கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது, ஆனால் உலக வங்கி தலையிடலாம்!!
எலி தின்று வீணாகப் போகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடு என்று நீதிமன்றம் சொன்னதற்கு பிரதமர் சொல்லிய பதில். 'அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது'. இதுக்கு முன்பு உலக வங்கி, அமெரிக்கா, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதுரகம் போன்றவை இந்திய அரசின் எல்லா கொள்கைகளையும் தீர்மானித்தனவே அப்போதெல்லாம் மன்மோகன் இப்படித்தான் குதித்தாரா? இல்லையே? அப்புறமென்ன கொள்கை முடிவு? வேறொன்றும் இல்லை, உலகமயக் கொள்கைகளை உலக வங்கியின் ஆணைப்படி நிறைவேற்றுவதைத்தான் மன்மோகன் இப்படிச் சொல்கிறார். அந்தக் கொள்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் இலவசம் என்று சொன்னதைத்தான் மன்மோகன் எதிர்க்கிறார்.
இலவசம் என்பது பன்னாட்டு முதலாளிகளுக்கு மட்டும்தான், ஏழை மக்களுக்கு டிவி பொட்டி வேண்டுமானால் இலவசமாகக் கிடைக்கும். ஆனால் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், குடிநீர் போன்றவை இலவசமாகக் கொடுக்கப்படாது. ஏனேனில், இவையெல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் வியாபாரப் பொருட்கள். இவற்றை இலவசமாகக் கொடுத்துப் பழக்கினால் விலை வைத்து விற்று பன்னாட்டு கம்பனிகள் லாபம் பார்ப்பதை மக்கள் விரும்ப மறுப்பார்கள். எனவேதான் உலக வர்த்தகக் கழகம் தெளிவாகச் சொல்கிறது இவற்றை சரக்கு என்று. இந்த கொள்கையில்தான் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று குதிக்கிறார் மன்மோகன் சிங்.
ஏறு பூட்டி விளைவித்த விவசாயிக்கே விளை பொருளின் மீது உரிமையில்லை, பட்டினியில் சாகிறான். ஆனால் இவன் சொல்கிறான் உணவை இலவசமாகக் கொடுக்க முடியாது என்று. யாருடைய சொத்து அது? இவனுடைய அப்பன் வீட்டுச் சொத்தா அது? இதனால் விவசாயிக்கு பாதிப்பு என்கிறார் மன்மோகன். புதிய பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் அழிவதைப் பற்றி கேட்டால், உணவு உற்பத்தி குறைவதைப் பற்றி கேட்டால் நாடு தொழில்மயமாக வேண்டும் என்று சொல்லும் நீ, இப்போது மட்டும் விவசாயிக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறாயா?
கோதுமை அதிகமாக விளைந்தால் அதை கடலில் கொட்டுவேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன், பால் உற்பத்தி அதிகமானால் அவற்றை கொட்டி அழிப்பேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன் இதுதானே மேலை நாடுகளின் சந்தை விதிகள். இதைத்தானே மன்மோகனும் வேறு மொழியில் - அடிமைகளின் மொழியில் - பேசுகிறார்?
இன்னுமாயா இதை உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்னு சொல்லிட்டுத் திரியுறீங்க? உலகின் மிகப் பெரிய பிண நாயகம்னு சொல்லுங்க அதுதான் சரி.
அசுரன்
3 பின்னூட்டங்கள்:
கைவிரல் எண்ணிக்கை அளவுகூட இல்லாத முதலாளிகளுக்காக பல லட்சம் பழங்குடியின மக்களை விரட்ட கம்பெனி கம்பெனியா படைய அனுப்புறான் தில்லாலங்கடி மன்மோகன். பல லட்சம் டன் உணவுப்பொருள் வீணாகுதே ஏழை மக்களுக்கு இலவசமா குடுடான்னா 37 சதவீதம் பேர் ஏழைகளா இருக்காங்களே எப்படிக் கொடுக்கறதுன்னு கேக்குறான். பல லட்சம் பேரை அவர்களின் இடத்தை விட்டு எப்படி துரத்தருதுன்னு மட்டும் கேட்காத பூனைத்தலையன் இலவசமா எப்படி 40 கோடி பேருக்கு வழங்குறதுன்னு கேள்வி கேக்குறான். மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட் தலையிடக்கூடாதாம். என்ன உன் கொள்கை. மக்களை பொணமாக்குற கொள்கைதானே. அதையாவது வெளிப்படையா சொல்லு. இவனெல்லாம் ஒரு பிரதமரு.
//கோதுமை அதிகமாக விளைந்தால் அதை கடலில் கொட்டுவேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன், பால் உற்பத்தி அதிகமானால் அவற்றை கொட்டி அழிப்பேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன் இதுதானே மேலை நாடுகளின் சந்தை விதிகள். இதைத்தானே மன்மோகனும் வேறு மொழியில் - அடிமைகளின் மொழியில் - பேசுகிறார்?//
இங்கே ஒரு பதிவர் தானே நிலத்தில் இறங்கி உழுது பயிரிட்டது போல குதித்து இலவசமாக கொடுக்க முடியாது என்று எழுதுகிறார்.
ஏனேனில் அது பொதுச் சொத்தாம். பட்டினியில் பல கோடி பேர் செத்தாலும் பரவாயில்லை, என்னுடைய பொதுச் சொத்தில் 4 லட்சம் கோடி பன்னாட்டு முதலாளிகளுக்கு வரிச்சலுகை கொட்டி அழுதாலும் பிரச்சினையில்லை என்று வாழாவிருந்த இந்த பதிவர்தான் வறுமையில் வாடுபவர்களுக்கு எலி தின்று வீணாகும் தானியங்களை இலவசமாகவாவது கொடு என்று கேட்டவுடன் கோபம் வருகிறது.
இவர்களைப் போன்ற பதிவர்களின் சொத்து ஒன்றே ஒன்றுதான் - கூனி வளைந்த முதுகெலும்புதான் அந்தச் சொத்து.
அருமையான கட்டுரை
Post a Comment