TerrorisminFocus

Sunday, November 04, 2007

வரலாறு பழிக்கிறது நாம் கோமாளிகள் என்று!

குஜாரத்தின் இன அழிப்பு படுகொலைகள் குறித்து பலமுறை பேசியாகி விட்டது. ஆயினும்.... மோடி என்ற இந்துத்துவ பயங்கரவாத நாய் குறித்து பலமுறை பேசியாகிவிட்டது. ஆயினும்.... பார்ப்ப்னிய பயங்கரவாதம் குறித்தும் பாசிசம் குறித்தும் மயிர் பிளக்க பேசி வார்த்தை கடல்களையே உருவாக்கிவிட்டோம். ஆயினும்.... நமக்கு விரும்புகிற வாய்ப்புகள் கிடைத்த இடத்திலெல்லாம் இந்துத்துவ பயங்கரவாதிகளை அந்த கடலில் முக்கியெடுத்து மூச்சு திணறடித்து வார்த்தைகளால் அடித்தே விரட்டி விட்டோம். ஆயினும்.... வார்த்தைகளால் இட்டு நிரப்ப முடியாத பயங்கரவாத வெளி என்பது இன்னும் பெரிய அளவில் விரிந்தே கிடக்கிறது. எந்தளவுக்கு என்றால் இந்துத்துவ அபாயம் குறித்த உண்மைகளை உணராமல் இருக்கும் கோடிக்கான மக்களுக்கும் இந்துத்துவ எதிர்ப்பு படிப்பறை கும்பலுக்கும் உள்ள இடைவெளி எந்தளவுக்கோ அந்தளவுக்கு. இது குஜராத்துக்கு மட்டும் பொருந்தும் உண்மையல்ல. இந்துத்துவ பயங்கரவாதமும் வெறும் அரட்டை அரங்க கூட்டத்தில் தோற்க்கடித்து ஓட விரட்ட வேண்டிய கூட்டமுமல்ல. ஆயினும்.... நாம் அப்படித்தான் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்திய தெஹல்கா அம்பலப்படுத்திய குஜராத இனப் படுகொலை குறித்தான உண்மைகள் இந்துத்துவ பயங்கரவாதம் குறித்து வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத இடைவெளியை இட்டு நிரப்பும் ஒரு முயற்சியாகவே பார்க்கத் தோன்றுகிறது. புரட்சிகர ஜனநாயக் சக்திகள் என்று சொல்லிக் கொள்ளும் நமது கடமையோ மக்களுக்கும் இந்துத்துவ எதிப்பரசியலுக்கும் இடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்புவதற்க்கு இந்த முயற்சியை பயன்படுத்திக் கொள்வதாக இருக்கிறது. ஆதிக்கத்தில் இருப்பவன் அப்பாவிகள் மீது தொடுக்கும் திட்டமிட்ட வன்முறைகள் நம்மை எப்பொழுதுமே கிளர்ந்தெழச் செய்கின்றன, அது ஈழமானலும் சரி, வட கிழக்கு - காஸ்மீரானலும் சரி. இது இனம், மதம், சாதி சார்ந்து வெளிப்படும் கோபமல்ல. மனிதம் குறித்தானது. சுயமரியாதை குறித்தானது. மனிதம் அவமானப்படுத்தப்படும் போதெல்லாம் இந்த கோபமும் ஆற்றமையும் வெளிப்படுகிறது.

சாதாரண மனித உருவில் அழையும் ஒருவன் கர்ப்பினி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை கொன்று எல்லாரிடமும் காட்டும் வெறி பிடித்தவனாக இருக்க முடியுமா? மழலை பேசும் குழந்தைகளை கொன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துபவனாக இருக்க முடியுமா? நாங்கள் இத்தனை பேரைக் கொன்றோம், இத்தனை பெண்களை வன்புணர்ச்சி செய்தோம், பெண்கள் பழங்கள் போல இருந்தனர் நாங்கள் புசித்தோம் என்று ஒருவனால் சொல்ல முடியுமா? அப்படி சொல்பவனை உயிருடன் வைத்திருக்கத்தான் தன்மானமுள்ள ஒரு சமூகம் விரும்புமா? அதுவும் தனது மனைவியை அருகில் வைத்துக் கொண்டே ஒருவன் இப்படி சொல்ல முடியுமா? இப்படி சொல்லும் ஒருவனை ஒரு சமூகம் தலைவனாக தேர்ந்தெடுக்கிறது என்றால் அதனை எப்படி புரிந்து கொள்வது? இவையெல்லாம்தான் குஜராத்தில் இன்று நடைபெற்றுள்ளன. இவை இந்துத்துவம் ஒரு சமூகத்தை எப்படி சீரழிக்க முடியும் என்பதற்க்கு சாட்சியமாகும். ஒரு பெண்ணாக தனது கணவன் அரங்கேற்றியுள்ள மனித தன்மையற்ற செயல் குறித்து குறைந்த பட்ச அதிருப்தி கூட வெளிப்படுத்தாமல் பெருமிதம் கொள்ள அந்த பெண்ணை தயார்ப்படுத்தியுள்ளது இந்துத்துவ அரசியலுக்கான ஒரு சோற்று பதம். சரஸ்வதி லஹரி படிப்பதற்க்கு பெண்களை தாயார்ப்படுத்தும் இந்துத்துவம், இன்னபிற மனு தர்ம வக்கிரங்களுக்கு இளைஞர்களையும், மாணவர்களையும் ஒட்டு மொத்த சமூகத்தையும் தயார்படுத்தி வருகிறது. நாமோ பழங்கதை பேசி(மட்டும்) கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்துத்துவ பயங்கராவதம் வார்த்தைகளை நம்பி களமிறங்கிய கூட்டமல்ல, அதனது ஆணி வேர் இந்திய மக்களின் ஜனநாயகமில்லா சாதி உற்பத்தி உறவிலும், ஆயிரம் வருடங்கள் தனது ஆதிக்கத்துக்காகவே உருவாக்கி வைத்துள்ள கருத்து நிறுவனங்கள், வரலாற்று திரிபுகள் மீதுமே நிலை கொண்டுள்ளது. முக்கியமான இந்த அரசின் வர்க்க இயல்பில்தான் இந்துத்துவத்தின் ஆணி வேர் உள்ளது. இவற்றை அழிக்கும் அறிவுப் பூர்வ வேலைகள் என்பது எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கோ அல்லது அதைவிட மிக முக்கியமனதாக களத்தில் இவர்களை அடித்து விரட்டும் வேலை உள்ளது. ஆனால், உண்மையில் முற்போக்கு வேடம் போட்டு வோட்டு பொறுக்கி அரசியல் செய்யும் கட்சிகளோ இந்துத்துவம் அம்பலமாகியுள்ள இந்த நேரத்தில் ஆழ்ந்த கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். இதுதான் நம்மை மேலதிகமாக ஆத்திரமுறச் செய்கிறது. அந்த கட்சிகளின் அல்லக்கைகளாக கோஸ்டி கானம் பாடும் படிப்பறை கும்பலின் முதுகெலும்பற்ற தனம்தான் நம்மை காறி உமிழச் செய்கிறது. அந்த கட்சிகளின் தலைவர்களின் வர்க்க இயல்புதான் இப்படி ஒரு நிலையில் அவர்களை வைத்துள்ளது. தரகு வர்க்கமாக ஒரு தலைவன் இருப்பது சமரசம் அல்ல கருங்காலித்தனம் என்பதை உண்மையான மக்கள் விடுதலை விரும்பும் ஒவ்வொருவனும் உணர வேண்டிய நேரம் இது.

அரசு என்பது சிலர் நம்பிக் கொண்டிருப்பது போல சட்டமன்றம், நாடாளுமன்றம் அல்ல. அது தேர்தல் ஜனநாயக் குறித்ததும் அல்ல இவையெல்லாம் அரசாங்கமாகும். மாறாக அரசு என்பது நீதித்துறை, காவல்துறை, ராணுவம், சிறைச்சாலை, அதிகாரிகள் என்ற இயந்திரம் குறித்தது. இந்த ஒட்டு மொத்த இயந்திரமும் குஜராத படுகொலையை செய்வதற்க்கு தமது முழு சக்தியை செயலபடுத்தியுள்ளன. போலிசுக்காரகள் RSS, VHPன் கங்காணிகளாக வேலை செய்துள்ளனர், அடியாட்படையாகவும் வேலை செய்து தப்பித்து ஓடும் முஸ்லீம் மக்களை சுட்டுக் கொன்றுள்ளனர், முஸ்லீம் மக்களின் வணிக நிறுவனங்களையும் வீடுகளையும் குறிபார்த்து அடிக்க தேவையான தகவல் தர அரசு அதிகாரிகள் முழு நேரம் வேலை செய்துள்ளனர், குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் தயாரித்து பயன்படுத்தியுள்ளனர், நீதித்துறையோ இந்துத்துவ கொலைகாரர்களை பாதுகாக்க தேவையான எல்லா வேலைகளையும் செய்துள்ளது, செய்யாத குற்றங்களுக்கு 10 வருடங்கள் கோடூரமான தண்டனை அனுபவித்து விட்டார் மாதானி என்பவர். ஆனாலும் தாம் செய்த படு பாதக குற்றங்களை தைரியமாக சொல்லிக் கொண்டு தலைவர்களாக உலாவருகிறார்கள் இந்துத்துவ கொலைகாரர்கள். இவர்கள் ஒரு வேலை சிறைச்சாலைக்கு சென்றாலும் அங்கும் தமது சுக போக வாழ்வை நடத்தவே செய்வார்கள் ஏனெனில் சிறைச்சாலை என்பதும் அரசு எந்திரம்தான். இவையெல்லாம் தெஹல்கா அம்பலபடுத்தியுள்ளது வெறும் சம்பவங்கள் குறித்த உண்மைகளை அல்ல. அது அம்பலப்படுத்தியுள்ளது நம்மால் சீரணிக்க இயலா சமூக உண்மைகளை. நம்மை செயலுக்கு தூண்டும் கடினமான உண்மைகளை.

இது ஏதோ குஜராத்துக்கு மட்டுமான உண்மை என்று பலரும் இன்று மௌனம் சாதிக்க கூடும், உலக தமிழ் த்லைவர் மீதும், இன்னபிற இத்தியாதி ஹோல்சேல் முற்ப்போக்கு டீலர்கள் மீதும் நம்பிக்கை வைத்து செயலின்றி இருக்க எண்ணக் கூடும். அவர்களுக்கு நாம் எச்சரிக்க கடமைப் பட்டுள்ளோம். ஏனேனில் குஜராத்தின் இந்துத்த்துவ மனநோய் கோத்ராவில் உருவாகி, குஜராத் படுகொலையில் வெளிவந்து இன்று குஜராத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கவில்லை. அது ஒரு நீண்ட கால பின்னணி கொண்டது. தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது மோடியை அல்ல, இந்துத்துவத்தை, ராம ராஜ்ஜியத்தை . மோடியை மட்டும் மாட்டிவிட்டு தப்பிக்க எண்ணுகிறது பார்ப்ப்னியம். நாமோ மோடி குறித்துக் கூட மக்களிடம் சென்று பேசாமல் மௌனம் சாதித்து பார்ப்ப்னியத்திற்க்கு ஒத்து ஊதுகிறோம்.

குஜராத் இனப் படுகொலைகள் தற்செயலானவை அல்ல, வெகுவாக திட்டமிட்டவை என்பதை தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் மும்பை குண்டு வெடிப்புக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள வேளையில் அதற்க்குக் காரணமான மும்பை கலவரமும், பாபர் மசூதி இடிப்பும் தீர்ப்பு வழங்காமல் இருப்பதும் அதன் குற்றவாளிகள் தைரியமாக அகில இந்திய தலைவர்களாக வலம் வருவதும் தற்செயலானவை அல்ல, கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கண் குரூடானவர் கூட குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நேர்மை தவறா நீதிமன்றத்தால் பெயில் மறுக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேல் சிறையில் வாடுவதும், அந்த குண்டு வெடிப்புக்குக் காரணமான கோவை கலவரத்திற்க்குக் காரணமானவர்கள் மீது ஒரு சிறு துரும்பு கூட இது வரை நீதிமன்றமும் போலிசும் வீசியெறியாததும் தற்செயலானவையல்ல. குஜராது முதல் மும்பை, கோவை வரை பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாகவும், குறிப்பிட்ட சமூகத்தையே குற்றவாளியாகவும் ஒட்டு மொத்த மீடியாவும், சினிமாவும், அரசு இயந்திரங்களும் சித்தரித்து வன்முறை செலுத்துவதும், இதே நேரத்தில் முஸ்லீம் குண்டு வைத்தது போல செட்டப் செய்து நாக்பூர் RSS தலைமையகத்தில் விஹெச்பி குண்டு வைத்ததற்க்கும், நாண்டட்டில் குண்டு தயாரிக்க முயன்று VHP தொண்டர்கள் இறந்த போதும், அங்கு மற்றும் இன்ன பிற இடங்களில் முஸ்லீம்கள் போல வேடம் போட்டு குண்டு வைக்க VHP திட்டமிட்டுள்ளது குறித்து பல்வேறு ஆதாரங்கள் கிடைத்த போதும், அப்பட்டமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத பயிற்சிகளை RSS குண்டர்கள் செய்வது குறித்து சில ஆண்டுகள் முன்பு பத்திரிக்கைகளில் அம்பலமாகிய போதும் அவர்கள் மீது ஒரு துரும்பைக் கூட இந்த அரசும் அரசாங்கமும் வீசாதது தற்செயலானது அல்ல.

காவிரி நீர் முதல் பல்வேறு விசயங்களில் வலிந்து மௌனம் காக்கும் நீதிமன்றம், ஜெயலலிதாவின் குற்றத்திற்க்கு அவரின் மனசாட்சிக்கு கோரிக்கை வைத்த கையோடு அதே குற்றத்திற்க்காக பல்லாயிரம் அரசு ஊழியர்களை பலி வாங்கியதும் தற்செயலானது அல்ல. வேலை நிறுத்தம் செய்வது குற்றம் என்று வியாக்கியானம் செய்த கையோடு AIMS பார்ப்பன மருத்துவ மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் மட்டும் அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தர நீதிமன்றம் அன்புமணிக்கு உத்தரவிட்டதும் தற்செயலானது அல்ல. அணு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் பேச முடியாது என்று விசாரிக்கக் கோரிய மனுவை விசாரணைக்குக் கூட எடுக்க முடியாது என்றதுடன் வழக்குகளை விசாரணைக்கு எடுப்பது எனது விருப்பம் சார்ந்தது என்ற கையோடு, கருணாநிதி அரசாங்கம் பார்ப்ப்னியத்திற்க்கு எதிராக ஏதோ செய்கிறார் என்ற தெரிந்தவுடன் உச்சி குடுமி களைந்தாட கண்டனக் குரல் எழுப்பி நீதிமன்றம் மிரட்டியதும் தற்செயலானது அல்ல. இவையெல்லாம் அரசு என்பதற்க்கும் அரசாங்கம் என்பதற்க்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள உதவும் தருணங்கள். அரசு என்பதுதான் சாசுவதமன உண்மை, அரசாங்கம் என்பது நிர்வாகத்திற்கான் ஒரு அமைப்புதான் என்ற இந்த உண்மைகளை உணர்வதற்க்கு ஒருவனுக்கு அடிப்படை பகுத்தறிவு இருந்தால் போதும். ஆனால் பகுத்தறிவு என்றும் சுயமரியாதை என்றும் ஹோல்சேல் வோட்டுரிமை பெற்ற கும்பல்கள் யாரும் இந்த உண்மைகளை வேண்டுமென்றே புரியாதது போல நடிப்பதுதான் நமக்கு ஆகக் கேவலமானதாக தெரிகிறது.

இதோ இந்துத்துவம் கடந்த ஐந்தாறு வருடங்களில் அன்னியச் செலவானி மோசடி, லஞ்சம் வாங்குது, முதல் தாய்நாட்டை வேறு யாரையும் விட வேகமாக கூட்டிக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் அம்பலமாகியுள்ளது, அம்பலப்படுத்தியுள்ளனர். இதனை எந்தளவுக்கு நாம் மக்களிடம் கொண்டு சென்றுள்ளோம். பார்ப்ப்னிய எதிர்ப்பிற்க்கு உரிமை கொண்டாடும் கட்சிகளின் நண்பர்களே உங்களது தலைமை இந்த சம்பவங்களின் போதும், இப்போதும் என்ன செய்து கொண்டிருக்கீறது என்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கீறீர்கள்? நேற்று குஜராது, நாளை கர்நாடகா, நாளை மறுநாள் தமிழ்நாடு. தெஹல்காக்கள் அம்பலப்படுத்தும் வீடியோ கேசட்டுகளின் எண்ணிக்கை மட்டுமே கூடும் - செத்து விழும் சிறுபான்மை மற்றும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக.

எந்த திருடனும் நோட்டம் விட்டுத்தான் திருடுகிறான். இந்துத்துவ பயங்கரவாதியும் களத்தை தனக்கு சாதகமாக தயார்ப்படுத்திவிட்டே காரியமாற்றுகின்றனர். அரசாங்கத்தில் இருந்தால் எல்லாம் கிழித்துவிடலாம் என்று தமது செயல்பாடுகளை வோட்டு பொறுக்கி அரசியலுக்குட்ப்பட்டே வைத்துக் கொள்ளும் போலி முற்ப்போக்காளர்களோ இந்துத்துவம் களத்தை தயார் செய்யும் காலங்களில் படுத்துறங்கிவிட்டு அது களப்பணி செய்யும் பொழுது கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். குஜராத் இனப் படுகொலைகள் தீடீரென்று வெடித்தவையல்ல. குஜராத் சமூகம் இந்த வக்கிரங்களை கண்டும் காணாமல் இருப்பதும் கூட தீடிரென்று ஏற்ப்பட்டவையல்ல. கீதாபென் என்ற பெண் இஸ்லாமிய காதலனை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக, தனது கணவனை RSS கருங்காலிக் கும்பலின் கையில் ஒப்படைக்காமல் காப்பாற்றியதற்க்காக அந்த பெண்ணை நடு வீதியில் மக்கள் கூடி நின்று பார்க்க நிர்வாணமாக்கி கல்லால் அடித்து கொன்றது RSS கும்பல். ரத்த விளாறியாக ஆதரிக்க ஆளின்றி கீழே கிடந்த அந்த பெண்-அந்த பிணத்தின் கையில் அவளது கிழிந்த உள்ளாடை இருந்தது. ஒரு வேளை வாய் கொழுப்பு சீலையில் வடிய முற்போக்கு பேச மட்டும் செய்து விட்டு களத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் நமது முகத்தில் அந்த உள்ளாடையை விசிறியடிக்க மறுமை உலகில் காத்திருப்பதைத்தான் அவள் கைகளில் துவழும் உள்ளாடைகள் உணர்த்துகின்றனவோ. இது போன்ற பல சம்பவங்களில் ஒன்று ஆகும் இது.

இந்துத்துவம் RSS அல்லது BJP போன்ற சில அமைப்பு சார்ந்த விசயமோ அல்ல என்ற பேருண்மையையும் குறிப்பிட விரும்புகிறேன்(இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் விலாவாரியாக) அது ஒரு வர்க்க இயல்பு என்ற வகையில் இந்த தரகு வர்க்க ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்கும் அத்தனை பேரிடமும் நிலவும் சித்தாந்தமாகும்.

இந்துத்துவத்தின் எதிரி இஸ்லாமியன் அல்ல என்ற கடைசி உண்மையையும் இங்கு சொல்லுவதே சரியானதாக இருக்கும். பார்ப்ப்னிய மேலாதிக்கத்துக்கு எதிரான எதுவும் இந்துத்துவ அரசியலின் எதிரிதான். தமிழத்தை அல்ல ஈரேழு உலகத்தையும் ஆட்சி செய்பவராக இருந்தாலும் பார்ப்ப்னிய அரசுக்கு எதிராக அரசாங்கம் செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டால் கீதாபென்னுக்கும், குஜராத் அப்பாவிகளுக்கும் நிகழ்ந்ததுதான் நமக்கும். ஆம் உயிருடன் வாழ பல எளிமையான வழிகள் உள்ளன. பாரதிதாசன் வார்த்தைகளில் சொலவதென்றால், நக்கிக் குடி, நாயினும் தாழ்ந்து போ.

மாறாக நம்மை மனிதர்கள் என்று நாளைய சமூகத்துக்கு நிரூபிக்க வேறொன்றும் செய்யலாம். பார்ப்ப்னியத்தின் இந்துத்துவ அரசியல் தூதுவர்களை வீதிகளில் சந்தித்து ஓட விரட்டி அடிக்கலாம். கீதாபென்னுக்கு தண்டனை கொடுத்த இந்துத்துவ பயஙகரவாதிகளை நாம் இந்திய வீதிகள் எங்கும் அதே போலான தண்டனைகளுடன் சந்திக்கலாம். இதோ இன்றே ஆளுக்கொரு கல்லெடுத்து, குறிப்பாக பெண்கள். ஆனால் அப்படி செய்தால் கருணாநிதியை மிரட்டியது எதுவோ அது, கீதேபென்னும், குஜராத் அப்பாவிகளும் கொலை செய்யப்படும் பொழுது வேடிக்கை பார்த்ததோடல்லாமல், உதவி செய்தது எதுவோ அது - அதாவது இந்த தரகு வர்க்க அரசு நம்மீது தனது தாக்குதலை தனது முழு பலத்துடன் தொடுக்கும். அப்பொழுது யாரும் அரசாஙக்த்தில் இருந்து கொண்டே பார்ப்ப்னக் கொழுப்பை பிடுங்கி எறீந்துவிடுவோம் என்று பொய் பேசித் திரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஏனேனில் எல்லைகள் தெளிவாகிவிடும் காலம் அது. இதோ அப்படியொரு போராட்டத்திற்க்கு மக்களை அணி திரட்ட வரலாறு நமக்கு தெஹல்கா ரூபத்தில் ஒரு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது. கைகள் கட்டுண்ட வீரபாண்டியன் போல வீரவேசம் பேசிய நாம் இனி மேலும் செயல்படாவிட்டால் கோமாளிகள் என்றுதான் அடையாளப்படுத்தப்படுவோம்.

அத்தனை அயோக்கியத் தனங்களையும் செய்து விட்டு இந்துத்துவ பயங்கரவாதம் ஆர்ப்பரித்து வருகிறது.... காவி இருள் படர்கிறது....

நீங்கள் கோமாளிகளா? சுயமரியாதை வீரர்களா? சொல்ல வேண்டாம் செய்து காட்டுங்கள்....

அசுரன்


Related Articles:

பார்ப்பனீயத்தின் சோதனைச்சாலை : நமது முகத்தில் விசிறியடிக்கப்பட்ட கீதா பென்னின் உள்ளாடை

இப்படித்தான் இருக்கும் ராம ராஜ்ஜியம்

இந்து மதவெறி பயங்கரவாதம் ! மதவெறிக்குமபல் பா.ஜ.கவும் இதர ஓட்டுப் பொறுக்கிக்கட்சிகளும் !!

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

மதன் சாவலின் சக்கர வியூகம் !

மோடியிசமும் - இந்திய மதச்சார்பின்மை முகமூடியும் !

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத...

15 பின்னூட்டங்கள்:

said...

நல்ல கட்டுரை.. விரிவான பின்னூட்டம் பின்னால் இடுகிறேன். தலைப்பில் "பழிக்கிறது" என்பது "பளிக்கிறது" என்றாகி விட்டது.. சரி செய்யவும்.. தலைப்பு என்பதால் இந்த அவசரமான பின்னூட்டம்..

நன்றி.
பால்வெளி.

said...

அசுரன், நேற்று முன் தினம், ஐபின் தொலைக்காட்சியிலே தருண் தேஜ்பல் நேர்காணல் பாத்தீர்களா?

said...

நன்றி பால்வெளி மாற்றிவிட்டேன்.

ப்ரகாஸ், அது பற்றிய விவரம் கொடுக்க இயலுமா?

அசுரன்

said...

அசுரன்

என்சாய்ய்ய்ய்

said...

\\இந்துத்துவத்தின் எதிரி இஸ்லாமியன் அல்ல என்ற கடைசி உண்மையையும் இங்கு சொல்லுவதே சரியானதாக இருக்கும். பார்ப்ப்னிய மேலாதிக்கத்துக்கு எதிரான எதுவும் இந்துத்துவ அரசியலின் எதிரிதான்\\


அசுரன்,
மிகவும் விரிவான பதிவு. நம்மோடில்லாதவர்கள் நம் எதிரிகள் என்பதே வந்தேறிகளின் கொள்கை, விழிப்போடு இல்லயென்றால், குஜராத்தை தமிழகத்தில் நிகழ்த்திக் காட்டுவதில் பார்ப்பணீய அடிவருடி அரசியல்வாதிகளுக்கு வெகுகாலம் பிடிக்காது. தழிழகத்தின் பல்வேறு சமுதாய நிலைகளிலும் அது ஏற்கனவே நீக்கமற நிறைந்திருப்பதால், மிகவும் கவனம் தேவை.

said...

தோழரே,

இந்த தருணங்கள் பார்ப்பன பயங்கரவாதம் அம்மனமாக நிற்கும் தருணங்கள். அதன் மீதான
மயக்கங்களையும் பிரமைகளையும் கொண்டுள்ள மக்களிடம் அது பாசிச பயங்கரவாதம் என்பதை
புரிய வைக்க நமக்கு வாய்த்துள்ள அருமையான தருணம். ஆனால் பார்ப்பன பாசிசம் இவ்வளவு
வெளிப்படையாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட போதிலும் தமிழகத்தில் ஒரு சிறு
சலசலப்பு கூட இல்லை என்பது வெட்கக்கேடான செய்தி,
தன் கருத்து என்ன என்பதை மறைக்கும் இந்த அமைதியும்
ஒரு பயங்கரவாதம் தான்.
தமிழ் நாட்டில் பெரியாரைப் பற்றி
பேசுபவன், முற்போக்கு பேசுபவன் எவனும் இதைப் பற்றி பேசவில்லை ஆனால் வடக்கிலிருந்து லல்லு பிரசாத் பேசுகிறார் மோடியை கைது செய்ய வேண்டும் என்கிறார் ஆனால்
பெரியார் பிறந்த மண்னில் யாரும் பேசாமல் அமைதி காக்கிறார்கள்
லல்லு இப்போது மட்டுமல்ல பீகாரில் ரத யாத்திரை நடத்தினால்
அத்வானியை கைது செய்வேன் என்றது, இட ஒதுக்கீட்டில் நடந்து
கொண்ட முறை இவை அணைத்துமே பார்ப்பன கும்பலுக்கு
பயங்கரமான வயிற்றெரிச்சலாக இருக்கிறது எனவே தான் லல்லுவை கோமாளியாகவும்,
மாடு மேய்ப்பவனாகவும்
சித்தரித்து இழிவு படுத்தி மகிழ்கிறது பார்ப்பன ஊதுகுழல் ஊடகங்கள்
ஆனாலும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால்
தமிழகத்திலுள்ள அறிவு ஜீவிகளோ அரசியல்வாதிகளோ,
பெரியார் இயக்கத்தினரோ வேறு எந்த இயக்கமும் அமைப்பும்
இதற்கெதிராக இது வரை எந்த போராட்டத்தையும் அறிவிக்கவில்லை.
இதையெல்லாம் சுட்டிக்காட்டி விமர்சித்தால் நீங்கள் யாரைத் தான்
திட்டவில்லை எல்லோரையும் குறை சொல்வது தான் உங்கள் வேலை
என்று சலித்துக்கொள்வார்கள்.

இவ்வளவு பயங்கரமாய் பார்ப்பனியம் ஆட்டம் போடுகிறதே,
இந்த பயங்கரத்தைக் கான சகிக்க முடியவில்லையே,
இந்த நிலமைகளின் கீழ் இவர்களால் எப்படி அமைதியாக
வாழ முடிகிறது,
ஏதாவது செய்தாக வேண்டுமே என்கிற
தவிப்பிலிருந்து எழும் நமது கேள்விகள்
மிகவும் இயல்பானவை அது அணைவரையும் பேசச்சொல்கிறது.

ஆனால் பார்ப்பனியம் பற்றி மேடைகளில் நீட்டி முழக்கி
சவடால் வசணங்களை அள்ளி வீசுபவர்களை பார்த்து இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?என்று கேட்டால் ம.க.இ.க
அணைவரையும் குறை சொல்கிறது என்கிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் இனி மேலாவது வெட்கப்படட்டும்.

said...

தோழரே
வணக்கம்.

புரட்சிப்பாதையில் உங்கள் பணிகள்
மேலும் மேலும் வெற்றி பெற,
ஊக்கம் பெற எனது
நவ- 7 புரட்சி தின வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
பாவெல்.

said...

நல்ல கட்டுரை
தோழர்

said...

பார்பன எதிர்பாளர்கள் ஏன் அமைதிகாக்கிறார்கள் என தெரியவில்லை

பெரியாரின் உண்மை தொண்டர்கள் பார்பனியத்தின் வேரை அழிக்க வந்தவர்கள் எனும் சமூக விஞ்ஞானிகள்
இதற்கு தரும் பதில் என்ன?

இந்தியாவில் சோசலிசமே சீரழித்தது என சொல்லும் குட்டி முதலாளிகள் இதற்கு தரும் விளக்கம் என்ன

இந்தியாவை சீரழித்து கொண்டு இப்போது இருப்பது என்ன என்பதை அவர்கள் தங்களது முட்டை கண்ணை கொண்டு பார்த்து என்ன தீர்வு சொல்லபோகிறார்கள்

பொருளாதார முன்னேற்ற பத்திகள் எழுதும் நண்பர்கள்
இதற்கு என்ன விளக்கம் தருவார்கள்
இந்தியாவில் முஸ்லீம்களை அழித்தால்
முன்னேறும் என சொல்லும் வெறியர்களை என்ன செய்யலாம் என்பது இவர்களது கருத்து ?

இந்த அமைதி இந்த மெளனம் நல்லவற்றிற்கா

நமது சகோதரிகள் கற்பழிக்கப்படுகிறார்கள்
ஒரு மதத்தின் பேரால் அவர்கள் குழந்தைகள் வயிற்றை கிழித்து கொல்லப்படுகிறார்கள்

இதற்கெல்லாம் இவர்கள் தரும் பெயர்

வெறும் கலவரம் இல்லையா ?

கலவ்ரம் என்பது திட்டமிட்டு நடத்தப்பட்டால்

கலவரம் என்பது ஒரு மதத்தின் அடிப்படையில் செய்யப்பட்டால்?

சட்டமும் போலீசும் அதற்கு பக்க ப்லமாய் இருக்குமானால் ?

இவர்களின் பதில் என்ன

said...

Have you ever thought that these guys might be boasting by exaggerating "facts" to showcase themselves as super-heroes?

In your effort to castigate them to the core, you seem to turn blind eye to the holes found in their tall claims in subsequent investigations.

PS: I too abhor the violence unleashed by the hindutva groups post Godhra.

said...

வாங்க அனானி,

இங்க கட்டுரையில் அங்கு நடந்த வன்முறையின் அளவு குறித்து எதுவும் பேசப்படவில்லை. இந்து பயங்கரவாத பாசிசத்தின் வர்க்க இயல்பும், இந்திய அரசு என்பதன் வர்க்க இயல்பும் ஒன்றுதான் என்பதையும். அரசாங்கம் என்பது ஒரு நிர்வாக கருவிதானேயொழிய அதை வைத்து அரசை ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் இந்த கட்டுரை பேசுகிறது. இது போன்ற மயகத்தில் இருக்கும் முற்போக்கு சக்திகளை செயலுக்கு அழைக்கிறது.

//In your effort to castigate them to the core, you seem to turn blind eye to the holes found in their tall claims in subsequent investigations. //

ஒட்டைகள கண்டுபிடிச்சு என்ன செய்ய? தெஹெல்கா சொன்னது மிகைப்படுத்தப்பட்டது. RSS பாசிச குண்டர்கள் மனித முகம் கொண்ட கொலை வெறியு஢டனே குஜராத இனப் படுகொலையை நடத்தினர் என்வே அவர்கள் அந்தளவுக்கு கெட்டவர்கள் இல்லை என்று நீங்கள் வேண்டுமானல் கட்டுரை எழுதுங்கள். காண்டம் உபயோகித்து வன்புணர்ச்சி செய்வதற்க்கும், உபயோகிக்காமல் வன்புணர்ச்சி செய்வதற்க்கும் உள்ள வித்தியாசம் என்னவோ அவ்வ்ளவுதான் இதற்க்கும். வன்புணர்ச்சியின் வலி எங்கு எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்வது எப்படியோ அப்படித்தான் இதுவும். இந்திய நீதிதுறையால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும்(ஏனெனில் அது மனு நீதிமன்றம் என்பதால்)

அது சரி அந்த ஓட்டையெல்லாம் கண்டு பிடிச்சாக்க குஜாராத் கலவரமோ அல்லது இனப் படுகொலையோ பொய்யென்று ஆகிவிடுமா?

வன்முறையின் அளவு குறித்து சந்தேகம் எழுப்புவதன் மூலம் என்ன நிறுவ விரும்புகிறீர்கள் அனானி? அது குறித்து இந்த கட்டுரை பேசவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு எதிரான செயலூக்கத்தை முனை மழுங்கடிக்கும் திட்டமா?

ரொம்ப பெர்பெக்ட்டான ஆள் போல தெரியுது இதே மாதிரி நெம்ப பெர்பெக்ட்டான் ஆள் ஒருத்தர் இங்க இருந்தாரு அவர் பேரு ரவி சிரினிவாஸ்(நீங்கதான் அவருன்னு சொல்லல).

இதில் discalimer வேறு. அந்த Disclaimerலிலும் கூட அவரது அரை டவுசர் வெளியே தெரிகிறது. அதாவது கோத்ராவுக்கு பிறகான வன்முறையாம். அதாவது அனானி கருத்தில், அதாவது RSS கருத்தில், அதாவது மோடியின் கருத்தில், குஜாராத் பயஙகரவாத செயல் என்பது கோத்ராவால் ஏற்பட்டதாம்.

அப்படியல்ல என்பதைத்தான் தெஹல்கா முற்று முதலாக நிறுவுகிறது. கோத்ராவுக்குப் பிறகு என்ற சொல் பிரயோகம் காலவதியாகி வாரங்கள் ஆகி விட்டன.

அசுரன்

said...

லல்லுவிற்கு பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்த்தாக வேண்டும்.இல்லாவிட்டால் பீகாரில் முஸ்லீம் ஆதரவினைப் பெற முடியாது. திமுக,பாமக,மதிமுக 2002ல் பாஜக தலைமையில் இருந்த கூட்டணி அரசில் இருந்தவை.அன்று அவை ஒன்றும் செய்யவில்லை, ஆதரவினை விலக்கிக்கொள்வோம், மோடி அரசை கலை என்று கோரவில்லை.எனவே இன்று என்ன சொல்லமுடியும், செய்ய முடியும்.தேவையானால் நாளை பாஜகவுடன் கூட்டணி அமைக்க அவை தயார். தமுமுக போன்ற இஸ்லாமிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள்,ஆர்வலர்கள் எதிர்ப்பார்கள், இடதுசாரிகள் எதிர்ப்பார்கள், ஆனால் காங்கிரஸ் ஒன்றும் செய்யத் தயாரில்லை. அடுத்த மாதம் குஜராத்தில் தேர்தல், எனவே தாங்கள் எதாவது செய்யப் போய் இந்துக்கள் ஒட்டுக்கள் கிடைக்காதோ என்ற பயம் காங்கிரஸுக்கு. இந்த்துவத்திற்கு எதிரான ஒரு வலுவான கூட்டணி இல்லை, இருப்பது தேர்தல்களுக்கான, பதவிக்கான கூட்டணி. பெரியாரிய அமைப்புகள், மக இக போன்றவை மோடிக்கு எதிராகக் குரல் எழுப்பலாம், மக்களிடம் கொண்டு செல்லலாம். ஆனால் அவைகளின் பலம் மிகவும் குறைவு.தமிழ்நாட்டில் இந்த்துவத்திற்கு எதிரான ஒரு வலுவான முண்ணணி சாத்தியமா.
ஆம் என்று நம்பிக்கையுடன் கூற இயலாது.

said...

//இவ்வளவு பயங்கரமாய் பார்ப்பனியம் ஆட்டம் போடுகிறதே,
இந்த பயங்கரத்தைக் கான சகிக்க முடியவில்லையே,
இந்த நிலமைகளின் கீழ் இவர்களால் எப்படி அமைதியாக
வாழ முடிகிறது,
ஏதாவது செய்தாக வேண்டுமே என்கிற
தவிப்பிலிருந்து எழும் நமது கேள்விகள்
மிகவும் இயல்பானவை அது அணைவரையும் பேசச்சொல்கிறது.

ஆனால் பார்ப்பனியம் பற்றி மேடைகளில் நீட்டி முழக்கி
சவடால் வசணங்களை அள்ளி வீசுபவர்களை பார்த்து இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?என்று கேட்டால் ம.க.இ.க
அணைவரையும் குறை சொல்கிறது என்கிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் இனி மேலாவது வெட்கப்படட்டும்.//

சும்மா ஞாபகப் படுத்தத்தான்...

வலையுலக கோமாளிகள் தம்மை உணர வேண்டும் என்பதற்க்காக....

அசுரன்

said...

தொகுப்பாக தரப்பட்ட அருமையான கட்டுரை.

said...

http://www.ibnlive.com/news/who-is-a-hindu-uk-school-lists-out-the-qualities/52723-2.html

Who is a Hindu? UK school lists out the 'qualities'
IANS

Published on Wednesday, November 21, 2007 at 09:35 in World section

Tags: UK, Faith , London

E-mail this report | Print this report


Your Name Is No Accident
See Why the Amazing Truth of Your Numerology Chart Cannot Tell A Lie!

Islamic Religious Beliefs
Quran based is universal doubtless Inherited Traditions based doutfull

London: Britain's first state-funded Hindu school has come up with a unique definition of 'practising Hindus' as part of its admissions policy — those who pray daily, do voluntary work at temples, follow a vegetarian diet and abstain from intoxication.

The school, named Krishna-Avanti Primary School, is located in the London borough of Harrow, which has the highest concentration of Hindus in any council in Britain: 40,000. The school is promoted by a charity organisation called the I-Foundation.

The admission process has started for the intake of the first batch of students in September 2008. Places are limited to 30 and are expected to be heavily over-subscribed. The official faith advisor to the school is ISKCON UK, which will advise on aspects of how the Hindu faith can be integrated and taught within the school.

According to the admissions policy, among the criteria to be used while considering applications are: "Looked after children from Hindu families, 10 nominations by Bhaktivedanta Manor of practising Hindu families, children from practising Hindu families, children from Hindu families who are broadly following the tenets of Hinduism."

The policy defines 'practising Hindus' as those who perform daily prayer and deity worship either at a temple or at home, and accept and follow Vedic scriptures, in particular the Bhagavad Gita. They must also be involved in at least weekly temple-related voluntary work, attend temple programmes at least fortnightly and abstain from meat (including fish and eggs), alcohol, smoking and drugs.

According to the policy, 'broadly following' the tenets of Hinduism are defined as: at least monthly visits to the temple, attendance of key festival programmes (Diwali, Janmashtami and Ramnavami) at a local temple, following a vegetarian diet and avoidance of intoxication.

Asked if children of Hindu families who preferred non-vegetarian food or may not be ritualistic Hindus or who followed traditions within Hinduism that went against the school's definition of practising Hindus would be ineligible for admission, a spokesman of the I-Foundation said: "The rules do not exclude anyone who does not qualify under the criteria. The policy is not meant to exclude people."

"Under the rules of funding of faith schools, the school is obliged to have a set of criteria for admission that is relevant to the faith. The criteria — for example, the one about abstention from meat and intoxication — reflect the mainstream Hindus in this country."

"The definition in the admissions policy is a reasonably good way to understand whether a person is a practising Hindu or not. Of course, there are Hindus who prefer non-vegetarian food and drink, and they are welcome to apply if places are available."

He, however, pointed out that a large number of applications were expected for the 30 places. He said the school will "take people on trust" when they claim to meet the criteria of "practising" Hindus or "broadly following" the tenets of Hinduism.

"Obviously, we are limited to what we can do. You take people on trust. But if there is a problem, we will look into it. You need to have some criteria and you need to start somewhere," he added.

Applications submitted on the basis of Hindu faith will be required to be accompanied by a form signed and supported by a local temple priest acting as referee. A recent advertisement said its head teacher needs to be "preferably a practising Hindu".

According to the admissions policy, the school is keen to encourage applications from other faith backgrounds, but since demand for places is expected to outstrip availability, opening admissions to non-Hindu applicants "at this early stage has been viewed as inappropriate".

*************

Izaath in email.

Related Posts with Thumbnails