TerrorisminFocus

Monday, September 27, 2010

உன்னோட வெட்டி கவுரதைக்கு பலி 300 உயிர்களா?






காமென்வெல்த் போட்டிகளில் ஊழல், வரலாறு காணாத முறைக்கேடுகள். இப்படியும் அல்பத்தனமாக ஊழல் செய்ய முடியுமா என்பது போல குடை வாடகைக்கு எடுத்தது, பீ துடைக்கும் காகிதம் விலைக்கு வாங்கியது என்று நாம் நகைச்சுவைத் துணுக்குகளாக மட்டுமே படித்துள்ளவற்றையெல்லாம் இன்று உண்மையாக்கியுள்ளனர். இது குறித்து தெரிவிக்கப்படும் பல்வேறு கருத்துக்களில் தொக்கி நிற்பவை இரண்டு விசயங்கள்தான், ஒன்று பல்லாயிரம் கோடி ஊழலும், இந்த ஆடம்பரமும் வறுமையில் மக்கள் வாடும் இந்தியாவிற்குத் தேவையா என்கிற ஒரு வாதம், இன்னொன்று அய்யோ போச்சே... போச்சே.. இந்தியாவோட கவுரதை கட்டமண்ணாப் போச்சே.. என்ற வாதம்.

இவையிரண்டில் முதல் வாதம் மிகச்சரியானது எனினும், இந்த ஊழலின் வக்கிரமான பக்கத்தை இந்த இரண்டு வாதங்களும் காண மறுக்கின்றன. தேசத்தின் கவுரம் என்ற பெயரில் இந்த ஆடம்பர விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை ஆந்திரா, பிஹார், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த கூலிக்கு உழைக்கும்(விவசாயிகள்) மக்களும், டெல்லி வாழ் ஏழைகளும் மிகக் கொடூரமாக வதைக்கப்பட்டுள்ளனர்.

காமன்வெல்த் போட்டிகளுக்காக இடிக்கப்படும் சேரிகள்

""முதலமைச்சர் ஷீலா தீட்சித், டெல்லியிலுள்ள 60,000 பிச்சைக்காரர்களை விரட்டியடித்தார். சேரிகளை இடித்துத் தரை மட்டமாக்கி இலட்சக்கணக்கான ஏழை மக்களை வீடற்ற அனாதைகளாக, கடுங்குளிரில் அல்லாடவிட்டார். டெல்லி யுனிவர்சிட்டி மாணவர்களின் தங்கும் விடுதிகள் பிடுங்கப்பட்டு நடுரோட்டில் நிறுத்தப்பட்டனர். ஏழை மக்களின் பென்சம் பணம் முதற்கொண்டு இந்த ஊழலில் கரைக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிக்காக டெல்லியின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகளை ஒப்பந்தமெடுத்து ஊழல் செய்தவர்கள், இன்னொரு பக்கம் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அற்ப கூலிக்கு வரவழைத்து, கொத்தடிமைகளாகக் கசக்கி பிழிந்து வேலை வாங்கியுள்ளனர். சந்தை விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை வாடகைக்கு எடுத்தவர்கள், தொழிலாளர்கள் தங்குவதற்கு வீடுகள் கூடக் கொடுக்காமல் பிளாஸ்டிக் தார்பாயிலும் தகரக் கொட்டைகளிலும் மொத்தமாக அடைத்ததால், தொற்று நோய் தாக்கி இதுவரை நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். கட்டுமானப் பணிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படாத நிலையில் ஏற்பட்ட விபத்துகளிலும், தரக்குறைவான பொருட்களால் கட்டப்பட்ட பாலங்கள், கட்டுமானங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களிலும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள் கேள்வி கேட்க நாதியின்றி கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்ற விபத்துகளின் காரணமாக மெட்ரோ ரயில் திட்டப் பணியில் மட்டும் 90-க்கும் மேலான தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்."" (நன்றி: புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010 )

இப்படி 300க்கும் மேல் ஏழை மக்களின் உயிர்களை பறித்தது, அவர்களை இத்தனை ஆண்டுகள் மிகக் கொடூரமான சித்திரவதைக்கு ஆட்படுத்தியது இவையனைத்தும் தேசத்தின் கவுரம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டது. இன்று அதே கவுரத்தின் பெயரால் அவர்கள் செய்த ஊழலும் கடந்த செல்லப்படுகிறது. அப்படியானால், 300 உயிர்கள் பலியானதும், ஏழை மக்கள் அனுபவித்த சித்திரவதைகளும் எதற்காக? தேசத்தின் கவுரத்தால் ஏழை உழைக்கும் மக்களுக்கு ஒரு மசிரளவும் பிரயோசனமில்லை என்றாலும், குறைந்தது இந்தியன் என்ற போலியான பெருமிதமாவது மிஞ்சியிருக்கும்(வலியை மறைக்க உதவும் போதையைப் போல), அதனையும் பறித்துள்ள இந்த ஊழல் எத்தனை வக்கிரமானது? இன்றைக்கு இந்த ஊழல் அசிங்கம் வெளிப்பட்டுள்ள தருணத்தில் கூட மறந்தும் யாருமே உயிர்விட்ட நூற்றுக்கணக்கிலான உழைக்கும் மக்கள் பற்றியோ, டெல்லிவாழ் ஏழைகள் பற்றியோ பேசக் காணும். மனிதம் என்பதே இவர்களின் மனதில் இருந்து மறைந்துவிட்டதா? லாபமும், சுக போகமும், இந்த நிமிடத்தை அனுபவிப்போம் என்கிற நுகர்வு வெறியும் இவர்களின் அடிப்படை நாகரிகத்தையே அழித்தொழித்துவிட்டதா? கோட்டு, சூட்டுப் போட்டு ஊடகங்களில் ஒளிரும் இந்த ஜடங்கள் எல்லாம் மனிதர்களா இல்லை கிடைத்தவற்றையெல்லாம் அனுபவித்து, நுகர்ந்து கழியும் இயந்திரங்களா? அல்லது, ஏழைகள் என்பதால் அவர்களின் உயிர் எச்சில் இலைகளுக்கும் கீழோ? ஊழல் செய்தவர்களைவிட ஊழல் குறித்து பேசும் இத்தகைய மேட்டுக்குடி நியாயவன்கள் மற்றும் ஊடகங்கள், ஏழை மக்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதை குறித்து இப்போது கூட கண்டும் காணாமல் இருக்கும் வக்கிரம் மிக கேவலாமானதாக இருக்கிறது.







இப்போதைய நிலையில், மனசாட்சியுள்ள எவனுமே கேட்க்க வேண்டிய கேள்வி இதுதான், செப் 11 மும்பை தாக்குதல் கொலையாளிகள் பயங்கரவாதிகள், அவர்களுக்குத் தூக்குதண்டனை கொடுப்பது சரி எனில் 300 ஏழை உழைக்கும் மக்களின் உயிர்களைப் பறித்த காமன்வெல்த் விளையாட்டு பயங்கரவாதிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது? ஊடகங்கள் புடை சூழ ராஜ பரிபாலனம்தான் அவர்களுக்கான தண்டனையா?

அசுரன்

தொடர்புடைய பதிவுகள்


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!

Thursday, September 23, 2010

இந்தியாவைப் பீடித்த பன்றிக் காய்ச்சலும், பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பும்!!!


டிசம்பர் 6, 1992 அயோத்தி பாபர் மசூதியை இடிக்க கையில் கடப்பாரைகளுடன் 200,000 காவி வெறியர்கள் கூடினர்.

கையில் கடப்பாரைகளுடன் இத்தனை பேர் காராப் பூந்தி சாப்பிடக் கூடியதாக போலீசு நினைத்துவிட்டது போலும், அவர்களை தடுக்கவோ அல்லது இத்தனை பேர் ஓரிடத்தில் அபாயகரமான முறையில் கூடுவதை நிறுத்தவோ போலீசு ஒன்றுமே செய்யவில்லை. இதுவே, நியாயமான கோரிக்கைகளுக்கு ஒரு பத்து பேர் கூடினாலே சட்டம் ஒழுங்கு என்று ஒப்பாரி வைத்து தடியடி நடத்தி மண்டையுடைக்கும் போலீசு, காவிக் கறையைக் கண்டால் மட்டும் பல்லிளிக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்படுவதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்று 1992க்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுவும் நீதிமன்றத் தீர்ப்புதான். நாளை வரவிருப்பதும் நீதிமன்ற தீர்ப்புதான். எது மீறப்பட வேண்டும், எது கட்டாயமாக்கப்படும் என்று முடிவு செய்பவர்கள்/செய்தவர்கள் என்றுமே காவி பயங்கரவாதிகள்தான்.

அரசின் ஆயுதப் படைகள் அமைதியாகப் பார்த்து ரசிக்க, காவி பயங்கரவாதிகள் மசூதியை இடித்துத் தள்ளினர்.

அத்துடன் நில்லாமல், அருகாமை முஸ்லீம் வீடுகள், சொத்துக்களை தாக்கினர். பத்திரிகை, ஊடகத் துறையினரும் தாக்கப்பட்டனர். போலீசு அமைதியாகவே இருந்தனர். அவர்களது கடமை காவி வெறியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போலும்.



இதற்குப் பிறகு நடைபெற்ற ஜவ்விழுக்கும் நீதிமன்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக அகல்வாய்வு செய்யப்பட்டது. அங்கு ராமன் இருந்ததற்கு எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லையென்று முடிவானது. இதுவும் நீதிமன்ற தீர்ப்புதான் ஆனால் காவி வெறியர்கள் கூறினர், அது எங்கள் நம்பிக்கையென்று.

2002ல் வி ஹெச் பி வெறியர்கள் ராமர் கோயிலை கட்டப் போகிறோம் என்று இன்னொரு ரவுண்டு கிளம்பினர், அப்படி போன கும்பலில் ஒன்று திரும்பி வரும் போது வழி நெடுக ரவுடித்தனம் செய்து கொண்டே சென்றது. அந்த கும்பல்தான் குஜராத்தில் ரயில் பெட்டியோடு எரியூட்டப்பட்டது. அது விபத்தா, அல்லது தாக்குதால என்பதைவிட அந்தக் கும்பல் எரியூட்டப்பட்டதற்கு பின் உள்ள நியாயங்களே என் கண்ணுக்குத் தெரிகின்றன.

இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடத்தில் இன்று பலத்த பாதுகாப்புகளுடன் ராமனது வழிபாடு நடந்து வருகிறது. கேட்டால் ஸ்டேட்டஸ் க்யூ என்கிறார்கள். அதாவது இதன் பொருள் எனக்கு விருப்பபடும் போது நீதிமன்றம், சட்டம் சொல்கிறபடி நட என்பேன். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லையெனில் நானே அதனை மீறுவேன் என்பதே ஆகும்.



இதுதான் இந்தியாவைப் பிடித்துள்ள பன்றிக் காய்ச்சல். காவிப் பன்றிக் காய்ச்சல். காய்ச்சலும், பன்றியும் என்று ஒழிக்கப்படுமோ அன்றுதான் இந்தியாவிற்கு விடிவு.

அசுரன்

**
இதே டிசம்பர் 6தான் காவிப் பன்றிக் காய்ச்சலுக்கு மருந்து சொன்ன அம்பேத்கரின் இறந்தநாள் ஆகும். காவி வெறியர்களின் காழ்ப்புணர்ச்சியைக் கவனியுங்கள், டிசம்பர் ஆறு அன்றுதான் பாபர் மசூதி, பெரியார் சிலை உடைப்பு எல்லாம் அரங்கேறின.

Rama.... Rama....

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில் 1 -2

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனு...

'வினை'யகர் சதுர்த்தி!!

அக்சார்தம் கோயிலை தாக்கியவர்களுக்கு மரணதண்டனை, பாபர் மசூதியை தாக்கிய காவி பயங்கரவாதிகளுக்கு?

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி

அத்வானி, ஜோஷி முதலான சங்கப்பரிவாரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு

Wednesday, September 15, 2010

'வினை'யகர் சதுர்த்தி!!

பெரும்பாலான வீதி முனைகளில் இருட்டின் துணையுடன் ஒன்னுக்கடிக்கக் கூடிய வாய்ப்பான இடங்கள் அமைந்திருக்கும். பாதசாரிகளின் 'ஒன்னாம்' நம்பர் அவசரத் தேவைகளுக்கு உடனடித் நிவாரணமாக அமைபவை இத்தகைய முனைகளே. மூத்திரச் சந்துகளை விட இந்த தெரு முனைகள் சுகாதாரமானவை, பாதுகாப்பானவையாகும் என்பது இவற்றின் பிரபல்யத்திற்கான காரணமாக அமைகின்றன. அப்படியான மூத்திர முக்குகளையெல்லாம் திட்டமிட்டு ஆக்கிரமித்து விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் விநாயகனின் சிலையை வைக்கும் அபாயகரமான கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகி வருகிறது. இது தமிழகத்து ஆண்களின் உயிர்நாடியில் கை வைக்கும் ஒரு அத்துமீறல் என்பதாகவே நான் உணர்கிறேன்.

அத்தகையதொரு மூத்திர உரிமையை மீறிய விநாயகனின் சிலை ஒன்றை கே கே நகரில் பார்த்தேன். அந்த வினை தீர்க்கும் வினாயகர் சிலைக்குப் பின்னே 'முஸ்லீம்களுக்கு சலுகை இந்துக்களுக்கு ஒன்றுமில்லையா' என்ற வினையான வாசகம் வக்கிரமாய் சிரிக்கிறது. உபயம், காவி பயங்கரவாத கட்சிகளில் ஒன்றான இந்து மக்கள் கட்சி. பெரும்பான்மை இந்து உழைக்கும் மக்கள் தெரு முனைகளில் ஒன்னுக்கடிக்கும் உரிமையை சிலை வைத்து தடுத்துள்ளதைத்தான் இப்படிச் சொல்கிறார்களோ என்று மனதில் எழுந்த சிறு ஐய்யத்தை முஸ்லீம் என்ற வார்த்தை களைத்தது. இது வேறு ஏதோவொரு பிரச்சினை என்று புரிந்தது. ஆனால், 'இந்துக்களுக்கு ஒன்றுமில்லையா' என்பதன் பொருள் மட்டும் புரியாமலேயே குழப்பியது. யாராவது விளக்கினால் தேவலாம் என்றும் தோன்றியது. இத்துடன் இன்னொரு கிளைக் கேள்வி எழுந்தது அது இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மல்லாக்கப் படுத்து விட்டத்த பாத்தா எவ்வளவு சுகமா இருக்கு... ம்... அதுவும் கால விரிச்சுப் படுத்தா எவ்வளவு காத்தோட்டம்..

எனக்கும், சச்சார் கமிட்டியில் அறிக்கை எழுதியவருக்கும் தெரிந்த வரையில் இந்தியாவிலேயே ஏழ்மையான, வறிய, பின் தங்கிய, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினர் தாழ்த்தப்பட்டவர்களும், முஸ்லீம்களும்தான், இந்துக்களல்ல எனும் போது இந்துக்கள் என்று குறிப்பிட்டு வினாயகனுக்கு பின்னே ஒளிரும் இந்த வாசகங்கள் வன்மம் நிறைந்தவையாகத்தான் தோன்றுகின்றன.

தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள்தான் என்று வினாயகன் சிலை வைத்தவர்கள் சொல்லக் கூடுமோ என்று ஒரு சிறு எண்ணம் தோன்றியது. ஆனால், அவர்களும் இந்துக்கள்தான் எனில் ஏன் கோயிலுக்குள் விடுவதில்லை, கோயில் மரியாதைகளை அவர்களுக்குக் கொடுப்பதில்லை, அவர்களுக்கு ஏன் பலரும் வீடு வாடகைக்குக் கொடுப்பதில்லை, அவர்களுடன் திருமணம் பந்தம் ஏன் வைத்துக் கொள்வதில்லை, சாதிப் பெருமிதம் என்று காட்டிக் கொள்ள பூனூல், நாமம் என்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏன் எதுவும் இல்லை, மாட்டு மாமிசம் சாப்பிட்டால் ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் பிற சாதி இந்துக்களால் தாக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது நாடு முழுவதும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சாதி வெறி தாக்குதல் நடத்தப்படுவதை இதே 'இந்து'க்களின் கட்சிகள் ஏன் கண்டு கொள்வதேயில்லை என்று பல கேள்விகள் மூளையை சல்லடையாகத் துளைத்தன.

இவற்றுக்கு கிடைத்த ஒரே விடை இந்துக்கள், கடவுள் என்ற பெயரில் இந்த கட்சிகள் நடத்துவதெல்லாம் மதவெறி பிரச்சாரம் மட்டுமே என்பதே ஆகும்.

ங் கொய்யால குப்புறக் கவுத்திடாய்ங்களே....

இந்தக் கட்சிகளை விட வன்மம் நிறைந்தவையாக உள்ளன வினாயகனின் பெயரில் நடைபெறும் இந்த மதவெறி அரசியலை, எவன் இழவு கொட்டினால் எனக்கென்ன என் வீட்டில் இனிப்பு சேவு கிடைக்கிறதா போதும் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு வினாயகனை மட்டும் வாழ்த்தும் படித்த, நுண்ணறிவு நிரம்பிய சிலரின் நடவடிக்கைகள்.

இவர்கள் வழிபடும் ஒரு கடவுளின் பெயரால் நடக்கும் மதவெறி அயோக்கியத்தனத்தை எதிர்த்து குரல் கொடுக்க ஞாபகமாக மறந்துவிடும் இவர்களை என்னவென்று சொல்ல? இவர்கள் வழிபடும் வினாயகனை அவமானப்படுத்தி வினாயகன் என்றால் ஒரு மதவெறி, ரத்தவெறி பிடித்த மிருகம் என்ற பிம்பத்தை உருவாக்கும் காவி பயங்கரவாத கட்சிகளின் மேல் பக்தர்களின் கோபம் திரும்பவதில்லையே ஏன்?

இந்தக் கேள்விகளால் வறட்சியுற்ற எனது மூளை அடுத்த டாபிகிற்க்கு வேகமாக தாவ எத்தணித்தது. துரதிருஷ்டவசமாக அதுவும் இந்துக்கள் பற்றியதாகவே அமைந்துவிட்டது. இதோ அடுத்த டாபிக்...

இந்துக்கள் என்றால் யார் என்பது குறித்தும், மத நல்லிணக்கத்தின் சாத்தியக்கூறு குறித்தும் தோ. பரமசிவன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். (நன்றி: நறும்புனல்)

(தோ. பரமசிவன்)

இந்து” என்ற சொல் சமய ஆதிக்கச் சொல்லாக மட்டுமின்றி அரசியல் ஆதிக்கச் சொல்லாக வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்து என்பவன் யார்? இந்தியச் அரசியல் சட்டப்பிரிவுகள் “இந்து” என்ற சொல்லாடலுக்கு நேரிடையான வரவிலக்கணத்தை தரவில்லை..என்பது தான் இந்து என்ற சொல்லாடலை வைத்துப் பிழைக்கும் இந்துத்வவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.ஆகவே இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும்..அந்தச் சொல் பல்வேறு சமயஙகளையும், நம்பிக்கைகளையும், வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை நெறிப்படுத்தி சட்டமாக்க வேண்டும்.அதுவரை சமய நல்லிணக்கம் என்பது சமயச் சிந்தனையாளர்களின் கனவாவே இருக்க முடியும்...

(மூத்திர தெருமுனைகளை ஆக்கிரமித்த குற்றத்திற்காக அடித்து நொறுக்கப்பட்ட விநாயகன்)

(கிளைக் கேள்வி: மூத்திர முக்குகளை ஆக்கிரமித்து உரிமைமீறலில் ஈடுப்பட்டுள்ள வினாயகனை மூத்திரச் சந்தில் வைத்து அடித்து நொறுக்குவதுதானே தர்க்க(லாஜிக்கல்)ரீதியாக சரியாக இருக்கும்? ஏன் கடலில் கொண்டு போய் அடித்து நொறுக்குகிறார்கள்?)

இப்படிக்கு,
மூத்திரச் சந்து முனிசாமி


பதிந்தவர்
அசுரன்

Tuesday, September 07, 2010

கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது, ஆனால் உலக வங்கி தலையிடலாம்!!

லி தின்று வீணாகப் போகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடு என்று நீதிமன்றம் சொன்னதற்கு பிரதமர் சொல்லிய பதில். 'அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது'. இதுக்கு முன்பு உலக வங்கி, அமெரிக்கா, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதுரகம் போன்றவை இந்திய அரசின் எல்லா கொள்கைகளையும் தீர்மானித்தனவே அப்போதெல்லாம் மன்மோகன் இப்படித்தான் குதித்தாரா? இல்லையே? அப்புறமென்ன கொள்கை முடிவு? வேறொன்றும் இல்லை, உலகமயக் கொள்கைகளை உலக வங்கியின் ஆணைப்படி நிறைவேற்றுவதைத்தான் மன்மோகன் இப்படிச் சொல்கிறார். அந்தக் கொள்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் இலவசம் என்று சொன்னதைத்தான் மன்மோகன் எதிர்க்கிறார்.

இலவசம் என்பது பன்னாட்டு முதலாளிகளுக்கு மட்டும்தான், ஏழை மக்களுக்கு டிவி பொட்டி வேண்டுமானால் இலவசமாகக் கிடைக்கும். ஆனால் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், குடிநீர் போன்றவை இலவசமாகக் கொடுக்கப்படாது. ஏனேனில், இவையெல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் வியாபாரப் பொருட்கள். இவற்றை இலவசமாகக் கொடுத்துப் பழக்கினால் விலை வைத்து விற்று பன்னாட்டு கம்பனிகள் லாபம் பார்ப்பதை மக்கள் விரும்ப மறுப்பார்கள். எனவேதான் உலக வர்த்தகக் கழகம் தெளிவாகச் சொல்கிறது இவற்றை சரக்கு என்று. இந்த கொள்கையில்தான் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று குதிக்கிறார் மன்மோகன் சிங்.

ஏறு பூட்டி விளைவித்த விவசாயிக்கே விளை பொருளின் மீது உரிமையில்லை, பட்டினியில் சாகிறான். ஆனால் இவன் சொல்கிறான் உணவை இலவசமாகக் கொடுக்க முடியாது என்று. யாருடைய சொத்து அது? இவனுடைய அப்பன் வீட்டுச் சொத்தா அது? இதனால் விவசாயிக்கு பாதிப்பு என்கிறார் மன்மோகன். புதிய பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் அழிவதைப் பற்றி கேட்டால், உணவு உற்பத்தி குறைவதைப் பற்றி கேட்டால் நாடு தொழில்மயமாக வேண்டும் என்று சொல்லும் நீ, இப்போது மட்டும் விவசாயிக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறாயா?

கோதுமை அதிகமாக விளைந்தால் அதை கடலில் கொட்டுவேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன், பால் உற்பத்தி அதிகமானால் அவற்றை கொட்டி அழிப்பேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன் இதுதானே மேலை நாடுகளின் சந்தை விதிகள். இதைத்தானே மன்மோகனும் வேறு மொழியில் - அடிமைகளின் மொழியில் - பேசுகிறார்?

இன்னுமாயா இதை உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்னு சொல்லிட்டுத் திரியுறீங்க? உலகின் மிகப் பெரிய பிண நாயகம்னு சொல்லுங்க அதுதான் சரி.

அசுரன்

Monday, September 06, 2010

அக்சார்தம் கோயிலை தாக்கியவர்களுக்கு மரணதண்டனை, பாபர் மசூதியை தாக்கிய காவி பயங்கரவாதிகளுக்கு?

இந்தியாவின் அதி பயங்கர உள்நாட்டு அச்சுறுத்தல் - தேசத் துரோக காவி பயங்கரவாதி அத்வானி

ல்லாயிரம் பேரை கொன்றுவிட்டு, கோயிலை இடித்துவிட்டு, கலவரங்கள் செய்துவிட்டு இந்தியாவில் பாதுகாப்பாக, பெருந்தலைவர்களாக வலம் வர முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவன்தான் அத்வானி என்ற காவி பயங்கரவாதி. இவனது அடியொற்றிய அதி பயங்கரவாதிதான் மோடி என்பவன்.













இன்று அக்சார்தம் கோயிலைத் தாக்கியவர்களுக்கு மரண தண்டனை இடை-நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் மரண்தண்டனை வழங்கப்பட்ட பயங்கரவாதிகள்தான் இவர்கள். ஏனேனில், இவர்கள் சிறுபான்மை முஸ்லீம்கள் என்பதால், 'சிறுபான்மையை குளிர்விக்கும்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இதற்கும் முன்பே பாபர் மசூதியை இடித்ததுடன், ரத யாத்திரைகள், கலவரங்கள் நடத்தி பல ஆயிரம் மக்களை படுகொலை செய்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி அத்வானியோ ஒரு தண்டனைக்கும் இதுவரை ஆளாகவில்லை. அவர்களது காவி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பரிசாக இந்தியாவின் 'முக்கிய'த் தலைவர்கள் என்ற கௌரவம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.






இது என்னவகையான சிறுபான்மையை குளிர்விக்கும் அரசியல் என்பதை ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் விளக்க வேண்டும். அத்வானி, மோடி போன்ற தேசத் துரோக காவி பயங்கரவாதிகள் மீது சிறு துரும்பைக் கூட தூக்கிப் போட வக்கில்லாத 'காவி மனிதாபிமானி'கள்தான் தற்போது மரண தண்டனை ஒப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சிறுபான்மை குளிர்விப்பு அரசியல் என்று ஓநாயைப் போல ஓலமிடுகிறார்கள். இவர்கள் அத்வானி, மோடி போன்றோருக்கு மரண தண்டனை இன்று வரை நிறைவேற்றப்படாததை எதிர்த்தும் ஓலமிட்டிருந்தால் நியாயவான்களாக கருத இடமுள்ளது.

இப்படி எரிப்பது எப்போது?

டைம்ஸ் நௌ போன்ற காவி பயங்கரவாத ஊடகங்களோ அல்லது என் டி டி வி போன்ற அரசு பயங்கரவாத ஊடகங்களோ அத்வானி போன்ற காவி பயங்கரவாதிகளுக்கு தமது ஆதரவையே எப்போதும் தருவார்கள். 'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை சரியா தவறா என்று தேச முக்கியத்துவம் வாய்ந்தவற்றை விவாதிப்பவர்கள்தான் இவர்கள். இத்தகைய காவி பயங்கரவாதிகளை பாதுகாக்கும் அவர்களின் பினாமி அரசா தண்டனை தரப் போகிறது?....

அசுரன்

படியுங்கள், பயம் கொள்ளுங்கள்

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1 -2

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

Related Posts with Thumbnails