TerrorisminFocus

Monday, April 02, 2007

மக்கள் மன்றத்தின் மீது அரசு எந்திரத்தின் வன்முறை!

லகின் ஆகப் பெரிய ஜனநாயகம், உலகின் தலை சிறந்த ஜனநாயகம். வார்த்தை ஜாலங்களில் ஒன்றும் குறைச்சல் கிடையாது. ஆயினும், சாதாரண ஜனங்களுக்கான ஜனநாயகம் என்பது வெறும் சட்ட புத்தக்ங்களில் கொடுக்கப்படுவதல்ல. அது அவர்களின் பண்பாட்டு வளர்ச்சியில், உற்பத்தி உறவில் ஏற்படுவது ஆகும். இந்திய போலி ஜனநாயகத்தின் கோர முகம் அடிக்கடி கழண்டு விழும் சம்பவங்களும், நிகழ்வுகளும் அன்றாடம் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. சந்தேக கேசு கட்டடத் தொழிலாளீயிலிருந்து, போலீசுக்கு இலவச இரவு சாப்பாடு தரும் தள்ளுவண்டி இட்லிக் கடைக்காரர் வரை. அப்படி ஒன்றுதான் விழிம்பு நிலை மக்களிடையே அவர்களின் உரிமைக்காக போராடி வரும் 'மக்கள் மன்றம்' எனும் அமைப்பை போலீஸ், கலெக்டர் உள்ளிட்ட அரசு எந்திரங்கள் வன்முறை கொண்டு அடக்கி ஒடுக்கி வருவது.

குப்பை கொட்டுவதை எதிர்ப்பது, நாய்களுக்கான ஜனநாயகம் பேசுவது, அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக நடை பாதையில் கடை போட்டவர்களை ஆக்கிரமிப்பு, அசிங்கம் என்று விரட்டுவது, சுவற்றில் வால் போஸ்டர் ஒட்டும் சின்னஞ் சிறிய கம்பேனிகளுக்கு தொலைபேசி செய்து மிரட்டுவது, இதர நடுத்தர வர்க்க சமூக அரிப்பு அடையாள ஃபேன்ஸி போராட்டங்கள் நடத்துவது - இது போன்று நடத்தாமல், இருளர் இன மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக களத்தில் இறங்கி போராடியதுதான் மக்கள் மன்றம் செய்த தேசத் துரோக குற்றம். மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்காக போராடி, அதையும் கூட சட்ட வரம்புகளுக்குட்ப்பட்டு அதிகார வர்க்கத்தின் இரும்பு கதவுகளை பல முறை சளைக்காமல் தட்டி அதிகார வர்க்கத்தின் இனிமையான மாலை வேளைகளின் மயக்கத்தை கெடுத்ததுதான் அவர்கள் செய்த மாக பெரிய குற்றம்.

காஞ்சி புரத்தை சேர்ந்த மக்கள் மன்றம அமைப்பு கடந்த 2000த்திலிருந்து பழங்குடியினர், தலித்துகள், பெண்கள், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் மத்தியில் அவர்களின் உரிமைகளுக்காக ஊக்குமுடன் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு. கிட்டத்தட்ட 60 கிராமங்களில் செயல்பட்டு வருகின்றனர் இந்த அமைப்பினர். விழிம்பு நிலை மக்களின் மீதான மனித உரிமை மீறல்களை தடுக்கும் ஒரு கேடயமாக செயல்பட்ட இந்த அமைப்பினர்தான் இன்று இந்திய ஜனநாயகத்தின் ஆக கேவலமான மனித உரிமை மீறல் வன்முறையால் ஒடுக்கப்படுகின்றனர்.

மக்கள் மன்றம் குறிப்பாக கொத்தடிமைகளாக வேலை செய்த பழங்குடியினரை(இருளர்) விடுதலை செய்து, அவர்களின் மறுவாழ்வுக்கான போராட்டத்தை அடுத்தக் கட்டமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆற்றங்கரை ஓரங்களிலும், சாலையோரங்களிலும் பல ஆண்டுகளாக குடியிருக்கும் இவர்களுக்கு குறைந்தது 3 செண்ட் நிலத்தையாவது தருமாறு கோரி மாவட்ட நிர்வாகத்துடன் போராடி வருகின்றனர். நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்ன கொடை வள்ளல் சன் குழும தந்தை கருணாநிதியின் அரசில் 3 செண்ட் நிலம் கேட்டவர்களுக்கு கிடைத்தது என்னவோ 8க்கு8 சிறைச்சாலைதான்.

இது தவிர்த்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள், மேல் சாதி வன்முறைகள் இவற்றுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். குறிப்பாக இருளர் பழங்குடியின பெண்கள் மீதான வன்கொடுமைகளை மீது தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான வன்முறைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வைப்பதில் முக்கிய கருவியாக செயல்பட்டுள்ளனர் மக்கள் மன்றத்தினர்.

சுற்றுச் சூழல் கேடுகளை எதிர்த்தும் இவர்கள் போராடி வந்துள்ளனர். சட்ட விரோதமாக ஆற்று மணல் கடத்தப்படுவதை எதிர்த்தும் இவர்கள் போராடி வந்துள்ளனர். அதிகார வர்க்கத்தை ஊழல் மயப்படுத்தி தமக்கு சேவை செய்யும் அடியாட்களாக மாற்றியுள்ள மாபியா கும்பலுக்கும், அதிகார வர்க்கத்திற்க்கும் இது போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கான போராட்டங்களீன் மூலம் பெருத்த தலைவலியாக உருவெடுத்து விட்டனர் இவர்கள்.

இப்படி ஒவ்வொரு மக்கள் பிரச்சனையிலும் அரசு அதிகாரிகளுடனும், போலீசுடனும் மல்லுக் கட்டித்தான் காரியங்கள் நடத்த வேண்டியதாக இருந்த சூழலும், அதிகார வர்க்கத்திற்க்கும், போலீசுக்கும் ரொட்டித் துண்டு வீசும் சட்ட விரோத கும்பல்களுக்கெதிரானதாகவே இவர்களின் போராட்டமும் அமைந்தது தற்செயலான நிகழ்வுகள் அல்ல.

உணவு தானியத்தை இறக்குமதி செய்து கொண்டே லட்சக்கணக்கில் நிலங்களை பன்னாட்டு கம்பேனிகளுக்கு தாரை வார்க்கும் அரசு, உழைத்து ஒடாய் தேய்ந்த மக்களுக்காக இம்மி நிலத்தைக் கூட தர மறுக்கிறது. விழிம்பு நிலை மக்களின் அடிப்படை உரிமையாய் நிலம் இருப்பதாலேயே நில ஒதுக்கீடிற்க்காக அதிகாரிகளிடமும், போலீசிடமும் அடிக்கடி போராடி வந்துள்ளனர் மக்கள் மன்றத்தினர்.

இருளர் பழ்ங்குடியினருக்கு 3 செண்ட் நிலம் ஒதுக்குவது குறித்து மாவட்ட கலெக்டரை முன்பே பல மூறை சந்தித்துள்ளனர் மக்கள் மன்றத்தின்ர். அது போன்ற ஒரு சந்திப்பில் 17.06.2006-ல், 'இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்கள் எல்லாம் மிக மதிப்பானவை எனவே கம்பேனிகளுக்குத்தான் கொடுக்க முடியும், இருளர்களுக்கு கொடுக்க முடியாது' என்று திமிர்த்தனமாக மக்கள் மன்றத்திடம் சொல்லியுள்ளான் கலெக்டர். இவன் மக்களிடம் சம்பளம் வாங்குகிறான அல்லது வேறு யாரிடமாவது வாங்குகிறானா? இந்நிலையில் தொடர்ந்து பல மாதங்கள் பல வகையில் முயன்றும் இருளர்கள் வாழ்வதற்க்கு நிலம் ஒதுக்குவது குறித்து மௌனம் சாதித்த அரசு இயந்திரத்தை அம்பலப்படுத்தி வால் போஸ்டர்கள் ஒட்டி ஒரு வார போராட்டத்தை நடத்தினர் மக்கள் மன்றத்தினர். இதுவும் கூட அதிகார வர்க்கத்தின் தோலுக்கு உறைக்கவில்லை என்ற பிற்ப்பாடு. 26.06.2006-ல் கழுதைப் போராட்டத்தை நடத்தினர். அதுவும் போலிஸ் அனுமதியுடனே நடத்தினர். கலெக்டரின் உத்தரவுப் படி 8 முன்னணி உறுப்பினர்கள் சதி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டனர்(124A - Sedition/Conspiracy against state). கழுதைகளை வைத்து போட்டி அரசு அலுவலகம் நடத்தியது அவர்கள் பார்வையில் அரசுக்கெதிரான சதியாக தோன்றுவதில் வியப்பில்லை. ஏனேனில் கழுதைகளின் செயல்பாடு வீரியமாக இருக்கின்ற படசத்தில் மக்கள் அரசு அலுவலங்களை புறக்கணித்து விட்டு கழுதைகளை நாடும் அபாயத்தை முன் உணர்ந்தே அதிகார வர்க்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று கொள்ளலாம்.

27.06.07-ல் மக்கள் மன்றத்தினரை சந்தித்த கலெக்டர் கழுதை போராட்டம் குறித்தும், கைது குறித்தும் எனக்கு தெரியாது என்றான். ஆனால் சிறிது நேரத்தில் தன்னை கட்டுப்படுத்த இயலாமல், 'இதுதானா போராட்டம் நடத்தும் முறை' 'கழுதையைப் போய் உபயோகப்படுத்தியுள்ளனரே?' என்பது போல உளறிக் கொட்டியுள்ளான். மக்கள் மன்றத்தின் சார்பில் பேசச் சென்ற சில நலவிரும்பிகளிடம் கலெக்டர்தான் 124Aவின் கீழ் கைது செய்யச் சொல்லி நிர்பந்தம் கொடுத்ததாக போலிஸ் அதிகாரிகள் சொல்லியுள்ளனர்.

இதற்க்குப் பிறகும் கூட கலெக்டரை இருளர்களின் பிரதிநிதிகளுடன் சென்று தொடர்ந்து சந்தித்தே வந்துள்ளனர் மக்கள் மன்றத்தினர். இப்படியான சூழலில் இன்னுமொரு பிரச்சனை முன்னுக்கு வந்தது. காஞ்சி கலெக்டர் அலுவலத்தில் வாகன நிறுத்தத்திற்க்கு கட்டணம் வசூலிக்கப்படுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதே வளாகத்தில்தான் அனைத்து அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளன. சாதாரண கிராமப்புற ஏழை ஜனங்கள் தங்களது அன்றாட சட்டப் பிரச்சனைகளுக்காக ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் இடத்தில் இது போன்று துட்டு புடுங்குவது சரியல்ல என்று இதற்கெதிரான போராட்டத்தை நடத்தியது மக்கள் மன்றம். இந்த போராட்டத்திற்க்கு அனுமதி மறுத்தது போலீசு (என்னே இந்த ஜனநாயக இந்தியாவின் பெருந்தன்மை பாரீர்!). ஆயினும் இதனை மீறி 07 பிப்ரவரி 2007ல் போராட்டம் நடத்தியது மக்கள் மன்றம். பிரச்சார போராட்டம் ஆரம்பிக்கும் முன்பே கைது செய்தது போலிசு. அவர்களில் 8 பேர் மீது வழக்கு தொடர முய்னற பொழுது நூற்றுக்கணக்கிலான பிறரும் தங்களை வழக்கில் சேர்த்துக் கொள்ளச் சொல்லி நிர்பந்திக்கவும், விழி பிதுங்கிய போலிசு அனைவரையும் விடுதலை செய்து விட்டுச் சென்றது. இந்த போராட்டத்திற்க்கு மக்களிடையே நல்ல ஆதரவு இருந்த நிலையில் கட்டணம் வசுலிக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

இது அதிகார வர்க்கத்தின் கோபத்தை மிக உச்சத்திற்க்கு கொண்டு சென்றது. இன்னிலையில் மக்கள் குறை தீர்க்கும் நாளன்று, 19, பிபரவரி 2007ல் கலெக்டரை மீண்டும் இருளர் பிரதிநிதிகளுடன் சந்தித்தது மக்கள் மன்றம். பிரதீப் யாதவ் என்ற அந்த கலெக்டர் மக்கள் மன்றத்தினரை நோக்கி ஆத்திரத்துடன் கத்தி பின்வருமாறு கூறியுள்ளான், "நீங்க கேட்கிறீர்கள் என்பதால் நான் செய்ய வேண்டும் என்று எதுவும் உள்ளதா?' மேலும் மிக மோசமாக ஆங்கிலத்தில் திட்டியுள்ளான் "Bastards, Bloody fools' என்று. பிறகு வெளீயேறச் சொல்லி கத்தியுள்ளான். இதனால் வெல வெலத்து போயினர் இருளர் பிரதிநிதிகள். இதுதான் இந்தியாவில் ஜன்நாயகம் நடைமூறைபடுத்தப்படும் அழகு. துரைத்தனத்தின் திமிருடன் ஏழை ஜனங்களின் பிரச்சனைகளை செவி மடுக்கும் போலீசுக்காரர்களை நாம் பார்த்திருப்போம். மக்களை அரசு இந்திரத்திலிருந்து அன்னியப்படுத்தும் அந்த அதிகார வர்க்க திமிரின் வெளிப்பாடுதான் பிரதிப் யாதவின் இந்த நாகரீக செயல்பாடு. இதனை கண்டித்து மக்கள் மன்றத்தினர் 20 பிப்ரவரி அன்று வால்போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

பாலியல் வன்முறை, 307 செக்சனில் வழக்கு - ஜனநாயகம் வழங்கப்படும் விதம் இதுதான்:

இந்நிலையில், மறுநாள் 21 பிப்ரவரி அன்று, நாதபேட்டை எனும் கிராமத்தில் புதிதாக கிளை திறக்கப்படவிருந்த மக்கள் மன்றத்திற்க்கு 3 உறுப்பினர்கள்(இரு பெண்கள், ஒருவர் ஆண்) சென்றுள்ளனர். பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களிடம் வம்பு செய்துள்ளனர் ரவுடிகள். ஒரு பெண் உறுப்பினரின் அருகில் உட்கார்ந்து இடுப்பில் கிள்ளியுள்ளான் ஒரு பொறுக்கி. இதனை எதிர்த்த ரமேஸை பிடித்து அடித்தனர் மூன்று பொட்டை பொறுக்கிகள். நாதபேட்டையில் இறங்கியவர்கள் அங்கு கூடியிருந்த மக்கள் மன்ற உறுப்பினர்களிடம் விசயத்தை சொல்லியுள்ளனர். அந்த மூவரில் இருவரை பிடித்து விசாரித்துள்ளனர் மக்கள் மன்றத்தினர். இன்னிலையில் அவரகள் மொபைலில் தமது ஆட்களை கத்தி, கம்புடன் வரச் சொல்லி பேசியதை அறிந்தவர்கள் உடனடியாக போலிசிடம் உதவி கோரியுள்ளனர். போலிசு வரவில்லை மாறாக, பத்து நிமிடங்களில் 30 குண்டர்கள் தடியுடன் நுழைந்துள்ளன்ர். மூன்று புறமும் அடைக்கப்பட்டு ஒரு புறம் மட்டுமே திறந்துள்ள அந்த கூடத்தில் நுழைந்த குண்டர் படை பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் கம்புகளால் சகட்டு மேனிக்கு அடிக்க துவங்கியுள்ளது. தற்காப்பாக அவர்களை திருப்பி தாக்கியுள்ளனர் மக்கள் மன்றத்தினர். இதில் மூன்று குண்டர்களுக்கும், மூன்று மக்கள் மன்ற ஊழியர்களுக்கும் காயம் ஏற்ப்பட்டுள்ளது.

வழக்கம் போல க்ளைமாக்ஸில் தெரிந்தே வந்து நல்லவர்களை கைது செய்யும் நிஜ போலிஸ் இங்கும் அந்த சம்பிரதாயத்தை செவ்வெனே செய்தது. மருத்துவமனையில் ஐந்து மக்கள் மன்ற உறுப்பினர்களை கைது செய்தது போலிசு. ஈவ் டீசிங் பற்றி வழக்கு பதிவு செய்வதற்க்கு பதிலாக கொலை முயற்சி வழ்க்கில்(307) மக்கள் மன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரையும் உள்ளே போட்டது அரசு எந்திரம். பேரூந்தில் பாலியல் வன்முறைக்காளான பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டவர்களில் இருந்தனர் என்பதும், ஈவ் டீசிங் வழக்கை ஏற்றுக் கொண்ட பிறகு ஈவ் டீசிங் செய்த மூவரில் இருவர் இன்று வரை கைது செய்யப்படாமல் சுற்றி வருகீறார்கள் என்பதும் தற்செயலான சம்பவங்கள் அல்ல.

இதற்க்கு பிறகுதான் மனித உரிமை அமைப்பினரான மக்கள் மன்றத்திற்கு மனித உரிமை என்றால என்னவென்று சொல்லித் தரும் சிறப்பு பயிற்சி அளிக்க அரசு இயந்திரம் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியுள்ளது.

#1) ஐந்து பெண் உறுப்பினர்களும் சட்டவிரோத காவலில் காஞ்சிபுரம் பெண்கள் காவல் நிலையத்தில் ஒரு இரவு(21.02.2007) முழுவதும் FIR எதுவும் போடப்படாமலே வைக்கப்பட்டிருந்தனர்.

#2) அன்று இரவு(21.02.07) 1:30க்கு ஒரு ஜீப் முழுவதும் ரொப்பிக் கொண்டு டிஎஸ்பி முனியப்பனுடம் போலிஸ் கும்பல் மக்கள் மன்ற கூடத்திற்க்குள் நுழைந்துள்ளது. மூன்று பெண் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளே இருந்த நிலையில் வன்முறையாக உள்ளே நுழைந்து எந்த வாரண்டும் இன்றி சோதனை செய்துள்ளனர்.

#3) மறுநாள் வாரண்டுடன் வந்த போலீசு, அதே இடத்தை சோதனை செய்து தினாந்திர செலவுக் கணக்கையும், சில டாக்குமெண்டுகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

#4) குமார், மற்றும் ரமேஸ் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் அவர்களையும் கைது செய்துள்ளது போலிஸு. ஒரு மப்டி போலிஸ்காரர் குமாரை எச்சரிக்கை செய்த காரணத்தினால், அவரை தனியே கூட்டிச் செல்ல உறவினர் என்று வந்த கும்பலிடம் இருந்து தப்பியுள்ளார் குமார். இது என்கௌன்டர் செய்து கொல்வதற்க்கான சதியாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

#5) குமாரின் டாடா சுமோ எந்த ஒரு தகவலும் இன்றி இழுத்து செல்லப்பட்டுள்ளது. எடுத்துச் செல்லப்பட்டதற்க்கான மேமோவும் கொடுக்கப்படவில்லை. பூட்டை உடைத்து திறந்துள்ளது போலீசு. காரின் ஸ்டெப்னி, கார் ரேடியோ, சில புத்தகங்கள், ஒரு பை, மனிப்பர்ஸ், வெள்ளை வளையள் உள்ளிட்ட பொருட்களை தற்போது காணவில்லை.

#6) கொத்தடிமைகளாக இருந்த விடுதலை பெற்றவரக்ள் நடத்தும் கூட்டுறவு செங்கல் சூளை உள்ள மங்கள்பாடி கிராம்த்திற்க்கு பெரும் போலீஸு படை சென்று பெண்களை மிரட்டியுள்ளது. எங்கிருந்து வந்தீர்கள் என்று விசாரித்து விவரங்களை டிஎஸ்பி முனியப்பன் எடுத்துச் சென்ற மறுநாள், அவர்கள் யாரிடம் கொத்தடிமைகளாயிருந்து விடுவிக்கப்பட்டனரோ அந்த குவாரி முதலாளீகள் அந்த பக்கம் அலைந்து கொண்டிருந்திருந்தனர். போலிஸ் விவரம் கேட்டுச் சென்றதும், குவாரி முதலாளிகள் கிராமத்தைச் சுற்றி அலைந்ததும் தற்செயலான சமப்வங்கள் என்றும், இவை கிராம மக்களை மிரட்டும் நடவடிக்கைகள் அல்ல என்றும் நடுத்தர வர்க்க நாகரீக கனவான்கள நம்மை ந்ம்ப வைக்க நிர்ப்ந்திப்பார்கள் .

#7) மக்கள் மன்றம் ஊக்கமாக செயல்படும் கிராமங்களுக்கு எல்லாம் சென்று(அம்மன் நகர், ஒரிக்கை, கொலிவாக்கம், கமுகம்பாளையம்) கிராம மக்களை மிரட்டியுள்ளனர் போலீசு. நாதபேட்டை கிராமத்திற்க்கும் சென்று இருளர்களை போலிசார் மிரட்டியுள்ளனர்.

#8) 22, பிப்ரவரி முதல் இன்று வரை மக்கள் மன்ற பெண் உறுப்பினர்களை குண்டர்கள் தொடரந்து வந்து கண்காணித்து வருகின்றனர். மக்கள் மன்ற கூடங்களை சுற்றி சுற்றி வருகின்றனர். மகேஸ் என்பவர் இது வரை ஆறு அனானிமஸ் செல்பேசி கால்களை பெற்றுள்ளார். பேசியவர்கள் கலெக்டரும், டிஎஸ்பியும் தமக்கு பின்னால் உள்ளதாக சொல்லி மிர்ட்டியுள்ளனர்.

#9) மக்கள் மன்றத்தை இந்த மாவட்டத்திலிருந்தே ஒழிப்பேன் என்று கலெக்டர் சபதம் எடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.

#10) குண்டாஸ் சட்டத்தின் கீழ் மகேஸ், ஜெஸ்ஸி, மற்றும் குமார் மீது வழக்கு தொடரப்படும் வாய்ப்புள்ளதாக தெரிகீறது.

#11) 18, மார்ச் 2007-ல் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 10 இருளர்களை கொலை செய்ய முயற்சி பிரிவின்(307) கீழ் போலீஸு கைது செய்துள்ளது. இவர்கள் அனைவருமே 19.02.07-ல் நிலப்பட்டா சம்பந்தமாக கலெக்டரை சந்திக்க சென்ற இருளர்களின் பிரதிநிதிகள் என்பது தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இவர்களின் பெயர், முகவரிகள் அன்று அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை விண்ணப்பித்தல் இருந்த எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே நாம் நம்ப வேண்டும். ஏனேனில் இந்தியா ஒரு பெரிய ஜனநாயகம், அரசும், போலிசும் நேரமையின் மறு உருவம், அவர்கள் புனிதர்கள் என்று சில நடுத்தர வர்க்க சுக ஜீவ்கள் நம்பி வருகின்றனர். அவர்களின் மன நிம்மதிக்க்கு உதவும் வகையிலாவது நாம் இந்த கூற்றை நம்புவோமாக.

மக்கள் மன்ற பெண் ஊழியர்களை பாலியல் தொந்தரவு செய்தவர்களை ஒன்றும் செய்யாத போலிசும், அதிகார வர்க்கமும்தான் கழுதையை வைத்து அரசு அதிகாரிகளை அம்பலப்படுத்தி போராட்டம் நடத்தியவர்களை மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளது. இந்த செய்தியைப் படியுங்கள், அதாவது கைப்பற்றப்பட்ட கழுதை குற்றம் நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டதாம். எது குற்றம்? போலிஸ் அனுமதியுடன் போராட்டம் நடத்தியதா? அதுவும் அமைதியாக?

இதே அமைப்பினர்தான் காஞ்சி சங்கரன் இருள் நீக்கி சுப்பிரமணி கைது செய்யப்பட்ட பொழுது பட்டாசு வெடித்து கொண்டாடியவர்கள். இவர்களின் சமரசமற்ற உரிமைக்கான போராட்டமே அதிகார வர்க்கத்தின் அத்தனை கோபத்திற்க்கும் காரணம். இது போன்ற மக்களின் உண்மையான தீர்வுக்காக போராடும் பொழுதுதான் அரசு எந்திரத்தின் முழு முகமும் தெரியவரும். அதை விடுத்து அடையாளப் போராட்டமும், பேன்ஸி போராட்டமும், தனது முதுகில் வண்டி வண்டியாக அழுக்கை வைத்துக் கொண்டு சாதாரண ஏழைக்கு உபதேசம் சொல்லும் சீர்திருத்தம், தனிமனித ஒழுக்க போராட்டமும் நடத்தும் அல்பைகளுக்கு அரசு இய்ந்திரம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும். எங்கே அந்த அல்பைகளை மக்கள் ம்ன்றத்தின் பிரச்சனைக்காக இறங்கி வேலை செய்ய கூப்பிடுங்கள். யாராவது ஒருத்தன் வருகிறான என்று பார்ப்போம். இது போல ஆயிரத்தெட்டு சம்பவங்களை நித்தம் தான் ந்டக்கும் வீதிகளிலேயே சந்தித்தால் கூட இவையெல்லாம் கேள்வியேப்பட்டிராத சம்பவம் போலவும், இவன் ஏதோ வேற்று கிரகவாசி போலவும் போலி அதிர்ச்சி காட்டுவான் இந்த நடுத்தர வர்க்க அல்பவாதி. ஆயினும் தனக்கு இந்தளவுக்கு வேண்டாம் கொஞ்சமே கொஞ்சம் நடந்தால் கூட அதைச் செய்தவன் சாதரணப்பட்டவனாக(ஆட்டொக்காரன்) இருக்கீன்ற பட்சத்தில் தனது தார்மீக ஆவேசத்தை உச்சானிக் கொம்பில் காட்டி அவனால்தான் இந்த சமூகமே நாசமாவது போலவும் அவனை திருத்தினால் எல்லாம் சரியாகிவிரும் என்பதாகவும் குதிப்பான் இந்த அல்பவாதி. இது போல சிறுக சிறுக சீர்திருத்தம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று வேறு காதில் ஃப்ரெஸ்ஸாக பூ வேறு சுற்றுவார்கள்.

கழுதைப் போராட்டத்தை வளைத்து வளைத்து மூன்று நாள் கவர் செய்து எழுதிய ஹிந்து உள்ளிட்ட பத்திரிக்கைகள் யாரும் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்துள்ளதே இது குறித்து ஒரு இம்மி கூட எழுதவில்லை. பத்திரிக்கைகள்தான் ஜனநாயகத்தின் வேர் என்று கூறுபவர்கள், அந்த வேரே இப்படி அதிகார வர்க்கத்தின் கோமணத் துணியாக தொங்கிக் கொண்டிருக்க்கும் பொழுது ஜனநாயகம் எங்கே தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்ற ரகசியத்தை கண்டுபிடிக்க அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருக்கட்டும். போலி ஜனநாயகத்தின் தற்கொலை நிக்ழந்து வருடங்கள் ஆகி புல் முளைத்துவிட்டது தெரிந்த நாம் மாற்று வழிகள் குறித்து யோசிப்போம்.

அரசியல் சித்தாந்தம் இல்லாமல் அரசை எதிர்க்க துணிந்தவர்களுக்கும், மக்களை அரசியல்படுத்தி அணி திரட்டாமல் அரசை எதிர்க்க துணிந்தவர்களையும் அரசு இது போல வெகு சுலபமாகவே துடைத் தெறிகிறது. இது போன்ற அரசு நடவடிக்கைகளுக்கு இது வரை புரட்சிகர அமைப்புகள்தான் சரியான பதிலடி கொடுத்து வந்துள்ளன. சமீபத்திய தாமிரபரனி-கோக் பிரச்சனையிலும் கூட போஸ்டர் ஒட்ட தடை என்று எழுதிக் கொடுத்த டிஜிபியை தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தி வேலை நீக்கம் செய்ய வைத்தன்ர் புரட்சிகர அமைப்பினர். அத்னை தொடர்ந்து சட்டவிரோதமாக மக இகவின் நடவடிக்கைகளை முடக்க முயன்று அதன் வெகு சன தொடர்புகளின் சக்திக்கு முன்பு ஒன்றும் செய்ய இயலாமல் அவமானப்பட்டது போலீஸு.

மகஇகவின் பாடல் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது "இது போலி ஜனநாயகமாடா.... " என்று கோவன் பாடும் அந்த பாடல் சாலவும் பொருந்தும். இந்த போலி ஜனநாயகத்துக்கு அழகு செய்து புனித வட்டம் கட்டும் அறிவு ஜீவி கும்பல்கள் மேற்சொன்ன அரசின் நடவடிக்கைகளுக்கு பதில் சொல்லி சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கட்டும். மக்கள் மீது காதல் கொண்டவர்கள் இந்த போலி ஜனநாயகத்தை கிழித்தெறிந்து மக்கள் சர்வாதிகார மன்றங்களை கட்ட ஓரணியில் திரளட்டும்.

அசுரன்

8 பின்னூட்டங்கள்:

said...

மனம் கணக்கச் செய்யும் செய்தி..

கோவையில் சில வருடங்கள் முன் நன்பர் ஒருவர் தனக்குத் தெரிந்த இருளர் இனத்தைச் சேர்ந்த ஒருவரை சாதி சான்றிதழ் வாங்கித் தர அரசு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.. அங்கே இருந்த அதிகாரி " நீ இருளன் என்று எப்படி நம்புவது? வேணும்னா பாம்பு பிடிச்சுக் காட்டு பாக்கலாம் " என்று சொல்லி அவமானப் படுத்தி இருக்கிறார். பள்ளி இறுதி வரை படித்த அந்த இருளர் இன நன்பர் கூனிக் குறுகிப் போய் விட்டார்.. பொதுவாகவே அரசு அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளுக்காக தேடி வரும் மக்களில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரை நடத்தும் விதம் பதிவில் சொன்னது போல "துரைத்தனத்துடன்" தான்.

உள்ளே வருபவரை "வாங்க" என்று அழைப்பதோ, உட்கார நாற்காலி தருவது போன்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் தான் நடத்துகிறார்கள்.

இது நீதி மன்றத்தில் இன்னும் அதிகம். ஒரு வழக்கிற்காக மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் சென்ற என் நன்பன் முன் பக்கம் கையைக் கட்டி 'பணிவோடு' நிற்காமல் பாண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி அட்டாங்காலில் நின்று கொண்டிருந்தான். அதைக் கவனித்த நீதிபதி சொத்தைக் காரணத்தை சொல்லி அதிகம் பைன் கட்ட வைத்தார். அதே வழக்கில் மற்றவர்களுக்கு பைன் கம்மி!

பதிவில் இருளர்கள் பிரச்சினையில் அரசு காட்டிய அலட்சியம் என்கிற செய்தினூடாக, அரசு இயந்திரத்தின் ஒடுக்குமுறை இயல்பையும், ஜனநாயகத்தின் போலித் தன்மையும் சிறப்பான முறையில் அம்பலப்படுத்தியுள்ளீர்கள்..

said...

//அரசியல் சித்தாந்தம் இல்லாமல் அரசை எதிர்க்க துணிந்தவர்களுக்கும், மக்களை அரசியல்படுத்தி அணி திரட்டாமல் அரசை எதிர்க்க துணிந்தவர்களையும் அரசு இது போல வெகு சுலபமாகவே துடைத் தெறிகிறது.//

மக்கள் மன்றத்துக்கு மக இக சார்பில் உதவிகள் செய்ய (போராட்டத்தில்) எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதா தோழர்

said...

மக்கள் மன்றத்திற்கு(போராட்டத்தில் ) உதவ மக இ க சார்பில் எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா தோழர்

said...

உணர்ச்சிபூர்வமான,சரியான பதிவு. மக்கள் மன்றத்தினருடைய போராட்டம் ஒடுக்கப்பட்டிருப்பது ஒரு வகையில் பிற முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களுக்கு விடப்பட்டிருக்கக் கூடிய எச்சரிக்கையாகும்.தாங்கள் எடுத்துக் காட்டியிருப்பது போல புரட்சிகர சித்தாந்தத்தால் உறுதி பெற்ற அணிகளும், தாக்குதல்களை எதிர்கொள்ளத்தக்க வலைப்பின்னலும் இல்லாமல், எல்லாவற்றையும் விட முக்கியமாக மக்களை அணிதிரட்டாமல் எவ்வளவு நியாயத்தோடு போராடினாலும், அரசு அப்போராட்டங்களை கொடூரமாக துடைத்தெறியவே செய்யும். அற்பவாதிகளையும், அவர்களது கண்ணோட்டங்களையும் மிகச் சரியாக திரை கிழித்திருக்கிறீர்கள்.

பி.கு :
சில எழுத்துப்பிழைகள் உள்ளன.அவற்றை சரி செய்யவும்.மேலும், கீழ்க்காணும் வரியில் போலிசு என்ற சொல் தவறாக இடம்பெற்று அதன் பொருளையே மாற்றுகிறது. அதனை சரி செய்யவும்.

//ஆயினும் இதனை மீறி 07 பிப்ரவரி 2007ல் போராட்டம் நடத்தியது போலீசு.//

said...

ஐயா இரு கேள்விகள்:1, இது போன்ற தன்னார்வ குழுக்களை,அமைப்புகளை ஏகாதிபத்திய எடுபிடிகள் என்றுதானே நீங்கள் எழுதுவீர்கள்.அந்த கருத்து இந்தப் பதிவில் காணப்படவில்லையே.2, தாமிரபரணியிலிருந்து கோக் நிறுவனம் தண்ணீர் எடுப்பதை நிறுத்திவிட்டதா ஆலை மூடப்பட்டுவிட்டதா. போராட்டம் தொடர்கிறதா அங்குள்ள நிலை என்ன

said...

NGO குறித்து கேட்ட அனானி அவர்களே,

அவர்கள் போராட்டம் நியாயமானது, அவர்கள் போராடும் விசயம் நியாயமானது எனில் அதனை மக்களிடம் கொண்டு செல்வதில் என்ன தவறு இருக்க முடியும். மேத ப்ட்கரின் நர்மாதா போராட்டத்திற்க்கு கூட நான் ஆதரவு தெரிவிக்கிறேன், லத்தீன் அமெரிக்க நாடுகளில் NGOக்கள் தலைமையில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களை ஆத்ரிக்கிறேன். எனில் இதன் அர்த்தம் NGOக்களை ஆத்ரிப்பதல்ல,. அவர்கள் எடுத்துள்ள சமூக பொருளாதார கோரிக்கைகளையும், அதற்க்கான் போரட்டங்களையும் ஆதரிப்பதே ஆகும்.

இதனை செய்யும் அதே வேளையில்தான் அவர்களின் அமைப்பு வடிவத்தையும் விமசிக்கிறோம். இந்த கட்டுரையிலும் அதனை செய்துள்ளேன்.

இங்கு அரசு வன்முறை குறித்தும், மக்கள் பிரச்சனை குறித்தும், அதற்க்கான போராட்ட வழிமுறை குறித்தும் தானே எழுதியுள்ளேன். NGOக்கள் ரொம்ப நல்ல்வர்கள் அவர்களீடம்தான் விடுதலையின் திறவுகோல் உள்ளது என்று நற்சான்றிதழ் எதுவும் கொடுத்துள்ளேனா? இல்லையே?

NGOக்களை ஏகாதிபத்திய எடுபிடிகள் என்ற வரையறுப்பதில் எந்த மாறுபாடும் இல்லை. அந்த வரையறை என்பது ஏகாதிபத்தியம் எடுபிடி என்ற இரு வார்த்தைகள் மட்டும் கிடையாது. அந்த முடிவுக்கு வந்து சேர்ந்த ஆழமான ஆய்வையும் சேர்த்தெ உள்ளடக்கியது அந்த வரையறை.

அதாவது, NGOக்களை ஏகாதிபத்திய எடுபிடிகள், ஒற்றர்கள் என்று கூறூகிறோம் எனில் காரணம், அந்த அமைப்புகளின் சமூக பொருளாதார உறவு அது போன்ற நிலையை நோக்கித்தான் அவர்களை கொண்டு செல்லும் என்ற அர்த்தத்தில். ஒரு NGO நல்ல காரணத்துக்காக உண்மையான நோக்கத்திற்க்காகவே ஆரம்பத்தில் வேலை செய்ய துவங்கினால் கூட அவர்களின் வேலை அளவு பெருக பெருக மேலும் மேலும் பொருளாதார ரீதியாக சமூகத்தை சுரண்டும் வர்க்கத்தாரின் உதவியை அண்டி நிற்க்கும் நிலை அதிகரிக்கும் இதன் மூலம் எந்த வர்க்கம் இந்த ச்மூக சீரழிவிற்கு காரணமாகிறதோ அந்த வர்க்கத்திற்கே இது நண்பனாக மாறிவிடும். மேலும் சமூக பிரச்சனைகள் குறித்தான் அவர்களின் மேம்போக்கான, சித்தாந்தமற்ற, சீர்திருத்த்வாத பார்வை என்பது அவர்க்ளை இது போன்ற நிலையை நோக்கியே கொண்டு செல்லும். NGOக்களின் இந்த இயல்பை முன் வைத்தே ஏகாதிபத்திய எடுபிடிகள் என்கிறோம்.

தாமிரபரனி மட்டுமல்ல எந்த ஒரு போராட்டத்திலும் அரசை நிராகரிக்கும் மக்களின் போராட்ட முறையே தீர்வு கொடுக்கும்,.அதுவும் கூட குறைந்த பட்ச தற்காலிக தீர்வே. எ-கா நந்திகிராம். தாமிரபரனி பிரச்சனையில் என்ன நடந்துள்ளது. பொதுமக்களுக்கு அரசு என்பதின் உண்மை முகம் தெரிந்துள்ளது. மாற்று அரசியலுக்கான தேடல் மக்களிடம் அதிகரித்திருக்கலாம். இதைத் தாண்டி இந்த சமூக அமைப்பில் கோக்கை விரட்டியடிப்பது என்பது அங்குள்ள மக்களே வெகுண்டெழுந்து (பாசிவ்வாக் இப்பொழுது ஆதரவு கொடுக்கும் மக்கள், ஆக்டிவாக களத்தில் இறங்கும் சூழல்) ஏகாத்பத்திய கோக்கையும், அதன் அல்லக்கைகளான கலெக்டர், போலிசை அடித்து விரட்டும் சூழல் வந்தால்தான் தீர்வு கிடைக்கும். அங்குள்ள தற்போதைய நிலைமை குறித்து மக இக வோ அல்லது பிற தலித், கம்யுனிஸடு அமைப்புகளோ பத்திர்க்கைகளிலோ அல்லது வேறு எதிலிமோ எழுதவில்லை எனவே எனக்கு அதன் தற்போதைய நிலமை என்னவென்று தெரியவில்லை. அதிகபட்சம், அங்குள்ள மக்களின் தற்போதைய அரசியல் மனோபாவத்தை வென்றெடுக்கும் வேலையில் இந்த அமைப்புகள் ஈடுபட்டிருக்கும் என்று நாம் யூகிக்கலாம். இதன் மூலம் அடுத்தகக்ட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சிகளீ ஈடுபடலாம். ஏனேனில் கோக் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒன்று அங்கு கட்டப்பட்டுள்ளது.

அசுரன்


***********

தியாகு,

மகஇக இந்த விசயத்தில் என்ன செய்யப் போகிறது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. எனது அரசியல் நிலைப்பாடுகள் மக இக சார்பாக இருப்பதன் அர்த்தம் எனது நிலைப்பாடுகள் எல்லம் மக இகவின் நிலைபாடுகள் என்ற அர்த்தத்தில் அல்ல. எனது அரசியலும், மக இகவின் அரசியலும் ஒத்துப் போகிறது என்ற அளவிலேயேயும், இதனையொத்த அரசியல் நிலைப்பாடுகளுடைய வேறு சில அமைப்புகள் எதுவும் வீச்சாக செய்ல்படும் அமைப்பு முறையின்றி இருப்பதன் அடிப்படையிலேயே இந்த சார்பு நிலை உள்ளது. எனக்கு வந்த ஒரு மெயிலிருந்துதான் இந்த கட்டுரையை எழுதினேன். அனுப்பியவர் அசுரன் தளத்தில் முன்பு கட்டுரைகள் எழுதிய கற்பக விநாயகம்.

அசுரன்

said...

கட்டுரையிலிருந்த எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டியமைக்க நன்றி அரசு பால்ராஜ்,

சரி செய்கிறேன்.

அசுரன்

said...

ராஜவனஜ்,

அரசு, அதிகார வர்க்கத்தின் துரைத்தனம் என்பது இந்திய அரைக்காலனிய-அரை நிலபிரபுத்துவ சமூகத்தின் இயல்பிலிருந்தே உதிக்கீறது. உங்களது பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது போன்ற சம்பவங்களை நாம் அன்றாட வாழ்வில் நித்தம் பார்க்கலாம். அதுவும் இருளர் பிரிவைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்தும் சம்ப்வம் போல நித்தம் ஏழை சனங்கள் அவமானப்படுத்தபப்ட்டு சுயமாரியாதையின்றி காயடிக்கபப்டுகீறார்கள். காலாச்சார அடக்குமுறை என்பது உடல் ரீதியான அடக்குமுறை, பொருளாதார அடக்குமுறை இவற்றை செயல்படுத்துவத்ற்க்கான முன் நிபந்தனையாக இருக்கீறது. எனவே பொருளாதார/உடல் ரீதியான அடக்குமூறை இருக்கிறது என்பதின் அர்த்தமே நீங்கள் குறிப்பிட்ட கலாச்சார அடக்குமூறையும் நிலவுகிறது என்பதன் அர்த்தம்தான். அரசு எனும் ஒடுக்குமூறை கருவியின் பிரிக்கவொன்னா அம்சம் இது.

அசுரன்

Related Posts with Thumbnails