TerrorisminFocus

Thursday, February 15, 2007

இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்

ந்திய அரசு தனது வர்க்க சார்பை விட முடியாமல் தவிக்கிறது. விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பான துறை என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதனை முன்னிட்டுதான் விவசாயத்தில் குறைந்த பட்ச GDP வளர்ச்சியில்லையெனில் இந்தியாவின் GDP இலக்கை அடைய முடியாது என்று அலறுகிறார்கள் பா. சி., மண்டேக் சிங் அலுவாலியா முதலான அமெரிக்க புரோக்கர்கள்.
ஆயினும், இந்த அலறலை மக்கள் மீதான அன்பால் ஏற்ப்பட்ட அலறல் என்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் உண்மையில் இந்திய விவசாயத்தை வளர்க்க அதில் முதலாளித்துவ பாணி உற்பத்தி முறைகளை கொண்டு வர வேண்டும். ஆனால் இதனை செய்யும் தைரியமும், தனது சொந்த வர்க்கங்களுக்கு துரோகம் செய்யும் நெஞ்சுரமும் இந்த கைக்கூலிகளுக்கு இல்லை.

முதலில், அது என்ன முதலாளித்துவ பாணி உற்பத்தி முறை?

மிகப் பெரிய அளவில், ஒரே இடத்தில், மையப்படுத்தப்பட்ட முறையில் நவீன கருவிகள் உதவியுடன், பெரும் எண்ணிக்கையில் விஞ்ஞான முறைகளின் துணையுடன் செய்யப்படும் உற்பத்தி முறைதான் முதலாளித்துவ உற்பத்தி முறை. இதனை மேலைநாடுகளில் பார்த்திருக்கலாம். பல லட்சம் ஏக்கருக்கு ஒரே ஒரு பயிர்தான். விமானம் மூலம் உரம்-பூச்சி மருந்துகள், நீர் பாய்ச்சுவது மையப்படுத்தப்பட்டிருக்கும், ஒரு குறிப்பிட்ட பெரிய சந்தையை மனதில் கொண்டு திட்டமிடப்பட்ட உற்பத்தி, அதி நவீன ராட்சச யந்திரங்கள் மூலம் அறுவடை. இப்படி ஒரு தொழிற்சாலை போலவே அங்கு விவசாயம் நடைபெறுகிறது. இன்னும் சொன்னால் அங்கு விவசாய முதலாளியும், தொழிலாளியும்தான் உண்டு. விவசாயியோ அல்லது நிலபிரபுவோ கிடையாது.

ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பின்னிபிணைந்துள்ள விவசாயமோ இன்னும் சிதறிய சிறுவீத உற்பத்தி எனும் நிலபிரபுத்துவ முறையையே பின்பற்றி வருகிறது. அதிலிருந்து மேலேறி அடுத்தக் கட்டத்திற்கு வரவிடாமல் இந்தியாவின் பொருளாதாரம் ஏகாதிபத்திய முடக்கு வாதத்தால் அவதியுறுகிறது. இதைத்தான் நாம் அரைக்காலனியம், அரை நிலபிரபுத்துவம் என்கிறோம்.

ஏன் இந்திய அரசால் விவசாயத்தை வளர்க்க முடியவில்லை:

விவசாயத்தை அடுத்தக் கட்டத்திற்க்கு கொண்டு வரும் முயற்சிகள் பெரும் நிலவுடமையாளர்களுக்கும், விவசாய உற்பத்தி பொருட்களின் விற்பனை பிரிவு, சந்தை பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் புரோக்கர் கும்பல்களுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என்பதால்தான் இந்த அரசு அத்தகைய நிலச் சீர்திருத்தம், விவசாய சீர்திருத்த நடவடிக்கைகளை செய்வதில்லை. இது பிரச்சனையின் ஒரு அம்சம் மட்டுமே.

இன்னொரு முக்கிய அம்சம் ஏகாதிபத்தியத்தின் சந்தை தேவையையும், மூல வளங்களின் தேவையையும் நிவர்த்தி செய்யும் ஒரு இழிச்சவாய நாடு என்று முத்திரையை இந்தியாவிற்க்கு தொடர்ந்து குத்துவதில் உள்ள ஆர்வம். இந்த அம்சம் மிக குறிப்பாக உலகமயத்திற்க்கு பிறகு பெரும் முக்கியத்துவம் பெருகிறது.
ஏனேனில், உலகமயத்திற்க்கு பிற்ப்பாடு மேலே சொன்ன முதல் அம்சமான - நிலவுடைமையாளர் மற்றும் விற்பனை மற்றும் சந்தை பிரிவுகளும் கூட MNC, தரகு முதலாளிகளுக்கு திறந்து விடப் படுவதுதான்.

இந்திய விவசாயத்தை இப்படி அரை நிலபிரபுத்துவமாக வைத்திருப்பதில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு என்ன அரசியல் இருக்க முடியும்?

மூன்று நோக்கங்கள்,

#1) குறை கூலி மனித வளம்:
குறைந்த கூலிக்கு, சொன்னதை அடிமை போலச் செய்யும் உழைப்பாளர்களை தொடர்ந்து உருவாக்கி(பெற்றெடுத்து வளர்த்து) செய்வதற்க்கு கிராம உற்பத்தி உறவுகளை நிரந்தரமாக பாதுகாப்பது அவசியம். இது குறித்து இந்த கட்டுரையில் 'இந்த பாணி உற்பத்தி முறையின் விளைவு என்ன?' என்ற தலைப்பின் கீழ் ஓரளவு விளக்கியுள்ளேன்.

இந்த பாணி உற்பத்தி முறை எப்படி அவனுக்கு குறைந்த கூலி ஆட்களை பெற்றெடுக்கிறது,

விவசாயத்தை சுதாட்டம் போல மாற்றி, விவசாயியை நிலத்தை விட்டு ஒரு பக்கம் விரட்டுகிறது இந்த பொருளாதாரம். இதன் மூலம் நகரங்களில் குறைந்த கூலிக்கு சுரண்ட தொடர்ந்து மனித வளம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் அவனது வாழ்வை நகரங்களில் உத்திரவாதப்படுத்தாமல் கிராமம் பாதி நகரம் பாதி என்று அவனை அலைக்கழிக்கிறது. இதன் மூலம் அவன் நகரத்தில் குறை கூலிக்கு சம்பாதித்து அதை கிராமத்தில் மீண்டும் முதலிடுகிறான். அந்த முதலீட்டில் உற்பத்தியாகும் விவசாய பொருளை மிக குறை கூலிக்கு இந்த சமுகமே நுகர்கிறது. இங்கு கிராம நகர(Cost of Living) வேறுபாடு கிராமத்து கூலி தொழிலாளியை எப்படி ட்புள் சுரண்டலுக்கு உட்படுத்துகிறது என்பது புலனாகும். நகரத்திலோ அவனை தற்காலிக தொழிலாளியாக சிறு அளவிலும், சிறு பட்டறைகளில், கட்டுமான இடங்கள், ஹோட்டல் முதலான இடங்களில் உதிரி தொழிலாளியாக பெரும் எண்ணிக்கையிலும் வைத்து சுரண்டுகிறது. அவனை ஜனநாயகப்படுத்தாமல் மிக கவனமாக இந்த சமூக அமைப்பு கையாளுகிறது.


#2) மலிவு விலை மூல வளங்களும், மலிவு விலை சந்தைக்கான உற்பத்தி பொருட்களும்:

அ) சிறுவீத உற்பத்திகளான பட்டறை முதலாளிகளின் வளர்ச்சியை தடுப்பது. திருப்பூர் பனியன் பட்டறை முதலாளியால் திருப்பூரை தாண்டி சென்று விட முடியாது ஏனேனில் சந்தை ஒரு MNC கையிலோ அல்லது தரகு முதலாளி கையிலோ உள்ளது, இதன் மூலம் அவை காலாகாலத்தும் MNC, தரகு கம்பேனிகளுக்கு உற்பத்தி செய்யும் ஒரு தொங்கு சதையாகவே தேங்கி விடுவது.
சிறு முதலாளி, சுதந்திரமான தனது சந்தைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு, இன்று MNC, தரகு கம்பேனிகளிடம் தமது பொருளை விற்க்கிறான். ஒரு விவசாயியின் நிலையைப் போலவே அவனும் தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை வைக்க வக்கின்றி இருக்கிறான். ஏனேனில் உற்பத்தி நடந்தால்தான் அவனுக்கு சோறு, உற்பத்திக்கு MNCயும், தரகு முதலாளியும் காண்ட்ராக்ட் தர வேண்டும், அப்படி அவன் காண்ட்ராக்ட் தருவதற்க்கு அவன் சொன்ன விலைக்கு விற்க்க தயாராக இருக்க வேண்டும். இந்த கந்து வட்டி போன்ற விசச் சூழல் மலிவு விலையில் MNC, தரகு முதலாளிகளுக்கு சந்தைக்கான பண்டங்களை உற்பத்தி செய்து கொடுக்கிறது. இது ஓரளவு IT தொழிலாளிக்கும் பொருந்தும்.
ஆ) விவசாயத்தின் நவீன உற்பத்தி முறைகளை தடுப்பது - அதாவது பெரும் விவசாய கூட்டுப் பண்ணைகள், மையப்படுத்தப்பட்ட சந்தை, மையப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்திக்கான திட்டம் போன்றவற்றை தடுப்பது - இதன் மூலம் சிறுவீத உற்பத்தி மூறையால்(Ex: காண்ட்ராக்ட் Farming) தொடர்ந்து தனது தேவைகளுக்கு மட்டும் இந்திய விவசாயம் சேவை செய்வதை நிரந்தரமாக்குவது.
இதற்க்கு உதாரணம்தான் பூ விவசாயம், இறால் பண்ணைகள் etc. லாபம் எந்த பொருளுக்கு உள்ளது என்பதை அவன் நிர்னயிப்பதன் மூலம் அதனை நாம் உற்பத்தி செய்ய வைக்கிறான். சில மடையர்கள் லாபம் என்பதனை மட்டும் பார்த்து இந்த அடிமை விசச் சூழலை வளர்ச்சி என்கிறார்கள். ந்மது தேவைக்கு உற்பத்தி செய்வதை விடுத்து அவனது சந்தை தேவைக்கு உற்பத்தி செய்வதன் மூலம் பாரம்பரியமான நமது சுயசார்பு பொருளாதார வலைப்பின்னல் சின்னாபின்னமாகிவிட்டது. இந்தியாவின் சுயசார்பை இப்படி அடித்து நொறுக்குவதன் மூலம், அந்த சந்தையையும் அவனே கைப்பற்றிக் கொள்வது(கோதுமை பிரச்சனை).

#3) சந்தை:
சுயசார்பை உடைத்தெறிவதன் மூலமும், இந்திய தொழில் துறையின் வளர்ச்சி என்பது தனது வளர்ச்சியாக மட்டுமே இருக்கமாறும் பார்த்துக் கொள்வதன் மூலமும் இந்த பெரிய சந்தையை தன் இஸ்டம் போல சுரண்டுவது.
(எ-கா: பசுமைப் புரட்சி காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தமது காலவதியான ஆயுத மருந்துகளை பூச்சிக் கொல்லியாக உரமாக கொடுத்தது, தற்போதைய BT விதைகள், விதை நெல் சீர்திருத்தம், ரீட்டையல் பிசினெஸில் FDI, சுதந்திரம் அடைந்த குறுகிய காலத்திலேயே அம்பலமான 'கோக்'கின் ஆதிக்கம், பேட்டண்ட்ஸ் ரைட்ஸ் மூலம் மருந்து சந்தைய முழுமையாக கபளீகரம் செய்துவிட்டது etc).

ஆக,
மலிவு விலையில் கூலி,
மலிவு விலையில் வளங்கள்,
மலிவு விலையில் உற்பத்திப் பொருட்கள்,
உற்பத்தியின் ஒரு பெரும் பகுதியையும் கூட சிறு முதலாளி எனும் இழிச்சவாயனும், விவசாயியும் பார்த்துக் கொள்வது,

இவையெல்லாம் போக அவன் எதை உற்பத்தி செய்தாலும் வாங்கிக் கொள்ள அவனது வர்க்கத்தின் ஆதிக்கம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சந்தை. இவற்றை மீறி அவனுக்கு உள்ள பிரச்சனையெல்லாம் அவனிடையே உள்ள போட்டி போறாமைதான். இத்தனை சாதகங்கள் இருந்து வெற்றி பெருவதை வெற்றி என்று நாராயன்களும், அல்பை ஆசீமும் பெருமையாகச் சொல்வது நகைப்பிற்கிடமாகவும், உண்மையான சாதனையாளர்களை கிண்டல் செய்வதாகவும் உள்ளது.

ஆக, நாம் உற்பத்தி செய்யும் பொருளை அவன் வந்து இஸ்டம் போல விலை வைத்து வாங்கிச் செல்ல வாய்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்போம், அதே நேரத்தில் நமக்கு தேவையான பொருளை அவன் இஸ்டம் போல விலை வைத்து விற்று செல்வதையும் நாம் வாய் பார்த்துக் கொண்டிருப்போம்.
இதனைத்தான் நாம் இழிச்சவாயத்தனம் என்போம். சில, தொந்தி வளர்க்கும் அடிமைகள் இதனை வளர்ச்சி, வல்லரசு என்றும் சொல்லுவர். இந்த மேற்சொன்ன சூழல்தான் இன்று நிலவுகிறது. ஒரு பக்கம் கோதுமையை அவன் கேட்ட விலைக்கு விற்று இழிச்சவாயர்களான விவசாயிகள், இன்னொரு பக்கம் கோதுமை விலை ஆறு மாதத்தில் ஆறு ரூபாய் ஏறி நாம் அவனை வாய் பார்த்துக் கொண்டிருப்பது. இந்த சூழல் இன்னும் வெகு துலக்கமான வடிவத்தை பெறவில்லை ஆயினும் அப்படி வரும் வரை காத்திருக்க வேண்டும் எனும் முட்டாள்களுக்காக இந்த பதிவு அல்ல.

இந்த மூன்று காரணத்திற்க்காத்தான் சிதறிய சிறுவீத கிராம விவசாய உற்பத்தி முறையையும், சிறு தொழில் பட்டறை முறையையும் இந்த ஆளும் வர்க்கம் பேணி பாதுகாக்கிறது. ஒரு வேளை விவசாயத் துறையிலொ அல்லது சிறு தொழில் துறையிலோ செய்யப்படும் எந்த மாற்றமும் இந்த மூன்று காரணங்களுக்கு குந்தகம் வாராத வடிவத்திலேயே நடைபெறும். எடுத்துக்காட்டுகள்: காண்ட்ராக்ட் விவசாயம், ஊக வணீகத்தில் விவசாய பொருட்கள், சிறு தொழில் துறையின் வளர்ச்சி.


இந்த பாணி உற்பத்தி முறையின் விளைவு என்ன?

பெரும்பான்மை மக்கள் இத்தகைய சிதறிய சிறு வீத உற்பத்தி முறையிலேயே, வளர்ச்சியின்றி தலைமுறை தலைமுறையாக பினைந்திருப்பது ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவு, பண்பாட்டு வளர்ச்சியை தடுக்கிறது.
அவனை ஜனநாயகமில்லாதவனாகவே வைத்து சுரண்டுகிறது. இதன் பொருளாதார அம்சம் - அந்த சமூகத்தில் மிக பெரும் தொழில்புரட்சி என்றுமே நடந்து விட விடாமல் செய்கிறது.

ரோட்டில் எச்சில் துப்புவது, ஒன்னுக்கடிப்பது, சிக்னலை மதிக்காமல் அவனவன் இஸ்டம் போல நடந்து கொள்வது, சிறு பட்டறை முதலாளியின் வீட்டு வேலைகளையும் சேர்த்தே செய்வது, போலிஸ், நீதிபதி இவர்கள் எல்லாம் ஏதோ வானத்து தேவர்கள் போல நடந்து கொள்வதும் சாதாரண கிராமத்து ஏழை அவர்களுக்கு அது போன்றே மரியாதை கொடுப்பது - இவை எல்லாம் ஜனநாயகமின்மையின் அறிகுறிதான். சமூகம் எனபது சக மனிதர்கள் இயைந்து பழகும் ஒரு அமைப்பு, இதில் அனைவருக்கும் உரிமை, பொறுப்பு உள்ளது என்ற புரிதலெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு இல்லையென்பதுதான் - இது போல பிறர் உரிமையில் தலையிடும் நடவடிக்கைகளையும், பிறரிடம் அடிமை போல நடந்து கொள்ளும் நடவடிக்கைகளையும் ஒருங்கே மேற்கொள்ள செய்கிறது.
அராஜகமும், அடிமைத்தனமும் ஒரே பொருளாதார அமைப்பு பெற்றெடுக்கும் பிள்ளைகள்தான். இதுதான் இயங்கியலின் விதி. இதைத்தான் ஜனநாயகமின்மை என்கிறோம்.
இது ஏன் இப்படி உள்ளது எனில் தனிப்பட்ட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு சிறுபட்டறை தொழிலாளி, ஒரு விவசாய கூலிக்கு இந்த சமூகம் இயைந்து இயங்குவது போன்ற ஜனநாயக அடிப்படைகளை புரிந்து கொள்ளும் உற்பத்தி முறை கிட்டவில்லை. பெரும் தொழிற்சாலை பாணி உற்பத்தியில் ஈடுபடுபவர்களிடம் இந்த பண்பாட்டை நாம் பெரும்பாலும் காணாலாம்(Exceptions இருக்கும்).
ஏனேனில் அவனது ஒவ்வொரு உற்பத்தி உறவிலும் அவன் கூட்டு உழைப்பினை உணர்கிறான். கூட்டு உழைப்பின் காரணமாக கட்டுப்பாடான தனது பங்களிப்பை செய்யும் கடமையை உணர்கிறான். எனவே தனது உரிமையையும், பிறரின் உரிமையையும் உணர்கிறான். உரிமைகளை மீறப்படும் போது உற்பத்தியில் ஏற்ப்படும் பிரச்சனைகளைப் பார்க்கிறான். ஒரே இடத்தில் தொழிலாளர்களை இணைத்து முதலாளியே அவனை அமைப்பாக ஆக்குகிறார். எனவே ஒற்றுமையின் வலிமையை உணர்கிறான். அவனிடம் இருந்து அடிமைப் புத்தி காணமல் போகிறது.
வேலை முடிந்தால், போட்டுக் கொண்டுள்ள சட்டையைத் தவிர வேலை சார்ந்த எந்த பொறுப்பும் கிடையாது என்பது அவனை சுதந்திர மனிதனாகாவும் - தான் வேறு தனது தொழிற்சாலை வேறு எனபதனையும் - தான் உண்மையில் அந்த தொழிற்சாலையின் ப்ரந்த தொழிலாளர்கள் எனும் பெரும் அமைப்பின் அங்கத்தினன் என்பதையும் உணர வைக்கிறது.

மாறாக, சிறுவீத உற்பத்தியில்(சிறு பட்டறை தொழிற்சாலை, விவசாயம்) விடிந்தால், பட்டறை முடிந்தால் படுக்கை என்று நாள் முழுவது கட்டுண்டு கிடக்கிறான். சுதந்திரம் தவிர்க்கிறான். கூட்டு உழைப்பின் பிரமாண்டத்தையும், முதலாளியே உருவாக்கிக் கொடுக்கும் ஒற்றுமையையும் அனுபவிக்கும் வாய்ப்பின்றி தான் பிறந்து வளர்ந்த நிலபிரபுத்துவ அடிமைத்தனத்தை பேணிக் காக்கும் நிலைக்குத் தள்ளப்படுகீறான். சமூகம், அரசு, வர்க்கம் என்பனவற்றைப் பற்றி சிந்திக்கவே நேரமில்லை என்பதிருக்க, அவனது உற்பத்தி முறைகளும் அதனை உணரவிடாமல் அவனை தொடர்ந்து ஏமாற்றியே சுரண்டுகின்றன.

இந்தியாவின் மிகப் பெரும்பான்மையினர் இது போன்ற உற்பத்தி முறையில்தான் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் இந்தியாவை ஜனநாயகம் இல்லாத நாடு என்கிறோம்.

ஜனநாயகம் என்பது சட்டத்திருத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசயமா?, இல்லை. அது சமூக பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம். அது சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் அலகு.

இந்தியாவில் பெரும் தொழிற்சாலைகள் ஒரு சிறு அளவிலான பிரிவினைரை மட்டுமே இது போன்ற தொழிற்சாலை பாணி ஜனநாயக உற்பத்தி முறைகளில் வைத்துக் கொண்டு, வாய்ப்புள்ள இதர பிரிவுகளையெல்லாம் சிறு பட்டறை முதலாளிகளிடம் காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். இதன் மூலம் இயல்பான முதலாளித்துவ வளர்ச்சி சமூகம் மொத்தத்திற்க்கும் பரவலாகிவிடாமல் தடுக்கப்பட்டு சமூகம் அழுகத் துவங்குகிறது.
இதை தடுக்க என்ன செய்யலாம்?

- இந்தியாவின் விவசாயத்தை ஏகாதிபத்தியங்களின் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின்நிலங்கள் என்ற அள்வைத் தாண்டி இம்மிகூட முன்னேற விடாமல் தடுக்கும் அரசையையும், அதிகாரிகளையும் என்ன செய்யலாம்?

- இந்தியாவின் சிறு தொழில் துறையையும் இதே நிலைமையில் வைத்து இந்தியா முழுமைக்குமுள்ள நடுத்தர வர்க்கத்தின் கையிலுள்ள் சிறு மூலதனத்தின் சுதந்திரத்தையும், அவர்களின் இயல்பான சாதிக்கும் தாகத்தையும் முடக்கிப் போட்டு , அவற்றையும் தனது சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின் நிலங்களாக வைத்திருக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

- இந்தியனுக்கு ஜனநாயகத்தை மறுக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

- இது பேசி தீர்க்க முடியக் கூடிய விசயமா? சீர்த்திருத்தத்தில் தீர்வு அடங்கியுள்ளதா? புரட்சி செய்யவோமா?

அசுரன்
More articles in: http://www.tamilcircle.net/

35 பின்னூட்டங்கள்:

said...

Test

said...

அசுரன்,

ஒரு + குத்து!

பிறகு வருகிறேன்!

said...

அசுரன்,

முக்கியமான கருத்துக்களை எளிதாகவும், புரியும்படி எடுத்துகாட்டுகளுடன் தந்துள்ளிர்கள். தொடரட்டும் முழக்கம்.

//மையப்படுத்தப்பட்ட முறையில் நவீன கருவிகள் உதவியுடன், பெரும் எண்ணிக்கையில் விஞ்ஞான முறைகளின் துணையுடன் செய்யப்படும் உற்பத்தி முறைதான் முதலாளித்துவ உற்பத்தி முறை. இதனை மேலைநாடுகளில் பார்த்திருக்கலாம்//

உண்மை. ஐரோப்பாவில் நெதர்லாந்து மிக சிறிய நாடுகளில் ஒன்று. இதன் மொத்த பரப்பளவு 41,500 சதுர கிலோ மீட்டர்கள். (ஏரக்குறைய தென் தமிழ்நாட்டின் பரப்பளவு). ஆனால் விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியில் உலகில் முன்றவது இடம் (52 பில்லியன் $).


//இதற்க்கு உதாரணம்தான் பூ விவசாயம், இறால் பண்ணைகள் எட்c. லாபம் எந்த பொருளுக்கு உள்ளது என்பதை அவன் நிர்னயிப்பதன் மூலம் அதனை நாம் உற்பத்தி செய்ய வைக்கிறான்.//

சரியான உதாரணம்.

//ந்மது தேவைக்கு உற்பத்தி செய்வதை விடுத்து அவனது சந்தை தேவைக்கு உற்பத்தி செய்வதன் மூலம் பாரம்பரியமான நமது சுயசார்பு பொருளாதார வலைப்பின்னல் சின்னாபின்னமாகிவிட்டது.இந்தியாவின் சுயசார்பை இப்படி அடித்து நொறுக்குவதன் மூலம், அந்த சந்தையையும் அவனே கைப்பற்றிக் கொள்வது//

இப்பொது எற்பட்டுள்ள காய்கறி,தானியங்கள் & இறைச்சி விலை ஏற்றம்.


//ஆக, நாம் உற்பத்தி செய்யும் பொருளை அவன் வந்து இஸ்டம் போல விலை வைத்து வாங்கிச் செல்ல வாய்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்போம், அதே நேரத்தில் நமக்கு தேவையான பொருளை அவன் இஸ்டம் போல விலை வைத்து விற்று செல்வதையும் நாம் வாய் பார்த்துக் கொண்டிருப்போம்
//

வந்தாரை வாழவைக்கும்....Incredible India !


ராஜேஷ் அ.

said...

சிவபாலன், உங்களது + குத்துக்கு மிக்க நன்றி.

அசுரன்

said...

இதனை மேலைநாடுகளில் பார்த்திருக்கலாம். பல லட்சம் ஏக்கருக்கு ஒரே ஒரு பயிர்தான். விமானம் மூலம் உரம்-பூச்சி மருந்துகள், நீர் பாய்ச்சுவது மையப்படுத்தப்பட்டிருக்கும், ஒரு குறிப்பிட்ட பெரிய சந்தையை மனதில் கொண்டு திட்டமிடப்பட்ட உற்பத்தி, அதி நவீன ராட்சச யந்திரங்கள் மூலம் அறுவடை. இப்படி ஒரு தொழிற்சாலை போலவே அங்கு விவசாயம் நடைபெறுகிறது. இன்னும் சொன்னால் அங்கு விவசாய முதலாளியும், தொழிலாளியும்தான் உண்டு. விவசாயியோ அல்லது நிலபிரபுவோ கிடையாது.

Such an agriculture would need few labourers.In a country where there is so much population this mode of production will result in more unemployment.Moreover this is highly polluting and energy intensive. Small farms are not
unproductive. No UN organisation
recommends that small farms should be eliminated and only big farms
should be encouraged.

said...

இதனை மேலைநாடுகளில் பார்த்திருக்கலாம். பல லட்சம் ஏக்கருக்கு ஒரே ஒரு பயிர்தான். விமானம் மூலம் உரம்-பூச்சி மருந்துகள், நீர் பாய்ச்சுவது மையப்படுத்தப்பட்டிருக்கும், ஒரு குறிப்பிட்ட பெரிய சந்தையை மனதில் கொண்டு திட்டமிடப்பட்ட உற்பத்தி, அதி நவீன ராட்சச யந்திரங்கள் மூலம் அறுவடை. இப்படி ஒரு தொழிற்சாலை போலவே அங்கு விவசாயம் நடைபெறுகிறது. இன்னும் சொன்னால் அங்கு விவசாய முதலாளியும், தொழிலாளியும்தான் உண்டு. விவசாயியோ அல்லது நிலபிரபுவோ கிடையாது.

This is possible in India if contract farming is permitted.
Farmers will lease lands to
MNCs and MNCs will manage contract farms in '000s of hectares.Are you
for it.The other option is collectivisation.Or state should
set up large farms and employ farmers as sub contractors.
You have no clues to the agrarian
questions of india.

said...

அசுரன் அய்யா,

இந்தப் பதிவ நன்னா எழுதிருக்கேள் அய்யா.

ஆனா,

//பசுமைப் புரட்சி காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தமது காலவதியான ஆயுத மருந்துகளை பூச்சிக் கொல்லியாக உரமாக கொடுத்தது,//

இது மட்டும் தான் இந்த பதிவுக்கு திருஷ்ட்டிப் பொட்டா அமைஞ்சுட்டுது. எங்களாவாளோட பூர்வ ஜென்ம பந்தம் உள்ள நாடுகள ஏன் வம்புக்கு இழுக்கறேள்?

said...

அனானி,

வருகைக்கு நன்றி,

காண்ட்ராக்ட் விவசாயம் என்பதே இந்திய கிராமங்களில் இன்றும் நிலவும் நிலபிரபுத்துவ உற்பத்தி முறைகளில் கிஞ்சித்தும் மாற்றம் கொண்டு வராமல் MNCக்களும், தரகு கம்பேனிகளும் தமது தேவையானதை உற்பத்தி செய்யும் முறைதான்.

MNCக்கள் லீசுக்கு எடுக்கிறார்கள் எனில் அவர்களா உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள்?


//சிதறிய சிறுவீத கிராம விவசாய உற்பத்தி முறையையும், சிறு தொழில் பட்டறை முறையையும் இந்த ஆளும் வர்க்கம் பேணி பாதுகாக்கிறது. //

இந்தியாவில் தொழில் புரட்சி இல்லை என்பதின் அர்த்தம் இந்தியாவில் பெருந்தொழில் துறைகள் இல்லை என்ற அர்த்த்தில் கிடையாது. அதே போலவே இந்திய விவசாயத்தில் நவீன உற்பத்தி மூறை இல்லை என்பதின் அர்த்தம் அப்படிப்பட்ட உற்பத்தியே இல்லை என்பதல்ல. மாறாக அது ஒரு பிரதான காரணியாக கிடையாது என்பதே ஆகும். வெகு சிறுபான்மையாகவே ந்வீன உற்பத்தி முறை உள்ளது என்று பொருள். மேலும் இப்படி இருப்பதில் உள்ள அரசியலைத்தான் இங்கு பேசியுள்ளேன். ஏன் நீங்கள் அது குறித்து எதுவும் கருத்துச் சொல்லவில்லை.

நீங்களே குறிப்பிடுவது போல ஏன் அரசாங்கத்தால் மையப்படுத்தப்பட்ட விவசாய முறைகளை கொண்டு வர இயலவில்லை. எது தடுக்கிறது? இந்தியாவில் உணவு தன்னிறைவு அடைந்துவிட்டதாக ஒரு புரூடா விட்டு அது மறையும் முன்னே கோதுமை பிரச்சனை தலைகாட்டி பல்லிளிக்கிறது.


///You have no clues to the agrarian questions of india.///

ofcourse, அனானியாகிய உங்கள் அளவுக்கு எனக்கு அறிவோ ஞானமோ இருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நம்ப முழு உரிமை உள்ளது. ஆயினும் அதனை நான் நம்புவதற்க்கு எனது கேள்விகளை நீங்கள் அனுகும் மூறைதான் உதவும். நீங்களோ அப்படி ஒரு முயற்சியிலேயே ஈடுபடவில்லையே.

அனானியாகிய நீங்கள் விவசாயியா என்று தெரியவில்லை. சிரினிவாசன் அவர்களாக இருக்கும் பட்சத்தில் விவசாயியாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இங்கு இணையத்தில் சில விவசாய பெருமக்கள் எழுதுகிறார்கள். அவர்கள் நான் சொன்ன இந்த பிரச்சனைகளைத்தான் அவர்களது பிரச்சனைகளாகக் கருது கிறார்கள். கொஞ்சம் வலது கைப்பக்கம் பார்த்தால் அவர்களது தளங்களுக்கு இணைப்பு கிடைக்கும்.


மேலும், இந்த கட்டுரையின் மையமான கேள்வியாக பின்வருவன உள்ளன. அவற்றைப் பற்றி கருத்து சொன்னால் புண்ணீயமாகப் போகும்.
//சுயசார்பை உடைத்தெறிவதன் மூலமும், இந்திய தொழில் துறையின் வளர்ச்சி என்பது தனது வளர்ச்சியாக மட்டுமே இருக்கமாறும் பார்த்துக் கொள்வதன் மூலமும் இந்த பெரிய சந்தையை தன் இஸ்டம் போல சுரண்டுவது.
///

//தொடர்ந்து தனது தேவைகளுக்கு மட்டும் இந்திய விவசாயம் சேவை செய்வதை நிரந்தரமாக்குவது. //

//ஆக,
மலிவு விலையில் கூலி,
மலிவு விலையில் வளங்கள்,
மலிவு விலையில் உற்பத்திப் பொருட்கள்,
உற்பத்தியின் ஒரு பெரும் பகுதியையும் கூட சிறு முதலாளி எனும் இழிச்சவாயனும், விவசாயியும் பார்த்துக் கொள்வது,

இவையெல்லாம் போக அவன் எதை உற்பத்தி செய்தாலும் வாங்கிக் கொள்ள அவனது வர்க்கத்தின் ஆதிக்கம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சந்தை//

//உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை வைக்கும் உரிமை மறுக்கப்பட்ட சிறு பட்டறை முதலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் தீர்வு//

அசுரன்

said...

ராஜேஷ்,

தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,

//உண்மை. ஐரேதப்பாவில் நெதர்லாந்து மிக சிறிய நாடுகளில் ஒன்று. இதன் மெதத்த பரப்பளவு 41,500 சதுர கிலேத மீட்டர்கள். (ஏரக்குறைய தென் தமிழ்நாட்டின் பரப்பளவு). ஆனால் விவசாயப் பெதருட்கள் ஏற்றுமதியில் உலகில் முன்றவது இடம் (52 பில்லியன் $).//

நல்ல உதாரணத்தின் மூலம் இந்தியாவில் விவசாயத் துறையில் இந்த அரசு செய்து வரும் மோசடியை குத்திக் காட்டியுள்ளீர்கள்

வாழ்த்துக்கள்,
அசுரன்

said...

முரளி மனோகரின் வருகைக்கு நன்றிகள்

அசுரன்

said...

http://www.zmag.org/content/showarticle.cfm?SectionID=32&ItemID=12081

said...

தோழரே பதிவு சிறப்பாக இருக்கிறது.இன்னும் எளிமையான,மனதில் பதியும் படியான உதாரனங்களோடு விளக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.

said...

தோழரே பதிவு சிறப்பாக இருக்கிறது.இன்னும் எளிமையான,மனதில் பதியும் படியான உதாரனங்களோடு விளக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.

said...

தோழரே பதிவு சிறப்பாக இருக்கிறது.இன்னும் எளிமையான,மனதில் பதியும் படியான உதாரனங்களோடு விளக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்

said...

தோழரே பதிவு சிறப்பாக இருக்கிறது.இன்னும் எளிமையான,மனதில் பதியும் படியான உதாரனங்களோடு விளக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்

said...

அசுரன்,

பிரச்சனைகளை சிறப்பாக அலசி உள்ளீர்கள்.


//ந்மது தேவைக்கு உற்பத்தி செய்வதை விடுத்து அவனது சந்தை தேவைக்கு உற்பத்தி செய்வதன் மூலம் பாரம்பரியமான நமது சுயசார்பு பொருளாதார வலைப்பின்னல் சின்னாபின்னமாகிவிட்டது.இந்தியாவின் சுயசார்பை இப்படி அடித்து நொறுக்குவதன் மூலம், அந்த சந்தையையும் அவனே கைப்பற்றிக் கொள்வது//

இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாம் இதில் வேண்டுமானல் அசுர :-) வளர்சியில் சென்றுகொண்டு உள்ளோம் என நினைக்கிறேன்.

நன்றி
வசந்த்

said...

//இந்திய அரசு தனது வர்க்க சார்பை விட முடியாமல் தவிக்கிறது//

முதல் வரியே பதிவின் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

//இந்திய விவசாயத்தை வளர்க்க அதில் முதலாளித்துவ பாணி உற்பத்தி முறைகளை கொண்டு வர வேண்டும். ஆனால் இதனை செய்யும் தைரியமும், தனது சொந்த வர்க்கங்களுக்கு துரோகம் செய்யும் நெஞ்சுரமும் இந்த கைக்கூலிகளுக்கு இல்லை.//

மேலும் இது போன்ற கோரிக்கையோ அதற்கான போராட்டங்களோ எழாத வன்னம் திட்டமிட்ட ரீதியில் அவ்வப்போது விவசாயத் துறையில் இவர்கள் கொண்டு வந்த பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி போன்றவற்றைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ஏனெனில் இன்றைக்கும் முன்னேற்றப் புலம்பல்களுக்கு சொந்தக்காரர்கள் அடிக்கடி சுட்டிக் காட்டுவது அரசாங்கங்கள் அவ்வப்போது பொங்கும் பாலில் தெளித்த நீரைப் போன்ற இது போன்ற திட்டங்களைத் தான். இத் திட்டங்கள் விவசாயத்துறையை சீரழித்ததுடன் விவசாயிகளை நம்பவைத்து கழுத்தறுத்ததைப் பற்றியும் தகவல்கள் இருந்தால் கொடுக்கவும். - (தனிப்பட்ட முறையில் எனக்கும் இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டு )

//மூன்று நோக்கங்கள் //

நிறைய புரிதல்களை உண்டாக்கியது :)

//இந்தியாவின் விவசாயத்தை ஏகாதிபத்தியங்களின் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின்நிலங்கள் என்ற அள்வைத் தாண்டி இம்மிகூட முன்னேற விடாமல் தடுக்கும் அரசையையும், அதிகாரிகளையும் என்ன செய்யலாம்?
- இந்தியாவின் சிறு தொழில் துறையையும் இதே நிலைமையில் வைத்து இந்தியா முழுமைக்குமுள்ள நடுத்தர வர்க்கத்தின் கையிலுள்ள் சிறு மூலதனத்தின் சுதந்திரத்தையும், அவர்களின் இயல்பான சாதிக்கும் தாகத்தையும் முடக்கிப் போட்டு , அவற்றையும் தனது சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின் நிலங்களாக வைத்திருக்கும் இவர்களை என்ன செய்யலாம்?
- இந்தியனுக்கு ஜனநாயகத்தை மறுக்கும் இவர்களை என்ன செய்யலாம்?//

தூக்கி எறியலாம்.. எப்படி என்பதற்கு நீங்களே பதிலை இறுதியில் சொல்லிவிட்டீர்கள் :)


//- இது பேசி தீர்க்க முடியக் கூடிய விசயமா? சீர்த்திருத்தத்தில் தீர்வு அடங்கியுள்ளதா? புரட்சி செய்யவோமா?//

said...

19ம் நூற்றாண்டில் சொல்லப்பட்டதை 21ம் நூற்றாண்டில் ஒப்பிகிறீரே, உம்மை வியக்காமல் இருக்க முடியவில்லை :). புரட்சி தொழிலாளர் வர்க்கம் உருவான ஐரோப்பிய நாடுகளிலும்,அமெரிக்காவிலும் வரவில்லை. முதலில் ரஷ்யாவில், பின்னர் சீனத்தில் வந்தது. அந்தக் காலத்து மார்க்ஸிஸ்ட்கள் இப்படித்தான் யாந்திரிக அணுமு முறையில் இங்கு புரட்சி வரும், இங்கு வராது, இங்கு தொழிலாளர் வர்க்கமே உருவாகவில்லை, உற்பத்தி சக்திகள் வளரவில்லை, உற்பத்தி உறவுகளில் முன்னேற்றம் இல்லை, ஆசிய பாணி உற்பத்தி முறை/உறவு என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் புரட்சி மார்க்ஸின் ஜெர்மனியிலோ ஏங்கெல்ஸின் இங்கிலாந்திலோ வரவேயில்லை. பின் தங்கிய சமூகங்கள் என்று கருதப்பட்ட ரஷ்யாவில், பின்னர் சீனாவில் வந்தது. பின்னரும் கூட அது ஐரோப்பிய நாடுகளில் வரவில்லை. மூன்றாம் உலக நாடுகளில்தான் ஏற்பட்டது. ஏன் என்று என்றாவது யோசியும், அதுவரை கிளிப்பிள்ளை போல் கற்ற பாடங்களை சொல்லிக் கொண்டிரும். இப்போது லெனின் ஏகாதிப்பத்தியம் குறித்து சொன்னதை விட காவுட்ஸ்கியின் கணிப்புதான் சரியாக இருக்கிறத்ய் என்கிறார்கள். முதலாளித்துவம் இன்னமும் இருக்கிறது, காணாமல் போனது மார்க்ஸிய ஆருடங்களும், மிகையான
எதிர்பார்ப்புகளும்தான். 19ம் நூற்றாண்டில் வாழும் மார்க்ஸியர்கள் இந்தியாவில் இருப்பதில் வியப்பில்லை.ஆனால் அவர்களில் சிலர் இளைஞர்களாக இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.அதே சமயம் உங்களைப் போன்ற இளைஞர்களை நினைத்தால் வருத்தமாகவுமிருக்கிறது. ஏனென்றால் நீங்கள் முன்வைக்கும் மார்க்ஸியம் காலாவதியாகி வெகு காலமாயிற்று.

said...

வாங்க அரைகுறை அனானி,

என்னவோ மார்க்ஸியம் முழுவதையும் கரைத்து குடித்து அதில் ஒன்று இல்லை என்பது போல நீங்கள் இட்டுள்ள பின்னூட்டாம் நகப்பையே வரவழைக்கிறது.

ரஸ்யாவில் வர இருக்கும் புரட்சி பற்றி ஆரூடம் கூறுகிறார் ஏங்கெல்ஸ் என்பதிருக்க,

எப்பொழுதுமே மார்க்ஸியர்கள் ஆருடம் கூறுவதில்லை. நடைமுறையில் இருக்கும் விசயங்களை வைத்து சமூகத்தின் இயக்கப் போக்கை சொல்லுபவர்களே மார்க்ஸியர்கள்.

மற்றபரி, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் சோசலிச புரட்சி நடக்காததன் காரணத்தை மார்க்ஸியர்கள் வெகு விமரிசையாகவே ஆய்வு செய்து அந்த அம்சத்தில் லெனின் செய்த பங்களிப்புதான் ஒரு நாட்டில் சோசலிசம் எனும் ஏகாதிபத்திய காலகட்டத்தீற்க்கான மார்க்ஸிய பங்களிப்பு.

ஏகாதிபத்திய சூழலில், அமெரிக்க, ஐரோப்பாவில் புரட்சி நடந்தால்தான் ஆச்சரியம்.

மாறாக, இந்தியா சீனா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் புரட்சி என்பது விதி,.

இதனை சீனாவில் புரட்சி நடக்கும் முன்பே லெனின் சொல்கிறார், அதில் இந்தியாவையும், சீனாவையும் அடுத்த புரட்சி நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளாக குறிப்பிடுகிறார்,

இந்தியா, சீனாவைவிட கொஞ்சம் வித்தியாசமான வளர்ச்சிய்டைந்த சமூகம் என்ப்தாலும், தேசிய இன முரன்பாடுக்ளிலும் சீனாவைவிட இந்தியா வெகுவாக வேறுபட்டது என்பதும், பிரிட்டன் எனும் ஒற்றை ஏகாதிபத்தியத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது இந்தியா மாறாக சீனா பல்வேறு ஏகாதிபத்தியங்களின் போர் களமாக இருந்தது என்பதும் இங்கு ஒரு புரட்சிகர கட்சி, சித்த்தாந்தின் வளர்ச்சியை சிதைத்துவிட்டது.

அவ்வளவுதான் விச்யம்...

மற்றபடி இன்று வரை அமீத உற்பத்தி முதல், அராஜக சந்தை கையகப்படுத்துதல் வரை, ஏகாதிபத்தியமும், உலக மூதலாளித்துவமும் மார்க்ஸ் லெனின் ஆய்வு செய்து கண்டறந்த பாதையில் தெளிவாக நடைபோடுகின்றன.

அது சரி,, கட்டுரைக்கு பதில் சொல்லுங்க அறிவு ஜீவி அனானி,,.,, அதான மார்க்ஸியத்தில ஒரு மசிரும் இல்லன்னு சொல்றீங்கள்ள... உங்க ம்சிருக்குக்கு கீழ் இருக்கிற மூளைய உபயோகிச்சு ஏதுனா ஒரு தீர்வு சொல்லுங்க....

அட தீர்வு கூட வேணாம் பிரச்சனை என்னவென்றாவது சொல்லுங்க....

அசுரன்

said...

அப்புறம் ஏகாதிபத்திய சூழல்தான் இந்தியாவில் நடைபெறும் புரட்சியை புதியஜனநாயக புரட்சியாக மாற்றுகிறது. அதாவது இது சாராம்சத்தில் முதலாளித்துவ புரட்சியே. ஆனால் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கும்.

அசுரன்

said...

வருகை தந்து கருத்து தெரிவித்த வசந்த, ராஜவனஜ், அனானி, மற்றும் Eastwind அனைவருக்கும் நன்றி,

இந்த கட்டுரை சராசரி வாசகர்களுக்கு புரியும் படியாக இல்லை என்ற விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் இலகுவான எடுத்துக்காட்டுகளுடன் எழுத முயற்சி செய்ய வேண்டும்.

அசுரன்

said...

மற்றபடி இன்று வரை அமீத உற்பத்தி முதல், அராஜக சந்தை கையகப்படுத்துதல் வரை, ஏகாதிபத்தியமும், உலக மூதலாளித்துவமும் மார்க்ஸ் லெனின் ஆய்வு செய்து கண்டறந்த பாதையில் தெளிவாக நடைபோடுகின்றன.

I never knew that Marx and Lenin
were such great soothsayers.If so
pls predict when there will be
revolution in India.

said...

ஒரு புக்ல படிச்சேன் அசுரன் இது...

விவசாய சீர் திருத்தத்திற்கு மாற்றாக வந்தது தானே இந்த நில சீர்த்திருத்தம்
விவசாய துறையயும் முதலைகளுக்கு விட்டு கொடுப்பதன் மூலம், நில உச்ச வரம்பு சட்டத்தை ரத்து செய்வது போல

they only enourage the dependence of the poor farmers on the corporate sector for purchase of raw materials as well as to market the output

said...

அனானி,

//எப்பொழுதுமே மார்க்ஸியர்கள் ஆருடம் கூறுவதில்லை. நடைமுறையில் இருக்கும் விசயங்களை வைத்து சமூகத்தின் இயக்கப் போக்கை சொல்லுபவர்களே மார்க்ஸியர்கள்.
//

Do yuo understand the above? (It is in tamil- a South Indian Dravidian Language :-)))

Marxists are not soothsayers.

From whatever the current course of things happens and whatever has happened they perceeive the development happening in every field. This includes soceity also.

And this is how they expatiate the Over production and Arrogant nature of the capitalist(which was happening at those period. and It happens now also). And this how they find the priniciple of Capitalist soceity. This is not Soothsaying. May be in yuour dictionary the meanings are different.


Asuran

said...

அய்யா அசுரன் அவர்களே
உங்கள் புலம்பலை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. உங்கள் பஜனை மதத்தை தவிர வேறு யாரும் இவ்வாறு உளற மாட்டார்கள் நீங்கள் சொல்கிறவாறு புரட்சி வந்து எல்லா படித்தவர்கள் தொழில் அதிபர் எல்லாராயும் துரத்தி விட்டு,சுருக்கமாக புரட்சி தலைவர் மாவோ செய்த tragicomedy, utopia வந்த பிறகு மறுநாள் என்ன செய்வதாக உத்தேசம்?
ராஜவனஜ்: எங்கே உங்களது ஆரோகரா கேட்கவில்லை?

said...

வெத்து பானையின் வெறிச் சத்தம்... ;-)))

வேறு எதுவும் உருப்படியா இல்லையா?

அய்யோ அய்யோ.....

அசுரன்

said...

தோழர்,

//மாவோ சதது மாவு said...//

இது மாதிரி நட்டு போல்டு கழண்ட லூசுக் கேசுங்களையெல்லாம் ஏன் உள்ள விடரீங்க?

யப்பா அனானி, ஏதாவது உருப்படியே கேள்வி கேக்கனும்னா கேளு.. பொச்செரிச்சலை எப்படிக் காட்டறதுன்னு தெரியாம இப்படி உளரிட்டு இருக்காதே.

said...

பானையோ பூனையோ... வசனம் எல்லாம் நல்லாத்தான் பேசறீர். எழுதும் போது கோட்டை விட்டு விடுகிறீர். இந்த மொட்டை ஜல்லி எல்லாம் அடிப்பதை விட்டுவிட்டு பதில் கூற முடியுமா? சுருக்கமாக, இந்த தரகு விறகு வார்த்தையெல்லாம் தவிர்த்து முடிந்தால் பதில் சொல்லவும்

said...

//மறுநாள் என்ன செய்வதாக உத்தேசம்?//

In this Blog itself I have written about the post revolution Scenario. And also there are articles on SOlution to the problem of Agri, An article disprooving the false claims of atrocities during Mao's china etc...

It seems your so tireless to know new things... So try to find those articles in this blog by yourself and Pose your quesiton there - relevant to the article...

Here in this article ask something relevant to the topic....

For your all other bullshit's my reply is same as Rajavanaj's reply... :_))

Asuran

said...

அய்யா மன்னிக்கவும், தங்கள் பதிவுகளை படித்துதான் கேள்வி கேட்டேன். அரசாங்கம் இல்லாது மக்களின் பொதுவில் வைத்து எல்லா முடிவும் மக்களே எடுப்பார்கள் என்று எழுதியதாய் ஞாபகம். எனக்கு தோன்றும் கேள்விகள்
1. மக்களுக்கு வேற வேலையே கிடையாத்தா?
2. எல்லா மக்களும் எல்லா விஷயத்திலும் முடிவு எடுக்கும் அளவிற்கு விவரமானவர்களா ?
3. உதாரணம், அத்திபட்டியில் ஒரு நதி செல்கிறது. அதற்கு மேலே ஒரு பாலம் அமைக்கவேண்டும். suspension bridge அல்லது cantilever bridge அமைக்கவேண்டும். எல்லா மக்களும் engineering படித்து புரிந்து கொண்டு முடிவு எடுப்பார்களா?
4. ஒரு கிராமத்ிலேயே இவ்வளவு பிரச்னை என்றால், ஒரு மாவட்ட அளவில் எவ்வளவு முடிவு எடுக்க வேண்டும் அதே போல் மாநிலம், தேசம்.
5. மக்கள் வோட்டு போடுவதை விடுத்து referendum நடத்த்துவதுதான் உங்கள் தீர்வா?
6. இதெல்லாம் யோசித்துதான் எழுதினீர்களா அல்லது ரெட் புக் சொல்வதே வேதம் என்று நம்பிவிட்டீர்களா?
7. இந்த மாதிரி ஒரு communism இது வரை இப்பூமியில் நடந்ததே இல்லை என்கிறீர்கள். என் இப்படி ஒன்று அமையவில்லை ? மக்கள் முட்டாள்கள் அல்ல எப்படி குரங்கிலிருந்து மனிதன் வந்தானோ அவ்வாறு பல தத்துவங்கள் முயற்சி செய்து விலக்கப்பட்டன. அவ்வாறு குப்பைத்தொட்டியில் போனதுதான் communism. All the economic models and government models are evolved to form what we have(democracy and free trade). There might be better models than this(definitely not communism!) but this is the best what we have.
இதற்கு சரக்கு இருந்தால் பதில் சொல்லவும். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது
1. பதிவு படித்து வா
2. பானை பூனை
3. அமெரிக்க அடிவருடி
4. all the above

said...

அராஜகமாக இந்த பதிவில்தான் எல்லாத்தையும் பேசுவேன் என்று திமிர் பிடித்து எழுதுவதற்க்கு முதலில் கண்டனம்
தெரிவித்துக் கொள்கிறேன்.

ரெட் புக்கில் என்ன இருக்கீறது என்று தெரியாமலேயே ஜல்லியடிப்பதையும், கம்யுனிசம் என்றால் என்ன என்பது குறித்த
அடிப்படை அறிவு கூட இன்றி பேசுவதும் வெகு சுலபமான விசயங்களே

ஆயினும் குறைந்தது உம்முடைய அரைவேக்காட்டுத்தனத்தையாவது உங்களுக்கு உணர்த்த வேண்டிய நிர்பந்தத்திற்க்கு
என்னைத் தள்ளி வீட்டீர்கள்.



///1. மக்களுக்கு வேற வேலையே கிடையாத்தா?///

வேலையில்லாதவன் தான் அரசமைக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

அல்லது அரசமைப்பவன் மக்களிடமிருந்து தனித்து மக்களுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பான் என்று
சொல்கிறீர்களா?

முதலில் ஒரு சின்ன விசயத்தை புரிந்து கொண்டு அவதூறு பேசுவதின் அடிபப்டையில் ஏதேனும் தர்க்க நியாயம் இருக்கிறதா
என்று பாருங்கள்,

சோசலிசம் செய்வதெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகம் எதைச் செய்வதாக சொல்லி, எதைச் செய்து கொண்டிருப்பதாக சொல்லி
ஊரை ஏமாற்றுகிறதோ அதை செய்வதுதான். அதாவது மக்களின் நேரடி பங்களிப்பை உறுதி செய்வதுதான்.
பெரும்பான்மைக்கான ஜனநாயகத்தை உறுதி செய்வதுதான்.

அதனால் ஒவ்வொரு பகுதி அளவிலும், மக்கள் சர்வாதிகார மன்றங்கள்(முதலாளித்துவ பாசையில் - மக்கள் ஜனநாயக மன்றங்கள்
- ஏனெனில் ஜனநாயகம் என்பதும் சர்வாதிகாரம்தான்) உருவாகும், இவை அரசு முடிவெடுப்பதில் தங்களது கருத்தை
வலியுறுத்தும் ஒரு அமைப்பு. பஞ்சாயத்து ராஜ்கள் போல.

ஏதோ இங்கு இல்லாத ஒரு விசயத்தை கம்யுனிசம் செய்வதாக நீங்க்ள் கருதினால் அது உங்களுடைய தவறேயன்றி கம்யுனிசத்தின்
தவறல்ல.





////2. எல்லா மக்களும் எல்லா விஷயத்திலும் முடிவு எடுக்கும் அளவிற்கு விவரமானவர்களா ?////

அப்படி எல்லா மக்களும் முடிவெடுக்கும் அளவு வளர்வதில் உங்களுக்கு எதேனும் பிரச்சனை உள்ளதா?

புரட்சி நடந்த உடனேயோ அல்லது நடக்கும் பொழுதோ மக்களின் எல்லா பிரிவினரும் முடிவெடுக்கும் தகுதியுடன் இருக்க
மாட்டார்கள். மாறாக எல்லா இடங்களிலும் புரட்சி செய்யும் அணிகளின் கீழ் அமைப்பாகும் மக்கள் பிரிவினரில் இது போல
முடிவெடுக்கும் தகுதி படைத்தவர்கள் முன்னே வந்து ஒரு குழுவாக தலைமை தாங்குவார்கள். இது இயல்பான விசயம்.

ஏன் எல்லா மக்களும் முடிவெடுக்கும் தகுதி படைத்தவர்கள் இல்லை என்று தெரிந்துதான் இந்த முதலாளித்துவ
ஜனநாயகத்தை நம்புகிறீர்களா?

இப்போ உங்க கேள்வியை தெளிவாக வைக்கவும்.





/////
3. உதாரணம், அத்திபட்டியில் ஒரு நதி செல்கிறது. அதற்கு மேலே ஒரு பாலம் அமைக்கவேண்டும். suspension bridge
அல்லது cantilever bridge அமைக்கவேண்டும். எல்லா மக்களும் engineering படித்து புரிந்து கொண்டு முடிவு
எடுப்பார்களா?////


பாலம் தேவை என்பதை அந்த பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் மன்றமோ அல்லது அவர்களின் நாடாளுமன்ற
பிரதிநிதியோ கோரிக்கை வைத்து, அதனை தொழில்நுட்ப குழு பரிசீலித்து, இந்த முடிவுகள் அந்த மக்கள் மன்றங்கள் முன்பு
வைக்கப்பட்டு அவர்களின் மாற்றுக்கருத்துக்களும் கருத்தில் கொள்ளப்பட்டு ஒரு கடைசி முடிவு எட்டப்படும். இதில்
உங்களுக்கு என்ன சாத்தியமில்லா அம்சம் கண்ணில் பட்டது?

ஒருவேளை நேரடியாக எல்லா விசயங்களும் மக்களுக்கு தெரிந்து நடப்பதால் ஊழல மோசடி செய்ய வழியில்லை என்ற
வருத்தமா? :-))





/////
4. ஒரு கிராமத்நலேயே இவ்வளவு பிரச்னை என்றால், ஒரு மாவட்ட அளவில் எவ்வளவு முடிவு எடுக்க வேண்டும் அதே போல்
மாநிலம், தேசம்.////

ஆமாம், காவிரி, கோதாவரி, பாலாறு என்று நாம் தீர்வு கண்ட விசய்ங்கள் ஆயிரம் இருக்கிறதல்லவா?

முந்தைய கேள்விக்கான பதில் புரிந்ததல்லவா? இதே அமைப்பு முறைதான் எல்லா இடங்களிலும்.

ஒரு எ-காவுக்கு, சீனாவின் துயரமான மஞ்சள் ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்து எப்படி சாதித்தார்கள் என்று
பார்ப்போம்.

பகுதி அணிகள் அணை கட்டுவது உள்ளிட்ட தீர்வுகளை அரசு தலைமையிடம் சம்ர்பிக்கின்றன, அரசு இது குறித்து
முடிவெடுக்கிறது, வழக்கமான தொழில்நுட்ப ஆலோசனைகள்(Expety opinion) கேட்க்கப்படுகின்றன, கட்சி அணிகளுக்கும்,
மக்கள் சர்வாதிகார மன்றங்களுக்கும் இது குறித்த அறிக்கைகள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

சீனா முழுவதிலுமிருந்து இந்த அணை கட்ட எல்லாவிதமான பங்களிப்புகளும்(ஆள், சிமென்ட், இதர பொருட்கள்) தொடர்ந்து
வந்து சேருவது உறுதி செய்யப்படுகிறது. ஏனேனில் இங்கு லாபம், அல்லது பணம் முடிவு செய்யவில்லை மாறாக, எனது நலன்
இந்த சமூகத்தின் நலன், இந்த சமூகத்தின் நலன் எனது நலன் என்ற புரிதலை கம்யுனிஸ்டு கட்சி அங்கு ஆழ வேரூண்ற
செய்திருந்ததே அதன் அடிபப்டையிலேயே இவை நடந்தன.

மஞ்சள் ஆற்றின் கரை உய்ரத்த்ப்படுகிறது, அணை கட்டப்படுகீறது.

இது குறித்து அன்றைய அமெரிக்க முதலாளித்துவ பத்திரிக்கைகாளிலேயே வியந்து சில கட்டுரைகள் வந்துள்ளன. இதே போல
பல கூட்ட முயற்சிகளை அவர்கள் வெற்றிகரமாக செய்து அனைத்து ஐந்தாண்டு திட்டங்களையும் இலக்கை மீறி சாதித்தனர்.





////
5. மக்கள் வோட்டு போடுவதை விடுத்து referendum நடத்த்துவதுதான் உங்கள் தீர்வா?///

வோட்டு போடுவதை விட வேண்டும் நீங்களாவே முடிவு செய்து அதை கம்யுனிசத்தின் முடிவாக அறிவிப்பதற்கு நான் எப்படி
பதில் சொல்ல முடியும்?

வோட்டு போடுவதுடன் கூட, தேர்ந்தெடுத்தவரை திருப்பி அழைக்கும் உரிமை, மாநீலஙகளின் சுயநிர்ண்ய உரிமை போன்ற பல
உரிமைகளை கொண்டது சோசலிச அமைப்பு. இவையெல்லாம் இங்கு முதலாளித்துவ சமூகத்தில் நினைத்துக் கூட பார்க்க
முடியாது. அதுவும் இந்தியா போன்ற அரைக்காலனிய அரை நிலபிரபுத்துவ போலி ஜனநாயகத்தில் ம்ஹூம்....

உண்டான போலி தேர்தலையே மக்களுக்கு காசு வீசி விலைக்கு வாங்குவது, மோசடி செய்து சம்பாதித்தலில் மக்களுக்கு ஒரு சிறு துண்டை வீசுவதன் மூலம்(தேர்தல் சமயத்தில் மட்டும்) முன்னிலை பெறுவது என்று சீரழிந்து கேவலமாக போயுள்ளது.





///
6. இதெல்லாம் யோசித்துதான் எழுதினீர்களா அல்லது ரெட் புக் சொல்வதே வேதம் என்று நம்பிவிட்டீர்களா?///

இது போன்ற கேள்விகளை கேட்க்கும் முன்பு ரெட் புக்கில் என்ன உள்ளது என்று தெரிந்துதான் எழுதினீர்களா அல்லது
ஜல்லிதானே அதுவும் அனானி பேரில்தானே என்ற தைரியத்தில் எழுதினீர்களா?

அல்லது நாங்கள் என்ன எழுதியுள்ளோம்., இதுவரை தமிழ்மணத்திலோ அலல்து வேறு தளத்திலோ எமது கேள்விகளை
கருத்துக்களை யாரும் உடைக்க முடியவில்லையே ஏன் என்பதை புரிந்து கொண்டுதான் கேட்கீறீர்களா?(உங்களைப் போல
பலரும் மூக்குடைப் பட்டு அனானி பேரில் புலம்பி கொண்டிருப்பதை சொன்னேன்)





///
7. இந்த மாதிரி ஒரு communism இது வரை இப்பூமியில் நடந்ததே இல்லை என்கிறீர்கள். என் இப்படி ஒன்று அமையவில்லை
///

விஞ்ஞான பூர்வ கம்யுனிச சமூகம் எனும் அடுத்த சமூக அமைப்பு இது வரை வந்ததில்லை. ஏனேனில் ஒரு குழந்தை
பாலகனாகி பிறகுதான் இளைஞன் ஆகிறான். இந்த இயல்பான வளர்ச்சிப் போக்கு தடுக்கப்படும் பொழுது அதனை எதிர்த்து
போராடுகிறான கம்யுனிஸ்டு. இங்கே ஒரு சத்து மாவு கோஸ்டி வந்து இளைஞனாக இது வரை அந்த குழந்தை
மாறாவேயில்லைஎயே ஏன் என்று படு முட்டாள்தனமான கேள்வி கேட்கிறார்.

சமூக பரிணாம வளர்ச்சி குறித்த அறிவை வளர்த்துக் கொள்ளவும்.




//All the economic models and government models are evolved to form what we have(democracy and free trade). There
might be better models than this(definitely not communism!) but this is the best what we have.
//

நீங்க கேட்டதிலேயே இது ஒன்றுதான் இந்த பதிவிற்க்கு சம்பந்தபட்ட கேள்வி. ஒரேயொரு கேள்விதான் நான் பதிலுக்கு
கேட்க்க விரும்புகிறேன்,

இந்தியா ஒரு முதலாளித்துவ பொருளாதாரமா? அப்படியில்லை என்பதைத்தான் இந்த பதிவு வலியுறுத்துகிறது. பதிவையே
படிக்காமல் ஜல்லியடிக்க வந்து விட்டார் இந்த மாவு கோஸ்டி....

இது தவிர்த்து இந்த பதிவில் உள்ள இன்னொரு கேள்வி,

இந்திய ஜனநாயக நாடா?



///There might be better models than this(definitely not communism!) but this is the best what we have.///

இந்திய அடிமைப் பொருளாதார அமைப்பின் அசிங்கத்தை மறைக்க இயலாத பொழுது இது போல நாம் சொல்வதை சும்மா ஏற்றுக் கொண்டு, மாற்று பொருளாதாரம் இல்லை என்பதால் இதனை நாங்கள் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று டண் கணக்கில் பூ சுற்றுவது.

குறைந்த பட்சம் இது பொன்ற நாணயமற்றவர்கள் நாம் முன் வைக்கும் பொருளாதாரத்தை பரிசீலித்து விவாதம் செய்வது கூட இல்லை. ஆயினும் எல்லாம் தெரிந்தவர் போல் மாற்றுப் பொருளாதார்ம் இல்லை என்று படு கேவலமான ஜல்லியடிக்கீறார்கள்.

ஏன் இதே பதிவில்தான் கிராமப் பொருளாதாரம் குறித்து பத்ரிக்கு பதில் கொடுத்த ஒரு கட்டுரைக்கு இணைப்பு கொடுத்துள்ளேன். அதில் உங்கள் வீரத்தைக் காட்டுங்களேன்.

அசுரன்

said...

பதில் தந்தமைக்கு நன்றி.
1. வேலை இல்லாதவன் தான் அரசு அமைக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் கூற வந்த பொருள், மக்களுக்கு தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதே பெரிய பாடாக இருக்கும்போது ஒவ்வரு பிரச்சனைக்கும் அலசி ஆராய்ந்து தீர்வு காண முடியாது. நீங்கள் பேசுவது வரட்டு தத்துவம் நான் பேசுவது நிதர்சனம். பரவாயில்லை நீங்களே சொல்லிவிட்டீர்கள், மக்களுக்கு நேரடி பங்களிப்பு கிடையாது, பஞ்சாயத்து ராஜ் போல ஒரு அமைப்பு முடிவு எடுக்கும் என்று. உங்களது மக்கள் முன் வைப்பார்கள் மக்கள் முடிவு செய்வார்கள் என்ற வாதம் அடிபட்டு போகிறது.

2. அய்யா, எல்லா மக்களுக்கும் எல்லா திறமையும் உண்டு என்று நீங்கள் நிஜமாகவே நம்புகிறீர்களா? ஒரே மனிதன் மருத்துவம் பொருளாதாரம், பொறியியல் அனைத்தும் அறிந்ததாக கேள்வியாவது பட்டு இருக்கிறீர்களா?
சரி உங்கள் வாதத்துக்கே வருவோம், தகுதி படைத்த ஆட்கள் முன்னே வருவார்கள் என்று. எவ்வாறு வருவார்கள்? தேர்தலா? இப்போது நடக்கும் தேர்தலுக்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? திறமையாளர் தான் முன்னே வருவார்கள் என்பது என்ன நிச்சயம்? இப்போதுள்ள முறையில் உள்ள ஓட்டைகள் அதிலும் இருக்காது என்பது என்ன நிச்சயம்?நீங்கள் சொல்லும் புரட்சி அமைப்பினர் வல்லவனே வாழ்வான் என்று மாறமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?
3. இதுதான் உச்சக்கட்ட காமெடி. நீங்கள் democracyai அப்படியே எழுதி இருக்கிறீர்கள். அதாவது இப்போதுள்ள முறைக்கும் நீங்கள் சொல்லும் முறைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. உங்கள் மூன்று பதில்கலுமே தற்போதய முறையைத்தான் விளக்கி இருக்காறீர்கள். நல்லது
4. அப்போது உங்கள் உடோபியாவில் வோட்டு முறை உண்டு. கேட்பதற்கே நன்றாக இருக்கிறது. நீங்கள் கூறும் ""தேர்ந்தெடுத்தவரை திருப்பி அழைக்கும் உரிமை, மாநீலஙகளின் சுயநிர்ண்ய உரிமை " அனைத்தும் உலகின் சுத்த முதலாளித்துவ அமெரிக்க நாட்டில் உண்டு. சமீபத்தில் கலிபோர்னிய மாநிலத்தில் இவ்வாறு நடந்துள்ளது. என்ன பேசுகிறோம் என்று தெரிந்து பேசுங்கள். போலி தேர்தலுக்கும் உங்கள் தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?
5. அபத்த களஞ்சியமான ரெட் புக் நானும் படி த்துள்ளேன். நான் படித்துவிட்டு யோசித்தேன் நீங்கள் அவ்வாறு செய்ய வில்லை என்று தெரிகிறது.
7. உங்கள் கூற்று படி communism பரிணாம வளர்ச்சியின் உச்சம். என் கூற்றுப்படி அது குரங்கு பருவம். அதை தாண்டி வந்துவிட்டோம். பரிசீலித்து விவாதம் செய்தால் உங்களுக்கு கோபம் வருகிறது, அங்காலாய்த்ு கொள்கிறீர்கள்.
இதில் நீங்கள் குடுத்த சுட்டி யில் உடோபியா என்று கிண்டல் அடித்ீர்கள். i hope the irony is not lost on you!
. இந்திய ஜனநாயக நாடுதான் it is democracy not mobocracy. உங்கள் ஆசை அது mobocracy ஆகவேண்டும். அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

புரட்சி தலைவர் மாவோ மற்றும் கலாசார புரட்சி, மஞ்சள் நதி பற்றி பிறகு வரும்

said...

சத்து மாவு அவர்களே,

இந்த கீழ் கண்ட வரிகளுக்கு அர்த்தம் புரிந்ததா இல்லையா?

//சோசலிசம் செய்வதெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகம் எதைச் செய்வதாக சொல்லி, எதைச் செய்து கொண்டிருப்பதாக சொல்லி
ஊரை ஏமாற்றுகிறதோ அதை செய்வதுதான். அதாவது மக்களின் நேரடி பங்களிப்பை உறுதி செய்வதுதான்.
பெரும்பான்மைக்கான ஜனநாயகத்தை உறுதி செய்வதுதான்.//

மக்களின் நேரடி பங்களிப்பு என்று இங்கு கூறியது அவர்களால் நேரடியாக பகுதி அளவில் நிர்வாகம் செய்யும் அரசு
விவகாரங்களில் தலையிட முடியும். இதன் மூலம், அரசு நிர்வாகம் என்பது மக்களுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு விசயம் என்ற பயம்
தற்போது இருப்பது மறையும். இன்ஸ்பெக்டர், தாசில்தார், டிராபிக் போலிஸ் என்று எல்லா அதிகாரிகளும் மக்களுக்கு
பொறுப்பானவர்களாக நடக்க வேண்டும் என்பது கீழிருந்து மக்களிடமிருந்து செலுத்தப்படும்.

இதை ரஸ்யாவில் ஓரளவும், சீனாவில் இன்னும் கொஞ்சம் வீரியமாகவும் செய்தனர்.

உங்களைப் போல வரைமுறையின்றி எல்லா இடத்திலும் எனக்கு விருப்பட்டதைச் செய்வேன் என அரஜகமானா
பண்பாடுடையவர்களை நீங்கள் மனதில் கொண்டு பேசினால் இவற்றை செயல்படுத்துவதில் குழப்பகரமானதாகவே இருக்கும்.
மாறாக புரட்சியை தாங்களே வென்றெடுத்த மக்களின் பண்பாட்டு வளர்ச்சியும் கட்டுப்பாடும் மிக சிறப்பானதாகவே இருக்கும்.
அதனால் அது ஒரு கூட்டுக் குரலாகவே ஒலிக்கும்.

இதை அதிகாரப் பூர்வமாக உறுதிப் படுத்தும் ஒரு உரிமைதான் தேர்ந்தெடுத்தவர்களை திருப்பிய்ழைக்கும் உரிமை. இதை
இன்றைய முதலாளித்துவ முறையில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்தியாவிலோ அதுவும் கிடையாது.

இரணடாவது விசயம், இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறும் புரட்சி என்பது சாரம்சத்தில் முதலாளித்துவ
புரட்சிதான்(தனியுடைமையை வலியுறுத்தும் புரட்சி). எனவே இங்கு பாட்டாளி வர்க்கம் மட்டும் அர்சு அதிகாரத்தில் பங்கு
கொள்ளாது. தேசிய முதலாளிகள், குட்டி முதலாளிகள்(வியாபாரி, விஞ்ஞானி, மருத்துவர் etc), விவசாயி என்ற பல
வர்க்கத்தினரின் கூட்டுச் சர்வாதிகரமாகவே இருக்கும்.



///1. வேலை இல்லாதவன் தான் அரசு அமைக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் கூற வந்த பொருள், மக்களுக்கு
தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதே பெரிய பாடாக இருக்கும்போது ஒவ்வரு பிரச்சனைக்கும் அலசி ஆராய்ந்து தீர்வு காண
முடியாது. நீங்கள் பேசுவது வரட்டு தத்துவம் நான் பேசுவது நிதர்சனம். பரவாயில்லை நீங்களே சொல்லிவிட்டீர்கள், மக்களுக்கு
நேரடி பங்களிப்பு கிடையாது, பஞ்சாயத்து ராஜ் போல ஒரு அமைப்பு முடிவு எடுக்கும் என்று. உங்களது மக்கள் முன்
வைப்பார்கள் மக்கள் முடிவு செய்வார்கள் என்ற வாதம் அடிபட்டு போகிறது.
///


வெச்சா முடி செரச்சா மொட்டை ஆனா சுரண்டல் மட்டும் நீடிக்கும் படி பார்த்துக் கொள்வதுதானே உங்கள் விருப்பம்?

மக்களின் அடிமைத்தனத்தை காரணம் காட்டியே அவர்களை தொடர்ந்து அடிமைத் தனத்தில் வைத்திருக்க விரும்புபவர்களை
என்ன செய்வது?

ஏன் இன்றைய சமூகத்திலேயே வேலை பார்த்துக் கொண்டு புரட்சியே நடத்த இயன்ற மக்களால் தனது சொந்த அர்சில் வேலை
நேரம் போக தனது அறிவை வளர்த்துக் கொண்டு, அரசு நிர்வாகத்தில் உதவி செய்ய முடியாது?

உண்மையில் அரசு நிர்வாகத்தில் உதவி செய்வதும், கட்சி வேலை செய்வதும் வலியுறுத்துப்படும். எனவே உங்களது பயம்
அர்த்தமற்றது.

சோசலிச சமுதாயத்தின் சில முதல் கடமை உற்பத்தியில் தன்னிறைவு, விஞ்ஞான வளர்ச்சி, வர்க்கப் போராட்டம் ஆகியன.

இதில் முதல் இரண்டும் குறுகிய காலத்தில் மக்களீன் வேலை நேரத்தை குறைக்கும், இதன் மூலம் தனது சொந்த பண்பாட்டு
அறிவு வளர்ச்சிக்கு நேரம் ஒதுக்குவது அதிகமாகும்,





///2. அய்யா, எல்லா மக்களுக்கும் எல்லா திறமையும் உண்டு என்று நீங்கள் நிஜமாகவே நம்புகிறீர்களா? ஒரே மனிதன்
மருத்துவம் பொருளாதாரம், பொறியியல் அனைத்தும் அறிந்ததாக கேள்வியாவது பட்டு இருக்கிறீர்களா?
சரி உங்கள் வாதத்துக்கே வருவோம், தகுதி படைத்த ஆட்கள் முன்னே வருவார்கள் என்று. எவ்வாறு வருவார்கள்? தேர்தலா?
இப்போது நடக்கும் தேர்தலுக்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? திறமையாளர் தான் முன்னே வருவார்கள் என்பது என்ன
நிச்சயம்? இப்போதுள்ள முறையில் உள்ள ஓட்டைகள் அதிலும் இருக்காது என்பது என்ன நிச்சயம்?நீங்கள் சொல்லும் புரட்சி
அமைப்பினர் வல்லவனே வாழ்வான் என்று மாறமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?
////

இது உங்களது தனிமனித சிந்தனை தோற்றுவிக்கும் மனநோய். இன்றைய உலகில் எடுக்கப்படும் முடிவுகள் எல்லாம் ஒரு
தனிமனிதனால் எடுக்கப்படுகீறதா? அல்லது ஒரேயொரு முடிவு ஒரேயொரு மனிதனால்தான் எடுக்கப்படுகிறதா?

எல்லாமே கூட்டு உழைப்புதான்.

அதனால் எல்லாரும் எல்லாத் துறையிலும் பெரிய ஆளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆயினும் எல்லா மக்களுக்கும் அவர்கள் விரும்பும் துறையில் வளர வாய்ப்புகள் இருக்கும் என்பதுதான் சோசலிசத்தின் சிறப்பு.

வல்லவனே வாழ்வான் என்று மாறும் வாய்ப்பு((கம்யுனிசம் வரும்வரை இது போன்ற முந்தைய சமூகத்தின் கேவலமான பண்புகள்
பக்கத்து நாடுகளிலிருந்து புணருற்பத்தி ஆகிக் கொண்டே இருக்கும்) சோசலிச சமூகத்தில் கம்மி ஏனேனில்,
தனிச் சொத்து கிடையாது, தேர்ந்தெடுத்தவரை திருப்பிய்ழைக்கும் உரிமை உள்ளது. பகுதி அளவில் மக்கள் சர்வாதிகார
மன்றங்களே பலம் மிக்கவை. அவை தனியொருவரின் கட்டுப்பாட்டில் இருக்காது, குழுவாகவே இயங்கும்.

அடிமை முறை என்பது இன்று இருக்கிறதா? இஷ்டம் போல வரைமுறையின்றி பார்த்த இடத்தில் பார்த்தவருடன் மிருகம்
போல உடலுறுவு கொள்வேன் என்பதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள்? அப்படியொரு மனிதன் இருக்கும் ப்டசத்தில்
ஜனநாயகமான சமூகம அவனை நிராகரித்து தண்டிக்காது?

அதே போலத்தான் இன்றைய நுகர்வு வெறி சமூதாயத்தை அலகாக கொண்டு சிந்திக்கும் வரை உங்களால் இவை எதையும்
ஏற்றுக் கொள்ள முடியாது.


தேர்தல் பற்றிய கேள்விகளைப் பொறுத்த வரை எனது முந்தைய பதிலை படிக்கவும்,

ஓட்டைகள் சோசலிச சமூகத்தில் இருக்கும், வர்க்கங்கள் பிற நாடுகளில் இருக்கும் வரை அதன் பிரதிபலிப்பு சோசலிச
நாட்டிலும் இருக்கும். அதனால் சோசலிச சமூகத்திலிருந்து விலகிச் செல்லும் வாய்ப்புகள் உண்டு. இதனால்தான் லெனின்,
மாவோ போன்றவர்கள் இது குறித்து எச்சரித்துக் கொண்டே இருக்கீறார்கள்.

ஆயினும் துரதிருஷ்டவசமாக நம் முன் இரு வாய்ப்புகளே உள்ளன. மனித குலத்தின் அழிவு அல்லது கம்யுனிசம் என்ற
இரண்டே அவை.

முட்டை உடைந்த குஞ்சு வருவது அல்லது முட்டை கூமுட்டையாவது.


//3. இதுதான் உச்சக்கட்ட காமெடி. நீங்கள் democracyai அப்படியே எழுதி இருக்கிறீர்கள். அதாவது இப்போதுள்ள முறைக்கும்
நீங்கள் சொல்லும் முறைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. உங்கள் மூன்று பதில்கலுமே தற்போதய முறையைத்தான் விளக்கி
இருக்காறீர்கள். நல்லது//

உச்சக் கட்ட காமேடி நீங்கள் அரைகுறையாக எனது பதிலை படிப்பதுதான்.

கீழே உள்ளவை நான் கொடுத்த பதில்கள் இவற்றை படித்தீர்களா என்றே தெரிய்வில்லை.

"சோசலிசம் செய்வதெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகம் எதைச் செய்வதாக சொல்லி, எதைச் செய்து கொண்டிருப்பதாக சொல்லி
ஊரை ஏமாற்றுகிறதோ அதை செய்வதுதான்."

"வோட்டு போடுவதுடன் கூட, தேர்ந்தெடுத்தவரை திருப்பி அழைக்கும் உரிமை, மாநீலஙகளின் சுயநிர்ண்ய உரிமை போன்ற
பல உரிமைகளை கொண்டது சோசலிச அமைப்பு. இவையெல்லாம் இங்கு முதலாளித்துவ சமூகத்தில் நினைத்துக் கூட பார்க்க
முடியாது. அதுவும் இந்தியா போன்ற அரைக்காலனிய அரை நிலபிரபுத்துவ போலி ஜனநாயகத்தில் ம்ஹூம்...."


இவையெல்லாம் மேலை நாடுகளில் உள்ள முதலாளித்துவ சமூகத்தில் யோசித்து பார்க்கக் கூடிய விசயமா?






///4. அப்போது உங்கள் உடடீபியாவில் வோட்டு முறை உண்டு. கேட்பதற்கே நன்றாக இருக்கிறது. நீங்கள் கூறும்
""தேர்ந்தெடுத்தவரை திருப்பி அழைக்கும் உரிமை, மாநீலஙகளின் சுயநிர்ண்ய உரிமை " அனைத்தும் உலகின் சுத்த
முதலாளித்துவ அமெரிக்க நாட்டில் உண்டு. சமீபத்தில் கலிபோர்னிய மாநிலத்தில் இவ்வாறு நடந்துள்ளது. என்ன பேசுகிறோம்
என்று தெரிந்து பேசுங்கள். போலி தேர்தலுக்கும் உங்கள் தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?///

கிழே உள்ளவர்களை திருப்பியழைக்க முடியுமா?

ஓரு போலீஸ் அதிகாரியை? ஒரு தாசில்தாரை? எந்தவொரு அரசு அதிகாரியையும்?

மேலும் சோசலிசம் ந்டைமுறையில் வலியுறுத்தும் பெரும்பாலனவற்றை முதலாளித்துவம் எழுத்தில் ம்ட்டும் கொண்டுள்ளது.
ஏற்றத்தாழ்வான ஒரு சமுகத்தில் வாய்ப்புக்கள் அனைவருக்கும் கொடுக்கப்படாத சமூகத்தில், பெரும்பான்மை மக்கள்
சுரண்டப்பட்டு, சில பெரும் முதலாளிகள் ஆட்சி செய்யும் நாடுகளில் நீங்கள் குறிப்பிட்டவை எல்லாம் பைபிள் வாசங்க்ங்கள்
போல சம்பிரதாய்மானவை.

இந்தியாவிலும் கூட Fedaral systemதான் ஆயினும் ந்டைமுறையில் காவிரி நம்மைப் பார்த்து பல்லிளிக்கீறது.

என்ன பேசுகிறோம் என்பதை விடுங்கள் என்ன எழுதியுள்ளேன் என்பதை தெளிவாக ப்டித்து எதிர்வினை செய்யுங்கள்.

போலி தேர்தல் குறித்து விரிவாகவே எம்மிடம் பதில்கள் உள்ளன. அதில் முதல் விசயம் இந்தியாவில் ஜன்நாயகம் இல்லை
என்பதை வ்லியுறுத்தும் இந்த பதிவு. இதனை நீங்கள் படிக்கவேயில்லை என்பதுதான் தங்களது எதிர்வினைகளிலிருந்து
தெரிகிறது,. பிறகு இந்த சுட்டியில் உள்ள கட்டுரைகள்.
http://tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_3/01_u.html





//. அபத்த களஞ்சியமான ரெட் புக் நானும் படி த்துள்ளேன். நான் படித்துவிட்டு யோசித்தேன் நீங்கள் அவ்வாறு செய்ய வில்லை
என்று தெரிகிறது.///


புதிய ஜனநாயக புரட்சி, மக்கள் சர்வாதிகார மன்றங்கள், சோசலிசம், முதலாளித்துவ பாராளுமன்றம், கூட்டுச் சர்வாதிகாரம்,
கம்யுனிசம் குறித்த உஙக்ளது எதிர்வினைகளே- ரெட் புக் என்ன கல்ரில், என்ன சைசில் இருக்கும் என்பது கூட தெரியாத
ஆள் நீங்கள் என்பதை எனக்கு தெரியப்படுத்துகீறது.

மேலும் எனது இந்த பதிவையே கூட படிக்காமல் இந்தியா ஒரு முத்லாளித்துவ நாடு என்ற அடிபப்டையில் விவாதம் செய்யும்
உங்களது மூளையின் வீரியம் எனக்கு நன்றாகவே விளங்குகிறது. :-)))(தயவு செய்து இந்த பதிவை படித்து விட்டு இதில்
உள்ளதையாவது எதிர்த்து விவாதம் செய்யுஙக்ள் - மூளைக்கு சத்து மாவு தேவைப்படும் அனானி :-)))


எல்லாவற்றையும் 'இல்லை' 'ஆமாம்' என்று நீங்கள் கூறுவது உங்கள் உரிமை, நான் அல்லது பிறர் அத்னை ஏற்றுக் கொள்ள்
வேண்டுமெனில் குறைந்த பட்ச தர்க்கரீதியாக தகவல் ரீதியாக அதனை வலியுறுத்த வேண்டும். கட்டுரையில் உள்ளதையே
இதுவரை மறுத்து எதுவும் தர்க்கம் செய்ய வக்கற்ற உங்களது வெற்று உளறல்கள் மாலையில் குடித்துவிட்டு கத்துபவனையே
நியாபகப்படுத்துகீறாது.

மபோக்றசி, டெமோக்ற்சி என்று உங்கள் டிக்சனரியில் எதேனும் அர்த்தம் இருக்கலாம். அதனை எல்லாருக்கும் புரியும் வகையில்
விளக்கி எழுதுங்கள்(இங்கல்ல, உங்கள் சொந்த பதிவில் எழுதவும்). அப்புறம் நான் அதனை தனியாக வந்து பிய்க்க வேண்டுமா
என்பது தெரிந்து விடும்.

அசுரன்.

said...

ஒரு அனானி பிரிமிட்டிவ் அக்குமுலேசன் பற்றிய ஒரு கட்டுரையை இங்கு இட்டுச் சென்றுள்ளார். http://www.zmag.org/content/showarticle.cfm?SectionID=32&ItemID=12081

அந்த கட்டுரையில் தற்பொழுது நடக்கும் SEZ திட்டஙகள் இந்த பிரிமிட்டிவ் அக்குமுலேசனை போன்றது என்று சொல்கிறார். இதன் மூலம் இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு இந்த SEZக்கள் அடிகோலுகின்றன என்ற CPM பாணி ஏகாதிபத்திய ஜல்லியடிக்க முயற்சி செய்துள்ளார்.

ஆயினும், அவரை பாராட்டுகிறேன். இது வரையான தமிழ்மண விவாதத்தில், முதல் முறையாக ஒரு உருப்படியான விசயத்தை - நல்ல தீனி கொடுக்கும் ஒரு விசயத்தை - விவாத பொருளாக முன் கொண்டு வந்துள்ளார்.

நன்றி அனானி. தொடர்ந்து இது போன்ற உயர்தர தாக்குதல்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

*******************

அவர் வசதியாக இரு விசயங்களை மறந்து விடுகிறார்.

ஒன்று, இந்த SEZ எனும் பிரிமிட்டிவ் அல்லது புரதான அக்குமுலேசன் என்பதாக அவரால் சொல்லப்படுவது நடப்பது ஏகாதிபத்திய காலகட்டத்தில் என்பதை. ஆக, எந்த வரலாற்றுக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதை மற்ந்துவிட்டால் எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்ள வழிகோலும்.

இரண்டு, இந்த பிரிமிட்டிவ் அக்குமுலேசனால் தேசிய முதலாளிகள் உருவாவதில்லை மாறாக பன்னாட்டு தரகு முதலாளிகளே பயனடைகிறார்கள்.


ஏனேனில், மேலை நாடுகளில் இந்த ஆதி மூலதனம் திரண்ட பொழுது அங்கு வெளிநாட்டு மூலதனம் என்ற ஒன்று ஏற்கனவே இருந்திருக்கவில்லை. அதனால் அங்கு திரண்ட மூலதனம் என்பது தேசிய தேவைகள் என்ற வரம்பிற்குட்பட்டே விளையாடின எனவே ஒட்டு மொத்த சமூகத்தின் ஜன்நாயக வளர்ச்சி, அறிவு வள்ர்ச்சிக்கு அடிப்படையாக பிரிமிட்டிவ் அக்குமுலேசன் என்ற அந்த வள்ர்ச்சி அமைந்தது. ஆனால் இந்தியாவில்? இந்திய முதலாளி என்பவன் தனது சிறு மூலதனத்தை வைத்து பெரும் தரகு வர்க்க ஏகாதிபத்திய கம்பேனிகள் முன்னால் மண்டியிட்டு சப்பிக் கொண்டிருக்கும் பொழுதுதான் இந்த sezக்கள் நடந்தேறுகின்றன. எந்த வகையிலும் இவை இந்தியாவின் புரட்சிகர வர்க்கங்களுக்கன வளர்ச்சிப் போக்கு இல்லை.

பிரிமிட்டிவ் அக்குமுலேசன் என்பது முதலாளித்துவ மயமாகுவதற்க்கு தேவையான மூலதனத்தை உருவாக்கும் ஒரு வளர்ச்சி. ஆனால் இங்கு SEZக்களின் உருவாகும் மூலதனம் இந்தியாவுக்கான மூலதனமா அல்லது MNCக்களுக்கானதா?

MNCக்களுக்கெனில் அந்த மூலதனம் இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவ எந்த முகாந்திரமும் இல்லை.

பிரிமிட்டிவ் அக்குமுலேசன் என்பது சமூகத்தை முதலாளித்த்துவ மயமாக்கும் ஒரு வளர்சிதை மாற்றம். இதன் மூலம் சமூகத்தின் உற்பத்தி உறவுகள் முழுவதையும் முதலாளித்துவ மயமாக்குவதுடன், பெரும் எண்ணிக்கையிலான வறுமையில் வாடும் விவசாயிகளை அது சுதந்திரம் சமத்துவம் போன்ற ஆசை வார்த்தைகளைக் காட்டி நிலபிரபுக்களை ஓட்டாண்டியாக்குகிறது(பிரெஞ்சு புரட்சி). ஆனால் SEZக்கள் யாரை ஓட்டாண்டியாக்குகிறது?

ஆக, SEZக்கள் எனும் திட்டம், இந்திய சமூக அமைப்பின் இயல்பான வளர்சிதை மாற்றாமான பிரிமிட்டிவ் அக்குமுலேசனை ஒத்தது இல்லை ஏனேனில் இது இந்திய முதலாளீகளுக்கானது அல்ல. இந்த அம்சத்தில் ஒரு சிறப்பான அம்சத்தை இங்கு கவனிக்க வேண்டும்.

இந்த பிரிமிட்டிவ் அக்குமுலேசன் என்பது சமூகம் முழுமைக்குமான பிரதான மாற்றமாக இல்லாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடப்பது முதலாளித்துவத்துக்கு வழிவகுக்காது ஏனேனில் இது பெரும்பகுதி நிலபிரபுத்துவ உற்பத்தி உற்வுகளை தொடாமல் கட்டிக் காக்கிறது.

உடனே SEZக்களை நாடு முழுவதும் மிக மிக பரவலாக கொண்டு வரலாம் எனில் அதில் உள்ள சிக்கல் - நிலபிரபுக்கள தவிர்த்த பிறருக்கு ஏதுவான ஒரு சமூக மாற்றமாகவே பிரிமிட்டிவ் அக்குமுலேசன் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சி இருக்கும். மாறாக, SEZக்கள் என்பவை இந்திய தேசிய முதலாளிகளை நவீன விவசாயிகளாக காண்ட்ராக்ட் தொழில் செய்யவே நிர்பந்திக்கின்றன. ஆக, இந்த வகையில் தொழிற்கூடங்களீல் நிலவும் நிலபிரபுத்துவ உற்பத்தி உறவு பாதுகாக்கப்படுகிறது. ஆக, இந்த திட்டம் என்பது எந்த வகையிலும் பிரிமிட்டிவ் அக்குமுலேசன் என்ற வரலாற்று திட்டத்தை ஒத்தது அல்ல.



//Hence, the historical movement which changes the producers into wage-workers, appears, on the one hand, as their emancipation from serfdom and from the fetters of the guilds, and this side alone exists for our bourgeois historians. But, on the other hand, these new freedmen became sellers of themselves only after they had been robbed of all their own means of production, and of all the guarantees of existence afforded by the old feudal arrangements. - (Marx on Part VIII: Primitive Accumulation - The Capital) ///

//The starting-point of the development that gave rise to the wage-labourer as well as to the capitalist, was the servitude of the labourer. The advance consisted in a change of form of this servitude, in the transformation of feudal exploitation into capitalist exploitation - (Marx on Part VIII: Primitive Accumulation - The Capital) //

இதன் அர்த்தம் நிலபிரபுத்துவத்தின் கோரப் பிடியிலிருந்து முதாலாளீத்துவத்தின் கோர பிடிக்கு விவசாயி மாறுவதை காட்டுகிறது. இங்கு கேள்வி யாருக்காக இந்த மாற்றம். மேலை நாடுகளில் இந்த மாற்றம் என்பது அந்த நாட்டு முதலாளீகளை வளர்ப்பதற்க்கே பயன்பட்டது. இந்தியாவில்?

பிரிட்டிஸ்க்காரன் காலத்தில்தான் இந்தியாவில் முதலாளித்துவம் வளர்ந்தது. அதன் அர்த்தம் பிரிட்டிஸ் ஆட்சி நல்ல ஆட்சி என்பதல்ல. உண்மையில் இயல்பான ப்ரந்துபட்ட முதலாளித்துவ வளர்ச்சியை முடக்கி தனக்கு தேவையான அளவில் மட்டும் முதலாளித்துவ வளர்ச்சியை இந்தியாவில் வளர விட்டது பிரிட்டன். அதனையொதத்துதான் SEZக்கள் எனவேதான் ஜாஹாங்கீர் காலத்தில் இந்தியாவில் பிரிட்டிஸ்க்காரன் அமைத்த குத்தகைப் பிரதேசங்களுடன் இந்த SEZக்களை நாம் ஒப்பிடுகிறோம். அதனால்தான் இதனை மறுகாலனியாதிக்கத் திட்டம் என்கிறோம்.

ஏகாதிபத்தியம் அவ்வளவு மூலதனத்தையும் கொட்டி வைத்துள்ளது இந்திய முதலாளீத்துவத்தை வளர்க்கவா அல்லது இந்திய வளங்களை சுரண்டவா?

வளங்களை சுரண்டத்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் பிரிமிட்டிவ் அக்குமுலேசன் குறித்த கட்டுரை எழுதிய திரிபுவாதிகள் வசதியாக இந்த நிகழ்ச்சிப் போக்கின் ஒரு அம்சத்தை மட்டும் நமக்கு காட்டுகிறார்கள்.

இந்த சுரண்டலின் ஊடாக சிறு அளவில் தமது தேவைக்காக அவர்கள் செய்யும் முதலாளித்துவ சமூக மாற்றங்களையே ஒட்டு மொத்த சமூகத்தின் முதலாளித்துவ வளர்ச்சியாக பூதக் கண்ணாடி கொண்டு பெருக்கிக் காட்டுகிறார்கள். மாறாக மிகப் பெரிய அளவில் இவர்கள் இந்திய வளங்களை சுரண்டுவதற்க்கு நிலபிரபுத்துவ உற்பத்தி முறைகளை பேணி பாதுகாப்பது குறித்து மௌனமே சாதிக்கிறார்கள்.

***********************

இந்த கட்டுரையின் இன்னொரு மோசடி, முதலாளித்துவ புரட்சி என்பது உண்மையில் நிலபிரபுத்துவத்துடன் முரன்பட்டு மோதி நடந்தேறுகிறது. இந்த பிரிமிட்டிவ் அக்குமுலேசன் என்பதும் முந்தைய நிலபிரபுத்துவ சமூக அமைப்பில் உடைமை வர்க்கஙக்ளாய்(கைவினைஞர்கள், பெரும் நிலக்கிழார்கள், இதர நில் உடைமையாளர்கள்) இருந்தவர்களை விரட்டியே நடந்தேறுகிறது.

//The industrial capitalists, these new potentates, had on their part not only to displace the guild masters of handicrafts, but also the feudal lords, the possessors of the sources of wealth. In this respect, their conquest of social power appears as the fruit of a victorious struggle both against feudal lordship and its revolting prerogatives, and against the guilds and the fetters they laid on the free development of production and the free exploitation of man by man. - (Marx on Part VIII: Primitive Accumulation - The Capital) ///


ஆனால்,
எந்த வகையிலாவது, SEZக்களால் பயன்பெறும் வர்க்கங்களான தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய MNCக்களும் நிலபிரபுத்துவத்துடன் முரன்படுகிறார்களா? இல்லையே? இன்னும் இந்தியாவின் பெரும் நிலப் பரப்புகள் மடங்களின் கையிலும் மூப்பனார் போன்ற நிலபிரபுக்களின் கையிலும் தானேயுள்ளது?

இந்த SEZக்களாவது நிலபிரபுக்க்களுடனோ அல்லது நிலபிரபுத்துவ உற்பத்தி உறவுடனோ நேரடி முரன்பாட்டை முதன்மைப்படுத்துகிறதா இல்லையே?

**********


//This aspect of primitive accumulation is important for our purposes because the current frenzy of state-assisted acquisition of land and other resources in India is precisely a process whereby rights of access and usage of already existing resources are being redistributed and transferred. - அனானியின் கட்டுரை ////

மூலதனத்தின் புரதான வடிவம் என அறியப்படும் பிரிமிட்டிவ் அக்குமுலேசன் எனும் வளர்ச்சிப் போக்கில் யாரிடம் இருந்து அதிகாரம் யாருக்கு செல்கிறது?

நிலபிரபுக்களிடமிருந்து அதிகாரம் முதலாளிகளுக்குச் செல்கிறது, இங்கு SEZக்களில் என்ன நடக்கிறது?

ஏற்கனவே அதிகாரமின்றி வாடி வதங்கிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து இருப்பதையும் பிடுங்கி ஓட்டாண்டியாக ஆக்கி அவனை மேலும் கெவலமான அடிமை நிலைக்கள்ளவா தள்ளுகிறது இந்த SEZக்கள்.

நிலபிரபுக்கள் அல்லது நிலபிரபுத்துவ உற்பத்தி முறையின் தலைமை சக்திகள் அப்படியே தமது உற்பத்தி உறவை SEZக்களுக்கும் விரிவுபடுத்திக் கொள்கின்றனர். தேசிய முதலாளிகளோ மேலும் மேலும் MNC மற்றும் தரகு முதலாளிகளின் தாக்குதலுக்காளாகி மூலதன சுழற்சியில் தமது ஆளுமை சுருங்கி வருகின்றனர். ஆக, இங்கு அதிகாரம் மாற்றம் என்பதில் எந்த மாற்றமும் இல்லையே பிறகு எப்படி இந்த SEZக்கள் பிரிமிட்டிவ் அக்குமுலேசன் என்ற வகையினத்தைச் சேர்ந்ததாகும்?

***************

இதையெல்லாம் விட மிக முக்கியமான விசயம், மேலை நாடுகளின் பண்ணையடிமை முறை என்பது வேறு வடிவம், இந்தியாவின் நிலபிரபுத்துவ பண்ணையடிமை முறை என்பது வேறு வடிவம். மேலை நாடுகளில் பெரும்பாலும் நில உடைமை வர்க்கங்களே அதனால் ஒவ்வொருவனும் தனது நிலத்தில் அதிக விளைச்சலை உருவாக்கி லாபம் சேர்க்கும் நோக்கத்தில் க்டுமையாக உழைத்து அந்த சமூகத்தின் ஒட்டு மொத்த முதலாளித்துவ வளர்ச்சிக்கு அடிகோலுகிறான்.

//It is generally accepted by economic historians that in pre-capitalist modes of production the primary producers (majority of whom were peasants) had ownership of the means of production, most crucial among them being land. - அனானி கொடுத்துள்ள கட்டுரை///

இந்தியாவிலோ, பிரிட்டிஸ்க்காரனின் நிலசீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முன்பு வரை நிலங்கள் அனைத்தும் மன்னனுக்கே சொந்தம், நிலபிரபுக்களுக்கும், கோயிலகளுக்கும் பிற ராணுவ தளபதிகளுக்கும் அனுபோக பாத்யதை மட்டுமே உண்டு. எனவே எல்லா நிலமற்ற விவசாயியும் அதிக உற்பத்தி செய்து லாபம் சேர்க்கு முயற்சியில் ஈடுபடவில்லை. ஆக, இந்தியாவின் மிக பெரும் எண்ணீக்கையிலான விவசாயிகள் நிலமற்ற அடிமைகளாகவே பிரிட்டிஸ்க்காரன் வரும்முன் இருந்துள்ளனர்.

இதுதான் இந்தியாவின் பன்னெடுங்கால சமூக மாற்றமற்ற மோனநிலைக்குக் காரணம், இன்றும் இந்தியாவில் மிகப் பெரும்பான்மையின்ர் நிலமற்ற கூலிகள் அல்லது வெகு சொறப நிலத்தை உடைமையாகக் கொண்டவர்கள், குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்பவர்கள் என்றே உள்ளனர். அனானி கட்டுரையில் குறிப்பிடப்படும் மேலை நாடுகளின் நிலபிரபுத்துவ அமைப்பில் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருளின் மீது உரிமை கொண்டிருந்தனர் - had ownership of the means of production, most crucial among them being land. ஆனால் விலை பொருளுக்கு விலை வைக்கும் உரிமை கோரும் படு கேவலமான நிலையில்தான் இந்திய விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் மேற்கத்திய பிரிமிட்டிவ் அக்குமுலேசனையும், SEZக்களையும் ஒப்பிடுவதே மிகப் பெரிய மோசடி.

இன்னொரு பக்கமோ நிலத்தில் காலே பதிக்காத ஒரு பெருங்கூட்டம் இந்த நிலங்களின் விளைச்சலை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, இந்த நிலங்களை நியாயமாக உழுபவர்களுக்கு சொந்தமாக்குவதே உண்மையில் இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அடிகோலும். இதுதான் நிலங்களின் மீதும், உற்பத்தி பொருள்களின் மீதும் விவசாயிக்ளுக்கு முழு உரிமையைக் கொடுக்கும். சமூகத்தின் இந்த வளர்ச்சிக்கட்டத்தை பைபாஸ் செய்யும் எந்த ஒரு மாற்றமும், நிலபிரபுத்துவ உற்பத்தி உறவுகளை பாதிக்காத பிற எந்தவொரு சீர்திருத்தமும், ஏகாதிபத்திய நிலபிரபுத்துவ சுரண்டலின் இன்னொரு வடிவமாகவே இருக்குமேயொழிய எந்த வகையிலும் அது சமூக மாற்றாத்துக்கான, இந்திய விடுதலைக்கான விசயமாக இருக்காது.

ஏற்கனவே அதிகாரத்திலிருந்து ஆட்டிப்படைத்த நிலபிரபுத்துவத்திற்க்கு அடிகொடுத்து அந்த வர்க்கத்தின் கைகளிலிருந்து உடமைகளை பிடுங்கி முதலாளிக்கு உதவிய பிரிமிட்டிவ் அக்குமுலேசன் எனும் நிகழ்ச்சி எங்கே, இது வரை அதிகாரத்திலேயே இல்லாத சிறு நில உடமையாளர்கள் கையிலிருந்தும், நிலமற்ற கூலிகளையும் இன்னுமொரு மொசமான அடிமைத் தனத்திற்க்கு உட்படுத்தி, தேசிய முதலாளிகளை முடக்கி போட்டு பெரும் நிலவுடைமையாளர்களுக்கும், MNCக்களுக்கும் உதவி செய்யும் SEZ எங்கே?

***************


//the primitiveness of "primitive accumulation" does not arise simply from its location in historical time, relevant only as the initial stage of capitalism; rather, it is the constitutive primitive of the capitalist system, a process that is essential for perpetuating its fundamental class structure - the separation between producers and means of production. - அனானியின் கட்டுரை
//

உடமையற்ற வர்க்கஙக்ளை உருவாக்குவதே நிலபிரபுத்துவத்திலிருந்து அடுத்தகட்ட சமூக வளர்ச்சிக்கு அடிப்படையை உருவாக்கும். அந்த நிகழ்வு போக்கே பிரிமிட்டிவ் அக்குமுலேசன் என்று இந்த வரிகள் சொல்கின்றன. தற்போதைய SEZக்கள் யாரிடமிருந்து பிடுங்குகின்றன என்று பார்த்தோம், யாருக்கு அவற்றை தருகின்றன என்றும் பார்த்தோம். ஆக எந்த வகையிலும் SEZக்கள் பிரிமிட்டிவ் அக்குமுலேசன் எனும் நிகழ்வு போக்கு இல்லை என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

அப்படியெனில், உடமையற்ற வர்க்கங்களை உருவாக்கி அடுத்த சமூக கட்டத்துக்கு செல்ல புதிய ஜனநாயக புரட்சியாளர்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்வார்கள்? அதாவது இன்றைய ஏகாதிபத்திய வரலாற்றுக் கட்டத்திற்க்கான(முதலாளீத்துவ உற்பத்தி முறை குறிப்பிடத்தகுந்த அளவு வளர்ந்துள்ள நிலையில்) ஆதி மூலதன திரட்டல் என்பது என்னவாக இருக்க முடியும்.

#1) உழுப்வர்களுக்கு நிலத்தை சொந்த்மாக்கி கூட்டு பண்ணைகள்(collectivization) எனும் அமைப்பில் இணைத்து அதன் வளர்ச்சிப் போக்கில் அவர்க்ளின் உடமைகளை பொதுவாக்குவது.

#2) தேசிய முதலாளி, அரசு கூட்டு பெரும் தொழிற்சாலைகளை அமைத்து, பிறகு அந்த முதலாளீகளுடன் சாத்வீகமாக போராடி, அவர்களுக்கு தார்மீக நிர்பந்தத்தை உருவாக்கி உடமைகளிடமிருந்து அவர்களை பிரிப்பது.

இவை வன்முறை துணை கொண்டு நடக்க இயலாது, ஏனெனில் இந்த இரண்டு சொத்துடமை வர்க்கத்தாரும் ஏகாதிபத்தியத்தையும், பார்ப்பனிய நிலபிரபுத்துவத்தையும் தூக்கியெறிய ஆதார பலமான சக்திகள், எனவே சாத்வீகமான போராட்டங்கள், தார்மீக நிர்பந்தங்கள் மூலமே இந்த் மாற்றம் நடந்தேறும். இதை சீனாவில் செய்து காட்டினார் மாவோ. இது இயங்கியல் தத்துவத்திற்க்கு மாவோ அளீத்த பங்களிப்பின் நடைமுறை பரிசோதனையாகவும் அமைந்தது

இவையிரண்டும் சீனாவில் வெற்றிகரமாக நடந்து, சீனா சோசலிச கட்டத்தை அடைந்தது வரலாறு. எனவே இதன் சாத்தியக் கூறு குறித்து மலைக்க அவசியமில்லை. ஆனால், இன்றைக்கு ஏழை சிறு விவசாயிகளின் நிலங்களை பறிப்பதை பிரிமிட்டிவ் அக்குமுலேசன் என்று நியாயப்படுத்தும் அடிவருடிகள், உண்மையான பிரிமிட்டிவ் அக்குமுலேசனாகிய 'நிலத்தில் கால் வைக்காத பெரும் நிலத்திற்க்கு சொந்தக்காரர்களிடமிருந்து நிலங்களை பறிக்கும் நடவடிக்கையை' வன்மூறை அராஜகம் என்று கண்டித்து கூக்குரலிடுவர். அது அவர்களின் வர்க்க பாசம்.


அசுரன்

said...

Good day, sun shines!
There have been times of troubles when I felt unhappy missing knowledge about opportunities of getting high yields on investments. I was a dump and downright stupid person.
I have never imagined that there weren't any need in big initial investment.
Now, I'm happy and lucky , I begin to get real income.
It's all about how to select a correct companion who uses your money in a right way - that is incorporate it in real business, parts and divides the profit with me.

You may get interested, if there are such firms? I have to tell the truth, YES, there are. Please get to know about one of them:
http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]

Related Posts with Thumbnails