TerrorisminFocus

Friday, April 27, 2007

நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!

ல்லாயிரம் வருடங்களாய் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் சொந்தமாக நிலமின்றி அல்லது சொற்ப நிலத்தில் கடுமையான உழைப்பைச் செலுத்தி பரம்பரை பரம்பரையாக மக்களின் உணவுத் தேவைக்காக உழைக்கிறான் இந்திய விவசாயி. உழவன் கணக்குப் பார்த்தால் உளக்குக் கூட மிஞ்சாது என்பது பழமொழி மட்டுமல்ல அது நிதர்சனமான உண்மை என்பதுதான் இந்திய சமூகத்தின் கோடூரமான விசயம்.

இந்த நிலையில் அவனுக்கு பதிலுக்கு இந்த சமூகம் எதுவும் செய்யாவிடில் கூட பரவாயில்லை. ஆனால் இருக்கின்ற வாழ்வாதாரத்தையும் பிடுங்கி நாடோ டியாக, உள்நாட்டு அகதியாக வீசுவது என்பது துரோகத்திலேயே பெரிய துரோகம். SEZக்கள் என்பவை அப்படிப்பட்டவையே.

SEZக்களுக்கு நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் என்று இன்னுமொரு பரிமாணம் இருக்கிறது. அதனை பிறகு பார்ப்போம். அதற்க்கு முன்பாக அதற்க்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் என்று இன்னுமொரு முக்கிய பரிமாணம் இருப்பதையும், அது விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என்பதையும், இந்திய சுயச்சார்பின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை என்பதையும் பார்ப்போம்.

ரியல் எஸ்டேட் பிசினசும் - மாஃபியா அரசும்:

சிங்கூரில் டாடாவுக்கு என்று 'போலி கம்யுனிஸ்டு பாசிச CPM' அரசு மக்களை ஏமாற்றி வாங்கிய நிலத்திற்க்கு அவர்கள் கொடுத்த விலை 140 கோடி ரூபாய். இதற்க்கு டாடா கம்பேனி அரசுக்கு கொடுக்கும் விலை வெறும் 20 கோடி ரூபாய் இதையும் அரசே கடனாக கொடுக்கும். அதற்க்கான வட்டி என்பது மிக மிக மிக சொற்பமான அளவே ஆகும். கவனிக்கவும் சிங்கூர் நல்ல வளமான விவசாய நிலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது(ஏதோ - 220 percent crop density என்று சொல்கிறார்கள் எனக்கு ஒன்னும் புரியல, மொத்ததுல நல்ல விவசாய நிலம் என்று சொல்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது).

SEZக்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் எல்லாம் குறைந்தது ஆயிரம், ஐயாயிரம் ஏக்கர் என்ற கணக்கில் ஒதுக்குகிறார்கள். அப்படியென்ன ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு தரகு முதலாளிகள் மயிரப் புடுங்கி எறியப் போகிறார்கள் என்று பார்க்கும் முன்பு சில உண்மைகளைப் பார்த்து விடுவோம்.
பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி எனும் தொழில்பேட்டை phase - I ன் அளவு முன்னூத்தி சொச்சம் ஏக்கர் மட்டுமே. அதில் 100க்கும் மேற்ப்பட்ட கம்பேனிகள் இருக்கின்றன. அவற்றில் பெரிய கம்பேனிகள் சிமன்ஸ், HP, இன்போசிஸ், விப்ரோ, சத்யம் உள்ளிட்டவை உள்ளன. இந்த கம்பேனிகளில் ஒவ்வொன்றும் பத்தாயிரம் எண்ணிக்கையில் ஆட்களை வேலைக்கு வைத்துள்ளனர். இது போக வங்கிகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் என்று பிற வசதிகளும் உள்ளிட்டே மூன்னூறு சொச்சம் ஏக்கர்தான். இவை அத்தனையும் நூறு கம்பேனிகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கும் நிலையில். இந்தியாவில் இது போன்ற சிறப்பு தொழிற்பேட்டைகளில் மிகப் பெரியனவற்றுள் ஒன்று எலெக்ட்ரானிக் சிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அடிவருடி அரசோ ஆயிரம், ரெண்டாயிரம், பல இடங்களில் 20,000 ஏக்கர் நிலங்களை அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு கம்பேனிகளுக்கு ஒதுக்குகிறது எனில் அதில் எந்த ஒரு நேர்மையான நோக்கத்தையும் பார்க்க முடியவில்லை. அவர்களின் உண்மையான நோக்கம் ரியல் எஸ்டேட் பிசினஸ்தான். ஏனேனில், SEZயில் 25% மட்டுமே உற்பத்தி கேந்திரங்களாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மீதி இடங்களை கேளிக்கை விடுதிகள், தங்குமிடங்கள் உள்ளிட்ட விருப்பமான எவற்றை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என்றும் அரசு சலுகை கொடுத்துள்ளது. உண்மையில் 20,000 ஏக்கரை விடுங்கள், ஆயிரம் ஏக்கர் அளவுக்கே கூட தொழிற்சாலை கட்ட நிலம் தேவைப்படாது.

கல்கத்தா புறநகர் பகுதி ராஜர்ஹாட்டில் ஒரு ஹோட்டா(ஒரு நில அளவுக்கான அலகு) 5000 முதல் 15000 ரூபாய் வரை கொடுத்து நிலங்களை எடுத்துக் கொண்டது ஹிட்கோ என்ற அரசு நிறுவனம். இன்று அந்த நிலங்களின் மதிப்பு 10-20 லட்சம் வரை உள்ளது. அதாவது SEZயில் 25% இடத்தில் 'நாட்டுக்கு உதவாத' தொழிற்சாலையை கட்டி வைத்து, மீதியுள்ள இடத்தை ரியல் எஸ்டேட் வேலைகள் செய்து அதிக விலைக்கு விற்று கோடி கோடியாக அவன் கொள்ளையடிக்க அரசாங்கம் எடுபிடி வேலை பார்க்கிறது. இப்போது கொஞ்சம் முன்பு சொன்னவற்றை மீண்டும் மனதில் ஓட விடுங்கள் விலை மதிப்பில்லா சிங்கூர் நிலங்களை 140 கோடி ரூபாய்க்கு வாங்கி அதனை 20 கோடி ரூபாய்க்கு டாடாவுக்கு விற்க்கும் ஒருவனை புரோக்கர் நாய் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? அதற்க்காக மக்களை மிரட்டி, கடத்தி, சுட்டுக் கொல்பவனை ஃமாபியா என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

மும்பை, ஹைதராபாத், பெங்களூர் நகரங்களின் வளர்ச்சியின் உடன் விளைவாக ரியல் எஸ்டேட் பிசினஸும் வளர்ந்தது. அதனுடன் ரியல் எஸ்டேட் ஃமாபியாக்களும் வளர்ந்தனர். குறைந்த விலைக்கு சொத்துக்களை விற்க சொல்லி சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களை மிரட்டுவதுதான் இவர்களின் வேலை. ஆட்களை கடத்திச் சென்று கொல்வது உள்ளிட்ட எல்லா அக்கிரமங்களையும் இவர்கள் செய்வார்கள் இதோ நந்திகிராமத்திலும், சிங்கூரிலும் ரியல் எஸ்டேட் ஃமாபியாவாக அரசு நிற்கிறது. தமிழகத்தில் SEZ எனும் ரியல் எஸ்டேட் பிசினஸ்க்கு ஃமாபியா வேலை செய்பவராக தரகு தாத்தா கருணாநிதி நிற்கிறார் - "சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக அனாவசியமாக பிரச்சனையை கிளப்புபவர்களை இந்த அரசு பொறுத்துக் கொண்டிருக்காது"(அவர் சொன்ன அதே வார்த்தைகள் நினைவில் இல்லை) இப்படி மிரட்டுகிறார் தாத்தா. எது அனாவசியம்? இந்தியாவின் வாழ்வை சூறையாட வரும் SEZ உனக்கு அத்தியாவசியம் எனில் உனது கணக்கில் எனது வாழ்க்கையே அனாவசியமாகிப் போகிறதே?


விவசாய நிலத்தை ஒதுக்குவது நியாயமா?
இந்தியா எனும் மிகப்பெரிய நிலப்பரப்பில் SEZக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பது சொற்பம் என்று ஜல்லியடிக்கிறார் ஒருவர். இந்தியா உணவு தன்னிறைவு அடைந்த நாடு அல்ல. விவசாய உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. பூ இறால் பண்ணைகள் முதலானவற்றிற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அத்தியாவசிய உணவு தாணியம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாய நிலப்பரப்பை அதிகப்படுத்த வேண்டிய ஒரு நிலையில் தற்போதைய இந்தியா உள்ளது. இந்தியாவின் தற்போதைய விவசாய நிலப்பரப்பை இன்னும் விரிவு படுத்துவது, வளமான நிலங்களை நன்கு பயன்படுத்தும் அதே வேளையில், தரிசு நிலங்களை பண்படுத்தி விவசாய நிலங்களாக மாற்றுவது, விவசாயத்தை மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறைக்குக் கொண்டு செல்வதன் மூலமாக சிறுக சிறுக விவசாய மக்கள் தொகையின் எண்ணிக்கையை குறைப்பது. இதனை ஈடுகட்டும் வகையில் பெரிய, சிறிய தொழிற்சாலைகள், பட்டறைகள் கட்டுவது இதுதான் உண்மையில் நாம் செல்ல வேண்டிய பாதை. இதுதான் உண்மையில் சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும். ஆனால் இந்த விசயங்களை செய்யாமல் ஏமாற்றும் இந்த அரசு அதற்க்கு எதிர் திசையில் சென்று, இருக்கும் சொற்பமான வளமான நிலங்களையும் SEZக்கு கொடுப்பதை கொஞ்சமா ஏதோ கொடுத்துட்டு போறான் விட வேண்டியதுதானே என்று வெட்கமின்றி நியாயப்படுத்துகிறார்கள் மானங்கெட்டவர்கள். "உன் புள்ள குட்டிகளா ஒரே ஒரு நாள் வாடகைக்கு கொடேன், அதான் வருசம் முன்னூத்தி சொச்சம் நாள் நீ வைச்சிருக்க இல்லையா? ஒரேயொரு நாள் எனக்குக் கொடுத்தா குடியா முழுகிப் போயிரும்?" இதற்க்கு அந்த அடிவருடிகள் ஒத்துக் கொள்வார்கள் எனில் அதற்க்கப்புறம் இந்த SEZ விசயத்தைப் பேசிக்கலாம். ஆட்டோ க்காரனிடம் ஐந்து பைசாவுக்கு பேரம் பேசி கன்ஸ்யூமர் கோர்ட் போகும் நாதாரி நாய்கள், இவர்கள்தான் ஆயிரம் வருடங்கள் வியர்வை சிந்தி பண்படுத்திய விவசாய நிலத்தை SEZக்கு கொடுப்பதை சரி என்று சொல்கிறார்கள். யார் வீட்டு சொத்தை யார் விலை பேசுவது?

பிரச்சனைக்குரிய நந்திகிராம் பகுதி 100 கிராமங்களுக்கும் மேலானவற்றை உள்ளடக்கிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பொது நலனுக்காக அல்ல மாறாக ஏதோ ஒரு தனியார் தரகு முதாலாளி கொள்ளை லாபம் அடிக்க லட்சக்கணக்கான மக்களை தியாகம் செய்யச் சொல்லி கேட்பதற்க்கு இவர்களெல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லையே? சோற்றைத் தின்கிறார்களா அல்லது வேறு எதையுமா?

அதுவும் இந்த அயோக்கியத்தனம் அனைத்தும் 1894-ல் பிரிட்டிஸ்க்காரனால் போடப்பட்ட நிலம் கையகப்படுத்தும் ஒரு சட்டத்தின் பெயரிலேயே செய்யப்படுகிறது. இந்தியா விடுதலை பெறவில்லை என்பதற்க்கு இது ஒரு உதாரணம். உண்மையில் அரசின் கையில் ஏற்கனவே இருக்கின்ற நிலங்களையே தொழில் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தலாம். அதனை விடுத்து இது போல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அவர்கள் ஆக்கிரமிப்பதில் பன்னாட்டு - தரகு கும்பல்களின் விருப்பத்துக்கு ஆடும் விசுவாசமே வெளிப்படுகிறது.

விவசாய நிலங்களை இவர்கள் கையகப்படுத்துவதில் நியாயமான விலை பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. பொதுக்கருத்தை உருவாக்கி, மக்கள் மனதில் பயத்தை ஏற்ப்படுத்தி அவசர அவசரமாக கிடைத்த விலைக்கு கொடுக்க வைக்கும் உளவியல் தந்திரங்கள் முதல் பல்வேறு தந்திரங்களை செய்து எவ்வளவு தூரம் விலையை குறைத்து கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைத்தே கொடுக்கிறார்கள் ஃமாபியா அரசும், கம்பேனிகளும். சிங்கூரில் ஒரு ஏக்கருக்கு 8 லிருந்து 12 லட்சம் வரை கொடுத்துள்ளனர். மஹாராஸ்டிராவில் 4 லட்சம்தான். பலருக்கு ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலமே சொந்தமாக இருக்கிறது. நிரந்தரமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் நிலமா? நிரந்தரமில்லா பணத்திற்க்கு விற்று விட்டு வாழ்வை தொலைப்பதா? இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கக்கூட வாய்ப்பின்றி அவர்கள் மீது முடிவை திணிப்பது என்ன வகை நீதி? வாழ்க்கையை வேரோடு பிடுங்கி நடுவது என்பது சிலருக்கு ஏதோ சட்டையை மாற்றிக் கொள்வது போன்று மிக சுலபமான விசயமாக தெரிகிறது போலும். இப்படி பேசும் அந்த அல்பைகள்தான் தனது நகத்தில் ஒரு சின்ன கீறல் விழுந்தால் கூட ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கிறார்கள்.

அரசாங்கத்தினுடைய மறுவாழ்வுக்கான நிவாரணம் கொடுப்பதிலும் பல தில்லு முல்லுகள். ஒரு எ-காவுக்கும், மாஹாராஸ்டிராவில் ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ள இடங்களில் எல்லாம் இருப்பிடங்கள் மக்களின் கையிலேயே இருக்கின்றன. அவற்றை கம்பேனிகள் வாங்கவில்லை. இதன் மூலம் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கொடுக்க வேண்டிய கடமையிலிருந்து அரசு நழுவிக் கொள்கிறது. அதே நேரத்தில் SEZக்கள் எனும் அயல்நாட்டு காலனிகளின் நடுவே தீவுகளாய் மாட்டிக் கொள்ளும் இந்த மக்கள் தமது வாழ்வாதாரமான விவசாய நிலங்களையும் இழந்து அத்துக் கூலிகளாக அதே தரகு-பன்னாட்டு கம்பேனி வாசலில் நிற்பார்கள். சட்டப்படி எல்லாம் சரிதான். வாழ்வாதாரம் சட்டப்படி பறிக்கப்படவில்லைதான். ஆனால் யதார்தத்தில்? எல்லாம் சட்டப்படிதான். ஆனால் சட்டம் எல்லாம் அவனுக்கு எடுபிடிதான்.

இது கூட பரவாயில்லை. நிலவுடைமையாளர்களுக்கு நிலத்தின் பெயரில் ஏதோ ஒரு தொகையாவது கிடைக்கிறது. அந்த நிலங்களை நம்பி வேலை செய்யும் நிலமற்ற கூலிகளின் வாழ்க்கை? அவர்களுக்கு என்ன நிவாரணம்? ஓ.. அவர்கள்தான் மனிதர்களே கிடையாதல்லவா? மறந்துவிட்டேன். என்னை மன்னித்தருளுங்கள், (அ)நாகரீக பெருந்தகையீரெ!

விவசாயிகளுக்கு ஆப்பு செருகும் SEZக்கு ஆதரவாக பேசும் அதே வாய்கள்தான் சில்லறை வணிகத்திற்க்கு ஆதரவாக பேசும் போது விவசாயியின் நலனுக்காக ஓநாயைப் போல ஒப்பாரி வைத்து அழுததை இங்கு நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இவர்கள் உண்மையில் யாருடைய நலனுக்காக நாயைப் போல நாக்கைத் தொங்க விட்டு அலைகிறார்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் மக்கள் மீது பாசமிருப்பது போல நடிப்பதின் நோக்கத்தையும் இவர்கள் உண்மையில் எந்த தேசத்துக்கு விசுவசமாக உழைக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.


மறுகாலனியத்தின் எல்லா அம்சங்களும் பொருந்திய ஒரு தாக்குதலே SEZ:

கொஞ்சம் கூட நியாயப்படுத்த வகையின்றி 10,000 ஏக்கர்களுக்கும் அதிகமான நிலங்களை பிடுங்குவது என்பது ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு அரசே ஃமபியா வேலை பார்க்கும் விசயம் என்பதை பார்த்தோம். விவசாய நிலங்களை கையகப்படுத்துவது என்பது இந்திய சுயச்சார்பின் மீதும், அந்த நிலங்களை நம்பி வாழும் லட்சக்கணக்கான் மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கும் ஒரு அட்டுழியம் என்பதை பார்த்தோம். ஆனால் இதையெல்லாம் மீறி சில விசயங்கள் SEZயில் உள்ளன.

SEZக்கு முழுமையான வருமான வரி விலக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. SEZயில் செய்யப்படும் கட்டுமான நடவடிக்கைகளுக்குக் கூட வருமான வரி கிடையாது. இதனால் அரசுக்கு ஏற்ப்படும் நஸ்டம் 1 லட்சத்தி சொச்சம் கோடிகள். ஏற்கனவே 15 வருடமோ அல்லது பத்து வருடமோ வருமான வரிச் விலக்குகளை அனுபவிக்கும் தகவல் தொழில் நுட்ப கம்பேனிகள் எல்லாம் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு தாம் ஏற்கனவே இருக்கும் பகுதிகளையும் SEZக்களாக அறிவிக்க சொல்லி விண்ணப்பிக்கின்றன. இன்னுமொரு பத்து வருடம் வரி விடுமுறை கிடைக்கிறதல்லவா? நம்மிடம் வருமானத்திலிருந்தும் வரியை பிடுங்கி விட்டு பிறகு வரி போக எஞ்சிய பணத்தில் நாம் வாங்கும் பொருட்களிலும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை பிடுங்கும் அரசு, அவனது லாபத்திற்க்கு மட்டுமே பிடுங்கப்படும் வருமான வரிக்குக் கூட விலக்குக் கொடுப்பது எந்தளவுக்கு அயோக்கியத்தனம்.

என்னவிதமான தொழிற்சாலைகளையும், என்னவிதமான அயோக்கியத்தனங்களையும் SEZகளில் செய்யலாம். ஏனேனில் SEZக்களின் முழுமையான கட்டுப்பாடு என்பது அதற்கென உருவாக்கப்படும் அரசு உறுப்பு அல்லாதா ஒரு குழுவின் கையிலேயே இருக்கும். போலிசோ அல்லது வேறு யாருக்குமோ அங்கு அதிகாரம் கிடையாது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கூட அவர்களே பார்த்துக் கொள்வாரகள். நந்திகிராமத்தில் அரசாங்கம் செயல்பட முடியவில்லை என்று அங்கலாய்த்த புத்ததேவு SEZக்களில் அரசாங்கம் இருக்குமிடம் எது என்று கண்டுபிடித்துச் சொன்னால் புண்ணியமாகப் போகும். தொழிலாளர் சட்டங்களும் கூட SEZக்களில் செல்லுபடியாகாது. தொழிலாளர் சட்டங்கள் நடைமுறையில் உள்ள இடத்திலேயே அவன் அத்தனை விதமான அயோக்கியத்தனங்களிலும் ஈடுபடுகிறான் எனில் SEZக்களில் என்னென்னெ செய்வான் என்பதற்க்கு எந்த வரம்புக் கிடையாது. ஹோண்டா தொழிலாளர்களின் சுயமரியாதை உணர்வுக்கு இந்திய அரசும், ஹோண்டா நிர்வாகமும் இணைந்து கற்றுக் கொடுத்த பாடத்தை நினைவு படுத்திக் கொள்ளவும்.

SEZக்கள் என்று ஒரு சிறிய மாவட்டத்தின் அளவுக்கான இடத்தை ஒதுக்கிக் கொடுக்கும் பகுதிகள் எதுவும் இந்திய அரசமைப்பு வடிவஙகளுக்கு உட்ப்பட்டவையல்ல. அதாவது தேர்தல் கிடையாது, போலிசு கிடையாது, பஞ்சாயத்து, உள்ளூராட்சி என்று எந்தவொரு ஜனநாயக அரசு வடிவங்களும் கிடையாது. இதனால்தான் இதனை நாட்டுக்குள்ளேயே ஒரு தனி நாடு என்கிறோம். அங்கு நடப்பது அவனது ராஜ்ஜியம்தான். அதிகபட்சம் கண் துடைப்புக்காக ஒரு கண்காணிப்பு குழு ஒன்றை போடுவார்கள் அரசு சார்பிலிருந்து. இது போன்ற குழுக்களின் இது வரையான செயல்பாடுகளே நகைப்புகிடமாக உள்ளன. எ-காவுக்கு TRAI எனப்படும் தொலைத் தொடர்பு துறைக்கான கட்டபஞ்சாயத்து சபை உள்ளது. இதன் வேலையே ரிலையன்ஸ் செய்கிற அத்தனை அயோக்கியத்தனங்களையும் நியாயப்படுத்தி சட்டம் இயற்றுவதுதான். அதாவது விவேக் காமெடியில் வரும் மைனர் குஞ்சுவைப் போல அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப்பிங் வேலைகளை செய்வதை உறுதிப்படுத்தும் ஒரு கட்டபஞ்சாயத்து கூடமாக உள்ளது.

போபாலின் யூனியன் கார்பைடு கம்பேனி சட்டப்பூர்வ நடைமுறைகள் சாத்தியமான இடத்திலே உட்கார்ந்து கொண்டுதான் விச வாயு தொழிற்சாலையை நடத்தினர். இன்று வரை யூனியன் கார்பைடு கழிவுகள் கூட அகற்றப்படாமல் போபாலில் இருக்கிறது. இன்று வரை ஒன்றும் பிடுங்க வக்கின்றி இந்த அரசும் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை சுற்று வட்டாரத்தில் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் அளவில் பெரும் சீர்கேட்டை உருவாக்கிக் கொண்டு இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கேயே இப்படியெனில் எந்த ஒரு அரசு நிர்வாகத்தின் கீழும் வராத சுயாட்சி பிரதேசஙகளான SEZக்களில் என்னவிதமான நாசகர ஆய்வுகளை அவர்கள் செய்வார்கள்? அதனை அரசு எப்படி கட்டுப்படுத்தும்? அப்படி ஒரு நமபகமான அரசுதானா இது? அப்படியெதுவும் முன்னோடியாக இந்த அரசு இது வரை நடவடிக்கை எடுத்ததில்லையே?

ஒரு எ-காவுக்கு வங்காளத்தில் யாருக்காக ஃமாபியா வேலை செய்துள்ளது 'போலி கம்யுனிஸ பாசிச' CPM அரசு என்று பார்த்தால் காறி உமிழ்ந்து விடுவீர்கள். போபால் விசவாயு புகழ் Union Carbide கம்பேனி Dow Chemicals என்ற பெயரில் நந்திகிராம் எனும் நான்கு போகத்திற்க்கும் அதிகமாக விளையும் பசுமையான இடத்தை நாசமாக்கவும், இந்தோனேசியா கம்யுனிஸ்டுகளை சுகர்தோ கொன்று குவிப்பதற்க்கு உதவி செய்த ஃமாபியா கம்பேனியான Salim Groupற்க்காகவுமே நந்திகிராமத்தில் நாய் போல விசுவாசமாக நடந்து கொண்டுள்ளது இந்த அரசு.

இப்படி நாட்டின் இறையாண்மையின் மீது மூத்திரம் அடிக்கும் வகையில் நாட்டிற்க்குள்ளேயே ஒரு காலனியாக உருவாகும் SEZக்களை வேலைவாய்ப்பு மற்றும் மூலதனம் என்ற இரு காரணங்களால் வரவேற்கிறார்கள் அடிவருடிகள். வேலை வாய்ப்பு என்பதைப் பொறுத்த வரை இவர்கள் எந்தளவுக்கு பொய்யர்கள் என்பதைப் பார்ப்போம். இதற்க்கு முன்பு இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் வேலை வாய்ப்புக் கொடுக்கும் என்று ஆரம்பித்த எல்லா உலகமயத் திட்டங்களும் உண்மையில் வேலைவாய்ப்பை ஒரு செக்ஷனிடமிருந்து பிடுங்கி இன்னொரு செக்ஷனுக்கு கொடுக்கும் வேலையைத்தான் செய்துள்ளன. நிரந்தர தொழிலாளர்களாக பல கம்பேனிகளில் வேலை பார்த்தவர்கள், அரசு நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் ஆகியோரை ஒப்பந்த கூலிகளாக மாற்றிய அதே நேரத்தில்தான், விவசாயத்தை அழித்து கோடிக்கணக்கில் நகரங்களுக்கு சாரி சாரியாக நவீன நாடோ டிகளாக உருவாக்கிய அதே நேரத்தில்தான், சிறு தொழில் துறையில் சிதைவை உருவாக்கி வேலை உத்திராவாதமின்மையை உருவாக்கிய அதே நேரத்தில்தான் சேவை துறையில் சில லட்சம் வேலையை உருவாக்கியது உலகமய நடவடிக்கைகள். இதனை முன்னிட்டுத்தான் 2004 செப்டம்பரில் RBIயினுடைய அறிக்கை பின்வருமாறு கூறியது - "உலகமயம் வேலை வாய்ப்பு விகிதத்தை குறைத்து விட்டது." என்று. 2004 செப் க்கும் 2006 செப் க்கும் இடையில் பெரிய அதிசயம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை - சில ஆயிரம் விவாசாயிகளின் சாவை தவிர்த்து. சேவை துறையிலும், சில தரகு முதலாளித்துவ உற்பத்தித் துறையிலும் வளப்பமாக உட்கார்ந்து கொண்ட சில லட்சம் பேருக்காக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வை காவு கொடுப்பது என்பது படு முட்டாள்தனம். இவர்கள் கொடுக்கும் வேலைவாய்ப்பின் அழகு ரயில்வே காலாசி வேலைக்கு(இதுதான் இருப்பதிலேயே குறைந்த தகுதி தேவைப்படும் ரயில்வே வேலை) MBA படித்தவர்களும், BE, ME படித்தவர்களும் ஆயிரக்கணக்கில் விண்ணப்பமிட்ட போது வெளி வந்த மர்மம் குறித்து அடிவருடிகள் பதில் சொல்ல வேண்டும்.

SEZக்களால் வாழ்வாதாரம் பறிக்கப்படும் லட்சக்கணக்கானவர்கள், அதற்க்கு பல லட்சம் கோடியில் வழங்க்ப்படும் சலுகைகள், சுற்றுச் சூழலில் அவை ஏற்ப்படுத்தும் பாதிப்புகள், இந்திய வளங்களை குறைந்த விலைக்கு சுரண்டி வரிச் சலுகைகளின் உதவியுடன் குறைந்த விலைக்கு நமக்கே விற்று தேசிய முதலாளிகளை அழிவிற்க்கு தள்ளும் நிலை, உள்ளூர் தொழில்களை ஒழிக்கும் நிலை, நமது சுயச் சார்பை அழித்து, நமது வளங்கள் மீது அவனது ஆதிக்கத்தை நிறுவுவது இவற்றையெல்லாம் நோக்கும் போது அது வழங்கும் வேலை வாய்ப்பு என்பது உண்மையில் ஏமாற்றே. உண்மையைச் சொன்னால் யாருடைய வாழ்வாதாரத்தை அழித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கட்டப் படுகின்றனவோ அவர்களுக்கு SEZ எந்த ஒரு வேலைவாய்ப்பையும் வழங்கும் அடிப்படையின்றி இருக்கிறது. அதிகபட்சம் கட்டுமான இடங்களில் கூலி வேலை செய்ய மட்டுமே அந்த அப்பாவி விவசாயிகளை அவர்களால் பயன்படுத்த முடியும்.

SEZக்களில் யாரை வேண்டுமானாலும் அவன் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். இதன் அர்த்தம் குறைந்த கூலிக்கு வேலை செய்யத் தாயார் எனில் அவன் ஆப்பிரிக்க நாட்டினரைக் கூட இங்கு கொண்டு வந்து வைத்து வேலை வாங்கலாம்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்பவை ஏற்றுமதிக்கான இடங்கள் என்று அரசு சொல்கிறது. ஆனால் அங்கு உற்பத்தியாகும் பொருட்கள் உள்நாட்டில் விற்க்கப்படாது என்பதற்க்கு எந்த விதமான சட்டப் பூர்வ தடையும் கிடையாது. எனவே அனைத்து வித சலுகைகளின் துணை கொண்டு குறைந்த விலையில் பொருட்களை தயார் செய்து உள்நாட்டு தொழிலை நிர்மூலமாக்குவதை தடுக்க எந்த சட்ட பாதுகாப்பும் கிடையாது.

இப்படி சட்டப்பூர்வமாக இந்தியாவில் ஒரு பெரிய இடத்தை வளைத்துக் கொண்டு அதில் இந்திய அரசமைப்பு வடிவங்கள் எதற்க்கும் உட்ப்படாமல், கிராம பஞ்சாயத்து, உள்ளூராட்சி என்று எந்தவொரு ஜனநாயக அரசு வடிவங்களுக்கும் உட்படாமல், தனியொரு ராஜ்யமாய், தனது இஷ்டம் போல இந்திய வளங்களை சுரண்டிக் கொண்டு, எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு. அதன் விளை பொருளை நமக்கே விற்றுக் கொண்டு - இவையெல்லாம் பழைய பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பேனி அரசை நியாபகப்படுத்தவில்லை. கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருந்தால்தான் ஒருவனை கடை முதலாளி என்று நம்புவேன் என்று சொல்லும் முட்டாள்களா நாம்.

உலகமய மறுகாலனியாதிக்கம் எப்படி பிறந்தது?
1980களின் இறுதியில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய பொருளாதாரம் முற்றிலும் மீள முடியாத நெருக்கடியில் இருந்தது. இதே காலத்தில்தான் மேலை நாட்டு பெரும் தொழில் கூடங்களினால் சுற்றுச் சூழலில் ஏற்ப்பட்ட மாசுகள் மேற்கொண்டு முதலாளித்துவ உற்பத்தியை அந்த நாடுகளில் வளர்க்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தின.

முதலாளித்துவம் உயிர்வாழ்வதற்க்கு மிக மிக அடிப்படையான விசயம் தங்கு தடையற்ற உற்பத்தியாகும். உற்பத்தி தடை படக் கூடாது என்பதற்க்காக உற்பத்தியான பொருட்களைக் கூட அழிக்க தயங்காது முதலாளித்துவம். இன்னிலையில் மீண்டும் தமது இழந்த சொர்க்கத்தை பெருவதற்க்கு இரண்டு விசயங்கள் ஏகாதிபத்தியத்திற்க்கு தேவையாய் இருந்தது. ஒன்று புதிய சந்தைகள், இரண்டு புதிய உற்பத்தி மையங்கள்.

உலகமயம் என்பது அவர்களின் இந்த இரண்டு தேவையையும் நிவர்த்தி செய்யும் விசயமாக இருக்கிறது. தமது பொருளை விற்பனை செய்ய பெரியதொரு உலக சந்தை, குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்ய மலிவு விலை கூலி உழைப்பு, மூல வளங்கள், இதெல்லாம் போக அரசினுடைய அத்தனை விதமான சலுகைகளும் அவனுக்கு கிடைக்கின்றன. இத்துடன் சுற்றுச் சூழல் மாசுபாடு தமது நாட்டின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதிலிருந்தும் விடுதலை.

வெறுமனே மூன்றாம் உலக நாடுகளில் முதலீடு மட்டும் செய்தால் உற்பத்தி பொருளின் மீதான, சந்தை மீதான, வளங்கள் மீதான தனது முழு ஆதிக்கத்தின் மூலம் கோடி கோடியாய் கொள்ளையடிக்க உலகமயம் வகை செய்கிறது. இதை மறைக்கத்தான் வேலை வாய்ப்பு என்று பூ சுற்றுகிறார்கள் அடிவருடி நாய்கள். இதோ சீனாவின் சந்தை சோசலிச சாதனைகளை சிறிது ஒற்று நோக்கினால் அதன் அருகதை என்னவென்று தெரியும்.

நமக்கு பத்து பதினைந்து வருடம் முன்பே வீட்டை திறந்து விட்டவன் சீனாக்காரன். 1980களின் இறுதியில் மாவோவினுடைய பொருளாதார திட்டங்கள் தமது வரம்பெல்லையை அடைந்தன. அத்ற்க்கு மேல் அவற்றை வேறு வடிவங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. ஆனால் அது வரை அந்த பொருளாதாரம் பல சாதனைகளை சாதித்திருந்தது. சீனாவின் வாழ்க்கைத் தரம் இந்தியாவைவிட பல மடங்கு உயர்ந்திருந்தது. ஆண்டுக்கு 11.5% சதவீதமாக சோசலிச சீனாவின் தொழில்த் துறை வளர்ச்சி இருந்தது. விவசாயத்தின் வளர்ச்சி என்பது 150% க்கும் மேல் இருந்தது. தனிமனிதனுடைய சாராசரி நுகர்வு பல மடங்கு உயர்ந்திருந்தது. பணி நிரந்தர பாதுகாப்பு இருந்தது, மருத்துவம் அரசாஙக்த்தினுடைய பொறுப்பாக இருந்தது(பொது இன்ஸுரன்ஸ்), சுத்தமான தண்ணீர் இருந்தது, கல்வி அனைவருக்கும் கிடைத்தது. ஆமாம், கோக்கும், பெப்சியும், பிசாவும், பேஜ் 3 இன்பங்களும் மட்டும் சீனாவில் கிடைக்காமல் இருந்த சோகம் ஒன்று இருந்ததை நான் கட்டாயம் சொல்லியே தீர வேண்டும். இன்னிலையில் சீன பொருளாதாரத்தின் சாதனைகளின் பலத்தில் நின்று கொண்டு அதனை அடுத்தக்கட்ட சோசலிச வளர்ச்சிக்கு கொண்டு செல்லாமல் சீனாவை சீரழிவுப் பாதைக்கு திருப்பினர் டெங் தலைமையிலானவர்கள். சீனாவின் கதவுகள் அன்னிய மூலதனத்தின் வேட்டைக்காக திறந்துவிடப்பட்டன.

இதோ இன்று சீனாவினுடைய அதிகாரப் பூர்வ அறிக்கையே அங்கு ஏழை பணக்காரன் பிளவு அதிகாமிவிட்டதாக ஒத்துக் கொள்கிறது. வேலை உத்திரவாதம் கிடையாது, கிடைக்கும் வேலைகள் பெரும்பாலும் ஒப்பந்த கூலி வேலைகள், போதிய வேலை வாய்ப்பில்லை, working povertyயின் அளவு அதிகரித்துள்ளது, விவசாயம் வாடுகிறது, ஐரோப்பாவிற்க்கு கள்ளத் தோணி ஏறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மருத்துவம் - காசு, கல்வி - காசு, முக்கிய ஆறுகள் அனைத்தும் சாக்கடையாகி விட்டன, உலகின் சுற்றுசூழல் மாசுபாடில் முன்னணியில் உள்ள பத்து நகரங்களில் 8 சீனாவில் உள்ளது, கலாச்சார சீர்கேடுகள் ஒரு பக்கம் தாக்குதல் நடத்துகிறது, சுத்தமான குடிநீர் கிடைக்காமல் தவிப்பவர்கள் எண்ணிக்கை போன வருடத்தை விட இந்த வருடம் அதிகரித்து விட்டது(வெறும் எண்ணிக்கை அல்ல சதவீத கணக்கே அதிகரித்து விட்டது), இந்த அம்சத்தில் இந்தியாவைவிட மோசமானதொரு நிலையை அடைந்து விட்டது சீனா.

இந்தியாவின் பிரதமர் கூட சொல்கிறார்: "உலகமயம் இந்தியாவில் பிளவை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்" என்று. ஃகோபி அன்னானும் கூட இதனையே சொன்னார். ஆம் GDPதான் வளர்ச்சி என்றால் இந்தியாவும், சீனாவும் வல்லரசுகள்தான். துரதிருஷ்டவசமாக எல்லைக் கோடுகள் நாட்டைச் சுற்றி ஓடவில்லை. உலகமய சூழலில் அவை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறது. சீனாவிற்க்குள் ரெண்டு சீனா, இந்தியாவுக்குள் ரெண்டு இந்தியா. உண்மையில் இந்த GDPக்கள் எந்த சீனாவின், எந்த இந்தியாவின் வளர்ச்சியை குறிக்கின்றன? எந்த இந்தியா ஒளிர்கிறது? எந்த சீனா ஒளிர்கிறது?

ஏன் இந்த குழப்பம்? இனிமேல் இந்த எல்லைக் குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்க்காகவே நாட்டுக்குள்ளேயே நாடாக SEZக்களை உருவாக்குகிறார்கள். உண்மைதான் சீன GDP வளர்ச்சியில் SEZக்களின் பங்களிப்பை நாம் மறுக்கவே இல்லை. அதே சீனாவின் சீரழிவிலும் SEZக்களின் பங்கை நாம் மறப்பதேயில்லை.

இப்படிப்பட்ட சீனாவிலேயே 6 SEZக்கள்தான் உள்ளன. இந்தியாவில் இது வரை ஒப்புதல் கொடுக்கப்பட்ட SEZக்களே 300யை தொடும். எனில் அன்னிய மூலதனம் இந்திய வளங்களை என்ன பாடு படுத்தப் போகிற்து என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஏகாதிபத்தியங்கள் தமது மூலதன சிக்கலை சரி செய்ய இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தையையும், வளங்களையும் சுரண்டுகின்றனர். இதனை முன்னிட்டு இந்திய தொழில்களுக்கும், விவசாயத்திற்க்கும் மான்யம் கொடுக்காதே என்று நமது அரசை மிரட்டுகின்றனர். இப்படி நமது சொந்த நாட்டின் தொழில்கள் அழிக்கப்படுகின்றன, அல்லது அவனுக்கு ஒப்பந்த தொழில் செய்யும் பட்டறையாக மாறுகின்றன. உள் நாட்டு விவசாயிக்கு மான்யம் கொடுக்காதே என்று சொல்லும் அவன் அவனது சொந்த நாட்டில் விவசாயத்துக்கு 100% 120% மான்யம் கொடுத்து உலக சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைப்பதுடன், இந்திய சந்தையிலும் தனது பொருளை குவிக்கிறான்(பருத்தி, கோதுமை, Tea etc).
சிறு தொழில் உள்ளிட்டவற்றுக்கு மான்யம் கொடுப்பதை எதிர்க்கும் அவன் இந்தியாவில் தொழில் தொடங்க வரிவிலக்கு உள்ளிட்ட எல்லா சலுகைகளையும் மறைமுகமாக பெற்றுக் கொள்கிறான். இந்தளவுக்கு இழிச்சவாயானாடா நீ என்று தனிமையில் உட்கார்ந்து அவன் நம்மை இகழ்ந்து பேசுவதை வீடியோ பிடித்து போட்டால் கூட சில அடிமை ஜென்மங்கள் திருந்தாது என்பதிருக்க, சுயமரியாதையுள்ளவர்கள் நாடு அடிமையாகும் இந்த அம்சத்தை புரிந்து கொள்வதும், இந்த அடிப்படையில் SEZக்களை ஒப்பிட்டு புரிந்து கொள்வதும் மிகவும் அவசியமானதாகிறது.
SEZக்கள் அவனது சந்தை வெறிக்கும், வளங்களை சுரண்டும் கவந்த பசிக்கும் முழுமையாக இரை போடும் ஒரு அருமையான மறுகாலனியாதிக்க திட்டம். உலகமயத்தின் பல் பரிணாம நோக்கங்களை ஒருங்கே நிறைவேற்றும் ஒரு வடிவமே SEZக்கள்.

இதோ, இருந்த கொஞ்சம் நஞ்சம் முகமூடியும் கழண்டு, பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பேனியின் அதே வடிவத்தில் மறுகாலனியம் SEZ என்ற பெயரில் ஆர்ப்பரித்து வருகிறது. ஆள், அம்பு, சேனையுடன் நமது எதிர்காலத்தை, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை தமது லாப வெறிக்கு இரையாக்க நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு வருகிறது. வீரமுள்ள, சுயமரியாதையுள்ளவர்கள் வீட்டுக்கொருவர் அல்லது இருவராய் வீதியில் இறங்கி மறுகாலனியாதிக்க வெறியர்களையும், அவர்களின் அடிவருடிகளையும் அடித்து நொறுக்க அணி திரள வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

அசுரன்

15 பின்னூட்டங்கள்:

said...

SEZ என்பது IT PARK கிடையாது. ஒரு தனி நிறுவனமோ அல்லது பல நிறுவனங்களின் தொழிற்பேட்டையோ கிடையாது. அது எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய தன்னிறைவு பெற்ற ஒரு சிறு நகரம். எல்லா விதமான கட்டுமான வசதிகளையும் கொண்ட (சிறு விமான நிலையங்கள் முதற்கொண்டு அனைத்து வசதிகளும்) சில தளர்த்தப் பட்ட பொருளாதர விதிமுறைகளால் நிர்வகிக்கப் படக் கூடிய ஒரு பகுதி.

அந்த கட்டுமான வசதிகளை SEZ-ஐ அமைக்கக் கூடிய தனியார் நிறுவனமோ அல்லது நிறுவனங்களோ அமைத்துக் கொள்ள வேண்டும். கட்டுமான வசதிகள் குறைவாக உள்ள நம் நாட்டில் அதை அதிகரித்து சில தன்னிறைவு பெற்ற பகுதிகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் SEZ என்ற கருத்தின் ஆரம்பம்.

இந்த கருத்துப்படி, SEZ-க்கு தேவைப் படும் நிலத்தின் அளவு குறித்த சந்தேகம் எதுவும் இல்லை. சைனாவில் உள்ள மிகப்பெரிய SEZ-ன் அளவு 327.5 சதுர கிலோ மீட்டர்கள் (Shenzhen SEZ).

SEZ-ன் உள்ளே குடியிருப்புகளும் வரும். அதனால் real estate-ம் வரும். அதை தவிர்க்க முடியாது. அரசு எத்தனை சதவீத நிலம் நிறுவனங்களின் core நடவடிக்கைகளுக்காக மற்றும் கட்டுமான வசதிகளுக்காக உபயோகப் படுத்த வேண்டும், எத்தனை சதவீத நிலம் real estate-க்கு வரலாம் என நிர்ணயிக்கலாம். அதை விட்டு விட்டு, SEZ-க்கு தேவைப் படும் நிலத்தின் அளவை குறைப்பது SEZ-என்ற கருத்தை கேலிக் கூத்தாக்கி விடும். பெரிய IT park-கள் வர இடமளிக்கும்.

விவசாயிகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாத வகையில் SEZ-கள் அமைய வேண்டும் என்பதும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை சரியான முறையாக செய்ய வேண்டிய கடமை அரசுக்கும், SEZ-ஐ நிர்மாணிக்கும் நிறுவனத்துக்கும் உள்ளது என்பதோ மறுக்க முடியாத உண்மை.

said...

SEZ - எந்த சட்ட திட்டங்களுக்கும் உட்படாது என்று கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் மட்டும் அல்ல வேறு பல அரசியல் தலைவர்களும் பிரபல SEZ- எதிர்ப்பாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். நான் படித்து புரிந்து கொண்டவரை, அப்படி எதுவும் கிடையாது. அவை எல்லாவிதமான சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டவை.

http://www.sezindia.nic.in/HTMLS/sez-snd-amend-rules2007.pdf

பக்கம் - 6

(ii) The Developer shall obtain the required approval from various
statutory authorities under relevant statutes and regulations of the Government of India and the State Government and local bodies.

(v) The Developer shall conform to the environmental requirements.

(vi) The Developer shall abide by the local laws, rules, regulations
bye-laws in regard to area planning, sewerage disposal, pollution control, labour laws and the like as may be locally applicable.

said...

Sorry to express in English)

What these MNCs doing in 1000s of acres land? SEZ are really going to kill our farmer's life circle. Really worried about this.
What we are going to to?????????
?
- Vibin

said...

there was an article in bbc. vidharba farmers have decided not to grow cotton here after. they are going to plant only one crop (eatables like wheat) per year. AND
they are NOT going to sell it in the market bcos of low price. They are going to eat it themselves. They will go to mumbai during the remaining months and do contract work, stay in slums.

Indis's climate is good for agriculture that it can plant three crops per year. U cannot do this in cold countries. But we are wasting resources like this..

said...

//விவசாயத்தை மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறைக்குக் கொண்டு செல்வதன் மூலமாக சிறுக சிறுக விவசாய மக்கள் தொகையின் எண்ணிக்கையை குறைப்பது. இதனை ஈடுகட்டும் வகையில் பெரிய, சிறிய தொழிற்சாலைகள், பட்டறைகள் கட்டுவது இதுதான் உண்மையில் நாம் செல்ல வேண்டிய பாதை. இதுதான் உண்மையில் சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.//

அசுரன்,

சிறிய, பெரிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டுமென நீங்கள் சொல்லியுள்ளீர்கள்.

தொழிற்சாலைகளை எங்கு அமைப்பது? யார் அமைப்பது? என்பது பற்றியும் சற்று தெளிவுபடுத்தவும்.

தொழிற்சாலைகளுக்கான அடிப்படை தேவைகள் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவை ஏன் பெரு நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது உருவாகுகின்றன என்பதை யோசித்துள்ளீர்களா?

விளைநிலங்களை நாசப்படுத்த வேண்டுமென்ற நினைப்பை விட பெருநகரங்களை ஒட்டி தொழில் அமைப்புகளை நிறுவுகையில் நகரத்தின் வசதிகளை சுலபமாக அணுக இயலுமென்று தொழில் நிர்மாணம் செய்பவர்கள் எண்ணலாம் அல்லவா?

விவசாயத்தை மையப்படுத்தபட்ட தொழில்மயமாக்குதல் பற்றியும் தெளிவாக்கவும். யார் இந்த முயற்சியை செய்ய போகிறார்கள்? எப்படி செய்ய போகிறார்கள்? திட்டத்தின் பரிணாமங்கள் என்னென்ன?

said...

நட்சத்திர வாரத்திற்க்கு வாழ்த்துக்கள்.

said...

உள்கட்டுமானம் என்ற அற்ப காரணத்தை கூறி SEZயை வரவேற்க்கும் அனானி அவர்கள் அதே உள்கட்டுமான பற்றாக்குறையை காரணம் காட்டி பல கோடிகளீல் கடன் வாங்கி இந்திய தரகு அரசு MNC-kalukku செலவு செய்து வருவது குறித்து என்ன பதில் சொல்வார்?

அதே உள்கட்டுமானங்கள் இல்லாததை காரணம் காட்டி விவசாயத்தை காவு கொடுப்பது குறித்து என்ன சொல்வார்?

SEZக்கள் உள்ளே வருவது, மேற்கு நாடுகளின் முதலாளித்துவ சிக்கலை தீர்க்கும் உலகமய சதியின் ஒரு பகுதியே ஆகும். இந்த கட்டுரையில் பின் வரும் தலைப்பில் வரும் பகுதிகளே உங்களுக்கு பதில் கொடுக்கும்.

#1) மறுகாலனியத்தின் எல்லா அம்சங்களும் பொருந்திய ஒரு தாக்குதலே SEZ

#2) உலகமய மறுகாலனியாதிக்கம் எப்படி பிறந்தது?

************

SEZக்கள் எந்த சட்ட திட்டங்களுக்கு உட்படாது என்பதை கட்டுரையில் கீழ் காணும் அம்சத்தில் புரிந்து கொள்ளவும்:

///
நந்திகிராமத்தில் அரசாங்கம் செயல்பட முடியவில்லை என்று அங்கலாய்த்த புத்ததேவு SEZக்களில் அரசாங்கம் இருக்குமிடம் எது என்று கண்டுபிடித்துச் சொன்னால் புண்ணியமாகப் போகும். தொழிலாளர் சட்டங்களும் கூட SEZக்களில் செல்லுபடியாகாது. தொழிலாளர் சட்டங்கள் நடைமுறையில் உள்ள இடத்திலேயே அவன் அத்தனை விதமான அயோக்கியத்தனங்களிலும் ஈடுபடுகிறான் எனில் SEZக்களில் என்னென்னெ செய்வான் என்பதற்க்கு எந்த வரம்புக் கிடையாது. ஹோண்டா தொழிலாளர்களின் சுயமரியாதை உணர்வுக்கு இந்திய அரசும், ஹோண்டா நிர்வாகமும் இணைந்து கற்றுக் கொடுத்த பாடத்தை நினைவு படுத்திக் கொள்ளவும்.
SEZக்கள் என்று ஒரு சிறிய மாவட்டத்தின் அளவுக்கான இடத்தை ஒதுக்கிக் கொடுக்கும் பகுதிகள் எதுவும் இந்திய அரசமைப்பு வடிவஙகளுக்கு உட்ப்பட்டவையல்ல. அதாவது தேர்தல் கிடையாது, போலிசு கிடையாது, பஞ்சாயத்து, உள்ளூராட்சி என்று எந்தவொரு ஜனநாயக அரசு வடிவங்களும் கிடையாது. இதனால்தான் இதனை நாட்டுக்குள்ளேயே ஒரு தனி நாடு என்கிறோம். அங்கு நடப்பது அவனது ராஜ்ஜியம்தான். அதிகபட்சம் கண் துடைப்புக்காக ஒரு கண்காணிப்பு குழு ஒன்றை போடுவார்கள் அரசு சார்பிலிருந்து. இது போன்ற குழுக்களின் இது வரையான செயல்பாடுகளே நகைப்புகிடமாக உள்ளன. எ-காவுக்கு TRAI எனப்படும் தொலைத் தொடர்பு துறைக்கான கட்டபஞ்சாயத்து சபை உள்ளது. இதன் வேலையே ரிலையன்ஸ் செய்கிற அத்தனை அயோக்கியத்தனங்களையும் நியாயப்படுத்தி சட்டம் இயற்றுவதுதான். அதாவது விவேக் காமெடியில் வரும் மைனர் குஞ்சுவைப் போல அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப்பிங் வேலைகளை செய்வதை உறுதிப்படுத்தும் ஒரு கட்டபஞ்சாயத்து கூடமாக உள்ளது.
போபாலின் யூனியன் கார்பைடு கம்பேனி சட்டப்பூர்வ நடைமுறைகள் சாத்தியமான இடத்திலே உட்கார்ந்து கொண்டுதான் விச வாயு தொழிற்சாலையை நடத்தினர். இன்று வரை யூனியன் கார்பைடு கழிவுகள் கூட அகற்றப்படாமல் போபாலில் இருக்கிறது. இன்று வரை ஒன்றும் பிடுங்க வக்கின்றி இந்த அரசும் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை சுற்று வட்டாரத்தில் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் அளவில் பெரும் சீர்கேட்டை உருவாக்கிக் கொண்டு இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கேயே இப்படியெனில் எந்த ஒரு அரசு நிர்வாகத்தின் கீழும் வராத சுயாட்சி பிரதேசஙகளான SEZக்களில் என்னவிதமான நாசகர ஆய்வுகளை அவர்கள் செய்வார்கள்? அதனை அரசு எப்படி கட்டுப்படுத்தும்? அப்படி ஒரு நமபகமான அரசுதானா இது? அப்படியெதுவும் முன்னோடியாக இந்த அரசு இது வரை நடவடிக்கை எடுத்ததில்லையே?
/////


அசுரன்

said...

காலங்காலமாய் எங்களுக்கு சோறிட்ட தாயை (நிலத்தை) எங்களிடமிருந்து பறித்துவிட்டார்கள். ராய்கட்டில் பாதிக்கப்பட்ட 35,000 விவசாயிகளும் தலா ஒரு ரூபாய் சேகரித்து 35,000 ரூபாய் கொடுத்து, இந்தத் தொழிலதிபரின் தாயை விலைக்கு வாங்கவிருக்கிறோம். இது எங்கள் பேரம். அவர்கள் சம்மதித்தாக வேண்டும்.
- அருண் சிவ்கர், தலைவர் ‘சாவக்'

அணுகுண்டு வெடிப்பு சோதனை நடத்தப்பட்ட பொக்ரான் கிராமத்தில், பலருக்கு மூக்கில் ரத்தம் வடிந்ததைப் பார்த்து அகமகிழ்ந்து போனார் வாஜ்பாய்; சடலங்கள் மீது நின்று முழங்குகிறார் நரேந்திர மோடி; கலிங்கா நகர் ஆதிவாசிகளின் ரத்தத்தை தன் உடலில் பூசி நடனமாடுகிறார் பட்நாயக்; வாக்குச் சீட்டுகளை காலில் மிதித்து சென்னை அண்ணா சலையில் டப்பாங்குத்து ஆடுகிறார் கருணாநிதி; தினமும் பன்னாட்டு நிறுவன அதிபர்கள் முன்பு உக்கி போடுகிறார் மாறன்; அம்பானியின் தோட்டத்தில் நடக்கும் ‘கேட் வாக்'கில் பங்கெடுக்காத முதல்வர்களே கிடையாது. டாடாவின் ஒரு லட்சம் ரூபாய் கார் கிளப்பிய புகை மூட்டத்தில் மூச்சுத் திணறுகிறார் புத்ததேவ் பட்டாச்சார்யா; தற்கொலை செய்து கொண்ட விதர்பா விவசாயிகளின் எலும்புகளை மாலையாக அணிந்து கொண்டு அமர்ந்திருக்கிறார் விலாஸ் ராவ். இந்தக் கொடூரங்களை எல்லாம் பார்த்து பூரித்துப் போய் செய்வதறியாது அலைகிறார் மன்மோகன்.

2006 ஆம் ஆண்டு முழுவதும் இந்தியா மெல்ல மெல்ல மனநோய் கூடத்தைப் போல் உருமாறிக் கொண்டேயிருந்தது. அந்தக் கூடத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அரூபமான நடனத்தில் ஈடுபட்டிருந்தனர். ஊடகங்கள் இந்த நடனத்தை காசாக்குவதில் மும்முரமாக அலைந்தன. சனவரி மாதம் கலிங்கா நகர் தொடங்கி நொய்டா பிணக்குவியல்கள் வரை, எங்கும் பிண நாற்றம். நாடு முழுவதும் பிணவாடை மூளையின் நரம்புகளை குத்திக் கிழித்தன. அரசாங்கங்கள் இந்தப் பிண வாடையில் வாழ கச்சிதமாகப் பழகிவிட்டன.

இந்தியாவின் வரலாற்றில் அதன் மக்கள் இத்தனை கேவலமாக நடத்தப்பட்டதில்லை. கிழக்கிந்திய கம்பெனியின் எல்லைகளை எல்லாம் தகர்த்துவிட்டனர் அதன் வாரிசுகள். மூன்றாம் உலக நாடுகள் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள், தங்கள் பூர்வ வசிப்பிடங்களிலிருந்து பெயர்த்தெறியப்பட்டனர். அதே வேளையில் தாராளமய தாளவாத்தியத்துடன் சேர்ந்திசையாக அமைச்சர்கள், உயரதிகாரிகள், பன்னாட்டு அதிபர்கள், இந்திய முதலாளிகள் லயித்து நட்சத்திர இரவை நடத்தி வருகிறார்கள். இவர்களின் விருப்பம் போல் பங்குச் சந்தை காளை சீறிப்பாய்கிறது.

அன்னிய முதலீடுகளை சீனாவுக்குச் செல்லவிடாமல் தடுப்பதற்கு, இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அவசியம் என மத்திய அமைச்சகம் கருதினாலும், காங்கிரஸ் கட்சியில் பலர் அடுத்த தேர்தலில் மக்களை சந்திப்பதே சிரமம் என வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள். சோனியாவின் பேச்சுகள்கூட எந்த செயல்பாடும் இல்லாத வெற்று வார்த்தைகளாகிப் போனது. இடதுசாரிகள் இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கோரி வந்தாலும், அவர்கள் அரசுக்குப் போதிய நெருக்கடியை கொடுக்கவில்லை. மறுபுறம் மேற்கு வங்கத்தில் முழு வீச்சில் விமர்சனங்கள் எதையும் பொருட்படுத்தாமல், அந்நிய முதலாளிகளின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது கடைந்தெடுத்த முரண்பாடாக உள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அமைச்சகம் பொருளாதார வாசல்களை எல்லாம் தகர்த்து, அகலமான பாதைகளை ஏற்படுத்தியது. இனி பல துறைகளில் அன்னிய முதலீடு தடையற்று வரலாம் என பச்சைக் கொடிகள் வானில் பறக்கவிடப்பட்டன. ஏராளமான சலுகைகள், இலவசங்கள் அறிவிக்கப்பட்டும் இவர்கள் நினைத்த அளவு மூலதனம் நாட்டிற்குள் நுழையவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் இன்னும் என புதிய நிர்பந்தங்களை, நெருக்கடிகளை, விதிகளை, வாக்குறுதிகளை கோரிய வண்ணமிருக்கின்றனர். எதற்கு வம்பு என மத்திய அமைச்சகம் கடந்த ஆட்சியில், முரசொலி மாறனால் முன்மொழியப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான வரைவுகளைப் புனரமைத்து, சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

1990களில் உலகமயம் என்கிற வார்த்தை ஊடகங்களின் வாயிலாக மக்களிடையே நெருங்கி புழங்கத் தொடங்கியது. 1992களில் அது இந்தியாவில் தனது அதிகாரப்பூர்வ செயல்பாட்டைத் தொடங்கியது. 90கள் முழுவதிலும் உலகமயம் குறித்து ஏராளமான மாயைகள் மக்கள் மனங்களில் பதிக்கப்பட்டன. உலகமே ஒரு கிராமமாக மாறப்போகிறது. உலக மக்களின் சமூக பொருளாதார நிலை தகவமைக்கப்பட்டு, அனைவருக்கும் அனைத்தும் அருகிலேயே கிடைக்கும்; பண்டங்கள், சேவைகள், திட்டங்கள் என பரிவர்த்தனைகள் பிரமாதமாக நடைபெறும்; மக்கள் எங்கு வசித்தாலும் தொலைவுகள் குறைந்து கலாச்சாரங்கள் இணையும்... என உலகமயம் என்கிற தலைப்பில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள், கல்விசார் கருத்தரங்குகள், தொலைக்காட்சி நிகழ்வுகள், இணைய தளங்கள் என எங்கும் ஓயாத இரைச்சல். இப்பெருத்த ஓசையின் மறைவிலிருந்து வேறு ஒரு தகவல் திடமாக மூளைகளில் தங்கிப்போனது - உலகமயம் என்கிற நடைமுறையிலிருந்து யாரும் பின் வாங்க இயலாது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic) வெளிநாட்டு, உள்நாட்டு மூலதனங்களின் சொர்க்கமாக விளங்கும். அந்தப் பகுதியில் நீங்கள் விரும்பிய தொழிலை தொடங்கலாம். மத்திய அரசாங்கத்தின் வணிக அமைச்சகத்தால் நீங்கள் இதற்கான அனுமதியை ஒற்றைச் சாளர முறை மூலம் பெற்றுவிடலாம் (ஒரு சாதாரண குடும்ப அட்டை பெறுவதற்கே, இங்கு 78 அதிகாரிகளை சந்திக்க வேண்டும் ஓர் இந்தியக் குடிமகன்). ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, 220 திட்டங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டு விட்டது. இந்த திட்டங்களுக்கு சுற்றுப்புறச் சூழல், ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் என எந்த அனுமதியும் வாங்க வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டங்கள் இந்தியா முழுவதும் விரவிக்கிடக்கும். ஒவ்வொன்றும் தலா 1,000 முதல் 40,000 ஏக்கர் வரை நிலத்தை விழுங்கும்.

இங்கு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு எந்த வரிகளையும் நீங்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியதில்லை. மத்திய மாநில அரசுகளின் எந்த சட்டங்களும் இந்த எல்லைக்குள் செயல்படாது. இறக்குமதிக்கான உரிமங்கள் பெறத் தேவையில்லை. இந்தப் பகுதியிலிருந்து இறக்குமதி/ஏற்றுமதி செய்யப்படும் எந்தப் பொருளையும் இந்திய அரசு சோதனை செய்ய இயலாது. தொழிலாளர் சட்டங்கள் என்றால் அங்கு கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தரம், ஓய்வூதியம், பேறுகால விடுப்பு என எதைப் பற்றியும் அங்கு பேச இயலாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் 2008க்குள் ஏற்படவிருக்கும் வரி இழப்பு 90,000 கோடி. 2010க்குள் 1,60,000 கோடியை அது மிஞ்சம். இதனை அரசு வரி விடுமுறை (Tax Holiday) என அழைக்கிறது.

முதல் அமைச்சர்கள், பன்னாட்டு நிறுவன அதிபர்கள், இந்திய முதலாளிகள், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் என இந்தப் படை, உள்நாட்டுத் தரகர்களின் துணையுடன் நாடு முழுவதும் நிலம் தேடி அலைகிறது. தொடு வானத்தை மிஞ்சி இவர்களின் கருவிழி விரிகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் மும்பையில் 35,000 ஏக்கர், அலி குழுமம் நந்திகிராமில் 12,500 ஏக்கர், ரிலையன்ஸ் அரியானாவில் 25,000 ஏக்கர் என நீண்டு செல்லும் இப்பட்டியலைப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இது தவிர லட்சுமி மிட்டல், ஸ்வராஜ் பால், டாடா போன்ற முதலைகள் சில மாநிலங்களை மொத்தமாக கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டங்களுக்கான நில ஆர்ஜிதம் வெள்ளையர்களால் 1894இல் இயற்றப்பட்டு, இன்று வரை எந்த மாற்றமும் பெறாத பலம் பொருந்திய சட்டத்தின் நல்லாசியுடன் நடைபெறுகிறது. இந்தியா முழுவதிலும் நிவாரணம் கிடைக்காத மக்கள் தெருக்களில் அணிதிரள, அரசாங்கம் செல்லமாக துப்பாக்கி சூட்டை நடத்தி, நக்சல் பட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் வனங்களிலிருந்து, வயல்களிலிருந்து, கிராமங்களிலிருந்து துரத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். வருங்காலங்களில் நீங்களாக வெளியேறாவிட்டால் - விமானப்படை, கடற்படையின் துணையுடன் வங்கக் கடலிலோ, அரபிக் கடலிலோ தூக்கி வீசப்படுவீர்கள். தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடங்கப்பட உள்ளன. அதற்கான அனுமதி பெறப்பட்டு, வெகு வேகமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய மண்டலங்கள் மற்றும் இதை நடைமுறைப்படுத்துவதில் அரசுகள் காட்டும் அவசரம் குறித்து நாடு முழுவதிலும் பெரும் அதிருப்தி அலை வீசி வருகிறது. முதலில் இத்திட்டங்களுக்கு இத்தனை விரிந்த நிலப்பரப்பு தேவையில்லை. இங்கு நடக்கும் நில ஆக்கிரமிப்பில் 75 சதவிகிதம் தொழில் சார் பயன் பாடுகளுக்கானவை அல்ல. அந்த இடங்களில் குடியிருப்புகள், மருத்துவமனைகள், கேளிக்கை பூங்காக்கள், திரையரங்குகள், அங்காடிகள், கோல்ப் மைதானங்கள் எனப் புதிய நகரங்கள் உருவாக இருக்கின்றன. யாரை விரட்டிவிட்டு, யார் குடியிருப்பது? எல்லாம் விளையாட்டாகப் போய்விட்டது. அவர்களின் தேவை போல் 25 பங்கிற்கும் மேற்பட்ட நிலத்தை கையகப்படுத்தி வருகிறார்கள்.

அடுத்து, சுதந்திர சந்தை எனத் தொடர்ந்து பிதற்றும் இவர்கள் ஏன் அதைக் கடைப்பிடிக்கவில்லை? நில உரிமையாளர்களிடம் சென்று நேரடியாக விலை பேசலாம். நிலத்தை காலங்காலமாக உழுபவனுக்கு அதற்கு விலை நிர்ணயம் செய்யத் தெரியாதா? இந்த அதிபர்களின் கொள்ளை லாப வெறிகளுக்கு ஏன் அரசுகள் தரகு வேலை பார்க்கின்றன? சுதந்திர சந்தை தத்துவத்தை நடைமுறைப்படுத்தாதது ஏன்? நிலத்திற்கு நிர்ணயித்த தொகைகளுக்கு தரப்படும் ரொக்கப் பணத்திற்கு பதிலாக, இந்த நிறுவனங்களின் பங்கு பத்திரங்களை ஏன் அரசுகள் பெற்றுத் தரவில்லை? சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் லாபங்களுக்கு, வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகளை அறிந்த பல முதலாளிகள் தங்கள் தொழில் நிறுவனங்களை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மாற்றவும் முனைந்து வருகிறார்கள். இதனால் அரசுக்கு கூடுதல் பற்றாக்குறை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, அரசு பல மக்கள் நலத் திட்டங்களிலிருந்து விலகி வருகிறது. அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் ஒவ்வொரு துறையிலும், தனியார் முதலைகள் தங்கள் பாதங்களைப் பதித்து வருகிறார்கள். மருத்துவம், கல்வி என அனைத்தும் பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தொண்டு புரியும் நிறுவனங்களாக உருமாறிவிட்டன. தனியார் துறைகளின் சாதனைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி, இந்தியா ஒளிர்வதாக காட்ட முயல்கின்றன, இன்றைய பெரு ஊடகங்கள்.

மின்னணு சாதனங்கள், செல்போன்கள், தேசிய நெடுஞ்சாலைகள், அழகு சாதனங்கள், அழகிப் போட்டிகள், மென்பொருள் துறையின் சாதனைகள், சம்பளங்கள், மனமகிழ் பூங்காக்கள், மல்டிப்ளக்ஸ்கள், லாப் டாப்கள் எனத் தொடர்ந்து பல பிம்பங்களை சாமான்ய மக்களின் மீது வீசி - மிகப்பெரிய அராஜகத்தை ஊடகங்கள் அரங்கேற்றி வருகின்றன. மறுபுறம் இந்த நூற்றாண்டு தொடங்கியபொழுது நாள்தோறும் அய்ம்பது ரூபாய்க்குக் குறைவான வருமானம் பெறுவோர் 1.2 பில்லியன் மக்கள்; தினமும் 30,000 குழந்தைகள் உணவின்றி செத்து மடிகிறார்கள். நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை போரில் சாகிறாள். 800 மில்லியன் மக்கள் ஊட்டக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகமயம் சமூகத்தில் பெரும் பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது. நாடுகளிடையே இடைவெளிகள் அதிகரித்துள்ளன. குடும்பங்கள் சிதறுகின்றன. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை எங்கோ தொலைவுகளில் தொலைந்து போகிறது. இந்த மாறும் உலகம் யாருக்கானது? இது யாருடைய வளர்ச்சி? விலை கொடுப்பது யார்? மீண்டும் மீண்டும் ஒரே கேள்விதான். இது யாருக்கான அரசு, யாருடைய அரசு?

சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதிகள் தூதரக வளாகங்கள் போலவே கருதப்படுமாம்! அங்கு எந்தவித இந்திய சட்டங்களும் செயல்படாது. மலிவான கூலிக்கு ஆட்கள் கிடைப்பதால், நிறுவனங்கள் போட்டிப் போட்டு இங்கு குடிவருகின்றன. அடுத்து வேலை நிறுத்தங்கள், கடை அடைப்புகள் என எதுவும் இந்தப் பகுதியின் செயல்பாட்டை பாதிக்காது என இடதுசாரி தொழிற்சங்கங்கள்கூட நேரடியாகவே அறிவித்திருக்கின்றன. இது, கண்டிப்பாக குறைவற்ற மறு காலனியமே என்பதில் அய்யமில்லை. நாட்டின் விளிம்புகளை அவலம் தனது இருப்பிடமாக மாற்றிக் கொண்டது. அவலம் வாழ்க்கைப் பாடாக உருமாறிக் கொண்டிருக்கிறது. அவலம்... அவலம்... அவலம்... அவலத்தின் கொடிய நாற்றம் நம் நம்பிக்கைகளை கரைத்து தாழ்வு கொள்ளச் செய்கின்றது. இருப்பினும் எதிரிகளை வீழ்த்து வதற்காகவாவது நாம் ஒன்றுபட்டாக வேண்டும்.

--மாறிவரும் நவீன உலகம் யாருக்கானது?
அ. முத்துக்கிருஷ்ணன் ---

---------------
http://www.keetru.com/dalithmurasu/mar07/muthukrishnan.html
-----------

said...

சீன SEZக்களில் தொழிலாளர் நிலை குறித்து பத்ரியின் கட்டுரை. SEZ குறித்தான அவரது புரிதலில் நமக்கு முழுமையாக உடன்பாடு இல்லை எனினும் SEZக்களை அவர் விமர்சிக்கும் அம்சங்களில் நமக்கு உடன்பாடே.


http://thoughtsintamil.blogspot.com/2007/04/blog-post_29.html

said...

///
அசுரன்,

சிறிய, பெரிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டுமென நீங்கள் சொல்லியுள்ளீர்கள்.

தொழிற்சாலைகளை எங்கு அமைப்பது? யார் அமைப்பது? என்பது பற்றியும் சற்று தெளிவுபடுத்தவும்.

தொழிற்சாலைகளுக்கான அடிப்படை தேவைகள் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவை ஏன் பெரு நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது உருவாகுகின்றன என்பதை யோசித்துள்ளீர்களா?

விளைநிலங்களை நாசப்படுத்த வேண்டுமென்ற நினைப்பை விட பெருநகரங்களை ஒட்டி தொழில் அமைப்புகளை நிறுவுகையில் நகரத்தின் வசதிகளை சுலபமாக அணுக இயலுமென்று தொழில் நிர்மாணம் செய்பவர்கள் எண்ணலாம் அல்லவா?

விவசாயத்தை மையப்படுத்தபட்ட தொழில்மயமாக்குதல் பற்றியும் தெளிவாக்கவும். யார் இந்த முயற்சியை செய்ய போகிறார்கள்? எப்படி செய்ய போகிறார்கள்? திட்டத்தின் பரிணாமங்கள் என்னென்ன?//

இந்தியாவின் தேசிய முதாலாளிகளின் கையில் உள்ள மூலதனத்தை சேகரித்து கூட்டுறவாகவும் அதனுடன் ஏற்கனவே உள்ள அரசு மூலதனத்தையும் இட்டு பெரு தொழிற்சாலைகளை கட்டலாம. ஏற்கனவே இங்குள்ள ஏகாதிபத்திய தரகு பெருந் தொழிற்சாலைகளை நட்டஈடின்றி பரிமுதல் செய்து அரசு கையிலோ அல்லது அரசு தேசிய முதலாளிகள் கூட்டுறவு கையிலோ வைத்து நிர்வாகிக்கலாம். இவையணைத்தும் பிரதானமாக விவசாய துறையின் தேவைகளுக்கான உற்பத்தியை செய்வதற்காக இருப்பதால் இந்திய முழுவதும் அந்தந்த விவசாய பகுதிகளை மையமாக வைத்து அமைக்கப்படும். அதாவது இந்தியாவின் வளங்களை மிக சரியாக பயன்படுத்துவதற்க்கு விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியின் மூலம் ஈட்டப்படும் தொழில் நுட்ப வளர்ச்சியே உதவும் எனவே இந்த முறை.

இன்றைய ஏகாதிபத்திய சந்தை தேவைக்காக என்று வரும் பொழுதுதான் மாநகரங்களை மையமாக வைத்து அவற்றை மையப்படுத்தும் இந்த பொருளாதாரம் இயங்குகிறது. மாறாக மேற் சொன்ன வகையிலான முறையில் ஒவ்வொரு விவசாய பகுதியிலும் புதிய நக்ர சந்தைகளுடன் கூடிய தொழில் நகரங்கள் உருவாகும்(இதனை, அதாவது தேசிய முதலாளிகளின் ஆதரவுடனான பொருளாதார வளர்ச்சியை ஓரளவு புரிந்து கொள்ள தற்போதைய தமிழ்நாடு உதவும். இங்கு 50 கி,மிக்கு ஒரு தொழில் நகரம் உள்ளது. ஒவ்வொன்றும் அந்தந்த பகுதியின் சிறப்பான அம்சங்களுக்கேற்ப்ப உருவானவை. இதனை விட இன்னும் சிறப்பானதாக நான் குறிப்பிடும் பொருளாதார முறை இருக்கும்)

விவசாயத்தை மையப்படுத்தும் வேலையை எங்கெல்லாம அரசு இயந்திரத்தை காலவதியாக்கி மக்கள் கையில் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் புரட்சி செய்த மக்கள் குழுக்கள் செய்யும்.

இவை இன்று உடனடியாக செய்யக் கூடிய விசயமல்ல இதனை செய்வதற்க்கு ஆதரவான அரசு முதலில் வேண்டும். அது இந்த அரசை தூக்கியெறிவதில்தான் சாத்திய்ம். அதன் பெயர் புரட்சி

விவசாய குறித்த இந்த பதிவை படிக்கவும்:

பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோ ... http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_18.html


அசுரன்

said...

நல்ல கட்டுரை. SEZ உழைப்பாளர்களையும், கணினி துறையிலுள்ளவர்களையும்.. மொத்தத்தில் இந்தியர்கள் அனைவரையுமே பாதிக்கும் ஒரு விஷயம் என்பதில் சந்தேகமில்லை... வேலியில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதை தான் இது....

said...

//Indis's climate is good for agriculture that it can plant three crops per year. U cannot do this in cold countries. But we are wasting resources like this.. //

//What these MNCs doing in 1000s of acres land? SEZ are really going to kill our farmer's life circle. Really worried about this.
What we are going to to?????????//

Dear Vibin and Annony,

Thanks for your comments and Concern...

Asuran

said...

http://www.indianexpress.com/story/273221.html

SEZ-heavy Gujarat: Thanks to the state’s land-acquisition policy for no Nandigrams here

Syed Khalique AhmedPosted online: Friday, February 15, 2008 at 0108

Ahmedabad, February 14: The total amount of land acquired for SEZs in Gujarat is 20,800 acres, which makes up for around 40 per cent of the total land under SEZ in the country. But despite this, not even a single Nandigram or Singur like incident has taken place in the state. Interestingly, even in nearby Goa, the Centre has cancelled all the 18 SEZs owing to pressure from the masses, political parities and religious groups.

According to Development Commissioner Ravi Saxena, the credit for this goes to the state's land acquisition policy, in which unlike in other states, the government has no role in acquisition of land for private SEZs. As the SEZ developers are themselves permitted to engage in bargaining with the landowners or the farmers, it leaves little space for corruption or cheating.

"As landowners directly bargain with the developers, they get better prices," he says, adding that this policy leaves no room for any kind of complaint or anger against anybody.

“In several cases, farmers with their land falling within some SEZs are reported to have waited for land prices to rise very high before selling them off. But the government did not interfere and left it to the farmers and the SEZ developers to deal with the situation. This ultimately benefited both the farmers and the SEZ developers," he adds.

Terming this as an "enlightened" land acquisition policy, Saxena says that many of the states have been asked by the Centre to follow the Gujarat SEZ system to avoid confrontations.

Of the total SEZ land in the state, 45 per cent is wasteland, 43 per cent agricultural land acquired from the farmers and the remaining 12 per cent has been acquired by the Gujarat Industrial Development Corporation (GIDC) much before the birth of the SEZ Act, but later transferred to SEZs.

According to Saxena, investment worth Rs 34,599.44 crore has already been made in Gujarat's SEZs with a total direct and indirect employment of 15,088 persons. However, the amount of FDI coming to Gujarat's SEZ is yet not known even though some of the countries like Japan have expressed willingness to invest in the state.

According to him, Kandla SEZ, which has 170 operational units, has exported goods worth Rs 1534 crore till February 13 of the current financial year, 34 per cent over the previous year's export. Surat's multi-product SEZ has exported goods worth Rs 6,500 crore so far during 2007-08 against Rs 5500 crores of export during 2006-07, he says.

Saxena, who is currently on deputation in the Ministry of Commerce and Industry and looks after Kandla Special Economic Zone (SEZ), told mediapersons that exports from the functioning SEZs in the country had risen by 92.85 per cent in 2007-08 and was expected to rise by 100 per cent in 2008-09.

He said the total value of exports from all SEZs in the country was Rs 34,787 in 2006-07 and it rose to 67,088 crores till mid-February, adding that it was expected to cross the Rs 140,000 crore mark in 2008-09 with more units expected to be commissioned in existing SEZs at different places in the country.

said...

அடிமை தேசம் குஜராத்தின் வளங்களை மட்டுமல்ல வேறு எதை கூட்டிக் கொடுத்தாலும் மக்கள் போராட மாட்டார்கள். போராடினாலும் கோடூரமாக ஒடுக்கப்படுவர். குஜராத் ஒளிர்கிறது என்ற பிரச்சாரத்தின் எக்ஸ்டென்சனாகிய இந்த SEZ பிரச்சாரத்திற்கு இரண்டு அம்சங்களிலும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இங்கு மீண்டும் பதிப்பிக்கிறேன்.

குஜாராத் ஒளிர்கிறதா? இந்தியாவிலேயே மிக மோசமான சமூக நலத்தில் குஜராத்துதான் இந்தியாவிலேயே பின் தங்கிய மாநிலம். SEZக்களுக்கான ந்லங்களை அடிமாட்டு விலைக்கு எப்படி கொடுக்கிறார்கள். அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஸ்டம், பன்னாட்டு தரகு கொள்ளைக்காரர்கள் கொழுக்கிறார்கள் என்ற உண்மைகளை மறந்துவிட்டால் குஜராத் ஒளிரத்தான் செய்யும். குஜராத விவசாயிகளுக்கான தற்கொலை சிறப்புப் பொருளாதார மண்டலமாக வேண்டுமானல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத நான் சொல்லல பாஜகவோட விவசாயிகள் சங்கம் தான் சொல்லுது.

குஜராத்தின் இருண்ட காலம்:


++++++++++++++++++++++

http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_1731.html

Tuesday, December 25, 2007
வளர்ச்சி எனப்படுவது யாதெனின்....
நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் கொலைகாரன் மோடி (சிலருக்கு மாவீரன் மோடி, சிலருக்கு இந்து இதயங்களின் அரசன், சிலருக்கு வளர்ச்சி நாயகன், ஆனால் எனக்கு மோடியும் ஒசாமாவும் ஒன்றுதான்) பெற்ற வெற்றி அவரது வளர்ச்சித் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. குஜராத்தின் காவிக் காமாலை நோய்வாய்ப்பட்ட (புத்திசாலி ?!!) மக்களைப் போலவே தமிழக மக்களும் சிந்திக்க வேண்டும் என கோயபெல்ஸ்கள் பதிவுகள் எழுதி வரும் இவ்வேளையில் வளர்ச்சி என்பதற்கு உண்மையான விளக்கத்தை அளிக்கவே இப்பதிவு.


நான் படித்தவரை (நான் குஜராத்திற்கு இதுவரை சென்றதில்லை என்பதனால்) குஜராத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள், தொழிற்துறை மற்றும் விவசாயத்துறை, வளர்ச்சிக் கண்ட மற்றும் வளர்ச்சி காணாத குஜராத், இவற்றிற்கிடையேயான இடைவெளி மிக மிக அதிகம்.


90 க‌ளில் ம‌ற்றும் 21ம் நூற்றாண்டின் முத‌ல் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் இந்தியாவின் 15 பெரிய‌ மாநில‌ங்க‌ளில் தொழிற்துறை முத‌லீடுக‌ளை ஈர்ப்ப‌தில் முத‌ல் மூன்று இட‌ங்க‌ளில் ஒன்றில் தொட‌ர்ந்து இட‌ம்பிடித்து வ‌ருகிற‌து (இதில் 15 பெரிய மாநிலங்கள் என்பது ஜார்கண்ட், உத்தராஞ்சல், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உருவாக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு முந்தைய‌ நிலைமை) 80 க‌ளின் ம‌த்தியில் குஜ‌ராத் தொழிற்துறை வ‌ள‌ர்ச்சியில் இந்தியாவில் இர‌ண்டாம் இட‌த்தில் இருந்தது. (அப்போதெல்லாம் காவிக் கூட்ட‌ம் ஆட்சியில் இருக்க‌வில்லை) பின்ன‌ர் தாராள‌ம‌ய‌மாக்க‌லின்போது முற்போக்கான தொழிற்க் கொள்கையின் கார‌ணமாக‌ தொழிற்துறை முதலீடுக‌ளுக்கு முக்கிய‌மான‌ இலக்காக‌ விளங்கி வ‌ந்த‌து. ஆனால் அந்த‌ தொழிற்துறை முத‌லீடுக‌ளின் தீவிர‌த்த‌ன்மையின் கார‌ணமாக‌ த‌னி ம‌னித‌ வ‌ருமான‌த்தில் (Per Capita Income) எந்த‌ வ‌ள‌ர்ச்சியும் எற்ப‌ட‌வில்லை. 90 களின் ஆரம்பத்திலிருந்தே தனிமனித வருமான வருமான விகிதத்தில் குஜராத் நான்காம் (1997-98 க்கும் 2001-02 க்கும் இடையே ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்திற்கு இறங்கியதைத் தவிர) இடத்திலேயே இருந்து வருகிறது. மேலும் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி அம்மாநில மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் எள்ளளவும் உதவவில்லை என்பதே உண்மை. 1991 ம் ஆண்டில் இந்தியாவின் 15 பெரிய மாநிலங்களில் Human Development Index எனப்படும் மனித வளர்ச்சி விகிதத்தில் நான்காம் இடத்திலும் Gender Development Index எனப்படும் ஆண்-பெண் வளர்ச்சி விகிதத்தில் ஐந்தாம் இடத்திலும் இருந்த குஜராத் மாநிலம் 2001 ம் ஆண்டில் முறையே ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்தில் இறங்கியிருந்தது. 2001 ம் ஆண்டில் கல்வி வளர்ச்சியில் ஆறாமிடத்திலும், சுகாதார விகிதத்தில் ஒன்பதாம் இடத்திலும், சுற்றுப்புற சூழல் விகிதத்தில் பதிமூன்றாம் இடத்தில் குஜராத் இருந்தது. மொத்தத்தில் பொருளாதார வளர்ச்சியை தவிர அனைத்து துறைகளிலும் குஜராத் மாநிலம் பின்தங்கியே இருந்து வருகிறது.(இதில் 1995 ம் ஆண்டிலிருந்து இன்று வரை பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே ஆட்சி புரிந்து வருகின்றன)

இதில் ஆறறிவுள்ள மனிதர்களுக்கு எழும் கேள்வி என்னவென்றால் மிகச் சிறந்த நிர்வாகியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மோடி இந்த பின்தங்கிய நிலைமையிலிருந்து குஜராத்தை மீட்டுவிட்டாரா என்பதுதான். கடந்த ஆறு வருட ஆட்சியில் தேய்ந்து வந்த Net State Domestic Product (NSDP) எனப்படும் மாநிலத்தின் மொத்த உற்பத்தியை நிமிர்த்தியதைத் தவிர வேறு எதுவும் அவர் சாதித்ததாக தெரியவில்லை. வளர்ச்சிக் கண்ட மற்றும் வளர்ச்சி காணாத பகுதிகள், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம், பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிமனித நல்வாழ்வு, இவற்றிற்கிடையேயான இடைவெளி இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.Infant Mortality Rate (IMR) எனப்படும் சிசு மரண விகிதத்தை எடுத்துப் பார்த்தாலே அவரது வளர்ச்சி முகமூடி கிழிந்துவிடும். 2005ம் ஆண்டில் குஜராத்தின் சிசு மரண விகிதம் 1000 குழந்தைகளுக்கு 54 ஆகவும், இந்தியாவின் சிசு மரண விகிதம் 1000 குழந்தைகளுக்கு 58 ஆகவும் இருந்தது. அதாவது இந்தியாவின் மொத்த சிசு மரண விகிதம் குஜராத் மாநிலத்தை விட 7 சதவிகிதம் அதிகம். இதுவே 1991 ல் இந்தியாவின் சிசு மரண விகிதம் 80 ஆகவும் குஜராத்தின் சிசு மரண விகிதம் 68 ஆகவும் இருந்தது. அதாவது இந்தியாவின் சிசு மரண விகிதம் குஜராத்தை விட 16 சதவிகிதம் அதிகமாக இருந்திருக்கிறது.

மேலோட்ட‌மாக பார்த்தால் இந்தியாவிற்கும் குஜராத்திற்கும் இடையேயான சிசு மரண விகித வித்தியாசம் 16 ச‌த‌விகித‌த்திலிருந்து 7 ச‌த‌விகிதமாக‌ குறைந்திருக்கிற‌து. இது முன்னேற்ற‌ம் என்றுதான் தோன்றும். ஆனால் உண்மை அதுவ‌ல்ல‌. ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளின் சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் வேகமாக குறைந்ததால்தான் இந்த‌ வித்தியாச‌ம் குறைந்திருக்கிற‌து. ஒரு மாநில‌த்தின் (கேரளாவைப் போல) சிசு ம‌ர‌ண விகித‌ம் குறையும்போது தேச‌த்தின் சிசு ம‌ர‌ண‌ விகித‌த்திற்ககும் அம்மாநில‌த்தின் சிசு ம‌ர‌ண‌ விகிதத்திற்கும் இடையேயான‌ இடைவெளி குறைவ‌து இய‌ற்கையே. இருப்பினும் குஜ‌ராத்தின் சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் ச‌ற்று அதிக‌மே. 2005 ல் குஜ‌ராத் இந்தியாவின் 18 பெரிய மாநில‌ங்க‌ளில் (ஜார்க்க‌ண்ட், உத்திராஞ்ச‌ல், ச‌ட்டீஸ்க‌ர் உட்ப‌ட‌) சிசு ம‌ர‌ண விகித்த‌தில் 9 ம் இட‌த்தில் இருந்த‌து. 2001 ல் 60 ஆக இருந்த குஜராத்தின் சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் 2005 ல் 54 ஆக‌ குறைந்திருந்தாலும், இந்தியாவின் ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளை காட்டிலும் இது மிக‌ மிக‌ மோச‌மான‌ முன்னேற்ற‌மே. கேர‌ளாவில் 14 ஆக‌வும், ம‌காராஷ்டிராவில் 34 ஆகவும், த‌மிழ்நாட்டில் 37 ஆக‌வும், மேற்கு வ‌ங்காள‌த்தில் 38 ஆக‌வும், இவ்வ‌ள‌வு ஏன் நேற்று உருவாக்க‌ப‌ட்ட‌ உத்தராஞ்ச‌லில் 42 ஆகவும், ஜார்க்க‌ண்டில் 50 ஆக‌வும் இருக்கும் சிசு ம்ர‌ண‌ விகிதம், வ‌ளர்ச்சி க‌ண்ட‌ மாநில‌மாக‌ பொய்ப் பிர‌ச்சார‌ம் செய்ய‌ப்ப‌டும் குஜ‌ராத்தில் ம‌ட்டும் 54 ஆக‌ இருப்ப‌தேனோ?.சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் என்ப‌து பெண்க‌ளின் ந‌ல்வாழ்வு ம‌ற்றும் குறிப்பாக‌ க‌ர்ப்பிணி பெண்க‌ளுக்கு கிடைக்கும் நோய்தடுப்பு மருந்துகள் மற்றும் சரியான ஊட்டச்சத்துப் போன்ற முறையான‌ ம‌ருத்துவ‌ வ‌ச‌திக‌ளை ப‌ற்றிய‌ உண்மைக‌ளை வெளிக்காட்டும் முக்கிய‌மான‌ அடையாள‌ குறியீடு ஆகும்.


மேலும் இந்த‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளுக்கான‌ நோய்த்த‌டுப்பு திட்ட‌ங்க‌ள், மற்றும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்ப‌டை பொது சுகாதார‌ம் ஆகிய‌வ‌ற்றின் அவ‌ல‌ நிலையை எடுத்து கூறுகிற‌து. ஒரு சிசுவை அல்லது க‌ர்ப்பிணி பெண்ணை அந்த‌ குடும்ப‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்களால் ச‌ரியாக‌ க‌வனிக்க‌ முடியாம‌ல் போகும் ப‌ட்ச‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு அடிப்ப‌டை ம‌ருத்துவ‌ வ‌சதியை அளிப்ப‌து அந்தந்த‌ மாநில‌ அர‌சுக‌ளின் பொறுப்பாகிற‌து. ஆனால் குஜ‌ராத் அர‌சைப் பொறுத்த‌வ‌ரை இந்த‌ பொறுப்பிலிருந்து பிற‌ழ்ந்திருப்ப‌தாக‌வே தெரிகிற‌து. குஜ‌ராத்தின் முக்கிய‌ப் பிர‌ச்சினையே அதன் கிராம‌ப்புற‌ங்க‌ளில் அதிக‌மாக‌ இருக்கும் சிசு மர‌ண‌ விகித‌ம்தான். 1991 ம் ஆண்டில் 73 ஆக இருந்த‌ 2004 ல் 62 ஆக‌ குறைந்திருந்த‌து. இது இந்தியாவின் கிராம‌ப்புற‌ சிசு ம‌ர‌ண விகித‌ம் 64 ஐ விட அவ்வ‌ள‌வு ஒன்றும் குறைவாக‌வில்லை. இந்தியாவின் ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ள் கிராம‌ப்புற‌ சுகாதார‌த்தில் குஜ‌ராத்தை காட்டிலும் ந‌ல்ல‌ வ‌ள‌ர்ச்சியை க‌ண்டிருப்ப‌தென்ன‌வோ உண்மைதான். கிராம‌ப்புற‌ சுகாதார‌த்தை இப்ப‌டி ஒட்டுமொத்த‌மாக‌ புற‌க்க‌ணிப்ப‌து குஜ‌ராத் மாநில‌த்தின் த‌வ‌றான‌ வ‌ள‌ர்ச்சிக் கொள்கையின் ஒரு முக்கிய சாரம்சமாகவே தெரிகிற‌து. 90 க‌ளில் பா.ஜ‌.க‌ ஆட்சியில் மோச‌மாக‌ இருந்து வ‌ந்த‌ குஜ‌ராத்தின் கிராம‌ப்புற‌ சுகாதார‌ம் மோடியின் ஆட்சிக் கால‌த்தில் மேலும் சீர‌ழிந்துவிட்டதாக‌வே புள்ளி விவ‌ர‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன.

இத‌னினும் கொடுமை என்ன‌வென்றால் குஜ‌ராத் அர‌சு (தனியார் மயப்படுத்தபட்ட) ச‌ஞ்சீவ‌னி யோஜ‌னா எனும் மகப்பேறு திட்டத்தை பழங்குடியினர் (அவர்கள் காலம்காலமாக காங்கிரசுக்கு வாக்களித்து வருவதால்) வாழும் பகுதிகளுக்கு கொண்டு செல்லாததுதான். நொடித்து இருந்த‌ சுகாதார‌த் துறையை சீர்ப்ப‌டுத்துவ‌தை விடுத்து அதை த‌னியாருக்கு தாரைவார்த்த‌துதான் இத்துறையில் க‌ர்ம‌யோகி மோடி செய்த‌ சாத‌னை. 2005-06 ல் எடுக்கப்பட்ட National Family Health Survey (NFHS) என‌ப்ப‌டும் தேசிய‌ குடும்ப‌ந‌ல‌ க‌ண‌க்கெடுப்பின்ப‌டி குஜ‌ராத்தில் 5 வய‌துக்குட்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளில் 47 ச‌த‌விகித‌ குழ‌ந்தைக‌ள் ஊட்ட‌ச்ச‌த்து குறையினால் எடைக்குறைந்து இருக்கிறார்கள். இது 1998-99 ம் ஆண்டு NFHS க‌ண‌க்கெடுப்பின்போது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்ட‌ 45 ச‌த‌விகிதத்தை விட‌ அதிகம்.


கடைசியாக குஜராத்தில் சமூகநலத் துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீடு 1990 ம் ஆண்டுக்குப் பிறகு குறைந்திருக்கிறது. 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய‌ ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாதந்திர நிலவர அறிக்கையின்படி இந்தியாவின் 18 பெரிய‌ மாநில‌ங்க‌ளில் ச‌மூக‌ ந‌ல‌த்துறைக்கு 31.6 ச‌த‌விகித‌ம் ம‌ட்டுமே ஒதுக்கீடு செய்து குஜ‌ராத் 17 வ‌து இட‌த்தில் இருந்த‌து. ப‌ஞ்சாப் மாநில‌த்தைத் த‌விர‌ (புதிதாக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ட்டீஸ்க‌ர், உத்த‌ராஞ்ச‌ல், ஜார்க்க‌ண்ட் உட்ப‌ட‌) ச‌மூக‌ ந‌ல‌த்துறைக்கு அதிக‌ நிதி ஒதுக்கீடு செய்திருப்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. 1991 ல் ச‌மூக‌ ந‌ல‌த்துறைக்கான‌ ஒதுக்கீட்டில் இந்தியாவில் 15 பெரிய‌ மாநில‌ங்க‌ளில் 12 வ‌து இட‌த்தில் இருந்தது குஜராத். மோடியின் ஆட்சிக்கால‌த்தில்தான் குஜ‌ராத்தின் ச‌மூக‌ ந‌ல‌த்துறை மிக‌ மோச‌மான‌ நிலைக்குத் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.


Human Development Index என‌ப்ப‌டும் த‌னிம‌னித‌ வ‌ள‌ர்ச்சி குறியீட்டில் 2006 ம் ஆண்டில் 126 வ‌து இட‌த்திலிருந்த‌ இந்தியா 2007 ல் 128 வ‌து இட‌த்தில் த‌ள்ள‌ப் ப‌ட்டிருக்கும் இவ்வேளையில். த‌வ‌றான‌ வ‌ளர்ச்சியை காட்டி தேர்த‌லில் மோடி பெற்றிருக்கும் வெற்றி ம‌ற்ற‌ மாநிலங்களின் அர‌சிய‌லிலும் பொருளாதாரக் கொள்கைகளிலும் எந்த விதமான தாக்கத்தை எற்படுத்துமோ என்கிற அச்சம் எழவேச் செய்கிறது.


வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களில் எல்லாரும் பிட்சா சாப்பிடுவதுதான் என்ற எண்ணம் கொண்டவர்கள் இருக்கும்வரை மோடிப் போன்றவர்கள் வளர்ச்சி மாயையைக் காட்டி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது தொடரத்தான் செய்யும்.


வாழ்க ஜனநாயகம்!

said...

குஜராத் விவசாயிகள் தற்கொலை: இதுதான் இந்துராஷ்டிரம்!

http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1142:2008-05-03-05-44-14&catid=36:2007&Itemid=78

+++++++++++++++

குஜராத் : இந்து பயங்கரவாத்தின் இன்னொரு முகம்

http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1133:2008-05-01-18-58-16&catid=68:2008&Itemid=79

+++++++++++++++++++

http://poar-parai.blogspot.com/2008/01/blog-post.html


76,000 கோடி அளவிற்கு அபாரமாக முதலீடு குவிந்திருப்பதை ரிசர்வ் வங்கியே உறுதிப்படுத்தியிருக்கிறது. பொருளாதாரம் 10.6 % உயர்ந்திருக்கிறது. கிராமங்களுக்கு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்திலும் சாதனை நிகழ்ந்திருக்கிறது." - குமுதம்.

இப்படி குஜராத்தின் வளர்ச்சி என்று குமுதல் பட்டியலிடும் எதுவும் அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததற்க்காக ஆதரமாக இல்லை. இந்த அளவுகோல்களை இந்தியா முழுவதற்க்கும் கூட பொருத்திப் பார்த்து மோடியை விட மன்மோகன் சிங் சூப்பர் என்று நிறுவ முடியும். ஆனால் இவை உண்மையில் மக்களை மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளன என்பதை அங்கு விவசாயத்தில் நிகழ்ந்துள்ள தற்கொலைகளே சாட்சி சொல்லும். இந்தியாவின் தற்கொலை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எனப்படும் மாநிலங்களில் ஒன்றாக தகுதி பெறும் நிலையிலேயே குஜராத் உள்ளது. குஜராத் விவசாயிகள் தற்கொலையை மறைத்து விட்டது மோடி அரசு என்று பஜகாவினுடைய விவசாயிகள் சங்கமான கிசான் சபா குற்றம் சாட்டுகிறது. குஜராத்தின் உணவு உற்பத்தி இந்த ஒரு வருடத்தில் மட்டும் 10 லட்சம் டன்களுக்கும் மேல் குறைந்து விட்டது. ஒவ்வொரு குஜராத்க்காரனின் தலை மீதும் 19 ஆயிரத்து சொச்சம் ரூபாய் கடன் இந்த ஒரு வருடத்தில் ஏறி உள்ளது. குஜராத் தனது தகுதியை மீறி கடன்களை குவித்துள்ளது என்று பா சிதம்பரம் குற்றம் சாட்டுகிறார். கேள்வி முறையின்றி குஜராத் வளங்களை சுரண்டுவதற்க்கு பன்னாட்டு கம்பேனிகளுக்கு உரிமை கொடுக்கும் பாசிச சூழலை உருவாக்கியுள்ளதை நாம் விமர்சனம் செய்வதைத்தான் மதக் கண்ணாடி போட்டு பார்க்காதே என்று அவதூறு பேசுகிறது குமுதம். விவசாயம் குறித்து ஒரேயொரு புள்ளிவிவராமவது போட்டு எழுதலாமே குமுதம் பத்திரிக்கை? ஏன் ஒரே வரியில் விவசாயம் வளர்ந்துள்ளது என்ற பொய்யை - ஒரு திமிங்கலத்தையே தனது தலையங்கத்தில் மறைத்துவிட்டது குமுதம்? படிக்கும் வாசகன் நமீதா எந்தளவுக்கு மறைக்காமல் காட்டுகிறாள் என்பதில்தான் ஆர்வமாக இருப்பான் என்று தெரிந்த திமிர்தான் இதற்க்கு அடிப்படை. உண்மையில் குஜராத் இந்தியாவின் பல மாநிலங்களையும் விட சோசியல் இண்டெக்ஸ் எனப்படும் சமூக முன்னேற்றத்திற்க்கான அளவுகோலில் மிக மோசமாகவே செயல்பட்டுள்ளது.

SEZ என்ற பெயரில் அடிமாட்டு விலைக்கு நிலங்கள் பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்கு விற்க்கப்பட்டுள்ளது இதற்க்கு ஒரு உதாரணம் ஆகும். குஜராத்தின் மறுகாலனிய அடிமைத்தனம் என்கிற பண்பு மாற்றமும், பார்ப்பினிய அடிமைத்தனம் என்கிற பண்பும் தனித்தனியான நிகழ்வுகள் அல்ல. இவை ஒன்றையொன்று சார்ந்த விசயங்கள் அதனால்தான் குமுதம் பத்திரிகை தனது பார்ப்பனிய சார்பை பொருளாதார முன்னேற்றம் என்கிற பொய்யான பிரச்சாரத்தின் பின் நின்று கொண்டு வெளிப்படுத்துகிறது. இதை குமுதம் பத்திரிகை மட்டுமல்ல அனைந்திந்திய பத்திரிகைகளும் செய்கின்றன என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. இவை அவற்றின் வர்க்க சார்பையே காட்டுகின்றன.

Related Posts with Thumbnails