TerrorisminFocus

Sunday, December 21, 2008

இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!!

மீபத்துல அதாவது 2008 ஆரம்பத்துல ஏகாதிபத்திய பொருளாதாரம் டவுசர் கிட்டத்தட்ட கழன்று தொங்கிய நிலையில் இருக்கும் போது தனது டவுசரை காப்பாற்றும் கடைசி நிமிட போராட்டத்தின் ஒரு பகுதியாக கையில் கிடைத்த இடத்திலெல்லாம் தனது மூலதனத்தை போட்டு வைத்து சும்மா சுற்றி சுற்றி சூதாடியது(பங்கு சந்தை, முன்பேர வர்த்தகம்). குறிப்பாக முன்பேர வர்த்தகத்தில் சூதாடி அன்றாட பொருட்களின் விலையை சகட்டு மேனிக்கு உயர்த்தியது, பெட்ரோல் விலையை சகட்டு மேனிக்கு உயர்த்தியது, பிறகு தங்கம், பிறகு வெள்ளி இப்படி கடைசியில் மொத்த பன்னாட்டு-தரகு முதலாளிகளின் டவுசரும் கிழிந்து அம்மணக்கட்டையாக ஆகின்ற வரைக்கும் அவர்களின் சூதாட்டம் தொடர்ந்தது.

இந்த சூதாட்ட ஸ்ட்ரிப்டீஸ் டான்ஸ் காலம் முழுவதும் இது குறித்து நாமும் பலமுறை எழுதி எச்சரித்தே வந்தோம். குறிப்பாக பெட்ரோல் விலையேற்றத்தின் போது இது அப்பட்டமான சூதாட்டத்தின் விளைவு என்பதை ஆதாரப் பூர்வமாகவே பல தோழர்கள் எழுதினார்கள். ஆனால் இந்த காலகட்டம் முழுவதும் ஏகாதிபத்திய டவுசரின் பட்டன்களாகவும் திகழ்ந்து பெருமை சேர்த்த அல்லக்கை அடிவருடிகள் இந்த உண்மைகளை மூடி மறைக்க எல்லா மாய்மாலங்களையும் கையாண்டனர். குறிப்பாக பெட்ரோல் விலையேற்றம் குறித்த பிரச்சினையின் போது அதனை பீக் ஆயில் என்ற அரதப் பழசான செத்து சுண்ணாம்பான சித்தாந்தத்தை அதன் கல்லறையிலிருந்து தோண்டி வெளியே எடுத்து விளம்பரப்படுத்தினர்.

பீக் ஆயில் என்பது வேறு ஒன்றும் இல்லை எண்ணைய் இருப்புக்கும், அதன் தேவைக்கும், அது குறைந்த பட்ச எதிர்கால எண்ணைய் பயன்பாடு வளர்ச்சியில் ஏற்படுத்தும் பாதிப்பும் சேர்ந்து எண்ணையின் சந்தை விலையை உயர்த்துவதை குறிக்கும் ஒரு சொல். அதாவது இன்னும் சுலபமாக டிமாண்டு சப்ளை பிரச்சினை. அதாவது தீடீரென்று உலகம் முழுவதும் டிமாண்டு அதிகமாகி சப்ளை கம்மியாக இருந்ததால் பீக் ஆயில் பிரச்சினை முன்னுக்கு வந்து விட்டது என்று குன்சாக ஒரு கதையை ஆதாரமின்றி அளந்து விட்டார்கள் அடிவருடிகள். அப்பொழுது தோழர்கள் பலர் முன் வைத்த வாதங்களுக்கும் அவர்களிடம் பதில் இல்லை.

இதோ இன்று அவர்களின் எஜமான் ஏகாதிபத்தியங்கள் அவர்களுக்கு பதில் சொல்லியுள்ளன. முற்றிலும் டவுசர் கழண்டு, கிழிந்து நார் நாராக, மண்ணோடு மண்ணாக மக்கிய பிற்பாடு அடுத்த டவுசருக்கு அரசாங்கத்திடம் விண்ணப்பமிட்டு உட்கார்ந்திருக்கும் ஏகாதிபத்தியங்களும், அவர்களுக்கு புது டவுசர் எடுத்து கொடுத்து அடுத்த ரவுண்டு சூதாட்ட ஸ்டிரிப்டீஸ்க்கு அனுப்பி வைக்க உழைக்கும் மக்களிடம் பணம் பிடுங்க களம் இறங்கியுள்ள அரசுகளும் என்று விசயம் அப்பட்டமாக தலைகீழாக இருக்கும் இன்றைய நிலையில், உலகமகா பாகாசுர பன்னாட்டு அஸ்கா புஸ்கா கும்தலக்க கம்பேனிகள் எல்லாம் ஆப்டர் ஆல் சதாரண ஜனங்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் பிச்சை வாங்க எச்சில் ஒழுக நிற்க்கும் இந்த நேரத்தில், நாங்கெல்லாம் வெரி பிரில்லியண்டு, டேலண்டட், ப்ளடி மக்கள் என்னைக்கு என் வேகத்துக்கு வந்து நான் எப்போ முன்னேற அதனால் என்னை Freeயா விடு என்று பிலிம் காட்டி இன்று மூக்கில் ரத்தம் ஒழுக உடைப்பட்டுள்ள ஏகாதிபத்தியமும், எந்த ஜனங்கள் திறைமையற்ற அடி முட்டாள்களோ, அவர்கள் அதி திறைமையான, வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கும், உலகின் ரட்சகனான பன்னாட்டு கம்பேனிகளுக்கு படியளக்கும் இன்றைய வெட்கம் கெட்ட சூழலில் சில விசயங்கள் நடந்து வருகின்றன.

ஏகாதிபத்திய ஆண்டவனே அம்மணமாக அலையும் போது அவனது அல்லக்கை முண்டங்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள் இன்னும் கேவலமான நிலையிலேயே இருப்பார்கள் என்பதை அவர்களது கல்லறை மவுனத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் நமக்கு ஒரு சின்ன சந்தேகம் ஒருவேளை அவர்களுக்கு சுரனை இருக்குமோ என்று. அதுதான் இந்த பதிவை எழுதத் தூண்டியது. அல்லக்கைகளை கல்லறையிலிருந்து துயிலெழுப்பும் ஒரு உசாகால பாடலாக இந்த பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

மக்களிடம் பிச்சையெடுத்துதான் தனது லாபத்தை பராமரிக்க முடியும் என்ற நிலையில் இருந்த ஏகாதிபத்தியங்கள் தமது சூதாட்ட வெறியை குறைத்துக் கொண்டவுடன், விலைவாசி உயர்வு குறைந்தது, பெட்ரோல் விலை குறைந்தது. அதாவது அடிவருடிகள் சொன்னது போல உலகின் பயன்பாட்டு அளவு குறைந்ததால் பெட்ரோல் விலை குறையவில்லை. அல்லது உலகில் உற்பத்தி பொருட்களின், விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததால் விலைவாசி குறையவில்லை. மாறாக சூதாட்ட கும்பலின் டவுசர் கழண்டு கிழிந்ததாலேயே அதாவது ஏகாதிபத்திய மூலதனம் சூதாடுவதை நிறுத்தி கொண்டதாலேயே விலை குறைந்தது. இந்த உண்மையை வலுப்படுத்தும் முகமாக தற்போது ஒபேக் அமைப்பு தனது பெட்ரோல் உற்பத்தியை ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல் அளவுக்கு குறைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்தும் திட்டத்திலேயே இதனை செய்துள்ளது(தி ஹிந்து முதல் பக்கம், 18 டிசம்பர், 2008). அதாவது டிமாண்டு சப்ளையும் கிடையாது பீக் ஆயில் புண்ணாக்கும் கிடையாது என்பதைத்தான் இவை எல்லாம் நமக்கு சொல்லுகின்றன.

ஏகாதிபத்திய மூலதனம் சூதாடியதால் பெட்ரோல் விலை ஏறியது, சூதாட்டம் நின்றவுடன் பெட்ரோல் விலை அதளபாதாளத்திற்கு சென்றது. விலையை ஏற்ற போலியாக டிமாண்டு உருவாக்கும் முயற்சியாக பெட்ரோல் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. நமது பயன்பாடு அதிகரித்து அந்த தேவைக்கு ஏற்ப உற்பத்தியில்லை என்கிற காரணத்தினால் விலையேற்றம் நடக்கவில்லை. விசயம் இப்படியிருக்க விலைவாசி உயர்வுக்கு இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் நுகர்வு அபரி மிதமாக அதிகரித்து விட்டது என்று இந்த அல்லக்கைகள் குற்றம்சாட்டினர். பெட்ரோல் விலை உயர்வுக்கும் நாமதான் கிடைத்தோம் இந்த அடிவருடிகளுக்கு. அடேய் அல்லக்கைகளா இப்போ நடந்துள்ளதே இதுக்கு என்னடா பதில் சொல்லப் போறீங்க. உங்களோட உண்மையான முதலாளித்துவம் பதுங்கியிருக்கிற இடத்துல இருந்து தோண்டி எடுத்து காட்டுங்கடா.

மக்கள் பணத்தில் சூதாடிவிட்டு மக்களையே இகழ்ந்து நோக்கும் இந்த இழிந்த முதலாளித்துவ பொருளாதாரம் இனிமேலும் இந்த உலகில் நீடித்திருப்பதற்க்கு எந்த நியாயமும் இல்லை. மக்களிடம் பிச்சை வாங்கித்தான் வயிறு வளர்க்க வேண்டும் என்ற நிலையில் உள்ள இந்த திமிர்பிடித்த கிழட்டு ஏகாதிபத்தியத்தை கருணை கொலை செய்துவிடுவதே நல்லது. இந்த நிலைமை இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால் ஏகாதிபத்தியங்களின், அதன் உள்நாட்டு பிரதிநிதிகளான ஆளும் பிற்போக்கு அரசுகளின், தரகு பன்னாட்டு முதலாளிகளின் டவுசர்கள் நிரந்தரமாக கழட்டப்பட்டு அவை அம்மணமாக, அரை அம்மணமாக அலையும் உழைக்கும் மக்களிடம் கொடுக்கப்பட வேண்டும். ஏனேனில் நாமும் எத்தனை முறைதான் தரகு பன்னாட்டு முதலாளிகள் கிழிக்கின்ற டவுசர்களுக்கு மாற்றாக புது டவுசர் தயாரித்து அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பது.

இனிமேல், நமக்கென்று டவுசர் தயாரிப்போம்!! அதை நாமே அனைவருக்கும் கொடுப்போம்!!

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!!

அசுரன்

Related Article:

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

ஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!

அமெரிக்க திவாலும் சில இந்தியத் தற்கொலைகளும் !

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

உலகை ஒடுக்கி உல்லாசமாக வாழ்ந்த அமெரிக்காவின் இன்றைய இழி நிலை! - அமெரிக்கா வல்லரசின் வஞ்சக வளர்ச்சியும் - வீழ்ச்சியின் தொடக்கமும். பாகம் 1

ஐரோப்பாவில் மீண்டும் கம்யூனிசம் : தீப்பொறி காட்டுத் தீயாக மாறிவருகின்றது

நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?

சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது

'முடிந்துவிட்டது எல்லாம். எந்த பொன்னுலகமும் இங்கு வரவில்லை.

வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது

கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது

அமெரிக்க ஊடகங்கள் திவால்!!

4 பின்னூட்டங்கள்:

said...

முதலாலித்துவம் தான் சிறந்தது என்று முன்பு துள்ளித்திரிந்த அதிசய மான்கள் இப்போது எதுவுமே வாய் திறக்கவில்லையே தோழா

தோழமையுடன்
பெரோஸ்கான்

said...

யார் யாருக்கோவெல்லாம் உதவுரீங்க தயவு செய்து பழைய பதிவுகளை எல்லாம் டெலிட் செய்வது எப்படி என சந்திப்புக்குச் சொல்லிக்கொடுங்கள் பாவம் அவர் ஜெயலலிதா குறித்து எழுதியது எல்லாத்தையும் அழிக்கனுமுன்னு டெல்லியில இருந்து உத்தரவு வந்துட்டது.

said...

என்னாது ரவி சிரினிவாசுக்கு டவுசர் வேணுமா???
அதெல்லாம் தர முடியாது போ! போ!!

said...

///
Do see my post on questions that you have raised in a differnet context at
http://koottanchoru.wordpress.com/2008/12/22/பார்ப்பனர்கள்-பார்ப்பனீ
///
r.v from kalagam blog

உங்கள் பதிவை நான் படித்தேன் ஆனால் அதெல்லாம் இருக்கட்டும் R.V சார் முதலில் கீழ் கொடுக்கபட்டுள்ள வினவு காடுரையின் வரிகளுக்கு பதில் சொல்லுங்கள்.நீங்கள் சாதி பார்க்காதது பற்றிய உங்களுடைய‌ மற்ற விளக்கங்களுக்கெல்லாம் பிறகு போகலாம்,அதற்கு முன்னால் நான் சாதி பார்ப்பதில்லை என்பதை நீங்களே சொல்லிக்கொள்ள முடியாது என்பதோடு வேறு யாரும் கூட அப்படி தனக்கு தானே யோக்கியன் பட்டம் வழங்கிக்கொள்ளவும் முடியாது ஏனென்றால் இங்கு மதிப்பிற்குறியது அழகான வார்த்தைகள் அல்ல சாதியத்திற்கெதிரான‌ நடை முறை அதில் அவர் என்ன செய்தார் என்பது தான் இங்கே முக்கியம்.

பின்குறிப்பு:
நீங்கள் மட்டும் தான் பார்ப்பனரா என்ன ?
அப்படியே இருந்தாலும் என்ன அது பெரிய உலக‌ அதிசயமா,அதை எதற்கு சொல்ல வேண்டும்,அதுவும் நான் பார்க்க நிங்கள் பலமுறை இதை சொல்லிவிட்டீர்கள். அந்த இடத்திலிருந்து கொண்டு சாதி பற்றிய உங்கள் கருணை பார்வையை ஒடுக்கப்பட்டவர்கள் மீது பொழிவது மேலும் அவமானம் செய்வதாகும்.
நான் இங்கே என்ன சாதி என்பதை உங்களை போல சொல்லிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை,வெட்கமாய் இருக்கிறது.

/////////////////////////////////////////////////////////////////////

“என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?

நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!

ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.

அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?”

//////////////////////////////////////////////////////////////////////

Related Posts with Thumbnails