TerrorisminFocus

Friday, June 16, 2006

பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை

பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்


1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால், ஒரு வாரம் முன்பு வரை அம்மாவின் அராஜக ஆட்சியைக் கடும் சொற்களால் வசை பாடி விட்டு, அதே அம்மாவினை அன்புச் சகோதரியாய்க் காண முடிந்த வைகோவின் செயலுக்கும் தமிழ் சமுதாயம் மீது பழிபோட்டு விடலாம். எமெர்ஜென்சியில் தனது மகனைப் பின்னி எடுத்த இந்திராவிடமே நிலையான ஆட்சிக்கு லட்சியக் கூட்டு சேர்ந்த கருணாநிதியும் தமிழ் சமுதாயம் மீதே பழி போடலாம். பதினேழு தொழிலாளர்களைத் தாமிரபரணியில் அடித்துச் சாகடித்த செயல் நிகழ்ந்த இரண்டே ஆண்டுகளில் தமிழினத் தலைவரோடு கூட்டு சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமியும் பழியை, தமிழ்சமுதாயத்தின் மீதே போடலாம்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் அன்னிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு மாண்ட மாவீரன் கட்டபொம்மனைப் பாராட்டி எழுதாத பாரதியின் நெஞ்சுரம், நாட்டைக் கூட்டிக் கொடுத்து ஜமீனாகி அன்னியனுக்கு சேவை செய்த எட்டப்ப பூபதிக்குத் தூக்குக் கவி எழுதியதையும், தமிழ் சமூகம் மீதே பழிபோட்டால் தீர்ந்தது கணக்கு.

தமிழ் மக்களால் பெரிதும் அறியப்படாமல் மறைந்து போன பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் போன்ற நாடகமேதைகள் போலீசின் தடையை மீறியும் "டயர் மடையன்" போன்ற பாடல்களால் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பாடினார்களே, அவர்களும் இந்தத் தமிழ்சமுதாயத்தில்தான் உதித்தார்கள். நாட்டார் பாடல்களிலும், கொலைச்சிந்துக்களிலும் இடம் பிடித்த ஜெனரல் டயரின் கொடுஞ்செயலை குஜிலிப் புத்தகம் எழுதும் லோக்கல் எழுத்தாளர்கள் கூட எழுதத் துணிந்தபோது, நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி அன்னிபெசண்ட் வழியிலே சென்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்க மட்டும் பாரதிக்கு துணிச்சல் வந்ததே அங்கிருக்கிறது சாதிப்பற்று.

அதே தமிழ்ச் சமுதாயத்தைத் தன்னகத்தே கொண்ட பாரத சமுதாயம்தான், கொடியவன் டயரைப் பழிதீர்க்க, வீரன் உத்தம்சிங்கை உற்பத்தி செய்தது.

"மாட்சிமை தாங்கிய" கவர்னர்பெருமானின் காலடிக்கு சமர்ப்பித்த கருணை மனுக்களில் ஒன்றில் கூட "தான் பிறந்த பார்ப்பனக் குல மேன்மைக்கு" சிறை வாழ்வு ஒத்து வராது எனச் சுய சாதிப் பெருமை பேசிய பாரதி வாழ்ந்த அதே மண்ணில்தான் புரட்சிக்காரன் பகத்சிங்கும் பிறந்தான். அவனின் தந்தை, தன் மகனை மன்னிக்கும்படி கடிதம் எழுத நேர்ந்தபோது, அந்தத் தந்தையைக் கடிந்து வேதனையுடன் கடும்சொற்களால் அவ்வீரன் அர்ச்சித்துக் கடிதம் எழுதியதும் இந்த மண்ணில்தான்.

பாரதியார், ஏதோ ஒரு முறை தவறுதலாக மன்னிப்புக் கேட்டு விட்டாரென்றில்லை. பலமுறை பிரிட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் போட்டு மண்டியிட்டவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.

கடலூர் சிறையில் இருந்தபடி எழுதிய 1918ஆம் வருசத்து மன்னிப்புக் கடிதத்துக்கு முன்னர் 1912,1913,1914 ஆகிய வருடங்களில் தொடர்ந்து பிரிட்டிஷார், தம்மிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கெஞ்சியபடி புதுவையில் இருந்து தொடர்ந்து கடிதங்களைப் பாரதி எழுதி இருக்கிறார்.

மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொண்ட அதே 1914ஆம் ஆண்டு பாரதியார் ஒரு பாட்டும் எழுதி இருக்கிறார்.

அப்பாட்டு
"அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே....இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும் ....உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்பதாகும்.

இந்த வீரம் கொப்பளிக்கும் பாட்டைக் கேட்டு தேசப்பற்றுள்ள மக்கள் புல்லரித்துக் கொண்டு இருக்கும்போதே நம்ம 'சத்திய ஆவேசம்' கொண்ட கவிஞரோ, நம்ம எதிரிக்கு பேனாவால் முதுகு சொரிந்து கொண்டிருந்தாரே.

8/4/1914 இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில், தம்மை ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தித் தண்டித்து விடுவார்களோ எனும் பயத்தில், 'நான் புதுவை செல்வதற்கு முன்பே வாஞ்சி வந்துள்ளார். என்னை அவர் சந்திக்கவில்லை' என்று எழுதினார்.

1912இல் சென்னை கவர்னராயிருந்த கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி இறைஞ்சியுள்ளார்.

பின்னர் கவர்னரான பெண்ட்லாண்டு பிரபுவுக்கும் தன்னிலையை விளக்கி மற்றும் ஒரு கெஞ்சல் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதன் பின்னர் 1916 இல் சுதேசமித்திரனில் இன்னும் கீழே போய், 'ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போக வேண்டாம்' என்றிடும் அளவிற்குப் போய்விட்டார், சூரப்புலி.

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்லலாம். பிரிட்டிஷாருக்கு எழுதிக்கொடுத்த வாக்குறுதியை அச்சு பிசகாமல் காப்பாற்றியுள்ளார். தனது அரசியல் குருவான திலகர் இறந்ததற்குக் கூட இரங்கல் எழுதாமல்தான் இருந்துள்ளார். ஆனால் அதே ஆண்டில் இறந்த ஓவியர் ரவிவர்மாவுக்கும், இசைக்கலைஞர் சுப்புராம தீட்சிதருக்கும் தலா ஒரு இரங்கல் வீதம் எழுதியுள்ளார்.

2) நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலே "தவறாக வேதம் ஓதுபவனைவிட, ஒழுங்காய்ச் சிரைப்பவனே மேல் என்று கூறடா தம்பி" என்று எழுதியதில்தான் 'இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தில்லி பார்ப்பன மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் தெருப் பெருக்கித் தம் எதிர்ப்பை வெளியிட்ட சாதித்திமிருக்கான' விதை இருக்கிறது.

3) தன் தந்தை வறுமைப்பட்டதை எழுதும்போது கூட, பார்ப்பனக் குலம் கெட்டு அழியும் கலியுகம் ஆதலால் தம் தந்தை வேர்வை சிந்த உழைக்க நேர்ந்ததாகச் செப்பும் பாரதியிடம் வெளிப்பட்டது சாதி உணர்வில்லாமல் வேறென்ன? மனு தர்மத்தின்படி வேர்வை சிந்த உழைப்பது பார்ப்பன தர்மம் இல்லை என்ற கோபம்தானே பாரதியிடம் வெளிப்பட்டது?

4) நாலு வருணங்கள் சிதைவதை மிகவும் மனம் நொந்து 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்' எனப் பாடியது சாதி ஆதரவுக் குரல் ஆகாதா?

5) "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்றும் பாரதி சொல்லிக் கொண்டிருந்த காலத்துக்குச் சற்றே முன்புதான், அவர் ஊரான எட்டையபுரத்திற்கு கூப்பிடு தொலைவில், நாடார்கள் மேல்நிலையாக்கம் நோக்கிப் போவதைப் பொறுக்காமல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தாத்தாவான வெள்ளைச் சாமித் தேவர் தலைமையில் சிவகாசியை எரித்து, நூற்றுக்கணக்கில் மனிதர்களை வெட்டித் தள்ளியது ஒரு சாதி வெறிக் கும்பல். சாதியை ஒழிக்காமல் இந்த வெறிச்செயல்களை எல்லாம் நிறுத்த முடியாதென்பது தெள்ளத் தெளிவாய்த் தெரியும்போதே, சாதிக்களைக்கு நீரூற்றி வளர்க்கும் விதமாய் பாரதி எழுதியதை எப்படிச் சகித்துக் கொள்வது?

6) பார்ப்பனரல்லாதார் இயக்கம் சென்னையில் கூட்டம் நடத்தியபோது "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" எனக் கோபமாகக் கேட்டதில் ஓருண்மை அவர் மூலமாகவே அம்பலமாகின்றது. 'ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள்' என்று பாரதி முசுலீமையோ, கிறித்துவரையோ, அல்லது நாத்திகர்களையோ சொல்லவில்லை.கடவுள் பக்தி கொண்டிருந்த டி.எம்.நாயரையும், தியாகராயச் செட்டியாரையும், நடேச முதலியாரையும்தான்.இவர்கள் பார்ப்பனரல்லாதாருக்காக உழைத்தால் அது ஹிந்து விரோதம் என்றால், ஹிந்து மதம் என்பதே பார்ப்பனர்கள் மட்டும்தான் என்று பாரதி கருதி இருப்பது தெரிய வருகிறது. தாம் தனிப்பட்ட வகுப்பினர்தான் என்பதை "வேதியராயினும், வேற்றுக் குலத்தவராயினும்" எனப் பிரித்துத்தான் அவரால் எழுத முடிந்திருக்கின்றது.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தையும் ஒவ்வொரு பிராமண சபையிலும் போய் தாக்கிப் பேசி விட்டு வந்ததெல்லாம் சாதி ஒழிப்புப் போர்த் தந்திரமா?

இல்லை. அதுதான் பச்சைப் பார்ப்பனீயம்.

1906ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் இருந்து சட்டசபைக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டிய தேர்தலில், தேசிகாச்சாரி எனும் பார்ப்பனர் ஒருவரின் விடாப் பிடிவாதத்திற்காக, டாக்டர் டி.எம்.நாயர் விட்டுக் கொடுத்த செயலை "பெருந்தன்மை" எனப் புகழ்ந்த பாரதி 1916லே அதே நாயரை "டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகள்" என்று சாடியுள்ளார். இவ்வேறுபாட்டின் காரணம், 1906இல் பார்ப்பனருக்காக விட்டுக்கொடுத்த காங்கிரசுக் கார நாயர் 1916, இவர்களின் ஆதிக்கம் பொறுக்க இயலாது பிராமணரல்லாதார் இயக்கம் கண்டதே.

தன் சாதி நலன் ஒன்றே குறியாய் இருந்ததால் கோபம் கொண்டு நாயரைத் தேசத் துரோகி என்று திட்டிய பாரதி, தேச விடுதலைக்காக வெடிமருந்து சேகரித்துக் கொண்டிருந்தாராக்கும் என நாம் நினைத்தால் நம்மைக் கேணையராக்கிட 1916லேயே "மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை" என்று எழுதி வைத்து இருக்கிறார். இந்தப்படிக்கு எழுதும் பாரதி எந்த விதத்தில் நாயரைத் தேசத்துரோகி என்கிறார்? பாரதிக்கு 'அக்கிரகாரம் மட்டுமே தேசம்' என்ற இக்கினியூண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ரொம்பப் பிடிக்குமாக்கும்.

வெள்ளையர் ஆதிக்கத்தைக் கண்டு கோபம் கொள்ளாது, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கண்டதும் "ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து வழக்கப்படுத்தாத வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாய் இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மட்டுமே சார்ந்ததாகாது" எனத் தன் சுய சாதிக்கு ஒரு பாதுகாப்பு வளையம் தந்திட்டவர்தானே பாரதி? 'நாங்க மட்டும் குற்றவாளிக இல்ல. எல்லோரும்தான். அதிலே பிராமணாள் பத்தோட பதினொன்னுதானே' எனச் சப்பைக்கட்டுக் கட்ட ஒருவனுக்கு எது மனத்துணிவைத் தருகிறது?

7) "சாதியொழிப்பும் சாதி மறுப்பும் ஒரு சாதி தனக்கு மேலாக உள்ள சாதியுடன் சம்பந்தம் கொள்வது மட்டுமல்ல, தனக்குக் கீழுள்ள சாதியோடும் உறவாடுவதுதான்" என்கிறார் ம.ம. இது, பாரதிக்கும் பொருந்தும் தானே!. சாதிகள் இல்லையடி என்ற நபர், தனக்குக் கீழாக உள்ள சாதியினரான நாராயணப்பிள்ளையிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது ஏன் சீறினார்? சொல்லுக்கும் செயலுக்கும் இடையில்தான் எத்தனை தூரம்!

எவ்வளவுதான் தனது சுயசாதிக்காக உழைத்தாலும் சூதறிஞர் ராஜாஜி, தன் மகளை, பனியா காந்தியின் மகனுக்கு மணம் முடித்திருக்கிறார். ராஜாஜியின் இச்செயலைவிடப் பாரதியின் செயல் தாழ்வானதுதான்.

8) சாதி வெறி பாரதியிடம் மட்டும் இல்லை. ம.ம.விடமும் இருக்கிறது என்பதை, கடையம் நாராயணப்பிள்ளையைப் பற்றி அவர் எழுதிய "ஈனப் பிறவி", "கொழுப்பு" எனும் வார்த்தைகளே உறுதிப்படுத்துகின்றன.

பார்ப்பனர் மனைவியிடம் நாராயணப்பிள்ளை உறவு வைத்திருந்ததை மலர்மன்னன் "கொழுப்பு" என்கிறார். பார்ப்பனரின் மனைவியிடம் தகாத செயல் செய்வது 'கொழுப்பு' என்றால், இன்றைக்கு வேலை பார்ர்க்கும் இடங்களில் நடப்பவற்றுக்கு, சிறு பட்டறைத் தொழிலாளிகளிடம், அச்சுக் கோர்க்கும் தொழிலாளிகளிடம் முயற்சி நடந்தால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம்? - இது மலர்மன்னனுக்கு புரியும்.

"பாரதிதாசன், பாரதியை 'அய்யர்' என்று மரியாதையுடன் (!) அழைத்தார்" என ஒரு நபர் குறிப்பிடுகிறார் என்பதில் இருந்தே, 'அய்யர்' என்ற பதத்திற்கு ம.ம. தரும் மரியாதையும், உயர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

9) சூத்திரர்கள், பிராமணப்பெண்ணைப் புணர்வதைத் தடைசெய்யும் மனு, சூத்திரப் பெண்களைப் பெண்டாள, பிராமணருக்கு அனுமதி தந்திருப்பதன் மறுவார்ப்புத்தான் இவை. உடனே மலர்மன்னன், பெங்களூரில் தான் தோசை சாப்பிடுவதே தலித் காலனியில்தான் என்றும், காலனியில் முந்தா நாள் வைத்த மீன் குழம்பை அகப்பையோடு சாப்பிடுவேன் என்றும் பாவண்ணனை சாட்சிக்கு அழைப்பார். இதெல்லாம் ஒருவித முன்னேற்பாடுதான். பெங்களூரில் நடந்த சுந்தரராமசாமியின் இரங்கல் கூட்டத்தில், 'எங்கள் வீட்டில் சு.ரா. தோசை சாப்பிட்டார்' எனச் சொல்லி எழுத்தாளர்கள் தேம்பித் தேம்பி அழுதது, பின்னாளில் என்ன நடக்கக்கூடும் என்பதை எனக்குத் தெரிவிக்கிறது. பாரதி கடையத்தில் நடந்து கொண்டதை ஒருவர் நியாயப்படுத்தினால், அவர் நிச்சயமாய் சாதி உணர்வைக் கடந்தவரில்லை என்பதை உறுதிப்படுத்தலாம்.

10) 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' எனத் தலித் மக்களை 'ஈனர்'களாய்ப் பார்த்தவர்தானே பாரதி? வேறொரு இடத்திலே 'வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைகளாயினர்' எனப் பாரதி பாடியிருப்பதை சாதித்திமிர் என்றில்லாமல் எவ்வாறு பார்ப்பது?

11) பாரதியின் சாதிவெறியை அம்பலப்படுத்திடும் போதெல்லாம், பாரதி ரசிகர் மன்றத்தினர் வழக்கமாய் "அவர் தனது சுய சாதியையே பலமாக எதிர்த்தவர்" என்று கோரஸ் பாடுவது வழக்கம்.

இதற்கு மதிமாறன் "பாரதியின் பார்ப்பன எதிர்ப்பு, தீவிரமான அல்லது உண்மையான ஒன்றாக இருந்தால், பார்ப்பன உணர்வில் ஊறிய நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர் போன்ற பணக்காரர்கள் பாரதிக்கு வேலை வாய்ப்பு தந்ததும், இக்கட்டான நேரங்களில், குறிப்பாகப் பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகப் போனதற்கு உதவி செய்ததும், கைதான பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்ததும், மீண்டும் வேலை வாய்ப்புத் தந்தது எதனால்? பாரதியைச் சிறை மீட்ட குழு: மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார் மற்றும் அன்னிபெசண்ட்" எனக் கேட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மவுனம் காக்கிறார்கள்.

12) சாதி வெறி மட்டும் அல்ல, இந்து மதவெறியும் அந்தக் கவிஞனைப் பாடாய்ப் படுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் "இந்தியா என்பது இந்துக்கள் நாடு. அதாவது வேத பூமி அல்லது வேதபுரம். இங்கு எந்த மதத்தினர் வாழ்ந்தாலும் இந்த உணர்வோடுதான் வாழ வேண்டும். இல்லை வேத புத்திரர்களின் உணர்வைப் புரிந்து கொண்டாவது வாழ வேண்டும்" என்று ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்சன் சொல்ல வேண்டியதை ஏன் பாரதி சொல்ல வேண்டும்?

முஸ்லிம்களை "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" என்று அவர் விசம் கக்கி வைத்திருப்பதால்தான் சோ ராமசாமியில் இருந்து மலர்மன்னன் வரை அனைத்து இந்துத்துவக் குழுக்களும் அவருக்குப் பல்லக்கு தூக்குகின்றன.

சிவாஜி கூறியதாகப் பாரதி அளந்து விடும்போது கூட குரானை இழிவுபடுத்திட "வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய் பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே" என்று பாடி வைத்து, குரானை 'பேதை' நூல் என்று சொல்லியவர்தான்.

13) திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். "அச்சிறுமிகள் 'ஆண்டவன்' என்றும் 'ஏசுநாதன்' என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோ ம்!" என்று ராமகோபாலன்ஜி ரேஞ்சுக்கு வருத்தப்படுகிறாரே பாரதி அங்கிருக்கிறது மதத் துவேஷம். வேறொரு கட்டுரையில் "மிஷனரி பள்ளிக்கு மக்களை அனுப்பும் தந்தைமாரைப் புத்திரத்துரோகிகள்" என்று அன்பாய்க் கடிந்து கொள்கிறார்.

முன்னூறு பேர், இந்து சமயத்தில் இருந்து கிறிஸ்தவம் போனபோது "சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது.." என்று மதத் துவேஷியாகிறார், பாரதியார்.

துவேஷத்துக்கு ஓர் எல்லையில்லையா? மன்னிக்கணும், இந்தக் கேள்வி பாரதியைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி.

பாரதியார் சொன்ன/எழுதிய/பாடிய அத்தனையும் எவ்வகையான நபர்களை உருவாக்கியது என்பதற்கு சான்றாக சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டி ஒன்றைச் சொல்லலாம்.

கேள்வி:- "இந்து மதக் கொள்கையில் ஈடுபாடு கொள்ள, உங்களை ஈர்த்தது எது?"

பதில்:- "பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது, பாரதியார் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம். அவரோட தேசியப்பாடல்களை மனப்பாடமாகப் பாடுவேன். அப்போ இந்து மதக் கூட்டம் ஒன்று கேட்டேன். ஏற்கெனவே பாரதி பாடல்களைப் படித்திருந்ததால், இந்து மதக் கூட்டம் என்னைச் சுலபமாகக் கவர்ந்தது"

மேற்கண்ட பதிலைச் சொன்னவர், இந்து முன்னணியின் ராம கோபாலன்.

14) மலர்மன்னனின் பார்வையில் 'பெரியார் ஒருவர் உண்டென்றால் அது பாரதியார்தானாம்'. பெரியார் எனும் பட்டத்தை ஈவேராவிற்கு வழங்கியவர்களே மகளிர்தான். அதனால் மகளிர் சம்பந்தப்பட்ட ஒரு உதாரணத்துடன் மலர்மன்னனின் பெரியாரையும், தமிழர்களின் பெரியாரையும் ஒப்பிடலாம். கள்ளுக்கடை மறியலை நிறுத்திவைக்கலாமே எனக் காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்னது "அது என் கையில் இல்லை. ஈரோட்டிலே இவ்விசயத்தில் தீவிரமாய் இருக்கும் கண்ணம்மா மற்றும் நாகம்மை ஆகிய இரு பெண்களின் கைகளில்தான் அது உள்ளது" என்றார். கண்ணம்மா, பெரியாரின் தங்கை. நாகம்மை, பெரியாரின் மனைவி. பெரியார், பெண் விடுதலையை வெறும் பேச்சோடு நிறுத்திடாமல், தம் குடும்பத்துப் பெண்டிரையும் ஆண்களோடு சமமாய் பொதுவாழ்வில் ஈடுபாடு காட்டிடத் துணையாய் நின்றார்.

ஆனால் பாரதியோ, கடையம் ஊரில் இருந்த கடைசிக் காலத்தில், அவ்வூருக்குப் பக்கத்தில் இருக்கும் மலையிலுள்ள சாமியாரைப் பார்ப்பதற்கு அவரின் 14 வயது மகள், தங்கம்மா வர மறுத்ததற்காக பொது இடமென்றும் பாராமல் செவிட்டில் அறைந்து தன் ஆண் தன்மையை வெளிப்படுத்தியவர்தான் பாரதிப் பெரியார்.

இதே பெரியார்(?)தான் பாஞ்சாலி சபதத்தில் பாண்டவர்களைத் திட்ட 'பெட்டைப் புலம்பல்' என்றும், சிவாஜி தன் சைனியத்துக்கு ஆற்றிய வீரவுரைப் பாட்டில் "ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும் வீணில் இங்கிருந்து" என்றும், "பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்" என்றும், 1910 பிப்ரவரியில் கர்மயோகியில் உடன்கட்டை ஏறிய பெண்களைப் புகழ்ந்தும் எழுதியவர்.

பெண் விடுதலை, வேதங்களில் புராணங்களில் பெண்களின் நிலை என்றெல்லாம் விரல்நுனியில் தகவல்களை வைத்துப் பாட்டினில் பாடிய பாரதிக்கு, 1912இலே மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே மருத்துவப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமியைப் பற்றி ஒரு வரிகூட ஏன் எழுதிப் போற்றிடத் தோன்றவில்லை? எனக் கேட்டால் பாரதி அன்பர்கள் என்ன சொல்லிப் பூசி மெழுகுவரோ தெரியவில்லை. என்ன காரணமாய் இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான வருடங்கள் கல்வி மறுக்கப்பட்ட குலத்தில் முத்து லெட்சுமி பிறந்ததா?
'சிறந்த பெண்மணி' எனப் பாரதி யாருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் தெரியுமா?"(தலித்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை இப்பிறவியில் அனுபவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொது கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும்" என்று வக்கிரமாய் எழுதிய அன்னிபெசண்ட் தான் அவர்.

15) 'வாழ்க நீ எம்மான்' எனக் காந்திக்கும் ஒரு பாட்டு. பாட்டுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் அவர் அறிவித்த 'ஒத்துழையாமை' தன் சாதியினர் அனுபவித்து வந்த எலும்புத்துண்டு பதவிகளுக்கு உலை வைக்கும் வேளையில் 'அத்தகைய ஒத்துழையாமையெல்லாம்' வேலைக்கு ஆகாது என எழுதிக் காந்திக்குத் துரோகம் செய்யும் பாரதியார் பெரியாரா? அல்லது ஒத்துழையாமையின்படி கோர்ட், கச்சேரிகளைப் புறக்கணித்ததால் 1919லேயே தனக்கு வர வேண்டிய ரூபாய் அய்ம்பதாயிரத்தை இழந்து நின்ற ஈவேரா, பெரியாரா?

16) சாதியை மறைத்து வைக்கிறேன் என்று தலித்துக்குப் பூணூல் போடும் அபத்தமான சிறுபிள்ளை விளையாட்டை நிகழ்த்திய பாரதி, பெரியாரா?சாதியைக் கட்டிக் காக்கும் மனுதர்மத்தைக் கொளுத்திய ஈரோட்டார், பெரியாரா?

17) சாதியை விட்டுப் பெண் தர மறுத்துப் பிரச்சினை பண்ணி, சென்னைக்கு ஓடி வந்து ஒளிந்த பாரதி, பெரியாரா?

சாதியினைக் காப்பாற்றி வரும் சக்தியே அகமண முறையில்தான் அடங்கி இருக்கிறது என்பதால், சாதி ஒழிப்புத் திருமணத்தை ஆயிரக்கணக்கில் நடத்தி வைத்ததன் மூலம், இன்றும் பல்லாயிரம் சாதி மறுப்பாளர்களை உருவாக்கி வைத்த ஈவேரா, பெரியாரா?

தமிழனுக்கு தன்மானத்தைப் போதித்த தந்தை பெரியார்தான், தமிழர்களான எமக்குப் பெரியார் ஆவார். எங்கள் தலைமுறைக்குக் கல்வியை வழங்கிட இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த வெண்தாடிக் காரர்தான் எங்களுக்குப் பெரியார்.
வேண்டுமானால், மலர்மன்னன் போன்ற மூன்று சதவீத இந்துத்துவ ஆட்கள், பாரதியைப் பெரியார் என்று கட்டிக் கொண்டு அழகு பார்க்கட்டும். யாரும் வருந்தப் போவதில்லை.

பாரதியார் சிறந்த பாவலர். இனிமையான பாடல்களைச் செய்தவர் என்பதில் அய்யமில்லை. அவர் குறிப்பிட்டுக் கடிந்த 'இரும்பினால் செய்யப்பட்ட காதுகளின்' சொந்தக் காரர்களான தியாகராயர் பஜனைக் கோஷ்டியில், பாரதி விரும்பியபடியே தமிழ்ப் பாடல்களைப் பாடிட, திருவையாறு தியாகராயர் ஆராதனையிலோ, பாரதிக்கு கடலூர் சிறையில் இருந்து எந்த முறையில் தெண்டனிட்டு கருணை மனு எழுத வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த ஆங்கிலேயப் பேரரசின் மாசு மருவற்ற விசுவாசி சர் சி.பி.ராமசாமி அய்யர் நிறுவிய மியூசிக் அக்கடமியிலோ மலர்மன்னன் போன்றவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் பாரதியின் இந்த ஆசையைக் கூட இவர்கள் கோரியதில்லை. அதனைச் செய்யக் கூட திருவையாற்றுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர்தான் வந்து போலீசிடம் மண்டை உடைபட வேண்டியிருக்கிறது.

'நீங்கள் சொல்லியது உண்மையென்றால் ஏன் பாரதி தேசியக்கவியாகவும், விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறார்?' என்ற உங்களின் கேள்விக்குப் பதிலை அம்பேத்கர் தந்திருக்கிறார்.

"திறமையுள்ள ஒரு தீண்டத்தகாதவரின் கண்ணியத்தையும் உயர்வையும் குறைத்துக் காட்டுவதற்கென ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஓர் இந்து தலைவன், மிகப்பெரும் இந்தியத் தலைவராகப் போற்றப்படுவார். அவர் ஒரு பார்ப்பனராக இருந்தாலும், யாரும் அவரை பார்ப்பனர்களின் தலைவன் என்று குறிப்பிடுவதில்லை. ஆனால், ஒரு தலைவன் தீண்டத்தகாதவராக இருந்தால், அவரின் சாதி பற்றி குறிப்பிட்டு-அவர் தீண்டத்தகாத மக்களின் தலைவராக விவரிக்கப்படுவார்.

ஓர் இந்து டாக்டர், மிகப்பெரும் இந்திய டாக்டராக சித்தரிக்கப்படுவார். அவர் ஓர் அய்யங்காராக இருப்பினும், எவரும் அவரை ஓர் அய்யங்கார் என்று கூற மாட்டார்கள். ஆனால் அதே டாக்டர் ஒரு தீண்டத்தகாதவராக இருப்பார் எனில், அவர் ஒரு தீண்டத்தகாதவர் என்று அடையாளம் காட்டப்படுவார். ஓர் இந்து பாடகர், பெரிய இந்துப் பாடகராகப் போற்றப்படுவார். ஆனால், அதே பாடகர் ஒரு தீண்டத்தகாதவராக இருக்கும் பட்சத்தில், அவர் ஒரு தீண்டத்தகாத பாடகராக விளம்பரப்படுத்தப்படுவார்."

18) பின்னிணைப்பு:
கடலூரில் இருந்து பாரதி எழுதிய புரட்சிகர கடிதம்:-

om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.

To,His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.

The Humble petition of C.Subramania Bharathi,

May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.

Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.

I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.

I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.

************************************
சான்றாதார நூல்கள்:
1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்
**************************************
=====xxx==== =====xxx==== =====xxx====

நன்றி, கற்பக விநாயகம்!
*****
திண்ணையில் வந்த மலர்மன்னனுடைய பாரதியார் பற்றிய ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக கற்பக விநாயகம் எழுதி திண்ணையில் இந்த வாரம் வந்த கட்டுரையை முழுமையாக இங்கு மறு பிரசுரம் பண்ணச் சொல்லி என்னை கற்பக விநாயகம் கேட்டுக் கொண்டார். இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில், இந்து மத வெறி பாசிச சூழலில் பாரதி பற்றிய ஆக்கப் பூரவமான ஒரு மறு மதிப்பீடிற்க்கு இந்த கட்டுரை பங்களிப்பு செய்யும் என்ற நம்பிக்கையில் அதை பிரசுரிக்கிறேன்.
அவரைத் தொடர்புகொள்ள: vellaram@yahoo.com
*****

57 பின்னூட்டங்கள்:

said...

!!!!!!!!!!!!!!!!!!! ஏன் யாருமே பதிலளிக்கவில்லை ?

said...

பல புதிய தகவல்கள் சொல்லி உள்ளீர்கள்....ஆனால் (என்னை பொறுத்தமட்டில்) பாரதியை சாடும் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை...(அது உண்மையாகவே இருந்தாலும்)

ஆமாம் சொல்லிப்புட்டேன்...

said...

வாருங்கள் அனானி, செந்தழல் ரவி.

தங்கள் வருகைக்கு நன்றி.

செந்தழல் ரவி முதல் முறையாக வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ச்சியாக தமிழரங்கத்தில் தட்டுப்படும் நபர் தாங்கள் தான்.

அனானி, மாலைதான் இந்த posting-யை பதிப்பித்தேன் அதனால்தான் இன்னும் யாரும் பதில் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

said...

ஒரு ஆழமான பதிவு.

ஒவ்வொரு மனிதனுக்கும் வேவ்வேறு முகங்கள் இருக்கலாம்.

பாரதியின் இன்னொரு முகத்தை கான்பித்தத்திற்கு நன்றி.

ஆனால் பாரதி எடுத்துக்கொண்ட நோக்கம் பாரத விடுதலை எனக்கொண்டால் இந்த தவறுகளை மன்னிக்கலாம் / மறக்கலாம்.

ஆனால் தெரியாமல் இருக்கக் கூடாது.

நன்றி

said...

பாரதியும் அவுட் :)

said...

வெள்ளைக்காரனிடம் மன்னிப்புக் கேட்டது சாவர்க்கர் மட்டுமில்லை.

சின்னவாலு பெரியவாலு
நடுவாலு கொடுவாலு
அத்தனையும் அவாளு-தாம்.

என்பதை வெளிப்படுத்திய க.வி.யின் திண்ணைக் கடிதத்தை இங்குப் பதித்ததற்கு அசுரனுக்கு நன்றி!

said...

பள்ளி முதல் கல்லூரியின் முதுகலை வரை பாரதியைப் பற்றிக் கற்பித்த பிம்பத்தைக் கற்பக வினாயகம் உடைத்தெறிந்து விட்டார்.

இருள்நீக்கி சுப்பிரமணியைப்போல் எட்டயபுர சுப்பிரமணியும் இரட்டை வேட தாரிதானா?

பாரதியின் மீசை இங்கு முறுக்கிழந்து தொங்குகிறது.

அசுரனுக்கு வாழ்த்துக்கள்.

said...

ஒரே ஒரு சந்தேகம்.

I beg to remain
Your Excellency's
most obedient Servant

என்று கையெழுத்திட்டவர் குடும்பத்தில் freedom fighter
pension வாங்கினார்களா ?

said...

'வல்லான் வகுத்ததே வரலாறு' எனக் கேட்டிருக்கிறேன்.. இதைப் போன்ற புதிய விஷயங்களைப் படிக்கும் போது சில சமயம் உணரவும் முடிகிறது.

பள்ளியில் பாடமாய் படிக்க வைக்கப்பட்ட பாரதிக்கும் , இங்கே ஆராய்ச்சிக் கருப்பொருளாக வைக்கப் பட்ட பாரதிக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாக உணர்கிறேன்.

பாரதி குறித்து இப்படி படிக்க சங்கடமாக இருந்தாலும் இது உண்மையின் சுவையாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் போல.

ஆனால் பாரதியின் வழியில் செல்பவர் பலர் கண்டிப்பாக அன்னப்பறவைகளாக அல்லது உள்மனத் துவேஷங்களை அறியாப் பறவைகளாகவே, அவர் கூறிய நல்ல விஷயங்களை எடுத்திருப்பர் என்று தோன்றுகிறது.

இந்த மருந்தையே சீரணிக்கப் பலநாட்கள் ஆகும் போலத் தெரிகிறது.

பதிவிற்கும், புத்தகங்களின் சுட்டிக்கும் நன்றி.

சுகா

said...

பார்ப்பனக் கோட்டான்களுக்கு குயிலாய் உங்களின் அறிவுரை!


இவண்,
இரா.இசக்கிமுத்து பி.ஏ.,
அலுவலக உதவியாளர்,
போலியார் தலைமைக்கழகம்,
23ஏ,சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.

said...

பாரதி ஒரு தலிபான் தீவிரவாதி. அவனுடைய கருத்தும் சரி. அவனுடைய உருவமும் சரி.

மனித இனத்திற்கே அவன் ஒரு கலங்கம்.

said...

யோசிக்க வைத்த விடயங்கள்! இதே வேளை பெரியாரின் பேச்சுக்கள்;எழுத்துக்கள் கூட "சோ" போன்றோரால்; வரிக்கு வரி விமர்சிக்கப்படுகின்றன.இரண்டு பக்கமும்;தமது கருத்துக்குத் தேவையானவற்றை மாத்திரம்;எடுத்து வைக்கிறார்களோ!!!!; எனினும்..;;ஆழமான வாதம்;ஆய்வுக்குரியதே!!!
தொடர்ந்து தரவும். இங்கே தந்ததற்கு நன்றி!
யோகன் பாரிஸ்

said...

நடு நிலைமையாகப் பார்க்கப் போனால் பெரும்பாலான பிராமணர்கள் ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்தவர்களே. நான் அனைவரையும் சொல்லவில்லை பெரும்பாலானோர். எனென்றால் அன்றய காலகட்டத்தில் அந்தச் சமுதாயத்தில் தான் படித்தவர்கள் அதிகம். அரசாங்க வேலை கிடைக்கப் பெறுவதற்காக ஆதரித்தனர்.

மற்ற சமூகங்களிலும் வெள்ளைக்காரனை ஆதரித்தவர்கள் உண்டு. அவர்களில் பலர் பணக்காரர்கள். சொத்துக்களைப் பாதுகாக்கவே வெள்ளையனை ஆதரித்தார்கள்.

வெள்ளையர்களை எதிர்த்தவர்களில் பெரும்பாலானோர் காந்தி, சுபாஷ் ஆகியோரால் ஈர்க்கப்பட்ட சாதாரண மக்கள்.

ஆனால் பாரதிக்கு மேலை சொன்ன எந்த அவசியமும் இல்லாமல் ஏன் வெள்ளையனை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும் அல்லது பயப்பட வேண்டும்?

அரசாங்க வேலைக்காகவா? வெள்ளையனிடம் இருந்து பணத்துக்காகவா? அவர் வறுமையில் வாடியவர். ஏன்? ஏன்? ஏன்? என்ற கேள்விகளுக்கு ஓரளவிற்கு இந்தப் பதிவின் மூலம் எனக்கு விடை கிடத்துள்ளது.

பாரதியின் இன்னொரு முகத்தை இப்பொழுதுதான் பார்கிறேன். என் குழந்தைகளுக்குப் பாரதியின் கவிதைகளைச் சொல்லிக் கொடுக்கலாமா? என்று யோசிக்க வைத்துள்ள பதிவு இது.

said...

//ஓர் இந்து டாக்டர், மிகப்பெரும் இந்திய டாக்டராக சித்தரிக்கப்படுவார். அவர் ஓர் அய்யங்காராக இருப்பினும், எவரும் அவரை ஓர் அய்யங்கார் என்று கூற மாட்டார்கள். ஆனால் அதே டாக்டர் ஒரு தீண்டத்தகாதவராக இருப்பார் எனில்,//

இது மிகச் சரியான உண்மை. நானும் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். உதாரணமாக நம் முன்னாள் குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களை பிராமணர்கள் தலைமையிலான ஊடகங்கள் தலித் இனத்தவரைச் சேர்ந்தவர் குடியரசுத்தலைவர் என்று பல நேரங்களில் சொல்லியிருக்கின்றன. அவர்களின் உண்மையான முகம் தலித்துகளுக்கு சம உரிமை கொடுப்பதல்ல, இவர் தலித் என்று சொல்லிச் சொல்லியே அவர்களைக் கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான்

said...

மலர்மன்னன் எழுதிய அம்ஷன் குமாரின் பாரதியும், பாரதி துவேஷிகளும் கட்டுரைக்கு எனது
எதிர்வினை திண்ணைக்கு அனுப்பினேன். பிரசுரம் ஆகவில்லை. எனவே இங்கு இடுகிறேன்.

-- சபாபதி சரவணன்

இந்த வாரம் திண்ணையில் திரு. மலர்மன்னன் எழுதிய அம்ஷன்
குமாரின் பாரதியும், பாரதி துவேஷிகளும் கட்டுரைக்கு எனது எதிர்வினையை இங்கு பதிவு
செய்ய விழைகிறேன். உண்மையில் இந்த கட்டுரை மலர்மன்னன் அவர்களால் எழுதபட்டது தானா
என்ற ஐயத்தையே எனக்கு ஏற்படுத்தியது. காரணம், கட்டுரையில் காணப்பட்ட சொற்பிரயோகம்.
என்ன ஆயிற்று மலர்மன்னனுக்கு, கடந்த சில மாதங்களாக அறிவு பூர்வமாகவும் நிதானமாகவும்
தனது கருத்துக்களை எடுத்துரைத்த பெரியவர், (பெரியார் அல்ல) எதிர்வினைகளை சற்றும்
உணர்ச்சிவயப்படாமல், தெளிவாக எதிர்கொண்டவர், பாரதி விஷயத்தில் விஷத்தை கக்குவானேன்.

ஓரு முறை அல்ல, ஆயிரம் முறை தாராளமாக பாரதியை பெரியார் என்று இவர் கூறி கொள்ளட்டும்.
ஆனால் ஓட்டுமொத்த தமிழினத்தின் பெரியார் என பாரதியை முன்னிறுத்த இவர் முயன்று,
பாரதியின் 'யோக்கிய தனத்தை' பட்டவர்தனமாக அம்பலப்படுத்தி உள்ளார். இதற்காக தமிழ்ச்
சமுதாயம் மலர் மன்னனுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது. எதன் அடிப்படையில் இவர்
பாரதியாரை, தமிழ்ச் சமுதாயம் பெரியார் என ஏற்றுக் கொள்ளவேண்டும் என கூறுகிறார்
என்பதை, இவர் கட்டுரையை பல முறை படித்தும் இந்த சிறுவனால் புரிந்து கொள்ள
முடியவில்லை. யாருக்காவது புரிந்தால் தெரியப்படுத்துங்கள். புண்ணியமாகப் போகும்.

சிறையில் இருந்து வெளியே வருவதற்கு, இனி அரசியலில் ஈடுபட போவதில்லை என்று எழுதி
கொடுத்த பாரதி, அதன் காரணமாகவே ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து கண்டனம்
தெரிவிக்க முடியவில்லை என மலர்மன்னன் சொல்கிறார். விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு
சிறை சென்ற எத்தனை பேர் இப்படி எழுதி கொடுத்திருக்கிறார்கள்? ஜாலியன் வாலாபாக்
போன்ற மிகக் கொடுரமான அடக்குமுறையை எதிர்த்து ஓரு வரியை கூட எழுத பயந்த பாரதி
எப்படி பெரியார் ஆவார்? எழுதி கொடுத்ததாலேயே அமைதியாக இருந்துவிட்டார் என்றால், ஏன்
அவரின் தேச பக்தியை சந்தேகப்படக்கூடாது?

நெஞ்சுரமும் வேசமும் சுதந்திர வேட்கையும்
மிகுந்த ஓரு கவிஞனை இவ்வாறு செயல் இழக்கச் செய்த பழி அவர் காலத்துத் தமிழ்ச்
சமுதாயத்தையே சாரும் என்கிறார் மலர் மன்னன். என்னய்யா இது? பாவம் ஒரு பக்கம் பழி
ஓரு பக்கம் என்று சொல்வார்களே அது இது தானா? அவரை புறக்கணித்தது அக்ரகாரத்து
பிராமணர்கள் என்று இவரே கூறுகிறார். அவருக்கு மன உளைச்சளையும், சொல்லொண்ணா துயரத்தை
கொடுத்ததும் பிராமணர்கள் தான். (இவை யாவும் மலர் மன்னன் அவர்களே கட்டுரையில்
சொன்னது) பிராமணர் அல்லாத பிறர் பாரதியுடன் தோழமையாய் பழகி இருக்கிறார்கள்.
பாரதிக்கு moral supportக இருந்திருக்கிறார்கள். தனது மகனையே, (மனநிலை பிறழ்ந்தவர்
என பிராமணர்களால் முத்திரை குத்தப்பட்ட) பாரதியின் மகளுக்கு மணமுடிக்க
இசைந்திருக்கிறார் ஒருவர். ஆக பாரதியின் நெஞ்சுரத்திற்கும், சுதந்திர வேட்கைக்கும்
பங்கம் விளைவித்தது பிராமணர்கள் என்று சொல்லுங்கள். ஓட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்தை
குற்றஞ்சாட்டும் பசப்பு வேண்டாம்.

பாரதியிடம் சம்பந்தம் பேசிய அந்த 'பிராமணர்
அல்லாத மேல் சாதி நபர்' எந்த தொனியில் கேட்டார் என்று இவருக்கு தெரியவில்லை
என்கிறார். அப்புறம் இவராகவே, அந்த நபர் இளக்காரத்துடனே கேட்டிருப்பார் என்று
கற்பனை செய்து கொள்கிறார். அந்த கற்பனையை வைத்து என்ன என்ன சொல்கிறார் பாருங்கள்.
சரி, அந்த நபர் இளக்காரத்துடன் அல்லாமல் பணிவாக கேட்டுருப்பார் என்று கற்பனை
செய்தால், சினந்த பாரதிக்கு சாதியபிமானம் இருந்தது என்ற முடிவிற்கு வரலாம் தானே?
மிகவும் இயலாமையிலிருந்த ஒரு பிராமணர் மனைவியை கள்ளத்தனமாக வைத்துக் கொள்கிற
கொழுப்பும் அந்த நபருக்கு இருந்திருக்கிறது என்கிறார். சரி மலர்மன்னன், அவருக்கு
இருந்தது கொழுப்பு என்றால், 'இயலாமையிலிருந்த' ஓரு பிராமண கணவரை விட்டு கள்ளத்தனமாக
மற்றவரிடம் போன அந்த பிராமண பெண்மனிக்கு இருந்தது என்ன வஸ்து? தங்கள் வாயால் அந்த
வஸ்துவிற்கு பெயரிடுங்கள் பார்ப்போம். கடைசியில் அந்த நபரை 'ஈனப்பிறவி' என்றும்
சொல்லிவிட்டார். பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது. இவ்வளவு வசவுகளும், ஒரு
கற்பனையை வைத்து -- பட்டையை கிளப்பி விட்டீர்கள் மலர் மன்னன். ஜாதி வித்தியாசமின்றி
பாரதி அன்பர்கள் அனைவருக்கும் ரத்தம் கொதிக்கச் செய்யும் விஷயம் என்கிறார்.
அன்பர்களே, மலர்மன்னன் தவிர யாருக்காவது ரத்தம் கொதித்ததா என்ன?

ஏறத்தாழ நாற்பது,
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இதைப் போன்ற ஆவணப்படம் ஏன் வரவில்லை என்பது புரியவில்லை
என்று சொல்லியிருகிறீர்கள். தங்கள் கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்துப்
பாருங்கள் புரிந்துவிடும் மலர்மன்னன்.

wewakeananda@yahoo.com

said...

Bharathi
is a poet who never dies,
from this it is unfortunate that he also been viewed as a brahmin.
may god bless u all,
u continue ur hatred towards brahmins, and it is like biting a dead snake.
keep it up good work.

said...

//விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு
சிறை சென்ற எத்தனை பேர் இப்படி எழுதி கொடுத்திருக்கிறார்கள்? ஜாலியன் வாலாபாக்
போன்ற மிகக் கொடுரமான அடக்குமுறையை எதிர்த்து ஓரு வரியை கூட எழுத பயந்த பாரதி
எப்படி பெரியார் ஆவார்? எழுதி கொடுத்ததாலேயே அமைதியாக இருந்துவிட்டார் என்றால், ஏன்
அவரின் தேச பக்தியை சந்தேகப்படக்கூடாது?//

கற்பக வினாயகம், அசுரன், சபாபதி சரவணன்,

தங்களது வெளிப்படுத்தலுக்கு நன்றி,

"நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறனுமின்றி

வஞ்சனை செய்வாரடி கிளியே-

வாய்ச் சொல்லில் வீரரடி"

என்று பாடியவன் வஞ்சகன் தானா?

said...

//"நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே-
வாய்ச் சொல்லில் வீரரடி"
என்று பாடியவன் வஞ்சகன் தானா?//

சுயதரிசனத்தைத் தான் பாடியிருக்கிறார் போலும். வறுமை படுத்திய பாட்டினால், தானே வெறுத்த சடங்கு முறைகளை, மனிதரில் பேதம் பார்க்கும் இழிந்த நிலைக்கு அவ்வப்போது போய்வரவேண்டிய நிர்ப்பந்தம் பாரதிக்கும் ஏற்பட்டிருந்திருக்கலாம்.

நல்லவேளை மேலும் மேலும் அவமானப்படாமல், உயர்சாதி மன அமைப்பின் நிர்பந்தத்துக்குள் அடங்கி வாழவேண்டிய நிலை ஏற்படாமல் 40 வயதுக்குள் மறைந்தார்.

காலா உன்னைக் காலால் மிதிக்கிறேன் வாடா என்று பாடிய கவிஞனை காலாலேயே மிதித்துக் கொன்றவன் காலன் தானோ?

-அய்யாக்கண்ணு

said...

பாரதியைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் உணர்வு இதழில் இது போன்ற ஒன்றைப் படித்த போது ஏற்பட்ட சில எண்ணங்கள் இதைப் படித்த போது மேலும் வலுவடைந்துள்ளது. சிறந்த கருத்தாய்வு. அந்த உணர்வு கட்டிங் தேடிப் பிடித்துத் தர முயற்சிக்கிறேன்.

said...

அசுரன்,
உங்கள் கருத்துடன் நான் ஒத்துப் போகாவிட்டாலும், இது உங்கள் பதிவை கேலி செய்யும் நோக்கில் இடப்படும் பின்னூட்டம் அல்ல.
பாரதி இந்துத்வா வாதியாகவும், சாதிப்பற்றாளனாகவும் இருந்திருக்கும் பட்சத்தில், பாரதிதாசன் என்று ஒருவன் அவனுக்கு தாசனாக ஏன் இருந்தான்?

said...

மிகச்சிறந்த பதிவு. இதில் இருக்கும் கருத்துக் குவியலில் என் சிந்தனை மேலும் பலம் பெறுகிறது. இப்போது வேலைச்சூழல் இடமளிக்கவில்லை. விரைவில் என் பதிவில் தொடருவேன்.

என்றும் நட்புடன்
உங்கள்
விடாது கறுப்பு.

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி,

*********
சிவபாலன்,

நானும் பாரதியின் தீவிர அபிமானியாகத்தான் இருந்தேன். என்ன செய்ய அவரைப் பற்றி ஆய்வு செய்து வந்த முடிவுகள் எளிதில் சீரணிக்க இயலாததாய் உள்ளது.

ஆனால் நமது அடையாளம் என்பது வரலாற்றின் ஊடகாத்தான் உணரப்படுகிறது. பாரதி பற்றிய நல்ல அம்சங்களுக்காக அவரை உண்மையாகவே இயக்கிய விசயங்களை அம்பலப்படுத்தாமல் இருந்தால் அவரின் அபிமானிகளை நோகாமல் நொங்கு தின்பதற்க்கு காத்திருக்கும் இந்துத்துவா என்ற நச்சு அபாயத்தை முறியடிக்க முடியாது.

அந்த நச்சு அபாயமோ என்றைக்குமே நேர்மையாக தனது திட்டங்களை மக்கள் முன் வைத்து அவர்களை அணிதிரட்டுவது கிடையாது. மக்களின் பழக்கவழக்கத்தில், அவர்களின் உணர்வுகளில் ஏற்கனவே ஆழமாக பொதிந்த பண்பாட்டு விழுமியங்களின் மூலமாகவே ஊடுருவும் வைரஸ் போன்ற ஒரு கிருமி அது. சங்கர் என்பவர் கூட சமீபத்தில் தனது பதிவு ஒன்றில் இந்துத்துவாவை AIDS கிருமியாக உருவகப்படுத்தி மிகச் சரியாகவே கூறியிருந்தார்.

இவர்கள் ஏற்கனவே பகத்சிங்யே விழுங்க முயன்று அவரின் புரட்சிகரக் கனல் வெப்பம் தாங்காமல் விட்டு விட்டனர். ஆனால் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு செவை செய்ய ஏதுவாக உருவாக்கப்பட்ட பல்வேறு கருத்துக்கள், தனிமனிதர் பற்றிய உயர்வு நவிற்சிகளும்- பாரதி, காந்தி, விவேகனந்தர், இராமாயணம் etc, இவர்களது நச்சு பிரச்சாரத்தை செய்வதற்க்கு ஏதுவான பொது மனநிலையை உருவாக்கி உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் தாங்கள் சொல்லுவது போல் மன்னிக்கலாம்/மறக்கலாம் என்று விடுவது நமது சந்ததியினரை அபாயத்தில் சிக்க வைக்கும். இந்த அபாயத்தை பெரியார், அண்ணா முதற்க்கொண்டு யாரெல்லாம் குறிப்பிடத்தகுந்த அளவு மக்கள் செல்வாக்கு கொண்டவர்களோ அவர்களையெல்லாம் தனக்கு செவை செய்ய பயன்படுத்த விளையும் அவர்களின் முயற்சியிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்(திண்ணையில் மலர்மன்னன் - பெரியாரை தம் கட்சியில் சேர்க்க செய்த் முயற்சிகள்).

மாறாக மிகக் கடுமையாக ஈவிரக்கமின்றி ஆளும் வர்க்கத்துக்கும்/மக்கள் விரோத தத்துவங்களுக்கும் செவை செய்த முரண்பட்ட பல்வேறு முண்ணுதாரனங்களை, அவதார புருஸர்களை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய நேரமிது. ஆம், இது மிகக் கடுமையாக வலிக்கும். என்ன செய்ய புண்ணுக்கு புனுகு தடவுவது பகுத்தறிவு ஆகாது.
+++++++++
அழகு, அடி-அதிரடி,

தங்கள் இருவருக்கும் நன்றி.

அடி-அதிரடி,

தங்கள் எனது ஒரு பின்னூட்டத்தை வெளியிடவில்லை. அது பற்றிய தங்களது மாற்றுக் கருத்தை ஒரு தனி மடலிலாவது அனுப்பியிருக்கலாம்.

+++++++++++++++

SUKA,

பாரதியின் வழியில் செல்பவர்களில் பலர் நீங்கள் சொல்லுவது போல் மக்கள் நலனை முன் நிறுத்தியே சென்றார்கள். ஆனால் அவரைப்(பாரதியை) பற்றி ஒரு பொதுக் கருத்து உருவாகியுள்ளதே அதை அடித்தளமாக கொண்டு பாரதியின் முரண்ப்பட்ட இந்துத்துவ ஆதரவு கருத்துக்களையும் பிரச்சாரம் செய்து இந்துத்த்துவ சக்திகள் தமது மக்கள் செல்வாக்கை பெருக்க வேலை செய்யும் போது. பாரதியின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.
++++++++++++++

அன்னனிமஸ்,

பாரதியார் தலிபான் தீவிரவாதி அல்ல. அவர் சாதரண மனிதன். இந்த கட்டுரையின் நோக்கம் அவன் யுகக் கவிஞன் அல்ல, காலத்தை கடந்து சிந்தனை செய்தவனல்ல என்பதை நிறுவுவதுதான்.

அவரது அன்றைய முரன்பட்ட நிலைக்கு காரணமே அன்று நிலவிய முற்போக்கு, பிற்போக்கு சிந்தனைகளுக்கு இடையிலான போராட்டமே. அவர் சூழ்நிலையின் கைதி என்ற அளவில் ஒரு சாதரண மானிடன். நமக்கு முன்னுதரனமான புருசன் என்ற அவரை சொல்ல முடியாது என்ற அளவில்தான் இந்த எமது(க.வி மற்றும் நான்) விமர்சனம் உள்ளது.

அதை மீறி அவருக்கு தாங்கள் விரும்புவது போல் special தத்துவ மூலாமெல்லாம் பூச முடியாது.

++++++++

Johan-paris,

இரண்டு பக்கமும் வைக்கப்படும் வாதங்களில் உள்ள முரன்பாடுகள், இரண்டு பக்கங்களிலும் உள்ளவர்களின் நோக்கம் இவைதான் அவர்கள் கூறுகின்ற கருத்தின் நம்பகத்தன்மை, நடைமுறைப் பயன்பாடு இவற்றை சீர்தூக்கிப் பார்க்க நமக்கு உதவும்.

தங்கள் எனது 'மாப்ளா கலகம்' பற்றிய முந்தைய கட்டுரையில் ஒரு விசயத்தை அதன் உண்மையான பொருளில் எப்படி ஆய்வு செய்வது/புரிந்து கொள்வது என்பது பற்றிய பகுதியை பார்த்தால் புரியும்.

+++++++++++++++++++++++++++

ராபின் ஹூட்,

சொல்லிக் கொடுப்போம், அவரது கவிதைகளில் உண்மையிலேயே மிகச் சிறப்பானவை(மிகச் சமீப காலம் வரை நானும் பாரதியின் ரசிகன் தான்).
ஆனால் அத்துடன் அவரது பிற்போக்குத் தனத்தைப் பற்றியும் நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

+++++++++++++++++++

சபாபதி சரவணனுக்கு நன்றி,

தமிழ் சமுதாயத்தின் மீது பழி சுமத்திய மலர்மன்னனுக்கு அவரது வாதத்தில் இருந்த முரண்பட்ட பகுதிகளை வைத்தே பதிலடி கொடுத்திருந்தது சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.

++++++++++++++

அன்னானிமஸ்,

எமது கட்டுரை அவரது(பாரதியின்) இந்துத்துவ ஆதரவு, ஏகாதிபத்திய சேவை இவற்றை நிறுவியுள்ளதா என்று பார்க்கவும். மேலும் எமது கட்டுரைகள் வெறுமனே hate propaganda என்று தூற்ற வேண்டாம். அப்படி hate propaganda செய்யும் தளங்கள் பல உள்ளன(அத்தளங்களில் அவர்களை அம்பலப்படுத்தி நான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்).

வெறுமே ஒரு துணுக்கு செய்தி அல்லது அடிப்படையற்ற அனுமானத்தின் அடிப்படையிலான செய்திகளை போட்டு மக்கள் நலம் சாராமல் ஒரு சாரரின் மீது வெறுப்பை உமிழ்ந்தே பிழைப்பு நடத்தும் தளங்கள் 'hate propaganda' என்ற வகையில் வருகின்றன. அவர்கள் ஒரு சில அடிப்படை கேள்விகள் கேட்டாலே அலறி ஓடிவிடுவார்கள்.

இங்கு நீங்கள் எந்த விதமான கேள்விகளும் கேட்டு பதில் பெறலாம். அதற்க்கான முழு உரிமை உள்ளது.

மிகத் தெளிவாக மீண்டும் ஒரு முறை அறிவிக்கிறேன். பார்ப்பனியம் என்பது பிறப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் விசயமல்ல. அது ஒரு தத்துவம், அது தன்னை வலுப்படுத்திக் கொள்ள கடும் பிரயத்தனம் செய்து வரும் நேரமிது.

We will continue our good work exposing all Anti-People endeovors.

We welcome your fruitfull criticism on our articles.

+++++++++++++++

புதுச்சுவடி,

அவர் வஞ்சகனா என்று முடிவாக கூறிவிட என்னால் முடியாமா என்று தெரியவில்லை.

ஆனால், அவர் ஒரு முன்னுதரணமான மனிதர் அல்ல, ஒரு முற்போக்குவாதி அல்ல, காலத்தை மீறி சிந்தித்தவர் அல்ல.

அவர் காலத்திய முற்போக்கு சிந்தனையுடன்கூட தன்னை முழுமையாக அடையாளம் காண முடியாமல் திணறிய ஒருவர் என்பதை உறுதியாக கூற முடியும்.
+++++++++++++++

அய்யாக்கண்ணு,

அவர் 40 வயதை கடந்து வாழ்திருந்தால் இன்னும் பல்வேறு ஆதரங்களை விட்டு சென்று நமது வேலையை மிச்சப் படுத்தியிருப்பார்.

++++++++++++++

நம்பிஅருண் மனியன்,

காந்தியைப் பற்றி பெரிதாக எழுத வேண்டிய தேவை இருப்பதாக தெரியவில்லை.

மாறாக பொருளாதார துறையில் பல்வேறு விசயங்களை விளக்கி எழுதவேண்டியுள்ளது.

அதுதான் பிரதானமான விசயமாக கருதுகிறேன்.

இது பற்றி மேலும் தங்களது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.

++++++++++

சுல்தான்,

தங்களது பாரட்டுக்கு நன்றி

++++++++++++++++

Hari,

நல்ல கேள்விதான் இது பாரதிதாசன் பற்றிய ஆய்வுக்கு நம்மை இட்டு செல்கிறது. அது இப்பொழுது சாத்தியமில்லை.

பாரதி பற்றி இங்கு கூறியுள்ள விசயங்கள் உண்மையாக உள்ளதா என்ற அள்வில்தான் இந்த கட்டுரையினுடைய நோக்கம் உள்ளது.

மேலும், பாரதி அன்றைய காலகட்டத்தில் நிலவிய பல்வேறு விசயங்களால் தாக்குண்டான் என்பதை நினைவிலிறுத்திக் கொள்ளவும்.

++++++++++++++

said...

போனாபர்ட்,

>>>> சங்கர் என்பவர் கூட சமீபத்தில் தனது பதிவு ஒன்றில் இந்துத்துவாவை AIDS கிருமியாக உருவகப்படுத்தி மிகச் சரியாகவே கூறியிருந்தார். <<<<

விஷயங்களை தெளிவாகப் புரிந்துகொண்டு எழுதுகிறீர்கள். உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

said...

நல்ல பதிவு.புதுமைப்பித்தன் போன்றவர்களின் பிரதிகளினூடாக இயங்கிய சாதியக்கூறுகளை பலரும்,குறிப்பாக நிறப்பிரிகை அம்பலப்படுத்தியது.ஆனால் பாரதி பற்றிய கட்டவிழ்ப்புகளை ஏனோ யாரும் செய்யவில்லை.வே.மதிமாறனின் நூலுக்குப் பிறகுதான் இதுபோன்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன.வாழ்த்துக்கள்.

said...

நல்ல பதிவு.புதுமைப்பித்தன் போன்றவர்களின் பிரதிகளினூடாக இயங்கிய சாதியக்கூறுகளை பலரும்,குறிப்பாக நிறப்பிரிகை அம்பலப்படுத்தியது.ஆனால் பாரதி பற்றிய கட்டவிழ்ப்புகளை ஏனோ யாரும் செய்யவில்லை.வே.மதிமாறனின் நூலுக்குப் பிறகுதான் இதுபோன்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன.வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி விடாது கறுப்பு,

தொடருங்கள் உங்கள் வேலையை.

said...

//விஷயங்களை தெளிவாகப் புரிந்துகொண்டு எழுதுகிறீர்கள். உங்களுக்கு என் பாராட்டுக்கள். //

வருகைக்கு நன்றி Muse,

சங்கர் AIDS-யை பயன்படுத்தியிருந்தது என்னவோ வழக்கம் போல இந்துத்துவத்துக்கு முட்டு கொடுக்கும் வகையில்தான்.

நான் எடுத்துக் கொண்டது அவரது அந்த உப்புமையைத்தான், அதன் மூலமாக அவர் நிறுவிய விசயங்களை அல்ல.

said...

பாராட்டுகளுக்கு நன்றி மிதக்கும் வெளி,

பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டியிருக்கிறது. அது பாரதி விசயத்தில் வே. மதிமாறன்.

said...

மற்றொரு வலைப்பதிவாளர் இந்துத்வாவை எய்ட்ஸ் கிருமி என்று குறிப்பிட்டிருந்ததை சங்கர் மேற்கோளிட்டுக் குறைபட்டுக்கொண்டிருந்தார் - நீங்கள் சங்கர் இந்துத்வாவை எய்ட்ஸ் கிருமி என்று குறிப்பிட்டதாகக் கூறியிருக்கிறீர்கள். இந்த ஒரு சிறு தகவல் ரீதியான பிழையைக்கொண்டு உங்கள் மொத்தப் பதிவையும் நசுக்க வருபவைதான் மேலே நீங்கள் காணும் சில கேள்விகள். தகவலைச் சரிப்படுத்தவும்.

said...

இரா.இசக்கிமுத்து பி.ஏ.,

தங்களது வருகைக்கு நன்றி,

வாழ்த்துக்களுக்கு நன்றி,

தொடர்ந்து தங்களது விமர்சனப் பூர்வமான ஆதரவு தொடருமானால் குயில் தொடர்ந்து மக்கள் விரோத சக்திகளை அம்பலப்படுத்தி கூவும்.

+++++

அனானி,

தாங்கள் மிகச் சரியாகவே பிழையை(AIDS-பற்றிய ஒப்புமை) சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இது போன்ற தகவல் பிழைகள் ஏற்படாமல் இனிமேல் கவனமாக இருப்பேன்.

சுட்டிக்காட்டிய Muse மற்றும் அனானிக்கு நன்றி,

இது அந்த ஒப்புமையை அந்த பகுதியில் சொல்ல வேண்டும் என்ற விருப்பம் மற்றும் அதே நேரத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டிய தேவை இவற்றின் இடையில் மாட்டிக் கொண்டு அவசரமாக போட்டதால் வந்த விளைவு.

said...

Muse,

இவ்வளவு பெரிய பதிவில், தங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ள விசயங்களே இல்லை என்று எண்ணும் பொழுது பெருத்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது நான் தொடர்ந்து செயல்படுவதற்க்கு உற்சாகமளிப்பதாக உள்ளது.

said...

Till Now, i had an opinion that bharathi was a guy who fought against Caste (since i have been told like that)

But i was very shocked that he is also a normal fellow...

This truth shd reach common people who are still believing on bharathi...

Txs for ur information...

Continue Ur Gud work...

Rajesh

said...

//அடி-அதிரடி,

தங்கள் எனது ஒரு பின்னூட்டத்தை வெளியிடவில்லை. அது பற்றிய தங்களது மாற்றுக் கருத்தை ஒரு தனி மடலிலாவது அனுப்பியிருக்கலாம்.//

போனபெர்ட், எனது வலைப்பூவைத் தாமதமாய்த் திறக்க வேண்டிய சூழல். மன்னிக்கவும்.

தங்களது பின்னூட்டம் வெளியிடப் பட்டுவிட்டது.

தங்களது தொடர் வருகைக்கு நன்றி.

தங்க்ளது ஆக்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

said...

எனது பின்னூட்டத்தை பதிப்பித்தற்க்கு நன்றி அடி-அதிரடி,

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி,

தொடர்ந்து விமர்சித்து எனது புரிதலை கூர்தீட்ட தங்களை அன்புடன் எதிர்பார்க்கிறேன்.

said...

Welcome Rajesh,

Thanks for your appreciation.
With your support I will continue my work.

said...

பிறவியிலேயே குறை இருந்தாலொழிய வேம்பு இனிக்காது எனப் பெரியார் சொன்னதை வாசிக்கும்போது, வேப்பம்பழம் இனிக்குமே ( நான் நிறைய வெப்பம்பழம் சாப்பிட்டிருக்கிறேன் ) என மனதிற்குள் நினைத்துக் கொள்வேன்.

வேப்பம் பழமாயிருந்த பாரதியைக் கசக்க வைத்த பதிவு இது.

said...

என் குழந்தைகளுக்குப் பாரதியின் கவிதைகளைச் சொல்லிக் கொடுக்கலாமா? என்று யோசிக்க வைத்துள்ள பதிவு இது.

மிகவும் சரி. நானும் இதைத்தான் யோசித்தேன்.

அது என்னமோ, பாரதியின் கவிதைகளை எனக்கு சின்ன வயதில் இருந்தே பிடிக்காது. அது சரியாய் போயிற்று.

said...

அசுரரே,

>>>>Muse,

இவ்வளவு பெரிய பதிவில், தங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ள விசயங்களே இல்லை என்று எண்ணும் பொழுது பெருத்த மகிழ்ச்சியாக இருக்கிறது. <<<<<

நான் முன்னாடி சொன்னது அக்மார்க் நக்கலுங்கண்ணோவ்.

said...

உங்கள் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய பதிவையும் படித்துவிட்டு வந்திருக்கிறேன். நல்ல
பதிவுகள். உங்கள் பணி தொடர்க. இங்கே நான் இருப்பது, ஒரு உண்மைக்கு பல முகங்கள் இருப்பதை
உரைப்பதற்கே. குருதிப்புனல் படத்தில் இதை தெளிவாக சொல்லியிருப்பார்கள். அதன் கதா நாயகன்,
நேர்மையானவனாகவே இருந்த போதும், கடைசியில் அவனது நேர்மையை குடும்ப நலத்திற்காக
அடகு வைக்கும் படி நேர்கிறது. அதற்காக, அவனைக் குற்றவாளி அல்லது நேர்மையில்லாதவன் என்று
சொல்வதும் பாரதியின் கருப்புப் பக்கத்தை விளம்பரப்படுத்துவதும் ஒன்று தான். இவர்கள் எல்லாம்
மனிதர்கள் தான். தூக்கு மேடையில் நின்று கொண்டு பத்து நிமிட தேசிய விடுதலை பற்றிய
சொற்பொழிவாற்ற சினிமா கதா நாயகர்களால் மட்டுமே முடியும். நடைமுறையில், அடி மேல் அடி
அடித்தால், நாடும், மொழியும் வெகு பின்னுக்குப் போய், தன் உடம்பு பற்றிய அக்கறை
தானாகவே எல்லோருக்கும் வந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், அந்த மனிதனின்
இறந்த காலம் ஒட்டுமொத்தத்தையும் கேள்விக்குறியாக்குவது தவறு. இவர்களும் மனிதர்களே,
இவர்களுக்கும் அடித்தாம் வலிக்கும் என்ற பார்வையுடன் தான் நாம் இவர்களை அனுக வேண்டும். இவர்களை
தேவதூதர்கள், இவர்களுக்கு அடித்தால் வலிக்காது என்ற பார்வையில் அனுகுவது மிகத்தவறு;
கண்டிக்கப்பட வேண்டியது.

said...

முயுஸ்,

தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று குறீப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்ததும் தங்களுக்கான உள்குத்துதான்.

நன்றி,
அசுரன்.

said...

புதுமை விரும்பி,

தங்கள் வருகைக்கு நன்றி,

எனது மற்றைய கட்டுரைகளையும் படித்து கருத்துக்களை சொல்லவும்.

நன்றீ,
அசுரன்.

said...

பாவூரான், அமுதன்,

தங்கள் வருகைக்கு நன்றி,

பாவூரானின் பின்னூட்டம் முன்பே பதிப்பிக்கப்பட்டது. ஆனால் பின்னூட்ட கயமைத்தனம் கண்காணிக்கப்படாத காலத்திலேயே நான் நேர்மையாக நன்றி கூறி பின்னூட்டமிடாமல் இருந்தேன்.(ஹி...ஹி...).

இப்பொழுதுதான் அவருக்கு நன்றி கூறுகிறேன்.

அமுதன்,
ஆனால், எனக்கு சின்ன வயதில் இருந்தே பாரதியார் பாடல்கள் மிகவும் பிடிக்கும். நான் அவர் மீது வெறியனாக அலைந்த காலம் உண்டு,

நன்றி,
அசுரன்

said...

புதுமை விரும்பி,

//அவனைக் குற்றவாளி அல்லது நேர்மையில்லாதவன் என்று
சொல்வதும் பாரதியின் கருப்புப் பக்கத்தை விளம்பரப்படுத்துவதும் ஒன்று தான். இவர்கள் எல்லாம்
மனிதர்கள் தான்.//

நானும் அதையேதான் சொல்கிறேன் இவர்கள் எல்லாம் மனிதர்கள்தான். மகான்கள் அல்ல.

ஆனால் அப்ப்டி ஒரு கருத்தை உருவாக்கி வைப்பது - அதாவது மகான்கள் என்ற கருத்தை உருவாக்கி வைப்பது.

பாரதியை இந்துத்துவ வாதிகள் பயன்படுத்திக் கொள்வதற்க்கு பய்ன்படும் பொழுது பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

நன்றி,
அசுரன்

said...

பாரதி பிறந்த நாள் போலத் தெரிகிறது... அதனால் அவரப் பத்தி ஒரு விவாதத்த கிளப்புவுமேன்னுதான்....

அசுரன்

said...

ஊருக்கு ஒரு அசுரன் வேண்டும் மறைக்கபட்ட வரலாற்றை மக்களிடம் சேர்க்க...
காந்தியை கொன்ற கும்பலிடமிருந்து இந்தியாவை காக்க...
சுற்றி பரந்து விரிந்துள்ள விஷமிகளின் வலையை கிழிக்க....
உண்மையான தலைவர்களை மக்கள் நோக்க....
வெள்ளய அடிவருடிகள் உள்ளங்கள் சலசலக்க...
பார்ப்பண பட்டரை கிடுகிடுக்க....
ஊருக்கு ஒரு அசுரன் வேண்டும்

said...

அனானியின் வருகைக்கு நன்றி

அசுரன்

said...

நிறைய ஆதாரங்களுடன் கூடிய அருமையான் பதிவு.

மகா கவி, விடுதலை போராளி, சாதி ஒழிப்பு வழிகாட்டி, பெண் விடுதலை முற்போக்கு என்னம் உடையவர், நல்லவர் என்று இது நாள் வரை நம்ப வைக்கப்பட்டு இருந்த நான் என் என்னத்தை இனிமேல் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.
என் குலத்தை 'ஈனப்பிறவி' என் உரித்த இந்த சொறி நாயையா இவ்வளவு காலம் போற்றி, புகழ்ந்து, இரசித்து பாடியும் வந்திருக்கிறேன்?
வெட்கம். அவமானம்.தலை குனிகிறேன்.
இந்த அசிங்கத்துக்கு தமிழில் ஒரு திரைப்படம் வேறு ஒரு கேடு!

இந்த மனிதரைப்போய் பெரியாருடன் ஒப்பிட்டிருப்பது, புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையைப்போல் இருக்கிறது.

பகிர்ந்தமைக்கு நன்றி. கோடி வணக்கம் ஐயா.

said...

//ஆனால் (என்னை பொறுத்தமட்டில்) பாரதியை சாடும் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை...(அது உண்மையாகவே இருந்தாலும்)
//

Repeat-eeee...

said...

********
//ஆனால் (என்னை பொறுத்தமட்டில்) பாரதியை சாடும் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை...(அது உண்மையாகவே இருந்தாலும்)
//

Repeat-eeee...

////

சீனூவின் வருகைக்கு நன்றி,




************

////

நிறைய ஆதாரங்களுடன் கூடிய அருமையான் பதிவு.

மகா கவி, விடுதலை போராளி, சாதி ஒழிப்பு வழிகாட்டி, பெண் விடுதலை முற்போக்கு என்னம் உடையவர், நல்லவர் என்று இது நாள் வரை நம்ப வைக்கப்பட்டு இருந்த நான் என் என்னத்தை இனிமேல் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.
என் குலத்தை 'ஈனப்பிறவி' என் உரித்த இந்த சொறி நாயையா இவ்வளவு காலம் போற்றி, புகழ்ந்து, இரசித்து பாடியும் வந்திருக்கிறேன்?
வெட்கம். அவமானம்.தலை குனிகிறேன்.
இந்த அசிங்கத்துக்கு தமிழில் ஒரு திரைப்படம் வேறு ஒரு கேடு!

இந்த மனிதரைப்போய் பெரியாருடன் ஒப்பிட்டிருப்பது, புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையைப்போல் இருக்கிறது.

பகிர்ந்தமைக்கு நன்றி. கோடி வணக்கம் ஐயா.
/////

மாசிலாவின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

அசுரன்

said...

சிலருக்கு தாங்கள் நம்பிக் கொண்டிருக்கும் மாய பிம்பங்களை உடைத்தால் பெரிய ஆத்திரம் வருகிறது. இந்த கட்டுரைக்கு நெகடிவ் குத்து குத்தியிருப்பவர்களை பார்க்கும் பொழுது இந்த விசயம் தெரியவருகிறது. ப்ரொக்ரஸிவ் கருத்துக்களை ஆதரிக்கும் ஆட்கள் பெரும்பாலும் இது போன்ற +/- குத்துக்களில் நம்பிக்கை வைப்பதில்லை என்பதால் அதை செய்வதுமில்லை.

ஆகவே இது பொது மனநிலையின் அடையாளம் அல்ல. ஆயினும், இதை குறிப்பிடுவதன் மூலம் மாற்றங்களை விரும்பாதாவர்களும், உண்மைகளை கண் கொண்டு பார்க்கும் நேர்மையில்லாதவர்களும் கணிசமான அளவு அலைகிறார்கள் என்பதையும் அவர்கள் நேரடியாக வாதம் செய்ய துப்பின்றி இப்படி குத்தி செல்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்பினேன். எனது பெரும்பாலான பதிவுகளுக்கும் இதுதான் கதி என்றாலும்(இந்துத்துவ எதிர்ப்பு பதிவுகளை தவிர்த்து) இந்த பதிவு பலருக்கும் more presonal ஆன ஒன்று, அதனால் அவர்களின் உண்மையான உள்ளக் கிடக்கைகளை வெளிக் கொண்டு வந்து விடுகிறது. அதனால்தான் இந்த பதிவில் இதனை சுட்டிக் காட்டுகிறேன்.

அசுரன்

said...

நேரடியாக தஙக்ளது ஒப்புதலின்மையை நகைச்சுவையாகவோ அல்லது சீரியசாகவோ சொல்லிய செந்தழல் ரவி அவரை வழிமொழிந்த சீனூ, நான் இங்கு சுட்டிக் காட்டவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் கருத்துக்களை விமர்சனத்திற்க்கு பயமின்றி சொல்லியுள்ளனர்.

அசுரன்

said...

இத்தனை பேர் உங்கள் வாதங்களை ஏற்றுக் கொள்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் வாதங்களை மறுக்க என்னிடம் போதுமானதாக ஆதாரங்கள் இல்லை. திரு கற்பக வினாயகம் அவர்களுடைய கட்டுரைகளுக்கு எதிர்வினையாற்றிய சில கட்டுரைகளை திண்ணையிலும் வேறு சில இடங்களிலும் படித்திருக்கிறேன்.

உங்கள் வாதங்களில் உண்மை இருந்தாலுமே அவர் இந்த அளவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியவரா என்று தெரியவில்லை. ஒருவர் அவரை சொறிநாய் என்கிறார். அந்த அளவுக்கு அவர் என்ன கொடுமைகள் செய்திருக்கிறார்?

எந்த ஒரு மிகத் தாழ்வான மனிதனைக் கூட சொறிநாய் என்று அழைக்கக் கூடிய உரிமை நமக்கு இருக்கிறதா?

அவருடன் அதிகம் பழகியர் பாரதிதாசன். திராவிட கருத்தாக்கங்களும் இடதுசாரி கொள்கைகளில் தீவிர பற்றும் உடையவர். பாரதியின் சமகாலத்தவர். அவர் பாரதிக்கு எதிராக ஏதும் கூறி நான் படித்ததில்லை. இருந்தால் வெளியிடுங்கள். மாறாக பாரதியைச் சாடியர்வர்களை மிகத் தீவிரமாக சாடியதைப் படித்திருக்கிறேன்.

பாரதி இறந்ததற்கும் பிறகு அவரை தாங்கிப் பிடித்தவர் பாரதிதாசன். பாரதியைத் தாங்கிப் பிடித்தவர்கள் இங்கு பலரால் ஏசப்பட்டிருக்கின்றனர். அவ்வைகையில் பலமாக நிராகரிக்கப் படவேண்டியவர் பாரதிதாசன். இது உங்களுக்கும் இங்கு உங்கள் பதிவுக்கு ஆதரவாக பின்னூட்டிய அனைவருக்கும்
ஏற்புடையதா?

இது பற்றிய ஒருவரின் கேள்விக்கு அது பாரதிதாசனைப் பற்றிய ஆய்வு என்று நீங்கள் சொல்லியிருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் பதிவின் நோக்கம் நிறவேற இதற்கான விளக்கமான பதில் நிச்சயம் தேவை.

இங்கு பின்னூட்டிய நண்பர்கள் அனைவரும் தயவு செய்து மீண்டுமொருமுறை முழுப் பதிவையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

said...

//இந்த மனிதரைப்போய் பெரியாருடன் ஒப்பிட்டிருப்பது, புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையைப்போல் இருக்கிறது.//

மாசிலா அய்யா,

என்ன இது?
இந்த மனிதர் = பாரதி = புலி;

பெரியார் = பூனை, என்ற கணக்கில் எழுதி இருக்கிறீர்கள்?
பெரியார் எப்போ கவிதை எழுதினார்,
பாரதியைப் போல்?
விளக்கமா சொல்லூங்கய்யா.

பாலா

said...

ஓகை தங்களின் வருகைக்கும் விமர்சனப் பூர்வமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..


////
இத்தனை பேர் உங்கள் வாதங்களை ஏற்றுக் கொள்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் வாதங்களை மறுக்க என்னிடம் போதுமானதாக ஆதாரங்கள் இல்லை. திரு கற்பக வினாயகம் அவர்களுடைய கட்டுரைகளுக்கு எதிர்வினையாற்றிய சில கட்டுரைகளை திண்ணையிலும் வேறு சில இடங்களிலும் படித்திருக்கிறேன்.

உங்கள் வாதங்களில் உண்மை இருந்தாலுமே அவர் இந்த அளவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியவரா என்று தெரியவில்லை. ஒருவர் அவரை சொறிநாய் என்கிறார். அந்த அளவுக்கு அவர் என்ன கொடுமைகள் செய்திருக்கிறார்?
////

ஏன் இவை உண்மை என்று ஒத்துக் கொள்வதிலிருந்து உங்களை தடுக்கும் விசயம் என்னவென்று கொஞ்சம் சுய பரிசோதனை செய்யுஙகளேன்.



///
எந்த ஒரு மிகத் தாழ்வான மனிதனைக் கூட சொறிநாய் என்று அழைக்கக் கூடிய உரிமை நமக்கு இருக்கிறதா?
///

உரிமை பற்றிய விசயம் உங்களது/எனது பண்பாட்டு வித்தியாசம் சம்பந்தப்பட்டது. மனிதம் குறித்து உழைக்கும் மக்கள் கஸ்டப்படுவதைப் பார்க்கும் பொழுதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது.




///
அவருடன் அதிகம் பழகியர் பாரதிதாசன். திராவிட கருத்தாக்கங்களும் இடதுசாரி கொள்கைகளில் தீவிர பற்றும் உடையவர். பாரதியின் சமகாலத்தவர். அவர் பாரதிக்கு எதிராக ஏதும் கூறி நான் படித்ததில்லை. இருந்தால் வெளியிடுங்கள். மாறாக பாரதியைச் சாடியர்வர்களை மிகத் தீவிரமாக சாடியதைப் படித்திருக்கிறேன்.

பாரதி இறந்ததற்கும் பிறகு அவரை தாங்கிப் பிடித்தவர் பாரதிதாசன். பாரதியைத் தாங்கிப் பிடித்தவர்கள் இங்கு பலரால் ஏசப்பட்டிருக்கின்றனர். அவ்வைகையில் பலமாக நிராகரிக்கப் படவேண்டியவர் பாரதிதாசன். இது உங்களுக்கும் இங்கு உங்கள் பதிவுக்கு ஆதரவாக பின்னூட்டிய அனைவருக்கும்
ஏற்புடையதா?
////

பாரதிதாசனுக்கும், அவரைப் போலவே பாரதியை ஆதரித்தவர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளில் ஒன்றாக வேண்டுமானால் பாரதி ஆதரவு இருக்கலாமேயொழிய..,. இந்த இரு பிரிவினரும் ஒன்றல்ல.

பாரதியையோ, அவரை ஆதரிப்பதையோவா விம்ர்சிக்கிறோம்? அவரது கருத்து நிலைப்படுகளை விமர்சிக்கிறோம். அவ்வகையில் பாரதிதாசனின் பாரதி ஆதரவு நிலைப்பாட்டில் அவரது கருத்து நிலைப்பாடு உறுதியாக பார்ப்பினியம் இல்லை. ஆனால், விமர்சிக்கப்படும் பலரின் பின்புலத்தில் பார்ப்பினிய பண்பாட்டு தாக்கம் இருப்பதை அறியலாம்(cpi, cpm ஆகியவற்றீன் நிலைப்பாடுகளையும் செர்த்தே இங்கு விமர்சிக்கிறேன். And This article is written to expose Malarmannan's to attempt to harvest Bharathi Fans. Just tell me what is your responce to that Grave Danger?).




////
இது பற்றிய ஒருவரின் கேள்விக்கு அது பாரதிதாசனைப் பற்றிய ஆய்வு என்று நீங்கள் சொல்லியிருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் பதிவின் நோக்கம் நிறவேற இதற்கான விளக்கமான பதில் நிச்சயம் தேவை.
////

யாருமே விம்ர்சனத்திற்க்கு அப்பாற்ப்பட்டவர்கள் கிடையாது.... யாருடைய புனிதத் தன்மையையும் பொத்தி காப்பாற்ற வேண்டிய தேவையும் எமக்கு இல்லை.
ஆனால் பாரதிதாசனும், பாரதியும் ஒரே தளத்தில் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய்வர்கள் அல்ல As for as our topic of debate is Parpiniyam. Please read the title once again.

Will it work if I give the title 'பார்ப்பன குடுமியில் பாரதிதாசன்'?
(It is even clear from hindhudva Group's attempt itself that they tried Bharathi not Bharathidasan.. Because Bharathi's works has the capacity to create a admiration for Parpiniya culture whereas Bharathidasan's is not. Tell me now, who's philosophical bias should be crticised here in this article is it Bhrathi's Parpiniyam or Bharathidasan's 'Bharathi admiration'?)

மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் இப்படி எல்லாருமே விமர்சனம் செய்யப்படவும் அவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளப்படவும் வேண்டியவர்கள்தான். இதை நான் மறுத்ததும் இல்லை வெறுப்பதும் இல்லை. அப்படி புனிதம் குறித்த மயக்கங்களுக்கு ஆற்ப்பட்டவன் கம்யுனிஸ்டும் கிடையாது.

ஆனால், பாரதிதாசன் உள்ளிட்ட எமது முன்னோர்களில் பலரின் தத்துவ திரிபு என்பதையும், தடுமாற்றங்கள என்பதையும் - அடிப்படையிலேயே தவறான நிலைப்பாட்டை கொண்டவர்களின் கருத்து நிலைப்பாடு என்பதையும் ஒன்றாக வைத்து பார்க்க சொல்கிறீர்களா?

பாரதியை சொறிநாய் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதை நான் செய்யப் போவதில்லை, செய்யவும் இல்லை. எனது பின்னூட்டங்களைப் பாருங்கள்... அதில் அவர மாகான் அல்ல என்ற அளவிலேயே எமது விமர்சனம் உள்ளதை அறீவிர்கள். மேலும் அவரது கவிதைகளை பிள்ளைகளுக்கு அறீமுகப்படுத்துங்கள் என்றூ கூட் சொல்லியுள்ளேன்.

ஆயினும், பாரதி குறித்த எமது நிலைப்பாட்டை ஆதரிக்கும் பலரில் சிலர் அவர் மீது அதீத வெறுப்புணர்வோடு இருக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை நான அங்கீகரிக்கீறேன்(ஏனேனில் பாரதி மறைமுகமாய தூக்கி நிறுத்திய கருத்தியல் பார்ப்பினியம் என்பதால்). அது போன்ற கருத்துக்களில் சீர்திருத்தம் பேசும் தேவை எனக்கு இல்லை. அது ஒரு வேளை பாரதி ரசிகர்களின் கவலையாக இருக்கலாம்.

இங்கு பாரதி ஒரு மகான் அல்ல ஒரு சாதாரண மானிடன் என்பதையும் அவரது கவிதைகளின் அழிகியல் என்பது அன்றைய இந்தியாவின் சமூக பொருளாதார வளர்ச்சியின் ஒரு தவிர்க்க இயலா விளைவு என்பது என்ற அடிப்படையை புரிய வைப்பதுமே நோக்கம்... அதை செய்து இந்த கட்டுரை செய்துள்ளது விநாயகத்திற்க்கு நன்றிகள்



//
இங்கு பின்னூட்டிய நண்பர்கள் அனைவரும் தயவு செய்து மீண்டுமொருமுறை முழுப் பதிவையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
//

அதையே நானும் கோருகிறேன் அத்துடன் பதிவின் பின்னூட்டங்களையும் கவனமாக படிக்கவும்

அசுரன்

said...

பாரதி பிறந்த நாள் போலத் தெரிகிறது... அதனால் அவரப் பத்தி ஒரு விவாதத்த கிளப்புவுமேன்னுதான்....

அசுரன்

said...

பகல்/இரவு போல மறுப்பக்கங்களை கண்டு கொண்டால் *யாதார்த்தம்* என்று எடுத்துக் கொள்ளவேண்டியதுதான் போலும்.

உண்மைக்குள் மறைந்துள்ள உண்மைகள் கசக்கத்தான் செய்கிறது.

யாரும் இங்கே புத்தன் இல்லை !
:(

said...

தாமதமான பின்னூட்டத்திற்க்கு வருந்துகிறேன் ..

எப்பவோ செத்துப்போன ஒரு மனிதர பத்தி இவ்வளவு விமர்சனம் அவசியம்தானா? சம காலத்தில் வாழும் அயோக்கியர்களை எதிர்த்து பெருசா குரல் கொடுங்களேன்..உங்களோட ஆராய்ச்சி கட்டுரைகள் லாம் அரசியல்வாதிகளோட போலிகளை நிறமிழக்க செய்யவும், நசுக்கப்படும் மக்களுக்கெதிராய் இருக்கவும் பயன்படுமெனில் சந்தோஷம்தான்...

Related Posts with Thumbnails