TerrorisminFocus

Sunday, March 04, 2007

தமிழ் மக்கள் இசை விழா - விடுதலையின் காலைக் கதிர்

மிழிசை குறித்து ஏற்கனவே பலரும் எழுதியிருக்கிறார்கள். இங்கு தமிழ்மணத்திலும் கூட சில காலம் முன்பு சிற்சில கட்டுரைகள் தமிழிசை குறித்து எழுதப்பட்டன. ஆயினும் இவையெல்லாம் ஏதோ ஆய்வு செய்யும் அறிவு ஜீவிகளுக்கான விசயம் போலும், சாதாரண சனங்களுக்கு அன்றாட வாழ்க்கை தேவைகளுக்கென்று இதில் எதுவும் இல்லை என்பது போலவும் நிலவுகின்ற பொதுக் கருத்துக்கு இந்த கட்டுரைகளில் எதுவும் பதில் சொல்லவில்லை. அதிலும் குறிப்பாக, தமிழிசையையும் கூட யாரும் ரசிப்பதில்லை என்று ஒரு அன்பர் வருத்தப்பட்டு எழுதியிருந்தார். இந்நிலையில்தான் இரண்டு ஆண்டுகள் சுனாமி காரணமாகவும், வெள்ள அழிவு காரணமாகவும் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ம.க.இ.க வின் தமிழ் மக்கள் இசை இந்த வருடம் மீண்டும் நடைபெற இருப்பது குறித்து அறிவிப்பு வந்தது.

ஒரு கம்யுனிஸ்டு கட்சிக்கு தமிழிசையை மீட்டெடுப்பதை முக்கிய அம்சமாக செயல்படுத்தும் தேவை என்னவாக இருக்க முடியும்? பார்ப்பினிய எதிர்ப்பையும் இதையும் இணைத்து பேசுகிறார்களே எப்படி? கர்நாடக இசைக்கும் தமிழிசைக்கும் அப்படி என்னதான் பிரச்சனை? தமிழசையை மேம்படுத்தும் நடைமுறை தேவை என்ன? இன்றைய திரையிசை கூட கர்நாடக சங்கீத அடிப்படையே கொண்டுள்ளதே? தமிழிசை என்பதை எங்குமே கேட்டதில்லையே? ஆக, வழகத்திலில்லாத ஒரு இசைக்கு விழாவா? இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் என்ன ஆகப் போகிறது?

ஒரு முறை மருதையன் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார்,
"தனது எதிரியை சரியாக எடை போடாதவன் கூட வெற்றியடையலாம், ஆனால் மிகையாக மதிப்பிட்டு பிரமிப்படைபவன் வெற்றியடைந்ததாக இல்லை".

இங்கோ பெரும் கேவலமாக தன்னை பற்றியே சரியான புரிதல் இன்றியும், எதிரியைப் பற்றியோ மிக மிக அதீதமான கற்பனைகளுடனும் இருக்கிறார்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள். இந்த சமூகத்தையே ஒரு பெரும் மலைப்பாம்பாக வளைத்து பிடித்து பார்ப்பினியம் பண்பாட்டு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ள சூழலில் இது போன்ற மயக்கம் மக்கள் விரோதிகளுக்கு/பாசிஸ்டு இந்துத்துவவாதிகளுக்கு சாதகமான பொதுக் கருத்துக்களை வலுப்படுத்தி விடுகீறது.

முதலில் நம்மை நமது இசை பண்பாட்டு மரபுகளை அறிவோம், தத்துவம், மருத்துவம், வானவியல் முதல் கலை இலக்கியம் வரை பிறரிடமிருந்து திருடி அதனையே தனது சொந்த கண்டுபிடிப்பாக வரலாற்று புரட்டு செய்யும் பார்ப்ப்னியத்தின் புரட்டுகளில் ஒன்றாகிய இசை புரட்டையும் அறிவோம், பிறகு இதை ஏன் நாம் மீட்டெடுக்க வேண்டும் என்பதை அறிவோம், பிறகு இந்த வருட தமிழ் மக்கள் இசை விழா குறீத்து ஒரு சிறு சித்திரம். இவையெல்லாம் முடிந்தளவு சுருக்கமாக ஆனால் வீச்சாக இருக்குமாறு எழுத முயற்சிக்கிறேன்.




தமிழிசையும், வரலாற்று புரட்டும்:

தென்னிந்தியாவின் இசை மரபாக மகா பெரிய புனித வட்டம் கட்டப் பட்ட கர்நாடக சங்கீதம் வலம் வருகிறது. பிரதமர் முதல் ஜனாதிபதி வரை அரசாங்கத்தின் அனைத்து பிரதிநிதிகளும் தியாகய்யர் விழாவில் கலந்து கொண்டு இந்த வரலாற்று புரட்டுக்கு வலு சேர்க்கிறார்கள். வாசகர் படித்தாலும் படிக்காவிட்டாலும் அனைத்து பார்ப்பன பத்திரிக்கைகளும் பத்து பக்கங்களை ஒதுக்கி ஒரே பாட்டை பற்றீயே வருட வருடம் பல்வேறு விதங்களில் பொருளற்ற வார்த்தை ஜாலங்களின் மூலம் விமர்சனம் என்ற
பெயரில் வக்கரித்து செல்கின்றனர். புரியாத சாதாரண ஜனங்களோ இது ஏதோ உண்மையிலேயே மிகப் பெரிய விசயம் போல் என்று கருதி இதன் அடக்குமுறை வடிவம் உணராமல் அடையாளம் மறுத்து பக்கங்களைப் பிரட்டிச் செல்கிறார்கள்.

இத்தனையும் ஒரு வரலாற்று உண்மையை மறைத்து விட்டு செய்யப்படும் அசிங்கமாக உள்ளது. கர்நாடக சங்கீதம் என்பதே களவாடிய இசை என்பதை மறைத்துவிட்டே இத்தனை புனித ஆன்ம வியாபராமும் நடைபெறுகிறது. கர்நாடக இசை என்பது பார்ப்பனர்களின் வரலாறு படி, இசை சாம வேதத்திலிருந்து பிறந்ததாம். ஏழு கன்னிகள்தான் ஏழு சுரங்கள் என்று சொல்கிறார்கள். சாமவேதம் உதித்த இடம் சிந்து சமவெளி. ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. சாம வேததிலிருந்துதான் இசை உருவானது என்றால் அது வடநாட்டிலும் கருநாடக இசை போலவே இருக்க வேண்டுமே? ஏன் இல்லை. மேலும் சாம வேதத்தில் ஐந்து சுரங்களால் பாடப் பெறுகிறது. கர்நாடக சங்கீதமோ ஏழு சுரங்களில் பாடப் பெறுகிறது.

ஆனால், தமிழ் நாட்டில் 2000 வருடங்களுக்கு முன்பே இசை நன்கு வளர்ந்திருந்தது. நிலத்தை ஐந்து வகையாக பிரித்து ஒவ்வொரு பிரிவிற்க்கும் ஒவ்வொரு இசை வடிவை/உணர்வை வடித்திருந்தனர் தமிழர்கள். பேரகத்தியம் என்ற நூல் இசை, இயல், நாடக தமிழ் குறித்து பேசும் ஆதி நூலாகும். செய்யுட்டுறைக் கோவை என்ற நூல் இசைத் தமிழுக்கான இலக்கணத்தை பற்றிய நூலாகும். உலகிலேயே தொன்மையான இசை இலக்கண நூல் இதுவாகும். இது தவிர்த்து இடை, கடைச் சங்க கால நூல்கள் என இசைத் தமிழுக்கான நூல்கள் பல உள்ளன. தமிழ்நாட்டு இசையைப் பற்றி சிலப்பதிகாரம் முதல் பல்வேறு பௌத்த, சமண நூல்கள் எடுத்துரைக்கின்றன. பண்டைய தமிழிசையின் நுட்பங்களை இந்த நூல்கள் விளக்குகின்றன. அதனை காணுமிடத்து மிக உயர்வான ஒரு இசையாக தமிழிசை வழங்கி வந்துள்ளது தெரிகிறது. இந்த ஆதரங்களிலிருந்துதான் ஆய்வாளர்கள் இசை திருட்டை அம்பலப்படுத்தினர்.

அன்றைய தமிழகத்தில் ஐந்து வகை நிலங்களுக்கும் பெரும் பண், சிறு பண் என இசை வடிவங்கள் ஆகியவை வகுக்கப்பட்டிருந்தன. பண்கள்தான் காலப் போக்கில் இராகங்களாக வளர்ச்சி அடைந்தன. பண் என்பது பாடலின் இசை வடிவம். அதை மெட்டு என்றும் கூறலாம். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை பாடல்பகுதி வருகிறது. அது முல்லை தீம்பாணி என்று கூறப்படுகிறது. இதற்க்கு சுரம் அமைத்து பாடியுள்ளார் குடந்தை சுந்தரேசனார். இந்த முல்லை தீம்பாணிதான் மோகனராகம் என கர்நாடக சங்கீதத்தில் உள்ள ராகம் ஆகும்.

மரபுகளை திருடும் பார்ப்பனியம், திருடும் பொழுதே அதன் மூலங்களை அழிப்பது/திருத்துவது வழக்கமாகக் கொண்டுள்ளது. இது அதனது வரலாற்று இயல்பாக இருந்துள்ளது. காட்டுமிராண்டி கூட்டமாக இந்தியா வந்த ஆரியக் கூட்டம் இங்கிருந்த நாகரிக சமூகத்தின் கூறுகளை தனதாக்கிக் கொண்டு அந்த கூட்டத்தவரை அழித்து அடிமையாக்கியது போல, சாருவாகம் முதல் சாங்கியம் வரை பல்வேறு தத்துவ மரபுகளை தன்னுள் செரித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அவற்றீன் மூல நூல்களை திரித்து சிதைத்து அழித்து பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளனர் இவர்கள். இசையிலும் கூட மரபுகளை திருடிக் கொண்டு மூல நூல்களை ஆயிரக்கணக்கில் அழித்து விட்டனர். ராஜராஜ சோழன் தில்லை நடராசன் கோயிலுக்கு சென்றிருந்த போது அங்கு பூட்டியிருந்த ஒரு அறையை திறக்கச் சொன்னான். அந்த அறை முழுவதும் பழைய ஓலைச்சுவடிகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிதல் அரித்து அழிந்த போனவை தவிர மீதி கிடைத்தவைதான் தேவாரப் பதிகங்கள். இவற்றின் மொத்த எண்ணிக்கை 1,03,000. கிடைத்தவையோ 791. பௌத்தம் சமணம் வேகம் குன்றிய கட்டதில் இசைத் தமிழை வளர்த்தில் பக்தி இலக்கிய கால தேவரம் முக்கிய பங்களிப்பு செய்துள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும். பார்ப்பனர்களின் சம்ஸ்கிருத வெறி இது போல பல தமிழ் நூல்களை அழித்துள்ளது.

தமிழகத்தின் பல ஊர் பெயர்களையும், சொற்களையும் சம்ஸ்கிருதமயமாக்கினர் பார்ப்பனர்கள். மறைக்காட்டை வேதாரண்யம்(வேதம்+ஆரண்யம்) என்று மாற்றீயதைப் போலவே தமிழிசையும் கர்நாடக இசை என்று பெயர் மாறியது. மாறீயது பெயர் மட்டுமல்ல அதன் கலைச் சொற்களும், வடிவங்களும் கூட சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டன. கருநாடக சங்கீதத்தின் 'விநாயகுனி' தமிழிசையின் செந்துருத்திப் பண். தமிழிசையின் 'மீளா அடிமை' கர்நாடக சங்கீதத்தில் 'மத்தியமாவதி'. தமிழிசையின் காந்தார பஞ்சமம் கர்நாடக சங்கீதத்தின் கேதார கௌளம்.

இத்தனையையும் மீறி தமிழிசை வளந்தே வந்துள்ளது. பல தமிழிசை வாணர்கள் ஏராளமான தமிழ் உருப்படிகளை எழுதி குவித்துள்ளனர். அருணகிரிநாதர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சல கவிராயர், ஊத்துக்காட்டு வேங்கட சுப்பையர், கோபால கிருஷ்ண பாரதியார், இராமசாமி சிவன், இராமலிங்க அடிகளார், கவிகுஞ்சாபாரதி, வேதநாயகம் பிள்ளை, திரிகூடராசப்ப கவிராயர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பாரதி, பாரதிதாசன். அண்மைக்காலத்தில் மாரியப்ப சுவாமிகள், சிதம்பரம் ஜெயராமன், திருவாரூர் நமச்சிவாயம், தண்டபாணி தேசிகர், கே.பி. சுந்தராம்பாள், தியாகராஜ பாகவதர்.

தியாகய்யருக்கும் முன்னால் தமிழில் செவ்வியல் இசை இருந்துள்ளது. ஆதி மும்மூர்த்திகளான முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசல கவிராயர் எனப்படும் சீர்காழி மூவர் இருந்துள்ளனர். தேவாரம் பதிகங்கள் இருந்துள்ளன. தமிழ் செவ்வியல் மரபை இசை வேளாளர்களும், ஓதுவார்களும் வளர்த்தனர். இதிலிருந்துதான் தியாகய்யர் தனது இசையை பெற்றார்.

இசை முதல் அனைத்து கலைகளும் உழைப்பின் ஊடாக பரிணமித்து வளர்கின்றன. அதனால்தான் வேறுபட்ட உற்பத்தி முறையை உடைய ஒரு சமூகங்களின் கலை இலக்கிய ரசனை மட்டத்திலும் வேறுபாடு உள்ளது. படகு வலிக்கும் அத்தனை பேரின் சக்தியையும் ஒருங்கினைக்க அவர்கள் எழுப்பும் சத்தம் இசையாகிறது. வயல் வேலையின் களைப்பை போக்க வேலையின் ரிதத்திற்க்கு ஏற்ப்ப ஓசை எழுப்ப அது இசையாகிறது. ஏற்றம் இறைக்க, வரப்பு வெட்ட என்று உழைப்பின் ஊடாக இசை பல்வேறு வடிவங்களை பெறுகிறது. பிரிண்டிங்க் பிரஸ்ஸில் வேலை பார்க்கும் ஒருவனுடைய உணர்ச்சிகள் அனைத்தும் சடக் புடக் என்ற இயந்திரத்தின் ரிதத்துடனும், சல சலக்கும் நகரத்தின் பிற இரைச்சல்களுடனும்தான் அவனுக்கு அறீமுகமாகிறது. அப்படியொரு சத்த அடிப்படையை கொண்ட இசையால்தான் அவனுக்குள் அந்த உணர்ச்சிகளை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட இசையைத்தான் அவனால் ரசிக்க முடியும். பின் தங்கிய உற்பத்தி முறையில் ஈடுபட்டுள்ள ஒருவரால் முன்னேறிய இசை வடிவங்களை ரசிக்க முடியாது. ஒரு கிராமத்தில் திரும்ப திரும்ப ஒரே கூத்தை அதிகாலை 3:00 வரை நடத்தினாலும் அவனால் ரசிக்க முடியும் ஆனால் ஒரு பத்து நிமிட பாப் இசையை அவனால் ரசிக்க இயலாது. இப்படி உழைப்பின் ஊடாக வளர்ந்து புழக்கத்தில் இருக்கும் நாட்டார் இசையிலிருந்துதான் செவ்வியல் இசை தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. இது உலகமுழுவதிற்க்குமான உண்மை. இதே போலத்தான் செவ்வியலாக பரிணமித்து புழங்கி வந்த தமிழிசையின் மரபுகளையும், அந்த தமிழசையை களவாடி டாகுமெண்ட் செய்த கர்நாடக இசையின் மரபுகளையும், நாட்டார் இசையின் இசை மரபுகளீலும் காணலாம். வள்ளப்பாட்டு ஆனந்த பைரவியாகவும், ஏற்றப்பாட்டு சங்கராபரணமாகவும் இருக்கிறது.

பார்ப்பனியம் மரபுகளை களவாடி தமதாக புரட்டுவதற்க்கு ஆயிரத்தெட்டு உதாரணங்கள் இருக்கின்றன அவற்றில் ஒன்றுதான் இந்த இசை திருட்டு, கிபி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்க தேவர் எனபவர் எழுதிய 'சங்கீத ரத்னாகரம்' என்ற இசை நூலில் தான் தமிழிசை முறையிலான சரிகமபதநி என்னும் ஏழு தமிழ்க் குறீயிடுகளுக்கும் வடமொழி அடிப்படையிலான காரணப் பெயர்களை வலிந்து உருவாக்கி புரட்டலை செய்தார். இதனை அபிரகாம பண்டிதர் தனது கர்ணாமிர்த சாகரம் எனும் நூலில் மிக அருமையாக அமபலப்படுத்தியுள்ளார். இவர்தான் ஆலபனைகளுக்கான அடிப்படைகளை கண்டறிந்தவர். இவர்தான் ராகபுடம் செய்யும் முறையை கண்டறிந்தவர். இதற்க்குப் பிறகு கர்நாடக இசை களவாடிய இசை என்பதை நிறுவி பல ஆய்வு நூல்கள் விரிவாக வெளிவந்துள்ளன. இன்று வரை அதை மறுத்து பேச ஆள் இல்லை. இது என்ன அயோத்தி ராமனா? இங்குதான் படுத்தான், காலைக் கடன்களை முடித்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்று புருடா விட.

விசயம் இப்படி இருக்க இந்த வரலாற்று உண்மைகள் வெகு சனங்களுக்கு தெரியாத காரணத்தினாலேயே தமிழகத்தின் இசை கர்நாடக இசை என்று சாதித்து வருகிறார்கள் இவர்கள். தமிழிசை வளர்த்த காலத்தில் ஐந்து நிலங்களுக்கும் பறையையே இசைக் கருவியாக வரையறுத்து வைத்திருந்தனர் தமிழர்கள். மேற்கத்திய இசைக் கருவிகளைக் கூட அனுமதிககிறது தியாகய்யர் உற்சவம். ஆனால், தமிழிசையை களவாடிய இந்த திருட்டு கும்பல் தமிழ் வாத்தியக் கருவியான பறையை தியாகய்யர் விழாவில் அனுமதிக்குமா? அதைப் பற்றி பேசுவதற்க்கே அனுமதி கிடைக்காது இந்த ஜனநாயக நாட்டில். தமிழ் நாட்டில் தமிழில் பாடு என்று சொல்வதே தீவிரவாதமாக உள்ளது, போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் இசை விழாவில் தமிழிசையை பற்றீ பேசலாமாம் ஆனால் அது திருடப்பட்டதை பேசக் கூடாதாம் - திருட்டைப் பற்றீ பேசலாமாம் ஆனால் திருடனைப் பற்றி பேசக்கூடாதாம் -அன்றைய நீதிமன்ற உத்தரவு இப்படி வெளிப்படையாக திருடனுக்கு ஆதரவாக நிற்கிறது. சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடக் கூடாது இன்றைய நீதிமன்ற உத்தரவும் பார்ப்ப்னியத்திற்க்கு ஆதரவாகவே நிற்கிறது. தியாகராயர் உற்சவத்தில் இன்றளவும் தமிழிசைப் பாடபடுவதில்லை. திட்டமிட்டே புறக்கணித்து வருகின்றனர். தியாகய்யர் விழாவில் தமிழில் பாடுவது மட்டுமா நோக்கம்?

அது பிரதான நோக்கமாக இருக்க முடியாது. ஆயினும் அதனை வலியுறுத்துவதில் நமது தன்மானப் பிரச்சனை அடங்கியுள்ளது. நாங்கள் வழிபடுவதென்றுதான் கோயில் கட்டி வைத்திருக்கிறோம். நீங்கள் சாமி கும்பிட வேண்டுமென்றால் தனியாக உங்களுக்கென்று ஒரு கோயிலை கட்டி கும்பிட்டுக் கொள்ளுங்கள் அதை விடுத்து எங்களது கோயிலில் தான் நுழைவோம் என்று தலித்துக்கள் சொல்வது சரியில்லை என்று உயர் சாதியினர் அடாவடித்தனம் செய்வது போலத்தான், தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, ஒரு கூட்டம் திருடிய இசையையே தான் கண்டுபிடித்த இசை என்று கூறுவதும். அதை விழாவாக கொண்டாடுவதும். அதை மறுத்து தமிழில் பாடச் சொன்னால் நீ தனியாக விழா நடத்தி பாடிக் கொள் என்பதும். திருடன் நமது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு நமது வீட்டில் திருடிய தொலைக்காட்சியிலேயே படம் பார்ப்பதை நாம் அனுமதிப்போமா? தமிழ் நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழில் பாட மாட்டோ ம், தமிழ் இசைக் கருவிகளான பறை, தவில் வாத்தியங்களை அனுமதிக்க மாட்டோ ம் என்றூ
பகிரங்கமாக திமிரோடு பேசுவது சுயமரியாதை உள்ளவர்களுக்கு அவமரியாதை இல்லையா? இதனை எதிர்த்து போராடமல் தமிழிசை வளர்ப்போம் என்பது ஈனத்தனமில்லையா? உண்மையில் இந்த பண்பாட்டு அடக்குமுறையை, மோசடியை எதிர்த்து போராடுவதின் ஊடாகத்தான் தமிழிசையை வளர்க்க முடியும். இது வெறும் இசையின் பெருமையையோ அல்லது வரலாறையோ மீட்டெடுக்கும் முகமாக மட்டுமல்ல, மாறாக மறுகாலனியாதிக்க சூழலில் மயங்கி அடிமை மனோபாவத்தில் சுனங்கிப்
போயிருக்கும் உழைக்கும் மக்களின் முகத்தில் அறைந்து சுயவுணர்வடையச் செய்யவும் தேவைப்படுகீறது.




தமிழிசைக்கு தனி விழா ஏன்?

தியாகய்யர் உற்சவத்தை தமிழில் பாடவைப்பதுதான் நோக்கமெனில் தனியாக தமிழ் மக்கள் இசை விழா கொண்டாடுவதில் என்ன நோக்கம் இருக்க முடியும்? தியாகய்யர் விழாவில் தமிழிசை பாடச் சொல்லுவது கர்நாடக சங்கீத புனிதத்தின் உண்மை முகத்தை கிழித்து காட்டுவதற்க்கத்தான், ஒரு பண்பாட்டு திருட்டை அம்பலப்படுத்தத்தான், தமிழகத்தின் சுயமரியாதையை காக்கத்தான். மாறாக தமிழிசையின் வளர்ச்சி என்பதும் அதன் நடைமுறைப் பயன்பாடு என்பதும் தியாகய்யர் விழா மேடையைத் தாண்டிய ஒன்று. அது வெகு சன உழைக்கும் மக்கள் என்ற மிகப் பெரிய மேடையின் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் வல்லமை பெற்றது. இந்த வல்லமை தமிழிசையின் என்றும் அழியா அதன் நாட்டார் இசையியல் விழுமியங்களில் பொதிந்துள்ளது. அதனாலேயே தனியாக தமிழிசைக்கான ஒரு விழா தேவைப்படுகிறது.

பார்ப்பனியம் என்பது இந்திய தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கும் இந்து தேசியம் எனும் தேசிய இனங்களின் சிறைக் கூடத்திற்க்கு தத்துவ பலமளிப்பதாக உள்ளது. இந்த இந்து தேசியத்தை வலுப்படுத்தும் தார்மீக கருத்துக்களூக்கு ஆதர பலமாகத்தான் இந்தியா முழுமைக்கும் ஒற்றை பார்ப்ப்னிய பண்பாட்டு அடையாளங்களை கட்டிக் காக்கும் வேலையை எல்லா பார்ப்ப்னிய வெறீயர்களும் செய்து வருகிறார்கள். இப்படி இந்தியாவின் தேசிய இனங்களனைத்தையும் வலுக்கட்டாயமாக இறூக்கி கட்டி வைப்பதன் மூலம்தான் ஏகாதிபத்தியத்திற்கு இஸ்டம் போல சுரண்ட ஏதுவாக வசதி செய்து கொடுக்கிறது. பார்ப்ப்னியமும், ஏகாதிபத்தியம் இணையும் புள்ளி ஜனநாயக மறுப்பு எனும் இந்த அம்சம் எனில். அவர்கள் தத்துவ ரீதியாக இணையும் வர்ணாஸ்ரம புள்ளி ஒன்று உள்ளது அதனை பின்னொரு கட்டுரையில் விளக்குகிறேன்.

இது உழைக்கும் மக்கள் தங்களைப் பற்றி தங்களது பண்பாடு பற்றி தாழ்வு மனப்பான்மை கொள்வதை உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் உழைக்கும் மக்களை கருத்தியல் ரீதியில் தொடர்ந்து அடிமை நிலையில் வைத்திருக்க உதவுகிறது. அனைவரும் அர்ச்சகராவது குறித்து புதிய காலாச்சாரம் பத்திரிகை கருத்துக் கணீப்பு நடத்திய பொழுது, சாதி வேறுபாடின்றி, ஆதிக்க சாதி முதல் தாழ்த்தப்பட்டவர்கள் வரை அனைவரும் பார்ப்பனர்களே புனிதமானவர்கள் பிற சாதியினர் கருவறைக்குள் போவது புனிதமல்ல என்றும் கூறினர். தனது பிறப்பையே கேவலாமாக எண்ணும் கருத்து எப்படி வலுப்பெற்றது? இதே எண்ண அடிப்படையில்தானே பார்ப்ப்னிய பண்பாட்டு அடையாளங்களே சிறந்தது எனும் கருத்தும் வெளீப்படுத்துகிறது. உலகில் மூளையில் சிறந்தவர்கள் இரு இனங்களாம் ஒன்று யூதர்கள் இன்னொன்றூ பார்ப்பனர்கள். இந்த கூற்றை கேள்விப்பாடதவர் இருக்க முடியுமா?

இந்திய மக்களின் பொருளாதார/கலாச்சார விடுதலை என்பது பார்ப்பினியத்தின் வர்க்க அடிப்படையை உணர்ந்து அதனை எதிர்க்கும் போராட்டத்தின் ஊடாக மட்டும்தான் சாத்தியமாகும். இந்தியாவைச் சுரண்டும் ஏகாதிபத்தியத்திற்க்கு உள்ளூரில் களம் தயாரித்துக் கொடுக்கும் பார்ப்ப்னியத்தின் வர்க்க அடிப்படை புரிந்தால் மட்டுமே அதனை எதிர்த்து உழைக்கும் மக்களின்/ஒடுக்கப்பட்டவர்களின் மரபுகளை வளர்த்தெடுப்பதற்க்கான வழி புலப்படும். பார்ப்ப்னியம் குறித்த இந்த பார்வை இல்லாதால்தான் முந்தைய தமிழிசை இயக்கங்கள் அனைத்தும் கர்நாடக சங்கீதத்திற்க்குள் செரிமானமாகி விட்டன. நாட்டுக் கோட்டை செட்டியார்கள் எனும் தமிழகத்து முதலாளீகள் ஆதரித்த தமிழிசைச் சங்கம் அந்த முதலாளிகள் தரகு முதலாளிகளாக வளர்ந்த பிற்ப்பாடு வர்க்க இயல்புகேற்ப்ப கர்நாடக சங்கீதத்துடன ஐக்கியமாகி விட்டது. பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழிசை மன்றம் தொடக்கத்தில் தியாகய்யர் விழாவிற்கு போட்டியாக நடந்து பிறகு மெல்ல மெல்ல தியாகய்யர் விழாக்குழுவோடு சங்கமமாகி விட்டது.

கர்நாடக இசை எனும் பார்ப்பினிய ஒடுக்குமுறை கலையின் உள்ளடக்கம் மூட நம்பிக்கை, கடவுள் பக்தி, அடிமை மனோபாவம், பார்ப்பினிய பண்பாடு என்பதாக உள்ளது. மாறாக விடுதலை விரும்பும் மக்களுக்கு அறிவியல் பூர்வமான, சிந்தனை, பகுத்தறிவு ஆகியவற்றை வளர்க்கும் விதமான உள்ளடக்கதோடான கலையே இன்றைய தேவையாக இருக்கிறது. மக்களிசையாக தமிழிசை மாற வேண்டுமெனில் இந்த உள்ளடக்கத்தையே அது சுவீகரிக்க வேண்டும். மாறாக தெலுங்கில் உள்ளதை அப்படியே தமிழில்
பாடுவதால் ஒரு வித்தியாசம் வந்து விடப் போவதில்லை. தமிழிசை இயக்கத்தின் ஆரம்பத்தில் அதில் சேர்ந்த தந்தை பெரியார், பார்ப்ப்னிய உள்ளடக்கத்தை அப்படியே தமிழில் பாடத் துவங்கிய உடன் அதன் ஆபத்தை உணர்ந்து தமிழிசை இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டார். தியாகய்யர் விழாக்குழு தமிழ் மக்களிசைக்கு குழி வெட்டுகிறது எனில். தமிழிசைக்காரகள் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்.

கர்நாடக இசையின் வரலாற்று திருட்டை அம்பலப்படுத்துவது மட்டும் தமிழிசையை வளர்த்து விடாது மாறாக இன்றைய உழைக்கும் மக்களின் தேவைக்கேற்ப்ப அதன் உள்ளடகத்தை புத்துருவாக்கம் செய்வதன் மூலம் மட்டுமே, ஏகாதிபத்திய கழிசடை கலாச்சாரத்தை விற்பனை செய்யும் ஊடக வியாபாரிகளுக்கு மாற்றாக அதனை மக்கள் முன் நிறுத்தி தமிழிசையை நிகழ் கலையாக மாற்றும் பொழுது மட்டுமே அதனை வளர்த்தெடுக்க முடியும்.




பிப் 2007 - தமிழ் மக்கள் இசை விழா

எழுச்சியாக ஆரம்பித்த பேரணியுடன் பிப்ரவரி 24, சனிக்கிழமை தஞ்சாவூரில் தமிழ் மக்கள் இசை விழா ஆரம்பித்தது. திடலின் நுழைவாயிலின் இரு மருங்கிலும் முற்போக்கு புத்தக நிறுவனங்கள் கடைகள் போட்டிருந்தனர். இந்த முறை விழாவின் உள்ளடக்கமாக காலனியாதிக்க இந்தியாவின் உண்மையான விடுதலை போராட்ட மரபுகளை முன்னிறுத்தும் வகையில் கருத்தரங்க தலைப்புகளும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தன.

பெரும்பாலான உழைக்கும் மக்களின் வாழ்க்கை மிகப் பெரிய கேள்விக் குறியாக்கியுள்ள உலகமயத்தின் பயன்களை நுகர்வோரின் அடிமை நிலையை/சுயமரியாதையின்மையை குத்திக்காட்டுவதாகவும், விடுதலைப் போரின் வீரமரபுகளான தென்னகத்தின் முதல் சுதந்திரப் போரையும், திப்புவையும், பகத்சிங்கையும் அவர்களின் உண்மையான வடிவத்தில் அறீமுகப்படுத்தும் விதமாகவும், காலனிய விடுதலைப் போராட்டத்தின் வீரத்திலிருந்தும், தியாகத்திலிருந்தும், துரோகத்தில்ருந்தும் - நாட்டு விடுதலையை விரும்பும் நாம் பாடங்கள் கற்றுக் கொண்டு அந்த மரபுகளை மறுகாலனியாதிக்கத்திற்க்கு எதிரான உரமாக இடவேண்டிய தேவையை வலியுறுத்தும் விதமாகவும் தலைப்புகளும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தன. விடுதலை வீரர்களையும் அவர்களின் மரபுகளையும் நினைவுபடுத்து/அறிமுகப்படுத்தும் முகமாக பேரா. இராசைய்யன், தலக்காடு சிக்கே ரங்க கவுடா, பேரா சமன்லால் ஆகியொருக்கான கருத்தரங்க தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன, இந்த மரபுகளை அறிந்து கொண்ட உழைக்கும் வர்க்கம் இதனை பயன்படுத்த தடையாக இருக்கும் மறுகாலனியாதிக்க பண்பாட்டு சீரழிவுகளான அடிமைத்தனத்தையும், பிழைப்புவாதத்தையும், கழிசடைத்தனத்தையும் குத்தி கொதறி ஒவ்வொருவரையும் குற்றவுணர் கொள்ள செய்யும் விதமாக தோழர் துரை. சண்முகத்திற்க்கும், மருதையனுக்கும் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நிகழ் கலையாக உழைக்கும் மக்களிடம் புழங்கி வரும் பல்வேறு நாட்டார் கலை வடிவங்களுக்கு புரட்சிகர உள்ளடக்கம் கொடுக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை ஏற்ப்பாடு செய்திருந்தனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து குடும்பத்துடன் திரண்டு வந்திருந்த உழைக்கும் மக்களால் திருவள்ளுவர் திடல் நிரம்பியிருந்தது. செஞ்சட்டை தோழர்கள் ராணுவ அணிவகுப்பில் விழா நடைபெற்ற திடலில் ஒழுங்கை பராமரித்தனர். போலீசாரோ மகஇகவின் விழாக்கள் குறித்த அனுபவம் உண்டு என்பதால் கவலையின்றி நாற்காலிகளில் அமர்ந்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தனர். பதினைந்தாயிரத்துக்கும் மேல் திரண்டிருந்த கூட்டத்தில் செஞ்சட்டை தோழர்கள் ஒவ்வொரு வரிசையிலும் தூங்குபவர்களை எழுப்பிவிட்டும், செல்பேசிகளை உபயோகிப்பதை கட்டுப்படுத்தியும், பேசுபவர்களை கண்டித்தும் ஒழுங்கை நிலைநாட்டிய பாங்கும், அதில் இருந்த நியாயத்தை உணர்ந்து கட்டுப்படுடன் நடந்து கொண்ட மக்களும் பெருவாரியான மாற்று அரசியல் கருத்துக் கொண்டவர்களுக்கு முற்றிலும் ஆச்சரியகரமான விசயமாக இருந்திருக்கும். மக்கள் சர்வாதிகாரம் குறித்தும், புரட்சிகர ஜனநாயகம் குறித்தும் சேறு வாரி வீசுபவர்கள் இது போன்ற அரங்குகளில் அது நிலைநாட்டப்படும் அழகை கண்ணுற்றால் தங்களது பிற்போக்கு மயக்கத்திலிருந்து தெளிவுபெறும் அபாயம் உள்ளதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

திடலின் உள்ளே மக்கள் உட்காரும் இடத்திற்க்கு ஒரு பக்கத்தில் மிக அருமையாக விடுதலைப் போராட்ட காட்சிகள் ஓவியங்களாக வடிக்கப்பட்டிருந்தன, சீறிப்பாயும் குதிரைகளும், புகை கக்கும் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் மிக அருமையாக சித்த்ரிக்கப் பட்டிருந்தன. இன்னொரு பக்கம் சின்ன மருதுவும், தீரன் சின்னமலை, திப்பு, கட்டபொம்மன் போன்றோர் நம்மையே முறைத்துப் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். என்னடா எங்களது தியாகத்தை விழா வைத்து நியாபகப்படுத்தும் இழி நிலையிலா இந்த நாடு உள்ளது? கேவலம், எமது மரபுகளை பற்றி விடுதலை வேண்டி காத்திருக்கும் நாட்டிற்க்காக அணி திரள்வாய் என்பது போல அந்த பார்வை நம்மை நாலா பக்கமிருந்தும் உறுத்தியது. அதே பக்கத்தில் புகைப்படக் கண்காட்சியில் கோக் ஆலை எதிர்ப்பு போராட்ட சமயத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த. மனதிலிருந்து மறந்து போன பல சம்பவங்களை திரும்ப கொணரும் வகையில் அந்த ஓவியங்கள் சிந்திக்க தூண்டுவதாக இருந்தது. நவீன ஓவியம் என்ற பெயரில் கண்ட கிறுக்கல்களையும் கடைபரப்பும் கலை இலக்கிய வியாபாரிகள் மத்தியில் புரட்சிகர கலை இலக்கியத்தின் வலிமைக்கு சான்று பகர்வதாக இந்த ஓவியக் கண்காட்சி இருந்தது.

இனி தோழர் கோபால் என்பவரின் வார்த்தைகளிலேயே தமிழ் மக்கள் இசை விழா கருத்தரங்கு குறித்த வர்ணனைகளை தருகிறேன்,

*****************
தென்னிந்தியக்கிளர்ச்சி 1800-01, முதல் சுதந்திரப்போர்'- என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசுவதாயிருந்த பேரா. இராசைய்யன், என்ன நினைத்தாரோ, தனக்கு அவ்வளவாய் வராத தமிழிலேயே பேசினார். விடுதலைக்கு போராடிய வீரர்கள் பற்றிய நிறைய வரலாற்றுச்செய்திகளை அடுக்கினார். முதல் விடுதலைபோர் தென்னகத்தில் தான் நடந்ததென்று அறிவிக்கக்கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். விட்டால் திப்புவையே கூட்டி வந்திருப்பார், சாட்சி சொல்ல. பேராசிரியர் என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தார். புள்ளிவிவரங்கள் எதுவும் இப்போது நினைவில் இல்லை.

தலகாடு சிக்கே ரங்க கௌடா, திப்பு பற்றி நாம் அறிந்திராத நிறைய தகவல்களை கன்னடத்தில் சொன்னார். மொழிபெயர்ந்த சொற்கள் வீரியத்தை கொஞ்சம் தொலைத்திருந்தாலும், மறைக்கப்பட்ட பல தகவல்கள் கிடைத்தது. அந்த காலத்திலேயே நியாயமான நிலப்பங்கீடுகளைச் செய்திருக்கிறார், . தலித்களுக்கும் நில உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அரண்மனைகளில் ஆடல் பாடல் கூத்துகளை அறவே வெறுத்து 'சந்திரனே சூரியனே' எனப்பாடி பைசா பார்க்க நினைத்த பார்ப்பனர்களை நைசாகத் துரத்தியடித்திருக்கிறார். அப்பவே புரளி புலம்ப ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள். திப்பு ஆட்சியில் அரசு விழாக்கள் சிக்கனமாய் நடந்திருக்கின்றன. தவறுகள் செய்த விவசாயிகளுக்கு சிறைத்தண்டனை கிடையாது, மாறாக மரக்கன்றுகளை நடச்சொல்லி பணித்திருக்கிறார். ஆச்சரியமாயிருந்தது.

ப்ரான்சிலிருந்து நீராவி எந்திரம் வாங்கமுயன்றது, உயிரித்தொழில்நுட்பத்தை ஊக்குவித்து, உளவுச்செய்திகளை விரைவாக கொண்டு வரும் திறமையான புறாக்களை உருவாக்கியது. சிவப்புச்சீருடையணிந்த வெள்ளையனின் படையாட்களை காளைப்படைகொண்டு காவு வாங்கியது, பட்டுபுழு வளர்க்கும் தொழிலை அறிமுகப்படுத்தியது என இன்னும் பல சாதனைகளை அடுக்கிகொண்டே போனார் ரங்க கௌடா. திப்பு, தொழில்புரட்சித்தருவை தண்ணீர் விட்டு வளர்த்திருக்கிறார். அதில்தான் அந்த வீணாய்ப்போன வெள்ளையனும் பாழாய்ப்போன பார்ப்பனியனும் வானத்தை வெறித்துக்கொண்டு சிறுநீர் கழித்திருக்கிறார்கள். திப்பு சரிந்ததும் முதல் வேலையாய் அவரது நூலகத்தைச் சூரையாடி தொழில்நுட்பக்குறிப்புகளைக் களவாடியிருக்கிறார்கள், வெள்ளையர்கள்.

தோழர். துரை சண்முகம் நையாண்டியாக சமூகசீர்கேடுகளை இடித்துரைத்தார். கெர்லாஞ்சியில் ஒரு இளம்பெண்ணும் அவளது தாயும் நிர்வாணப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்களே, அப்போது வாய்மூடிய வாசகன் ஒருவன், 'முற்றும் துறந்த முதிர்கன்னி' ஷில்பா ஷெட்டி அவமானப்படுத்தப்பட்டார் என்று வருத்தப்பட்டு பத்திரிகைக்கு கடிதம் எழுதுகிறானே, அவன் கையை உடைத்தால் என்ன?- கொதித்துப் போய் பேசினார். சம்பந்தப்பட்டவர்கள் சிக்கியிருந்தால் புத்தூருக்கு பயணமாயிருப்பார்கள்.

கெர்லாஞ்சி போன்ற சம்பவங்களை பத்திரிக்கைகள் இருட்டடிப்பு செய்கின்றன. அவனுக்கு முக்கியமான செய்தியாகப்படுவது ' இந்த வயதிலும் ரஜினி சுறுசுறுப்பாக இருக்கிறார்'. யாருக்குய்யா வேணும் இது? வெள்ளையனுக்கு எதிரான போரை சைகைகள் மூலமாகவே நடாத்திய ஊமைத்துரையின் சுறுசுறுப்பை நீ என்னவென்பாய்?? ஆறே நாளில் கோட்டையை எழுப்பிய பாஞ்சாலங்குறிச்சி மைந்தர்களின் சுறுசுறுப்பை நீ எப்படி மறந்தாய். கைத்தட்டல் கூரையைக் கிழித்தது.

'கேப்டன்' விஜயகாந்த் என்று சில கேனையன்கள் கூவித்திரிகிறான்கள். உரச்சாக்கு போல் இருக்கிறான், கேப்டனாம். வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராக மக்களிடம் நிதி திரட்டி சுதேசி கப்பல் விட்டானே வ. உ. சி, அவந்தானையா உண்மையான கேப்டன். தென்னாப்பிரிக்க இந்தியன் ஒருவன் வ.உ.சி. யிடம் சேர்ப்பிக்கச் சொல்லி காந்தியிடம் கொடுத்த 5000 ரூபாய் இன்று வரை கொடுக்கப்படவில்லை.இந்த துரோகிகள் தானேய்யா நமது நிஜ சுதந்திரத்தின் சங்கை அறுத்தவர்கள். பாலஸ்தீனத்தில் தமது நாட்டையும் உயிரையும் பறிக்கவரும் பீரங்கியை நோக்கி செருப்பைக்கழற்றி காட்டினானே அந்தப் பொடிச் சிறுவனின் வீரம் இந்த துரோகிகளிடம் இருந்ததா?

கோக்கையும் கோக்கை குடிக்கும் கோமாளிகளையும் ஒருபிடிபிடித்தார். இப்பத்தான் தெருமுக்கிலெல்லாம் இளநீர் கிடைக்கிறதே, வாங்கிப்பருகினால் உடம்புக்கும் நல்லதுதானே என்றுகேட்டால், கோக்கும் பெப்சியும் ஈசியாக கிடைக்கிறது என்கிறான். ஈசியாகக் கிடைத்தால் பினாயிலையும் குடிப்பாயா? காமாலைக்கு கறும்புசாறையும் இளநீரையும் தனேய்யா குடிக்கச் சொல்கிறார்கள். 200 மி.லி. கொக்ககோலாவையா குடிக்கச் சொல்கிறார்கள். நாம் அனைவருமே இளநீர் சாப்பிட ஆரம்பித்தால் எத்தனை விவசாயிகள் பிழைத்துக்கொள்வர்கள் என்று யோசித்தீர்களா??

தோழர் பேசிமுடிக்கையில் இடி ஓய்ந்தது போலிருந்தது. பேரா. சமன்லால் ஆங்கிலத்தில் 'பகத் சிங் மற்றும் அவர் தோழர்கள் பற்றிய ஆவணங்கள்' குறித்து பேசினார். மொழிபெயர்க்க அழைக்கப்பட்ட தோழர். அரசு சரியான தேர்வு.பகத்சிங் பற்றி அரசு பேசி நிறைய கேட்டிருந்ததால், சமன்லால் உரையின்போதுபோது கொஞ்ச நேரம் தஞ்சை கோவிலுக்கு இளைப்பாறச் சென்றுவிட்டேன். ராசராசன் கட்டிய தஞ்சையின் கொவிலையும் மாடமாளிகைகளையும் பார்த்தபோது துரை சண்முகம் பேசியதுதான் நினைவில் வந்தது. தஞ்சை பெரியகோவில் பெருமைகள் கிடக்கட்டும், அந்த கோவில்கட்டும் பணியில் கோபுரத்தின் மீதிருந்து கீழே வீழ்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர்? தஞ்சையை சுற்றி இராசராசன் அவன் வைப்பாட்டிகளுக்கு கட்டிய மாளிகைகளும் சத்திரங்களும் அவமானச்சின்னங்கள் தானே?


தஞ்சை பூங்காவில் ஒய்வெடுத்துவிட்டு பந்தலுக்குத் திரும்பியபோது தோழர் மருதையன் பேச ஆரம்பித்திருந்தார். எப்போதும் போல எதிரிலிருப்போரின் தலையை நிமிர்த்தி 'உங்களைத்தான் கேட்கிறேன்' என்று கணை தொடுத்துக்கொண்டிருந்தார்.

ரிலையன்சு போன்ற உள்நாட்டு களவாணிகளுக்கும் ,வால்மார்ட் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கும் சில்லறை வணிகத்தின் கதவை திறந்துவிட்டிருக்கிறது அரசு. ரிலையன்சு கடையில் 'சீப்'பாகக் கிடைக்கிறதாம். முலாயம் சிங் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இலவசமாக கொடுத்தால் ஏன் அவன் 'சீப்'பாக கொடுக்கமாட்டான். என்ன ஒரு பத்து ரூபாய் குறைத்து கொடுத்து விடுவானா? நீங்கள் யோசிக்கவேண்டும்.

உங்கள் தெருமுனையில் உள்ள அண்ணாச்சிக் கடையில் கவனித்திருப்பீர்கள். அந்த கடையில் ஒரு குடும்பமே உழைத்துக்கொண்டிருக்கும். காலை நான்கு மணிக்கு சந்தைக்கு சரக்கெடுக்க செல்வதில் ஆரம்பிக்கிறது அவனது நாள். பகல் முழுதும் உழைத்துக் களைத்து அவர்கள் உறங்கச் செல்லும் போது இரவு பன்னிரெண்டாகிறது. இவ்வளவு உழைக்கிற அந்தக் குடும்பம் கோடிகோடியாக சேர்த்து விட்டதா என்ன?? யோசியுங்கள்.. அந்த அண்ணாசிக் கடையில் எத்தனை நாள் கடன் வைத்திருக்கிறீர்கள்? எத்தனை முறை 'புளி சரியில்லை' என்று சண்டை போட்டிருப்பீர்கள்? எத்தனை விசேஷங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பீர்கள்?? இன்று விலை மலிவாக கிடைக்கிறதென்று கோடிகளைச் சேர்த்துவைத்திருக்கிற அந்த கொள்ளையர்களுக்கு இன்னும் கொஞ்சம் கொட்டிக்கொடுக்கப் போகிறீர்களா? விலை அதிகமானாலும் எளியவனான நம்மவனையே ஆதரிக்க வேண்டுமென்ற எண்ணம் நமக்கு எழ வேண்டாமா?

ஐ.டி கம்பெனிகளின் படையெடுப்பு ஆரம்பித்திருக்கிறது. முப்பதாயிரம் நாப்பதாயிரம் என கொடுக்கிறானே நல்லதுதானே என்று கேட்பீர்கள். அங்கு வேலை செய்கிறவன் ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் உழைக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை முன்னேற்றம் என்று கூறுவீர்களா? ஒரு எந்திரத்தையும் அதனைப் பயன்படுத்துவதையும் கற்றிருத்தல் உண்மையான அறிவியல் முன்னேற்றமில்லை. அடிப்படை அறிவியலைக் கற்று அதில் ஏற்படுத்துகிற முன்னேற்றம் தானே உண்மையான முன்னேற்றம்! சீனாவும் வங்காளதேசமும் இந்த ஐ.டி போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டை விட்டுப் பிரிந்து வந்து வேலை செய்வோருக்காக அவரவர் ஊரிலேயே ஐ.டி. கம்பெனிகளை ஆரம்பிக்கப் போகிறார்களாம். எதற்கு?? இன்று சம்பளமாய் கொடுத்துக்கொண்டிருக்கிற நாப்பதாயிரத்தை நாலாயிரமாகக் குறைக்கத்தான்.

பேரா. சமன்லால் பேசும்போது விடுதலை வீரர்களின் வீர மரபைப் பற்றிய கூட்டத்திற்க்கு இவ்வளவு கூட்டம் கூடியிருப்பது பெருமையாக இருக்கிறதென்று சொன்னார். உண்மையில் பெருமைப் படுகிறோமா நாம்? அந்த வீரர்களின் பெருமைகளைப் பேசித்தான் தெரியப்படுத்தவேண்டும் என்கிற அவலநிலையில் அல்லவா நாம் இருக்கிறோம். உண்மையான சுதந்திரத்திற்காக போரிட்டு மாய்ந்தவர்களின் குடும்பத்தினரின் இன்றைய நிலை என்ன? அவர்கள் கட்டிய கோட்டைகள் தரைமட்டமாக்கப்பட்டு அலங்கோலமாய் காட்சியளிக்க தொண்டைமானின் மாளிகையும் எட்டப்பனின் அரண்மனையும் இன்றும் கம்பீரமாய் இருப்பதன் காரணம் தெரிகிறதா??

இன்றும் தஞ்சை கோவிலில் சரபோஜியின் வாரிசுகள் தான் பரம்பரை தர்மகர்த்தாக்கள். குடியரசு தினங்களில் ஆர்காட் நவாபின் வாரிசுகள் மேடையேறுகிறார்கள், சிறப்பு விருந்தினர்களாய். நம் சுதந்திரத்தை கருவறுத்த கயவர்களான தொண்டைமான்களும், எட்டப்பன்களும், சிந்தியாக்களும், பேஷ்வாக்களும், நவாப்களும் இன்று ஆட்சிஅதிகாரத்துடன் சுற்றித்திரிகிறார்களே, தெரியவில்லையா உங்களுக்கு எப்படிபட்ட விடுதலையை நாம் பெற்றிருக்கிறோம் என்று?

'மகாபிரபுவே, நான் நெடுநாளாய் பார்த்துவந்ததில் ப்ரெஞ்சுக்காரர்களோ திப்புவோ உங்களை எதிர்த்து வெற்றிபெறமுடியவில்லை. ஆனால் கம்பெனியை நம்பி வாழ்ந்தோர் பேரும் புகழும் பெற்றிருக்கின்றனர். இந்தக் காட்டு நாய் சின்ன மருது எதற்க்காக போராடுகிறான் என்றே தெரியவில்லை.' - என்று தனது கும்பினி எசமானுக்கு எழுதுகிறான் தொன்டைமான். அவனுக்கு நிஜமாகவே புரியவில்லை. வெள்ளையன் ஆண்டால் என்ன, மாளிகையும் மனைவிகளும் பத்திரமாய் இருக்கின்றனரே என்ற பிழைப்புவாதத்தில் ஊறிப்போயிருக்கிறது அவன் இரத்தம்.


தொண்டைமானுக்கு நிஜமாகவே புரியவில்லை. நமக்குப் புரிந்திருக்கிறதா? பன்னாட்டு நிறுவனங்களை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு இருநூறு மி.லி. தொண்டைமான் இரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. நமது விவசாய நிலங்களை ஆக்கிரமித்தால் என்ன, வேலை கொடுக்கிறானே, ஆயிரமாயிரமாய் சம்பளம் கொடுக்கிறானே என்று சாதிப்பீர்களானால் உங்கள் இரத்தத்தில் முன்னூறு மி.லி. எட்டப்பனுடையதாக இருக்கிறது.

திருச்சிப் பிரகடனத்தில் சின்ன மருது சரியாகக் கூறுகிறான் - இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

தோழர் மருதையன் தன் உரையை முடித்ததற்கும் கலைநிகழ்ச்சிகள் தொடங்குவதற்குமிடையேயான அரைமணிநேர இடைவெளி சுயபரிசோதனைக்காகவே விடப்பட்டிருக்கவேண்டும். திருவள்ளுவர் திடல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

'ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்... இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது... இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!.... '-என்ற மருதுவின் திருச்சிப் பிரகடனம், திருவள்ளுவர் திடல் பிரகடனமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது.-

*****************

நாகரீக கோமாளி திரைப்பட இயக்குனரின் உரைக்கு பிறகு வாத்தியங்களின் பிளிரலுடன் ஆரம்பித்தது கலை நிகழ்ச்சிகள். முதல் நிகழ்ச்சியாக வீர சோழ தப்பாட்ட குழுவினரின் சூறாவளி கிளப்பும் தப்பாட்டம் அரை மணி நேரத்திற்க்கு கூட்ட அரங்கை கட்டி போட்டு விட்டது. தப்பாட்டம் முடிந்த பொழுது இடி மின்னலுடன் கூடிய ஒரு கோடை மழையின் அனுபவத்தை உணர முடிந்தது. வசந்தத்தின் இடி முழக்கம் இப்படித்தான் இருக்குமோ என்று எதிரிகளுக்கு கிலியூட்டும் வகையில் கலை நிகழ்ச்சியின் ஆரம்பம் இருந்தது. திப்புவின் புகழ் பாடும் சுபி இசை மரபிலான ஒரு இசைப்பாடல் பாடப்பெற்றது. திப்புவின் வீரத்தை கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்த கார்வாலி சிப்பாய்களின் இசை கார்வாலி இசையாக இசைக்கப்பட்டது. இஸ்லாமிய மரபுடன் இசைக்கப்பட்ட அந்த இசை காதுகளில் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. முற்றிலும் புதுமையானதொரு அனுபவமாக அந்த இசை இருந்தது. பல்வேறு அளவுகளிலான தோல் வாத்தியக் கருவிகளுடன் பக்கீர்கள் எனப்படுபவர்கள் டம் டம் என்று தட்டிக் கொண்டு திப்புவின் புகழை புரியாத மொழியில் பாடினர். ஆயினும் அன்றைக்கு அவர்களிடம் இருந்த இசை மரபை விடுதலை போரின் வேள்விக்கு பயன்படுத்தினர் என்று பார்க்குமிடத்து மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. இதே கைகள் மக்களுக்கு புரிந்த மொழியில் பாடல் இசைத்து நாட்டு விடுதலைக்கு போராடும் என நம்பிக்கை தெரிவித்து பாராட்டினார் மகஇக மைய கலைக்குழு பாடகர் கோவன். இடையில் நடத்தபெற்ற நாடகம் தொய்வை ஏற்ப்படுத்தும் வகையில் இருந்தது ஆயினும் இது ஒட்டு மொத்த நிகழ்ச்சி ஏற்ப்படுத்திய தாக்கத்துடன் ஒப்பிடும் பொழுது கடலில் கரைத்த பெருங்காயமாகவே இருந்தது.

பிறகு, மருதிருவரின் புகழ் பாடும் மருதிருவர் கும்மி இசைக்கப்பட்டது.
"காளையார் கோயிலு காட்டுக்குள்ளே
ரெண்டு கன்னி கழியாத மாமரங்க
அது பூக்கவுமில்லே காய்க்கவுமில்லே
மருதிருவர் இன்னும் சாகவில்ல..."

என்ன மெட்டில் பாடுவது என்று தெரியவில்லையா? இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்' என்ற பாடலை பாடாத வாய் இன்றளவும் தமிழகத்தில் கிடையாது. அந்த மெட்டு கும்மி பாடலிலிருந்து எடுத்தாளப்பட்டு ஹார்மொனி வடிவம் கொடுக்கப்பட்டதுதான். பிறகு அனைவரும் எதிர்பார்த்த மகஇகவின் மையக் கலைக்குழுவின் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. சமீப காலமாகவே ஹார்மொனி இசை வடிவங்களை முயற்சி செய்து வரும் இவர்கள் அதில் மிக அருமையானதொரு மேடை நிகழ்ச்சியை இந்த முறை நிகழ்த்தி காட்டின. ஆண் குரல் முடியும் தருவாயில் பெண்ணின் ஹம்மிங்குடன் புல்லாங்குழல் இணைந்து மிக அற்புதமான ஒரு இசை அனுபவத்தை வழங்கினார்கள். பாடல்களுக்கேற்ற மேடை நடனம் அல்லது அடவுகள் நவீன நாடக உத்திகளை புரட்சிகர கலை வடிவங்களுடன் இணைத்து வழங்கும் நல்ல முயற்சியாக இருந்தது. உழைக்கும் மக்களின் ஆக்ரோசத்தையும் வெஞ்சினத்தையும் வார்த்தைகளிலும், வாத்தியக் கருவிகளிலும், நடனத்திலும் வெளிப்படுத்தியது மகஇகவின் நிகழ்ச்சிகள். சிறுவர்களின் பாடல்கள் மிகச் சிறப்பாக இருந்தது, சிறார்களின் தடுமாறும் மழலையில் புரட்சிகர பாடல்களை கேட்ப்பது ஒரு நல்ல அனுபவமாக, கொண்ட கொள்கைக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும் ஏனேனில் நம்மை அடியொற்றி ஒரு சிறு தலமுறை உருவாகி வருகிறது அவற்றின் நம்பிக்கைகளை வெம்ப வைப்பதாக நமது நடவடிக்கைகள் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை உணர்வை வூட்டுவதாக இருந்தது.

தூக்கு மரம் - இசைச் சித்திரம் என்ற மேடை நிகழ்ச்சி வடிவத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் நமக்கு விட்டுச் சென்று செய்தி வசனங்களின்றி - இசை மற்றும் மேடைச் சித்திரம் வடிவத்தில் வழங்கப்பட்டது. முற்றிலும் புதியதொரு முயற்சியாக பார்ப்பவரை முழுவதும் கட்டியிழுக்கும் ஆற்றலுடன் இந்த நிகழ்ச்சி நடந்தேறியது. தமிழ் மக்கள் இசை விழாவிற்க்கு மகுடம் சூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி இருந்தது. ஒரு சாதாரண வீரனாக போர்களத்தில் உயிர் துறந்த திப்புவை இரவு நேரத்தில் வெள்ளையர்கள் தேடி கண்டு பிடித்து மடியில் சாய்த்து உறுதிப்படுத்தும் ஒரு ஓவியம் அன்றைய பிரிட்டிஸ்க்காரர்களால் வரையப்பட்டது. அதை கண்ணுறும் யாரும் மனங்கலங்கிப் போகும் ஆற்றல் படைத்த அந்த ஓவியத்தை ஒரு திரைச் சித்திரத்தின் வலிமையுடன் மேடையில் அரங்கேற்றினர் மகஇக குழுவினர்(இந்த நிகழ்ச்சி ஆக்கத்தில் பங்களித்தவர்கள் - மையம் கலைக்குழுவினர்). திப்புவை தேடி வரும் வெள்ளையர் மேடையில் நுழையும் பொழுது அதிரும் இசை நமது மனதில் இனம் புரியாத உணர்வுகளை ஏற்ப்படுத்தியது, கையில் தீப்பந்தத்துடன் சிகப்பு நிற ஒளி பின்னணியில் அவர்கள் குவிந்து கிடக்கும் பிணங்களை பிரட்டிப் போட்டு திப்புவை தேடி கண்ணுறும் பொழுது திப்புவின் மீது ஒளி வெள்ளம் பாய்கிறது. தீப்பந்தம் பிடித்திருக்கும் ஒரு வெள்ளையனின் மடியில் தலை சாய்ந்து கிடக்கிறார் திப்பு. அந்த ஓவியம் கண்முன்னே உயிர் பெற்று நிற்க்கிறது. அல்லா... என்று ஒரு குரல் துயரச் சுவையுடன் ஒலிக்கிறது, மனது பாரமாகிறது. என்ன கைமாறு செய்யப் போகிறோம் இந்த மன்னர் குலம் சாரா புரட்சிக்காரர்களின் தியாகத்துக்கு என்ற கேள்வி மனது முழுவதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. இதே போல வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களின் வீர தியாகம் உணர்வு பொங்க இதே போல சித்தரிக்கப்பட்டது. மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கிய பிற்ப்பாடு அந்த ஒற்றை தூக்கு ஊசலாடுகிறது. மேடையின் பின்னணி இருட்டாக நம்மை பயமுறுத்துகிறது. தூக்கு கயிறின் வட்ட வடிவின் மீது ஒளி வெள்ளம் பாய்கிறது. ஒரு பெண்ணின் குரல் சோகம் ததும்ப பாடுகிறது. "காளையார் கோயில் காட்டுகுள்ளே ரெண்டு கன்னி கழியாத மாமரங்க....." தட்டச்சு செய்ய வார்த்தைகளின்றி தடுமாறுகின்றன எனது விரல்கள். கணிணி திரையின் மேல் எனது கண்ணீர் திரையாக படர்கிறது. இது கண்ணீர் விடுவதற்க்கான காவியம் அல்ல என்று என் உள்மனம் என்னை எச்சரிக்கிறது. பகத்சிங்கின் தத்துவ தரிசனமும், கோர்ட் மேடையையே தனது பிரசங்கமாக பயன்படுத்திய அந்த வீரமும் தூக்கு மேடையை ஒரு துச்சமாக கருதிய தியாகமும் காவியமாக எந்தளவுக்கு வீச்சாக மேடையில் நிகழ்த்தப்பட்டதென்றால், பகத்சிங் முழங்கிய இன்குலாப் சிந்தாபாத் என்ற முழக்கத்தை பார்வையாளர்களிலிருந்த இளைஞர் கூட்டம் எதிரொலித்து முழங்கும் அளவு வீச்சான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்தது. மேடையில் குண்டூசி பொட்டால் கேட்க்கும் ஆழ்ந்த நிசப்தம். சிறிது நேரத்தில் சுதாரித்த கூட்டம் கரவொலிகளால் தனது பாராட்டுக்களை தெரிவித்தது. சீட்டு நுனிக்கு வந்தனர் என்று இதுவரை புத்தகங்களீல்தான் பாடித்திருக்கிறேன் அன்று என்னையும் உள்ளிட்டு பெரும்பாலோர் சீட்டு நுனியில் உட்கார்ந்திருந்ததை கண்ணுற்று உதடுகளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

இது தவிர்த்து ஜிம்ப்ளா மேளம், தமுறு மேளம், வில்லுப்பாட்டு, உடுக்கடிப் பாடல், தெருக்கூத்து என்று அந்த இரவே இருட்டை விரட்டிய இசை இரவாக மாறிப்போனது. மறுகாலனிய பண்பாட்டு படையெடுப்பில் மறக்கடிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் தன்மான உணர்ச்சிகளையும், நேர்மையையும் வலுப்படுத்தும் முகமாகவும், புதிய உத்வேகத்துடன் ஏகாதிபத்தியத்தையும், பார்ப்ப்னியத்தையும் எதிர்க்கும் ஆற்றலையும் மனதில் ஏற்றிக் கொள்ளவும். பிழைப்புவாதம், அடிமைத்தனம் போன்ற உணர்ச்சிகளையே வாழ்வின் வெற்றிகரமானவையாக முன்வைக்கும் ஊடகங்களை காறி உமிழும் நெஞ்சு நேர்மையையும் வழங்கும் முகமாகவும் இந்த விழா இருந்தது. நிகழ்ச்சி முடிவடைந்த போது நேரம் இரவு 2.30. திரும்பி வந்த போது முழக்கங்களும் கருத்துக்களும் எனது எண்ணங்களை களமாக்கி கொண்டிருந்தன. இந்த நாட்டின் விடுதலையை தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாக பகத்சிங் உணர்ந்திருந்தார் என்ற தோழர். மருதையனின் சொற்கள் என் மனதில் "நீ பொறுப்பானவன் தானா?" எனற கேள்வியாய் எதிரொலித்துக் கொண்டே இருந்த்து. அந்த கேள்வியை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்..

"நீங்கள் பொறுப்பானவர்தானா?"

அசுரன்

குறிப்பு:
இந்த கட்டுரை ம.க.இ.க வின் 'தமிழ் மக்கள் இசை விழா ஏன்?' என்ற வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. இது தவிர்த்து தமிழிசை குறீத்து சில பேட்டிகள் கட்டுரைகள், நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த வருட இசை விழா குறித்த வர்ணனைகள் இடையன என்ற அன்பரின் தளத்தில் பதிக்கப்பட்டிருந்தன. அந்தக் கட்டுரைகளிலிருந்தும் கடன் வாங்கி எழுதப்பட்டுள்ளது.


தொடர்புடைய சுட்டிகள்:

தமிழ் மக்கள் இசை விழா' வின் கேள்வி "நீங்கள் பொறுப்பானவர்களா?

தமிழ் மக்கள் இசை விழா - III

தமிழ் மக்கள் இசை விழா - II

இசைவிழா பிரசுரம்

நிகழ்ச்சி நிரல்

பிப்' 24 - சனிக்கிழமை, தஞ்சை, திருவள்ளுவர் திடல

Thursday, March 01, 2007

தமிழீழம், பெரியாரியம், சாதீயம், புரட்சி, போலீசு - கிலோ 8 ரூபாய்!

பின்வரும் கட்டுரை இரவல் என்பவரின் வலைத்தளத்திலிருந்து சுட்டது. அவரும் கூட ஷோபா சக்தியிடமிருந்து சுட்டுத்தான்(இரவல்) பிரசூரித்திருந்தார். அந்த நண்ப்ருக்கு நன்றிகள் பல.

இது திரைப்பட விமர்சனம் என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்க்கான கட்டுரையாக கருத இடமுள்ளது. ஆனால் அதன் ஊடாக இந்த கட்டுரை விமர்சனம் செய்யும் பேசு பொருட்கள் இந்த் வரலாற்று காலகட்டம் முழுமைக்கும் சாசுவதமான உண்மைகள் என்பதால இந்த கட்டுரையை இங்கு பிரசுரிக்கிறேன்.

ஒரே கட்டுரையில் பல்வேறு விசயங்களை விவாதித்துள்ளார் ஷோபா சக்தி. கொஞ்சம் பொறூமையாக படிக்கவும். மிக நல்ல விறுவிறுப்பான, கருத்துச் செறிவுமிக்க கட்டுரை. பல புதிய புரிதல்களுக்கும், புதிய விவாதங்களுக்கும் வித்திடும் என்று கருதுவதால் பிரசுரிக்கிறேன்.

அசுரன்
****************

திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுக்களுக்குப் பாலபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காகக் கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களுக்காக விரலை வெட்டுவது, அரைவேக்காட்டுத்தனமான மிகை உணர்ச்சித் திரைப்படங்களுக்கும் மலிவுத்தனமாக பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்கும் விடலைத்தனமான 'காதல்' படங்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் திரைப்பட ஆய்வாளர்களும் பாராட்டுக் கட்டுரைகள் எழுதுவது, உலக இலக்கியத்தைச் சவால் செய்வதாய்ச் சொல்லிக் கொள்ளும் இலக்கிய எழுத்தாளன் பேய் பிசாசு நம்பிக்கைகளையும் சாதி பெருமிதங்களையும் தூக்கி நிறுத்தும், துப்பட்டாக்களைக் கண்காணிக்கும் சமூக விரோதத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப்படப் புகழ் நட்கத்திரங்களைத் தேர்ந்த சமூக சிந்தனையாளர்களாக உருவகித்து ஊடகங்கள் நேர்காணல் செய்வது, உணர்ச்சிப் பாவலர்கள் ஆணிய வக்கிரத்துடன் ஆபாசமாகத் திரைப்படப் பாடல்கள் புனைவது, சினிமா கவர்ச்சி என்ற ஒற்றை ஆயுதத்தின் துணையுடன் மட்டுமே திரைப்படத் துறையினர் அரசியல் பண்பாட்டு தளங்களின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய சக்திகளில் ஒன்றாக மாறிவிடுவது போன்ற அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ முடியும் என அடிக்கடி எமது தமிழகத் தோழர்கள் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு. தோழர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு செய்தி என்னிடம் உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையேயும் இந்த அட்டூழியங்களில் சிலவாவது நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன.

பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பாரிஸ் நகரத்தில் ஈழத் தமிழர்கள் நடமாடும் கடை வீதிகளில் எல்லாம் இயக்குனர் சீமானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட 'தம்பி' திரைப்படத்துக்கான விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. நடிகர் மாதவனின் விதம் விதமான தோற்ற நிலைகளின் கீழே 'அச்சந் தவிர், ரெளத்திரம் பழகு' என்ற புதிய ஆத்திசூடியின் வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. அச் சுவரொட்டிகளில் இப்படியாகவும் ஒரு வரி இருந்தது "முக்கிய குறிப்பு - இத் திரைப்படம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியது" . அதே நேரத்தில் அய்ரோப்பியத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தம்பி திரைப்பட முன்னோட்டம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. முன்னோட்டத்தில் முத்தாய்ப்பாய் சே குவேரா, மாவோ இருவரதும் புகழ்பெற்ற இரண்டு கூற்றுக்கள் திரையில் எழுத்துக்களாய் மின்னின. தம்பி திரைப்படம் வெளியானதும் புலம்பெயர் வாரப் பத்திரிகைகள் தம்பி படத்தைக் கொண்டாடின. மின் இலத்திரனியல் ஊடகங்களில் தம்பி திரைப்படமும் இயக்குனர் சீமானும் சே குவேரா பனியனும் முக்கிய பேசு பொருட்களாயின. மார்க்ஸின் மாணவன் பெரியாரின் பேரன் தம்பியின் தம்பி என்று என்று கிறுக்குத்தனமாகச் சீமான் பெரிய சாமானாக வர்ணிக்கப்பட்டார்.

இந்த அமளிதுமளிக்குள் சீமான் அவுஸ்ரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு 20.10.2005 அன்று வழங்கியிழுந்த நேர்காணலை இணையத்தளம் ஊடாகச் சற்றே தாமதமாகக் கேட்க நேர்ந்தது. அந் நேர்காணலில் சீமான் இவ்வாறு கூறினார்: "சிங்கள அரசு முழுப் பலத்துடன்தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போது அதை ஒரு அரசின் இறையாண்மையாக உலகம் பார்க்கிறது, ஆனால் நாங்கள் கையில் ஆயுதத்தை எடுக்கும் போது அதை வன்முறையாகத் தீவிரவாதமாக உலகம் சொல்கிறது. அப்படிச் சொல்லக் கூடாது என்பதையே உள்ளர்த்தமாகக் கொண்டு தம்பி திரைப்படத்தை எடுத்து வருகிறேன்" இவை எல்லாற்றினதும் உச்சமாகத் தம்பி வெளியானதும் சீமான் ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் "தம்பியின் வெற்றியைப் பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்றார். இனி வருவது தம்பி திரைப்படத்தின் கதை:

அன்பே உருவான பெற்றோரும் பாசமுள்ள ஒரேயொரு தங்கையும் உள்ள தமிழ் சினிமாவின் மாதிரிக் குடும்பமொன்றில் பிறந்தவன் தம்பி என்ற வேலுத் தொண்டைமான். இவனுக்கு முன்னதாகப் "படையப்பா", "பரமசிவன்", "திருப்பாச்சி" போன்றவர்களும் இத்தகைய மாதிரிக் குடும்பத்தில் பிறந்தவர்களே. கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவனான தம்பி மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கத் தொடங்குகிறான். வேலைக்குப் போய்க் கொண்டிருக்கையில் தெருச்சண்டியன் பாண்டியனின் தம்பி செய்யும் கொலையொன்றைத் தற்செயலாகச் சீமானின் தம்பி பார்த்துவிடுகிறான். தம்பி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால் பாண்டியனின் தம்பி உள்ளே தள்ளப்படுகிறான். இதனால் வெகுண்டெழுந்த தெருச்சண்டியன் பாண்டியன், தம்பியின் மாதிரிக் குடும்பத்தைக் கொன்றொழித்து விடுகிறான். இப்போது தம்பி சினந்தெழுந்து பாண்டியனைப் பழிவாங்க பாண்டியனின் வீட்டுக்குச் செல்லும் போது அங்கே பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைக் காண்கிறான். அந்தக் குடும்பம் தான் பாண்டியனைக் கொலை செய்வதால் பாதிக்கப்படக் கூடாது என எண்ணும் தம்பி பாண்டியனைச் சந்தித்து "நிறுத்திக் கொள்வோம்" என்கிறான். பாண்டியனோ தம்பியை அடித்து முள்ளுக் கம்பியில் காயப் போட்டுவிடுகிறான். காயங்கள் ஆறியதும் தம்பி வன்முறையை ஒழிக்கப் புறப்படுகிறான். வில்லன் குழுவினரை துரத்தித் துரத்தி மரண அடி அடிக்கிறான் தம்பி. தம்பி கொலை செய்வதில்லை ஆனால் கொலைக்கும் கோமாவுக்கும் உள்ள மயிரிழையில் தம்பியிடம் அடி வாங்கியவர்களின் உயிர் ஊசலாடுகிறது. இந்த மயிர் இழையில் தான் படமே நிற்கிறது.வன்முறைக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட வன்முறையைத் தம்பி கையில் எடுக்கிறான். "உதைக்கணும் உதைக்கணும் உதைப்பேன்" என்று முழிகளைப் புரட்டியவாறு ஒரு சைக்கோ மாதிரித் தம்பி அலையத் தம்பியின் சைக்கோவையும் தெருச் சண்டித்தனத்தையும் மாவீரம் என அர்த்தப்படுத்திக் கொள்ளும் அர்ச்சனா தம்பியை விரட்டி விரட்டிக் காதல் செய்கிறாள். தம்பிக்கு உலகைத் திருத்தும் வேலையிருப்பதால் அவன் அர்ச்சனாவின் திடீர்க் காதலை நிராகரிக்கிறான். என்றாலும், அர்ச்சனா விடாப்பிடியாக கனவில் தம்பியோடு இரண்டு காதற் பாடல்களை ஊரைச் சுற்றி மரத்தைச் சுற்றி பாடிவிடுகிறாள்.

இடையில் தம்பிக்கு மதியுரைஞராக வந்து வாய்க்கிறார் மணிவண்ணன். பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை இடிக்கும் வாலிப வயோதிக அன்பர்களை அடக்கிய தம்பியின் தீரச் செயல்களுக்குப் புரட்சிகர தத்துவார்த்தரீதியான விளக்கங்களை மதியுரைஞர் வழங்குகிறார். "நான் ஏன் தெருச்சண்டியன் ஆனேன்?" என்று பல்கலைக் கழகப் பரிசளிப்பு விழா மேடையில் தம்பி உருக்கமாக உரை நிகழ்த்துகிறான். அப்போது மேடையில் இருக்கும் செட் ப்ரொப்பர்டிகள் பின் வருமாறு :
மூன்று நாற்காலிகள், ஒரு மேசை, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி, ஒரு மைக் ஸ்ராண்ட், பாவலர் அறிவுமதி, ஒரு மின்விசிறி.

மீண்டும் தோன்றும் மதியுரைஞர் தம்பியிடம் கார்ல் மார்க்ஸ், சே குவேரா, பிரபாகரன் எல்லோரும் கல்யாணம் செய்ததால் தம்பியும் அர்ச்சனாவை காதலிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். உடனே தம்பி அர்ச்சனாவின் காதலை ஏற்றுக்கொள்ள அர்ச்சனா தம்பியின் காலில் தடாலென விழுந்து கும்பிடுகிறாள். கடைசி நேரக் கலவரத்தில் பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைச் சீமானின் தம்பி ஆபத்திலிருந்து காப்பாற்றுவதோடு பாண்டியனுக்கு அறிவுரையும் சொல்கிறான். மனம் திருந்திய பாண்டியன் சீமானின் தம்பியைத் தனது குலசாமியாக ஏற்றுக்கொள்கிறான் இது தெரியாத பாண்டியனின் தம்பி சீமானின் தம்பியை வெட்டி விடுகிறான். தம்பி குற்றுயிராக ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்க தம்பியின் காதலியும் நண்பர்களும் சோகத்துடன் நிற்கிறார்கள். இவர்களை விடப் படு சோகத்துடன் வில்லனும் வெட்டியவனும் கண்களைக் கசக்கிக்கொண்டு நிற்கிறார்கள்.அப்போது அங்கே தோன்றும் மதியுரைஞர் தம்பியின் காதுகளுக்குள் "தம்பி எழுந்திரு! இன்னமும் பஸ்ஸில் இடித்தபடியே தான் பயணம் செய்கிறார்கள் எழுந்திரு ! நமக்கு இன்னமும் வேலையிருக்கிறது" என்று கூறத் "தம்பி பொழைச்சிட்டான் "...............

மேலேயுள்ளது தம்பி திரைப்படத்தின் கதைச் சுருக்கம் என்று நினைத்துவிடாதீர்கள். தம்பி திரைப்படத்தின் முழுக்கதையும் இதைவிடச் சுருங்கியது, நான் தான் வாசிப்புச் சுவாரசியத்துக்காகக் கதையைச் சற்றே மினுக்கி எழுதியுள்ளேன்.தறுதலை தம்பிக்கும் தாதா பாண்டியனுக்கும் இடையில் நடக்கும் நாய்ச் சண்டையில் தமிழீழ மக்களின் போராட்டம் எங்கே வருகிறது ?காதலை ஏற்றுக்கொண்டவுடன் தம்பியின் கால்களில் காதலி விழுந்து தொழும் அசிங்கமான திரைப்படத்தில் ஈரோட்டுச் சிங்கத்துக்கு என்ன வேலை ?இந்த வெங்காயச் சினிமாவை வீரமணி, கொளத்தூர்மணிக்குக் கூட அர்ப்பணிக்க முடியாதே ? இதை எந்தத் துணிச்சலில் சீமான் பெரியாருக்கு அர்ப்பணிக்கிறார் ?

"தமிழ்த் திரைப்படங்களை குறித்துப் பேசுவது சிரங்கைச் சொறிந்து கொடுப்பதைப் போன்றது" எனப் பேராசிரியர் சிவசேகரம் ஒருமுறை எழுதியதாக நினைவு. பேராசிரியர் விரக்தியின் விளிம்பில் நின்று இதை எழுதியிருந்தாலும் கூட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நேர்மறைப் பண்புகளும் இல்லாமல் இல்லை. திராவிட இயக்கத்தினரின் திரைப்படங்களும் 'பாதை தெரியுது பார்', 'ஏழாவது மனிதன்', 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' போன்று மாற்றுத் திரைப்படங்களைக் கண்டடைவதற்கான எத்தனங்களுக்குள்ளால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவை.இது தவிர வணிக நோக்கில் தயாரிக்கப்படும் சனரஞ்சக மனோரதியத் திரைப்படங்களுக்கும் பரந்துபட்ட தமிழ்ப் பார்வையாளர்கள் திரளுக்குமிடையே உள்ள உறவுடன் ரசிக உளவியலும் குறித்த ஒரு உரையாடலை 'நிறப்பிரிகை' சில வருடங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தது. எனினும் அவை குறித்த சிந்தனை வளர்ச்சியும் ஆய்வு முயற்சிகளும், தமிழில் தொடராமலேயே போய்விட்டன. பாடல்கள், நடனங்கள், சண்டைக் காட்சிகள், மிகை உணர்சிகள், போன்ற கேளிக்கைக்கான நேர்மறைக் கூறுகளுடன் நடிகைகளைப் பாலியல் பிரதிமைகளாகக் கட்டமைப்பது, ஆதிக்க சாதிச் சாய்வு,மூடநம்பிக்கைகள், ஆண் மையவாதச் சிந்தனை முறைமை போன்ற எதிர்மறைக் கூறுகளும் சேர்ந்ததாகவே தமிழ்ச் சினிமாவின் பரப்பு இயங்கி வருகிறது. இந்தப் போக்கு தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகச் சினிமாவிலும் தொழிற்படும் ஒரு போக்குத்தான். ஆனால் தமிழ்த் திரைப்படத் துறையில் மாபெரும் வணிக வெற்றிகளை சாதித்த இயக்குனர்கள் தமது திரைப்படங்களுக்கு வெளியே புரட்சிகரமான வாய்ச் சொற்களை உதிர்ப்பதில்லை. 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் வெற்றியைக் கத்தாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கங்கை அமரன் சொன்னதில்லை. 'கப்டன் பிரபாகரன்' படத்தின் வெற்றியை ஈழப்போராளிகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று செல்வமணி சொன்னதில்லை. 'வைஜந்தி அய்.பி.எஸ்' திரைப்படத்தை ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அர்ப்பணிப்பதாக அத் திரைப்படத்தின் இயக்குனர் சொன்னதில்லை, ஆனால் மேற்சொன்ன படங்களையே கருத்துத் தளத்தில் ஒத்ததாக உள்ள தம்பி திரைப்படத்தின் வெற்றியைப் பெரியாருக்கும், பிரபாகரனுக்கும், அர்ப்பணிக்கிறேன் என்று கூறும் சீமானின் வாய்த் துடுக்குக்குப் பின்னால் இருப்பது எது ?

தம்பி திரைப்படத்துக்கு புறத்தே இயக்குனர் சீமான் கட்டமைத்த கட்டமைக்கும் போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே/ அவர் உதிர்த்தும் கைப்புள்ள, வெடிமுத்து வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின் வியாபார இலக்கு எது ? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன ? இந்தக் கேள்விகளைப் பரிசீலிப்பதற்கு முன்னதாக தம்பி படத்தின் திரைக்கதை வசனத்தைப் பற்றியும் அவற்றுள் பொதிந்திருக்கும் ஆபத்தான சாதிய ஆண்மையவாத அராஐகக் கூறுகளைப் பற்றியும் பார்த்து விடுவோம்.தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்பட பாணியிலிருந்து வேறுபட்டது அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப் பாசறையிலிருந்து வரும் 'உண்மை' இதழும் எழுதுகிறது தமிழ்த் தேசியவாதப் பாசறையிலிருந்து வரும் 'தென் செய்தி' இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது ?எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 130 படங்களில் இந்த கதை தானே நடந்தது ! எழுந்தமானமான எடுத்துக்காட்டாய் கஜேந்திரா பிலிம்ஸின் 'நாளை நமதே" திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம் அன்பே உருவான தாய், அறிவே உருவான தந்தை, சங்கர், விஜே, கண்ணன் என மூன்று குழந்தைகள்! தென்றல் நடைபயின்ற குடும்பத்தில் தீடீரெனப் புகுந்தான் கொள்ளைக்காரன் ரஞ்சித். தென்றல்கள் ஒவ்வொன்றும திசைக்கு ஒன்றாகப் பிரிந்தன. முடிவு என்ன? எம்.ஜி.ஆர் பெரியவனாக வளரவில்லையா? தன் குடும்பத்தையே நாசமாக்கிய நம்பியாரைக் கண்டு பிடிக்கவில்லையா? நம்பியாரைத் தண்டவாளத்தில் ஓடவிட்டுத் துரத்தித் துரத்தி நீதி மொழிகள் பேசவில்லையா நம்பியாரைப் பழிவாங்க எல்லா வாய்ப்புகள் இருந்தும் இறுதியில் எம்.ஜி.ஆர் நம்பியாரின் உயிரைக் காப்பாற்றி சட்டத்தின் கையில் ஒப்புவிக்கவில்லையா? அப்போது நாகேஷ் போலீசாரை ஜீப்பில் அழைத்துக்கொண்டு வரவில்லையா? எல்லாமே நடந்தன. ஒன்று மட்டும் தான் நடக்கவில்லை. இத் திரைப்படத்தின் வெற்றியை அண்ணாத்துரைக்கு அர்ப்பணிப்பதாக எம்.ஜி.ஆர் சொல்லவில்லை......!'தென்செய்தி' இதழில் சுப.வீரபாண்டியன் தம்பி திரைப்படத்தைக் குறித்து எழுதும் போது தம்பியின் வீட்டில் பெரியார், கார்ல் மார்க்ஸ், பாரதிதாசன் படங்கள் தொங்குவதாக மகிழ்ந்து போகிறார். இவையெல்லாம் தம்பியின் உள் வீட்டில் மாட்டியிருந்த படங்கள். ஆனால் தம்பியின் வீட்டின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் -அண்மைக் காட்சிக்குள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வரும் ஒரு புகைப்படம்- எப்படித்தான் பேராசிரின் கண்களுக்குப் படாமல் போனதோ தெரியவில்லை. அம் முகப்பு படத்தில் இருப்பவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மார்க்ஸின் மாணவர்கள், பெரியாரின் பேரர்கள், ஒரு போதும் முத்துராமலிங்கத்தின் படத்தைத் தூக்கிப்பிடிப்பதில்லை. தலித் மக்களின் தலைமைப் போராளி இம்மனுவேல் சேகரனின் படுகொலைக்கு நேரடிக் காரணியாக இருந்தவர் முத்துராமலிங்கம். முத்துராமலிங்கத்தை கைது செய்யுமாறு அப்போது பெரியார் குரல் கொடுத்தார். பின் அவர் கைது செய்யப்பட்டார். முத்துராமலிங்கத்துக்கு அடிப்படைவாத இந்துத்துவ முகமும் உண்டு. இந்து மகா சபைத் தலைவராகவும் முத்துராமலிங்கம் இருந்தார். "ஒரு வேளை இன்று முத்துராமலிங்கர் உயிருடன் இருந்திருந்தால் அவரே இன்றைய தமிழக இந்துத்துவ சக்திகளின் தலைவராக இருந்திருப்பாரோ என்று ஊகிக்கவும் இடமுண்டு" என்பார் அ.மார்க்ஸ் (அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் பக்.107) இன்று தென்மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலோத்தரின் சாதிப் பெருமிதப் படிமமாக வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத் தம்பியின் வீட்டில் சீமான் மாட்டிவிட்டதற்க்குப் பின்னால் இருப்பது சுய சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன? இந்த இடத்தில் இயக்குனர் சீமான் திரைப்படத் துறையினுள் நுழைந்த விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

என் ஞாபகம் சரியாக இருந்தால் சீமான் பாரதிராஜாவின் 'பசும்பொன்' திரைப்படத்ததுக்குக் கதை உரையாடல் எழுதித்தான் திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். தமிழ்க் சினிமாவின் மொழியை மாற்றிப் போட்ட வகையிலும் 'கிழக்கே போகும் ரயில்', 'கருத்தம்மா', போன்ற சில படங்களில் சமூகப் பிரச்சனைகளைச் சற்றே ஆழமாகப் பேசியவர் என்ற வகையிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பாரதிராஜாவின் வகிபாகம் முதன்மையானதாக இருக்கிறது. இதற்கு அப்பால் சுயசாதிப் பெருமிதங்களைப் பேசும் படங்களை எடுத்ததோடு மட்டுமில்லாமல் சாதிச் சங்கத்தின் நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர் பாரதிராஜா.சீமான் கதை உரையாடல் எழுதிய பசும்பொன் திரைப்படமும் சுயசாதிப் பெருமைகளைப் பேசிய ஒரு வன்கொடுமைத் திரைப்படம் தான். இத் திரைப்படத்தின் நாயகப் பாத்திரமான துரைராசுத் தேவர் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜி கணேசன் என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. அத் திரைப்படத்தில் தான் "தென்காசிச் சிங்கமே தேவர் அய்யா எங்கள் தேவர் குலத் தங்கமே தேவர் அய்யா" என்ற பாடல் வருகிறது. இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து என்பது கூடுதற் தகவல்."நமது மொழி சாதி காப்பாற்றும்" மொழி என்பார் பெரியார். நமது மொழியின் அடுக்குகளில் சாதி நுட்பமாகப் படிந்துள்ளது. சீமானின் தம்பி திரைப்படத்தில் பாத்திரங்கள் பிற பாத்திரங்களைத் திட்டும் போது 'சண்டாளா' எனத் திட்டுகிறார்கள். படம் நெடுகவும் இந்த சண்டாளா எனற சொற்ப் பிரயோகம் வருகிறது. சண்டாளர் என்பது புராணகள், இதிகாசங்கள் தோன்றிய காலங்களில் இருந்தே தலித்துக்களை இழித்துரைப்பதற்காக ஆதிக்கச் சாதியினர் பயன்படுத்தும் சொல். மதுரை மீனாட்சி கோயில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்த போது அடையாளமாகப் பறையர், பள்ளர், நாடார் சாதிகளிலிருந்து இரண்டிரண்டு பேர்களென ஆறு பேர்கள் ஆலயத்துக்குள் நுழைந்தனர். 'ஆறு சண்டாளர்கள்' என இவர்களைப் பற்றி 'பகிரதி' என்ற பார்ப்பனப் பெண் வசைப்பாடல் இயற்றிய கொடுமையைத் தமிழவேள் 'இம்மானுவேல் தேவேந்திரர் வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு மேலாக சண்டாளர் என்பது இந்தியாவின் அட்டவணைச் சாதிகளுள் உள்ள ஒரு தீண்டப்படாத சாதியின் பெயர் என்பதும் அறிய வருகிறது. இச் சாதியின் பெயரை வசைச் சொல்லாகச் சீமான் தம்பி திரைப்படத்தில் உபயோகித்திருப்பதை திரைப்படத் தணிக்கைக் குழுவினர் எப்படி அனுமதித்தனர் ? தணிக்கைக் குழு அனுமதித்திருப்பினும் உண்மையும் தென்செய்தியும் சுபவீயும் கோவி.லெனினும் எப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் ? சீமான் சார்ந்திருக்கும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் குஷ்புவிடம் இருந்து மட்டும் தான் தமிழைக் காப்பாற்றுமா ? சாதியிடமிருந்து தமிழைக் காப்பாற்றாதா ?

பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திலும் "கதாநாயகி", கதைக்கு சம்மந்தமில்லாமல் வந்துபோன அறிவுமதி ஆண்டாள் பிரியதர்சினி போலவே அவளும் வந்து போகிறாள். சற்றுக் காலத்துக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், பனியன் போன்ற உடைகளை அணியக் கூடாது என்ற ஒரு கலாச்சார அடிப்படைவாத விதி கொண்டுவரப்பட்டதே, அதை மாணவிகள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ சீமான் செம்மையாகக் கடைப்பிடிக்கிறார். படம் முழுவதும் கல்லூரி மாணவியான நாயகி சேலையிலேயே வருகிறாள். சீமானைப் போல மாதவனைப் போல அவளால் சே குவேரா படம் பொறித்த பனியன் அணிய முடியாது. விரும்பினால் சே குவேரா படத்தைச் சேலையில் பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டியது தான். புரட்சியாளனைக் காதலிக்கும் குற்றத்துக்காக அவள் புரட்சியாளனிடமிருந்து லூசு, இம்சை, பேய் போன்ற வசைகளைப் பெறுகிறாள். கடைசியில் சீமானின் தம்பி காதலை ஏற்றுக் கொண்டதும் அவனின் கால்களில் விழுகிறாள்.முற்று முழுதாக ஆணாதிக்கச் சிந்தனை வழியிலேயே சீமான் நாயகியின் பாத்திரத்தைக் கட்டமைத்திருக்கிறார். வெட்கத்தை விட்டு ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது: கே.பாலச்சந்தர் போன்ற பார்ப்பனப் பிற்போக்குவாதிகள் "அவள் ஒரு தொடர் கதை", "அவர்கள்", "மனதில் உறுதி வேண்டும்", "அச்சமில்லை அச்சமில்லை"," அக்னி சாட்சி",ஆகிய திரைப்படங்களில் அரைகுறையாகவேனும் சித்தரித்துக் காட்டிய பெண் ஆளுமைகளைக் கூட நமது பெரியாரின் பேரர்களாலும் தம்பியின் தம்பிகளாலும் உருவாக்க முடியாமல் உள்ளது.அவர்கள் தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் காலில் விழும் கலாச்சாரத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மாவோவின் மேற்க்கோளோடு தொடங்கி சே குவேரா வின் மேற்க்கோளோடு முடியும் இத் திரைப்படம் முழுவதும் சீமானின் தம்பி கிட்டத் தட்ட ஒரு போலிஸ் உளவாளி போலவே இயங்குகிறான். போலிசார் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சொல்லும் போது போலிஸ் வாகனத்துக்கு முன்னால் தம்பி பாதுகாப்பு அளித்துச் செல்கிறான். போலிசாரும் தம்பி சண்டித்தனம் செய்யும் போது கடைசிவரைக்கும் கண்டும் காணாமலேயே இருந்துவிடுகிறார்கள். வரலாற்றிலேயே இல்லாத புரட்சியாய் பொலிஸ் அதிகாரி (ராஜ்கபூர்)புரட்சியாளனை இரகசியமாகச் சந்தித்துப் சிலபல அய்டியாக்களும் கொடுக்கிறான். "புரட்சியாளன்" தம்பியும் போலிசும் கை கோர்த்துச் செயற்படுகிறார்கள். இவ்வாறாகப் போலிஸாருடன் கரங்களைக் கோர்ப்பவர்களை சனங்கள் புரட்சியாளன் என்று அழைப்பதில்லை, மாறாகப் "போலிஸ் உளவாளி" என்றுதான் காறியுமிழ்வார்கள். இந்தப் படத்துக்காக வீரப்பன் வேட்டை நிகழ்ந்த பகுதிகளிலும் நக்ஸல்பாரிப் புரட்சியாளர்கள் கொடூரமாகப் போலிசாரால் கொன்றொழிக்கப்பட்ட தருமபுரிக் கிராமங்களிலும் வாழும் இரத்த சாட்சியங்களான மக்கள் சீமானைச் செருப்பாலே அடித்தால் அது புரட்சி!

சமூகத்தின் உண்மையான வன்முறையாளர்கள் சீமான் ஆனந்த விகடன் நேர்காணலில் கோபப்படுவது போல சாலையில் குப்பை எறியும் இளைஞர்களோ சாலை விதியை மீறும் எளிய மனிதர்களோ அல்ல. அல்லது சீமான் தம்பி திரைப்படத்தில் சித்தரிப்பது போன்ற பேருந்தில் உரசியபடியே பயணம் செய்யும் பாலியல் வறுமையில் உழல்பவர்களோ தெருச்சண்டியர்களோ அடியாட்களாக இயங்கும் விளிம்பு நிலை மனிதர்களோ அல்ல. அவர்கள் இந்த நிலப்பிரபுத்துவ முதலாளியக் கேடுகெட்ட சமூக அமைப்பின் விளைவுகள். சமூகத்தின் மிகப் பெரும் வன்முறை நிறுவனங்களாக அரசும் நீதிமன்றமும் காவல்துறையும் இராணுவமும், சிறைச்சாலைகளுமே விளங்குகின்றன.அவையே இந்த சமத்துவமற்ற சமூக ஒழுங்குகளையும் சுரண்டலையும் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. இவற்றின் வன்முறை குறித்துத் தம்பி திரைப்படம் பேசுவதில்லை. மாறாகத் தம்பி ஒரு இளைஞனுக்கு "நீயும் நானும் அடித்தால் குற்றம் போலிஸ் அடித்தால் சட்டம்" எனவே நீ படித்து போலிஸ்காரனாகு! கலக்டராகு! சமூகத்தைத் திருத்து" என்கிறான்.'தாகம்' பெப்ரவரி 2006 இதழில் சீமான் தனக்குள் இலட்சியங்களை விதைத்தவர்களான மாவோவும் லெனினும் சே குவேராவும் தம்பி திரைப்படம் முழுவதும் விரவியிருப்பதாகக் கூறுகிறார். மாவோவும் லெனினும் அரசு இயந்திரத்தை நொறுக்குவது குறித்தும் அரசின் காவல் நாய்களான அதிகாரிகளையும் ஆயுதப்படையினரையும் செயலிழக்கச் செய்வது குறித்தும்தான் பேசுவார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக மாறச் சொன்னார்களே ஒழிய பொலிஸ்காரர்களாக மாறச் சொல்லவில்லை. " நீதி என்பது அரசின் வன்முறை- வன்முறை என்பது மக்களின் நீதி" என்பதே சர்வதேசிய அனார்கிஸ்டுகளிள் முதல் முழக்கமாய்த் திகழ்கிறது. அரசுக் கட்டுமானம், நீதியின் வன்முறை, வெகுசனங்களின் கலகம் போன்ற நுண் அரசியற் சிந்தனைகள் சே குவேராவின் பனியனைப் போட்டுக்கொண்டு கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றித் திரிவதாலோ அல்லது பிரபாகரனின் படத்தைச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அலைவதினாலோ சித்தித்துவிடப் போவதில்லை.இயக்குனர் சீமான் குத்துமதிப்பாய் மார்க்ஸிஸம் மாவோயிஸம் என அரைகுறையாய்ப் அனர்த்துவதை நிறுத்திக்கொண்டு, குறைந்தபட்சம் அவர் அவரின் இன்னொரு தோழரான தியாகு எழுதிய 'மார்க்சியம் ஆனா ஆவன்னா' என்ற நூலையாவது படிக்க வேண்டும். 'சொல்வது தெளிந்து சொல்லவேண்டும்.'

லெனினையும் பெரியாரையும் பாரதிதாசனையும் புகைப்படங்களாகத் தமிழ்த் திரையில் முதலில் காட்டியவர் சீமான் என்ற சிந்தனையாளன் தான் என்று சிறுபிள்ளைத்தனமாக சுப.வீரபாண்டியன் மகிழ்ந்து போவதில் எந்த அர்த்தமும் இல்லை. எம்.ஜி.ஆர் கூடத்தான் உலகம் சுற்றும் வாலிபனில் லெனின் சிலையை காண்பிக்கிறார்.பாரதிதாசனைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் புத்தரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பேசாததையா சீமான் பேசிவிட்டார் ? எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படத்தில் நாடோடி ஆட்சியில் அமர்ந்தவுடன் கொண்டு வரும் சட்டத் திருத்தங்களில் அரைவாசி கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பார்கள். வணிக இலக்குகளுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குள் இவ்வகையான போலிப் புரட்சிகரப் படிமங்களும் உணர்ச்சி முழக்கங்களும் எழுப்பப்படுவதற்க்கான நோக்கம் வியாபாரக் காரணங்களைத் தவிர வேறில்லை.தம்பி திரைப்படத்தைப் போலவே 1981 ல் போலிப் புரட்சிகர முழுக்கங்களுடன் ஏ.வி.எம் தயாரிப்பில் 'சிவப்பு மல்லி' என்றொரு திரைப்படம் விஐய்காந்த்,சந்திரசேகர் நடிப்பில் வெளிவந்தது. அத் திரைப்படத்தின் போலி முழக்கங்களுக்குப் பின்னால் இருந்த வணிக உத்திகளை அறந்தை நாராயணன் 'தமிழ் சினிமாவின் கதை' என்ற நூலில் விமர்சிக்கிறார். இந்த விமர்சனம் 'நாடோடி மன்னனுக்கும்' பொருந்தும், 'உலகம் சுற்றும் வாலிபனுக்கும்' பொருந்தும், 'அன்பே சிவத்துக்கும்' பொருந்தும், நம் சீமானின் தம்பிக்கும் பொருந்தும். கீழே வருவது அறந்தை நாரயணின் 'சிவப்பு மல்லி' குறித்த விமர்சனம்:

1980 ல் ஏ.வி.எம் கூட்டத்திலிருந்து மெய்யப்பச் செட்டியாரின் மைந்தர்கள் 'முரட்டுக்காளை' என்றொரு பிரமாண்டமான பொழுதுபோக்குப் படத்தை வெளியிட்டனர். அது நடந்து கொணடிருந்த போது ஆந்திராவில் ஒரு தெலுங்குப் படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. அந்தப் படம் 'எர்ரமல்லி'. ஆந்திர மாநிலக் கம்யுனிஸ்டுகள் உருவாக்கிய படம். சகோதரர்கள் அந்தப் படத்தைப் பார்த்தனர் சிக்கனமான செலவில் தயாரிக்கக் கூடிய 'ப்ருவ்ட் சப்ஐக்ட்' என்பதை உணர்ந்தனர். தேசமெங்கும் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியால் அமைதியின்மையும் வாழ்க்கை நெருக்கடியும்... அதனை எதிர்த்து விவசாயிகள் தொழிலாளிகள் இளைஞர்கள் மாணவர்கள் மத்தியதர வர்க்கத்தினர் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் புறச் சூழ்நிலை. இதன் எதிரொலியாக அமிதாப்பச்சன் நடிக்கும் இந்தி மசாலாப் படங்களிலும் -ஏன் ரஜினிகாந்த் நடித்த தமிழ் 'காளி' படத்தி லும் - போராட்டக்கார இளைஞன் கம்யுனிஸ்டாகவும் கையில் செங்கொடி பிடிப்பவனாகவும் படங்களில் வரத் தொடங்கியிருந்தான். எர்ரமல்லி ப்ரூவ்ட் சப்ஜெக்டை ஏ.வி.எம் சகோதரர்கள் வாங்கினர். தமிழுக்கு தகுந்த மாதிரி திரைக்கதை எழுத வைத்து 'சிவப்பு மல்லி' என்ற படத்தை 1981 ல் வெளியிட்டனர். தமிழ்ப் படத்துக்கு வசனம் எழுதி இயக்கியவர் இராம.நாராயணன் . நிலப்பிரபுத்துவத்தையும் முதாலாளித்துவத்தையும் எதிர்த்து எழுந்த இரு கோபம் கொணட இளைஞர்களின் கதை. கடிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிச் சுரண்டும் முதலாளி அவனுக்கு நல்லவளான ஒரு மனைவி கோமாளிகளான மூன்றுநிலப்பிரபுகள். நிலப்பிரபுவுக்கு ஒரு மகள்.... என்று தமிழில் (மாற்றப்பட்ட) திரைக்கதை. வண்ணத்தில் நூற்றுக்கணக்கான கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகள், ஊர்வலத்தில் லெனின் படம் கூடவே பெரியார், அண்ணாத்துரை படங்கள். கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகளையும், சில வசனங்களையும் நீக்கி விட்டால் 'சிவப்பு மல்லி' - ஒரு எம்.ஜி.ஆர் பாணிப்படம்; அபாரமான வசூல். (தமிழ் சினிமாவின் கதை பக்:714)

தம்பி திரைப்படத்திலும் இரு மேற்கோள்களையும் ஒரு வசனத்தையும் நீக்கி விட்டால் சீமானின் தம்பி அசலான விஜயக்காந் பாணிப்படம். இராம.நாராயணனுக்கு 'முரட்டுக்காளையை' தயாரித்த ஏ.வி.எம் நிறுவனமென்றால் சீமானுக்கு 'ஜீன்ஸ்' படத்தைத் தயாரித்த முரளி மனோகர். ஏ.வி.எம்மும் இராம.நாராயணனும் சேர்ந்து தமிழ்த் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள் என்றால்; முரளி மனோகரும் சீமானும் தமிழகத் தமிழர்களுடன் சேர்த்து ஈழத் தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைக்கிறார்கள்....இன்று புலம் பெயர்ந்த தேசங்களில் ஏறக்குறைய பத்து இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களே தமிழ்த் திரைப்படங்களின் வருவாயில் கணிசமான பகுதியைத் தீர்மானிப்பவர்களாக விளங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஈழத்தமிழர்களின் சினிமாக் கிறுக்கு மற்ற எந்த தேசிய இனத்தவர்களின் சினிமாக் கிறுக்கை விடவும் சற்றும் குறைந்ததல்ல. 'காதலுக்கு மரியாதை' 'ஆட்டோ கிராப்' போன்ற கிறுக்குத்தனமான திரைப்படங்களை புகலிடங்களில் பெரும் வெற்றியோடு ஓட வைத்தவர்கள் இவர்கள். பாரிஸ் நகரத்தில் இதுவரை திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிக காட்சிகள் ஓடிய திரைப்படம் 'கப்டன் பிரபாகரன்'. அந்தப் பெயருக்காகவே அத் திரைப்படம் ஓட்டமாக ஓடியது. இதே வணிக உத்தியோடு இப்போது சீமானின் தம்பி திரைப்படமும் புகலிட தேசங்களில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

தமிழீழ விடுதலைப் போராளிகளின் தலைமைகள் மீதும் அவர்களின் குறுந் தேசியவாதப் பண்புகளின் மீதும் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன என்பதற்காகச் சிங்களப் பேரினவாத அரசுகளின் இன அழிப்புக் கொடுமைகளையும் ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க்கான நியாயமான காரணிகளையும் போராட்டத்தில் ஏராளமான மக்களும் அடிமட்டப் போராளிகளும் செய்த வீரஞ் செறிந்த தியாகங்களையும் நாம் மறந்து விடப் போவதில்லை. ஈழப் போராட்டத்துக்கு தமிழகத் தோழர்கள் செய்த பங்களிப்புகளும் அளப்பெரியன. அத் தோழர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக தீயில் எரிந்தார்கள். மாணவர்களும் இளைஞர்களுமாகத் திரண்டு ஈழ அகதிகளுக்குப் பெரும் உதவிகளைச் செய்தார்கள். பல தோழர்கள் ஈழப் போராட்டத்தின் நியாயங்களைப் பரப்புரை செய்வதையே தமது வாழ்நாள்ப் பணியாகக் கொண்டார்கள். பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்று ஈழத்தில் களப் போராளிகளாகவும் சில தமிழகத் தோழர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஈழப் போராட்டத்துக்கு பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்ததால் எண்ணுகணக்கற்ற தோழர்கள் சிறைக் கொட்டடிகளில் ஆண்டு கணக்காக அடைக்கப்பட்டார்கள். வாக்கு, மனம், காயம் எனச் சகலத்தையும் தமிழ்ப் போராட்டத்துக்கு ஒப்படைத்த சில தோழர்கள் சகோதரப் படுகொலைகளைத் தொடர்ந்து விரக்தியடைந்து தோழர் பாவரசுவைப் போல மனநோயாளிகளாக மாறிக் காணாமலேயே போய்விட்டார்கள். ஆக இவை எல்லாம் சேர்ந்தது தான் ஈழப்போராட்டத்தின் வரலாறு.

இன்று ஈழ விடுதலைப் போரட்டம் குறுந் தேசிய வெறியாலும் கலாச்சார அடிப்படைவாதத்தாலும் ஏகாதிபத்திய அடிபணிவாலும் பாஸிஸத்தாலும் திசை தவறிப் போயிருக்கலாம் . ஆனால் ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க் காரணங்களாய் அமைந்த இன ஒடுக்குமுறைக் காரணிகள் அப்படியே தான் இருக்கின்றன. அரசியல், இராணுவ முட்டுச் சந்துகளில் அகப்பட்டிருக்கும் ஈ ழவிடுதலைப் போராட்டத்தைச் சனநாயகப் படுத்துவதும் பாஸிஸத்தைத் தோற்கடிப்பதுவுமே ஈழப் போராட்டத்தை அடுத்த படியை நோக்கி நகர்த்தும் வழியாக இருக்கும். இத்திசை நோக்கி நகர்வதே சமூகப் போராளிகளின் அக்கறையாக இருக்கும். ஆனால் தமிழீழ விடுதலையின் ஆதரவாளராகச் சொல்லப்படும் திரைப்பட வியாபாரி சீமானுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. அவர் பிரபாகரன் எனற தனிமனிதனையே ஈழப்போராட்டமாக உருவகித்து பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் பேட்டிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். புறநானூற்றின் நிகழ்காலம பிரபாகரன் என்று அவர் தனிமனிதத் துதியைப் பாடிக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் ஆதரவு, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், பெரியார், அம்பேத்கர் என்று சொற்க் குவியல்களை உதிர்ப்பதின் மூலம் அவர் ஊடகங்களில் - குறிப்பாகப் புலம்பெயர் ஊடகங்களில் - தன்னை எப்போதும் தக்க வைத்துக் கொள்கிறார். இதனூடாக அவர் தனது வணிக வலையைக் கவனமாகப் பின்னுகிறார்.சீமானின் வணிகப் புத்தி மிகவும் வெளிப்படையானது. தம்பி திரைப்படத்தில் நடிப்பதற்கு மாதவனைத் தவிர எந்த நடிகர்களும் தயாராக இருக்கவில்லை என்று அவர் வியாபார மதிப்புள்ள உச்ச நட்சத்திரங்களைக் குறித்துப் புலம்புகிறார். 'பாதை தெரியுது பார்' இயக்குனர் நிமாய்கோசும் 'ஏழாவது மனிதன்' இயக்குனர் ஹரிகரனும் 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' இயக்குனர் சிறீதர் ராஜனும் உச்ச நட்சத்திரங்களின் தேதிகளுக்காகச் சீமானைப் போல புலம்பவில்லை. அவர்கள் புது முகங்களையும் வணிக மதிப்பற்ற நடிகர்களையும் வைத்தே காலத்தால் அழியாத திரைப்படங்களை உருவாக்கிக் காட்டினார்கள். ஆனால் சீமானோ சே குவேரா பனியனை அணிந்து நடிக்க மாதவனைத் தவிர எந்தத் தமிழ் நடிகனுக்கும் துணிவில்லை எனறு பழித்துப் பேசிய அதே நாவால்தான் தனது அடுத்த படத்தில் விஜய் அல்லது விக்ரம் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ஆனந்த விகடன் ஊடாக உச்ச நட்சத்திரங்களிடம் மனுக் கொடுக்கிறார்.

அம்ஸ்ரர்டாமில் கஞ்சா விற்கும் கோப்பிக் கடைகளின் முகப்பில் பொப் மார்லியின் உருவத்தை வணிக இலச்சினையாகப் பொறித்திருப்பார்கள். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பனியன்களில் சே குவேராவின் உருவத்தை அச்சிட்டுச் சந்தைப்படுத்துவார்கள். அதே போல் இயக்குனர்சீமானுக்குத் தனது திரைப்படத்தைச் சந்தைப்படுத்த பிரபாகரன் ஒரு வியாபார இலச்சினை.ஈழப் பிரச்சினை அவருக்கு ஒரு 'ப்ரூவ்ட் சப்ஜெக்ட்'.இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால் ஆதாயம் அடைபவர்கள் பலர். ஆயுத வியாபாரிகள், அரசுத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் ஒரு புறம் யுத்தத்தின் பெயரால் நிதியைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் தமிழ்த் தேசியத்தை முழக்கமிடும் பத்திரிகைகள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், அறிவு ஜீவிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் திட்டமிடலாளர்கள், தமிழ்த் தேசியத்தின் வெளிநாட்டு முகவர்கள், கோயில் முதலாளிகள் போன்றவர்களும் ஈழப் போரட்டத்தின் பெயரால் பெரும் பொருளியல் ஆதாயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இயக்குனர் சீமானும் தன் பங்குக்கு வாய் நனைக்க வந்துள்ளார். ஆற்றிலே போற வெள்ளம் அண்ணே குடி!தம்பி குடி!!

ஷோபாசக்தி - 25.03.2006

Related Article:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

Thursday, February 15, 2007

இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்

ந்திய அரசு தனது வர்க்க சார்பை விட முடியாமல் தவிக்கிறது. விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பான துறை என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதனை முன்னிட்டுதான் விவசாயத்தில் குறைந்த பட்ச GDP வளர்ச்சியில்லையெனில் இந்தியாவின் GDP இலக்கை அடைய முடியாது என்று அலறுகிறார்கள் பா. சி., மண்டேக் சிங் அலுவாலியா முதலான அமெரிக்க புரோக்கர்கள்.
ஆயினும், இந்த அலறலை மக்கள் மீதான அன்பால் ஏற்ப்பட்ட அலறல் என்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் உண்மையில் இந்திய விவசாயத்தை வளர்க்க அதில் முதலாளித்துவ பாணி உற்பத்தி முறைகளை கொண்டு வர வேண்டும். ஆனால் இதனை செய்யும் தைரியமும், தனது சொந்த வர்க்கங்களுக்கு துரோகம் செய்யும் நெஞ்சுரமும் இந்த கைக்கூலிகளுக்கு இல்லை.

முதலில், அது என்ன முதலாளித்துவ பாணி உற்பத்தி முறை?

மிகப் பெரிய அளவில், ஒரே இடத்தில், மையப்படுத்தப்பட்ட முறையில் நவீன கருவிகள் உதவியுடன், பெரும் எண்ணிக்கையில் விஞ்ஞான முறைகளின் துணையுடன் செய்யப்படும் உற்பத்தி முறைதான் முதலாளித்துவ உற்பத்தி முறை. இதனை மேலைநாடுகளில் பார்த்திருக்கலாம். பல லட்சம் ஏக்கருக்கு ஒரே ஒரு பயிர்தான். விமானம் மூலம் உரம்-பூச்சி மருந்துகள், நீர் பாய்ச்சுவது மையப்படுத்தப்பட்டிருக்கும், ஒரு குறிப்பிட்ட பெரிய சந்தையை மனதில் கொண்டு திட்டமிடப்பட்ட உற்பத்தி, அதி நவீன ராட்சச யந்திரங்கள் மூலம் அறுவடை. இப்படி ஒரு தொழிற்சாலை போலவே அங்கு விவசாயம் நடைபெறுகிறது. இன்னும் சொன்னால் அங்கு விவசாய முதலாளியும், தொழிலாளியும்தான் உண்டு. விவசாயியோ அல்லது நிலபிரபுவோ கிடையாது.

ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பின்னிபிணைந்துள்ள விவசாயமோ இன்னும் சிதறிய சிறுவீத உற்பத்தி எனும் நிலபிரபுத்துவ முறையையே பின்பற்றி வருகிறது. அதிலிருந்து மேலேறி அடுத்தக் கட்டத்திற்கு வரவிடாமல் இந்தியாவின் பொருளாதாரம் ஏகாதிபத்திய முடக்கு வாதத்தால் அவதியுறுகிறது. இதைத்தான் நாம் அரைக்காலனியம், அரை நிலபிரபுத்துவம் என்கிறோம்.

ஏன் இந்திய அரசால் விவசாயத்தை வளர்க்க முடியவில்லை:

விவசாயத்தை அடுத்தக் கட்டத்திற்க்கு கொண்டு வரும் முயற்சிகள் பெரும் நிலவுடமையாளர்களுக்கும், விவசாய உற்பத்தி பொருட்களின் விற்பனை பிரிவு, சந்தை பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் புரோக்கர் கும்பல்களுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என்பதால்தான் இந்த அரசு அத்தகைய நிலச் சீர்திருத்தம், விவசாய சீர்திருத்த நடவடிக்கைகளை செய்வதில்லை. இது பிரச்சனையின் ஒரு அம்சம் மட்டுமே.

இன்னொரு முக்கிய அம்சம் ஏகாதிபத்தியத்தின் சந்தை தேவையையும், மூல வளங்களின் தேவையையும் நிவர்த்தி செய்யும் ஒரு இழிச்சவாய நாடு என்று முத்திரையை இந்தியாவிற்க்கு தொடர்ந்து குத்துவதில் உள்ள ஆர்வம். இந்த அம்சம் மிக குறிப்பாக உலகமயத்திற்க்கு பிறகு பெரும் முக்கியத்துவம் பெருகிறது.
ஏனேனில், உலகமயத்திற்க்கு பிற்ப்பாடு மேலே சொன்ன முதல் அம்சமான - நிலவுடைமையாளர் மற்றும் விற்பனை மற்றும் சந்தை பிரிவுகளும் கூட MNC, தரகு முதலாளிகளுக்கு திறந்து விடப் படுவதுதான்.

இந்திய விவசாயத்தை இப்படி அரை நிலபிரபுத்துவமாக வைத்திருப்பதில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு என்ன அரசியல் இருக்க முடியும்?

மூன்று நோக்கங்கள்,

#1) குறை கூலி மனித வளம்:
குறைந்த கூலிக்கு, சொன்னதை அடிமை போலச் செய்யும் உழைப்பாளர்களை தொடர்ந்து உருவாக்கி(பெற்றெடுத்து வளர்த்து) செய்வதற்க்கு கிராம உற்பத்தி உறவுகளை நிரந்தரமாக பாதுகாப்பது அவசியம். இது குறித்து இந்த கட்டுரையில் 'இந்த பாணி உற்பத்தி முறையின் விளைவு என்ன?' என்ற தலைப்பின் கீழ் ஓரளவு விளக்கியுள்ளேன்.

இந்த பாணி உற்பத்தி முறை எப்படி அவனுக்கு குறைந்த கூலி ஆட்களை பெற்றெடுக்கிறது,

விவசாயத்தை சுதாட்டம் போல மாற்றி, விவசாயியை நிலத்தை விட்டு ஒரு பக்கம் விரட்டுகிறது இந்த பொருளாதாரம். இதன் மூலம் நகரங்களில் குறைந்த கூலிக்கு சுரண்ட தொடர்ந்து மனித வளம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் அவனது வாழ்வை நகரங்களில் உத்திரவாதப்படுத்தாமல் கிராமம் பாதி நகரம் பாதி என்று அவனை அலைக்கழிக்கிறது. இதன் மூலம் அவன் நகரத்தில் குறை கூலிக்கு சம்பாதித்து அதை கிராமத்தில் மீண்டும் முதலிடுகிறான். அந்த முதலீட்டில் உற்பத்தியாகும் விவசாய பொருளை மிக குறை கூலிக்கு இந்த சமுகமே நுகர்கிறது. இங்கு கிராம நகர(Cost of Living) வேறுபாடு கிராமத்து கூலி தொழிலாளியை எப்படி ட்புள் சுரண்டலுக்கு உட்படுத்துகிறது என்பது புலனாகும். நகரத்திலோ அவனை தற்காலிக தொழிலாளியாக சிறு அளவிலும், சிறு பட்டறைகளில், கட்டுமான இடங்கள், ஹோட்டல் முதலான இடங்களில் உதிரி தொழிலாளியாக பெரும் எண்ணிக்கையிலும் வைத்து சுரண்டுகிறது. அவனை ஜனநாயகப்படுத்தாமல் மிக கவனமாக இந்த சமூக அமைப்பு கையாளுகிறது.


#2) மலிவு விலை மூல வளங்களும், மலிவு விலை சந்தைக்கான உற்பத்தி பொருட்களும்:

அ) சிறுவீத உற்பத்திகளான பட்டறை முதலாளிகளின் வளர்ச்சியை தடுப்பது. திருப்பூர் பனியன் பட்டறை முதலாளியால் திருப்பூரை தாண்டி சென்று விட முடியாது ஏனேனில் சந்தை ஒரு MNC கையிலோ அல்லது தரகு முதலாளி கையிலோ உள்ளது, இதன் மூலம் அவை காலாகாலத்தும் MNC, தரகு கம்பேனிகளுக்கு உற்பத்தி செய்யும் ஒரு தொங்கு சதையாகவே தேங்கி விடுவது.
சிறு முதலாளி, சுதந்திரமான தனது சந்தைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு, இன்று MNC, தரகு கம்பேனிகளிடம் தமது பொருளை விற்க்கிறான். ஒரு விவசாயியின் நிலையைப் போலவே அவனும் தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை வைக்க வக்கின்றி இருக்கிறான். ஏனேனில் உற்பத்தி நடந்தால்தான் அவனுக்கு சோறு, உற்பத்திக்கு MNCயும், தரகு முதலாளியும் காண்ட்ராக்ட் தர வேண்டும், அப்படி அவன் காண்ட்ராக்ட் தருவதற்க்கு அவன் சொன்ன விலைக்கு விற்க்க தயாராக இருக்க வேண்டும். இந்த கந்து வட்டி போன்ற விசச் சூழல் மலிவு விலையில் MNC, தரகு முதலாளிகளுக்கு சந்தைக்கான பண்டங்களை உற்பத்தி செய்து கொடுக்கிறது. இது ஓரளவு IT தொழிலாளிக்கும் பொருந்தும்.
ஆ) விவசாயத்தின் நவீன உற்பத்தி முறைகளை தடுப்பது - அதாவது பெரும் விவசாய கூட்டுப் பண்ணைகள், மையப்படுத்தப்பட்ட சந்தை, மையப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்திக்கான திட்டம் போன்றவற்றை தடுப்பது - இதன் மூலம் சிறுவீத உற்பத்தி மூறையால்(Ex: காண்ட்ராக்ட் Farming) தொடர்ந்து தனது தேவைகளுக்கு மட்டும் இந்திய விவசாயம் சேவை செய்வதை நிரந்தரமாக்குவது.
இதற்க்கு உதாரணம்தான் பூ விவசாயம், இறால் பண்ணைகள் etc. லாபம் எந்த பொருளுக்கு உள்ளது என்பதை அவன் நிர்னயிப்பதன் மூலம் அதனை நாம் உற்பத்தி செய்ய வைக்கிறான். சில மடையர்கள் லாபம் என்பதனை மட்டும் பார்த்து இந்த அடிமை விசச் சூழலை வளர்ச்சி என்கிறார்கள். ந்மது தேவைக்கு உற்பத்தி செய்வதை விடுத்து அவனது சந்தை தேவைக்கு உற்பத்தி செய்வதன் மூலம் பாரம்பரியமான நமது சுயசார்பு பொருளாதார வலைப்பின்னல் சின்னாபின்னமாகிவிட்டது. இந்தியாவின் சுயசார்பை இப்படி அடித்து நொறுக்குவதன் மூலம், அந்த சந்தையையும் அவனே கைப்பற்றிக் கொள்வது(கோதுமை பிரச்சனை).

#3) சந்தை:
சுயசார்பை உடைத்தெறிவதன் மூலமும், இந்திய தொழில் துறையின் வளர்ச்சி என்பது தனது வளர்ச்சியாக மட்டுமே இருக்கமாறும் பார்த்துக் கொள்வதன் மூலமும் இந்த பெரிய சந்தையை தன் இஸ்டம் போல சுரண்டுவது.
(எ-கா: பசுமைப் புரட்சி காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தமது காலவதியான ஆயுத மருந்துகளை பூச்சிக் கொல்லியாக உரமாக கொடுத்தது, தற்போதைய BT விதைகள், விதை நெல் சீர்திருத்தம், ரீட்டையல் பிசினெஸில் FDI, சுதந்திரம் அடைந்த குறுகிய காலத்திலேயே அம்பலமான 'கோக்'கின் ஆதிக்கம், பேட்டண்ட்ஸ் ரைட்ஸ் மூலம் மருந்து சந்தைய முழுமையாக கபளீகரம் செய்துவிட்டது etc).

ஆக,
மலிவு விலையில் கூலி,
மலிவு விலையில் வளங்கள்,
மலிவு விலையில் உற்பத்திப் பொருட்கள்,
உற்பத்தியின் ஒரு பெரும் பகுதியையும் கூட சிறு முதலாளி எனும் இழிச்சவாயனும், விவசாயியும் பார்த்துக் கொள்வது,

இவையெல்லாம் போக அவன் எதை உற்பத்தி செய்தாலும் வாங்கிக் கொள்ள அவனது வர்க்கத்தின் ஆதிக்கம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சந்தை. இவற்றை மீறி அவனுக்கு உள்ள பிரச்சனையெல்லாம் அவனிடையே உள்ள போட்டி போறாமைதான். இத்தனை சாதகங்கள் இருந்து வெற்றி பெருவதை வெற்றி என்று நாராயன்களும், அல்பை ஆசீமும் பெருமையாகச் சொல்வது நகைப்பிற்கிடமாகவும், உண்மையான சாதனையாளர்களை கிண்டல் செய்வதாகவும் உள்ளது.

ஆக, நாம் உற்பத்தி செய்யும் பொருளை அவன் வந்து இஸ்டம் போல விலை வைத்து வாங்கிச் செல்ல வாய்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்போம், அதே நேரத்தில் நமக்கு தேவையான பொருளை அவன் இஸ்டம் போல விலை வைத்து விற்று செல்வதையும் நாம் வாய் பார்த்துக் கொண்டிருப்போம்.
இதனைத்தான் நாம் இழிச்சவாயத்தனம் என்போம். சில, தொந்தி வளர்க்கும் அடிமைகள் இதனை வளர்ச்சி, வல்லரசு என்றும் சொல்லுவர். இந்த மேற்சொன்ன சூழல்தான் இன்று நிலவுகிறது. ஒரு பக்கம் கோதுமையை அவன் கேட்ட விலைக்கு விற்று இழிச்சவாயர்களான விவசாயிகள், இன்னொரு பக்கம் கோதுமை விலை ஆறு மாதத்தில் ஆறு ரூபாய் ஏறி நாம் அவனை வாய் பார்த்துக் கொண்டிருப்பது. இந்த சூழல் இன்னும் வெகு துலக்கமான வடிவத்தை பெறவில்லை ஆயினும் அப்படி வரும் வரை காத்திருக்க வேண்டும் எனும் முட்டாள்களுக்காக இந்த பதிவு அல்ல.

இந்த மூன்று காரணத்திற்க்காத்தான் சிதறிய சிறுவீத கிராம விவசாய உற்பத்தி முறையையும், சிறு தொழில் பட்டறை முறையையும் இந்த ஆளும் வர்க்கம் பேணி பாதுகாக்கிறது. ஒரு வேளை விவசாயத் துறையிலொ அல்லது சிறு தொழில் துறையிலோ செய்யப்படும் எந்த மாற்றமும் இந்த மூன்று காரணங்களுக்கு குந்தகம் வாராத வடிவத்திலேயே நடைபெறும். எடுத்துக்காட்டுகள்: காண்ட்ராக்ட் விவசாயம், ஊக வணீகத்தில் விவசாய பொருட்கள், சிறு தொழில் துறையின் வளர்ச்சி.


இந்த பாணி உற்பத்தி முறையின் விளைவு என்ன?

பெரும்பான்மை மக்கள் இத்தகைய சிதறிய சிறு வீத உற்பத்தி முறையிலேயே, வளர்ச்சியின்றி தலைமுறை தலைமுறையாக பினைந்திருப்பது ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவு, பண்பாட்டு வளர்ச்சியை தடுக்கிறது.
அவனை ஜனநாயகமில்லாதவனாகவே வைத்து சுரண்டுகிறது. இதன் பொருளாதார அம்சம் - அந்த சமூகத்தில் மிக பெரும் தொழில்புரட்சி என்றுமே நடந்து விட விடாமல் செய்கிறது.

ரோட்டில் எச்சில் துப்புவது, ஒன்னுக்கடிப்பது, சிக்னலை மதிக்காமல் அவனவன் இஸ்டம் போல நடந்து கொள்வது, சிறு பட்டறை முதலாளியின் வீட்டு வேலைகளையும் சேர்த்தே செய்வது, போலிஸ், நீதிபதி இவர்கள் எல்லாம் ஏதோ வானத்து தேவர்கள் போல நடந்து கொள்வதும் சாதாரண கிராமத்து ஏழை அவர்களுக்கு அது போன்றே மரியாதை கொடுப்பது - இவை எல்லாம் ஜனநாயகமின்மையின் அறிகுறிதான். சமூகம் எனபது சக மனிதர்கள் இயைந்து பழகும் ஒரு அமைப்பு, இதில் அனைவருக்கும் உரிமை, பொறுப்பு உள்ளது என்ற புரிதலெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு இல்லையென்பதுதான் - இது போல பிறர் உரிமையில் தலையிடும் நடவடிக்கைகளையும், பிறரிடம் அடிமை போல நடந்து கொள்ளும் நடவடிக்கைகளையும் ஒருங்கே மேற்கொள்ள செய்கிறது.
அராஜகமும், அடிமைத்தனமும் ஒரே பொருளாதார அமைப்பு பெற்றெடுக்கும் பிள்ளைகள்தான். இதுதான் இயங்கியலின் விதி. இதைத்தான் ஜனநாயகமின்மை என்கிறோம்.
இது ஏன் இப்படி உள்ளது எனில் தனிப்பட்ட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு சிறுபட்டறை தொழிலாளி, ஒரு விவசாய கூலிக்கு இந்த சமூகம் இயைந்து இயங்குவது போன்ற ஜனநாயக அடிப்படைகளை புரிந்து கொள்ளும் உற்பத்தி முறை கிட்டவில்லை. பெரும் தொழிற்சாலை பாணி உற்பத்தியில் ஈடுபடுபவர்களிடம் இந்த பண்பாட்டை நாம் பெரும்பாலும் காணாலாம்(Exceptions இருக்கும்).
ஏனேனில் அவனது ஒவ்வொரு உற்பத்தி உறவிலும் அவன் கூட்டு உழைப்பினை உணர்கிறான். கூட்டு உழைப்பின் காரணமாக கட்டுப்பாடான தனது பங்களிப்பை செய்யும் கடமையை உணர்கிறான். எனவே தனது உரிமையையும், பிறரின் உரிமையையும் உணர்கிறான். உரிமைகளை மீறப்படும் போது உற்பத்தியில் ஏற்ப்படும் பிரச்சனைகளைப் பார்க்கிறான். ஒரே இடத்தில் தொழிலாளர்களை இணைத்து முதலாளியே அவனை அமைப்பாக ஆக்குகிறார். எனவே ஒற்றுமையின் வலிமையை உணர்கிறான். அவனிடம் இருந்து அடிமைப் புத்தி காணமல் போகிறது.
வேலை முடிந்தால், போட்டுக் கொண்டுள்ள சட்டையைத் தவிர வேலை சார்ந்த எந்த பொறுப்பும் கிடையாது என்பது அவனை சுதந்திர மனிதனாகாவும் - தான் வேறு தனது தொழிற்சாலை வேறு எனபதனையும் - தான் உண்மையில் அந்த தொழிற்சாலையின் ப்ரந்த தொழிலாளர்கள் எனும் பெரும் அமைப்பின் அங்கத்தினன் என்பதையும் உணர வைக்கிறது.

மாறாக, சிறுவீத உற்பத்தியில்(சிறு பட்டறை தொழிற்சாலை, விவசாயம்) விடிந்தால், பட்டறை முடிந்தால் படுக்கை என்று நாள் முழுவது கட்டுண்டு கிடக்கிறான். சுதந்திரம் தவிர்க்கிறான். கூட்டு உழைப்பின் பிரமாண்டத்தையும், முதலாளியே உருவாக்கிக் கொடுக்கும் ஒற்றுமையையும் அனுபவிக்கும் வாய்ப்பின்றி தான் பிறந்து வளர்ந்த நிலபிரபுத்துவ அடிமைத்தனத்தை பேணிக் காக்கும் நிலைக்குத் தள்ளப்படுகீறான். சமூகம், அரசு, வர்க்கம் என்பனவற்றைப் பற்றி சிந்திக்கவே நேரமில்லை என்பதிருக்க, அவனது உற்பத்தி முறைகளும் அதனை உணரவிடாமல் அவனை தொடர்ந்து ஏமாற்றியே சுரண்டுகின்றன.

இந்தியாவின் மிகப் பெரும்பான்மையினர் இது போன்ற உற்பத்தி முறையில்தான் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் இந்தியாவை ஜனநாயகம் இல்லாத நாடு என்கிறோம்.

ஜனநாயகம் என்பது சட்டத்திருத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசயமா?, இல்லை. அது சமூக பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம். அது சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் அலகு.

இந்தியாவில் பெரும் தொழிற்சாலைகள் ஒரு சிறு அளவிலான பிரிவினைரை மட்டுமே இது போன்ற தொழிற்சாலை பாணி ஜனநாயக உற்பத்தி முறைகளில் வைத்துக் கொண்டு, வாய்ப்புள்ள இதர பிரிவுகளையெல்லாம் சிறு பட்டறை முதலாளிகளிடம் காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். இதன் மூலம் இயல்பான முதலாளித்துவ வளர்ச்சி சமூகம் மொத்தத்திற்க்கும் பரவலாகிவிடாமல் தடுக்கப்பட்டு சமூகம் அழுகத் துவங்குகிறது.
இதை தடுக்க என்ன செய்யலாம்?

- இந்தியாவின் விவசாயத்தை ஏகாதிபத்தியங்களின் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின்நிலங்கள் என்ற அள்வைத் தாண்டி இம்மிகூட முன்னேற விடாமல் தடுக்கும் அரசையையும், அதிகாரிகளையும் என்ன செய்யலாம்?

- இந்தியாவின் சிறு தொழில் துறையையும் இதே நிலைமையில் வைத்து இந்தியா முழுமைக்குமுள்ள நடுத்தர வர்க்கத்தின் கையிலுள்ள் சிறு மூலதனத்தின் சுதந்திரத்தையும், அவர்களின் இயல்பான சாதிக்கும் தாகத்தையும் முடக்கிப் போட்டு , அவற்றையும் தனது சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின் நிலங்களாக வைத்திருக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

- இந்தியனுக்கு ஜனநாயகத்தை மறுக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

- இது பேசி தீர்க்க முடியக் கூடிய விசயமா? சீர்த்திருத்தத்தில் தீர்வு அடங்கியுள்ளதா? புரட்சி செய்யவோமா?

அசுரன்
More articles in: http://www.tamilcircle.net/

Tuesday, January 30, 2007

IT தொழிலாளியும் - ஆளவந்தானும் - நம்ம பாமரனும்!

ய்யா, இங்கன எழுதிறுக்கறத நாஞ் சொல்லைய்யா... நம்ம பாமரன் அண்ணாச்சி சொல்றாப்புல. இதுதான் IT துறையின் பொதுவான நிலைமைன்னு(அதாவது கடும் வேலையும், களி வெறியாட்டமும்) நான் நினைக்கலைய்யா. ஆனா இது மிகப் பெரும்பான்மையா அதுவும் குறிப்பா நம்ம BPO கொத்தடிமைக இப்படித்தான் லோல் படுறாங்கய்யா.



நம்ம பாமரன் - குறிப்பா இத சென்னையில நடந்த சில பல ரெய்டுகள், அதையடுத்து IT தொழிலாளர்களின் பிரதிநிதிகளும், அவர்களை சுரண்டுபவர்களின் பிரதிநிதிகளும் இரவு நேர வாழ்க்கைக்கு, கேளிக்கைக்கு ஆதரவாக கோரிக்கை வைத்த தருணத்தை மனதில் கொண்டு - எழுதியது எனத் தெரிகிறது. IT தொழிலாளி இந்த கோரிக்கை வைக்கிறதுல அவனோட உழைப்பின் களைப்பை போக்கும் தேவை தெரிகிறது. ஆனா அவனோட முதலாளி இந்த கோரிக்கை வைக்கிறதுல எங்க அவன் ஆக்கப்பூர்வமா வேற வகையில தன்னோட ஓய்வ செலவழிச்சு விளிப்படைஞ்சிறுவானோ அப்படிங்கற பயம் தெரியுது.

எது எப்படியாகினும், இது பிற எந்த துறையைச் சேர்ந்தவர்களை விடவும் IT மக்களுக்கு பொருந்தும் என்பதால் இங்க பதியுறேன். காட்டுத்தனமா முட்டி மண்டைய உடைசிக்க எல்லாரையும் கூப்பிடுறேன் சாமி..... வந்து ஜல்லிக்கட்ட பழைய ரத்த களறியோட ஆரம்பிங்க.... (நம்ம பெசல் காளை 'நாடோடி'க்கு சிறப்பு அழைப்பு வைக்க கடைமைப்பட்டுள்ளேன்).

எப்பா..... பெசல்(Special) IT ஜல்லிக்கட்டு விழா ஆர்கனைஸர் அசுரன கொஞ்சம் பாத்து முட்டுங்கபா.... போன தடவ வாங்குன அடியே கொஞ்சம் அதிகந்தான்.

சமீபத்துல ஒரு மெயில் வந்தது சாமி... அதுல கார்ல போற ஒருத்தன் மேல கல்ல விட்டு எறிவான் ஒரு சின்னப் பயபுள்ள. கார நிப்பாட்டி இன்னாடா இப்படி கார கண்டம் ஆக்கிட்டயேடான்னு கேட்டதுக்கு அப்பால அந்த பொடிப்பயபுள்ளயோட சொல்லுவான், அவனோட ஊனமான தங்கச்சிக்கு உதவி செய்றதுக்காக இவன கல்ல விட்டு அடிச்சி நிப்பாட்டுனேன்னு. கட்சில கதையொட மாரல்னு இன்னா சொல்வாங்கன்னா,

நீ வாழ்க்கைல இத்த மாதிரிதான் வேக போயினுக்கிற...

எத்த பத்தியும் கண்டுஹாம போயினுக்கிற....

உம் பொழப்ப மட்டும் பாத்துனே போயினுக்கிறா... (அத்து கூட சோக்கயில்லா... கொஞ்சம் செக்காயிகினுதான் கீது)

ஆனா... அப்பாலக்கூடி எவனாச்சும் உம் மண்டயில கல்லலா அடிச்சு நிப்பாட்டும் போது இத்த நீ ஃபீல் பன்னக் கூடாது. இத்ததான் பாமரனும் சொல்றாரு. அவ்வள்வுதாம்பா....

ஸ்டார்ட் மூசிக்....

அசுரன்


Related Article:

#1 அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!

தமிழ் மக்கள் இசை விழா - நிகழ்ச்சிநிரல்

தமிழ் மக்கள் இசை விழா
- பதினான்காம் ஆண்டு

___________________________________________________________________________ மறுகாலனிய, பார்ப்பனியப் பண்பாட்டுப்படையெடுப்பிற்கெதிரான போர் முழக்கம்.
___________________________________________________________________


பிப்ரவரி 24, 2007 சனிக்கிழமை
_________________________
தஞ்சை-திருவள்ளுவர் திடல்
__________________
காலை : கருத்தரங்கம்
_______________________
மாலை : கலை நிகழ்ச்சிகள்
____________________




காலனியாதிக்க எதிர்ப்பு மரபு !
மறுகாலனியாக்கம் எதிர்த்து முழங்கு !



அன்பார்ந்த உழைக்கும் மக்களே,


ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போர், தென்னகத்தில்தான் முதன்முதலில் மூண்டெழுந்தது. திப்பு, மருது, கட்டபொம்மன், ஊமைத்துரை, சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, தூந்தாஜி வாக் என எண்ணற்ற வீரர்கள் இந்த விடுதலைப் போரில் உயிர் துறந்திருக்கின்றனர்.


இது மன்னர்களும் படைவீரர்களும் மட்டும் நடத்திய போர்அல்ல; ஆயிரக்கணக்கான மக்களும் விவசாயிகளும்பங்கு கொண்ட மாபெரும் மக்கள் போர். 1800-01 ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் நடைபெற்ற இந்தப்போர்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்.


ஆனால் பெருமை மிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. 1806 வேலூர் சிப்பாய் புரட்சி என்பது இந்த முதல்சுதந்திரப் போரின் வீரமிக்க முடிவுரை.


அந்த வீரம் செறிந்த வேலூர் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு.


வட இந்தியா முழுவதும் காட்டுத்தீ போலப் பற்றிப்படர்ந்து ஆங்கிலேய அரசையே அலறவைத்த 1857சுதந்திர போருக்கு இது 150ஆம் ஆண்டு.


வ.உ.சி யின் 'சுதேசிக் கப்பல் கம்பெனி' துவங்கப்பட்டதற்கு இது நூற்றாண்டு.


விடுதலைப் போரின் விடிவெள்ளி, பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டு.


நேரடிக் காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடிய மறுகாலனியாதிக்கம் இன்று நம் நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சூழலில், அன்றைய விடுதலைப் போரின் வீரமரபை இந்த இசைவிழாவில் நினைவு கூர்கிறோம். தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுவணிகர்கள் போன்ற எல்லாத் தரப்பு மக்களையும் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கிறோம்.


****************
தங்கள் நன்கொடைகளை அனுப்பி இசை விழாவினை சிறப்பிக்கலாம்.
****************


காசோலைகளாக அனுப்பவும்.

Name: paanumathi srinivaasan
Bank : State Bank of India
Bank Code No : 1852
Account No : 10098061432



அனுப்ப வேண்டிய முகவரி:

இரா.சீனிவாசன்,
எண் - 4, 5-வது தெரு,
ஜெகந்னாதபுரம்,
சேத்துப்பட்டு,சென்னை- 600 031


***
மேல் விவரங்களுக்கு புத்தகப்பிரியன் வலைப்பூவை அனுகவும்.


நன்றி புத்தகப் பிரியன்,

அசுரன்


****************************************************
தோழர் சபாபதி சரவணனின் சிறப்பு அழைப்பு:
****************************************************

வலையுலக தோழர்களில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதை இங்கோ அல்லது எனக்கு தனிமடலிலோ (wewakeananda@yahoo.com) தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி. எல்லோரும் சந்தித்து மகிழ ஆவல்.
ஒரு முக்கிய குறிப்பு: எல்லா ஆண்டு போலவும் இவ்வாண்டும் 10 ரூபாய் மாட்டுக் கறிச் சாப்பாடு விழா அரங்கத்தில் கிடைக்கும். என்னைப் போல் சில்லி பீப் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.



தமிழ் மக்கள் இசை விழா - நிகழ்ச்சிநிரல்





Wednesday, January 17, 2007

பொங்கலும், இந்துத்துவ வெறியர்களும்!!

பதிவில் நான் சொல்ல வந்த விசயம் கூர்மையாக இல்லையென்று படித்த பலரும் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததால் சில பகுதிகளை சேர்த்துள்ளேன்.

எந்த ஒரு மதத்தை மிக நேர்த்தியாக கடைபிடிப்பவருக்கும் அதன் சம்பிரதாயங்களை மீறுவதில் சிக்கல் உள்ளது. இதில் புகுந்துதான் இந்து/பார்ப்ப்னிய மத வெறியர்கள் பொங்கல் பண்டிகை விசயத்தில் மத வெறி அரசியல் செய்கிறார்கள்.

அவர்கள் இந்து மதத்தவர்கள் கிருத்துவ பண்டிகை கொண்டாட முடியும் போது ஏன் இஸ்லாம் மதத்தவரால் இந்து பண்டிகை கொண்டாட முடிவதில்லை என்பதை சொல்லி மத வெறி தூண்டுகிறார்கள்.

நான் இங்கு மதத்தின் அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடுவது, பண்பாட்டு நடவடிக்கைகளை வரம்பிட்டுக் கொள்வதை பற்றி எதுவும் பேசப் போவதில்லை. அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு.

ஆனால், இந்த அம்சத்தை ஏதோ இந்து பார்ப்ப்னியம் மதம் ஆக ஜனநாயகமானது என்ற பொய்யின் பலத்தில் மாற்று மதத்தை கடைபிடிப்பவர் மீது வெறுப்பை உமிழ பயன்படுத்தி மக்களை பிளவு படுத்தும் பட்சத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்க ,முடியாது.
கிருத்துவ மத பண்டிகையை கொண்டாட முடிந்த ஒரு பார்ப்பனரால், தலித் வீட்டு திருமணச் சடங்கையோ அல்லது தலித் விழாக்களையோ கொண்டாட முடியாது ஏன்?

ஏனேனில், கிருத்துவ பண்டிகை கொண்டாடுவதில் இவரது சம்பிரதாயத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஆனால் தலித் விழாவை கொண்டாடுவதில் இவரது ச்ம்பிரதாயத்துக்கு குந்தகம் வருகிறது. இதே விசயம் இந்து பண்டிகை கொண்டாடுவதில் இஸ்லாமியர் தனது சம்பிரதாயத்தை மீற வேண்டிய விசயம் இடிக்கிறது. ஆக இந்த உண்மையை வசதியாக மறைத்து விட்டுத்தான் சாணியடிக்கிறார்கள் ஜாடாயு கோஸ்டிகள்.

இந்தியாவில் இஸ்லாம், கிருத்துவம் தவிர்த்த அனைத்து வழிபாட்டு முறைகளும் சாதி அடிப்படையில் உள்ளது, மத அடிப்படையில் இல்லை. அதனால்தான் சாதி அடிப்படையில் சம்பிரதாயங்களை மீறுவதில் இந்து/பார்ப்ப்னியத்துக்க் சிக்கல். மத அடிப்படையில் சம்பிரதாயங்களை மீறுவதில் இஸ்லாம் கிருத்துவத்துக்கு சிக்கல்.

இதில் இஸ்லாமியர் விசயத்தை மட்டும் பேசி மத வெறியை அவர்கள் கிளப்புவதையே நான், செந்தழல் ரவி, யெஸ். பாலபாரதி உள்ளிட்ட பலரும் கண்டித்தார்கள். அம்பலப்படுத்துவது என்றால் எல்லா மதங்களிலும் உள்ள இந்த சகிப்புத்தன்மையற்ற நிலையை அம்பலப்படுத்துவதுதான் சிறப்பாக இருக்க முடியும்.

இதை சுட்டிக் காட்டவே பார்ப்ப்னிய மதத்திலும் சம்பிரதாயங்களை மீறுவதில் மிக மோசமான ஆகக் கேடான சகிப்புத் தன்மையற்ற நிலை நிலவுவதை முன்னிறுத்தி கேள்வி எழுப்பினோம்.
அவ்வளவுதான் விசயம்...
**********************
பொங்கல் பண்டிகை இந்து பண்டிகையா இல்லையா என்பதை நான் இங்கு விவாதிக்க போவதில்லை. அதை எல்லாரும் கொண்டாட வேண்டுமா இல்லையா என்பதையும் நான் இங்கு விவாதிக்க போவதில்லை.

ஆனால், இதை சாக்கிட்டு மத வெறி பிரச்சாரம் செய்யும் சில போலி தேசப் பற்றளார்களை நான் கேள்வி கேட்க்க வேண்டியுள்ளது.

இவர்கள் ஏற்கனவே இந்த பதிவில் இருமுறை கேட்ட கேள்விகளுக்கு (#1, #2) பதில் சொல்லும் நேர்மையின்றி தொடர்ந்து தமது மத வெறி பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். முதுகெலும்பை கழட்டி வைத்துவிட்டால் இப்படியெல்லாம் மான ரோசமின்றி செயல்படுவது சுலபமே.

பொங்கல் இந்து பண்டிகைதான் ஆயினும் அது இந்திய பண்டிகை எனவே இஸ்லாமியரும் கூட தமது மத நம்பிக்கைக்கு விரோதமாக இருப்பினும் கூட அதனை கொண்டாட வேண்டும் என்று அரைக்கூவும் புண்ணிய ஆத்மாக்களே...


இதன் ஊடாக இந்திய மரபுகள் எல்லாம் இந்து மரபு என்ற பொய்யையும், இஸ்லாமியர் அந்த மரபுகளுக்கு எதிரான தேசத் துரோகி என்ற கருத்தையும் உணர்வு தளத்தில் பதியும் நயவஞ்சகர்களே...



Questions:

இதே போல தமிழகத்தில் கொண்டாடப்படும் நாட்டார் வழிபாட்டு கிடா வெட்டு சடங்குகளில் பங்கேற்று மாமிசம் சாப்பிட பார்ப்பன பண்பாட்டு மத நம்பிக்கைகளை விட்டொழித்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


அது கூட வேண்டாம் பொங்கலுக்கு மறு நாள் கறிநாள் கொண்டாடுவோமே அதை எல்லா இந்துக்களும் கொண்டாட இந்த புண்ணியாத்மாக்கள் இதே போல கோரிக்கை வைக்க வேண்டும்.

கோழிக் கறி குருமாவை மூக்க முட்ட வெட்டி கோழிகளுக்கு ஆத்மா சாந்தி கிடைக்க வழிவகை செய்ய உதவிட இந்த நன்னாளாம் கறி நாளை எல்லா இந்து மதத்துக்காரர்களும் - குறுகிய பார்ப்ப்னிய மத கண்ணோட்டத்தை களைந்து அகண்ட 'இந்து'யா பண்பாட்டின் படி கொண்டாட அவர்கள் அரைக் கூவ வேண்டும்.

செய்வார்களா? பண்டிகைக்கு வருவார்களா? குறைந்தது இந்த கேள்விகளுக்காவது பதில் சொல்வார்களா?

இந்த ரெட்டை நாக்குக்காரர்களை எதைக் கொண்டு அடிப்பது? பிய்ந்த செருப்பு?....

சே.... சே.... அது உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த செருப்பின் உழைப்பை அசிங்கப்படுத்துவதாகும்.

அசுரன்

Related Articles:

#1) இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!

#2) இந்து/பார்ப்பினிய மதம்-பிரியானி-கறிவேப்பிலை

Tuesday, January 16, 2007

சுஜாதா கதையும், அவலச் சுவை அரசியலும்

சுஜாதா கதை குறித்து தமிழ்மணத்தில் விவாதம் நடந்தேறி வருகிறது.

முதல் விசயம் சுஜாதா தனது சாதி வெறியை மிக அப்பட்டமாக்வே ஆனந்த விகடனில் பிராமன சங்க விழாவுக்கு பிற்பாடு அறிவித்தார். இந்த கதையும் கூட பெரியார் சிலை விவகாரத்தை ஒட்டி வருகிறது என்ற அம்சத்தில் மிகத் தெளிவாக பார்ப்ப்னியம் அவலச் சுவை நிரம்ப தன்னை வெளிக்காட்டி ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தனிக்கிறது என்பதாக்த்தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

சிலர் இந்த கதையில் சாதி வெறி இல்லை என்று உண்ர்வதாக தெரிகிறது. அவர்களுக்கு இந்த கதையின் அரசியலை சொல்லுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அதற்க்கு முன்பு பார்ப்பன சங்க விழாவில் இதே சுஜாதா பார்ப்பன சாதி கஸ்டப்படுவதாகவும் அது ஒற்றுமையுடன் தனது உரிமைக்காக போராட வேண்டும் என்றும் கூறியதை மனதில் கொள்க. இந்த கதை அந்த கோரிக்கைக்கு அவர் நியாயமாக நடந்து கொள்வதை குறிக்கிறது.

இந்த கதையைப் பொறுத்த வரை, பார்ப்பன சாதி வெறியை பெரியார் சிலை உடைப்பு எதிர்வினை சம்பவங்களின் மூலம் புனிதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சுஜாதா. இதன் மூலம் ஏற்கனவே சமூகத்தில் நடுத்தர வர்க்கத்திடம் நிலவும் பார்ப்னிய பண்பாடு உயர்ந்தது என்ற மனநிலையை தனது அரசியலுக்கு சாதகமாக அறுவடை செய்வது. இதற்க்கு ஏற்கனவே பார்ப்ப்ன சாதி மிக கஸ்டப்படுகிறது என்ற ஒரு கருத்தை ஊடகங்கள் மூலம் பெருக்கிக் காட்டியுள்ள பொதுக் கருத்தை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

இவை எப்படி கதையில் வருகிறது? பாலபாரதி தளத்தில் எதிர்வினை செய்தவர்களில் பெரும்பாலோரின் கருத்துக்களிலிருந்து இந்த கதையை போஸ்ட்மார்டம் செய்தால்தான் விசயங்களை புரிய வைக்க முடியும் என்று கருதுகிறேன்.

#1) வயதான அந்த பார்ப்பன தாத்தா ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருந்து இன்று வலிமையிழந்ததாக பார்ப்னியத்தை காட்ட பயன்படும் உருவகம். இது பார்ப்ப்னியத்தின் இன்றைய அரசியல் ஆயுதமாகிய அவலச் சுவைக்கு ஏற்ற பாத்திரப் படைப்பு. சுஜாதா முதிர்ந்த எழுத்தாளர்தான்.

#2) கலைச்செல்வி பாத்திரம் ஆதிக்கத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியைக் காட்டுகிறது. இதுவும் பார்ப்ப்னிய அரசியல் நிலைப்பாடுதான். அதாவது தாழ்த்தப்பட்டவர்களை ஒரு பக்கம் சுரண்டினாலும் இன்னொரு பக்கம் நல்ல வசதியுடனும் உள்ளனர் பிற்ப்படுத்தபட்டவர்கள் என்ற பார்ப்ப்னிய அரசியல். ஆக, நல்ல நிலையில் உள்ள பிற்ப்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் இங்கு பார்ப்ப்னியத்துக்கு கை கொடுக்கிறார். பார்ப்ப்னியமும் வேறு வழியின்றி அவருடன் சேர்கிறது. இதுதான் மேசேஜ். இதைத்தான் இங்கு தமிழ்மணத்தில் நேரடியாக சொல்லி விவாதம் செய்ய வழியின்றி வெறுத்து போயுள்ளனர் பலர். அவர்கள் இந்த கதையை பயன்படுத்தலாம்.

#3) பெரியார் சிலை உடைப்பு அரசியலை இந்த இந்துத்துவ நிலைப்பாட்டுக்கு வலுக் கொடுக்கும் உணர்வுத்தளமாக பயன்படுத்திக் கொண்டு நடுத்தர வர்க்கத்தின் மனதை அள்ளிக் கொள்ள முயன்றுள்ளார். கதையில் 'அடி வாங்க முடியல' என்ற வரிகள்தான் அவர் சொல்ல வரும் மிக முக்கியமான அரசியல் மெசேஜ். பெரியார் சிலை உடைப்பு சம்பவங்களின் டிராமாட்டிக்கலான உணர்வு நிலையை, பார்ப்ப்னியம் ஏதோ இங்கு திரும்ப திரும்ப அடிவாங்கி கொண்டிருப்பதாக அர்த்தம் வரும் வகையில் காட்டுகிறார். உண்மை என்னவெனில் பார்ப்ப்னியம் தமிழகத்தில் பெரிதாக ஒன்றும் அடிவாங்கி விடவில்லை. தமிழில் பூசை செய்யக் கூட போலிசிடம் அடிவாங்கி ஓட வேண்டிய நிலைதான் உள்ளது. இந்த உண்மையை அந்த பெரிய்வரின் வயதான தோற்றம் மறைக்கிறது.

#4) பார்ப்ப்னிய சடங்குகளை அந்த பெரியவர் அமெரிக்காவில் செய்ய விரும்புவதும். அதற்க்கு இங்கு அடிவாங்க முடியவில்லை என்று சொல்லுவதை. அமெரிக்காவில் அதற்க்கு மரியாதை இருக்கு இங்கு முடியல..... நம்ம காலம் முடிஞ்சிருச்சு என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இன்னும் சிறப்பாக சொன்னால் கலி முத்திடிச்சு.... என்று கொள்ளலாம்.

கதையிலேயே ஒழிந்துள்ள உண்மைகள் என்னவாக உள்ளது:
இந்த கதை IT துறையில் ஏற்ப்பட்டுள்ள வளர்ச்சியை ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சியாக கருதும் நடுத்தர வர்க்க மனோபாவத்தையே தனக்கும் பயன்படுத்திக் கொள்கிறது. அப்படியெனில் அந்த துறையில் இந்த பார்ப்பினியத்தின் நிலை என்ன என்று பார்ப்போம். இந்த விசயத்தை கொஞ்சம் கதைக்கு வெளியே போய் பார்த்து விட்டு கதைக்குள் மீண்டும் வந்தால் கதைக்குள்ளேயே சுஜாதா மறைத்துள்ள் விசயங்கள் தெரிய்வரும்
இன்று IT துறை சார்ந்தவை மட்டுமே வேலை வாய்ப்பை தருகின்றன். இங்கு இடஓதுக்கீடு என்பது செல்லாகாசாகி விட்டதை கவனிக்கவும். இந்த IT துறையிலும் தமிழர்களைத் தவிர்த்து இந்தியாவின் மீதி எல்லா பகுதியை சேர்ந்தவர்களிடத்திலும் பார்ப்ப்னிய/உயர் சாதியைச் சேர்ந்தவர்களே அதிகமாக வேலையில் உள்ளனர்.

IT துறையில் இந்த சாதவீத கணக்கு 5% கம்மியாக கிராமப்புறம்(கிராமப்புறத்திலிருந்து பார்ப்ப்பனர்கள் வெளியேறி பல பத்து வருடங்கள் ஆகிவிட்டது).

3% சதவீதத்திற்க்கும் கம்மியாக தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்தான் மிகப் பெரும்பான்மையாக உள்ளனர் IT துறையில் உள்ளனர்.
இன்னும் சொன்னால் வட இந்தியா என்று நாம் பார்க்கும் எல்லாமே வட இந்திய உயர் சாதிதான். உண்மையான வட இந்தியா தென் இந்தியாவைப் போல பல மடங்கு பின் தங்கித்தான் உள்ளது.

இந்த விகிதாச்சாரம் தமிழகத்தை சேர்ந்தவ்ர்களிடம் மாறுபடும். காரணம் இங்கு ஒப்பீட்டளவில் சமூக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டதும், நகர்மயமாக்கம் அல்லது முதலாளீத்துவ உற்பத்தி முறையின் பரந்துபட்ட வளர்ச்சியும்(50 கிமி ஒரு தொழில் நகரம்) இருப்பதும். இதனாலேயே தமிழகத்திலிருந்து இந்த சாதிப் பிரிவு பிரதிநிதித்துவம் மங்கலாகவே உள்ளது. ஆயினும் இதன் அர்த்தம் ஆதிக்க சாதிகள் ஆதிக்கத்தில் இல்லை என்பதல்ல. மாறாக அது மற்ற பகுதிகளை விட இங்கு கம்மி என்பதே ஆகும்.

சுஜாதா உருவகப்படுத்தும் பார்ப்பன சாதியின் அவலத்தில் வசதியாக அதே பார்ப்னிய சாதியின் பிரதிநிதியாக அய்யர் பாஷை பேசிண்டிருக்கும் அம்பி கிரிஷ் மறைக்கப்படுகிறான். இங்கு பார்ப்பினியம் அவலத்தில் அல்ல மாறாக ஆதிக்கத்தில் உள்ளது என்ற உண்மை மறைக்கப்படுகிறது.

ஆக, பார்ப்பினியம் ஒரு ஆதிக்க தத்துவமாக நிலைத்திருப்பது மறைக்கப்படுகிறது. கதையில் பூணுல் தாயாரிக்கும் வர்ணனை அந்த பண்பாட்டிற்க்கு புனித பிம்பம கட்டுகிறது.
அவன் ஒரு ஆண் என்பதும், இது ஒரு ஆணாதிக்க சமுதாயம் என்பதும் மறைக்கப்படுகிறது. அவன் கலைச் செல்வியிடம் கூட்டிண்டு போவேன் என்று அதட்டலாக சொல்லுமிடம் அமுக்கியே வாசிக்கப்படுகிறது. கலைச் செல்வியின் செவிப்பறையில் விழுந்து அவளை அமைதிப்படுத்தும் அந்த ஆணாதிக்க வரிகள், படிப்பவரின் செவிகளில் விழுவில்லை. அது சுஜாதா கையாண்ட திறமையான வடிவமைப்பு.

இதே கிரிஷ் அந்த பெண்ணை அதட்டி சந்திக்க விடாமலும் செய்யலாம். அந்தப் பெண்ணை கோவி. கண்ணன் தளத்தில் உள்ள கதை போல விவாகரத்தும் செய்யலாம். ஆனால், எங்குமே அந்த பெண்ணிற்க்கும் அப்பா அம்மா உண்டே என்ற விசயம் வரக் காணோம். ஏனேனில் இது ஆணாதிக்க சமுதாயம், அதுவும் ஒரு பார்ப்பனிய ஆணாதிக்கத்த சமூகம்.

1) வளர்ந்து வரும் ஒரே துறையிலும் 'அவாள்' ஆதிக்கம்தான் உள்ளது என்ற விசயம், என்ற உண்மை,
2) பார்ப்ப்னியம் தனக்கான பண்பாட்டு தளத்தை ஏற்கனவே உள்ள புனித பிம்ப கருத்தின் மூலம் வலுப்படுத்தி வருவதை - மிகத் திறமையாக மறைக்கிறது இந்தக் கதை.

சாதி வெறி கிரிஷ்ன் குடும்பத்திற்க்கு இல்லை என்று காட்ட, 'ஏற்பாடு செய்த திருமணம் தடை பட்ட'தால் கோபம் என்ற சப்பைக் கட்டு.

பார்ப்பன் சாதி வெறியை நேரடியாகவே பார்க்க வாய்ப்புள்ள சுஜாதா, தான் பார்த்தேயிராத 'பெட்ரோல் குண்டு போட்ட'வர்களைப் பற்றி வர்ணிக்கிறார். ரௌடிகளை கொண்டு போலி விசாரனை செய்வதை சொல்லும் சுஜாதா அது உண்மையா இல்லையா என்ற பரிசீலனைக்குக் கூட அவசியமில்லாமல் செய்து பார்ப்ப்னிய எதிர்ப்பாளர்களின் மீது சாணியடிக்கிறார். சுஜாதா எதைச் சொல்கிறார், எதை மறைக்கிறார் என்று காட்டுவதன் மூலம் அந்த கதையின் அரசியலை இங்கு முன்னிறுத்துகிறேன்.

இது தவிர்த்து சுஜாதா ஏன் இதே போன்று பல்வேறூ அரசியல் பிரச்சனைகளுக்கு கதை எழுதியதில்லை என்று கேள்வி எழுகிறது.
ஹோண்டா தொழிலாளர் அடிவாங்கியது, குஜராத் கலவரம், சிதம்பரம் கோயில் பிரச்சனை, கருவறை நுழைவு மறுப்பது, சங்கராச்சாரி, தமிழிசை இப்படி எண்ணற்ற விசயங்களில் தூண்டப்படாத சுஜாதாவின் கலை மனது, அயோத்தி மண்டபம் மண்டையொடைப்பில் தூண்டப்பட்டது எனில் அவரது ஆழ்மன அரசியல் என்ன என்ற கேள்வி எழுகிறது.
அவர் வெற்மனே கனேஷ் வசந்த என்று எழுதிக் கொண்டிருந்தால் நாமும் இதை வலுவாக கேட்க்கப் போவதில்லை. ஆனால் சில சம்பவங்களில் மட்டும அரசியல் செய்வது என்று அவர் எழுத்த் தொடங்கினால், அவரது செலக்டிவ் அம்னீசியாவுக்கு காரணாமான சார்பு நிலையை நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

ஏனேனில் இது பார்ப்பினியம் அவலச் சுவையுடன் மிகக் கேவலமான தந்திரோபாயங்களுடன் தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும் காலம்.

அசுரன்
Related Article:

Related Posts with Thumbnails