TerrorisminFocus

Wednesday, April 04, 2007

ரவி சிரினிவாசின் விலகல் - முதிர்ச்சியற்ற அனுகுமுறை

ரவி சிரினிவாஸ் தமிழ் எழுத்துலகை விட்டு விலகப் போவதாக அறிவித்துள்ளார். ஆயினும் அவ்வாறு செல்வதற்க்கான காரணமாக தமிழ் பதிவுலகில் அரைப் பொய்களை அடிப்படையாகக் கொண்டு எழுதுவபவர்களின் பெரும்பான்மை என்னை அயர்வுறச் செய்கிறது என்பது போல எழுதியுள்ளார். இங்கு தமிழ் பதிவுலகில் அவருடன் சமீப காலங்களில் எல்லா தளங்களிலும் வாதம் செய்தவன் நான் என்று நம்புகிறேன். குறிப்பாக எனது தளத்தில் அனானிமஸாக வந்து ஆங்கில கேள்விகள் கேட்டு வந்தவர் ரவி சிரினிவாஸ் என்று இன்று வரை உறுதியாக நம்புகிறேன். இதனை பல இடங்களிலும் தெரியப்படுத்தியுள்ளேன். மேலும், ரவி சிரினிவாசின் அரசியல் நிலைப்பாடுகளீன் படி என்னை உள்ளிட்ட பார்ப்ப்னிய எதிர்ப்பு முற்போக்கு ஆட்கள்தான் எதிர் அரசியல் சக்திகளாக உள்ளோம். இந்நிலையில் அவரது இந்த கருத்து எம்மை நோக்கி எழுதப்பட்டது என்றே கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

அவர் வெளியே செல்வது ஒரு வகையில் எனக்கு விருப்பமில்லாத முடிவாக் இருக்கீறது. காரணம் தமிழ்மணத்தில் ஓரளவு நல்ல விவாதம் செய்யும் எதிர் அரசியல் சக்தி அவர் ஒருவர்தான் மற்றவர்கள் எல்லாம் டப்பா கேசுகளாகவே உள்ளனர். அவரது கேள்விகள் பல நேரங்களீல் எமது புரிதல்களை கூர்மையாக்குவதையும், எமது தரப்பை இன்னும் ஆழமாக பொது தளத்தில் எடுத்து வைக்க உதவுவதையும் குறிப்பிட்டே தீர வேண்டும்.

ஆயினும், விலகி செல்பவர் இது போன்று அடிபப்டையற்ற அவதூறுகளை கிளப்பிவிட்டு செல்வது அவர் உண்மையில் விலகிச் செல்லவில்லை, மாறாக தனது இருப்பை வேறு வடிவஙக்ளீல் உறுதி செய்து விட்டு செல்வதாகவே கருத வேண்டியுள்ளது. ஏனேனில் அவரது இந்த வார்த்தைகளுக்கு அவர் எந்த ஒரு சின்ன உதாரணம் கூட கொடுக்கவில்லை எனும் அதே நேரத்தில் எதிர் அரசியல் குழுவினர் எம்மீதான தாக்குதலுக்கு ரவி சிரினிவாசின் இந்த விலகல் அவதூறை புரளி வடிவில் பயன்படுத்தும் வாய்ப்புள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது வரையான எம்முடனான விவாதங்களில்(குறைந்த ப்ட்சம் என்னுடனான) நான் அல்லது நாங்கள் எதுவும் பொய்யான தகவல்களை கொடுத்ததாக தெரியவில்லை. தர்க்க ரீதியாக அவர் பேசினால் தர்க்க ரீதியாகவும், தரவு ரீதியாக அவர் கருத்து வைத்தால் நானும் தரவு ரிதியாகவும் எதிர் வினை தொடுத்து வந்துள்ளேன். பொய் அல்லது அரைப் பொய் என்கிற பட்சத்தில் ஏதேனும் ஒரு சில இடங்களிலாவது எமது தரப்பு அம்பலப்பட்டு போயிருக்க வேண்டும். அப்படி தமிழ் மணத்தில் ஒரு இடம் கூட நாம் அம்பலப்பட்ட இடம் என்று இல்லை எனும் போது, அரைப் பொய்களீன் அடிப்படையில் நாம் இயங்குகிறோம் என்ற அவரது சொற்கள் எம்மீதானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்ப்படுகிறது. ஒருவேளை அவர சில இடங்களில் முரன்பட்டு நின்ற இன்னோரு அரசியல் குழுவான RSS கும்பலை அரைப் பொய்யர்கள் என்று சுட்டுகிறாரர் தெரியவில்லை. அது அவ்வாறாக இருக்கின்ற ப்ட்சத்தில் அவர ஆதாரம் கொடுக்க வேண்டியதில்ல அவருக்கு பதில் நாங்கள் ஆதாரம் கொடுக்கீறோம் RSS கும்பல் அரைப் பொய்கள் என்பதற்க்கு.

நிற்க, அவர் RSS கும்பலை குறிப்பிட அடிப்படையில்லை என்பதற்க்கு வலு சேர்க்கும் வகையில் அவர்து விலகல் குறித்த கட்டுரையில் RSS கும்பலைச் சேர்ந்த ஜடாயு கருத்து தெரிவித்துள்ளதை நோக்க வேண்டும். எனவே அவரது இந்த அவதூறு எம்மை நோக்கி மட்டுமே ஏவப்பட்டது என்பது உறுதிப் படுகிறது. ரவி சிரினிவாசின் இந்த குழந்தைத்தனமான அனுகுமுறை அவரது முதிர்ச்சிக்கு அழகல்ல என்ற எனது கண்டனத்தை இத்துடன் சேர்த்து பதிவு செய்கிறேன். அவரது அவதூறு அடிபப்டையில்லாதது உண்மையில் அதுதான் பொய்யாக உள்ளது என்பதனையும் சேர்த்து பதிவு செய்கிறேன்.

அசுரன்

18 பின்னூட்டங்கள்:

said...

அந்தாளு அடிக்கடி இதுபோல சொல்வதும் அப்ப்றம் நான் தமிழில் எழுத மாட்டேன் என்பதும் ஆங்கிலத்தில்தான் புடுங்குவேன் என்பதும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அசுரன், நீங்கள் வலைப்பதிவுக்கு புதியவர் என நினைக்கிறேன். நீண்ட நாட்களாக எழுதும் விடாதுகருப்பு அண்ணாச்சியை கேளுங்கள். கதை கதையாக புட்டுப்புட்டு வைப்பார் ரசி சீனிவாசு என்கிற பாப்பானைப் பற்றி.

அந்த ஆள் எழுதவில்லை என்றால் தமிழ்நாட்டில் பஞ்சம் வந்து விடுமா? போங்க சார் போய் வேலையை பாருங்க.

said...

அந்தாளு அடிக்கடி இதுபோல சொல்வதும் அப்ப்றம் நான் தமிழில் எழுத மாட்டேன் என்பதும் ஆங்கிலத்தில்தான் புடுங்குவேன் என்பதும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அசுரன், நீங்கள் வலைப்பதிவுக்கு புதியவர் என நினைக்கிறேன். நீண்ட நாட்களாக எழுதும் விடாதுகருப்பு அண்ணாச்சியை கேளுங்கள். கதை கதையாக புட்டுப்புட்டு வைப்பார் ரசி சீனிவாசு என்கிற பாப்பானைப் பற்றி.

அந்த ஆள் எழுதவில்லை என்றால் தமிழ்நாட்டில் பஞ்சம் வந்து விடுமா? போங்க சார் போய் வேலையை பாருங்க.

said...

Watching the scenario!

said...

ரவி ஸ்ரீனிவாசுடன் அதிகம் விவாதித்ததில்லை ஆனால் கவனித்துள்ளேன். விவாதத்தில் எதிராளியை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தும் பாணி அவருடைய தனிச்சிறப்பு என்பது என்னுடைய புரிதல். எதிராளியை அடிமுட்டாள் என்று ஒரு முடிவு செய்துவிட்டு தான் இவர் விவாதிக்கவே இறங்குவார் என்று நினைக்கிறேன். ஆனாலும் சில நேரங்களில் ஆச்சர்யப்படத்தக்க அளவில் பல மேற்கோல்களையும் கையாள்வதைக் கவனித்துள்ளேன். அவர் விலகியதை விட அதற்காக அவர் முன்வைத்த காரணங்கள் வருந்தத்தக்கது.

அதன் மூலம் இப்போது அவருடைய விலகல் முடிவே நேர்மையற்றதாக இருக்கிறது.

said...

அனானி,

இங்கு முக்கியமான விசயம், விலகுவதற்க்காக அவர் குறீப்பிட்டுள்ள காரணம்.

and ஒரு வலது சாரியாக அவரது கேள்விகள் எமக்கு வாய்ப்புகள் தருகின்றன என்பதை நான் மறுக்க முடியாது. எனவே அவரை அந்த அம்சத்தில் நான் அங்கீகரித்தே தீர வேண்டியுள்ளது :-))

அசுரன்

said...

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இடதுசாரி, முற்போக்கு, பெரியாரிய இன்ன பிற வாதிகளின் எழுத்துக்களில் காணப்படும் அறிவார்ந்த நேர்மையின்மை. தங்கள் தரப்பு வாதத்திற்காக தகவல்களை திரிப்பதில் துவங்கி, முழுப் பொய்களை கூச்சமின்றி எழுதுவது என்று பல விதங்களில் இது செய்யப்படுகிறது. பல அரை,முக்கால்,முழுப் பொய்களை சிறுபத்திரிகைகள், இயக்க பத்திரிகைகள், லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிகைகளிலும், நூல்களிலும், வலைப்பதிவுகளிலும் படிக்க நேரிடுகிறது.

-:)

said...

அது சரி, இதை நானும் வாசித்துதான் இந்த பதிவை எழுதினேன். ஏதாவது ஒரு எ-காவாவது அவர் கொடுக்க வேண்டும். அவ்வளவு பெரிய பதிவில் ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கக் கூடவா வக்கில்லை. ஏன் இத்தனை நாள் இங்கே எழுதியவர் ஒரேயொரு அம்சத்திலாவது எமது தரப்பு புளுகுனி பாண்டியர் குருப் என்று நிரூபித்திருக்கலாமே?

அப்படி ஒரு முயற்சி எதுவும் மேற்கொள்ளாமல் ஏற்கனவே ரவி சிரினிவாஸ் குறித்து நிலவும் ஒரு பொதுக் கருத்தை(அறிவு ஜீவி) தனக்கு சாதகமான உளவியலாக பயன்படுத்தும் தந்திரமாகத்தான் இந்த அவரது குழந்தைத்தனமாக அனுகுமூறை உள்ளது.

இதைத்தான் விமர்சிக்கிறேன். லைசென்கோ விசயத்தில் கூட லைசென்கோவை முன் வைத்து இயக்கவியலின் மீது ஒட்டு மொத்த பலி சுமத்தியதைத்தான் அம்பலப்படுத்தினேனே அன்றி லைசென்கோ 100% சரியானவர் என்று சர்டிபிகேட் கொடுக்கவில்லை நான். ஏனேனில் எனக்கு அந்தளவு உயிரியல் தெரியாது.

அப்படியிருக்க தெரிந்த தகவல்களின் அடிப்படியில் உண்மை என்றூ நம்புவ்தை முன் வைத்து நாம் பேசும் பொழுது அதிலுள்ள பொய்கள் குறித்து விவாதம் செய்யட்டும் முதிர்ச்சியடைந்த எழுத்தாளர் ரவி சிரினிவாஸ். ஏன் அப்படியொரு முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. இது வரை?

பிறகு ஏன் இப்படி ஒரு அவதூறு செய்கிறார்?

அசுரன்

said...

ரவி சீனிவாசின் விலகல்
குழந்தைதனமானதல்ல
நரித்தனமானது,
அந்த ஆள் விலகி ஓடி விட மாட்டார்
நிச்சயமாக
வேறு பெயர்களில் வருவார்.

தான் விலகப்போவதை
பரிதாபத்திற்குறியதாக்கி
மற்றவர்களிடமிருந்து தனக்கு
அனுதாபத்தையும்.
கழிவிரக்கத்தையும் பெற்றுகொண்டு

கேள்வி கேட்ட எதிர் தரப்பை
மோசமானவர்களாக கருதவைக்கும்

((பாவம்பா அவரை ஓட ஓட விரட்டியெ
விட்டுட்டாங்க என்று))

நரித்தனம் தான் அவருடைய விலகல் அறிவிப்பு.

மேலும் இது வரை கேட்ட கேள்விகளுக்கு
பதில் கூறாமல் மாணங்கெட்ட முறையில்
ஓடிபோவதை கட்டுரையில் கடுமையாக
சாடி கன்டித்திருக்க வேண்டுமென்று
கருதுகிறேன்.

பாவெல்

said...

"குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இடதுசாரி, முற்போக்கு, பெரியாரிய இன்ன பிற வாதிகளின் எழுத்துக்களில் காணப்படும் அறிவார்ந்த நேர்மையின்மை. தங்கள் தரப்பு வாதத்திற்காக தகவல்களை திரிப்பதில் துவங்கி, முழுப் பொய்களை கூச்சமின்றி எழுதுவது என்று பல விதங்களில் இது செய்யப்படுகிறது. பல அரை,முக்கால்,முழுப் பொய்களை சிறுபத்திரிகைகள், இயக்க பத்திரிகைகள், லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிகைகளிலும், நூல்களிலும், வலைப்பதிவுகளிலும் படிக்க நேரிடுகிறது."


அவர் உங்களைக் காரணம் கூறவில்லை.பொதுவாகக் கூறியுள்ளார்.எழுதப் போவதில்லை என்று ஒருவர் கூறியபின் எப்படி விவாதிப்பீர்கள்:).எனவே இதற்காக நீங்கள் ஒரு பதிவு போட வேண்டுமா. எத்தனையோ வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள்.விவாதம் இல்லாமலா போய்விடும். ஒரு மூளையை நம்பியா விவாதங்கள் நடக்கின்றன.

மிதக்கும் வெளி அவர் குறித்து பதிவு எழுதுகிறார், நீங்கள் வேறு எழுதுகிறீர்கள். ஆயிரம் வலைப்பதிவர்களில் ஒருவர் எழுதுவதை நிறுத்தினால் வலைப்பதிவுலகம் இருண்டு விடாது. தேவையற்ற முக்கியத்துவத்தினை ஒருவர் விலகுவதற்கு தராதீர்கள்.

said...

பாவெல்,

அவர் தன்னை நடுநிலைவாதியாக நிலை நிறுத்த முய்ன்ற படியாலும். அவரை அம்பலப்படுத்துவதில் நாம் அதிக அக்கறை காட்டவில்லையாதலினாலும் அவரிடம் குறிப்பாக எதுவும் இது வரை கேள்விகள் கேட்க்கவில்லை. அவர்து வாதங்களை மட்டுமே இதுவரை முறியடித்துள்ளோமே தவிர்த்து எதிர் கேள்விகள் எதுவும் கேட்க்கவில்லை. ஏனேனில் தனிமனிதரை அன்றி சித்தாந்தங்களை முறியடிப்பதுதான் நமது பிரதான நோக்கமாக இருந்த படியால் அவருடனான நமது அனுகுமுறை இது போன்றதாக ஆகிவிட்டது. அவ்ரும் ஆளும் வர்க்க சித்தாந்தங்கள் அனைத்திலும் தன்னை வெளிக்காட்டிக் கொண்ட படியால் தனியாக அவரை அம்பலப்படுத்தும் தேவையின்றி அவரது சித்தாந்தங்கள் ஒவ்வொன்றையும் அம்பலப்படுத்துவதே போதும் என்பதாக இருந்தது. அவரது இந்த அவ்தூறை தொடர்ந்து வேண்டுமானால் அவரது நிலைப்பாடுகள் குறித்து கேள்விகள் கேட்க்கலாம்.

அசுரன்


********

Annony,

என்னை என்று குறிப்படவில்லையே நான். இங்கு அவர் தாக்குவது பார்ப்ப்னிய எதிர்ப்பு ஜனநாயக சக்திகள்(இடது சாரி) அனைவரையும் என்றே குறிப்பிடுகிறேன். கட்டுரையிலும் இதனை தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். அவர் எழுதாமல் போவது குறித்து பெரிதாக எதுவும் கருத்து இல்லை. ஆனால் ரவி சிரினிவாஸ் இவ்வாறு மொட்டையாக குறிப்பிட்டு விலகிச் செல்வது என்பதை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. அவர் விலகிச் செல்வது என்ற் உணர்வு ரீதியான தளததின் பலத்தில் பதிய வைக்கும் கருத்து என்னவென்று கவனியுங்கள். ஒட்டு மொத்தமாக ஜனநாயக சக்திகள் அனைவர் மீதும் சேறு வாரியிறைத்துவிட்டு நிம்மதியாக அவர் செல்வதை நாம் விட்டு வைக்க முடியாது. இது போன்ற அனுகுமுறையின் நேர்மையின்மையை அம்பலப்படுத்துவதன் மூலம் அவரது திருப்திகரமான மன்நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதும், ரவி சிரினிவாஸ் இப்படி தொடங்கி வைத்துள்ள விவாதத்தின் கட்டுப்பாடு இதோ இன்றிலிருந்து எம்மிடம் இருப்பதை உறுதிப்படுத்தவும் இந்த பதிவு அவசியமாகிறது.

அசுரன்

said...

பரந்த வாசிப்பு, ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுதும் திறன், கருத்து மோதல்களில் நாகரிகம்- ரவி சீனிவாசன் உட்பட ஒரு சில பதிவர்களிடமே நாம் இவற்றைக் காண முடிகிறது.அவர்களும் அதிகம் எழுதுவதில்லை.ரவி சீனிவாசன் வலைப்பதிவுலகிலிருந்து விலகிச் செல்வது வருத்தம் தரும் செய்தி.அவரிடம் கருத்து மாறுபாடு கொண்டவர்கள் அவர் எழுதியதைப் படிக்கும் போது பலவற்றை அறிந்து கொள்ள முடியும். சட்டம், இட ஒதுக்கீடு குறித்து விரிவாக எழுதியவர் இப்போது விலகிப் போவது சரிதானா ?. மீண்டும் எழுத வருவார் என்று நம்பும் ஒரு வலைப்பதிவர்

said...

//
நிற்க, அவர் RSS கும்பலை குறிப்பிட அடிப்படையில்லை என்பதற்க்கு வலு சேர்க்கும் வகையில் அவர்து விலகல் குறித்த கட்டுரையில் RSS கும்பலைச் சேர்ந்த ஜடாயு கருத்து தெரிவித்துள்ளதை நோக்க வேண்டும். எனவே அவரது இந்த அவதூறு எம்மை நோக்கி மட்டுமே ஏவப்பட்டது என்பது உறுதிப் படுகிறது.
//

ஆக RSS கும்பலைச் சேர்ந்தவர் ஒருவர் ரவி ஸ்ரீனிவாசுடன் ஒரு விஷயத்தில் ஒத்துப் போனால் அது ரவி ஸ்ரீனிவாஸ் உம்மை (அல்லது உம்முடைய மாவோயிஸ்டு கும்பலை) நோக்கி ஏவப்பட்ட அவதூறு என்று முடிவு செய்துவிட்டீர்களா ? என்னே அறிவு.

அவர் அரைப் பொய்களைச் சொல்லும் அரை லூசுகளைச் சொன்னார். உடனே ஏன் உங்களுக்கு வலிக்கிறது ? அதுக்கு நீங்க சொல்லும் காரணம் அதைவிட காமடியாக உள்ளது.

RSS காரன்வேற வந்து கும்மியடிக்கிறான்...அப்ப அது நம்மளத்தான் சொல்லிருக்காய்ங்கன்னு உங்களுக்கு ஏன் தோணுது...

அரைப் பொய்களைச் சொல்லும் அறிவி சீவியா நீங்க ?

நீங்க தான் முழுப் பொய்களைச் சொல்லும் மொள்ளைமாரியாச்சே!

said...

ஏன்டா லூசு தேவன்,

//குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இடதுசாரி, முற்போக்கு, பெரியாரிய இன்ன பிற வாதிகளின் எழுத்துக்களில் காணப்படும் அறிவார்ந்த நேர்மையின்மை.//

ரவி சீரினிவாசினுடைய மேற் சொன்ன இந்த வரிகளில் RSS க்காரன் வருகிறானா? எங்க ஆளுங்க பேருதானெ இருக்கு?

அவர் RSS கும்ப்லை சொல்வதாக வலு சேர்க்கும் என்று குறிப்பிட்டுதான் கட்டுரைப் பகுதியாக மிஸ்டர் லூசு தேவன் குறிப்பிடும் அந்த பகுதியை சொல்லியுள்ளேனே தவிர்த்து அதுதான் எமது அடிபப்டை புரிதலுக்கு காரணம் என்று சொல்லவில்லையே?

எமது அடிப்படை புரிதலுக்கு காரணம் ரவி சிரினிவாசின் மேற் சொன்ன வரிகளே.

எதையும் ஒழுங்கா படிக்கிற்து கிடையாது. வாய கொடுத்து வாயுல புண்ணொட போறது... எண்டா எத்தினி தபா அடி வாங்குனாலும் அமைதியா போறீங்களே நீங்க ரொம்ப நல்லவய்ங்கிளோ?

அப்படி போய் ஓரமா உக்காந்து படம் பாருங்க.... உங்க அப்பன்களே வாங்குன அடிய சுமக்க முடியாம அலையுறானுங்க இதுல் புதுசா இவன் வேறா.....

அசுரன்

said...

//அது சரி, இதை நானும் வாசித்துதான் இந்த பதிவை எழுதினேன். ஏதாவது ஒரு எ-காவாவது அவர் கொடுக்க வேண்டும். அவ்வளவு பெரிய பதிவில் ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கக் கூடவா வக்கில்லை. ஏன் இத்தனை நாள் இங்கே எழுதியவர் ஒரேயொரு அம்சத்திலாவது எமது தரப்பு புளுகுனி பாண்டியர் குருப் என்று நிரூபித்திருக்கலாமே?
//

தோழர் இதுமாதிரிதான் எல்லா இடத்திலும் செய்கிறார்கள்
1.பதில் சொல்லும் நேர்மை
2.எதிராளி சொல்வது உண்மையெனில்
ஒப்புகொள்வது இரண்டும் இல்லை எனவேதான் இப்படி வெளியேபோவது
மற்றும் , மெளனம் சாதிப்பது

நீங்கள் தொடர்ந்து முரசறையுங்கள்

சிங்கங்கள் சின்னவண்டுகளுக்கு அஞ்சுமா
தங்கங்கள் தகரத்தால் மாறுமா
பொங்குமாகடல் போக்கிடம் கேட்குமா
போவென்று சொன்னால் புயலும் போகுமா
புதுமைகள் படைக்க புறப்படுஎன் தோழா!

said...

பொத்தாம் பொதுவாகத்தான் நீங்கள் தந்துள்ள சுட்டியில் இருக்கிறது. வலைப்பதிவுதான் என்றோ அல்லது உங்களையென்றோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை.ஆகையால் நீங்கள் அனுமானம் செய்துள்ளது சரியாக இல்லை.ஒரு நபர் எழுதாவிட்டால்தான் என்ன. மீதி பேருடன் நீங்கள் விவாதம் செய்யலாமே.

said...

நோண்டு கிழவன் இங்கே அனானி பெயரில் கும்மி அடித்து இருக்கிறான், நன்றாக கவனித்து படித்துப் பாருங்கள்.

//என்னே அறிவு//

//பொத்தாம் பொதுவாக//

இதுவெல்லாம் நோண்டு பயன்படுத்தும் பார்த்தைகள்!!!

said...

//பொத்தாம் பொதுவாகத்தான் நீங்கள் தந்துள்ள சுட்டியில் இருக்கிறது. வலைப்பதிவுதான் என்றோ அல்லது உங்களையென்றோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை.ஆகையால் நீங்கள் அனுமானம் செய்துள்ளது சரியாக இல்லை.ஒரு நபர் எழுதாவிட்டால்தான் என்ன. மீதி பேருடன் நீங்கள் விவாதம் செய்யலாமே.//
குற்ற உணர்ச்சி?
பன்னாடை, பார்ப்பன குசும்பர்கள், இழிபிறவியென்றெல்லாம் என்றெல்லாம் திட்ட வேண்டியது. இல்லாவிட்டால் அவ்வாறு வரும் பின்னூட்டங்கள் அலவ் செய்வது. உங்களுடன் வாதம் செய்து திட்டு வாங்க வேண்டுமென அவருக்கு தலையெழுத்தா?

said...

யோவ் லூசு அனானி,

அவரு வெளியே போறேன்னு சொல்ற கட்டுரைல வெளியெ போறதுக்கு நீ சொன்ன காரணத்தையா சொல்லிறுக்காரு? நாங்க பொய் சொல்றோம், அது பொறுக்காமதான் வெளியே போறதா சொல்லி புளுகுறாரு. அதைத்தான் இங்க எழுதிருக்கேன்.

குடுமிய அவுத்துட்டு படி... இல்லின்னாக்க கண்ணு மறைக்கும்.

அசுரன்

Related Posts with Thumbnails