பத்ரி என்பவர் இந்தியாவில் ஏழ்மை ஒழிப்பில் அக்கறை செலுத்தி அதற்க்கான ஒரு தீர்வாக
பொருளாதார அமைப்பு ஒன்றை தனது கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
பத்ரியின் நல்ல நோக்கங்கள் பாராட்டுக்கு உரியது.
அந்த கட்டுரை நல்ல விசய்ம்தான்.
முதலாளித்துவ வளர்ச்சிக்கு இது போன்ற பொருளாதார அமைப்புதான் இன்றைய இந்தியாவின் தேவை. இத்துடன் துண்டு துக்காடாவாக இருக்கும் நிலங்களை இணைத்து கூட்டுறவு பண்ணைகள் மூலம் ஒருங்கிணைந்த மையப்படுத்தப்பட்ட முன்னேறிய வடிவத்தில் விவசாய உற்பத்தியும் மாற்றி அமைக்கப்பட்டால், நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பு ஒரளவு புதிய ஜன நாயாக புரட்சிக்கு பிந்தைய இந்திய பொருளாதார அமைப்பை ஒத்திருக்கிறது.
புதிய ஜனநாயக பொருளாதார அமைப்புக்கும், பத்ரி கூறிய அமைப்புக்கும் உள்ள மிக மிக முக்கியாமான வித்தியாசம் என்ன என்பதையும், அந்த வித்தியாசங்களின் அடிப்படையில் பத்ரி கூறிய அமைப்பு எப்ப்டி ஒரு உட்டோ பியன் கனவு என்பதையும் விளக்குகிறேன்.
#1) விவசாயத்தை - விவசாயிகளை விரட்டயடிக்காமல், முதலாளித்துவ மயமாக்கும் விசயம் நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பில் இல்லை என்பது ஒரு முக்கியமான விசயம்.
#2) மற்றொரு விசயம் இந்த பொருளாதார சீர்திருத்தம், எந்த விதமான அரசு அதிகாரம் செலுத்தும் போது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதில்தான் இந்த பொருளாதார அமைப்பு வரமா, சபாமா என்பது அடங்கியுள்ளது.
*********
முதல் விசயத்தில் விவாதிக்க ஒன்றுமில்லை. அது வெளிப்படையாக தெரியும் விசயம்.
இரண்டாவது விசய்ம்தான் சிறிது விளக்கம் தேவைப்படுகிறது.
பத்ரி, மேற்சொன்ன பொருளாதார அமைப்பு(விவசாய சீர்திருத்தம் தவிர்த்த) இந்தியா முழுவதும் வீச்சாக அமல் படுத்தப்படுமா?
அமல்படுத்தப்படுவதற்க்கான(இதே வடிவத்தில் இல்லாவிட்டாலும் வேறு வடிவங்களில் - Ex. உலக வங்கி உதவியுடன் தற்பொழுது செயல்படுத்தப்படும் கிராம சுய தேவை பூர்த்தி செய்யும் திட்டங்கள்) சாத்தியம் அதிகமுள்ளது. இதைப் பற்றி இந்த பின்னூட்டத்தின் பிற்பகுதியில் சொல்கிறேன். அவ்வாறு அமல் படுத்தப்படுவதில் இந்தியாவின் வளங்களை கொள்ளையிடும் ஏகாதிபத்திய சதியும் அடங்கியுள்ளது என்பதை மட்டும் இப்பொழுது குறிப்பிடுகிறேன்.
இது போல ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மக்கள் தேவைக்காக உற்பத்தி செய்வது தற்பொழுது கூட்டுறவு பண்ணைகளின் கையில் உள்ளதால் அதில் சேகரமாகும் மூலதனம் மீண்டும் மக்கள் நலனுக்கு செலவழிக்கப்படுகிறது.
இதில் குறிப்பிட்ட அளவு தனியார் மூலதனத்தை அனுமதிப்பதும் சரிதான். ஆனால் எந்த அமைப்பில் இந்த கிராம பொருளாதார சீரமைப்பு நடைபெறுகிறது?
இந்தியவின் அரசியல் பொருளாதார மூக்காணங் கயிறு முற்று முதலாக ஏகாதிபத்தியங்களின், MNC க்களின் கையில் இருக்கும் ஒரு சூழலில் நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பு நடைமுறைக்கு வருகிறது. (தனித் தனியாக பல இடங்களில்(ஒரு 1000 கிராமங்களுக்கு ஒரு மண்டலம் என்று வைத்துக் கொள்வோம்)).
இதில் தனியார் முதலீடும் வருகிறது. இதன் வளர்ச்சி காலப்போக்கில்(ரொம்ப காலமெல்லாம ஆகாது) கிராம வளங்கள் அனைத்தும், ஒரு சில தனியார் வசம் - ஏற்கனவே சாதி மற்றும் இன்னபிற நிலபிரபுத்துவ பிற்போக்கு தளைகளால் சக்திவாய்ந்தவர்கள் - கையில் சென்று மையப்படுத்தப்படும், இதே நேரத்தில் மக்கள் அரசு என்பதையும் நம்பி இல்லாமல், தங்களது அத்தனை தேவையையும் பணம் கொடுத்து வாங்கப் பழக்கப்பட்டிருப்பார்கள். (இப்படி ஒரு உணர்வுக்கு மக்கள் வந்தடைவதில், MNCக்கு உள்ள அட்வான்டேஜ் என்ன என்பதை கடைசிப் பகுதியில் சொல்கிறேன்.)
இந்த சமயத்தில் பகுதி அளவில் வளர்ச்சியடைந்த அந்த முதலாளிகளை தரகு முதலாளிகள் அல்லது MNCக்கள் விலைக்கு வாங்கி(acquisition) தங்களது சந்தையை விரிவுபடுத்திக் கொள்வார்கள். இந்த இடத்தில் இந்தியாவின் கிராம வளங்களையும், சந்தையையும் கையகப்படுத்தும் ஏகாதிபத்திய தந்திரம் நிறைவடைகிறது.
இதற்க்கு ஏன், ஏகாதிபத்தியங்கள்(WTO, Worl Bank) தலையை சுற்றி மூக்கைத் தொடும் ஒரு process-யை தேர்ந்தெடுக்கிறார்கள்?
#1)இந்தியா மிகப் பெரிய சந்தை. இந்தியாவில் தற்பொழுது MNC க்களின் கையை கிட்டும் அளவில் உள்ள சந்தையே மிகப் பெரிது. ஆனால் அந்த சந்தை இந்தியாவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் பொழுது மிக சிறிது(30 கோடி - rough estimation).
மீதியுள்ள 90 கோடி பெரும்பாலும் சிறு முதலாளிகள், அரசு நிறுவனங்கள், கிராம உதிரி உற்பத்தி நிலையங்கள்(துண்டு நிலங்கள் etc) கையில் உள்ளன. இந்த சந்தை ஏகாதிபத்தியங்க்ளின் target.
#2) இந்தியாவின் வளங்கள் - தண்ணீர், நிலம் பிரதானமாக - இன்னும் நிலபிரபுத்துவ பிற்போக்கு கிராம சார்ந்ததாக உள்ளது, இந்த வளங்களை கைப்பற்றை தனது சந்தை தேவைக்கு உபயோகப்படுத்துவது இரண்டாவது target.
இந்த இரண்டு விசயத்திலும் நம்மிடம் போட்டி போடும் நம்மை விஞ்சும் ஒரு நாடு - சீனா.
ஆனால் சீனா அரசு ஒரு கம்யுனிஸ்டு அரசாக இன்று இல்லாவிட்டாலும் கூட, அது ஒரளவுக்கு தேசிய முதாலாளிகளின் நலன்களுக்கான அரசு என்பதை சொல்லிவிடலாம். அவர்களின் சந்தையும், வளங்களும் ஏற்கனவே முதலாளித்துவ உற்பத்தி முறை நன்கு வளரந்த அந்த ஊர் தேசிய முதலாளிகள் கையில் இருப்பதும், MNC - க்கள் இந்தியாவில் செய்வது போல் அங்கு விளையாட முடியாது என்பதும் சேர்ந்து இந்தியாவை போட்டியின்றி முதல் இடத்தில் வைக்கிறது.
ஆக, இப்படி ஒரு மிக மிக முக்க்யாமான ஒரு சந்தையில்- ஒரு வளங்களுக்கான பின் நிலத்தில் , நடைமுறைப்படுத்தப்படும் அவர்களின் சதி திட்டம் வெற்றியை உறுதிப் படுத்தும் விதமாக பல இடங்களில் பரிசோதித்த மாடல்களின் விளைவான ஒரு திட்டமாக இருக்க வேண்டும்.
MNC -க்களுக்கு ஏற்கனவே லத்தீன் அமேரிக்க நாடுகளில் படு மோசமான அனுபவங்க்ள் உண்டு. பல இடங்களில் MNC-க்களின் சேவையால் ஆத்திரமுற்று மக்கள் பல கம்பேனிகளை அடித்து விரட்டியிருக்கிறார்கள் (அப்படி வெளியேறிய கம்பேனிகள் GATS போன்ற ஒப்பந்தத்தின் சரத்துக்களில் உள்ளபடி அந்த அரசாங்கங்களிடமிருந்து நஸ்டயீடு பெற்றுவிட்டன என்பது இன்னோரு கொடுமையான விசயம் - இந்தியாவில் இதற்க்கு உதாரணம் மகாராட்டிர என்ரானுக்கு மின்சாரம் தாயரிக்காமல் இருக்க ஒவ்வொரு வருடமும் சில நூறு கோடிகள் கொடுத்த விசயம்).
அந்த அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டது, மக்கள் விலை கொடுத்து வாங்க பழக்கப்படுத்த வேண்டும் என்பதும், தங்களது பிரச்சனைகளுக்கு அரசையையோ வேறு யாரையுமே நிர்பந்திக்கூடாது எனும் எண்ணத்தை தார்மீக ரீதியாக அவர்கள் மனதில் உருவாக்குவதும். அதாவது தமது பிரச்சனைக்கு தான் தான் காரணம் என்ற உணர்வை மக்களிடம் உருவாக்குவதுதான்.
அதாவது பின்வரும் எடுத்துக்காட்டை பார்க்கவும்,
////
ஒரு தலைவர்: இந்த கம்பேனியின் சுரண்டலை எதிர்த்து போராடி அரசை கேள்வி கேட்டு போராட வேண்டும்.
மக்கள்: அரசு என்னப்பா செய்யும், நாமதான 10 வருச ஒப்பந்தம் ஒரு கோடி ருபாய் வாங்கிக்கிட்டு தண்ணீய அவனுக்கு வித்தோமே. எல்லாம் சட்டப்படி நாம செஞ்ச தப்பு. அந்த கம்பேனிட்ட ஏதாவது பேசி வேலை ஆகுதானு பார்ப்பம். அதவிட்டு போராடுனா, Govt போலிசோட வந்து அடிச்சு நொறுக்கிடுவான் - அரசுக்கு சட்ட ஒழுங்கு ரொம்ப முக்க்யம், அரசு, அவன் கடமையை செய்ய வேண்டாமா?....(அந்த கம்பேனி விலை குறைவாக தண்ணீர் கொடுத்தால் தரம் குறைவாகத்தான் கொடுப்பேன் என்று மோசமான தண்ணீரை கிராமத்துக்கும், நல்ல சுத்திகரிக்கப்பட்ட நீரை ஐரோப்பவிற்க்கும் ஏற்றுமதி செய்யும் - அந்த சமயத்தில் ஐரொப்பாவில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்தில் லாபம் பார்ப்பதற்க்காக. இதனை ஒத்த அனுபவம் பொலிவியா கொச்சபம்ப நகரத்தில் நடந்து, மக்களே அணீதிரண்டு அந்த கம்பேனி அடித்து விரட்டினர்.)
////
தண்ணீர் போன்ற அதி அவசிய பொருட்களை விலை கொடுத்து வாங்க மக்களை பழக்கப்படுத்துதல் என்ற சரத்து GATS ஒப்பந்தத்தில் உள்ள விசய்ம்.
இன்னொரு முக்கிய சரத்து:
லாபத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும்(அதாவது புரட்சி, போர் அல்லது வேறு காரணத்தால் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்ப்பட்டால் அரசு நஸ்டஈடு தர வேண்டும் - Ex: என்ரான்)
பத்ரியின் அமைப்பு ஏகாதிபத்திய சேவை நோக்கி போவதற்க்கும், இதனை ஒத்த புதிய ஜனநாயக பொருளாதார அமைப்பு மக்கள் சேவையை நோக்கி போவதற்க்கும் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று அதிகாரத்தில் உள்ள அரசு எனில்,
இன்னோரு முக்கிய காரணம்,
பத்ரியின் அமைப்பு தவிர்க்க இயலாமல் தனியார்மயத்தை நோக்கிப் போகும்(சந்தை தேவைதான் அதை ஒந்தித் தள்ளும், மக்களின் தேவையல்ல)ஆனால் புதிய ஜனநாயக அமைப்பு முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கான அளவில் தனியார் மயத்தை வைத்துக் கொண்டு அந்த வரம்பை எட்டும் போக்கில் தனியாரின் தேவை சிறிது சிறிதாக சுருங்கி இறுதியில் இல்லாமல் போய்விடும்.
ஆக, மேற் சொன்ன இந்த காரணங்களினால்தான் பத்ரி சிலாகித்து எழுதியிருந்த பொருளாதார அமைப்பு அதன் உண்மையான வர்க்கச் சார்பில் ஒரு கானல் நீராக/ஏகாதிபத்திய சேவை செய்வதாக உள்ளது.
பத்ரி மற்றும் இந்த பொருளாதார அமைப்புக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆனால் இந்த அமைப்பு வெற்றிகரமாக மக்களின் வாழ்வை வளம் செய்ய போதுமான நிலைமைகள் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது பகுத்தறிவாக இருக்காது.
மேலும், பத்ரியே சொல்வது போல் அந்த சிறு பகுதியே 6 கோடி அளவிலான சந்தையைக் கொண்டுள்ளது. அதை MNCக்கள் விட்டு வைக்கும் என்ற நம்பிக்கைக்கு உத்திரவாதம் கொடுக்கும் அள்விற்க்கு நம்மை ஆள்பவர்கள் நேர்மையாக இல்லை என்பதையும், அதாவது சாதரண(commener) மக்கள் நலனை முன்னிறுத்தும் ஒரு அரசு ஆட்சி செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.