TerrorisminFocus

Tuesday, August 22, 2006

மொசக்குட்டிகளும், கழுதைபுலிகளும் - சந்துத்துவத்தின் கதை

தேவர் என்னும் சாதி வெறியர் பற்றிய கட்டுரையில் கீழ் காணும் பின்னூட்டம் வந்திருந்தது. இதற்க்கு பதில் சொல்லும் முகமாக ஒரு சின்ன ஆக்கப்பூர்வமான என்டர்டெய்ன்மென்ட் ஒன்னு பன்னலாமேன்னு தோனுச்சி.


////மற்றொன்று அடக்குமுறைக்கு எதிரான ஆற்றமையின் வெளிப்பாடு. அது சரியான அமைப்பு வடிவில் வரவில்லை என்று வேண்டுமானல் தங்களது வாதத்தை வையுங்க்ள் //
இந்துமத தத்துவங்களுக்கு எதிராக தற்போது நடந்து வரும் அடக்குமுறையின் வெளிப்பாடாய் காலப்போக்கில் கிளர்ந்து எள இருக்கும் இந்தியர்களின் இயக்கத்தையும் இதே கண்கொண்டு தங்களால் பார்க்க இயலுமா?

commented by Parama Pitha, August 21, 2006 11:43 PM ////

அய்ய.... இதப்பாருடா காமெடிய...

************************

மொசக்குட்டிகளும், கழுதைபுலிகளும் - சந்துத்துவத்தின் கதை


ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டுல மொசக்குட்டிக நிறைய இருந்தது. அள்ள அள்ளக் குறையாத அளவு ரொம்ப அதிகப்படியா இருந்திச்சிங்க. இந்த மொசகுட்டிக கடுமையான உழைப்பாளிக. அந்த காட்டுல கழுதைப் புலி குடும்பம் ஒன்னு வேற இருந்துச்சு. சரியான மொள்ளமாறி குடும்பம், இந்த கழுதப் புலி குடும்பம். அந்த கழுதப் புலி குடும்பம் ரொம்ப வருசமா(ஒரு சில ஆயிரம் வருசம்) அந்த காட்டுலதான் இருக்குதுங்க.

அதோட முப்பாட்டனார் கழுதைப் புலி, கடவுள் சக்தி தனக்கு இருக்குதுன்னு சொல்லி, எங்க வம்சத்துக்கு தினப்படி ஒரு மொசலு(rabit) தானா வந்து பலி கொடுத்துக்கனும்ன்னு சொல்லி காட்டுல இருக்கிற மத்த இனா.வானா. மிருகங்களை நம்ப வைச்சதுங்க. எதித்து பேசின மிருகங்களை கூர்மையான கம்ப நட்டி ஆசன வாயை அதுல உட்காரவைச்ச கோடூரமா கொன்னுபோட்டுடிச்சிங்க.


இப்படி அநியாயம் பன்றதையே 'சோமாயனம்'**, 'சோகவத்பீடை'** அப்படின்னு பல புத்தகங்களா எழுதி தேய்வீகமாக்கி வச்சிருந்தாங்க. இது போக நாலு 'வாதம்'** எல்லாம் கடவுள் கொடுத்ததுன்னு சொல்லி ஊர அடிச்சி ஏமாத்திக்கிட்டிருந்தாங்க.


உழைப்பாளிகதான அத்தனை கலையையும் உருவாக்குறவிய்ங்கறத உலக உண்மை. அதே போல மொசக்குட்டிக வேலை செய்யற அலுப்பு தெரியாம இருக்க உருவாக்குன கலைய எல்லாம் இந்த கழுதப் புலி குடும்பம் டாக்குமென்டு பன்னிட்டு. அதையும் கடவுள்தான் கொடுத்தார்ன்னு டன் கணக்குல பூ சுத்துனாங்க. இந்த கஸ்மாலம் பிடிச்ச கழுதைப் புலி கோஸ்டிக ரொம்பவே அதிகப்படியா அழிச்சாட்டியம் பன்னிக்கிட்டிருந்தாங்க. இப்படி மொசக்குட்டிக கிட்டயிருந்தே எல்லாத்தையும் பிடுங்கிட்டு அவுங்களையே அவாமனப்படுத்தியும் வைச்சிருந்தாங்க.


காட்டு பொது ஆத்துல வாய வைச்சி தண்ணி குடிக்கப்படாது. காட்டுக்குள்ள புல்லு காயப் போடப்படாது. இப்படி பல கட்டுப்பாடுக, ஏகப்பட்ட 'ப்படாது'க.


இந்த அநியாயம் ரொம்பகாலத்துக்கு தாங்கலை. மொசக்குட்டிக கூட்டத்திலேயே இந்த அநியாயத்தை எதிர்க்க ஆளுக அதிக மாயிட்டாங்க. இது பத்தாதுன்னுட்டு ஒரு வலிமையான மொசக்குட்டியும், மான்குட்டியும் ரொம்பத் தீவிரமா கழுதைப்புலிகள எதுக்க ஆரம்பிச்சுட்டாங்க.


இதே நேரத்தில கழுதைப்புலிகளுக்கு போட்டியா சில குள்ள நரிகளும் அந்த காட்டுக்கு புதுசா குடிவந்தாங்க. ஒரு பக்கம் குள்ள நரி கூட்டம் கழுதை புலி சொல்றது டூபாக்கூரு, நாங்கதான் ஒரிசினல் கடவுள் சக்தி உள்ளவய்ங்க அப்படின்னு சொல்லி மொசக்குட்டி கூட்டத்துல ஒரு பகுதியை பிச்சுக்கிட்டு போயிருச்சி. இன்னோரு பக்கம் இந்த மொசக்குட்டிகள்ள பெரும்பாலனவங்க எல்லாம் சேர்ந்து - தலைவர்கள் மொசக்குட்டி, மான்குட்டி தலைமையிலே அங்கங்க கடுமையா போராட ஆரம்பிச்சாங்க.


இதுல இந்த குள்ள நரி கோஸ்டிக ஒரு மாசத்துக்கு ஒரு மொசல பலி கொடுத்தா போதும்ன்னு சொல்லியிருந்தாங்க. அதுவுமில்லாம அவிங்க ஓரளவுக்கு மொசக்குட்டிகள மருவதையா நடத்துனாங்க.


இந்த சூழலல்ல ஒரு கட்டத்துக்கு மேல தாங்க முடியாம சரி நாமலும் மொசக்குட்டிகள நம்ம பக்கத்துல வைச்சிக்கலைனா முதலுக்கே மோசமாயிரும்னு இந்த கழுதப் புலிக முடிவு செய்தாங்க.


அதுப்படி தங்களோட அடக்குமுறய கொஞ்சம் குறைச்சி கிட்டு. கொஞ்சம் சமரசம் பன்னிக்கிட்டு. இந்த வாதம், சோமாயணம், சோகவத்பீடை இதெல்லாம் ரோம்ப பெருமை வாய்ந்தது. இந்த காட்டுடோ அடையாளமே இந்த புராண, புரட்டு இழிச்சவாயகாசங்கள்ளதான் இருக்குதுன்னு, Tree TV ல்ல ஞாயித்து கிழமைகள்ள சீரியல் போட்டு மொசக்குட்டிகள விசுவலா(Visual) ஏமாத்த முடிவு செஞ்சாங்க. அது நல்லவே எஃபெக்ட் கொடுத்தது.


சிங்கம், புலி, கரடி இப்படி எவன் ஆட்சிக்கு வந்தாலும் கழுதைப் புலி தான் எப்போதும் சூத்திரதாரியா இருந்தான். அந்த அதிகாரத்த உபயோகிச்சு குள்ள நரிகள கன்ட்ரோல் செய்றதுக்காக சதைமாற்றத் தடைச் சட்டம் எல்லாம் கொண்டு வந்தாங்க. ஆனா இந்த தலைவர் மொசக்குட்டி, மான்குட்டி களோட வாரிசுகளொட(காட்டு நீதிக்காக போராடுறவங்க) தாக்குதல கழுதப்புலிகளால கன்ட்ரோல் செய்யமுடியல. எங்க போனாலும் அவிங்க ஆள் ஒருத்தன் கரடிகனக்கா உக்காந்திகிட்டு கழுதைபுலிகளோட பூசையில மண்ணள்ளி போட்டாய்ங்க.


கழுதைப் புலிகளோட நலன மறைமுகமா சொல்லுறதுக்கு பல பேருல(Name) கச்சி ஆரம்பிச்சாங்க. சோ.எஸ்.எஸ், பீ.எச்சி.ஈ..... இப்படி.


ஒரு பக்கம் மொசக்குட்டி கூட்டத்துல போயி நீயு நானும் ஒன்னு அப்படின்னு புதுசா ஒரு கதைய விட்ட இந்த கழுதைப் புலி கோஸ்டிகள, காட்டு நீதிக்காக போராடுனவங்க அம்பலப்படுத்தி அவமானப்படுத்தினாங்க.


இது பொறுக்க முடியாம யாரோ ஒரு கழுதைப்புலியோ அல்லது புதியகழுதைப்புலியோ**, ப்ரம்மாவோட பிதா அப்படிங்கற பேர்ல வந்து கீழே வர்ர மாதிரி சொல்லிச்சு:

"மொசக்குட்டிக, அடக்குமுறைக்கு எதிரா போராடுரத ஏத்துக்கற காட்டு நீதி போராட்டக்கரர்களே! இதே போல நாளைக்கு கழுதைப்புலிக தங்களோட தத்துவம் அடக்கப்படுதுன்னு சொல்லி அடக்குமுறைக்கு எதிரா போராடினா ஏத்துப்பீங்களான்னு"

இதக் கேள்விப்பட்டவொடனே எனக்கு என்ன கேக்க தோனுச்சுன்னா.....

"நீங்க நல்லவரா... கெட்டவரா??" ன்னு


அவ்வ்வ்வ்வ்வ்வ்................

**********

சொற்க்குறிப்பு:

சோமாயனம்** - இதன் ஹீரோ சோமாறி மொசக்குட்டிகள அழிச்சி கழுதப் புலி ராஜ்யத்த பலப்படுத்தினான்.


சோகவத்பீடை** - இத்த சொன்னவர் பேரு கோட்டினன். அவர் ஒரு இழிச்சவாயன் தலையில மொளகா அரச்சி மொசக்குட்டிகளுக்கு எதிரான அடக்குமுறை தத்துவத்தை டாகுமென்ட் செய்தார்.


வாதம்** - இது நாலு வகைப்படும். பக்க வாதம், முடக்கு வாதம் இன்னும் ரெண்டு பெர் மறந்து போச்சி தெரிஞ்ச யாராச்சும் சொன்ன சந்தோசமா இருக்கும்.

இதுல பக்க வாதம் மூச்சுடும் அடுத்தவன எப்படி நாசமாக்கிறதுன்னு இருக்கும்.

முடக்கு வாதம் மூச்சுடும் தன்க்கு அது வேனும் இது வேனும்னு ஒர கழுதைப் புலி புலம்பல்(கறி சாப்பிட்டிட்டு ஊளையிடுமே அது போல).


புதிய கழுதைப்புலி** - கழுதைப் புலி தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் (அ)சிங்கம், கரடி சந்ததியினர். கழுதைப் புலி தத்துவத்தை நடைமுறையில் இந்த கோஸ்டிதான் செயல்படுத்தும். கழுதைப் புலி கோஸ்டி இந்த நூற்றாண்டுல தான் வேற வழியில்லாம நேரடியா நடவடிக்கையில எறங்க வேண்டியதா போச்சி.


Note: சந்து கத தத்துவம், சந்துத்துவம் - இது எல்லாம் கழுதைப் புலி தத்துவத்தோட புத்தகப் பேரு.

****************
Disc:
இந்த கதையில் உள் குத்துக்களை கண்டுபிடிப்பவர்களுக்கு எந்த பரிசும் வழங்க'ப்படாது'.

28 பின்னூட்டங்கள்:

said...

அய்யோ...! அய்யோ...!!

சிரிச்சுகிட்டே படிச்சாலும் மனசு வலிக்குது.

என்னைக்குதான் விடியுமோ?

-மொசக்குட்டி.
commented by விழிப்பு!, August 22, 2006 3:34 PM

Profile: http://www.blogger.com/profile/26214887

said...

ரொம்ப டேங்ஸ் விழிப்பு....

இங்க வந்து போனதுக்கு

அசுரக்குட்டி(மொசக்குட்டியோட அடுத்த சந்ததி)
commented by அசுரன், August 22, 2006 4:42 PM

said...

கத நல்லாயிருக்கு...

நான் கூட ஒரு கதை எழுதியிருக்கேன்...

http://kuzhali.blogspot.com/2005/07/blog-post_03.html

commented by குழலி / Kuzhali, August 22, 2006 5:57 PM

************

said...

கதை நல்லாயிருந்தது...

commented by Sivabalan, August 22, 2006 6:09 PM

said...

மற்ற இரு வாதங்களாவன:- ஒன்று மப்புவாதம்- இது உறா மற்றும் ஓமம் ஆகிய வகை சரக்குகளை வடிப்பதன் செய்முறை விளக்கமாம். மற்றொன்று, வறுத்தவாதம் - இது தந்தூரில் மாட்டிறைச்சியை வறுப்பது பற்றிய குறிப்புகள் அடங்கியது.. சரியா?


commented by சின்ன கட்டபொம்மன், August 22, 2006 6:22 PM

***********

said...

கொஞ்சம் ஓவராயிருந்தாலும் காமெடி என்று டிஸ்கி போட்டதால் விட்டுடலாம்..

:)))
commented by செந்தழல் ரவி, August 22, 2006 6:37 PM
*********

said...

குழலி உங்களோட கதையை படிச்சுட்ட உங்க தளத்துலேயே கருத்து சொல்றேன்.

முதல் தடவையா வந்திருகீங்க..... (முன்னாடி வந்தது கணக்குல கிடையாது)


வாங்க....

என்னோட மத்த பதிவையும் படிச்சு கருத்து சொல்லுங்க

நன்றி,
அசுரன்.

said...

சிவபாலனுக்கு நன்றி....

உங்களோட பாலுணர்வு கட்டுரை அரைகுறையா படிச்சேன்... படிச்சிகிட்டிருக்கும் போதே வேற வேலை குறுக்க வந்திருச்சி....

திரும்ப வரேன்

நன்றி,
அசுரன்

said...

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி சின்ன கட்டபொம்மன் அவர்களே....

தங்கள் வருகையால் இந்த தளம் பெருமை அடைகிறது :-))

மிகச் சரியாக மீதி இரண்டு வா(வே)தங்களையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு உங்கள் ஊர் தாமிரபரனியில் தண்ணீரை கொள்ளையடித்துத் தாயாரித்த அக்காமாலா உற்சாகபானம் இரண்டு குடுவைகள் இலவசமாக வீடு(அரண்மனை) தேடி ஏரோப்ளேனிலிருந்து வீசப்படும்.

மக்களை பாதுகாப்பாக ரோட்டில் ஒதுங்கி தலைமறைவாக நடமாட சொல்லுங்கள்

நன்றி,
அசுரன்.

said...

செந்தழல் ரவி,

தங்கள் வருகைக்கு நன்றி..

இவை காமெடி என்ற பெயரில் போடப்பட்ட கடும் காரம்...

இவை 'காட்டு நீதிப் போராளிகளுக்கு'த்தான் காமெடி...

இதில் கிண்டல் செய்யப்பட்டுள்ள கேரக்டர்களுக்கு ரியல்.... ஹஹஹா..

ஆகவே தங்களது கருத்துக்கள் எதுவாயினும் தயக்கமின்றி பதிவு செய்யுங்கள்.

இந்த தளம் விவாதத்திற்க்கு என்றுமே தயார்.

நன்றி,
அசுரன்.

said...

குழலி, படிச்சுட்டேன். கருத்தப் பதிய வைச்சிட்டேன்...

நன்றி,
அசுரன்

said...

வணக்கத்துடன்,

தங்கள் வருகைக்கு நன்றி..


நன்றி,
அசுரன்.

said...

படித்தேன்..

ச்சுப்.. என்னத்த சொல்ல...

:-)

said...

லிவிங் ஸ்மைல்,

தங்கள் வருகைக்கு நன்றி,

முதல் முறையாக வருகிறீர்கள்.

எனது மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்து கூறினால் மகிழ்ச்சியுறுவேன்.

குறிப்பாக இந்திய விடுதலை குறீத்த கட்டுரையை படித்து கருத்துக் கூறவும்.
http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_15.html

நன்றி,
அசுரன்.

said...

அசுரன்,

மிக அருமையான படைப்பு. கதையின் எல்லா உள்குத்துக்களும் புரிந்த படியால், மிகவும் ரசிக்க முடிந்தது. மிக நேர்த்தியாக முடித்திருக்கிறீர்கள். கடைசியில் உள்ள சொல் அகராதி, நல்ல அவசியமான பிற்சேர்க்கை. இது மாதிரி படைப்புகளை இன்னும் தொடர்ந்து கொடுங்கள்.

said...

புதுமை விரும்பி,

வாங்க.....

பாராட்டுக்களுக்கு நன்றி.

'வந்தே ஏமாத்தற'து (அதாங்க வந்தே மாதரம்) பத்தி ஒரு கட்டுரை போட்டிருக்கேன் அப்படியே பாத்து கருத்து சொல்லுங்களேன்.

நன்றி,
அசுரன்

said...

இது நல்ல விசயத்திற்காக....

said...

சீ.....
காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னித்தான் வாழ வேண்டியிருக்கு....ஹும்.......
.
.
.
.
.
.
.
.

சரி....

பின்னூட்ட கயமைத்தனம் #1

said...

//சீ.....
காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னித்தான் வாழ வேண்டியிருக்கு....ஹும்.......//

இதை நான் வழிமொழிகிறேன்...

said...

// //சீ.....
காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னித்தான் வாழ வேண்டியிருக்கு....ஹும்.......//

இதை நான் வழிமொழிகிறேன்... //

இத்த நானும் வயி மொயிறேன் நைநா...

said...

//காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னித்தான் வாழ வேண்டியிருக்கு....ஹும்.......//

:)) நானும் வழிமொழிகிறென்.

அசுரா,

அருமையா வந்துருக்கு கதை

said...

முத்து தமிழினி,

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,
அசுரன்

said...

அஸ்லாம்,

தங்கள் வருகைக்கு நன்றி,
எனது மற்ற கட்டுரைகளையும் படித்துக் கருத்துச் சொன்னால் மகிழ்வேன்.

நன்றி,
அசுரன்

said...

பாலபிரஜாபதி அடிகளார் (அய்யா வைகுண்டரின் ஆறாம் தலைமுறை; சாமித்தோப்பு தலைமைப்பதியின் பொறுப்பாளர்) அவர்களின் மிக நீண்ட பேட்டி ஒன்று 'சிலேட்' இதழில் வந்துள்ளது.
அதில் அவர் ம.க.இ.க.வின் கருவறை நுழைவை ஆதரித்துப் பேசி இருக்கிறார். தமிழில் வழிபாடு பற்றி அவர் கூறியதில் இருந்து...

"கன்னியாகுமரியில் கண்ணாடி விக்கிற சின்னப்பையன் கூட பதினாலு மொழி தெரிஞ்சிருக்கான். பகவதி அம்மன் கொறஞ்சது நாலஞ்சு மொழியாச்சும் தெரிஞ்சிருக்காண்டமா? பெறவு என்ன கடவுள்? சம்ஸ்கிருதம் மட்டும்தான் சாமிக்கு தெரியும்கறது ஏமாத்துகது இல்லயா?

said...

தோழர் அசுரன்
கதை மிக நன்றாக இருந்தது... கதையினூடாக ஊடகஙகளை பார்பனீயம் ஆக்கிரமித்திருப்பதை பதிவு செய்திருந்தீர்கள்.. அதனை நாம் கருத்தில் கொண்டு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் தோழர்... இணையதிலும் வாலாட்டிக் கொண்டிருக்கும் பார்பனீயத்தை நன்றாக வறுத்து எடுக்கிறீர்கள்.. மிக்க மகிழ்ச்சி தோழர்.. உங்கள் பங்கு நிச்சயமாக அளப்பரியது... பாராட்டுக்கள்.. தொடர்ந்து முழங்குங்கள் போர் பறையை....

said...

//தோழர் அசுரன்
கதை மிக நன்றாக இருந்தது... கதையினூடாக ஊடகஙகளை பார்பனீயம் ஆக்கிரமித்திருப்பதை பதிவு செய்திருந்தீர்கள்.. அதனை நாம் கருத்தில் கொண்டு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் தோழர்... இணையதிலும் வாலாட்டிக் கொண்டிருக்கும் பார்பனீயத்தை நன்றாக வறுத்து எடுக்கிறீர்கள்.. மிக்க மகிழ்ச்சி தோழர்.. உங்கள் பங்கு நிச்சயமாக அளப்பரியது... பாராட்டுக்கள்.. தொடர்ந்து முழங்குங்கள் போர் பறையை.... ///


தோழர் ஒடுக்கப்பட்டவன்,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி,

தங்களது உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி,

மக்கள் விரோதிகளின் அடி வயிற்றில் அமிலம் சுரக்கச் செய்யும் வகையில் பறை தொடர்ந்து முழங்கும்.

நன்றி,
அசுரன்

said...

அசுரன்,

நீங்கள் ஒரு தொடர் ஆரம்பிக்க வேண்டுகிறேன். மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்டு காம்யூனியசம் பற்றிய தொடர்.

நான் காம்யுனிசம் தொடர்பான கருத்துக்கள் எனது ஈரோடு நண்பர் அருண் (உங்களுக்குத் தெரிந்து இருக்கும் என நம்புகிறேன்) அவர்களுடன் விவாதித்து இருக்கிறேன் மிக எளிமையாக, என் கருத்துக்களுக்கு செவி கொடுத்து பின் விளக்கமளிப்பார். அது போல ஒரு தொடர் ஆரம்பிக்க முடியுமா தயவு செய்து. காம்யுனிஸம் என்றலே புரியாமலே எதிர்க்கும் மனோபாவம் தான் எல்லோருக்கும் இருக்கிறது அதனால் இந்த வேண்டுகோள்.

said...

தங்கள் வருகைக்கு நன்றி சிவா,

எனக்கும் கம்யுனிசத்தை பற்றிய கட்டுரை எழுதும் எண்ணம் உள்ளது. விரைவில் எழுதுவேன் என்றூ நினைக்கிறேன்.

ஆனால் அதற்க்கு முன்பு இங்கு நிலவுகின்ற பல்வேறு பிற்போக்கு கருத்துக்கள் குறித்து நல்ல அறீமுகம் ஒன்றை உருவாக்குவது அவசியம் என்று கருதுகிறேன். அது வரை ஒவ்வொரு பிரச்சனையையும் கம்யுனிசம் அறிவியல் பூர்வமாக அனுகுவது குறித்து தமிழ் மண வாசகர்களை பயிற்றுவிப்பதே சிறப்பாக இருக்கும் என்றூ நம்புகிறேன்.

தங்கள் நண்பர் அருண் குறீத்து எனக்கு தெரியவில்லை. வாய்ப்பிருந்தால் இ மெயில் அனுப்புங்களேன்.

asuran@inbox.com

அசுரன்

Related Posts with Thumbnails