TerrorisminFocus

Wednesday, October 09, 2013

பல் இல்லாத பாம்பை அடிப்பியா, இல்ல பாம்பாட்டியை அடிப்பியா?

ஆதார் அட்டை (அது அட்டையா எண்ணா என்பதையே குழப்பி விடுகிறார்கள் வேண்டுமென்றே) சட்டவிரோதமானது என்பதையும், அது கட்டயமாக்கப்படுவதை எதிர்த்தும் தொடுக்கப்பட்ட வழக்கில் ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

உளவுத் துறை தலைவன் நீல்கேனி

வழக்கு விவரங்கள் வினவில் உள்ளன. சுருக்கமாக உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் மத்திய அரசின் பாதி உண்மை, பாதி பொய் கலந்த பிரச்சாரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் இல்லாமல் நந்தன் நீல்கேனி மூலம் ஒரு நிறுவனத்தை உருவாக்கி, 122 கோடி மக்களுக்கு அடையாள அட்டை வழங்குகிறேன் என பிரச்சாரம் செய்து இதற்காக சுமார்ரூ. 50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை.

ஆதார் என்பது 12 டிஜிட் அடையாள எண் தான். இதனால் எந்த அட்டையையும் வழங்க மாட்டோம் என்ற உண்மையை கூட மக்களுக்கு அரசாங்கம் சொல்லவில்லை. ’ஆதார்’ ஒரு அடையாள அட்டை என பிரச்சாரம் செய்து, மானியம், கேஸ் சிலிண்டர் அது இருந்தால் தான் கிடைக்கும் என மக்களை அச்சுறுத்தி இத்திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. மக்களை உளவு பார்க்க மட்டுமே ஆதார் அடையாளம் பயன்படும்.

சரி  இதில் பாம்பும், பல்லும் எங்கே வந்தது. உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்தான் மேற்படி பல்லில்லாத பாம்பு. உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கிவிடவில்லை. மாறாக ஆரம்ப கட்ட விவரங்களின் அடிப்படையில் ஆதார் அட்டை சட்ட விரோதமானது, அரசியலமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது என்பது உறுதிப்பட்ட நிலையில் அதனை மக்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதற்கே அரசு தைய தக்க என்று குதியாட்டம் போட்டு நீதிமன்றத்தை மிரட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் ஆதார் அட்டை உத்திரவை ரத்து செய்யக் கோரியும், குற்றப் பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் பங்கெடுப்பது, 49 O வை  ஒரு பட்டனாக வோட்டுப் பெட்டியில் இணைப்பது  உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய உச்சநீதிமன்ற உத்திரவை ரத்து செய்யக் கோரியும் மத்திய அரசு மனு கொடுத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்றம் அநாவசியமாக அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதாக அரசால் சுட்டிக் காட்டப்பட்டது. இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை என்பதுதான் அரசின் கருத்து. மேலும், மேற்படி விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தின் எந்த முடிவையும் குப்பை கூடையில் வீசும் வகையில் சட்டம் இயற்றவதற்கான வேலைகள் அமைச்சரவையில் நடந்துவருவதும் விவாதிக்கப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முரன்நகையாக இப்படி குறிப்பிட்டனர் "You have the ordinance route also. If you have a law this case becomes irrelevant.' அதாவது, 'சட்டம் போட்டுட்டா நீதிமன்ற வழக்கு ஒன்னுமில்லா போயிரும் இல்லையா' என்று கேட்டுள்ளனர்.

இப்படியாக பாம்புக்கு பல் இல்லை என்பதை ஒரு வழியாக ஒத்துக் கொண்டார்கள். அணு ஒப்பந்தம் தவறு என்று நீதிமன்ற படியேறினால், அது வெளியுறவு கொள்கை முடிவு அதில் நாடாளுமன்றத்திற்கே அதிகாரமில்லை பிறகல்லவா உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் என்றனர். இப்போ ஆதார் எண், தேர்தல் சீர்திருத்தம் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு அரசின் கொள்கை முடிவுகளிலே தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்கின்றனர். இப்படியெல்லாம் நீட்டி முழக்க வேண்டாம் என்றுதான் நேரடியாக எங்களுக்கு பல் இல்லை என்று அறிவித்து விட்டனர் நீதிபதிகள்.

பல்லில்லாதா பாம்பு


ஆனாப் பாருங்க நம்ம ஜனங்க சரியா பழக்கப்படுத்தினா இந்த பாம்பு கொத்தி கொன்றும்னு இன்னும் நம்பிட்டு திரியுதுங்க. இந்த பாம்பு புஸ் புஸ் என்று கார்போரேசன் குழாய் மாதிரி சவுண்டு மட்டும்தான் விடும் எனும் போது பாம்பை நொந்து என்ன பயன்? பாம்பாட்டியை அல்லவா நொங்கெடுக்க வேண்டும்?

அசுரன்


ஆதார் அட்டை கட்டாயமல்ல – உச்சநீதி மன்றம்

ஆதார்: விலை போகும் உங்கள் தகவல்கள்!

ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

ரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் !

உங்களைப் பற்றிய விவரங்கள் விற்பனைக்கு கிடைக்கும் !

டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?

Saturday, October 05, 2013

மேநாட்டுக்கார பக்தனானலும் என்னாட்டுக்காரனென அருளிய மீனாட்சி!!

அது ஒரு ஆன்மிகச் சொற்பொழிவு. பேசிக் கொண்டிருந்த பெரியவர் ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்தார். கண்கண்ட தெய்வம் மதுரை மீனாட்சி தனது பக்தனுக்கு அருள் பாலித்து காப்பாற்றுவதற்கு எழுந்தருளிய கதை அது. கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் உணர்ச்சி மேவிட உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தது. கதை இதுதான், கதையல்ல நிஜமாகத்தான் இருக்கும்.

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் வெள்ளைக்கார துரை ஒருவன் மீனாட்சி மீது மிக பக்தியாக இருந்திருக்கிறான். மீனாட்சியை தரிசிக்க ஆவல் இருந்த போதும் கோயில் உள்ளே எல்லாம் செல்வதில்லையாம்(என்ன காரணம்... ம்...) வெளியவே இருந்து பார்த்துக் கொள்வானாம். இப்படியாக நாட்கள் கழிந்தன. ஒருநாள் அவன் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்(இரவுதான்). திடீரென்று பெருமழை. இடியும் மின்னலுமாக அடித்து நொறுக்குகிறது. இவனோ அசந்து தூங்குகிறான். அப்போது அங்கே தோன்றிய அன்னை மீனாட்சி அவனை தட்டியெழுப்பி, அப்பனே என்னுடன் வா என்று அழைத்துச் செல்கிறாள். இவனும் அன்னையின் தரிசனம் கிடைத்த பெரூவகையில் பின்னாலே சென்று விடுகிறான். கோயில் வாசல் வரை கூட்டிச் சென்றவள் அங்கேயே மறைந்து விடுகிறாள் (கோயிலுக்குள் ஏன் கூட்டிச் செல்லவில்லை? என்ன காரணம்.. ம்...). இவனும் சரி பார்த்த வரை பரவசம் என்று கலெக்டர் மாளிகைக்கு திரும்பி வருகிறான். வந்து பார்த்தால் வேலைக்காரர்களெல்லாம் மாளிகை வெளியே பெரும் பரபரப்புடன் நின்று கொண்டிருக்கிறார்கள். காரணம் கலெக்டர் படுத்திருந்த இடத்தில் இடி இறங்கி முற்றிலும் பொசுங்கிப் போயிருந்தது. இப்படியாக கடை கோடி பக்தனுக்கு மட்டுமல்ல கடல் கடந்த பரதேசி பக்தனுக்கு அருள் பாலிக்கும் தெய்வம் அன்னை மீனாட்சி என்று கூறி உரையை தொடர்ந்து கொண்டிருந்தார் பெரியவர்.

நமக்கு மண்டையில் எக்கச்சக்கசக்கசக்க கேள்விகள். மொத கேள்வி பிரிட்டிஸ்கார நாய்க்கு சேவை செய்வதில் எப்படி ஆர் எஸ் எஸ்ம், ஆண்டாளும்... ஸாரி மீனாட்சி அன்னையும் ஒரே விதமாக சிந்தித்து செயல்பட்டனர் என்பது வியப்பளித்தது. மதுரை மீனாட்சி கோயில் உயிர் வாழ்வதே அங்குள்ள மக்களின் உழைப்பால்தான் எனும் போது அதை சுரண்டி கூறு கெடுக்கும் ஆங்கிலேயெ கலெக்டர் ஒருவனை பாதுகாப்பது என்பது அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆயிற்றே?

நெண்டாவது கேள்வியாக தோன்றியது, வெள்ளைக்காரன் வெள்ளைக்காரந்தான் அவன் ஆய் போனாலும் அது ஒரு தனி அழகுதான் என்று ரசித்து மயங்கும் மனோபாவம் பாவம் தெய்வத்தையும் விட்டு வைக்கவில்லையே என்று தோன்றியது. இங்கே அவனவன் மொட்டைகளையும், கொட்டைகளையும், ஏன் பட்டைகளையும் கூட போட்டுக் கொண்டு தெய்வமே கதி என்று கிடக்க அவனுக்கெல்லாம் ஒரு சின்ன பிட்டு சீனு கூட காட்டாத மீனாட்சி, அந்த பரதேசி (அட பரதேசின்னாக்க வெளிநாட்டுக்காரன்னு அர்த்தமுங்க. ஆர் எஸ் எஸ் காரண்ட கேளுங்க அவனுக்குத்தான் இந்தி தெரியுமே) வெள்ளைக்காரன் மனுசுல ரோசிச்சதுக்கே எக்ஸ்ட்ரா எபெக்ட் கொடுத்து காப்பத்திருக்கு இந்த அம்மா. அப்போ இங்கன கெடந்து உருகுனெவனெல்லாம் லூசுப்பயலுவன்னு நான் சொல்லலீங்கோ அந்த அம்மா சொல்லுது இல்லைன்னாக்க அந்த சொற்பொழிவை ஆத்து ஆத்து என்று ஆத்திய பெரியவர் சொல்றாருங்கோ.

மூனாவது நெம்ப முக்கியமான கேள்விங்கோ, கோயிலுக்குள்ளார வெள்ளையன் ஏன் போகலன்னு(போக முடியலன்னு) நான் ஆராய்ச்சி செஞ்சா ஒரு சாதிய மட்டும் திட்டுறீங்கன்னு கோபப்படுறாய்ங்க. அந்த கேள்விக்கு சரியான இன்னொரு பதில் ஒன்னு இருக்குங்கோ அதையே கேள்வியக் கேட்டாக்க இந்த கேள்விக்கு பதில் கிடைச்சிரும் (ரொம்ப குழப்பமா இருக்குல்ல?). அதாவது பாரத தேசம், பாரினிலே  ஒரு ஆன்மிக ஊற்று, அது மனித வாழ்வை கடைத்தேற்ற நமக்கு காட்டிய தெய்வங்களை உளமார தொழுது வேண்டியவர்களில் ஒரு சாதியைச் சேர்ந்தவர் தவிர மீதி எல்லாருமே நெருப்புக்கும், இன்னபிற விசயங்களுக்கும் இரையாகி முக்தி அடைந்துள்ளனரே அந்த மர்மம் என்ன? உளமார தொழுத நந்தனார் கடைசி வரை சிவனை பார்க்கவே இயலவில்லை. அவரால முடியலப்பா அப்படித்தான் சொல்லோனும். இல்லைன்னாக்க ஒரு சாதிய திட்டுறாய்னு கடுப்பேத்துவாய்ங்க் லார்டுங்க. சிவனை பார்த்தே தீருவேன்னு போய் நின்னவர நெருப்புத்தான் தீண்டுச்சி (அதுவாவது தீண்டுச்சே). முக்தி இப்படித்தான் அவருக்கு கிடைத்தது. அதே போல அந்த வெள்ளைக்காரனுக்கும் மின்னல் மூலம் முக்தி கிடைக்கச் செய்திருக்கலாமே? வை திஸ் பார்சியாலிட்டி, இது வெள்ளைக்காரனுக்கு மட்டுமில்லை, மேலே ஏற்கனவே சொன்னது போல அந்த குறிப்பிட்ட சாதிக்காரங்களுக்கும் கூட இகலோக வாழ்க்கைக்கான அதிகபட்ச உத்திரவாதத்துடன் தான் முக்தி கிடைக்குது. மத்தவனுக்கு மொத்த உயிர பறிச்சுத்தான் முக்தி கிடைக்குது. அப்போ அந்த ஸ்பெசல் குவாலிபிகேசன் அந்த குறிப்பிட்ட சாதி அது இல்லைனா சாதியே இல்லாத மேட்டுக்குடி வெளிநாட்டுக்காரன் அப்படித்தானே?

இந்த கேள்விக்கு யாராவது ஆன்மிக அறிஞர்கள் பதில் சொன்னால் 'ரொம்ப வசதியா' இருக்கும். சொல்வாய்ங்களா?

அசுரன்

மோடி வந்தால் ஊழல் குறைவதும், பன்னி விட்டையும்!!

மோடி வந்தால் ஊழல் ஒழியுமாம். இவனும், அம்பானி, அதானி கும்பலும் குஜராத்து வளங்களை மொட்டையடிக்க போட்டுக் கொண்ட ஒப்பந்தங்கள் ஊழல்கள் எல்லாம் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வருது. ஒன்னு மட்டும் புரியல, சாப்பிடற உணவு இங்க ரொம்ப கேவலமா இருக்கு, அங்க கொஞ்சம் பரவால்ல அதனால் அங்க சாப்புடுறேன்னு சொல்றவன ஒன்னும் செய்ய முடியாது. சாப்பிட்டேயாக வேண்டும் எனும் போது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் சாப்பிடுறதுக்கு கை நிறைய பிரெஸ் கழுத விட்டையை மன்மோகன் தந்தாரு 9 வருசமா தின்னானுங்க. இப்போ, கழுத விட்ட டேஸ்ட இதுக்கு மேல தாங்க முடியாது அதனால மோடியோட பன்னி விட்டய சாப்பிட போறோம்னு சொல்லிட்டு சில பேரு கிளம்புறானுக.


அசுரன்

Thursday, October 03, 2013

ராமனைப் பற்றி விவேகானந்தர் என்ன சொல்கிறார்?

ராமனைப் பற்றி விவேகானந்தர் என்ன சொல்றார்? "காடுகளிலிருந்த மக்கள் யாரென்பது ராமருக்கும் அவரைச் சார்ந்த ஆரியர்களுக்கும் தெரியாது. அழகில்லாதவர்களைக் குரங்குகள் என்று அழைத்தார்கள். அவர்களிலே மிகுந்த பலமும், தைரியமும், செல்வாக்கும் உடையவர்களை 'அரக்கர்கள்' என்று அழைத்தார்கள். தென் இந்தியாவில் வசித்த மக்களே இப்பெயர்களால் அழைக்கப்பட்டார்கள்". (சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் எனும் நூல் - இராமன் தேசிய நாயகனா தேசிய வில்லனா? புதிய கலாச்சாரம் வெளியீடு)

ஆக இன்றும் கூட பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் குரங்கு வம்சத்தாரும், அரக்க வம்சத்தாரும் தம்மை இழிவு செய்த ராமனின் வம்சத்தாருக்கு கடப்பாரை தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆக்கங்கெட்ட கூவைகளுக்கு குரங்குன்னு பேரு வைச்சி அத அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.

அசுரன்

Rama.... Rama....

Saturday, September 28, 2013

பூவாடைக்காரி தெய்வமும், பெண் பித்து பிடித்த தஞ்சை நாயக்கர் அரசும்!!

ஆந்திர தேசத்து தெலுங்கு சாதியினர் பலர் முஸ்லீம் அரசர்களின் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட அடக்குமுறைகளுக்கு தப்பிப் பிழைத்து அலை அலையாக தமிழகம் வந்தது பற்றி கி ராஜநாரயணன் நாவலில் ஒரு விவரிப்பு உண்டு. இதே போன்று பொதுவில் முஸ்லீம் அரசுகள் இந்தியாவில் பாலியல் அத்துமீறல்கள், கொடுமைகள், கோயில்கள் மீது தாக்குதல், 'இந்து'க்கள் மீது ஒடுக்குமுறை செய்தது குறித்து பொதுபுத்தி ஒன்று உருவாக்கப்பட்டு பரவலாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு வகைப்பட்ட உயர்சாதி/மேட்டுக்குடி அரசியல் உருவாக்கிய சமூக உளவியலே. புத்தி கெட்ட நடுத்தர வர்க்க பேமானிகளால் பராமரிக்கப்பட்டு பரப்புரை செய்யப்படுகிறது. இதனை புரிந்து கொள்ள இங்கே வலைப்பூக்களிலும் மோடிக்கு நேரடியாக வக்காலத்து வாங்கும் நேர்மையும்(காவி கும்பலிடம் இதை எதிர்பார்ப்பது தப்புதான்), தைரியமும் இன்றி 'இந்து'க்கள் பாதிக்கப்படுவதாக உச்சுக் கொட்டி, காஷ்மீருக்கெல்லாம் கேமராவை சூம் செய்து கதை சொல்லும்  வெள்ளை வேட்டிக்குள் காவி டவுசர் போட்ட பதிவர்களைச் சொல்லலாம். இவர்களின் நம்பகத்தன்மைக்கு உரைகல் அதே 'இந்து'க்கள் தீண்டாமைக் கொடுமைக்கும், படுகொலைக்கும் ஆதிக்க சாதி வெறியர்களால் ஆட்படும் போது பாரமுகமாக இருப்பது. இவர்களின் கரிசனம் 'இந்து' மீது அல்ல என்பது இங்கு புலப்படும்.

சரி இதற்கும் பூவாடைக்காரிக்கும் என்ன தொடர்பு?... பிடிக்காத மாமியார் கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்று சொல்வார்களே அது போல. முஸ்லீம் மன்னர்களின் அடாவடித்தனங்களை மட்டும் சூம் போட்டு காட்டும் வரலாற்றுப் பார்ப்பனியம், அதே அளவுக்கும், அதை விட கொடூரமாகவும் 'சாதி இந்து' அரசர்கள் செய்துள்ள கொடுமைகளைப் பற்றி பேசுவதில்லை. உதாரணத்திற்கு சொல்ல வந்துதான் பூவாடைக்காரி தெய்வம் உருவான கதை.

தஞ்சை நாயக்கர் ஆட்சி காலத்தில் பாளையக்காரர்கள் கண்ணில் படும் அழகிளம் பெண்களை கடத்திச் சென்று வன்புணர்ந்து அடிமைகளாக விற்று விடுவர். பிரேவ் ஹார்ட் படத்தில் வருமே - திருமணம் ஆனால் முதலிரவு அப்பகுதி படைத்தலைவனுடன் நடக்க வேண்டும் என்று, அது போல பூப்படைந்த பெண்களை கடத்தி வந்து வன்புணர்ச்சிக்குள்ளாக்குவர். இதிலிருந்து தப்பிக்க பூப்படைந்த பெண்களை கௌரவக் கொலைகள் செய்வதும் நடந்துள்ளது. அப்படி கொல்லப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பான பெண் தெய்வப் பெயர் வழங்கப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் இவ்வகை தெய்வங்களுக்கு பூவாடைக்காரி என்று பெயர் வழங்கப்படுகிறது. (தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி - 1 இராமச்சந்திரன்.சீ - உங்கள் நூலகம், ஆ, சிவசுப்பிரமணியன் செப் 2013)

விடுதலைப் போர் வீரன் கட்டபொம்மனுக்கும் கூட இவ்வகை கதையாடல் உண்டு. அது குறித்து நாட்டுப்புற வழக்கும் உள்ளது. 7 அண்ணன்களுக்குப் பிறந்த தங்கையை கட்டபொம்முவிடமிருந்து காக்க அவர்கள் கொன்ற கதை அது. இதே போல இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்ட கேரளாவை கொள்ளையடித்த கதை. பல்வேறு 'இந்து' மன்னர்கள் பக்கத்து நாடுகள் (இந்தியாதான் 50 கிமீ 100 கிமீ உள்ளயே) மீது  படையெடுத்து கோயில்களை கொள்ளையடித்த வரலாறுகள். இவைகள் நிகழ்காலத்தில் கலவரத்தை உண்டாக்கும் ரசவாதத்திற்கு உட்படாத கல்வெட்டுக்கால வரலாறுகள்.  காரணம் வரலாறு நெடுகிலும் காவி டவுசர்கள் பார்ப்பனியத்தின் பெயரில் உருவாக்கி வைத்துள்ள திட்டமிட்ட முஸ்லீம் வெறுப்பு கருத்தாக்கம்.

எப்படி இன்றைய காவி டவுசர் பதிவர்கள் அய்யோ காஷ்மீர் என்று அலறி போலியாக துடித்தாவது மோடிக்கு காவடி தூக்குகிற அதே வேளையில் கண்முன்னே சக 'இந்து'வுக்கு நிகழும் கொடுமையைக் கண்டும் காணாமல் போகிறார்களோ, மூடி மறைக்கிறார்களோ அதே போல வரலாறு நெடுகிலும் மன்னர் என்றாலே அடாவடித்தனம், ஒடுக்குமுறை சுரண்டல் என்ற உண்மையின் ஒரு பக்கத்தை மட்டும் முஸ்லீம் என்று குறிப்பிட்டு காட்டி பிரிவினை கிளப்புகிறார்கள்.

இந்த அடிமடையர்களுக்கும் அல்லக்கை கூட்டம் உண்டு. ஏனேனில் நாம் இருப்பது காலனிய அடிமைத்தனத்தில் ஊறித் திளைத்த சாதி வெறி இந்தியாவில். இது இதற்கு மீறி சிந்தித்தால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும். இவர்களின் மொன்னைத்தனத்திற்கு ஒரு பூவாடைக்காரியை உருவாக்கினால் ஒழிய இதற்கு விடிவில்லை.

அசுரன்

தொடர்புடைய பதிவுகள்:
'இந்து' மன்னர்களால் இடிக்கப்பட்டவை எவை? 

தெய்வங்கள் உருவான கதை 

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

 




Saturday, May 05, 2012

தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி!

ம.க.இ.கவின் மாநில பொருளாளர்
தோழர் இரா.சீனிவாசன்,
மே 5 காலையில் இயற்கை எய்தினார் 

கடும் புற்றுநோயுடன் மரணத்தை எதிர்நோக்கி அவதியுற்ற போதிலும் தனது லட்சிய உறுதியில் சிறிதும் குன்றாமலிருந்தார் தோழர். 

தோழருக்கு எமது சிவப்பஞ்சலி!

அவரது உடல் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலை 8 மணிக்கு புறப்படும்.

அசுரன்

Monday, February 27, 2012

இலக்கிய அக்கப்போருக்கு மாய்ந்து மாய்ந்து எழுதும் மாதவராசு அய்யா, கொஞ்சம் அரசியலுக்கும் எழுதலாமே?

சு. வெங்கடேசோட கா.கோ. நாவலுக்கு விருது கொடுத்துட்டாய்ங்க. எழவு ரஜினிக்கும், தனுஷுக்கும் சிறந்த நடிகர் விருது கொடுத்த பயபுள்ளகதான இந்த இ'ள'க்கிய விருதும் கொடுக்கிறாய்ங்க. இருந்தாலும் இலக்கியமில்லையா? விடுவாங்களா எழுத்தாள பெருமக்கள் என்ற படைப்பாளிகள். இதை வைத்து பல வாதங்கள், பிரதிவாதங்கள்.

இவையனைத்திலும்  என் கவனத்தை கவர்ந்தது நம்ம தோழர் மாதவராசு அண்ணாச்சி மாய்ந்த் மாய்ந்து எழுதுவதுதான். சு. வெங்கடேசை மாதவராஜும், தமுஎகசவும் தோழமையோட விமர்சிப்போம், தவறு செய்தால் அதை உரிமையுடன் கண்டிப்போம், அதை ஜெ.மோ போன்றவர்கள் தந்திரமாக பயன்படுத்துவது நேர்மையானது இல்லை என்றெல்லாம் மாதவராஜ் எழுதியுள்ளார்.

இவையெல்லாம் சரிதான், என்னுடைய பிரச்சினை என்னவென்றால், மேற்படி சு. வெங்கடேசின் இ'ள'க்கியப் புத்தகத்தை ஆய்ந்து அதன் மீதும், அப்புத்தகத்தின் மீதான வாதங்கள் மீதும் கொட்டேசன் போட்டு விமர்சனம் எழுதும் மாதவராஜ் அண்ணாச்சி அவர்கள், அவர் சார்ந்த சிபிஎம் என்ற பிக்காரி, பான்னாடை, முதலாளித்துவத்துக் கோமனக் கட்சியின் அயோக்கியத்தனம் பற்றி வாய் திறந்து பேசுவதில்லை.

ஒரு இலக்கிய அக்கப்போருக்கு இவ்வளவு கொதித்த மாதவராஜ் அய்யா அவர்கள், தமிழ்நாடே கொதித்து எழுந்த முல்லைப் பெரியாறு விசயத்தில் வாய் மூடி மவுனமாகத்தான் இன்று வரை இருக்கிறார் (ஒரேயொரு காப்பி பேஸ்ட் மொக்கை கட்டுரை தவிர்த்து). அண்ணாரின் மேலான கருத்துக்களை, அவரது நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து நாளும், போழுதும் காத்திருந்து கண்கள் பூத்துப் போனதுதான் மிச்சம்....

ஒருவேள அவர் 'இலேகியமெல்லாம் மக்களுக்கே' என்பதைத்தான் இ'ள'க்கியமெல்லாம் மக்களுக்கே என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா அடிச்சிட்டாரோ?

அன்புடன் அண்ணாரின் வாத பிரதிவாதங்களை எதிர்நோக்கி,

அசுரன்

Related Posts with Thumbnails