TerrorisminFocus

Tuesday, May 01, 2007

சற்றுமுன் - சென்னையில் ரிலையன்ஸ் எதிர்ப்பு முற்றுகைப் போராட்டம் - மகஇக மற்றும் தோழமை அமைப்புகள்

ன்று காலை சென்னை, சின்மயா நகர், ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடிக்கு அருகே மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இவர்களின் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. சில்லறை வியாபாரிகள், கோயெம்பேடு தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த போராட்டம் குறித்து ஏற்கனவே தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள், சுவரெழுத்துக்கள் மூலம் இந்த அமைப்புகள் விரிவாக பிரச்சாரம் செய்து அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


சில்லறை வணிகத்தில் பன்னாட்டு, தரகு கம்பேனிகள் நுழைந்து உள்நாட்டு அண்ணாச்சிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தோராயமாக இரண்டாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டு கைதானதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது குறித்தான செய்திகள் சன், ஜெயா, மக்கள் தொலைக்காட்சிகளில் மகஇக வின் தலைவர் தோழர் மருதையனின் பேட்டியுடன் ஒலி/ஒளி பரப்பப்பட்டது.


அசுரன்

Related Posts:

சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ்

மே 1 சென்னையில் ரிலையன்ஸ் பிரஷ் முற்றுகை

சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!

கருணாநிதியின் அரிசியும், ஹிட்லரின் ரொட்டித் துண்டும்....

26 பின்னூட்டங்கள்:

said...

தொடர்ந்து போராடுவோம்; போராட்டத்துக்கு ஊக்கமளிப்போம்

said...

//// சில்லறை வணிகத்தில் பன்னாட்டு, தரகு கம்பேனிகள் நுழைந்து உள்நாட்டு அண்ணாச்சிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை எதிர்த்து ....////

நல்ல காமெடி உங்கள் பதிவுகள்.

எத்தனை எத்தனை காமெடிகளை அழகாக சிரிக்காமல் கொடுத்துவருகிறீர்கள். மிக்க நன்றி.

பெருங்கம்பெனிகளால் அண்ணாச்சி கடைகள் அழியுமாம்! அண்ணாச்சி கடைகள் என்னவோ இந்தியாவின் பொருளாதார வாழ்வாதார முதுகெலும்பாம்!!! அவற்றை இவர்கள் கடை வாசலில் கூச்சல் போட்டு நிறுத்தப்போகிறார்களாம்... டாப் டக்கர்.

இறந்து போன கம்யூனிஸ சித்தாந்தத்தை தோல்பையில் அடைத்து கால் கை குச்சிகள் ஒட்டி பாமர மக்களை ஏமாற்றி கொஞ்சம் கறந்துகொள்ளும் ஒரு மலிவு உத்திதான் இது.

said...

Sorry for writing in English;

Though i dislike the way Reliance manipulates the environment for its benefit in every area it enters, the current protest against large format stores, including Reliance, may not be good for the farming community;

The existing setup only strengthens the middle -men trading group; These middle-men are there every stage in our lives: local part-time procurement agents at villages who lent during lean period and buy at ridiculous prices before even the farmer has finished harvesting, commission agents at markets who exploit lack of information, and finally retailers in towns and cities who sell at ridiculous margins to unsuspecting consumers.

I do not know whether you have firsthand experience of these traders; but i know them personally. I come from rural tamilnadu,who have lived in a village in the early part of my life; My family is still into agriculture; Though i am far removed physically for quite a while, my heart is still there and am still in touch with the happenings there.

These middle-men and the useless government departments like co-operative societies, metereology and agriculture departments have systematically ensured that our farmers live hand-to-mouth, from one crop to another, on borrowed money and time.

These chaps, including your 'annachis', have been exploiting our farmers directly and farm labourers indirectly. How can a farm owner pay high wages to his people, when he himself is not sure how much he his going to earn?

We have to choose between the two devils; The general projection is that the large retailer would work with the farmers more closely at varios pre-harvesting and post harvesting stages, introduce technologies and help them get better productivity and thereby more income. Though our experience in sugarcane with sugar factories in TN has not been good all the time, but has definetely been an improvement from growing rice; i have heard similar stories from soya farmers in MP and rice/wheat farmers of Punjab. For all we know, it might be worth for the farming comunity to try this also; we do not have much to lose because of reliance and wallmart.

I agree that small grocers would lose out eventually; but large retailers world over have been good for consumers and have been definetely good for farmers in developed countries.

Since the percentage of population of middle-men would be comparatively lesser than the farmers/farm labourers and other working class consumers, i do not understand why majority of us should oppose large retailers. This is like when bank employee unions protested against computerisation in banks, bothering more about bank employees, than about customers; Why should a large group be held ransom for the benefit of a small influential minority?

I definetely want that the Government should have some regulatory setup to control monopolistic tendencies and unfair practices of companies like Reliance, but that does not mean that we should bar them from this business.

Aplogies again for writing in English;

SV

said...

அனானி,

வியாபாரிக்கும், இடைத்தரகர்களுக்கு, விவசாயிக்கும் இடையில் முரன்பாடு இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதனை முன்னிட்டு ரிலையன்ஸ் போன்ற தரகு கம்பேனிகளின் கையில் சந்தையை ஒப்படைப்படுப்பது படு மோசமான விளைவுகளையே ஏற்ப்படுத்தும். எனது முந்தைய கட்டுரையிலிருந்து நீங்கள் குறிப்பிட்ட அம்சங்களைத் தொட்டு சில பகுதிகள். அந்த குறீப்பிட்ட கட்டுரையை முழுமையாக படித்தால் ரிலையன்ஸ் குறித்து வைக்கப்படும் பல்வேறு வாதங்களை விவாதித்துள்ளது தெரியவரும்.

http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_25.html

இடைத் தரகர்களை ஒழிப்பதாகவும் அதனாலேயே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வதாக இவர்கள் சொல்லும் போது நாம் ஏதோ ஆன்லைன் சூதாட்டக் காரர்களையும், மொத்த மண்டிக்காரர்களையும் ஒழிக்கப் போவதாக நினைத்தால் அவர்கள் அப்படியில்லை என்று சொல்கிறார்கள். மொத்த மண்டிக்காரர்களின் இடத்தில் பன்னாட்டு கம்பேனிகளை மாற்றி வைப்பது மட்டும்தான் இந்த அம்சத்தில் ஒரே வித்தியாசம். இது போல மாற்றுவது விவசாயிகளின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடாது என்பதற்க்கு பஞ்சாப் பெப்ஸி ஒப்பந்த விவசாயிகளும், சமீபத்திய கோதுமை கொள்முதல் சதிகளும் சாட்சிகளாக உள்ளன. அப்படியென்றால் இவர்கள் சொல்லும் இடைத் தரகர்கள் யார்?


இதோ அந்த கோடீஸ்வர, கொள்ளைக்கார(?) இடைத்தரகர்கள்:
சென்னையில் பல இடங்களில் சமீபத்தில் ரிலையன்ஸ் கம்பேனி கடை ஆரம்பித்தது. ஆரம்பித்த முதல் வாரத்திலேயே கோயெம்பேட்டில் 40% வியாபரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. சில்லறை வியாபாரிகள் கோயெம்பேட்டில் வாங்கும் சரக்கின் அளவு குறைந்துவிட்டது. வெளியூர் லாரிகளின் வரத்து குறைந்து விட்டது. தொழிலாளிகளுக்கு வேலை குறைந்து வருமானமும் குறைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிட்டது.

2500 காய், கனி, பூக்கடை வியாபாரிகள், சுமார் 20,000 தொழிலாளர்கள், அன்றாடம் அதிகாலை 2 மணி முதல் ஆட்டோ க்களிலும், வேன்களிலும், இரு சக்கர வண்டிகளிலும் வந்து காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரக்கணக்கான மளிகைக் கடைக்காரர்கள், கோயெம்பேட்டில் சரக்கு எடுத்து, தள்ளு வண்டியிலும் கூடையிலும் மைல் கணக்கில் சுமந்து தெருத் தெருவாய் கூவி விற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் உழைப்பாளிகள்....

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஊட்டி, நீலகிரி, பொள்ளாச்சி, கம்பம், நெல்லை, தூத்துகுடி, சேலம், தர்மபுரி என்று தமிழகத்தின் பல்வேறு சந்தைகளில் காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரம் வணிகர்கள், அந்தச் சந்தைகளில் பல லட்சம் தொழிலாளர்கள், அந்த காய்கனிகளை எல்லாம் சென்னைக்குச் சுமந்து வரும் லாரிகள், வேன்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்.... என்று கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை தான் இவர்களின் கணக்கில் அந்த இடைத் தரகர்கள். இவர்களின் வயிற்றில் அடித்து சுரண்டுவதுதான் அந்த மிச்சப்படுத்தப்படும் பணம். சரி அந்த பணம், அதாவது இடைத்தரகர்களை ஒழிப்பதால் உருவாகும் அந்த பணம் விவசாயிகளுக்குப் போய் சேருமா?

அதுவும் கிடையாது, அரசு அதிகாரத்தில் தனது முழு செல்வாக்கையும் கொண்டுள்ள இது போன்ற கம்பேனிகள், ஏற்கனவே விவசாய உற்பத்தி பொருட்களின் மீது அரசு கொண்டிருந்த கொள்முதல் உரிமைகளை பின் வாசல் வழியாக தனது வசம் எடுத்துக் கொள்ள துவங்கியுள்ளன. அரசு கொள்முதலை குறைத்து விடுவதன் மூலம் விவசாயிகளை நிர்பந்தித்து தன்னிடம் விற்க்கச் செய்வார்கள். தான் விருப்பட்ட விலைக்கு விளை பொருட்களை விற்க்கும் சூழலை இந்த ஏகாதிபத்திய மூலதனத்தால் வெகு சுலபமாக உருவாக்க முடியும். சேட்டுகள் சொல்வார்களாம், "லாபம் என்பது என்ன விலையில் விற்கிறாய் என்பதில் அல்ல, மாறாக என்ன விலைக்கு வாங்குகிறாய் என்பதில் உள்ளது" என்று. சாதாரண சேட்டுக்கு தெரிந்த இந்த வியாபார ரகசியம் ரிலையன்ஸ்க்கு தெரியாதா என்ன? அவர்கள் விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கி நம்மிடம் குறைந்த கூலிக்கு விற்பார்கள் என்று நம்புவதற்க்கு ஒருவன் மகா கேனையானாக இருக்க வேண்டும் அல்லது விசுவாசமான அடிமையாக இருக்க வேண்டும்.

ஒரு வேளை அடிவருடிகள் இப்படி வாதம் வைக்க முயற்சி செய்யலாம். அதாவது, சேட்டுக்கள் லெவலுக்கு அந்த சூத்திரம் சரியாக வரும், ஆனால் பெரும் முதலீட்டில் செய்யும் ரிலையன்ஸ் ரேஞ்ச்சுக்கு அந்த சூத்திரம் சரி வராது என்று. ஆனால் துரதிருஷ்டவசமாக வால்மார்ட்டுக்கு பொருட்களை உற்பத்தி செய்து சப்ளை செய்பவர்களின் துயரம் அமெரிக்கா முழுவதும் நாறுகிறது (Search for: The man who said no to Walmart). வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுப்பதற்க்காக, விநியோகஸ்தர்களையும், உற்பத்தி செய்பவர்களையும் நசுக்கும் வால்மார்ட் என்ற தலைப்பில் அங்கு பல கட்டுரைகள் காணக் கிடைக்கும். ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தவரிடமிருந்து வாங்குவதில் தனது சுரண்டலை முன்னிலைப்படுத்தும் இந்த கம்பேனிகள். இந்தியாவில் என்ன செய்யும்? ரிலையன்ஸ் நேர்மை(??) குறித்து ஆயிரத்தெட்டு உதாரணங்கள் இருக்கின்றன.

இது முதலாளித்துவ சந்தையின் விதி. மூலதனம் கடவுள் கொடுக்கும் அட்சய பாத்திர பொருள் அல்ல. அது உழைப்பின் தவிர்க்க இயலா ஒரு விளை பொருள் அவ்வளவுதான். ரிலையன்ஸ் உள்ளிட்டவர்களிடம் திரளும் அந்த மூலதனம் என்பது பல கோடிக்கணக்கானவர்களின் உழைப்பை சுரண்டி சேகரமானதே. லட்சம் விவசாயிகளின் சாவு குறித்து மௌனம் சாதித்த அடிவருடிகள் தீடீரென்று விவசாயிகளின் மீது பாசம் காட்டுவதற்க்கும், நடுத்தர வர்க்க வியாபாரிகளின் சந்தை ஆதிக்கத்தின் மீது வெறுப்பை உமிழ்வதற்க்கும் பின்னால் உள்ள இயங்கியல் கோடிகளை சுரண்டிக் கொடுக்கும் இந்த அட்சயப் பாத்திரத்தின் மீதான முறை தவறிய காமம்தான்.

அண்ணாச்சி கடைகள் நடத்தும் இந்த சிறு வணிகர்கள் அல்லது இவர்கள் பாசையில் இடைத்தரகர்கள் யார்?

விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்றுக் கடை வைத்த அண்ணாச்சிகள், விவசாயம் அழிந்து போனதால் நகர்ப்புறத்துக்கு பிழைப்புத் தேடி ஓடிவந்த நிலமற்ற விவசாயிகள், தலித் மக்கள், வேலை இழந்த தொழிலாளர்கள், வேலை கிடைக்காததால் சுய தொழில் தொடங்கிய படித்த இளைஞர்கள், குடும்ப பாரத்தைக் கூடையில் சுமக்கும் ஆதரவற்ற பெண்கள்....... பாரிதாபத்துக்குரிய இந்த மக்களுடைய வயிற்றில் அடித்துச் சொத்து சேர்ப்பதற்க்கு அம்பானிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது இந்த அரசு. அதாவது குரங்கு அப்பம் பிரித்த கதை. அதாவது விவசாயி, வியாபாரி முரன்பாட்டில் குரங்கு அம்பானி வயிறு வளர்க்கும் கதை.

25,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் கடை திறக்க இருக்கும் ரிலையன்ஸ் எப்படி அந்த மூலதனத்தை கொழுக்க வைக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் அது நமது ஒவ்வொரின் சதையையும் கொத்தி கிளறிதான் கொழுக்க முடியும் என்பதனை புரிந்து கொள்ளலாம். உண்மைதான், நுகர்வோன் என்ற முகமூடி போட்டுக் கொண்டால் நமது சதையை கொத்திக் கிழிக்கும் வலி தெரியாமல் இருக்க நுகர்வுக் கலாச்சார போதை மருந்து கொடுக்கப்படும்.

சிறுபான்மை பெருநிலக் கிழார்களின் கையிலிருந்து நிலத்தை பறித்து உண்மையிலெயே நிலத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கு பிரித்து கொடு, அதனை கூட்டுப் பண்ணை மூலம் ஒன்றிணை, விவசாயிக்கு மையப்படுத்தப்பட்ட நாடு முழுவதற்க்குமான திட்டம் போடு, உள்கட்டுமானங்களை கடன் வாங்கி அல்ல, மாறாக வேலைக்கு உணவு திட்டத்தின் மூலமே கட்டிக் கொடு, பிறகு பார் இந்தியாவில் உருவாகும் வேலை வாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும். விவசாயத்தின் மறுமலர்ச்சியையும். இதனை செய்ய இந்த அரசு தயாராயில்லை. சிறுபான்மை நிலக் கிழார்களையும், பெரும் பணக்காரர்களையும் சிறு அளவு கூட கஸ்டப்படுத்த தாயாராயில்லை இந்த அரசு. மாறாக பெரும்பான்மை உழைக்கும் மக்களை லட்சக்கணக்கில் பலி கொடுத்து வருகிறது. கறிச் சோறு கேட்ட காட்டேரி தலைப் பிள்ளையைத்தான் தின்பேன் என்று நின்றதாம் அது போல தரகு வர்க்கமும், ஏகாதிபத்தியமும் இந்தியாவின் முதுகெலும்பை உடைத்துதான் வயிறு வளர்ப்பேன் என்று நிற்கிறது. அதற்க்கு நியாயம் கற்ப்பிக்கவும் சில துரோகிகளை அது விலை கொடுத்து வாங்கியுள்ளது.

அனைவருக்கும் மேலாக காய்கனிகளை பூக்களையும் விளைவிக்கும் பல லட்சம் விவசாயிகளையும் இவர்களின் விசச் சுழற்யில் சிக்க வைக்கிறார்கள் இந்த துரோகிகள். இவர்கள் அனைவரின் வாழ்க்கையை சில கோடீஸ்வரர்களின் வயிறு வளர்க்க காவு கொடுக்கிறது இந்த அரசு.

said...

இதோ அந்த கோடீஸ்வர, கொள்ளைக்கார(?) இடைத்தரகர்கள்:
சென்னையில் பல இடங்களில் சமீபத்தில் ரிலையன்ஸ் கம்பேனி கடை ஆரம்பித்தது. ஆரம்பித்த முதல் வாரத்திலேயே கோயெம்பேட்டில் 40% வியாபரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. சில்லறை வியாபாரிகள் கோயெம்பேட்டில் வாங்கும் சரக்கின் அளவு குறைந்துவிட்டது. வெளியூர் லாரிகளின் வரத்து குறைந்து விட்டது. தொழிலாளிகளுக்கு வேலை குறைந்து வருமானமும் குறைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிட்டது.

How is this possible.Is Reliance catering to such a huge section of
the population that there is a fall of 40% business in a wholesale
market.If what you say is true then
Reliance stores should be doing roaring business and all sections of the population should be shopping there.Even if one assumes
that Reliance is directly buying
from farmers in all regions in
Tamil Nadu and is buying all the
produce in fruits,vegetables etc
such an effect as stated by you
is unlikely in just one week.
I understand that while Reliance
is trying to woo customers its
clientle is restricted to mostly
upper middle class. A retail chain
that caters to hardly 5% of population cannot cause a 40% reduction in sales in a wholesale
market, and that too in a week.
To reach that level Reliance would
need hundreds of strores spread all
over the city with a very large clientle base. So what you have written cannot be taken in its
face value.

said...

இங்கு குறிப்பிட்டுள்ளது கோயெம்பேடு மார்க்கெட் நிலவரம்தானேயொழிய ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலவரம் அல்ல. 40% வியாபார வீழ்ச்சி என்பதை வியாபாரிகள் ஒரு நாள் கடையெடுப்பு செய்ததை ஒட்டி வந்த பத்திரிகை செய்திகளில் காணலாம். ரிலையன்ஸின் சில்லறை வியாபாரம் hardly 5% என்பது பொய். ஏனேனில் சென்னை போன்ற மாநகரங்களில் நடுத்தர வர்க்கத்தின் மக்கள் தொகை என்பது மிக மிக அதிகம். அது 5% அல்ல. ரிலையன்ஸ் ஆரம்பித்த சில நாட்களில் மையப்படுத்தப்பட்ட கடைகள் அறிவித்த சலுகைகளும்(1 கிலோ பழைய பேப்பர்/சமான்களை கொடுத்து விட்டு ரூபாய் 100க்கு கூப்பன் வாங்கிச் செல்லலாம் என்பது போல) அதனையொட்டி நெடு வரிசைகளில் அந்த கடைகளின் வாசல்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் அலை மோதியதும், பத்திர்கைக்களில் பேசும் அளவு பரபரப்பானதும் இதனை உறுதி செய்யும்.

அசுரன்

said...

http://www.indiafdiwatch.org/index.php?id=77&tx_ttnews%5Btt_news%5D=450&tx_ttnews%5BbackPid%5D=49&cHash=9149570949

Traders plan to strike to protest retail chain entry
10-03-07 18:03
Age: 54 days


BY: KANNAL ACHUTHAN AND PRISCILLA JEBARAJ, THE HINDU
Koyambedu merchants say business is threatenedCHENNAI : Vegetable and fruit merchants in the city are planning to strike work to oppose the entry of Reliance Retail's chain of food stores.

Representatives of the traders in perishables said their business had plummeted since the entry of Reliance Retail in late January. About 5,000 merchants — from wholesale and neighbourhood markets in the city — will meet at the Koyambedu Wholesale Market complex on Sunday to prepare a charter of demands and to plan a strike.

"Reliance is able to undercut prices because it buys produce from the farmers. But it may hike costs once it has driven neighbourhood vendors out of business," said S. Chandran, secretary of Koyambedu Periyar Vegetable Market Licence Holders Association.

Other retail chains such as Subiksha, Spencer's Daily and Nilgiris buy vegetables from the Koyambedu Wholesale Market, so pricing is more or less standard, he said. Mr. Chandran also said Reliance was likely to buy up large tracts of agricultural land and engage in contract farming if its chain was allowed to expand.

V.R. Soundararajan, the association's president, said that sales in the Koyambedu Market had fallen by as much as 50 per cent. The traders would urge the State government to bar Reliance Retail from Tamil Nadu or curb its expansion, he said. A petition would be submitted to the Chennai Metropolitan Development Authority and Urban Development Minister Parithi Ilamvazhuthi.

Response However, Reliance Retail is sticking to the point that there is space for all players in the market. "Their apprehensions are not correct. Small neighbourhood shops and pushcarts provide localised service that organised retail cannot match. So there is a place for everyone," said M. Balachandran, Chief Mentor of Reliance Retail.

Organised retail is only 2 per cent of the total retail industry in India, so it would not cut into anyone's profits, Mr. Balachandran said.

Reliance Retail has 14 stores in Chennai attracting a total of about 12,000 visitors a day.

************

Please look at this figure again:
//Reliance Retail has 14 stores in Chennai attracting a total of about 12,000 visitors a day.//

said...

http://www.hindu.com/2007/04/24/stories/2007042414060500.htm

Wholesalers at Koyambedu, however, are opposed to direct sourcing from farmers. "We have been hit hard," says S. Chandran, Koyambedu Periyar Vegetable Market Licence Holders Association secretary. "A retailer who used to buy 100 kilos of vegetables from my wholesale store now buys only 70 kilos," he says. The traders are also forced to reduce margins. "There is room for everyone in the market. There will not be any churn caused by us," insists V.V. Naga Prasad, Reliance Retail's head of customer operations in the State.

said...

//Reliance Retail has 14 stores in Chennai attracting a total of about 12,000 visitors a day.//
That is what I said.Reliance caters to hardly 5% of population.
In fact one goes by this figure
it is next to nothing, when compared to chennai's population.
"V.R. Soundararajan, the association's president, said that sales in the Koyambedu Market had fallen by as much as 50 per cent."
This is just hype.How can a chain store that hardly attracts 20,000 visitors a day can have such an effect.
" "A retailer who used to buy 100 kilos of vegetables from my wholesale store now buys only 70 kilos," he says".
Does this mean that Reliance is the cause for this.There can be
so many reasons.Perhaps retailers
buy from other sources.

Reliance will not affect small
players in the market, the neighbourhood shops,the push-cart
vendors.It can affect medium size
and bigger wholesale shops/commission agents as it
buys from farmers eliminating atleast one layer in the process.
But to expect that there should be
only mode of doing business in vegetables and fruits is an
anachronism.I think chain stores
like Reliance are inevitable in
India as population has enormous
diversity in terms of purchasing
power and needs.Whether you like it or not chain stores like Reliance, Subishka, Fabmall
are here to stay because they
cater to a class that has purchasing power to fulfill
its desires and an insatiable appetite for 'all the good things in life'.

said...

/// அனானி,

வியாபாரிக்கும், இடைத்தரகர்களுக்கு, விவசாயிக்கும் இடையில் முரன்பாடு இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதனை முன்னிட்டு ரிலையன்ஸ் போன்ற தரகு கம்பேனிகளின் கையில் சந்தையை ஒப்படைப்படுப்பது படு மோசமான விளைவுகளையே ஏற்ப்படுத்தும். ////

ஐயா,

தங்களின் காமெடியை முதலில் நிறுத்துங்கள்.

பக்கம் பக்கமாக எழுதினால் அது ஒரு பெரிய ஆய்வுக்கட்டுரையாக ஆகிவிடாது?

கடந்து ஐம்பது வருடங்களாக சில்லரை வாணிபம் இருந்து வரும் உண்மையான நிலை உங்களுக்கு தெரியுமா? இந்த தொழிலில் அனுபவமுள்ள எனக்கு கொஞ்சம் தெரியும். 99 சதவீத அண்ணாச்சி கடைகள் வாய்க்கும் கைக்குமாகவே இயங்குகின்றன. அவர்களால் ஏன் ஒன்று சேர்ந்து ஒரு தரமான சில்லரை-வாணிபத்தை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. இன்னும் பல கம்பனிகளின் தயவிலேயே இருந்துவருகிறார்களே!!! உண்மையில் சில்லரை வாணிபத்தை தம் கைக்குள் வைத்திருப்பது அண்ணாச்சிகள் அல்ல, இந்த பெரிய முதலைக்கம்பனிகள்தாம்.

சரி, இந்த அண்ணாச்சிகளால் என்ன பயன்? விவசாயிகளுக்கும் இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. விவசாயிகளின் விளைச்சலுக்கு தகுந்த உத்தரவாதம் கொடுக்க இவர்கள் தவறிவிட்டார்கள். விவாசாயிகளுக்கு நியாய விலையை தர இவர்கள் தவறி விட்டார்கள். எல்லா சுரண்டல்களுக்கும் இவர்களும் உடந்தை.

அரசாங்கத்தை இந்த அண்ணாச்சிகள் சுரண்டியது இரண்டாவது துரோகம். எனக்குத்தெரிந்து நூற்றுக்கு 90 பேர் சரியாக வரி கட்டுவதில்லை. விற்பனைவரியில் ஏய்க்கிறார்கள். பில்புக்கில் பல தில்லுமில்லு. பெரிய சீரான கம்பனிகள் வருவதால் இந்த ஊழல்கள் ஒழியும்.

இந்த அண்ணாச்சிகள் நுகர்வோருக்கு ஆற்றியது மூன்றாவது துரோகம். இன்று சில்லரை வியாபாரத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக துரை என்கிற முறையறுக்கப்படாத துறைகளிடம் இருக்கிறது. இவர்கள் வழங்கும் பொருட்களின் தரம் மிக மோசமானது. உள்ளூர் பகுதிகள் 60% பொய் ஏமாற்று பொருட்கள் தரமில்லாமல் புழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உப்பு முதல், சோப், பெப்ஸி கோலா, ப்ளேட், சாக்லெட், எலெக்டிரிக் முதல் உயிர் காக்கும் மருந்துகள் வரை தரமில்லாத ஏமாற்று பொருட்களை சந்தையில் விற்று இந்த அண்ணாச்சிகள் நுகர்வோரை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நுகர்வோருக்கு எந்த ஒரு பதிலும் கொடுக்க விருப்பமில்லாமல், இன்றும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சில்லரை வாணிபத்தில் பெரிய கம்பனிகள் வந்தால் அவர்களால் தரம் நிலைக்கும். அவர்கள் நீதிமன்றத்துக்கும் சமூகத்தின் பேருக்கும் மதிப்பளித்து தங்கள் நடவடிக்கைகளை சீராக வைத்துக்கொள்வார்கள்.

சில்லரை அண்ணாச்சிகளால் மிகுந்த நஷ்டம் அடைவது சின்னஞ்சிறு நுகர்வோரே. ஏழை மக்கள் தங்கள் தினசரி உபயோகத்திற்காக ஐந்து ரூபாய் புளி, பருப்பு, எண்ணை என்று வாங்கி உணவு செய்கிறார்கள். இம்மாதிரி சில்லரை யில் கொடுக்கும் பொருட்களில் தரமும் குறைவாகவும், விலை அதிகமாகவும் இருக்கிறது. பாக்கெட் போட்ட பொருட்களில் விலை மாற்ற முடியாமல், உதிரியாக விற்கும் இதில் அநியாய கொள்ளை செய்கிறார்கள் இந்த அண்ணாச்சிகள். (ஒரு எட்டணா, ஒரு ரூபா மேலே வைத்தாலும் அது சதவீத கணக்கில் பெரும் லாபம்தான்...) இம்மாதிரி சுரண்டப்பட்டு தரமில்லாத பொருட்களை அனுபவிக்கிறார்கள் ஏழை மக்கள். பெரும் நிறுவனங்கள் வந்தால் இம்மாதிரி தரமில்லாத, அநியாய விலை வியாபாரம் ஒழியும்.

அடுத்து இந்த அண்ணாச்சிகள் சுரண்டுவது தங்களிடம் வேலை செய்வோரை. இவர்கள் ஆண்டாண்டு காலமாக பி.எப். நிதி, மருத்துவ வசதி, மற்றும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் இவர்கள் வைத்திருப்பார்கள். தினசரி, பத்து முதல் பதினைந்து மணி நேர வேலை சாதாரணம். பெரும்பாலும் பெரிதாக எதிர்பார்க்காத சிறார்களையும், பெண்களையும்தான் வேலைக்கு அமர்த்துவார்கள். தன் தொழிலை கற்றுக்கொண்டு விடுவான் என்று பயம் வேறு. இம்மாதிரி தொழிலாளர் விரோத போக்கு பெரும் கமபனிகளால் ஒழியும்.

ரிலையன்ஸ் திறந்த 12 கடைகளால் கோயம்பெட்டில் 40% வியாபாரம் வீழ்ச்சி என்பதெல்லாம் இட்டுக்கதை. சென்னையில் மக்கள்தொகை 75 லட்சம். 12 கடைகளில் எவ்வளவு - 12000 பேர் தினசரி வாங்குவார்களா? எத்தனை சதவீதம் ஆகிறது.

ரிலயன்ஸ் கடைகளில் விலை குறைந்திருந்தால் அது எல்லோராலும் வரவேற்கத்தக்கதே!!! அதில் எப்படி நடுத்தரவகுப்பு மட்டும் பயனாளி என்கிறீர்கள்? விலை குறைந்தால் எல்லோருக்கும்தான் நல்லது!

சென்னையில் காய்கறி வியாபாரம் ஏதோ ரிலையன்ஸ் மாத்திரம் நடத்துவது போல் பேசுவதும் தவறு. பல வருடங்களாக பல்வேறு சூப்பர்மார்க்கெட்டுகள் - ஸ்பென்ஸர், நீலகிரி, சுபிக்ஷா, திரிநேத்ரா, என்று பல கம்பனிகள் செய்துவருவதுதானே?

அசடு.

said...

அல்லது வேறு என்ன பிரச்சனை 40% வியாபாரத்தை சாப்பிட்டது என்பதை சொல்லவும். ஒரு வேளை சென்னை மக்கள் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டனரா?

14 கடையில் 12,000 பேர் வாங்கினர் என்று ரிலையன்ஸ் பிர்ஷ் சொல்வதை நாம் நம்புவது இருக்கட்டும். 5% மக்கள்தான் அங்கு வாங்குவார்கள் என்ற கூற்றுக்கு இந்த 12,000 புள்ளி விவரம வலுக் கொடுக்கிறது என்று அனானி கருதுவதன் காரணம் என்ன?

ரிலையன்ஸ் பிரஷில் தக்காளி(குளிரூட்டப்பட்ட) வாங்கி காய்ச்சம் வந்த பெங்களூரைச் சேர்ந்த ஒரு குடும்பம் அடித் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தானேயன்றி உயர் நடுத்தர வர்க்கம் அல்ல.

சிறு வியாபாரிகளை விட குறைந்த விலையில் விற்க்கும் ரிலையன்ஸில் உயர் நடுத்தர் வர்க்கம் மட்டுமே வாங்கும் என்று எந்த அடிபப்டையில் நம்மை நம்ப சொல்கிறார் அனானி. ஒரு வேளை வர்க்க அடையாள அட்டை போல ஒன்றைக் கொடுத்து ரிலையன்ஸ் தனது கடை வாசலில் வாட்ச்மேன் வைத்து சோதித்தே விற்பனை செய்யுமா?(மெட்ரோ கடைகள் போல) ;-))


அசுரன்

said...

//கடைகள் என்னவோ இந்தியாவின் பொருளாதார வாழ்வாதார முதுகெலும்பாம்!!! //

Asuran engages in such comedy every one in a while. Dont give him too much importace.He's just another worthless commie.

said...

If 12,000 people buy each an average of Rs 100 worth vegtables and fruits it works out to 12,000,00 i.e 12 lakhs only.
If the daily business of vegtables
and fruits is 10 crores or 5 crores
this cannot be even 10%, it is much less. So this 40% loss is a big lie. Either you give reliable figures or stop using figures to make out a case.
If you say that right now we have
no figures to substantiate our claims that entry of Reliance will
affect small and big traders in this sector and Koyambedu wholesale market that is reasonable.But you are making tall
claims with no evidence.Some fools may buy your arguments because they like your politics.But you cant fool all people like that.

said...

//தவறு செய்துவிட்டீர்களே அய்யா.

அசடு என்பது என் வலையுலக பெயர்.
//


என்னை மன்னிக்க வேண்டும் அனானி alias அசடு,

என்னைத் திட்டுவதாக நினைத்துவிட்டேன். அந்த பின்னூட்டங்களை விலக்குகிறேன். உங்களது பாணியிலேயே இன்னுமொரு பதில் இடுகிறேன்.
:-))

விளக்கம் கொடுத்தமைக்கு பல நன்றிகள்


***********

அன்பு ஆங்கில அனானி,

40% வியாபாரம் வீழ்ச்சி என்பது குறித்து எதுவும் உத்திரவாதமான direct புள்ளிவிவரங்கள் இல்லை என்பது உண்மைதான். பத்திரிக்கைகளில் பேட்டி கொடுத்த கோயேம்பேடு வியாபாரிகள் சங்க தலைவர்களின் கூற்றின் அடிப்படையில்தான் அந்த தகவல் இணைக்கப்பட்டது.

ஆனால், கோயெம்பேட்டில் வியாபாரம் பாதிக்கப்பாடாமல் அவர்கள் போராடவில்லை. உங்களுக்கு அந்த புள்ளி விவரம் பிர்ச்சனையாக இருக்கிறது எனில் எனது கட்டுரையில் ஒரு வரி அளவு கூட இல்லாத அந்த புள்ளி விவர பகுதியை நீக்கி விட்டு கட்டுரையின் மீதி பகுதிகளை உடைத்து வாதம் செய்யுங்கள்.

அதை செய்யும் வலு இல்லையெனில், ரிலையன்ஸ் ஆதரவாக முன் வைக்க உங்களிடம் எதுவும் சரக்கு இல்லை என்றே நான் கருத வேண்டியுள்ளது. மற்றபடி எந்த ஒரு தர்க்க அடிபப்டையுமின்றி ரிலையன்ஸ் போன்ற தரகு பன்னாட்டு கம்பேனிகளுக்கு சட்டி தூக்குவதுதான் உங்களது அரசியல் எனில், அந்த அரசியல் உங்கள் கணக்கில் அதி புத்திசாலித்தனம் எனில், உங்களை நினைத்து நான் பரிதாபப்பட வேண்டிய நிலையில் உள்ளேன். :-))

அசுரன்

said...

Reliance says that there is enough space for everyone in the market.
Your argument is that entry of Reliance is affecting small players
and wholesalers and Koyambedu market.Unless you give evidence at least to put forth a hypothesis that entry of Relinace has affected players ranging from small players to whole sale agents and bigger players in Koyambedu market why should one take your view as true or as an evidence in support of your opposition to entry of Reliance. Why do you
expect some one should oppose
or support Reliance. One can
always argue that unless we know
the impact and the positive and
negative effects of that entry
one should not pass judgments
merely on the basis of hear say
evidence or false data. You have
some hypotheses and premises and
build your case on them.I may
prefer to remain neutral and ask
for data before taking a position.

said...

You seem to forget one thing. All those who question your claims need
not be arguing in favor of Reliance. For some data is needed
even to put forth a hypothesis
or to arrive at some preliminary
conclusions. For you mere rhetoric
is enough. For me that is no substitute for thinking.I may take a wait and watch approach.

said...

அசுரன்,

விவாதத்தில் சூடு பறக்குது. சீண்டி விட்ட அசடுக்கு நன்றி, நல்ல பல தகவல்களை வர வைக்கும் அவரின் சீரிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் ;)

போராட்டம் பற்றிய தகவல்களுக்கு நன்றி.. இதைப் பற்றிய வீடியோ க்ளிப்பிங் ஒன்று கரும்பலகை தளத்தில் இருந்தது அதையும் இனைக்கலாமே

said...

அனானி என்ற அசடு அவர்களே,

நீங்கள் எனது கட்டுரையை கிஞ்சித்தும் படிக்கவில்லை. ஏனேனில்,//சென்னையில் காய்கறி வியாபாரம் ஏதேத ரிலையன்ஸ் மாத்திரம் நடத்துவது பேதல் பேசுவதும் தவறு. பல வருடங்களாக பல்வேறு சூப்பர்மார்க்கெட்டுகள் - ஸ்பென்ஸர், நீலகிரி, சுபிக்ஷா, திரிநேத்ரா, என்று பல கம்பனிகள் செய்துவருவதுதானே?
//

உங்களது இந்த கேள்விக்கு என்று ஒரு தனி தலைப்பே போட்டு எழுதியுள்ளேன் எனது கட்டுரையில். இந்த வாதத்தை பத்ரி என்பவர் தனது கட்டுரையில் வைத்திருந்தார் அதிலுள்ள தவறை விளக்கியே எனது கட்டுரை உள்ளது. படிக்கவும்.

இது தவிர்த்து விலை குறைப்பு குறித்த உலக அனுபவங்கள். இந்தியாவில் அது எப்படி யிருக்கும் என்பது குறித்தும் கோடிட்டு காட்டியுள்ளேன்.

///ரிலயன்ஸ் கடைகளில் விலை குறைந்திருந்தால் அது எல்லேதராலும் வரவேற்கத்தக்கதே!!! அதில் எப்படி நடுத்தரவகுப்பு மட்டும் பயனாளி என்கிறீர்கள்? விலை குறைந்தால் எல்லேதருக்கும்தான் நல்லது! ///


ரிலையன்ஸால் 40% பாதிக்கப்பட்டதா இல்லையா என்பதை விடுங்கள் ஆனால் ரிலையன்ஸ் யாருடைய வாழ்க்கையில் கை வைத்து தனது லாபத்தை உறுதிப்படுத்தும் என்பதை எனக்கு தெளிவுபடுத்தினால் ரிலையன்ஸ் குறித்தான எனது குற்றச்சாட்டை நான் திரும்பி வாங்கிக் கொள்கிறேன்.

புதிதாக எதுவும் சந்தையை ரிலையன்ஸ் உருவாக்குமா? ரிலையன்ஸின் தற்போதைய திட்டம் ஏற்கனவே நகரங்களில் உள்ள மையப்படுத்தப்பட்ட கடைகளை தனது கடையுடன் இணைப்பது ஆகும். அதாவது தேசிய முதலாளிகளை சிப்பந்திகளாக மாற்றப் போகிறான்.

இவையெல்லாம் யாரைப் பாதிக்கும்? பல கோடிகளில் தமிழகத்தில் அவன் கடை திறப்பது இல்லாத சந்தையை புதிதாக உருவாக்கி சாப்பிடவா? அல்லது தமிழகத்து மக்கள் வாங்கி தின்கும் அளவை அதிகரிக்கும் இணைத்திட்டம் எதுவும் வைத்துள்ளனா?

சில வழிகள்தான் சாத்தியம், ஒன்று ஏற்கனவே விவசாயிகளிடமிருந்து வாங்கி விற்க்கும் சில்லறை, மொத்த வியாபாரிகளை விரட்டி விட்டு சந்தையை பிடிப்பது, விவசாயிடமிருந்தே குறைந்த விலையில் வாங்கி விற்ப்பது, சந்தையில் விலையை ஏற்றி அதைவிட கொஞ்சம் விலை குறைத்து விற்று நுகர்வோனை சுரண்டுவது.

இவை அனைந்தையும் எனது அந்த கட்டுரையில் பேசியுள்ளேன். கட்டுரையில் ஏற்கனவே சொல்லிய விசயங்களையே மீண்டும் மீண்டும் பேசுவேன் என்று நிற்பது அராஜகமாக உள்ளது. படித்துவிட்டு அதில் முன் வைத்துள்ள் வாதஙக்ள் தவறு என்று நிறுவுங்கள்.

தரகர்களின் சுரண்டல் குறித்தும் கூட அந்த கட்டுரையில் எழுதியுள்ளேன். அநியாய கொள்ளையடித்த உலக பணக்காரர்களின் கூடாரம் கோயெம்பேடு(??) குறித்தும் கட்டுரையில் எழுதியுள்ளேன். நீங்களோ படித்த மாதிரியே தெரியவில்லை.

வியாபாரிகள் விவசாயிகளை சுரண்டுவதும், தேசிய முதலாளி, குட்டி முதலாளிகள் தொழிலாளி விவசாயியை சுரண்டுவதும் எமக்கும் தெரியும். ஆனால் இதனை சாக்கிட்டு இவர்கள் அனைவரையும் சுரண்டி வயிறு கொழுக்க வரும் தரகு ரிலையன்ஸ் கோஸ்டிகளை ஆதரிப்பதில் அடிமை சேவகம் தவிர்த்து வேறு ஒன்றும் தெரியவில்லை.

இதனையும் கூட குரங்கு அப்பம் கதையை வைத்து எழுதியுள்ளேன் அந்த கட்டுரையில், நீங்களோ படித்த மாதிரி தெரியவில்லை.

வியாபாரிகளின் திருட்டை வைத்து அம்பானி கும்பலின் பெருங் கொள்ளையை நியாயப்படுத்த முனையும் முயற்சி மிகவும் வக்கிரமானதாக இருக்கிறது.

விவசாயிக்கு நியாய விலை என்பதில் உள்ள மோசடி குறித்தும் எழுதியுள்ளேன். படித்துவிட்டு பேசுங்களேன். உங்களுக்கு ரொமப் கஸ்டமாக இருந்தால் இங்கு அந்த கட்டுரையை காப்பி பேஸ்ட் செய்யவா?

அசுரன்

said...

//You seem to forget one thing. All those who question your claims need
not be arguing in favor of Reliance. For some data is needed
even to put forth a hypothesis
or to arrive at some preliminary
conclusions. //


உலகம் முழுவதும் இது போன்ற மையப்படுத்தப்பட்ட கடைகள் எப்படி அண்ணாச்சி கடைகளை (உங்களது மொழியில் மாம் அன்ட் பாப் சாப்ஸ்) அழித்தன என்ற உண்மை குறித்து பருண்மையான பல கட்டுரைகள் புள்ளி விவரங்கள் காணக் கிடைக்கும் போது அவற்றை இங்கு அசுரன் தளத்தில் மட்டும் தேடிக் கொண்டு //For some data is needed
even to put forth a hypothesis// இப்படி வேறு சொல்கிறீர்கள் அனானி :-)), உங்களுக்கு என்னால் உதவ முடிந்தது எல்லாம் கூகுளை நோக்கி கை காட்டுவதுதான்.

நானும் நம்புகிறேன். நீங்கள் உண்மையிலேயே ரிலையன்ஸ்க்கு ஆதரவாக பேசவில்லை என்று. ஏனேனில் இதே போன்று ரிலையன்ஸ் ஆதர்வு கட்டுரைகளில் நீங்கள் கேள்வி எழுப்பவில்லையல்லவா :-))...

ரெட்டோ ரிக் ரெட்டொரிக் என்று ஆரம்பம் முதல் இதுவரை எனது எல்லா கட்டுரைகளிலும் சொல்லி வரும் ஆங்கில ஆனானி இது வரை ரெட்டோ ரிக்கை மட்டும் வைத்தே வாதம் செய்து வருகிறது. நான் வைத்த புள்ளி விவரங்களையோ தர்க்கங்களையோ தொட்டதேயில்லை. அவர் கட்டுரையின் இடையில் ஏதேனும் சந்து இருந்தால் தப்பிக்கலாமே என்று தேடி அலைகிறார் என்பது மட்டும்தான் புரிகிறது.

/Reliance says that there is enough space for everyone in the market.// இப்படி ரிலையன்ஸ் சொல்வதை கேள்வி முறையின்றி ஏற்றுக் கொள்ளும் ஆங்கில அனானி, அது எப்படி 1+1=3 ஆகும் என்று புள்ளிவிவர கணக்கை ரிலையன்ஸிடம் திருப்பிக் கேட்ப்பதில்லை.

ரிலையன்ஸ் பல கோடிகளில் முதலீடு போட்டு ஆரம்பிக்கும் கடைகள், அது போலவே பல பன்னாட்டு-த்ரகு நிறுவனங்கள் ஆரம்பிக்கு கடைகள் எல்லம் எப்படி "there is enough space for everyone in the market" கொடுக்கும் என்ற ரகசியத்தை அனானி விளக்க வேண்டும். உண்மையில் இவை சிறு வியாபாரிகளை விரட்டி விட்டு அந்த market spaceயே பிடிக்கின்றன. இதுதான் உலகம் முழுவதும் இது வரை ந்டந்துள்ளது.

ஒருவேளை அனானி இப்படி சொல்வார். ரிலையன்ஸின் அந்த கூற்றை இங்கு வைக்கிறேன் என்பதின் அர்த்தம் அதனை நான் ஏற்றுக் கொண்டேன் என்று அர்த்தமில்லை என்று. சரி, அப்படியெனில் ரிலையன்ஸின் அந்த கூற்றில் உங்களது சந்தேகம் என்ன என்பதையும் சேர்ந்த்து முன் வைத்தால் எனது பார்வையை உங்களுக்கு விளக்கிச் சொல்வதற்க்கு வசதியாக இருக்கும்.

சுலபமான சில உண்மைகளை பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள் மாட்டாராம் இந்த அனானி. உலகம் முழுவதும் இது போன்ற மையப்படுத்தப்பட்ட கடைகள் அண்ணாச்சி பாணி கடைகளை அழித்தே சந்தையை கைப்பற்றுகின்றன. ஆனால் இந்தியவில் மட்டும் அந்த உண்மைகளை பொருத்திப் பார்க்க மாட்டார் இந்த அனானி. அண்ணாச்சி கடைகளுக்கு பாதிப்பு இருக்கும் என்று தான் நம்ப வேண்டுமானால் இனிமேல் நடக்க இருக்கும் விசயம் குறித்து இப்பொழுதே புள்ளிவிவ்ரம் வேண்டும் என்பார். அதான் ஏற்கனவே அமெரிக்கா முதலான நாடுகளில் பாப் அண்ட் மாம் கடைகள் அழிந்தனவே என்று குறிப்பிடுவது அவர் காதில் விழாது.

எனது கூற்று வெறும் ஹைபோதீஸிஸ் கிடையாது, 40% வீழ்ச்சி என்ற புள்ளிவிவரம் வியாபாரிகள் தலைவர் ஒருவரின் கூற்றிலிருந்து மேற்கோள் காட்டியது என்பதை குறிப்பிட்டால் அதன் அர்த்தம் எனது ஒட்டு மொத்த கூற்றும் ஹைபோதிஸீஸ் என்பதல்ல. Dont rush to conclusion. Though I understand your eagerness to see a result favouring you, I am not in a position to encourage that rush ;-)) ரிலையன்ஸ் வாகையாறாக்களின் சந்தை வெறி எப்படி வியாபாரிகளை நுகர்வோரை, விவசாயிகளை பாதிக்கும் என்பதை இந்த 40% புள்ளிவிவ்ரத்தை நம்பி அந்த கட்டுரையில் முன் வைக்கவில்லை.

http://www.cbsnews.com/stories/2006/08/23/opinion/main1927201.shtml

//Those are the people who have been overcharging us, selling us stale bread and bad meat and wilted vegetables," explained civil-rights leader turned Wal-Mart shill Andrew Young, telling the Los Angeles Sentinel why black people shouldn't care if the superstore drives mom-and-pop retail firms out of business. "And they sold us out and moved to Florida. I think they've ripped off our communities enough. First it was Jews, then it was Koreans, and now it's Arabs. Very few black people own these stores."//

இந்த கட்டுரை சிறு வியாபாரிகளின் அழிவை நியாயப்படுத்தி எழுதப்பட்டது. சிறு வியாபாரம் வால்மார்ட்டால் அழிவுறாமலேயே இப்படி ஒரு கட்டுரை எழுதப்பட்டதா என்று அனானியே விளக்க வேண்டும்.

அசுரன்

said...

One can find any no. of articles that justify entry of Wal-mart
and other big chain stores in India.Despite Wal-Mart and so many other chain stores there are many
small shops and vendors in the USA.
There are chain stores like JC Penny which sell only one item
or related items.Wal-Mart also sells clothes, JC Penny also sells
clothes.Both survive and do well.
Not all americans buy their clothes and groceries
from Wal-Mart although it sells at very cheap prices. Because for a buyer price is not the only deciding factor. Wal-Mart did have a negative impact on many stores.
But what can happen India cannot be
extrapolated from what has happened
in the USA. That is why one has to be skpetical of the optimistic claims and pessimistic claims made
by both sides.In the USA
Wal-Mart is not in all states/cities. It is not in New York and I know that for sure.
So if a state government or local authority like Corporation of Madras wants to protect small shops and vendors it may be possible in India too.

said...

தோழரே
வணக்கம்.
ஒரு முக்கியமான விசயத்தை கூறவே இந்த கடிதம்.
விசயம் என்னவெனில்

நீங்கள் இது வரை எழுதிய கட்டுரைகளில் உங்களுக்கே
முழுமையான மண நிறைவை தருகிற கட்டுரைகளை,
(அவ்வாறு ஏதும் இல்லை என்று கூறி விடாதீர்கள்,ஓரளவாவதா இருக்காது)
குறைந்தது அய்ந்து கட்டுரைகளை உடனடியாக பிரிண்ட் அவுட்
எடுத்து புக முகவரிக்கு அனுப்பி வையுங்கள் ஆசிரியர் குழு
தோழர்கள் பர்க்க வேண்டுமாம்
மேலும் கூடுதலான
தகவல்களுக்கு கீழேயுள்ள புக எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களுடைய எழுத்துக்கள் பிளாக் வட்டரத்தோடு சுருங்கி விடக்கூடாது,
சுருங்கி விடாது.


புதிய கலாச்சாரம்
044- 2371 8706
99411 75876.

புரட்சிகர வாழ்த்துக்கள்
தோழமையுடன்
பாண்டியன்.

said...

//So if a state government or local authority like Corporation of Madras wants to protect small shops and vendors it may be possible in India too//
ஆக, ரிலையன்ஸ் வகையாறாக்காளால் அண்ணாச்சி கடைகள் பாதிக்கப்படும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இல்லை. ஆயினும் இந்த பாதிப்பை அரசாங்கத்தின் சில கட்டுப்பாடுகள் மூலம் மட்டுப்படுத்தலாம் என்கிறீர்கள்.

அப்படி செய்யும் வகையிலான முன்னுதாரணங்கள் கொண்ட அரசு அல்ல இது. இது வரை மகா கொடிய தவறுகள் செய்த தரகு பன்னாட்டு கம்பேனிகளுக்கு கூஜா தூக்குவதை மட்டுமே இந்த அரசு செய்து வந்துள்ள பொழுது என்ன அடிப்படையில் ரிலையன்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு மூலதனம் இந்திய மூலதனத்தின் மீது சில்லறை வணிகத்தின் மூலம் ஏற்ப்படுத்தும் தாக்குதலை மட்டுப்படுத்தும் என்று நம்புவது?

மேலும், அமெரிக்காவில் நிகழ்ந்தவை அனைத்தும் இங்கு நிகழ வேண்டும் என்று அவசியமில்லை என்ற உங்கள் கருத்து சரிதான். ஆனால் அதில் எனது நிலைப்பாடு என்பது அமெரிக்காவை விட இங்கு ரிலையன்ஸ் பாணி பன்னாட்டு மூலதன தாக்குதலின் விளைவு பல பல மடங்கு கேடு விளைவிப்பதாக இருக்கும் என்பதுதான். ஏனேனில் ரிலையன்ஸ் வகையாறாக்கள் வெறுமே சில்லறை வணிக சந்தை மேலாதிக்கம் மட்டும் செய்யப் போவதில்லை. அவர்கள் உற்பத்தியிலும்(விவசாயம்), கொள் முதலிலும் ஆதிக்கம் செலுத்த இருக்கிறார்கள், மேலும் உலக சந்தை அவர்கள் கையில். இந்திய உள்நாட்டு முதலாளித்துமோ இந்த தாக்குதலை ஈடுகொடுத்து நிற்கும் அளவு வலுவானது அல்ல. மேலும், இதனை இந்தியாவின் உணவு தன்னிறைவு என்ற பிரச்சனையுடனும், உணவு தானிய இறக்குமதி என்ற பிரச்சனையுடனும் சேர்த்து பார்க்க வேண்டும்(அதாவது, விவாசாயத்தின் சீரழிவு).

இப்பொழுது கேள்வி எதற்க்காக இந்திய சில்லறை வணிக அண்ணாச்சிகள் தியாகம் செய்ய வேண்டும் என்பதுதான். அதுவும் இந்தியாவின் சுயசார்பை அழிக்கும் ஒரு அடிமைத்தனமான பொருளாதார சுரணடலின் நலனுக்காக.// That is why one has to be skpetical of the optimistic claims and pessimistic claims made
by both sides.///

சரிதான், ஆயினும் சந்தேகத்தின் பலனை இந்திய தேசிய மூலதனத்திற்க்கு சாதகமாக கொடுக்க விரும்புகிறேன்(I Choose the lesser evil - National Capital). அதுதான் சரியாக இருக்க முடியும். ஏனேனில், பின்வரும் எனது கட்டுரை வரிகள் சந்தேகத்தின் பலனை ஏன் இந்திய சில்லறை வியாபாரத்திற்க்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றன.http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_25.html


//
இந்திய சந்தை முழுவதையும் தமது வசப்படுத்திக் கொள்வது என்பது அவர்களது திட்டத்தின் ஒரு பகுதி எனில், விவசாய சுயசார்பை அழித்தல், தனது சந்தைத் தேவைக்கான பின் நிலமாக இந்திய விவசாயத்தை மாற்றுதல், இதுதான் இவர்கள் திட்டத்தின் இன்னொரு பகுதி.

அன்று சுதந்திர போராட்டத்தில் தரம் குறைவான, விலை அதிகமான உள்நாட்டு பொருட்களை வாங்கச் சொல்லி, முரட்டு கதர் ஆடைகளை அணியச் சொல்லி அறைக் கூவிய போது எந்த முட்டாள் பொறுக்கியும் தரம், விலை என்று பேசிக் கொண்டிருக்கவில்லை.

அண்ணாச்சி கடையால் உனக்கு அப்படியென்னா நஸ்டம் வந்து விட்டது? இல்லை விவசாயிதான் என்றாவது அண்ணாச்சி கடையை தனது நஸ்டத்திற்க்கு காரணம் என்று எங்காவது சொல்லியிருக்கிறானா? இதோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விலை வாசி உயர்கிறதே இதுதானே பிரச்சனை? இதற்க்கு அண்ணாச்சியா காரணம்? தண்ணீரை தனியாருக்கு தாரை வார்த்து நகரத்து ஏழைகளை தாகத்தில் தவிக்க விடுகிறானே அதுதானே பிரச்சனை? கல்வியை தனியாருக்கு கைகழுவி சாதரணப் பட்டவர்களுக்கு கல்வி மறுக்கும் புதிய மனு நிதியல்லவோ பிரச்சனை? காப்புரிமைச் சட்டம் மூலம் மருந்து பொருள் விலையை ஏற்றி வெறி நாய்க் கடி மருந்து கூட கிடைக்காமல் தவிப்பதல்லவா பிரச்சனை? பொது மருத்துவமனைகளை கைவிட்டு தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதல்லவோ பிரச்சனை? விவசாயிக்ளை விவசாயத்தைவிட்டு விரட்டுவதல்லவா பிரச்சனை? விவசாயத்தை ஒழித்து இந்தியாவின் சுயசார்பை அழிப்பது அல்லவா பிரச்சனை? கோடிக்கணக்கில் பஞ்சம் பிழைக்க ஓடி வரும் கொத்து விவசாயியை நகரங்களில் அத்து கூலிக்கு ஒட்டச் சுரண்டுவதல்லவா பிரச்சனை? அரை வயிறு சாப்பிட்டு உயிர் வளர்த்து நானும் மனிதன் தான் என உருவத்தில் நம்ப வைக்கும் கோடிக்கணக்கான ஏழை இந்தியர்களின் வயிற்று கொதிப்பல்லவா பிரச்சனை?

எது உனது பிரச்சனை?

இந்தியாவில் யாராவது அண்ணாச்சி கடை சரியில்லை என்று போராடினார்களா? அல்லது இந்திய மக்கள் போராடிய விசயங்களுக்குத்தான் இந்த அரசு எதாவது செய்துள்ளதா? குறைந்த பட்சம் நாட்டின் மீது ஏதோ அதீத பாசம் உள்ளது போல நடிக்கும் அடிவருடிகளாவது இந்தியா மக்கள் இது வரை போராடிய அடிப்படை பிர்ச்சனைகள் குறித்து எதாவது எழுதியுள்ளார்களா? இது வரை?

இப்பொழுது மட்டும் என்ன விவசாயிகள் மீதும் நடுத்தர வர்க்கத்தின் மீதும் பாசம்? உனது பாசத்தின் பின்னால் ஒழிந்திருக்கும் உனது திட்டம் என்ன?
///


அசுரன்

said...

இந்தியா முன்னேறுது:

http://www.frontlineonnet.com/fl2406/stories/20070406002911100.htm

//Her loss and her story are multiplied several times over in the village. Chandrika had to climb trees and pick leaves barely three days after she gave birth to her daughter. The baby died before she could be named and was barely a month old. She had earlier lost her son Monu. Five children died at Belwa between May and September last year. Many more may have died but for the intervention of the People's Vigilance Committee for Human Rights (PVCHR), a Varanasi-based non-governmental organisation (NGO). It has documented 174 hunger-related deaths in eastern Uttar Pradesh; some of them committed suicide, while others died of starvation. Two years ago, 18 children of the Ghasia tribe died at Raup village in neighbouring Sonebhadra district. The residents have erected a `martyrs' memorial' and taken a pledge to prevent starvation deaths. //

ஒரு அடிவருடி இன்னும் சில வருஷங்களில் இந்தியா முன்னேறி அபரிமிதமாக வாங்கிக்(நுகரும்) குவிக்கும் என்று ஆரூடம் தெரிவித்து பதிவு எழுதியிருந்தது, அந்த லிஸ்டில் இந்த வீணாப் போன விவசாய பெருங்குடிகளும், கிராமத்து உழைப்பாளர்களும் இருக்கிறார்களா என்பது அந்த அம்பானிக்குத்தான் வெளிச்சம்.

அசுரன்

said...

We live in a free,democratic nation, and not in a communist country. Reliance has every legal and moral right to set up its stores. and the people who buy from there have similar rights. It
is a basic right and is guranted in the constitution.

when tractors were introduced first in India, there was opposition from the farm labourers,
as it might reduce their employment. but adustments happened and now it is impossible to cultivate so much without tractors.

You are ignorant of basic economics, even though you are rich in ideology.

Mass prodcution and consumption will drive down pirces and benefit everyone in the long run. When cell
phones were introduced a deacde ago, it was considered a rich man's toy. now it is so affordable and many lower middle class and poor (who are self-employed and need the incomming calls) find it
very useful and cheap. Without the MNCs of Nokia, Microsoft, etc this
would not have been possible and we
would be at the mercy of BSNL and
bureacrat-politician nexus which ruled the roost in the name of 'socialism' until 1991..

Pls ponder why the Chinese are libralising faster than us and have opened up their economy, without any external compulsions like IMF or WTO. They are a communist nation but have learnt the lesson about the limitations and distortions of state planning.

I suggest that you emigrate to N.Korea, which is still a 'communist' nation. You may find it a paradise in earth and will be
allowed in easily..

sorry for getting personal, but the
reality about N.Korea is too horrible.

Anbudan
K.R.Athiyaman
Chennai - 96
athiyaman.blogspot.com

said...

".R. Soundararajan, the association's president, said that sales in the Koyambedu Market had fallen by as much as 50 per cent. The traders would urge the State government to bar Reliance Retail from.... "

I challage them to prove this, They are lying and can put Goebels to a shame. Anyway the public doesn't care for the agitation of
vested intersts masquerading as
"proleatriat's freinds, etc"

K.R.Athiyaman

said...

//I challage them to prove this, They are lying and can put Goebels to a shame. Anyway the public doesn't care for the agitation of
vested intersts masquerading as
"proleatriat's freinds, etc"//

அடேங்கப்பா, பாசியும், மன்மோகனும் இன்னபிற பொருளாதார புடுங்கிகளும் சொன்ன பொய்களையெல்லாம் கண்டுபிடித்த அதியமானா இது.... என்னவொரு அரச்சீற்றம்.... :-)

இந்த 40% புள்ளிவிவரம் குறித்து ஏற்கனவே மேலே ஒருத்தரிடம் விவாதம் செய்துள்ளது அதையும் பார்க்கவும்.

கோயபல்ஸ்களை கண்ட போதெல்லாம் கொதித்தெலும் வள்ளல் அதியமான் அவர்களே பாதிக்கப்பட்ட போதெல்லாம் அமைதி காத்த சாதாரண உழைக்கும் மக்களும், வியாபாரிகளும் இன்றூ போர்க்கோலம் பூண்டுள்ளதன் காரணம் அவர்கள் பாதிக்கப்பட்டதுதான். எல்லாவற்றையும் புள்ளிவிவரத்தில் தேடும் உங்களைப் போன்றவர்கள் புள்ளிவிவ்ரம் பார்த்து இந்திய ஒளிர்கீறது என்று சொன்ன கதை இன்று வரை சிரிப்பாய் சிரிக்கிறது.

இதோ ராஞ்சியில் மூன்று கடைகள் உடைப்பு, புதுச்சேரியில் SEZக்கு எதிராக அரசு அலுவலகத்தை உடைத்தெறிந்த மக்கள் மினி நந்திகிராமமாக மினுக்குகிறது, பாஸ்கோ இரும்பு கொலைக்காரர்களின் சிப்பந்திகளை கடத்தி வைத்து பேச்சுவார்த்தை நடத்திய ஒரிஸ்ஸா கிராமத்தவர்கள்.... நாடெங்கும் மறுகாலனிய எதிர்ப்பலை வீசுகிறது. உங்களை போன்ற ஏஜெண்டுகள் ஏதாவது சல்ஜாப்புகள் சொல்லி மனதை தேற்றிக் கொள்கிறீர்கள்.

வட கொரியாவை கம்யுனிஸ்டு நாடு என்று கூறினால் அப்பூறம் ஹிட்லரையும் கம்யுனிஸ்டு என்றுதான் சொல்ல வேண்டும், அவனது கட்சியின் பெயர் சோசலிஸ்டு கட்சி. பொருளாதாரம் குறித்து அதிக அறிவிருப்பதாக விளம்பரம் செய்த நீங்கள் கம்யுனிச நாட்டை எப்படி அடையாளம் காண்பது என்பது குறித்தான் உங்களது அறியாமையை விள்ம்பரம் செய்ததன் மூலம் உங்களது பொருளாதார அறிவையும் விளம்பரம் செய்துள்ளீர்கள். நல்லது....

உங்களது தகவலுக்கு, செல்பேசி முதலானவை விலை குறைவது உள்ளிட்ட ரிலையன்ஸ்க்கு புனித வட்டம் கட்டி முன் வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தையும் பின்வரும் எனது கட்டுரையில் எழுதியுள்ளேன். அந்த கட்டுரையில் விவாதம் செய்தால் டவுசர் கிழிந்துவிடும் என்று தெரிந்தே இந்த பதிவில் விவாதம் செய்ய துணிந்தார் ஒரு ஆங்கில் அனானி. இதோ அவர் நினைத்தது போலவே நீங்களும் ஏற்கனவே கட்டுரையில் உடைக்கப்பட்ட அதே வாதங்களை இங்கு முன் வைக்கிறீர்கள்.

சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிடும் முட்டாள்தன்ம், சீனாவிலும் கூட உலகமயத்தின் தோல்விகள் இவை குறித்தும் கட்டுரை எழுதியுள்ளேன் படிக்கவும், பிறகு பேசவும். ஒவ்வொரு முறையும் ஒரே விசயத்தை ஏகாதிபத்தியவாதிகளுக்கு Spoon feeding செய்ய முடியாது.

ரிலையன்ஸ் குறித்த கட்டுரை: http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_25.html

சீனா குறித்து வரும் கட்டுரை: http://poar-parai.blogspot.com/2007/04/sez.html

அசுரன்

Related Posts with Thumbnails