TerrorisminFocus

Friday, January 04, 2008

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் நம்ப விரும்புகிறோம் அல்லவா??!!!

குஜராத் இனப் படுகொலைகள் அரசே திட்டமிட்டு செயல்படுத்திய ஒன்று என்பதை தெஹல்கா விடியோக்கள் அம்பலப்படுத்தின. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை தமது பத்திரிக்கைகளில் வெளியிடாமல் கள்ள மௌனம் சாதித்தன அனைத்திந்திய பத்திரிக்கைகளும். செத்து சுண்ணாம்பாகிப் போன டாயானாவை பற்றியும், சாகாமலேயே வலம் வந்து கொண்டிருக்கும் உலக அழகி ஐசுவர்யாராய் அவரது கணவர் சகிதம் நகர்வலம் வருவது பற்றியும், இன்ன பிற பிராசாந்த், வரலட்சுமி உள்ளிட்ட உள்குடும்ப விவகாரங்கள் பற்றியும் ருசிக்க ருசிக்க புகைப்படங்களுடன் வெளியிடும் இந்த பத்திரிக்கைகள் தெஹல்கா பற்றி மௌனம் காத்தது காரியப் பூர்வமானது. தற்செயலானது அல்ல.

ஒருவன் எதை பேசுகிறான் என்பது மட்டுமல்ல எதை பேசாமல் மௌனம் காக்கிறான் என்பதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததே. இது போன்ற குழப்பங்களுக்கும் ஊகங்களுக்கும் அவசியமில்லை என்று குமுதம் பத்திரிகை வெளிப்படையாகவே தனது RSS சார்பை, பார்ப்பன பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனவரி முதல் வாரத்துக்கான குமுதத்தில் கடைசிப் பக்கங்களில் வந்துள்ள தலையங்கத்திலும், அதற்க்கு அடுத்த பக்கங்களில் இல. கனேசனுடைய கருத்து தொகுப்பு என்ற பெயரிலும் தனது இந்த வர்க்க பாசத்தை விளம்பரப்படுத்தி நமது வேலையை மிச்சப் படுத்தியுள்ளது குமுதம் 'செட்டியார் அன் கோ' பத்திரிகை. குமுதம் பத்திரிகையின் அப்பட்டமான பார்ப்பன கொழுப்பை பேசும் முன்பாக அதனது மறைமுக பார்ப்பன நடவடிக்கைகளை சிறிது பார்த்து விடலாம்.

தமிழர்களை அடித்து மிரட்டி பந்தாடி வரும் அதே மலேசியாவில் அப்படிபட்ட சமபவங்கள் எதுவுமே நடக்கவில்லை என்பது போல செட்டியார் சாதி வெறியர்கள் தமது சாதி பெருமையை பறைசாற்றி மாநாடு நடத்துகிறார்கள். தமிழ், தமிழர்கள் என்று வரிக்கொருமுறை அறிவித்துக் கொண்டு தமது சாதி பாசத்தை தமிழ் முகமுடியில் மறைக்கும்
நரித்தனம் வேறு. ஆயினும் மலேசிய தமிழர்களின் உரிமைகள் குறித்தோ மலேசிய அரசின் பாசிச நடவடிக்கைகள் குறித்தோ எதுவும் காட்டிக் கொள்ளவில்லை இந்த மாநாட்டில். அந்த மாநாட்டில் குமுதம் இதழ் உரிமையாளர் ஜவஹர் பழனியப்பன் என்பவன் பேசுகிறான் தனது சாதி பெருமையை. இதை கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இப்படி வெளிப்படையாக சாதி பெருமை பேசும் இழி பண்பை அவர்கள் விளம்பரப்படுத்துவது தற்செயலான நிகழ்வு அல்ல.

இதே இதழில் இதற்க்கு முந்தைய பக்கத்தில் தமிழகத்தை இருளில் தள்ளிய கழக ஆட்சி என்று ஒரு கட்டுரை. தமிழகம் ஏதோ பிறரது ஆட்சியில் பிரகாசமாக ஒளிர்ந்தது போலவும். கழக ஆட்சியில்லாத பிற மாநிலங்கள் எல்லாம் மிக பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டுள்ளது போலும். தமிழகத்தின் சாபக் கேடுகளுக்கு பின்னால் இருப்பது எல்லாம் கழக ஆட்சியே காரணம் என்பது போலும் அர்த்தம் வரும் வகையில் கழகம் என்ற சொல்லை கவாளித்தனமாக பயன்படுத்தும் ஒரே கும்பல் தமிழக பார்ப்பன கும்பல்தான். தலைப்பை பார்த்தவுடன் இந்த சந்தேகம் நமக்கு வந்ததால் எழுதியவர் யார் என்று பார்த்தால் அது 'சாவித்திரி கண்ணன்' என்ற பெண்மனி. பாப்பாத்தியாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதே நமது கருத்து.

ஆதாம் பால பிரச்சினையின் போது கருணாநிதி மீது பழி போட்டு அவரை கண்டனம் செய்து எழுதப்பட்ட குமுதம் கட்டுரையும் கூட பாப்பாத்தி எழுதியதுதான் என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. இதே இதழின் கடைசிப் பக்கத்தில் பயோடேட்டா பகுதியில் கருணாநிதியின் சமீபத்திய சாதனை என்று 'ராமர் பால பிரச்சினையில் மீண்டு வந்தது' என்று எழுதியுள்ளது இந்த பார்ப்பன குசும்பு பிடித்த மேல்சாதி வெறி பத்திரிகை. இது நமக்குத்தான் அசிங்கம். சூத்திரன் கருணாநிதியை பாப்பான் நாக்கை வெட்டுவேன் என்று மிரட்டுகிறான். நீதிமன்றம் ஞாயிற்றுக் கிழமை கடையை திறந்து வைத்து மிரட்டுகிறது. பத்திரிக்கைகள் எல்லாம் சேர்ந்து மனு நீதியின் அடிப்படையிலேயே பார்ப்பானின் கேடுகெட்ட திமிர்த்தன துடுக்குப் பேச்சை விமர்சனம் செய்யாமல் நியாயமான கேள்வி கேட்ட கருணாநிதியை விமர்சிக்கின்றன. தினமலம் பத்திரிகை முதல் பக்கத்தில் தினமும் கருணாநிதியை கேவலப்படுத்தி எழுதுகிறது. பார்ப்பான் எல்லாம் ஒற்றுமையாக கூடி நின்று ஒப்பாரி வைத்து இதை ஏதோ பொது பிரச்சினை என்று ஆக்கிவிடுகிறார்கள். தீடீரென்று பார்த்தால் கருணாநிதியை தாக்காமல் ராமர் பாலம் குறித்து ஒரு கட்டுரை தினமலம் பத்திரிகையில் உள் பக்கத்தில் அமுக்கி வாசித்து வருகிறது. என்னாடயிதி அதிசயம் என்று பார்த்தால் அதே பத்திரிகையில் பொதுப் பணித்துறை விளம்பரங்கள் பக்கத்துக்கு பக்கம் வாரியிறைத்து நிறைந்து கிடக்கிறது. கருணாநிதியும் ராமன் ஒரு நல்ல இளவரசன் என்பது போல எதையெதையோ சொல்லி பார்ப்பன கும்பலுடன் சமரசம் செய்து கொள்கிறார். இதுதான் பயோடேட்டா பகுதியில் குமுதம் பத்திரிக்கை திமிர்த்தனத்துடன் தனது பார்ப்பன குசும்பை, ஊளை கொழுப்பை ஒழுக விட அடிப்படை.

முன்பொருமுறை குமுதம் பத்திரிகையுடன் அவரது முதல் சண்டையின்(எதிரிகளாக இன்றுவரை இருவரும் செயல்படும் அளவு இந்த சண்டை இருந்தது) போது கருணாநிதி குமுதம் நிருபரை இவ்வாரு மிரட்டினார் 'நான் அடிச்சா நீ தாங்குவயாயா?" என்று. இதோ இன்று பார்ப்பன ஊழை கொழுப்பெடுத்த குமுதம் ஒட்டு மொத்த தமிழக உழைக்கும் மக்களையும், மனிதாபிமானிகளையும் அவமானப்படுத்தி பார்ப்பன திமிரை பத்திரிகையில் எழுதுகிறது. வாசகனோ நமீதாவின் அரைடவுசர் படம் தூக்கத்தை கெடுத்தது என்று வாசகர் கடிதத்தில் ஒப்பாரி வைக்கிறான்.

இந்த குறிப்பிட்ட இதழுக்கு முந்தைய வாரத்தில் வெளிவந்த குமுதம் இணைப்பு இதழ் 'மினி குமுதம் - வீட்டு உபயோக குறிப்புகள்' இதழில் முதல் சில பக்கங்களில் முக்கியமானவர்களாக முன்னிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் பார்ப்பன பெண்களாக இருந்ததும் கூட தற்செயலான நிகழ்வு அல்ல. அதே இதழில் அரசு பதில்கள் பகுதியில் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது, "தெஹல்கா செய்தி பொலியாக இருக்கலாம் என்று சோ சொல்கிறாரே?" என்று. அதற்க்கு அரசு பதில் பின்வருமாறு சொன்னது, "'சோ' பூசனிக்காயை சோற்றில் மறைக்கலாம் ஆனால் யானையை சோற்றில் மறைக்க முயற்சி செய்கிறார்" என்று பகடி செய்தது. அதற்க்கு அடுத்த வாரத்தில் இதே பொய்யை அதாவது தெஹல்கா வீடியோ ஒரு போலி என்று கூறி கட்டுரையில் பேசுகிறார் இல. கனேசன். இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்பது இருக்கட்டும், 'சோ' என்ன புரிந்து கொள்ளலாம் என்றால் யானையை சொற்றில்தான் மறைக்க முடியாது ஆனால் கட்டுரை முழுவதும் பொய்யாக எழுதுவதன் மூலம் மறைக்கலாம் என்று குமுதம் சோவுக்கு பாடம் எடுக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். சோ என்ற பார்ப்பன இரட்டை நாக்கு மொட்டை குசும்பனுக்கே பாடம் எடுக்கும் அளவு குமுதம் செட்டியார் கும்பல் பார்ப்பன கொழுப்பேறி உள்ளது என்று வேண்டுமானால் நாம் புரிந்து கொள்ளலாம். மோடியின் பெருமை பேசி பார்ப்பன பொய் பரப்பும் அந்த இல கனேசன் கட்டுரைக்கு தலைப்பு 'மோதி மிதித்த மோடி!'.

அரசு பதில்கள் பகுதியில் சோவை காலை வாரியதாக வாசகர் முன்பு நாடகம் ஆடிய அதே குமுதத்தில் பயோடேட்டா பகுதியில் கலைஞருக்கு ஒரு சொட்டு போடுகிறது குமுதம். எதற்க்கு?.... நீண்ட கால சாதனையாக திராவிட கொள்கைகளை விடாமலிருப்பதற்க்காகவாம். அதென்ன கலைஞருடைய அந்த விடாத திராவிட கொள்கை? நேற்று இராமன் எந்த இன்ஞினியரிங் காலேஜ் என்கிற மிகச் சாதாரணமான கேள்வி கேட்டுவிட்டு இன்று ராமன் ஒரு சிறந்த இளவரசன் என்பதை நான் மறுக்கவில்லை என்று சரண்டர் ஆகிவிட்டு, நாளை இந்த விசயத்தை முதல் பக்கத்தில் எழுதி அசிங்கப்படுத்தும் தினமலம் பத்திரிக்கைக்கு பொதுப்பணித்துறை விளம்பரங்களை அள்ளிக் கொடுப்பதன் மூலம் திரை மறைவு ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுதான் திராவிட கொள்கை என்று குமுதம் சொல்லாமல் சொல்கிறது. ஏனேனில் இந்த சம்பவங்கள் எப்படி நடந்திருக்கும் என்று நம்மால் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. இவையெல்லாம் குமுதத்திற்க்கு தெரியாமல் இருந்திருக்காது.

நம்ம பையன் ஒரு கதை எழுதிருக்கான் உங்க பத்திரிக்கையில பிரசுரம் செஞ்சுடரேலா என்பதில் ஆரம்பித்து பார்ப்பன உயர் வர்க்க குடும்பங்கள் தமிழக பத்திரிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தும் விசயம் கொஞ்சம் கூர்மையாக இந்த பத்திரிகைகளை வாசித்தாலே புரியக் கூடிய ஒன்றுதான். தெஹல்கா அம்பலப்படுத்தலை தொடர்ந்து கூட இந்த பத்திரிக்கைகளுக்கு இதே வட்டங்களிலிருந்து தெளிவான இன்ஸ்ட்ரெக்சன்ஸ் வந்திருக்கும் என்பதுதான் நமது அனுமானம். அரசு மற்றும் அரசாங்க வட்டங்களில் இந்த பார்ப்பன பயங்கரவாத கும்பலின் நெருக்கத்திற்க்கு மலர்மன்னன் என்ற பார்ப்பன RSS குண்டனுக்கு அவன் மண்டைக்காடு கலவரத்தை
அரங்கேற்றிக் கொண்டிருந்த பொழுது உதவிய அன்றைய போலீசு துறை அமைச்சர் எம் ஜி ஆர் என்கிற சிகப்பு விஜயகாந்தே நல்லதொரு உதாரணம்.

மோடியின் பெருமை பேசி RSS பத்திரிகையாக தன்னை விளம்பரப்படுத்தியுள்ள ஜனவரி மாத முதல் வார இதழில் அந்த குறிப்பிட்ட தலையங்கத்தில் குமுதம் என்ன எழுதியுள்ளது?

"மத வாதத்திற்க்கு கிடைத்த வெற்றியா என்று கூட விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் குஜராத் மாநிலத்தில் மோடி ஆட்சியில் உருவான விளைவுகளை மதக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு பார்த்தாக வேண்டும்." - குமுதம்.

மோடி ஆட்சியில் உருவான முக்கிய விளைவான, சமூகத்தை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்தியதையும், வெறும் புரளியின் அடிப்படையிலேயே 3000 முஸ்லீம்களை கொன்று குவித்ததையும், அதை பெருமையாக சொல்லிக் கொண்டு இன்றுவரை திமிராக வலம் வருவதையும் மனிதாபிமானமுள்ளவர்கள் கண்டிப்பதும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று கோருவதும் குமுதத்தின் அகராதியில் மதக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்பதாம். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட மதவெறி துவேசத்தை இன்னும் ஒரு மடங்கு அதிகமாக பேசிய மோடி, தனது வெற்றிக்கு சமூகத்தை மதத்தின் அடிப்படையில் பிளந்ததையே நம்பியுள்ளார் என்பதை சொல்லாமல் சொல்கிறார். ஆனால் பார்ப்பன வெறி பத்திரிகை குமுதமோ இப்படி விமர்சனம் செய்வதை, மனிதாபிமானியாக இருப்பதை மதக் கண்ணாடி அணிந்திருப்பதற்க்கு ஒப்பானது என்று சொல்கிறது. பார்ப்பனியத்திற்க்கு எதிராக பேசினாலே அதை போலி மதச் சார்பின்மை என்று சாணியடிக்கும் RSS கும்பலின் அதே தந்திரம்தான் மனிதாபிமானத்தை மதக் கண்ணாடி என்று சாணியடிக்கும் குமுதத்தின் இந்த கருத்திற்க்கும் பின்னால் உள்ளது.

"76,000 கோடி அளவிற்கு அபாரமாக முதலீடு குவிந்திருப்பதை ரிசர்வ் வங்கியே உறுதிப்படுத்தியிருக்கிறது. பொருளாதாரம் 10.6 % உயர்ந்திருக்கிறது. கிராமங்களுக்கு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்திலும் சாதனை நிகழ்ந்திருக்கிறது." - குமுதம்.

இப்படி குஜராத்தின் வளர்ச்சி என்று குமுதல் பட்டியலிடும் எதுவும் அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததற்க்காக ஆதரமாக இல்லை. இந்த அளவுகோல்களை இந்தியா முழுவதற்க்கும் கூட பொருத்திப் பார்த்து மோடியை விட மன்மோகன் சிங் சூப்பர் என்று நிறுவ முடியும். ஆனால் இவை உண்மையில் மக்களை மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளன என்பதை அங்கு விவசாயத்தில் நிகழ்ந்துள்ள தற்கொலைகளே சாட்சி சொல்லும். இந்தியாவின் தற்கொலை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எனப்படும் மாநிலங்களில் ஒன்றாக தகுதி பெறும் நிலையிலேயே குஜராத் உள்ளது. குஜராத் விவசாயிகள் தற்கொலையை மறைத்து விட்டது மோடி அரசு என்று பஜகாவினுடைய விவசாயிகள் சங்கமான கிசான் சபா குற்றம் சாட்டுகிறது. குஜராத்தின் உணவு உற்பத்தி இந்த ஒரு வருடத்தில் மட்டும் 10 லட்சம் டன்களுக்கும் மேல் குறைந்து விட்டது. ஒவ்வொரு குஜராத்க்காரனின் தலை மீதும் 19 ஆயிரத்து சொச்சம் ரூபாய் கடன் இந்த ஒரு வருடத்தில் ஏறி உள்ளது. குஜராத் தனது தகுதியை மீறி கடன்களை குவித்துள்ளது என்று பா சிதம்பரம் குற்றம் சாட்டுகிறார். கேள்வி முறையின்றி குஜராத் வளங்களை சுரண்டுவதற்க்கு பன்னாட்டு கம்பேனிகளுக்கு உரிமை கொடுக்கும் பாசிச சூழலை உருவாக்கியுள்ளதை நாம் விமர்சனம் செய்வதைத்தான் மதக் கண்ணாடி போட்டு பார்க்காதே என்று அவதூறு பேசுகிறது குமுதம். விவசாயம் குறித்து ஒரேயொரு புள்ளிவிவராமவது போட்டு எழுதலாமே குமுதம் பத்திரிக்கை? ஏன் ஒரே வரியில் விவசாயம் வளர்ந்துள்ளது என்ற பொய்யை - ஒரு திமிங்கலத்தையே தனது தலையங்கத்தில் மறைத்துவிட்டது குமுதம்? படிக்கும் வாசகன் நமீதா எந்தளவுக்கு மறைக்காமல் காட்டுகிறாள் என்பதில்தான் ஆர்வமாக இருப்பான் என்று தெரிந்த திமிர்தான் இதற்க்கு அடிப்படை. உண்மையில் குஜராத் இந்தியாவின் பல மாநிலங்களையும் விட சோசியல் இண்டெக்ஸ் எனப்படும் சமூக முன்னேற்றத்திற்க்கான அளவுகோலில் மிக மோசமாகவே செயல்பட்டுள்ளது.

RSS பிரச்சாரமாக வந்துள்ள இந்த தலையங்கத்திற்க்கு முந்தைய பக்கங்களில் வந்துள்ள "தமிழகத்தை இருளில் தள்ளிய கழக ஆட்சிகள்" என்ற கட்டுரையும் இந்த RSS தலையங்கமும் வெவ்வேறல்ல. தலையங்கத்தில் குஜாராத் ஒளிர்கிறது என்ற இந்துத்துவ பிரச்சாரமும், அந்த கட்டுரையில் தமிழகம் இருளில் என்ற திராவிட அரசியல் மீதான வெறுப்பு பிரச்சாரமும் சரியான தாள சுதியில் இணைந்து ஒலிக்கும் வகையில் RSS பார்ப்பன குசும்புக்கு ஏற்ப இசையமைக்கப்பட்டது.

"2002 ல் குஜராத்தில் நடந்த கோத்ரா சம்பவத்துடன் மோடியை தொடர்படுத்தும் சில பதிவுகள் ஊடகத்தில் பரபரப்பாக வெளிவந்தன." - குமுதம்.

அதாவது குஜராத்தில் நடந்தது கோத்ரா என்ற ரயில் எரிப்பு சம்பவம்தானாம். குஜராத்தில் 57 கரசேவக வெறிநாய்கள் இறந்ததுதான் குமுதத்தின் கண்களில் நிற்கிறதா என்றால் இல்லை அன்பர்களே. இந்த வரிகளின் மூலம் குஜராத் முஸ்லீம்கள் மீதான இன அழிப்பு படுகொலை தாக்குதலை கோத்ரா மூலம் நியாயப்படுத்தி பொதுமக்கள் ஆதரவை தக்க வைக்கும் அதே மோசடியான RSS வித்தையைத்தான் குமுதம் செய்கிறது. இவர்கள் யாரும் தப்பித் தவறி கூட கோத்ரா ஒரு விபத்து என்ற பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மையை தமது பத்திரிகையில் எழுதியதில்லை. குஜராத் படுகொலை குறித்து பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் கூட இப்படி கோத்ரா சம்பவம் என்றே குறிப்பிட்டு பேசுவார்கள். இதன் மூலம் குஜராத் படுகொலைகளை
நியாயப்படுத்துவதே இவர்களின் நோக்கம். கோத்ராவில் இறந்தவர்கள் மனிதர்களாக மதிக்க தகுதியுடையவர்களா என்பது தனிக் கேள்வி. ஆயினும் இந்த கோத்ரா சம்பவத்தை இவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் உள்ள மோசடியை சிறிது பார்த்துவிடலாம். காந்தி என்ற மிதவாத பார்பினியவாதியை கொன்ற கோட்சே என்ற கோழைப் பன்றி தனது கையில் ஒரு இஸ்லாமியனின் பெயரை பச்சை குத்தி கொண்டுதான் அதை செய்தான். இதன் மூலம் மக்களிடையே பரவும் முதல் செய்தி என்பது இஸ்லாமியர்கள் மீதான கோபமாக திரும்பி பார்ப்பனியத்தின் ரத்த வெறியை தீர்க்க உதவும் என்ற நரிப்புத்தியின் அடிப்படையிலேயே இதனை செய்தான் கோட்சே. இதே உளவியல் தந்திரத்தைதான் குஜராத்தில் கோத்ரா சம்பவம் நடந்தவுடன் RSS பார்ப்பன பயங்கரவாத கும்பல் செய்தது. இதோ இன்று வரை மக்களிடையே நிலவிவரும் கருத்து என்பது கோத்ரா சம்பவம் ஒரு இஸ்லாமிய/பாகிஸ்தானிய சதி என்பதே ஆகும். உண்மையில்லை என்று மறுக்க இயலாதா தெஹல்கா வீடியோவை பொய் என்றும் போலி என்றும் பேசும் இதே பார்ப்பன கும்பல்தான் கொத்ரா பொய்யையும், பாபர் மசூதி பொய்யையும், சேது பாலம் பொய்யையும் உண்மை என்பது போல பேசி மக்களிடம் வெறியை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி வளர்க்கின்றனர். குமுதம் அப்படிப்பட்ட கும்பலின் அதிகாரப் பூர்வ ஏடாக தன்னை அறிவித்துள்ளது என்பதுதான் சமீபத்திய செய்தி.

"மாநிலத்தில் நடந்த இந்த மாற்றங்கள்தான் மறுபடியும் மோடி வெற்றி பெற்றதற்கான அடிப்படை காரணம்". - குமுதம்.

உண்மையில் குஜராத்தில் நிகழ்ந்துள்ள மாற்றம் என்பது இந்துத்துவ வெறியர்களின் பொய் பித்தலாட்ட பேச்சுக்களை கண் மூடித்தனமாக நம்பும் வகையில் சிறிது சிறிதாக மூளைச் சலவை செய்யப்பட்ட மக்கள் என்ற விசயமே ஆகும். குறிப்பாக கோத்ரா சம்பவம் நடந்து முடிந்தவுடன் அத்வானி என்ன சொல்கிறான்: "இது ஒரு அந்நிய நாட்டு சதி" என்று. அஹமதாபாத் மீட்டிங்கில் தொகாடியா என்கிற பன்றி பின்வருமாறு பேசுகிறது, "இராமாயணம் கதை உங்களுக்கு தெரியுமில்லையா? அதில் அனுமன் வாலுக்கு யார் தீ வைக்கிறான்?.... ராவணன்... அனுமன் என்ன செய்கிறார்?... லங்காவை எரித்து விடுகிறார்... இப்போ கோத்ராவில் எரிந்த பெட்டிதான் அனுமனுடைய வால். தீ வைத்தது யார்?... முஸ்லீம்கள்... அனுமன் இப்போ பறந்து போறார்... இலங்கையை எரிக்க போறார்.... இலங்கை எது?" இப்படி கூறிய பிற்ப்பாடு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை பட்டியலிடுகிறான் இந்த பன்றி. இதே போல மோடியினுடைய பேச்சுக்கள் எல்லாமே குஜாராத்திகள் கத்தியால் வயிற்றில் சொருகிறான், எரிக்கிறான் என்று குறிப்பான வன்முறை செயல்பாடுகளை சொல்லி அவற்றை மக்கள் செய்யத் தூண்டும் வகையிலேயே இருந்தது. பழங்குடியினரையும், மலைவாசிகளையும் தனது NGO வேலைகளின் மூலம் லோன் வாங்கி தருவது உள்ளிட்ட விசயங்களால் தனக்கு விசுவாசமாக வைத்துக் கொண்டான். பிறகு கோத்ரா சம்பவம் நடந்தவுடன் அவர்களிடம் சென்று இதே பொய் பிரச்சாரத்தை செய்தால் அவன் இயல்பாகவே கோபம் கொண்டு வெறிச் செயலில் ஈடுபடவே செய்வான். திட்டமிட்டு சிறு சிறு கலவரங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியாக மக்களை பிளவு படுத்துவதும் பிறகு அந்த பிளவை பயன்படுத்திக் கொண்டு கோத்ரா அல்லது காந்தி கொலை அல்லது மண்டல் கமிசன் கோசுவாமி கோலை போன்று எதையாவது செய்து ஏற்கனவே உள்ள பிளவை வெறுப்பாக அறுவடை செய்து கொள்வதுமான பண்பாட்டு மாற்றம் தான் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. இதை நம்ப மறுப்பவர்களுக்கு இன்றைய கர்நாடகமும், சமீபத்திய தமிழக - தென்காசி கலவரமும், ஒரிஸ்ஸா கலவரமும் சாட்சியாக இருக்கின்றன. இந்த மாற்றங்கள் குறித்து குமுதம் பேசவில்லை.

இப்படி மக்கள் வெறியூட்டப்பட்டுள்ளதால்தான் படு அல்பத்தனமான பொய்களைக் கூட பார்ப்பன பயங்கரவாதிகளால் அங்கு விற்க முடிகிறது. எ-கா: இஸ்லாமியர்கள் இந்து பெண்களை கடத்திச் சென்று திருமணம் செய்வதன் மூலம் தமது மக்கள் தொகையை கூட்டிக் கொள்கிறார்கள் என்ற பொய்யை அவர்கள் வெகு சீரியசாக விவாதம் செய்வதை காணலாம். இதை தடுப்பதற்க்கென்றே ஒரு பயங்கரவாதி பிரபலமாக குஜராத்தில் உள்ளான். அவனை Frontline பத்திரிகை பேட்டியெடுத்து வெளியிட்டது. இஸ்லாமியனை மணந்த இந்து பெண்களை மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களை மணந்த மேல்சாதி பெண்களை மீட்பதும் என் கடமை என்று மார்தட்டுகிறான் அந்த மேல்சாதி வெறி சொறி நாய். மோடி என்கிற சொறி நாயோ மலம் அள்ளுவது தியானம் செய்வது ஆகும் என்று கூறி மலம் அள்ளும் சாதியைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து மலம் அள்ளச் சொல்கிறான். இதே குஜராத்தில் மலம் அள்ளுபவர்கள் உரிமை கேட்டு போராடிய போது அவர்கள் ஒடுக்கப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. இப்படி மக்களை மத வெறி பார்ப்பனிய அடிமைத்தன போதையில் ஆழ்த்தியுள்ளதால்தான் குஜராத்தை மோடி கூட்டிக் கொடுப்பதை தட்டிக் கேட்க்க ஆளில்லை. SEZ என்ற பெயரில் அடிமாட்டு விலைக்கு நிலங்கள் பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்கு விற்க்கப்பட்டுள்ளது இதற்க்கு ஒரு உதாரணம் ஆகும். குஜராத்தின் மறுகாலனிய அடிமைத்தனம் என்கிற பண்பு மாற்றமும், பார்ப்பினிய அடிமைத்தனம் என்கிற பண்பும் தனித்தனியான நிகழ்வுகள் அல்ல. இவை ஒன்றையொன்று சார்ந்த விசயங்கள் அதனால்தான் குமுதம் பத்திரிகை தனது பார்ப்பனிய சார்பை பொருளாதார முன்னேற்றம் என்கிற பொய்யான பிரச்சாரத்தின் பின் நின்று கொண்டு வெளிப்படுத்துகிறது. இதை குமுதம் பத்திரிகை மட்டுமல்ல அனைந்திந்திய பத்திரிகைகளும் செய்கின்றன என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. இவை அவற்றின் வர்க்க சார்பையே காட்டுகின்றன.

இவையேல்லாவற்றையும் தொகுத்து பார்த்து படிக்கும் வாசகர்கள் இவர்களின் இந்த கள்ள உறவை புரிந்து கொள்ளமாட்டார்களா என்றால் அதற்க்கு குமுதம் வாசகர் கடிதம் பகுதியில் நமீதாவின் அரை டவுசர் படத்தை போட்டு தூக்கத்தை கெடுத்தது குறித்து குறை படும் வாசகரே சரியான பதிலை நமக்கு சூசகமாக சொல்கிறார்.

ஏகாத்மவாதம் என்கிற RSS சித்தாந்தத்தை உருவாக்கியவரை என்கௌன்டரில் போட்டுத் தள்ளிய (இவரை போட்டுத் தள்ளியது பார்ப்பன பயங்கரவாதிகள் என்றும் ஒரு கூற்று உண்டு. அவரை போட்டு தள்ளியது இன்றும் மர்மமாகவே இருக்கிறது, போட்டுத் தள்ளப்பட்டான் என்கிற ஒரு உண்மையை தவிர்த்து) அன்றைய CPMன் இன்றைய வாரிசு புத்ததேவ் பட்டாச்சார்யா அன்றைய RSSன் இன்றைய வாரிசான அத்வானியை நண்பர் என்று விளித்து - "நந்திகிராம் வரை வந்த அத்வானி என்னை சந்திக்காமல் சென்று விட்டாரே" என்று வருத்தப்படுவதும். அதற்கு அத்வானி பதிலுக்கு நண்பர் என்றே விளித்து ஆறுதல் சொல்வதும் தற்செயலானவையல்ல. மறுகாலனிய பொருளாதாரத்திற்க்கு ஏற்ற நிர்வாக வடிவமாக பெரும்பான்மை மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் பார்ப்பனியமே இருக்கிறது என்பதாலேயே மோடிக்கு அனைத்திந்திய பத்திரிக்கைகளும் ஜால்ரா தட்டி 'vibrant குஜராத்' என்று கூவிக் கூவி பார்ப்பன பயங்கரவாதத்தை விற்க்கின்றன. குமுதம் உள்ளிட்ட RSS பத்திரிகைகள் குஜராத் ஒளிர்கிறது என்ற பிரச்சாரத்தின் பின்னே குஜராத் இனப்படுகொலைகளை மறக்க கோருவதும் இந்த அம்சத்திலேயே. ஏனெனில் மறுகாலனியத்தின் பெயரால் பார்ப்பனியம் ஒவ்வொருவர் செவிட்டிலும் அறைந்து கேட்கிறது 'ஒன்று நீ எங்கள் பக்கம் இரு அல்லது புரட்சிகாரனாய் மாறிவிடு' என்று. கலைஞர் சொல்கிறார் 'நான் உங்கள் பக்கம்" என்று. ராமதாசோ, "என்னிடம் இந்த கேள்வி கேட்பதற்க்கு நான் எந்த வகையிலும் தகுதியில்லாதவன் மேலும் கர்நாடகத்தில் தேவகௌடா என்ன செய்கிறாரோ அதையேதான் இங்கு நான் செய்கிறேன் என்னை சந்தேகப்படாதீர்கள்" என்று தாழ்மையுடன் கூறி வாழும் பெரியார் பட்டம் ஒன்றே போதும் என்று பின்வாங்கிக் கொண்டார். அரசியல் அசிங்கம் வைகோ, விஜயகாந்த, சோம பானம் புகழ் சரத்குமார் உள்ளிட்டவர்கள் நாங்கள் அல்ரெடி உங்கள் பக்கம் உள்ளோம் என்று கூறிவிட்டனர். தனது பிறந்த நாளுக்கு ஊரெல்லாம் சுவரெழுத்து எழுதி அசிங்கம் செய்து வைத்து களைத்து போயிருந்த வீரமணியோ மோடியின் தேர்தல் வெற்றிக்கு காரணம் குஜராத கலவரம் குறித்து பேசியதுதான் என்று கூறி தான் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவனல்ல RSS புரா வைத்து மறுகாலனிய சேவை செய்யும் பார்ப்பன பயங்கரவாதிகளின் சகலப்பாடியான பெரியார் புர டிரஸ்ட் ஓனர் என்பதை வெட்கமின்றி பறைசாற்றினார்.

பார்ப்பனியத்திற்க்கு சரியான அடி கொடுத்து அதை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டோம் என்று பெருமை பேசித்திரிந்தவர்களே இதோ உங்களது தலைவர்கள் எல்லாம் பார்ப்பனியத்தின் அடி பொடிகளாய் அவதாரமெடுத்து நிற்கின்றனர். பார்ப்பனியமோ விஸ்வரூபமெடுத்து தனது உடம்பெல்லாம பொய்யும் பித்தலாட்டமும் ஒழுக நிற்கிறது. மறுகாலனிய சேவை செய்து கொண்டே பார்ப்பனிய எதிர்ப்பு செய்வதாக பம்மாத்து செய்யும் முற்போக்கு சீமான்களே இப்போது பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் முச்சந்தியில் முத்தமிட்டு சரசம் செய்கின்றனவே? என்ன செய்வதாக உத்தேசம்? அவர்கள் சரசம் செய்ய விளக்கு பிடிப்போமா? சாதிரீதியாக அணி திரண்டு ஒவ்வொருத்தரும் தனித்தனியே உரிமை கோரலாம் என்று பேன்ஸியான செயல் தந்திரம் பகன்ற கனவான்களே பார்ப்பனியத்தின் பலமே சாதி பாசத்தில் ஊறிய அடிமைகளாக மக்கள் இருப்பதுதான் என்ற உண்மை தெரிந்த பின்பு என்ன செய்வதாக உத்தேசம்? இன்னுமொரு பெரியார் அவதாரமெடுப்பார் என்று பகல் கனவு கண்டு கொண்டு பார்ப்பனியத்தின் பாதங்களில் படுத்துறங்குவதாக உத்தேசமா? இன்றைய பார்ப்ப்னியத்தை எதிர்க்க ஒரு பெரியார் போதுமா? சுயமரியாதையிழந்து பார்ப்பினியத்தின் அடிமைகளாய் வாழ்வதை விட, பெரியாரின் ஆவியை நம்முள் இறக்கிக் கொண்டு ஆயிரம், இரண்டாயிரம், லட்சம், கோடி பெரியார்களாய் கோடிக் கால் பூதமாக எழுந்து நின்று பார்ப்பனியத்தை வீதிகளில் சந்தித்து மண்டையொடைக்கலாம் அதற்க்கு தேவைப்படுவதோ பெரியாரியத்தின் சுயமரியாதையும், கம்யுனிசத்தின் மனிதாபிமனமும் அன்றி வேறல்ல.

அசுரன்


Related Articles:

பாஸிஸ்டுகளின் வெற்றி !!

குஜராத் : தோல்வி யாருக்கு?

வர்ணாசிரம கிரிமினலும்! ஹவாலா கிரிமினலும்!

“இறுதித் தீர்ப்பு” குஜராத் படுகொலை :ஆவணப்படம்

வரலாறு பழிக்கிறது நாம் கோமாளிகள் என்று!

மோடியின் ராம ராஜ்ஜியம்

Do we have a choice?

இந்துத்துவம் என்றால் பொய்த்துவம், பித்தலாட்டம், கர...

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி!

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில் 1 -2

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!

Rama.... Rama....

17 பின்னூட்டங்கள்:

said...

வழக்கம் போல விரிவாக சொல்லியிருக்கிறீர்கள். மோடியின் வெற்றி குறித்து "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று மோடியை வரிக்கு வரி புகழ்ந்து அவர் மீதான குற்றச்சாட்டுகளையெல்லாம் பொய் குற்றச்சாட்டுகள் என்பது போல பாவித்து பெருமைக்குரிய "தினமணி" எழுதியிருந்த தலையங்கத்தைப் படித்தீர்களா ?

மதமென்று வந்தபின்னே மகேசா ! மனிதனுக்கு மதிப்பென்ன கணேசா !!!

said...

//பயங்கரவாத கும்பலின் நெருக்கத்திற்க்கு மலர்மன்னன் என்ற பார்ப்பன RSS குண்டனுக்கு அவன் மண்டைக்காடு கலவரத்தை
அரங்கேற்றிக் கொண்டிருந்த பொழுது உதவிய அன்றைய போலீசு துறை அமைச்சர் எம் ஜி ஆர் என்கிற சிகப்பு விஜயகாந்தே நல்லதொரு உதாரணம்.//

தமிழ்மணத்தில் இன்று ஒருவர் பதிவிட்டிருந்தார், அதில் மண்டைக்காடு கலவரத்தின் போது எம்.ஜி.ஆர். ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் கூறினாராம், "பயிற்சியை நிறுத்திவிடுங்கள் ஏற்கனவே தேசிய மாணவர் படையும், சாரணர் இயக்கமும் தேசத்தை காக்க பயிற்சி எடுக்கின்றன" என்று, அதனால் அவர் மதசார்பற்றவராம் அவரது வாரிசாக தன்னை கூறிக்கொண்டு ஜெயலலிதா, இராமன் பால பாதுகாப்பு பேரணிக்கு வாழ்த்து செய்தி அனுப்புகிறாராம்... "என்ன கொடுமை இது" என்றுதான் நமக்கு கேட்க தோன்றுகிறது, பகுத்தறிவுவாதிகள் இவ்வளவு அப்பாவிகளாகவா இருப்பார்கள்? என்ன சொல்ல வருகிறார் எம்.ஜி.ஆர். ஆர்.எஸ்.எஸ் தேசப்பாதுகாப்பு இயக்கம் என்றா? அல்லது ஆர்.எஸ்.எஸ் என்ன வேலையை செய்ய பயிற்சி எடுக்கிறதோ அதே வேலையை செய்யத்தான் இங்கு உள்ள அனைத்து அரசு இராணுவ பயிற்சிகளுக்கும் கொடுக்கப்படுகிறது என்ற உண்மையையா? தன்னை மூகாம்பிகை பக்தன் என்று பிரகடன்ப்படுத்தி கொண்ட அந்த கழிசடையை, பகுத்தறிவுவாதிகள் என்று தன்னை கூறிக்கொள்ளும் இவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால் இவர்களுடைய பாமரத்தனத்தை என்னவென்று சொல்வது.

//RSS பிரச்சாரமாக வந்துள்ள இந்த தலையங்கத்திற்க்கு முந்தைய பக்கங்களில் வந்துள்ள "தமிழகத்தை இருளில் தள்ளிய கழக ஆட்சிகள்" என்ற கட்டுரையும் இந்த RSS தலையங்கமும் வெவ்வேறல்ல. தலையங்கத்தில் குஜாராத் ஒளிர்கிறது என்ற இந்துத்துவ பிரச்சாரமும், அந்த கட்டுரையில் தமிழகம் இருளில் என்ற திராவிட அரசியல் மீதான வெறுப்பு பிரச்சாரமும் சரியான தாள சுதியில் இணைந்து ஒலிக்கும் வகையில் RSS பார்ப்பன குசும்புக்கு ஏற்ப இசையமைக்கப்பட்டது.//


பார்ப்பன பத்திரிக்கைகளின் பிரச்சார உத்தியை அருமையாக தோலுரித்திருக்கிறீர்கள்..


//பார்ப்பனியத்திற்க்கு சரியான அடி கொடுத்து அதை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டோம் என்று பெருமை பேசித்திரிந்தவர்களே இதோ உங்களது தலைவர்கள் எல்லாம் பார்ப்பனியத்தின் அடி பொடிகளாய் அவதாரமெடுத்து நிற்கின்றனர். பார்ப்பனியமோ விஸ்வரூபமெடுத்து தனது உடம்பெல்லாம பொய்யும் பித்தலாட்டமும் ஒழுக நிற்கிறது. மறுகாலனிய சேவை செய்து கொண்டே பார்ப்பனிய எதிர்ப்பு செய்வதாக பம்மாத்து செய்யும் முற்போக்கு சீமான்களே இப்போது பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் முச்சந்தியில் முத்தமிட்டு சரசம் செய்கின்றனவே? என்ன செய்வதாக உத்தேசம்? அவர்கள் சரசம் செய்ய விளக்கு பிடிப்போமா? சாதிரீதியாக அணி திரண்டு ஒவ்வொருத்தரும் தனித்தனியே உரிமை கோரலாம் என்று பேன்ஸியான செயல் தந்திரம் பகன்ற கனவான்களே பார்ப்பனியத்தின் பலமே சாதி பாசத்தில் ஊறிய அடிமைகளாக மக்கள் இருப்பதுதான் என்ற உண்மை தெரிந்த பின்பு என்ன செய்வதாக உத்தேசம்? இன்னுமொரு பெரியார் அவதாரமெடுப்பார் என்று பகல் கனவு கண்டு கொண்டு பார்ப்பனியத்தின் பாதங்களில் படுத்துறங்குவதாக உத்தேசமா? இன்றைய பார்ப்ப்னியத்தை எதிர்க்க ஒரு பெரியார் போதுமா? சுயமரியாதையிழந்து பார்ப்பினியத்தின் அடிமைகளாய் வாழ்வதை விட, பெரியாரின் ஆவியை நம்முள் இறக்கிக் கொண்டு ஆயிரம், இரண்டாயிரம், லட்சம், கோடி பெரியார்களாய் கோடிக் கால் பூதமாக எழுந்து நின்று பார்ப்பனியத்தை வீதிகளில் சந்தித்து மண்டையொடைக்கலாம் அதற்க்கு தேவைப்படுவதோ பெரியாரியத்தின் சுயமரியாதையும், கம்யுனிசத்தின் மனிதாபிமனமும் அன்றி வேறல்ல.//


இரத்தம் கொதிப்பேற வைக்கும் வரிகள் தோழர், அருமையான கட்டுரை, சரியான சமயத்தில் பதிவிட்டிருக்கிறீர்கள், கட்டுரையின் கடைசி பத்தியில் வரும் வரிகள் ந‌ம‌து இத‌ய‌த்தில் எதிரொலித்துக்கொண்டிருக்க‌ வேண்டியை.,

பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை ம‌ட்டும‌ல்லாது அவ‌ர்க‌ளது கால்க‌ளை ந‌க்கிகிட‌க்கும் பாத‌ந்தாங்கிளையும் ச‌ரியாக‌ அம்பல‌ப்ப‌டுத்தியிருக்கிறீர்க‌ள்! வாழ்த்துக்க‌ள்!!

தோழ‌மையுட‌ன்
ஸ்டாலின்

said...

சாவித்திரி கண்னன் பார்ப்பனர என்பது சந்தேகமே என்றும் மேலும் அவர் பெண்மனியல்ல என்றும் அவர் சங்க்ரமடத்தை அம்பலப்படுத்தி புத்தகங்கள் எழுதியவர் என்றும், அவர் மாறன் சகோதரர்களை அம்பலப்படுத்தி புத்தகம் எழுதினார் என்றூம் திமுகவை விமர்சித்து வருபவர் என்றும் ஒரு தோழர் தகவல் தந்துள்ளார்.

தகவலுக்கு நன்றி.

அசுரன்

said...

Gujarat shows SEZs can be blessings

By Swaminathan S. Anklesaria Aiyar

Some Special Economic Zones are in serious trouble. Reliance finds it tough to get all the land it needs for its SEZs. POSCO is facing terrible problems (including the kidnapping of officers) in getting land for its steel SEZ in Orissa. The Nandigram SEZ in West Bengal has been battered into extinction. Many observers have criticised SEZs as land grabs that impoverish the poor.

Yet, in one state, SEZs are coming up rapidly, with no agitations, no disputes - and hence no newspaper headlines! This is Gujarat. It already has five functioning SEZs, with 12 more ready to start in 2008. The impact of this quick, smooth start is too small to help the ruling BJP in the coming election. But it will not be a handicap either, as in other states.

Gujarat embarked on port-led development in the 1990s, encouraging captive and private ports and seeking to link these to industrial parks. This approach evolved into SEZs: Gujarat enacted its own SEZ law in 2004. So, when New Delhi announced a national SEZ policy in 2006, Gujarat was way ahead of the competition.

RJ Shah, chief state honcho for SEZs, says that much legislation and notification is required to make SEZs functional, and Gujarat has done this faster than other states. Detailed rules and regulations have been notified. Its chief secretary heads an SEZ Development Authority, which includes all departmental secretaries, and facilitates clearance.

The original SEZ policy of the state had norms that really should have been included in the national policy.

First, every SEZ promoter had to be an industrialist, not a builder, ensuring that this was an industrial project and not real estate in disguise.

Second, the promoter had to have an anchor project of his own in the SEZ. This ensured provision of high-class infrastructure, which a builder might neglect.

Third, the promoter had to buy land voluntarily from farmers and not expect state acquisition on his behalf. This avoided the heart-burning seen in Orissa and West Bengal.

Gujarat's flying start in SEZs owes something to geography and history. It has a long coastline, with deep water (no dredging needed) in the Gulf of Kutch. This Gulf has virtually no monsoon, so ports can be built without expensive breakwaters.

The Gulf of Kutch is the only coastal area in India with low rainfall. Farming is tough, so farmers are willing to sell their land. The state government itself owns vast wastelands, mud flats and marshes along the coast. It has been selling these to developers (like Gautam Adani at Mundra), without displacing farmers.
Other states have not focused SEZ development on such land. They surely should. Around half the 20,500 hectares of land approved for Gujarat SEZs is government wasteland. Another 16% is owned by the GIDC. So, developers need to buy relatively little from farmers.

West Bengal has trip-le-cropped land, but not Gujarat. Some Saurashtra farmers grow a second crop using groundwater. But excess pumping in the past has depleted coastal acquifers and caused sea-water to intrude into the acquifers. This is an environmental disaster, but means that farmers the-re are happy to sell their land.

Even in central Gujarat, where land quality is high, farmers have proved willing to sell. The pharmaceutical SEZ of Zydus Cadila has acquired 110 hectares, paying around Rs 10 lakh/acre.

In other states, industrialists say they cannot get contiguous land through voluntary purchases: a few farmers will refuse to sell. The experience in Gujarat is that even farmers who say no initially will say yes if offered a sufficiently high price. Developers should pay this very high price to a few farmers and get on with the job. Why look to the state government for acquisition, which takes two years or more? Time saved is money saved.

Gujarati farmers are entrepreneurial, and use money from land sales to fund businesses like trucking. Reliance, which bought land voluntarily from farmers in Jamnagar, outsourced trucking, and many of the truck operators are former farmers. This, alas, cannot be replicated across India. Can you see Orissa tribals running truck fleets?
In many states, land records are in bad shape. In Orissa, people cultivating land for decades are not listed in land records. They will get no compensation on acquisition, and so agitate against SEZs. Gujarat's land records are good, partly because of history (this is the state of Gandhiji, Vallabhai Patel and Vinoba Bhave). So, land disputes are few.

Landless labourers get no compensation, and in some states fear that they will be jobless after acquisition for SEZs. However, low-grade farmland in coastal Gujarat has few landless labourers. Mundra Port in Kutch has a labour shortage, and imports workers from North India.

Gujarat's experience shows that SEZs can, if properly conceived and executed, be blessings that enrich rather than impoverish local farmers. But clearly Gujarat's experience cannot be replicated in states with very different geography and history. This drives home the lesson that the ideal SEZ policy would have been to create only a few big SEZs in the best locations, not hundreds of SEZs in flawed locations across all states.

http://www.swaminomics.org/

said...

முதல் விசயம் யார் இந்த சுவாமிநாதன்? இன்றைக்கு இந்தியாவின் விவசாயத்தின் அழிவுக்கு காரணமாக குற்றம் சாட்டப்படும் பசுமைப் புரட்சி எனும் ஏகாதிபத்திய சதிக்கு மாமா வேலை பார்த்து துட்டு சேர்த்தவன் தான் இவன்.

இரண்டாவது விசயம், குஜராத்தின் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? அதுவும் பிற முன்னணி தற்கொலை மாநிலங்களுக்கு இணையாக?

மூன்றாவது விசயம் இத்தனை சிறந்த குஜராத் ஏன் சோசியல் இண்டிகேட்டர் எனப்படும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளக்கு உதவும் அளவுகோலில் பிற முன்னணி மாநிலங்களை விட கீழிறங்கி போயுள்ளது?

நான்காவது விசயம் ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கு SEZ நிலங்கள் கொடுக்கப்படவில்லை என்பது பொய்.

ஐந்தாவது விசயம் நிலத்தை விற்க்கும் விவசாயி உண்மையில் தனது வாழ்வாதாரத்தை இழக்கிறான். அரசே நிலத்தை கையக்கப்படுத்தினாலும், தனியார் கையகப்படுத்தினாலும் மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதுதான் நிலத்தை பிடுங்கும் விசயத்தில் நேர்மையாக செய்ய வேண்டிய நடவடிக்கை. மாறாக ஏற்கனவே வாழ வழியின்றி இருக்கும் விவசாயியிடமிருந்து நிலத்தை பிடுங்கி துட்டு கொடுத்து விடுவதன் மூலமாக அதை ஒரு வியாபாரம் என்று சுருக்கி விவசாயிக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத்தை கெடுக்கும் நரித்தனத்தையே குஜாராத் அரசு செய்துள்ளது. உண்மையில் விவசாயம் வளமாக இருந்தால் ஏன் நிலத்தை விற்று விட்டு வேறு வாழ்வாதாரத்தை தேடி விவசாயி போகிறான் என்பது இதிலிருந்து முளைக்கும் கிளைக் கேள்வி.

ஆறாவது விசயம் குஜராத்தில் உணவு தாணிய உற்பத்தி படு பய்ங்கரமாக குறைந்துள்ளதே ஏன்?

ஏழாவது விசயம் நிலத்தை கையக்கப்படுத்தினால் அந்த நிலத்தில் வேலை செய்து பிழைத்த நிலம்ற்ற கூலி விவசாயி தொழிற்சாலை கூலி வேலைக்கு செல்ல வாய்ப்புள்ளது - இதன் அர்த்தம் குறைந்த கூலிக்கு ஆள் பிடித்து கொடுக்கும் வேலையை அரசு செய்கிறது என்று பொருள். இப்படி வாழ வக்கற்று அவனை நிர்கதியாக ஆக்கிய பின் அவன் வேறு வழியின்றி குறை கூலி வேலைக்கு செல்வான் அவனை இஸ்டம் போல சுரண்டலாம் என்று பொருள். ஆயினும் இந்த வேலையை உறுதி செய்யும் எந்த திட்டமும் குஜராத் அரசுக்கு கிடையாது. இதுதான் பார்ப்ப்னியம். SEZ மூலம் நில கையகப்படுத்தப்படுவதை திட்டமிடும் மோடி அதனால் வாழ்விழ்ந்தவர்களுக்கு எதுவும் திட்டமிடாது அதை கேட்க்கவும் முடியாது. அதற்க்கான் உரிமைகளற்ற அடிமை தேசம்தான் பார்ப்பன தேசமான குஜராத்.

இவை எத்ற்க்கும் பதில் சொல்லாமல் கட் காப்பி பேஸ்ட் செய்துள்ள பார்ப்பன குஞ்சு இந்த கட்டுரையின் பிரதான விவாதமாக குஜராத் வளர்ச்சி என்பதை மாற்றி இந்த கட்டுரை பார்ப்ப்னியத்தின் பித்தலாட்ட் கொழுப்பை பேசுவதை திசை திருப்ப விரும்புகிறது என்பது நமக்கு புரிகீறது.

அசுரன்

said...

//Collapse comments

Anonymous said...
வழக்கம் போல விரிவாக சொல்லியிருக்கிறீர்கள். மோடியின் வெற்றி குறித்து "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று மோடியை வரிக்கு வரி புகழ்ந்து அவர் மீதான குற்றச்சாட்டுகளையெல்லாம் பொய் குற்றச்சாட்டுகள் என்பது போல பாவித்து பெருமைக்குரிய "தினமணி" எழுதியிருந்த தலையங்கத்தைப் படித்தீர்களா ?
//

தினமணி ஒரு அப்பட்டமான RSS பத்திரிக்கை என்பது தெரிந்த விசயம்தான். விடுதலை புலி ஆதரவு, தமிழர் ஆதரவு திராவிட ஆதரவு என்பது போல காட்டிக் கொள்ளும் குமுதம் பத்திரிகை தனது மறைமுக பார்ப்ப்னியத்தை கழற்றிவிட்டு வெளிப்படையாக பார்ப்ப்னியத்தை பேசத் துவங்கியுள்ளது என்பதும் அது தற்செயலான நிகழ்வு அல்ல குஜராத் மோடி வெற்றிக்கு பின்பு பார்ப்பினியம் ஒரு புதிய உயர்ந்த பரிணாமத்தை அடைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டு காட்டுவதே கட்டுரையின் நோக்கம்

அசுரன்

said...

ஒரு அரை டவுசர் அனானி தமுமுகவுடன் மக இக இணைந்து போராடுவதாக கதை விடுகிறது. அதே அனானி தஸ்லீமா நஸ்ரீன் விசயத்தைல் மக இக அமைதி காப்பதாக கதை விடுகிறது. இஸ்லாத்தில் மனுவாதம் என்ற புத்தகம் முதல் எந்தவொரு ஜனநாயக விரோத போக்கையும் கடுமையாக கண்டனம் செய்வது வருவதே புரட்சியாளர்களின் நடைமுறையாக இருக்கும் பொழுது இப்படி பேசுகிறது இந்த அல்பவாத தவளை. இந்த அம்சத்தில் வேறு எதுவும் விவாதங்கள் ஊக்குவிக்கப்படாது.

அசுரன்

said...

//பத்திரிக்கைகள் தெஹல்கா பற்றி மௌனம் காத்தது காரியப் பூர்வமானது//

கிட்டத்தட்ட நடுத்தர குடும்பத்து மக்கள் என்ன சிந்திக்க வேண்டும் எப்படி சிந்திக்க வேண்டும் என்பது வரைக்குமான திட்டமிடலோடு தான் இந்த பத்திரிக்கைகளும் ஊடகங்களும் செய்திகள்/கட்டுரைகள் வெளியிடுகின்றன. நாட்டில் தலைபோகும் பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் போது சம்பந்தமே இல்லாமல் எவனோ எவளோடோ கொண்டுள்ள தொடர்பு பற்றி விலாவாரியாக செய்தி வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள்..

//ஒருவன் எதை பேசுகிறான் என்பது மட்டுமல்ல எதை பேசாமல் மௌனம் காக்கிறான் என்பதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததே//

தெகல்கா மோடியின் பயங்கரவாத முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டிய போது நானும் இந்த தமிழ்நாட்டு திராவிட சிங்கங்கள் ஏதாவது முத்தை உதிர்ப்பார்களா என்று ரொம்ப நாட்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். அதிலும் குறிப்பாக ராமனைப் பற்றி பேசிய விவகாரத்துக்குப் பின் கருணாநிதியின் சொரனை உணர்ச்சி அவர் கட்சித் தொண்டர்களைப் போலவே அதிகரித்து, அவரும் இதனைக் கண்டித்து ஏதாவது சொல்வார் என்று பார்த்தால்... மூச்!! ஒரு சின்ன முனகல் சத்தம் கூட இல்லை.

ஒரு பக்கம் பார்ப்பனர்கள் அகில இந்திய அளவில் ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்.. எங்கே ஏதாவது சொல்லிவிட்டால் தங்களைப் பற்றிய இமேஜ் போய் விடுமோ என்று கருணாநிதி பயப்படுகிறார் என்று தோன்றுகிறது..

குமுதம் பற்றி நிறைய கவனித்து எழுதியிருக்கிறீர்கள். ஒரு சில கட்டுரைகளில் பார்ப்பன தன்மை வெளிப்பட்டிருப்பதை கவனித்திருக்கிறேன்.. ஆயினும் இப்படி திட்டமிட்ட ரீதியில் தொடர்ந்து குமுதத்தில் பார்ப்பனக் கொழுப்பு பிதுங்கி வழிந்தை கவனிக்கத் தவறியிருக்கிறேன். அந்த வகையில் இந்தக் கட்டுரை எனக்கு பல புதிய விஷயங்களை புரியவைத்திருக்கிறது.. மிக்க நன்றி..

மிகச் சரியான நேரத்தில் வந்துள்ள பயனுள்ள பதிவு..

வாழ்த்துக்கள்!!

said...

//கிட்டத்தட்ட நடுத்தர குடும்பத்து மக்கள் என்ன சிந்திக்க வேண்டும் எப்படி சிந்திக்க வேண்டும் என்பது வரைக்குமான திட்டமிடலோடு தான் இந்த பத்திரிக்கைகளும் ஊடகங்களும் செய்திகள்/கட்டுரைகள் வெளியிடுகின்றன. நாட்டில் தலைபோகும் பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் போது சம்பந்தமே இல்லாமல் எவனோ எவளோடோ கொண்டுள்ள தொடர்பு பற்றி விலாவாரியாக செய்தி வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள்..//


இந்த பத்திரிகைகள் யாருமே படிக்காவிடிலும் கூட தொடர்ந்து கர்நாடக சங்கீதம் குறித்து கட்டுரை எழுதுமே அது கூட இவர்களின் பார்ப்பன குசும்பெடுத்த நரித்தனம்தான். ஏதோ அது சதாரண வாசகனுக்கு புரியாது என்பது போலவும் அதில் ஆக புனிதமாக, அற்புதமாக ஏதோ இருப்பது போலவும் தொடர்ந்து பொதுக் கருத்தை உருவாக்கி பார்ப்பன பண்பாட்டை உயர்வானதாக முன்னிறுத்தும் இந்த தந்திரமும் கூட இவர்களின் சதி திட்டத்தில் அடங்கும்.

அசுரன்

said...

குஜராத்திலிருக்கும் இஸ்லாமிய குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக மும்பைக்கு குடி பெயர்கிறார்கள். இதுதான் குஜராத்தின் வளர்ச்சியோ ?

said...

நரேந்திர மோடி என்கீற நரமாமிச பன்றி தமிழகம் வரும் பொழுது அவனை எதிர்க்க அமைத்துள்ள் ஜனநாயக கூட்டணியில் மக இக இருப்பதைத்தான் தமுமுகாவுடன் மக இக கூட்டணியிø இருப்பதாக புரளி கிளப்புகிறார் அரை டவுசர். நரேந்திர மோடியை எதிர்ப்பது இஸ்லாமிய கோரிக்கையல்ல அது ஒரு ஜனநாயக கோரிக்கை. அதற்க்காக அமைக்கப்படுகீற ஜனநாயக பொது தளத்தில் மத கோரிக்கைகளல்லாத எந்த வொரு அமைப்பும் இணைந்து பொது எதிரியை அடித்து துவம்சம் செய்யலாம். ஒரு ஜனநாயக கோரிக்கைக்கு அமைக்கப்படும் கூட்டமைப்பை மதம் என்று சாணியடிக்கும் இந்த உத்தி RSSனுடைய உத்தி இதே உத்தியைத்தான் குமுதம் பத்திரிகையும் 'மதக் கண்ணாடி போட்டு குஜராத்தை பார்க்ககூடாது' என்று கூறி மனிதாபிமானத்தின் மீது சாணியடிக்க பயன்படுத்தியது. அரை டவுசரோ ஜனநாயகத்தின் மீது சாணியடிக்க பயன்படுத்துகீறது.

இதே அரை டவுசருக்கு சில எ-காக்களை முன் வைக்க கடமைப் பட்டுள்ளேன். அறுமுகச்சாமி என்கீற ஆத்திகரின் உரிமைக்காக அவருடன் கூட்டணி வைத்தது இதே மக இக அமைப்பு. கோரிக்கை என்னவென்பதை விடுத்து அதை ´Õ சாசுவதமான ஒரு கூட்டணி என்பதாக முன்னிறுத்துவதில் அரை டவுசரின் மÉ அரிப்புõ பார்ப்பன நரித்தனமும் மட்டுமே வெளிப்படுகீறது.

பார்ப்பன பயங்கர்வாதிகள் மேலும் மேலும் தம்மை அம்மணமாக மாற்றிக் கொண்டு உலகமய ஏஜெண்டுகளோடு தமது வேறுபாடுகளை களைந்து கொண்டு கூட்டணியல்ல நடுவீதியில் கள்ள உறவே கொள்ளும் போது முற்போக்கு அமைப்புகள் தமது பொது எதிரிக்கு எதிராக ஒரு ஜனநாயக கோரிக்கைக்கு இது போல தற்காலிக கூட்டணி அமைப்பது மதவாத சக்திகளுடன் கூட்டணியமைப்பது அல்ல.

நிற்க,

உண்மையில் மக இக இந்த கூட்டணியில் இருப்பது குறித்து இது வரை எந்தவொரு அதிகாரப் பூர்வ அறிவிப்பும் இல்லை. தமுமுக அறிவிப்பு கூட இது போன்ற கூட்டமைப்பு அமைக்க இருப்பது குறித்த ஒரு கலந்துரையாடலைத்தான் குறிப்பிடுகிறது. ஒரு வேளை கூட்டமைப்பு அமைக்கப்பட்டாலும் அதில் மத அடையாளத்துடனான கோரிக்கைகள் இருக்கின்ற பட்சத்தில் அத்தகைய கூட்டமைப்பில் எனக்கு ஒப்புதல் கிடையாது. அது விமர்சிக்கப் பட வேண்டியதே.

இரண்டு, தஸ்லிமா நஸ்ரீன் விசயத்தில் அவரை எதிர்க்கும் பாசிஸ்டுகளை பல இடங்களில் அம்பலப்படுத்தி எழுதியுள்ளது மக இக. மேலும் இஸ்லாமிய அடிப்படைவாதம், மூடநம்பிக்கை வெறிச் செயல்களையும் பல முறை அம்பலப்படுத்தி கட்டுரை எழுதியுள்ளது புஜ புக இதழ்கள். இதற்க்காக இஸ்லாமிய மத வெறி அமைப்புகளால் மிரட்டலுக்கு ஆளான அமைப்பு மக இக.

அசுரன்

said...

கட்டுரையில் எம் ஜி ஆர் மலர்மன்னனுக்கு உதவிய பொழுது போலிஸ் அமைச்சராக இருந்தார் என்று தவறான செய்தி வெளியாகியுள்ளது. அவர் உள்துறை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்தார் என்பதே சரியான செய்தி.

அசுரன்

said...

பின்னூட்டத்தில் இடம் பெற்றுள்ள ஆங்கிலக் கட்டுரையை எழுதிய Swaminathan Anklesaria Aiyar வேறு. பசுமைப் புரட்சியில் ஈடுபட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் வேறு. சுவாமிநாதன் ஆங்கிலசேரிய அய்யர், எகனாமிக் டைம்ஸ் தினசரியில் பணிபுரிபவர். டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் சுவாமிநாமிக்ஸ் என்ற பத்தி எழுதுபவர். மத்திய அமைச்சர் மணி சங்கர அய்யரின் சகோதரர்.

அதனால், மேலே நீங்கள் அவர்மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக, எகனாமிக் டைம்ஸ் கார்ப்பரேட் பொறுக்கி, லிபர்ட்டேரியன் கருத்துகளை வைத்திருக்கும் தேசத் துரோகி, அமெரிக்கக் கையாள், 'தேசத்தை விற்கும் கயவாளி மணி சங்கர அய்யரின் சகோதரன் வேறு எப்படி இருப்பான்' என்று கொஞ்சம் பிளேட்டை மாற்றிப்போட்டுத் திட்டுங்கள்.

said...

//சுவாமிநாமிக்ஸ் //


தகவலுக்கு நன்றி பத்ரி,

எழுதியவர் பசுமை புரட்சி சுவாமி எனில் அம்பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. ஏனேனில் அவர்தான் ஏதோ விவசாயத்தில் ஆராய்ச்சி செய்து தீர்வுகள் சொல்லுவது போல ஒரு பொதுக் கருத்து பரவலாக உள்ளது. இது வேறு சுவாமி அய்யர் எனில் அது தவிர்த்து கேட்டுள்ள கேள்விகளே போதும். தனியாக குற்றம்சாட்ட வேண்டியதில்லை.

அசுரன்

said...

குஜாராத படுகொலைகளுக்கு நீதி வழங்குவது குறித்து பேசினால், மோடிக்கு தண்டனை கொடுப்பது குறித்து பேசினால் அதாவது மனிதாபிமானம் குறித்து பேசினால் அதை மதக் கண்ணாடி கொண்டு பார்ப்பது என்று பார்ப்ப்னிய கொழுப்பெடுத்து தலையங்கம் எழுதிய குமுதம் அதற்க்கு அடுத்த வாரம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை காட்டி நம்மை எச்சரிக்கிறது. என்னடாயிது இந்தியாவில் வளர்ந்து வரும் பார்ப்பன பயங்கரவாதம் குறித்து பேசப் போகிறதா இந்த பத்திரிகை என்று பார்த்தல் எல்லை களை பலப்படுத்த வேண்டும் என்று RSS குரலில் பேசுகீறது. உண்மையில் குஜராத் இன்னொரு பாகிஸ்தானாக் மாறி விட்டிருப்பது குறித்து குமுதத்ம் என்ற செட்டியார் மேல் சாதி வெறி பத்திரிகைக்கு சந்தோசமே.

அசுரன்

said...

குமுதம் பத்திரிகை இந்த வார தலையங்கத்தில் மோடியை அனுமன் போலவும்(ஏனெனில் அவன் பார்ப்பனிய சேவை செய்யும் சூத்திரன் அல்லவா)

சீதாவாக "செல்வி" செயலலிதாவையும் (ஏனெனில் அவர் ராமச்சந்திரனின் மனதிற்கினியவர் என்று ஒரு ரகசிய புராணம் உள்ளதல்லவா),

கதவுக்கு பின்னால் இருந்து பார்க்கும் அத்வானியையும், இன்னொரு பார்ப்பன் குரங்கையும் போட்டு கார்டூன் இட்டிருந்தது.

மோடி தமிழகம் எனும் திராவிட ராவணபுரியில் அடைபட்ட பார்ப்பாத்திக்கு மோடி என்ற குரங்கு துரோகியாம் மோடி மோதிரம் கொடுக்க வந்ததாக குமுதம் இதனை சித்தரித்து வரைந்துள்ளது. இப்படி தான் வெளிப்படையான RSS ஊதுகுழலாக இருப்பதை அது தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறது.

ஆம் அவர்கள் கூறுவது சரிதான். தமிழகம் ராவணபுரிதான். பார்ப்பான்களுக்கு இது சிறைக்கூடம்தான். இந்த ராவணபுரியை அழித்து பார்ப்பன சாதி வெறி ஆட்சியை, வர்னாஸ்ரம ஆட்சியை கட்டவிழ்த்து விடும் எண்ணத்தில்தான் இன்று பார்ப்பான் அத்தனை பேரும் ஒன்றாக கூடி நின்று கூத்தாடுகிறார்கள்.

கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்: "வரலாற்றில் சம்பவங்கள் இருமுறை நடக்கின்றன என்று யாரோ (ஒரு தத்துவஞானி பெயரை குறிப்பிட்டு சொல்கிறார் மார்க்ஸ்) சொல்வார். ஆனால் அது முதல் முறை சோகமாகவும் இரண்டாம் முறை காமெடியாகவும் முடிந்துவிடுகிறது".

ராமாயணம் வரலாற்றில் இரண்டு முறை நடக்கிறது. முதல் முறை ராமனின் தற்கொலை என்ற சோக முடிவுடனும், இதோ இந்த முறை ராமயண கதை மாந்தர்களின் ஒட்டு மொத்த கொலை என்ற காமெடியான முடிவிலுமாக அது அரங்கேறும்.

அதை இதோ இந்த தமிழகத்தில்(குமுதம் பாசையில் ராவணபுரி) நடத்திக் காட்டுவோம்.



அசுரன்

said...

Gujarat Police admit 366 farmers’ suicides


DP Bhattacharya

Posted online: Friday, August 31, 2007 at 0000 hrs IST

AHMEDABAD, AUGUST 30
In response to an RTI application, the Gujarat Police has put it on record that 366 farmers have committed suicide in 16 districts between 2003 and April 2007.

While the Gujarat Government continues to deny that there have been any cases of farmer suicides, police of 15 districts, in response to an RTI filed by social activist Bharatsinh Jhala, have given a list of farmer suicide cases. Junagadh reported 85 suicide cases followed by 62 in Rajkot. No suicides were reported from Dahod, Narmada, Banaskantha and Bhavnagar in the list.

Police have stated various reasons for the suicides, including mental instability, ill health, debt, family reasons and “unknown reasons”. However, in 16 cases, police have clearly mentioned that farmers killed themselves over crop failure or financial reasons.

A copy of the response obtained by The Indian Express shows that officially, in 2005, four farmers across Ahmedabad rural, Anand and Bharuch took the extreme step due to financial reasons, while in 2006, two in Bharuch killed themselves for the same reason. The number of suicides for financial reasons in 2004 is five and in 2007 (till April) is four.

“According to the documents provided by district police departments, maximum number of suicides has been reported from Junagadh with 85 cases,” Jhala said, adding, Junagadh is followed by Rajkot rural with 59 cases and Mehsana with 48 cases.

“What is surprising is that the official figure for suicides in Bhavnagar and some other districts is nil, while I personally have visited families of farmers from Bhavnagar, who have killed themselves for financial reasons,” Jhala said.

Related Posts with Thumbnails