TerrorisminFocus

Tuesday, October 26, 2010

டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!

ருந்ததிராய் மற்றும் கிலானி இருவரையும் அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி கைது செய்ய வேண்டும் என்று மதச்சார்புள்ள பாஜகவும், 'போலி கம்யூனிஸ்டுகளின் அக்மார்க் முத்திரையுடன்' மதசார்பற்றதாக காட்டப்படும் காங்கிரசும் ஒரே களேபாரம் செய்தன நேற்று. பிரச்சினை என்னவென்றால், 'விடுதலை ஒன்றுதான் தீர்வு' (Azadi - The Only Way) என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்ற பேருண்மையை அவர்கள் இருவரும் பேசிவிட்டார்கள். அதுவும் டெல்லியில். குறிப்பாக அருந்ததிராய் சொன்னது #$த்தில் சுண்ணாம்பு தடவியது போலாகிவிட்டது: "காஷ்மீர் எந்த காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இதனை இந்திய அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது".

இந்தக் கருத்தரங்கம் நடந்த முடிந்தவுடன், உள்துறை அமைச்சரை சந்திக்க ஓடி வந்தனர் எதிர்கட்சி பாஜகவினர். உள்துறை அமைச்சரும் விடியோ ஆதாரங்களைப் பார்த்து நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கொடுத்துள்ளதாக பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தார் பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன்.


டீச்சர்.. அவன் என்னக் கிள்ளிட்டான் - கோள் மூட்டும் துஸ்டத்தனமான சிறுமி


மனித உரிமை என்ற பெயரில் பிரிவினைவாதிகளையும், நக்சல்களையும் ஆதரிக்கிறார்கள் அருந்ததி ராய் போன்றோர் என்று மதவாதிகளையும், காவி பயங்கரவாதிகளையும், தேச விரோதிகளையும், நாட்டின் எதிரிகளையும் வைத்து கட்சி நடத்தும் பாஜக குதியோ குதி என்று குதிக்கிறது.

வரலாறு முழுவதும் இந்துத்துவத்திற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் பாத்திரம் ஏற்றுள்ள காங்கிரசு, இதற்கும் வாசித்துள்ளது. காங்கிரசுத் தலைவர் சத்யப் பிரகாஷ் மால்வியா அருந்ததிராய் தனது கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார். சட்ட அமைச்சர் மொய்லி, 'ரெண்டு பேரும் இப்படிச் சொன்னது ரொம்ப துரதிருஷ்டமானது' என்று சொல்கிறார். யாருக்கு துரதிருஷ்டம்? யாருக்கோ.... என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் பேசிக் கொள்வார் போல என்று நினைத்தால் அடுத்த வரியில் சொல்கிறார், 'பேச்சு சுதந்திரமெல்லாம் இருக்கத்தான் செய்யுது.. ..அதுக்காக மக்களோட தேசப் பற்றுணர்வை புண்ணாக்கும் விதமாகப் பேசக் கூடாது' என்று தொடர்கிறார். யாருக்கு துரதிருஷ்டம் என்று தெளிவாகவே எச்சரிக்கை செய்து விட்டார்.

பேச்சு சுதந்திரம் பற்றி மொய்லி சொல்வது இருக்கட்டும், ஜான் ஸ்டுவர்ட் மில் என்ன சொல்கிறார் என்று முதலில் பார்ப்போம். ஜான் ஸ்டுவர்ட் மில் யாரென்று தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன், எனக்கும் அவர் யாரென்று தெரியாது. பேச்சு சுதந்திரம் என்பது என்னவென்றால், 'ஒருவருடைய கருத்தினால் பலருக்கு துன்பம் ஏற்படுவதை தடுப்பது என்ற நோக்கத்தில் மட்டுமே அவருடைய வாயை பலவந்தமாக அடைப்பதை நியாயப்படுத்த முடியும்' என்கிறார்(நன்றி: தி இந்து - அக்டோபர் 27, 2010 தலையங்கம்). எடுத்துக்காட்டுக்கு நம்ம நண்பர் அதியமானின் கருத்துக்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிடினும் அதை அவர் பேசும் உரிமை அவருக்கு உண்டு என்ற உண்மையை நான் அங்கீகரிப்பதாகும். இதைத்தான் அருந்ததி ராயும் வேறு வார்த்தைகளில் சொல்கிறார், 'மதவெறி படுகொலையாளர்களாயும், மொத்த மொத்தமாக படுகொலைகள் செய்தவர்களையும், ஊழல்வாதிகளையும், கொள்ளையர்களையும், பாலியல் வன்புணர்வாளர்களையும், ஏழைகளைச் சுரண்டி கொழுப்பவர்களையும் சுதந்திரமாக அலைய விட்டு விட்டு, நீதி வேண்டும் என்று கேட்க்கும் என்னைப் போன்றவர்களை சிறையிலடைக்க முயலும் இந்த தேசத்தை நினைத்து பரிதாபப்படுகிறேன்' என்று. கிலானி இன்னும் ச்ஜிம்பிளாக முடித்துக் கொண்டார், 'எம்மேல ஏற்கனவே 70 கேசு இருக்கு இது 71வ்து' என்று.


இந்த லாவணிகள் எல்லாம் முடிவதற்குள்ளாக அருந்ததி ராயையும், கிலானியையும் கைது செய்வது பற்றிய பரிசீலனைகளை காங்கிரசு முடித்துக் கொண்டு ரிசல்டை அறிவித்துவிட்டது. இதுக்கெல்லாம் கைது செய்ய முடியாது என்று. சரி, உண்மையிலேயே காங்கிரசு பேச்சு சுதந்திரத்தை மதித்துத்தான் இந்த முடிவை எடுத்ததா? இல்லை நண்பர்களே, அத்வானி, மோடி போன்ற கிரிமினல் பாசிஸ்டுகளை பெருமைமிக்க தலைவர்களாக அலைய விடும் காங்கிரசு, எளிய உண்மைகளை உரக்க பேசிய குற்றத்திற்காக சீமான், பினாயக் சென், ஹிமான்சு குமார், ஐரோம் சர்மிளா உள்ளிட்ட பலரை சிறையிலடைத்தும், அடித்து மிரட்டியும் ஒடுக்கியுள்ளது.

அருந்ததிராய், கிலானி இருவரையும் சதி செய்ய முயன்றதாகக்(124A) கூறி கைது செய்யவே டெல்லி போலிசுக்கு முதலில் மத்திய காங்கிரசு அரசு பரிந்துரைத்துள்ளது. பிறகுதான் பின் வாங்கியுள்ளது.

அருந்ததிராய் விசயத்தில் அவரை முடக்கிப் போட நடந்த முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதைத் தாண்டி இதில் காங்கிரசின் ஜனநாயக முகம் எதுவும் இல்லை. காஷ்மீர் மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களும், அருந்ததிராயின் செல்வாக்குமே காங்கிரசை பதுங்கித் தாக்க அறிவுறுத்துகிறது. சுருக்கு இறுகுகிறது, வாயை அடைத்துக் கொள் என்று சாத்வீகமாக அருந்ததிராயை மிரட்டுவது ஒன்றுதான் இந்த விசயத்தை பொறுத்த வரை காங்கிரசின் அதிகபட்ச இலக்கு. மிரட்டல் அருந்ததிக்கு மட்டுமல்ல, மனசாட்சியுள்ள எல்லாருக்கும்தான்.

மக்களின் வெறுப்பை மேலும், மேலும் சம்பாதித்து நாடு முழுவதும் அம்பலப்பட்டுப் போயுள்ளது இந்திய அரசு. இந்நிலையில் பெரும் பீதியுற்றுள்ள அரசு தனது பாசிச அஸ்திரங்களைத்தான் ஒரேயடியாக நம்பியுள்ளது. எனவேதான் தன்னை நோக்கிய சிறு சலசலப்பையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிறது. அதை தேசப் பற்று என்று நியாயம் பேசுகிறது. இந்தியா முழுவதும் மக்கள் பிரச்சினைகளுக்காக களம் இறங்கிப் போராடிய பல்வேறு ஜனநாயக சக்திகளை சமீப காலங்களில் கைது செய்தும், மிரட்டியும் முடக்கிப் போட்டுள்ளது இந்திய அரசு(தெஹல்கா). சீமான் கைதின் போது இந்தத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் மையக் கருவும் இதுதான், 'சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே'.

பன்னாட்டு கம்பனிகளுக்காக அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களைக் கொல்லும், காங்கிரசும், சிபிஎம்மும் ஒரு பக்கம் என்றால், அதே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களை மதத்தின் பெயரால் கொல்லும் பாஜக இன்னொரு பக்கம். இதுதான் இந்திய 'ஜனநாயகம்'. இப்படி அரசியலமைப்புச் சட்டம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்துத்துவத்திற்கும் மீறப்படுமானால் அது தேசப்பற்றுக்கு விரோதமானது அல்ல என்பதே இவர்களின் நியாயம். தேசப்பற்று என்றால் என்னவென்று இந்தச் சிறுபிள்ளைகளுக்கு சரியான வகையில் பாடம் புகட்டுவதே ஜனநாயக சக்திகளின் இன்றைய பெரும் கடமையாக முன்னெழுந்துள்ளது.

அசுரன்

Monday, October 25, 2010

இந்துக்களின் வழிபாட்டுரிமைக்காக இந்துத்துவக் குரங்குகள் போராடுமா?

புண்ணிய பூமியாம் இந்த பாரதத்தில் இந்துக்களுக்கு எங்குமே நிம்மதியில்லை. பாரத மாதாவின் புதல்வர்களாம் இந்துக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தட்டிக் கேட்பதற்கு ஆர் எஸ் எஸ்யையும் அதன் சங் பரிவார குரங்குகளையும் விட்டால் வேறு நாதியில்லை - இதெல்லாம் ஆர் எஸ் எஸ் குரங்குகளின் வழக்கமான புலம்பல்களாகும்.

இவர்கள் சொல்லும் இந்துக்கள் யார்? இதோ அந்த அப்பாவி இந்துக்கள்தான் திருப்பூர் உத்தமபாளையத்தில் தலித்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கிறார்கள். திருப்பூரில் பெரிய புடுங்கி போல வலம் வரும் ஆர் எஸ் எஸ் இந்து - காவி பயங்கரவாதிகள் இந்த தலித் 'இந்து'க்களின் வழிபாட்டுரிமைக்காக ஏன் போராடுவதில்லை? தமிழகம் முழுவதும் இவ்வாறு தலித்துக்களின் வழிபாட்டு உரிமையை எதிர்த்து ஆதிக்க சாதி வெறியர்கள் நடத்திய பல்வேறு கொலை வெறித் தாக்குதல்கள் இந்த சுட்டியில் இருக்கின்றன. வினாயகர் சதுர்த்தி அன்று அய்யோ இந்துக்களின் உரிமையெல்லாம் பறி போகிறதே என்று ஒப்பாரி வைத்து அப்பாவி கிருத்துவ, முஸ்லீம் மக்களை வில்லன்களாக்கும் இந்த கிரிமினல்கள், ஏன் அதே போல தலித்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் ஆதிக்க சாதியினரை எதிர்த்து ஒப்பாரி வைப்பதில்லை?

ஏனேனில், கவுண்ட சாதி வெறியர்களிடமு, பிற சாதி வெறியர்களிடமும் கஞ்சி வாங்கி ஊற்றிக் கொண்டுதான் ஆர் எஸ் எஸ் அல்லக்கைகள் வயிறு வளர்க்கிறார்கள். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய முடியுமா? அதுப் பாரதப் பண்பாடாகுமா என்ற லாஜிக் பிரச்சினையின் காரணமாக அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று யாரும் தப்பாக எடை போட்டுவிடாதீர்கள்.

இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதுமே ஆதிக்க சாதி வெறியர்களின் காலை நக்கும் சொறி நாய்தான் ஆர் எஸ் எஸ் இந்து காவி பயங்கரவாத கும்பல். குஜராத்தில் சாதி மீறி காதல் மணம் புரிபவர்களை கடத்தி வந்து பிரிப்பதற்கு என்றே ஆர் எஸ் எஸ் குண்டன் ஒருவன் பிரபலமாக உள்ளான். இதே காவிக் கொடி சாதி வெறி சொறிநாய்கள்தான், பசு மாட்டுத் தோலுரித்த குற்றத்திற்காக தலித்துக்களை உயிருடன் தோலுரித்தனர்.

இப்படியெல்லாம் அயோக்கியத்தனம் செய்யும் இந்த பொய்யர்கள் இன்னொரு பக்கம் இந்துக்களுக்கு அபாயம், இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கதறுவதின் ஒரே நோக்கம், கலவரங்களின் போது அடியாள் வேலை செய்ய தலித் மக்களை அணி திரட்டுவதே ஆகும். எனவே...

எச்சரிக்கே....
எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை...
அந்த ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை....

எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை...
கையில் தீப்பெட்டிய எடுத்து வற்றான் எச்சரிக்கை...

அசுரன்

Saturday, October 23, 2010

மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ஒரு ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதியின் கதை!!

ந்தையிலோ அல்லது காலனியிலோ திருடன் எவனாவது மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவனை ஒரு விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து மக்களெல்லாம் ஒன்று கூடி கையில் கிடைத்ததை வைத்து அடித்து நொறுக்குவார்கள். இப்படி நடந்து கொண்டிருக்கும் போதே திருடனுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் ரீஜெண்டான தோற்றம் உள்ள (வேறென்ன வெளுத்த சட்டை வேட்டி, அல்லது பேண்டு) ஒரு தடியன் திடீரென்று எங்கிருந்தோ தோன்றுவான். மக்களே மிரண்டு போகும்படி கட்டி வைக்கப்பட்ட திருடனை சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்குவான். இந்த இடத்தில் மக்கள் சுதாரிக்கவில்லையென்றால், 'இந்த மொள்ளமாறிய நான் பாத்துக்கிறேன் சார்', 'கொய்யால,எங்க ஏரியாவுலய வேலையக் காட்டுற' என்று பலப் பல உதார் வசனங்களை உதிர்த்து விட்டு திருடனை தன்னுடன் இழுத்துச் செல்வான். அத்துடன் இருவரும் எஸ்கேப் ஆவார்கள்.

இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இப்போ இதே மாதிரி ஒரு விசயம் நடந்து வருகிறது. அதைப் பார்ப்போம்.

ஆர்எஸ்எஸ் தலைவனான இந்திரேஸ் குமார் பல்வேறு குண்டு வெடிப்பு செயல்களை செய்த ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாத கும்பல்களின் தலைவன் என்பதை ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்ட விடியோ ஆதாரங்கள் அம்பலப்படுத்தியிருந்தன. இதனை ஒட்டி இடப்பட்ட இடுகை இங்குள்ளது(முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!).

(இந்து-காவி பயங்கரவாத கும்பலின் கொடி)


இவன் தேச விரதோ-சமூக விரோத சக்தியான ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாத கும்பலின் முக்கியத் தலைவனாவான். பல்வேறு தலைமைப் பொறுப்புகள் வகிப்பவன். குறிப்பாக, ஆர்எஸ்எஸ்ன் முஸ்லீம் பிரிவின் தலைவனாகவும் உள்ளான் என்பது இவர்களது அயோக்கியத்தனத்திற்கு ஒரு சோற்றுப் பதம். மேலும், இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். இவன் தான் நேபாள மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளான். மொத்தத்தில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் ஒருவனும் நிம்மதியாக இருக்கக் கூடாது என்ற ஆர்எஸ்எஸ்ன் கொள்கையை செயல்படுத்திய பெரும் பயங்கரவாதியாவான்.

தற்போது ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் இவனையும், இதர காவி பயங்கரவாதிகளையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர். மிக விரிவாகத் திட்டமிட்டு, பயங்கரவாதிகளின் கூட்டங்களை நடத்தியுள்ளானாம். மத நிறுவனங்கள் என்ற பெயரில் ஏதாவதொரு அமைப்பை அமைத்துக் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஐடியாக் கொடுத்துள்ளான். அப்போதுதானே ஆர்எஸ்எஸ் என்ற தேசவிரோத காவி பயங்கரவாத அமைப்பைக் காப்பாற்ற முடியும்?

(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து-காவி பயங்கரவாதிகள்)


(இந்து-காவி பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)


இந்த உண்மைகளெல்லாம் புதிய விசயங்கள் அல்ல ஆனால் முதல்முறையாக அரசாங்கம் இந்த விசயங்களை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது என்பதுதான் புதிய விசயம். ஆனால், வழக்கம் போல இது ஒரு அரசியல் சதி என்று புலம்புகிறது ஆர்எஸ்எஸும் அதன் ஆசனவாயான பாஜகாவும். மீசையில் மண் ஒட்டாத குறையாக 'ஆர்எஸ்எஸ் போன்ற தேசத்தை கட்டியமைக்கும்(தேசவிரோத-சமூக விரோத என்று புரிந்து கொள்ளவும்) அமைப்பின் பெருமையின் மீது சேறடிக்கும் சதி' என்று கூச்ச நாச்சமின்றி புளுகியுள்ளது பாஜக. காங்கிரசு மணீஸ் திவாரி , 'இந்தியா பன்முகப் பண்பாட்டு விழுமியங்களை சீர்குலைக்க தொடர்ந்து ஆர்எஸ்எஸ் வேலை செய்து வருகிறது' என்றுள்ளான். இங்கே மணீஸ் திவாரியை இந்தப் பதிவின் முதல் பேராவில் படித்த திடீர் தடியனுடன் ஒப்பிட்டுக் கொள்ளவும்.

"ஹேய் மீ எஸ்கேப்பு வித் திருடன்யா... நெக்ஸ்டு மீட்டு...." - சந்தைக் கடை திடீர்த் தடியன் மணீஸ் திவாரி


வசமாக மாட்டிக் கொண்டான் என்று பாஜகவை கோத்து விட்டு வேடிக்கைப் பார்ப்பதும், அதன் ஊடாக தனது ஆட்சியை கட்டிக் காப்பதும்தான் காங்கிரசின் நோக்கம். மேலும், இதுவரை ஆர்எஸ்எஸ் மாட்டிக் கொண்டுள்ள பயங்கரவாத செயல்கள் - குண்டு வெடிப்புகள், மதக் கலவரங்கள், தலித் மக்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள்- போன்றவற்றின் அடிப்படையில் அந்த அமைப்பைத் தடை செய்ய முடியும். பாப்புலர் பிரண்டு உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் மீது வெறும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே பல அடக்குமுறைகளை ஏவிவிட்ட அரசு, அதே போல, நாக்பூரிலும், டெல்லியிலும், சென்னையிலும் மேலும் பல முக்கிய இடங்களிலும் உள்ள காவி பயங்கரவாத ஆர்எஸ்எஸின் தலைமை அலுவலகங்களை சோதனையிட்டு அவர்களது பயங்கரவாதத் திட்டங்களை சந்தி சிரிக்கச் செய்ய முடியும்.

தமிழகத்தில் கூட நாகர்கோவில் அரவிந்த நீலகண்டன், மலர்மன்னன் போன்ற காவி பயங்கரவாதிகளையும் அவர்களது நண்பர்கள், தோழர்கள் என்ற பெயரில் உலாவும் பிற 'நல்லவர்களையும்' நன்கு 'விசாரித்து' பல பயங்கரவாத திட்டங்களை வெளிக் கொண்ர முடியும். ஆனால், காங்கிரசு அரசோ அல்லது 'தமிழினத் தலைவன்' 'மஞ்சத் துண்டு மன்னன்' 'பத்மா சுப்பிரமணியன் புகழ்ந்த' கருணாநிதிச் சோழனது அரசோ அவ்வாறு செய்யாது.ஏனேனில், இந்து பாசிச பயங்கரவாதத்தை அமல்படுத்துவதில் காங்கிரசுக்கும், பாஜகாவுக்கும் செயல்முறையில்தான் முரன்பாடு உள்ளது.

எனவேதான் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் காவி பயங்கரவாத கும்பல் என்று சொல்லிக் கொண்டே பாபர் மசூதி தீர்ப்பு எனும் அயோக்கியத்தனத்தை காங்கிரசு செய்கிறது. அதே போல அமெரிக்க அடிவருடி காங்கிரசு என்று சொல்லிக் கொண்டே அமெரிக்காவின் பூட்ஸை பாஜக நக்குகிறது.

இவர்கள் அனைவருமே கூட்டுக் களவானிகள் என்பதுதான் உண்மை. ஆர்எஸ்எஸ்ன் பல்வேறு பயங்கரவாத செயல்கள் கடந்த 80 வருடங்களில் பலமுறை அம்பலமானவைதான். ஆனால், அந்த அமைப்பு இன்னமும் ஏதோ நல்லவன் போல வேசம் கட்டி வலம் வருவதும், பதிவுலகில் இருக்கும் 'நல்லவர்கள்' அதே போல 'நல்லவர்களாகவே' ஆர்எஸ்எஸ்ன் அரசியலைப் பேசுவதும் சாத்தியமாகியுள்ளதற்குக் காரணம் மக்கள் சுதாரித்துக் கொள்ளாமல் இருப்பதுதான். இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன உண்மைச் சம்பவத்தையே பாருங்கள், மக்கள் சுதாரிப்பாக இருந்தால், மாட்டிக் கொண்ட திருடனை காப்பாற்றக் களமிறங்கிய ரவுடியையும் சேர்த்து புரட்டி எடுத்து ஒரேடியாக முடித்துக் கட்டியிருக்கலாம். மாறாக, தெருவோரத்தில் நின்று வேடிக்கைப் பார்ப்பதும், டீக்கடை கிசுகிசுவுமே அரசியலாக இருப்பதன் விளைவு ரவுடியும், திருடனும் எஸ்கேப் ஆகிறார்கள். மீண்டும் மீண்டும் தமது கூட்டுக் களவானித்தனத்தை செய்கிறார்கள். ஆட்டையப் போட வற்றவன் மாட்டிக் கொண்டால் தப்பிப்பதற்கு திட்டமில்லாமலா வருவான்?

எனவே மக்களே எங்கும், எப்பொழுதும் ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதிகளையும், அவர்களது கூட்டுக் களவானிகளையும் கேள்வி கேட்டு, கண்டித்து, அம்பலப்படுத்தி, அவமானப்படுத்தி வெளியேற்ற களமிறங்குங்கள்.


அசுரன்

தரவுகள் ஆதாரம்: ஹெட்லைன்ஸ் டுடே


முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

'வினை'யகர் சதுர்த்தி!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!



சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!



Hindu Rashtra: Saffron terror's hall of shame



The Headlines Today sting




Vedio-Saffron goons attack HT Delhi office


Saffron goons attack Headlines Today office


Hindu terror is a reality, yet India refuses to utter its name

Thursday, October 07, 2010

தீபாவளி, நவராத்தியின் போது பயங்கரவாதிகளின் தாக்குதல் அபாயம் உள்ளது எச்சரிக்கை!!

வெடிகுண்டு 1:

கடந்த தீபாவளியைப் போலவே இந்த தீபாவளிக்கும் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு தாக்குதல் அபாயம் உள்ளதென்று உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. அதுவும் குறிப்பாக கோவாவில் அபாயம் அதிகமாம்.

போன வருடம் உளவுத் துறை எச்சரிக்கை செய்ததைப் போலவே காவி பயங்கரவாதிகள் கோவாவில் இந்துக்கள் மீது குண்டு வைக்கும் முயற்சியிலிருந்த பொழுது, அந்த சதியில் தாமே பலியாகி வெடித்துச் சிதறினர்.

ஆகவே ஜனங்களே, அதே போல இந்த தீபாவளிக்கும் இந்துக்கள் மீது இந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாலும். போன தடவை செய்து மாட்டிக் கொண்டது போலல்லாமல், இந்த முறை திறம்படச் செய்து முஸ்லீம்கள் மீது பலி போட்டு, அவ்வகையான தாக்குதலைக் காரணம் காட்டி மதவெறி தூண்டி மக்களை துண்டாடி, ரத்தம் குடிக்கும் அபாயம் இருப்பதாலும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இந்து காவி பயங்கரவாதிகளின் பிரித்து மோதவிடும் அரசியலுக்கான ரத்த பலி சூத்திர/தாழ்த்தப்பட்ட இந்துக்களின் உடலிலிருந்தே எடுக்கப்பட வேண்டியுள்ளதை அவர்களின் முந்தைய நடவடிக்கைகள் பல நிரூபித்துள்ளன என்பதால், இந்த எச்சரிக்கைகளை இந்துக்கள் எனச் சொல்லப்படுபவர்கள் தகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டுகிறேன். இந்து என்றால் யார் என்று சந்தேகமுள்ளவர்களுக்கு கீழ்கண்ட சட்ட விளக்கம்:

"யார் முஸ்லீம், கிருத்துவ, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவரில்லையோ அவர் இந்து".**


இந்த பதிவை படித்து எழுச்சியுற்ற இந்துக்களுக்கான பாடல்(கிளிக்கி பாடலைக் கேட்க்கவும்):

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
அந்த ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை...

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
கையில் தீவட்டிய எடுத்து வற்றான் எச்சரிக்கை...



**இந்து குறித்த இந்த சட்ட விளக்கம் அப்படியே அயோத்தி தீர்ப்பு நகலைப் போல டாமால் டூமீலாக இருப்பதற்கு கொம்பேனி பொறுப்பல்ல.

அசுரன்

இந்து என்று சொல்லுடா மாட்டுக் கறி தின்னுடா!!

மாட்டுக் கறி லெக் பீசு 1:

காமன்வெல்த் போட்டியில் வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறி போடுகிறார்கள் - என்று மோடி புகார் கொடுத்துள்ளாராம். அவருக்கு மாட்டுக்கறி லெக் பீசு கொடுக்கப்படவில்லை என்ற வருத்தத்தில் சொல்லியது போலத் தெரியவில்லை.

ஏனேனில், போன முறை வைப்ரெண்டு குஜராத் நிகழ்ச்சிக்கு குஜராத்து வந்த வெளிநாட்டுக்காரர்களுக்கு மோடி அரசு மாட்டுக்கறி கொடுக்கவில்லை. காரணம், கிருமிகள்.... ஸாரி மன்னிக்கவும். காரணம் என்று அவர் கூறியது இதோ:
"அவர்களிடம் குஜராத் மக்கள் சாப்பிடும் உணவைத்தான் உங்களுக்குத் தர முடியும் என்று நாங்கள் கூறியபோது அதை மறுக்காமல் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்."

ஆஹ, அவரது இந்த லாஜிக்கின் படி இந்திய மக்கள் சாப்பிடும் உணவைத்தான் காமென்வெல்த் கும்பலுக்கும் தர வேண்டும் என்று அவர் கருதுகிறார். அதையே வலியுறுத்தியுள்ளார். இது சரிதான். இந்த கூற்றின் தர்க்க முடிவு என்னவென்றால் மாட்டுக்கறி சாப்பிடுபவன் இந்தியனல்ல என்று ஆகிறது.

அப்படியானால் இந்தியாவில் வாழும் பெரும்பான்மை உழைக்கும் மக்களாயுள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், சூத்திர மக்களும் மாட்டுக்கறியை பாரம்பரியமாகவே சாப்பிடுகிறார்கள் என்ற வகையில் அவர்கள் இந்திய மக்கள் அல்ல என்று ஆகிறது. ஏனேனில், இந்திய மக்கள்தான் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்களே? அல்லது இந்திய மக்கள் என்று எதிர்காலத்தில் மோடி கும்பல் அனுமதிக்கும் மக்கள் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது அல்லவா?

இன்னொரு பக்கம், உலகமய ஏகாதிபத்திய அரசியலானது இதே உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை மறுத்து அவர்கள் மீது அறிவிக்கப்படாததொரு யுத்தத்தை அரசியலமைப்புக்கு விரோதமாக நாடு முழுவதும் நடத்தி வருவதன் மூலம் அதே தாழ்த்தப்பட்ட, சூத்திர மக்களை இந்தியர்கள் இல்லை என்று சூசகமாக அறிவித்துவிட்டது. என்னவொரு பொருத்தம் பாருங்கள் இந்துத்துவவாதிகளுக்கும், ஏகாதிபத்தியவாதிகளுக்கும்.

எனவே, இந்தியன் என்று நம்புபவன் உழைக்கும் மக்களை அழித்தொழிக்கும் உலகமய அரசியலை எதிர்ப்பதன் மூலமும், இந்து என்று நம்புபவன் மாட்டுக்கறி தின்பதன் மூலமும் தமது நேர்மையை நிரூபிக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாக மாறிவிட்டது.

நான் இந்தியன் என்றோ இந்து என்றோ நம்பிக் கொண்டிருக்கவில்லை ஆயினும் உலகமயத்தை மாட்டுக்கறி லெக்பீசு வறுவலை ருசித்துக் கொண்டே எதிர்ப்பேன்.

அசுரன்

Friday, October 01, 2010

அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!

"கடந்த கால கசப்பு அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வோம்" - ஆர் எஸ் எஸ் தலைவன் மோகன் பகவத் சொல்கிறான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஆதாரமற்ற கசப்பனுபவமாம் ராமன் கோயில் இடிப்பு என்ற கதையை வைத்துக் கொண்டு பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் சொல்கிறான் இதை.

"நமது சமூகத்தில் மதவெறியர்களுக்கு(fanatics) இடமில்லை, இந்தத் தீர்ப்பு நல்ல தீர்ப்பு" இப்படி சொல்வது வேறுயாருமல்ல குஜராத் பாசிச மோடி என்ற மதவெறியன் தான்.

"தேசிய இணைவுக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது, உடனே ராமன் கோயிலை பெரிதாக கட்டுவோம்" இப்படி புரிய வேண்டியவர்களுக்கு மட்டும் புரிகின்றபடி உளறியது போல தெளிவாக உளறியிருப்பவன் திருவாளர் மார்க்கெட் போன அத்வானி.

அயோத்தித் தீர்ப்பு என்ற அயோக்கியத்தனம் செய்யும் மாயம் இந்த அதிசய பேச்சுக்களையெல்லாம் நாம் கேட்க வேண்டிய காலக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. நேற்று எல்லா தொலைக்காட்சிகளும் இந்து மத வெறித் தலைவர்களின் நல்லொழுக்க பேச்சுக்களால் நிரம்பி வலிந்தன. இது அயோத்தித் தீர்ப்பு அல்ல, அயோக்கியத் தீர்ப்பு என்பதை இதுவே உரக்க ஒலித்தது.

இந்தத் தீர்ப்பில் இந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் மனசாட்சியாக நீதிமன்றத்தின் குரல் ஒலித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாபர் மசூதி மற்றும் அது இருந்த இடத்தின் மீதான முஸ்லீம்களின் உரிமை என்னென்ன காரணங்களை நிராகரித்து பறிக்கப்பட்டதோ அதே நிராகரிக்கப்பட்ட காரணங்களை/வாதங்களை ஏற்றுக் கொண்டு ஆர் எஸ் எஸ் காவி வெறியர்களுக்கு அந்த இடத்தின் மீது உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது முரன்பாடு என்று கேட்டவர்கள் எல்லாம் நேற்று தேசவிரோதிகள் என்று தூற்றப்பட்டார்கள், கேலி செய்யப்பட்டார்கள்.

'அங்குதான் ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை எனவே அந்த இடம் அவர்களுக்கே சொந்தம்' (தீர்ப்பு நகல்1 மற்றும் 2) என்று சொல்லும் நீதிமன்றம்,

'அது பாபருக்கு சொந்தமான இடம் என்பதும், அதைக் கட்டியது பாபர்தான் என்பதும் போதுமான அளவு நிருபிக்கப்படவில்லை, எனவே உரிமையில்லை' (தீர்ப்பு நகல் 2, சரத்து 2) என்று கூறி முஸ்லீம்களின் உரிமையை மறுத்துள்ளது. ஆதாரமே இல்லாத ராமன் பிறந்த இடம் என்ற கட்டுக்கதை உண்மை ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் நேரடி ஆதாரமற்றது(தீர்ப்பு நகல் 1, சரத்து 2.) என்பதாலேயே 1992ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பொய் ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.

இதைத்தான் இந்திய வரலாற்று முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான இர்பான் ஹபீப் இப்படிக் கூறுகிறார்: "இந்த நாட்டின் இராண்டம்தர குடிமகனாக உணர்கிறேன்". இப்படித்தான் பெரும்பான்மை முஸ்லீம்களும் உணர்கிறார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் தொகையை கொண்ட நாட்டின் முஸ்லீம்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாக உணர வைக்கப்பட வேண்டும், அதன்படி அவர்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்பதுதான் ஆர் எஸ் எஸ்ன் இலட்சியமும் ஆகும்.இதைத்தான், 'தேசிய ஒருங்கிணைப்புக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது' என்று முழங்குகிறான் அத்வானி.

இல்லாத ராமனுக்கு அந்த இடம் சொந்தமாம், ஆனால் பாபர் கட்டவில்லையென்பதாலேயே அது மசூதிக்கு சொந்தமில்லையாம். அப்படியென்றால் இடிக்கப்பட்ட மசூதி என்ன அந்தரத்திலா தொங்கிக் கொண்டிருந்தது, அந்த இடத்தில்தானே இருந்தது? யார் கட்டினால் என்ன? மசுதி இருந்தது என்ற உண்மைதானே இங்கு முக்கியமானது? 1949ல் ராமன் சிலையை அங்கு வைத்த திருடன் யார் என்று நீதிமன்றம் ஆராய்ந்துதான் தீர்ப்பளித்ததா? அப்போது மட்டும் இந்துக்களின் நம்பிக்கை முக்கியம், அதன் பூர்வாசிரமம் தேவையில்லை?

'1949ல்தான் மசூதியின் மைய கோபுரத்திற்குக் கீழே ராமன் சிலை வைக்கப்பட்டது (தீர்ப்பு நகல் 1,2,3). எனவே அது இந்துக்களுக்குச் சொந்தம்' என்று கூறியுள்ள நீதிமன்றம்.

'மசூதியை இஸ்லாம் சொல்லுகின்ற விதிகளின் படி கட்டவில்லை எனவே அது மசூதியில்லை(தீர்ப்பு நகல் 3), அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை" என்று கூறியுள்ளது. ராமன் சிலை மட்டும் இந்து விதிமுறைகளின் படித்தான் 1949ல் அங்கு திருட்டுத்தனமாக வைக்கப்பட்டதா என்ன? விதிமுறைகளெல்லாம் முஸ்லீமுக்கு மட்டும்தான் போலும்?

1949க்குப் பிறகு மைய கோபுரத்தின் கீழ் ராமன் சிலை வைக்கப்பட்டதால் அது இந்துவுக்குச் சொந்தம்(தீர்ப்பு நகல் 1, 2,3) எனில் 1949க்கு முன்புவரை அங்கு சிலையும் கிடையாது ஒன்றும் கிடையாது. பல நூறு வருடங்களாக அங்கு முஸ்லீம்கள்தான் தொழுதார்கள்(தீர்ப்பு நகல் 1,2). எனில், அவர்களுக்கு உரிமையில்லையா என்று யாரும் கேள்வி எழுப்பிவிடாதீர்கள். தேவைப்பட்டால் ஆயிரம் வருட பழய நம்பிக்கை(ராமன்) என்று நியாயப்படுத்தவும், தேவையில்லையெனில் லேட்டஸ்ட்(1949ல் சிலை வந்தது) என்னவென்று பாருங்கள் என்று நிராகரிக்கவும் ஆர் எஸ் எஸ்ன் மனசாட்சியாம் நீதிமன்றங்களுக்குத் தெரியும்.

அதாவது மைய கோபுரம் முஸ்லீம்களுக்குச் சொந்தம் என்பது நிருபிக்கப்படவில்லை என்கிறது நீதிமன்றம். சரி இருக்கட்டும். ஆனால் இந்துக்களுக்கு மைய கோபுரம் சொந்தம் என்பதை மட்டும் எப்படி நீதிபதிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள்? அங்கு 1949ல் சிலை வைக்கப்பட்டதாலேயும், அதற்கு முன்பு வரை பொதுவாக அயோத்தியில் ராமன் பிறந்தான் என்று நம்பிக் கொண்டிருந்த இந்துக்கள், மசூதி உருவான பிறகு அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இராமன் பிறந்தான் என்று மாற்றிக் கொண்ட இந்துக்கள், பிறகு 1949ல் திருட்டுத்தனமாக ராமனது சிலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழே வைக்கப்பட்டது எனவே அது இந்துக்களுக்குச் சொந்தமாம்(தீர்ப்பு நகல் 1, 2,3). நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படித்தான் சொல்கிறது.

நீதிமன்ற தீர்ப்பில் எங்கேயுமே மைய கோபுரம் உள்ள பகுதி இந்துக்களுக்கு சொந்தம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளதால் அதை அவர்களுக்குத் தருகிறோம் என்று சொல்லவில்லை. நிருபணம் எல்லாம் முஸ்லீம்களுக்குத்தான், இந்துக்களுக்கு நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் இதன் பொருள்.

"மசூதி இருந்த இடத்தின் மீதான உரிமையை சன்னி வக்பு வாரியம் நிருபிக்கவில்லை. மேலும், மசூதி இருந்த இடம் பாபருக்கு சொந்தமானது என்பதும் நிருபனமாகவில்லை" என்று கூறியுள்ளது நீதிமன்றம் (தீர்ப்பு நகல் 1, 2, 3).

ராமன் பிறந்த இடம் என்பதும்தான் நிருபிக்கப்படவில்லை, அங்கு ராமன் கோயில்தான் இருந்தது என்பதோ அல்லது கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதோ கூடத்தான் நிருபிக்கப்படவில்லை(தீர்ப்பு 1, 2). அந்த இடம் இந்துக்களுக்கானது என்பதும் கூடத்தான் நிருபிக்கப்படவில்லை. ஆனாலும் இந்துக்களின் நம்பிக்கை என்பதால் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்குத் தரப்படவேண்டும் என்கிறது தீர்ப்பு.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் படி நிருபிக்கப்பட்டவையெல்லாம் இவைதான், 1) ஏற்கனவே, இடிந்த கோயில் ஒன்று இருந்துள்ளது, அங்குதான் மசூதி கட்டப்பட்டது. 2) கோயிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை. 3) மசூதி கட்டப்பட்ட பிறகுதான் மசூதி இருக்கும் அந்தக் குறிப்பான பகுதியில் ராமன் வழிபாடு நடக்கத் தொடங்கியது. 4)அதுவும் வெளிப் பிரகாரத்தில்தான். 5)1853 வரை மசூதி ஒரு பிரச்சினையாகவே இல்லை, இரு மதத்தவரும் அக்கம் பக்கமாக வழிபட்டு வந்துள்ளனர்.

இதிலும் கோயில்தான் இருந்ததா என்பதை ஆணித்தரமாக அகழ்வாராய்ச்சியால்` சொல்ல இயலவில்லை. பூசி மெழுகவே செய்கிறார்கள்.

இவைதான் நிருபிக்கப்பட்டவையெனில், இதே நிலையை மீண்டும் கொண்டு வருவதுதானே நியாயம்? மசூதியின் பிரகாரத்தில் இந்துவின் வழிபாட்டையும், மசூதி இருந்த இடத்தில் மசூதியையும் கொண்டு வருவதுதானே நியாயம்?

தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், வெளிப் பிரகாரத்தில் சீதா மற்றும் ராமன் வழிபாடு நிகழ்ந்ததால் அது நிர்மோகி அகாராவுக்குச் சொந்தம், உள்ளே மைய ஸ்தூபியில் 1949ல் ராமன் சிலையை வைக்கப்பட்டதாலும் அதையே இந்துக்கள் அன்றிலிருந்து நம்பத் தொடங்கியதாலும் அந்த இடம் இனிமேல் மசூதிக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ சொந்தம் கிடையாது இந்து மகா சபைக்கே சொந்தம், 1992ல் மசூதி இடிக்கப்படும் வரை அங்கு மசூதி இருந்தது என்பது மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுவிட்டது எனவே போனால் போகிறது மூனாவது பங்கு முஸ்லீம்களுக்கு என்று தீர்ப்பு சொல்லியுள்ளனர்.

அதாவது 400 வருடம் மசூதி இருந்தது ரெவின்யு டிப்பார்மெண்டிலோ அல்லது நிலப் பட்டா மூலமோ ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை (பாபருக்கு இந்த சட்டப் பிரச்சினையெல்லாம் தெரியாமல் போனதற்கு பாவம் நீதிபதிகள் என்ன செய்வார்கள்) எனவே அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை போலும். 400 வருட மசூதிக்கு உரிமையில்லை ஆனால் 61 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட ராமனது திருட்டு சிலைக்கு உரிமையுண்டு. ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை(புதிய நம்பிக்கையா, பழைய நம்பிக்கையா என்பதெல்லாம் நீதிமன்றத்திற்கு தேவையில்லாத விசயம்).

இப்போது இந்தப் பிரச்சினையின் காலனி ஆட்சிக்கால பரிணாமத்தை புரிந்து கொள்வது தேவையாக உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்து முஸ்லீம் பிரித்தாளும் சூழ்ச்சியும், காலனியாதிக்க பிரிட்டிஷ்க்காரர்களின் ஏவல் படையாகச் செயல்பட்ட இந்துத்துவவாதிகளின் முஸ்லீம் எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு அரசியலும் இந்த பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன.

நிர்மோகி என்ற குழு அங்கு கோயில் இருந்ததை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று களத்தில் இறங்கிய பிறகுதான் 1853ல் அங்கு முதல் மத மோதல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு வருடங்கள் நடந்த கலவரங்களின் விளைவால், நவாபின் ஆட்சியின் கீழ் இருந்த அங்கு கூட்டாக இந்துக்களும், முஸ்லீம்களும் உள்பிரகாரத்தில் வழிபடுவது தடை செய்யப்பட்டது. ஏற்கனவே மசூதி இருந்தபடியால், இந்துக்களின் வழிபாடிற்கு என்று வெளிப் பிரகாரத்தில் ஒரு இடம் கட்டப்பட்டது.

இதுதான் பிரச்சினையின் மையமான பகுதி. 1850களில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருங்கிணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றும் சுதந்திரப் போரை நடத்திக் கொண்டிருந்தனர். திப்பு சுல்தான் தலைமையில் தென்னிந்தியாவில் ஒரு கூட்டிணைவு உருவாகி அது பிரிட்டிஸால் சிதைக்கப்பட்டிருந்தது. திப்பு சுல்தான் தலைமையில் தந்திரப் போரில் ஈடுபட்ட அரசர்கள் மூட்டிய கனல் 1805ல் வேலூர் சிப்பாய்க் கலகமாக வெடித்தது. பிற்பாடு, 1857ல் இந்திய சுதந்திரப் போராக இந்தியா முழுவதும் வெடித்துக் கிளம்பியது. இவையிரண்டும் பிரிட்டிஷ்க்காரர்களால் ஒடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு புரட்சியை எதிர்நோக்கி இருந்தது.

மத பிரிவினைகள் இன்றி மக்கள் ஒன்று பட்டு நின்றது பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு அபாயமானது எனவே, பிரித்தாளும் தந்திரம் விரிவாக அமல்படுத்தப்பட்டது. இன்னொரு பக்கம், புரட்சிகரமான இந்த காலகட்டத்தில்தான் துரோகமமும் உத்வேகத்துடன் முன்னுக்கு வந்தது. அந்தத் துரோகத்தின் வரலாற்றுக் குரலாக பதிவு செயப்பட்டதுதான், பக்கிம் சந்தர் சாட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' என்ற புதினம், அதில் முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டுவதே முக்கியம், பிரிட்டிஷ்க்காரர்களின் ஆட்சி நமக்குத் தேவையானது என்ற அரசியலும் பேசப்பட்டது. முஸ்லீம்களை விரட்ட செல்லும் கூட்டத்தினரின் 'தேசபக்த'ப் பாடலாக வந்தேமாதரம் பாடலும் புதினத்தில் இயற்றப்பட்டது.

இந்துத்துவாதிகளின் மதவெறி முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரமும், பிரிட்டிஷ்க்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாளமும், லயமுமாக இணைந்து செயல்பட்டு இந்திய விடுதலைப் போராட்ட அரசியலை பிழைப்புவாத லாவணிக் கச்சேரியாகவும், மதவாத பிரிவினையாகவும் சிதைத்தன. இவைதான் பாபர் மசூதிப் பிரச்சினையில் தெரிந்தே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மோதலைத் தூபம் போடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தன.

ஒரு நீதிமன்றத் தீர்ப்பு முற்றுமுதலாக பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் வழங்க இயலுமா? அத்தகைய நம்பிக்கை பெரும்பான்மையினருடையது என்பது கூட ஜனநாயக முறையில் நிருபிக்கப்படாத பொழுது தீர்ப்பின் தன்மையை நியாயமானதாக எப்படி புரிந்து கொள்ள இயலும்? மசூதியை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியதை மீறி அது இடிக்கப்பட்டுள்ளதற்கு நீதிமன்றத்தின் எதிர்வினை என்ன? இவையெல்லாம் உண்மையில் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதையல்ல மாறாக இன்னும் சில பல வருடங்களுக்கு அடித்துக் கொண்டு அப்பாவி மக்களை பலி கொடுக்கப்படுவதையே உறுதி செய்யும். அதைத்தான் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளும் விரும்புகிறார்கள்.

இது தீர்ப்பு அல்ல, துரோகம். இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகம்.

அசுரன்

தீர்ப்பு நகல் 1

தீர்ப்பு நகல் 2

தீர்ப்பு நகல் 3

காலக் குறிப்புகள்

காலக் குறிப்புகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

அயோக்கியத் தீர்ப்பு

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
ராமனுக்கே மயிர் பிடுங்கிய அலகாபாத் நீதிமன்றம்..

Related Posts with Thumbnails