TerrorisminFocus

Thursday, September 23, 2010

இந்தியாவைப் பீடித்த பன்றிக் காய்ச்சலும், பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பும்!!!


டிசம்பர் 6, 1992 அயோத்தி பாபர் மசூதியை இடிக்க கையில் கடப்பாரைகளுடன் 200,000 காவி வெறியர்கள் கூடினர்.

கையில் கடப்பாரைகளுடன் இத்தனை பேர் காராப் பூந்தி சாப்பிடக் கூடியதாக போலீசு நினைத்துவிட்டது போலும், அவர்களை தடுக்கவோ அல்லது இத்தனை பேர் ஓரிடத்தில் அபாயகரமான முறையில் கூடுவதை நிறுத்தவோ போலீசு ஒன்றுமே செய்யவில்லை. இதுவே, நியாயமான கோரிக்கைகளுக்கு ஒரு பத்து பேர் கூடினாலே சட்டம் ஒழுங்கு என்று ஒப்பாரி வைத்து தடியடி நடத்தி மண்டையுடைக்கும் போலீசு, காவிக் கறையைக் கண்டால் மட்டும் பல்லிளிக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்படுவதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்று 1992க்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுவும் நீதிமன்றத் தீர்ப்புதான். நாளை வரவிருப்பதும் நீதிமன்ற தீர்ப்புதான். எது மீறப்பட வேண்டும், எது கட்டாயமாக்கப்படும் என்று முடிவு செய்பவர்கள்/செய்தவர்கள் என்றுமே காவி பயங்கரவாதிகள்தான்.

அரசின் ஆயுதப் படைகள் அமைதியாகப் பார்த்து ரசிக்க, காவி பயங்கரவாதிகள் மசூதியை இடித்துத் தள்ளினர்.

அத்துடன் நில்லாமல், அருகாமை முஸ்லீம் வீடுகள், சொத்துக்களை தாக்கினர். பத்திரிகை, ஊடகத் துறையினரும் தாக்கப்பட்டனர். போலீசு அமைதியாகவே இருந்தனர். அவர்களது கடமை காவி வெறியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போலும்.



இதற்குப் பிறகு நடைபெற்ற ஜவ்விழுக்கும் நீதிமன்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக அகல்வாய்வு செய்யப்பட்டது. அங்கு ராமன் இருந்ததற்கு எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லையென்று முடிவானது. இதுவும் நீதிமன்ற தீர்ப்புதான் ஆனால் காவி வெறியர்கள் கூறினர், அது எங்கள் நம்பிக்கையென்று.

2002ல் வி ஹெச் பி வெறியர்கள் ராமர் கோயிலை கட்டப் போகிறோம் என்று இன்னொரு ரவுண்டு கிளம்பினர், அப்படி போன கும்பலில் ஒன்று திரும்பி வரும் போது வழி நெடுக ரவுடித்தனம் செய்து கொண்டே சென்றது. அந்த கும்பல்தான் குஜராத்தில் ரயில் பெட்டியோடு எரியூட்டப்பட்டது. அது விபத்தா, அல்லது தாக்குதால என்பதைவிட அந்தக் கும்பல் எரியூட்டப்பட்டதற்கு பின் உள்ள நியாயங்களே என் கண்ணுக்குத் தெரிகின்றன.

இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடத்தில் இன்று பலத்த பாதுகாப்புகளுடன் ராமனது வழிபாடு நடந்து வருகிறது. கேட்டால் ஸ்டேட்டஸ் க்யூ என்கிறார்கள். அதாவது இதன் பொருள் எனக்கு விருப்பபடும் போது நீதிமன்றம், சட்டம் சொல்கிறபடி நட என்பேன். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லையெனில் நானே அதனை மீறுவேன் என்பதே ஆகும்.



இதுதான் இந்தியாவைப் பிடித்துள்ள பன்றிக் காய்ச்சல். காவிப் பன்றிக் காய்ச்சல். காய்ச்சலும், பன்றியும் என்று ஒழிக்கப்படுமோ அன்றுதான் இந்தியாவிற்கு விடிவு.

அசுரன்

**
இதே டிசம்பர் 6தான் காவிப் பன்றிக் காய்ச்சலுக்கு மருந்து சொன்ன அம்பேத்கரின் இறந்தநாள் ஆகும். காவி வெறியர்களின் காழ்ப்புணர்ச்சியைக் கவனியுங்கள், டிசம்பர் ஆறு அன்றுதான் பாபர் மசூதி, பெரியார் சிலை உடைப்பு எல்லாம் அரங்கேறின.

Rama.... Rama....

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில் 1 -2

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனு...

'வினை'யகர் சதுர்த்தி!!

அக்சார்தம் கோயிலை தாக்கியவர்களுக்கு மரணதண்டனை, பாபர் மசூதியை தாக்கிய காவி பயங்கரவாதிகளுக்கு?

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி

அத்வானி, ஜோஷி முதலான சங்கப்பரிவாரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு

7 பின்னூட்டங்கள்:

said...

செப். 28ம் தேதி வரை அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு-சுப்ரீம் கோர்ட்

http://thatstamil.oneindia.in/news/2010/09/23/ayodhya-verdict-security-india.html

said...

http://vanakkamnanbaa.blogspot.com/2010/09/blog-post_3454.html

ராமரா? பாபரா? - எப்படி இருக்கும் தீர்ப்பு

said...

அயோத்தி ஒரு காவி பயங்கரம்! மாவோ சிவப்பு பயங்கரம்! முஸ்லிம் பச்சை பயங்கரம்! ................ வர்ணக் கோலங்கள்!

ஒன்றுபடுவோம்! வன்முறையை விரட்டுவோம்!

said...

முதலாளித்துவ பயங்கரவாதம் மிஸ்ஸிங்கு ரம்மி

said...

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html


(Hi, people can share your essays with my friends using email post link icon u have now in every posts only if they know their friends email id in their mind's memory...so place the tell a friend button below every posts as said in the above link of my dummy blog.)

(asuran, also check out other important posts in my blog releated to blogger hacks)

said...

இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துக் கோயில்கள் எப்படி கட்டபட்டன? அவை புத்த, சமண கோயில்களை இடித்தோ அல்லது நாட்டார் தெய்வக் கோயில்களை ஆக்கிரமிப்பு செய்தோ(திருப்பதி கோயில் முதற்கொண்டு) கட்டப்பட்டுள்ளவை என்பதை பல்வேறு தொல்பொருள் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இவை உண்மையான வரலாறுகள் (ராமனது வரலாறு போல ருசுப்படுத்த முடியாத நம்பிக்கையோ, கட்டுக் கதையோ, புளுகுனி மூட்டைகளோ அல்ல.) பாபர் மசூதிக்கு இந்து மத வெறியர்கள் சொல்லும் நியாயம் அவர்களது புனிதமான கோயில்களுக்கும் பொருந்தும் எனில் அக் கோயில்களை இடித்து தகர்ப்பது எப்போது? தன்மானமும், ரோசமும் உள்ளதாக கருதிக் கொள்ளும் அன்பு பக்தர்களே, பதில் சொல்லுங்கள்.

said...

"Terrorism in India is the result of what happened in Ayodhya. Before the Babri Masjid was demolished, there were stray terrorist incidents in Kashmir, but the rest of India remained untouched. Now it's everywhere," says Devi Das Bijlani.

Not the words of an analyst, just how a father explained the death of his son at the Sankat Mochan terror attack of Varanasi in 2006.

http://www.ndtv.com/article/india/how-the-babri-demolition-changed-politics-12098

Related Posts with Thumbnails