TerrorisminFocus

Monday, September 27, 2010

உன்னோட வெட்டி கவுரதைக்கு பலி 300 உயிர்களா?






காமென்வெல்த் போட்டிகளில் ஊழல், வரலாறு காணாத முறைக்கேடுகள். இப்படியும் அல்பத்தனமாக ஊழல் செய்ய முடியுமா என்பது போல குடை வாடகைக்கு எடுத்தது, பீ துடைக்கும் காகிதம் விலைக்கு வாங்கியது என்று நாம் நகைச்சுவைத் துணுக்குகளாக மட்டுமே படித்துள்ளவற்றையெல்லாம் இன்று உண்மையாக்கியுள்ளனர். இது குறித்து தெரிவிக்கப்படும் பல்வேறு கருத்துக்களில் தொக்கி நிற்பவை இரண்டு விசயங்கள்தான், ஒன்று பல்லாயிரம் கோடி ஊழலும், இந்த ஆடம்பரமும் வறுமையில் மக்கள் வாடும் இந்தியாவிற்குத் தேவையா என்கிற ஒரு வாதம், இன்னொன்று அய்யோ போச்சே... போச்சே.. இந்தியாவோட கவுரதை கட்டமண்ணாப் போச்சே.. என்ற வாதம்.

இவையிரண்டில் முதல் வாதம் மிகச்சரியானது எனினும், இந்த ஊழலின் வக்கிரமான பக்கத்தை இந்த இரண்டு வாதங்களும் காண மறுக்கின்றன. தேசத்தின் கவுரம் என்ற பெயரில் இந்த ஆடம்பர விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை ஆந்திரா, பிஹார், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த கூலிக்கு உழைக்கும்(விவசாயிகள்) மக்களும், டெல்லி வாழ் ஏழைகளும் மிகக் கொடூரமாக வதைக்கப்பட்டுள்ளனர்.

காமன்வெல்த் போட்டிகளுக்காக இடிக்கப்படும் சேரிகள்

""முதலமைச்சர் ஷீலா தீட்சித், டெல்லியிலுள்ள 60,000 பிச்சைக்காரர்களை விரட்டியடித்தார். சேரிகளை இடித்துத் தரை மட்டமாக்கி இலட்சக்கணக்கான ஏழை மக்களை வீடற்ற அனாதைகளாக, கடுங்குளிரில் அல்லாடவிட்டார். டெல்லி யுனிவர்சிட்டி மாணவர்களின் தங்கும் விடுதிகள் பிடுங்கப்பட்டு நடுரோட்டில் நிறுத்தப்பட்டனர். ஏழை மக்களின் பென்சம் பணம் முதற்கொண்டு இந்த ஊழலில் கரைக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிக்காக டெல்லியின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகளை ஒப்பந்தமெடுத்து ஊழல் செய்தவர்கள், இன்னொரு பக்கம் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அற்ப கூலிக்கு வரவழைத்து, கொத்தடிமைகளாகக் கசக்கி பிழிந்து வேலை வாங்கியுள்ளனர். சந்தை விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை வாடகைக்கு எடுத்தவர்கள், தொழிலாளர்கள் தங்குவதற்கு வீடுகள் கூடக் கொடுக்காமல் பிளாஸ்டிக் தார்பாயிலும் தகரக் கொட்டைகளிலும் மொத்தமாக அடைத்ததால், தொற்று நோய் தாக்கி இதுவரை நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். கட்டுமானப் பணிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படாத நிலையில் ஏற்பட்ட விபத்துகளிலும், தரக்குறைவான பொருட்களால் கட்டப்பட்ட பாலங்கள், கட்டுமானங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களிலும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள் கேள்வி கேட்க நாதியின்றி கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்ற விபத்துகளின் காரணமாக மெட்ரோ ரயில் திட்டப் பணியில் மட்டும் 90-க்கும் மேலான தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்."" (நன்றி: புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010 )

இப்படி 300க்கும் மேல் ஏழை மக்களின் உயிர்களை பறித்தது, அவர்களை இத்தனை ஆண்டுகள் மிகக் கொடூரமான சித்திரவதைக்கு ஆட்படுத்தியது இவையனைத்தும் தேசத்தின் கவுரம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டது. இன்று அதே கவுரத்தின் பெயரால் அவர்கள் செய்த ஊழலும் கடந்த செல்லப்படுகிறது. அப்படியானால், 300 உயிர்கள் பலியானதும், ஏழை மக்கள் அனுபவித்த சித்திரவதைகளும் எதற்காக? தேசத்தின் கவுரத்தால் ஏழை உழைக்கும் மக்களுக்கு ஒரு மசிரளவும் பிரயோசனமில்லை என்றாலும், குறைந்தது இந்தியன் என்ற போலியான பெருமிதமாவது மிஞ்சியிருக்கும்(வலியை மறைக்க உதவும் போதையைப் போல), அதனையும் பறித்துள்ள இந்த ஊழல் எத்தனை வக்கிரமானது? இன்றைக்கு இந்த ஊழல் அசிங்கம் வெளிப்பட்டுள்ள தருணத்தில் கூட மறந்தும் யாருமே உயிர்விட்ட நூற்றுக்கணக்கிலான உழைக்கும் மக்கள் பற்றியோ, டெல்லிவாழ் ஏழைகள் பற்றியோ பேசக் காணும். மனிதம் என்பதே இவர்களின் மனதில் இருந்து மறைந்துவிட்டதா? லாபமும், சுக போகமும், இந்த நிமிடத்தை அனுபவிப்போம் என்கிற நுகர்வு வெறியும் இவர்களின் அடிப்படை நாகரிகத்தையே அழித்தொழித்துவிட்டதா? கோட்டு, சூட்டுப் போட்டு ஊடகங்களில் ஒளிரும் இந்த ஜடங்கள் எல்லாம் மனிதர்களா இல்லை கிடைத்தவற்றையெல்லாம் அனுபவித்து, நுகர்ந்து கழியும் இயந்திரங்களா? அல்லது, ஏழைகள் என்பதால் அவர்களின் உயிர் எச்சில் இலைகளுக்கும் கீழோ? ஊழல் செய்தவர்களைவிட ஊழல் குறித்து பேசும் இத்தகைய மேட்டுக்குடி நியாயவன்கள் மற்றும் ஊடகங்கள், ஏழை மக்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதை குறித்து இப்போது கூட கண்டும் காணாமல் இருக்கும் வக்கிரம் மிக கேவலாமானதாக இருக்கிறது.







இப்போதைய நிலையில், மனசாட்சியுள்ள எவனுமே கேட்க்க வேண்டிய கேள்வி இதுதான், செப் 11 மும்பை தாக்குதல் கொலையாளிகள் பயங்கரவாதிகள், அவர்களுக்குத் தூக்குதண்டனை கொடுப்பது சரி எனில் 300 ஏழை உழைக்கும் மக்களின் உயிர்களைப் பறித்த காமன்வெல்த் விளையாட்டு பயங்கரவாதிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது? ஊடகங்கள் புடை சூழ ராஜ பரிபாலனம்தான் அவர்களுக்கான தண்டனையா?

அசுரன்

தொடர்புடைய பதிவுகள்


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!

0 பின்னூட்டங்கள்:

Related Posts with Thumbnails