TerrorisminFocus

Monday, October 30, 2006

ஒரு மன்னன் மனிதனான கதை

பூ இ மன்னன்:(சீன சீர்திருத்த சிறையிலிருந்து வெளி வந்த பிறகு)

"ஆனால் இன்று , எனக்கு சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, முதன் முறையாக, முழுமையாக என் வாழ்வில் 'மனிதன்' என்பதன் அர்த்தம் புரிகிறது. "


"இன்று தான் கம்யூனிஷ்ட் கட்சி மற்றும் மறுவார்ப்பு முறைகள் மூலம் அந்த மந்திர வார்த்தைக்கு பொருள் புரிந்தது.நான் உண்மையான மனிதனானேன்."

****************************


மாவோவின் சீனா குறித்து பல்வேறு புரளிகள், வதந்திகளை ஏகாதிபத்தியங்கள் பரப்பின,பரப்புகின்றன. புரட்சியின் வளர்ச்சிப் போக்கில் சீன சமுகத்தின் இயல்பு காரணமாக கட்சியில் முக்கிய பொறுப்புகளில் ஏற்க்கனவே உட்கார்ந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களும், வெளியிலிருந்து ஊக்குவிக்கப்பட்ட சீர்குலைவு நடவடிக்கைகளும் சேர்ந்து அங்கு விளைந்த கேடான சம்பவங்களை அந்த நாடு முழுமைக்கும் பொதுவான இயல்பு என்பது போல திரித்து விளம்பரப்படுத்தி ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதில் ஏகாதிபத்திய முன்னணி வெற்றி பெற்றது.

ஆயினும் சில சிறு உண்மைகளைப் புரிந்து கொள்வது இந்த உலகமகா அவதூறுகளின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள உதவும். இவர்கள், ஏகாதிபத்தியவாதிகள், வெளி உலகுக்கு காட்டிய சீன, ரஸ்ய சோசலிச சமூகஙக்ள்தான் அனைத்து சமூக தீங்குகளையும் களைந்து எந்த நாட்டையும் சுரண்டாமல் சமூக நீதியை சாதித்துக் காட்டின என்ற உண்மையும். இதே ஏகாதிபத்தியங்கள் ஒன்னுமில்லாதா லோக்கல் ரவுடியான சதாம் உசைனை காலி செய்யவே அண்டப்புளுகுகளை அவிழ்த்து விட்டு பிபிசியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மரணத்துக்கு(தற்கொலை என்று சொல்லப்பட்டது) கூட காரணமானார்கள் என்ற உண்மையும் போதும் இந்த புரளிகளின் தன்மையை எடை போட.

இதே ஏகாதிபத்தியங்கள்தான் ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரில் சொந்த நாட்டிலும், வெளி நாடுகளிலும் இன்றுவரை பல்வேறு அக்கிரமங்களை செய்து வருகின்றன என்ற உண்மையும் இங்கு நினைவு கூறத் தக்கதே.

ஆகா, அவர்களின் இருப்பையே அச்சுறுத்திய மாவோவையும், சோசலிச ரஸ்யாவையும் எதிர்த்து எந்த அளவுக்கு பெரிய அளவில் திட்டம் தீட்டி இருப்பார்கள் என்பதை கொஞ்சம் சிரமம் எடுத்து தேடிப் படித்தால் புரிய வரும்(அமெரிக்காவின் யூதர்களும், நாஜிகளும் பல சங்கங்கள், பத்திரிக்கைகள் வைத்து இந்த வதந்திகளை பரப்பினர்).

நான் ஏற்கனவே வேறோரு இடத்தில் குறிப்பிட்டிருந்தபடி. இந்த ஏகாதிபத்திய புரளிகளுக்கு ஆப்பு செருகும் வகையில் 'லாஸ்ட் எம்பெரர்' என்ற ஹாலிவுட் படத்தில் சீனாவின் கடைசிப் பேரரசரின் வாழ்க்கை கதை வருகிறது. அதில் படம் முழுவது இணைக் காட்சியாக சீர்திருத்த முகாமில் அந்த அரசர் சீர்திருத்தப் படும் காட்சிகள் வருகின்றன. அவற்றைப் பார்த்தால் அடக்குமுறையையும், அநீதியையும், அராஜகத்தையுமே தனது ஒரே அரசியல் வழிமுறையாகக் கொண்ட இன்றைய இந்த சமூக அமைப்புகளின் முகத்தில் காறித் துப்பத் தோன்றும். ஜப்பானுடன் இணைந்து பல்வேறு படுகொலைக்குக் காரணமான்வர் இந்த மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்க்கு 9 ஆஸ்கார் அவார்டுகள் கிடைத்தன. படம் அந்த மன்னனின் பார்வையில் எடுக்கப்பட்டுள்ளது என்பது ஹாலிவுட் பாணி படங்களின் தனி மனித பார்வையின் குறைப்பாட்டால் வரும் விளைவு. ஆயினும் அதனூடாக அன்றைய சீன சமூகத்தை ஓரளவு எதிர் மறையில் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இசை வெகு நேர்த்தி. எங்கே இளையராஜாதான் இந்த படத்திற்க்கு இசை அமைத்தாரோ என்று சந்தேகம் வரும் அளவு கிழக்கத்திய பாதிப்பு.


இதே அரசர் எழுதிய ஒரு புத்தகத்தில் தான் எப்படி சீர்திருத்த முகாமில் மனிதனாக சீர்திருத்தப் பட்டேன் என்று நன்றியுடன் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரை கரும்பலகை எனும் வலைப்பூவில் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் படித்து அங்கும் கருத்துக்களை பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு மன்னன் மனிதனான கதை - I

ஒரு மன்னன் மனிதனான கதை - II

அசுரன்

10 பின்னூட்டங்கள்:

said...

ஒரு + குத்து.

நல்ல பதிவு.

நன்றி

said...

சிவபாலன்,

வருகைக்கும் அந்த குத்துக்கும் நன்றி

****************************

///அசுரன்,
ஒருமுறை கியூப சிறைகளில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஏகாதிபத்தியங்கள் கூறிய குற்றசாட்டை ஒரு பத்திரிக்கையாளர் கேள்வியாக பிடல் காஸ்ட்ரோவிடம் கேட்ட போது பிடல் கூறினாராம் உலகிலேயே ஆரோக்கியமான கைதிகள் எங்கள் நாட்டு கைதிகள்தான் என்று... கியூபாவில் இருப்பதும் நீங்கள் கூறுவது போல சீர்திருத்த முகாம்தானா? சரி எதிர்புரட்சி செய்பவர்களை சீர்திருத்த சிறைகள் எவ்வாறு கையாளும் என்பதை விளக்கவும்.. //

அதிகப்பிரசங்கி அவர்களே,

க்யுபாவின் நிலைமைகள் தெரியவில்லை.

எதிர் புரட்சி செய்பவர்களை மட்டுமல்ல யாரையுமே புரட்சிக்குப் பிறகு மிகவும் ஜனநாயகமான முறைகளில் கையாள வேண்டும் என்று மாவோ அறிவுறுத்துகிறார். ஏனேனில் இப்பொழுது ஆட்சியில் இருப்பது உழைக்கும் மக்கள்.

அவரின் 'எதிரிகளிடமும் கூட கருணையாக இருங்கள்' என்ற மேற்கோள் பிரபலமானது.

எந்த ஒரு மனிதனையும் சாகடிப்பது கம்யுனிஸ்டுகளுக்கு ஒப்புதலில்லாத விசயம். ஏனெனில் வேறு யாரையும் விட கம்யுனிஸ்டுகள் வாழ்க்கை அதிகப்படியாகவே நேசிக்கிறார்கள். எனது இந்த கூற்றைக் கூட சில பிற்போக்குவாதிகள் கேலி செய்யக் கூடும் ஆனால் ஒரு கம்யுனிஸ்டாக இருக்கும் பட்சத்தில் இதை நீங்கள் உணர்வீர்கள்.

ஆக, புரட்சிக்குப் பிறகு அந்த எதிர் புரட்சி கும்பல்கள் திருந்துவதற்க்கு வாய்ப்பு கொடுப்பதும். அவர்களின் அரசியலை மிக தெளிவாக ஆய்வு செய்து உள்வாங்கி மக்களிடம் அம்பலப்படுத்துவதும். அவர்கள் திருந்துவதற்க்கு சாத்தியமில்லாத பட்சத்திலேயே அவர்களை சாகடிப்படுவதும் என்ற நடைமுறைதான் சிறந்தது என்று கருதுகிறேன்.

மாவோ சீன கம்யுனிஸ்டு கட்சியில் ஒரு தலைவரை(அவர் பெயர் மறந்து விட்டது) இரு முறை மக்களிடம் வீச்சாக அம்பலப்படுத்துகிறார். ஆனால் கடைசி வரை அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை. மாவோவின் மரணத்திற்க்கு பிறகு அந்த பிற்போக்கு தலைவர் அதிகாரத்திற்க்கு வருகிறார். இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால், வேறு எந்த தலைவரையும் விட மாவோ 'மக்களிடமிருந்து மக்களுக்கு' என்னும் கோட்பாட்டை கறாராக கடைபிடித்தார் என்று காட்டவே. அதாவது அந்த தலைவரின் பிற்போக்குத் தனத்தை மக்களே போராடி தடுப்பார்கள் என்று கருதினார். ஆனால் துரஸ்திருஷ்டவசமாக மக்களை அரசு அதிகாரத்தில் எந்த கூச்சமுமின்றி பங்கெடுக்க பழக்கப்படுத்தும் கலாச்சார புரட்சி போதிய அளவு வெற்றி பெறவில்லை. அதை தொடர்ந்து முன்னேடுத்துச் செல்லவும் ஒரு தலைமை உருவாகவில்லை. ஆக, அந்த பிற்போக்கு சக்திகள் செல்வாக்கு பெற்றனர்.

அசுரன்

said...

///
தோழர் அசுரன்,
உங்கள் பார்வையில் கியூபா சோசலிச நாடா இல்லையா என்பதனை தெரிந்துகொள்ளத்தான் கியூபாவை பற்றி கேட்டேன்.. அணி சேரா நாடுகளின் கூட்டம் சில நாட்களுக்கு முன்பு கியூபாவில் நடத்தப்பட்டிருக்கும் சூழலில் இதனை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது..
///

தோழர் அதிகபிரசங்கி,

க்யுபா பற்றி எனக்கும் அதிகம் தெரியவில்லை. தெரிந்த அளவில் அங்கு சோசலிச பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதாக தோன்றுகிறது. ஆயினும் அதை நோக்கி பயணம் செய்யவில்லை என்று என்னுடன் பேசும் மார்க்ஸிய ஆட்கள் சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.



////
அது சரி நம்ம சிறைச்சாலை பத்தியும் அதுலேர்ந்து வெளில வரும் போது தண்டிக்கப்பட்டவனோட மனநிலை பத்தியும் எழுதுன எப்டியிருக்கும்?

அன்புடன்
அதிகபிரசங்கி

///


நமது சிறைச்சாலைகள் ஒரு அரசு இயந்திரம் என்பதன் உண்மையான ஒரு அங்கமாக, ஒரு அடக்குமுறைக் கருவியாக திறம்பட செயல் படுகின்றன.

சங்காராச்சாரிக்கு பூசை செய்ய எல்லா வசதிகளும் கிடைக்கும். ஒரு சாதாரண எந்த குற்றமும் செய்யாதவனுக்கு நல்ல பூசையே கிடைக்கும்

அசுரன்

said...

அசுரன்,

தங்களின் பதிவுகள் நிறைய உண்மைகளை புரிய வைக்கின்றன. தங்களது பதிவுகளை தற்போது அடிக்கடி பார்க்க முடியவில்லை. புனித பிம்ப கருத்துகளை அடித்து நொறுக்கும் தங்களது பணியை தொடருங்கள்.

நன்றி,
வசந்த்

said...

//தங்களின் பதிவுகள் நிறைய உண்மைகளை புரிய வைக்கின்றன. தங்களது பதிவுகளை தற்போது அடிக்கடி பார்க்க முடியவில்லை. புனித பிம்ப கருத்துகளை அடித்து நொறுக்கும் தங்களது பணியை தொடருங்கள்.
//

வசந்த்,

தங்களின் வருகைக்கும் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி,

தற்பொழுது சிறிது வேலைப்பளு அதிகமாகிவிட்டதால் இங்கு கவனம் செலுத்த முடியவில்லை.

நவம்பர் புரட்சி நாளுக்கு ஒரு சிறப்புக் கட்டுரை எழுதும் எண்ணம் நிறைவேறாமலேயே போய் விட்டது.

மா.சி யுடனான விவாதம் பாதியில் நிற்கிறது. பொன்ஸ் இயக்கியவியல் என்றால் என்னவென்று கேட்டிருந்தார் அதற்க்கான பதிலும் எழுதவில்லை.

அப்சல் விவாதம் ஒரு முடிவின்றி சென்றுவிட்டது. அதை சரியான வடிவத்தில் ஒரு கட்டுரையாக தரும் எண்ணம் உள்ளது.

அடுத்த வாரம் எப்படியாவது இவற்றை முடித்து விடுகிறேன்.

அசுரன்

said...

அசுரன்,

இந்தியா வளர்கிறது, பங்கு சந்தை ஜொலிக்கிறது என்று பிதற்றும் படித்த நண்பர்களுக்கு (மற்றவர்களுக்கு இது பற்றிய புரிதல் அதிகம் இல்லை) புரிய வைக்க உங்களின் பதிவுகள்தான் உதவுகின்றன (ஆனால் எதையும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்) மேலும் கம்யூனிசம் பற்றி பலவும் புரிந்து கொள்ள உங்கள் பதிவுகள் உதவுகின்றன.

வேலைப்பளு முடிந்தவுடன் கண்டிப்பாக தொடருங்கள்.
எதிர்பார்க்கின்றேன்.


நன்றி
வசந்த்

said...

இந்த பதிவை உயிர்பிக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது.

அசுரன்

said...

//இந்த பதிவை உயிர்பிக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது//

அசுரன் அய்யா,

நம்ம கட்சி, IT கூலிகளை கழட்டிவிட்டு நம்ம மனிதகுலத் தந்தை பெரியார் மாவோவுக்காக போராட வேண்டிய அவசியத்தை விளக்கமா சொல்லுங்கய்யா..

said...

இந்த பதிவை உயிர்பிக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது.

அசுரன்

said...

இந்த பதிவை உயிர்பிக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது.

அசுரன்

Related Posts with Thumbnails