TerrorisminFocus

Sunday, June 11, 2006

மாப்ளா கலகமும், மலர்மன்னனும்

மாப்பிள்ளைமார் கலகமும், மாவாட்டும் ம.ம.-வும் (இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கல்)
திண்ணையில் ஏற்கெனவே கற்பக விநாயகத்திடம் வாங்கிய குட்டுகள் போதாது என்று, மீண்டும் மீண்டும் இந்துத்துவ எருமைச் சாணங்களை (Bullshit) போட்டுத் தாக்க முனைகிறார் மலர்மன்னன்(ம.ம.). இந்த முறை(யும்) அது அவருக்கே bounce ஆகி வந்துவிட்டது.

இதுதான் அவரது கட்டுரைக்கான இணையத்தொடுப்பு:

கட்டுரையின் தலைப்பு: நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும் மாப்பிள்ளைமார் கலகம் பற்றி.

மாப்பிள்ளைமார் கலகம் பற்றி இடது சாரி வர்க்கப் போராட்டக் கண்ணோட்டமும், வலது சாரி மத வெறிக் கலவரக் கண்ணோட்டமும் நிலவுகிறது. வலது சாரிக் கூற்றைப் பொருத்த வரை சிற்சில அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்ததாகக் கூறப்படும்(கூறப்படும்) சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டோ , அல்லது சில நேரங்களில் ஏதாவது பேர் தெரியாத பத்திரிகைகளில் வந்த தகவல்களின் அடிப்படையிலோதான் உள்ளது.(எ-கா: Rijiv Srinivasan's articles on Moplah - இந்த கட்டுரைகளுக்கான அவருடைய justification பகுதி காமெடி என்றாலும் அவை இந்துத்துவ வாதிகளின் இரட்டை நாக்கை அம்பலப்படுத்தும் விதமாக உள்ளது) .

அதனால்தான் கடைசிவரை காந்தி அப்போராட்டத்தை மத வெறி என்ற அடிப்படையில் கண்டிக்கவில்லை. தனது கட்டுரை தொகுப்புகளிலும் அதையே அவர் கூறுகிறார். 1940-களில் கூட அதை சுயராஜியத்திற்கான போராட்டம் என்றுதான் கூறுகிறார்.

காந்தி முரண்பட்ட மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் என்றும் பொய் சொன்னதில்லை என்பதிலும் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. எத்தனையோ மக்கள் போராட்டங்களை, அவை வன்முறைப் பாதையை மேற்கொண்டதால் கடுமையாகக் கண்டித்துள்ளார். காந்தி அந்தக் காலகட்டத்தில் என்ன கூறுகிறார்:
"But many letters have since been received by me, some from well-known friends telling one that I was responsible even for the alleged Moplah atrocities,"

அதாவது 'alleged Moplah atrocities'.

சிலர் சொல்லுவது போல் முஸ்லீம், இந்து பகையின் மூலவேர் மாப்பிள்ளைமார் கலகம் என்பதும் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் அதற்கு முன்பே Divide and Rule தந்திரத்தின் பிரகாரம் இந்து முஸ்லீம் ஒற்றுமையை பிளவுபடுத்த British அரசு வேலைகள் செய்யத் தொடங்கிவிட்டது.

இவை எல்லாவற்றுக்கும் முன்பே மலபார் பகுதியில் நடந்த பல போர்களில் மாப்ளா முஸ்லீம்கள் தங்களது வீரம் செறிந்த பங்களிப்பை செய்துள்ளனர். இப்படிப் பல காலமாக மாப்ளா முஸ்லீம்கள் அந்த பகுதியில் இருந்து வரும் வேலையில் மலர்மன்னன் 1921 - மாப்ளா கலகத்தின் போது தான் முஸ்லீம் மத மாற்றம் ஏற்பட்டு நாயர், நம்பூதிரிகளின் எண்ணிக்கை குறைந்ததாகக் கதை விடுகிறார்.

மாப்ளா விவசாய, உழைக்கும் மக்களின் கலை இலக்கிய பங்களிப்பும் கேரள வரலாற்றில் மிக முக்கியத்துவமிக்கதாக இருக்கிறது. மாப்ளா நாட்டுப்புற பாரம்பரியக் கலைகள் அவற்றின் சாரமாக உள்ள வீரத்திற்கும், காதல் ரசத்திற்கும் பெயர் பெற்றவை.

இப்படி செழுமையான வரலாற்றுப் பின்னணியில் நிகழ்ந்த ஒரு கலகத்தை, அதுவும் அந்த கலகம் ஒரு நான்கு ஐந்து தலைமுறைகளாக அந்த பகுதியில் தொடர் கொந்தளிப்பில் இருந்து, கிலாபத் இயக்கத்தின் கடைசி கட்டத்தில் வீரியம் அடைந்த ஒன்றை தனது இந்துத்துவப் பசிக்கு இரையாக்கப் பார்க்கிறார்.

ஒரு விசயத்தை அது நடந்த சூழல், அந்த சூழல் கடந்து வந்த பல்வேறு வரலாற்று கட்டங்கள், அதில் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரிவினரின் சமூக, பொருளாதாரப் பின்னணிகள், அந்த சம்பவத்துடன் தொடர்புடைய அவர்களின் நலன்கள் என்று அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இந்துத்துவ வெறியர்களுக்குத்தான் மத வெறி போதை ஏற்ற ஏதாவது ஒரு துணுக்கு துக்கடா பெட்டிச் செய்தி போதுமே. காமாலைக் கண் பார்வையோடு சாயமடிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதை கேட்டு நம்புவதற்க்கு ஒரு கூட்டம் காத்திருக்கிறது என்றால் அது நம் புத்தகங்களில் வரலாறு என்ற பெயரில் ஒன்றை போதிக்கிறார்களே அதனால் ஏற்ப்பட்ட விளைவு.

முதலில் மாலாபார் கலகத்தின் உண்மையான பின்ணனி என்ன என்று பார்த்து விட்டு, பின்பு அதைப் பற்றி மலர்மன்னன் தன்க்கு ஆதாரமாகக் கூட்டி வந்த கோஷ்டிகளின் லட்சணம் என்ன என்று பார்த்து விடலாம்.
மலாபார் கலகம் - தெளிவுரை:
இந்த எழுச்சி குறிப்பாக 1836 தொடங்கி தனது முழு வீச்சில் 1921 வெடிக்கிறது. ஆனால் 1836க்கு முன்பு இருந்தே அந்தப் பகுதி, தொடர் பிரிட்டிஷ் எதிர்ப்பு கொந்தளிப்பு பகுதியாக இருந்து வந்துள்ளது. அதனால்தான் 1800-ஜுலை மாதத்தில் மலபார் பகுதியை பம்பாய் மாகாணத்திலிருந்து சென்னை மாகாணத்திற்கு மாற்றினார்கள். தெற்குப் பகுதியில் இருந்த மாப்ளா விவசாயிகள் உன்னிமுத்தா, அட்டான் குருக்கள், மற்றும் செம்பான் போக்கர் இவர்களின் தலைமையின் கீழ் கிளர்ச்சி செய்தார்கள். இந்த தெற்கு பகுதி மலபார் மக்களுடன் வடக்கு பகுதி கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதமும், வேறு பல உதவிகளும் செய்து ஒத்துழைக்கிறார்கள். விவசாயிகளின் பொருளாதாரக் கஷ்டங்களுக்குக் காரணமான பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் வரிவிதிப்பு முறைகளால் பாதிக்கப்பட்ட நிலப்பிரபுக்களும் ஆதரவாக உள்ளனர்.

ஆரம்ப காலங்களில் பிரதானமாக நாயர்களும் விவசாயிகளும் இணைந்து பிரிட்டிஷாரை விரட்டி விடுவது என்ற நோக்கில் நடத்தப்பட்டவை தான் இந்தக் கிளர்ச்சிகள். அவற்றின் நோக்கம் பொருளாதர மாற்றமோ, புரட்சியோ அல்ல. மாறாக பிரிட்டிஷாரின் வரிவிதிப்பு முறைக்கு முன்பு இருந்த பழைய நிலப்பிரபுத்துவத்தை மீண்டும் நிலை நாட்டும் நோக்கம்தான் காரணமாக இருந்தது. அதனாலேயே ஆரம்பத்தில் விசுவாசம், சாதிக்கட்டுப்பாடுகள் போன்றவை இந்த கிளர்ச்சிகளுக்கான கலாச்சார ஊற்றுக்கண்ணாக இருந்தன. பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு எதிரான இந்த கலகம் மெதுவாக வர்க்க போராட்ட வடிவத்தை மேற்கொள்ளத் துவங்கியது. 1800 லிருந்து 1836க்கு உள்ளேயே மாப்ளா விவசாயிகள் தங்களது கலகத்தை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மட்டுமின்றி தங்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப் படுத்தி வைத்திருந்த நாயர், நம்பூதிரி நிலப்பிரபுக்கள், பெருவிவசாயிகள் பக்கமும் திரும்பியது. அதாவது தங்களது அரசியல் அதிகாரத்துவ தலைமைக்கு எதிராகவும் விவசாயிகள் போராடத் தொடங்கினர். நிலபிரபுக்கள் மீதான மாப்ளா விவசாயிகளின் தாக்குதலை 'Social Banditry' என்று E.J. Mobsbawm என்பவர் கூறுகிறார்.

(இந்த மேற்சொன்ன விவரங்கள்: Report of the Malabar Committee on the Cotiote Rebellion, (Tamilnadu Archives))

வயநாட்டில் ராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகி அந்த கலகம் நசுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வெல்லஸ்லி பிரபு மலாபாருக்கு வந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான போர்த் தந்திரங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஏற்கெனவே மேலே சொன்னதுபோல் அந்த இயக்கம் ஆரம்ப்பத்தில் ஒரு பிற்போக்குத்தனமான இயக்கமாக இருந்து குறுகிய காலத்தில் வர்க்க போராட்ட வடிவை பெற்றது. ஆனால் அந்த இயக்கத்தின் ஆரம்பத்தில் ஆளுமை செலுத்திய பிற்போக்குத்தனங்களிலிருந்து அது முழுமையாக விடுபடவில்லை. அதனால் சில இடங்களில் மத அடிப்படையில் தாக்குதல்கள் நடந்தன. ஆனால் அந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள்(முஸ்லிம்கள்தான்) தண்டனைக்கு உள்ளானார்கள்(மரண தண்டனையும் கொடுக்கப்பட்டது).

இவை சில விதிவிலக்கான சம்பவங்கள் என்பதையும், அங்கு ஒரு கம்யுனிஸ்ட் கட்சி போன்ற வர்க்க உணர்வு பெற்ற ஒரு உயர்ந்த அமைப்பின் கீழ் விவசாயிகள் திரளவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் ஆய்வு செய்ய நம்ம மலர்மன்னன் கோஷ்டிகளுக்கு என்றைக்குமே விருப்பம் கிடையாது. தீர்ப்பை எழுதிவிட்டு பஞ்சாயத்து செய்வதுதானே இவர்களின் மரபு(மனு தர்மம்).

இக்கலகம் பற்றிய அன்றைய பிரிட்டிஷாரின் மாவட்ட கெசட்டியர் என்ன கூறுகிறது:
"A gigantic popular upheaval the like of which has not been seen in Kerala before or since".

'1921' என்ற பெயரில் மாப்ளா கலகத்தைப் பற்றி மம்முட்டி நடித்த ஒரு மலையாளப் படமும் எடுக்கப்பட்டுள்ளது.
மலாபார் கலகத்தைப் பற்றிய ஒரு பார்வை (மேற்சொன்ன விசயங்களை உறுதிப்படுத்தும் வரலாற்று ஆதாரங்கள்):
* மலபார் மாவட்டங்களில் ஜன்மி (janmi) என்றழைக்கப்பட்ட ஜமீன்தார்களிடம்தான் விளை நிலங்கள் பெரும்பாலான அளவில் இருந்தன. 1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அங்கிருந்த 511 ஜன்மிகளில் (ஜமீன்தார்கள்) 12 பேர் மட்டுமே மாப்ளா முஸ்லிம்கள். ஏனையோர் உயர்சாதி இந்துக்களான நம்பூதிரிப் பார்ப்பனரும், நாயர்களுமே. மலபாரில் 19ஆம் நூற்றாண்டில் சாதி ஒடுக்கு முறை உச்சகட்டத்தில் இருந்ததால் தாழ்நிலையில் இருந்த இந்துக்களான தீயர்கள், செருமர்கள் மற்றும் முக்குவர் ஆகியோர் பெருமளவில் முஸ்லிம்களாக மாறி விட்டனர்.

ஜன்மிகள், இருவேறு வகை குத்தகை முறைகளில் விவசாயிகளுக்கு விளைச்சல் நிலங்களைக் குத்தகைக்கு விட்டிருந்தனர். அவை 1) காணம் (kanam) எனப்பட்ட 12 ஆண்டுகள் வரை ஒருவரே தொடர்ந்து பயிர் செய்தல் 2) வெறும்பட்டம் எனப்பட்ட குறுகிய கால வரம்புக்குள் சாகுபடிக்கு விட்டுப் பின் சம்சாரியை வெளியேற்றுதல்.

* தென்னை,பலா, பாக்கு ஆகிய பணப்பயிர் மகசூல், நெல் மகசூல் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே பயிரிடும் விவசாயிக்கு சொந்தமாகும். மீதம் உள்ள இரண்டு பாகங்களை ஜன்மிக்களும், பிரிட்டிஷ்-கிழக்கிந்தியக் கம்பெனியும் எடுத்துக் கொள்ளும்.

* மலபார் மாவட்ட நிர்வாகத்தின் ஆவணங்கள் குறிப்பிடும் 19ஆம் நூற்றாண்டு உழவர் நிலை மிகவும் பரிதாபமானது.1813ஆம் ஆண்டு, மலபார் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகாவில், அரசால் விதிக்கப்பட்ட அதீத நிலவரியை மாப்ளா விவசாயிகளால் கட்ட வழியில்லாததால், அந்தத் தாலுகாவி஢ல் மட்டும் 203 குத்தகை விவசாயிகளின் சொத்துக்கள் அரசால் ஏலம் விடப்பட்டுள்ளன.

* 1813லிருந்து 1821 வரை உள்ள காலகட்டத்தில் வரி கட்ட முடியாமல் விற்கப்பட்ட நெல் சாகுபடியாகும் நன்செய் வயல்களின் எண்ணிக்கை மட்டும் மலபார் மாவட்டங்களில் 1225 ஆகும்.

* கஷ்டப்பட்டு உழைத்த விவசாயிகளின் உழைப்பை பிரிட்டிஷாரும், உள்நாட்டு நம்பூதிரி ஜன்மிகளும் வகைதொகை இன்றிச் சுரண்டினர். திப்பு சுல்தானிடமிருந்து, மைசூர் போர்களின்போது மலபார் பகுதி பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட பிறகு விளைச்சல் நிலங்களோ, விளைச்சலோ அதிகரித்திடாதபோதிலும் கூட திப்புவின் அரசைக் காட்டிலும் கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டது. 1821ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த்துறை ரூ94,749 ஐயும், அதே நிலங்களில் இருந்து 1900 ஆம் ஆண்டில் 77சதவீதம் கூடுதலாக பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் இருந்த சென்னை மாகாண வருவாய்த்துறை ரூ 1,353,890 ஐயும் மலபார் பகுதியில் வசூலித்தது என்பதில் இருந்து எந்த அளவுக்கு அவ்விவசாயிகள் ஒட்ட உறிஞ்சப்பட்டனர் என்பது புலனாகும். கொடுமையான இவ்வரிவிதிப்பு விவசாயிகளின் நிலைமையை மேலும் மோசமாக்கி வந்தது.

* கம்பெனி ஆட்சியில் உழுபவர்கள் விளைச்சலில் 33% (மூன்றில் ஒன்று) அனுபவித்தனர். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்-கம்பெனி ஆட்சி மாறி பிரிட்டிஷ் இந்திய அரசின் ஆட்சி வந்த பின் இன்னும் மோசமானது. இப்போது உழவருக்கு கிடைத்த அறுவடையின் பங்கோ 12 சதவீதம் மட்டுமே. இந்தச் சரிவும் உழவர் கலகத்துக்கு வலுவான காரணியாய் அமைந்தது.

* மலபாரில் 1862க்கும் 1880க்கும் இடைப்பட்ட காலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தில் இருந்து துரத்தப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 91,720 ஆகும். ஒவ்வொரு வருசமும் 20 குத்தகை விவசாயிகளில் ஒருவர் ஜமீன்தார்களால் விளைநிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார். சாகுபடியில் ஈடுபட்ட இவ்வுழவர்களுக்கு, முறையான ரசீதோ அல்லது பத்திரமோ தரப்படாததால், நீதிமன்றத்தில் படிப்பறிவற்ற இவர்களின் குரல் எடுபடவில்லை.

* லோகன் எனும் பிரிட்டிஷ் அதிகாரி 1881ல் மலபார் விவசாயிகளிடம் நிகழ்த்திய நேர்காணலின்படி 7994 குத்தகையாளர்களில் 4401 பேர் கடனாளிகளாய் ஆகி விட்டனர். அவர்கள் 12 முதல் 36 சதவீதம் வரை வட்டியுடன் கட்ட வேண்டிய கடன் தொகை மட்டும் ரூ 17 லட்சம் என்பதும் தெரிய வந்தது.

* 14,அக்டோபர் 1880 ல் அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள், நாயர்கள், தீயர்கள் கூட்டாக சேர்ந்து மனு ஒன்றை அனுப்பினர். அம்மனுவில் மலபார் ஜமீன்களின் சுரண்டலும், அதனால் நசுங்கிக் கொண்டிருக்கும் ஏழைக் குடியானவர்களின் பரிதாப நிலைமையும் விவரிக்கப்பட்டிருந்தன. அச்சுரண்டலைக் கட்டுப்படுத்திடவும் ஜமீன்களின் அராஜகத்தைத் தடுத்திடவும் மாட்சிமை தாங்கிய மன்னரின் தயவையும் நாடி இருந்தனர் அவர்கள். உடனே சில விசாரணைக்கமிசன்களும் அதன் பின்னர் 1887ல் மலபார் குத்தகைதாரர் மேம்பாட்டுச் சட்டமும் இயற்றப்பட்டது. (இச்சட்டம் 1920களில் நிறைவேற்றப்பட்ட மலபார் குடிவாரச் சட்டத்தில் இருந்து வேறுபட்டது. அச்சட்டம், மலபாரில் இருந்த நம்பூதிரிகள் அவர்களின் வைப்பாட்டிகளுக்கும், வைப்பாட்டிகளின் பிள்ளைகளுக்கும் குடிவார உரிமை தரக் கொண்டுவர உதவியது.)

இக்குத்தகைதாரர் மேம்பாட்டுச் சட்டத்தை, நம்பூதிரி ஜமீன்கள், கழிவறைக் காகிதமாகவே மதித்தனர். இச்சட்டம் வரும் முன்னர், குத்தகை நிலத்தில் உரிமை பறிக்கப்பட்ட உழவர்களின் எண்ணிக்கை 2039 ஆக இருந்தது. (1862 ஆம் வருடக் கணக்கு). சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகோ, துரத்தப்பட்ட உழவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேலாகி 4620 ஐத் தொட்டது. (இது 1892 ஆம் ஆண்டுக் கணக்கு). இதிலிருந்தே இச்சட்டத்தை நம்பூதிரிகள் எந்தளவு நடைமுறையில் மதித்தனர் என்பது தெளிவாகும். நட்ட ஈடு ஏதும் தராமல் 1890ல் 77 சதவீதம் பேரையும்,1891ல் 76 சதவீதம் பேரையும், 1892ல் 75% பேரையும் குத்தகை உரிமையில் இருந்து விரட்டினர், ஜமீன்கள். சில இடங்களில் விதி விலக்காகத் தரப்பட்ட நட்ட ஈடோ சராசரியாக ரூபாய் 169 ஆக மட்டுமே இருந்தது. (இது 1890 -92 ஆம் வருசக் கணக்கு. இதே காலகட்டத்தின் பண மதிப்பைத் தெரிந்து கொள்ள பின்வரும் தகவல் உதவலாம். 800 சதுர அடி கொண்ட ஒரு குடிசை வீடு அக்காலகட்டத்தில்-1885ல்- ரூபாய் 100க்கு அடமானம் வைக்கப்பட்டது, திருநெல்வேலி மாவட்டம் ஒன்றில்). இத்தொகை, கந்து வட்டிக்காரனுக்குத் தரக்கூடப் போதவில்லை என்பது வெளிப்படை.

* இவ்வாறு பலவழிகளிலும் சுரண்டலுக்கு ஆளான மாப்ளா விவசாயி, தம்மை நேரடியாகச் சுரண்டி வந்த ஜன்மிகளை அழித்து ஒழித்திட முயன்றனர். அம்மோதல்களில் அடையப்போகும் சாவை 'வீரச் சாவாகவும்', அவ்வாறு அநியாயவான்களை அழித்து விட்டு மாண்டு போனால் சொர்க்கம் உறுதி என்றும் மாப்ளா முஸ்லிம் விவசாயிகள் நம்பினர். அவ்வாறு முடிவு செய்து மோதலுக்குக் கிளம்பும் முன் தன்னைச் சார்ந்துள்ள மனைவியை 'மணவிலக்கம்' செய்துவிட்டு, யாரைக் கொல்லப்போகிறோம் என்பதையும் பகிரங்கமாக அறிவித்து விட்டுக் கிளம்பிய செயலை பிரிட்டிஷ் ஆவணங்கள் 'நேர்ச்சை' சடங்குடன் ஒப்பிடுகின்றன. நிலப்பிரபுவை அவனுடைய வீட்டுக்குள்ளோ அல்லது கொல்வதற்குத் தோதானதொரு இடத்திலோ நேருக்கு நேர் பொருதி அழித்தனர். காரியத்தை முடித்த பின்னர் போலீசுக்குப் பயந்து ஓடிய சம்பவங்கள் ரொம்ப சொற்பமே. எல்லா இடங்களிலும் அநேகமாய் போலீசின் துப்பாக்கிக் குண்டில்தான் வீரச் சாவை அடைந்தனர் அந்த ஏழை விவசாயிகள்.

* மலபார் உழவர் எழுச்சியை அவர்கள், 1837 ஏப்ரல் 15ஆம் நாள் எரநாடு தாலுகாவிலுள்ள செங்கர அம்சம் ஜமீன்தாராய் இருந்த ஒரு நம்பூதிரிப் பார்ப்பனரைக் கொன்றதில் ஆரம்பித்து வைத்தனர். பின்னர் கிட்டத்தட்ட நாலு தலைமுறைகளாய் அது தொடர்ந்தது.

1885ல் செம்பரச்சேரியிலும், 1894, 1898 ஆகிய இரு ஆண்டுகளில் பந்திக்காடிலும், 1896ல் வாண்டூரிலும் பெரிய அளவில் கலகங்கள் நடந்தன.
இக்கலகங்களில் போலீசால் கொல்லப்பட்ட விவசாயிகள், 'வீரத் தியாகிகள்' ஆகி, வெகுஜனங்களிடையே ஆதர்ச நாயகர்களாய்ப் புகழ் பெற்றனர். அவர்களைப் புகழும் பல நாட்டார் கதைப் பாடல்கள் இன்னும் காற்றில் கலந்து நிறைந்துள்ளன.

* நிலப்பிரபுக்கள் தாக்கப்படுவது 1837 முதல் அதிகரித்த வண்ணம் இருக்கவே, அப்பிரபுக்களின் நலன் காத்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, தாக்கிய விவசாயிகளின் கிராமத்திற்கு ஒட்டு மொத்தமாய் தண்ட வரி விதித்தது. தனிப்பட்ட உபயோகத்திற்காக உழவர்கள் வைத்திருந்த வெட்டுக்கத்தியைத் தடை செய்தது. (அத்தடை இன்னமும் தொடர்கிறது - அதாவது 30 செண்டி மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட கத்திக்கு லைசென்சு வாங்க வேண்டும்-கம்பெனி ஆட்சி மாறி,பிரிட்டிஷ் இந்திய அரசு வந்து, பின்னர் டில்லியை மையம் கொண்ட ஏகாதிபத்திய அடிவருடி ஆட்சி வந்தும், சென்னை மாகாணம், தமிழ்நாடாக மாறியும், ஆளும் வர்க்க நலன் காக்கும் 'வெட்டுக்கத்தி'த் தடை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது) அந்தத் தடையையும் இன்னபிற ஒழுங்கு நடவடிக்கையையும் செய்ய 1854ல் சென்னை மாகாண அரசு (அதாவது கிழக்கிந்தியக் கம்பெனி) 'மாப்ளா போர்க்கத்திச் சட்டம்' ஒன்றை இயற்றியது. இச்சட்டம் கடுமையாக அமுலுக்கு வந்ததும் மாப்ளாக்களின் கோபம், கம்பெனியார் மீது திரும்பியது. அப்போது மலபார் பகுதியில் ஜில்லா மாஜிஸ்திரேட்டாகப் பணிபுரிந்த H.V.கனோல்லி 1855 ஆம் ஆண்டில் மாப்ளாக்களால் கொல்லப்பட்டார்.

* சாகுபடி நிலத்திலிருந்து துரத்தப்பட்ட 19 மாப்ளாக்கள், குளத்தூர் எனுமிடத்தில் ஆகஸ்ட் 1851ல், சுரண்டலில் திளைத்துக் கொழுத்த இந்து நிலப்பிரபுக்கள் நால்வரைக் கொன்றனர். இந்துக்கள் பெருமளவில் செறிவாய் வசிக்கும் பகுதியில் நுழைந்த இவர்கள் முதலில்அங்கிருந்த 'கொட்டுப்பரம்பத்து கோமு மேனனை'யும், குளத்தூர் வாரியரை இறுதியிலும் அழித்தொழித்தனர். அவர்கள் அழிந்த பிறகு முதற்காரியமாய் அவர்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும், வரவு செலவுப் புத்தகங்களையும் தீயிட்டுப் பொசுக்கினர். அந்நால்வரின் குடும்பத்தினர் எவருக்கும் சிறு அளவில் கூட காயம் ஏற்படுத்தவில்லை. குளத்தூர் வாரியர் அழிக்கப்படும் முன் அவரின் குழந்தைகளையும், மற்ற உறவினரையும் அவ்வீட்டை விட்டு வெளியேறச் செய்து விட்டே வந்த காரியத்தை முடித்தனர்.

1921லே அது மிகவும் பெரிய அளவில் பிரிட்டிஷ் அரசையே ஆட்டிப் போடும் அளவிற்குப் பெரிதானது. மலபாருள் பிரிட்டிஷ் ராணுவம் நுழைந்து அதன் ராட்சச பலத்தினால், ரத்தச் சகதியுள் அந்த ஏழை விவசாயிகளைச் சுட்டுப் பொசுக்கும் வரை அந்த நாலு தலைமுறைக் கோபம் தீயாய்ப் படர்ந்து வந்தது. 1837லில் ஆரம்பித்த எழுச்சித் தீ, தான்தோன்றித்தனமாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தனி நபர்களைக் கொல்வதும், உடன்விளைவாய் அரசு அடக்குமுறைக்குப் பலியாவதும் தொடர்ந்தது. ஆனால் 20, ஆகஸ்ட் 1921ல் திரூரங்காடியை மையமாகக் கொண்டெழுந்த அப்புயலில், உழவர்களின் கோபத்தை முறைப்படுத்தி அவர்களுக்கு தலைமை தாங்கிட மத குருமார்கள் முன்வந்தனர். அப்போது அது 'கிலாபத்' இயக்கத்தின் விளைவாக ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் ஏந்தி இருந்தது. அன்றைய சூழலில் காந்தியின் 'தேசிய' இயக்கம், கோழிக்கோட்டின் புறநகர் எல்லையைக் கூடத் தாண்டிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. எனவே காங்கிரசுக் கமிட்டியால் அத்தனை தெளிவாய் நடந்ததை உணர வாய்ப்பே இல்லை.

* வரியம்குன்னத்து குன்ஹாமது ஹாஜி, காலத்திங்ஙள் முகம்மது, சித்திகோயா தங்ஙள் மற்றும் இம்பிச்சிக்கோயா தங்ஙள் ஆகியோர், நிலப்பிரபுக்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட சுதந்திர சுயராஜ்ஜியத்திற்கு தலைமை ஏற்று, கட்டுப்பாடான சுய நிர்வாகத்தை ஏற்படுத்தினர். பிரிட்டிசாரிடம் இருந்து நாட்டை மீட்டு, மக்கள் அரசை நிர்மாணம் செய்ய அழைப்பு வ்஢டுத்தனர்.

*காவல் துறைக்கு ஆள் எடுத்தனர். குற்றவியல் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. வருடாந்திர வரி நிர்ணயம் செய்யப்பட்டது. சாகுபடியாளர்களே, ஜமீன் நிலங்களை அனுபவித்து, அறுவடை செய்ய உரிமை வழங்கப்பட்டது. மலபார் மக்களுக்கு தனியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்து,முஸ்லிம் பாரபட்சம் இல்லாத ஒரு அரசு ஸ்தாபிக்கப்பட்டது.

*1921 எழுச்சியில் சில இடங்களில் நடந்த அத்து மீறல்களும், கொள்ளைச் சம்பவமும் விசாரிக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. அப்பாவி மக்களிடம் முறைகேடாக நடந்தவர்கள், பொது வீதிகளில் வைத்து உதைக்கப்பட்டனர். கொள்ளைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குன்ஹம்மது ஹாஜி, எரநாடு தாலுகாவிற்கு நேரில் சென்று, இந்துக்களுக்கு எதிரான அத்துமீறல்களை விசாரித்தார். அப்போது சாத்தன்கோடு எனும் ஊரைச் சேர்ந்த C.கோபால பணிக்கர் என்பவர் எழுதிய ஆவணத்தில் இருந்து:

"வரியம்குன்னத்து குன்ஹம்மது ஹாஜி, மாப்ளாக்களிடம், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் தன் முன் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். குஞ்சாலி என்பவனைத் தவிர மற்றவர்கள், தாம் கொள்ளையிட்ட பொருட்களை ஹாஜி முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். குஞ்சாலி மட்டும், தாம் கொள்ளையடிக்கவில்லை எனப் பிடிவாதம் செய்தான். அவனுக்கு 125 கசையடிகள் கொடுக்கப்பட்டதும், உள்ளதை ஒத்துக் கொண்டு பொருட்களைத் திருப்பித் தந்தான். அவை மாரத்து நம்பூதிரியிடமும்,காவுக்கள் நம்பூதிரியிடமும் காட்டப்பட்டு, அவை அவர்களுக்கு உரியவைதானா என்பதும் விசாரிக்கப்பட்டுத் திருப்பித் தரப்பட்டன. குன்ஹம்மது ஹாஜி, இந்துக்களுக்குப் பாதகமாய் ஏதும் செய்திடவில்லை"

* சென்னை உயர்நீதி மன்றத்தில் 1921 கலகத்தினை அடுத்து நடந்த 100 குற்றவியல் வழக்குகளில், 14 வழக்குகள் இந்து விவசாயிகளுக்கு எதிராக நடந்தன. அவர்கள் செய்த குற்றமாக, இந்து ஜமீன்தார்களைத் தாக்குவதில் இறங்கியதும், அந்த ஜமீன்தார்களின் வீடுகளைக் கைப்பற்றியதும் அரசால் வழக்கில் சொல்லப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இக்கலகத்தின்போது ஜமீன் / பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகவும், மாப்ளாக்களுக்குத் துரோகம் செய்தும் இருந்த நபர்கள் கலகக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அல்லது கடும் தண்டனைக்கு உள்ளாயினர். அவ்வாறு தண்டிக்கப்பட்ட / கொல்லப்பட்ட மக்களில் முஸ்லிம்கள் பின்வருமாறு.

1) கான் பஹதூர் ஷேக் குட்டி (ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர்)
2)இத்தூரு ஹாஜி (புகழ் பெற்ற அலோபதி மருத்துவர்)
3)அட்டன்
4)இஸ்மாயில்
5)கம்முண்ணி ஹாஜி
6)மம்மூ
7)குன்ஹம்மூ ஷேக்
8)கயிசேரி மொயிதீன்
9)காக்கப்ப வீரன் ஹாஜி
10) காரேத்து குன்ஹிகோயா

இவர்களைத் தவிர துரோகம் / காட்டிக்கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்காக செம்பரச்சேரி தங்ஙள், இந்துக்கள் 38 பேருக்கு மரண தண்டனை விதித்தார்.
(மேற்கண்ட ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல் "Peasant Protests and Revolts in Malabar" Edited by K.N.Panikkar - people's publishing House)

இவ்வெழுச்சியை மத துவேசமாகப் பார்க்கும் மாலைக்கண் பார்வைக்கு மேற்சொன்ன புள்ளிவிவரமே அருமருந்தாகட்டும்.

* ஒரு வரலாற்றை வெறும் துணுக்குகளாக மட்டும் பார்த்துவிட முடியாது (கருத்துக்கு "பி.ஏ.கிருஷ்ணனுக்கு" நன்றி). 40 வருசத்துக்கு முன்னாடி, சினிமா என்றால் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு முதியவர் சினிமா தியேட்டருக்குப் போனாராம். அப்போது தியேட்டரில் ஜெமினி நிறுவனம் தயாரித்த படம் ஓடிக்கொண்டிருந்ததாம். படம் ஆரம்பிக்கும்போது இரு சிறுவர்களின் சிலை, குழல் ஊதும் காட்சி வந்திருக்கிறது. பெரியவர் உடனே நல்ல தூக்கம் போட்டு விட்டாராம். படம் முடியும்போது எழுப்பி விட்டார்களாம், பக்கத்தில் இருந்தவர்கள். படம் முடியும்போதும் அதே குழல் ஊதும் காட்சி வந்திருக்கிறது. வீட்டில் மனைவியிடம் "ரெண்டு சின்னப்பயலுவ கோவணம் கட்டிக்கிட்டு குழல் ஊதறதப் போயி படம் எடுக்கானுவ.இதப் போயியும் நம்மாளுக பாத்துட்டு வருது. காலக் கொடுமை" எனச் சொன்னாராம். ம.ம.வும் மலபார் எழுச்சியை இப்படித்தான் பார்த்து இருக்கிறார்.
+++++++++++++++++++
சாட்சிகளின் தராதரம்:
அன்னி பெசன்ட் அம்மையார் Theosophical society-ல் தன்னை இணைத்துக் கொண்ட காலம் முதல் கொண்டு பார்ப்பனப் பண்பாட்டுக்கு ஒத்து ஊதுகின்ற வேலையை, திலகருடன் சேர்ந்து மிகச் சிறப்பாக செய்கிறார். அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது 'இந்துத்துவ மறுமலர்ச்சி' என்ற குண்டுச் சட்டிக்குள் ஓடிய குதிரைதான். இந்த கருத்தாக்கத்தை முதல் உலகப்போரை ஒட்டிய அவரது பல்வேறு கட்டுரைகளில் காணலாம். பிரிட்டிஷ் வெள்ளை-இன பண்பாட்டு மாயையிலிருந்து இந்தியா துயிலெழ வேண்டிய நேரம் இதுதான் என்று அழைக்கிறார்(அது நல்ல விசயம்தான் ஆனால் அதற்கு மாற்றாக அவர்கள் வைக்கும் கலாச்சாரம் இன்னொரு வெள்ளையாக இருந்ததுதான் பிரச்சனை).
அன்னி பெசன்ட் அம்மையார் தனது home rule இயக்கத்துக்காகவும், சமூக சீர்த்திருத்த கருத்துக்களுக்காகவும் பிரபலமானவர். அந்த இரண்டு பிரபலமான விசயங்களுக்கு பின்புலமாக இருந்த இயங்கியல் என்ன என்று பார்ப்போம்.
1904-ல் பண்டித ராமாபாய் அம்மையார் அன்னி பெசன்ட் பற்றி என்ன கூறுகிறார்:
"Sometimes it looks as if the world is going backwards, when one hears an English woman like Mrs. Besant declaring that Hindu widows should never marry again."
இந்த அன்னி பெசன்ட்தான் ஐரோப்பாவில் பெண்ணுரிமைகளுக்காக முன்னோடியாக நின்று போரடினார். அன்னி பெசன்டின் இந்த முரண்பட்ட நிலையை அவரைப் பற்றிய பின்வரும் சில கருத்துக்கள் விளக்கும்:
Nethercot wrote, she knew "how to wear sandals in India and shoes in the rest of the world."In Sri Lanka, the Buddhist ideologue Anagarika Dharmapala also noticed this difference and said that while Besant was preaching "gentleness and obedience" to Indians, she supported the militant suffragettes in England".
இந்தியாவுக்கு அன்னிபெசன்ட் homerule இயக்கம் கண்ட லட்சணம் இதுதான். அதாவது 'preaching "gentleness and obedience" to Indians'. அதே நேரத்தில் இங்கிலாந்துக்கு அவர் கூறுவது தீவிர போரட்ட நடவடிக்கைகள்.
மேலும் அவர்களிடையே homerule இயக்கத்தை 'பெரும் மக்கள்' இயக்கமாக நடத்துவதா அல்லது பிரிட்டிஷ் அரசிடம் சலுகைகள் பெற்று ஓட்டு சீட்டு அரசியல் நடத்துவதா என்று குழப்பம் வேறு இருந்தது.
அன்னி பெசன்ட் தனது homerule இயக்கத்தில் பெண்களின் விடுதலைக்கு ஒரு குரல் கொடுக்கக் கூட தயாராயில்லை. இதே நேரத்தில் இங்கிலாந்து சென்று அம்மையார் என்ன கூறுகிறார்:
"the only live movement in the world today is the Women's Movement".
ஆக அந்த அம்மையாரின் கண்களுக்கு homerule இயக்கம்(movement) கணக்கிலேயே வரவில்லை. அதனால்தான் முகமூடி என்கிறோம்.
home rule இயக்கம் என்பது பொருளாதார பிரச்சனை என்பதலிருந்து பிரதானமாக 'cultural rejuvenation'- கலாச்சார மறுமலர்ச்சி என்ற அன்னி பெசன்டின் agenda வுக்கு சென்றதுதான் அது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மலரவில்லை.
அன்னி பெசன்டே அந்த இயக்கம் மதச் சாயம் பூசத் தொடங்கிவிட்டதை கூறுகிறார்:
"Home Rule has become so intertwined with Religion, by the prayers offered up in the great Southern Temples, -- sacred places of pilgrimage - and spreading from them to village temples, and also by its being preached up and down the country by Sadhus and Sanyasins."
இந்தியாவைப் பொறுத்தவரை அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு இப்படி இந்துத்துவ ஓட்டுக்குள் ஒடுங்கிய நத்தையாகிப் போனதில் யாருக்கு லாபம் இருந்ததோ இல்லையோ பிரிட்டிஷ் அரசுக்கு நல்ல லாபம். ஏற்கெனவே ஒரு நல்ல முகமூடி தேடி அலைந்தவர்களுக்கு காங்கிரசு முகமூடி பிடித்து தரும் ஏஜன்ட் ஆக மிகச் சிறப்பாக வேலை செய்த வந்த நிலையில். அப்படி கிடைத்த ஒரு சிறப்பான முகமூடிதான் அன்னி பெசன்ட்(அதற்கு அப்புறம் ever shining முகமூடியாக பாவம் காந்தி சிக்கிக்கொண்டார்).
அவரது மக்கள் விரோத பார்ப்பன பண்பாட்டு அடிப்படையை, அவரது உழைக்கும் வர்க்கம், ஏழைகள் பற்றிய இழிவான கண்ணோட்டத்தை அவரது 'Indian Review' - February 1909 பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை தெளிவுபடுத்துகிறது. இக்கட்டுரையின் பகுதிகள் "காந்தியும், காங்கிரசும் தீண்டத்தகாதவர்களுக்கு செய்தது என்ன? " என்ற அம்பேத்கரின் புத்தகத்தில் வெளிவந்துள்ளன.
அன்னி பெசன்டுக்கு நிலையான ஒரு சித்தம் கிடையாது. இவரது வாழ்க்கையைப் பார்த்தால் அது தெரியவரும். ஒரு 14 வயது சிறுவனைப் பார்த்து அவர்தான் கடவுளின் பிரதிபிம்பம் என்றவர்தான் இந்த அம்மையார். காந்தி ஒரு சக்தியாக வளர்ந்து வரும் நிலை(காந்திக்கும் இவருக்கும் இடையிலான சண்டை ஒரு கிளைக்கதை), இவரது homerule இயக்கம் மறைந்து வரும் நிலை, நிலையற்ற, தெளிவற்ற முன்னுக்கு பின் முரணான இவரது சிந்தனை, இவரது இந்துத்துவ அடையாளம் இவையெல்லாவற்றையும் சேர்த்துதான் இவரது வார்த்தைகளை எடை போட வேண்டியுள்ளது.
ஆக இதுதான் அன்னி பெசன்ட். அவரது எந்த ஒரு நடவடிக்கையும் அந்த வட்டத்தை தாண்டி வந்ததேயில்லை. இந்த பின்னணியில்தான் அவரது மாப்ளா கலகத்தைப் பற்றிய கூற்றை நாம் ஆராய வேண்டியுள்ளது. காங்கிரசு பிரமுகர் மாதவன் நாயர் எப்படிப் பட்டவர். அவர் homerule இயக்கத்தின் தீவிர விசுவாசி. ஆக அவரையும் அன்னி பெசன்டையும் தனித் தனியாக உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுய அவசியம் இல்லை.
அவர் மற்றும் மாதவன் நாயரினுடைய அறிக்கைகளில் உள்ள மத வெறி தாக்குதல் என்று கருதக்கூடிய சம்பவங்கள் ஒரு சில ஆதாரமில்லா கூற்றுகளின் அடிப்படையில் தான் உள்ளன. அப்படிப் பட்ட குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் அவை உண்மையா என்று ஆராயப்படும் போது குற்றச்சாட்டுகளை வைத்தவர்களின் யோக்கியதையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
மக்கள் விரோதமாக செயல்படுவது என்றால் மதம், இனம் என அனைத்து வேறுபாடுகளையெல்லாம் களைந்து பாசிச சக்திகள் ஒன்றுபடும் என்பதற்க்கு இந்த வரலாற்று சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

31 பின்னூட்டங்கள்:

said...

நல்லவேளை, இத்தனை சான்றுகளையும் ஓர் அசுரனால் திரட்டிவிட முடிகிறது - அவை ஏதோ ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாலும். இல்லையெனில், "மாப்ளா கலகம் என்பது ஒரு மதமாற்ற நிகழ்ச்சிதான்" என்று மவுண்ட் பேட்டனே ம.மவுக்காகப் பேசினாலும் பேசுவார்.

said...

மலர்மன்னன் என்ற இந்துத்துவ வெறியரைப் பற்றி மீன்சாப்பிடும் மலர்மன்னன் என்ற பதிவு எழுதி இருக்கிறேன்.

எனது பல பதிவுகளையும் திண்ணைக்கு எழுதி இருக்கிறேன். ஆனால் பார்ப்பன இணையமான திண்ணை ஒரு பதிவைக்கூட பிரசுரித்தது இல்லை.

அடுத்த பதிவுகூட திண்ணையையும் ராஜாராம், பிகேஎஸ் போன்ற பார்ப்பனர்களின் பார்ப்பன தீவிரவாதத்தினை எதிர்த்து எழுதலாம் என இருக்கிறேன்.

said...

Karpaga Vinayagam gave lots of inputs to write this article:

Recently he sent a mail to me, in that he mentioned some more points about Annie Besant that exposes her Anti people stands:


1) "பஞ்சாப் படுகொலையானபோது ஸ்ரீமதி பெசண்டம்மையார் "ஜாலியன் வாலாபாக்கில் நிராபதிகளை டயர் சுட்டது சரி; இவர்கள் கல்லு போட்டார்கள்; அதற்கு டயர் குண்டு போட்டார்;இதிலொன்றும் தப்பில்லை" என்று சொன்னார்.அதைப் பற்றிக் கேட்பாரில்லை. அவருடனும் அந்தம்மாள் கக்ஷியிலும் அநேக பெரிய "மதிப்பு வாய்ந்த" பிராமணர்கள் சூழ்ந்து கொண்டு சபை நடுவிலிருத்தி ஆட்டத்துக்குத் தகுந்த தாளம் போடுகிறார்கள். ஏன்? அந்தம்மாள் பிராமணர்களுக்கு அநுகூலமாய் இருந்து கொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்கிறார். தனக்குள்ள செல்வாக்கை பிராமணர்களுக்கு உத்தியோகங்கள் வாங்கிக் கொடுப்பதிலும் அதற்குத் தகுந்த திட்டம் போடுவதிலும் சிலவிடுகிறார். அல்லாமலும் ஜாலியன்வாலாபாக்கில் குண்டுபட்டு இறந்த குழந்தைக் குட்டிகளும் அவமானப்படுத்தப்பட்ட பெண்களும் ஏறக்குறைய எல்லோரும் பிராமணரல்லாதவர்கள். ஆதலால், அந்தம்மாளுக்கு பிராமண அநுசரணை தாராளமாய் இருக்கிறது" - சொன்னவர் பெரியார். (குடியரசு 18/04/1926)

******************************************************************************

This Exposes her on Working people and Dalits:

2) அம்பேத்கர், அன்னிபெசண்ட்டின் குணாம்சம் குறித்து,தனது "காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்கு செய்தது என்ன?" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:

"எனக்கு தெரிந்த வரை அவர் (அன்னிபெசண்ட்) தீண்டாதவர்கள்பால் பெரிதும் குரோதமே கொண்டிருந்தார். தீண்டாதவர்களின் குழந்தைகளைப் பொதுவான பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாமா? கூடாதா? என்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது 1909 பிப்ரவரி, இண்டியன் ரெவியூ இதழில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம் என்ற கட்டுரையில் திருமதி அன்னிபெசண்ட் கூறியதாவது:

"ஒவ்வொரு தேசத்திலும் பெரும் மக்கள் பிரிவு ஒன்று சமுதாயக் கோபுரத்தின் அடித்தளமாய் அமைந்திருக்கக் காணலாம்; இம்மக்கள் அறிவில்லாதவர்கள், இழிவானவர்கள், மொழியிலும் பழக்க வழக்கங்களிலும் அசுத்தமானவர்கள்; இவர்கள் பல வேலைகள் செய்கின்றனர். இந்த வேலைகள் சமுதாயத்துக்கு அவசியமாய் இருந்தாலும் எந்தச் சமுதாயத்தின் தேவைகளுக்குப் பயன்படுகின்றனவோ அதே சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்படுகிறவை. ......
.....சமுதாயத்தின் நாதியற்றவர்கள், குடி காரர்கள், சோம்பேறிகள், ஒழுக்கம் கெட்டவர்கள், ஊர் சுற்றிகள், தெருப் பொறுக்கிகள், ஏடா கூடமான குற்றவாளிகள், முரடர்கள் எல்லாரும் இக்கீழ்வகுப்பில் போய் சேர்ந்து அதன் படு மோசமான பகுதியாய் அமைந்துள்ளனர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குழந்தைகளுக்கு சுத்தமாய் இருக்கவும், வெளியில் நாகரீகமாய் நடந்து கொள்ளவும் முதலில் கற்றுத்தர வேண்டும். கல்வி, சமயம், அறநெறி இவற்றின் ஆரம்பக் கூறுகளை அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும். இப்போது அவர்களின் உடலில் துர்நாற்றமும், சாராய வாடையும் பல தலைமுறைகளாக அவர்களை வளர்த்து உருவாக்கியிருக்கும் உணவின் வீச்சமும் உள்ளன.
சில தலைமுறைகளுக்குத் தூய்மையான உணவை உட்கொண்டு தூய்மையாக வாழ்ந்த பிறகுதான் அவர்களின் உடல், பள்ளிக்கூட வகுப்பறையில் மற்ற குழந்தைகளோடு நெருங்கி அமர்வதற்கான தகுதியைப் பெறும். அதன் பிறகுதான் உடல் தூய்மையைப் பேணிக் காக்கும் பழக்கங்களில் பயிற்றுவிக்கப்பட்டுத் தூய உணவுப் பண்டங்களை உண்டு வளர்ந்த பரம்பரையிலிருந்து வரக் கூடிய குழந்தைகளோடு அவர்கள் நெருங்கி அமர்ந்து படிக்க முடியும். தாழ்த்தப்பட்ட வகுப்பினரை உடல் தூய்மையில் மற்றவர்களுக்கு இணையான நிலைக்கு நாம் உயர்த்த வேண்டுமே தவிர, சுத்தமானவர்களை அழுக்கடைந்தவர்களின் நிலைக்குத் தாழ்த்தி விடக் கூடாது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை இவ்விதம் உயர்த்தும் வரை, அவர்கள் மற்றவர்களோடு நெருங்கி உறவாடுவது விரும்பத்தக்கதல்ல."

******************************************************

3) Thiru Vi.Ka. supported Besant but V.O.C. opposed Besant and VOC arranged a separate meeting to criticize Besant.

VOC exposed Besant that she was serving actually to imperialistic forces and she was diluting the anger against imperialism.
(Ref: Autobiography of Thiru Vi.Ka.)
++++++++++++++++++++++++++++++

Now we can assess her reports on Moblah rebellion.

said...

தங்கள் வரவுக்கு நன்றி அழகு!

என்ன செய்ய பெரியார் இல்லாது போனது, பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு குளிர் விட்டு போய் விட்டது. பெரும்பான்மை மக்கள் உழைக்கும் கூட்டமாய் இந்த தேசத்துக்கு, இந்த உலகத்துக்கு தெவையான பொருட்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் பொழுது, உட்கார்ந்த இடத்திலேயெ தின்று கொழுத்த வர்க்கம், தனது பழைய பொற்காலத்தை(பார்ப்பன பொற்க்காலம்) மீண்டும் நிலைநாட்ட வெறியோடு இறங்கியுள்ளது. மக்களுக்கோ மறுகாலனியாதிக்க கொடுமை வேறு!
இவர்களை இவர்களது கொள்கை அடிப்படையிலேயே அம்பலப்படுத்தும் அதே வேளையில் மறுகாலனியாதிக்க ஏஜண்டுகளாக(மாமாக்களாக) இவர்கள் செய்யும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் சேர்த்து அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

said...

தங்கள் வரவுக்கு நன்றி விடாது கறுப்பு,

தங்களது மீன் சாப்பிடும் மலர்மன்னன் கட்டுரையை அரைகுறையாக அவசரகோலத்தில் சில நாட்கள் முன்பு படித்தேன். மன்னிக்கவும் மீண்டும் அதை படித்து எனது கருத்தை பதிப்பிக்கிறேன்.

தங்களது பார்ப்பன பயங்கரவாதம்(அது தீவிரவாதமல்ல) பற்றிய கட்டுரைக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வாய்ப்பு இருந்தால் பழைய, சமீபத்திய புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் பத்திரிக்கைகள், வெளியீடுகளை தங்கள் கட்டுரைக்கான தரவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். மிக உபயோகமாக இருக்கும்.

கூடிய விரைவில் பு.ஜ. பு.க பத்திரிக்கைகள் தங்களது பழைய இதழ்களை தொகுத்து புத்தகமாக போட இருப்பதாக கேள்விப்பட்டேன்.


யுத்த முனையில் இன்னுமொரு முன்னணி வீரராய் இருந்து செயல்பட வாழ்த்துக்கள்,

போனபெர்ட்.

said...

இந்த கட்டுரையை பப்ளிஸ் செய்வதற்க்கு நானும் போன வியாழக்கிழமையிலிருந்து முயற்சி செய்து வருகிறேன். ஏதாவது பிரச்சனை வந்து, மந்திரம் போட்டதுபோல், ஒன்று வலைத்தளத்திலிருந்து மறைந்து விடும் அல்லது வலைப்பூ செமிக்கும் இடத்திலிருந்து மறைந்து விடும்.

கட்டுரையின் நீளம் காரணமாக இருக்குமோ என்று சந்தெகப்பட்டு ஒவ்வொரு பகுதியாக நீக்கி பதிப்பித்தும் பலன் இல்லை. கடைசியில் கல்ப்ரிட் யாரென்று பார்த்தால் கட்டுரையின் தலைப்பு. அதனால் தான் ஒரிஜினல் தலைப்பை உள்ளே இரண்டாம் முறை போட்டுள்ளேன்.

இந்த குழப்பத்தில் கட்டுரையின் பின்வரும் பகுதியை பதிக்காமல் விட்டுவிட்டேன். இன்றுதான் அதை கவனித்தேன். விடுபட்ட தலைப்பு: 'மலாபார் கலகம் - தெளிவுரை'.

இத்தலைப்பு தற்போழுது கட்டுரையில் சேர்க்கப்பட்டுவிட்டது.

தவறுக்கு மன்னிக்கவும்.

said...

யபா அஸுரா!

மெய்யாலுமே நீயி அஸ்ரந்தா.

இம்மாம் மேட்ரு இதுக்குள்ளெகீதுன்றதெ எப்டிப் புட்சே. கில்லாடிம்மா நீ.

ம.ம.(மண்ணாங்கட்டி மண்டு)க்கு இன்னா தெகிரியம் பீலா உட்றதுக்கு.

அவம்மாரி ஆளுங்களெ உடாதெ நெய்னா

பிச்சுவா பக்கிரி

said...

\\அடுத்த பதிவுகூட திண்ணையையும் ராஜாராம், பிகேஎஸ் போன்ற பார்ப்பனர்களின் பார்ப்பன தீவிரவாதத்தினை எதிர்த்து எழுதலாம் என இருக்கிறேன்.\\

எல்லாருக்குமே தெரியும், பிடித்தால் இந்தக் கறுப்பு விடாது என்று ;-)

said...

தங்கள் வரவுக்கு நன்றி பிச்சுவா பக்கிரி,

அவர் மாதிரி ஆட்களை உடமாட்டேன்!

said...

இதனையும் படித்துப்பாருங்கள்

http://ennamopo.blogsome.com/2006/06/14/ambedkar_on_moplah_mutiny/

said...

Welcome ஆரோக்கியம்,

It seems you didn't even read my posting.

You have to read the posting inorder to understand, on what grounds I have justified the Moplah rebelion.

It is well know truth that how Ambedkar disliked a revolution.

He even condemned with heavy words the 'Telungana Revolution'.

That doesn't mean 'Telungana Revolution' was Anti people.

As for as Ambedkar is concerned in Moplah rebellion, his urge to expose Gandhi and as well as condemn a voilent stuggle led to his inclusion of unconfirmed allegations in his writting.

Some excerpts from the posting:

//இவை எல்லாவற்றுக்கும் முன்பே மலபார் பகுதியில் நடந்த பல போர்களில் மாப்ளா முஸ்லீம்கள் தங்களது வீரம் செறிந்த பங்களிப்பை செய்துள்ளனர். இப்படிப் பல காலமாக மாப்ளா முஸ்லீம்கள் அந்த பகுதியில் இருந்து வரும் வேலையில்//

//மாப்ளா விவசாய, உழைக்கும் மக்களின் கலை இலக்கிய பங்களிப்பும் கேரள வரலாற்றில் மிக முக்கியத்துவமிக்கதாக இருக்கிறது. //

//தங்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப் படுத்தி வைத்திருந்த நாயர், நம்பூதிரி நிலப்பிரபுக்கள், பெருவிவசாயிகள் பக்கமும் திரும்பியது. அதாவது தங்களது அரசியல் அதிகாரத்துவ தலைமைக்கு எதிராகவும் விவசாயிகள் போராடத் தொடங்கினர். நிலபிரபுக்கள் மீதான மாப்ளா விவசாயிகளின் தாக்குதலை 'Social Banditry' என்று E.J. Mobsbawm என்பவர் கூறுகிறார்.
//


***
Unfortunately allmost all feudal landlords were belong to Nair and Nambudiri caste(that is Hindu). So it became very easy to paint a religion hue to this class struggle.

//1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அங்கிருந்த 511 ஜன்மிகளில் (ஜமீன்தார்கள்) 12 பேர் மட்டுமே மாப்ளா முஸ்லிம்கள். ஏனையோர் உயர்சாதி இந்துக்களான நம்பூதிரிப் பார்ப்பனரும், நாயர்களுமே. மலபாரில் 19ஆம் நூற்றாண்டில் சாதி ஒடுக்கு முறை உச்சகட்டத்தில் இருந்ததால் தாழ்நிலையில் இருந்த இந்துக்களான தீயர்கள், செருமர்கள் மற்றும் முக்குவர் ஆகியோர் பெருமளவில் முஸ்லிம்களாக மாறி விட்டனர். //

***
//14 வழக்குகள் இந்து விவசாயிகளுக்கு எதிராக நடந்தன. அவர்கள் செய்த குற்றமாக, இந்து ஜமீன்தார்களைத் தாக்குவதில் இறங்கியதும்//

These above hindu poor farmers not forced to convert their religion. But still struggled against Hindu feudalists.

***
//"வரியம்குன்னத்து குன்ஹம்மது ஹாஜி, மாப்ளாக்களிடம், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் தன் முன் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். குஞ்சாலி என்பவனைத் தவிர மற்றவர்கள், தாம் கொள்ளையிட்ட பொருட்களை ஹாஜி முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். குஞ்சாலி மட்டும், தாம் கொள்ளையடிக்கவில்லை எனப் பிடிவாதம் செய்தான். அவனுக்கு 125 கசையடிகள் கொடுக்கப்பட்டதும், உள்ளதை ஒத்துக் கொண்டு பொருட்களைத் திருப்பித் தந்தான். அவை மாரத்து நம்பூதிரியிடமும்,காவுக்கள் நம்பூதிரியிடமும் காட்டப்பட்டு, அவை அவர்களுக்கு உரியவைதானா என்பதும் விசாரிக்கப்பட்டுத் திருப்பித் தரப்பட்டன. குன்ஹம்மது ஹாஜி, இந்துக்களுக்குப் பாதகமாய் ஏதும் செய்திடவில்லை"//

Here a Muslim was punished. But the hindu was given justice not conversion.

***
//இவை சில விதிவிலக்கான சம்பவங்கள் என்பதையும், அங்கு ஒரு கம்யுனிஸ்ட் கட்சி போன்ற வர்க்க உணர்வு பெற்ற ஒரு உயர்ந்த அமைப்பின் கீழ் விவசாயிகள் திரளவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.//

// அந்த இயக்கம் ஆரம்ப்பத்தில் ஒரு பிற்போக்குத்தனமான இயக்கமாக இருந்து குறுகிய காலத்தில் வர்க்க போராட்ட வடிவை பெற்றது. ஆனால் அந்த இயக்கத்தின் ஆரம்பத்தில் ஆளுமை செலுத்திய பிற்போக்குத்தனங்களிலிருந்து அது முழுமையாக விடுபடவில்லை.//

said...

நேசக்குமார் என்ற ஒருவர் மாப்ளா கலகம் பற்றிய எனது கட்டுரை விமர்சித்தும், அத்துடன் எனது நிலைப்படுகள் மீதான் பல்வேறு விமர்சனங்களையும் வைத்து ஒரு பதிவு பதிப்பித்துள்ளார். அங்கு நான் பதில் போட்டபொழுது ஏதோ குறைபாடு காரணமாக பதியவில்லை. எனவே அந்த பதிலை இந்கு பதிகிறேன்.
+++++++++

//இங்கே சொந்த உதாரணம் ஒன்றைக் குறிப்பிடுகின்றேன். சென்ற மாதம் சகோதரருக்கு திடீரென்று ஆக்ஸிடெண்ட். இந்தியாவின் இன்னொரு மூலையில் உள்ளார் அவர். உடனடியாக ஆப்பரேஷன் தேவை. இரவு பதினோருமணிக்கு எனது ஐசிஐசீஐ அக்கவுண்டில் லாகின் செய்து பணத்தை அவரது ஐசிஐசிஐ அக்கவுண்டுக்கு மாற்றினேன். ஆப்பரேஷனும் நல்லவிதமாய் நடந்து முடிந்தது - பிறகு சிந்தித்தேன். வங்கிகளில் கணிப்பொறி வாங்கிவைத்து இவர்களின் இம்சையால் எத்தனைகாலம் கணினிமயமாக்கம் தாமதப்பட்டது //

ஆமாம், ஆமாம் இந்தியா நிரம்ப முன்னேறிவிட்டது, social indicater-ல் அதல பாதாள சரிவு. பங்களாதேசம் கூட இந்தியாவை விட முன்னேறியுள்ளது.

உமது பார்வையில் ATM card வைத்திருக்கும் வர்க்கம் மட்டும்தான் படுகிறது. என்ன செய்ய, அது தங்களது இயல்பு. எப்படி இந்தியா வந்த ஜார்ஜ் புஸ் இந்தியா 30 கோடி சந்தை எனவே எங்களுக்கு நிரம்ப முக்கியமான நாடு என்று கூறினாரோ அது போல.

மீதியுள்ள 90 கோடி? ஆங்...அது.. நாங்கள் வறுமையானவர்களை ஒழிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

சோறில்லாமல் செத்துக் கொண்டிருக்கும், அரைகுறையாய் சாப்பிட்டு நொந்து கொண்டிருக்கும் கூட்டம் அதிகாமானது நேச(பெயரில் மட்டும்தான்) குமாருக்கு தெரியாது. அது அவசியமுமில்லை அவருக்கு.

கடன் தொல்லை காரணமாக கிட்னி விற்க்கும் கிராமங்கள், கிராமத்தையே விற்க்கும் கிராமங்கள், அத்தியவசியமான மருந்து பொருட்களை தடை செய்த இந்து வெறியர்களின் - BJP முந்தைய ஆட்சியும் அதன் விளைவாக மருந்தின்றி ரேபிஸ் நோயால் சமீபத்தில் மாண்டவர்கள், வக்கற்ற அந்த நோயாளிகளை பரிசோதனைச் சாலை எலிகளாக பயன்படுத்த கையழுத்துப் போட்ட தேசத் துரோக காங்கிரசு.

வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டது என்று RBI சொல்லுகிறது. Small Scaled Industries புட்டுகிச்சு, வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன் நக்சல்பாரி(ம.க.இ.க) அமைப்போடு கூட்டு சேர்கிறார். இவையெல்லாம் வரலாற்றையும், சமூகத்தையும் ஏற்கெனவே நிலவுகின்ற ஆளும் வர்க்க கண்ணாடி கொண்டு பார்க்கும் நேசகுமார் கோஸ்டிகளுக்கு விந்தையாக இருக்கலாம். ஆனால் இந்த சமுகத்தின் இயக்கப் போக்கு அப்படித்தான் நடக்கும் என்று மார்க்கஸிய முன்னோர்கள் கூறியுள்ளது அவருக்கு தெரிய நியாயமில்லை.


இந்தியா வெகு வெகமாக முன்னேறுகிறது. நேச குமார் கோஸ்டி ஆதரிக்கும் திட்டங்கள் எல்லாம் வறுமை ஒழிப்பு திட்டங்கள் இல்லை மாறாக வறுமையானவர்களை ஒழிக்கும் திட்டம்.

இவர் சொல்லும் முன்னேற்றம் எல்லாம் பிரிட்டிஸ்க்காரன் ரயில் தண்டவாளமும், மின்சாரமும் கொண்டுவந்தானே, அதே போன்றதுதான். இந்திய வளங்களை நோகாமல் நொங்கு சாப்பிட செய்யப்படும் விசயங்களை நம்ம ஆளு developement என்று கூறுகிறார்.

தங்களது வாயையும் ஆசன வாயையும் தாண்டி ஒரு உலகம் உள்ளதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ?

+++++++++
அப்புறம் நான் எழுதிய கட்டுரை மாப்ளா கலகம் பற்றியது. இவர் இங்கே கொடுத்திருப்பதோ கிளாபத் இயக்கம் பற்றி. மாப்ளா கலகம் ஆரம்பித்தது 1836 -ல். கிளாபத் இயக்கம் எப்பொழுது ஆரம்பித்தது என்பது நேசகுமாருக்கே தெரியும்.

ஆரோக்கியத்திற்க்கு நான் அளித்த பதில்தான் தங்களுக்கும். எந்த அடிப்படையில் மாப்ளா கலகம் ஒரு வர்க்க போராட்டம் என்பதை நிறுவியுள்ளேன் என்பதை கட்டுரையை படித்தால்தான் புரியும். அதை தயவுசெய்து செய்யுங்கள் முதலில்.

நான் ஒன்றும் முஸ்லீம் மதம் நிலபிரபுத்துவத்தை எதிர்த்தாக எங்கேயுமே கூறியதில்லையே. நான் என்ன, எந்த ஒரு அடிப்படை மார்க்சியனும் அவ்வாறு கூறமாட்டான். மதம் என்பதே நிலவுகின்ற சுரண்டல் வடிவத்துக்கு தார்மீக முட்டு கொடுப்பதுதான்.

இங்கு Muse -க்கு நான் சொன்ன ஒரு பரிந்துரையே இவருக்கும் அளிக்கிறேன்:
>>விசயங்களை இன்னும் ஆழமாக படித்து விட்டு தகவல்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்துவிட்டு வந்து வாதாடவும்.<<


//போனபர்ட் இன்னொன்றையும் சொல்லியுள்ளார் - இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம் இரண்டையுமே தாம் எதிர்ப்பதாக. அதையும் நான் வரவேற்கின்றேன். குறைந்த பட்சம் இவர் போன்ற இடதுசாரிகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் எதிர்க்கிறார்களே, //

இந்து மதம் என அறியப்படும் பார்ப்பன பயங்கரவாத மதத்தை special terrorist tag கொடுத்து எதிர்ப்பதற்க்கான காரணத்தை நான் பல இடங்களில் எழுதிவிட்டேன்(என்னுடைய வலையில் பிரசன்னாவுக்கான பதில்கள், இந்திராயுதன் சங்கர் வலையில் - சமீபத்திய எனது பதில் etc).

மற்ற மதங்கள் just மதம் என்ற அடிப்படியில்தான் மார்க்ஸியவாதிகள் எதிர்க்கிறோம். (இஸ்லாம் மாணவர் பயங்கரவாத அமைப்பிடமிருந்து 1988-லேயே மிரட்டலுக்காலான அமைப்புதான் ம.க.இ.க - for an article on Islam terrorism, மேலும் R.S.S வகையாறா தொகையாற அமைப்புகளால் தமிழ் நாட்டை பொறுத்தவரை முதல் எதிரிகளாக அறிவிக்கப்பட்டது ம.க.இ.க தான் - இந்த புரிதல் இல்லாமலேயே சங்கர் நெம்ப திறமையாக ஒரு கேள்வி கேட்டுள்ளார் தனது வலையில்).

கம்யூனிஸ்டுகளுக்கு இந்த புரிதல் தற்போதுதான் வந்ததுபோல் இவர் எழுதுவது இரண்டு விசயங்களை காட்டுகிறது: ஒன்று கம்யூனிசம் பற்றிய இவரது மேதாவிலாசத்தை, மற்றொன்று இந்தியாவில் இஸ்லாம் திவிரவாதத்தின் வளர்ச்சி பற்றிய இவரது வரலாற்று அறிவை.


//முதலாளி பரதேசியாய்ப் போனால் எந்தத் தொழிலாளி வாழ்வான்? - யுடோப்பியக் கனவுகளில் தான் அது சாத்தியம்.//

தங்களுக்கு கம்யூனிசமும் தெரியாது, பொருளாதாரமும் தெரியாது, human society history தெரியாது என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.



//நமது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் இன்று எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது//


நேசக்குமார் சொன்னதிலேயெ மெலே சொன்ன ஒன்றுதான் உருப்படி. அதுவும் எதிர்மறை அர்த்தத்தில். இவர்கள் என்றைக்கு தங்களது போதை நிலையிலிருந்து மீண்டு வருவார்களோ?

said...

//காந்தி முரண்பட்ட மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் என்றும் பொய் சொன்னதில்லை என்பதிலும் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. //

காந்தி பொய் சொன்னதில்லை என்று உங்களுக்கு இப்போது தேவை என்பதால் ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால், அதன் மூலம், அம்பேத்கார் பொய் சொல்கிறார் என்பதை சொல்லுகிறீர்களே.
காந்தி பொய் சொன்னதில்லைதான். ஆனால், அவருக்கு உண்மையைச் சொல்லாமல் இருப்பதற்கு உள் நோக்கம் இருப்பதைத்தான் அம்பேத்கார் சுட்டிக்காட்டுகிறார். முஸ்லீம்களை தனது விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ள அவர்களது குரூரங்களை மூடி மறைக்கவும், சால்ஜாப்பு செய்யவும் முனைந்ததைத்தான் அம்பேத்கார் சுட்டிக்காட்டுகிறார். காந்தி செய்த அதே வேலையைத்தான் இன்றைக்கு கே என் பணிக்கரும் செய்கிறார். மாப்பிள்ளை முஸ்லீம்களை இடதுசாரி முத்திரை குத்தி உள்வாங்க செய்த இந்த முயற்சி இன்றைக்கு சதாம் உசேனுக்காகவும், மதானிக்காகவும் கம்யூனிஸ்டுகளை வக்காலத்து வாங்க வைக்கும் அளவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இங்கு வெற்றி பெறுவது முஸ்லீம் தீவிரவாதம் தானே தவிர இடதுசாரிகள் அல்ல என்பது அவர்களுக்கு காலம் சென்றுதான் தெரியும். அதனைத்தான் தீர்க்கதரிசனம் போல அம்பேத்கார் தனது கட்டுரையில் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறார்.

//மக்கள் விரோதமாக செயல்படுவது என்றால் மதம், இனம் என அனைத்து வேறுபாடுகளையெல்லாம் களைந்து பாசிச சக்திகள் ஒன்றுபடும் என்பதற்க்கு இந்த வரலாற்று சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.//

நிகழ்வுகள் நடந்த அந்த காலத்திலேயே அதன் நேரடி பார்வையாளராக இருந்த அம்பேத்கார் அன்றைய விஷயங்களை ஆராய்ந்து சொல்வது பாசிசம். பின்னால் சப்பைக்கட்டு கட்ட எழுதிய பணிக்கர் சொல்வது உங்களுக்கு வேத வாக்கு. நடத்துங்கள்.

//இவ்வெழுச்சியை மத துவேசமாகப் பார்க்கும் மாலைக்கண் பார்வைக்கு மேற்சொன்ன புள்ளிவிவரமே அருமருந்தாகட்டும்.//

அம்பேத்காரை மாலைகண் பார்வை என்று சொன்ன உங்களுக்கு என் பாராட்டுக்கள். அந்த மாலைக்கண் பார்வை இன்னும் பல புள்ளிவிவரங்களை தன் கட்டுரையில் கொடுத்திருக்கிறது. அதனையும் படித்துவிட்டு மீண்டும் மாலைக்கண் என்று அம்பேத்காரை திட்டலாம்

said...

Beginning with the year 1920 there occurred in that year in Malabar what is known as the Mopla Rebellion. It was the result of the agitation carried out by two Muslim organizations, the Khuddam-i-Kaba (servants of the Mecca Shrine) and the Central Khilafat Committee.

As a rebellion against the British Government it was quite understandable. But what baffled most was the treatment accorded by the Moplas to the Hindus of Malabar. The Hindus were visited by a dire fate at the hands of the Moplas. Massacres, forcible conversions, desecration of temples, foul outrages upon women, such as ripping open pregnant women, pillage, arson and destruction— in short, all the accompaniments of brutal and unrestrained barbarism, were perpetrated freely by the Moplas upon the Hindus

The Ayats (verses) of the Quran recited by the Maulanas on that occasion, contained frequent references to Jihad and killing of the Kaffirs.But when I drew his attention to this phase of the Khilafat movement, Mahatmaji smiled and said, ' They are alluding to the British Bureaucracy '. In reply I said that it was all subversive of the idea of non-violence and when the reversion of feeling came the Mahomedan Maulanas would not refrain from using these verses against the Hindus. "

இணைய முஸ்லீம்கள் சந்தோஷத்துடன் ஒரு பலியாடு நமக்காக சப்போர்ட் பண்ணுகிறதடா என்று வேடிக்கை பார்க்கிறார்கள். வாழ்த்துகள்.

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

போனபெர்ட்

ம.ம (மரமண்டை அல்லது மக்கு மடையன் என்று நினைத்தால் எனக்குத் தெரியாது) என்பவரின் திரித்தலை நீங்கள் சுட்டிக் காட்டினால், இங்கே நேசகுமார் என்பவரும், ஆரோக்கியம் என்பவரும் ஏன் வரிந்து கட்டிக் கொண்டு இஸ்லாமிய எதிர்ப்பை இங்கே கொண்டுவருகிறார்கள்?

ஒரு வேளை இதுவும் இந்தப் பாசிஸ்டுகளின் உத்தியோ? இருவரும் எங்கும் கவனமாக இந்துத்துவா பயங்கரவாதம் பற்றி பேசுவதை இவர்களும் நம் கோந்து பஞ்சரும் தவிர்த்தே வருகிறார்கள் அல்லது ஜல்லி அடிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

said...

ஆரோக்கியம்,

தங்களது சிண்டு முடியும் வேலை வெற்றி பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறேன். இந்த பழைய பார்ப்பன தந்திரங்களை(ம.ம. வின் சிஸ்யர்கள் என்பதை proof செய்கிறேர்களே) மூட்டை கட்டி வைத்து விட்டு வேறு ஏதாவது புது தந்திரங்களை பழைய வேத புத்தகங்களில் தேடி கண்டுபிடித்து பயன்படுத்தவும்.

தங்களது பார்வைக்காக திண்ணையில் பிரசூரிக்க அனுப்பிய கட்டுரையின் கடைசிப் பகுதியை பதிப்பிக்கிறேன்.


//
இடியாப்பத்தின் இன்னொரு முனை:
--------------------------------

வலதுசாரிகள், கூர்மையடைந்த வர்க்கப்போரையும், ஏகாதிபத்திய எதிர்ப்புப்போரையும் சாதி, மதச் சாயம் பூசி அதனைத் திரிப்பது வழக்கமான ஒன்றுதான். செங்கொடியின் கீழ் திரண்ட கீழ் வெண்மணித் தோழர்களைக் கொளுத்திய 1968 நிகழ்வைக் கூட 'ஏதோ சாதிக் கலவரம்' போன்று திரிக்க முயல்பவர்கள்தான் இவர்கள். ம.ம. கூட இச்சம்பவத்தினை 'ராமமூர்த்தி மீதான சந்தேகமாக'த் திரிக்க முயன்றார். அதாவது அன்றைய முதல்வர் அண்ணா வெண்மணிப் படுகொலைக்கு விசாரணைக் கமிசன் வைக்க முன்வந்தபோது பி.ஆர். அதைத் தடுத்தமைக்கு உள்நோக்கம் இருந்ததாகவும், அதாவது சிபிஎம் கட்சியின் தில்லுமுல்லுகள் (44 பேரைக் கொன்றதே பொதுவுடமைக் கட்சிதான் என்றும் சந்தேகப்படுவார்கள் இந்த மதவெறியர்கள்) அம்பலமாகிடும் என்பதால் அதை எதிர்த்ததாயும் அளந்திருக்கிறார். தோழர் பி.ஆர். இன் 'ஆரியமாயையா? திராவிட மாயையா?' நூல் தெளிவாகவே 'விசாரணைக்கமிசனை எதிர்த்ததன் நோக்கத்தைக் கூறிவிட்டது. விசாரணைக் கமிசன்களின் முடிவுகளும், அதனைக் காரணம் காட்டி நீதியைக் காலதாமதமாக்குவதும் ஆளும் வர்க்கத்தின் வழக்கம் என்பதால்தான் அதனை சிபிஎம் எதிர்த்ததாக பி.ஆர். சொல்லி இருந்தும், ம.ம., கீழ்வெண்மணி சோகத்தில் உண்மைகளை மறைக்க பி.ஆர். முனைந்தார் என அவதூறு செய்திருந்தார்.

இந்த கோடூர கொலைகளுக்கு காரணமான நிலபிரபுவை பின்னர் வெட்டி கொன்றவர்கள் கம்யூனிஸ்டுகள்தானெயொழிய, பெரும்பான்மை பெரும்பான்மை என்று தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட ஜாதிகளையும் தன்னுடன் சேர்த்து ஆள் கூட்டும் இந்துத்துவ அமைப்புகள் இந்த பெரும்பன்மைக்காக இதுவரை தங்களது மயிரைக் கூட தியாகம் செய்தது இல்லை.

மலபார் மாப்பிள்ளை விவசாயி கலகத்தை முஸ்லிம் கலகம் என்றால், பகத்சிங்கின் சட்டசபைத் தாக்குதலை 'சீக்கிய மத எழுச்சி' என்றும் சொல்வார் ம.ம.!

பிரிட்டிஷ் காரர்கள், இந்து முஸ்லிம் கலவரத்தை எப்போதுமே வரவேற்றவர்கள்தானே! பிரித்தாளும் கொள்கைக்கு அது அல்வா மாதிரி இல்லையா? வங்கப்பிரிவினையினைக் கூட இந்து-முஸ்லிம் பிளவிற்காகத்தானே அவர்கள் செய்தார்கள்!

இவ்வாறான குணம் கொண்ட பிரிட்டிஷாருக்கு, மாப்ளா முஸ்லிம்கள் நம்பூதிரி இந்துக்களைத் தாக்கும்போது ஏனய்யா கோபம் வர வேண்டும்? ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை வேட்டையாடிக் கொல்ல வேண்டும்? ஏன் சரக்கு ரயிலில் மூட்டை முடிச்சுக்கள் மாதிரி முஸ்லிம்களை அடைத்து வைத்து, போத்தனூர் ரயில் நிலையத்தில் வங்கொடுமையாய் சாகடிக்க வேண்டும்?

வேறு எந்த இந்து-முஸ்லிம் கலவரத்திலும் பிரிட்டிஷார் இவ்வாறு கடுமையாக நடந்துள்ளனரா?

பிரிட்டிசாரின் கடும் சினத்திற்கான காரணமே, முஸ்லிம் விவசாயிகளின் கலகம் மதக்காரணத்தினால் அல்லாமல், அது அரசின் வருவாய்த் துறையையும், அரசு பகிர்ந்தளித்திருந்த ஜமீன் நிலங்களையும் பாதித்து, அரசைத் தூக்கி எறியும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராக அது இருந்ததே காரணமாகும்.//

++++++++

உண்மையான பலியாடு யார்?

>>மதமாற்றத்தை பொறுத்தவரை ஆடுகள் இந்து பிரியானிக்கு தப்பி, இஸ்லாம், கிருத்துவ மட்டன் ஸ்டாலுக்கு சென்றுவிடுமோ என்ற பயம்தான் உங்களிடம் தெரிகிறது.
எமது மக்கள் யாருக்கும் பிரியானியாவதையோ, அல்லது இந்துத்துவ கூட்டுக்கு கறுவேப்பிலை ஆவதையோ பார்த்துக் கொண்டிருக்க முடியாது.<<

said...

இஸ்லாமிய பாசிசம் என்று பேசும்போதெல்லாம் இந்துத்துவ பாசிசம் என்று திசை திருப்பும் வேலை செய்யும் நீங்களும் உங்களது கூட்டாளிகளும், என்னை "சிண்டுமுடியும் ஆள்" என்று சொல்வது வேடிக்கை.

அம்பேத்கார் சொன்னதை எடுத்துப்போட்ட எனக்கே இந்த திட்டு என்றால் அம்பேத்காரே கையில் கிடைத்தால் என்ன செய்வீர்களோ!

உண்மையான பலியாடு யார் என்பது வரலாறு சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறது. அம்பேத்கார் போன்ற சிலர் அதனை சரியாக கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள். கற்றுக்கொள்வதோ உதாசீனம் செய்து முழுகுவதோ உங்கள் சாய்ஸ்...

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

>>>
Unfortunately allmost all feudal landlords were belong to Nair and Nambudiri caste(that is Hindu). So it became very easy to paint a religion hue to this class struggle.

//1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அங்கிருந்த 511 ஜன்மிகளில் (ஜமீன்தார்கள்) 12 பேர் மட்டுமே மாப்ளா முஸ்லிம்கள். ஏனையோர் உயர்சாதி இந்துக்களான நம்பூதிரிப் பார்ப்பனரும், நாயர்களுமே. மலபாரில் 19ஆம் நூற்றாண்டில் சாதி ஒடுக்கு முறை உச்சகட்டத்தில் இருந்ததால் தாழ்நிலையில் இருந்த இந்துக்களான தீயர்கள், செருமர்கள் மற்றும் முக்குவர் ஆகியோர் பெருமளவில் முஸ்லிம்களாக மாறி விட்டனர். //

***
//14 வழக்குகள் இந்து விவசாயிகளுக்கு எதிராக நடந்தன. அவர்கள் செய்த குற்றமாக, இந்து ஜமீன்தார்களைத் தாக்குவதில் இறங்கியதும்//

These above hindu poor farmers not forced to convert their religion. But still struggled against Hindu feudalists.

***
//"வரியம்குன்னத்து குன்ஹம்மது ஹாஜி, மாப்ளாக்களிடம், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் தன் முன் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். குஞ்சாலி என்பவனைத் தவிர மற்றவர்கள், தாம் கொள்ளையிட்ட பொருட்களை ஹாஜி முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். குஞ்சாலி மட்டும், தாம் கொள்ளையடிக்கவில்லை எனப் பிடிவாதம் செய்தான். அவனுக்கு 125 கசையடிகள் கொடுக்கப்பட்டதும், உள்ளதை ஒத்துக் கொண்டு பொருட்களைத் திருப்பித் தந்தான். அவை மாரத்து நம்பூதிரியிடமும்,காவுக்கள் நம்பூதிரியிடமும் காட்டப்பட்டு, அவை அவர்களுக்கு உரியவைதானா என்பதும் விசாரிக்கப்பட்டுத் திருப்பித் தரப்பட்டன. குன்ஹம்மது ஹாஜி, இந்துக்களுக்குப் பாதகமாய் ஏதும் செய்திடவில்லை"//

Here a Muslim was punished. But the hindu was given justice not conversion.
<<<<<
++++++++++++++++++++

அய்யா நன்முத்து ஆரோக்கியம் அவர்களே,

மேலே குறிப்பிட்டுள்ள எனது கட்டுரையின் பகுதிகளை மீண்டும் மீண்டும் என்னை பதிக்க வைத்து தங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

convert ஆகாத இந்துக்கள் மாப்ளா வழக்கில் பிரிட்டிஸ் அரசால் தண்டிக்கப்பட்ட ரகசியம் என்ன?

மேலும் பிரிட்டிஸ் அரசின் extrodinory treatment of மாப்ளா கலகம் காட்டுவது it is more than religion. அதைப் பற்றிய எனது கட்டுரையின் பகுதியையும் தங்களுக்காவே மீண்டும் பிரசூரித்தேன். தாங்கள்தான் படித்துப் பார்த்து வாதிடுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறேர்களே.

இவை இரண்டையும் உடைக்கும் விதமாக ஏதேனும் வாதம் இருந்தால் முன்வைக்கலாம். அதை விடுத்து கிளிப் பிள்ளை போல் பேசக்கூடாது.

அம்பேத்கார் மட்டுமல்ல யாரையுமே, எந்த சம்பவத்தையுமே நியயாமாக எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் எனது கட்டுரையில் குறிபிட்டுத்தான் கட்டுரையையே ஆரம்பிக்கிறேன். இதன் மூலம் நான் சொல்ல வருவது ஒரு விசயத்தை பற்றி இருவர் வைக்கும் ஒரே கருத்துக்கள் கூட அதன் அர்த்தத்தில், அதன் நோக்கத்தில் வேறுபடும். அதையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்பதுதான். அப்படித்தான் இந்து வெறியர்களை நான் விமர்சித்துள்ளேன்.

மதக் கலவரத்தை கண்டிக்கும் ஒரு மார்கசிஸ்ட், ஒரு சமூக நிதிப் போராளி, ஒரு போலி ஜனநாயகவாதி, ஒரு மாற்று மத வெறியன் இவர்கள் ஒரே வார்த்தையை உபயோகப்படுத்தினாலும் அதன் அர்த்தம், அதன் நோக்கம் வேறுபடும் என்ற அடிப்படை பகுத்தறிவு கொண்டவர் தாங்கள் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறேன்.

இந்து வெறியர்களை நான் விமர்சித்துள்ள அந்த வார்த்தைகள் அதற்க்காக நான் கைகொண்ட ஆய்வு முறை இத்தனையும் தெளிவாக கட்டுரையில் இருக்கும் பொழுது, அந்த வார்த்தைகளை தந்திரமாக அம்பேத்காருக்கு பொருத்திக் காட்ட முற்ப்படுவது தங்களது அந்த சிண்டு முடிக்கும் நேர்மையற்ற நோக்கத்தைதான் காட்டுகிறது.

தயவு செய்து கட்டுரையை படித்து விட்டு விமர்சனம் செய்யவும்.

++++++++++

மேலும் இந்து, இஸ்லாம் பயங்கரவாதத்தில் கம்யூனிஸ்டுகளின் level of prefrence வேறுபடும் காரணம் குறித்து சமீபத்தில் தான் சங்கரின் பதிவில் எழுதினேன். போய் பார்த்துக் கொள்ளவும் (http://www.blogger.com/comment.g?blogID=24735489&postID=115001607583837054).

இந்து பயங்கரவாதம் உற்பத்தி உறவிலும் தன்னை இருத்திக் கொள்வதன் மூலமாக அந்த தத்துவத்திற்க்கு ஒரு மதம் என்பதை தாண்டிய special அம்சம் உள்ளது.

மேலும், இஸ்லாம் பயங்கரவாதத்தை இந்து பயங்கரவாதிகள் காட்டுவது தங்களது double pronged பயங்கரவாதத்தை (உழைக்கும் மக்கள் மீதான பண்ப்பாட்டு அடக்குமுறை, ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து பொருளாதார அடக்குமுறை) மறைக்கும் நோக்கம் என்பதால், இயல்பாகவே முற்ப்போக்காளர்களுக்கு அதை அம்பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்ப்படுகிறது.

said...

//convert ஆகாத இந்துக்கள் மாப்ளா வழக்கில் பிரிட்டிஸ் அரசால் தண்டிக்கப்பட்ட ரகசியம் என்ன?//
ஏன் உங்களைப்போல முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய இந்துக்கள் அந்த காலத்தில் இருந்திருக்கமாட்டார்களா?

//அரசைத் தூக்கி எறியும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராக அது இருந்ததே காரணமாகும்.//

அதைத்தான் அம்பேத்காரும் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அம்பேத்காரை நீங்கள்தான் படிக்கவில்லை. தொடர்ந்து எழுதுவதை படியுங்கள்.

As a rebellion against the British Government it was quite understandable. But what baffled most was the treatment accorded by the Moplas to the Hindus of Malabar. The Hindus were visited by a dire fate at the hands of the Moplas. Massacres, forcible conversions, desecration of temples, foul outrages upon women, such as ripping open pregnant women, pillage, arson and destruction— in short, all the accompaniments of brutal and unrestrained barbarism, were perpetrated freely by the Moplas upon the Hindus.

நீங்கள் செய்யும் அதே திரிப்பு வேலைதான், அன்று கேரள கம்யூனிஸ்டுகளுக்கு மலபாரில் ஓட்டுப்பொறுக்க அன்று மாப்பிள்ளை கலவரத்தை வர்க்கபோராட்டமாக திரிக்க வைத்தது. இன்று கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்காரன் மதானியை விடுதலை செய்ய கருணாநிதியிடன் பிச்சை எடுக்க வைக்கிறது. மதானி யார்? கோயம்புத்தூர் பணக்காரர்களுக்கு எதிராக போரிட்ட வர்க்கப்போர் வீரனா? செய்யுங்கள். இன்னும் ஒரு பணிக்கரை பிடித்து உங்களது உட்டலக்கடி இண்டலெக்சுவல் வார்த்தைகளில் மதானியை வர்க்கபோர் வீரனாக காண்பித்து ஒரு 1000 பக்க "ஸ்டாடிஸ்டிக்ஸ்" காண்பிக்கும் புத்தகம் எழுதிவிட்டால், பிறகு உங்களைப் போன்றவர்கள் அதனை மேற்கோள் காட்டி வர்க்க போராட்ட வீரன் மதானியை புகழ் பாடிக்கொண்டிருக்கலாம் அல்லவா.
உடனே செய்யுங்கள்.

//இஸ்லாம் பயங்கரவாதத்தை இந்து பயங்கரவாதிகள் காட்டுவது தங்களது double pronged பயங்கரவாதத்தை (உழைக்கும் மக்கள் மீதான பண்ப்பாட்டு அடக்குமுறை, ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து பொருளாதார அடக்குமுறை) மறைக்கும் நோக்கம் என்பதால்,//

சந்தோஷம். இன்று செய்தியில் தாய்லாந்து நாட்டில் 42 குண்டுகள் முஸ்லீம் பயங்கரவாதிகளால் வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. போய் பாருங்கள். அங்கும் யாராவது இந்து பயங்கரவாதிகள் தாய்லாந்து நாட்டில் பேயாட்டம் போடுவது காரணமாக இருக்கலாம். பணிக்கரை அழைத்து ஒரு 1000 பக்க புத்தகம் எழுதச்சொல்லுங்கள்.

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

சமீபத்திய செய்தியில் ஒரு லட்சம் விவசாயிகள் 1998 லிருந்து 2006 வரை தற்கொலை மரணம் என்று மத்திய அமைச்சர் சரத்பவார் தகவல் தெரிவித்துள்ளார்(இது இஸ்லாம் வைத்த தொடர் குண்டு வெடிப்பு அல்ல, மாறாக இந்து வைத்த அணுகுண்டு). இதற்க்கு prime காரணமாக இருப்பது - இந்து தத்துவ காலாச்சார அடக்குமுறையும், அதன் ஏகாதிபத்திய, நிலபிரபுத்துவ சேவை தன்மையின் பொருளாதார தாக்குதலும் தான்(இறந்ததில் ஒருவர் கூட பார்ப்பன்/மேல் சாதியை சேர்ந்தவர் அல்ல, அதாவது ஒரு லட்சத்தில் ஒருவர்கூட இல்லை).

என்னாடா இது விவசாயியின் சாவுக்கு பார்ப்பன பயங்கரவாதத்தைக் காரணமாக கூறுகிறானே என்று கேள்வி கேட்க விரும்புகிறவர்கள். நேபாள மாவோயிஸ்டுகளுடன் வறிய விவசாயிகள் இணைந்து நடத்தும் புரட்சி நிலைமைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம் அல்லது அது(இந்துமத பயங்கரவாதம்) பற்றிய எனது எதிர்கால கட்டுரைகளில் பதில் தெரிந்து கொள்ளலாம்.

நெல்சனுக்கு அமேரிக்கா வரை தெரியும் ஆனால் இந்திய, நேபாள நிலைமைகள் தெரியாது.

ஆரோக்கியத்திற்கு தாய்லாந்து வரை தெரியும் ஆனால் இந்திய, நேபாள நிலைமைகள் தெரியாது.

சங்கருக்கு இஸ்ரேல், இந்திரன் என்று பல விசயங்கள் தெரியும் ஆனால் உள்ளூர் விசயங்களை பேசுவதும் அதுவும் மக்கள் பிரச்சனைகளை பேசுவதும் அவரைப் பொறுத்த வரை குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டும் அவமானகரமான செயல்.


அய்யா, இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டுகளே, மயக்கம் தெளிந்து வேளியே வாருங்கள் அல்லது சமூக பொருளாதார அழுத்ததின் விளைவான அமைப்பாகாத குற்ற வன்முறைக்கோ/அமைப்பு வழிப்பட்ட புரட்சி வன்முறைக்கோ ஆட்பட்டு ஜனநாயகம், ஜனநாயகம் என்று எதிர்காலத்தில் கதறாதீர்கள்.

said...

//அதைத்தான் அம்பேத்காரும் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அம்பேத்காரை நீங்கள்தான் படிக்கவில்லை. தொடர்ந்து எழுதுவதை படியுங்கள்.//

ஆரோக்கியம்,

ஏகாதிபத்திய எதிர்ப்பைத்தான் அம்பேத்கார் பார்க்கிறார். அந்த போராட்டத்தின் நிலபிரபுத்துவ எதிர்ப்பை அவர் பார்க்கவில்லை. அந்த போராட்டம் 1836 லிருந்தே நிலபிரபுத்துவ எதிர்ப்பு தன்மையையும் பிரதானமாக மேற்கொண்டதை பார்த்து அம்பேத்கார் எழுதவில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

எனது கட்டுரையின் அடிநாதமாக வர்க்க போராட்டம்தான் உள்ளதே அன்றி, ஏகாதிபத்திய போராட்டம் என்பது one of the facets of the class struggle meted out by Moplah peasants against their class enemies-தான் அதை தாண்டி அங்கு ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு சிறப்பான இடம் இருக்கிறதென்றால் அது பிற்போக்கான இடம்தான்.

said...

Welcome தி.ராஸ்கோலு,

ராஸ்கோல் தாங்களை தாமதமாக வரவேற்ப்பதற்க்கு மன்னிக்கனும்.

எப்படி இருந்தாலும் நீங்க நம்ம ஆளுதானே, முதலில் தத்துவ கிறுக்கர்களை சரியாக பதிலடி கொடுத்து விட்டு தங்களை வரவேற்க்கலாம் என்று சிறிது உரிமை எடுத்துக் கொண்டேன்.


தி.ராஸ்கோலு said...

//என்பவரின் திரித்தலை நீங்கள் சுட்டிக் காட்டினால், இங்கே நேசகுமார் என்பவரும், ஆரோக்கியம் என்பவரும் ஏன் வரிந்து கட்டிக் கொண்டு இஸ்லாமிய எதிர்ப்பை இங்கே கொண்டுவருகிறார்கள்?
ஒரு வேளை இதுவும் இந்தப் பாசிஸ்டுகளின் உத்தியோ? இருவரும் எங்கும் கவனமாக இந்துத்துவா பயங்கரவாதம் பற்றி பேசுவதை இவர்களும் நம் கோந்து பஞ்சரும் தவிர்த்தே வருகிறார்கள் அல்லது ஜல்லி அடிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. //

இந்து பார்ப்பன பயங்கரவாதத்தை பற்றி பேசும் பொழுது இஸ்லாம பயங்கரவாதத்தை துணைக்கு அழைத்து வந்து தாங்கள் ஏதோ மிகவும் நல்ல பிள்ளைகள் போல் நடிப்பது இவர்களது தந்திரம்தான்.

ஆளும் வர்க்க (பாசிஸ்ம்) அடக்குமுறையை பிரயோகிக்கும் போதுவிட, தனது அவலத்தை விளம்பரப்படுத்தும் போது மிக, மிக மிக அபாயகரமானதாகிவிடுகிறது(எ-கா வேண்டுமென்றால் ரஜினி, குஸ்பு, ஜெயலலிதா, இந்து பயங்கரவாதிகள் etc).

said...

//இந்து பார்ப்பன பயங்கரவாதத்தை பற்றி பேசும் பொழுது இஸ்லாம பயங்கரவாதத்தை துணைக்கு அழைத்து வந்து தாங்கள் ஏதோ மிகவும் நல்ல பிள்ளைகள் போல் நடிப்பது இவர்களது தந்திரம்தான்.//

இந்த பதிவு இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றியது. அதில் தேவையில்லாம இந்து பாசிசத்தை இழுத்து எழுதியது நீங்கள். அப்படி இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இந்து பாசிசத்தை இழுத்து இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவது நீங்கள். மேலே கேட்டிருந்தேனே. தாய்லாந்து நாட்டில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதம். காரணம் இந்து பயங்கரவாதம்தான் என்று கண்டுபிடித்து விட்டீர்களா? இல்லை ஒரு பணிக்கருக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறீர்களா?

உங்களை குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். உங்கள் பார்வைக்கு
அடிமை முறை (Slavery) இஸ்லாமின் பிரிக்க முடியாத ஒரு அங்கம். - சவூதி ஷேக்


Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

போனபெர்ட்,

வரவேற்பெல்லாம் இருக்கட்டும் ஐயா,

பதிவுக்குச் சம்பந்தம் இல்லாம எழுதுறதுக்கு மன்னிக்கணும்.

பார்ப்பானியத்தை எதற்கு தி.ராஸ்கோலுகள் எதிர்க்கிறார்கள் என்பதை ஆராயாமல் திசை திருப்ப நேசகுமார் ஆரோக்கீயம் அண்ணாச்சிகளுக்கு எளிய வழிகள் சில:

1. உடனடியாக இந்துத்துவாவுக்கு எதிராக எழுதுபவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என டிக்ளேர் செய்வது.

2. விவாதத்தை அல்கொய்தா தீவிரவாதத்தின் பக்கம் எப்படியாவது இழுத்துச் செல்வது

3. உன் ஐ பி கண்டு பிடித்து விட்டேன் என மெலிதாக மிரட்டுவது.

வேற ஏதாவது தோணினா சொல்றேன்

said...

ஆரோக்கியம்,

எதையுமே முழுமையாக படிக்காமல் விமர்சனம் செய்வது சரியில்லை என்று ஆயிரத்தெட்டு தடவை தங்களுக்கு கூறியாயிற்று.

மலர் மன்னனின் திரித்தலைப் பற்றியும் அதன் ஊடாக இந்து வெறியர்களின் வரலாற்றுத் திரிப்பையும் விமர்சனம் செய்வதுதான் எனது கட்டுரையின் ஒரு அம்சமாக உள்ளது.

அதில் தாங்கள் தான் சம்பந்தம் இல்லாமல் இஸ்லாம் பயங்கரவாதத்தை கொண்டு வந்தீர்கள். எனவே உங்களைப் போன்றவர்களைப் பற்றி கருத்து சொல்ல வேண்டியதாயிற்று. ஆக திரித்தலை ஆரம்பித்தவர் நீங்கள் அதை விமர்சனம் செய்தவர்தான் நாங்கள்.

இஸ்லாம் பயங்கரவாதத்தைப் பற்றிய எனது நிலைப்பாட்டை பல இடங்களில் விளக்கியாயிற்று, தாங்கள் எதையுமே படித்து செரித்து விமர்சனம் செய்வதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறீர்கள்.

அதனால்தான் எனது அந்த பதில்களை எல்லாம் வசதியாக விட்டு விட்டு ஏதோ இந்து வெறியை தாக்குவதே, இஸ்லாம் பயங்கரவாதத்திற்க்கு ஆதரவு என்று ஒரு கேவலமான புரிதலில் இருந்து கொண்டு எதிர்வினை புரிந்தால் நான் என்ன செய்ய?

மேலும், பல இடங்களில்(தளங்களில்) இந்து பயங்கரவாதத்தை special - ஆக விமர்சனம் செய்வதின் காரணத்தையும் விளக்கியாயிற்று. அதற்க்கு உங்கள் பக்கம் இருந்து இது வரை ஒரு எதிர் வினையும் இல்லை.

நீங்கள் அம்பலம் ஆகும் இடத்திலெல்லாம் அமைதியாக இருந்து கொண்டு. தேவைப்படும் போது எமது வாதத்தின் ஒரு பகுதியை தங்கள் வசதிக்கு ஏற்ப வெட்டி குறுக்கி எதிர் வாதம் செய்யும் வரலாற்றுப் பழக்கத்தை என்றைக்கு விடப் போகிறீர்கள்? இதை பல முறை விமர்சனம் செய்தும், அம்பலப்படுத்தியும் தங்களது கும்பலுக்கு புத்தியில் ஏறும் வழியைக் காணும்.

ஏதாவது ஒரு இடத்திலாவது நான் இஸ்லாம் பயங்கரவாதத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவதாக நிருபியுங்களேன். தங்களது கும்பலை சேர்ந்த நேசக் குமார் கூட நான் மத வேற்றுமையின்றி அனைத்து அடிப்படைவாதத்தையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று கூறியதாக கூறியுள்ளார்.

தாய்லாந்து எடுத்துக்காட்டை தாங்கள் எந்த context-ல் கொண்டு வந்தீர்கள் என்பதை திருப்பிப் பார்க்கவும் பிறகு அதற்க்கு நான் பதில் சொல்லியிருப்பது அந்த context-க்கு பொருத்தமாக இருக்கிறதா என்று பார்க்கவும்.(அப்படியெல்லாம் பார்த்து பழக்கமில்லை என்றால், பழகிக்கொள்ளவும்)

இஸ்லாம் பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டியதுதான் அதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் அதை சாக்காக வைத்துக் கொண்டு இந்து பயங்கரவாதத்திற்க்கு ஆள் சேர்க்கும் வேலையை நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க வேண்டும் என்கிற ஆவல் தான் தங்களது இந்த வஞ்சகமான எதிர்வினைகளின் மூலம் எனக்கு புரியவருகிறது.

மீண்டும் ஏற்கனவே தங்களுக்கு சொல்லிய அறிவுரையையே சொல்கிறேன்

தயவு செய்து ஒரு விசயத்தை விமர்சனம் செய்யும் முன் அதை அதன் உண்மையான பொருளில் புரிந்து கொண்டு, ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டு வாருங்கள்.

தங்களுக்கு பொறுமையாக விலாவாரியாக பதில் சொல்லியே எத்தனை பக்கங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்று சிறிது மேலே பாருங்கள். எனது பொறுமையை சோதிக்கிறீர்கள்.

சிறுபிள்ளைத் தனமான வாதங்களை வைக்கும் பழக்கத்திற்க்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.

****
இந்த பதிலை வசிக்கும் மற்ற வலைஞர்கள் தயவுசெய்து ஆரோக்கியத்திற்க்கான எனது விலாவாரியான முந்தைய பதில்களை படியுங்கள். அப்பொழுதுதான் எந்த அளவு sincere ஆக அவருக்கு நான் பதில் சொல்லியுள்ளேன் என்பதும். அவர் அதை எதையுமே சிறிதும் சட்டை செய்யாமல் தொடர்ந்து எதிர் வினை புரிவதும் தங்களுக்கு புரியும்.

said...

//இஸ்லாம் ஒரு சமத்துவ மதம், அதில் தலித்துகளே சேருங்கள் என்று பொய் பித்தலாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் பலர். அதில் சமீபத்தில் போன்பார்ட் என்பவரும் உளறிக்கொண்டிருக்கிறார். இவர் ஒரு முஸ்லீம் என்பது என் சந்தேகம். //

தங்களது கட்டுரையை படித்தேன். தங்கள் மேல் நான் வைத்த விமர்சனம் சரிதான் என்று தெளிந்தேன்.

மதங்களைப் பற்றிய என்னுடைய நிலைப்பாட்டை கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாட்டை பல இடங்களில் சொல்லியாயிற்று. தனிச் சொத்துடமையை ஆதரிக்கும் எதுவும் எங்களுக்கு எதிரிதான். அதில் அரசுக்கு அடுத்தபடியாக இருப்பது மதம் தான். இஸ்லாம் ஒரு மதம் என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் கூறுகிறேன்.

அப்புறம் என்மேல் வைக்கப்படும் படு முட்டாள்தனமான, முரன்பட்ட(எப்படி முரன்படுகிறது என்பதை அவர்களது பல்வேறு எதிர்வினைகளை படித்தால் புரியும்) யூகங்களுக்கு என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது,

மேலும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள் எங்களுக்கும் சேர்த்து சிந்திப்பதை சிறிது நிறுத்திக்கொண்டால் பிறகு நிதானமாக விசயங்களை புரிந்து கொண்டு பதிலளிக்க நிறைய நேரம் கிடைக்கும்.

said...

தி ராஸ்கோல் அவர்களே,

மிகச் சரியாக அவர்கள் அதைத்தான் செய்து வருகிறார்கள். நேர்மையாக தங்கள் திட்டங்களை வெளிப்படையாக வைத்து செயல் படுவதற்க்கேற்ற நேர்மையான திட்டங்கள் ஏதுமற்றவர்களின் கடைசிப் புகலிடம் நீங்கள் சொன்ன மேலேயுள்ளவைதான்.

அவதூறு பரப்புவது, hate propaganda என்று மிகச் சுலபமாக ஒரே வரியில் சொல்லுவது, நாம் வளைத்து வளைத்து ஆதாரங்களைத் தேடி தர்க்கரீதியாக(logical) வாதத்தை முன் வைத்தால், அதை படிக்காமாலேயே, நமது பல்வேறு நிலைப்பாடுகளைப் பற்றி கருத்தில் கொள்ளாமலேயே பரசியடிப்பது...

என்ன செய்ய, வலைப்பூ சனநாயகத்தின் தேவைக்காகவும், இவர்களை அம்பலப்படுத்தும் தேவைக்காகவும் சிரமம் பார்க்காமல் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

தங்களது தொடர் ஆதரவுக்கு நன்றி!

said...

தங்கள் வரவுக்கு நன்றி Aarokkiyam உள்ளவன்!

said...

நீங்கள் எல்லா பயங்கரவாதங்களையும் பாசிசங்களையும் எதிர்க்கிறேன் என்று கூறுகிறீர்கள். அவ்வாறு சொல்லும்போது நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், மிகச்சில பதிவுகளே எழுதியிருப்பதால், இதுவரை நீங்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை பற்றி எழுத வாய்ப்பு இருந்திராது. இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் எதிர்த்தும் நீங்கள் எழுதுங்கள்.
மற்றபடி, மாப்பிளா கலவரம் பிரச்னையில் நான் பணிக்கரை விட அம்பேத்காரை நம்புகிறேன். நீங்கள் அம்பேத்காரை விட பணிக்கரை நம்புகிறீர்கள். அது நல்லதுக்கு என்று நினைத்தால் வாழ்த்துக்கள்.
Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

//இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் எதிர்த்தும் நீங்கள் எழுதுங்கள்.
மற்றபடி, மாப்பிளா கலவரம் பிரச்னையில் நான் பணிக்கரை விட அம்பேத்காரை நம்புகிறேன். நீங்கள் அம்பேத்காரை விட பணிக்கரை நம்புகிறீர்கள். அது நல்லதுக்கு என்று நினைத்தால் வாழ்த்துக்கள். //

ஆரோக்கியம்,

எங்களுக்கு, மார்க்ஸாகவே இருந்தாலும் அவரது வார்த்தை எந்த CONTEXT-ல் வெளிவருகிறது என்பதுடன் சேர்த்துத்தான் அந்த வார்த்தைகளை எந்த பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முடிவு செய்வதுதான் சரியான ஆய்வு முறை.

இது பணிக்கரை நம்புவதா அல்லது அம்பேத்கரை நம்புவதா என்கிற பிரச்சனையல்ல.

ஒரு விசயத்தை அதன் வரலாற்றுடன் தொடர்புபடுத்தி புரிந்து கொள்வதா அல்லது தனி சம்பவமாக அது நடந்த காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கண்மூடித்தனமாக நமது விருப்பத்திற்க்கு ஏற்ற முடிவுக்கு வருவதா என்பது பற்றிய பிரச்சனை.

ஏன் தங்களுக்கு பணிக்கர் மிகவும் இடைஞ்சல் தருகிறார் என்றால் அவரது ஆதரங்களாக நான் வைத்துள்ள விசயங்களை எனது கட்டுரையில் இருந்து நீக்கி விட்டு பாருங்கள். அப்பொழுதும் அது வர்க்கப் போராட்டம் என்பதை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டும்.

அன்றைய பிரிட்டிஸ் அரசின் ஆவணங்களும், மாப்ளா விவசாயிகளின் கலை இலக்கிய பங்களிப்பும்தான் மாப்ளா கலகத்தை வர்க்க போராட்டமாக நிறுவ உதவிய ஆதாரங்கள்.

மீண்டும் சொல்கிறேன், கட்டுரையை படியுங்கள்.

அப்புறம், எங்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை விட அதி அதி முக்கியமானது ஒரு லட்சம் விவசாயிகளின் மரணமும், உழைக்கும் மக்களின் போராட்டமும். வேண்டுமானால் தாய்லாந்து சென்று தங்களது இஸ்லாம் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடருங்கள். எங்களுக்கு மதஅடிப்படைவாதம் அதன் எல்லை தாண்டும் பொழுது, மக்களுக்கு இடைஞ்சல் செய்யும் போது எந்த அளவில் அடித்து மட்டம் தட்ட வேண்டும் என்று தெரியும். விமர்சனம் செய்து அம்பலப்படுத்தி மக்களை உணர்வு பெறச்செய்ய வேண்டிய விசயங்கள் ஆயிரம் உள்ளன. நாங்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக வலையில் உலாவவில்லை. வேண்டுமானால் நீங்கள் இந்து மதத்தின் உண்மையான(உண்மையான) மேன்மைகளை சொல்லி ஆள் சேர்க்க பிரச்சாரம் செய்யுங்கள் நாங்கள் தற்போதைக்கு கண்டுகொள்ள மாட்டோம்.

said...

safeway pharmacy in dunkirk maryland http://drugstore4.com/product/breast-success.html independent pharmacy [url=http://drugstore4.com/de/product/vasotec.html]vasotec[/url]
own your own pharmacy http://drugstore4.com/de/product/himalaya-evercare-syp.html omeprazole online pharmacy [url=http://drugstore4.com/product/cardura.html]walgreens pharmacy space center blvd[/url]
utah state requirements for pharmacy tech http://drugstore4.com/de/product/macrobid.html pharmacy today [url=http://drugstore4.com/product/viagra-super-active.html]viagra super active[/url]
pharmacy concerns http://drugstore4.com/fr/product/levaquin.html napa valley pharmacy [url=http://drugstore4.com/fr/product/urispas-tabs.html]biggs pharmacy[/url]

Related Posts with Thumbnails