்களின் விலையை சகட்டு மேனிக்கு உயர்த்தியது, பெட்ரோல் விலையை சகட்டு மேனிக்கு உயர்த்தியது, பிறகு தங்கம், பிறகு வெள்ளி இப்படி கடைசியில் மொத்த பன்னாட்டு-தரகு முதலாளிகளின் டவுசரும் கிழிந்து அம்மணக்கட்டையாக ஆகின்ற வரைக்கும் அவர்களின் சூதாட்டம் தொடர்ந்தது.

இந்த சூதாட்ட ஸ்ட்ரிப்டீஸ் டான்ஸ் காலம் முழுவதும் இது குறித்து நாமும் பலமுறை எழுதி எச்சரித்தே வந்தோம். குறிப்பாக பெட்ரோல் விலையேற்றத்தின் போது இது அப்பட்டமான சூதாட்டத்தின் விளைவு என்பதை ஆதாரப் பூர்வமாகவே பல தோழர்கள் எழுதினார்கள். ஆனால் இந்த காலகட்டம் முழுவதும் ஏகாதிபத்திய டவுசரின் பட்டன்களாகவும் திகழ்ந்து பெருமை சேர்த்த அல்லக்கை அடிவருடிகள் இந்த உண்மைகளை மூடி மறைக்க எல்லா மாய்மாலங்களையும் கையாண்டனர். குறிப்பாக பெட்ரோல் விலையேற்றம் குறித்த பிரச்சினையின் போது அதனை பீக் ஆயில் என்ற அரதப் பழசான செத்து சுண்ணாம்பான சித்தாந்தத்தை அதன் கல்லறையிலிருந்து தோண்டி வெளியே எடுத்து விளம்பரப்படுத்தினர்.

பீக் ஆயில் என்பது வேறு ஒன்றும் இல்லை எண்ணைய் இருப்புக்கும், அதன் தேவைக்கும், அது குறைந்த பட்ச எதிர்கால எண்ணைய் பயன்பாடு வளர்ச்சியில் ஏற்படுத்தும் பாதிப்பும் சேர்ந்து எண்ணையின் சந்தை விலையை உயர்த்துவதை குறிக்கும் ஒரு சொல். அதாவது இன்னும் சுலபமாக டிமாண்டு சப்ளை பிரச்சினை. அதாவது தீடீரென்று உலகம் முழுவதும் டிமாண்டு அதிகமாகி சப்ளை கம்மியாக இருந்ததால் பீக் ஆயில் பிரச்சினை முன்னுக்கு வந்து விட்டது என்று குன்சாக ஒரு கதையை ஆதாரமின்றி அளந்து விட்டார்கள் அடிவருடிகள். அப்பொழுது தோழர்கள் பலர் முன் வைத்த வாதங்களுக்கும் அவர்களிடம் பதில் இல்லை.

இதோ இன்று அவர்களின் எஜமான் ஏகாதிபத்தியங்கள் அவர்களுக்கு பதில் சொல்லியுள்ளன. முற்றிலும் டவுசர் கழண்டு, கிழிந்து நார் நாராக, மண்ணோடு மண்ணாக மக்கிய பிற்பாடு அடுத்த டவுசருக்கு அரசாங்கத்திடம் விண்ணப்பமிட்டு உட்கார்ந்திருக்கும் ஏகாதிபத்தியங்களும், அவர்களுக்கு புது டவுசர் எடுத்து கொடுத்து அடுத்த ரவுண்டு சூதாட்ட ஸ்டிரிப்டீஸ்க்கு அனுப்பி வைக்க உழைக்கும் மக்களிடம் பணம் பிடுங்க களம் இறங்கியுள்ள அரசுகளும் என்று விசயம் அப்பட்டமாக தலைகீழாக இருக்கும் இன்றைய நிலையில், உலகமகா பாகாசுர பன்னாட்டு அஸ்கா புஸ்கா கும்தலக்க கம்பேனிகள் எல்லாம் ஆப்டர் ஆல் சதாரண ஜனங்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் பிச்சை வாங்க எச்சில் ஒழுக நிற்க்கும் இந்த நேரத்தில், நாங்கெல்லாம் வெரி பிரில்லியண்டு, டேலண்டட், ப்ளடி மக்கள் என்னைக்கு என் வேகத்துக்கு வந்து நான் எப்போ முன்னேற அதனால் என்னை Freeயா விடு என்று பிலிம் காட்டி இன்று மூக்கில் ரத்தம் ஒழுக உடைப்பட்டுள்ள ஏகாதிபத்தியமும், எந்த ஜனங்கள் திறைமையற்ற அடி முட்டாள்களோ, அவர்கள் அதி திறைமையான, வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கும், உலகின் ரட்சகனான பன்னாட்டு கம்பேனிகளுக்கு படியளக்கும் இன்றைய வெட்கம் கெட்ட சூழலில் சில விசயங்கள் நடந்து வருகின்றன.

ஏகாதிபத்திய ஆண்டவனே அம்மணமாக அலையும் போது அவனது அல்லக்கை முண்டங்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள் இன்னும் கேவலமான நிலையிலேயே இருப்பார்கள் என்பதை அவர்களது கல்லறை மவுனத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் நமக்கு ஒரு சின்ன சந்தேகம் ஒருவேளை அவர்களுக்கு சுரனை இருக்குமோ என்று. அதுதான் இந்த பதிவை எழுதத் தூண்டியது. அல்லக்கைகளை கல்லறையிலிருந்து துயிலெழுப்பும் ஒரு உசாகால பாடலாக இந்த பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

மக்களிடம் பிச்சையெடுத்துதான் தனது லாபத்தை பராமரிக்க முடியும் என்ற நிலையில் இருந்த ஏகாதிபத்தியங்கள் தமது சூதாட்ட வெறியை குறைத்துக் கொண்டவுடன், விலைவாசி உயர்வு குறைந்தது, பெட்ரோல் விலை குறைந்தது. அதாவது அடிவருடிகள் சொன்னது போல உலகின் பயன்பாட்டு அளவு குறைந்ததால் பெட்ரோல் விலை குறையவில்லை. அல்லது உலகில் உற்பத்தி பொருட்களின், விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததால் விலைவாசி குறையவில்லை. மாறாக சூதாட்ட கும்பலின் டவுசர் கழண்டு கிழிந்ததாலேயே அதாவது ஏகாதிபத்திய மூலதனம் சூதாடுவதை நிறுத்தி கொண்டதாலேயே விலை குறைந்தது. இந்த உண்மையை வலுப்படுத்தும் முகமாக தற்போது ஒபேக் அமைப்பு தனது பெட்ரோல் உற்பத்தியை ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல் அளவுக்கு குறைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்தும் திட்டத்திலேயே இதனை செய்துள்ளது(தி ஹிந்து முதல் பக்கம், 18 டிசம்பர், 2008). அதாவது டிமாண்டு சப்ளையும் கிடையாது பீக் ஆயில் புண்ணாக்கும் கிடையாது என்பதைத்தான் இவை எல்லாம் நமக்கு சொல்லுகின்றன.

ஏகாதிபத்திய மூலதனம் சூதாடியதால் பெட்ரோல் விலை ஏறியது, சூதாட்டம் நின்றவுடன் பெட்ரோல் விலை அதளபாதாளத்திற்கு சென்றது. விலையை ஏற்ற போலியாக டிமாண்டு உருவாக்கும் முயற்சியாக பெட்ரோல் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. நமது பயன்பாடு அதிகரித்து அந்த தேவைக்கு ஏற்ப உற்பத்தியில்லை என்கிற காரணத்தினால் விலையேற்றம் நடக்கவில்லை. விசயம் இப்படியிருக்க விலைவாசி உயர்வுக்கு இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் நுகர்வு அபரி மிதமாக அதிகரித்து விட்டது என்று இந்த அல்லக்கைகள் குற்றம்சாட்டினர். பெட்ரோல் விலை உயர்வுக்கும் நாமதான் கிடைத்தோம் இந்த அடிவருடிகளுக்கு. அடேய் அல்லக்கைகளா இப்போ நடந்துள்ளதே இதுக்கு என்னடா பதில் சொல்லப் போறீங்க. உங்களோட உண்மையான முதலாளித்துவம் பதுங்கியிருக்கிற இடத்துல இருந்து தோண்டி எடுத்து காட்டுங்கடா.

மக்கள் பணத்தில் சூதாடிவிட்டு மக்களையே இகழ்ந்து நோக்கும் இந்த இழிந்த முதலாளித்துவ பொருளாதாரம் இனிமேலும் இந்த உலகில் நீடித்திருப்பதற்க்கு எந்த நியாயமும் இல்லை. மக்களிடம் பிச்சை வாங்கித்தான் வயிறு வளர்க்க வேண்டும் என்ற நிலையில் உள்ள இந்த திமிர்பிடித்த கிழட்டு ஏகாதிபத்தியத்தை கருணை கொலை செய்துவிடுவதே நல்லது. இந்த நிலைமை இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால் ஏகாதிபத்தியங்களின், அதன் உள்நாட்டு பிரதிநிதிகளான ஆளும் பிற்போக்கு அரசுகளின், தரகு பன்னாட்டு முதலாளிகளின் டவுசர்கள் நிரந்தரமாக கழட்டப்பட்டு அவை அம்மணமாக, அரை அம்மணமாக அலையும் உழைக்கும் மக்களிடம் கொடுக்கப்பட வேண்டும். ஏனேனில் நாமும் எத்தனை முறைதான் தரகு பன்னாட்டு முதலாளிகள் கிழிக்கின்ற டவுசர்களுக்கு மாற்றாக புது டவுசர் தயாரித்து அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பது.

இனிமேல், நமக்கென்று டவுசர் தயாரிப்போம்!! அதை நாமே அனைவருக்கும் கொடுப்போம்!!

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!!

அசுரன்

Related Article:

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

ஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!

அமெரிக்க திவாலும் சில இந்தியத் தற்கொலைகளும் !

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

உலகை ஒடுக்கி உல்லாசமாக வாழ்ந்த அமெரிக்காவின் இன்றைய இழி நிலை! - அமெரிக்கா வல்லரசின் வஞ்சக வளர்ச்சியும் - வீழ்ச்சியின் தொடக்கமும். பாகம் 1

ஐரோப்பாவில் மீண்டும் கம்யூனிசம் : தீப்பொறி காட்டுத் தீயாக மாறிவருகின்றது

நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?

சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது

'முடிந்துவிட்டது எல்லாம். எந்த பொன்னுலகமும் இங்கு வரவில்லை.

வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது

கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது

அமெரிக்க ஊடகங்கள் திவால்!!

Thursday, December 18, 2008

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் NIA பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துமா?!!!

ன்னாடா அதிசயம், இடதுசாரி அரசியல் பேசுபவன் NIA வீரியம் கம்மி என்று RSS குரலில் கூவுகிறானே என்று யோசிப்பவர்கள் மேலும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

இந்த சட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று அதி இடது சக்திகளை முடக்குவது என்பதும் ஆகும் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கது. இந்த சட்டம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு என்று பெரும்பான்மை மக்கள் நம்ப வைக்கப் படுகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் பயங்கரவாதிகள் உயிருக்கே அஞ்சாத போது இந்த சட்டத்திற்க்கு அஞ்சியா பின் வாங்க போகிறார்கள். உண்மையில் இந்தியாவில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயக உரிமைகளை பறிப்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்கள் சொல்லுவது போலவே இந்த சட்டத்தின் நோக்கம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதுதான் எனில் உண்மையான பல பயங்கரவாத சக்திகளை இந்த சட்டம் மோந்து கூட பார்க்காது.

1984லில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க உளவு கம்பேனி இங்கு நடத்திய ரசாயன ஆயுத பரிசோதனையின் அங்கமாக கசிய விடப்பட்ட விசவாயு தாக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த பயங்கரவாதத்தை நிகழ்த்திய கம்பேனி நிர்வாகிகள் அனைவரையும் பத்திரமாக அமெரிககாவிற்கு அனுப்பி வைத்தது இந்திய அரசு. இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை தண்டிக்க கோரும் வழக்கு சம்பிரதாயப் பூர்வமாக நீதிமன்றத்தில் தூங்குகிறது. சேது பால பிரச்சினை அதனையொட்டி கருணாநிதியின் வேலை நிறுத்த போராட்ட குறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு பார்ப்பன-ஏகாதிபத்திய பிரச்சினைகளுக்கும், மக்களின் போராட்ட உரிமைகளை பறிக்கும் பிரச்சினைகளுக்கும் ஞாயிற்று கிழமை கூட கடையை திறந்து வைத்து வழக்கு நடத்தி வேக வேகமாக முடிக்கும் இந்திய நீதிமன்றம் பாபர் மசுதி இடிப்பு வழக்கு, காவெரி பிரச்சினையில் கர்நாடகாவின் திமிர்த்தனம், போபால் விசவாயு வழக்கு உள்ளிட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளில் அதிக பட்ச மௌனத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.

இன்று வரை போபால் மக்களுக்கு நிவாரணமோ அல்லது அந்த தொழில்சாலை இருந்த பகுதியின் நிலம், நீர், காற்றை மிக மோசமாக பாதித்து வரும் ரசாயன கழிவுகளை அகற்றவோ அந்த கம்பேனியினரை நிர்பந்தித்து இந்திய அரசு ஒரு மசிரைக் கூட பிடுங்கி போட்டதில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, இதே போபால் யூனியன் கார்பைடு கம்பேனி டௌ(Dow) கெமிக்கல்ஸ் என்ற பெயரில் இந்தியாவுக்குள் மீண்டும் வருவதற்கு இந்திய ஆளும் கும்பல் எல்லாரும் வரிந்து கட்டி கொண்டு சேவகம் செய்கிறார்கள்.

மன்மோகன் சிங் ஒன்னத்துக்கும் உதவாத அடையாளப் பூர்வமான போபால் விசவாயு வழக்கைக் கூட வாபாஸ் வாங்க நடவடிக்கை எடுக்கிறார், பாஜக கட்சியோ தனது கட்சி நிதியை அதிகப்படியாக முன்னாள் யூனியன் கார்பைடு, இன்னாள் டௌ கெமிக்கல்ஸிடம் வாங்கி, வாங்கிய கூலிக்கு ஒரு படி மேலே சேவகம் செய்கிறது. எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்த டௌ கெமிக்கல்ஸ் கும்பலை ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா மீது போர் தொடுக்க கோரிக்கை விடவில்லை பாஜக, மாறாக டௌ கெமிக்கல்ஸின் இரண்டு செருப்புகளில் ஒன்றாக சேவகம் செய்கிறது. யூனியன் கார்பைடு விட்டுச் சென்ற கழிவுகளை தூக்கி சுமந்து சுத்தம் செய்ய டாடா கம்பேனி முன் வருகிறது. உழைக்கும் மக்களின் பணத்தில் வயிறு வளர்த்த CPMவோ டௌ கெமிக்கல்ஸிடம் கூலி வாங்கமாலேயே அவனுக்கு தேவையான நிலங்களை விவசாயிகளிடமிருந்து துப்பாக்கி முனையில் மிரட்டி பறித்துத் தருகிறது.

தாஜ் ஹோட்டலில் குண்டு வெடித்தவுடன் ஏதோ ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஆபத்து என்று கத்தி கதறி, இந்திய ஆளும் கும்பலும், ஊடகங்களும் தமது மக்கள் விரோத தன்மையை வெட்கமின்றி விளம்பரம் செய்தனர் என்றால், போபால் பிரச்சினையில் கள்ள மௌனம் சாதிப்பதன் மூலமும், போபால் பயங்கரவாதிகளுடன் கூட்டு களவானித்தனம் செய்வதன் மூலமாகவும் இந்த அரசு யாருக்கானது, இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதை நமக்கு உணர்த்துகிறார்கள். மார்க்ஸ் சரியாகத்தான் சொன்னார் 'முதலாளித்துவ அரசு என்பது முதலாளிகளின் பொது விவகாரங்களை கையாள்வதற்கான ஒரு அமைப்புதானேயன்றி அது மக்களுக்கானது அல்ல' என்று.

இந்த டௌ கெமிக்கல்ஸ் இந்தியாவில் தற்போது மாகாராஸ்டிராவில் பூச்சி கொல்லி மருந்து தாயாரிக்கிறது. மக்களை கொன்ற அனுபவத்தில் பூச்சிகளை கொல்லும் வியாபாரத்தில் இறங்கியுள்ளது போலும். மேலும் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால் வாங்குவதற்கு சில அமைப்புகளுக்கு சமீபத்தில் ஒரு கோடி வரை நிதி கொடுத்துள்ளது. என்னடா அதிசயம் என்று யோசிப்பவர்களுக்கு இது மைக்ரோசாப்ட் கம்பேனி செய்யும் நிதி உதவி எனும் தந்திரம் போன்றதுதான். அதாவது இந்த நிதியின் மூலம் டௌ கெமிக்கல்ஸ் தயாரிக்கும் செயற்கை கால்களைத்தான் அவர்கள் வாங்க வேண்டுமாம். எப்படி நடுத்தர வர்க்கத்துக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களை தனது சந்தையாகவும், சமூக அடிப்படையாகவும் முதலாளித்துவம் உபயோகப்படுத்திக் கொள்கிறது அப்படிப்பட்டதொரு தந்திரம் இது. இந்த செயற்கை கால்கள் எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதுடன், அது எரிந்தால் விசவாயு வெளிவரும் என்றும் சொல்லப்படுகிறது. செத்தும் கெடுத்தான் என்று இதைத்தான் சொல்வார்கள் போலும். (ஆதாரம்: தினத் தந்தி 18-டிசம்பர்-2008, பக்கம் 8, சென்னை பதிப்பு)

போபால் விசவாயு பயங்கரவாதிகளின் தாக்குதல் அதனால் கொல்லப்பட்டவர்களுடன் நின்றுவிடவில்லை, பரம்பரை பரம்பரையாக 24 ஆண்டுகள் கழித்தும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் தலைமுறை குழந்தைகள் கூட பல்வேறு உடல், மனக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகும் 75 ஆயிரம் குழந்தைகள் இந்த விசவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை NIA போன்ற ஆளும் வர்க்கத்தை பாதுகாக்கும் சட்டங்கள் தண்டிக்காது, கண்டுகொள்ளாது. இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை எதிர்த்து மக்கள் போராடுவதை தடுப்பதே இந்த NIA போன்ற சட்டங்களின் பிரதான நோக்கமாகும். என்றைக்கு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் NIAன் இலக்காக மாறுகிறார்களோ அன்றுதான் உண்மையான பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள், அப்படிப்பட்டதொரு தண்டனைகளுக்கு சட்டங்களின் சாத்வீக முகமூடிகளின் தேவையிருக்காது.

அசுரன்

Tuesday, December 16, 2008

CPIயின் நூதனமான புரச்சிப் பணிகள்!!!

ந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை CPI தலைவர் தா. பாண்டியன் ஒரு கூட்டத்தில் விருந்தினராக கலந்து கொண்டு மேடையில் ஏறியிருந்தார். அதிலென்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது, அவர்தான் தினப்படிக்கு பல கூட்டங்களில் கலந்து கொள்வாரே என்றால், இந்த கூட்டத்தில் இன்னும் இருவர் இவருடன் இணைந்து கொண்டார்கள். ஒருவர் டெரரிஸ்ட் கட்சியான பாஜகவைச் சேர்ந்த திருநாவுக்கரசு, இன்னொருவர் காங்கிரஸ் தங்கபாலு.

எங்கே இந்த சம்பவத்தை வைத்து கிண்டி கிழங்கு எடுத்து விடுவார்களோ என்று பயந்து போன தா. பாண்டியன் ஒரு சல்ஜாப்பு வேறு சொன்னார். அதாவது இவரது இரண்டு எதிரிகளுடன் இவரை ஒன்றாக மேடையேற்றிவிட்டார்கள் என்று மேடையிலேயே அறிவித்தார். அப்படி மேடை ஏறியதற்க்கு காரணம் அது ஒரு கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால்தான் என்றும் கூறினார். அடடா என்னவொரு கொள்கை குன்றாக இருக்கிறார் இந்த அரிதில் வந்த பெருந்தலைவர்.

இது ஒரு கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால்தான் சாதி சங்க கூட்டமாக இருந்தும் கலந்து கொண்டேன் என்றும் கூறினார். அட சாதி சங்க கூட்டம் வேறயா. அப்படி என்ன கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்றால், அகமுடையார் சாதி சங்க கல்வி நிறுவன கூட்டம் அது. அகமுடையர் என்பது மூவேந்தர் தேவர் சாதிப் பிரிவில் ஒரு பிரிவாக உள்ளது.

CPI அவ்வளவு நெட்ட நெடுமரமான கொள்கை சூரர் கட்சி என்றால் சாதி சங்க விழாவுக்கு அதுவும் பாஜக பயங்கரவாதி கலந்து கொள்ளும் விழாவுக்கு என்னை அழைப்பதா என்று ரத்தக் கொதிப்புடன் குமுறி இவர் மறுத்திருக்க வேண்டுமே. சாதி சங்க கும்பல் இவரை அனுகுகிறது என்றால் ஏற்கனவே அப்படியொரு அனுபவம், இவருடன் தொடர்பு இல்லாமலேயா அனுகுகிறார்கள்? உண்மையில், சாதி சங்க கும்பல் அணுகியவுடனே அவர் எல்லாம் வல்ல ஏசு கிருத்துவிற்கு நன்றி தெரிவித்திருந்திருப்பார், அதாவது சோதனையிலும் ஒரு நல்லது வைத்திருக்கிறான் ஆண்டவன், அதனால்தான் இதனை ஒரு கல்வி சம்பந்தப்பட்ட விழாவாக இருக்க செய்து CPIயின் மானத்தை காப்பாற்ற ஒரு கோமணத்துண்டை ரெடி செய்துள்ளான் என்று. (ராஜீவ் காந்தியை வெடிக்க செய்த அந்த நிகழ்வில் இவரும் படுகாயமடைந்தார். இவரது ஆம்புலன்ஸ் ஒரு கிருத்துவ தேவாலயத்தை கடந்த போது அதனையொட்டிய தனது உணர்வுகளை தனது புத்தகம் ஒன்றில் தா. பாண்டியன் எழுதியிருக்கிறார்).

CPIயின் இன்றைய எதிரிகளான பாஜக, காங்கிரஸ் கலந்து கொள்வது மற்றும் இது ஒரு தேவர் சாதி சங்க கூட்டம் என்ற அத்தனை எதிர் நிலைகளையும் கடந்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்க்கு காரணம் கல்வி என்று இவர் கதை விட்டாலும், நமது கண்களுக்கு சாதி வோட்டு பொறுக்கும் மொள்ளமாறித்தனம்தான் தெரிகிறது. இப்படி சாதி வோட்டு பொறுக்க இவர்களின் அண்ணன் CPM செய்துள்ள இதே பொன்ற மொள்ளமாறித்தனங்களுக்கு இந்த லிங்கு கிளிக்குங்கள்.

இன்றைக்கு காங்கிரஸை எதிரி என்று சொல்லும் இவர்கள் இதே வாயால் நேற்று அதிமுகவை எதிரி என்று சொன்னார்கள். அதுவும் எப்படிப்பட்ட எதிரி என்பதை அந்த சமயத்தில் அவர்கள் வெளியிட்டிருந்த சிறு கையேட்டில் காணக் கிடைக்கிறது:

"மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற தமிழகத்தை ஆளும் செல்வி ஜெயலலிதா அம்மையார் இன்று சங் பரிவாரங்களின் ஊதுகுழலாக மாறியுள்ளார்"

"இனப் படுகொலைக்கு பின்னரும் நரேந்திர மோடி முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஒரே முதல்வர் செல்வி ஜெயலலிதாவாகும்"

"இது பிஜேபிக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள உறவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது"

(ஆதாரம்: இந்தியா: எந்த திசையில்? ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு கேட்க்கும் CPIயின் சிறு கையேடு)

அய்யா CPI பாண்டியன், நீங்க உங்க லெவலுக்கு திருநாவுக்கரசுடன் சாதி சங்க மேடையில ஒன்னா இருக்க முடியும்னா, கொம்மா பஜாரி ஜெயலலிதா அவுங்க லெவலுக்கு மோடியோட விழாவுக்கு போறதுல என்ன தப்புன்னு இப்போ கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் எமக்கு எழவில்லை. ஏனேனில் அதான் ஜெயலலிதாவும், CPIயும் கூட்டணி சேர போறாங்கள்ள. ஜெயலலிதாதான் இனிமே மதசார்பற்ற மூன்றாம் அணியில் ஒருவராக தீடிர் மாற்றம் அடைஞ்சுட்டாருல்ல. அப்போ சங் பரிவார ஊதுகுழல்... அது திருநெல்வேலி பக்கம் திருகோணமலை பக்கம் புதைஞ்சு கிடக்கு.

அடப்பாவிகளா உங்க வோட்டு பொறுக்கித் தனத்துக்கு ஒரு அளவே இல்லையா? நேத்து வரைக்கும் அந்த அக்கா ஜெயலலிதா சங் பரிவார ஊதுகுழலாம் என்றால், இன்னைக்கு அது என்ன பீச்சாங்குழலா.

போன வருசம் இந்து பயங்கரவாத அபாயம் பிரதானமானதுன்னு சொல்லி காங்கிரஸு கும்பலிடம் சோரம் போனீர்கள். இந்த வருசம் ஏகாதிபத்திய பொருளாதார பயங்கரவாதம் அபாயமானது என்று சொல்லி சங் பரிவார பினாமியான ஜெயலலிதாவுடன் சோரம் போகிறீர்கள். எப்போதுமே சாதி பார்த்துதான் வேட்பு மனு தாக்கல் செய்து சோரம் போகிறீர்கள். தூ.. இந்த பொழப்புக்கு தூக்கு மாட்டி சாகலாம் என்று நீங்கள் ஆவேசப்படுவதற்க்கு எந்த அடிப்படையும் இல்லை. நியாயமாக உங்க கட்சியில் இருக்கிற கம்யுனிசத்தை விரும்பும் அணிகள்தான் இந்த வசனத்தைச் தமக்கு தாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.

அசுரன்

Sunday, December 14, 2008

You dog! A gift from the Iraqis!! The farewell kiss of Iraqis!!!

BUSH SHOE VIDEO IRAQI MAN THROWS SHOES AT PRESIDENT GEORGE W. BUSH

http://binside.typepad.com/binside_tv/2008/12/bush-shoe-video.html






An Iraqi journalist hurled his shoes at Mr. Bush’s head and denounced him on live television as a “dog” who had delivered death and sorrow here from nearly six years of war.
"This is a gift from the Iraqis. This is the farewell kiss, you dog," the man said, according to a pool translation.
Mr. Maliki’s security agents jumped on the man, wrestled him to the floor and hustled him out of the room. They kicked him and beat him.
Bush also called the incident a sign of democracy, saying, “That’s what people do in a free society, draw attention to themselves,” as the man’s screaming could be heard outside.


Hitting someone with a shoe is considered the supreme insult in Iraq. It means that the target is even lower than the shoe, which is always on the ground and dirty.

This incident will be recorded in history as part of President George W. Bush's legacy.

The journalist who threw the shoe has been identified as Muntather Zaidi.

Another friend said Mr. Zaidi often ended his reports by saying, “Reporting from occupied Baghdad, this is Muntader al-Zaidi.”

அசுரன்

Related Articles:

Instant-Mix Imperial Democracy(Buy One, Get One Free)

ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு

மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்

வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்

தென் அமெரிக்காவை உலுக்கிய புஷ் எதிர்ப்புப் போராட்டம்

சதாம் படுகொலை! அமெரிக்காவின் மேலாதிக்கத் திமிரும் இரட்டை வேடமும்

கொலைகார கொள்ளைக்காரர்களின் கூலிக் கும்பல் வழங்கிய மரண தண்டனை

'சதாமுக்குத் தூக்கு தண்டனை என்றால், 6 இலட்சம் ஈராக் மக்களைக் கொன்றொழித்த பயங்கரவாத புஷ்ஷீக்கு என்ன தண்டனை?" -கண்டன ஆர்ப்பாட்டம்

ஈராக்: மலிவானதோ மக்களின் உயிர்?

அமெரிக்க பயங்கரவாதம் : அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நடத்தி வரும் பயங்கரவாத போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஓப்புதல் வாக்குமூலங்கள்

மிதக்கும் சிறைச்சாலைகள்: அமெரிக்க பயங்கரவாதத்தின் புதிய முகம்

உலக கொலைகாரன் அமெரிக்கா

அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்

கருப்பு ஓபாமாவை வெள்ளை மாளிகை தேர்வு செய்தது ஏன்?

தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை

ஈராக்கினுள் (Audio/Visuals)

இவ்வருட இறுதிக்குள் ஈரான் மீது தாக்குதல்?

பிணக்காடாகிறது ஈராக் : அமெரிக்க ஆக்கிரமிப்பால் கொல்லபட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தைத் தாண்டிவிட்டது.

Monday, December 08, 2008

சந்தேகமிருந்தால், ஆர்.எஸ்.எஸ் கும்பலே, ஒட்டிப் பாருங்கள் இன்னொரு சுவரொட்டியை!!

இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்கொள்வது எப்படி?

கடந்த 08-11-08 அன்று சென்னை சேத்துப்பட்டு பகுதிச் சுவர்களில் விநோதமாய்ப் படர்ந்திருந்தது ஒரு விதக் காளான். "இந்து மதவெறிக் கொலைகாரன்" அத்வானிக்கு 82-வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள்தான் அவை!

மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய புரட்சிகர ஜனநாயக அமைப்புகள் செயல்படும் இப்பகுதியில், சேவா பாரதி, தலித் இந்துக்கள் சபை, திராவிடர் பறையர் முன்னேற்றக் கழகம், பிரம்ம குமாரிகள் சங்கம் எனப் பல 'அவதாரம்' எடுத்துக் கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பல் காலூன்ற முயன்று வந்தது. அப்போதெல்லாம் இப்பார்ப்பன பாசிஸ்டுகளின் தந்திரத்தை அம்பலப்படுத்தி, இந்த நச்சுப் பாம்புகளை சேத்துப்பட்டு பகுதியில் அண்டவிடாமல் விரட்டியடித்தனர் இவ்வமைப்பினர்.

இந்நிலையில், அடுத்தகட்ட படையெடுப்புக்கு முன்னறிவிப்பாய், அத்வானியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்ட ம.க.இ.க. மற்றும் பெரியார் தி.க.வினர், அச்சுவரொட்டிகளைக் கருப்பு மையிட்டு அழித்து, உடனே எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இப்பிரச்சினையில் ம.க.இ.க., பெரியார் தி.க.வினரை நேருக்கு நேர் சந்திக்க திராணியில்லாத இந்து வெறியர்கள், தோழர்களை தண்டிக்க போலீசிடம் தஞ்சம் புகுந்தனர்.

உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், ம.க.இ.க., பெரியார் தி.க. தோழர்களை அழைத்து "போஸ்டர் ஒட்ட பி.ஜே.பி.க்கு இருக்கும் ஜனநாயகத்தை"ப் பற்றி வகுப்பெடுத்தனர்.

"அவுங்க கேஸ் கொடுத்திருக்காங்க, சமாதானமா போயிருங்க. மையிட்டு அழித்த சுவரொட்டிகளைக் கழுவிவிட்டு, மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்" - என்றதுதான் தாமதம், "நாண்டுகிட்டு செத்தாலும் சாவேனே தவிர, அழித்த சுவரொட்டியைக் கழுவமாட்டேன்" என முகத்திலறைந்து எதிர்வினையாற்றினார் போலீசு நிலையம் சென்றிருந்த தோழர்களில் ஒருவர்.

"சரி, நீங்கள் அழித்த சுவரொட்டிகள் மீது மீண்டும் அதே சுவரொட்டியையாவது ஒட்டிக் கொள்ளட்டுமே" - என்று போலீசு 'இறங்கி' வந்த போதும், "மீண்டும் ஒட்டினால் மீண்டும் அழிப்போம் சட்டப்படி என்ன செய்கிறீர்களோ செய்து கொள்ளுங்கள்" - என்று உறுதியாய் நின்றனர் தோழர்கள்.

மறுநாள் சுவரொட்டி அழிக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்கியும், பா.ஜ.க. பார்ப்பன பாசிஸ்டுகளின் கோர முகத்தையும், இதற்கு துணை போகும் போலீசின் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்தி, ம.க.இ.க., பெரியார் தி.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து சேத்துப்பட்டு பகுதி முழுவதும் தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்தி, இந்து மதவெறி பாசிசக் கும்பலுக்கெதிராக மக்களின் ஆதரவைத் திரட்டின.

இதனைக் கண்டு பாசிசக் கும்பலுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. போலீசுக்கோ இது கௌரவம் சம்பந்தப்பட்ட பிரச்சினையானது. விளைவு, சுவரொட்டிகளை மையிட்டு அழித்தக் 'குற்றத்திற்காக' ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர் வாசுதேவன், பெரியார் தி.க.வைச் சேர்ந்த தோழர் ராஜன் ஆகியோர் மீது பிணையில் வரமுடியாத, கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து சிறையிலடைத்தது.

சுவரொட்டியில் இருந்த அத்வானியின் முகத்தை மையிட்டு அழித்ததற்கே கொலை முயற்சி வழக்கும் சிறை தண்டனையுமென்றால், குஜராத், மும்பை, பகல்பூர், கோவை எனப் பல இடங்களில் மதக் கலவரம் நடத்தி ஆயிரக்கணக்கான முசுலீம்களைப் படுகொலை செய்த, அரியானா மாநிலம் துலினாவில் ஐந்து தாழ்த்தப்பட்டவர்களை உயிருடன் அடித்துக் கொன்ற "கொலைகாரன்" அத்வானிக்கு தூக்குத் தண்டனை கொடுத்திருக்க வேண்டும். இந்நேரம் அத்வானியின் கல்லறையில் மரமும் வளர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், நாடறிந்த இந்த கொலைகாரனுக்கு சட்டமும் நீதிமன்றமும் என்ன தண்டனையை வழங்கியுள்ளது? இம்மத வெறி கலவரங்களுக்காக அத்வானி மீது ஒரு 'பெட்டி கேஸாவது' போட்டிருக்கிறதா?

இப்படிப்பட்ட கொலைகாரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி ஒட்டக் கூடாது என்ற பொதுநோக்கத்தில்தான் அத்வானியின் பிறந்தநாள் சுவரொட்டி மீது ம.க.இ.க.வும், பெரியார் தி.க.வினரும் மையிட்டு அழித்தனரே தவிர, வேறெந்த 'உள்நோக்க'மும் அவர்களுக்குக் கிடையாது.

இப்பார்ப்பன-பாசிச கும்பல், தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பவர்களையெல்லாம் வன்முறையால் மட்டுமே எதிர்கொண்டு வருகிறது. ஆனால், மற்றவர்கள் மட்டும் இவர்களை எதிர்க்கும் போது "சட்டம் சொல்கிறபடி" நடந்து கொள்ளவேண்டும் என உபதேசம் செய்கிறது.




"சாதிக்கொரு நீதி" பேசும் பார்ப்பன-பாசிசக் கும்பலிடம், இப்பித்தலாட்டத்தைத் தவிர, வேறென்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ்.ஐயும்-பி.ஜே.பி.யையும் மற்ற ஓட்டுக் கட்சிகளைப் போல பார்க்க முடியாது. அடிப்படையிலேயே இவை இந்து மதவெறி பிடித்த, ஆதிக்க சாதிவெறி பிடித்த, ஆயுத பயிற்சி எடுத்துக் கொண்ட ஒரு பாசிச வன்முறைக் கும்பல். இவர்களை ஒழித்துக் கட்டாமல், சமூக அமைதியை பாதுகாக்க முடியாது. எனவே, இப்பாசிஸ்டுகளின் ஒவ்வொரு அசைவையும் - சுவரொட்டிகள் ஒட்டுவதில் தொடங்கி, விளக்கு பூஜை, ஷாகா நடத்துவது அனைத்தையும் கண்காணித்து, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, இப்பாசிஸ்டுகளுக்கெதிராக மக்களை அணி திரட்டியாக வேண்டும்.

தனது எதிரிவை வன்முறையால் மட்டுமே அணுகும் இக்கும்பலை, சட்டம், ஜனநாயகம் என்ற வரம்பிற்குள் மட்டுமே நின்று கொண்டு எதிர்கொள்ளவும் முடியாது. அவசியமான பொழுது சட்டத்தை மீறியும்தான் எதிர்கொண்டாக வேண்டும். அவாளின் "மொழியில்" சொன்னால்தானே "அவாளுக்குப் புரியும்"!

சிறையிலிருந்து வெளிவந்த தோழர்களை, ம.க.இ.க., பெரியார் தி.க., வி.சி. அமைப்புகளும், பகுதி மக்களும் பெருந்திரளாக அணி திரண்டு வரவேற்றனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து முழக்கமிட்டபடியே ஊர்வலமாய்ச் சென்று, அருகிலுள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, "இப்பாசிஸ்டுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட"ச் சூளுரைத்தனர்.

பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க வேண்டிய அவசியத்தை சேத்துப்பட்டு பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதற்க்கு சான்றாக அமைந்தது சிறை சென்று வந்த தோழர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி.

சந்தேகமிருந்தால், ஆர்.எஸ்.எஸ். கும்பலே ஒட்டிப் பாருங்கள் இன்னொரு சுவரொட்டியை!

ம.க.இ.க., சென்னை

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2008

Sunday, August 24, 2008

அணு ஒப்பந்தம் குறித்து... பாகம் I

ணு ஒப்பந்தம் குறித்து பொதுவாகவே ஆதரவான கருத்து நிலவுகிறது. அது குறித்து சரியான விவாதம் தமிழ்சூழலில் நடந்தேறாமலேயே போய்விட்டது. ஒவ்வொருவரும் தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கேற்ப இந்த பிரச்சினையை அனுகுவது என்பதும், உண்மையிலேயே இதை புரிந்து கொள்ள முயற்சி செய்யும் ஜனநாயக சக்திகளுக்கோ பக்க சார்பான தகவல்களே இலகுவாக கிடைக்கப் பெறுகிறது என்ற நிலையும் நிலவுகிறது. இந்த நிலையை கலையும் சிறு முயற்சியாக இரண்டு பாகங்களாக அணு ஒப்பந்தம் குறித்த விசயங்கள் இங்கு பேசப்படவுள்ளன. முதல் பாகம் இது அணு ஒப்பந்தம் சம்பந்தப்பட்டது என்ற பொது கருத்து நிலையிலிருந்தே அலசுகிறது. இரண்டாவது பாகம் இந்த ஒப்பந்தத்தின் உண்மையான பொருள், நோக்கம் அணுவை கடந்தது என்பதை அலசுகிறது.

__________________________________________________________

அணு ஒப்பந்தம் குறித்து நிலவும் கருத்துக்கள்:

#1) இந்தியாவின் மின்சாரத் தேவைக்காகவே இது போடப்படுகிறது
#2) இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இது தேவைப்படுகிறது
#3) இதை எதிர்ப்பவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரிகள்
#4) இதை கம்யுனிஸ்டுகள் எதிர்ப்பதன் காரணம் அமெரிக்க எதிர்ப்பு அரசியல்
#5) அணு ஒப்பந்தம் வேறு நாடுகளுடன் போடப்படவில்லையா? ஏன் இந்தியாவுடன் போடுவதை மட்டும் எதிர்க்கிறார்கள்?
#6) அமெரிக்கா ஏற்கனவே நாட்டை பாதி அடிமையாகிவிட்டது. தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது ஜாண் போனால் என்ன முழம் போனால் என்ன?
#7) அபாயகரமான கதிரியக்கம் என்பது பெட்ரோல் உற்பத்தி முதல் பல்வேறு விசயங்களில் வெளிப்படும் ஒன்றுதான். அணுவைப் பொறுத்தவரை இது ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட வதந்தி.

இன்னும் சில கருத்துக்கள் விடுபட்டிருக்கலாம். அணு ஒப்பந்தம் குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரியவில்லை என்பது வெள்ளிடை மலை. பெரும்பாலான கட்டுரைகள் யானையை விவரிக்க முயன்ற ஐந்து கண்பார்வையில்லாதவர்களின் கதையை நினைவூட்டுகின்றனர். 123 என்றால் என்ன? 123 ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டதா இல்லையா?, IAEA என்றால் என்ன? ஹைட் சட்டத் திருத்தம் என்றால் என்ன? எப்படி இந்த ஒப்பந்தம் இந்தியாவை அடிமைப்படுத்தும் என்கிறார்கள்? இப்படி பல கேள்விகள்.

இது தவிர்த்து, இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிடமிருந்து அணு உலைகளையும், அதற்கு தேவையான யுரேனியத்தையும் பெறுவதற்கே போடப்படுகிறது, CPM இந்தியாவின் இறையாண்மைக்காக தியாகம் செய்துள்ளது என்பது போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகள் வேறு பரவலாக உலாவுகின்றன. இவை குறித்து ஓரளவு புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஆக விளக்கமாக, எளிமையாக எடுத்துரைப்பதே இந்த கட்டுரை.


முதலில் அணு என்றால் என்ன, அணு சக்தி என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்:

ஒரு பொருளை உடைத்துக் கொண்டே சென்றால் ஒரு கட்டத்திற்க்கு மேல் உடைக்கும் போது அது இனிமேலும் அந்த குறிப்பிட்ட பொருள் என்பதற்க்கான பண்புகளை இழக்கும். அந்த கடைசி அளவிலான பொருளே அந்த குறிப்பிட்ட தனிமத்தின் அணு என்று புரிந்து கொள்ளலாம் #1. அணுவை உடைக்கும் போதோ அல்லது இணைக்கும் போது சக்தி உருவாகிறது. இதனை ஆங்கிலத்தில் Nuclear Fission, Nuclear Fusion என்று குறிப்பிடுகிறார்கள். இதில் உடைப்பதன் மூலம் சக்தி உருவாக்கும்(fission) தொழில் நுட்பமே பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இணைவின் மூலமான தொழில்நுட்பம் வெகு சில நாடுகளிடமே உள்ளது (ஹைட்ரஜன் குண்டுகள்).

அணு உடைப்பின் மூலம் அதிக சக்தி பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட அணுவின் எடை அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் எடை அதிகம் கொண்ட அணுவின் பிணைப்பு விசை(Binding energy) அதிகமாக இருக்கும். எனவே இந்த அணு உடைக்கப்படும் போது இந்த பிணைப்பு விசை சக்தியாக வெளியிடப்படுகிறது #2. அந்த வகையில் அதிகமான அணு எடை கொண்ட தனிமங்களே அணு உடைப்பிற்கு பயன்படுத்தப் படுகின்றன. இது போல அணு எடை அதிகமான தனிமங்களை கதிரியக்க தனிமங்கள் என்கிறோம். இவை யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் இன்னபிற. இவற்றில் யுரேனியமே எடை அதிகமுள்ளது. எனவே யுரெனியத்திலிருந்துதான் அணு சக்தி பெரும்பாலும் பெறப்படுகிறது.

ஒரு தனிமம் அணு உடைப்பிற்கு தகுதியானதா என்பதை முடிவு செய்வதில் அந்த தனிமத்தின் அணு உடைப்பு ஐசோடோப்பு பண்பு (Fissile Isotope) முக்கிய பங்கு ஆற்றுகிறது. எடுத்துக்காட்டுக்கு யுரேனியம் அணு பரவலாக u238 என்ற வடிவில்தான் கிடைக்கிறது. ஆனால் U235 என்கிற வடிவம்தான் அணு உடைப்பு ஐசோடோப்பு பண்பு கொண்டதாக இருக்கிறது. இந்த பண்பு கொண்ட அணுதான் நீடித்த அணு உடைப்பு சங்கிலி விளைவை ஏற்படுத்தும்(Sustained Chain reaction). இது நடந்தால்தான் யுரேனியம் அணுக்கள் அடுத்தடுத்து வெடித்து சக்தி அபரிமிதமாக கிடைக்கும் #3. இதில் 235, 238 என்பவை அணு எடையைக் குறிக்கின்றன.

ஐசோடோப் என்றால் என்ன?#4. ஐசோடோப்பு குறித்து பேசும் முன்பு அணு எண், அணு எடை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அணுவின் அணு எண்தான் அது எந்த தனிமம் என்பதை குறிக்கிறது. அணு எண் என்பது ஒரு அணுவில் உள்ள நேர்மின் துகள்களை குறிக்கிறது(எதிர் நேர் மின் துகள்கள் அணுவில் சமமாகவே இருக்கும்)#5. அணுவின் மையப்பகுதியான நியுக்ளியசில் புரோட்டானும்(நேர்மின்), நிய்ட்ரானும் இருக்கும், இது தவிர்த்து எல்க்ட்ரான்(எதிர்மின்) நியுக்ளியசுக்கு வெளியே சுற்றி வரும். அணு எடை என்பது நியூக்ளியசில் உள்ள நேர்மின் துகள்(புரோட்டான்), நியுட்ரானின் எண்ணிக்கையாகும் #6. ஐசோடோப் என்பது வெவ்வேறு அணு எடை கொண்ட ஆனால் ஒரே அணு எண்ணை உடைய அணுக்கள். அதாவது ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணு எடை கொண்ட அணுக்களே ஐசோடோப்புகள். U235 என்ற அணு எடை கொண்ட யுரேனியம் ஐசோடோப்பின் நீயுக்ளியசில் அணுச் சமன்பாடு குலைக்கப்பட்டுள்ளதால் இதனை உடைப்பது எளிது, இதிலிருந்து உருவாகும் சக்தி சுற்றியுள்ள பிற U235 அணுக்களை உடைப்பதன் மூலம் நீடித்த சங்கிலி விளைவை உருவாக்குகிறது. அணு, அணு சக்தி குறித்த அடிப்படை விஞ்ஞானம் இதுதான். அணு சக்தியின் நன்மை தீமை குறித்து இப்போது பார்க்கலாம்.


அணு சக்தியின் நன்மை, தீமை:


அணு வெடிப்பின் மூலம் சக்தி இரு வழிகளில் வெளிப்படுகிறது. ஒன்று கைனடிக் சக்தி(சுழற்சி விசை என்ற மொழிபெயர்ப்பு சரியா?) இன்னொன்று கதிரியக்கமாக வெளிப்படுகிறது. இந்த கதிரியக்கம் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களின் அணுக்களையும் பாதித்து கதிரியக்க தன்மைவாய்ந்ததாக மாற்றி விடுகிறது. இப்படி உருவாகுபவை அணு உலைகளில் பயன்படுத்தும் கையுறை முதலான பொருட்களில் இருந்து அனைத்தும் அடங்கும். அணு உடைப்பிற்கு பிற்பாடு மிச்சமிருக்கும் கதிரியக்க பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள இந்த அனைத்துவிதமான பொருட்களையும் அணுக் கழிவுகள் என்று குறிப்பிடுகிறார்கள். விலை குறைவாக, வீரியமான முறையில் சக்தி கிடைக்கிறது, கார்பன் மாசுபாடு மிகக் குறைவு என்பது அணுவின் நன்மை எனில், அதனால் உருவாகும் இந்த கழிவுகள் மிக அபாயகாரமானதாக இருக்கின்றன#7.

பொதுவாக அணு உலைகள் தவிர்த்து பிற தொழிற்சாலை உற்பத்திகளில் குறிப்பாக, எண்ணெய் உற்பத்தி நிலையங்களில் மிக அதிகளவில் கதிரியக்க கழிவுகள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு அபாயகராமானவைதான் என்றாலும் இவை குறை சக்தி கதிரியக்க கழிவுகள்(LLW/ILW). அதாவது பிற தொழிற்சாலை கழிவுகள் போன்றதே இது. இப்படி சொல்வதன் அர்த்தம் இந்த கழிவுகள் குறித்து நாம் குறைத்து மதிப்பிடுவது என்பது அல்ல. இன்று மனித குலத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள உலக வெப்பமடைதலுக்கு பின்னால் உள்ள அராஜக ஏகாதிபத்திய உற்பத்தி முறையை இந்த பிரச்சினைக்கும் காரணம். இவை நமது கடும் கண்டனத்திற்க்கும் எதிர்ப்பிற்கும் உள்ளாகும் விசயமாகவே உள்ளது. ஆயினும் ஒரு குற்றத்தை காரணம் காட்டி அதை விட பல மடங்கு பெரிய தவறை நியாயப்படுத்த முயலும் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தும் போது பெரிய தவறு உண்மையில் பெரிய தவறு என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டியுள்ளது. ஏனேனில் HLW எனப்படும் அதி உயர் கதிரியக்க கழிவுகளில் அணு கழிவு மட்டும்தான் வருகிறது. இப்படி ஒரு வருடத்திற்க்கு உருவாகும் HLW கழிவுகள் 12,000 மெட்ரிக் டன். அதாவது நூறு இரண்டு அடுக்கு பேரூந்து நிறைய கழிவுகள் உருவாகின்றன.

அணு வெடிப்பின் மூலம் கதிரியக்க தன்மை வாய்ந்தவையாக வெளிவரும் அணுக்களின் கதிரியக்க வாழ்நாள் வேவ்வேறாக உள்ளது ஒரு எடுத்துக்காட்டுக்கு ஐயோடின் உப்பின் கதிரியக்கம் 8 நாட்களில் வடிந்துவிடுகிறது. ஆனால் யுரெனியம் வெடிப்பில் பயன்படுத்தப்படும் புளோட்டனியம்-239 கழிவு வாழ்நாள் பல நூறு-ஆயிரம் வருடங்கள் நீடித்திருக்கும் தன்மை வாய்ந்தது. இன்ன பிற கழிவுகளின் வாழ்நாள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருக்கும். இதுதான் அணுக் கழிவுகளை மிக அபாயகரமானதாக மாற்றுகிறது. ஆக, மனித சமுதாயத்தின் தொடர்பிலிருந்து, புவியின் உயிர் சூழலின் தொடர்பிலிருந்து இந்த அணுக் கழிவுகள் சுத்தமாக தனிமைப்படுத்தப்பட்டு பல நூறு-ஆயிரம்-மில்லியன் வருடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியிருக்கிறது. இப்படி பாதுகாப்பதற்க்கான தொழில் நுட்பம் எதுவும் இல்லை.

இது போன்ற கழிவுகளை ஒழித்துக்கட்டும் தொழில்நுட்பம் இன்றி அவற்றை மூட்டைக் கட்டி சேர்த்து வைக்கும் வேலையையே தற்போது செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் யுகா(Yucca) மலையை இப்படி அணு குப்பைக் கூடையாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இது கடும் எதிர்ப்புகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்படி சேமித்து வைக்கப்படுவதற்க்கும் இடங்கள் இன்றி தற்போது தவித்து வருகிறார்கள். இது அணுக் கழிவுகள் என்ற அபாயம் குறித்தானது.

இது ஒருபக்கம் என்றால் இந்த அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது மிக அபாயகரமானதாக இருக்கிறது.

அணு எந்தளவுக்கு சக்தி கொண்டது எனில் நிலக்கரி, டிஎண்டி போன்றவற்றிலிருந்து பெருவதைவிட குறைந்தது 10மில்லியன் மடங்கு அதிகமான உபயோகிக்ககூடிய சக்தி அணுவிலிருந்து கிடைக்கிறது #8. ஹிரோசிமாவில் போடப்பட்ட அணு குண்டில் இருந்த யூரேனியம்-235 அணுவின் அளவு 60கிலோ இதில் 828 கிராம்தான் வெடித்தது, இதிலும் 6கிராம்தான் சக்தியாக உருமாறியது #9. இதிலிருந்து வெளிப்பட்ட சக்தியின் அளவு 13கிலோடன் டிஎண்டி வெடித்ததற்க்கு இணையாக இருந்தது. இதுவே ஒரு முழு நகரத்தை உடனடியாக அழித்தது எனில் இதன் சக்தியை புரிந்து கொள்ளலாம். இந்த தோல்விகரமான குண்டு வெடித்ததில் உடனடியாக 1.6 கிலோமீட்டர் சுற்றளவு அழிந்து விட்டது. இதனால் ஏற்பட்ட தீ 11.2 சதுர கிலோமிட்டர் பரப்பளவிற்கு பரவியது. ஹிரோசிமாவின் 90% நகரம் முற்றிலும் அழிந்தது #10. நாகசாகியில் வெடித்த குண்டு உருவாக்கிய காளான் புகையோ 18 கிலோமீட்டர் உயரம் இருந்தது.

நாகசாகியில் இடப்பட்ட புளூட்டோனியம்-239 குண்டு 6.4 கிலோதான். இதிலிருந்து வந்த சக்தி 21 கிலோடன் டிஎண்டிக்கு இணையாக இருந்தது. உருவான வெப்பம் 3900 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் 1005கிமீ/மணி. உடனடி அழிவு 1.6 கிமீ சுற்றளவிலும், இதனால் ஏற்பட்ட தீ 3 கிமீ சுற்றளவுக்கு பரவியது. இந்த இரண்டு குண்டு வெடிப்பிலும் உடனடியாக இறந்தவர்கள் லட்சங்களில். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு அடுத்த சில மாதங்களில் இதே அளவில் இறந்தார்கள். இது தவிர்த்து இதன் கதிரியக்க விளைவுகள் இன்று வரை கூட தொடர்கின்றன.

அணு விபத்துக்கள் என்றால் அவ்வப்போது சிறிய அளவில் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் உண்மை நிலவரங்களை யாரும் வெளியிடுவதில்லை. அணு விபத்துக்களில் முக்கியமானவை எனில் ரஸ்யாவில் நிகழ்ந்த செர்னோபிள்ளும், அமெரிக்காவில் நிகழ்ந்த மூன்று மைல் தீவு விபத்தும் உள்ளன. இதில் செர்னோபிள் விபத்தில் 56 பேர் சொச்சம் இதுவரை இறந்துள்ளனர். கதிரியக்க பின் விளைவுகள் குறித்து முரன்பாடான தகவல்கள் உலாவுகின்றன. மூன்று மைல் தீவு விபத்தில் யாரையுமே கதிரியக்கம் பாதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆயினும் இந்த உலை மூடப்பட்டது. குறிப்பாக செர்னோபிள் விபத்தில் கதிரியக்க சாம்பல்களும், தூசுகளும் 1000மைல்களுக்கு அப்பால் ஐரோப்பிய நாடுகளில் காற்றில் பரவி கதிரியக்க பாதிப்பை ஏற்படுத்தும் அளவு இருந்தது. செர்னோபிள்லிருந்து சில கிமீ தள்ளியிருந்த பிரிபியாட் நகரமே மொத்தமாக காலி செய்யப்பட்டது. வெறும் கட்டங்களுடன் பேய் நகரமாக அது நிற்கிறது. செர்னோபிளில் வெடித்த அணு உலையை மறைக்கும் வகையில் ஒரு பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டது. பிறகு அந்த வெடித்த அணு உலையில் அபாயகரமான கழிவுகள் இருப்பதை முன்னிட்டு தற்போது 105மீ உயரம், 200 மீ நீளத்தில், 257மீ அகலத்தில் ஒரு பெரிய வளைவு உலோக மூடி ஒன்றை தயாரித்து 2011ல் இந்த அணு உலையை மூடப் போகிறார்கள். இந்த இரண்டு விபத்துக்களும் அணு உலை குறித்த சர்வதேச கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு ஆற்றின. குறிப்பாக மேற்கு நாடுகள் புதிதாக அணு உலைகள் திறப்பதையே இத்துடன் நிறுத்திக் கொண்டன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனைத்துமே தம்மிடம் ஏற்கனவே உள்ள அணு உலைகளின் வீரியத்தை அதிகப்படுத்தி தமது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டனர் #11, #12.

அணுவின் நன்மை தீமைகள் குறித்து இங்கு பார்ப்பதன் முக்கியத்துவம் ஒன்று உள்ளது. விஞ்ஞானிகள் மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகவே அரிய பல கண்டுபிடிப்புகளை செய்கிறார்கள். ஆயினும் மனிதர்களிடையே இருக்கின்ற முரன்பாடுகளும், முதலாளித்துவ லாப வெறியும் அந்த கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்கே எதிராக பயன்படுத்தச் செய்து விடுகிறது. எய்ட்ஸை சோதனைச் சாலையில் உருவாக்கி தனது சொந்த நாட்டு மக்கள் மீதே பரிசோதித்த அமெரிக்க முதல் இன்று பரிசோதனைச் சாலை எலிகளாக அப்பாவி இந்தியா ஏழைகளை அரசு மருத்துவமனைகளில்(AIIMS Children killed in Medical trial) கொன்று குவிப்பது வரை இவர்களின் லாப வெறியும் போட்டி பொறாமையும் மனிதர்களை மதித்ததே இல்லை என்பதுதான் உண்மை. இங்கு கேள்வி நாம் ஒரு சமூகமாக அணு சக்தியை பயன்படுத்தும் பொறுப்பு உடையவர்களாக இருக்கிறோமா என்பதுதான்.

இந்த விபத்துக்கள் எல்லாமே மிக முன்னேறிய நாடுகளில் ஏற்பட்ட விபத்துக்கள். எடுத்துக்காட்டுக்கு செர்னோபிள் விபத்தில் வெளியேறிய மக்களுக்காக பல கோடிகளில் புதிய குடியிருப்புகளும், பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும் இன்ன பிற நகர்ப்புற அத்தியாவசிய உள்கட்டுமானங்களும் புதிதாக கட்டியமைக்கப்பட்டன. உள்ளூரில் கிடைக்கும் மரத்தை எரித்தால் கதிரியக்கம் வரும் என்று நம்பியதால் இந்த இடங்களுக்கான எரிபொருள் தேவைக்காக 8,980 கிமீ நீளத்திற்க்கு புதிதாக எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டன. உள்ளிருந்தே சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த சோசலிச கட்டுமானத்தைக் கொண்டு அன்றைய ரஸ்ய ஏகாதிபத்தியம் இவற்றை சமாளித்தது. இதே போன்ற விபத்து இந்தியாவில் ஏற்பட்டால் என்ன ஆகும்? இந்தியாவில் அணு உலைகள் மக்கள் வாழும் இடங்களின் அருகிலேதான் வைக்கப்பட்டுள்ளன- கல்பாக்கம் அணு உலை முதற் கொண்டு. இந்தியா தனது மக்களை எந்தளவிற்கு மதிக்கிறது என்பதற்க்கு ஆதாரங்கள் தேவையில்லை. அணு விபத்து அல்ல மாறாக ஒரு சாதரண ராசயண விபத்து இந்தியாவில் போபாலில் நிகழ்ந்தது. யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க உளவு கம்பேனி நடத்திய சோதனையின் விளைவாக ஆயிரக்கணக்கில்(அரசு சொல்வது - 3000 பேர், ஓரளவு நம்பத்தகுந்த விவரம் - 8000 பேர், ஒட்டு மொத்தமாக இது வரை கிட்டத்தட்ட 20,000 பேர் வரை) போபால் மக்கள் இறந்து போயினர். இன்று வரை இந்த அமெரிக்க கம்பேனியின் பொறுப்பாளர் எவனையும் கைது செய்யவோ தண்டனை கொடுக்கவோ இல்லை இந்த அரசு. இது வரை அந்த தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படவில்லை. வாழும் வெடி குண்டாக அந்த தொழிற்சாலைக் கழிவுகள் நீர், நிலம், காற்றை நஞ்சாக்கி பல்வேறு உடல் கேடுகளை உருவாக்கி வருகிறது. இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணம் தரப்படவில்லை. விசயம் இப்படி இருக்க யூனியன் கார்பைடு மீது உள்ள வழக்கை விலக்கிக் கொள்ள தயார் என்று முழங்குகிறார் மன்மோகன் சிங். இதுதான் இந்திய அரசு தனது மக்களை மதிக்கும் விதம். சென்னை அருகில் உள்ள கல்பாக்கம் அணு உலை உலகின் மிக அபாயகரமான உலைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது, அடிப்படை குளிர்விக்கும் வசதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாத அணு உலை அது என்பது இங்கு கவனிக்கத்தக்கது #13.

அணு சக்தி என்பது மிக மிக அற்புதமானதொரு/அபாயகரமானதொரு சக்தி அதனை பயன்படுத்துவது என்பதற்க்கு குறைந்த பட்ச ஜனநாயக பண்பு கொண்ட சமூகத்தாலேயே முடியும் இல்லையேல் அது அபாயகரமானது. அணு சக்தி தயாரிப்பு தொழில் நுட்பம் குறித்து இப்போது பார்க்கலாம்.


அணு சக்தி உற்பத்தி தொழில் நுட்பம்:
(Sensitive Nuclear Technology - SNT)


அணு சக்தி தொழில் நுட்பத்தில் மூன்று தொழில் நுட்பங்கள் மிக முக்கியமானதாக சொல்லப்படுகின்றன(SNT).
அவை முறையே #14,
#1) யுரேனியம் செறிவூட்டுதல் - Uranium Enrichment,
#2) மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு - Nuclear Fuel Reprocessing,
#3) கன நீர் தாயாரிப்பு - Heavy water manufacturing.


இந்த மூன்று தொழில் நுட்பங்களை தெரிந்த கொண்டுள்ள நாடு அணுவிலிருந்து சக்தி எடுப்பதைப் பொறுத்தவரை சுயச் சார்பான நாடாகும் தகுதி படைத்தது. இந்த மூன்று தொழில் நுட்பம் தெரிந்த நாடு சொந்தமாக அணு குண்டுகளையும் தயாரிக்கலாம். எனவேதான் இந்த தொழில் நுட்பங்கள் பிற நாடுகளுக்கு பரவுவது ஏகாதிபத்தியங்களுக்கு பிடிப்பதில்லை. இப்பொழுது இந்த மூன்று தொழில் நுட்பங்கள் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

யுரேனியம் செறிவூட்டுதல் எனப்படுவது இயற்கையில் U238 என்ற அணு எடை கொண்ட ஐசோடோப்புகள் அதிகம் இருக்குமாறு கிடைக்கும் கச்சா யுரேனியத்தை U235 என்ற அணு எடை கொண்ட யுரெனியம் ஐசோடோப்பு அதிகம் கொண்டதாக மாற்றுவதே யுரேனியம் செறிவூட்டுதல் எனப்படுகிறது. இதுதான் எரிப்பதற்க்கு ஏற்ற அணு எரிபொருள் வடிவம் ஆகும் #15.

மறு பயன்பாட்டுக்கான தாயாரிப்பு (N Fuel Reprocessing) எனப்படுவது ஒரு முறை பயன்படுத்தப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரி பொருள் கலவையிலிருந்து புளூட்டோனியம், கச்சா யுரேனியம்(U238) போன்றவற்றை பிரித்தெடுப்பது ஆகும். இதனுடன் யுரெனியம் செறிவூட்டுதலில் கிடைக்கும் தரம் குறைந்த யுரேனிய எரிபொருளை(Depleted Uranium) கலந்து, இது மீண்டும் இன்னொரு முறை எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது குறை செறிவு யுரேனிய எரிபொருளுக்கு இணையான சக்தியை கொடுக்கும் தன்மை கொண்டது. உலகிலுள்ள பெரும்பாலான அணு சக்தி உலைகள் குறை செறிவு யுரேனியத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டவையே (குறிப்பாக ரஸ்ய வகைகள்). இந்த மறுபயன்பாட்டு எரிபொருள் கலவையை ஆக்சைடு எரிபொருள் கலவை என்கிறார்கள்(Mixed Oxide Fuel) #16, #17. இந்த தொழில் நுட்பத்தின் மூலமும் அணு ஆயுதம் தயாரிக்கலாம்.

கன நீர் தாயாரிப்பு குறித்து. சாதாரண நீர் என்பது H2O. கன நீர் என்பது D2O. இதில் D என்பது ஹைட்ரஜன் ஐசோடோப்பு. அணு உலையில் எரிக்கப்படும் அணுவிலிருந்து கிடைக்கும் வெப்பத்தால் கனநீர் ஆவியாக்கப்பட்டு அந்த அழுத்தமான ஆவி டர்பைனில் மோதவிடப்பட்டு அது ஒரு ஜெனெரேட்டரை இயக்கி மின்சாரம் தாயார் செய்யப்படுகிறது. கன நீர் தயாரிப்பு தொழில் நுட்பத்தின் மூலம் யுரெனியம் செறிவூட்டுதல் தொழில் நுட்பம் இன்றியே (புளுட்டோனியம்)அணு ஆயுதம் தயாரிக்க முடியும். #18.

மேற்சொன்ன மூன்றில் ஏதேனும் ஒரு தொழில் நுட்பம் இருந்தாலே அதன் மூலம் அணு ஆயுதத்திற்க்கு தேவையான புளூட்டோனியமோ அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியமோ எரிபொருளாக தயாரிக்க முடியும் என்பதால் இவற்றை மிக முக்கிய தொழில் நுட்பங்களாக வகைப்படுத்தியுள்ளனர் ஏகாதிபத்தியங்கள்.

இந்த மூன்று தொழில் நுட்பங்களுமே இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. நாம் யாரிடமும் யுரேனியம் சம்பந்தப்பட்ட இந்த தொழில் நுட்பங்களுக்காக கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் உண்மை.

ஒரு உண்மை கடந்த 30 வருடங்களாக புதிய அணு உலைகளை மேற்கு நாடுகள் நிறுவாததால் அந்த அரதப் பழசான விற்காத தொழில்நுட்பங்களை, உலைகளை 3 லட்சம் கோடிக்கு நம் தலையில் கட்டுகிறார்கள் அமெரிக்க யுரெனிய உலை முதலாளிகள். இன்னொரு உண்மை இந்த தொழில் நுட்பங்களும் நம்மிடம் ஏற்கனவே இருக்கின்றன. இன்னொரு உண்மை இதே போல இந்தியா விஞ்ஞான வளர்ச்சியடைந்து சுயசார்பு அடைவது என்பதை, அமெரிக்கா எப்போதுமே திட்டமிட்டு முடக்கி வந்துள்ளது அல்லது இணைந்து வேலை செய்யலாம் என்று தொழில் நுட்பங்களை திருடி வந்துள்ளது. வெகு சுலபமான உதாரணங்கள் ராணுவ தளவாடங்கள், ராக்கெட், இலகு ரக விமான தயாரிப்புகளில் எப்பொழுதெல்லாம் இந்தியா அடுத்தக்கட்ட தொழில் நுட்ப வளர்ச்சியடைகிறதோ அப்பொழுது அந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு வரவிடாமல் தடுத்து தன்னிடம் உள்ள இணையான-பழைய தொழில் நுட்பத்தை தலையில் கட்டும். ஈராக்கிற்கு ஒரு ஸ்கட் என்றால் இஸ்ரேலுக்கு ஒரு பேட்ரியாட். பேட்ரியாட்தான் சக்தி வாய்ந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமெரிக்காவுடனான நமது இதுவரையான வணிக உறவுகளில் நம்மை அவர்கள் ஏமாற்றியதுதான் வரலாறாக உள்ளது. தராப்பூர் அணு மின் நிலையம், பசுமைப் புரட்சி, கோதுமையில் பார்த்தீனியச் செடி, செயற்கைகோள் மூலம் பார்த்து வளங்கள் இல்லை என்று பொய் சொன்னது, முதல் சமீபத்திய ராணுவ தளவாட வியாபாரங்கள் வரை. அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பது பற்றிய நமது இந்த கருத்து ஒரு அம்சம் மட்டுமே. இதுவும்கூட மையமான நமது எதிர்ப்பிற்க்கு காரணம் அல்ல.

இது தவிர்த்து அணு சக்தி தாயாரிப்பில் தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில் நுட்பம் வேறு உள்ளது #19. தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் போது அது U233 என்ற யுரேனியம் ஐசோடோப்பாக மாறி பின்பு எரிகிறது. U233 என்பதும் U235யை போலவே அணு உடைப்பு பண்பு கொண்ட ஐசோடோப்பு ஆகும் (Fissile Isotope). எனவே யுரேனியத்தை பயன்படுத்தும் முன்பு அதனை U235 ஆக மாற்றுவது போல தோரியத்தை பயன்படுத்தும் போது செய்ய வேண்டியது இல்லை. அதாவது யுரேனியம் செறிவூட்டல் என்று தனியாக எதுவும் செய்யத் தேவையில்லை. மேலும் தோரியத்திலிருந்து உருவாகும் அணு கழிவு குறைவு.

இந்த தொழில்நுட்பத்திலும் இந்தியா சுயச்சார்பானதாகவே உள்ளது. தோரியத்தை அடிப்படை எரிபொருளாக பயன்படுத்தும் ஆராய்ச்சியில் மூன்று கட்டத் திட்டம் ஒன்றை இந்தியா கடைபிடித்தது.

முதலில் கன நீர் தயாரிப்பு தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதன் மூலமும், Reprocessing மூலமும் பூளூட்டோனியம் தயாரிப்பது, உயர் அழுத்த கன நீர் உலைகளை தொழில்நுட்பத்தில் சுயச்சார்படைவது.

இரண்டாவது கட்டமாக இந்த புளூட்டோனியத்தை, தோரியத்துடன் சேர்த்து யூரேனியம் U233ஆக மாற்றி அணு உலையில் எரிப்பது.

மூன்றாவதாக இந்த வகை அணு உலையிலிருந்து தோரியத்தை நேரடியாக U233 ஆக மாற்றி பிறகு அதனை எரிபொருளாக பயன்படுத்துவது #20.

இது தவிர்த்து இதே தோரியம் தொழில் நுட்பத்தில் இயங்கும் அணு உலைகளை இந்தியாவிற்க்கு விற்பதற்க்கும் அமெரிக்காவில் உள்ள சில கம்பேனிகள் தயாராக உள்ளன. ஆனால் அந்த கோரிக்கைகள் அமெரிக்க இந்திய அரசுகளால் ஊக்கப்படுத்தப்படவில்லை. அந்த தொழில் நுட்பம் கிடைத்தால் இந்தியா வெளிநாடுகளை நம்பியிராமல் தனது சொந்த தோரியம் இருப்பைக் கொண்டே அணு சக்தி தயாரிக்கலாம் (''Thorium to give India an edge'' எக்னாமிக் டைம்ஸ் - 4 Jan, 2007). ஆனால் அவ்வாறு நடந்தேறாமல் யுரேனியம் என்ற துருப்புச் சீட்டின் மூலம் மட்டுமே இந்த ஒப்பந்தம் நடந்தேற வேண்டும் என்பதில் அமெரிக்காவும், இந்திய அரசும் உறுதியாக நிற்கின்றன. ஏனேனில் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் அணு சக்தி கிடையாது. இது பின்னர் விரவாக பார்க்கப்படும்.

உண்மையில் அமெரிக்க கம்பேனியின் தோரியம் தொழில் நுட்பமும் நமக்கு தேவையில்லை. நாமே இந்த துறையில் போதிய தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுள்ளோம்.

செப்டம்பர் 1970லேயே டிராம்பேயில் உள்ள பாபா அணு சக்தி மையம் தோரியத்திலிருந்து U233 யுரேனியம் ஐசோடோப்பை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது #21.

1995-ல் காக்ரபுர்-ல் இரண்டு அணு உலைகளில் குறை செறிவு யுரேனியத்திற்கு பதிலாக உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தோரியம் வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்டது.

குறிப்பாக ஆகஸ்டு 2005ல் மும்பை பாபா அணு ஆய்வு மையம் தோரியத்தை புளூட்டோனியத்துடன் வினையூட்டி U233 எரிபொருள் உருவாக்கி அணு சக்தி தயாரிக்கும 600MW திறன் கொண்ட இரண்டாம் கட்ட அணு உலையை வடிவமைத்து அறிவித்தனர் #22. உலகிலேயே மிக பாதுகாப்பான அணு உலையாக இதனை பெருமையுடன் அறிவித்தனர். ஏனேனில் யுரேனியம் செறிவூட்டல் தேவையில்லை. இரண்டு வருடத்திற்க்கு எரிபொருள் தேவையின்றி, எந்த தலையீட்டுக்கான அவசியமுமின்று சுலபமாக சக்தியை உருவாக்கும் இந்த அணு உலை. அணு உடைப்பு சுமுகமாக நடந்தேறுவதால் அணு உலையில் எரிபொருளை தாங்கி நிற்கும் Core எனப்படும் பகுதியின் வாழ்நாள் இரண்டு வருடங்களாக அதிகரிக்கிறது. எனவே அணுக் கழிவுகளை கையாள்வதும் யுரேனியம் அணு உலைகள் போன்று அடிக்கடி இல்லாமல் இலகுவானதாக உள்ளது. இதிலிருந்து அணுக் கழிவுகளும் குறைவாக வருகிறது. வடிவமைப்பில் இருந்த இந்த அணு உலை 2008ல் கல்பாக்கத்தில் நிறுவப்பட்டு கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இது தோரியம் அணு உலையை நோக்கிய இரண்டாவது கட்டம்.

தோரியம் தொழில் நுட்பத்தின் கடைசி கட்டமாகிய மூன்றாவது கட்டம் வரை இந்தியா வெற்றி கண்டுள்ளது(AHWR). AHWR வகையில் 75% தோரியம் எரிபொருளாக இருக்கும். இது தவிர்த்து மூன்றாவது கட்டத்தில் முற்றிலும் தோரியத்தை மட்டுமே பயன்படுத்தும் ADS (Accelerator Driven Systems) உலைகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் சோதனை அளவில் வெற்றி பெற்றுள்ளது. கல்பாக்கத்தில் காமினி(KAMINI)-கல்பாக்கம் மினி என்ற பெயரில் 30KW உலை நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.300MWல் புதிய தோரிய அணு உலை நிறுவும் வேலைகள் நடந்து வருகின்றன #23.

இரண்டாவது கட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை தோரியத்துடன் சேர்ந்து புளூட்டோனியத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. புளூட்டோனியம் நமக்கு இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று வெளிநாடுகளிடமிருந்து வாங்குவது. மற்றொன்று Reprocessing மூலமும், கன நீர் தயாரிப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் புளுட்டோனியம் தயாரிப்பது. இதில் முதல் வகையை நாம் நம்ப இயலாது. மேல்நிலை வல்லரசுகள் நமது சுயசார்பை ஒழித்துக்கட்ட வசதியாக புளூட்டோனியம் கிடைப்பதை தடுக்கவே செய்வார்கள். ஆனால் நம்மிடம் ஏற்கனவே உள்ள Reprocessing தொழில்நுட்பத்தின் மூலமும், கன நீர் தொழில் நுட்பத்தின் மூலமும் நமக்கு தேவையான புளூட்டோனியத்தை நாமே தயாரித்துக் கொள்ளலாம் (இதுவும் கூட மூன்றாவது கட்டமாகிய ADS முழுமையாக வியாபார பயன்பாட்டுக்கு வரும் வரைதான். அதற்க்கு பிறகு இந்த பிரச்சினைகளும் கிடையாது).

இதன் அர்த்தம் SNT எனப்படும் அணு தொழில்நுட்பங்களில் இந்த இரண்டு தொழில்நுட்பங்கள் இந்தியா தனது அணு விஞ்ஞானத்தை அடுத்தக்கட்டத்திற்க்கு சுதந்திரமாக வளர்த்தெடுப்பதற்க்கு இன்றியமையாததாக உள்ளது என்பதே ஆகும். தற்போதைய 123 ஒப்பந்தம் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதற்க்கும், வளர்த்தெடுப்பதற்க்கும் ஆப்பு அடிப்பதாக இருப்பதாலேயே விஞ்ஞானிகள் இதனை எதிர்க்கிறார்கள் #24. இப்பொழுது இந்தியாவில் அணு தொழில் நுட்பம் வளர்ந்த பாதையையும், இந்தியாவின் மின்சாரத் தேவை குறித்தும், இந்தியாவில் உள்ள யுரேனியம், தோரியம் எரிபொருள்களின் எதிர்காலம் குறித்தும் பார்க்கலாம்.


இந்தியாவில் அணு தொழில் நுட்பத்தின் வளர்ச்சிப் பாதை, எரிசக்தி தேவை, எரிபொருள் இன்னபிற:


22 ஜனவரி 1965-ல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி புளூட்டோனியம் ரிபுரோசசிங் ஆலையை டிராம்பேவில் திறந்து வைத்தார். அமெரிக்காவின் கருத்தில் அப்போதைய இந்தியா ஒரு வருடத்திற்க்கு 100 அணு குண்டுகள் தாயாரிக்க தேவையான புளூட்டோனியம் ரிபுரோசஸ் செய்யத் தேவையானவற்றை கொண்டிருந்தது.

செப்டம்பர் 1970லேயே டிராம்பேயில் உள்ள பாபா அணு சக்தி மையம் தோரியத்திலிருந்து U233 யுரேனியம் ஐசோடோப்பை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது #25.

22 May 1972-ல் பூர்ணிமா-I ஆய்வு உலை பாபா அணு சக்தி மையத்தில் நிர்மாணிக்கப்பட்டது. முற்றிலும் பாபா அணு சக்தி மையத்தின் இந்திய விஞ்ஞானிகளாலேயே தயாரிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. 21 கிலோ புளூட்டோனியத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த உலை #26.

இந்த காலகட்டத்தில் அணு ஆயுதம் குறித்த இந்தியாவின் கருத்து அமைதிக்காக அணு ஆயுதம் பரிசோதனை செய்வது என்ற நிலையை அடைந்தது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து அணு உதவிகளை பெற்று வந்தது. ஆயினும் வெளிப்படையாகவே அணு வெடிப்பு சோதனைக்கு தயாராகி வருவதை அறிவித்தே வந்துள்ளது இந்தியா. பாராளுமன்றத்திலும் இவை குறித்து அடிக்கடி மயிர் பிளக்க விவாதிக்கப்பட்டது.

1974-ல் IAEAன் நிர்வாகக் குழுவில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து 18வது வருடமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. காரணம் அணு சக்தி தொழில் நுட்பம் உள்ள உலகின் 9 நாடுகளில் ஒன்றாக அன்று இந்தியா இருந்தது.

18 மே 1974-ல் இந்தியா பொக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனை செய்கிறது. அணு இணைப்பு(Fusion) தொழில் நுட்பத்திற்க்கான ஆய்வுகளையும் இந்திய விஞ்ஞானிகள் தொடங்கினர்.

இதற்க்கு பிறகும் கூட ஜூன் 1974ல் தராப்பூர் அணு மின் நிலையத்திற்க்கு யுரேனியம் அனுப்புகிறது அமெரிக்கா. இந்தியாவின் அணு குண்டு சோதனை எந்த ஒப்பந்தத்தையும்(1963 ஒப்பந்தம்) மீறிவிடவில்லை என்று அமெரிக்க கூறியது #27.

ஆனாலும் கூட செப்டம்பர் 1974ல் இந்திய அணு சக்தி கமிசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா. இது அடுத்தக்கட்ட யுரேனியம் அனுப்புவதற்க்கு புதிய உறுதிமொழிகளையும், பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் கோருவதாக இருந்தது.

25 ஆகஸ்டு 1975-லோ இன்னும் ஒரு படி மேலே போய் அமெரிக்க உளவு பிரிவினர் பின் வரும் அறிக்கை அளித்தனர் அதாவது, இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து அணு குண்டு தயாரிக்க இந்தியாவின் உதவியை வேண்டி இருப்பதாக அறிக்கை அளித்தனர்.

தீடிரென்று ஜனவரி 31 1976-ல் தாராப்பூர் அணு உலையில் கதிரியக்க கசிவு அபாயம் இருப்பதாக சொல்லும் GE(General Electricals என்ற ரத்தவெறி கம்பேனி)யின் குற்றச்சாட்டை அமெரிக்க செனட் கமிட்டி ஆய்வு செய்ய இருப்பதாக அமெரிக்க செனட்டர் ஜான் க்லன் கூறினார். அமெரிக்க அணு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த டாக்டர் ஸ்டீவன் ஹனயுர் தராப்பூர் அணு உலை பெரிய அபாயாத்தை எதிர்நோக்கி இருப்பதாக கூறினார். இத்தனைக்கும் இந்த அணு உலையில் புதிய எரிபொருள் நிரப்புவதும் அதனை ஒட்டி பராமரிப்பு பணிகள் முழுவதும் சில வாரங்களுக்கு முன்புதான் செய்து முடிக்கப்பட்டிருந்தன. இந்த புதிய எரிபொருள் கூட அணு குண்டு வெடிப்பிற்கு பிறகு அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பியதுதான். விசயம் அணு வெடிப்பு அல்ல மாறாக எகிப்து உடனான இந்திய அணு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டதே பிரச்சினை.

இதற்கிடையில் இந்தியாவின் உறுதிமொழியை ஒட்டி கனடா மீண்டும் உதவிகள் செய்ய ஒத்துக் கொண்டது(பிறகு உடனடியாக பின்வாங்கியும் விட்டது). ஒப்பந்தத்தை இந்தியா மீறிய போதும் கூட வலியுறுத்தி கேட்ட போது கனடா ஒத்துக் கொண்டது. ஆனால் போட்டுக் கொண்ட 1963 ஒப்பந்தத்திற்க்கு சம்பந்தமில்லாமல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தனக்கு விரோதமாக இருப்பதாலேயே இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்தது அமெரிக்கா. ஏப்ரல் 1974-ல் NSG வழிகாட்டுதல்களுக்கு கட்டுப்படுவதாக எழுதிக் கொடுக்கச் சொல்லி இந்தியாவிற்க்கு புதிய நிபந்தனைகளை விதித்து மிரட்டுகிறது அமெரிக்கா. குறிப்பாக உயர் அணு தொழில்நுட்பங்களை இந்தியா ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துவதுதான் அமெரிக்காவின் இந்த நெருக்குதலுக்கு காரணம். கடைசியில் 1963 ஒப்பந்தத்தை தூக்கி குப்பையில் போட்டு மூடியது அமெரிக்கா. காரணம் அணு குண்டு வெடிப்பு என்று அமெரிக்காவும் சொல்லவில்லை. உண்மையும் அதுவல்ல. தராப்பூர் ஆலை தனக்கான எரிபொருள் தேவைக்கு மாற்று வழிகளை வேண்டி நின்றது.

உலகில் வேறு எங்குமே இல்லாத புதிய தொழில் நுட்பத்தில் ரிபுரோசசிங் செய்யும் ஒரு ஆலையை 1974-ல் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டது. இதனிடையா இந்தியா ஈரான், எகிப்து, லிபியா போன்ற நாடுகளுக்கு அணு சக்தி தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்க்கான வேலைகளில் இறங்கியது.

இந்தியாவிற்கு அணு எரிபொருள் தொடர்ந்து வேண்டுமென்றால் முழு அணு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும், ரிபுரோசசிங் தொழில்நுட்பத்தை தலைமுழுக வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்தித்தது. இந்த அடிப்படையில் அணு எரிபொருளை அனுப்பியும் வைத்தது. ரிபுசோசசிங் தொழில் நுட்பத்தையும், கன நீர் தயாரிப்பு தொழில் நுட்பத்தையும் விட்டொழித்தால் எல்லா காலத்திற்க்கும் இந்தியா மேல் நிலை வல்லரசுகளிடம் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டியதுதான். ஏனேனில் நமது அணு எரிபொருள் சுயச்சார்பை உறுதிப் படுத்தும் துருப்புச் சீட்டு இந்த இரண்டு தொழில் நுட்பங்கள்தான் என்பதை நாம் மேலே ஏற்கனவே விளக்கியிருந்தோம்.

ஆயினும் இந்த காலகட்டம் முழுவதும் தராப்பூர் அணு உலைக்கு தேவையான யுரேனியத்தை அமெரிக்க அனுப்பியே வந்தது(தாமதமாகவேனும்). காரணம் வேறொன்றுமில்லை, இந்தியாவிடமே இருக்கும் யுரேனியம் 1980-ல் கண்டுபிடிக்கப்பட்டதும். அதனை செறிவூட்டுவதற்க்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளை இந்திய விஞ்ஞானிகள் 1980களில் உடனடியாகவே தொடங்கிவிட்டதுமே காரணம். அமெரிக்கா 1980 மத்தியில் யுரெனியம் அனுப்புவதற்க்கு முரண்டு பிடித்த வேளையில் இந்தியா தான் சொந்தமாக தாயரித்த யுரேனியத்தின்(உத்தரபிரதேசத்திலிருந்து) மூலமே அணு உலைகளை நடத்தும் வேலைகள் தொடங்கிவிட்டது. 1981-ல் ரீகன் அரசு தராப்பூர் அணு உலைக்கு யுரேனியம் அனுப்புவதை நிறுத்திக் கொள்வதற்க்கு அடிப்படையாக இருந்த 1963 ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. தராப்பூர் அணு உலைக்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்குவதற்க்கு GE கம்பேனிக்கு அமெரிக்க அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. ஒப்பந்தப்படி அனுப்ப வேண்டிய 19 டன் யுரேனியத்தை கடைசி வரை அனுப்பாமலும் ஏமாற்றியது.

இதனிடையே இந்திய விஞ்ஞானிகள் ரிபுரோசசிங் தொழில் நுட்பம், கன நீர் தொழில் நுட்பம், யுரேனியம் செறிவூட்டுதல் தொழில் நுட்பங்களையும், அவற்றை நடைமுறையில் பயன்படுத்துவதற்க்கான பல்வேறு அணுக் கூடங்களையும் நாடு முழுவதும் கட்டியிருந்தனர். யுரேனியம் வளங்களும், தோரிய வளமும் இந்தியாவில் கிடைக்கும் இடங்களும் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. பிற நாடுகளுடன் அணு தொழில்நுட்ப வியாபாரம் செய்யும் அளவு இந்தியா வளர்ந்திருந்தது. இந்த காலகட்டத்தில் 1963 ஒப்பந்தத்தின் படி இந்தியாவுக்கு அமெரிக்க அனுப்பியிருந்த 250டன் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு அது மீண்டும் ரிபுரோசசிங்குக்கு செய்து புளூட்டோனியம் எடுப்பதற்க்கு தயாராக இருந்தது. தாராப்பூர் அணு உலைக்கு தேவையான எரிபொருளை அமெரிக்கா அனுப்பாததை இந்திய விஞ்ஞானிகள் சமாளித்துவிட்டனர். ஆனால் யுரெனியம் அணு உலைகளில் அடிக்கடி தேய்ந்து போகும் உதிரி பாகங்களை அமெரிக்கா அனுப்பாமால் கழுத்தறுத்தைத்தான் இந்திய விஞ்ஞானிகளால் சமாளிக்க இயலவில்லை.

1983ல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் இந்திரா காந்தி. இது 235MW திறன் கொண்ட அணு உலை இது.

இதோ 2008 ஜூன் 25ல் வந்த செய்தி என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிலேயே தாயாரான பாதுகாப்பு குழாய் (Safety Vessel) கல்பாக்கம் அணு உலையில் நிறுவியுள்ளனர். இந்த குழாயை தயாரித்ததன் மூலம் அதி வேக பெருக்கி அணு உலைகள்(Fast Breeder) தொழில் நுட்பத்தில் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட வெகு சொற்பமான நாடுகளின் வரிசையில் நாமும் இருக்கிறோம் இப்போது #28.

இந்த செய்தியிலேயே உள்ள வேறு சில விசயங்கள், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 500MW மின் திறன் கொண்ட அதி வேக பெருக்கி அணு உலை கல்பாக்கத்தில் நிறுவப்பட்டு கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. 2005-ல் மும்பையில் பெருமையுடன் அறிவிக்கப்பட்ட தோரியம் இரண்டாம் கட்ட அணு உலைதான் இது. இது போல இன்னும் பல அணு உலைகளை நிறுவும் வேலையில் இந்திய அணு சக்தி கழகம்(NPCIL) உள்ளது. மேலும் உலகிலுள்ள முன்னேறிய தொழில் நுட்பங்களில் ஒன்றாக இந்தியாவிடம் உள்ள அணு சக்தி தொழில்நுட்பம் உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதி வேக பெருக்கி அணு உலைகள்(FBR) ஏற்னகவே குறிப்பிடப்பட்ட தோரியம் தொழில்நுட்பத்தின் இரண்டாவது கட்டத்தை உபயோகப்படுத்துகின்றன. மூன்றாவது கட்டத்திற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. நம்மிடம் தோரியம், செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எரிபொருளிலிருந்து தயாரிக்கப்படும் ஆக்ஸைடு கலவை எரிபொருள் இவையணைத்தையும் உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்தியா சர்வதேச அணு உதவி கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டதால் சொந்தமாகாவே அணு சக்தி உற்பத்தி செய்தது. இதனால் உலகிலேயே வீரியம் குறைவான அணு உலைகளைக் கொண்ட நாடாக இந்தியா 1990களில் இருந்தது. ஆயினும் இந்த தொழில்நுட்ப தடங்களை கடந்து 2002ல் 85% வீரியம் கொண்டவையாக தனது அணு உலைகளை மாற்றிக் காட்டியது. இந்த அணு உலைகளின் வீரியம் இன்னும் அதிகப்படுத்தப்படும். பொதுவாகவே இது போலத்தான் உலகம் முழுவதும் செய்யப்படுகிறது. அணு உலைகளின் எண்ணிக்கையை கூட்டமாலேயே அவற்றின் வீரியத்தை கூட்டியே தமது அணு மின் உற்பத்தை அளவை மேற்கு நாடுகள் கடந்த 30 வருடங்களாக அதிகரித்து வந்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

தாராப்பூரில் உள்ள 3வது, 4வது உலைகள் இந்திய அணு சக்தி கழகத்தால்(NPCIL) இந்தியவிலேயே தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டது. இது தவிர்த்து Kaigaவில் உள்ள அணு உலைகள், ராவாபாட்டாவில் உள்ள சில உலைகள் இவையும் NPCILஆல் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டன. இவையெல்லாம் தற்போது இயங்கிக் கொண்டுள்ளவை.

மேலே கால வரிசைப்படி கொடுத்துள்ள விவரங்கள் நமக்கு காட்டுவது அணு விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை நாம் சுயச்சார்பானவர்களாக மாறியதுடன், அதனை ஏற்றுமதி செய்யும் அளவு தொழில்நுட்பம் தெரிந்த நாடாக நாம் மாறிய அடுத்த நிமிசத்திலிருந்து அமெரிக்கா நமக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கிவிட்டது என்பதுதான். அன்றிலிருந்து இந்தியாவை சர்வதேச ஒப்பந்தங்களிலும், NPTயிலும் கையெழுத்திடச் சொல்லி தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்துள்ளது அமெரிக்கா. 1963-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஒருதலை பட்சமாக தூக்கி குப்பையில் கடாசிவிட்டு தனது அனைத்துவிதமான தந்திரங்களையும் பயன்படுத்தி வந்துள்ளது அமெரிக்கா. யுரேனிய அணு உலைகளில் அணு உடைப்பு தோரியத்தில் நடப்பது போல சுமூகமாக நடப்பதில்லை எனவே யுரெனிய அணு உலைகளின் உதிரிபாகங்கள் அடிக்கடி மாற்றப் பட வேண்டியுள்ளது. இவர்களை நம்பி நாம் இங்கு கட்டிய தராப்பூர் யுரேனியம் அணு உலைக்கு தேவையான உதிரி பாகங்களை தராமல் முடக்கியது அமெரிக்கா. இதனால் அந்த அணு உலை பல காலத்திற்க்கு தனது பாதி வீரியத்திலேயே இயங்கியது. தற்போது இருப்பில் உள்ள யுரேனியமும் முடிந்துவிட்டதால் இயங்காமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டு யுரெனியத்தின் மூலம் இயங்கி வருகின்றன.

உலகிலேயே முன்னேறிய அணு சக்தி தொழில் நுட்பம் கொண்ட நாடாக இந்தியா இருந்தும்(குறிப்பாக தோரியம் தொழில்நுட்பம்) இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்க்கு, இந்த அணு ஒப்பந்தத்தை வேறு வழியே இல்லை என்று நியாயப்படுத்துவதற்க்கு பயன்படும் முக்கியமான வாதம் இந்தியாவின் யுரெனியம் இருப்பு போதாமான அளவு இல்லை என்கிற வாதம். தொழில் நுட்பம் சிறப்பாக இருந்தாலும் மூல வளம் இல்லையே என்ற இந்த வாதம் குறித்து இந்த பகுதி பதில் சொல்லும். இந்தியாவில் உள்ள யுரேனியத்தின் அளவு எவ்வளவு? மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள உலைகள் எல்லாமே தனது மொத்த திறனில் பாதியளவே ஓடுகின்றன. காரணம் யுரெனியம் தட்டுப்பாடு.

இதுவரை பயன்படுத்த தகுதியானது என்று உறுதிப்படுத்தப்பட்ட யுரேனியத்தின் அளவு 61,000 டன்னிலிருந்து 90,000 டன்வரை இருக்கிறது #29 பக்கம் 23. தோரியம் 2,15,000 டன்னிலிருந்து 3,60,000 டன் வரை இருக்கிறது #30. தோரியம் உலகிலேயே நம்மிடம்தான் அதிகம் உள்ளது என்றும், நாம் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த நிலையிலிருக்கிறோம் என்றும், நாம் உலகில் நான்காவது பெரிய தோரியம் வளம் உள்ள நாடு என்றும் பல்வேறு புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. ஆனால் இவையணைத்தும் பிற நாடுகளின் தோரியம் அளவில் ஏற்படும் முரன்பட்ட தகவலினாலேயே வேறுபடுகின்றன. இந்தியாவின் தோரியம் இருப்பைப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் ஒரே அளவையே சொல்கிறார்கள்.

"The potential of Nuclear resources is about 93% of the total potential based on the proven reserves of all the energy resources in the country" - இப்படி சொல்கிறது NPCILன் 2006-07க்கான ஆண்டு அறிக்கை. இதே ஆண்டறிக்கை 2006ல் இயக்கத்தில் இருந்த அணு உலைகளின் உண்மையான திறனாக 58478MW என்று குறிப்பிட்டுள்ளது #31 பக்கம் 56. இதன் அர்த்தம் இந்தளவுக்கு அதிகபட்சம் அவை அணு சக்தி உருவாக்கும் திறனுள்ளவை. அதாவது இதுவரை நிர்மாணிக்கப்பட்ட அணு உலைகளின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொண்டு சென்றாலே போதும், புதிதாக நிர்மானிக்கப்படும் அணு உலைகளை தோரியம் அடிப்படையிலானதாக கூட நாம் செய்து கொள்ளலாம்.

தற்போது 4120MWதான் அணு சக்தியிலிருந்து பெறப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3% கொஞ்சம் கூட வரும். மேலும் 2660MWத்திற்க்கான அணு உலைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர்த்து 6800MW உற்பத்தி செய்யும் அளவு அணு உலைகளை கட்டுவதற்க்கான வேலைகள் நடந்து வருகின்றன #32. இவையணைத்திற்க்கும், அதாவது 10,000MW உற்பத்தி செய்ய 50 வருடத்திற்க்கு தேவையான யுரேனியத்தை இந்தியாவிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம். எந்தவொரு வெளிநாட்டையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று 2005ல் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவர் S.K. ஜெயின் கூறுகிறார் ('We can meet India's electricity demands' - Frontline Mar 12-25, 2005 ). 2020-ல் அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் மூலம் நாம் உற்பத்தி செய்யவுள்ள அணு சக்தி 6%தான். இதே அளவை அவர்களின் உதவியின்றியே அடைய முடியும் என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பிசினஸ் இந்தியாவில் மார்ச் 2006ல் ஒரு விரிவான கட்டுரை வந்திருந்தது "What can't we Produce? - Business India, March 12, 2006 பக்கம் 40" #33. இதில் அணு சக்தி கமிசனின் தலைவர் அனில் ககோதரிடம் இந்திய அமெரிக்க அணு ஒத்துழைப்பின் பயன் குறித்து கேட்ட போது பின்வருமாறு கூறுகிறார்: "இந்தியா தனது மூன்று கட்ட அணு திட்டத்தில் முதல் கட்டத்தில் 10,000 MW அணு சக்தியை இந்தியாவிலேயே உள்ள யுரேனியத்தைக் கொண்டு உற்பத்தி செய்யும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதை விட பத்து மடங்கு உற்பத்தி செய்யப்படவுள்ள அடுத்தடுத்த கட்டங்களுக்கோ உபரியாக யுரேனியம் எதுவும் தேவையில்லை. இந்த ஒப்பந்தத்தை பொறுத்தவரை மலிவு விலை யுரேனியம் அதிகப்படியான பயன்பாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பு மட்டுமே இந்தியா பார்க்கக் கூடியதாக இருக்கிறது." இந்த காலகட்டத்தில் அணு ஒப்பந்தம் உயிராதாரமானது என்பதை இவர்கள் எங்குமே வலியுறுத்தவில்லை. மாறாக நமது சொந்த திறனில் சாதிக்க முடியும் என்பதை பல்வேறு கட்டங்களில் இவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் இந்தியாவிற்கு யுரேனியம் கிடைப்பதற்க்கும், பரஸ்பரம் ஏற்றுமதி இறக்குமதிக்கு உதவும் ஒரு ஓப்பந்தமாக இருப்பதையே இவர்கள் வலியுறுத்துகிறார்கள். மாறாக அது அப்படியில்லை என்பதுடன் அதன் உண்மையான நோக்கம் பிரதானமாக யுரேனியமோ, அணுவோ சம்பந்தப்பட்டதாகவோ இல்லை.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகப்படியான மின்சாரம் எதிர்காலத்தில் தேவைப்படுகிறது என்கிறார்கள். இது யாருக்கான பொருளாதாரம் என்ற கேள்வியை இப்போதைக்கு தவிர்த்துக் கொண்டு பார்த்தால் கூட இந்தியாவின் எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்வதற்க்கு அணு சக்தி தவிர்த்து இந்தியாவின் நீர் மின்சக்தியும், காற்று மின்சக்தியும், சூரிய சக்தியும், இயற்கை வாயுவும் பெரிய அளவில் பயன்படுத்தப்பாடாமலேயே உள்ளது. இவற்றிலிருந்து மிக அதிகப்படியாகவே மின்சாரம் எடுக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கட்டுரையின் விரிவு அஞ்சி அவற்றை இங்கு கொடுக்காமல் தவிர்க்கிறேன்.

இங்கு நாம் இது வரை பார்த்த விசயங்களை முடிவாக பட்டியலிட்டுக் கொள்வோம்.

#1) புதிய அணு உற்பத்திக் கூடங்கள் எதையும் கடந்த 30 வருடங்களில் மேற்கு நாடுகள் கட்டவில்லை விற்க்காத பழைய சரக்கை நம் தலையில் கட்டுகிறார்கள்.
#2) உலகிலேயே அதிகமான யுரேனியம் உள்ள நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் மின்சாரம் தயாரிக்க ஒரு அணு உலைகூட கிடையாது.
#3) யுரேனியம் அடிப்படையிலான அதி அழுத்த கன நீர் உலைகள் ஏற்கனவே இருப்பவையே போதும், அதற்கு அடுத்தகட்ட தொழில்நுட்பங்களை விரிவாக நாம் நிறுவ வேண்டிய நிலையில் தற்போது உள்ளோம் எனும் போது அமெரிக்காவிடமிருந்து பழைய தொழில் நுட்பத்தை வாங்குவது நமது சுயசார்பை ஒழிக்கும் தந்திரம். அதாவது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் காலவதியான விசயத்தையே நாம் திரும்ப வாங்குகிறோம் என்பதுதான். அதுவும் 3லட்சம் கோடிக்கு எனும் போது யார் முட்டாள் என்பதை புரிந்து கொள்ளலாம். நமக்கு இனிமேலும் தேவையில்லாத தொழில்நுட்பத்தை வாங்குவதன் மூலம் நமது அணு சக்தி தேவையை அடுத்தக்கட்டத்திற்கு வளர்க்காமல் முடக்குகிறோம், மேலும் நாம் அவர்களை நம்பியிருக்குமாறு செய்துவிடுகிறோம்.
#4) அணு சம்பந்தப்பட்ட தொழில் நுட்பம் அணைத்தும் நம்மிடமே உள்ளது. கனநீர் உற்பத்தியிலும், அணு தொழில்நுட்பத்திலும் நாம் ஏற்றுமதி செய்யும் நாடு. இந்த தொழில்நுட்பங்களை நாம் இன்னும் வீரியமாக வளர்த்தெடுக்க இந்த 3 லட்சம் கோடியை பயன்படுத்தலாம்.
#5) எதிர்கால, நிகழ்கால மின்சாரத் தேவைகளை அமெரிக்க ஒப்பந்த்தை நம்பியிராமலேயே இந்திய அணு சக்தி திட்டங்கள் மூலமே சாதிக்க முடியும். இது தவிர்த்து பிற மூல வளங்களை முழுமையாக பயன்படுத்தும் திட்டங்களை நாம் ஆழமாக பரிசீலிக்க வேண்டும்.
#6) யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் போன்ற அடிப்படை அணு எரிபொருட்களுக்கு நாம் பிறரை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இல்லை. நம்மிடம் இருப்பதை வைத்தே சமாளிக்க இயலும். ஒருவேளை நமது எதிர்காலத்திற்கு ஆபத்தில்லாத வகையில் யுரெனியம் கிடைத்தால் கொஞ்சம் வசதி அவ்வளவுதான்.
#7) நிலக்கரி, இயற்கை வாயு உள்ளிட்டவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க வசதியாக இவற்றை அதிகமாக இறக்குமதி செய்யும் முயற்சிகளில் இந்தியா இறங்க வேண்டும். நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவை மேற்கு நாடுகள் மட்டுமே பயன்படுத்துவதற்க்கான மூல வளங்கள் அல்ல. நாமும் பயன்படுத்தலாம்.
#8) ஏற்கனவே அமெரிக்க இந்தியாவை தனக்கு கீழ்படிய வைக்க 1963 அணு ஒப்பந்தத்தை வைத்து ப்ளாக்மெயில் செய்து மிரட்டியுள்ளது. இந்தியா அடிபணிய மறுத்த பொழுது தாராப்பூர் அணு உலையை கை கழுவி நமக்கு நஸ்டம் ஏற்படுத்தியுள்ளது. இன்னிலையில் 3 லட்சம் கோடி முதலீடு செய்து பிறகு நமது காலை வாரிவிட்டால் நமக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மேலும் இதனை ஒட்டி போடப்படுகிற சர்வதேச ஒப்பந்தகளிலிருந்து நாம் எந்த காலத்திலும் விலக முடியாது. ஏனேனில் பிற சர்வதேச ஒப்பந்தங்களை 123 ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது.


இது வரை பார்த்துள்ள விசயங்கள் எல்லாமே இந்த ஒப்பந்தம் அணு சக்தி, தொழில்நுட்பம், யுரெனியம் சம்பந்தப்பட்டது என்பதை கருத்திக் கொண்டு ஆய்வு செய்தது. இதன் முடிவுகள் அணு ஒப்பந்தம் ஒரு மொள்ளமாறித்தனமான ஒப்பந்தம் என்பதைத்தான் தெளிவாகச் சொல்கின்றன. ஆனால் இன்னொரு பெரிய உண்மை இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் அல்லக்கை தேசங்களில் ஒன்றாக மாற்றி அமெரிக்காவின் உலகாளாவிய ரவுடித்தனங்களுக்கு அடியாள் வேலை செய்ய இந்தியாவைச் சேர்த்துக் கொள்வதையே பிரதான நோக்கமாக கொண்டுள்ளது என்ற அம்சம். இது குறித்து அடுத்து பார்க்க இருக்கிறோம்.

அசுரன்

Related Posts with Thumbnails