TerrorisminFocus

Thursday, September 28, 2006

மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்

அந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி விழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.

கரி மருந்தின் நாற்றமும், புதிய ரத்தத்தின் நாற்றமும் கலந்து அந்த சூழலை இன்னும் மோசமாக்கியிருந்தன. இறந்து குளிந்த உடல்களின் வெப்பம் வெளியெங்கும் நிரப்பியிருந்தன. அந்த வெப்பம் அச்சமூட்டும் வகையில் அமனுஸ்யமாக இருந்தது. ஆழ்ந்த, புகை மண்டிய அமைதி பெரும் களக்கத்தை உருவாக்குவதாக இருந்தது. உயர்ந்து நின்ற மதில் சுவரில் தெறித்து சிதறி படிந்த புத்தம் புதிய சதை துணுக்குகள் அந்த பேரமைதிக்கு கருமை வண்ணம் பூசின. ஆம், அது மயானங்(களின்) அமைதி. ஆயினும் சிலர் குற்றுயிரும், கொலையுயிருமாக முனகும் குரல் ஆங்காங்கே கேட்கிறது. அந்த குரல்கள் அமைதியில் உறைந்துபோய் செவிகளின் கவனத்தை ஈர்க்கும் வலுவை இழந்து தேம்பின.

மண்ணின் நிறம் என்ன என்று மறந்து போகும் அளவு அங்கே ரத்தம் விளாறிக் கிடந்தது பூமி. அன்று சிவந்தது பூமி மட்டுமல்ல.


சிவந்த கண்கள்:
அமெரிக்காவில் ஒரு புரட்சிகர இதழில் வந்த விளம்பரம் இது: "இந்திய புரட்சிக்கு ஆள் தேவை, சம்பளம் - புரட்சிக்காரன் என்ற பட்டம், துப்பாக்கி குண்டு". அது கதார் பார்ட்டி எனப்படும் புரட்சிகர அமைப்பின் விளம்பரம். சம்பளத்தை ஏற்றுக் கொண்டு இணைந்தவர்களில் அஜித் சிங் என்ற பெரியவரும் ஒருவர். பிரிட்டிஸ் அரசை எதிர்த்து சதி செய்ததாக ஒன்றல்ல, 22 வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அவர் சம்பளத்திற்க்கேற்ற பணியைச் செய்தார்.

அவர் இப்போழுது பஞ்சாபின் கோதுமை வயல்களின் ஓடாக ஓடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னே குதறி எடுக்கும் கொலை வெறியுடன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு பெரும் மூச்சிறைப்புடன் ஏகாதிபத்திய பிரிட்டிஸ் வெறி நாய்கள் பெரும் வேகத்தில் துரத்திக் கொண்டிருந்தன. அவர் பிறகு துருக்கி, ஆஸ்திரியா, ஜெர்மனி, என்று கடைசியில் பிரெசில் வரை துரத்தப்பட்டார்.
அவருக்கு ஒரு பாசமிகு மருமகன் இருந்தான். அவன் ஒரு கன்றுக் குட்டியைப் போன்ற மென்மையும், துள்ளிக் குதிக்கும் உட்சாகமும் நிரம்பியவனாக இருந்தான். அவன் கண்கள் மட்டும்... நீங்கள் நேர்மையானவர் இல்லையெனில்.. அவனது கண்களைப் பார்க்காதீர்கள் பயந்து விடுவீர்கள். அவை நெருப்புக் கோளங்களைப் போல கனன்று கொண்டிருந்தன. பிரிட்டிஸ் ஏகாதிப்பத்தியம் எனும் பெருங்காட்டை எரித்து சாம்பலாக்க வந்த அந்த அக்னி குஞ்சின் பெயர் 'பகத் சிங்'. அவன் கண்களில் சுதந்திர தனலையும், உள்ளத்தில் உலை போல கொதிக்கும் விடுதலை ஊற்றையும் கொண்டிருந்தான்.

அது பிரிட்டிஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு தீ இந்தியா முழுவதும் பரவி படர்ந்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கி தனது முழு வேகத்தில் ஆடத் தொடங்கியிருந்த வேளை. இந்தியா முழுவதும் போராட்ட வடிவங்கள், நோக்கங்கள் மாறத் தொடங்கியிருந்த வேளை. பஞ்சாப் மற்ற மானிலங்களுக்கெல்லாம் முன்பாக முழித்துக் கொண்டு தனது போராட்டத்தை நவீன வழியில் ஏற்கனவே தொடங்கிவிட்டிருந்த வேளை.

அன்று, சுதந்திர வேள்வித் தீக்கு விறகுகளாய் வீழ்ந்த வாசமிகு மலர்களின் எண்ணிக்கை சொல்லிமாளாது. அந்த மலர்களுக்கும் குடும்பங்கள் இருந்தன, அழகிய குழந்தைகள் இருந்தன, நல்ல மனைவி வாய்த்திருந்தாள், ஒரு சலாம் போட்டால் நித்தம் சோறு தானே தேடி வர, உட்கார்ந்த இடத்தில் உண்ணும் வாழ்க்கைக்கான வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.

முட்டாள்கள், அவர்கள் அந்த சுகங்களை ஆண்டு அனுபவிக்கும் அறிவைப் பெற்றிருக்கவில்லை, அதனால்தான் இன்று நாம் ஒரு அரைகுறை சுதந்திரத்தையும் கூட வீணடிக்கும் - மறுகாலனியத்தை, நாடு மீண்டும் அடிமையாவதை, கண்ணாற ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.


இரண்டு இந்தியா, மத்தியில் பகத்சிங்:
1612-ல் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியார், ஜஹாங்கீர் மன்னனை பல்வேறு பரிசுப் பொருட்கள் கொடுத்து வளைத்துப் போட்டு சூரத்தில் தனது முதல் கம்பெனியை(வணிக மையம்) தொடங்கினான். கமிசன் பணத்திற்க்கு மயங்கிய ஜஹாங்கீர் மன்னன், பிரிட்டிஸாருடன் தனது உறவை குறிப்பிட்டு சிலாகித்து எழுதிய கடிதம் இன்றைய இந்திய தரகு வர்க்கத்தின் பிறந்த தேதி என்ன என்பதற்க்கு சாட்சியாக இன்றும் நிற்கிறது:
"உங்களது ராஜாங்கத்தின் அன்பிற்க்கு இணங்கி, எனது ஆளுமையின் கீழுள்ள அரசுகள், துறைமுகங்கள் அனைத்திலும் வந்திறங்கும் ஆங்கிலேய தேசத்து வியாபாரிகள் எனது நண்பர்களாக கருதி வரவேற்க்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளேன். இங்கு அவர்கள் எங்கு வாழ விரும்புகிறார்களோ அங்கு முழு சுதந்திரத்துடன், எந்த தடையுமின்றி வாழலாம். அவர்கள் எந்த துறைமுகத்தில் வந்திறங்குகிறார்களோ அங்கு போர்த்துகீசியர்களோ அல்லது வேறு யாரும் அவர்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க துணிய மாட்டார்கள். அதே போல அவர்கள் தங்கும் இடத்திலும் கூட யாரும் அவர்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க துணிய மாட்டார்கள். அவர்கள் விருப்பம் போல விற்க்கலாம், வாங்கலாம், அவர்கள் நாட்டுக்கு எதையும் கொண்டு செல்லலாம் என்பதற்க்கு உத்திரவாதம் கொடுக்குமாறு எனது ஆளுனர்கள், தளபதிகளுக்கும் கட்டளை பிறப்பித்துள்ளேன். இதே போல நமது நட்பையும், அன்பையும் பறைசாற்றும் நடவடிக்கையாக, எனது அரண்மனையை அலங்கரிக்க உதவும் அனைத்து விதமான பரிசுப் பொருட்களையும், கலைப் பொருட்களையும் கப்பல்களில் கொண்டு வருவதற்க்கு மேதகு அரசாங்கம் தனது வியாபாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்...."

இன்றைக்கு ஸ்பெசல் எக்கானாமிக் சோன்(SEZ) என்ற பெயரில் அதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜஹாங்கீருக்குப் பதில் நாம் வோட்டு போட்டு தேர்ந்தெடுத்த புரோக்கர்கள். இதை வெறுமனே கட்டுரையின் வசதிக்காக SEZயையும், அன்றைய பிரிட்டிஸ் வணிக மையங்களையும் ஒப்பீட்டு கூறவில்லை. உண்மையில் அதன் அனைத்து அம்சங்களிலும் SEZ என்பவை இந்தியாவுக்குள் இருக்கும் அன்னிய தேசங்கள். அவை ஆரம்ப கால கிழக்கிந்திய கம்பேனியின் வணிக மையங்களிலிருந்து எந்த வகையிலும் மாறுபட்டதில்லை.

1600 களில் மன்னரிடம் சலுகைகளை கெஞ்சிப் பெற வேண்டிய நிலையிலிருந்த கிழக்கிந்திய கம்பேனி. 1700 களில் தனக்கென சொந்த ராணூவத்துடன் தனது வணிக மையங்களில் முழு கட்டுப்பாட்டை உறுதி செய்த, அரசை நிர்ப்பந்திக்கும் சக்தி பெற்றவையாக மாறின. இதனைக் கொண்டு 1717-ல் முழுமையான சுங்க வரி விலக்கைப் பெற்றனர்.

இதே நடைமுறை இன்றும் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் மன்மோகன் சிங், தனது பொருளாதார திட்டங்களின் ஒரு இலக்காக சேவை வரி ராஜாங்கத்தைச் சொல்கிறார். அதாவது சுங்க வரியை முற்றிலுமாக ஒழித்து, வெறும் சேவை வரி மட்டும் இருக்கும் வரி அமைப்பை நோக்கி போவதுதான் அவ்ரது திட்டம். இதற்க்காக வருடம் 1% வீதம் சேவை வரியை உயர்த்துவது, சேவை வரியின் கீழ் வரும் துறைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, சுங்க வரியின் கீழ் வரும் துறைகளை குறைத்துக் கொண்டே வந்து முற்றிலும் அதை ஒழிப்பது. இதுதான் திட்டம். ஆக, ஏகாதிபத்தியங்கள் கட்ட வேண்டிய வரிகளையும் நாம்தான் கட்ட வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.

பிளாசிப் போரின் வெற்றிக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பேனி தனது ராணுவ வலிமையைக் கொண்டே இந்திய தேசங்களை தனது பொருளாதார, அரசியல் நலன்களுக்கு அடிபணியச் செய்தது. அதில் இரண்டு விதமான தேசங்கள் உருவாகின. ஜான்ஸி ராணி போன்றவர்களிடமிருந்து பிடுங்கிய நேரடி ஆட்சியில் உள்ள பகுதிகள். பகுதி ராஜாக்களிடமிருந்து வரி விதிப்பு, வெளியுறவுத் துறை, ராணூவம் போன்ற துறைகளைக் கட்டுப் படுத்தும் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்ட பதிலி அரசு உள்ள பகுதிகள். அதாவது ராஜாக்கள் எல்லாம் கம்பேனியின் பிரதினிதிகளாயினர். இதை எதிர்த்து விடுதலைப் போரில் மாண்ட மாவீரர்கள்தான் வீரபாண்டிய கட்ட பொம்மன், சின்ன மருது முதலானோர்.

இதில் இந்த இரண்டாவது விசயம்தான் தற்பொழுது இந்தியாவில் நடந்து வருகிறது. அதாவது உள்ளூர் ராஜாக்கள் ஏகாதிபத்திய பிரதினிதிகளாக நம்மை சுரண்டக் கொடுப்பது. இதற்க்கு ஜன நாயகம் எனும் கவர்ச்சிகரமான பெயர் வேறு.

வரி விதிப்பைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியத்துக்கு வருமான வரிச் சலுகை, குறைந்த விலை மின்சாரம், இலவச நிலம், சுங்க வரி ரத்து என ஒரு பக்கம் கொடுத்து இன்னொரு பக்கம் மக்களின் பெயரில் கடன் வாங்கி அவர்களுக்கான உள் கட்டுமானங்களை கட்டி வருகிறார்கள். இதே நேரத்தில் உள்ளூர் போட்டியை ஒழிப்பதற்க்கு VAT வரி விதிப்பை திணித்து முற்று முதலாக நமது வரிவிதிப்பின் பலன்களை அவர்களின் வியாபார நலன்களுக்கு மாற்றி விட்டார்கள்.

வெளியுறவுத் துறை:ஈரானுக்கு எதிராக நாம் ஐ.நா. வில் போட்ட வோட்டு, நட்வர் சிங் பிரச்சனை, சமீபத்தில் இந்தியாவின் நிலைப்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து கண்டனத்துக்காளான அமெரிக்க தூதுவர், முசாரபின் சமீபத்திய புத்தகமான- தீச் சுவட்டின் நான்(In the Line of fire) - அவர் ஏதோ ஒரு சக்தி இந்திய பாகிஸ்தான் ஒப்பந்தத்தை நிறைவேறாமல் கெடுத்ததாக கூறியிருந்தது ஆகியன மிகத் தெளிவாக இந்திய வெளியுறவுத் துறை நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதைக் கூறியது.

ராணுவம்:சமீபத்தில் போடப்பட்ட ராணுவ ஒப்பந்தம் நமது ராணுவத்தை அமெரிக்க ராணுவத்தின் துணை ராணுவமாக மாற்றி விட்டது. இது தவிர்த்து அணு ஆயுத ஒப்பந்தம் நம்து நாட்டின் பாதுகாப்பு அமெரிக்காவின் கையில் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஆக இந்த விசயத்திலும் கூட நாமது நாடு எந்த வகையிலும் பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இருந்த எட்டப்பரின் சமஸ்தானத்தில் இருந்த சுய உரிமையின் அளவைத் தாண்டி ஒரு எட்டு அடிகூட போகவில்லை.

அன்றைக்கு பிரிட்டிஸாரின் வரி சுரண்டலை ஈடுகட்ட விவசாயிகளைச் சுரண்டியதால் பல இடங்களில் விவசாய கிளர்ச்சிகள் வெடித்துக் கிளம்பின. மாப்ளா கலகம்(1805), முதல் இந்திய சுதந்திரப் போர்(1857), முதல் தென்னிந்திய சுதந்திரப் போர்(1805) இவையெல்லாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயிகளின் கோபத்துடன் தொடர்பு கொண்டிருந்தன.

இந்தியா அரசர்களைப் பற்றிய பாடங்களில் நாம் இன்றும் படிப்பது அசோகர் மரம் நட்டினார், குளம் வெட்டினார் என்பதைத்தான். இதன் பொருள் என்னவென்றால் இந்தியாவில் பொது பணித்துறை என்பது அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதில் செலவாகும் பணத்தை மிச்சப்படுத்தி பிரிட்டிசார் கொழுக்கலாம் என்று பொதுப்பணித்துறையை முற்றிலுமாக பிரிட்டிஸ் அரசு கைகழுவியது. இதன் விளைவாக விவசாயம் பொய்த்து பல கொடுமையான பஞ்சங்கள் வந்து லட்சங்களில் காவு கொண்டன.

இன்றைய அரசும் தனது பொதுப் பணீத்துறையை கைகழுவிக் கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி இயற்கை வளங்களை ஏகாதிபத்தியத்துக்கு பட்டயம் வேறு எழுதிக் கொடுத்து வருகிறது. ஆறு, குளம் முதலான அனைத்து வளங்களும் அவனது சந்தைக்கு சேவை செய்ய தாரை வார்க்கிறது. விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அன்றைக்கு தனது துணி தொழிற்சாலைகளுக்கு தேவையான் சாய பயிர்களை பயிரிட நிர்பந்தித்து விவசாயிகளை கொன்று குவித்தான் கும்பினிக்காரன். இன்று அரிசி, கோதுமை, கரும்பு என்று நாட்டு மக்களுக்கு தேவையான விவசாய பொருட்களை விளைவிப்பவர்களை நஸ்டத்திற்க்கு தள்ளி அவர்களை பூ பயிரிட செய்து தனது சென்ட் வியாபரத்திற்க்கான பின் நிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறான்.

"ஊரன் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய் காசுக்கு ரெண்டு விற்க்க சொல்லி காயிதம் போட்டான் வெள்ளக்காரன்" -என்பதுதான் இன்றைய தேசிய முதலாளிகளின் நிலை. தனது சொந்த முதலீட்டில் ஆரம்பிக்கும் பனியன் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பனியனுக்கு ஒரு பன்னாட்டு கம்பேனி வந்து விலை வைப்பான்.

பிரிட்டிஸின் நேரடி ஆதிக்கதில் இருந்தது முதல் இந்தியா, தற்பொழுது WTO, உலக வங்கி, மற்றும் பன்னாட்டு நிதி ஆதிக்க கும்பல்களின் நேரடி ஆதிக்கதில் இருப்பது இரண்டாவது இந்தியா. இரண்டுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். முதலில் வைப்பாட்டி, இரண்டாவதில் பொட்டு கட்டி விடப்பட்ட தேவதாசி. வேறு வித்தியாசம் எதுவும் இல்லை.


விடுதலை வேள்வியில் பகத்சிங்:
1600-ல் ஆரம்பித்த இந்த சுரண்டல் வளர்ந்து முழுமையாக இந்தியா முழுவதும் ஆக்கிரமித்து ஒரு அரசாங்கமாக தன்னை 1800 களில் மாற்றிக் கொண்டது. இந்த காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் இந்தியா முழுவதும் கிளர்ந்தெழுந்தன.

இவை ஒரு அலை வடிவில் மேலோங்குவதும் பின்வாங்குவதுமாக பிரிட்டிஸ் இந்தியாவைத் தொடர்ந்து தாக்கி அரசியலமைப்பில் தொடர் மாற்றங்களை ஏற்படுத்தி வந்த போராட்டங்களாக இருந்தன. இந்த நிலையில் இந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய காந்தி ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டார்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை அவர் காட்டிக் கொடுத்த பிற்ப்பாடு ஏற்ப்பட்ட ஒரு மோன நிலையைக் கலைக்கும் சிங்கத்தின் கர்ஞனையாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உள்ளே நுழைகிறார் பகத் சிங்.

செப்டம்பர் 27, 1907 அதாவது நேற்றிலிருந்து சரியாக 99 வருடங்களுக்கு முன்பு. விவசாயிகள் சாயப் பயிர் விளைவிக்க மறுத்து போரிட்ட வீரம் செறிந்த இந்திய திரு நாட்டில். துப்பாக்கி பயிரிடலாமா என்று யோசித்த பகத் சிங் என்ற புரட்சிகர இளைஞன் பூமிக்கு வந்தான்.

அவனது குடும்பமே சுதந்திரப் போராட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்த பாரம்பரியத்தை உடையது. அவனும் கூட தனது மக்களுக்கு ஏகாதிபத்தியம் இழைத்த கொடுமைகளை மனதில் பெரும் நெருப்பாய் பூட்டி வைத்திருந்தான்.

சந்திரசேகர் ஆசாத்தால் உருவாக்கப்பட்ட இந்துஸ்தான் சோசலிச ராணுவ குடியரசு எனும் அமைப்பில் தன்னை பகத்சிங் இணைத்துக் கொண்டார்.

லாலாலஜபதிராயை லத்தியால் அடித்தே(1928) கொன்ற சாண்டர்சன் என்ற ஏகாதிபத்திய கொழுப்பு ஏறிய பன்றியை சுட்டுக் கொன்றதுதான் மக்கள் மத்தியில் இந்த அமைப்பை பிரபலப்படுத்திய முதல் நடவடிக்கை.

இதயனையடுத்து, தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் சட்டம் ஒன்றும், மக்களின் போராடும் உரிமைகளைப் பறிக்கும் சட்டம் ஒன்றும் நிறைவேற்றப்பட்ட அன்று பாராளுமன்றத்தில் யாரும் இல்லாத இடத்தில் குண்டு வீசி சரணடைந்தனர்.


யார் இந்த பகத்சிங்:
பகத்சிங்கை சாதரணமான பரவசமான துணிச்சல நடவடிக்கைக்கு சொந்தக்கார இளைஞர் என்று சுருக்கிப் பார்க்க முடியுமா?.

அவரது தெளிந்த சிந்தனைகளைப் பார்க்கும் பொழுது அவ்வாறு எண்ணத் தோன்றவில்லை. அரசியல் ரீதியாக் சுதந்திரப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் காந்தியின் ஏகாதிபத்திய சேவை-அகிம்சா எனும் போலி தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளாகவே பகத்சிங்கின் நடவடிக்கைகள் இருந்தன.

காந்தி 'வெடிகுண்டின் பாதை' என்ற புத்தகத்தை எழுதினார் அதற்க்கு எதிராக 'வெடிகுண்டின் தத்துவம்' என்ற ஒரு அருமையான புத்தகத்தை எழுதினார்.

முக்கியமாக, இந்துஸ்தான் சோசலிஸ்டு ராணுவ குடியரசின் பல்வேறு பிரிட்டிஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, காந்தியின் போலி அஹிம்சா தத்துவ மயக்கதிலிருந்து மக்களின் அரசியல் உணர்வு மட்டத்தை மீட்டெடுத்து, தட்டி எழுப்ப வேண்டியதன் தேவையை உணர்ந்து, வரலாறு முழுவதும் காந்தியின் சுதந்திரப் போராட்ட பங்களிப்பை கேள்விக்குள்ளாக்கும் ஒரு மிகப் பெரிய நடவடிக்கையாகவே பாரளுமன்ற குண்டு வேடிப்பைப் பார்க்க முடியும்.

அதாவது இந்திய சுதந்திரப் போராட்ட மரபில் தமது பங்களிப்பு என்றென்றைக்கும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் ஒரு விசயம் என்பதை தெளிவாக உணர்ந்து திட்டமிட்டதுதான் அந்த குண்டு வீசி சரணடையும் நடவடிக்கை. அது உண்மையில் தூங்கிக் கொண்டிருந்த இந்தியர்களீன் காதுகளை கிழித்து விடுதலை உணர்வு ஊட்டச் செய்வதற்க்கான ஒரு அரசியல் செயல் தந்திர நடவடிக்கையாகவே உள்ளது. அந்த இலக்கை வெற்றிகரமாக எட்டினார் பகத்சிங்.

கோர்ட் நடவடிக்கைகளை பிரச்சார மேடையாக மாற்றி நாடு முழுவதும் ஒரு பேரலையை உருவாக்கினார். அவர் இருந்த வரை காந்திக்கும், ஏகாதிபத்தியத்திற்க்கும் பேரச்சத்தை ஏற்படுத்தி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் பகத் சிங்.

அன்றைக்கு இப்படி புரட்சிகரமாக இளைஞர்கள் இருந்த பொழுதுதான். இந்திய கம்யுனிஸ்டு கட்சி தனது முதல் மாநாட்டில் வன்முறை போராட்டம் பற்றி தெளிவான தீர்மானம் கூட இயற்ற வக்கின்றி தடுமாறிக் கொண்டிருந்தது. வோட்டுக் கட்சிகளின் தடுமாற்றம் அங்கே ஆரம்பிக்கிறது.

அவர் இறந்தார். ஆனால் ஒரு விதையாக் மண்ணில் புதைந்தார். ஆயிரமாயிரம் வீரர்களை தேசாபிமானிகளை இன்றுவரை உருவாக்கும் வல்லமை படைத்த ஒரு கற்பக விருட்சமாக இந்த மண்ணில் வேரூண்றி நிற்கிறார். இந்த விசயத்தில் காந்தி எந்த காலத்திலும் பகத்சிங்கின் அருகில் கூட வர அருகதையின்றி வெறும் கதையாடல்களுக்கான கருப்பொருளாக, புனித பிம்பமாக எஞ்சி நிற்கிறார்.

இதோ பகத்சிங்கின் செய்தி, சிறை எண் 14-ல் பொறிக்கப்பட்டிருந்தது.
"உயிர்வாழ வேண்டும் என விரும்பும் எனது இயற்கையான விருப்பத்தை மறைக்க எதுமில்லை. ஆனால் நான் உயிர்வாழ்வது சில வரையறைகளுக்குற்பட்டது. பரோலிலோ அல்லது சிறையிலோ வாழ்வதற்க்கு எனக்கு விருப்பமில்லை. புரட்சிகர அமைப்புகளின் குவிமையமாக இன்று நானிருக்கிறேன். அதன் தியாகங்கள் என்னை மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளன. இந்த இடம் மிக உயர்ந்தது, எந்தளவுக்கு என்றால் ஒருவேளை நான் உயிருடன் மீண்டு வந்தால், அந்த உயர்ந்த மதிப்பிற்க்கு தகுதியாக நான் வாழ்வது சந்தேகமே. தற்பொழுது எனது பல்கீனங்கள் மக்களுக்கு தெரியாது, ஆனால் தூக்குமேடையை என்னால் ஏமாற்ற முடிந்தால், ஒரு நாள் எனது பலகீனங்கள் வெளி தெரிந்து விடும். எதிர்காலத்தில் எனது புரட்சிகர மன உணர்வு குன்றலாம், அது அணைந்தும் கூட போகலாம்.
ஆனால், ஒரு வீரனைப் போல முகத்தில் புன்னகை வழிய இப்பொழுது தூக்கிலிடப்பட்டால், காலாகலத்திற்க்கும் இந்தியத் தாய்மார்கள் தங்களது குழந்தைகளையும் கூட எனது எடுத்துக்காட்டை பின்பற்றச் சொல்லி ஊக்கப்படுத்துவார்கள். எங்களை தூக்கில் போடுவது, விடுதலை வேள்வியில் மலரும் மலர்களின் எண்ணீக்கையை அதிகப்படுத்தும். அதன் அளவு எந்தளவுக்கு இருக்குமென்றால், இனிமேலும் ஏகாதிபத்திய சாத்தான்களால் புரட்சியை எதிர்த்து நிற்க்க முடியாது என்ற அளவில் இருக்கும்........"



மீண்டும் பகத்சிங்கின் தேவை:
கமிசன் பணத்துக்கு நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்கம் எனும் ஒரு புதிய வர்க்கத்தின் வித்து, அன்றைய ஜஹாங்கீர் மன்னன் பிரிட்டாஸருடன் செய்து கொண்ட வியாபார உறவில் போடப்பட்டது. அது இன்று பரிணாம வளர்ச்சியடைந்து அம்பானிகளாக, மன்மோகன்களாக, வாஜ்பேயிகளாக, புத்ததேவ்களாக நிற்கிறது.

காலனியாதிக்கத்துக்கு நன்றி சொல்லிய மன்மோகன் சிங் எனும் மாமா, என்ரான் கம்பேனிக்கு இந்தியாவை கூட்டிக் கொடுக்கும் வேலை செய்த மாமா பா. சிதம்பரம், புனிதம், பாரம்பரியம் என்று புருடா விட்டு மத வேறியைத் தூண்டிக்கொண்டே இன்னொரு பக்கம் புனித கங்கை மாதாவை சுயஸ் டிமெடரண்ட் கம்பேனிக்கு கூட்டிக் கொடுத்த வாஜ்பேயி, SEZ மற்றும் இதர உலகமய திட்டங்களை மனித முகத்துடன் செயல்படுத்த சொல்லும் வோட்டுக் கட்சி கம்யுனிஸ்டுகள்.


இப்படி இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில், நவீன கறுப்புப் பார்ப்பனர்களாகவும், தரகு வர்க்க அரசியல் வியாபாரிகளாகவும் வோட்டுக் கட்சி தலைவர்கள் பரிணமித்திருக்கிற நிலையை பார்த்தால் வேறு என்ன சொல்லத் தோன்றும், நாடு அடிமையாகிறது என்பதை தவிர்த்து.

எப்படி இன்றைக்கு பார்ப்பினிய கட்டமைப்பு, பார்ப்பனியத்தை உள்வாங்கிய எந்த சாதியைச் சேர்ந்தவனும் அதிகார தலைமை பீடத்திற்க்கு வரலாம் என்று கால்த்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டதோ அது போல இன்றைய ஏகாதிபத்திய மறுகாலனிய கட்டமைப்பு, ஏகாதிபத்திய தரகு பண்பாட்டை சுவிகரித்துக் கொண்ட யாரும் அரசியல் தலைமை பீடத்திற்க்கு வரலாம் என்று காலத்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டது.


அதுதான் புதிய மொந்தையில் பழைய கள். அதுதான் இந்த போலி ஜன நாயகம் சட்டமன்ற நாடாளுமன்ற அரசியல். இந்த சட்டமன்ற நாடாளுமன்ற சட்டிக்குள் உட்கார்ந்து எவ்வளவு உயர்ந்த ரக குதிரையை ஓட்டினாலும், அது ஏகாதிபத்தியம், பார்ப்பினியம் வரையறுத்த எல்லையைத் தாண்டி ஓடாது.

இந்த கட்டமைப்புக்கு வெளியே, மாற்று அமைப்பு தேடி, வழி தெரியாமல், விஜயகாந்துகளை ஊக்குவிக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம் சரியான அரசியல் விதைகளை விதைத்து, தோழர் பகத்சிங் வழியில் இந்திய விடுதலையை முழுமைப் பெறச் செய்யும் கடமை, நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

அது உறுதியாக சட்டங்களிடையே கடவுளர் படங்களாக மாற வழிவகுக்கும் காந்தியின் வழியல்ல, நடைமுறையில் மக்களின் விடுதலையை உத்திரவாதப் படுத்திக் கொடுக்கும் பகத்சிங் வழிதான் என்பது வரலாறு நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம். இன்றைக்கு பகத்சிங்கின் பிறந்த நாளில் நமது அண்ணை தேசத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் பங்கெடுக்க உறுதியெடுப்போம்.

ஊர் கூடி தேரிழுத்தோம், தேர் நகர்ந்தது தெரியும், அதன் இலக்கை அடைந்ததா தெரியவில்லை?
இன்று, வீழழுக்கு நீரிறைக்கிறோம். தேர் நடுவீதியில் சமைந்து நிற்கிறது. வா மீண்டும் இழுப்போம். அதன் வழித் தடத்தில் கொண்டு சேர்ப்போம்!

அசுரன்.
(பகத் சிங், ஜாலியன்வாலாபாக் படுகொலைக் களத்தில் இருப்பதாக வரும் பகுதி மிகைப் படுத்தப்பட்டது. அவர் அங்கு சென்று இரத்தம் தோய்ந்த மண்ணை அள்ளி பத்திரப்படுத்திக் கொண்டார் என்ற அளவில்தான் எனக்கு விசயம் தெரியும். மற்றபடி அவர் அங்கு சென்ற பொழுது அந்த கொலைக் களம் என்ன நிலைமையில் இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சி எடுக்கவில்லை.)
*****************
வெட்டிப்பயல் அவர்களின் ஒரு பின்னூட்டம். இதை கட்டுரையுடன் கொடுத்தால் சரியாக இருக்கும்:
கட்டுரையில் இன்னும் அவரை பாதித்த நிகழ்ச்சிகளை அருமையா எழுதியிருக்கலாம்.

அவர்கள் குண்டு போட்டது ஆள் இல்லாத இடத்தில் அதுவும் தாங்கள் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் என்று உலகுக்கு உணர்த்தவே!!!

இன்னும் அவர் சிறையில் இருந்த உண்ணாவிரதத்தை விட்டுவிட்டீர்கள். 93 நாட்கள் என்று நினைக்கிறேன். மகாத்மாகூட அத்தனை நாள் உண்ணாவிரதம் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே!!!

Tuesday, September 26, 2006

ஏன் ஒப்பாரி வைக்கிறேர்கள் அமேரிக்க அடிவருடிகளே??!!!!

சிறிது நாட்களுக்கு முன்புதான் முத்தமிழ் குழமத்தில் பொதுவுடமை முன்னணி தோல்வியடைந்து ஓடிவிட்டதாக புரளி கிளப்பினார் திரு டாலர் செல்வன். அந்த சமயத்தில் உண்மை நிலை வேறு என்று கூறி நான் கூட ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன். இப்பொழுது உண்மையிலேயே அங்கு ஏகாதிபத்திய முகாம் தோல்வியைடையும் நிலையில் உள்ளது. அவர்களின் ஒரே வாதமான இந்தியாவில் வறுமை குறைந்து வருகிறது என்பதும் முற்று முதலாக நொறுக்கப்பட்டுவிட்டது. கீழே முத்தமிழ் குழமத்தில் நான் வைத்த வாதத்தை இங்கு சில மாற்றங்களுடன் தருகிறேன். தகவல்களிலோ அல்லது சொல்ல வந்த கருத்துக்களிலோ மாற்றம் செய்யப்படவில்லை. அங்கு அவசரமாக அடித்தது, இங்கு கொஞ்சம் நிதானமாக presentationயை மட்டும் மாற்றி உட் தலைப்புகளுடன் தருகீறேன்

********************


//////////////
நான் சொன்னது:
இப்பொழுதும் 60% தற்க்கும் மேற்ப்பட்ட மக்களின் GDP குறைந்து கொண்டே வருகிறதே. பிறகு எப்படி மக்கள் முன்னேறி விட்டார்கள் என்று சொல்ல முடியும். மேலும், விவசாய இடுபொருள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதே(100 மடங்கு அல்லது 200 மடங்கு) பிறகு எப்படி அவர்களின் வாழ்க்கை முன்னேறியிருக்கும். இதே சமயத்தில் அவர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் விலை பாதியாக குறைந்துள்ளது.

செல்வன் சொன்னார்:
வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்போது எப்படி அவர்கள் வருமானம் குறைகிறது என்று சொல்ல முடியும்? விவசாயிகள் வருமானம் குறையவில்லை,அதிகரித்தது.அதே சமயம் மற்ர துறையினரின் வருமானம் விவசாயிகளை விட அதிகமடங்கு அதிகரித்துள்லது.கம்ப்யூட்டர் தொழிலாளி விவசாயை விட அதிகம் தான் சம்பாதிப்பான்.அதனால் விவசாயி ஏழையாவதில்லை.விவசாயிக்கும் வருமானம் அதிகரிக்கும்,ஆனால் கம்ப்யூட்டர் தொழிலாளியை விட குறைவாக அதிகரிக்கும்
//////////////


உண்மை நிலை, செல்வனின் புள்ளி விவரத்துக்குள்ளேயே:


இந்த இடத்தில்தான் அரசாங்கத்தின் ஆளும் வர்க்கத்தின் புள்ளி விவரம் முரன்படுவதையும், அதிலிருந்து பெறும் உண்மைகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

அதாவது, விவசாய இடுபொருள் வளர்ச்சி 100 அல்லது 200 மடங்கு உயர்ந்துள்ளது என்பது அரசாங்க புள்ளிவிவரம், வெறு சில NGO க்களின் புள்ளி விவரங்கள், இவற்றைத் தவிர்த்து நேரடியாக விவசாயிகள் பார்க்கும் விசயம் ஆகியன இதை உறுதிப்படுத்துகிறது(செல்வன் உங்களுக்கு சந்தேகமிருந்தால் வலையில் தேடவும் அல்லது sree என்ற பெயரில் எழுதும் விவசாயியிடம் நேரடியாக கேட்டு பொருட்களின் விலை ஆண்டு வாரியாக எப்படி உயர்ந்துள்ளது என்று பார்க்கவும்).

இதே நேரத்தில் விவசாய பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் விலை இரு மடங்கு குறைந்துள்ளது. இதே நேரத்தில் விலைவாசி மிக அதிகமாகியுள்ளது. முந்தைய எந்த வருடங்களையும் விட அதிகமாக, உயர்ந்துள்ளது. ஆக, இப்படி இந்தியாவின் 60% மேற்ப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை பல பக்கங்களீலிருந்தும் தாக்குதலுக்காளாகி உள்ளது.

ஏற்கனவே டாலர் செல்வன் குறீப்பிட்டிருந்த விவசாய வீடுகளின் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளது எனும் கணக்கு ஒரு டுபாக்கூர் என்பதை கூறியுள்ளேன். அதை மீண்டும் கூறுகிறேன். விவசாயியின் வருமான உயர்வுக்கும் அதே காலகட்டத்தில் விலைவாசி, விவசாய இடுபொருள் உயர்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவனது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போயுள்ளதுதான் தெரிகிறது. அதாவது அவனது வருமான உயர்வு என்பது, அவனது வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்ததுடன் ஒப்பிட்டால் நெகட்டிவ்வின் செல்லும் என்பதுதான் இதன் அர்த்தம்.

அப்படியில்லையென்றால் ஏன் தற்கொலை நடக்கிறது என்பதை, அதுவும் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும், என்பதை செல்வன் விளக்கிக் கூறவேண்டியுள்ளது.



விவசாயியின் தாழ்வும், இந்தியாவின் போலி முதலாளித்துவ வளர்ச்சி எனும் கான்சர் திட்டுக்களும்:


இதே நேரத்தில் உத்திரவாதமான வேலையின்றி நகரத்தில் அமைப்பு சார்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரமும் சரிகிறது(எ-கா, அசோக் லேலாண்ட் - இங்கு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது ஆனால் அதே நேரத்தில் நிரந்தர ஊழியர்கள் பல மடங்கு குறைக்கப்பட்டு, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். அதுவும் குறைந்த எண்ணீக்கையில். ஆக உற்பத்தி அதிகரித்துள்ளது ஆனால் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது). இதே நேரத்தில் சிறு தொழில், சில்லறை வணிகம் போன்ற அதிக வேலை வாய்ப்பு தரும்(விவசாயத்தை அடுத்து) துறைகள் வீழ்ந்து வருகின்றன.

இதே நேரத்தில், உதிரிப் பாட்டாளி எனும் அமைப்பு சார தொழிலாளர்கள் மிக மிக மிக அதிகமாக உருவாகி வருகிறார்கள். இவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமைகளும் கிடையாது(கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ , கால் டாக்ஸி, நகர சுத்திகரிப்பு(onyx etc), securities, மற்ற பிற சேவை வழங்கும் துறைகளில்). இவர்களீன் சம்பளம் அதலபாதாளம், எந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது.

இதே நேரத்தில் மிக குறைவான சதவீதமுள்ள ஒரு வர்க்கம்(தகவல் தொழில் நுட்ப தொழிலாளர்கள் போன்று) உருவாக்கும் மூலதன சுழற்ச்சி விலைவாசியை ஊதிப் பெருக்குகிறது. இதே நேரத்தில் அடிப்படை தேவைகளான மருத்துவ வசதி, தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து ஆகியவை சாதரண ஏழை மக்களின் கைகளிலிருந்து நழுவிச் செல்கிறது(விலை உயர்வு, செய்ற்கையாக உருவாக்கப்படும் தட்டுப்பாடுகள்-மருத்துவம், கல்வி). இதேல்லாம் யாராலும் மறுக்க இயலாத உண்மைகள். வேண்டுமானால் செல்வன் மறுத்துக் கொள்ளட்டும்.



ஆளும் வர்க்கத்தின் தகவல்களை எடை போடும் முறை:

ஆக, செல்வன். நீங்கள் வேண்டுமானால் ஆளும் வர்க்கத்தின் புள்ளி விவரங்கள் எப்பொழுதுமே சரியாக இருக்கும் என்று நம்பிக் கொள்ளுங்கள்.
ஆனால் நாங்கள் சந்தேகப்படுவோம், மார்க்ஸையும் கூட சந்தேகப்படுவோம், ஒவ்வொரு முறையும் நடைமுறையோடும், பல்வேறு புள்ளிவிவ்ரங்களோடும் ஒப்பிட்டுப் பார்த்தே முடிவுக்கு வருவோம்.

உங்களது ஆளும் வர்க்கத்தின் புள்ளி விவரங்களிலேயே உள்ள முரன்பாடுகளிலிடுந்துதான் அவர்களை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. அத்துடன் யாதர்த்தில் உள்ள உண்மைகளைப் பொருத்திப் பார்த்துத்தான் முடிவுக்கு வரவெண்டியுள்ளது. அந்த உண்மை நாங்கள் சொல்லும் விசயமாகவே உள்ளது.

நிற்க,



புள்ளி விவர கணக்குகள் சொல்லும் சில சுலபமான உண்மைகள்:

நானும் கூட சில சுலபமான புள்ளிவிவர கணக்குகளைப் போடுகிறேன்,

**//5. Average earning of an Indian - US$ 440 per year or about (This is based on a GDP of US$ 440 billion and 1 billion people) Rs. 1,727// **

1727 ரூபாய் என்னத்துக்கு காணும் என்று சொல்லுங்கள்?


***/// The World Bank's definition of the poverty line**, for under developed countries, like India, is US$ 1/day/person or US $365 per year. As per this definition, more than 75% of all Indians are, probably, below the poverty line! ///***


அரசு புள்ளி விவரத்தின் படி நகரங்களில் ஒரு மாதத்துக்கு 269 ரூபாய்க்கு மேல் இருந்தால், அதாவது ஒரு நாளைக்கு 10 ரூபாய் கம்மியாக சம்பாதித்தால் போதுமாம் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளதாக அர்த்தமாம். இந்த கணக்குப் படி பிச்சைக்காரன் கூட இந்தியாவில் வறுமைக் கோட்டிற்க்கு மேல் உள்ளவந்தான். இதே விசயம் கிராமப் புறங்களில் 276 ரூபாய்.

எந்த அடிப்படையில் வறுமைக் கோடு என்பதை அரசு தீர்மானிக்கிறது என்பது ஒரு முரன் நகைச்சுவையான விசயமாக உள்ளது. முரன் ஏனெனில் அது பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை துயரத்தை மறைப்பதால்.

ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவாசிய தேவைகள் சுருங்கிவரும் பொழுது எப்படி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதாக வெறும் முரன்பட்ட அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் முடிவெடுப்பது? அதுவும் செல்வனுக்கு சாதகமாக தோன்றும் அரசு புள்ளிவிவ்ரமும் கூட போலி என்பது போல இருக்கும் பொழுது.


இங்கே திரும்பவும் நிற்க.....


*************XXXXX*************



வறுமை குறைகிறது எனும் புள்ளி விவரம் உண்மையா?:

Poverty in India : Myth and Reality; Definition and Identification; Critical Evaluation/Ratnakar Gedam. 1995

இந்த மேற்சொன்ன புக்குல என்ன சொல்றாங்கன்னா, இந்தியாவில் வறுமைக் கோடு பற்றிய வரையறை தவறு அதனால் வறுமைக் கோட்டை தாண்டிய மக்களின் எண்ணிக்கை over estimation. அப்படின்னு சொல்றாராம். இது யாரும் கம்யுனிஸ்டு எழுதிய புத்தகமல்ல.(இந்த புத்தக விவரம் கூகுள் சேர்ச்சில் கிடைத்தது).

நான் ஏற்கனவே இது குறித்து குறிப்பிட்டிருந்தேன். அதாவது இந்தியாவில் வறுமைக் கோடு பற்றிய வரையறை மாற்றப்பட்டு போலியான கணக்குகள் கொடுக்கப்படுவதாக. இது குறித்து செல்வன் கருத்துச் சொல்லாமல் நழுவினார். மேலும் அந்த சமயத்தில் இது குறித்தான தெளிவான தரவுகள் எதுவும் என்னிடம் இல்லாததால் மேற்கொண்டு பேசாமல் இருந்து விட்டேன். இன்னோருவர் செல்வனிடம் வறுமைக் கோடு வரையறை என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்க்கும் செல்வன் பதில் சொல்லவில்லை.


வறுமை குறைகிறது எனும் புள்ளி விவரம் உடையும் இடம்:

இந்த இடத்தில் செல்வனின் அனைத்து வாதங்களும் அம்பலப்பட்டு வெறுமனே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற வாதத்தில் மட்டுமே ஏகாதிபத்திய சுரண்டல் பொருளாதாரத்தின் புனித பிம்பத்தை கட்டிக் காப்பதில் வந்து நிற்கிறது(அதுவும் பெரிய அளவில் கிடையாது).

இங்கு வறுமைக் கோடு என்பதற்க்கு அரசு என்ன விளக்கம் சொல்கீறது என்ற விசயத்தை சேர்த்துப் பேசினால் அது
எவ்வளவு பெரிய மோசடியாக இருக்கீறது என்று தெரியவரும்.

பின்வரும் சுட்டியில் உள்ள கட்டுரை மற்றும் அரசு வறுமைக் கோடு விளக்கத்தைப் பார்த்து பரிசீலித்து எழுதுகிறேன். http://www.indiatogether.org/2006/mar/ddz-povline.htm


**//"The official estimates of the poverty line are based on a norm of 2400 calories per capita per day for rural areas and 2100 per capita per day for urban areas." This goes back to the 1970s; at that time, we decided to measure poverty levels by considering a minimum nutritional level. More accurately, the measure was the amount of money required to buy food equivalent to this nutritional level. If you earned more than this amount, you were above the poverty line. //**


அதாவது 2400 கலோரி சத்துள்ள உணவு வாங்கும் அளவு சம்பாதித்தால் போதுமாம் அவர் வறுமைக் கோட்டிற்க்கு மேலுள்ளவர். அதாவது 2004-ல் இந்த அளவு ஒரு மாதத்திற்க்கு 540 ரூபாய்(இது inflation ரேட்டை வைத்து கணக்கிடப்பட்டது. அரசு புள்ளிவிவரம் இல்லை என்று அந்த கட்டுரையாளர் கூறுகிறார்).

ஒரு பாத்திரம் தேய்க்கும் பெண் கூட இதைவிட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பார் என்பதும், அவரது குடும்பமும் கூட வறுமையான குடும்பம் என்பதும், ஆனால் அரசு புள்ளிவிவரப்படி அவர் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் வரமாட்டார் என்பதும். ஆக, இவையனைத்தும் அரசின் இந்த போலியான வரையறையை அம்பலப்படுத்த போதுமான விசயங்கள்.

ஏகாதிபத்திய ஆதரவு முன்ணனி அந்த பாத்திரம் கழுவும், தனது பிள்ளைகளை படிக்க வைக்க வழியின்றி வேலைக்கு அனுப்பும், அந்தப் பெண்ணைக் கூட வறுமைக் கோட்டிற்க்கு மேல் உள்ளவர் என்று சொல்லும் சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது.

ஒரு கணக்குக்கு பாருங்கள்: பொருளாதாரத்தின் கீழ்த் தட்டில் உள்ள மக்கள் தங்களது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை உணவுக்கு செல்வழிப்பதாகக் கொண்டால், இந்த 540-யை உணவுக்கு செலவழிக்க அவர்கள் 1620 ருபாய் சம்பாதிக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் இது வரை எத்தனை சதவீதம் என்றும் அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பதையும் செல்வன் கணக்கிட்டுத் தரட்டும்.

ஆக, ஒவ்வொரு ஆண்டும் ஏற்ப்படும் விலைவாசி உயர்வு, மற்ற அத்தியாவசிய தேவைகளான இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவம், போக்குவரத்து இவற்றின் விலை உயர்வு தட்டுப்பாடு,
இவற்றை அடிப்படையாகக் கொண்டு வறுமைக் கோடு தீர்மாணிக்கப்படவில்லை. பிறகு எப்படி இந்த தகவல் சரியானதாக இருக்கும்.

இவர்களின் வாதத்திற்க்கே வந்தால் கூட 1977 லிருந்து 1987 வரையான வருட்ங்களில்தான் வறுமை மிக கடுமையாக குறைந்துள்ளது(அந்த போலி வரையறைப்படி). உறுதியாக இந்த வருடங்களில் உலகமய, தாராளமய கொள்கைகள் இந்தியாவுக்குள் வரவில்லை. ஆக இந்த புள்ளிவிவரம் உண்மை என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொண்டால் கூட அது அவர்களின் பொருளாதர திட்டத்திற்க்கு ஆதரவாக இல்லை. இதில் ப்ளானிங் கமிசன் 19% வறுமைக் கோடுக்கு கீழே என்கிறது, தேசிய கண்க்கிட்டு நிறுவனம்(NSS) 36 % என்கிறது.

ஆக , இவர்களின் விளக்கமும், புள்ளிவிவ்ரமும் உரிக்க உரிக்க வெங்காயம் கதைதான். அதாவது ஒன்னுமில்ல. அப்புறம் அதில் விவாதம் செய்ய என்ன இருக்கீறது.

வேண்டுமானல், இந்த ஏகாதிபத்திய அமெரிக்க அடிவருடி குழுக்கள் ஒன்று செய்யட்டும்,
இந்தியாவில் வறுமைக் கோடு என்பதன் விளக்கத்தை சரியாக திருத்தி, இன்னொமொரு கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரத்தை வைக்கட்டும் அப்புறம் வாதாடலாம்.

விசயம் மீண்டும் நான் சொன்னதுதான், அதாவது, ஆளும் வர்க்கம் தனது கௌரவத்திற்க்காக சில புள்ளிவிவரங்களை தரும் ஆனால் அதே ஆளூம் ர்க்கம் தனக்குள் உள்ள போட்டி பொறாமையால் தரும் புள்ளிவிவ்ரங்களும் வெளிவரும், இது தவிர்த்து ந்டைமுறையிலும் நாம் விசயங்களைப் பார்க்கிறோம். இவற்றின் அடிப்படையில்தான் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.


இவர் கொடுக்கும் அரசு புள்ளி விவ்ரம் அதே அரசு கொடுக்கும் மற்ற புள்ளிவிவரங்களுடன் முரன்படுகிறது என்ற அம்சத்திலும் தோல்வியுறுகிறது. இவர் கொடுக்கும் புள்ளி விவரமே சரியான வரையறைகளைக் கணக்கில் கொண்டு எடுக்கப்படவில்லை என்ற அம்சத்திலும் தோல்வியடைகிறது.

அப்புறம் என்னதான் சொல்லவருகிறேர்கள்?......

ஏன் ஒப்பாரி வைக்கிறேர்கள் அமேரிக்க அடிவருடிகளே??!!!!

அசுரன்.

******************

Related Article:
#1)
கம்யுனிச அவதூறு பதில் -1
#2) டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்

Thursday, September 21, 2006

டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்

பார்ப்பினியத்துடன் முரன்படும் கம்யுனிசம்


போலி என்று பரவலாக அறியப்படுபவரால் அவதியுற்றதாக பிரபலமான டோண்டு அவர்கள் கம்யுனிசம் பற்றிய எனது சமீபத்திய பதிவிற்க்கு எதிர்வினையாக ஒரு பதிவை இட்டிருந்தார். அது மிகச் சிறப்பாக பார்ப்பினியம் என்பதன் மக்கள் விரொத தன்மையை அம்பலப்படுத்தும் விதமாக, பார்பினியம் சொந்த செல்வில் சூனியம் வைத்துக் கொள்ளும் விதமாக இருந்தது. அதே போன்ற வேறு சில சொ.செ.சூ டைப் டோண்டுவின் பழைய பதிவுகளை ஏதோ மிகச் சிறந்த கம்யுனிச எதிர் வாதமாகக் கருதி டாலர் செல்வன் அவர்களும் முத்தமிழ் குழுமத்தில் இட்டிருந்தார். சொ.செ.சூவை வேறு யாரையும் விட மிகச் சிறப்பாக டாலர் செல்வன் தனக்குத்தானே செய்கிறார் என்பதை அவரே ஒத்துக் கொண்டதுதான். ஆனால் இந்த தடவை தான் மட்டும் இல்லாமல் தனது நண்பர்களுக்கும் இந்த விசயத்தில் அவர் உதவி செய்து அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார். திரு டாலர் செல்வன் செய்வது பல நேரங்களில் - அவரை அம்பலப்படுத்துவதாகட்டும், அவரது நண்பர்களை அம்பலப்படுத்துவதாகட்டும் - நமது வேலையை பாதியாக குநந்த்துவிடுகிறது. ஆகவே அவருக்கு முதற்கண் எனது நன்றிகளை தெரிவித்து டோண்டுவின் கட்டுரைகளில் எந்த இடங்களிலெல்லாம் சொ.செ.சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பதை கீழே பார்ப்போம்.


**************************


இயற்கை முரனும், பார்ப்பினியமும்:

டோண்டுவின் வாதப்படி கம்யுனிசம் மனிதனின் இயற்கை பண்புக்கு மாறாக செல்கிறது என்கிறார். இப்படி மொக்கையாகத்தான் சொல்கிறாரே ஒழிய குறிப்பாக எந்த விசயத்தில் என்று சொல்லவில்லை. ஏனெனில் கம்யுனிசம் சில விசயங்களில் இயற்கை இயல்புக்கு மாறாகத்தான் செல்கிறது. ஆனால் கம்யுனிசம் மட்டும் அப்படிச் செல்லவில்லை. கம்யுனிசத்தைவிட ஏகாதிபத்திய முதலாளித்துவம் இன்னும் பல மடங்கு இயற்கை இயல்புகளூக்கு மாறாக செல்கிறது. இன்னும் சொன்னால் இயற்கையுடன் முரன்பட்டு அதன் மீது எதிர்வினைகளைச் செலுத்தி தனது வாழ்க்கையை வசதி செய்து கொள்வதில் தான் மனிதன் மற்ற மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறான். ஆக மனித நாகரிமடைந்ததன் அடிப்படையே இயற்கையுடன் முரன்பட்டதுதான்.

மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை கம்யுனிசம் மறுக்கிறது என்பதுதான் டோ ண்டு சொல்லும் கம்யுனிசத்தின் இயற்கை மறுப்பு போக்கு என்றால், இந்த வாதத்தில் அம்பலமாவது பார்ப்பினியம்தான். அதுதான் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்று வரையறுத்து இன்றுவரை ஒரு பெரும்பகுதி மக்களை அடிமை சிந்தனையில் பூட்டிவைத்துள்ளது. அனைவரும் அர்ச்சகர் பற்றிய கருத்து கேட்டபொழுது பிற சாதி ஆட்களே கூட புனிதம் சுத்தம் என்று பிறப்பால் தம்மை தாழ்த்திக் கொண்டார்கள். இந்த சமூக அபிப்ராயத்தின் மூல வேர் பல்லாயிரமாண்டு பார்ப்பினிய கொடுங்கோன்மையில் புதைந்துள்ளதை மனதில் கொள்க.


ஆக அந்த விசயத்தில்தான் கம்யுனிசம் இயற்க்கையை மீறுகிறது எனில் நல்லதுதானே. இது ஒரு வகை justification. இந்த வாதம் சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. அவர்களுக்காக நியுட்ரல் ground-ல் இருந்து கொண்டு வேறுவிதமான வாதத்தை வைக்கிறேன். அதவாது இந்த பார்ப்பினியம், கோப்பினியம் போன்ற வாதங்களை விடுத்து பொதுவாக இயற்கையை மீறிப் போவது புதிய விசயமா அல்லது ஏற்கனவே பரவலாக பழக்கத்தில் உள்ள விசயமா அல்லது கெட்ட விசயமா அல்லது நல்ல விசயமா என்பதை பார்ப்போம்.


ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல, இயற்கையுடன் முரன்பட்டு அதன் மீது எதிர்வினைகளைச் செலுத்தி தனது வாழ்க்கையை வசதி செய்து கொள்வதில் தான் மனிதன் மற்ற மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறான். ஆக, அது ஒன்றும் புதிய விசயமல்ல. நெருப்பு கண்டுபிடித்த காலத்தில் ஆரம்பித்தது இந்த முரன்பாடு. இன்னும் கோட்பாடக சொன்னால் மனித சமூகத்தின் வளர்ச்சியின் ரகசியமே அவன் இயற்கையுடன் முரன்பட்டு தன்னை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதில்தான் உள்ளது.


இதே விசயத்தை(அதாவது இயற்கை உணர்வுகளுக்கு மாறாக மனித சமூகம் செல்வதை) இன்னுமொரு சென்சிடிவான விசய்த்தை எடுத்து விளக்குகிறேன். அந்த காலத்தில், புரதான பொதுவுடமை சமூகத்தில் கூட்டமாக புணர்வதுதான்(உடலுறுவு கொள்ளூதல்) மனித சமூகத்தின் இயல்பு. அதாவது இஸ்டம் போல, எப்பல்லாம் தோணுதோ அப்போ, யாருடனும்.

குடும்பம் உருவான கதை:

இந்த உடலுறுவு அல்லது இனப்பெருக்க உறவு விசயத்தில் மனிதனின் இயற்கையான உணர்வு எதிர் பாலினம் யாராயிருந்தாலும் உறவு கொள்வது. நாம் கூட தெருக்களில் பார்க்கலாம். நேற்றுவரை பால் கொடுத்த தாய் பன்றியை கொஞ்சம் வயதுக்கு வந்தவுடன் விடலைப் பன்றிகள் உறவுக்கு கூப்பிடுவதை. இந்த இயற்கை உணர்வுக்கு மாறனதுதான் குடும்பம் என்ற கட்டமைப்பு. சமூகம் என்பது எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும் விசயம் ஆனால் குடும்பம் எனும் நாகரிக அடையாளம் மனிதனுக்கு மட்டுமே உரிய விசயம். அது மனிதனின் ஆரம்ப கால உணர்வுக்கு மாறான, இயற்கை உணார்வுக்கு மாறான விசயம்.


இந்த இயற்கை உணர்வை மீறுவதில் மனித சமூகம் நமது டோ ண்டுவைப் போல உப்பிச் சப்பில்லாத வாதம் செய்து கொண்டிருக்கவில்லை. பல்வேறு அனுபவங்களுக்கு பிறகு தாய் வழியில், தந்தை வழியில், ஒன்னு விட்ட தங்கை, ஒன்னு விட்ட தம்பி என்று பல வடிவங்களில் பால் உறவு கொள்ளவதை மனிதன் கட்டுப் படுத்தி இயற்கைக்கு முரனாக சென்றான். அதாவது ஒட்டு மொத்த சமூகத்துக்கு அனுகூலமாக இருப்பதற்க்காக பாலுறுவுகளில் மனிதன் இயற்கைக்கு முரனாக சென்றான், கட்டுப்பாடுகளை கொண்டு வந்தான். இங்குதான் குடும்பம் என்ற அமைப்புக்கான மூல வேர் உயிரியல் ரீதியாக ஆரம்பமாகிறது. அப்புறம் குடும்பம் என்பது தனியுடமை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியது வேறு வரலாறு.


டோண்டு அவர்கள் இந்த விசயத்தில்(குடும்பம், பாலுறவு விசய்த்தில்) மீண்டும் நாம் இயற்கை உண்ர்வுக்கு மாறலாம என்று வாதிட்டு அறிவுரை சொல்லட்டும் அதை அவரது தொண்டரடி பொடிகள் வேண்டுமானால் follow செய்யட்டும். நமக்கு கவலையில்லை.


இப்படி ஒரு அதி முக்கியமான விசயத்திலேயே அட்ஜெஸ்ட் செய்துதான், இயற்கை உணர்வுக்கு மாறாக சென்றுதான் மனித சமூகத்தின் வரலாறே ஆரம்பிக்கிறது. குடும்பம் எனும் ஒரு அதி உன்னதமான ஒரு மனித சமூக அமைப்பு/இயற்கை உணர்வுக்கு மாறான அமைப்பு நடைமுறைக்கு வந்த கதையே இப்படித்தான் இருக்கிறது. கம்யுனிசம் மனித சமூகம் மொத்ததையும் ஒரே குடும்பமகா மாற்றும் ஒரு super குடும்பம். இதுவும் நீண்ட காலப் போக்கில் தான் ஏற்ப்படும். புரட்சி நடந்த மறு நிமிடே கம்யுனிசம் வந்துவிடும் என்பது டூபாக்கூர். அதனடிப்படையில் செய்யப்படும் வாத, எதிர் வாதங்களை புறக்கணீக்கவும்.


ஆக, உடலுறவு விசயத்தில் இயற்கைக்கு மாறாக சென்று அது இன்றைய குடும்பமாக பரிணமித்து, பிறகு இன்று வரை மனித சமூகம் பல வித மாற்றங்களைக் கண்டு, இன்றைக்கு தனியுடமை சமூகத்தின் கடைசி கட்டத்தில் வந்து நிற்கிறது. இந்த நேரத்தில் வந்து ஒரு அரதப் பழசான வாதத்தை வைத்து தானும் அம்பலமாகி, தனது தத்துவமும் அம்பலமாகி, வாதத்திலும் தோல்வியடையும் டோண்டுவின் நிலை உண்மையில் பரிதாபத்திற்க்குரியதுதான்.


நியுட்ரல் க்ரவுண்டிலும்கூட அவரது வாதம் ஒரு இட்லி, கெட்டி சட்னிக்கே ஆப்(off) ஆகி விட்டது. ஆம்லெட் ஆப்பாயில், சில பல புல் மீல்ஸ்கள் ரேஞ்சுக்கேல்லாம் தேறாதா கேசாக அவரது வாதம் உள்ளது.


சரி, இவ்வளவு வாதம் செய்து இயற்கை முரனாகா செல்வது மனித இயல்புதான் என்பதை நிறுவிய பிற்ப்பாடு இன்னொரு விசயம் சொல்லவேண்டியுள்ளது.


அதாவது ஒரு கம்யுனிச சமூகத்தில் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பது ஒரு பொய். ஆக இந்த விசயத்தில் கம்யுனிச சமூகம் இயற்கைக்கு விரோதமாக செல்கிறது என்பதே டூபாக்கூர்த் தனமான ஒரு கற்பனைதான். அப்படிச் சென்றாலும் தவறில்லை என்று கூறத்தான் மேலெயுள்ள வாதங்கள்.


ஒரு கம்யுனிச சமூகத்தில் ஏற்றத்தாழ்வு என்பது பூகோளம், நிறம், உடலியல் ரீதியாகத்தான் இருக்குமேயொழிய. அறிவு விசய்த்தில், அனைவருக்கும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால், வள்ரும், வாழும் சூழ் நிலைக்கேற்ப்ப எந்த துறையில் வேண்டுமானாலும் கற்று எல்லாருமே தான் சம்பந்தப்பட்ட துறையில் சூப்பர் ஜினியஸாகத்தான் இருப்பார்கள். அதனால் இவர் கூறுவது போன்ற(திறமை) ஏற்றத்தாழ்வு இருக்காது. இதுவும் சிறிது காலம் எடுத்து சில, பல தலைமுறைகள் கடந்த பிற்ப்பாடு ஏற்ப்படும் ஒரு நிலை. அதனால் இன்றைய ஏற்றத்தாழ்வான சுரண்டல், சமூகத்தை வைத்து அந்த முன்னேறிய சமூகத்தை எடைப் போட்டால் திருவாளர் டோ ண்டுவைப் போல பார்ப்பினியப் பார்வையில் போய் விழுந்து கிடப்பீர்கள்.


அடிமைச் சமூதாயத்தில் கூட அடிமைகளுக்கு சம உரிமை கொடுப்பதை ஏதோ இயற்கைக்கு மாறாக செல்லும் விசயம் என்பதாக பேசியிருப்பார்கள். நிலவுகின்ற ஒரு அமைப்பில் மாற்றம் கோரும் போதெல்லாம் அழுகிய பழைய சமுதாயத்தின் பிரதி நிதிகள் அவலட்சணமாக பேசுவது இயல்புதான். இதே கூட்டம் தலித்துக்களுக்கு உரிமை கேட்டு இந்தியாவில் போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் விவாதங்கள் எழுந்த போதும் இயற்கைக்கு முரனான கோரிக்கை என்பது போன்ற எதிர் வாதங்களை வைத்தனர். ஆகவே இதையேல்லாம் சட்டை செய்யாமல் எந்த ஒரு விசயத்தையும் அது மனித குலத்துக்கு அனுகூலமா இல்லையா என்ற ஒரு அளவுகோலைக் கொண்டு மதிப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.


இது தவிர்த்து இன்னொரு விசயததையும் இயற்கைக்கு மாறான போக்கு என்று வாதிட்டார்கள் சிலர். அந்த பகுதிகளையும் இங்கு பகிர்ந்து கொண்டால் சரியாக இருக்கும்.


தனியுடமை மனிதனின் இயற்கையான உணர்வா?


இது தவறான ஒரு கூற்று. மனித குல வரலாற்றை எடுத்துக் கொண்டால், பொது வுடைமைதான் அவனது இயல்பான உணர்வாக இருக்கிறது. வேட்டையாடி உணவு தேடும் பண்டைய புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் மனிதன் குலமாக, கூட்டமாக வாழ்ந்தான். அங்கு ஒவ்வொரு மனிதனும் தான் சேகரித்து வந்த உணவை பொதுவில் வைத்துத்தான் பகிர்ந்தனர்.


மனித மூளை வளர்ச்சி அடைந்ததில், இவ்வாறு பகிர்ந்து கொடுப்பதற்க்காக அவன் சிந்தித்தது(மூளையை கசக்கி) ஒரு முக்கிய காரணீயாக இருந்தது என்பது ஆய்வு முடிவுகள்(டார்வினின் கட்டுரை), இந்த விசயத்தில் தவறு செய்யாமல் இருக்க கடவுளர்களை உருவாக்கி பகிர்ந்து கொடுப்பது சரிசமமாக எல்லருக்கும் கிடைக்க அந்த குறிப்பிட்ட கடவுள் உதவ வேண்டும் என்று வேண்டுகிறார்கள். இது குறித்த தோ. பரமசிவனின் 'பண்பாட்டு அசைவுகள்' என்னும் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்:


""ஒவ்வொரு கட்டத்திலும் சமூகச் தேவைகள் மாற மாற, தெய்வங்களும் அவற்றின் பண்புகளும் மாறின, உதாரணமாக, வேட்டைச் சமூகத்தில் வேட்டையாடப்பட்ட விலங்குகள் ஊர்ப் பொது மன்றத்தில் கொண்டு வரப்பட்டு அந்த இனக்குழு மக்களால் தமக்குள் சமமாக அல்லது வேலைக்குத் தகுந்த அளவில் பங்கீடு செய்யப்பட்டன, இப்பங்கீடு தெய்வத்தின் பெயரால் செய்யப்பட்டது. பங்கீடு சரியாக இல்லாவிட்டால் தெய்வம் தண்டிக்கும் என்பது இனக்குழு மக்களின் நம்பிக்கை. இப்பங்கீட்டுத் தெய்வத்தைப் பற்றிய தொல்லெச்சம் போன்ற செய்திகள் பழைய இலக்கியங்களிலும் புராணங்களிலும் காணப்படுகின்றன, தமிழிலக்கியத்தில் இத்தெய்வம் பால்வரை தெய்வம் (பால்-பிரிவு) என்று கூறப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் விருப்பத்தின் பேரில்தான் ஒர் ஆணும் பெண்ணும் சந்தித்து உறவு கொள்கின்றனர் என்பது பழந்தமிழர் நம்பிக்கை. ஆரியரின் ரிக் வேதத்தில் 'ரித' என்னும் பங்கீட்டுத் தெய்வம் மறைந்தது பற்றிய புலம்பல்கள் இடம் பெறுகின்றன. கிரேக்கர் இப்பங்கீட்டுத் தெய்வத்தை 'மீர'(more) என்று அழைத்ததாகக் கிரெக்கத்தின் பழைய புராணங்கள் பேசுகின்றன.""


Quote from Darwin:
""In this book I argue that the origins of human intelligence are linked to the acquisition of meat, especially through the cognitive capacities necessary for the strategic sharing of meat with fellow group members. Important aspects of the behavior of some higher primates--hunting and meat sharing and the social and cognitive skills that enable these behaviors--are shared evolved traits with humans and point to the origins of human intelligence.""


டார்வின் அத்தனைக்கும் ஒரு முதலாளித்துவ அறிஞர்.


மனிதன் மந்தை உணர்ச்சி உடையவன், தனி மனித வாதம் என்பது தனியுடைமை சமூகத்தின் உத்திரவாதமில்லா நிலை உருவாக்கிய ஒரு இயல்பை மீறிய உணர்ச்சிதான். அதனால்தான் பாதுகாப்பான உணர்வடையும் போதெல்லாம் மனிதன் தனது பொதுமை நாட்டத்தை வெளிப்படுத்துகிறான்.


ஆக, மீண்டும் அதே விசயம்தான். பிரச்சனை இயற்க்கைக்கு மாறாக போவதா அல்லது இயந்து போவதா என்பது அல்ல. மனித குலத்தின் நலனை அடகு வைத்துச் செல்வதா அல்லது அதை முன்னிறுத்தும் விசயங்களை செய்வதா என்பதுதான்.


இது தவிர்த்து டோ ண்டுவின் வேறு சில வாதங்களையும் செல்வன் பதிந்திருந்தார். அவற்றை அடுத்துப் பார்ப்போம்:


//எதற்கெடுத்தாலும் மான்யம் என்று கூறி மக்களை சோம்பேறிகளாக்கினால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். //


மான்யம் கொடுத்து மக்கள் சோம்பேறறி ஆனதாக் ஒரு வரலாற்று புளுகை டோண்டுவின் வாயிலிருந்து கேட்பது ஒரு ஆச்சரியமான விசயமல்ல. அவர் சோ. ராமசாமியின் சீடரல்லவா. அவரது அந்த கூற்று ஒரு பார்ப்பினிய பார்வையேயன்றி வேறல்ல.


மேலும் மான்யம் கொடுத்து மக்கள் சோம்பேறீயானது உண்மையென்றால் அவர் ஆதாரம் கொடுக்க சொல்லிக் கேட்டு நிர்பந்திக்கப்படுவார். உலகிலேயே விவசாயத்திற்க்கு அதிக மான்யம் கொடுக்கும் நாடு இவர்களின் தந்தையர் பூமியான அமெரிக்கா. அங்கு மான்யம் பெற்றவர்களும், மான்யம் பெற்ற துறையும் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதற்க்கு சாட்சிதான் சமீபத்திய ஜெனிவா WTO பேச்சு தோல்வி.


மேலும் இந்தியாவில் மான்யம் பெரும்(குறைந்த விலை மின்சாரம், இன்கம் டாக்ஸ் சலுகை, இலவச நிலம் etc) MNC க்களை இவர்கள் என்ன சொல்வார்கள். சோம்பேறிகள் என்றா?


இவர்களீன் நோக்கம் மக்கள் வீரோதம் மட்டுமே... மக்களுக்கு எது செய்தாலும் தவறு... மன்னர்களுக்கு செய்தால் சரி.


இது பல்லாயிரம் வருடங்களாக உழைக்கும் மக்களை அவமானப்படுத்தி அவனுக்கு தகுதியில்லை, அறிவில்லை என்று திமிராக அறிவித்து அவனது உழைப்பைச் சுரண்டி கொழுத்த பார்ப்பினியத்தின் பார்வைதானெயன்றி வேறல்ல.


இந்த ஏகாதிபத்தியம், பார்ப்பினிய-நிலபிரபுத்துவம் கள்ள உறவுதான் இடஓதுக்கீடு விசயத்திலும் வெலை செய்கிறது.


அசுரன்

****************

Related Article: கம்யுனிச அவதூறு பதில் -1

Monday, September 11, 2006

கம்யுனிச அவதூறு பதில் -1

(இதில் உள்ள புள்ளி விவரங்களில் சில எனது ஞபகத்தில் இருந்து எடுத்து இடுகிறேன் எனவே சிறு தகவல் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. சரிபார்க்க அவகாசம் இல்லை. அதனால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)


***********


செல்வனின் பதிவிற்க்கு இந்தப் பதில்:

அவரது பதிவின் தலைப்பு - "கம்யுனிஸ்டுகள் ஏன் ஒப்பாரி வைத்து அழுகிறாகள்?"

இதில் CIA, மற்றும் Wrold Bankன் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்தியா முன்னேறுகிறது என்று ஒரு போர்ஜரி வேலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

அதற்க்கு பதில் சொல்லும் முகமாக:

இந்தியாவில் ஒரு சில பகுதிகள் வீங்கிப் பெருப்பதும் பெரும் பகுதிகள் ஒன்றுமில்லாமல் சுருங்குவதும் நடந்து வருகீறது என்பதை கவனத்தில் கொள்க. நாட்டில் கிராம மக்களின் சராசரி வருமானம் என்பது அதளபாதாளத்திற்க்குப் போய்விட்டதாக அரசு புள்ளி விவரம் சொல்கிறது(சாய் நாத் கட்டுரை) (இதே நேரத்தில் 100 புதிய மில்லினியர்கள் இந்தியாவில் உருவாகியிருக்கிறார்கள் - ஆக சராசரி என்னவோ அதேதான் இருக்கும் போல). சமீபத்தில் வறுமை கோடு பற்றிய அரசு வரையறையை மாற்றீயது தொடர்பாக கடும் விவாதம் நடந்ததைக் கவனிக்க நமது டாலர் செல்வனுக்கு நேரமிருந்திருக்காது.

அப்புறம் அப்படியே, அதிகமாகியிருக்கும் பட்டினி சாவுகள் (அரைப் பட்டினி ஆசாமிகள் அதிகமுள்ள் நாடு அதாவது சஹாரா பாலைவனத்தை விட அதிகம் என்று UNO புள்ளி விவரம் சொல்கிறது) (இந்த தொடர்ச்சியான பட்டினி சாவுகள் 1990 க்கு முன்பு கிடையாது என்பதை மனதில் கொள்க), social indicator தர வரிசையில் சறுக்கி 20 புள்ளிகள் இந்தியா இறங்கியிருப்பது பற்றி(இதுவும் UNO தான்), விவசாயிகள் தற்கொலை (இதுகூட 1990க்கு முன்பு இந்தளவுக்கு கிடையாது (இரு வருடத்தில் 1 லட்சம்)), அதளபாதாளத்தில் தொங்கும் விவசாய குடிகளின் ஆண்டு சராசரி வருமானம் (இதுவும் அரசு புள்ளிவிவரம்தான்), குழந்தைகளுக்கான ஆபத்தான நாடுகளில் 7 வது இடம் (இது மட்டும்தான் அரசு புள்ளி விவரம் கிடையாது).

அப்புறம் வெளிப்படையாக நாட்டை அடகு வைத்துள்ள விதை நெல் சீர்திருத்த சட்டம் (விவசாயி விதைப்புக்கு நெல் செர்த்து வைப்பதை தடை செய்யும் சட்டம்), அணு ஆயுத ஒப்பந்தம், தண்ணீர் தனியார்மய சட்டங்கள், ராணுவ ஓப்பந்தங்கள், காப்புரிமை சட்டம் காரணமாக மருத்துவ வசதியின்றி(குறிப்பாக ரேபிஸ்) சமீபத்தில் மாண்ட ஒரிஸ்ஸா, தமிழக, கர்நாடக அப்பாவிகள், விலை அதிகமான அத்தியாவசிய மருந்துகள், அப்படி மருத்துவ வசதி மறுக்கப்பட்ட நோயாளிகளை, ஏழை நோயாளிகளை சோதனை எலியாக பயன்படுத்த அனுமதி கொடுக்கும் சட்ட திருத்தம், இந்த மருத்துவ துறை அவலங்களை கூட 'இந்தியா மெடிக்கல் டூரிஸ மைய்யா'மாகி வருகிறது என்று பிரச்சாரம் செய்து மறைக்கலாம்.

இந்த சட்டங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் இது வரை ஒரு விவாதம் கூட நடக்கவில்லையே அதைப் பற்றி டாலர் செல்வன் என்ன சொல்வார்?

ஒரு பக்கம் சர்க்கரை போன்ற பொருட்களீன் சந்தை விலை ஏறீவருவது, அதே நேரத்தில் விவசாய்யிகளிடம் இவற்றை கொள்முதல் செய்யும் விலை குறைந்து கொண்டே வருவதும் பற்றியெல்லாம் டாலருக்கு கவலையில்லை. அவரது கவலை எப்படி இந்த கம்யுனிஸ்டுகள் மக்களிடம் உண்மைகளை சொல்வதிலிருந்து கெடுப்பது என்பதுதான்.

டாலர் செல்வனின் டாலர் பாசமும் அவரது போலி தேசப்பற்றும் எனக்கு புதிதல்ல.

லட்சக்கணக்கில் அத்துக் கூலிக்கு நவீன நடோ டிகளாக விவசாய நிலத்தை விட்டு விட்டு ஓடி வரும் கிராமப்புற மக்கள், நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அடையாளம் என்பவன் ஒரு வக்கிர பாண்டியனாகத்தான் இருக்க முடியும். அடுத்தமுறை வசந்த பவன்களுக்கு சென்றால் இலை பொறுக்கும் சிறுவனிடம் பேசிப்பாருங்கள், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டைகளின் ஏக்கம் தெரியவரும். தங்கையின் படிப்பு, அக்காவின் திருமணம், மருத்துவ செல்வுகள், அடுத்த விதைப்புக்கு ஏற்பாடு செய்வது.... இதேல்லாம் டாலரில் சம்பாதிப்பவருக்கான கவலைகள் கிடையாது.

அப்படி உண்மையில் இவருக்கு கவலையிருந்தால் வலைப்பூ உலகில் ஒரு விவாசாயி மாதமாதம் கட்டுரை எழுதி கதுறுகிறார், அதற்க்கு இதுவரை ஒரு பதில் ஒரு கட்டுரை, பின்னூட்டம் எழுதியிருக்கிறாரா இந்த அறிவு ஜீவி(??) டாலர் செல்வன்?

வேலைவாய்ப்பு குறைந்து விட்டது என்று நான் சொல்லவில்லை இந்தியாவின் RBI(reserve bank of India) சொல்கிறது. ஏழு வருடத்தில் 70,000 சிறு தொழிற்சாலைகள் கர்நாடகாவில் மூடப்பட்டுவிட்டதாக நான் சொல்லவில்லை அரசு சொல்கிறது, இப்படி இந்தியா முழுவதும் வேலை இழந்தவர்கள் 15 லட்சத்திற்க்கும் அதிகமானவர்கள் இவர்கள் இன்று காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக பிழியப்படுகிறார்கள். இதைப் பற்றி கூட டாலர் செல்வன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்(அவர் முரன்பாடு முத்தன்னா என்பதை இங்கும் நிருபிக்கீறார்).


இந்தியா is no more a low cost destination என்றூ கூறி MNCக்கள் சிறிது சிறிதாக கடையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். மிக சமீபத்தில் WTO வால் இந்தியாவுக்கு ஒரு மசிரும் கிடைக்கலன்னு எல்லா அரசியல், அதிகார வர்க்க தலைகளும் கட்டுரைகள், மேடைப்பேச்சுகள், பேட்டிகளில் சொன்னதை அவதனிக்கும் அவசியம் டாலர் செல்வனுக்கு கிடையாது.

அப்துல் கலாம் கனவு பற்றி விதந்து பேசுகிறார் திரு டாலர் செல்வன். அப்துல் கலாம் ஒரு நல்ல நடிகர் அதுவும் நயவஞ்சமமிக்க ஒரு காமெடி நடிகர். மக்கள் பிரச்சனை எதிலும் மிக கவனமாக கருத்துச் சொல்வதை தவிர்த்து 'கனவு காண் கனவு காண்' என்று ஊரை ஏமாற்றும் ஒரு பதர்....

திரு டாலர் சொல்வது போல இந்தியா முன்னேறும்.... ஒரு விசயத்தை கவனத்தில் கொண்டால்....

இந்தியாவின் எல்லைகள் நாட்டைச் சுற்றி ஓடவில்லை நாட்டின் குறுக்காக ஒடுகிறது என்பதை கவனத்தில் கொண்டால் எந்த இந்தியா ஒளிர்கிறது என்பதும் எந்த இந்தியா தேய்கிறது என்பதும் தெளிவாகும்.

அய்யா செல்வன், தங்களுக்கு உண்மையில் மிகவும் வலு இருந்தால் எனது பொருளாதார கட்டுரை எதையாவது சீண்டிப்பாருங்களேன்....

இதோ Url: kaipulla.blogspot.com
poar-parai.blogspot.com

கான்சர் திட்டுக்களும் வளர்ச்சிதான் என்ன செய்ய நாங்கள் அவற்றை வெட்டியெறிந்துதான் பழக்கம்


***********


CIA புள்ளீவிவரத்தை நம்புவது அவரவர் விருப்பம். CIAவின் நம்பகத்தனமை பற்றி குறைந்த பட்ச பகுத்தறிவு உள்ளவனுக்கும் தெரியும். இப்போ கூட அது நைஜீரியாவில் போர் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டது தொடர்பான இமெயில் பேச்சுக்கள் பத்திரிக்கைகளில் அம்பலமாகி நாறியுள்ளது.

டாலரின் டாலர் பற்று புள்ளியறுக்க வைக்கிறது... சீ... ஸாரி... புல்லரிக்கவைக்கிறது.

****


இதில் உள்ள பெரும்பாலான புள்ளிவிவரங்களுக்கு kaipulla.blogspot.com தளத்தில் லிங்க் உள்ளது. இப்பொழுது லிங்க் கொடுக்கும் அவகாசம் இல்லை. வாய்ப்பிருந்தால் பின்னூட்டத்தில் சாத்தியமான அனைத்து லிங்க்குகளையும் தருகிறேன்.


Related Posts:

Related Posts with Thumbnails