TerrorisminFocus

Wednesday, May 16, 2007

நாலாவது தூண்களும், நாறும் போலி ஜனநாயகமும்!!

நாலாவது தூண்

தினத் தந்தி தலைப்புச் செய்தி:
பிறந்தார் பேரன்;
தாத்தா ஆனார் ரஜினிகாந்த்!

தலைப்புச் செய்தியே இப்படி என்றால்,
உள்ளே என்ன இருக்கும்?

சிறப்புச் செய்தி:
அதிசயம்,
ஆனால் உண்மை!

பிறந்தார் பேரன்;
தாத்தா ஆனார் ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
லதா ரஜினிகாந்த் பாட்டி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
தனுஷ் அப்பா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
ஐஸ்வர்யா தனுஷ் அம்மா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
ஐஸ்வர்யாவின் தங்கை சித்தி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
தனுஷின் அண்ணன் பெரியப்பா ஆனார்!

உங்களால் நம்ப முடிகிறதா,
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜா கூட தாத்தா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜா பொண்டாட்டி கூட பாட்டி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜாவின் ஒன்று விட்ட சித்தப்பா....

பிற முக்கியமில்லாத செய்திகள்:
டெங்கு காய்ச்சல் பரவுகிறது! அரசு மெத்தனம்!
கடன் தொல்லையால் விஷம் குடித்த விவசாயி சாவு!
--இன்னும் சில இது போன்ற சில வழக்கமான,
ஆச்சரியப்பட வேண்டாத செய்திகள்--------

வாங்கிப் படியுங்கள் தினத் தந்தி!
வாழ்க இந்தியா!
வளர்க நாலாவது தூண்!

நன்றி அரசு பால்ராஜ்

11 பின்னூட்டங்கள்:

said...

அசுரன் வெயிலை தணிச்சுக்கிட்டா மாதிரி தெரியுது!

said...

அப்படியா?... இல்லை சந்திப்பு அவர்களே... இதோ உங்களது நந்திகிராம் புளூகுகள் குறித்து கூட தரவுகளுடன் கட்டுரை தாயாராக உள்ளது.

மார்க்ஸியத்தை குப்பை தொட்டியில் கடாசிவிட்டு வெட்கமின்றி கம்யுனிஸ்டு என்று கூறும் நேர்மையின்மையின் பின்னால் உள்ள வர்க்கநலன்களை அம்பலப்படுத்தும் அந்த கட்டுரை எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு பிரசூரமாகும்.

நந்திகிராம் குறித்து கட்டுரை எழுத தெரிந்த நீங்கள் நேர்மையானவராக இருந்திருப்பின் அது குறித்து அரசு பால்ராஜ் முன் வைத்த கேள்விகளுக்கோ அல்லது நான் உள்பட வேறு சில தோழர்கள் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கலாம். அதை விடுத்து மூன்றாம் தர ஜூனியர் விகடன் பாணி எழுத்தையே மீண்டும் கடை பரப்பி CPM -ன் பாரம்பரியத்தை நிருபித்துள்ளீர்கள்.

வெயில் தணியாது......

ஒரு விசயம் தெரியுமா? மதுரைக்கு அந்த பக்கம் கரிசல் மண்ணில் ஒரு சொலவடை புழகத்தில் உண்டு, "கெட்டது எவ்வளவு நேரம் நடந்தாலும் சமாளிச்சுரலாம். ஒரேயொரு சின்ன நல்லது கொஞ்சம் நேரமே இருந்தாலும் அதை பொறுத்துக் கொள்வது கடினம்" இங்கு கெட்டது என்று சூரியனின் கொடும் வெப்பத்தையும், நல்லது என்று துளி துளியாய் விழுந்து மிரட்டும் மழையையும் சொல்வார்கள். பொறுத்துக் கொள்ள முடியாது என்பது நேர்மறை, எதிர்மறை இரண்டு அர்த்ததிலும் வருகிறது. அது ஆட்களை பொறுத்தது என்ற அர்த்ததில்.

புரட்சிகர எழுத்துக்கள் மழை போன்றது. அது மக்களுக்கு நல்ல அம்சத்தில் பொறுக்க முடியாத நிலையை ஏற்படுத்தி செயல்பட தூண்டுகிறது, புரோக்கர்களுக்கு எதிர்மறையில் கோடுமையையும் தரும் இயல்புடையது.

உங்களுக்கு எப்படி?

கருணாநிதியின் இந்த ஆட்சியை புகழ்ந்த தங்களது வல்லன்மை இருக்கீற்தே... அட அட அட.... இதை விட ஒரு படு கேவலமான பிழைப்புவாத துரோகியை நான் பார்த்ததேயில்லை.

அசுரன்

said...

good satire..

Wishes to Arasu Baalraj and thanks to Asuran for re-publishing..

RajaVanaj

Sorry no tamil fonts here..

said...

கருணாநிதியின் இந்த ஆட்சியை புகழ்ந்த தங்களது வல்லன்மை இருக்கீற்தே... அட அட அட....

வஞ்சப் புகழ்ச்சியணி பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா!


மார்க்ஸியத்தை குப்பை தொட்டியில் கடாசிவிட்டு வெட்கமின்றி கம்யுனிஸ்டு என்று கூறும் நேர்மையின்மையின் பின்னால் உள்ள வர்க்கநலன்களை அம்பலப்படுத்தும் அந்த கட்டுரை எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு பிரசூரமாகும்.


எதைப் பற்றியும் கட்டுரை எழுத உங்களுக்கு உரிமையுண்டு; தாராளமாக எழுதலாம். அதே சமயம் மேற்குவங்கத்தில் தனிமைப்பட்டு விரக்தியில் இருக்கும் மமதாவும், நக்சலிசவாதிகளும் வரலாற்று குப்பைக் கூடைக்கு செல்லும் தூரம் அதிகமில்லை. வர்க்க அரசியல் என்கின்ற பெயரில் உழைக்கும் மக்களுக்கு எதிரான அரசியல் நடத்தும் ஒரே பிழைப்புவாதிகள் - சாகசவாதிகள்தான் நக்சலிசவாதிகள். நக்சலிசம் வரலாற்றில் ஏற்கனவே பல கூறுகளாக சிதறுண்டு போயுள்ளது அதன் தத்துவார்த்த - நடைமுறை தந்திரங்களின் தோல்வியைதான் பறைசாற்றுகிறது. உழைக்கும் வர்க்கத்தை ஒன்றினைப்பதற்கு மாறாக, அவர்களை மேலும் எப்படி பிளவுபடுத்துவது என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படும் சீர்குலைவு வாதத்தின் குரலே நக்சலிசம்.

மேலும், மார்க்சியத்தை நாங்கள் குப்பை கூடையில் கடாசவும் இல்லை. அப்படி நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் உங்களிடம் மிஞ்சுகிறது. இதுவரை ம.க.இ.க. வகையறாக்கள் தங்களது சொந்த கட்சியை முன்னிறுத்தி ஏதாவது போராட்டத்தை நடத்தியதுண்டா. பேசுவது மார்க்சியம் - செய்வது சீர்குலைவுவாதம்... இதுதானே உங்களது அடிப்படை கொள்கை!

said...

அரசு பால்ராஜ் -னுடைய கவிதை அருமை.

நாலாவது தூண் பற்றியும், மரியாதைக்குரிய சந்திப்பின் பின்னூட்டத்தையும் பார்த்ததும் ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது.

வெகுவிரைவில் தீக்கதிர் கோயமுத்தூரில் தங்களுடைய பதிப்பை புதிதாக தொடங்க இருக்கிறார்களாம்.

சந்தர்ப்பவாதம் மென்மேலும் தழைத்து வளர்கிறது.

ஒரு வேண்டுகோள் :

நீங்கள் நிறைய ஒரே நேரத்தில் நிறைய அம்பலப்படுத்துகிறீர்கள். சந்திப்பு பிறகு, வராமல் போய்விடப்போகிறார்.

said...

மறுபதிப்பு செய்தமைக்கு நன்றி தோழர் அசுரன்.

சந்திப்புக்கு இது தேவையில்லாத வேலை. நந்திகிராமிற்குப் பிறகு ஆனானப்பட்ட பொலிட்பீரோ தலைகளே நாம் உண்டு, நமது வேலையுண்டு என சர்வத்தையும் பொத்திக் கொண்டு, கயவாளித்தனமாக காரிய மவுனம் சாதிக்கும் வேளையில், சந்திப்பு மட்டும் துள்ளிக் கொண்டு வெயிலோடு விளையாடலாமா? எனக்கே பாவமா இருக்கு போங்க!

இருந்தாலும் சந்திப்பினுடைய இந்த ஒரே மனதைரியத்தை பாராட்டும் விதமாக நந்திகிராமின் ஆவிகள் எனும் கட்டுரையை நான் அவருக்கு பரிசளிக்கிறேன்.

said...

இவர்கள் சட்டமன்றத்தில் கும்மியடிப்பதற்கு என்ன தத்துவ அடிப்படை என்று முன்பொருமுறை கேட்ட பொழுது வாய் திறந்து பதில் சொல்ல மறுத்துவிட்டார். சல்வாஜுதத்தில் ஆரம்பித்து இந்துத்துவ ஆதரவு நடவடிக்கைகள், கேரள அரசியல் யாகங்கள், தான் ஒரு பார்ப்ப்னன் என்று திமிருடன் சொன்ன மார்க்ஸிஸ்டுகள் என்று இவர்களின் மார்க்ஸியம் சார்ந்த நடவடிக்கைகள் நாறி மூச்சடைக்கின்றன. எதுவுமே மார்க்ஸியம் என்பதற்க்கு கிட்டே கூட வரத் தகுதியற்ற அப்பட்டமான பிழைப்புவாத மோசடி துரோக நடவடிக்கைகள்.

இதில் நந்திகிராமத்தில் தரகு ஏகாதிபத்திய கும்பலுக்கு கொட்டை தாங்குவதன் தத்துவ அடிபப்டை என்ன? இந்தியாவில் அன்னிய மூலதனம் நுழைவதை அனுமதிப்பதன் தத்துவ அடிபப்டை என்ன என்று கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதிலில்லை.

ஆனாலும் இவர்கள் மார்க்ஸியத்தை பெயரில் மட்டும் தாங்கும் போலிகள் இல்லை என்று இவர் வெட்கமின்றி சொல்லுவார். அவருக்கே ஒரு ஜாய்ஸ் கொடுப்போம் எந்த இடங்களில்தான் மார்க்ஸியத்தை நீங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள் என்று சொல்லுங்கள். குறிப்பாக அம்பலப்படுத்தி பெசவாவது எமக்கு ஏதுவாகும்.

இதையெல்லாம் கேட்டால் பழைய குருடி கதவை திறடி என்பது போல மீண்டும் 1970 வருட புரளிகளுக்கு பயணமாகிறார் சந்திப்பு.

அவரது இயலாமையை நினைத்து பரிதாபமாக இருக்கீறது. ஆயினும் பாசிஸ்டுகளின் பிரதிநிதிகளுக்கு பரிதாபம் காட்டுவதை முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை, என்று உள்மனம் எச்சரிக்கிறது.

இதோ நந்திகிராம பிரச்சனையில் நக்சல்பாரி அமைப்புகள் தொடர்பில்லை என்று NDTVக்கு நகசல்பாரி தலைவர் ஒருவர் பேட்டி கொடுக்கிறார். இன்னும் சொன்னால் நந்திகிராமம் மார்க்ஸிஸ்டுகளின் கோட்டை அங்கு எப்படி மம்தாவும் நக்சல்பாரிகளும் கொடி கட்டுகிறார்கள் என்ற விந்தையை சந்திப்பு விளக்க மாட்டார்.

மாவொயிஸ்டு தலைவர் என்ன சொல்கீறார்: "எங்களுக்கும் நந்திகிராமத்தில் மக்களுடன் இணைந்து போராட ஆசைதான் ஆயினும், அங்கு எங்களுக்கு அமைப்பு இல்லை எனவே போராடவில்லை. ந்ந்திகிராம மக்கள் உபயோகப்படுத்தும் ஆயுதங்களை நாங்கள் விட்டொழித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எங்களுடையது மிக நவீனமான இன்றைய ஆயுதங்கள். நந்திகிராம மக்களுக்கு வாழ்த்துக்கள்" என்று சொல்கிறார்.

இது போல இன்னும் இன்னும் இன்னும் ஆயிரம் உதாரணங்கள் பல இடங்களீலிருந்தும் மக்கள்ரங்கில் அம்பலப்பட்டுப்போயுள்ளன. ஆயினும் நம்ம வர்க்க போராளி (தரகு வர்க்க போராளி) சந்திப்பு மீசையில் மண் ஒட்டாத குறையாக புலம்புகீறார். பாவம்.....

நந்திகிராமத்தை ஆதரித்தால் அது மம்தாவை ஆதரிப்பது என்று புதிய திரிபுவாதம் பேசி தமது மக்கள் விரோத அரசியல் நிலைப்பாட்டை வெட்கமின்றி கடை பரப்புகிறார் சந்திப்பு. அது மார்க்ஸிஸ்டு கட்சியில் குறிப்பிடத்தகுந்த காலம் பணி புரிந்தால் ஏற்ப்பட்ட சரும் வியாதியின் விளைவு(தோல் தடித்து போவது என்ற சரும் வியாதி - எத்தனை முறை அவமானப்படுத்தினாலும் இழித்துக் கொண்டே ஒரே பொய்யை திரும்ப திரும்ப பேசுவார்கள் - இதுவும் கூட பாசிஸ்டுகளின் ஒரு முக்கிய பண்பாடு).

இதோ இவர் கலைஞர் ஆட்சியை வஞ்சப்புகழ்ச்சி செய்து அழகு கீழே:

///கலைஞரின் ஓராண்டு ஆட்சியில் இரண்டு ஏக்கர் நில விநியோகம், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ரேஷன் கடையில் எண்ணெய், பருப்பு விற்பனை, கூட்டுறவு கடன் ரத்து போன்ற நல்ல திட்டங்களின் மூலம் மக்களின் நல்லாதரவை பெற்றுள்ள அரசிற்கு இந்த சம்பவங்கள் ஒரு கரும்புள்ளியாக அமைந்து விடக்கூடாது என்பது ஜனநாயக விரும்பிகளின் நல்லெண்ணமாக இருக்கிறது.//

இதை வஞ்சப் புகழ்ச்சி என்று யாரை ஏமாற்றுவதற்க்காகச் சொல்கிறார்.

ஜனநாயக சக்திகள் என்று யாரை சொல்கிறார்? இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகமில்லை என்று கூறி அதனாலேயே சட்டமன்ற போலி அரசமைப்பை நியாயப்படுத்திய பாரம்பரிய பாசிஸ்டு பிரதிநிதி எப்படி ஜனநாயகம் குறித்து பேசுகீறது எனில் அது அப்படித்தான். பாசிசம் தன்னை பாசிசம் என்று அறிமுகபடுத்திக் கொள்வதில் இன்றைய நிலைமையில் நிறைய சிக்கல் உள்ளது.

இதே சந்திப்பு நாள் தோறும் மக்கள் மீது தரகு தாத்தா கலைஞர் ஏவிவிடும் பொருளாதார தாக்குதல்கள் குறித்து எழுதுவாரா? எழுதுவார் அதுவும் இதே போல யாரையாவது ஏமாற்றும் நோக்கத்துடன் பூசி மொழுகி, வஞ்சப்புகழ்ச்சி அணிகளின் தொகுப்பாக இருக்கும். இது தேர்தலுக்கு தேர்தல் தரகு தாத்தாவையும், பார்ப்ப்னிய அம்மாவையும் மாற்றி மாற்றி மக்களிடம் அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்த மானங்கெட்ட பாரம்பரியத்தின் விளைவு. "அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் - அம்மாவின் ஆசி பெற்ற சின்னம்".


உண்மைதான் பார்ப்ப்னிய அம்மாக்களின், தரகு வர்க்க மாமா/தாத்தாக்களின் ஆசி பெற்ற சின்னம் 'அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்".

மார்க்ஸியம் பேசாமலேயே மார்க்ஸியம் பேசிய சுய திருப்தி வேண்டுமா?

மார்க்ஸியம் பேசுவதாக சொல்லிக் கொண்டே மக்கள் விரோதம் செய்யும் நெஞ்சுத் திமிர் வேண்டுமா?

மார்கியத்தின் பெயரிலேயே சீரழிவு வேலை செய்யும் திறமை வேண்டுமா?

இணையுங்கள் டாடாவின் வர்க்க தோழன் CPM., India *

*Condition apply - இது ஒரு போலி கம்யுனிஸ்டு கட்சி.

எமக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.

அசுரன்

said...

இந்தியாவில் பிற ஜனநாயக சக்திகள் கூட இன்று உலகமயத்தை புரிந்து கொண்டு நாடு அடிமையாகிறது என்று எச்சரித்து வரும் பொழுது இந்த பாசிஸ்டுகள் நேரடியான ஏகாதிபத்திய சேவை செய்வதையும், உலகமயத்தை ஆதரிப்பதையும் அதனை மார்க்ஸியம் என்று திரிப்பதையும் விமர்சிக்க இனிமேல்தான் ஒரு புதிய வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.

இதோ இன்னும் ஒரிரண்டு வருடத்தில் உலகமயம் என்பதே மார்க்ஸியம்தான், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உறுதிப்படுத்தும் காட்ஸ் ஒப்பந்தத்தின் நாலாவது mode உயிருள்ள மனிதனின் சுதந்திர இயக்கம் (free movement of Natural person) வாழ்க என்று சந்திப்பு முதலானவர்கள் கட்டுரை எழுதுவார்கள் என்பதை என்னால் உறுதிபட சொல்ல முடியும்.

மேற்கு வங்கத்தை பார் என்று நேற்று வரை சந்திப்பு கோஸ்டிகள் சொல்லிய பொழுது அப்பாவி உழைக்கும் மக்கள் அவர்கள் நம்மைப் பார்த்துதான் சொல்கிறார்கள் போலும் என்று ஏமாந்தான். நாமோ எச்சரித்தோம், அது ஒரு போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டு கட்சி என்று. இன்று அதன் அர்த்தம் வெளிப்படையாக தெரிகிற்து - இத்ர மாநிலத்து த்ரகு வர்க்க அர்சியல் தலைவர்களே ஏகாதிபத்திய சேவை செய்வது எப்படி என்பதை மே.வா பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் அன்றைய அந்த முழகத்தின் உண்மை அர்த்தம் என்று.

ஏன் உங்களை நாங்கள் மார்க்ஸிஸ்டு என்று அழைக்க வேண்டும்? உங்களுக்கு காங்கிரஸு, பாஜகாவிற்க்கு இடையே என்ன சித்தாந்த வேறுபாடு உள்ளது? என்று கேட்டால் பதிலிருக்காது.

பார்ப்ப்னியம், மறுகாலனியம் இவற்றை நடைமுறைப்படுத்தும் செயல் தந்திரத்தில்தான் இவர்களிடையே வேறுபாடு.

காங்கிரஸ் - பார்ப்ப்னியத்தை கொஞ்சம் தீவிரமில்லாமலும், மறுகாலனியத்தை அதிதீவிரமாகவும் நடைமூறைப்படுத்தும் கட்சி.

பாஜக - பார்ப்ப்னியத்தை தீவிரமாகவும், உலகமயத்தை கொஞ்சம் தீவிரமில்லாமலும் நடைமுறைப்படுத்தும் கட்சி

CPM - பார்ப்ப்னியத்தை கொஞ்சம் தீவிரமில்லாமலும், மறுகாலனியத்தை அதி அதி தீவிரமாகவும் கிஞ்சித்தும் கூட இருக்கின்ற போலி ஜனநாயக ந்டைமுறைகள் கூட இன்றி நடைமுறைப்படுத்தும் கட்சி.

இதில் எங்கு மார்க்ஸீயம் வந்தது என்ற ரகசியத்தை சந்திப்பு சொல்வார் என்றூ எதிர்பார்த்தால் நாம் முட்டாள்கள். ஏனேனில் இப்படி கேள்விகள் கேட்பதும் சிந்திப்பதும் சந்திப்பின் டிக்ஸனரிப்படி தீவிரவாதம், சீர்குலைவுவாதம், நகசலிசம் - மாறாக இவர்கள் தலைமை நடைமுறைப்படுத்தும் பார்ப்ப்னிய, ஏகாதிபத்திய செய்லபாடுகளுக்கு கேள்வி முறையின் பரெண்ட்லைன் பத்திரிக்கை போல சிங்கியடித்தால் அது புரட்சி.

ஏன் இதே மேவாவின் அறிவுஜீவிகள் முதல் நேற்றைய CPM ஆதரவாளர்கள் முதல், CPI வரை அனைத்து கட்சிகளும் CPMயை விலாசி எடுக்கீறார்கள்? பகிஸ்கரிக்கிறார்கள்? விருதுகளை திருப்பி கொடுத்துள்ளனர்? அவர்களெல்லாம் என்ன இரவோடிரவாக நகசல்பாரி அமைப்புகளீலும், மம்தா கட்சியிலும் உறுப்பினர் அட்டை வாங்கி சேர்ந்துவிட்டனரா?

அல்லது சிலரை போல முதுகெலும்பின்றி CPM ன் அத்தனை அயோக்கியத்தனங்களையும் சப்பைக் கட்டு கட்டும் சாக்கடை வேலை செய்யச் சொல்கிறாரா சந்திப்பு?

சுயமரியாதை..... அது பிழைப்புவாத ஊசாலாட்ட சித்தாந்தக்காரர்களின் அகராதியில் காணக் கிடைக்காத குதிரைக் கொம்பு.....

உழைக்கும் மக்களின் ஒரே ஒரு சொத்து.

அசுரன்

said...

//இருந்தாலும் சந்திப்பினுடைய இந்த ஒரே மனதைரியத்தை பாராட்டும் விதமாக நந்திகிராமின் ஆவிகள் எனும் கட்டுரையை நான் அவருக்கு பரிசளிக்கிறேன்.//

சந்திப்பு சார்,

நீங்க திரும்ப வந்து ஒரு தரம் வாயைக் கொடுத்து விட்டுப் போங்களேன்.. எங்களுக்கு அசுரனும் அரசு பால்ராஜும் நிறைய தகவல்களைத் தர அதுவே கொஞ்சம் தூண்டுதலாக இருக்கும் ;)

//மார்க்ஸிஸ்டு கட்சியில் குறிப்பிடத்தகுந்த காலம் பணி புரிந்தால் ஏற்ப்பட்ட சரும் வியாதியின் விளைவு(தோல் தடித்து போவது என்ற சரும் வியாதி - எத்தனை முறை அவமானப்படுத்தினாலும் இழித்துக் கொண்டே ஒரே பொய்யை திரும்ப திரும்ப பேசுவார்கள் - இதுவும் கூட பாசிஸ்டுகளின் ஒரு முக்கிய பண்பாடு).
//

அதானா காரணம்?? ஆனாலும் தோல் தடிப்பு கொஞ்சம் அதிகமாத்தான் ஆயிட்டுது போல இருக்கு..

said...

Mr சந்திப்பு இதோ ரோசவசந்தின் வலைப்பூவிலிருந்து இந்த பதிவு பதில் சொல்லுங்களேன்.

http://rozavasanth.blogspot.com/2007/04/3_13.html

பாலியியல் வக்கிரத்தையும், கழிசடை ரவுடித்தனத்தையும் தமது பாரம்பரியமாகக் கொண்ட CPM கட்சியில் இன்னும் மான ரோசமின்றி நீடிக்க உங்களுக்கு வெட்கமாயில்லை..... தூ.......

இதில் மார்க்ஸியம் என்று அடிக்கொருதரம் சொல்லி மார்க்ஸை அவரது கல்லறையிலும் துன்பம் செய்கிறார்கள் திரிபுவாதிகள்.

said...

//ரஷ்யாவிலும், கியூபாவிலும் புரட்சி பண்ணியதால்தான் அங்கு விடிவு பிறந்தது. அகிம்சையை காங்கிரஸ்காரர்கள் கடைபிடிக்கிறார்களோ இல்லையோ ஆனால் இந்த So Called கம்யூனிஸ்டுகள் கடைபிடிக்கிறார்கள்.//

போலி கம்யுனிஸ்டு சந்திப்பு இது வரை தான் ஏன் ஒரு கம்யுனிஸ்டு என்பதற்க்கான் காரணத்தை சொல்லவில்லை. மாறாக ஏகாதிபத்திய, தரகு கம்பேனிகளுக்கு கூஜா தூக்குவதை மட்டும் செம்மையாக செய்து வருகிறார்கள்.

ஆனால் பாமரன் கம்யுனிஸ் விரோதி என்று வழக்கம் போல தாம் சொல்லும் சில பத்து பொய்களில் ஒன்றாக ஒரு பொய்யை இங்கு கடை பரப்பியுள்ளார் சந்திப்பு,

உண்மையில் பாமரன் ஒரு போலி கம்யுனிஸ்டுகளீன் விரோதி என்று எழுதியிருக்க வேண்டும்... பொய்களையே எழுதிப் பழகிய சந்திப்பின் பேனா போலியை மறந்து விட்டது. இதோ மேலேயுள்ள வரிகள் பாமரன் சந்திப்பு உள்ளிட்ட பாசிஸ்டுகளின் போலி கம்யுனிஸம், போலி அஹிமசாவதத்தை குறிப்பிட்டே சொல்கிறார்(இழிச்சவாய தொழிலாளரும், விவசாயிகளுக்கும் அஹிமசை போதிக்கும் இந்த துரோகிகள் டாடாவுக்கும், அம்பானிக்கு ஆயுதம் ஏந்த பயிற்சி கொடுக்கிறார்கள்).

இதில் நல்லவன் போல அறச் சீற்றம் வேறு... தூ... மானங்கெட்ட பிழைப்பு.....

அசுரன்

Related Posts with Thumbnails