TerrorisminFocus

Thursday, November 23, 2006

யாரு சொல்றதுன்னு பாத்தீகளா?

உலகமயம், உலகமயம் அப்படின்னு கம்யுனிஸ்டுகளும், பிற அரசியல் கட்சியினரும் அடிக்கடி உரக்க கூவுகிறார்களே, அதை இந்தியாவில் அமல் படுத்திய பெருந்தகை மெக்காலேயின் புத்திரன் மன்மோகன் சிங்தான். அன்னார், நரசிம்மாராவ் அரசில் நிதியமைச்சராக இருந்த போது இந்தியாவ தொறந்து விட்டாரு. தொறந்த வீட்டில பாகாசுர வெறி நாய்கள் நுழைஞ்சு அழிச்சாட்டியம் பன்றதப் பத்தித்தான் திரும்ப திரும்ப நாங்களும் எழுதி வருகிறோம். சரி, இப்ப அதுக்கு என்ன வந்ததுன்னு கேக்கிறீங்களா? தொடர்ந்து படிங்க.....

உலக மயம் தோற்றுவிக்கும் உலக உண்மை:

* ஏழை பணக்காரன் பிளவு அதிகரித்து வருகிறது.

* ஏழைகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்க்கான, அவர்களது பிரச்சனைகளை காது கொடுத்து கேட்ப்பதற்க்கான சக்தியை அரசு இழந்து வருகிறது. மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளை போதுமான அளவு செய்து தருவதற்க்கு வக்கற்று உள்ளது.

* வளர்ச்சி கிராமங்களை அடைவதில்லை.

* இந்த மேற்சொன்ன காரணங்களால், மக்கள் அரசை வேறுக்க தொடங்கியுள்ளனர். இது மாற்றுமைப்பு தேடும் சக்திகளை வளர்த்தெடுக்கிறது. இது ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் அரசை தடுக்கிறது.

இப்படித்தான் நாங்க முட்டாப்பயக கம்யுனிஸ்டுகள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இத திரும்ப போட வேண்டிய அவசியமென்ன?.
இத இந்த முறை சொன்னது சாட்சாத் மாமா மன்மோகன் சிங்தான். அதுவும் பிரிட்டிஸ் ஜெண்டில் மேன், மற்றும் லேடிஸ் மத்தில போயி சொல்றாரு.

பாராளுமன்றத்தின் போலித்தனத்தை அம்பலப்படுத்துவது யார்?

ஏன் இதே விசயம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லி கதை விடப்படும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை?

நியாயமாக அங்குதானே விவாதிக்கப்பட வேண்டும்.

உண்மையிலேயே அதி முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விதை நெல் சீர்திருத்தச் சட்டம், அணு சக்தி ஒப்பந்தம், அமெரிக்க ராணுவ ஒப்பந்தம், VAT, சில்லைறை வியாபாரத்தில் FDI, காப்புரிமைச் சட்டம், தண்ணீர் ஒழுங்குமுறை ஆணயச் சட்டங்கள் இப்படி இன்னும் சில பத்து அடிமை சாசனங்களையே கூட விவாதிக்காமலேயே அனுமதித்து பாராளுமன்றம்.
இதன் மூலம் அப்சல் குண்டு வைத்த இந்திய பாரளுமன்றம் என்பது ஏகாதிபத்தியத்தின் outpost, ரப்பர் ஸ்டாம்பு என்று அம்பலப்படுத்துவது கம்யுனிஸ்டுகளா அல்லது ஏகாதிபத்திய அடிமைகளா?

அல்லது 1947 போலி சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவின் ஒவ்வொரு பிரச்சனைகளை பற்றியும் பிரிட்டிஸ்க்காரர்களிடம் கேஞ்சி கேட்டு(லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்..) முறையிடுவோமே, அது போலத்தான் இப்பொழுதும் இந்தியாவின் நிலைமை உள்ளதா? அதாவது இந்தியா இன்னும் அடிமை நாடுதானா?

ஏனெனில் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு இங்கு எதுவும் பேசாமல் பிரிட்டிஸ் மண்ணில் பேசும் போது இந்த சந்தேகம் உறுதிப் படுகிறது.

இதே மன்மோகன்சிங் தான் போன முறை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் அவார்டு கொடுத்த பொழுது பிரிட்டிஸ்க்காரர்களின் காலனி ஆதிக்கத்திற்க்கு நன்றி தெரிவித்து தான் ஒரு பச்சை தரகு வர்க்க அரசியல்வாதி என்பதை வெட்கமின்றி பறை சாற்றினார். வேறு எப்படி? மெக்காலே கல்வி முறையின் புதிய வார்ப்பு அல்லவா?

அசுரன்

Friday, November 17, 2006

'ஹே ராம்' விமர்சனமும், காந்தி வாங்கிக் கொடுத்த தந்திரமும்

காந்திதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்று வெற்றிகரமானதொரு வரலாற்றுப் பொய்யை, ஒரு சார்பு வரலாறை ஆளும் வர்க்கங்கள் பொதுக்கருத்தாக மாற்றி விட்டன. ஆனால், வரலாற்றில் காந்தியின் வருக்கைக்கு முன்பும் , காந்தி செல்வாக்கு குன்றி ஒரு அடையாளாமாக இருந்த 1940களையும் பார்க்குமிடத்து சுதந்திரம் என்பது காந்திக்கு அப்பாற்ப்பட்ட ஒரு விசயமாகவே இருந்துள்ளது தெரிகிறது.
இது குறித்து புதிய கலாச்சாரம் இதழில் வந்த ஹேராம் பட விமர்சனத்தில் ஒரு பகுதியை தருவது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் அது சுருக்கமாக 1940களில் காந்தி மக்களின் குரலாக இல்லாத நிலையையும், தன்னெழுச்சியாக மக்கள் ஆங்காங்கே போராடியதையும், பிரிட்டன் பலவீனமாகியிருந்ததையும், அமெரிக்கா பிரிட்டனை நெருக்கி வந்ததையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேலும், இந்திய விடுதலை வரலாற்றில் 1906 க்கு முன்பு வரை இந்து முஸ்லீம்கள் மத வேறுபாடுகளை களைந்து ஒன்றாகவே போராடி வந்துள்ளனர். காஸ்மீரில் இந்தியா, பாகிஸ்தானின் தலையீட்டுக்கு முன்பு வரை அது மத சார்பின்மையின் இலக்கணமாக இருந்து வந்துள்ளது.
இந்த உணர்வு, 1940களில் த்லைவர்களற்ற பல் மக்கள் போராட்டங்களிலும் வெளி வருகிறது. இந்த பொது உணர்வை வளர்த்தெடுக்க ஏன் தவறினார்கள் அன்றைய வீரர்களாக நமது பாட புத்தகங்க்ள் சித்தரிக்கும் தலைவர்கள்?
அல்லது இன்னும் சிறப்பாக கேள்வி கேட்டால், மதக் கலவரங்களை மக்கள் விரும்பினார்களா அல்லது தலைவர்களா?

இது போல இன்னும் பல தர்மசங்கடமான(நமக்கல்ல்) கேள்விகளை எழுப்புகிறது நமது விடுதலைப் போராட்டத்தின் உண்மையான வரலாறு.
தமஸ்(இந்திய பிரிவினை குறித்த படம்) படத்தில் ஒரு வசனம் வருகிறது. ஒரு ஆங்கிலேய அதிகாரி அவன் மனைவியிடம் பேசுகிறான்:

"மதக் கலவரங்களால் யார் லாபம் அடைந்தார்களோ அவர்கள்தான் அதற்க்குக் காரணம்"
"ஒரு அரசு தனது நாட்டு மக்கள் எந்த விசயத்தில் ஒன்று படுகிறார்கள் என்பதை விட எந்த விசயத்தில் பிரிந்து முரன்படுவார்கள் என்பதில்தான் கவனம் செலுத்துகிறது."

*********
(சினிமா திரை விலகும் போது..... - ஹே ராம் பட விமர்சனத்தின் ஒரு பகுதி - புதிய கலாச்சாரம் வெளியீடு)

1946 நவீன இந்திய வரலாற்றின் மிகக் கொந்தளிப்பான ஆண்டு. 1945 ஏப்ரலில் இரண்டாவது உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டிஸ்ஹ் ஏகாதிபத்தியம் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பலவீனமடைகிறது. பிரிட்டனுக்கு 'எதிராக' அகிம்சை வழியில் இயக்கம் நடத்திக் கொண்டிருந்த காந்திக்கும் இந்திய மக்கள் மீது இருந்த செல்வாக்கு பலவீனமடைகிறது. நாடெங்கும் பல போராட்டங்கள் வெடிக்கின்றன.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் தளபதியான ஷா நவாஸ்(முசுலீம்), ஜி.எஸ். தில்லான்(சீக்கியர்), பிரேம் சேகல்(இந்து) ஆகியோரை பிரிட்டிஷ் அரசுக்குத் துரோகமிழைத்ததாகத் தண்டிக்க முற்ப்பட்ட போது, அரசுக்கெதிராக நாடெங்கும் இலட்சுக்கணக்கான மக்க்ள் கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நவம்பர் 1945-இல் கல்கத்தா நகர வீதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இலட்சக்கணக்கான மக்கள். பிப்ரவரி 1946-இல் அப்துல் ரஷீத் என்ற ஒரு இந்திய தேசிய இராணுவ சிப்பாயை விடுதலை செய்யக் கோரி மீண்டும் கல்கத்தா கிளர்ந்தெழுந்தது. இந்த எல்லாக் கோரிக்கைகளுக்கும் பிரிட்டிஷ் அரசு பணிய நேர்ந்தது.

பிப்ரவரி 1946-இல் பிரிட்டிஷ் கடற்படையின் இந்திய மாலுமிகள் பம்பாயில் கலகம் செய்தனர். கம்யுனிஸ்டுகளால் திரட்டப்பட்ட பம்பாய் நகரமே அவர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தது. 250 பேர் இரண்டே நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விமானப் படையில் வேலை நிறுத்தம், ஜபல்பூர் இராணுவத்தில் வேலை நிறுத்தம், பீகார், டெல்லி போலீசாரின் வேலை நிறுத்தம் என்றூ பிரிட்டிஷ் அதிகாரத்தின் தூண்களாக இருந்த அதிகார வர்க்க இராணுவமே அவர்கள் கையைவிட்டு நழுவிக் கொண்டிருந்தன. வங்காளம், உ.பி., பீகார், மகாராஷ்டிரா போன்ற இடங்களிலும், திருவிதாங்கூர், ஐதரபாத் நிஜாமின் சமஸ்தானங்களிலும் விவசாயிகளின் போராட்டம் ஜமீந்தார்களையும், மன்னர்களையும், பண்ணைகளையும் உலுக்கிக் கொண்டிருந்தது.

மாணவர் போராட்டம் நடைபெறாதா இடமே இல்லை; ஜூலை 1946-இல் தபால் தந்தி ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஆகஸ்டு 1946-இல் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறூத்தம் என எல்லாத் தொழில் துறைகளும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தால் நிலை குலைந்திருந்தன. ஆனால் இது வரை குறிப்பிட்ட எந்த போராட்டமும் காந்தியோ, ஜின்னாவோ, சவர்க்காரோ அறைகூவல் விடவில்லை. மாறாக, போராட்டங்களை உடைக்கவும், திரும்பப் பெறவும், திசை திருப்பவும் தங்களாலான சேவைகளைத்தான் அவர்கள் செய்தார்கள்.

ஆனால், 1946 பிப்ரவரி மாதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒன்றுபட்டு எதிர்த்த கல்கத்தா மக்கள் ஆகஸ்டு மாத்த்தில் ஏன் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டார்கள் என்ற கேள்விக்கு நமக்கு விடை தேவைப்படுகிற்து.
அதே காலகட்டத்தில் ஐதரபாத் நிஜாம் என்ற முசுலீம் மன்னனையும், ரசாக்கள் என்ற அவனது கோடூரமான (முசுலீம்) படையையும் எதிர்த்துப் போராடிய தெலுங்கானா(இந்து) விவசாயிகளின் போராட்டம் மட்டும் ஏன் மதக் கலவரமாக மாறவில்லை என்பதற்க்கும் விளக்க்ம் தேவைப்படுகீறது.

பல்லாயிரம் மக்கள படுகொலை செய்யப்பட்ட நவகாளீக்கு அருகிலேயே விவசாயிகள் ஜமீந்தார்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்த கிராமங்களுக்கு கலவரம் ஏன் பரவவில்லை என்பதற்க்கும் விடை தேவைப்படுகிறது.

அசுரன்

அஹிம்ஸை - ஒரு அபாயகரமான அதி பயங்கர வன்முறையே!

காந்தி குறித்து சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், நண்பர் மா.சி க்கும் கடுமையானதொரு விவாதம் நடந்தது. அது மிக நீண்டதொரு விவாதமாகிவிட்டபடியால் தொடர்ச்சியை தனிப் பதிவாக இடச் சொல்லி தோழி பொன்ஸ் சுட்டிக் காட்டினார். இடையில் வேறு சில உடனடி விவாதங்கள் வந்து இடைஞ்சல் செய்ததால் இந்த காந்தி விவாதத்தை சிறிது தள்ளிப் போடுவது என்று நானே அராஜகமாக முடிவெடுத்தேன். இப்பொழுது சூழல் சிறிது கெடுபிடியாக இல்லாமல் இருப்பதால் அந்த விவாதத்தை திரும்ப தொடங்கலாம் என்று ஒரு எண்ணம். மிகப் பெரிய விவாதமாகி விட்டபடியால் அதன் மையமான ஒரு அம்சத்தை இங்கு முன்வைத்து மீண்டும் விவாதத்தை தொடங்குகிறேன்.

************
(இந்த பகுதியை வாசிக்க விரும்பாதவர்கள் - நேராக, இந்த பதிவில் மாசிக்கான முதல் கேள்வியை சென்றடையலாம்).

அதற்க்கு முன்பு மா.சியின் நிலைப்பாடுகளாக சில விசயங்கள்:(இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் மா.சி தெரியப்படுத்தலாம்).

#1) பொதுவுடைமை சமுதாயம் தான் மா.சியின் தீர்வும் கூட.
#2) பொதுவுடைமை சமுதாயத்தை எந்த வரலாற்றுக் கட்டத்திலும் நடைமுறைப்படுத்தலாம் - மா.சி.
#3) பொதுவுடைமை சமுதாயம் என்பது மா.சியின் புரிதலில் - 'திறைமைக்கேற்ற ஊதியம், தேவைக்கேற்ப்ப செல்வு செய்வது'.
#4) "ஜனநாயகம் என்பது ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை சக மனிதனின் உரிமைகளுக்கு நலன்களுக்கு மதிப்பு கொடுத்து அமைத்துக் கொள்ளும் சமூகக் கட்டமைப்பு (என்னுடைய வரையறை)" - மாசி கூறியது.
#5) சமூக பரிணாம ஆய்வு முடிவுகளை அவர் காந்தியின் வாழ்க்கையை ஆய்வு செய்ததன்(அல்லது காந்தியின் வாழ்க்கை அனுபவங்கள் மூலமே) மூலமே வந்தடைந்ததாக மா.சி கூறுகிறார்.
#6) "பொதுவுடைமை என்றால் - தர்மகர்த்தா முறையும் அதேதான் என்று நினைக்கிறேன்." - இதுவும் மா.சி கூறியதுதான். உறுதியாக் குறிப்பிடவில்லை, நினைக்கிறேன் என்றே சந்தேகமாக குறிப்பிட்டுள்ளார்.

மா.சி பதில் சொல்லாமல் விட்டுள்ள சில கேள்விகள்:(இவற்றையும் பிறகு பார்ப்போம்)
#1)
அசுரன்:இந்த நிலையை(பொதுவுடைமையை) நீங்களே(மா.சி) குறிப்பிட்டது போல ஒரே நாளில் அடைந்து விட முடியாது. அந்த இடைக்கட்டத்தில் என்ன விதமான அரசு இருக்கும் காந்தியத்தின் படி?

வேறு சில கேள்விகளும் உள்ளன. அவை இன்னும் முழுமையான வடிவம் பெறாமல் உள்ளன. மாசியுடனான விவாதத்தின் போக்கில் அவை முழு உருவம் பெறும் அப்பொழுது அவற்றை முன்வைக்கிறேன்.

*****************

இப்போ ஸ்டார்ட் செய்வோமா....
கேள்வி:
/////
அசுரன்:இதற்க்கு ஆதாரமாகத்தான் கார்வாலி சிப்பாய்களின் வட மேற்க்கு மாகாண சம்பவத்தையும் அதில் காந்தியின் பாத்திரத்தையும் குறீப்பிட்டுள்ளேன். அதில் தெளிவாக அவர் அஹிம்ஸையை கைகொண்ட வீரர்களை கண்டித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ஆதரிக்கிறார்.

மா.சி:அப்படி காந்தி ஆதரித்திருந்தால் காந்தியின் கருத்துக்களுடன் ஒவ்வாத ஒன்றாக இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.
////

எந்த அம்சத்தில் இப்பொழுது காந்தியுடன் ஒவ்வாமல் போயுள்ளீர்கள் என்று தெளிவாக சொல்லவும். ஏனேனில் இந்த அமசத்தில் conclusionயை தெளிவாக கூறீ முடித்துவிடலாம்.

ஏனெனில் இது காந்தி வன்முறையாளர் என்பதற்க்கு ஆதாரமாக கூறியுள்ளேன் எனில், நீங்கள் காந்தி வன்முறையாளர் என்பதை இந்த சம்பவத்தில் அவருக்கு எதிரான நிலையெடுப்பதன் மூலம் நிறுவுகிறீர்கள்.

அதாவது காந்தி வன்முறையாளர் என்கிற எமது நிலைப்பாட்டை நீங்களும் மறைமுகமாக ஆதரிக்கிறீர்கள்.
அசுரன்

Monday, November 13, 2006

உங்களின் இரக்கம் உண்மையானதா?

உங்களின் இரக்கம் உண்மையானதா? ...

Photobucket - Video and Image Hosting





Photobucket - Video and Image Hosting



ஜார்கண்டு மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்திலுள்ள பாத்திஹ் நிலக்கரிச் சுரங்கத்தில் செப்-6-ந் தேதி முன்னிரவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில், தரை மட்டத்தில் இருந்து 599 மீட்டருக்கு கீழே நிலக்கரியை வெட்டி எடுக்கச் சென்றிருந்த 50 தொழிலாளர்கள் பரிதாபகரமாக இறந்து போனார்கள். இரண்டு நாட்கள் கழித்துதான் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் தலையில் அணிந்திருந்த சுரங்க விளக்கில் போடப்பட்டிருந்த எண்ணை வைத்துதான், இறந்து போன தொழிலாளர்களை அடையாளம் காண முடிந்தது. அந்தளவிற்கு அவர்களின் உடல்கள் வெந்து கருகிப் போயிருந்தன.


நான்கு மாதங்களுக்கு முன்பு அரியானா மாநிலத்தில் பிரின்ஸ் சந்தர் என்ற ஆறு வயதுச் சிறுவன் 60 அடி பள்ளத்திற்குள் விழுந்து உயிருக்கும் போராடியதைப் பத்திரிக்கைகள் பரப்பரப்பான தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. இச்சிறுவன் உயிர் பிழைப்பதற்காக பலர் வேண்டிக் கொண்டதை தொலைக்காட்சிகள் திரும்ப திரும்ப ஒளிபரப்பின. நாட்டில் கருணை செத்துப் போய்விடவில்லை எனப் பத்திரிக்கைகள் எழுதின. ஆனால், 500 மீட்டர் ஆழத்தில் மாட்டிக் கொண்ட நிலக்கரிச் சுரங்க தொழிலாளர்களுக்காக, அவர்களின் உறவினர்களைத் தவிர, வேறு யாரும் கண்ணீர் விட்டதாகத் தெரியவில்லை. அச்சிறுவனின் உயிரைவிட, இத்தொழிலாளர்களின் உயிர் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது?


அதிகார வர்க்கம் 50 தொழிலாளர்கள் செத்துப் போனதை "விபத்து" என்கிறது. ஆனால், பாத்திஹ் சுரங்கத் தொழிலாளர்களோ இதனைப் படுகொலை என்கிறார்கள். இந்த நிலக்கரிச் சுரங்கம் மிகவும் அபாயகரமான சுரங்கம் என அரசாலேயே வகை பிரிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சுரங்கத்தில் உள்ள மின்சாரக் கம்பிகளை மாற்றியே 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், சுரங்கத்தில் இறங்கும் தொழிலாளியின் உயிருக்கும் என்ன பாதுகாப்பு கிடைத்திருக்கும்?


இந்த 'விபத்து' நடந்த அதே சமயத்தில், வேலை வாய்ப்பில்லாத 30 ஏழை இளைஞர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் கைவிடப்பட்ட ஒரு நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரியை எடுத்து வருவதற்க்காகச் சுரங்கத்தினுள் இறங்கியிருக்கிறார்கள். அப்பொழுது சுரங்கத்தினுள் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட இவர்களைக் காப்பாற்ற அதிகார வர்க்கம் பெரிய முயற்சி எதுவும் செய்யவில்லை. மாறாக, இளைஞர்கள் நிலக்கரியைத் திருடுவதற்க்காகச் சட்ட விரோதமாக சுரங்கத்தினுள் இறங்கியிதாகத் திருட்டுப் பட்டம் கட்டித் தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழித்தார்கள். இப்படிப்பட்ட கல் நெஞ்சுக்காரர்கள் ஏழைகள் மீதும், தொழிலாளர்கள் மீதும் காட்டும் இரக்கம் உண்மையானதாக இருக்க முடியுமா?


அதிகார வர்க்கத்தை விடுங்கள். தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து கண்ணீர் உருக்கும் உங்களில் எத்தனை பேர், சுரங்கத் தொழிலாளர்கள் செத்துப் போனதற்கு அனுதாபப்பட்டிருப்பீர்கள்? நிழலைப் பார்த்து அனுதாபப்படும் நீங்கள், நிஜத்தைப் பார்த்து மரக்கட்டை போல் இருக்கின்றீர்கள் என்றால், உங்களின் இரக்க குணம் உண்மையானதாக இருக்க முடியுமா?


"நாங்கள் ஒவ்வொரு நாளும் சுரங்கத்தினுள் இறங்கும் பொழுது, உயிரோடு மீண்டு வருவோமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது" என்கிறார்கள் பாத்திஹ் சுரங்கத் தொழிலாளர்கள். அவர்கள் தினந்தோறும் உயிரைப் பணயம் வைக்கவில்லையென்றால், நாட்டிற்கு நிலக்கரி கிடைக்காது; நிலக்கரி இல்லையென்றால், மின்சாரம் இருக்காது; தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்காது; கண்ணீர் வடிக்கும் தேவையும் உங்களுக்கு இருக்காது!


புதிய ஜனநாயகம் (நவம்பர் - 2006) (பின் அட்டைக் கட்டுரை)

(படங்கள்: நன்றி, தி ஹிந்து)

Related Links:
http://www.hinduonnet.com/fline/fl2319/stories/20061006003102800.htm

http://www.rediff.com/news/2006/sep/12mine.htm

Thursday, November 09, 2006

நாய் படும்பாடும், நாகரிகம் படும்பாடும்

'நாய் பிழைப்பு' என்று ஒரு மனிதனின் மோசமான நிலையை சொல்வது வழக்கம். ஆங்கிலத்தில் கூட வெயில் கடுமையாக இருப்பதை dog day என்று குறிப்பிடுவார்கள். இது போன்ற சொற்றொடர்கள், அவை உருவான காலகட்டத்தின் சமூக பண்பாட்டு சூழல் குறித்த தகவல்களையும் மறை பொருளாக தாங்கியே வருகின்றன.


இவை வழக்கத்திற்க்கு வந்த காலத்தில் ஒரு வேளை நாய்களின் பிழைப்பு இந்திய விவசாயிகளின் நிலைக்கு கிட்டே வரும் அளவு மோசமாக இருந்திருக்கலாம். ஆனால், இனிமேலும் அந்த வார்த்தை பிரயோகம் உபயோகப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில் நாய்களின் வாழ்க்கை இந்த நாய் குறித்த சொற்றொடர்களை வழக்கத்துக்கு ஒவ்வாததாக மாற்றி விட்டது. இந்தியாவில் மேனகா உள்ளிட்ட ஆன்ம-வியாபார பன்றிகள் இன்னும் சில கோடிகளை வாங்கிக் கொண்டு இந்தியா நாய்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பட்சத்தில், நாய்களின் கேவலமான வாழ்க்கையை சுட்டிக் காட்ட 'விவசாயியின் பிழைப்பு' என்ற புது வார்த்தை வழக்கத்திற்க்கு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வேலையத்த சாய்நாத்தும், சமூக அரிப்பும்:

சாய்நாத் என்பவர் வேலையத்துப் போய் இந்திய விவசாயிகளின் கஸ்டத்தை, அவர்களின்-இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை ஏகாதிபத்திய வேட்டைக்கு இரையாகியிருப்பதை பல்வேறு தொடர் கட்டுரைகள் மூலம் உலகறியச் செய்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர். ஒரு சம்பவம் முதல் முறை நடக்கும் பொழுது அதிக கவனத்தை பெறுவதும் பிறகு போகப் போக இதெல்லாம் சகஜம்தானே பாஸ் என்று ஏற்றுக் கொள்வதும் விழிப்புணர்வற்ற சமூகத்தின் இயல்பு. வழக்கம் போல விவசாயிகளின் விசயத்திலும் அதுவே நடந்தது. அரசு புள்ளி விவரத்தின் படியே 1 லட்சம் பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள் எனில் இதன் வீச்சும் பரவலான பொது அம்சமும் குறைந்த பட்ச மனிதாபிமானம் உடையவர்களையும் அதிர்ச்சியுறச் செய்கிறது.


ஆயினும் சுனாமிக்கு வால் போஸ்டரும் இரண்டு பதிவும் போட்டதுடன் தனது சமூக அரிப்பு தீர்ந்து விட்ட படியால் அந்த கோடூரமான சுனாமியையே பட்டப் பெயராக வைக்கும் அளவு சொரனையின்றி அலையும் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளின் பிரச்சனை, இந்தியா எனும் எரிமலை குமுறிக் கொண்டிருப்பது குறித்த பிரக்சை அதிகமாக இருப்பதற்க்கான வாய்ப்புகள் கம்மி. சுனாமி சேகர் என்று பட்டப் பெயர் வைத்துக் கொண்டால் அவரென்ன சில பத்தாயிரம் பேரை கொன்றவரா? அப்படிக் கொண்றிருந்தாலும் அது கொண்டாடக் கூடிய விசயமா என்பதெல்லாம் பகுத்தறிவு உள்ளவர்களுக்கான விசயம். பன்றிகளுக்கு சக உயிரின் துன்பங்களைக் குறித்து கவனமெல்லாம் கிடையாது. ஆகவே அவர்கள் இது குறித்து கவலைப் படுவதில்லை. எங்கு __ கிடைக்கிறோதோ அங்கு சவக் சவக் தான்.


இந்த சாய்நாத், விவசாயிகள் பற்றி, பிரச்சனை பற்றி எழுதுவது மேட்டுக் குடி மக்களுக்கு எரிச்சலை தருகிறது என்று நினைத்தாரா தெரியவில்லை. அல்லது அப்துல் கலாம் நம்மை ரோசிக்க சொல்லி ஒரு மெயில் அனுப்புகிறாரே - அதாவது 'ஏன் நாட்டை குறை கூறிக் கொண்டே இருக்கிறீர்கள்? நாடு என்ன செய்தது என்று பார்க்காதே நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று யோசி?" என்பது போல. அதை எதுவும் சாய்நாத் படித்து தொலைந்தாரா என்று தெரியவில்லை. பாசிட்டிவ்வான விசயங்களை எழுதுவது என்று முடிவெடுத்து கட்டுரை எழுதத் துவங்கி விட்டார். அதுவும் அல்ட்ரா மாடர்ன் வாழ்க்கை வாழும் ஒரு வர்க்கத்தைப் பற்றி எழுதினால் பத்திரிக்கை அதுவும் ஆங்கிலப் பத்திரிக்கை படிக்கும் அறிவு ஜீவி(சொறிவு ஜீவி என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இது சமூக விசயங்களை பேசுவது அதிக பட்சம் அது சார்ந்த தனது அறிப்பை சொறிந்து விட்டுக் கொள்ளத்தான்) நடுத்தர சுக போக வர்க்கத்துக்கு காலை நேர சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும் என்று அவருக்கு தோன்றியதா தெரியவில்லை.


அப்படி ஒரு கட்டுரைதான் அமெரிக்க நாய்கள் பற்றிய அவரது கட்டுரை. துன்பத்துக்கு - கேடு கெட்ட முட்டாப் பய விவசாயி, மகிழ்ச்சிக்கு - புத்திசாலி, திறமைமிக்க கரெக்டாக டார்க்கெட் செய்து ஒரு அமெரிக்க பெண் நாயின் வயிற்றில் பிறந்த, அதுவும் அழகாக பிறந்த நாய்கள். துன்பத்தை எழுதாதே, நல்லதை எழுது என்று கான்சர் வந்த மயிலுக்கு விளக்கு பிடித்த மனிதாபிமான அப்துல் காலாம் சாய்நாத்தின் இந்த நாய்த்தனமான கட்டுரையின் முதல் சில பத்திகளைப் படித்து அவருக்கு ஜனதிபதி அவார்டு கொடுக்க சிபாரிசு செய்ய வாய்ப்புகள் உள்ளதை நான் குறிப்பிட்டே தீர வேண்டும். அப்படி சிபாரிசு செய்வதன் மூலம் சொந்த செலவில் சூனியம் வைத்து அவர் உழைக்கும் மக்கள் முன்பு அம்பலப்பட எல்லாம் வல்ல இறைவனை கன்னத்தில் அறைந்து(அவரோட கன்னத்துலதான். நமக்கு ஒரு கன்னத்த காட்டு இரண்டு கன்னத்த காட்டுங்கற வழிமுறையில் நம்பிக்கை கிடையாது) கேட்டுக் கொள்கிறேன்.


ஆயினும் கட்டுரை எழுதி முடிக்கும் முன்னே சாய்நாத்தின் கேடு கெட்ட பேனாவானது துன்பங்களை மட்டுமே எழுதி பழக்கப்பட்டுள்ளதால் ஆட்டோ மேட்டிக்காக மக்களின் துன்பத்தை எழுதத் துவங்கி விடுகிறது கடைசிப் பேராவில்.

புல்சிட்... நாய குளிப்பாட்டி நடு வீட்டில வைச்சாலும் அது தெருவுக்குத்தான ஓடுது... க்ளைமாக்ஸ்ல வந்து கெடுத்தான்டா....


சாய்நாத் ஆயிரம் அப்துல காலாம் லெட்டரப் படிச்சாலும் அவர் புத்தி திரும்பவம் எலி பிடிக்கிறவங்க பின்னத்தானே ஓடுது.


நல்லா, பாசிட்டிவ்வான, அப்துல் கலாமுக்கு பிடிச்ச - ஒரு நாடே நாய்களுக்கு பிஸ்கெட்ட் வாங்கி போடும் அழகை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே ஏன் இவர் எழுத்து அந்த கேடு கெட்ட எலிக் கறி தின்னும் விவசாயிகளைப் பற்றி பேசுகீறது? சீட்... (Shitத்தான் அப்படி பேரிக்கன் பாணில நீட்டி முழக்கி சொன்னேன்).


விவசாயிகளும், நாயும்:

நாயும் விவசாயியும் ஏறக்குறைய ஒன்னு. இது சும்மா பொழுது போகாம சொல்லவில்லை. வயிறெரிந்து சொல்கிறேன். பக்கத்தில் ஒரு பெரும்பான்மை வர்க்கத்தினன், சக மனிதர்கள் - இந்த சமூகத்தின் முதுகெலும்பாய் இருந்து கூனிக் குறுகி தேய்ந்து போய் வயல்களில் தொலைந்த தனது வாழ்வை நகரங்களின் தெருக்களில் நாய்களுடன் நாயாக தங்கியிருந்து தேடிக் கொண்டிருக்கிறானே, அவனின் அன்றாடப் பிரச்சனைகள் குறித்து பேசுவதை விட கேலி கிண்டல் கேளிக்கைகள் பேசுவதில் அதிக ஆர்வமாக இருக்கும் சுரனையற்ற கூட்டத்தின் தடித்த தோல்கள் என்னை இவ்வாறு பேசச் சொல்கிறது.


தடித்த தோல்காரர்களே தயவு செய்து வாருங்கள் - நாய்களைப் பற்றியும், நாய்களை ஒத்த வாழ்க்கை வாழும் திறமையில்லாதா மூடர்களான விவசாயிகள் பற்றியும் பேசுவோம். பிறகு பிறப்பால் விவசாயிகளான, மூடர்களான விவசாயிகள் சமூக அழுத்ததின் கோபத்தை அணி திரண்டு வெளிப்படுத்தும் போதும், பிறப்பால் நாய்களான தெரு நாய்கள் வெறி பிடித்து அலையும் போதும் எப்படி கையாளுவது, சுட்டுக் கொல்வதா, அல்லது தற்கொலைக்கு தள்ளுவதா என்பது குறித்து பேசுவோம்.

நாய்கள் என்றால் ப்ளு க்ராஸ் வரும், வந்தால் பிரச்சனையில்லை சில வெள்ளிப் பணத்தை விட்டெறிந்தால் பன்றிகளைப் போல மொய்த்து பொறுக்கிச் சென்று விடுவார்கள். விவசாயிகளுக்கோ பிரச்சனையேயில்லை கேட்க நாதி கிடையாது. அடித்து துவைக்கலாம். வாருங்கள் தடித்த தோல்காரர்களே விவாதிப்போம்.... இந்த திறமையற்ற முட்டாள் கூட்டம் நமது ரசனை மிக்க வாழ்வை பொறாமை கொண்டு கெடுத்து விடாமல் இருப்பதற்க்கு என்ன செய்யலாம் என்று மெக்டவல்லின் பொன்னிற சிக்கன் வறுவலை சப்பிக் கொண்டே பேசுவோம்.


அல்லது இவர்கள் அணி சேருவதை தடுப்பதற்க்கான அனைத்து வழி வகைகளையும், ஜனநாயக முறைகளையும் மன்மோகன் சிங் பிரிட்டனில் பேசும் போது ஒத்துக் கொண்டதைப் போல நடைமுறைப்படுத்தி நமது ரசனைமிக்க களி வெறி வாழ்வின் உன்னத சுகங்களை கோக் கோலாவின் தில் மாங்கே மோர் சுவையுடன் சேர்ந்து ருசிப்போம்.


இடையில் நமது காட் பாதர்களான தரகு வர்க்க, பன்னாட்டு முதலாளிகள் நம்மை நட்டாற்றில் விட்டு விட்டு வேறு குறை கூலி தூர தேசங்களுக்கு தோணியேறிவிடாமல் இருப்பதற்க்கான பொறுப்பை எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் சமர்பித்து, சிறிது உற்சாக பானம் குடித்து இளைப்பாறுவோம்.


சுகமே சிறப்பு!

சக மனிதனோ பன்றி!

துன்பங்கள் வரும் பொழுது உ.பாவும் க.பாவும் துணை!

சமுகமோ அரிப்பை சொறிய நல்லதொரு சொறி கட்டை!

வாழ்க ஏகாதிபத்திய தனிமனித நுகர்வு கலாச்சாரம்!

வளர்க நின் யுப்பியின் பண்பாட்டு புரட்சிகள்!

************
அசுரன்


உ.பா - உற்சாக பானம்
க.பா - கடவுள் பாராயணம்.

பின்குறிப்பு:சாய்நாத் தொடர்ந்து விவசாயிகள் பற்றிய கட்டுரைகள் எழுதி ஒரு கட்டத்தில் அது குறித்து மேட்டுக் குடி அறிவு ஜீவிகளிடம் ஒரு வெறுப்புணர்வு மெதுவே உருவாகத் துடங்கியதை உணர்ந்துதானொ என்னவோ(இது எனது அனுமானம்), சந்தையின் அடிப்படை விதியான 'பழைய கள்ளாக இருந்தாலும் புதிய மொந்தையில் கொடு' என்பதின் அடிப்படையில். மக்கள் பிரச்சனை குறித்து வேறு வடிவங்களில் பேசும் நிர்ப்பந்தத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளாரோ என்று ஐய்யம் ஏற்ப்பட்டது. அவரது இந்த கட்டுரை முழுவதும் அமெரிக்க நாய்களின்(நிஜ நாய்) வசதி வாய்ப்புகள் குறித்து பேசுகிறார். கடைசிப் பேராவில் மக்கள் பிரச்சனையை பேசுகிறார். ஆயினும் நடுத்தர வர்க்கத்திடம் இந்த மேற் சொன்ன சலித்துக் கொள்ளும் உணர்வு(சிட்...) இருப்பதை நானும் உணர்ந்ததால் அதை கடுமையாக குத்திக் காட்ட வேண்டும் என்ற வேகத்தில் மேற்சொன்ன கட்டுரை வஞ்ச புகழ்ச்சி அணி பாணியில் எழுதியுள்ளேன்.

சாய்நாத்தின் கட்டுரை: http://www.hindu.com/2006/10/25/stories/2006102504411100.htm

Monday, October 30, 2006

ஒரு மன்னன் மனிதனான கதை

பூ இ மன்னன்:(சீன சீர்திருத்த சிறையிலிருந்து வெளி வந்த பிறகு)

"ஆனால் இன்று , எனக்கு சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, முதன் முறையாக, முழுமையாக என் வாழ்வில் 'மனிதன்' என்பதன் அர்த்தம் புரிகிறது. "


"இன்று தான் கம்யூனிஷ்ட் கட்சி மற்றும் மறுவார்ப்பு முறைகள் மூலம் அந்த மந்திர வார்த்தைக்கு பொருள் புரிந்தது.நான் உண்மையான மனிதனானேன்."

****************************


மாவோவின் சீனா குறித்து பல்வேறு புரளிகள், வதந்திகளை ஏகாதிபத்தியங்கள் பரப்பின,பரப்புகின்றன. புரட்சியின் வளர்ச்சிப் போக்கில் சீன சமுகத்தின் இயல்பு காரணமாக கட்சியில் முக்கிய பொறுப்புகளில் ஏற்க்கனவே உட்கார்ந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களும், வெளியிலிருந்து ஊக்குவிக்கப்பட்ட சீர்குலைவு நடவடிக்கைகளும் சேர்ந்து அங்கு விளைந்த கேடான சம்பவங்களை அந்த நாடு முழுமைக்கும் பொதுவான இயல்பு என்பது போல திரித்து விளம்பரப்படுத்தி ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதில் ஏகாதிபத்திய முன்னணி வெற்றி பெற்றது.

ஆயினும் சில சிறு உண்மைகளைப் புரிந்து கொள்வது இந்த உலகமகா அவதூறுகளின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள உதவும். இவர்கள், ஏகாதிபத்தியவாதிகள், வெளி உலகுக்கு காட்டிய சீன, ரஸ்ய சோசலிச சமூகஙக்ள்தான் அனைத்து சமூக தீங்குகளையும் களைந்து எந்த நாட்டையும் சுரண்டாமல் சமூக நீதியை சாதித்துக் காட்டின என்ற உண்மையும். இதே ஏகாதிபத்தியங்கள் ஒன்னுமில்லாதா லோக்கல் ரவுடியான சதாம் உசைனை காலி செய்யவே அண்டப்புளுகுகளை அவிழ்த்து விட்டு பிபிசியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மரணத்துக்கு(தற்கொலை என்று சொல்லப்பட்டது) கூட காரணமானார்கள் என்ற உண்மையும் போதும் இந்த புரளிகளின் தன்மையை எடை போட.

இதே ஏகாதிபத்தியங்கள்தான் ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரில் சொந்த நாட்டிலும், வெளி நாடுகளிலும் இன்றுவரை பல்வேறு அக்கிரமங்களை செய்து வருகின்றன என்ற உண்மையும் இங்கு நினைவு கூறத் தக்கதே.

ஆகா, அவர்களின் இருப்பையே அச்சுறுத்திய மாவோவையும், சோசலிச ரஸ்யாவையும் எதிர்த்து எந்த அளவுக்கு பெரிய அளவில் திட்டம் தீட்டி இருப்பார்கள் என்பதை கொஞ்சம் சிரமம் எடுத்து தேடிப் படித்தால் புரிய வரும்(அமெரிக்காவின் யூதர்களும், நாஜிகளும் பல சங்கங்கள், பத்திரிக்கைகள் வைத்து இந்த வதந்திகளை பரப்பினர்).

நான் ஏற்கனவே வேறோரு இடத்தில் குறிப்பிட்டிருந்தபடி. இந்த ஏகாதிபத்திய புரளிகளுக்கு ஆப்பு செருகும் வகையில் 'லாஸ்ட் எம்பெரர்' என்ற ஹாலிவுட் படத்தில் சீனாவின் கடைசிப் பேரரசரின் வாழ்க்கை கதை வருகிறது. அதில் படம் முழுவது இணைக் காட்சியாக சீர்திருத்த முகாமில் அந்த அரசர் சீர்திருத்தப் படும் காட்சிகள் வருகின்றன. அவற்றைப் பார்த்தால் அடக்குமுறையையும், அநீதியையும், அராஜகத்தையுமே தனது ஒரே அரசியல் வழிமுறையாகக் கொண்ட இன்றைய இந்த சமூக அமைப்புகளின் முகத்தில் காறித் துப்பத் தோன்றும். ஜப்பானுடன் இணைந்து பல்வேறு படுகொலைக்குக் காரணமான்வர் இந்த மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்க்கு 9 ஆஸ்கார் அவார்டுகள் கிடைத்தன. படம் அந்த மன்னனின் பார்வையில் எடுக்கப்பட்டுள்ளது என்பது ஹாலிவுட் பாணி படங்களின் தனி மனித பார்வையின் குறைப்பாட்டால் வரும் விளைவு. ஆயினும் அதனூடாக அன்றைய சீன சமூகத்தை ஓரளவு எதிர் மறையில் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இசை வெகு நேர்த்தி. எங்கே இளையராஜாதான் இந்த படத்திற்க்கு இசை அமைத்தாரோ என்று சந்தேகம் வரும் அளவு கிழக்கத்திய பாதிப்பு.


இதே அரசர் எழுதிய ஒரு புத்தகத்தில் தான் எப்படி சீர்திருத்த முகாமில் மனிதனாக சீர்திருத்தப் பட்டேன் என்று நன்றியுடன் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரை கரும்பலகை எனும் வலைப்பூவில் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் படித்து அங்கும் கருத்துக்களை பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு மன்னன் மனிதனான கதை - I

ஒரு மன்னன் மனிதனான கதை - II

அசுரன்

Thursday, October 19, 2006

அப்சலும் - அரசியல் ஓட்டாண்டிகளும் - அடிவருடிகளும்

கேள்விகள் கேட்பதே தவறு, புனிதம் போன்ற கற்பிதக் கோட்பாடுகளின் உறைவிடமாய் இருப்பவர்களுக்கு இந்த பதிவு ஆத்திரமூட்டுவதாகவே இருக்கும்.


ஆனால், கேள்விகளிலிருந்துதான் விடை பிறக்கிறது எனும் இயங்கியலை நம்புகிறவர்கள் கம்யுனிஸ்டுகள்.


நாட்டின் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசப்பட்டுள்ளது, அதற்க்கு உதவியவர் என்பதாக ஒருவர் அரசால் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளார், அவருக்கு ஆதரவாக அவரது மாநில மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள், ஆட்சியிலிருக்கும் அரசோ தனது கைக்கூலி தனத்துக்கும், மொள்ளமாறித்தனத்துக்கும் பெயர் போனது, குண்டு வீச்சு சம்பவத்திற்க்கு பின்னணியான அரசியலோ சிக்கல் மிகுந்தது.


இன்னிலையில் வெகு ஜன மக்களின், குறிப்பாக குட்டி முதலாளித்துவ அறிவுஜிவிக்களின் கடமையாக - ஆளும் வர்க்கத்தின் பின்னால், தேச பக்தி என்று கோசமெழுப்பி வால் பிடிப்பதா? அல்லது எதிர்ப்பு அரசியலின் மனிதாபிமானம் என்ற பெயரில் இன்னொரு வாலைப் பிடித்து வழி நடப்பதா? அல்லது சம்பவத்தை பிரேத பரிசோதனைக்குட்ப்படுத்தி அதன் உண்மையான பொருளில் புரிந்து கொள்வதா? என்ற முடிவுகளில் ஒன்றை எடுக்க வேண்டியதாய் உள்ளது.

அப்சல் இதை செய்தார, செய்யவில்லையா என்பதை இங்கு நான் விவாதிக்கவில்லை. ஒரு வேளை செய்திருந்தால், அதை எப்படி கையாளுவது என்பதை இங்கு விவாதிக்க விரும்புகிறேன். அந்த அம்சத்தில் சில அடிப்படை கேள்விகளை வைத்துள்ளேன். அவற்றில் விவாதம் செய்ய விருப்பமுள்ளவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.

மேலும், அப்சல் மற்றும் அவரை ஒத்த குழுக்களின் வழி சரி, தவறு என்ற விசயமும் இங்கு விவாதிக்கப்படவில்லை. இஸ்லாம் அடிப்படைவாதம் சரி தவறு என்கிற விசயமும் இங்கு விவாதிக்கப்படவில்லை. For that, இஸ்லாம் அடிப்படைவாதமும் கம்யுனிஸ்டுகளின் ஆகக் கேடான எதிரி என்பதை இங்கு கூறிக் கொள்கிறேன்.


*************


#1)

ஏன் அப்சல் ஒரு தீவிரவாதி?

#2)

ஏன் பாராளுமன்றத்தில் அவர்கள் குண்டு வைத்தார்கள்?

#3)

குண்டு வைத்திருந்தால் எனில் எந்த வகையில் அவர் பகத்சிங்கிடம் இருந்து வேறுபடுகிறார்?

#4)

இது போல ஒருவர் நாட்டின் பாராளுமன்றத்தில் குண்டு வைத்து - இறையாண்மையை தகர்த்திருக்கும் பட்சத்தில், ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு என்ன செய்ய வேண்டும்?

#5)
ஒரு மக்கள் நல, ஜனநாயக அரசின் நோக்கம், அப்சலை கொல்லும் விசயத்தில் என்னவாக இருக்க முடியும்?

#6)

காஸ்மீரில் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடக்கிறதே அதை எப்படி எடுத்துக் கொள்வது?

#7)

தேசப்பற்று என்றால் என்ன?



****

இங்கு ஒரு சின்ன எச்சரிக்கை அப்சலுக்கு ஆதரவாக வாதாடுவதா அல்லது அவரை எதிர்த்து வாதாடுவதா என்ற நிலைப்பாட்டைப் பொறுத்து இந்த கேள்விகள் கேட்க்கப்படவில்லை. இவை அனைத்தும் ஜனநாயகம் என்று நான் நம்பிக் கொண்டிருக்கும் விசயத்தை அடிப்படையாக கொண்டு இது போன்ற எதிர்கால சம்பவங்களில் பொதுவாக எப்படி அனுகுவது என்ற பொது புரிதலை உருவாக்கவே கேட்க்கப்பட்டுள்ளது.

அசுரன்

Related Posts with Thumbnails