TerrorisminFocus

Monday, November 13, 2006

உங்களின் இரக்கம் உண்மையானதா?

உங்களின் இரக்கம் உண்மையானதா? ...

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hostingஜார்கண்டு மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்திலுள்ள பாத்திஹ் நிலக்கரிச் சுரங்கத்தில் செப்-6-ந் தேதி முன்னிரவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில், தரை மட்டத்தில் இருந்து 599 மீட்டருக்கு கீழே நிலக்கரியை வெட்டி எடுக்கச் சென்றிருந்த 50 தொழிலாளர்கள் பரிதாபகரமாக இறந்து போனார்கள். இரண்டு நாட்கள் கழித்துதான் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் தலையில் அணிந்திருந்த சுரங்க விளக்கில் போடப்பட்டிருந்த எண்ணை வைத்துதான், இறந்து போன தொழிலாளர்களை அடையாளம் காண முடிந்தது. அந்தளவிற்கு அவர்களின் உடல்கள் வெந்து கருகிப் போயிருந்தன.


நான்கு மாதங்களுக்கு முன்பு அரியானா மாநிலத்தில் பிரின்ஸ் சந்தர் என்ற ஆறு வயதுச் சிறுவன் 60 அடி பள்ளத்திற்குள் விழுந்து உயிருக்கும் போராடியதைப் பத்திரிக்கைகள் பரப்பரப்பான தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. இச்சிறுவன் உயிர் பிழைப்பதற்காக பலர் வேண்டிக் கொண்டதை தொலைக்காட்சிகள் திரும்ப திரும்ப ஒளிபரப்பின. நாட்டில் கருணை செத்துப் போய்விடவில்லை எனப் பத்திரிக்கைகள் எழுதின. ஆனால், 500 மீட்டர் ஆழத்தில் மாட்டிக் கொண்ட நிலக்கரிச் சுரங்க தொழிலாளர்களுக்காக, அவர்களின் உறவினர்களைத் தவிர, வேறு யாரும் கண்ணீர் விட்டதாகத் தெரியவில்லை. அச்சிறுவனின் உயிரைவிட, இத்தொழிலாளர்களின் உயிர் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது?


அதிகார வர்க்கம் 50 தொழிலாளர்கள் செத்துப் போனதை "விபத்து" என்கிறது. ஆனால், பாத்திஹ் சுரங்கத் தொழிலாளர்களோ இதனைப் படுகொலை என்கிறார்கள். இந்த நிலக்கரிச் சுரங்கம் மிகவும் அபாயகரமான சுரங்கம் என அரசாலேயே வகை பிரிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சுரங்கத்தில் உள்ள மின்சாரக் கம்பிகளை மாற்றியே 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், சுரங்கத்தில் இறங்கும் தொழிலாளியின் உயிருக்கும் என்ன பாதுகாப்பு கிடைத்திருக்கும்?


இந்த 'விபத்து' நடந்த அதே சமயத்தில், வேலை வாய்ப்பில்லாத 30 ஏழை இளைஞர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் கைவிடப்பட்ட ஒரு நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரியை எடுத்து வருவதற்க்காகச் சுரங்கத்தினுள் இறங்கியிருக்கிறார்கள். அப்பொழுது சுரங்கத்தினுள் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட இவர்களைக் காப்பாற்ற அதிகார வர்க்கம் பெரிய முயற்சி எதுவும் செய்யவில்லை. மாறாக, இளைஞர்கள் நிலக்கரியைத் திருடுவதற்க்காகச் சட்ட விரோதமாக சுரங்கத்தினுள் இறங்கியிதாகத் திருட்டுப் பட்டம் கட்டித் தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழித்தார்கள். இப்படிப்பட்ட கல் நெஞ்சுக்காரர்கள் ஏழைகள் மீதும், தொழிலாளர்கள் மீதும் காட்டும் இரக்கம் உண்மையானதாக இருக்க முடியுமா?


அதிகார வர்க்கத்தை விடுங்கள். தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து கண்ணீர் உருக்கும் உங்களில் எத்தனை பேர், சுரங்கத் தொழிலாளர்கள் செத்துப் போனதற்கு அனுதாபப்பட்டிருப்பீர்கள்? நிழலைப் பார்த்து அனுதாபப்படும் நீங்கள், நிஜத்தைப் பார்த்து மரக்கட்டை போல் இருக்கின்றீர்கள் என்றால், உங்களின் இரக்க குணம் உண்மையானதாக இருக்க முடியுமா?


"நாங்கள் ஒவ்வொரு நாளும் சுரங்கத்தினுள் இறங்கும் பொழுது, உயிரோடு மீண்டு வருவோமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது" என்கிறார்கள் பாத்திஹ் சுரங்கத் தொழிலாளர்கள். அவர்கள் தினந்தோறும் உயிரைப் பணயம் வைக்கவில்லையென்றால், நாட்டிற்கு நிலக்கரி கிடைக்காது; நிலக்கரி இல்லையென்றால், மின்சாரம் இருக்காது; தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்காது; கண்ணீர் வடிக்கும் தேவையும் உங்களுக்கு இருக்காது!


புதிய ஜனநாயகம் (நவம்பர் - 2006) (பின் அட்டைக் கட்டுரை)

(படங்கள்: நன்றி, தி ஹிந்து)

Related Links:
http://www.hinduonnet.com/fline/fl2319/stories/20061006003102800.htm

http://www.rediff.com/news/2006/sep/12mine.htm

15 பின்னூட்டங்கள்:

said...

கொடுமையான நிகழ்வுகள்.. நேற்று CNN-IBNல் ஒரு செய்தி.. ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள குப்பம் பகுதியில் இருந்து மும்பை சென்ற கூலி தொழிலாளர்கள் பிளாட்பாரத்தில் இரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு கார் நடைபாதை மேல் ஏறி 6 பேரை நசுக்கிக் கொன்றுள்ளது மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.. இதை 'விபத்து' என்று விட்டு.. அழும் உறவினர்களின் காட்சிகளைக் காட்டி நன்றாக கல்லா கட்டினார்கள்..

இதில் எது விபத்து என்று புரியவில்லை..

1)சொந்தமாக வீடில்லாமல் நடைபாதையில் உறங்கியது விபத்தா?

2)விவசாயம் பொய்த்து சொந்த மண்னை விட்டு உள்நாட்டு அகதியாய் கூலித் தொழிலாளியாய் ஆக்கப் பட்டது விபத்தா?

மக்களுக்கு கொஞ்சம் சோகச் சுவை தேவை. அது மெகா சீரியலோ அல்லது 'விபத்துகளோ'..மொத்தத்தில் 'அய்யோ பாவம்' என்று சொல்லிக் கொள்ள ஏதாவது ஒன்று தேவை..

said...

மிகவும் வேதனைக்குறியது.
தன் தொழில், தொழிலாளர்கள், வேலை செய்யும் இடம் இவைகளின் மீது அக்கரை இல்லாத தொழிலதிபர்கள் எதை நம்பி தொழில் நடத்துகின்றனர்? அரசாங்கங்கள், அலவகங்கள் எதற்கோ? நுகர்வோர் எனும் உயிர்குடிக்கும் சுயநல பேய் சமுதாயத்திற்கு இதெல்லாம் ஒன்றும் பெரிய கவலை அல்ல. சொல்லப்போனால், பொதுமக்கள் நிஜ வாழ்க்கையை டி.வி+சினிமா ஆகியவைகளோடு போட்டு குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். எது உண்மை, எது பொய் என்று இனம் பிரிக்கத் தெரியாமல் தத்தளிக்கிறார்கள். இவர்களின் மனமும் உணர்ச்சிகளை மறுத்து போதை நிலமையில் அடைபட்டு அடிமையாக இருக்கிறார்கள்.

said...

வெறும் நாற்பது தொழிலாளர்கள் தான் இறந்தாற்களா.. நான்கு லட்சம் விவசாயிகள் இறந்ததற்கே நாங்கள் வருத்தப் பட மாட்டோம்.

நாட்டுல அங்க இங்கனு ஆயிரம் பேர் சாவான். எல்லாத்துக்கும் வருத்த பட முடியுமா...

உங்களுக்கு வேற வேலையே இல்லையா..

அவன் அவன் நாடு முன்னேறுதுன்னு கூகுள்ல தேடி தேடி புள்ளி விவரம் கண்டுபுடிச்சு போட்டு மக்களை சந்தோசப் படுத்தினா.. எதோ ஒரு பத்திரிக்கையில் போட்டதை வெட்டி ஒட்டிட்டா... நாங்கள் உடனே கண்ணீர் வடிச்டுடுவோமா...ஒன்பது மணி சீரியலுக்கு அழுவதற்கு நீங்களா வந்து கடன் தருவைங்க...

இதையும் வேலை இல்லைனு படிச்சு நானும் பின்னூட்டம் போட்டு.. இந்நேரம் ஆர்க்குட்ல ரெண்டு பிகரை கணக்கு பன்னி இருக்கலாம்....

said...

மன்னிக்க வேண்டும் அசுரன் அவர்களே.. எனது கோபத்தை வேறு விதமாக வெளிப்படுத்த தெரியவில்லை..

வசந்த்

said...

அரசாங்கம் கண் துடைப்பிற்காவது ஏதாவது நிவாரணம் கொடுத்தாற்களா..

வசந்த்

said...

rajavanaj,

// 1.) சொந்தமாக வீடில்லாமல் நடைபாதையில் உறங்கியது விபத்தா?

2)விவசாயம் பொய்த்து சொந்த மண்னை விட்டு உள்நாட்டு அகதியாய் கூலித் தொழிலாளியாய் ஆக்கப் பட்டது விபத்தா?

மக்களுக்கு கொஞ்சம் சோகச் சுவை தேவை. அது மெகா சீரியலோ அல்லது 'விபத்துகளோ'..மொத்தத்தில் 'அய்யோ பாவம்' என்று சொல்லிக் கொள்ள ஏதாவது ஒன்று தேவை..
//

உண்மை..

நன்றி
வசந்த்

said...

எண்ணிக்கையில் அடங்கா கொடுமைகள் எங்கு எப்படி ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை.இதற்காகத்தான் வரி செலுத்தி அரசாங்கத்த நடத்துகிறோமா?

நிலக்கரிக்கு என்று ஒரு துறையும் அதற்கென்று அதிகாரிகள் அமைச்சர்கள் உள்ளனரே? இவர்களால் எப்படி தூங்க முடிகிறது.

நீ எப்படி இறக்கிறாய் அல்லது எவ்வளவு செல்வாக்குடன் இருக்கிறாய் என்பது முக்கியம்.

சாதரண மனிதனின் உயிர்கள் சாதாரணமானதே.இவர்கள் என்ன அமைச்சரின் வாரிசுகளா?

இவர்கள் செத்தால் நாட்டுக்கு என்ன கேடு? அப்படித்தான் அரசாங்கம் இருக்கிறது.

இது பற்றி தெரிந்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. :-((((((

said...

அசுரன்,

எனது மேற்கண்ட முதல் பின்னூட்டத்தில் ஏதேனும் குறை இருந்தால் தயவுசெய்து நீக்கி விடவும்..

குறைந்தபட்சம் இந்த வரிகளையாவது...

///இதையும் வேலை இல்லைனு படிச்சு நானும் பின்னூட்டம் போட்டு.. இந்நேரம் ஆர்க்குட்ல ரெண்டு பிகரை கணக்கு பன்னி இருக்கலாம்.... //

நன்றி
வசந்த்

said...

///
எனது மேற்கண்ட முதல் பின்னூட்டத்தில் ஏதேனும் குறை இருந்தால் தயவுசெய்து நீக்கி விடவும்..

குறைந்தபட்சம் இந்த வரிகளையாவது...

///இதையும் வேலை இல்லைனு படிச்சு நானும் பின்னூட்டம் போட்டு.. இந்நேரம் ஆர்க்குட்ல ரெண்டு பிகரை கணக்கு பன்னி இருக்கலாம்.... //

நன்றி
வசந்த்
///


வசந்த்,

அந்த வரிகள் இழவு வீட்டில் கேளிக்கை கொண்டாடும் சுரனையற்ற சமூகத்தின் வக்கிரத்தை குத்திக் காட்டுவதாகவே உள்ளது.

சுனாமி அடித்து பல ஆயிரம் பேர் இறந்த அந்த வருடமே புத்தாண்டு கொண்டாட அறைகூவி அழைத்த வக்கிரம்..

மக்களை பிச்சைக்காரர்களாக்கி நிவாரண பொருட்களைப் பெற முண்டியடிக்க செய்து 42 பேரை கொன்ற சம்பவத்தில் அந்த மக்களின் மீதே குற்றம் சுமத்திய வக்கிரம்....

இவற்றை குத்திக்காட்டுவதாகவே உள்ளது அந்த வரிகள்.

பல்லாயிரம் குடும்ப்ங்கள் உலகமய பொருளாதார திட்டம் எனும் சுனாமியால் அழிந்து நாசமாகிக் கொண்டிருக்கும் பொழுதே, லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் பொழுதே திறமை, முன்னேற்றம் என்று வக்கிரமாக பேசுவதை குத்திக் காட்டுகிறது அந்த வரிகள்....

இந்த உலகமய பொருளாதாரத்தின் தற்காலிக சுகங்களை அதுவும் பலியாடுக்கு கொடுக்கப்படும் ஊட்டச்சத்தை ஒத்த வகையில் அனுபவிக்கும் அதி உயர் சம்பள் சலுகைகளுக்காக தனது எதிர்காலம், தனது குடும்பத்தின் எதிர்காலம், இந்த சமூகத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளை பீ துடைத்த கல்லாக எட்டி வீசிவிட்டு, சுகநாட்டவாதமும், பிழைப்புவாதமும் பேசும் நடுத்தர வர்க்க தகவல் தொழில் நுட்ப தொழிலாளர்களின் அலட்சியம் கலந்த வக்கிரத்தையும், மிகவும் குறுகிய தனிநபர் வாதத்தையும் இந்த வரிகள் குத்திக் காட்டுகிறது....

ஆகவே.... அவை இருக்கட்டும்....

அசுரன்

said...

சாவும், இழப்பும் யாருக்கு என்பதைப் பொறுத்துத்தான் மதிப்பைப் பெறுகிறது. ஊடக கவனத்தையும் பெறுகிறது.

"வெகுசன" ஊடகங்கள் வறிய மக்கள் வாழ்வை, உணர்வை அக்கறைப்படுத்துவதில்லை. செய்தியின் விற்பனைதான் குறிக்கோளாக இருக்கிறது.

ஒரு அரசியல்வாதியின் நாய்க்குட்டி காணாமல் போய்விட்டது என்பதுதான் பொதுவான முக்கிய செய்தியாகும்.

said...

//1)சொந்தமாக வீடில்லாமல் நடைபாதையில் உறங்கியது விபத்தா?

2)விவசாயம் பொய்த்து சொந்த மண்னை விட்டு உள்நாட்டு அகதியாய் கூலித் தொழிலாளியாய் ஆக்கப் பட்டது விபத்தா?
//

மருதையனின் உரை வீச்சின் பாதிப்பு....

சரியான இடத்தில் இந்த வரிகளை சொல்லியுள்ளீர்கள் ராஜவனஜ்.

ஒரு சுரண்டல் சமுதாயத்தில் எதுவுமே விபத்து அல்ல. ஏனெனில் அவற்றில் பாதிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் என்ற அம்சம் அதை அந்த சூழலின் துரதிருஷ்டம் என்ற அம்சத்தைத் தாண்டி, வர்க்க பார்வைக்கு உட்படுத்தும் தேவையை உருவாக்குகிறது.//
மக்களுக்கு கொஞ்சம் சோகச் சுவை தேவை. அது மெகா சீரியலோ அல்லது 'விபத்துகளோ'..மொத்தத்தில் 'அய்யோ பாவம்' என்று சொல்லிக் கொள்ள ஏதாவது ஒன்று தேவை..
//

அது வெறுமனே சோக சுவை நாடும் தேவை மட்டுமல்ல, ஊடகங்களுக்கு வியாபாரம், பார்வையாளர்களுக்கு செயலூக்கமில்லா வகையில் சமூக உணர்வின் அரிப்பை சொறிந்து கொள்ளும் தேவையை நிவர்த்தி செய்வது, உண்மையான ஒரு செயலூக்கமுள்ள சமூக உண்ர்வையும் இது போன்ற சம்பவங்களில் மூழ்கடிப்பதன் மூலம் முனை மழுங்க செய்வது - என்று பல முனை அனுகூலங்களை உடையது.

அசுரன்

said...

வசந்த உங்களது கோபத்தை தேக்கி வைத்து சரியாக வெளிப்படுத்துங்கள்.


//சாதரண மனிதனின் உயிர்கள் சாதாரணமானதே.இவர்கள் என்ன அமைச்சரின் வாரிசுகளா?

இவர்கள் செத்தால் நாட்டுக்கு என்ன கேடு? அப்படித்தான் அரசாங்கம் இருக்கிறது.

இது பற்றி தெரிந்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. :-(((((( //

கல்வெட்டு,

ஆம், இந்த அலட்சியம் ராஜவனஜ் குறிப்பிட்டிருந்தது போல விபத்து அல்ல. இது இந்த அரசின் வர்க்க சார்பை துலக்கமாக அம்பலப்படுத்தும் தருணங்கள்.மாசிலா,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, நாம்தான் பல்வேறு வழிகளில் இந்த சமூகத்தை கருத்து மயக்கத்திலிருந்து மீட்க போராட வேண்டும்.

அசுரன்

said...

அசுரன்,

நல்ல பதிவு. இது வேறெப்படியும் என் பார்வைக்கு வராமலிருந்ததே உங்கள் கேள்வியின் நியாயத்தை உணர்த்துகிறது.

இங்கே இந்தப்பதிவுக்கு இணைப்புக் கொடுத்துள்ளேன்.

said...

suresh,

இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி.

இது நமது ஊடகங்களின் அப்பட்டமான வர்க்க சார்பின் பிரதிபலிப்பே

அசுரன்

said...

//சாவும், இழப்பும் யாருக்கு என்பதைப் பொறுத்துத்தான் மதிப்பைப் பெறுகிறது. ஊடக கவனத்தையும் பெறுகிறது.

"வெகுசன" ஊடகங்கள் வறிய மக்கள் வாழ்வை, உணர்வை அக்கறைப்படுத்துவதில்லை. செய்தியின் விற்பனைதான் குறிக்கோளாக இருக்கிறது.

ஒரு அரசியல்வாதியின் நாய்க்குட்டி காணாமல் போய்விட்டது என்பதுதான் பொதுவான முக்கிய செய்தியாகும்.

//

பொறுக்கி,

ஆம், மார்க்ஸ் சரியாகவே இதை சுட்டுகிறார். அனைத்துமே கடைச் சரக்காக சந்தைப் பொருளாக, முந்தைய புனிதங்கள் எல்லாம் அவற்றின் உண்மையான வடிவத்தில் அணிவகுத்து நிற்க்கும்.

அன்பு, நேசம், பாசம், காதல், கோபம், வெறுப்பு, பொறாமை, ஏமாற்றம் என அனைத்தும் கடைச் சரக்காக ஒரு மணிநேரத்துக்கு இன்ன விலை என்றூ விற்க்கப்படும் காலமிது.

இதில் இந்த உண்ர்வுகளின் உண்மை வடிவத்தில் அனுபவிப்பதற்க்கு தயாராயில்லாத அளவில் மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். (அதாவது தாய் பாலை வெறுத்து அதை கோக் பாட்டிலில் கொடுத்தால் குடித்து பழகியதாக உதாரணம் எடுத்துக் கொண்டால்).

ஊடகங்களும் வர்க்க சார்புடைய்வவைதான்.

சினிமாக்களில் ஒரு மேட்டுக்குடி ஆசாமியின் விரகதாபமும், காதல் தோல்வியும், குடும்ப சிக்கலும் ஆக்கிரமிக்கும் பரப்பில் லட்சத்தில் ஒரு ப்ங்கைக் கூட பெரும்பானமை மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை.

அசுரன்

Related Posts with Thumbnails