TerrorisminFocus

Friday, November 17, 2006

அஹிம்ஸை - ஒரு அபாயகரமான அதி பயங்கர வன்முறையே!

காந்தி குறித்து சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், நண்பர் மா.சி க்கும் கடுமையானதொரு விவாதம் நடந்தது. அது மிக நீண்டதொரு விவாதமாகிவிட்டபடியால் தொடர்ச்சியை தனிப் பதிவாக இடச் சொல்லி தோழி பொன்ஸ் சுட்டிக் காட்டினார். இடையில் வேறு சில உடனடி விவாதங்கள் வந்து இடைஞ்சல் செய்ததால் இந்த காந்தி விவாதத்தை சிறிது தள்ளிப் போடுவது என்று நானே அராஜகமாக முடிவெடுத்தேன். இப்பொழுது சூழல் சிறிது கெடுபிடியாக இல்லாமல் இருப்பதால் அந்த விவாதத்தை திரும்ப தொடங்கலாம் என்று ஒரு எண்ணம். மிகப் பெரிய விவாதமாகி விட்டபடியால் அதன் மையமான ஒரு அம்சத்தை இங்கு முன்வைத்து மீண்டும் விவாதத்தை தொடங்குகிறேன்.

************
(இந்த பகுதியை வாசிக்க விரும்பாதவர்கள் - நேராக, இந்த பதிவில் மாசிக்கான முதல் கேள்வியை சென்றடையலாம்).

அதற்க்கு முன்பு மா.சியின் நிலைப்பாடுகளாக சில விசயங்கள்:(இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் மா.சி தெரியப்படுத்தலாம்).

#1) பொதுவுடைமை சமுதாயம் தான் மா.சியின் தீர்வும் கூட.
#2) பொதுவுடைமை சமுதாயத்தை எந்த வரலாற்றுக் கட்டத்திலும் நடைமுறைப்படுத்தலாம் - மா.சி.
#3) பொதுவுடைமை சமுதாயம் என்பது மா.சியின் புரிதலில் - 'திறைமைக்கேற்ற ஊதியம், தேவைக்கேற்ப்ப செல்வு செய்வது'.
#4) "ஜனநாயகம் என்பது ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை சக மனிதனின் உரிமைகளுக்கு நலன்களுக்கு மதிப்பு கொடுத்து அமைத்துக் கொள்ளும் சமூகக் கட்டமைப்பு (என்னுடைய வரையறை)" - மாசி கூறியது.
#5) சமூக பரிணாம ஆய்வு முடிவுகளை அவர் காந்தியின் வாழ்க்கையை ஆய்வு செய்ததன்(அல்லது காந்தியின் வாழ்க்கை அனுபவங்கள் மூலமே) மூலமே வந்தடைந்ததாக மா.சி கூறுகிறார்.
#6) "பொதுவுடைமை என்றால் - தர்மகர்த்தா முறையும் அதேதான் என்று நினைக்கிறேன்." - இதுவும் மா.சி கூறியதுதான். உறுதியாக் குறிப்பிடவில்லை, நினைக்கிறேன் என்றே சந்தேகமாக குறிப்பிட்டுள்ளார்.

மா.சி பதில் சொல்லாமல் விட்டுள்ள சில கேள்விகள்:(இவற்றையும் பிறகு பார்ப்போம்)
#1)
அசுரன்:இந்த நிலையை(பொதுவுடைமையை) நீங்களே(மா.சி) குறிப்பிட்டது போல ஒரே நாளில் அடைந்து விட முடியாது. அந்த இடைக்கட்டத்தில் என்ன விதமான அரசு இருக்கும் காந்தியத்தின் படி?

வேறு சில கேள்விகளும் உள்ளன. அவை இன்னும் முழுமையான வடிவம் பெறாமல் உள்ளன. மாசியுடனான விவாதத்தின் போக்கில் அவை முழு உருவம் பெறும் அப்பொழுது அவற்றை முன்வைக்கிறேன்.

*****************

இப்போ ஸ்டார்ட் செய்வோமா....
கேள்வி:
/////
அசுரன்:இதற்க்கு ஆதாரமாகத்தான் கார்வாலி சிப்பாய்களின் வட மேற்க்கு மாகாண சம்பவத்தையும் அதில் காந்தியின் பாத்திரத்தையும் குறீப்பிட்டுள்ளேன். அதில் தெளிவாக அவர் அஹிம்ஸையை கைகொண்ட வீரர்களை கண்டித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ஆதரிக்கிறார்.

மா.சி:அப்படி காந்தி ஆதரித்திருந்தால் காந்தியின் கருத்துக்களுடன் ஒவ்வாத ஒன்றாக இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.
////

எந்த அம்சத்தில் இப்பொழுது காந்தியுடன் ஒவ்வாமல் போயுள்ளீர்கள் என்று தெளிவாக சொல்லவும். ஏனேனில் இந்த அமசத்தில் conclusionயை தெளிவாக கூறீ முடித்துவிடலாம்.

ஏனெனில் இது காந்தி வன்முறையாளர் என்பதற்க்கு ஆதாரமாக கூறியுள்ளேன் எனில், நீங்கள் காந்தி வன்முறையாளர் என்பதை இந்த சம்பவத்தில் அவருக்கு எதிரான நிலையெடுப்பதன் மூலம் நிறுவுகிறீர்கள்.

அதாவது காந்தி வன்முறையாளர் என்கிற எமது நிலைப்பாட்டை நீங்களும் மறைமுகமாக ஆதரிக்கிறீர்கள்.
அசுரன்

13 பின்னூட்டங்கள்:

said...

Test

said...

இந்த விவாதத்தில் நானும் கலந்து கொள்ளலாமா?

கலந்து கொள்ளலாம் என்றால் அதற்கு முன் எனது சில கேள்விகள்.

1. உங்களுடைய எதிர்ப்பு காந்தி மீதா இல்லை காந்தியம் மீதா? காந்தியம் என்பது காந்திக்கு முன்னாலும் இருந்தது.

2. காந்தியும் பல சமயங்களில் சாதாரண மனிதரைப் போலவே நடந்து கொண்டிருக்கிறார் இதனை மறுப்பதற்கில்லை ஆனால் அதற்காக அவரின் மீது பல தேவை இல்லாத குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. நீங்களும் வைத்திருக்கிறீர்கள். காந்தி என்ற மனிதரின் வாழ்க்கை முழுவதையும் கணக்கில் கொண்டே அவரைப் பற்றி ஒரு ஒப்பீனியன் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. அப்படி உங்களின் பார்வையில் அவரைப் பற்றிய ஒப்பீனியன் என்ன?

said...

//அஹிம்ஸை - ஒரு அபாயகரமான அதி பயங்கர வன்முறையே//

அசுரன் அய்யா,

ஆமாங்க அய்யா.நீங்க சொல்றபடி காந்தியவாதிகள், ஒருவகையில் வன்முறையில் ஈடுபடாது வன்முறை செய்கிறார்கள். இவங்களே இப்படீன்னா,
இந்த காந்தியத்தை எதிர்த்து உங்களைப்போல் தைரியமாக வன்முறைக் குரல் கொடுக்காமல், அஹிம்சை வாதிகளைப்போல் இருந்து வன்முறை செய்பவர்களை என்னவென்று அழைப்பது?
நம்ம ரோசா அய்யா,ஞாநி அய்யா இவங்களெல்லாம் சொல்ற மதிரி நவ அஹிம்சாவாதிகள் அல்லது நவ காந்தியவாதிகள் என்று அடைமொழி கொடுக்கலாமா? இந்த நவ காந்தியவாதிகளை எதிர்த்தும் நீங்க ஒரு பதிவு வன்முறையா போட்டுடங்கய்யா.

வர வர இந்த காந்தியம் செய்யற கொடுமைகளை தாங்க முடியலீங்கய்யா.

பாலா

said...

//இந்த விவாதத்தில் நானும் கலந்து கொள்ளலாமா?

கலந்து கொள்ளலாம் என்றால் அதற்கு முன் எனது சில கேள்விகள்.

1. உங்களுடைய எதிர்ப்பு காந்தி மீதா இல்லை காந்தியம் மீதா? காந்தியம் என்பது காந்திக்கு முன்னாலும் இருந்தது.

2. காந்தியும் பல சமயங்களில் சாதாரண மனிதரைப் போலவே நடந்து கொண்டிருக்கிறார் இதனை மறுப்பதற்கில்லை ஆனால் அதற்காக அவரின் மீது பல தேவை இல்லாத குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. நீங்களும் வைத்திருக்கிறீர்கள். காந்தி என்ற மனிதரின் வாழ்க்கை முழுவதையும் கணக்கில் கொண்டே அவரைப் பற்றி ஒரு ஒப்பீனியன் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. அப்படி உங்களின் பார்வையில் அவரைப் பற்றிய ஒப்பீனியன் என்ன?
//

காந்தி தொண்டன்,

வருகைக்கு நன்றி,

விவாதத்தில் தாராளமாக ஈடுபடலாம். அதற்க்கு முன்பு எனக்கும் மா.சிக்கும் நடந்த விவாதம் இதற்க்கு சில ப்திவுகள் முந்தையதில் உள்ளது(காந்தி நல்லவரா, கெட்டவரா). அதை மேலோட்டமாகவாவது வாசித்து விட்டு வந்தால் இந்த பதிவின் வரம்புகளுக்குட்பட்டு வாதம் செய்ய ஏதுவாக இருக்கும்.

காந்தி முன்னிறுத்திய தத்துவம் என்ற போலித்தனம் எதிர்க்கப்பட வேண்டியது என்பது எனது நிலைப்பாடு. இதில் காந்தி குறித்த பல்வேறு போலி தோற்றங்களும் அடங்குகின்றன. ஆகவே அவற்றையும் பேச வேண்டியதாகிறது.

காந்தி குறித்த எனது கருத்து இதுதான்:

அவர் தன்னேழுச்சியாக, ஆளுமையில் இருந்த தத்துவங்களின் பாற்பட்டு இயங்கிய மனிதர் அவ்வளவுதான். அதைத் தாண்டி, மகாத்மா என்பதேல்லாம் சிலருக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம்.

விசயம் மிகத் தெளிவு, காந்தியின் பெருமையை காப்பாற்றுவதா இல்லையா என்பதை விட அவரால் மக்களுக்கு ஏதேனும் பிரயோசனம் இருந்ததா இல்லையா என்பதில்தான் எனது கவனம். அதில் அவர் தேறவில்லை.

அசுரன்

said...

காந்தி முன்நிறுத்திய தத்துவங்கள் என்று சொன்னதற்கு நன்றி. ஏனென்றால் காந்தி முன் நிறுத்திய தத்துவங்கள் எல்லாம் காந்திக்கு முன்னால் யாருமே வழியுறுத்தியதில்லை என்பது போல சிலர் எண்ணி இருக்கிறார்கள். புத்தர் அதற்கு முன்னால் என்று கூட இந்தத் தத்துவங்களை பின் நோக்கி சென்று பார்க்க இயலும்.

வள்ளுவர் கூட அன்பும் அறனும் உடைத்தாயின் என்று இதே தத்துவங்களை வழியுறுத்திகிறார். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கிறிஸ்து கூட கடவுளாக்கப் படுவதற்கு முன்னால் இதையேதான் சொல்லி இருக்கிறார்.

///
காந்தி முன்னிறுத்திய தத்துவம் என்ற போலித்தனம் எதிர்க்கப்பட வேண்டியது என்பது எனது நிலைப்பாடு
///

என்று சொல்லி இருக்கிறீர்கள். அதாவது அன்பும் அகிம்சையும் போலித்தனமானது என்று சொல்லி இருக்கிறீர்கள். இதில் இருந்து நாம் மாறுபடுகிறேன். இன்றைய உலகில் அன்பும் அகிம்சையும்தான் மிக அதிகமாக தேவைப் படுகிறது ஆனால் அதுவே மிகக் குறைவாக உபயோகிக்கப் படுகிறது.

அணு ஆயுதங்களும், வன்முறைகளும் பெருகி விட்ட நிலையில் இந்த தத்துவங்கள்தான் உண்மையில் மனித குலத்தை அழிவில் இருந்து காப்பாற்றும்.

வல்லவன் வாழ்வான் என்ற கால கட்டத்தை தாண்டி விட்டோம் நாம். அழிவு இன்று வல்லமை குன்றியவர்களுக்கு மட்டுமே என்பதில்லை. எல்லோரும் மனித குலத்தை அழிக்கும் வல்லமை பெற்றவர்களாகி வருகிறார்கள்.

இந்த சமயத்தில் இந்தத் தத்துவங்கள் பல இடங்களில் காலத்திற்கு உதவாது என்று தள்ளி வைக்கப் பட்டாலும் இவையே இன்றைய காலகட்டத்திற்கு அவசியம்.

ஒரு சிறப்பான தத்துவம் இந்த காலகட்டத்தில் அதிகமாக உபயோகத்தில் இல்லை என்பதால் அது போலித்தனமானதோ இல்லை தேவையற்றதோ ஆகி விடாது. மக்கள் அந்தத் தத்துவத்தின் மகிமையை உணராததால் அது போலித்தனமானதோ இல்லை தேவையற்றதோ ஆகி விடாதுஅது போலித்தனமானதோ இல்லை தேவையற்றதோ ஆகி விடாது.

அடுத்து காந்தி குறித்த உங்களின் கருத்து பற்றி என் விளக்கம் என்னவென்றால் பெர்பெக்ட் என்று யாரையுமே சொல்ல இயலாது.

ராமர் என்ற கற்பனைக் கடவுளை படைத்த ஆசிரியர் கூட அந்தப் பாத்திரத்தை மனைவி மீது சந்தேகம் கொள்ளும் வகையில் தான் படைத்தார். அதாவது கடவுளின் பாத்திரத்தைக் கூட பெர்பெக்டாக அவரால் காட்ட முடியவில்லை காட்ட முடியாது.

காந்தி மட்டும் தன் வாழ்க்கையில் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் சரி?

அவர் பிரிட்டிஷ் அரசுடன் சில அரசியல் ரீதியான உடன்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது என்பது உண்மைதான் பகத் சிங் விஷயத்தில் நடந்து கொண்டது போன்ற சில அரசியல் நிர்பந்தங்கள் அவருக்கு இருந்தது உண்மைதான். ஆனால் Bigger picture என்பதைப் பார்த்தால் சுதந்திரப் போராட்டத்தின் முகமாக காந்தியே திகழ்ந்திருக்கிறார் என்பது உண்மை.

அவர் பெர்பெக்ட் என்று நான் சொல்லவில்லை அவரும் பல தவறுகள் செய்திருக்கிறார். என்னுடைய shawshank redemption காந்தியம் என்ற பதிவில் இதையே தான் சொல்லி இருக்கிறேன். தவறே செய்யாமல் இருப்பது முடியாதது. ஆனால் அடிப்படை கொள்கைகளில் அன்பும் அஹிம்சையும் கொண்டு இருப்பது முக்கியம் End resultஐ கொண்டு வருவதற்கு அதுவே சிறந்த வழி.

said...

காந்தி தொண்டன் அவர்களே,

காந்தியம் வலியுறுத்தும் அஹிம்ஸையை குறித்து குறிப்பாக எனது இந்த விமர்சனம் உள்ளது. இது உண்மையில் வலியுறுத்துவது அன்பு, அஹிம்சை ஆயினும் இது நடைமுறையில் விளைவிப்பது ஒரு சார்பு வன்முறையைத்தான்.

ஏனெனில், காந்தியம் ஒரு விஞ்ஞானப்பூர்வமான தத்துவம் கிடையாது. அது நிதர்சனத்தை நிராகரிக்கிறது. அது தனது சொந்த தனிமனித விருப்பங்களுக்கு அடிபணிகிறது, அதனாலேயே சமூகத்தின் இயக்கப் போக்கை உள்வாங்க பலவந்தமாக மறுக்கிறது.

ஒரு தனிப்பட்ட மனிதன் அல்லது ஒரு சமூகத்தின் விருப்பம் என்பது ஒன்றாக இருக்கலாம். அதை நடைமுறையில் செய்வதற்க்கான தத்துவம் என்பதுதான் இங்கு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது. ஏனெனில் அவர்களின் விருப்பமும் தத்துவத்தின் விருப்பமும் எப்பொழுதுமே இயந்து போக வேண்டும் என்று அவசியமில்லை.

பொதுவுடைமை, மனித சமூகத்தின் மீதான காதல் என்பவை மனிதனின் உயிரியல் தேவை. ஆகவே இவற்றின் பாற்பட்ட தத்துவ ஞான வெளிப்பாடுகள் மனிதன் சிந்திக்க துவங்கிய காலம் தொட்டு உள்ளன.

ஆகவே, இந்த இயற்கையான சிந்தனையையே காந்திக்கு மட்டும் உரித்தாக்கதீர்கள். இதை மார்க்ஸ்க்கு பொதுவுடைமை எனும் இயற்கை உணர்வை உரித்தாக்குவதனை சுட்டிக் காட்டி நீங்கள் எதிர்க்கலாம். ஆனால் விசயம் மார்க்ஸினுடையது விஞ்ஞான சோசலிசம்(விஞ்ஞான சோசலிசத்தைத்தான் மார்க்ஸ்க்கு உரித்தாக்குகிறோம். அது அவரது துணிபு என்பதால்). காந்தியினுடையது என்ன வகை என்பது குறித்த எனது விமர்சனத்திற்க்கும் இது வரை காந்தியவாதியான மா.சி யிடமிருந்து பதில் இல்லை.

இதை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் எனில், காந்தியின் தத்துவம் போலி என்று கூறியவுடன் நீங்கள் அன்பு செய்வது போலி என்று நான் குறிப்பிட்டதாக புரிந்து கொள்ள தலைப்படுகிறீர்கள். அதாவது அன்பு என்பதற்க்கு காந்திதான்(காந்தியம்) இலக்கணம் என்பது தங்களது டிக்சனரியில் இருக்கலாம். எமது டிக்ஸ்னரியில் அவ்வாறு இல்லை.

ஒரு வர்க்க சமூகத்தில் ஒரு ஏற்றத்தாழ்வான சமூகத்தில் ஒவ்வொரு வார்த்தைக்கும் அது எந்த வர்க்கத்தின் வாயிலிருந்து வருகிறது என்பதைப் பொறுத்து அர்த்தம் மாறுகிறது(including அன்பு).

ஆக, இங்கு நான் சுட்டிக் காட்டுவது காந்தி எதை வலியுறுத்துவதாக, எதை ஆதரிப்பதாக கூறி நடைமுறைப்படுத்தினாரோ அது, அவர் வலியுறுத்திய, அவர் ஆதரித்த விசயஙகளுக்கு ஊறாகவே இருந்தது என்பதைத்தான். இதற்க்காக பல்வேறு எ-காக்களை கொடுத்து மிகப் பெரியதொரு விவாதம் எனது முந்தைய பதிவில் ஏற்கனவே நடந்துள்ளது(காந்தி நல்லவரா - கெட்டவரா). அங்கு நூறு பின்னூட்டங்களுக்கு மேல் சென்று விட்டதால்தான் இங்கு அதை இரண்டாம் பாகமாக எழுதுகிறேன்.

தங்களுக்கு சிரமம் எனில் காந்தி எப்படி வன்முறையை ஆதரித்தார் (மறைமுகமாகவும், நேரடியாகவும்) என்பதை அங்குள்ள உதாரணங்களுடன் மீண்டும் எடுத்துக் கூறுகிறேன். எனது பரிந்துரை, நீங்களே அங்கு சென்று படியுங்கள். ஏனெனில் அப்பொழுதுதான் எனது வாதங்களின் சரியான அம்சத்துடன்(right Context) புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

காந்தி 1 பிரிட்டிஸ் ஏவல் நாய்களின் மரணத்திற்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை 1 பகத்சிங்கிற்க்கு கொடுத்ததில்லை. அவர் பம்பாய் மாலுமிகள் கலகத்தை(அது தவிர்த்து அந்த காலகட்டத்திய பிற போராட்டங்கள்) காட்டிக் கொடுக்காமல் வளர்த்தெடுத்திருந்தால் இன்றைக்கு இந்து முஸ்லீம் பிரிவினையின் பரிணாமம் வேறாக இருந்திருக்கும். ஏனெனில் அவற்றில் மதம் முன்னிலைக்கு வரவில்லை.

நாங்கள் பகத்சிங்குகளை இழக்க தயாராயில்லை, வரலாறு வழங்கும் வாய்ப்புகளையும் இழக்கத் தயாராயில்லை. எப்படியும் வன்முறை என்பது தவிர்க்க இயலாத இயங்கியலின் விதி(வளர்சிதை மாற்றம் - இதில் வரும் சிதைவு என்பது வன்முறையே). இந்த நிதர்சனத்தை உள்வாங்கிக் கொண்டு அதை சாத்தியமான வகையில் மட்டுப்படுத்துவதே ஒரு நல்ல கம்யுனிஸ்டின் கடமை. அதை கண் கொண்டு பார்ப்பதை தவிர்ப்பதன் மூலமும், அப்படி ஒன்று இல்லை என்று கற்பிதமாக உள்வாங்கிக் கொள்வதன் மூலமும் அந்த(ஒரு சார்பு) வன்முறையைப் பெரிதாக வளரவிடுவதுதான் காந்தியத்தின் வேலை.

மீண்டும் வலியுறுத்துகிறேன்: எமது முந்தைய விவாதத்தை சிறிது உள்வாங்கிக் கொண்டு வாருங்கள். ஏனெனில் உங்களது கேள்விகள் ஏற்கனவே செம்மையாக பதில் சொல்லப்பட்டவையாகவே உள்ளன.

அசுரன்

said...

//விசயம் மிகத் தெளிவு, காந்தியின் பெருமையை காப்பாற்றுவதா இல்லையா என்பதை விட அவரால் மக்களுக்கு ஏதேனும் பிரயோசனம் இருந்ததா இல்லையா என்பதில்தான் எனது கவனம். அதில் அவர் தேறவில்லை.
///

//நாங்கள் பகத்சிங்குகளை இழக்க தயாராயில்லை, வரலாறு வழங்கும் வாய்ப்புகளையும் இழக்கத் தயாராயில்லை. எப்படியும் வன்முறை என்பது தவிர்க்க இயலாத இயங்கியலின் விதி(வளர்சிதை மாற்றம் - இதில் வரும் சிதைவு என்பது வன்முறையே). இந்த நிதர்சனத்தை உள்வாங்கிக் கொண்டு அதை சாத்தியமான வகையில் மட்டுப்படுத்துவதே ஒரு நல்ல கம்யுனிஸ்டின் கடமை. அதை கண் கொண்டு பார்ப்பதை தவிர்ப்பதன் மூலமும், அப்படி ஒன்று இல்லை என்று கற்பிதமாக உள்வாங்கிக் கொள்வதன் மூலமும் அந்த(ஒரு சார்பு) வன்முறையைப் பெரிதாக வளரவிடுவதுதான் காந்தியத்தின் வேலை.
//
சிறப்பான மற்றொரு விவாதத்தை துவங்கி உள்ளீர்கள்....
வாழ்த்துக்கள் !!

said...

//மீண்டும் வலியுறுத்துகிறேன்: எமது முந்தைய விவாதத்தை சிறிது உள்வாங்கிக் கொண்டு வாருங்கள். ஏனெனில் உங்களது கேள்விகள் ஏற்கனவே செம்மையாக பதில் சொல்லப்பட்டவையாகவே உள்ளன.//

அசுரன் அய்யா,

நீங்க இது மாதிரி எல்லா கேள்விகளுக்கும் ஏற்கெனவே செம்மையாக பதில் சொல்லி ஏன் வன்முறை செய்கிறீர்கள்?
ஒண்ணு ரெண்டு கேள்விகளுக்காவது செம்மையாக பதில் சொல்லாமல் அஹிம்சையாக நடந்து கொள்ளக்கூடாதா?

இதுக்கு ஒத்துக்கிட்டா நானும் ஒண்ணு ரெண்டு கேள்விகள் வைப்பேன்.சம்மதமா?

பாலா

said...

அசுரன்,வணக்கம்.

இ·து எனது முதல் பின்னு}ட்டு.

தங்கள் பதிவுகளைப் பல முறைகள் படித்திருப்பினும் இதுவே முதல் பின்னு}ட்டு.

தற்போதைய சூழலில் மனித சமூகம் நாளாந்தம் படும் ஒடுக்குமுறையானது பொருளாதாரம் சார்ந்த நகர்வுகளின் வியூகத்துக்குட்பட்டதே!இத்தகைய வியூகத்தில் கருத்தியல் ஒடுக்குமுறையென்பது மிகக் கொடூரமானது.வன்முறைசாராத இந்தக் கருத்தியல் ஒடுக்குமுறை அனைத்து வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு மூலமானதென்பதால் "அகிம்சை" என்பது அதிபயங்கரவாதமானதுதாம்.கடந்த காலனித்துவ தசாப்தத்திலும் அதற்குப் பின்பான நவகாலத்துவத் தசாப்தத்திலுமாக ஒரு விதமான செயற்பாட்டு வடிவத்தை இந்த "அகிம்சாவாதம்" எடுத்துள்ளது.அது திட்டமிட்ட வியூகத்தைக் கொண்டே மக்களரங்குக்குப் பரப்புரையாகப்பட்டு அதற்கானவொரு செயல்வடிவம் கொடுக்கப்பட்டது.அதற்கு அவசியமும் அன்றிருந்தது-இன்றும் இருக்கிறது(இன்றிருக்கும் அகிம்சாவாதம்:"அனைத்தும் பேசித் தீர்க்கலாம்" என்ற அரசியல்).

இந்தியத் துணைக்கண்டத்து அன்றைய காலனித்துவத்துக் கட்டத்தில் ஏற்பட்ட புரட்சிக்குரிய சூழலைப் பின் தள்ளுமொரு வடிவமாகக் காந்தியின் வருகை தொடர்கிறது.இதை நன்கு உணர்ந்த அமெரிக்கா காந்தியின் நிழலில் கனிந்த சுதந்திரமாக இந்தியத் தேசிய விடுதலையை திட்டமிட்டுச் செயற்படுத்திக் கருத்தியல் தளத்தில் அதை வலுவாக்கி முன்னிறுத்தியது.எதிர்காலத்தில் தனது நிதிமூலதனத்துக்கூடான நவகாலனித்துவத்தின் தலைமைப் பாத்திரத்துக்கு இந்த"இத்துப்போன அகிம்சை"அவசியமென்பதற்காக அன்று அதை ஆதரித்துத் தனது தாய்க்கு(பிரிட்டன்) ஆலோசனை வழங்கிக் காந்தியின் தயவால் "விடுதலை"வந்ததாகச் சொல்லிக்கொள்ளும் அரசியலை முன்னெடுத்தது.இது வரலாறு.

இப்போதைய இந்த விவாதம் நாம் ஆற்றவேண்டிய அதிமுக்கிய நாளந்தத் தேவைகளைப் பின்தள்ளும் கருத்தியல் நகர்வாக இருக்கிறது.இத்தகைய விவாதங்கள் நமக்கு நேரே நடந்துவரும் இன்றைய ஒடுக்குமுறைகளுக்கு(அவை: பொருளாதாரம் மற்றும் அதுசார்ந்த அரசியல் சட்டவாக்க வன்முறைசார்ந்த ஒடுக்கு முறைகள்) முகம் கொடுக்காது கடந்த காலத்துக் கருத்தியல் வன்முறைமீது கவனத்தைக் குவிக்கவைப்பது மறைமுகமாக இன்றைய ஏகாதிபத்தியங்களின் நகர்வுக்கு உடந்தையாக இருப்பதற்குச் சமன்.

எனவே இத்தகைய விவாதம் ஒரு தத்துவார்த்த ஏட்டில் நடக்க வேண்டுமேயொழிய இத்தகைய தளத்திலல்ல.

இன்றைக்கு அவசியமாக இருக்கும் அதிமுக்கிய-நாளந்த நகர்வுகளை விமர்சனத்துக்குட்படுத்தி மக்களின் மனங்களில் கனந்துகொண்டிருக்கும் புறச்சூழல்மீதான எதிர்ப்புணர்வை சாதகமாக்கி, வர்க்கவுணர்வுமிக்க மினதர்களாக்கி அவர்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்த் தூண்டுவதும்-அணித்திரட்சிக்கும் அதுசார்ந்த புரட்சிக்கட்சிகான பணிகளும் ஆற்றுவது அவசியம்.இதைவிட்டுவிட்டு,காந்தி,பாரதி என்று கவனத்தைத் திருப்பும் வேலைகளை செய்வதற்கென்றொரு ஏகாதிபத்தியக்கூலிகள் இருக்கும்போது நீங்களுமா?...புரியவில்லை.

தோழமையுடன்

ப.வி.ஸ்ரீரங்கன்

//காந்தி குறித்து சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், நண்பர் மா.சி க்கும் கடுமையானதொரு விவாதம் நடந்தது.//

ஆனால், உணர்ச்சி வசப்படாமல், தனி மனிதத் தாக்குதல்களுக்கு இறங்காமல் ஆரோக்கியமாக நடந்த விவாதம் அது :-) அசுரனுக்கு நன்றி.

//#1) பொதுவுடைமை சமுதாயம் தான் மா.சியின் தீர்வும் கூட.//
ஆமாம். அத்தகைய் சமுதாயத்தில் தனி மனித உரிமைகள் முதலிடம் வகிக்கும். ஒவ்வொருவரும் தனது சுய விருப்பத்துடன் பொது நலனுக்காகப் பணியாற்றுவார்கள்.

//#2) பொதுவுடைமை சமுதாயத்தை எந்த வரலாற்றுக் கட்டத்திலும் நடைமுறைப்படுத்தலாம் - மா.சி.//

ஒவ்வொரு கட்டத்திலும் சில இடங்களில் பொதுவுடமை சமுதாயம் இருந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. இன்றைக்குக் கூட அமெரிக்காவில் ஒரு சமூகத்தினர் கூட்டு வாழ்க்கை வாழ்வதைப் பற்றிப் படித்தேன்.

//#3) பொதுவுடைமை சமுதாயம் என்பது மா.சியின் புரிதலில் - 'திறைமைக்கேற்ற ஊதியம், தேவைக்கேற்ப்ப செல்வு செய்வது'.//

தேவைக்கும் மட்டும் செலவு செய்வது.

//#4) "ஜனநாயகம் என்பது ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை சக மனிதனின் உரிமைகளுக்கு நலன்களுக்கு மதிப்பு கொடுத்து அமைத்துக் கொள்ளும் சமூகக் கட்டமைப்பு (என்னுடைய வரையறை)" - மாசி கூறியது.//

சரியாகச் சொன்னீர்கள் :-)

//#5) சமூக பரிணாம ஆய்வு முடிவுகளை அவர் காந்தியின் வாழ்க்கையை ஆய்வு செய்ததன்(அல்லது காந்தியின் வாழ்க்கை அனுபவங்கள் மூலமே) மூலமே வந்தடைந்ததாக மா.சி கூறுகிறார்.//

மனித வரலாற்றின் தனி மனிதச் சீர்திருத்தப் பணியாளர்களில் காந்தி மிக முக்கிய இடம் வகிக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் வாழ்க்கையையும் எழுத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டும் நான் பொதுவுடைமை பற்றிய புரிதல்களுக்கு வந்தேன்.

//#6) "பொதுவுடைமை என்றால் - தர்மகர்த்தா முறையும் அதேதான் என்று நினைக்கிறேன்." - இதுவும் மா.சி கூறியதுதான். உறுதியாக் குறிப்பிடவில்லை, நினைக்கிறேன் என்றே சந்தேகமாக குறிப்பிட்டுள்ளார்.//

தர்மகர்த்தா முறை என்பது முத்திரை குத்தப்பட்ட ஒரு சொற்றொடர். அதுதான் எனக்குப் புரிந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும்.

//அசுரன்:இந்த நிலையை(பொதுவுடைமையை) நீங்களே(மா.சி) குறிப்பிட்டது போல ஒரே நாளில் அடைந்து விட முடியாது. அந்த இடைக்கட்டத்தில் என்ன விதமான அரசு இருக்கும் காந்தியத்தின் படி? //

எந்த விதமான அரசு இருந்தாலும், ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் பொதுவுடைமை கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கலாம் என்பதுதான் காந்தியத்தின் வழி. ரூஸோ சொன்னது போல அரசாங்கம் என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து விடும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. அப்படி அரசாங்கத்தை உதறித் தள்ளும் போது அதன் வசதிகளையும் விட்டு விட முன் வரவேண்டும்.

//எந்த அம்சத்தில் இப்பொழுது காந்தியுடன் ஒவ்வாமல் போயுள்ளீர்கள் என்று தெளிவாக சொல்லவும். ஏனேனில் இந்த அமசத்தில் conclusionயை தெளிவாக கூறீ முடித்துவிடலாம்.//

1. சாதியை ஒழிக்காமலேயே தீண்டாமையை மட்டும் எதிர்க்கலாம் என்று சொன்னது
2. இந்து மத சாத்திரங்களில் வைத்திருந்த நம்பிக்கை.
3. இந்துஸ்தானியை இந்தியாவின் இணைப்பு மொழியாக வலியுறுத்தியது

//ஏனெனில் இது காந்தி வன்முறையாளர் என்பதற்க்கு ஆதாரமாக கூறியுள்ளேன் எனில், நீங்கள் காந்தி வன்முறையாளர் என்பதை இந்த சம்பவத்தில் அவருக்கு எதிரான நிலையெடுப்பதன் மூலம் நிறுவுகிறீர்கள். அதாவது காந்தி வன்முறையாளர் என்கிற எமது நிலைப்பாட்டை நீங்களும் மறைமுகமாக ஆதரிக்கிறீர்கள்.//

இதைப் பற்றி விவாதிப்பதால் என்ன கிடைக்கும்? காந்தி வன்முறையாளர் என்று நீங்கள் நினைத்தால் நினைத்துக் கொள்ளுங்கள். அதற்கும் சமவுடைமை சமூகத்துக்கும் என்ன தொடர்பு?

அடுத்தவன் மீது உடல் வன்முறை செலுத்தாமல் அவனை மாற்ற முயல்வது வன்முறை என்றால் உருப்படியாக வாழும் யாருமே வன்முறையாளர்தான். உடல் மீதான் வன்முறையால் எந்த சமூக மாற்றத்தையும் கொண்டு விட முடியாது என்பது காந்தியின் நம்பிக்கை.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

///
//எந்த அம்சத்தில் இப்பொழுது காந்தியுடன் ஒவ்வாமல் போயுள்ளீர்கள் என்று தெளிவாக சொல்லவும். ஏனேனில் இந்த அமசத்தில் conclusionயை தெளிவாக கூறீ முடித்துவிடலாம்.//

1. சாதியை ஒழிக்காமலேயே தீண்டாமையை மட்டும் எதிர்க்கலாம் என்று சொன்னது
2. இந்து மத சாத்திரங்களில் வைத்திருந்த நம்பிக்கை.
3. இந்துஸ்தானியை இந்தியாவின் இணைப்பு மொழியாக வலியுறுத்தியது

////

மா. சிவகுமார்,

வருகைக்கும் ஒவ்வொரு அம்சத்திற்க்கும் பதில் அளித்தமைக்கு நன்றி,

நீங்கள் ஏன் out of context பேசுவதுதான் எனது வாத முறை என்பதில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

எனது குற்றச்சாட்டு வட மேற்க்கு சிப்பாய்கள் விசயத்தில் காந்தி வன்முறையை ஆதரித்ததை வைத்து கேட்க்கப்பட்டு அதை நீங்களும் ஏற்றுக் கொண்டு, இப்பொழுது தீடிரென்று general context-ல் பதில் சொல்வது நியாயமா?

ஒவ்வொரு முறையும் இதை சுட்டிக் காட்ட வேண்டியிருப்பது வருத்தமளிக்கிறது.

எனது கேள்வியை மீண்டும் ஒரு முறை குறிப்பிடுகிறேன்

//எந்த அம்சத்தில் இப்பொழுது காந்தியுடன் ஒவ்வாமல் போயுள்ளீர்கள் என்று தெளிவாக சொல்லவும். ஏனேனில் இந்த அமசத்தில் conclusionயை தெளிவாக கூறீ முடித்துவிடலாம்.//

அதாவது வட மேற்கு சிப்பாய்கள் விசயத்தில் நீங்கள் எந்த அடிப்படையில் காந்தியுடன் ஒவ்வாமல் போயுள்ளீர்கள்.

இதுதான் காந்தி ஒரு சார்பு வன்முறையாளர் என்பதை நிறுவ நான் வைத்த வாதம். இதை முற்றிலும் கை கழுவிவிட்டு பதில் கொடுத்துள்ளீர்கள்.

#2)
//அடுத்தவன் மீது உடல் வன்முறை செலுத்தாமல் அவனை மாற்ற முயல்வது வன்முறை என்றால் உருப்படியாக வாழும் யாருமே வன்முறையாளர்தான். உடல் மீதான் வன்முறையால் எந்த சமூக மாற்றத்தையும் கொண்டு விட முடியாது என்பது காந்தியின் நம்பிக்கை.
//

சமூக மாற்றம் என்பது பொருளாதார உற்பத்தி முறையில் ஏற்ப்படும் மாற்றத்தால் மட்டுமே ஏற்ப்படும் காந்தியின் அகிம்ஸை எனும் ஆளும் வர்க்க வன்முறையாலும் ஏற்ப்படாது வெறும் வன்முறையாலும் ஏற்ப்படாது.

வளர்சிதை மாற்றம் என்று கேள்விப்பட்டுள்ளீர்களா? எந்த ஒரு மாற்றமும் முரன்பாடுகளின் போராட்டத்தினூடேதான் ஏற்ப்படுகிறது. சமூக மாற்றமும் அப்படித்தான் ஆகவே சிதைவு என்பது தவிர்க்க முடியாதது. அப்படி ஒன்று இல்லை என்று கற்பிதமாக நினைத்துக் கொண்டு இருப்பதால் தான் காந்தியின் தத்துவத்தை கற்பனாவாதம் என்கிறோம்.

இது வரை சமூக பரிணாம வளர்ச்சி குறித்த காந்தியின் விஞ்ஞானம் எது என்பதற்க்கு உங்களிடம் பதில் இல்லை.

காந்தியிடம் அப்படி ஒரு விஞ்ஞான பார்வையே கிடையாது என்பதுதான் உண்மை. அவரது தன்னேழுச்சியான ஆளும் வர்க்க கருத்தியல் அடிப்படையிலான ஓரு சார்பு வன்முறை என்பது வெறும் கருத்தியல் ரீதியானது மட்டும் கிடையாது. (ஏனெனில் காந்தியின் வன்முறையாக அவர் மற்றவர்களின் மன மாற்றத்திற்க்கு நிர்பந்தித்ததை மட்டுமே மா.சி எடுத்துக் கொண்டு பேசுகிறார். ஆனால் ஆளூம் வர்க்க வன்முறையை அமைதியாக அனுமதித்ததும், ஒடுக்கப்பட்ட்வர்களின் வன்முறையை காட்டிக் கொடுத்ததும் குறித்துதான் எனது பிரதான் இலக்கு என்பதை அவர் மனதில் கொள்ளவில்லை).

ஏனெனில் 1947களின் இறுதியில் நடந்தேறிய கப்பல்படை கலகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை காந்தி ஆதரிக்க வில்லை, அதன் விளைவு அவை சரியான தலைமை இன்றி ஒடுக்கப்பட்டன. அங்கு அஹிம்ஸை பேசிய காந்தியால் ஏன் அதே அஹிம்சையை இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைமுறைப்படுதத இயலவில்லை? இன்று வரை அந்த கலகங்களில் தோன்றிய இந்து முஸ்லீம் ஒற்றுமை அகில் இந்திய பரிணாமத்தை எட்டியிருக்கும் வாய்ப்பு குறித்த ஆதாங்கத்தை பலரும் வெளிப்படுத்துகிறார்களே? இரண்டு வன்முறைகள் இரண்டில் எது சிறந்ததாக இருந்தது?

ஒன்று நாம் design செய்யும் வாய்ப்புள்ள கப்பல் படை கலகம், விளைவு பிரிட்டிஸ் மற்றும் அடிவருடிகளின் அழிவு, மக்களிடம் அதிகாரம், மதம் ஒரு முக்கிய தலைமை உணர்வாக இல்லாது போயிருப்பது.

இரண்டு, பிற்போக்கு, மக்கள் விரோத, அதிகாரத்தில் உள்ள சக்திகள் design செய்யும் வாய்ப்புள்ள இந்து முஸ்லீம் பிரிவினை வன்முறை. விளைவு என்னவென்பதை சொல்லத் தேவையில்லை.

இரண்டையுமே தவிர்கக முடியவில்லையே? காந்தியத்தால் வன்முறை தவிர்க்க பட்ட ஒரே ஒரு உதாரணம் கொடுக்கவும். தவிர்க்கப் பட்டு சமூக மாற்றம் வந்த ஒரே ஒரு இடத்தைக் காட்டவும்.

ஒரே சமூக பொருளாதார பின்னணிதான் முரன்படும் இரண்டு விசயங்களுக்கும் அடிப்படை அதில் எது புரட்சிகரமானது, நல்லது என்று பகுத்தாய்ந்து அந்த முரன்பாட்டை வளர்க்க வேண்டும். அதை விடுத்து எனக்கு முரன்படுவதே பிடிக்காது என்று முரன்பாடு யாதர்த்தத்தில் இருப்பதை கவனத்தில் கொள்ளாவிட்டால் அது அதிகாரத்தில் உள்ள முரன்பாட்டுக்கு சாதகமாக மாறிவிடும். அதுதான் இந்து முஸ்லீம் கலவரம் வெற்றியடைந்ததன் பின்னணி.

இதைத்தான் 'எனக்கு எந்த அரசியல் சார்பும் கிடையாது என்பது ஆளும் வர்க்க அரசியலே' என்னும் சொற்றொடர் குறிக்கிறது.

சமூக பரிணாம பகுத்தறிவு உள்ள ஒருவன் இதில் முதல் விசயத்தைத்தான் ஆதரித்து வளர்த்தெடுத்திருப்பான்.

காந்தி மற்றும் காந்தியவாதிகள் என்ன செய்வார்/செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்கள் நாம் டிசைன் செய்யும் வாய்ப்புள்ள நன்மை பயக்கும் வன்முறையை காட்டிக் கொடுத்து விட்டு, அதன் போக்கில் வளர்ந்து பெருங் கேடு விளைவிக்கும் ஆளும் வர்க்க வன்முறையை பார்த்துக் கொண்டு வெறும் வாய் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

காந்தியின் அஹிம்ஸை வெற்றிப் பெற்றது என்று கூறுபவர்கள் இந்து முஸ்லீம் கல்வரத்தில் அவரது பேச்சை, மக்கள் ஏன் கேட்க்கவில்லை? என்பதற்க்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. எந்த ஒரு தலைவரையும் போலவே காந்தி ஒரு விளைவு, அவர் ஒரு காரணி அல்ல. ஆனால், தான் விளைவு என்பதை மறந்து காரணி என்கிற மயக்கத்தில் சமூகத்தின் யாதர்த்ததிற்க்கு மாறான கருத்தை வைக்கும் பொழுது அது தோல்வியடைவதை கண்ணுறுகிறோம்.

வர்னாஸ்ரம அடிமைத்தனத்த்ல் ஊறிய ஒரு சமூகத்தில் அதிகாரத்தில் இருப்பவனிடம் அஹிம்சையுடன் நடந்து கொண்டு துன்பத்தை அனுபவி எனும் தத்துவம் இலகுவாக நடந்தேறியது. ஆனால், அதே தத்துவம் சரிசமமான முஸ்லீம், இந்துவிடம் செயல்படுத்து எனும் பொழுது ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஏனெனில் அப்படி ஒரு கருத்து உருவாக தேவையான பொருளாதார உற்பத்தி முறை சமூகத்தில் இல்லை.

மற்றபடி இவ்விசயத்தில்(வன்முறை) காந்தி தொண்டனுக்கு கொடுத்த பதிலும் கூட வெகு அருமையாக காந்தியத்தின் ஆளும் வர்க்க வன்முறையை எடுத்துக் காட்டுகிறது

#3)
/////
//#3) பொதுவுடைமை சமுதாயம் என்பது மா.சியின் புரிதலில் - 'திறைமைக்கேற்ற ஊதியம், தேவைக்கேற்ப்ப செல்வு செய்வது'.//
தேவைக்கும் மட்டும் செலவு செய்வது.
/////

நீங்கள் குறிப்பிடுவது சொசலிச சமுதாயம். பொதுவுடைமை சமுதாயம் என்பதில் திறமைக் கேற்ற ஊதியம் என்பது இருக்காது.

ஏன் என்பதற்க்கு பதில் சமூக பகுப்பாய்வு பற்றிய ஆய்வின் முடிவில் கிடைக்கும். (பின்பு சொல்கிறேன். இது குறித்த மா.சியின் கருத்து என்னவென்பது தெரிந்து கொள்ள விரும்புகிறேன்)

காந்தியத்தின் பார்வை அவ்வாறு இல்லையென்பதும், உண்மையில் ஒரு சமத்துவ சமூகம் அமைப்பது குறித்த உத்வேகம் அதற்க்கு கிடையாது என்பதாலேயே அவ்வாறூ சம்பிரதாயமாக ஒரு அரைகுறை பொதுவுடைமை சமூகத்தை கற்பனையாக முன்வைக்கிறது.

அந்த மேற்சொன்ன திறமைக் கேற்ற ஊதியம் என்பது இல்லாத காரணத்தினாலேயே, பொதுவுடைமை சமுதாயம் என்பது எல்லா காலகட்டத்திலும் நடைமுறைப்படுத்தக் கூடிய சமூக அமைப்பு கிடையாது.

அதற்க்கான உற்பத்தி முறைகள் வளர்ந்துள்ள காலத்தில் மட்டுமே பொதுவுடைமை சமுதாயம் நடைமுறையில் சாத்தியம்.

அப்படியில்லாமல் மா.சி சொல்வது போல திறமை தேவை என்பதுதான் பொதுவுடைமை சமுதாயமெனில் எக்னாமிக் க்ளாஸ் விமானத்தில் பயணம் செய்யும் ஆஸிம் பிரேம்ஜியும் காந்தியவாதிதான்(திறமைக் கேற்ற ஊதியம், தேவைக் கேற்ற செலவு).

ஆனால், உறுதியாக ஒரு சமூகம் ஆஸிம்களும், அல்லலுறும் உழைக்கும் வர்க்கமுமாக இருப்பது பொதுவுடைமை சமுதாயம் கிடையாது. ஆனால், மா.சி இதனை பொதுவுடைமை சமுதாயம் என்று சொல்ல வாய்ப்புள்ளது.

பொதுவுடைமை குறித்த தங்களது பார்வையை செம்மைப் படுத்திக் கொள்ளவும்.

அசுரன்

said...

///
அசுரன்,வணக்கம்.

இது எனது முதல் பின்னு}ட்டு.

தங்கள் பதிவுகளைப் பல முறைகள் படித்திருப்பினும் இதுவே முதல் பின்னு}ட்டு.
///

ப.வி. ஸ்ரீரங்கன்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

////
தற்போதைய சூழலில் மனித சமூகம் நாளாந்தம் படும் ஒடுக்குமுறையானது பொருளாதாரம் சார்ந்த நகர்வுகளின் வியூகத்துக்குட்பட்டதே!இத்தகைய வியூகத்தில் கருத்தியல் ஒடுக்குமுறையென்பது மிகக் கொடூரமானது.வன்முறைசாராத இந்தக் கருத்தியல் ஒடுக்குமுறை அனைத்து வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு மூலமானதென்பதால் "அகிம்சை" என்பது அதிபயங்கரவாதமானதுதாம்.கடந்த காலனித்துவ தசாப்தத்திலும் அதற்குப் பின்பான நவகாலத்துவத் தசாப்தத்திலுமாக ஒரு விதமான செயற்பாட்டு வடிவத்தை இந்த "அகிம்சாவாதம்" எடுத்துள்ளது.அது திட்டமிட்ட வியூகத்தைக் கொண்டே மக்களரங்குக்குப் பரப்புரையாகப்பட்டு அதற்கானவொரு செயல்வடிவம் கொடுக்கப்பட்டது.அதற்கு அவசியமும் அன்றிருந்தது-இன்றும் இருக்கிறது(இன்றிருக்கும் அகிம்சாவாதம்:"அனைத்தும் பேசித் தீர்க்கலாம்" என்ற அரசியல்).
///

வெகு சரியாகவே அஹிம்ஸை எனும் வன்முறையின் வரலாற்று பாத்திரத்தை குறிப்பிட்டுள்ளீர்கள்.

////
இந்தியத் துணைக்கண்டத்து அன்றைய காலனித்துவத்துக் கட்டத்தில் ஏற்பட்ட புரட்சிக்குரிய சூழலைப் பின் தள்ளுமொரு வடிவமாகக் காந்தியின் வருகை தொடர்கிறது.இதை நன்கு உணர்ந்த அமெரிக்கா காந்தியின் நிழலில் கனிந்த சுதந்திரமாக இந்தியத் தேசிய விடுதலையை திட்டமிட்டுச் செயற்படுத்திக் கருத்தியல் தளத்தில் அதை வலுவாக்கி முன்னிறுத்தியது.எதிர்காலத்தில் தனது நிதிமூலதனத்துக்கூடான நவகாலனித்துவத்தின் தலைமைப் பாத்திரத்துக்கு இந்த"இத்துப்போன அகிம்சை"அவசியமென்பதற்காக அன்று அதை ஆதரித்துத் தனது தாய்க்கு(பிரிட்டன்) ஆலோசனை வழங்கிக் காந்தியின் தயவால் "விடுதலை"வந்ததாகச் சொல்லிக்கொள்ளும் அரசியலை முன்னெடுத்தது.இது வரலாறு.
///

ஆம், இது அமெரிக்க நிறுவனங்களும், அரசு பிரதிநிதிகளும் காந்தியுடன் கொண்டிருந்த பல்வேறு தொடர்புகள் உறுதிப் படுத்துகிறது.

அமெரிக்கர்களின் இந்த தந்திரம் 1900 க்ள் முழுவதும் எல்லா நாட்டு காலனிகளிலும் அமல் படுத்தப்பட்டுள்ள ராஜ தந்திரம்.

////
இப்போதைய இந்த விவாதம் நாம் ஆற்றவேண்டிய அதிமுக்கிய நாளந்தத் தேவைகளைப் பின்தள்ளும் கருத்தியல் நகர்வாக இருக்கிறது.இத்தகைய விவாதங்கள் நமக்கு நேரே நடந்துவரும் இன்றைய ஒடுக்குமுறைகளுக்கு(அவை: பொருளாதாரம் மற்றும் அதுசார்ந்த அரசியல் சட்டவாக்க வன்முறைசார்ந்த ஒடுக்கு முறைகள்) முகம் கொடுக்காது கடந்த காலத்துக் கருத்தியல் வன்முறைமீது கவனத்தைக் குவிக்கவைப்பது மறைமுகமாக இன்றைய ஏகாதிபத்தியங்களின் நகர்வுக்கு உடந்தையாக இருப்பதற்குச் சமன்.

எனவே இத்தகைய விவாதம் ஒரு தத்துவார்த்த ஏட்டில் நடக்க வேண்டுமேயொழிய இத்தகைய தளத்திலல்ல.
///

நீங்கள் குறீப்பிடுவது சரியே, ஆயினும் இந்த அசுரன் தளத்தில் அரசு எந்திரத்தின் மக்கள் விரோத தன்மைகளை அம்பலப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வாதங்கள் எல்லாவற்றின் முடிவிலும், அஹிம்ஸையின் மூலம் தீர்வு கிடைக்கும் என்பது பற்றிய ஒரு கனவு பலரிடம் தொக்கி நிற்ப்பதை உணர்கிறேன்(இந்த அரசின் உள்ளேயே எப்படியாவது அதிகார வர்க்கத்தை சீர்திருத்தி).

அது முக்கியமாக குட்டி முதலாளித்துவ ஊசலாட்ட மனோபவத்தின் வெளிப்பாடுதான்.

இதை கையாளும் வகையற்று நிற்கிறேன் என்பதுதான் உண்மை.

விளைவு, அஹிம்ஸை குறித்த பொய்மையை உடைத்து அதனூடாக கம்யுனிசத்தின் நடைமுறை பய்ன்பாடு குறித்த பிரக்சையை ஏற்படுத்துவது மேலும் ஏகாதிபத்திய நுகர்வு தனிமனித வாதத்தை நொறுக்கும் நாட்டு பற்றை துளிரச் செய்வது என்ற நோக்கத்திலேயே இந்த விவாதத்தை தொடர்ந்து நடத்துகிறேன்.

ஆயினும் இதை இரண்டாம் பாகமாக தொடர்ந்ததில் எனக்கு சிறிது தயக்கம் இருந்தது. உங்க்ளது கருத்தைப் பார்த்த பிறகு அது வலுப்பெற்றுவிட்டது(தயக்கம்).

////
இன்றைக்கு அவசியமாக இருக்கும் அதிமுக்கிய-நாளந்த நகர்வுகளை விமர்சனத்துக்குட்படுத்தி மக்களின் மனங்களில் கனந்துகொண்டிருக்கும் புறச்சூழல்மீதான எதிர்ப்புணர்வை சாதகமாக்கி, வர்க்கவுணர்வுமிக்க மினதர்களாக்கி அவர்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்த் தூண்டுவதும்-அணித்திரட்சிக்கும் அதுசார்ந்த புரட்சிக்கட்சிகான பணிகளும் ஆற்றுவது அவசியம்.இதைவிட்டுவிட்டு,காந்தி,பாரதி என்று கவனத்தைத் திருப்பும் வேலைகளை செய்வதற்கென்றொரு ஏகாதிபத்தியக்கூலிகள் இருக்கும்போது நீங்களுமா?...புரியவில்லை.

தோழமையுடன்

ப.வி.ஸ்ரீரங்கன்
///

வரலாறு குறித்த பல்வேறு தத்துவ மயக்கங்களை நாம் ஒழித்துக் கட்ட வேண்டியுள்ளது. ஆகவே, பொருளாதார அம்சங்களை ஒரு பக்கம் விளக்கி வரும் வேலையிலேயே கலாச்சார தத்துவ மயக்கங்களை போக்கும் கட்டுரைகளும் அவசியமாகிறது.

முக்கியமாக இங்கு தமிழ் வலைப்பூ உலகில் பார்ப்பினியத்தின் ஆதிக்கமும் அது சார்ந்த கருத்தியல் வன்முறையுமே அதிகமாக காணப்படுகிறது. ஆகவேதான் இது போன்ற வரலாற்றை மறு வாசிப்பு செய்து துரோகிகளையும், அடிமை தத்துவங்களையும் அம்பலப்படுத்தி ஒரு மறு சிந்தனைக்கான வித்திடும் தேவை உள்ளதாக கருதுகிறேன்.

மற்றபடி பொருளாதார கட்டுரைகளையும் இணையாகவே எழுதி வருகிறேன்.

இன்னும் சொன்னால் மிக சமீபத்தில்தான் அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகளை முழுமையாக அம்பலப்படுத்தி, தமிழ் மணத்திலும், முத்தமிழ் குழமத்திலும் கம்யுனிசத்தின் மேன்மை நிலைநாட்டியுள்ளேன்.

ஆகவே, ஏகாதிபத்தியக் கைக்கூலிகளுடன் என்னை ஒப்பிட்டு சந்தேகித்து புண்படுத்த வேண்டாமென மன வருந்தி கேட்டுக் கொள்கிறேன்.

நிற்க,

ஏகாதிபத்திய பொருளாதார சுரண்டல்களை மட்டும் அம்பலப்படுத்தி எழுதுவது என்பது இந்தியா போன்ற நாடுகளில் அதி அவசியமாக தேவைப்படும் அதே நேரத்தில், நிலபிரபுத்துவ தத்துவமான பார்ப்பினியம், அதன் பல்வேறு வடிவங்களையும் நாம் உடைத்தெறிய வேண்டிய கடமை உள்ளதை மறுக்கிறீர்களா தோழர். ஏனேனில் பாரதி, தேவர், காந்தி குறித்த கட்டுரைகள் எல்லாமே அந்த வகையில் வந்தவைதான்.

ஒரே சமூக பொருளாதார காரணிதான் புரட்சிகர மற்றும் எதிர்புரட்சி பாசிச சக்திகள் இரண்டும் வளர மூலகாரணமாகிறது. இதில் எதிர்புரட்சி பாசிச சக்திகள் ஏற்கனவே ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்துள்ள வரலாற்று திரிபு கருத்துகளின் துணை கொண்டே வளர்கின்றன, அப்படியிருக்கையில் அதனை எதிர்க்க வேண்டிய புரட்சிகர சக்திகள் வரலாற்றை சரியான கோணத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய கடமை இருப்பதை மறுக்கிறீர்களா?

சிறிது தமிழ்மணத்தின் சூழலை உற்றூ நோக்குங்கள், வந்தே மாதரம் பாடலின் அழகியலில் மயங்கி அதன் வரலாற்றை புறக்கணிக்கிறார்கள். இந்த இடத்தில் வந்தேஏமாத்துறோம் என்ற கட்டுரையின் பாத்திரம் சாலவும் மெச்சத்தக்கதே.

சித்தாந்த புரிதலில்லா பாரதியின் ரசிகர்களை வலைத்து பிடிக்க தூண்டில் போடுகிறார் மலர்மன்னன் என்னும் இந்துத்துவ வெறியன். இங்கு 'பார்ப்பன் குடுமியில் பாரதியின் மீசை' கட்டுரையின் தேவை வெகுவாக எழுகிறது(அந்த கட்டுரையை படித்து தெளிந்த பலர் தனிமடலில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சில கெட்டு தட்டிப் போன மாற்றங்களை விரும்பா கிழட்டு மூளைக்காரர்களை தவிர்த்து பாரதியின் கட்டுரை சிந்தனை ரீதியாக நல்ல மாற்றத்தை உருவாக்கியது).

மாப்ளா கலகத்தின் துணை கொண்டு இன்னொரு கலகம் விளைவிக்க முயன்றார் மலர்மன்னன் அதை எதிர்த்து முறியடிப்பது இங்கு நமது கடமையில்லையா?

ஒரு அடிப்படை விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். வலைப்பூ உலகின் பிரதான இலக்கு தகவல் தொழில் நுட்ப துறையினர். அவர்களின் அரசியல் விழிப்புணர்வு என்பது பொருளாதார ரீதியாக சமீப காலங்களில்தான் வடிவம் பெறத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் கருத்தத்தளத்தில் நாம் இப்பொழுது செய்யும் வேலை எதிர்காலத்தில் மிகச் சிறந்த் பலன் கொடுக்கும் என்பது எனது எண்ணம்.

மற்றபடி காந்தி விவாதம் இரண்டாம் பாகம் தேவையற்றது என்ற உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆயினும் தொடங்கியாகிவிட்டபடியால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

உங்களது கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.

தோழமையுடன்,
அசுரன்

Related Posts with Thumbnails