TerrorisminFocus

Thursday, September 21, 2006

டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்

பார்ப்பினியத்துடன் முரன்படும் கம்யுனிசம்


போலி என்று பரவலாக அறியப்படுபவரால் அவதியுற்றதாக பிரபலமான டோண்டு அவர்கள் கம்யுனிசம் பற்றிய எனது சமீபத்திய பதிவிற்க்கு எதிர்வினையாக ஒரு பதிவை இட்டிருந்தார். அது மிகச் சிறப்பாக பார்ப்பினியம் என்பதன் மக்கள் விரொத தன்மையை அம்பலப்படுத்தும் விதமாக, பார்பினியம் சொந்த செல்வில் சூனியம் வைத்துக் கொள்ளும் விதமாக இருந்தது. அதே போன்ற வேறு சில சொ.செ.சூ டைப் டோண்டுவின் பழைய பதிவுகளை ஏதோ மிகச் சிறந்த கம்யுனிச எதிர் வாதமாகக் கருதி டாலர் செல்வன் அவர்களும் முத்தமிழ் குழுமத்தில் இட்டிருந்தார். சொ.செ.சூவை வேறு யாரையும் விட மிகச் சிறப்பாக டாலர் செல்வன் தனக்குத்தானே செய்கிறார் என்பதை அவரே ஒத்துக் கொண்டதுதான். ஆனால் இந்த தடவை தான் மட்டும் இல்லாமல் தனது நண்பர்களுக்கும் இந்த விசயத்தில் அவர் உதவி செய்து அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார். திரு டாலர் செல்வன் செய்வது பல நேரங்களில் - அவரை அம்பலப்படுத்துவதாகட்டும், அவரது நண்பர்களை அம்பலப்படுத்துவதாகட்டும் - நமது வேலையை பாதியாக குநந்த்துவிடுகிறது. ஆகவே அவருக்கு முதற்கண் எனது நன்றிகளை தெரிவித்து டோண்டுவின் கட்டுரைகளில் எந்த இடங்களிலெல்லாம் சொ.செ.சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பதை கீழே பார்ப்போம்.


**************************


இயற்கை முரனும், பார்ப்பினியமும்:

டோண்டுவின் வாதப்படி கம்யுனிசம் மனிதனின் இயற்கை பண்புக்கு மாறாக செல்கிறது என்கிறார். இப்படி மொக்கையாகத்தான் சொல்கிறாரே ஒழிய குறிப்பாக எந்த விசயத்தில் என்று சொல்லவில்லை. ஏனெனில் கம்யுனிசம் சில விசயங்களில் இயற்கை இயல்புக்கு மாறாகத்தான் செல்கிறது. ஆனால் கம்யுனிசம் மட்டும் அப்படிச் செல்லவில்லை. கம்யுனிசத்தைவிட ஏகாதிபத்திய முதலாளித்துவம் இன்னும் பல மடங்கு இயற்கை இயல்புகளூக்கு மாறாக செல்கிறது. இன்னும் சொன்னால் இயற்கையுடன் முரன்பட்டு அதன் மீது எதிர்வினைகளைச் செலுத்தி தனது வாழ்க்கையை வசதி செய்து கொள்வதில் தான் மனிதன் மற்ற மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறான். ஆக மனித நாகரிமடைந்ததன் அடிப்படையே இயற்கையுடன் முரன்பட்டதுதான்.

மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை கம்யுனிசம் மறுக்கிறது என்பதுதான் டோ ண்டு சொல்லும் கம்யுனிசத்தின் இயற்கை மறுப்பு போக்கு என்றால், இந்த வாதத்தில் அம்பலமாவது பார்ப்பினியம்தான். அதுதான் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்று வரையறுத்து இன்றுவரை ஒரு பெரும்பகுதி மக்களை அடிமை சிந்தனையில் பூட்டிவைத்துள்ளது. அனைவரும் அர்ச்சகர் பற்றிய கருத்து கேட்டபொழுது பிற சாதி ஆட்களே கூட புனிதம் சுத்தம் என்று பிறப்பால் தம்மை தாழ்த்திக் கொண்டார்கள். இந்த சமூக அபிப்ராயத்தின் மூல வேர் பல்லாயிரமாண்டு பார்ப்பினிய கொடுங்கோன்மையில் புதைந்துள்ளதை மனதில் கொள்க.


ஆக அந்த விசயத்தில்தான் கம்யுனிசம் இயற்க்கையை மீறுகிறது எனில் நல்லதுதானே. இது ஒரு வகை justification. இந்த வாதம் சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. அவர்களுக்காக நியுட்ரல் ground-ல் இருந்து கொண்டு வேறுவிதமான வாதத்தை வைக்கிறேன். அதவாது இந்த பார்ப்பினியம், கோப்பினியம் போன்ற வாதங்களை விடுத்து பொதுவாக இயற்கையை மீறிப் போவது புதிய விசயமா அல்லது ஏற்கனவே பரவலாக பழக்கத்தில் உள்ள விசயமா அல்லது கெட்ட விசயமா அல்லது நல்ல விசயமா என்பதை பார்ப்போம்.


ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல, இயற்கையுடன் முரன்பட்டு அதன் மீது எதிர்வினைகளைச் செலுத்தி தனது வாழ்க்கையை வசதி செய்து கொள்வதில் தான் மனிதன் மற்ற மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறான். ஆக, அது ஒன்றும் புதிய விசயமல்ல. நெருப்பு கண்டுபிடித்த காலத்தில் ஆரம்பித்தது இந்த முரன்பாடு. இன்னும் கோட்பாடக சொன்னால் மனித சமூகத்தின் வளர்ச்சியின் ரகசியமே அவன் இயற்கையுடன் முரன்பட்டு தன்னை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதில்தான் உள்ளது.


இதே விசயத்தை(அதாவது இயற்கை உணர்வுகளுக்கு மாறாக மனித சமூகம் செல்வதை) இன்னுமொரு சென்சிடிவான விசய்த்தை எடுத்து விளக்குகிறேன். அந்த காலத்தில், புரதான பொதுவுடமை சமூகத்தில் கூட்டமாக புணர்வதுதான்(உடலுறுவு கொள்ளூதல்) மனித சமூகத்தின் இயல்பு. அதாவது இஸ்டம் போல, எப்பல்லாம் தோணுதோ அப்போ, யாருடனும்.

குடும்பம் உருவான கதை:

இந்த உடலுறுவு அல்லது இனப்பெருக்க உறவு விசயத்தில் மனிதனின் இயற்கையான உணர்வு எதிர் பாலினம் யாராயிருந்தாலும் உறவு கொள்வது. நாம் கூட தெருக்களில் பார்க்கலாம். நேற்றுவரை பால் கொடுத்த தாய் பன்றியை கொஞ்சம் வயதுக்கு வந்தவுடன் விடலைப் பன்றிகள் உறவுக்கு கூப்பிடுவதை. இந்த இயற்கை உணர்வுக்கு மாறனதுதான் குடும்பம் என்ற கட்டமைப்பு. சமூகம் என்பது எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும் விசயம் ஆனால் குடும்பம் எனும் நாகரிக அடையாளம் மனிதனுக்கு மட்டுமே உரிய விசயம். அது மனிதனின் ஆரம்ப கால உணர்வுக்கு மாறான, இயற்கை உணார்வுக்கு மாறான விசயம்.


இந்த இயற்கை உணர்வை மீறுவதில் மனித சமூகம் நமது டோ ண்டுவைப் போல உப்பிச் சப்பில்லாத வாதம் செய்து கொண்டிருக்கவில்லை. பல்வேறு அனுபவங்களுக்கு பிறகு தாய் வழியில், தந்தை வழியில், ஒன்னு விட்ட தங்கை, ஒன்னு விட்ட தம்பி என்று பல வடிவங்களில் பால் உறவு கொள்ளவதை மனிதன் கட்டுப் படுத்தி இயற்கைக்கு முரனாக சென்றான். அதாவது ஒட்டு மொத்த சமூகத்துக்கு அனுகூலமாக இருப்பதற்க்காக பாலுறுவுகளில் மனிதன் இயற்கைக்கு முரனாக சென்றான், கட்டுப்பாடுகளை கொண்டு வந்தான். இங்குதான் குடும்பம் என்ற அமைப்புக்கான மூல வேர் உயிரியல் ரீதியாக ஆரம்பமாகிறது. அப்புறம் குடும்பம் என்பது தனியுடமை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியது வேறு வரலாறு.


டோண்டு அவர்கள் இந்த விசயத்தில்(குடும்பம், பாலுறவு விசய்த்தில்) மீண்டும் நாம் இயற்கை உண்ர்வுக்கு மாறலாம என்று வாதிட்டு அறிவுரை சொல்லட்டும் அதை அவரது தொண்டரடி பொடிகள் வேண்டுமானால் follow செய்யட்டும். நமக்கு கவலையில்லை.


இப்படி ஒரு அதி முக்கியமான விசயத்திலேயே அட்ஜெஸ்ட் செய்துதான், இயற்கை உணர்வுக்கு மாறாக சென்றுதான் மனித சமூகத்தின் வரலாறே ஆரம்பிக்கிறது. குடும்பம் எனும் ஒரு அதி உன்னதமான ஒரு மனித சமூக அமைப்பு/இயற்கை உணர்வுக்கு மாறான அமைப்பு நடைமுறைக்கு வந்த கதையே இப்படித்தான் இருக்கிறது. கம்யுனிசம் மனித சமூகம் மொத்ததையும் ஒரே குடும்பமகா மாற்றும் ஒரு super குடும்பம். இதுவும் நீண்ட காலப் போக்கில் தான் ஏற்ப்படும். புரட்சி நடந்த மறு நிமிடே கம்யுனிசம் வந்துவிடும் என்பது டூபாக்கூர். அதனடிப்படையில் செய்யப்படும் வாத, எதிர் வாதங்களை புறக்கணீக்கவும்.


ஆக, உடலுறவு விசயத்தில் இயற்கைக்கு மாறாக சென்று அது இன்றைய குடும்பமாக பரிணமித்து, பிறகு இன்று வரை மனித சமூகம் பல வித மாற்றங்களைக் கண்டு, இன்றைக்கு தனியுடமை சமூகத்தின் கடைசி கட்டத்தில் வந்து நிற்கிறது. இந்த நேரத்தில் வந்து ஒரு அரதப் பழசான வாதத்தை வைத்து தானும் அம்பலமாகி, தனது தத்துவமும் அம்பலமாகி, வாதத்திலும் தோல்வியடையும் டோண்டுவின் நிலை உண்மையில் பரிதாபத்திற்க்குரியதுதான்.


நியுட்ரல் க்ரவுண்டிலும்கூட அவரது வாதம் ஒரு இட்லி, கெட்டி சட்னிக்கே ஆப்(off) ஆகி விட்டது. ஆம்லெட் ஆப்பாயில், சில பல புல் மீல்ஸ்கள் ரேஞ்சுக்கேல்லாம் தேறாதா கேசாக அவரது வாதம் உள்ளது.


சரி, இவ்வளவு வாதம் செய்து இயற்கை முரனாகா செல்வது மனித இயல்புதான் என்பதை நிறுவிய பிற்ப்பாடு இன்னொரு விசயம் சொல்லவேண்டியுள்ளது.


அதாவது ஒரு கம்யுனிச சமூகத்தில் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பது ஒரு பொய். ஆக இந்த விசயத்தில் கம்யுனிச சமூகம் இயற்கைக்கு விரோதமாக செல்கிறது என்பதே டூபாக்கூர்த் தனமான ஒரு கற்பனைதான். அப்படிச் சென்றாலும் தவறில்லை என்று கூறத்தான் மேலெயுள்ள வாதங்கள்.


ஒரு கம்யுனிச சமூகத்தில் ஏற்றத்தாழ்வு என்பது பூகோளம், நிறம், உடலியல் ரீதியாகத்தான் இருக்குமேயொழிய. அறிவு விசய்த்தில், அனைவருக்கும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால், வள்ரும், வாழும் சூழ் நிலைக்கேற்ப்ப எந்த துறையில் வேண்டுமானாலும் கற்று எல்லாருமே தான் சம்பந்தப்பட்ட துறையில் சூப்பர் ஜினியஸாகத்தான் இருப்பார்கள். அதனால் இவர் கூறுவது போன்ற(திறமை) ஏற்றத்தாழ்வு இருக்காது. இதுவும் சிறிது காலம் எடுத்து சில, பல தலைமுறைகள் கடந்த பிற்ப்பாடு ஏற்ப்படும் ஒரு நிலை. அதனால் இன்றைய ஏற்றத்தாழ்வான சுரண்டல், சமூகத்தை வைத்து அந்த முன்னேறிய சமூகத்தை எடைப் போட்டால் திருவாளர் டோ ண்டுவைப் போல பார்ப்பினியப் பார்வையில் போய் விழுந்து கிடப்பீர்கள்.


அடிமைச் சமூதாயத்தில் கூட அடிமைகளுக்கு சம உரிமை கொடுப்பதை ஏதோ இயற்கைக்கு மாறாக செல்லும் விசயம் என்பதாக பேசியிருப்பார்கள். நிலவுகின்ற ஒரு அமைப்பில் மாற்றம் கோரும் போதெல்லாம் அழுகிய பழைய சமுதாயத்தின் பிரதி நிதிகள் அவலட்சணமாக பேசுவது இயல்புதான். இதே கூட்டம் தலித்துக்களுக்கு உரிமை கேட்டு இந்தியாவில் போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் விவாதங்கள் எழுந்த போதும் இயற்கைக்கு முரனான கோரிக்கை என்பது போன்ற எதிர் வாதங்களை வைத்தனர். ஆகவே இதையேல்லாம் சட்டை செய்யாமல் எந்த ஒரு விசயத்தையும் அது மனித குலத்துக்கு அனுகூலமா இல்லையா என்ற ஒரு அளவுகோலைக் கொண்டு மதிப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.


இது தவிர்த்து இன்னொரு விசயததையும் இயற்கைக்கு மாறான போக்கு என்று வாதிட்டார்கள் சிலர். அந்த பகுதிகளையும் இங்கு பகிர்ந்து கொண்டால் சரியாக இருக்கும்.


தனியுடமை மனிதனின் இயற்கையான உணர்வா?


இது தவறான ஒரு கூற்று. மனித குல வரலாற்றை எடுத்துக் கொண்டால், பொது வுடைமைதான் அவனது இயல்பான உணர்வாக இருக்கிறது. வேட்டையாடி உணவு தேடும் பண்டைய புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் மனிதன் குலமாக, கூட்டமாக வாழ்ந்தான். அங்கு ஒவ்வொரு மனிதனும் தான் சேகரித்து வந்த உணவை பொதுவில் வைத்துத்தான் பகிர்ந்தனர்.


மனித மூளை வளர்ச்சி அடைந்ததில், இவ்வாறு பகிர்ந்து கொடுப்பதற்க்காக அவன் சிந்தித்தது(மூளையை கசக்கி) ஒரு முக்கிய காரணீயாக இருந்தது என்பது ஆய்வு முடிவுகள்(டார்வினின் கட்டுரை), இந்த விசயத்தில் தவறு செய்யாமல் இருக்க கடவுளர்களை உருவாக்கி பகிர்ந்து கொடுப்பது சரிசமமாக எல்லருக்கும் கிடைக்க அந்த குறிப்பிட்ட கடவுள் உதவ வேண்டும் என்று வேண்டுகிறார்கள். இது குறித்த தோ. பரமசிவனின் 'பண்பாட்டு அசைவுகள்' என்னும் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்:


""ஒவ்வொரு கட்டத்திலும் சமூகச் தேவைகள் மாற மாற, தெய்வங்களும் அவற்றின் பண்புகளும் மாறின, உதாரணமாக, வேட்டைச் சமூகத்தில் வேட்டையாடப்பட்ட விலங்குகள் ஊர்ப் பொது மன்றத்தில் கொண்டு வரப்பட்டு அந்த இனக்குழு மக்களால் தமக்குள் சமமாக அல்லது வேலைக்குத் தகுந்த அளவில் பங்கீடு செய்யப்பட்டன, இப்பங்கீடு தெய்வத்தின் பெயரால் செய்யப்பட்டது. பங்கீடு சரியாக இல்லாவிட்டால் தெய்வம் தண்டிக்கும் என்பது இனக்குழு மக்களின் நம்பிக்கை. இப்பங்கீட்டுத் தெய்வத்தைப் பற்றிய தொல்லெச்சம் போன்ற செய்திகள் பழைய இலக்கியங்களிலும் புராணங்களிலும் காணப்படுகின்றன, தமிழிலக்கியத்தில் இத்தெய்வம் பால்வரை தெய்வம் (பால்-பிரிவு) என்று கூறப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் விருப்பத்தின் பேரில்தான் ஒர் ஆணும் பெண்ணும் சந்தித்து உறவு கொள்கின்றனர் என்பது பழந்தமிழர் நம்பிக்கை. ஆரியரின் ரிக் வேதத்தில் 'ரித' என்னும் பங்கீட்டுத் தெய்வம் மறைந்தது பற்றிய புலம்பல்கள் இடம் பெறுகின்றன. கிரேக்கர் இப்பங்கீட்டுத் தெய்வத்தை 'மீர'(more) என்று அழைத்ததாகக் கிரெக்கத்தின் பழைய புராணங்கள் பேசுகின்றன.""


Quote from Darwin:
""In this book I argue that the origins of human intelligence are linked to the acquisition of meat, especially through the cognitive capacities necessary for the strategic sharing of meat with fellow group members. Important aspects of the behavior of some higher primates--hunting and meat sharing and the social and cognitive skills that enable these behaviors--are shared evolved traits with humans and point to the origins of human intelligence.""


டார்வின் அத்தனைக்கும் ஒரு முதலாளித்துவ அறிஞர்.


மனிதன் மந்தை உணர்ச்சி உடையவன், தனி மனித வாதம் என்பது தனியுடைமை சமூகத்தின் உத்திரவாதமில்லா நிலை உருவாக்கிய ஒரு இயல்பை மீறிய உணர்ச்சிதான். அதனால்தான் பாதுகாப்பான உணர்வடையும் போதெல்லாம் மனிதன் தனது பொதுமை நாட்டத்தை வெளிப்படுத்துகிறான்.


ஆக, மீண்டும் அதே விசயம்தான். பிரச்சனை இயற்க்கைக்கு மாறாக போவதா அல்லது இயந்து போவதா என்பது அல்ல. மனித குலத்தின் நலனை அடகு வைத்துச் செல்வதா அல்லது அதை முன்னிறுத்தும் விசயங்களை செய்வதா என்பதுதான்.


இது தவிர்த்து டோ ண்டுவின் வேறு சில வாதங்களையும் செல்வன் பதிந்திருந்தார். அவற்றை அடுத்துப் பார்ப்போம்:


//எதற்கெடுத்தாலும் மான்யம் என்று கூறி மக்களை சோம்பேறிகளாக்கினால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். //


மான்யம் கொடுத்து மக்கள் சோம்பேறறி ஆனதாக் ஒரு வரலாற்று புளுகை டோண்டுவின் வாயிலிருந்து கேட்பது ஒரு ஆச்சரியமான விசயமல்ல. அவர் சோ. ராமசாமியின் சீடரல்லவா. அவரது அந்த கூற்று ஒரு பார்ப்பினிய பார்வையேயன்றி வேறல்ல.


மேலும் மான்யம் கொடுத்து மக்கள் சோம்பேறீயானது உண்மையென்றால் அவர் ஆதாரம் கொடுக்க சொல்லிக் கேட்டு நிர்பந்திக்கப்படுவார். உலகிலேயே விவசாயத்திற்க்கு அதிக மான்யம் கொடுக்கும் நாடு இவர்களின் தந்தையர் பூமியான அமெரிக்கா. அங்கு மான்யம் பெற்றவர்களும், மான்யம் பெற்ற துறையும் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதற்க்கு சாட்சிதான் சமீபத்திய ஜெனிவா WTO பேச்சு தோல்வி.


மேலும் இந்தியாவில் மான்யம் பெரும்(குறைந்த விலை மின்சாரம், இன்கம் டாக்ஸ் சலுகை, இலவச நிலம் etc) MNC க்களை இவர்கள் என்ன சொல்வார்கள். சோம்பேறிகள் என்றா?


இவர்களீன் நோக்கம் மக்கள் வீரோதம் மட்டுமே... மக்களுக்கு எது செய்தாலும் தவறு... மன்னர்களுக்கு செய்தால் சரி.


இது பல்லாயிரம் வருடங்களாக உழைக்கும் மக்களை அவமானப்படுத்தி அவனுக்கு தகுதியில்லை, அறிவில்லை என்று திமிராக அறிவித்து அவனது உழைப்பைச் சுரண்டி கொழுத்த பார்ப்பினியத்தின் பார்வைதானெயன்றி வேறல்ல.


இந்த ஏகாதிபத்தியம், பார்ப்பினிய-நிலபிரபுத்துவம் கள்ள உறவுதான் இடஓதுக்கீடு விசயத்திலும் வெலை செய்கிறது.


அசுரன்

****************

Related Article: கம்யுனிச அவதூறு பதில் -1

58 பின்னூட்டங்கள்:

said...

சிறிது தாமதமான எதிர்வினை.

முத்தமிழ் குழமத்தில் விவாதத்தில் ஈடுபட்டிருந்ததால் இந்தப் பக்கம் வரமுடியவில்லை.

said...

அசுரன அவர்களே

மிக அருமையான கட்டுரை. நீங்கள் சொல்லவரும் விசயங்கள் மிக நன்று.

இங்கே வாததிற்காக சில தனி மனிதர்களை குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அதையும் தாண்டி நீங்கள் சொல்லியிருக்கும் விசயங்கள் இங்கே படிக்க வருபர்கள் உணரவேண்டும்.


//முத்தமிழ் குழமத்தில் விவாதத்தில் ஈடுபட்டிருந்ததால் இந்தப் பக்கம் வரமுடியவில்லை. //

அங்கே இருந்துவிட்டால் எப்படி..இங்கேயும் அடிக்கடி பதிவிடுங்கள்.

நன்றி.

said...

டாலர் செல்வனின் பதிவுகளைப்பார்த்தால் ஒருவித திமிருடன் எழுதுவது புரியும். அது சிரிப்பையும் வரவழைக்கும்.

said...

// ஆக மனித நாகரிமடைந்ததன் அடிப்படையே இயற்கையுடன் முரன்பட்டதுதான் //

ஆழ்ந்த கருத்து.

said...

// இயற்கை உணர்வுக்கு மாறனதுதான் குடும்பம் என்ற கட்டமைப்பு. //

சாட்டை அடி..

said...

/*
நியுட்ரல் க்ரவுண்டிலும்கூட அவரது வாதம் ஒரு இட்லி, கெட்டி சட்னிக்கே ஆப்(off) ஆகி விட்டது.
*/
enjoyed the line...good humor :)
/*
எந்த ஒரு விசயத்தையும் அது மனித குலத்துக்கு அனுகூலமா இல்லையா என்ற ஒரு அளவுகோலைக் கொண்டு மதிப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.
*/
I can't agree more. A simple formula for a people leader - like Kennedy or Kamaraj. It's a one line, but if you stick to it when making decisions, it turns around the man kind.

/*
மேலும் இந்தியாவில் மான்யம் பெரும்(குறைந்த விலை மின்சாரம், இன்கம் டாக்ஸ் சலுகை, இலவச நிலம் etc) MNC க்களை இவர்கள் என்ன சொல்வார்கள். சோம்பேறிகள் என்றா?
*/
I guess it would be a genuine topic to write a detailed article in this context, but have to be done without prejudice. hope you can take up this topic.

Thx.

said...

dear mr Asuran, Mr Dondu is my net friend but i used to oppose him then and there recently. he dont have any idea about historical communism or scientific communism or on engles. what they know is russia is over! so communism failed! i dont consider his writings as serious stuff. loved your explainations in tamil.. though i read in english. good work ! will comeback often!

said...

பள்ளிக்கூட பாடபுத்தகங்களின் தளத்தில் எழுதும் டாலர் செல்வனை ஏன் அடிக்கடி இழுக்கிறீர்கள்?

said...
This comment has been removed by a blog administrator.
said...

ஒரு வரி நீக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

அசுரன்

*************

பெண்களுக்கு டோண்டு அவர்களின் சில அருமையான ஆலோசனைகள்:

* தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை.

*பெண்களை அவர்கள் விருப்பம்போல எப்போது வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் சுயமாக உடலுறவு கொள்ள அனுமதிக்க வேண்டும்.

* உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?அடுத்த பதிவில் பார்ப்போம்.

* இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பின் விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

* குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக் கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

* ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

* ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.

*சிறு குழந்தைகளுக்கும் காம ஆசை பீறிட்டுக் கிளம்பியதால்தான் பால்ய விவாகங்கள் தோன்றின.

கூறினால் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

Doondu

said...

நல்ல பதிவு அசுரன்

said...

//இந்த உடலுறுவு அல்லது இனப்பெருக்க உறவு விசயத்தில் மனிதனின் இயற்கையான உணர்வு எதிர் பாலினம் யாராயிருந்தாலும் உறவு கொள்வது. நாம் கூட தெருக்களில் பார்க்கலாம். நேற்றுவரை பால் கொடுத்த தாய் பன்றியை கொஞ்சம் வயதுக்கு வந்தவுடன் விடலைப் பன்றிகள் உறவுக்கு கூப்பிடுவதை. இந்த இயற்கை உணர்வுக்கு மாறனதுதான் குடும்பம் என்ற கட்டமைப்பு. சமூகம் என்பது எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும் விசயம் ஆனால் குடும்பம் எனும் நாகரிக அடையாளம் மனிதனுக்கு மட்டுமே உரிய விசயம். அது மனிதனின் ஆரம்ப கால உணர்வுக்கு மாறான, இயற்கை உணார்வுக்கு மாறான விசயம். //

தெளிவான விளக்கம் !
அசுரனுக்கு ஒரு + குத்து !
:)

said...

Dondu is not living in present wold. Er ist ein arschloch. er isi ein Hund.

said...

சிவபாலன்,

தங்களது கருத்துக்களுக்கு நன்றி,

//இங்கே வாததிற்காக சில தனி மனிதர்களை குறிப்பிட்டுள்ளீர்கள். //

என்னசெய்ய, ஜனரஞ்சகமாகவும் எழுத வேண்டியுள்ளது, விறுவிறுப்பாகவும் எழுத வேண்டியுள்ளது, ஆழமான கருத்துக்களையும் சொல்ல வேண்டியுள்ளது, கிசு, கிசு பிரியர்களின் கவனத்தையும் ஈர்க்க வேண்டிடுயுள்ளது, இது போன்ற சில விசயங்களை சாக்காக கொண்டு நல்ல கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இப்படி இல்லாமல் சிறப்பாக எழுதும் ஆட்கள் நிறையவே இருக்கிறார்கள்.

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். என்னுடைய சட்டியில் இது போன்ற தரம் குறைந்த எழுத்து நடையில்-கட்டுரை அமைப்பில், தரமான விசயங்களை பேசுவதுதான் தற்போதைக்கு முடிகிறது.

தொடர்ந்து எழுதி தரத்தை முன்னேற்றுவோம்.
********

சலைக்காமல் பின்னூட்டமிட்டு ஆதரிக்கும் சிவபாலனுக்கு ஒரு சிறப்பு நன்றீ... ஹி... ஹி.... :-))

நன்றி,
அசுரன்

said...

டோண்டுவை எல்லாம் ஒரு மனிதன் என்று மதித்து தனி பதிவு போட்டு உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். அந்த இழிப்பிறவி பாப்பார ஜாதியை இணையத்தில் வளர்ப்பதற்காகவே பொதுவுடைமையை எதிர்த்து இஸ்ரேலிய பார்ப்பான்களுக்கும், அமெரிக்க பார்ப்பான்களுக்கும் கொட்டை தாங்குகிறான்

ராகவன்
போலியார் நற்பணி இயக்கம்
நங்கநல்லூர் கிளை
தொலைபேசி : +919884012948

said...

அனானி,
//டாலர் செல்வனின் பதிவுகளைப்பார்த்தால் ஒருவித திமிருடன் எழுதுவது புரியும். அது சிரிப்பையும் வரவழைக்கும். //

தங்களது வருகைக்கு நன்றி, கருத்துக்களுக்கு நன்றி
அசுரன்

*****************

விரிவாக பின்னூட்டமிட்ட அனானி,

////
/*
எந்த ஒரு விசயத்தையும் அது மனித குலத்துக்கு அனுகூலமா இல்லையா என்ற ஒரு அளவுகோலைக் கொண்டு மதிப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.
*/
I can't agree more. A simple formula for a people leader - like Kennedy or Kamaraj. It's a one line, but if you stick to it when making decisions, it turns around the man kind.
////

நீங்கள் சொல்லுவது சரிதான். இது வரை இந்த உலகில் நடந்த அனைத்து மக்கள் விரோத கோடூரங்களும் மேற்சொன்ன ஒரு சிங்கிள் லைனை வைத்துதான் நடந்துள்ளன. ஏன் இப்பொழுது அமெரிக்க பயங்கரவாதமும் கூட அப்படித்தான். இங்கு அந்த வரிகளை எளிமையாக படிப்பவர்கள் உள்வாங்க வசதியாக இருக்குமே என்று கொடுத்தேன்.




////
/*
மேலும் இந்தியாவில் மான்யம் பெரும்(குறைந்த விலை மின்சாரம், இன்கம் டாக்ஸ் சலுகை, இலவச நிலம் etc) MNC க்களை இவர்கள் என்ன சொல்வார்கள். சோம்பேறிகள் என்றா?
*/
I guess it would be a genuine topic to write a detailed article in this context, but have to be done without prejudice. hope you can take up this topic.
////

என் மீது நம்பிக்கை வைத்தமைக்கு மிக்க நன்றி. இது குறித்து ஒரே தவனையில் எழுதினால் வலைப்பூ மக்களால் செரிக்க இயலாது என்பது எனது அனுபவம்.

அதனால் தனித் தனியாக சிறிது சிறிதாக பேசலாம். குறீப்பாக தற்பொழுது SEZ யில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் அதி பயங்கரமான மிக கடுமையான அதிர்ச்சி தரதக்கதாக உள்ளது.

அதாவது பிரிட்டிஸ்க்காரன் முதலில் இந்தியாவுக்கு வந்த பொழுது இங்கிருந்த மன்னர்கள் என்ன செய்தார்களோ அதனையொத்த சலுகைகள், ஒரு மாவட்டத்தின் அளவிலான நிலப்பரப்பு இந்தியாவுக்குள்ளேயே அன்னிய தேசமாக தாரை வார்க்கப்பட்டுள்ள அபாயம் என்று வளைத்து வளைத்து ஆப்பு செருகும் விதமாக உள்ளது.

எல்லாம் சரியாக நடந்தால் விரைவில் அந்த விசயத்தை வைத்து ஒரு கட்டுரை எழுதும் எண்ணம் உள்ளது.

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்,
அசுரன்.

*****************

osai chella
////
dear mr Asuran, Mr Dondu is my net friend but i used to oppose him then and there recently. he dont have any idea about historical communism or scientific communism or on engles. what they know is russia is over! so communism failed! i dont consider his writings as serious stuff. loved your explainations in tamil.. though i read in english. good work ! will comeback often!
////

தங்களது வருகைக்கு நன்றி,
அவரது எழுத்துக்கள் ஒரு இட்லி கெட்டி சட்னிக்கே ஆப் என்பது தங்களுக்கும் தெரியும் என்பது மகிழ்ச்சியளீக்கிறது.

இது போன்ற அவர்களின் எழுத்துக்கள் நமது தரப்பை விலாவாரியாக எடுத்து வைக்க வாய்ப்பளீக்கின்றன.

எனது மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்து சொல்லுங்கள்.

நன்றி,
அசுரன்.

*********************
அனானி,

////
பள்ளிக்கூட பாடபுத்தகங்களின் தளத்தில் எழுதும் டாலர் செல்வனை ஏன் அடிக்கடி இழுக்கிறீர்கள்?
////

அவரது எழுத்துக்களை படிப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவு இருக்கும் பொழுது அதிலுள்ள பிற்போக்கு, மக்கள் விரோத தன்மைகளை தொடர்ந்து நாமும் விமர்சிக்க வேண்டியுள்ளது.

"வெள்ளத்தனையது மலர் நீட்டம்...."

அது போலத்தான்... நாம் யாரிடம் பேசுகிறோமோ அவர்களின் புரிதல் மட்டத்திற்க்கு ஏற்ப்பதான் அனுகுமுறை இருக்க வேண்டும்.... சரிதானே?...

தங்களது கருத்துக்களுக்கு நன்றி,
அசுரன்.

said...

//அவரது எழுத்துக்களை படிப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவு இருக்கும் பொழுது அதிலுள்ள பிற்போக்கு, //

அவரே + குத்து போட்டுக்கறாராமே? அதைப்பற்றி ஏதாவது சொல்லக்கூடாதா?

said...

அசுரன்,

சரியான சமயத்தில் வந்த மிகச்சரியான பதிவு. அவரின் அந்த பதிவை வாசித்த போது அதில் உள்ள அயோக்யத்தனம் தெரிந்தது ஆனால் எப்படி எதிர் வாதம் செய்வதென்று தெரியவில்லை. உங்களின் இந்த பதிவு மிகச்சரியான ஒரு பதில்.

இதற்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி -

கம்யூனிச இயக்கம்/பொது உடைமை கருத்துக்கள் சமுதாயத்தில் ஒரு சிலரால் மட்டும் புரிந்து கொள்ளப் பட்டு அந்த சிறு குழுவினரால் மட்டும் நடைமுறைப் படுத்தப் படுவதால் தான் தோல்வி அடைகிறது என்று நினைக்கிறேன். இது சரியா?

said...

அசுரரே,

மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை கம்யுனிசம் மறுக்கிறது என்பதுதான் டோண்டு சொல்லும் கம்யுனிசத்தின் இயற்கை மறுப்பு போக்கு என்றால்,

இல்லை. மதிப்பிற்குரிய டோண்டு அவர்கள் அப்படி சொல்லவில்லை.

பொதுவாக ஒருவர் சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி அதை எதிர்ப்பது எளிதான விஷயம். பல ஸமயங்களில் இது நமது ப்ரிஜுடைஸ்களினால் ஏற்பட்டுவிடுகின்றது.

டோண்டு அவர்கள் சொன்னது மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை, அவர்களிடம் "வித்யாஸங்கள்" உண்டு என்பதே. தாங்கள் குறிப்பிட்டதுபோல "ஏற்றத்தாழ்வுகள்" கொண்டவர்கள் மனிதர் என்று அவர் கூறவில்லை.

இன்னும் கோட்பாடக சொன்னால் மனித சமூகத்தின் வளர்ச்சியின் ரகசியமே அவன் இயற்கையுடன் முரன்பட்டு தன்னை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதில்தான் உள்ளது.

இதே போன்ற ஒரு கருத்தை விவேகானந்தரும் கூறியுள்ளார். என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. என் கருத்தின்படி மனிதனின் வளர்ச்சி இயற்கையை எதிர்த்ததால் இல்லை, புரிந்துகொண்டதாலேயே நிகழ்ந்தது. இயற்கையின் கோட்பாடுகளை எங்கனம் உபயோகித்தால் நமது விருப்பம் நிறைவேறும் என்பதை தெரிந்துகொண்டதால் நிகழ்கின்றது மனித முயற்சி.

இதை முழுமையாகப் புரியாமல் இருப்பவர்களால் ஏற்படுவதுதான் சுற்றுப்புறச் சூழல் கேடுகளும், கம்யூனிஸ, குழுவெறி தத்துவங்களும்.

இந்த உடலுறுவு அல்லது இனப்பெருக்க உறவு விசயத்தில் மனிதனின் இயற்கையான உணர்வு எதிர் பாலினம் யாராயிருந்தாலும் உறவு கொள்வது.

இல்லை. எல்லா உயிர்னங்களும் இனப்பெருக்கத்திற்கு முன் தன் துணையை தேர்வு செய்கின்றன. மனிதர்களும் அவ்வாறே - நாகரீகம் தோன்றுவதற்கு முன்னும், பின்னும்.

எந்த எதிர்பாலினரோடும் உடலுறவு கொள்ளத் தூண்டுவது இயற்கையில் தம் துணையைத் தேர்வு செய்யும் சூழல் இல்லாதபோதோ, அல்லது எதிர்பாலினரோடு உறவு கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக அந்த உயிரினம் நினைக்கும்போதும் ஏற்படுவது. இவை விதிவிலக்குகள்.

இந்த இயற்கை உணர்வுக்கு மாறனதுதான் குடும்பம் என்ற கட்டமைப்பு.

இல்லை. இயற்கையில் எல்லா உயிரினங்களிலும் குடும்பம் என்னும் ஒரு அமைப்பு உள்ளது. யார் யார் குடும்பத்தவர்கள் என்பதும், எவ்வளவு காலம் குடும்பம் நீடிக்கவேண்டும் என்பதில் வித்யாஸங்கள் இருக்கலாம்.

இன்றைக்கு தனியுடமை சமூகத்தின் கடைசி கட்டத்தில் வந்து நிற்கிறது.

தனியுடைமையின் முக்கிய ஆதாரத் தூணே தங்களால் "குடும்பம் எனும் ஒரு அதி உன்னதமான ஒரு மனித சமூக அமைப்பு" என்று அழைக்கப்படும் அமைப்புத்தான்.

அதாவது ஒரு கம்யுனிச சமூகத்தில் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பது ஒரு பொய்.

அப்போ, லெனின், ஸ்டாலின், மாவோ, ப்ரசன்டாவிற்கு கிடைக்கும் அதே மரியாதையும், சுகபோக வஸதிகளும், பவரும், அடிமட்டத்தில் கம்யூனிஸ சித்தாந்தங்களில் மயங்கியிருக்கும் நேர்மையான தோழர்களுக்கும் கிடைக்கும் என்கிறீர்கள். எல்லாருமே தொண்டர்கள்தான். தலைவர்கள் யாருமே கிடையாது. அல்லது எல்லாரும் தலைவர்கள்தான். தொண்டர்கள் யாரும் கிடையாது. நம்பறோம். நம்பறோம்.

அறிவு விசய்த்தில், அனைவருக்கும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால், வள்ரும், வாழும் சூழ் நிலைக்கேற்ப்ப எந்த துறையில் வேண்டுமானாலும் கற்று எல்லாருமே தான் சம்பந்தப்பட்ட துறையில் சூப்பர் ஜினியஸாகத்தான் இருப்பார்கள்.

சூப்பர் ஜீனியஸாகமாற இப்படி ஒருவழியா? நீங்கள் ஜீனியஸ்தான்.

அவனவன் பிலீயன் கணக்கில் ரூபிள்களையும், டாலர்களையும் செலவழித்து எத்தனையோ ஆராய்ச்சிகளை இதற்காக செய்துகொண்டிருக்கிறான். இந்த மாதிரி கஷ்டமே இல்லாமல் ஒருவரை ஜீனியஸாக்கும் வித்தையை ஏந்தான் இந்த முதலாலித்துவ அரசுக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனவோ.

இதுவும் சிறிது காலம் எடுத்து சில, பல தலைமுறைகள் கடந்த பிற்பாடு ஏற்ப்படும் ஒரு நிலை.

குறைந்தது ஒரு ரெண்டாயிரம், அல்லது மூவாயிரம் ஆண்டுகள்?

ஏனென்றால், நூற்றுக்கணக்கிற்குக்கூட வராத நாடுகள் ஒன்று பிச்சை எடுக்கின்றன, இல்லாவிட்டால் கேபிடலிஸத்திற்கு திரும்பிவிட்டன. அதனால்தான் இந்த ஸந்தேகம்.

இது தவறான ஒரு கூற்று. மனித குல வரலாற்றை எடுத்துக் கொண்டால், பொது வுடைமைதான் அவனது இயல்பான உணர்வாக இருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் இருக்கும் மனிதர்கள்தானே? இருக்கும். இருக்கும்.

இங்கே குழந்தைகூட தன் பொம்மையை தன் உடன் பிறந்த பாப்பாக்களுக்கு தர மறுக்கிறது.

வேட்டையாடி உணவு தேடும் பண்டைய புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் மனிதன் குலமாக, கூட்டமாக வாழ்ந்தான். அங்கு ஒவ்வொரு மனிதனும் தான் சேகரித்து வந்த உணவை பொதுவில் வைத்துத்தான் பகிர்ந்தனர்.

ஆனால் அந்த கூட்டத்தில் பலமுள்ளவனுக்குத்தான் அதிகப் பங்கு. அடுத்தது புத்திசாலிகளுக்கு. மற்றதெல்லாம்தான் தோழர்களுக்கு.

பங்கீடு சரியாக இல்லாவிட்டால் தெய்வம் தண்டிக்கும் என்பது இனக்குழு மக்களின் நம்பிக்கை.

பூசாரிகள் உருவானது இப்படித்தான். அவர்களுக்கு மக்கள் பயப்பட ஆரம்பித்ததும் இப்படித்தான்.

மனிதன் மந்தை உணர்ச்சி உடையவன்

பூமியில் வாழும் மனிதர்களிடம் இரண்டு கூறுகளும் (தனிமனித மற்றும் குழு மனப்பன்மை) உண்டு. ஒன்றைமட்டும் ஆதரிப்பது சமன நிலையில் ஏற்படாது. அது தீமையே விளைவாக்கும்.

அதனால்தான் பாதுகாப்பான உணர்வடையும் போதெல்லாம் மனிதன் தனது பொதுமை நாட்டத்தை வெளிப்படுத்துகிறான்.

மனித வாழ்க்கையில் எவ்வப்போதாவது ஏற்படும் உணர்வு இது. வறுமையின் துன்பம் அறியதவன் பிச்சை போடுவதில்லை. ஏழைக்கு இரங்குவதில்லை.

அமெரிக்கா. அங்கு மான்யம் பெற்றவர்களும், மான்யம் பெற்ற துறையும் எந்த நிலைமையில் இருக்கிறது

அதைத்தானே அவரும் சொல்லுகிறார்?

said...

அப்படியா அசுரரே. ஆனாலும் நீர் என்னதான் அழுது புரண்டாலும் கம்யூனிசம் திரும்பப் போவதில்லை. உம்முடைய திருப்திக்கு வேண்டுமானால் உளறிக் கொண்டிரும். சோவியத் யூனியன் கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகளே உலக வரை படத்திலிருந்து மறைந்தன என்றால் கூட அதுவும் முதலாளித்துவ கொள்கைகளால்தான் என்று ஜல்லியடித்துக் கொண்டிருங்கள். நாங்கள் அவ்வப்போது பொழுது போகவில்லை என்றால் வந்து படித்து, சிரித்து விட்டுப் போகிறோம். மற்றப்படி நாங்கள் பாட்டுக்கு எங்கள் சுயநலனைப் பார்த்துக் கொண்டு போகிறோம்.

சைனா இப்போது போடு போடு என்று போடுவது கூட முதலாளித்துவத்தை ஏற்றதால் மட்டுமே என்பதைக் கூட உம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.

என்னவோ விஞ்ஞான கம்யூனிசம், கம்யூனிச சரித்திரம் என்றெல்லாம் பெரிய வார்த்தைகளை உபயோகித்து உளுத்து, அழிந்து போன ஒரு தத்துவத்தை தூக்கிப் பிடிக்கிறார் என் இணைய நண்பர் செல்லா அவர்கள். அவருக்கும் கூறுவேன். ரஷ்யாவில்தான் கம்யூனிசம் இல்லை, வேறு எங்கு இருக்கிறது அல்லது இருந்தது என்பதைக் கூற இயலுமா?

கைவசம் உருப்படியான சரக்கு இல்லாமல் அசுரன் பார்ப்பனியத்தை வைத்தும் ஜல்லியடிக்கலாம். அந்த வழிக்கும் வருவேன்.

நான், டோண்டு ராகவன் என்னும் பெயருடைய வடகலை ஐயங்கார் கூறுகிறேன். பார்ப்பனன் முன்னேறுவதை உம்மைப் போன்றவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக அதுதான் நடந்து வந்துள்ளது. இனிமேலும் நடக்கும் என்று கூறி,

விடை பெறுவது,
டோண்டு ராகவையங்கார்
பின் குறிப்பு: அபாயகரமான அதர் ஆப்ஷனை நீங்கள் வைத்துக் கொண்டிருப்பதாலும், அனானி ரூபத்தில் போலியார் வந்து உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டிருப்பதை பார்த்திருப்பதாலும், எனது இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய கம்யூனிசம் பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இஅடப்படும் என்பதை அறியவும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post_115807685840498511.html

said...

வணக்கத்துடன்,

////
இந்தியாவில் சாதிய கொடுமையை மறைக்கும் மேல் பூச்சாக கம்யூனிசத்தை உபயோகிப்பதும், அதை அப்படியே தொடர வேண்டியே, சாதிய காப்பாளர்கள் கம்யூனிசத்தை எதிர்ப்பதாக நடிப்பதாகவும் தான் நான் பார்க்கிறேன்.

சாதி பேதத்தை மறுப்பதில் இந்திய கம்யூனிஸ்டுகளுடன், ஆதிக்க சாதியினரும் ஒன்றுபடுவதை மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

(பீ தின்ன வைக்கப்பட்டவனை கூட கம்யூனிஸ்டுகள் உழைக்கும் வர்க்கம் என்றழைப்பதை என்னவென்று சொல்வது?)

என்னளவில், 'இந்திய கம்யூனிஸம்' ஒழிவதே/ஓய்வதே, 'வர்க்க' பூச்சுக்களை களைந்து, சாதி பிணத்தின் நாற்றம் எல்லோரும் அறிய வழி உண்டாகும். அதன் பின் தான் சாதி பிணத்தை எரிக்க வேண்டிய ஒரு பொது கருத்தை உருவாக்கவேனும் இயலும்.

ஆக அவர்களை மோத விடுங்கள். இரண்டு 'சமூக நீதி விரோதிகளும்' மோதி அழியட்டும். பின்னர் சமூக நீதி தானே வாழும்.
////


ஆம், அந்த தவறை சமீபகாலம் வரை செய்து கொண்டிருந்தார்கள். தற்பொழுதும் கூட ஒரு சரியான நிலைப்பாட்டிற்க்கு வரமால் தவறு செய்கிறார்கள். காந்தியை அம்பலப்படுத்துவதில் தயங்கிய பெருந் தலைவர் ஜீவா, பெரியாரை காட்டு காட்டு என்று காட்டியதன் இயங்கியல் இதுதான்.

இங்கு இந்திய கம்யுனிஸ்டுகள் என்று வோட்டுக் கட்சி கம்யுனிஸ்டுகளை சொல்லுவதாக நினைக்கிறேன்.

ஏனெனில் எனது மனதிற்கினிய ம.க.இ.க அமைப்பினர், மற்ற எந்த ஒரு பார்ப்பினிய எதிர்ப்பு அமைப்பினரைவிடவும் ஒரு படி முன்னால் நின்று கறாராக கருணையின்றி பார்ப்பினியத்தை சாதி வெறியை எதிர்க்கின்றனர். அதற்க்காக சமீப காலங்களில் கூட பல இடங்களில் சாதி வெறியர்களால் கடுமையான தாக்குதலுக்கு ஆளானர்கள். அவர்களும் கம்யுனிஸ்டுகள்தான்.

இந்திய வோட்டுக் கம்யுநிஸ்டுகள் இந்திய சமூக அமைப்பை வரையறுப்பதிலேயே தவறிழைத்தனர். அதன் பயன் சாதியை வரையறுப்பதிலும், அனுகுவதிலும் தவறிழைத்தனர். அதன் பலன், இன்றுவரை தலித்துகள் கம்யுனிஸ்டு கட்சியில் ஐக்கியமாவதில் காட்டும் தயக்கம். இவர்களின் போலி அல்லது தவறான கம்யுனிச தத்துவம் தோல்வியடைவது என்ன, அல்ரெடி அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

வணக்கத்துடன், தங்களுடைய பெரும்பாலான கருத்துக்களுடன் ஒத்துப் போனாலும், ஒரு விசயம் நெருடுகிறது. கம்யுனிசம் மொத்தமும் சாதி வெறிக்கு ஆதரவாக இருப்பது போல நீங்கள் கருதுவதாக தெரிகிறது. அது தவறான அபிப்ராயம்.

இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பினிய-உயர்சாதி வெறி எதிர்ப்பு போராட்டமும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமும் இரண்டு கண்கள் போன்றவை இரண்டில் ஒன்றை விட்டாலும் தவறான இடத்தில் கால் வைத்து விடுவோம்.

தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி, எனது பதில் குறித்து தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தவும்.

அசுரன்.

said...

மூயுஸ்,

நகைச்சுவையாக பின்னூட்டமிடுவது என்று தீர்மாணீத்து இடுகிறீர்களா?

எனது கட்டுரை மீண்டும் ஒருமுறை ஆழமாக, எந்த விசயத்தை எப்படி JUSTIFY செய்கிறேன். அப்படி உறுதிப்படுத்தியதை எந்த அளவுக்கு எனது வாதத்தை வலுப்படுத்த பயன்படுத்துகிறேன் என்று ஒப்பிட்டுப் பார்க்கவும்.

மற்றபடி கட்டுரையின் சில வரிகளை பிச்சுப் போட்டு பதில் சொன்னால் ஏதோ நீங்கள் கூறியது சரி என்பதுபோல உணர்வு வரத்தான் செய்யும். அப்படி யாருக்கேனும் வந்திருந்தால் அவர்களை எனது கட்டுரையை படிக்கச் சொல்லி சிபாரிசு செய்கிறேன்.

நன்றி,
அசுரன்.

said...

மூயுஸ்,

நகைச்சுவையாக பின்னூட்டமிடுவது என்று தீர்மாணீத்து இடுகிறீர்களா?

எனது கட்டுரை மீண்டும் ஒருமுறை ஆழமாக, எந்த விசயத்தை எப்படி JUSTIFY செய்கிறேன். அப்படி உறுதிப்படுத்தியதை எந்த அளவுக்கு எனது வாதத்தை வலுப்படுத்த பயன்படுத்துகிறேன் என்று ஒப்பிட்டுப் பார்க்கவும்.

மற்றபடி கட்டுரையின் சில வரிகளை பிச்சுப் போட்டு பதில் சொன்னால் ஏதோ நீங்கள் கூறியது சரி என்பதுபோல உணர்வு வரத்தான் செய்யும். அப்படி யாருக்கேனும் வந்திருந்தால் அவர்களை எனது கட்டுரையை படிக்கச் சொல்லி சிபாரிசு செய்கிறேன்.

நன்றி,
அசுரன்.

said...

//கம்யூனிச இயக்கம்/பொது உடைமை கருத்துக்கள் சமுதாயத்தில் ஒரு சிலரால் மட்டும் புரிந்து கொள்ளப் பட்டு அந்த சிறு குழுவினரால் மட்டும் நடைமுறைப் படுத்தப் படுவதால் தான் தோல்வி அடைகிறது என்று நினைக்கிறேன். இது சரியா?
///

அருமையான கேள்வி ராஜவனஜ்,

ஆனால் இது ஒரு வகையில் உண்மை, இன்னொரு வகையில் தவறான கருத்து.

அதாவது, கம்யுனிசம் என்பது எல்லாருக்கும் எல்லாம். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு மக்கள் அளப்பரிய பங்களிப்பை, உழைப்பை கொடுப்பது என்று வரும்ப் பொழுது தங்களது அந்த கேள்வி தவறாகிறது. அதாவது இந்த இடத்தில் பெரும்பாலான மக்கள் கம்யுனிசத்தை புரிந்து கொண்டு நடக்கிறார்கள்.

ஆனால், கம்யுனிசம் என்பதின் மற்றொரு அம்சம், அரசு நிர்வாகத்தில் மக்களின் நேரடி பங்களிப்பு. இந்த விசய்த்தில் மக்கள் கம்யுனிசத்தை புரிந்து கொள்வதில்லை. இந்த இடத்தில் தங்கள்து கேள்வி சரியே.

இதற்க்கு காரணம் முந்தைய அடக்குமுறை சமூகத்திலிருந்து பெற்ற பண்பாடு. அதாவது அரசு நிர்வாகம் என்பது சாதரண மனிதர்களுக்கு தேவையில்லாத, புரியாத விசயம் அதில் நாம் தலையிடக் கூடாது எனும் பிற்போக்கு பண்பாடு.

இதை களைவதற்க்குத்தான் லெனினும், மாவோவும், ஸ்டாலினும் பண்பாட்டு புரட்சிக்கு அறைக் கூவல் விடுகிறார்கள்.

இதில் மாவோ வெற்றிகரமான(சில எதிர் புரட்சி நடவடிக்கைகளின் இடையூறுகளுடன்) தலைவராக இருக்கீறார். ஸ்டாலின் தவறிழைக்கிறார். இது புரணமடையும்(பண்பாட்டு புரட்சி) முன்பே கம்யுனிச தலைமை முதலாளித்துவ சக்திகளுக்கு கைமாறுகிறது, அந்த தேசங்கள் இன்றுள்ள நிலைமை போல அனைத்து முதலாளித்துவ கேடுகளும் நிரம்பி காணப்படுகின்றன(சீனாவும் இன்று அத்தனை பிற்போக்கு தனத்தின் புகலிடமாக இருக்கிறது. அமெரிக்க அளவுக்கு இல்லையென்றால் அதற்க்கு காரணம் கம்யுனிச பாரம்பரியம் இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பதுதான்).

தங்களது கருத்துக்களுக்கு நன்றி. எனது மற்ற கட்டுரைகளை படித்து கருத்திடவும்,

அசுரன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

என்ன இது அநியாயம் சரவணன்?

said...

//நல்ல பதிவு அசுரன் //
பொன்ஸ்,

தங்கள வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி,
அசுரன்
****************
//தெளிவான விளக்கம் !
அசுரனுக்கு ஒரு + குத்து !
:) //

கோவி.கண்ணனின் வருகைக்கும், அந்த + குத்துக்கும் நன்றி :-))

அசுரன்

**************

//Dondu is not living in present wold. Er ist ein arschloch. er isi ein Hund. //

டோ ண்டு இந்த உலகில் வாழவில்லை என்பதை மிகச் சரியாக கண்டுபிடித்த அனானி அவர்களின் வருகைக்கு நன்றி.
அவர் எந்த உலகில் வாழ்கிறார் என்பதற்க்கு நீங்கள் கொடுத்துள்ள க்ளு பிரியவில்லை ;-))

அசுரன்
*******************

//உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். //

போலியார் நற்பணி இயக்கம்,

உண்மையில் டோ ண்டுவை சாக்கிட்டு பொதுவாக எல்லார் மனதிலும் இருக்கும் சில தவறான புரிதல்களை சரி செய்யவும். பார்ப்பினியத்தைப் பற்றிய இன்னுமொரு புரிதலை ஏற்ப்படுத்துவுமே இந்த வாய்ப்பை பய்ன்படுத்திக் கொண்டேன்.

தங்களது அக்கறையான விமர்சனத்திற்க்கு மிக்க நன்றி, தங்கள் வருகைக்கு நன்றி,
அசுரன்

****************

//அவரே + குத்து பேபூட்டுக்கறாராமே? அதைப்பற்றி ஏதாவது செபூல்லக்கூடாதா? //

செல்வன் சொந்தமாக குத்துவதாக் குற்றச்சாட்டு வைக்கும் அனானியின் வருகைக்கு நன்றி,

இது உறுதிப்படுத்தப்படாத தகவல் மற்றும் இது போன்ற விசயத்தை அம்பலப்படுத்தி யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை...

அசுரன்

****************
டோ ண்டு ராகவனின் வருகைக்கு நன்றி,

*************

hariயின் வருகைக்கு நன்றி,


அசுரன்.

said...

//என்ன இது அநியாயம் சரவணன்?//
ஹா.... ஹா...

முயுஸ்,
அவர்களே....

தாங்கள் எழுப்பிய கேள்விகளில் ஒன்று மட்டும் சிறிய விளக்கம் தேவைப்படுவதாக இருக்கீறது. அதற்க்கு பதில் கீழே கொடுக்கிறேன்.

ரஸ்யாவில், சீனாவில் இருந்தவை சோசலிச சமூகங்கள், கம்யுனிச சமூகங்கள் அல்ல.....

மற்றவை எல்லாம் கட்டுரையின் contextயை கணக்கில் எடுக்காமல், கட்டுரை உள்வாங்காமல். ஏற்கனவே சொன்னபடி, சில தனிப்பட்ட பகுதிகளை பிரித்து போடப்பட்டதாக உள்ளது. கட்டுரையிலேயே தங்களது கூற்று அனைத்துக்கும் பதில் உள்ளது.

நன்றி,
அசுரன்.

said...

முயுஸ்,
அவர்களே....

உண்மையிலேயே அக்கறையுடன் ஒரு suggestion. வாய்ப்பிருந்தால், 'இயக்கவியல் பொருள்முதல்வாதம்' என்றால் என்ன என்று படித்துப் பாருங்களேன்.

அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை.... உலகம் முழுவதும் இன்றும் பலரை ஈர்க்கும் அளவு அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்க்காவது அதை படியுங்களேன்....

'அவதாரம்' படத்தில்( நாசர் கூத்துக் கலைஞராக நடித்த படம்) ஒரு பாடல் வரும்.

'தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில'....

அந்த பாடல் வந்த நேரம்தான் எனது சொந்த அனுபவங்களின் ஊடாக இயக்கவியலை பொருள்முதல்வாதத்தை அனுபவப்பூர்வமாக உணரத் தொடங்கியிருந்த நேரம். இதற்க்கு பல வருடங்கள் பிறகுதான் இந்த தத்துவத்தின் பெயர், அதன் அர்த்தம் எல்லாம் அறிமுகமானது. அந்த சமயத்தில் எனது சொந்த அனுபவங்களை பொருத்திப் பார்த்துக் கொண்டேன். இந்த பாடலிலும் பொருள்முதல்வாத விசயம் இருப்பதைப் பார்த்தேன்.


பிறகு சில வருடங்கள் கழித்து கம்யுனிசம் அறிமுகமாகி ஏற்கனவே உணர்வுப் பூர்வமாக ஒரு ஓரளவு இயக்கவியல் பொருள்முதல்வாதம் அறிமுகமான நிலை இருந்ததால், சுலபமாக அந்த தத்துவத்தை உள்வாங்கிக் கொண்டேன்.

உண்மையிலேயே அது ஒரு நல்ல தத்துவம்...

அசுரன்

said...

Asuran, It looks like u are running away from answering Muse's questions. If you are not able to answer, accept your defeat. You are loosing ur good image.

Also, I have a genuine question? will u be publishing doondu's comments if he had a similar blog-page as he has for dondu?
YOu are again putting ur image down.

Be true to yourself...

said...

தட்டிக்கேட்பவன்,


டோ ண்டுவோ அது யாரோ அவரது கருத்துக்களை பார்க்கிறேன் அவ்வளவுதான். அதனால்தான் doondu என்ற பெயரில் போட்டவரின் கருத்துக்களில் வக்கிரமான பகுதிகளை களைந்து விட்டுப் போடுகிறேன். இதில் தவறு எதுவும் இல்லை.

இந்த விசயத்தில் எந்த விவாதமும் செய்வது பதிவின் நோக்கத்தை திசை திருப்புவதாகும். அப்புறம் ஒரு முக்கியமான் விசயம். என்னைப் பற்றி உயர்வான மதிப்பு, தாழ்வான மதிப்பு என்று உருவாவது குறித்து எனக்கு எந்தவொரு கருத்தும் கிடையாது.

நான் இங்கு பேசும் விசயங்கள் குறித்து அவ்வாறூ உருவாகும் கருத்துக்கள்தான் எனக்கு முக்கியமானவை.

முயுஸின் வாதங்களுக்கு பயந்து ஓடுவதாக தாங்கள் கருதினால் அதற்க்கு நான் ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை. வேண்டுமானல் ஒன்று செய்கிறேன் அவரது கேள்விகளுக்கு பதிலாக மீண்டும் எனது கட்டுரையை காப்பி செய்து போடுகிறேன்.

இந்த விசயத்தில்(முயுஸ்) அவ்ரது கேள்விகள் அனைத்தும் பதில் சொல்லப்பட்டு விட்டதாகவே கருதுகிறேன்.

மற்றபடி true to yourself, true to our self என்று true biscutt விளம்பரம் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது.

உண்மையை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.


***********

எனது நலம் விரும்பிகள் யாரேனும் இது விசயத்தில் முயுஸின் கேள்விக்கு பதில் தேவைப்படுகிறதா இல்லையா என்பதை குறீப்பிட்டால் வசதியாக இருக்கும்.


அசுரன்.

said...

நண்பா அசுரா! டோண்டுவுக்கெல்லாம் ப‌தில் எழுதுவ‌தைவிட நேர‌த்தை உப‌யோக‌மாக செல‌விட‌ உம‌க்குத் தெரியாதா? :(

said...

*//
நண்பா அசுரா! டோண்டுவுக்கெல்லாம் ப‌தில் எழுதுவ‌தைவிட நேர‌த்தை உப‌யோக‌மாக செல‌விட‌ உம‌க்குத் தெரியாதா? :(
//*

நண்பரே,

நீங்கள் யாரென்று தெரியவில்லை. ஆயினும் அக்கறையுடன் சொல்கிறேர்கள். இதை விமர்சனத்தை போலி நற்பணி மன்றத்திலிருந்தும் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு பின்வரும் பதில் சொல்லியிருந்தேன்:


உண்மையில் டோ ண்டுவை சாக்கிட்டு பொதுவாக எல்லார் மனதிலும் இருக்கும் சில தவறான புரிதல்களை சரி செய்யவும். பார்ப்பினியத்தைப் பற்றிய இன்னுமொரு புரிதலை ஏற்ப்படுத்துவுமே இந்த வாய்ப்பை பய்ன்படுத்திக் கொண்டேன்.

தங்களது அக்கறையான விமர்சனத்திற்க்கு மிக்க நன்றி, தங்கள் வருகைக்கு நன்றி,



அசுரன்

said...

Dear Asuran,
Mr Mouli (is that right?) has got some issues with his understanding!

1) Man has understood nature!! many animals understood nature better than us.. say animals can feel or even forewarn earthquaks. But man has invented basic laws of nature like Gravity but he used it against the nature. We are wearing cloths against the nature's sunlight, weather! That is why we have lost our hair! Better he must read basics like evolution theory and also historical communism.

2) Regarding sex: he talked about family of some animals. again primitive understanding about LAW of Natural Selection. Man is a highly evolved creature now. he chooses his mate by so many creteria than animal INSTINCTS. so better dont answer him now, he wont understand! You can suggest him Engels writing on how family, wealth etc have evolved from the primitive communism. may be they need the basic lessons of how fire changed the way of our life and social relationships. all the best for your writings. those who can not understand... have to catch up. so you continue your forward journey.

said...

Dear Asuran,
Mr Mouli (is that right?) has got some issues with his understanding!

1) Man has understood nature!! many animals understood nature better than us.. say animals can feel or even forewarn earthquaks. But man has invented basic laws of nature like Gravity but he used it against the nature. We are wearing cloths against the nature's sunlight, weather! That is why we have lost our hair! Better he must read basics like evolution theory and also historical communism.

2) Regarding sex: he talked about family of some animals. again primitive understanding about LAW of Natural Selection. Man is a highly evolved creature now. he chooses his mate by so many creteria than animal INSTINCTS. so better dont answer him now, he wont understand! You can suggest him Engels writing on how family, wealth etc have evolved from the primitive communism. may be they need the basic lessons of how fire changed the way of our life and social relationships. all the best for your writings. those who can not understand... have to catch up. so you continue your forward journey.

said...

அன்புள்ள செல்லா,

மூயுஸ் என்று வாசிக்க வேண்டும்.

அவர் எனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல விசயங்களை சரியான பார்வையில் புரிந்து கொள்ளாமல் விடை கொடுக்கப்பட்ட கேள்விகளை மீண்டும் போட்டிருக்கிறார். அதனால் பதில் சொல்வதை தவிர்த்து எனது கட்டுரையையே மீண்டும் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்திருக்கிறேன்.

நீங்களும் அதனையே குறிப்பிடுகிறீர்கள்,

மேலும் அடிப்படை விசயங்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது.

ஒரு நல்ல விவாத சூழலை உருவாக்கவே விரும்புகிறேன்.

இதே போன்ற சராசரி புரிதல் மற்றும் ஆளும் வர்க்க கருத்தியலால் தாக்குதலுக்காளனவர்களுக்கும் சேர்த்துதானே இந்த பதிவு எழுதினேன்.

எனவே செல்லா அவர்களின் கருத்திலிருந்து எதிர்மறை புரிதலை எடுத்துக் கொண்டு மூயுஸ்க்கு பதில் அளிப்பது சரியென்று முடிவு செய்கிறேன்.

செல்லா தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி,

எனது மற்ற பதிவுகளையும் படித்து கருத்துச் சொல்லுங்களேன்.

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி,
அசுரன்

said...

ராஜவனஜ் ன் ஒரு பின்னூட்டம் மிஸ் ஆகி விட்டது, அதை நான் மீண்டும் இடுகிறேன்:

**************

அசுரரே!

என் கேள்விகளுக்கு பொருமையாக பதில் அளித்ததற்கு நன்றி. நான் இப்போது தான்(ரொம்ப லேட்டாக) சுயமரியாதை, பகுத்தறிவு, கம்யூனிஸம், பொதுவுடைமை போன்றவற்றைக் கற்கும் மானவன். உங்களைப் போன்றவர்களின் வழிகாட்டுதல் எனக்கு மிக அவசியம்.

டோண்டு ராகவையங்கார்!,

வணக்கமுங்க,
உங்கள் பின்னூட்டத்திலேயே உங்கள் பதட்டம் தெரிகிறது. உங்க கூட்டத்தால அமுக்கி வைக்கப் பட்ட எங்க ஆளுங்க மேல வந்தா உங்க பார்ப்பன பருப்பு வேகாதுன்னு தானே இந்த பதட்டம்? கவலையே படாதீங்க சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு வரும்

said...

***//
This I said:
மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை கம்யுனிசம் மறுக்கிறது என்பதுதான் டய்ண்டு சொல்லும் கம்யுனிசத்தின் இயற்கை மறுப்பு போக்கு என்றால்,


Muse said:
இல்லை. மதிப்பிற்குரிய டய்ண்டு அவர்கள் அப்படி சொல்லவில்லை.

பொதுவாக ஒருவர் சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி அதை எதிர்ப்பது எளிதான விஷயம். பல ஸமயங்களில் இது நமது ப்ரிஜுடைஸ்களினால் ஏற்பட்டுவிடுகின்றது.

டய்ண்டு அவர்கள் சொன்னது மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை, அவர்களிடம் "வித்யாஸங்கள்" உண்டு என்பதே. தாங்கள் குறிப்பிட்டதுபோல "ஏற்றத்தாழ்வுகள்" கொண்டவர்கள் மனிதர் என்று அவர் கூறவில்லை.
//***

My reply:

வித்தியாசங்கள், ஏற்றத்தாழ்வுகள் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று முயுஸ் சொல்லவேண்டும்.

அதே போல வித்தியாசம் என்று டோ ண்டு கூறுவத்ன் மூலம் அவர் எதை ஆதரித்தார், எதை எதிர்த்தார் என்றும் முயுஸ் கூற வேண்டும்.

ஏனெனில் இப்பொழுது டோ ண்டுவின் வார்த்தைகளுக்கு மொழிபெயர்ப்பாளராக அவ்ர் வேலை செய்வது போல தெரிகிறது.




***//
நான் சொன்னது:
இன்னும் கோட்பாடக சொன்னால் மனித சமூகத்தின் வளர்ச்சியின் ரகசியமே அவன் இயற்கையுடன் முரன்பட்டு தன்னை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதில்தான் உள்ளது.


மூயுஸ் சொன்னது:
இதே போன்ற ஒரு கருத்தை விவேகானந்தரும் கூறியுள்ளார். என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. என் கருத்தின்படி மனிதனின் வளர்ச்சி இயற்கையை எதிர்த்ததால் இல்லை, புரிந்துகொண்டதாலேயே நிகழ்ந்தது. இயற்கையின் கோட்பாடுகளை எங்கனம் உபயோகித்தால் நமது விருப்பம் நிறைவேறும் என்பதை தெரிந்துகொண்டதால் நிகழ்கின்றது மனித முயற்சி.

இதை முழுமையாகப் புரியாமல் இருப்பவர்களால் ஏற்படுவதுதான் சுற்றுப்புறச் சூழல் கேடுகளும், கம்யூனிஸ, குழுவெறி தத்துவங்களும்.
//***

இதற்க்கு செல்லா அவர்களின் பதிலே சரியாக இருக்கும்.
செல்லா சொன்னது:
1) Man has understood nature!! many animals understood nature better than us.. say animals can feel or even forewarn earthquaks. But man has invented basic laws of nature like Gravity but he used it against the nature. We are wearing cloths against the nature's sunlight, weather! That is why we have lost our hair! Better he must read basics like evolution theory and also historical communism.

நான் சொல்வது:
முரன்பாட்ட இரு விசயங்களுக்கு இடையேதான் வளர்ச்சி இருக்கும். இயற்கை மீது மனிதன் வினையாற்றுவது. மனிதன் மீது இயற்கை பதிலுக்கு வினையாற்றுவது. அதிலிருந்து பெற்ற பாடத்தின் மூலம் வேறுவிதமாக மனிதன் வினையாற்றுகிறான். இந்த அனுபவம்தான் அவனது அறிவு வளர்ச்சி... இது ஒரு முடிவில்லா வளர்ச்சிப் போக்கில் செல்கிறது(இரண்டில் ஒன்று அழியும் வரை).

இதுதான் இயக்கிவியல் பார்வை. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் மையாமான தத்துவத்தை உட்கிரகிக்க முடிந்தால்(குறைந்த பட்சம் உணர்வுப் பூர்வமாக), இதை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.




***//
நான் சொன்னது:
இந்த உடலுறுவு அல்லது இனப்பெருக்க உறவு விசயத்தில் மனிதனின் இயற்கையான உணர்வு எதிர் பாலினம் யாராயிருந்தாலும் உறவு கொள்வது.


முயுஸ் சொன்னது:
இல்லை. எல்லா உயிர்னங்களும் இனப்பெருக்கத்திற்கு முன் தன் துணையை தேர்வு செய்கின்றன. மனிதர்களும் அவ்வாறே - நாகரீகம் தோன்றுவதற்கு முன்னும், பின்னும்.

எந்த எதிர்பாலினரோடும் உடலுறவு கொள்ளத் தூண்டுவது இயற்கையில் தம் துணையைத் தேர்வு செய்யும் சூழல் இல்லாதபோதோ, அல்லது எதிர்பாலினரோடு உறவு கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக அந்த உயிரினம் நினைக்கும்போதும் ஏற்படுவது. இவை விதிவிலக்குகள்.
//***

இதற்க்கும் செல்லா சொன்ன ஒரு பதில் சரியாக இருக்கும்:
செல்லா சொன்னது:
Regarding sex: he talked about family of some animals. again primitive understanding about LAW of Natural Selection. Man is a highly evolved creature now. he chooses his mate by so many creteria than animal INSTINCTS. so better dont answer him now, he wont understand! You can suggest him Engels writing on how family, wealth etc have evolved from the primitive communism. may be they need the basic lessons of how fire changed the way of our life and social relationships.

நான் சொல்வது:
பன்றி தாயை புணர முற்படுவது குறித்தும். மனிதன் தனது புரதான பொதுவுடைமை சமுதாய காலகட்டதில் தாயை, தங்கை வித்தியாசமின்றி புண்ர்வது குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். அதை சிறிது கூட சட்டை செய்யாமல் மீண்டும் இந்த வாதத்தை வைப்பதை என்ன சொல்வது.

துணையை தேர்வு செய்யும் பொழுது மனிதன் தாய், மகன் வித்தியாசம் பார்த்த் தேர்வு செய்தானா? இப்பொழுது அப்படி பார்த்துதானே தேர்வு செய்கிறான். அவனது இயற்கை உணர்வு எங்கே போனது?

முன்பு தேர்வு செய்த பொழுது உடலுறவு தகுதிகள் தவிர்த்து பாலினம் மட்டுமே பார்க்கப்பட்டது. இப்பொழுது..??? அதை மட்டும் பார்த்து கூட்டமாக புணர்வது சாத்தியமா? இந்த விசய்த்தில் மனிதனின் இயற்கை உணர்வு எங்கே போனது.

இதையும் கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.


***//
நான் சொன்னது:
இந்த இயற்கை உணர்வுக்கு மாறனதுதான் குடும்பம் என்ற கட்டமைப்பு.

முயுஸ் சொன்னது:
இல்லை. இயற்கையில் எல்லா உயிரினங்களிலும் குடும்பம் என்னும் ஒரு அமைப்பு உள்ளது. யார் யார் குடும்பத்தவர்கள் என்பதும், எவ்வளவு காலம் குடும்பம் நீடிக்கவேண்டும் என்பதில் வித்யாஸங்கள் இருக்கலாம்.
//****

இங்கு முயுஸ் என்ன சொல்லவருகிறார்???

நான் தெளிவாக சொல்கிறேன். 'இந்த இயற்கை உணர்வுக்கு மாறனதுதான் குடும்பம்' என்று..

எந்த இயற்கை உணர்வு?.... உடலுறவு குறித்த மனிதனின் இயற்கை உணர்வு.

இப்படி தனது இயல்புணர்ச்சியை மாற்றிய வேறு உயிரிகளில் குடும்பத்தைக் காட்டுமாறு முயுஸை கேட்டுக் கொள்கிறேன்.

பிறக்கும் பொழுது ஒரு மனிதனுக்கு யார் தங்கையோ, யார் தாயோ, யார் தந்தையோ அவரே சாகும் வரை. ஆனால் விலங்கு குடும்பத்தில் தாய் ஒரு கட்டத்திற்க்கு பிறகு தாரம், தந்தை ஒரு கட்டத்திற்க்கு பிறகு எதிரி.

விலங்கு சமுதாயத்தில் இனப்பெருக்கம் மட்டுமே உந்தி தள்ளும் ஒரே விசயம்.

தயவு செய்து டார்வின் பரிணாம் கோட்பாடுகளைப் (ஐந்து அல்லது நான்கு பாயின்டுகள் என்று ஞாபகம்) படிக்கவும்.

அப்புறம் தெரியும் குடும்பம் என்பது மனிதன் இனப்பெருக்க விசய்த்தில் செய்த கட்டுப்பாட்டின் விளைவு என்பதும், இயற்கையின் மீது அவன் வினை செலுத்த(முரன்பட்ட) தொடங்கியதன் விளைவு என்பதும்.



***///
நான் சொன்னது:
இன்றைக்கு தனியுடமை சமூகத்தின் கடைசி கட்டத்தில் வந்து நிற்கிறது.

முயுஸ் சொன்னது:
தனியுடைமையின் முக்கிய ஆதாரத் தூணே தங்களால் "குடும்பம் எனும் ஒரு அதி உன்னதமான ஒரு மனித சமூக அமைப்பு" என்று அழைக்கப்படும் அமைப்புத்தான்.
//****

நான் சொல்வது:
குடும்பம் என்னும் அமைப்பு தனியுடைமை உருவாகும் முன்பே உருவாகிவிட்டது. ஒவ்வொரு சமூகமும் அடுத்த சமூகத்துக்கு வளர்ந்து செல்லும் போது பிந்தைய சமூகத்தின் அனுப்வச் செறிவையும் அள்ளிச் செல்லும். அப்படி சென்றதுதான் குடும்பம், அது பிற்ப்பாடு தனியுடைமை சமூகத்தின் தேவைக்கேற்ப்ப நிரம்பவும் கேட்டிப்பட்ட ஒரு அமைப்பாக மாறியது. இன்றைக்கு micro குடும்பம் அளவில் வந்து நிற்கிறது.

இதையும் கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.




***//

நான் சொன்னது:
அதாவது ஒரு கம்யுனிச சமூகத்தில் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பது ஒரு பொய்.

மூயுஸ் சொன்னது:
அப்போ, லெனின், ஸ்டாலின், மாவோ, ப்ரசன்டாவிற்கு கிடைக்கும் அதே மரியாதையும், சுகபோக வஸதிகளும், பவரும், அடிமட்டத்தில் கம்யூனிஸ சித்தாந்தங்களில் மயங்கியிருக்கும் நேர்மையான தோழர்களுக்கும் கிடைக்கும் என்கிறீர்கள். எல்லாருமே தொண்டர்கள்தான். தலைவர்கள் யாருமே கிடையாது. அல்லது எல்லாரும் தலைவர்கள்தான். தொண்டர்கள் யாரும் கிடையாது. நம்பறோம். நம்பறோம்.

//****

நான் சொன்னது:

நகைச்சுவை என்று சொன்னதன காரணம் இதுதான்.

இதுவரை உலகில் கம்யுனிச நாடு என்று ஒன்றும் கிடையாது. சோசலிச நாடுகள் மட்டுமே இருந்தன. ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியம் ஆனால் ஒரு நாட்டில் கம்யுனிசம் சாத்தியம் கிடையாது.

முயுஸ் தயவு செய்து ஒரு விசயத்தை விமர்சனம் செய்யும் முன்பு அதைப் பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு கம்யுனிச நாட்டில் அரசு என்பதே இருக்காது. அப்புற்மில்ல தலைவருக்கும், தொண்டருக்கும் உள்ள வித்தியாசம்.

ரஸ்யா விசயத்திலும் என்னால் இன்னும் விலாவாரியாக் பேச முடியும்.... விவாதத்தை திசை திருப்புவதற்க்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளதால் அதை வாய்ப்புள்ள போது சொல்கிறேன்.




***//
நான் சொன்னது:
அறிவு விசய்த்தில், அனைவருக்கும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால், வள்ரும், வாழும் சூழ் நிலைக்கேற்ப்ப எந்த துறையில் வேண்டுமானாலும் கற்று எல்லாருமே தான் சம்பந்தப்பட்ட துறையில் சூப்பர் ஜினியஸாகத்தான் இருப்பார்கள்.

முயுஸ் சொன்னது:
சூப்பர் ஜீனியஸாகமாற இப்படி ஒருவழியா? நீங்கள் ஜீனியஸ்தான்.

அவனவன் பிலீயன் கணக்கில் ரூபிள்களையும், டாலர்களையும் செலவழித்து எத்தனையோ ஆராய்ச்சிகளை இதற்காக செய்துகொண்டிருக்கிறான். இந்த மாதிரி கஷ்டமே இல்லாமல் ஒருவரை ஜீனியஸாக்கும் வித்தையை ஏந்தான் இந்த முதலாலித்துவ அரசுக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனவோ.
//****

நான் சொன்னது:
இது ஒரு வாதமா?

எல்லாருக்கும் எது விருப்பமோ அதை படிப்பதற்க்கான வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று சொல்லியிருந்த பிற்ப்பாடு இப்ப்டி ஒரு வாதத்தை வைத்தால் என்ன செய்வது?... பொறுப்பாக உட்கார்ந்து பதில் சொல்லுவதா?...

ரஸ்யாவில் நீங்கள் சொன்ன பில்லியன் கொட்டியவர் அல்ல மாறாக விருப்பபட்டவர், விரும்பியதை படிக்க வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் 300 வருட அமேரிக்கவை ஆப்படித்து முதலில் விண்வெளீக்கு சென்றான ஒரு ரஸ்யா விஞ்ஞானி.




***//
நான் சொன்னது:
இதுவும் சிறிது காலம் எடுத்து சில, பல தலைமுறைகள் கடந்த பிற்பாடு ஏற்ப்படும் ஒரு நிலை.

மூயுஸ் சொன்னது:
குறைந்தது ஒரு ரெண்டாயிரம், அல்லது மூவாயிரம் ஆண்டுகள்?

ஏனென்றால், நூற்றுக்கணக்கிற்குக்கூட வராத நாடுகள் ஒன்று பிச்சை எடுக்கின்றன, இல்லாவிட்டால் கேபிடலிஸத்திற்கு திரும்பிவிட்டன. அதனால்தான் இந்த ஸந்தேகம்.
//***

இது அவரது கருத்து. அப்பொழுதும் அவர் தெளிவாக சொல்கிறார் கேப்பிடலிசத்திற்க்கு திரும்பிய நாடுகள் பிச்சை எடுப்பதாக.

மற்றபடி இங்கு டாபிக் ரஸ்யாவில் "கம்யுனிசம் இல்லாமல் பொனதன் காரணம் என்ன?" என்பது அல்ல.

கட்டுரையின் தலைப்புக்கு உட்ப்பட்டு விவாதித்தால் சரியாக இருக்கும் அதை விடுத்து எட்டு திக்கும் பறந்து சென்றால் அதை திசை திருப்புவது என்று கூறுவார்கள்.




***//
நான் சொன்னது:
இது தவறான ஒரு கூற்று. மனித குல வரலாற்றை எடுத்துக் கொண்டால், பொது வுடைமைதான் அவனது இயல்பான உணர்வாக இருக்கிறது.


முயுஸ் சொன்னது:
செவ்வாய் கிரகத்தில் இருக்கும் மனிதர்கள்தானே? இருக்கும். இருக்கும்.

இங்கே குழந்தைகூட தன் பொம்மையை தன் உடன் பிறந்த பாப்பாக்களுக்கு தர மறுக்கிறது.
//***

யோவ் யாருய்யா அது முயுஸுக்கு பதில் சொல்லலை பதில் சொல்லலைன்னு உயிர வாங்குனது...?.,...

தெளிவா டார்வின் மேற்கொள்களைப் போட்டு மனிதனின் ஆரம்ப கால சமூகம் ஒரு பொதுவுடமை சமூகம் எனப்தை கூறிய பிற்ப்பாடு. செவ்வாய் கிரகம், புதன் கிரகம்னு பேசுனா என்ன செய்ய... கண்டு கொள்ளாமல் போவது ஒன்றுதான் வழி. ஒருவேளை முயுஸ் படித்த வரலாறு புத்தகங்களில் டார்வின் செவ்வாய் கிரகத்தில் சென்று ஆராய்ச்சி செய்ததாக எழுதியிருந்ததா?.... தெரியவில்லை.

குழந்தைகள் என்ன? டோ ண்டு அவர்கள் கூட சொத்து செர்த்து வைத்திருப்பார். தனிஉடைமை சமூகத்தில் வேறு என்ன எதிர்ப்பார்க்க சொல்கிறேர்கள்?




***// நான் சொன்னது:

வேட்டையாடி உணவு தேடும் பண்டைய புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் மனிதன் குலமாக, கூட்டமாக வாழ்ந்தான். அங்கு ஒவ்வொரு மனிதனும் தான் சேகரித்து வந்த உணவை பொதுவில் வைத்துத்தான் பகிர்ந்தனர்.

முயுஸ் சொன்னது:
ஆனால் அந்த கூட்டத்தில் பலமுள்ளவனுக்குத்தான் அதிகப் பங்கு. அடுத்தது புத்திசாலிகளுக்கு. மற்றதெல்லாம்தான் தோழர்களுக்கு.
//*

இங்கு தேவைக்கேற்ற ஊதியம், திறமைக்கேற்ற வேலைதான் இருந்தது. ஒரு பலமுள்ளவனுக்கு அதற்கேற்ற விகிதத்தில்தான் உணவு கொடுக்கப்பட்டிருக்கும். அவன் எவ்வளவு பலசாலியோ அதற்க்கேற்ற விகிதத்தில் உணவு கொண்டுவந்தான். ஏனேனில் அங்கு உழைப்பு என்பது இயல்பு. ஆக, இந்த கூற்றை மறுத்த டோ ண்டுவுக்கு பதிலாகத்தான் அந்த கருத்தை வைத்தேன்.


டோ ண்டு சொன்னது:
////தேவைக்கேற்ற ஊதியம், திறமைக்கேற்ற வேலை என்ற ஒரு கழிசடை கோட்பாட்டால் ////

இதுவும் டார்வினுடைய மேற்கோள், தோ.பரமசிவனின் மேற்கோள்களில் உள்ள விசயம்தான்.





***//
நான் சொன்னது:
மனிதன் மந்தை உணர்ச்சி உடையவன்

முயுஸ் சொன்னது:
பூமியில் வாழும் மனிதர்களிடம் இரண்டு கூறுகளும் (தனிமனித மற்றும் குழு மனப்பன்மை) உண்டு. ஒன்றைமட்டும் ஆதரிப்பது சமன நிலையில் ஏற்படாது. அது தீமையே விளைவாக்கும்.
//***

தனிமனித மன்ப்பான்மைக்கு ஒரு உதாரணம், பொது மன்ப்பான்மைக்கு ஒரு உதாரணம் கொடுக்கவும்.

சம்ன நிலை என்று எதைச் சொல்கிறேர்கள் எனபதையும் விளக்கவும்.

எனது மனைவி என்னை பொதுவில் வைக்க முடியாது. அப்படியும் செய்யலாம் அதில் எனக்கும் என் மனைவிக்கும் ஒப்புதல் கிடையாது. மூயுசின் கருத்து என்னவென்று தெரியவில்லை.
நான் அணீயும் உள்ளாடை தாயரிப்பை தனியாக செய்ய முடியாது. தனியாகவும் செய்யலாம். ஒவ்வொரு பனியன் செய்வதற்க்கும் அடுத்த பனியன் கிழிந்து விடும்(பின்ன... வயலை உழுது, உரத்தையும் தானே தயாரித்து, பருத்தி விதையை தானே பொறுக்கி, பஞ்சு எடுத்து......).

ஆகவே முயுஸ் எந்த புரிதலில் சமனனிலை, தனிமனிதம், பொதுமை என்று பேசுகிறார் என்று தெரியாமல் கருத்துச் சொல்ல முடியாது.




***//
நான் சொன்னது:
அதனால்தான் பாதுகாப்பான உணர்வடையும் போதெல்லாம் மனிதன் தனது பொதுமை நாட்டத்தை வெளிப்படுத்துகிறான்.

முயுஸ் சொன்னது:
மனித வாழ்க்கையில் எவ்வப்போதாவது ஏற்படும் உணர்வு இது. வறுமையின் துன்பம் அறியதவன் பிச்சை போடுவதில்லை. ஏழைக்கு இரங்குவதில்லை.
//***

தனியுடைமை சமூகத்தில் பொதுமை நாட்டம் என்பது சிலருக்கு ஏற்படுவதேயில்லை, சிலருக்க் எவ்வப்போதாவது ஏற்படுகிறது. சிலருக்கு பெரும்பாலானா நேரங்களீல் ஏற்படுகிறது. இதையெல்லாம் படிப்பவர்களின் அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கும் கருத்துக்கள். படிப்பவர்களில் பெரும்பாலனவர் நெகடிவ் ரிசல்ட் என்றால் என் கருத்து அம்பேல். பாசிட்டிவ் ரிசல்ட் என்றால் முயுஸ் கருத்து அம்பேல்.

இதற்க்காக உட்கார்ந்து கருத்துக் கணிப்பெல்லாம் நடத்திக் கொண்டிருக்க முடியாது.




***///
நான் சொன்னது:
அமெரிக்கா. அங்கு மான்யம் பெற்றவர்களும், மான்யம் பெற்ற துறையும் எந்த நிலைமையில் இருக்கிறது


முயுஸ் சொன்னது:
அதைத்தானே அவரும் சொல்லுகிறார்?
//***

நான் ஸொல்வது:

டோ ண்டு எதைச் சொல்கிறார்?

டோ ண்டு சொன்னது:
//எதற்கெடுத்தாலும் மான்யம் என்று கூறி மக்களை சோம்பேறிகளாக்கினால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். //

ஆக உழைக்கும் மக்களுக்கு மான்யம் கொடுப்பதை அவர் எதிர்ப்பதையும், அதே நேரத்தில் அமெரிக்காவுக்கும், இந்தியாவில் பன்னாட்டு தரகு வர்க்க முதலாளிகளுக்கும் மாண்யம் கொடுப்பது பற்றி அமைதியாக இருப்பது பற்றியும் பேசாமல் இருப்பதைத்தான் சொல்கிறேன்.

ஸ்.... அப்பா.... அவர் இப்படி எதையும் படிக்காமல், கட்டுரையும் படிக்காமல் இஸ்டம் போல கையில் கிடைத்த வார்த்தைகளை போட்டுச் செல்வார். அதற்க்கு நாங்கள் எமது கட்டுரையை பார்ட் பார்ட்டாக பிரித்து பொழிப்புரை வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்து ஒரு அல்ப அனானி வருவார்.

உங்கள மாதிரி ஆட்கள என்ன செய்ய.... ?... ம்....

அசுரன்

said...

முத்தமிழ் குழம்த்தில் வைக்கப்பட்ட எனது வாதம்

நான் ஓடி விட்டதாக் ஒருவர் புருடா விடுகிறார். அவர் பெயர் டாலர் செல்வன்
*************

http://groups.google.co.in/group/muththamiz/msg/2c75035ed498692d?&hl=en

said...

வெல்டன் அசுரன்

கீப் இட் அப்

said...

அசுரன்,

மூஸ் மற்றும் செல்வன் ஆகியோருக்கு நீங்கள் கவுண்ட்டர் வைக்க சலித்துக்கொள்ள வேண்டாம்.

ஆர்வம் இருக்கும் வரை எழுதவும். படிப்பவர்கள் புத்திசாலிகள். கிரகித்துக்கொள்வார்கள்.

எந்த காலகட்டத்திலும் இதுபோன்ற பொதுவான கருத்துக்களை வைத்து ஜல்லிகள் வந்துக்கொண்டே தான் இருக்கும்.நாம் முடிந்தவரை அதை கட்டுடைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.இது நமது வரலாற்று கடமை.:)))

மூஸ் அவர்களுக்கு நீங்கள் கொடுத்த வரிக்கு வரி விளக்கம் அருமை.ஆனால் திரும்பவும் அதே கருத்துக்களை அரிய கருத்துக்கள் போல் இவர்கள் எழுதுவது இம்சைதான்.என்ன செய்வது?

said...

dear asuran
i also agree with you. pls ignore idiotic comments from bhramanical idiots. but i have some questions. what's yr opinion about ambetkar's criticism about marxism (read 'marx or buttha') and postmodern critisms about marxism and stalin?

said...

மிதக்கும் வெளி,

// what's yr opinion about ambetkar's criticism about marxism (read 'marx or buttha') and postmodern critisms about marxism and stalin?
//

If you give me Links for Amberkar's writings on this. That would be of great help.

For similar Questions I have answered Twice already :-)).

Please read my old reply:

You could find more arguments in the below Link

http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_115375045154005106.html

**********************

http://www.keetru.com/rebel/ambedkar/39.html

அம்பேத்காரின் கட்டுரையை படித்தேன். அவரது கட்டுரை இரண்டு விசயங்களை கணக்கிலெடுக்கவில்லை.

#1) இந்த சமூகம் வர்க்கங்களாக பிளவுண்டு உள்ளது. (இந்தியாவில் சிறப்பாக சாதி என்ற பண்ப்பாட்டு அடக்குமுறை அதை பிறப்பினடிப்படையில் கட்டிக் காக்கிறது.)

#2) அரசு உலர்ந்து உதிருவது, சர்வாதிகாரம் போன்ற விசயங்களைப் பற்றி அவர் சொல்லும் பொழுது, கம்யூனிச தத்துவ சாரத்தை முழுமையாக புரிந்து கொண்டு அந்த கட்டுரையை எழுதியதாக தெரியவில்லை.(அது அம்பேத்காரின் தவறு அல்ல. அவ்வாறு முழுமையாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்காது. ஏனெனில், அன்று கம்யுனிஸ்டுகள் என்றூ சொல்லிக் கொண்டவர்களுக்கே அதை நடைமுறையில் செயல் படுத்துவதில் புரிதல் இல்லை).

சர்வாதிகாரத்தை பொறுத்தவரை, அரசு என்பதே ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம்தான் என்பது கம்யுனிஸ்டு definition. அதாவது வர்க்க பிளவினால் ஏற்படும் சமூக குற்றங்களை கட்ட பஞ்சாயத்து செய்யும் ஒரு கருவி. அதாவது அரசு என்ற ஒன்று இருப்பதே வர்க்க பிரிவினை இருப்பதின் அடையாளம்தான். அதன்படி இதுவரையான அரசு எல்லாமே சிறுபான்மை அரசு, அதாவது சுரண்டு வர்க்க சர்வாதிகாரம் (கண்டதேவி தேர், பாப்பாபட்டி கீரிப்பட்டி, கோயிலில் தமிழில் பாடுவது, தாமிரபரனி கோக் பிரச்சனை etc).

உழைக்கும் மக்கள், மனித சமூக வரலாற்றிலேயே முதல் முறையாக தன்னை தானே உண்ர்ந்து கொள்ளூம் வாய்ப்பை முதலாளித்துவ சமூகம் கொடுக்கிறது. அவன் தனக்கான கோரிக்கையுடன் போராடி அதை மறுக்கும் சிறுபான்மை அரசை தூக்கியெறிந்து பெரும்பான்மை அரசை நிறுவுகிறான். அது பழைய அதிகாரத்திலிருந்த சிறுபான்மை வர்க்கத்துக்கு சர்வாதிகாரமாக இருக்கும்.

இதைத்தான் கம்யுனிஸ்டுகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் ஒரு தொழிலாளி என்றால் கவலையை விட்டுத் தள்ளுங்கள் அது நமக்கான அரசு...:-). நம்மை சுரண்டியவர்களுக்கான சர்வாதிகாரம்.



அரசு உலர்ந்து உதிர்வது பற்றி:

அதிகாரத்தை, ஆட்சியை இழந்த பழைய முதலாளி வர்க்கம், பிற்போக்கு சக்திகள் மீண்டும் பழைய பொற்காலத்தை கொண்டுவர பிரம்மபிரயத்தனம் செய்வார்கள்(தற்பொழுது பார்ப்பன வெறியன் சங்கராச்சாரி செய்தானே அது போல, அதைவிட மிக மிக கடுமையாக, மிக மிக நயவஞ்சகமாக). ஆக புரட்சி முடிந்த பின்புகூட வர்க்கபோராட்டம் இருக்கும்.

பணம் எனற ஒரு வஸ்து ஒழிவது, கிராமம், நகரம் இடைவெளி குறைவது, உலகம் முழுமைக்கும் பாட்டாளி வர்க்க புரட்சி நடந்தேறியிருப்பது(இன்னும் சில conditions விடு பட்டிருக்கலாம்) ஆகிய நிலை வரும் வரை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருக்கும்(தன்னியல்பில்). ஏனெனில் மேற்கூறிய அந்த லிஸ்டில் உள்ள அம்சங்கள்தான் முதாலாளிய சிந்தனைக்கான சமூக பொருளாதார ஊற்றுமூலமாக இருக்கின்றன. அது இருக்கும் வரை முதலாளி குறைந்த பட்சம் சிந்தனையிலாவது இருப்பான். அவனை அடக்கி ஒடுக்க பெரும்பான்மையினரின் சர்வாதிகாரம்(அதாவது அரசு) தேவைப்படுகிறது.

சிறிது சிறிதாக் வர்க்க உணர்வுகள் ஊற்றெடுப்பதற்க்கான சமூக, பொருளாதார தத்துவ ஊற்று மூலங்கள் வற்றும் பொழுது வர்க்கங்கள் அழியும். அப்பொழுது அதி உயர் தொழில் நுட்ப உற்பத்தி முறை காரணமாக சமூகத்துக்கு வேண்டிய விசயங்கள் தட்டுபாடின்றி கிடைக்கும். தட்டுப்பாடான விசயங்களையும் பொறூப்பாக பயன்படுத்திக் கொள்ளும் டிஸிப்ளின் மக்களிட்ம் தழைத்தோங்கியிருக்கும். இது அரசு என்ற நாட்டமையின் தேவையை இல்லாமல் செய்துவிடும். இதைத்தான் உலர்ந்து உதிர்தல் என்று இலக்கிய நடையில் மார்க்ஸிய முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இவையனைத்துமே சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் தன்னியல்பில் நடக்கும்(ஒரு கம்யுனிஸ்டு கட்சி இல்லாவிட்டாலும். நீங்கள், நான், அம்பேத்கார், மார்க்ஸ் இவர்கள் விரும்பாவிட்டாலும்). அப்படியில்லாமல் இந்த சமூகத்தின் இயல்பான வளர்ச்சிப் போக்கு தடையாகிறது என்றால் அது கிழ்கண்ட எடுத்துக்காட்டைப் போல முடியும்.

அதாவது ஒரு முட்டை தன்னியல்பில் பொறிந்து குஞ்சு வெளிவர வேண்டும். மாறாக ஏகாதிபத்தியங்கள் தங்களது லாப வெறிக்காக முட்டை பொறிவதை தடுத்தால் கூமூட்டைதான் மிஞ்சும். அதாவது மனித சமூகத்தின் அழிவு. (சுற்றுச்சூழல், யுத்தம், சமூக அழுத்தத்தின் விளைவான குற்றச் செயல்கள் etc etc).

சுட்டியில் கொடுத்துள்ள கட்டுரைகளை படியுங்க்ளேன் நிறைய விசயங்கள் புரிபடும்.

******************

Asuran

said...

//எந்த காலகட்டத்திலும் இதுபேபூன்ற பெபூதுவான கருத்துக்களை வைத்து ஜல்லிகள் வந்துக்கெபூண்டே தான் இருக்கும்.நாம் முடிந்தவரை அதை கட்டுடைத்துக்கெபூண்டே இருக்கவேண்டும்.இது நமது வரலாற்று கடமை.:)))

மூஸ் அவர்களுக்கு நீங்கள் கெபூடுத்த வரிக்கு வரி விளக்கம் அருமை.ஆனால் திரும்பவும் அதே கருத்துக்களை அரிய கருத்துக்கள் பேபூல் இவர்கள் எழுதுவது இம்சைதான்.என்ன செய்வது?///

முத்து(தமிழினி),

தங்கள் வருகைக்கு மிக்க நன்றீ, தங்களது வார்த்தைகள் உற்சாகமூட்டுவதாக இருக்கின்றன.


//நீங்கள் கவுண்ட்டர் வைக்க சலித்துக்கெபூள்ள வேண்டாம்.//

ஆம் இது நமது வரலாற்றுக் கடமை. நமது முன்னோர்கள் செய்து வைத்திருக்கும் வேலைகளுடன் ஒப்பிட்டால் நாம் செய்வது எலிப் புழைக்கியின் ஒரு துணுக்குக்கூட ஈடாகாது. அதனால் சலிப்புற வேண்டிய அடிப்படை என்பதே இல்லை. காலம் கருதி போடப்பட்ட பின்னூட்டம்.

மிக்க நன்றி,
அசுரன்.

said...

சதயம்,

தங்கள் வருகைக்கு நன்றி. மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்து சொல்லுங்களேன்.

நன்றீ,
அசுரன்

said...

***//
"இந்திய வோட்டுக் கம்யுநிஸ்டுகள் இந்திய சமூக அமைப்பை வரையறுப்பதிலேயே தவறிழைத்தனர். அதன் பயன் சாதியை வரையறுப்பதிலும், அனுகுவதிலும் தவறிழைத்தனர். அதன் பலன், இன்றுவரை தலித்துகள் கம்யுனிஸ்டு கட்சியில் ஐக்கியமாவதில் காட்டும் தயக்கம். இவர்களின் போலி அல்லது தவறான கம்யுனிச தத்துவம் தோல்வியடைவது என்ன, அல்ரெடி அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது."

This is the basic problem with our communist parties. Do you think that it was done purposely by those who want to keep the dominance ... like 'The Hindu' Ram, Jeyakanthan, etc....
//***

Nambi,

நான் அவ்வாறு சொல்லவில்லை. ஒரு விசயத்தை புரிந்து கொள்வதில் நேரிடும் தவறு. அவ்விசயத்தில் நாம் செய்யும் தவறுகளுக்கும் காரணமாகிறது. அதுவும் ஒரு கம்யுனிஸ்டு கட்சி போன்ற ப்ரோஸஸ் ஓரியண்டட் அமைப்பில் இப்படிப்பட்ட தவறுகள் மிகப் பெரிய பாதிப்பை உண்டு செய்கிறது.

ஸ்டாலினின் இரு தவறுகள் அந்த நாட்டின் ஒட்டு மொத்த சீரழிவுக்கும் அடித்தளம் போட்டது. சீனா கம்யுனிஸ்டு கட்சியின், சீன சமூகத்தின் முரன்பாடுகளை சரியாக கையாள்வதற்க்கான தலைமை இல்லாமல் போனது அந்த நாட்டிலும் சீரழிவு.

இந்திய கம்யுனிஸ்டு கட்சியின் தலைமை தனது ஆரம்பத்திலேயே ஒரு குட்டி முதலாளித்துவ பரவசம் மற்றும் ஊசலாட்டம் கொண்ட கட்சியாக இருந்தது(முதல் மாநாட்டின் அறிக்கை கிடைத்தால் படித்துப் பாருங்கள் புரியும்). அதனால் அதன் நிலைப்பாடுகள் சாதி அமைப்பை வரையறுப்பதில் தவறு செய்தனர். ஆக, அதற்கெதிரான போராட்டம் என்பதிலும் தவறு செய்தனர். இதனால் தலித் பிரச்சனைகளுக்கான் தீர்வு கம்யுனிஸ்டு கட்சியில் இல்லை என்பது போல ஒரு பிரச்சாரத்தை தலித் அமைப்புகளால் வெகு சுலபமாக செய்ய முடிந்தது.

உண்மை என்னவெனில் சாதி பெயரால் ஆரம்பிக்கப்படும் எதுவும் கடைசியில் பார்ப்பினிய கட்டமைப்பில் போய் சேரும். சாதி விசய்த்தில் வோட்டுக் கம்யுனிஸ்டு கட்சிகள் செய்த தவறிலிருந்து எதிர் மறையில் பாடம் கற்காமல். நேர் மறையில் போய் இப்போழுது தலித்துகளுக்கு, பழங்குடியினருக்கு என சாதிவாரி அமைப்பு கட்டும் இன்னொரு தவறு செய்கிறார்கள். இதன் மூலம் கட்சிக்குள்ளேயே சாதி ரீதியாக ஒரு குழு அடையாளப்படுத்தப்பட்டு சாதிப் பிரிவினை வேறுன்ரும் நிலை ஏற்ப்படுகிறது.

ஆக, இதுதான் விசயம், சாதிக்கெதிரானா, பார்ப்பினியத்திற்கெதிரான ஒரு போராட்டத்தை நடத்தும் தத்துவ பலமற்ற கட்சிகளாக வோட்டுக் கம்யுனிஸ்டுகள் உள்ளனர். இது நடைமுறையில் வேலையைக் காட்டுவதை தலித் அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

இந்த விசயம் இந்த கட்டுரையில் இதற்க்கு மேல் விவாதிக்கப்படாது. அதை மீறி கேள்வி கேட்பவர்களது கேள்விகள் எடுத்து வைத்துக் கொள்ளப்படும், பின்னொரு நாள் எதிர்காலத்தில் இந்த விசயத்தை ஒட்டி போடப்படும் கட்டுரையில் பதில் சொல்லப்படும்.

அசுரன்.

said...

//ஸ்டாலினின் இரு தவறுகள் அந்த நாட்டின் ஒட்டு மொத்த சீரழிவுக்கும் அடித்தளம் போட்டது. //

அசுரன்,
கொஞ்சம் விரிவாக (தனிப்பதிவாக) சொல்லமுடியுமா? நிச்சயம் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல்தான்.

said...

கல்வெட்டு,

ஏற்கனவே ஒரு இடத்தில் இது குறித்து ஓரளவு கூறியிருந்தேன். அதை முதலில் போடுகீறேன். அது குறித்து உங்களது கருத்துக்களைச் சொல்லுங்கள்.

**//
உண்மையில் பொதுவுடைமை
சமுதாயம் எல்லாருக்கும்
எல்லாம் என்பதை சாதித்தது.
எந்த நாட்டையும்
சுரண்டாமல். தனியொரு
நாட்டில் பொதுவுடமை
வாழ்வது கடினம் என்ற
நிபந்தனையுடந்தான் இந்த
சாதனையை செய்ய விளைந்தனர்
மார்க்ஸிய முன்னோர்கள்.


லெனினும் சரி, ஸ்டாலினும்
சரி, மாவொவும் சரி ஒரு
வெற்றிகரமான முதலாளித்துவ
மிட்சி சாத்தியமே.
அப்படியொன்று நடக்காமல்
தொடர்ந்து வர்க்கப்
போராட்டத்தை(அதாவது எதிர்
வர்க்கத்துக்கு எதிரான
போராட்டத்தை) நடத்த
வேண்டுமெனெ திரும்ப
திரும்ப
வலியுறுத்துகிறார்கள்.


இந்த விசயத்தில் கடும் உள்
நாட்டு, வெள் நாட்டு
பிரச்ச்னைகள்(சதி, உலக
யுத்த அபாயம், ஜெர்மனியின்
யுத்த மிரட்டல்)
கவனமிழந்து ஸ்டாலின்
முதலாளித்துவ மீட்சி பற்றி
தான் எச்சரிக்கை செய்ததையே
கவனத்தில் கொள்ளாமால் சில
சட்ட சீர்திருத்தங்களை
செய்தார். அதை விரைவில்
உணர்ந்து வேறு சில
கட்டுப்பாடுகளை -
அவற்றையும் தவறாகவே -
செய்தார். இந்த இரண்டும்
கட்சிக்குள் எதிர் புரட்சி
கோஸ்டிகள் ஊடுருவ
வழிவகுத்தது...


இந்த விசயத்தில் மாவொ is very very
good.... அவர் இருந்த வரை ஒரு
பிற்போக்கு சக்தியும்
வாழாட்ட முடியவில்லை.
//**


இதன் காரணம், மக்கள் அரசு நிர்வாகத்தில் முழுமையாக பொறூப்பெடுப்பதற்க்கான பண்பாட்டு வளர்ச்சி முழுமையடையவில்லை. அதற்க்கான பண்பாட்டு புரட்சிக்கான அறைக்கூவலை லெனின், ஸ்டாலின், மாவோ வைக்கிறார்கள். அதை நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆனால் ஏகாதிபத்திய சுற்றீ வளைப்பு நெருக்கடியில் ஸ்டாலின் இந்த விசயத்தில் கவன்ம் செலுத்துவதில் தவறுகிறார்.

*********

தேர்தல் பாதை குறித்து உங்களது விமர்சனத்துக்கு பதில் சொல்லியிருந்தேனே, அதைப் பற்றிய கருத்துக்களையும் இங்கேயே வையுங்கள்.

நன்றி,
அசுரன்

said...

நல்ல கட்டுரை அசுரன் அவர்களே!

நன்றாக ஒப்பிட்டு எழுதி உள்ளீர்கள். பெண்களின் கற்பு நிலை பற்றிய டோண்டு அவர்களின் கருத்துக்களையும் கவனமாக அதே சமயம் நாகரீகமாகவும் கையாண்டு உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

அப்படியே ஒரு "+" குத்து விடுகிறேன்.

said...

டாலர் செல்வன் வழக்கம் போல அவர் மீதான் எனது அனைத்து விமர்சனங்களையும் நிரூபிக்கும் வண்ணம், மற்றுமொரு எதிர் வினை தொடுத்துள்ளார். இந்த முறை அவரது வாதம் ஓசிப் போன ஒரு இட்லிக்கே டாமால் ஆகிவிட்டது.


*******************************
#1)
செல்வன் எனது கட்டுரையை முழுதாக படிக்காமலேயே எதிர்வினை தொடுப்பது போல இருக்கிறது.
அவரது முதல் பாயிண்டில் நான் ஏதோ தவறாக சொல்வது போல கூறுகீறார். கடைசியில் நான் கட்டுரையில் என்ன சொன்னேனோ அதையே சொல்கீறார். இவர் இப்படி முரன்பட்டு எழுதுவது புதிதல்ல. பலமுறை அந்த தவறைச் செய்கிறார். பல முறை நானும் கடுமையாகவே சுட்டிக் காட்டிவிட்டேன். இப்படி அவரே அவர் சொன்னதற்க்கு முரன்படுவதன் காரணம் சொந்த நிலைப்பாடு என்று செல்வனுக்கு ஒன்றும் கிடையாது என்பதுதான்.

டாலர் செல்வன் சொல்வது:
இவ்விஷயத்தில் அசுரனும் டய்ண்டுவும் சில தவறுகளை செய்கின்றனர்.இயற்கையை சில சமயங்களில் மீறித்தான் ஆகவேண்டும்(சிசேரியன் ஆப்பரேஷன் செய்வது,செயற்கை மூட்டு பொருத்துவது).ஆனால் சில சமயங்களில் இயற்கையை மீறவே கூடாது.


நான் எனது கட்டுரையில் சொல்லியிருந்தது:
**//ஆக, மீண்டும் அதே விசயம்தான். பிரச்சனை இயற்க்கைக்கு மாறாக போவதா அல்லது இயந்து போவதா என்பது அல்ல. மனித குலத்தின் நலனை அடகு வைத்துச் செல்வதா அல்லது அதை முன்னிறுத்தும் விசயங்களை செய்வதா என்பதுதான்.//**

இதன் அர்த்தம் என்னவென்று கட்டுரை படித்து பார்த்தால் புரியும். படித்துப் பார்த்தால்தானே......

இரண்டும் ஒன்றுதான்.... நானும் அதையேதான் சொல்கீறேன் டாலர் செல்வன் அவர்களே....

ஆக இந்த விசயத்தில் செல்வனின் வாதம் புஸ்க் ஆகிவிட்டது.


#2)
டாலர் செல்வன் சொல்லுவது:
**// "கம்யூனிசம் இயற்கைக்கு மாறானது" என்று சொல்வதை விட "இயற்கைக்கு மாறாக இருக்கக்கூடாத விஷயத்தில் அது இயற்கையை மீறுகிறது" என்பதுதான் சரி.//**

எந்த விசயத்தில் என்று சொல்லவேண்டும். ஆனால் அதெல்லாம் செல்வனுக்கு தேவையில்லை. அவர் சும்மா ஒரு கருத்துச் சொல்லுவார். நாம், ஆமாம் கம்யுனிசம் இயற்கைக்கு மாறாக போகக் கூடாத அம்சங்களில் போகிறது என்று மனதில் இட்டுக் கொள்ள வேண்டும்....

அய்யா... டாலர் செல்வன் அவர்களே.... (தேவர் சாதியை செர்ந்த என்னார் மட்டும்தான் நீங்க அய்யா என்று கூப்பிடுவீங்களா? நானும் கூப்பிடுகிறேன்..)

கொஞ்சம் இதை விவரித்து கூற முடியுமா?.... (பரிட்சைக்கு அப்புறமா படிங்க....).
அதாவது,
எந்த 'இயற்கைக்கு மாறாக போகக் கூடாதா அம்சத்தில் கம்யுனிசம் மாறாக செல்கிறது'?
அவ்வாறு அந்த குறிப்பிட்ட அம்சத்தில் ஏன் 'இயற்கைக்கு மாறாக செல்ல்க்கூடாது'?

************
#3)
//2.மக்களிடையே ஏற்றத்தாழ்வு கம்யூனிசத்தில் இல்லை
இது ஒரு விதத்தில் உண்மைதான்.அதாவது ஸ்டாலினும்,மாவோவும் ஆட்சியை பிடித்தபின் பணக்காரர்களை எல்லாம் கொன்றும்,தொழிற்சாலைகளை நாட்டுடமையாக்கியும்,நாட்டிலுள்ல புத்திசாலிகளை "கலாச்சார புரட்சி" என்ற பெயரில் தீர்த்துக்கட்டியும்,"நூறு பூக்கள் மலரட்டும்" என்ர பெயரில் ஒழித்துக்கட்டியும் சமூகத்தில் உள்ள அறிவாளிகளை,தொழில் முனைவோரை எல்லாம் கொன்று தீர்த்தனர்.

சமூகத்தில் ஏற்றம் என்பதையே ஒழித்துவிட்டால் அதன்பின் ஏற்ரத்தாழ்வு என்பதே இருக்காது அல்லவா?வெறும் தாழ்வுதான் சமூகத்தில் இருக்கும்.அப்போது சமத்துவம் உருவாகும்.அந்த விதத்தில் கம்யூனிசத்தில் "ஏற்றத்தாழ்வு இருக்காது" என்பது மிக சரியான வாதம்.
//

இது நாட்டமை டாலர் செல்வன் சொல்லும் தீர்ப்பு....
நாட்டமை தீர்ப்ப மாத்தி சொல்லு.... நாங்க இதுக்கு ஆயிரத்தெட்டு தடவ பதில் சொல்லியாச்சு. திரும்ப திரும்ப ஒரே ஜல்லிய அடிக்காதீங்க. ஜல்லிக்கே வலிக்கப் போவுது.

*************
#4)

**//இதில் டார்வினை வைத்து ஒரு ஜல்லி.டார்வின் சித்தாந்தமே பொதுவுடமையின் அடிப்படையில் அமைந்தது என அடிக்கும் ஜல்லியை கேட்டால் டார்வின் மனம்நொந்து போவார்.//**

டார்வினை நான் எந்த இடத்திலும் மார்க்ஸிய அறிஞர் என்று சொல்லவேயில்லை. விட்டால் மார்க்ஸ் எந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளையெல்லாம் அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்தாரோ அவர்கள் எல்லாருமே பொதுவுடைமை அடிப்படையில் ஆய்வு செய்த அறிஞர்கள் என்று நான் கூறுவதாக டால்ர் செல்வன் கூறுவார் போலத் தெரிகிறது.

டார்வின் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து செய்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சில முடிவுகளுக்கு வருகிறார். அதே ஆராய்ச்சி தகவல்களின் அடிப்படையில் ஏங்கெல்ஸ் சில முடிவுகளுக்கு வருகிறார். இதில் எந்த இடத்தில் ஏங்கெல்ஸோ அல்லது நானோ அல்லது வேறு யாரெனும் மார்க்ஸிய ஆட்களோ டார்வினின் கண்டுபிடிப்புகள் பொதுவுடைமை புரிதலில் செய்தார் என்று சொல்லியுள்ளோம்...?....

இந்த இடத்தில் டாலரின் நோக்கம், டார்வினைக் கூட எம்மைப் போன்ற கம்யுனிஸஸ்டுகள் புரட்டி பயன்படுத்துகிறார்கள் என்று பொதுக் கருத்து உருவாக்கி களங்கம் கற்பிக்கும் நேர்மையற்ற முயற்சியே.. இதுவரை அவர் எனது கட்டுரைகளை நேர்மையாக எதிர்கொண்டதே இல்லை. (இந்த விசயத்தில் வேந்தன் கொஞ்சம் பரவாயில்லை).


டார்வின் தெளிவாக சொல்கீறார். சரியாக பங்கிட்டு கொடுப்பதற்க்கு சிரமப் பட்டதில்தான் மனித மூளை வளர்ச்சியுற்றது என்று. ஆக அந்த சமூகம் அதன் உறுப்பினர்களுக்கு கிடைத்தவற்றை பிரித்துக் கொடுப்பதில் ஒரு புரதான பொதுவுடைமை சமூகமாக இருந்தது என்பதுதான் விடை. சும்மா சண்டையிட்டு வலுவுள்ளவன் பிடுங்கிக் கொள்வது என்பது ஒரு சமுகம் என்ற அளவில் அவர்களூக்குள் இல்லை(மற்ற குழுக்களுடன், பிற விலங்குகளுடன் அது அவ்வாறுதான் இருந்தது). இதன் காரணம் முந்தைய அனுப்வங்களாகத்தான் இருக்க முடியும்.


#5)
****//"வலிய உயிரினம் வெல்லும்,திறமையானது தப்பி பிழைக்கும்"என்பதுதான் டார்வீனியத்தின் அடிப்படை கோட்பாடு.வலுத்த உயிரினம்தான் மிக அதிகமான மூலதனங்களை அடைந்து மற்ற உயிரினங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்.வேட்டையாடி உணவை கொண்டுவருபவன் தான் தின்றது போக மீதியைத்தான் மற்றவர்களுக்கு கொடுப்பான். //****

இந்த கருத்தும் அவர் தனக்குள்ளேயே முரன்படுவதன் வெளிப்பாடு. கம்யுனிசத்தை வெறுக்கும் அவரது உணர்வு பரவசாமாக வேலை செய்கிறது. அந்த அவசரத்தில் சொந்த நிலைப்பாடற்ற அவர் இது போல முரன்படுகீறார்.

கொஞ்சம் முன்னதான் இயற்கையோட தேவைப்பட்ட இடத்தில் முரன்படவேண்டும் என்று கூறினார். இப்போ அப்படி தேவையில்லை என்று கூறுகிறார். அப்புறம் எதற்க்கு போலிசு, சட்டம், நீதி, பந்தம், பாசம், மனிதாபிமானம் etc....

இந்த வாதத்தை இன்னோரு முறையிலும் அனுகலாம்:
வலுவானவர்களான எங்க உழைக்கு மக்கள் பெரும்பான்மையாக இருக்காங்கா. ஆனா பரம்பரையான சுரண்டல் சமூகத்தின் அதிகார மையத்தில் இருந்து கொண்டு சில சிறுபான்மையினர் இந்த பெரும்பான்மையினருக்கு வசதிகள் கிடைக்க விடாமல் சுரண்டுகிறார்கள்.

டாலரின் வாதப்படி அந்த சிறுபான்மை திறமையுள்ளவர்கள், வல்லவர்கள். அதனால் அவிங்க செய்றது சரிதான்.....

நாங்க சொல்றோம்..... ஆமாம் மிஸ்டர் டாலர் நீங்க சொல்றது சரிதான்.... நாங்க என்ன செய்யப் போறோம்னா எங்க பெரும்பான்மை மக்கள இந்த விசயஙக்ள சொல்லி வலு உள்ளவங்களாக்கி எல்லாத்தையும் பிடுங்கிக் கொள்கிறோம் எங்களுக்குள்ள எப்படியாவது பங்கிட்டுக் கொள்கிறோம். நீங்க தேவையில்லாம இந்தியா மக்கள் தேசப் பற்று அப்படின்னெல்லாம் வேசம் போட்டுட்டு வர வேணாம்...

*****

இந்த இடத்தில் செல்வனின் அனைத்து வாதங்களும் தவிடு பொடியாகி மேற்கொண்ட அவர் வாதம் செய்வதற்க்கு எந்த தகுதியுமற்றுப் போகிறார்.

இனி அவர் பொதுவுடமையை எதிர்த்து அல்ல மாறாக எந்த விதமாகவும் வைக்கப்படும் வாதங்களுக்கும் மேற்சொன்ன இதுதான் பதில். அதாவது, எங்க மக்கள வல்லவர்காளாக்கி நாங்க செழிக்கப் போகிறோம். அது உங்களுக்கு பயமா இருந்தா, ஒன்னும் செய்ய முடியாது.

********************


#6)

டோ ண்டு சொன்னது:
***//மானியம் தந்து மக்கள் சோம்பேறி ஆகின்றனர்://**

டாலர் சொனனது:
இந்த விஷயத்திலும் பகுத்தறிவு வேலை செய்ய வேண்டும்.அதாவது எது எதற்கு மானியம் தருவது என ஒரு விவஸ்தை வேண்டும்.இலவச மினசாரம் விவசாயிக்கு தருகிறாய்..சரி,அது ஏழைக்கு தரும் நியாயமான மானியம்.ஆனால் 2000ரூபாய் டிவி பொட்டியை கொடுப்பது துப்பு கெட்ட செயல்.

எது எதற்கு மானியம் தருவது,தரக்கூடாது என்பதில் பகுத்தறிவோடு இருக்கவேண்டும்.ஒட்டுமொத்தமாக மானியம் தவறு என்பதும்.சரி என்பதும் பொருளற்ற வாதங்கள்.


நான் சொலவது:
செல்வன் தனது பகுத்தறிவை உபயோகித்து அந்த விசய்ங்களை அந்த குறிப்பிட்ட டோ ண்டுவின் வார்த்தையை போடும் பொழுதே விளக்கி சொல்லியிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. டோ ண்டு எந்த Context -ல் இந்த வார்த்தையை பயன்படுத்துகீறார்? சோசலிச நாடுகளைப் பற்றீ அவதூறு கிளப்பும் ஒரு பதிவில், அந்த அர்த்ததிலேயே நேரடியாக பயன்படுத்துகிறார்.

இப்போ டாலர் செல்வன் பகுத்தறிவோடு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

அன்றைய சோசலிச நாடுகளில் என்னவிதமான மான்யங்கள் இருந்தன அவற்றில் எதை? ஏன்? செல்வன் மறுக்கீறார்?

அப்படி மறுக்கீறார் என்றால் எந்த வகையில் அந்த மான்யங்கள் மக்களை சோம்பேறி ஆக்கின? சோம்பேறி ஆனதற்க்கான ஆதாரம்? இவற்றைக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில் அந்த டோ ண்டுவின் குறிப்பிட்ட வரிகள் சோசலிச நாடுகள் பற்றியது. இந்தியாவை பற்றியதோ அல்லது டிவி பொட்டி பற்றியதோ அல்ல.

நிற்க,....

இந்த இடத்தில் செல்வன் என்ன சொல்வார் என்றால்,

""அந்த கட்டுரையில் அந்த வரிகள் எப்படி பயன்பட்டதோ தெரியாது, அதைப் பற்றி எனக்கு கவலையில்லை, ஆனால் நான் இந்தியாவை கணக்கில் கொண்டுதான் சொன்னேன்?.....""

இப்படி நேர்மையின்றி பல பொருள் தருமாறு வார்த்தைகளை போட்டு வைத்து அதற்க்கு நேரத்திற்க்கு தகுந்த மாதிரி அர்த்தம் சொல்லி வாதடுவது டாலரின் சிறப்பு அம்சம் .... :-)))

இதெல்லாம் நாம்தான் கவனமெடுத்து, டாலர் ஒரு சீரிய சிந்தனையாளர் என்பதை மனதில் எப்பொழுதும் நிறுத்திக் கொண்டு அவதனிக்க வேண்டும். அய்யோ.... அய்யோ.....


ஆக மன்யம் விசயத்தில் டாலர் அவர்கள் டோ ண்டு அவர்களுக்கு அப்போசிட்டாக உள்ளார்.


அசுரன்

said...

அசுரன் சார்,

பயித்தியத்திற்கு வைத்தியம் பார்ப்பதற்கு பதிலாக ஏதும் உருப்படாத கோவிலில் அமர்ந்து உண்டகட்டி வாங்கி சாப்பிடலாம்.

பைத்தியம் பிடித்த நாய்களுக்கு பதில் சொல்லாமல் வீரத்துடன் உங்கள் தனித்துவத்தின்படி எழூதுங்கள் சார்.

said...

ராதாராகவன்,

அவர்களின் கருத்துக்களையும் பலர் படிக்கிறார்கள் எனும் பொழுது அதில் உள்ள மக்கள் விரோத அம்சங்களை அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமை ஆகிறது.

என்னை ஊக்குப்படுத்தும் முகமாக வார்த்தைக்கள் பகர்ந்ததற்க்கு நன்றி. தொடர்ந்து உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் உற்சாகத்துடன், fire brand எழுத்துக் கடமையை செவ்வென ஆற்றுவேன்.

ஆனால், நாய்கள் போன்ற சொற்றொடர் தேவையின்றி நமது வாதங்களை திசை திருப்பவே அவர்களுக்கு பயன்படும் ஆகவே, அது போன்ற வார்த்தைகளை நாம் உபயோகிக்காமல் இருப்பதே நன்று எனக் கருதுகிறேன்.


நன்றி,
அசுரன்.

said...

ராதாராகவன் என்பது போலியார்தான்.

கம்யூனிஸத்துக்கு எதிரி கேபிடலிஸம் என்று தெரியும். பார்ப்பனீயம் என்று நீங்கள் சொல்வதை பார்த்தால் பார்ப்பனீயம் தான் கேபிடலிஸமா. ஆகா. ரொம்ப நன்றாக இருக்கிறது. அந்த கேபிடலிஸம் இங்கு வந்தால் தேவலை. கம்யூனிஸத்திலிருந்து தப்பிக்க கள்ளத்தோணி ஏறி உயிரை பணயம் வைத்து அமெரிக்காவுக்கு தப்பிக்கும் க்ப்யூபா நாட்டு மக்களிடம் போய் கம்யூனிஸ பெருமையை சொல்லிப்பாருங்கள்!!! இல்லை, பல்கேரியா முதலிய நாடுகளில் போய் ரஷிய கம்யூனிஸ பெருமையை சொல்லிப்பாருங்கள். தோல் எலும்பு கூட மிஞ்சாது. பின்னர் சமத்துவம்தான். அதாவது, சமாதிதான். உன்மையான சமத்துவம் சுடுகாட்டில்தான் இருக்கிறது.

நன்றி

said...

//இப்படி நேர்மையின்றி பல பொருள் தருமாறு வார்த்தைகளை போட்டு வைத்து அதற்க்கு நேரத்திற்க்கு தகுந்த மாதிரி அர்த்தம் சொல்லி வாதடுவது டாலரின் சிறப்பு அம்சம் //

வெளிநாட்டு மென்பொருள் வல்லுனர்களாகிய எங்களுக்கு தங்களுடைய விளக்க பதிவுகள் உபயோகமாக இருக்கின்றன. டாலரின் பதிவுகளை தொடர்ந்து படித்தேன்.ஆனால் எதை பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே இருக்கின்றன என்று உங்கள் பதிவுகளை படித்துத்தான் அறிந்துக்கொண்டேன்.தொடர்ந்து இந்த அசிங்கங்களை வெளிப்படுத்துங்கள்.

said...

//நல்ல கட்டுரை அசுரன் அவர்களே!

நன்றாக ஒப்பிட்டு எழுதி உள்ளீர்கள். பெண்களின் கற்பு நிலை பற்றிய டய்ண்டு அவர்களின் கருத்துக்களையும் கவனமாக அதே சமயம் நாகரீகமாகவும் கையாண்டு உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

அப்படியே ஒரு "+" குத்து விடுகிறேன்.
///

நாமக்கல் சிபி,

தங்கள் வருகைக்கு நன்றி,
தங்கள் பாராட்டுக்கள் உற்சாகமளிக்கின்றன.

எனது மற்ற கட்டுரைகளையும் வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்களேன்.

அந்த '+' குத்துக்கு ஒரு சிறப்பு நன்றி,... அது ஒரு வெளிக் குத்தாக இருந்தாலும் கூட... :-)))


நன்றி,
அசுரன்

said...

//வெளிநாட்டு மென்பொருள் வல்லுனர்களாகிய எங்களுக்கு தங்களுடைய விளக்க பதிவுகள் உபயோகமாக இருக்கின்றன. டாலரின் பதிவுகளை தொடர்ந்து படித்தேன்.ஆனால் எதை பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே இருக்கின்றன என்று உங்கள் பதிவுகளை படித்துத்தான் அறிந்துக்கொண்டேன்.தொடர்ந்து இந்த அசிங்கங்களை வெளிப்படுத்துங்கள்.
//


குமரேசன்,

தங்களது வருகைக்கு நன்றி....

இந்தக் கட்டுரை என்னை நிரம்பவும் உற்சாகப்படுத்தும் விதமான எதிர்வினைகளைக் கொடுத்துள்ளது.

தங்களுடையதும் அதில் ஒன்று.

மறுகாலனியாதிக்க தாக்குதல் சூழலில், மிக கடுமையான ஆளும் வர்க்க கருத்துப் பின்புலத்திலும் கூட கம்யுனிசம் போன்ற தத்துவங்களை ஜனரஞ்சகமாக தர இயலும் என்ற நம்பிக்கை இந்தக் கட்டுரை மூலம் இன்னும் ஆழமாக என்னுள் உறுதிப்பட்டுள்ளது.


வருகைக்கு மிக்க நன்றி,
அசுரன்

***************

ஐயராமன்,

வாங்க..... எப்படி இருக்கீங்க....? இன்னும் சிறுபிள்ளைத்தனமான வாதத்த வைக்கீறத விடலியா?

என்னோட மத்த பதிவுகள படிச்சு கம்யுனிசம்னா என்ன, கெப்பிடலிசம்னா என்ன, க்யுபா, ரஸ்யா, சீனா பத்தி என்ன சொல்றேன்னு பாத்துட்டு அப்புறம் இன்னொரு முறை விளக்கமான பதில் வையுங்க ஒரு விவாதத்த போட்டு முடிச்சு வைச்சிரலாம்

என்ன சொல்றீங்க.... :-)))

நன்றி,
அசுரன்.

said...

ராதாராகவனின் ஒரு பின்னூட்டம் ஒரு வரி எடிட் செய்து விடப் படுகிறது. அந்த வரியில் பெரிதாக ஒன்றும் இல்லை யெனினும். தோல்வியின் விழிம்பில் உள்ளவர்கள் எதையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தும் அபாயம் உள்ளதால். தற்போதைக்கு சென்சார் கொஞ்சம் கடுமையாக இருக்கும்.

ராதாராகவனின் இந்த கருத்தைப் பிரசூரிப்பதற்க்கு காரணம். அவர் போலியில்லை என்பதை மறுப்பதற்க்கான வாய்ப்பு தரவேண்டும் என்பதே. ஆகவே இந்த விசயத்தில் இனி எந்த விவாதமும் பின்னூட்டங்களும் அனுமதிக்கப்படாது.

அசுரன்
****************

ராதாராகவன் said...

பார்ப்பனர்களுக்கு ஆதரவாக எழுதினால் ஆமாம் சாமி போடுவதும் எதிர்க்கருத்து எழுதினால் அவன் ்போலி, இவள் போலி என பைத்தியம் போல பிதற்றுவதும் இன்று நேற்றா நடக்கிறது? வஜ்ரா, ஜெயராமன் ஆகியோர் வாயை பொத்திக்கொண்டு போவது நல்லது!

said...

இதுவும் சும்மா வெள்ளாட்டுக்கு.....

Related Posts with Thumbnails