கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா - CPM வெறி நாயும்! CPIயும்!
போலி கம்யுனிஸ்டுகளை புரட்சியாளர்கள் விமர்சனம் செய்வது என்ன புதிய விசயமா? ஆனால் போலி கம்யுனிஸ்டுகளை கண்டனம் செய்வது இன்று புதிய வழமையாக மாறி உள்ளது. ஏனேனில் நேற்று வரை போலி கம்யுனிஸ்டுகளை விமர்சனம் செய்வதற்க்கு ஒருவன் புரட்சியாளனாக, முற்போக்காளனாக இருக்க வேண்டும் அல்லது அரசியல் விழிப்புணர்ச்சி உள்ளவனாக இருக்க வேண்டும். இன்று ஒரு மனிதனாக சுயமரியாதை உடையவனாக இருந்தாலே போதும் அவன் போலி கம்யுனிஸ்டுகளை விமர்சிக்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு தள்ளப்படுகிறான். சத்தியமாக இதில் புரட்சியாளர்களின் பங்களிப்பு ஒன்றுமே கிடையாது. இது முற்றுமுதலாக போலிகளும், மறுகாலனிய எஜமானர்களும் சேர்ந்து உருவாக்கிய சூழல்தானேயன்றி வேறல்ல.
நந்திகிராமில் நிகழ்ந்துள்ளவை எந்த மனிதனையும் CPM(டாடாயிஸ்ட்)களின் முகத்தில் காறி உமிழச் செய்யும் அளவு கேவலமான விசயங்கள். படு கோழைத்தனமாக போலிசு உள்ளிட்ட சகல அரசு இயந்திரத்தின் துணையுடனும் மக்கள் மீது யுத்தம் தொடுத்துள்ளார்கள் இந்த பாசிஸ்டு கோழைகள். நேற்றுவரை இந்த பாசிஸ்டு கும்பலுடன் இருந்தவர்கள் கூட இன்று வெட்கி வேதனைப் பட்டு இவர்களை கடுமையாக கண்டனம் செய்யும் அளவு நிலைமை வெட்கக்கேடாக உள்ளது. CPM ஆட்களோ தலையில் முக்காடு போடாத குறையாக பதில் சொல்ல அஞ்சி தமது நண்பர்களைக் கண்டு கூட ஓடுகிறார்கள். குஜராத் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வெட்கங்கட்ட வன்முறை கொலை வெறிச் செயலுக்கு எந்த வகையிலும் குறைவின்றி நந்திகிராமில் தாக்குதல் தொடுத்துள்ளனர் இந்த காம்ரேடுகள் – மார்க்ஸிஸ்டு வேடம் போட்ட பாசிஸ்டு கோழைகள்.
என்ன காரணமாம்? புத்ததேவ் சொல்கிறார், அவர்கள் எப்படி கொடுத்தார்களோ அதே போல நாங்களும் திருப்பிக் கொடுத்தோம் என்று. யார் இந்த ‘அவர்கள்’? நந்திகிராம் பகுதியிலிருந்த 2000 சொச்சம் CPM ஆதரவாளர்கள் தவிர்த்து மீதியுள்ள மிகப் பெரும்பான்மையான மக்கள்தான் அந்த ‘அவர்கள்’. யார் அந்த ‘நாங்கள்’? டாடா, இந்தோனேசியாவில் கம்யுனிஸ்டுகளை வேட்டையாடிய சலீம் கும்பல், போபாலில் விச வாயு கசிய விட்டு மக்களை கொன்று குவித்த பழைய யூனியன் கார்பைடு புதிய பெயரில் டௌவ் கெமிக்கல்ஸ, நந்திகிராமின் மீது முதல் முறை CPM குண்டர்கள் தாக்குதல் தொடுத்த போது கங்காணி வேலை பார்த்த CPM ஆதரவாளர்கள், இது தவிர்த்து CPM தரகு தாதாக்கள் இவர்கள்தான் அந்த ‘நாங்கள்’.
மக்களாகிய ‘அவர்கள்’ இவர்களுக்கு என்ன கொடுத்தார்களாம்? பதிலடி கொடுத்தார்கள். நந்திகிராம் தொகுதியிலிருந்த விளை நிலங்களை பன்னாட்டு/தரகு கம்பேனிகளுக்கு CPM கூட்டி கொடுப்பதை மக்கள் எதிர்த்தனர். அதை தடுக்க அந்த மக்கள் மீது குண்டு வீசி துப்பாக்கியால் சுட்டு கோடூரமானதொரு தாக்குதலை CPM குண்டர்களும், போலீசும் சேர்ந்து சில மாதங்கள் முன்பு நடத்தினர். அதில் 44 பேர் படு கொலை செய்யப்பட்டனர். பெண்களை வன்புணர்ச்சி செய்தும் சாகசம் செய்தனர் ‘காம’ரேடுகள். அதனை தொலைக்காட்சியில் விளம்பரம் வேறு செய்தார் ஒரு ‘காம’ரேடு. தெஹல்காவால் அம்பலமான இந்து மத பயங்கரவாத பாசிச கும்பலுக்கும், இந்த பொருளாதார பாசிஸ்டுகளுக்கும் தான் எத்தனை ஒற்றுமை?
More Photos
இத்தனையும் செய்த பிறகும் நந்திகிராம் வீழவில்லை. அதற்க்கு பிறகு கடந்த மாதங்கள் முழுவதும் அது ஒரு யுத்த பூமியாகவே இருந்துள்ளது. CPM குண்டர்கள் அரசு துணையுடன் அந்த பகுதியில் செய்த பல்வேறு முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. நந்திகிராம் நின்று, பன்னாட்டு கும்பலுக்கு கூட்டிக் கொடுக்கும் திட்டத்தை விரட்டியடித்தது. கங்காணி வேலை பார்த்த CPM ஆட்களை நந்திகிராம் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த 2000 பேரை நந்திகிராமத்திற்க்கு மீண்டும் சேர்க்கவே இந்த சமீபத்திய யுத்தம் என்றும், திட்டத்தை கைவிட்ட பிறகும் ஏன் CPM ஆட்களை நந்திகிராம் மக்கள் உள்ளே விடமாட்டென் என்கிறார்கள் என்றும் பல்வேறு வசனங்கள் பேசி இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்தி பேசினர் CPM பாசிஸ்டுகள், நந்திகிராமிற்க்குள் நுழைந்ததை ஏதோ அடுத்த நாட்டுக்குள் போர் தொடுத்து நுழைந்தது போல சாதனையாக கொண்டாடிய கையோடு மீண்டும் நந்திகிராமத்தை கூட்டி கொடுப்பது குறித்து விமரிசையாக பேச துவங்கிவிட்டனர். உண்மையில் 2000 CPM காரர்கள் அல்ல மாறாக நந்திகிராமின் வளங்களை நக்கி பிழைக்க CPMக்கு எலும்பு துண்டு வீசிய பன்னாட்டு எஜமானர்களின் கட்டளைக்கு வாலாட்டியே மக்கள் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது CPM வெறி நாய்.
Molina Malik, mother of Tapasi, whose body was found burning in the fields in Singur
இதோ சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த ஒரு செய்தியும் இவர்களின் கொலை, கொள்ளை கற்பழிப்புக்கு சாட்சி சொல்கின்றன. NDTV ஆட்கள் ஒரு கிராமத்தில் நுழைந்த பொழுது அங்கிருந்த 160க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் 85% மேல் எரித்து நாசம் செய்யப்பட்டிருந்தன (நந்திகிராமை முற்றிலும் கைப்பற்றிய பிறகே ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. அதற்க்கு முன்பே இந்த விசயத்தை மோப்பம் பிடித்த ஊடகங்களில் சில தமது சொந்த அரசியல் தேவைக்காக கவர்னரிடம் மனுச் செய்வதில் துவங்கி பல வகைகளில் CPMயை அம்பலப்படுத்த முனைப்பு காட்டியுள்ளன. ஒரு முன்னாள் நீதிபதி ஒருவரும் கவர்னருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியுள்ளார்).
காம்ரேட்டுகள் இதற்க்கு முன்பு நடத்திய இதை விட பன்மடங்கு கோடூரமான தாக்குதலில் குண்டுகள் வீசியது, போலிசிடம் இருந்ததை விட அதி நவீன துப்பாக்கிகள் மூலம் மக்களின் முதுகுகளில் வயது வித்தியாசமின்றி சுட்டுக் கொன்றது, பெண்களை வன்புணர்ச்சி செய்தது, சிறுவர், சிறுமியர் முதல் பலரது சடலங்களை மறைக்கும் முகமாக அருகிலிருந்த செங்கல் சூளைக்கு எடுத்துச் சென்றது என்று CPMன் புதிய கம்யுனிச பாணியில் புரட்சி செய்திருந்தனர். இது தவிர்த்து இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க்க வந்த மேதாபட்கரையும் தாக்கியுள்ளனர்.
இத்தனை அநியாயங்களுக்கு பிறகும் கோடூரங்களுக்கு பிறகும் மக்கள் இந்த இழப்புகளை அக்கிரமங்களை எல்லாம் உடனே மறந்துவிட வேண்டுமாம், இவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் இன்னுமொரு தாக்குதல் நடத்தி ஏற்றுக் கொள்ள சொல்லி வன்புணர்ச்சி செய்வார்களாம். என்னே இவர்களது கம்யுனிஸ நடைமுறை. இவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்ல போலிகள் என்பதுதான் நமது நிலைப்பாடு. ஆனால் மறுகாலனிய சூழலில் இவர்கள் பாசிசஸ்டுகளாக புல் டைம் வேலை செய்ய துவங்கிவிட்டனர். போலிகள் என்ற அடைமொழி கூட இவர்களைக் கண்டு வெட்கி தலைகுனிந்து ஓடுகிறது.
உண்மையான கம்யுனிஸ்டை விடுங்கள், உண்மையிலேயே சுயமரியாதை உள்ளவனும், மனிதாபிமானம் உள்ளவனும், மனிதனாக மதிக்க தகுதியுள்ளவனும் கூட இனிமேலும் தன்னை CPMக்காரன் என்று சொல்லமாட்டான். ஒரு நாய் கூட இன்னொரு நாயின் மீதான தாக்குதலை தூரமாகவேனும் நின்று பதட்டத்துடன் பார்க்கிறது. CPMக்காரன் என்று தன்னை இனிமேலும் சொல்லிக் கொள்பவன் அந்த நாய்க்கும் கீழானவன். ஏனேனில் சுயமாரியாதை விசயத்தில் அந்த நாய் CPMக்காரனைவிட பல மடங்கு மேலாகும்.
CPM வெறிநாயை விடுங்கள் அது பாசிஸ்டு. ஆனால் CPMவோடையே இன்னொன்று சுற்றுமே அது இந்த சம்பவங்களின் போது என்ன செய்தது? இதனை கண்டித்து ஒரு அறிக்கை விட்டது அவ்வளவுதான். அறிக்கைவிட்ட கையோடு CPMயோடு சேர்ந்து மன்மோகன் சிங் அணு ஆயுத ஒப்பந்தம் மூலம் நாட்டை கூட்டிக் கொடுப்பதற்க்கும் சிகப்பு கொடி…ஸாரி பச்சை கொடி காட்டிவிட்டது. இடது சாரி கூட்டணியாம்… 80 வருட பாரம்பரியம் அல்லவா?
CPI காரர்களிடம் அந்த கட்சியின் அருகதையை சொல்லி பேசினால் பின்வருமாரு ஒரு ரெடிமேட் பதில் ஒன்றை சொல்வார்கள்: “தோழர் CPI ஒன்றும் நல்ல கட்சி என்று சொல்லமாட்டேன். ஆனால் இருப்பதிலே அது நல்ல கட்சி.” இதை சொல்லி முடித்த பிறகு முகத்தை அப்படியே பரிதாபகரமாக வைத்துக் கொண்டு நம்மைப் பார்ப்பார்கள். அதாவது இவர்கள் நல்லவர்களாம், அப்பாவிகளாம். சாதாரணமான நல்லவர்கள் அல்ல எல்லாருக்கும் நல்லவர்கள். CPM பாசிச்டுகளுக்கும் இவர்கள் நல்லவர்கள். அதனால்தான் இப்படி அப்பட்டமான தனது நடவடிக்கைகள் மூலம் CPM தன்னை பாசிஸ்டுகளாக வெளிக்காட்டிக் கொண்டாலும் இவர்கள் அதனை தைரியமாக கட்சி ரீதியாக அம்பலப்படுத்தி பேசத் துணிவதில்லை. தனிப்பட்ட முறையில் கிசு கிசு பேசுகிறார்கள்.
CPI, CPMயிலுள்ள உண்மையான மக்களை நேசிக்கும் தோழர்கள் மட்டுமல்ல மனிதாபிமானமுள்ள அனைவருமே செயல்பட வேண்டிய தருணம் இது. இந்து மத வெறி பாசிசமும், மறுகாலனிய பாசிசமும் தனது முழு வேகத்தில் நாட்டை நாசமாக்கி வரும் பொழுது சமரசங்களும், புரட்சிக்கு குறுக்கு வழிகளும் இப்படி அதிகார வர்க்க சேவையில் வந்தே முடியும். கடைசியில் மக்கள் விரோதிகளாக மாறி வரலாற்றிலானால் படு கேவலமாக பழிக்கப்படும் நிலைக்கு ஆளாவோம்.
CPI அணிகளே உங்களது உண்மையான கம்யுனிஸ உணர்வை வெளிகாட்டுங்கள். CPM ஒரு பாசிஸ்டு கட்சி அது கம்யுனிஸ்டு கட்சியல்ல என்று மக்களிடம் இன்று அம்பலப்படுத்த தவறினால், அது கம்யுனிஸத்துக்கு செய்யும் துரோகம், உங்களுக்கே நேர்மையில்லாத செயலாகும். CPIயின் கையாலாகத தலையாட்டி பொம்மை தலைமையை கேள்வி கேட்டு அந்த போலி ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுங்கள். ஜனநாயக சக்திகளே பாசிச சக்திகள் முற்று முதலாக அம்பலப்பட்டுள்ள சூழலை மக்களிடம் விமரிசையாக கொண்டு செல்லுங்கள்.
வரலாறு நமக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்குவதில்லை….. இதோ வரலாறு கரிசனத்துடன் நமக்கு அபரிமிதமாக அள்ளிக் கொடுத்துள்ளது…. வாருங்கள் பயன்படுத்திக் கொள்வோம். ஒவ்வொரு டீக்கடையையும், ஒவ்வொரு சந்திப்பையும், ஒவ்வொரு உரையாடலையும், ஒவ்வொரு சொல்லையும் ஆயுதமாக பயன்படுத்தி இந்த மக்கள் விரோத அமைப்புகளை தனிமைப்படுத்துவதுடன் இவற்றில் உள்ள நல்ல நண்பர்களையும் மீட்டெடுப்போம்.
அசுரன்
Related Articles:
நந்திகிராம்: சிந்தனைச் சிற்பிகளின் கடிதமும் ஒரு மாவோயிஸ்டின் பதிலும்
Party Zindabad People Murdabad
“They kill people like birds”
BENGAL SHOWS THE WAY
Thanks: Tehelka