TerrorisminFocus

Saturday, September 28, 2013

பூவாடைக்காரி தெய்வமும், பெண் பித்து பிடித்த தஞ்சை நாயக்கர் அரசும்!!

ஆந்திர தேசத்து தெலுங்கு சாதியினர் பலர் முஸ்லீம் அரசர்களின் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட அடக்குமுறைகளுக்கு தப்பிப் பிழைத்து அலை அலையாக தமிழகம் வந்தது பற்றி கி ராஜநாரயணன் நாவலில் ஒரு விவரிப்பு உண்டு. இதே போன்று பொதுவில் முஸ்லீம் அரசுகள் இந்தியாவில் பாலியல் அத்துமீறல்கள், கொடுமைகள், கோயில்கள் மீது தாக்குதல், 'இந்து'க்கள் மீது ஒடுக்குமுறை செய்தது குறித்து பொதுபுத்தி ஒன்று உருவாக்கப்பட்டு பரவலாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு வகைப்பட்ட உயர்சாதி/மேட்டுக்குடி அரசியல் உருவாக்கிய சமூக உளவியலே. புத்தி கெட்ட நடுத்தர வர்க்க பேமானிகளால் பராமரிக்கப்பட்டு பரப்புரை செய்யப்படுகிறது. இதனை புரிந்து கொள்ள இங்கே வலைப்பூக்களிலும் மோடிக்கு நேரடியாக வக்காலத்து வாங்கும் நேர்மையும்(காவி கும்பலிடம் இதை எதிர்பார்ப்பது தப்புதான்), தைரியமும் இன்றி 'இந்து'க்கள் பாதிக்கப்படுவதாக உச்சுக் கொட்டி, காஷ்மீருக்கெல்லாம் கேமராவை சூம் செய்து கதை சொல்லும்  வெள்ளை வேட்டிக்குள் காவி டவுசர் போட்ட பதிவர்களைச் சொல்லலாம். இவர்களின் நம்பகத்தன்மைக்கு உரைகல் அதே 'இந்து'க்கள் தீண்டாமைக் கொடுமைக்கும், படுகொலைக்கும் ஆதிக்க சாதி வெறியர்களால் ஆட்படும் போது பாரமுகமாக இருப்பது. இவர்களின் கரிசனம் 'இந்து' மீது அல்ல என்பது இங்கு புலப்படும்.

சரி இதற்கும் பூவாடைக்காரிக்கும் என்ன தொடர்பு?... பிடிக்காத மாமியார் கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்று சொல்வார்களே அது போல. முஸ்லீம் மன்னர்களின் அடாவடித்தனங்களை மட்டும் சூம் போட்டு காட்டும் வரலாற்றுப் பார்ப்பனியம், அதே அளவுக்கும், அதை விட கொடூரமாகவும் 'சாதி இந்து' அரசர்கள் செய்துள்ள கொடுமைகளைப் பற்றி பேசுவதில்லை. உதாரணத்திற்கு சொல்ல வந்துதான் பூவாடைக்காரி தெய்வம் உருவான கதை.

தஞ்சை நாயக்கர் ஆட்சி காலத்தில் பாளையக்காரர்கள் கண்ணில் படும் அழகிளம் பெண்களை கடத்திச் சென்று வன்புணர்ந்து அடிமைகளாக விற்று விடுவர். பிரேவ் ஹார்ட் படத்தில் வருமே - திருமணம் ஆனால் முதலிரவு அப்பகுதி படைத்தலைவனுடன் நடக்க வேண்டும் என்று, அது போல பூப்படைந்த பெண்களை கடத்தி வந்து வன்புணர்ச்சிக்குள்ளாக்குவர். இதிலிருந்து தப்பிக்க பூப்படைந்த பெண்களை கௌரவக் கொலைகள் செய்வதும் நடந்துள்ளது. அப்படி கொல்லப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பான பெண் தெய்வப் பெயர் வழங்கப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் இவ்வகை தெய்வங்களுக்கு பூவாடைக்காரி என்று பெயர் வழங்கப்படுகிறது. (தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி - 1 இராமச்சந்திரன்.சீ - உங்கள் நூலகம், ஆ, சிவசுப்பிரமணியன் செப் 2013)

விடுதலைப் போர் வீரன் கட்டபொம்மனுக்கும் கூட இவ்வகை கதையாடல் உண்டு. அது குறித்து நாட்டுப்புற வழக்கும் உள்ளது. 7 அண்ணன்களுக்குப் பிறந்த தங்கையை கட்டபொம்முவிடமிருந்து காக்க அவர்கள் கொன்ற கதை அது. இதே போல இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்ட கேரளாவை கொள்ளையடித்த கதை. பல்வேறு 'இந்து' மன்னர்கள் பக்கத்து நாடுகள் (இந்தியாதான் 50 கிமீ 100 கிமீ உள்ளயே) மீது  படையெடுத்து கோயில்களை கொள்ளையடித்த வரலாறுகள். இவைகள் நிகழ்காலத்தில் கலவரத்தை உண்டாக்கும் ரசவாதத்திற்கு உட்படாத கல்வெட்டுக்கால வரலாறுகள்.  காரணம் வரலாறு நெடுகிலும் காவி டவுசர்கள் பார்ப்பனியத்தின் பெயரில் உருவாக்கி வைத்துள்ள திட்டமிட்ட முஸ்லீம் வெறுப்பு கருத்தாக்கம்.

எப்படி இன்றைய காவி டவுசர் பதிவர்கள் அய்யோ காஷ்மீர் என்று அலறி போலியாக துடித்தாவது மோடிக்கு காவடி தூக்குகிற அதே வேளையில் கண்முன்னே சக 'இந்து'வுக்கு நிகழும் கொடுமையைக் கண்டும் காணாமல் போகிறார்களோ, மூடி மறைக்கிறார்களோ அதே போல வரலாறு நெடுகிலும் மன்னர் என்றாலே அடாவடித்தனம், ஒடுக்குமுறை சுரண்டல் என்ற உண்மையின் ஒரு பக்கத்தை மட்டும் முஸ்லீம் என்று குறிப்பிட்டு காட்டி பிரிவினை கிளப்புகிறார்கள்.

இந்த அடிமடையர்களுக்கும் அல்லக்கை கூட்டம் உண்டு. ஏனேனில் நாம் இருப்பது காலனிய அடிமைத்தனத்தில் ஊறித் திளைத்த சாதி வெறி இந்தியாவில். இது இதற்கு மீறி சிந்தித்தால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும். இவர்களின் மொன்னைத்தனத்திற்கு ஒரு பூவாடைக்காரியை உருவாக்கினால் ஒழிய இதற்கு விடிவில்லை.

அசுரன்

தொடர்புடைய பதிவுகள்:
'இந்து' மன்னர்களால் இடிக்கப்பட்டவை எவை? 

தெய்வங்கள் உருவான கதை 

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

 




Saturday, May 05, 2012

தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி!

ம.க.இ.கவின் மாநில பொருளாளர்
தோழர் இரா.சீனிவாசன்,
மே 5 காலையில் இயற்கை எய்தினார் 

கடும் புற்றுநோயுடன் மரணத்தை எதிர்நோக்கி அவதியுற்ற போதிலும் தனது லட்சிய உறுதியில் சிறிதும் குன்றாமலிருந்தார் தோழர். 

தோழருக்கு எமது சிவப்பஞ்சலி!

அவரது உடல் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலை 8 மணிக்கு புறப்படும்.

அசுரன்

Monday, February 27, 2012

இலக்கிய அக்கப்போருக்கு மாய்ந்து மாய்ந்து எழுதும் மாதவராசு அய்யா, கொஞ்சம் அரசியலுக்கும் எழுதலாமே?

சு. வெங்கடேசோட கா.கோ. நாவலுக்கு விருது கொடுத்துட்டாய்ங்க. எழவு ரஜினிக்கும், தனுஷுக்கும் சிறந்த நடிகர் விருது கொடுத்த பயபுள்ளகதான இந்த இ'ள'க்கிய விருதும் கொடுக்கிறாய்ங்க. இருந்தாலும் இலக்கியமில்லையா? விடுவாங்களா எழுத்தாள பெருமக்கள் என்ற படைப்பாளிகள். இதை வைத்து பல வாதங்கள், பிரதிவாதங்கள்.

இவையனைத்திலும்  என் கவனத்தை கவர்ந்தது நம்ம தோழர் மாதவராசு அண்ணாச்சி மாய்ந்த் மாய்ந்து எழுதுவதுதான். சு. வெங்கடேசை மாதவராஜும், தமுஎகசவும் தோழமையோட விமர்சிப்போம், தவறு செய்தால் அதை உரிமையுடன் கண்டிப்போம், அதை ஜெ.மோ போன்றவர்கள் தந்திரமாக பயன்படுத்துவது நேர்மையானது இல்லை என்றெல்லாம் மாதவராஜ் எழுதியுள்ளார்.

இவையெல்லாம் சரிதான், என்னுடைய பிரச்சினை என்னவென்றால், மேற்படி சு. வெங்கடேசின் இ'ள'க்கியப் புத்தகத்தை ஆய்ந்து அதன் மீதும், அப்புத்தகத்தின் மீதான வாதங்கள் மீதும் கொட்டேசன் போட்டு விமர்சனம் எழுதும் மாதவராஜ் அண்ணாச்சி அவர்கள், அவர் சார்ந்த சிபிஎம் என்ற பிக்காரி, பான்னாடை, முதலாளித்துவத்துக் கோமனக் கட்சியின் அயோக்கியத்தனம் பற்றி வாய் திறந்து பேசுவதில்லை.

ஒரு இலக்கிய அக்கப்போருக்கு இவ்வளவு கொதித்த மாதவராஜ் அய்யா அவர்கள், தமிழ்நாடே கொதித்து எழுந்த முல்லைப் பெரியாறு விசயத்தில் வாய் மூடி மவுனமாகத்தான் இன்று வரை இருக்கிறார் (ஒரேயொரு காப்பி பேஸ்ட் மொக்கை கட்டுரை தவிர்த்து). அண்ணாரின் மேலான கருத்துக்களை, அவரது நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து நாளும், போழுதும் காத்திருந்து கண்கள் பூத்துப் போனதுதான் மிச்சம்....

ஒருவேள அவர் 'இலேகியமெல்லாம் மக்களுக்கே' என்பதைத்தான் இ'ள'க்கியமெல்லாம் மக்களுக்கே என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா அடிச்சிட்டாரோ?

அன்புடன் அண்ணாரின் வாத பிரதிவாதங்களை எதிர்நோக்கி,

அசுரன்

சத்குரு பற்றி ஒரு வெளி வராத ரகசியம்... - மறுபதிப்பு இனியவனின் தளத்திலிருந்து

ஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்ய ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்”
இவர்க்கு இன்னொரு பெயர் "கார்போரேட் சாமியார்"

இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந் துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்து மிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும்,சில நாட் களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில்....

கோவை மாநகரில், மாநகராட் சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத் தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும்,இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில் அனைத்து பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவித்திகிறார்கள்

சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும்‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகை யாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார். அதன் விவரம்:

1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களி லும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?

3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்?இதுவும் உண்மையா?

4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவதுபோல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது....

ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய - மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகை யாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல்லுபோல் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்துவேட்டாகி இவரின் மனைவி, மகளையும் இழந்தது தான் மிச்சம். இதுபோல பல மாவட்டங்களிலிருந்த 18வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன்னுடைய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?
நன்றி வினவு

நற்சிந்தனைகளை போதனை செய்பவன் முதலில் தான் யோக்கியனாக இருக்க வேண்டும்... இவனை நம்பி ஏமாறாதீர்கள்......

நன்றி இனியவன்





 

Saturday, February 25, 2012

வங்கிக் கொள்ளையன் மாட்டிக் கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்!!..

சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் போலி மோதலில் போலீசாரால் கொல்லப்பட்டது நமக்குத் தெரியும். வங்கிகளிலிருந்து லட்சக்கணக்கில் மொத்தமாக கொள்ளையடித்தவர்களுக்கு உடனடி தண்டனை வழங்கி போலீசார் தமது 'நீதிபரிபாலனத்தை' நிலைநாட்டியுள்ளனர். தமிழக போலீசின் இந்த 'அருஞ்சாதனை' நிகழ்ந்த காலத்தில்தான் நாமும் இங்கு வாழ்ந்தோம் என்பதே 'பெருமைக்குரிய' விசயம். ஆனால், சென்னை போலீசின் கடமை இத்துடன் முடிவடையவில்லை. இன்னுமொரு வங்கிக் கொள்ளையனின் 'கணக்கை' முடிக்க வேண்டிய பெரும்பொறுப்பு தற்போது அவர்கள் முன் காத்திருக்கிறது. அது வேறு யாருமல்ல, கில்மா காலேண்டர் புகழ் சாராய மல்லையாதான் அந்தக் கொள்ளையன்.


ஏற்கனவே என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள்

கொள்ளைக்காரன் மல்லையா - என்கவுன்டர் வெயிட்டிங் லிஸ்ட்

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் விமானப் பயணச் சேவை வழங்கி வரும் இந்த கொள்ளைக்காரன் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள மக்களின் பணத்திலிருந்து இது வரை ஆட்டையப்போட்டுள்ள தொகை 7000 கோடிகளுக்கும் மேல். இது தவிர கிங்பிஷர் ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் 44 லட்சம், வருமான வரி 422 கோடிகளையும் கொள்ளையடித்துள்ளான் இந்த கேடி பக்கிரி. கிங் பிஷர் ஊழியர்களின் வருமான வரி 42 கோடிகளையும் அரசுக்கு கட்டாமல் ஏப்பம் விட்டுள்ளான் இந்தக் கிரிமினல். 2011 இறுதியில் பணமில்லாமல் தொங்கிச் சரிந்தது கிங் பிஷர் நிறுவனம். உடனே கோடிக்கணக்கில் கொட்டி கைதூக்கி விட்டன இந்திய வங்கிகள். இந்த வகையில் SBI மட்டும் 1457 கோடி கடனாகவும், 180 கோடிகள் கிங் பிஷர் பங்குகளை(5.67% share - இதன் இன்றைய மதிப்பு வெறும் 76 கோடிகள்) துட்டு கொடுத்து வாங்கியதன் மூலமும் கொட்டியது (மொத்தம் 1650 கோடிகள்). இதே போல தனியார் வங்கியான ஐசிஐசிஐ 430 கோடிகள் கடனாகவும், 5.3% பங்குகளை துட்டு கொடுத்து வாங்கியும் உள்ளது. 
 
குதிரை குப்புறத் தள்ளியதோடல்லாமல் குழியும் பறித்த கதையாக, மொத்தத்தில் 19 வங்கிகள் மக்களின் சேமிப்பிலிருந்து பல்லாயிரம் கோடிகளை கடனாக கொடுத்துள்ளதுடன் அல்லாமல், நஷ்டத்தில் ஓடும் இந்நிறுவனத்தின் 23% பங்குகளையும் வாங்கியுள்ளன. 23% பங்குகளை வைத்துள்ள இவ்வங்கிகளின் கூட்டமைப்பு கிங்பிஷரின் செயல்பாடுகளை முறைப்படுத்தி அதனை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற முயற்சி செய்தனரா என்றால் இல்லை. காரணம் இந்நிறுவனம் ஒரு மூழ்கும் கப்பல் என்று தெரிந்தேதான் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொட்டியுள்ளனர். செப்டம்பர் 2011னில் கனடா நாட்டு நிறுவனமான வெரிடாஸ் கிங்பிஷரின் யோக்யதையை அம்பலப்படுத்தி அது ஒரு '420' நிறுவனம் என்று அறிவித்துள்ளது. இதோ இப்போது பிப்ரவரி 2012ல் மீண்டும் ஒருமுறை கடன் கொடுங்கள் அய்யா என்று கொள்ளையடிக்க கிளம்பியுள்ளான் மல்லையா. இப்படியாப்பட்ட நிறுவனத்துக்கு வங்கிகள் மீண்டும் கடன் கொடுத்து கை தூக்கிவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று சர்டிபிகேட் கொடுக்கிறது ரிசர்வ் வங்கி.

இன்றைக்கு 19 வங்கிகள் கிங் பிஷரில் கொட்டிய கோடிக்கணக்கான பணம் கணக்குப் புத்தகத்தில் மட்டும் இருக்கும் பணமாக மாறிவிட்டது(non performing asset). நிலைமை இப்படியிருக்கு இப்போது இன்னொரு முறை கிங்பிஷருக்கு 1500 கோடிகளை கொடுத்துள்ளது SBI. ஊர் பணத்தை எடுத்து உலையில் போடுவது போல, கவனிக்கவும்  நண்பர்களே,  SBIன் பிம்பிலிக்கிபியாப்பியான முதலீடுகளில் பெரும்பகுதி முதலீடு கிங் பிஷரில் இடப்பட்டதுதான். 
 
 
 
ஆஹ, நஸ்டம் என்னவோ கடன் கொடுத்த வங்கிகளுக்கும், குப்பைக்கூடைக்குக் கூட தகுதியில்லாத பங்குகளை கோடிக்கணக்கில் வாங்கிய பங்குதாரர்களுக்கும், கிங் பிஷர் ஊழியர்களுக்கும்தான், நம்ம சாராய மல்லையாவின் சொத்து மதிப்போ 22850 கோடிகளில் கும்மென்றுதான் உள்ளது. இந்த நாதாரிக்கு கடன் கொடுப்பதே ஒரு கிரிமினல் குற்றம் இதில் இவனது சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் கொடுப்பது என்றால் அப்படி ஒரு கடன் தேவையில்லை என்று சொல்கிறான் மல்லையா. 

கிங்பிஷர் மட்டுமல்ல, மல்லையாவின் பிற குடி-கூத்து நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து வங்கிகளுக்கு மொட்டையடித்துள்ள கடன் தொகை 14000 கோடிகள். டாடா, அம்பானி, மித்தல் போன்ற இப்படியாப்பட்ட மலைமுழுங்கித் திருடர்கள்தான் நாட்டின் பெருமைமிகு குடிமகன்களாக வலம் வருகிறார்கள். 

டாடா, அம்பானி, மல்லையாவுக்கு எப்போது?

பீஹாரில் ஒரு திருடரை(மல்லையாவுக்கே மரியாதை கொடுக்கும்  போது....) போலீசுக்காரன் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்று தண்டனை கொடுத்தான். நாட்டு மக்களின் சேமிப்பையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடித்து அந்தப் பணத்தில் 20 அடுக்கு மாட மாளிகைகள், ஹெலிகாப்டர்கள், உல்லாச விடுதிகள், கடலில் மிதக்கும் சொர்க்கம் போன்ற கப்பல்கள், கில்மா கூத்துகள் என உல்லாசமாக கோட்டமடிக்கும் மல்லையா, டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு இந்த தண்டனைகளை யார் கொடுப்பது?

இன்று காலை இந்து பத்திரிகையில் முதல் பக்கத்தில் ஒரு செய்தியறிக்கை சொல்கிறது, ஆந்திர விவசாயிகள் பலர் கடன் வழங்கிய நிறுவனங்கள் தமக்கு செய்த அவமானங்கள் பொறுக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று. 1.5 லட்சம் கடன் வாங்கிய குற்றத்திற்காக ஒரு தாய் வயிற்றுப் போக்கு வந்த தனது குழந்தையை மருத்துவரிடம் காட்ட அனுமதி மறுக்கப்பட்டாள். ஒரு லட்சம் கடனை திருப்பிச் செலுத்து இல்லையென்றால் உன் பிள்ளைகளை விபச்சாரத்திற்கு அனுப்பு என்று மிரட்டப்பட்டதை எதிர்க்க வழியின்றி தற்கொலை செய்து கொண்டாள் இன்னொரு தாய். 
 
இவர்களின் தற்கொலைகள் நாட்டு மக்களுக்கு சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான், 'எங்களுக்கு மானம் ரோசம் இருக்கு நாண்டு கொண்டோம். டாடா அம்பானி மல்லையா உள்ளிட்டவர்களின் முதலாளித்துவ கொள்ளைகளையும், எங்களது தற்கொலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மான ரோசம் இருக்கா? இருந்தால் 'தற்'கொலைகளின் சூத்திரங்களை தலைகீழாக மாற்றுங்கள்' என்பதுதான். மாற்றுவீர்களா?

அசுரன்

(நன்றி தி இந்து மற்றும் நம் கூகிள் உறவினர்கள் எல்லாம்....)
 

அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்!!

இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் ! 

தனியார்மயத்தின் தோல்வி: விமான முதலாளிகளின் வேலை நிறுத்தம்! 

 

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் !

இந்தியாவில் தனியார்மயம்! ஒரு ஊழலின் வரலாறு!!

 

 

 

ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்  

ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!

நானோ கார் : மலிவின் பயங்கரம் !

2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!

நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!  

ரூ 3,74,937 கோடி ஊழல்!

 

Tuesday, December 06, 2011

அகண்ட பாரதம் பேசும் ஆர் எஸ் எஸ் சொறிநாய்கள் முல்லைப் பெரியாறு என்றால் மூடிக் கொண்டு போவதேன்?


யப்பனை தரிசிக்கச் சென்ற தமிழக பக்தர்கள் கேரளாவில் தாக்கப்பட்டுள்ளார்கள். தாக்கியவர்களை தண்டிக்க ஐயப்பன் அவதாரம் எடுத்து வரவேண்டாம், குறைந்த பட்சம் இந்துக்களுக்கு, இந்து ராஜ்யம் காண அகண்ட பாரதம் பேசும் ஆர் எஸ் எஸ் அடிமடையர்களாவது குரல் கொடுத்திருக்க வேண்டாமா?கொடுக்கவில்லையே? ஏன்? இவர்களின் அகண்ட பாரதத்தில் தமிழர்களுக்கு இடமில்லையா? அல்லது கேரளாவில் தமிழர்களை தாக்கியதே ஆர் எஸ் எஸ் கோமாண்டிகள் என்பதால் வாயை மூடிக் கொண்டார்களா?

‘இந்து’ பக்தர்களை தாக்கியவர்களை எதிர்க்க வக்கற்ற இந்த சொறிநாய்கள் பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டு என்று ஆர்பாட்டம் செய்து கைதாகியுள்ளனர். ‘இந்து’ தமிழ் பக்தர்களின் வழிபடும் உரிமையை தடுத்ததை எதிர்க்க வக்கற்றவர்கள் சிரிரங்கம் பார்ப்பனர்களின் வர்ணாஸ்ரம் கொழுப்பேறிய கோயில் உலா சடங்கிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுகின்றனர். ஆக, ஆர் எஸ் எஸ்ன் அகண்ட பாரத கோமனத்தின் அடிமடி ஓட்டையிலே கேரள முல்லை பெரியாறு கிழிந்து தொங்குகிறது அதை மூடி மறைக்கக் கூட முயற்சி செய்யாமல் மதவெறி, சாதி வெறி பேசி வளம் வருகிறார்கள் சொறிநாய்கள்.

இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது. கேரளாவில் வாழும் தமிழர்களையோ அல்லது தமிழகத்தில் வாழும் கேரள மக்களையோ யாரும் தாக்கவில்லை. சாதாரண மக்கள் பல்வேறு சமூக நடவடிக்கைகளின் ஊடாக மொழி, இன, மத பேதமின்றி இயல்பாக பழகியே வருகிறார்கள். இவற்றை உடைத்து ஒரு மோதல் நடக்க வேண்டுமென்றால் அது அமைப்பு வழிப்பட்ட முறையினால் மட்டும்தான் நடக்க இயலும். அப்படித்தான் குஜராத்-ஒரிஸ்ஸா-மும்பை இனவெறி தாக்குதல்களாகட்டும், அல்லது காங்கிரசு நடத்திய பஞ்சாப் படுகொலைகளாகட்டும் நடந்துள்ளன.

அத்தகைய அமைப்புகளாக அங்கு மொழி வெறி கிளப்பி சதி வேலைகள் செய்வதில் முன்னணியில் இருப்பவர்கள் ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும், காங்கிரசும். இவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சி பி எம்மு மொழி வெறி கிளப்பி வருகிறது. தமக்கு வோட்டுப் பொறுக்க வசதியான கேரளாவில் மொழி வெறி கிளப்பி தமிழர்களை தாக்கும் இக்கட்சிகள், இங்கு தமிழர்களின் நலன் என்று ராமர் கோயிலையும், கூடங்குளம் அணு உலையையும் முன்னிறுத்தி ஏய்க்கின்றனர்.

மதவெறியும், சாதிவெறியும், மொழி வெறியும் தான் ஆர் எஸ் எஸ் போன்ற இக்கட்சிகளின் மூலமந்திரம். மக்களை பிரித்து ஏய்க்க இது போல தகிடு தத்தம் செய்யும் தேசிய கட்சிகளையும், மத வெறி பயங்கரவாதிகளையும் ஆப்படித்து அடித்து விரட்டினால் மட்டும்தான் முல்லை பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும். அதை செய்ய முதுகெலும்புள்ளவர்கள் அணி திரள வேண்டியுள்ளது.

அசுரன்

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று கேரள அரசு வழக்கறிஞர் அறிக்கை

Mullai Periyaru – Environmental impact of Dams and Kerals’s PR Machine

Friday, November 18, 2011

அப்பன் குதிருக்குள் இல்லை - ஆர் எஸ் எஸ்ன் சுய வாக்குமூலம்!!!

குண்டு வைத்து கலவரம் உருவாக்கி, நாட்டை கூறு போட்டு, மக்களை மோத விட்டு ரத்த ஆற்றில் அரசியல் ஆதாயம் தேட சதி செய்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் மாலேகான் உள்ளிட்ட பேர்வாதி குண்டு வெடிப்புகளை செய்தவர்கள் என்பது கடந்த சில ஆண்டுகளில் அம்பலமானது. எங்கே தன் பெயர் தான் கெட்டுவிட்டது, வழக்குகளிலிருந்தாவது தப்பிவிடுவோம் என்று பயந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்பு மாட்டிக் கொண்டவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொல்லி எஸ்கேப் ஆனது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆயினும் பிற்பாடு முதலில் சிவசேனாவும், பிறகு பாஜகவும், பிறகு ஆர் எஸ் எஸ்ம் ஒவ்வொருவாராக குண்டு வைத்தவர்களுக்கும், குண்டு வைக்கும் போது செத்தவர்களுக்கும் ஆதரவு(சம்பந்தமில்லை ஆனா ஆதரிப்போம் – இப்படி சொல்வதற்குப் பதில் ரெண்டு சட்டி #$#% சாப்பிடலாம்) தெரிவித்தனர்.

பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் முஸ்லீம் அமைப்புகளும் கூட தடை செய்யப்பட்டன. ஆனால் ஆர் எஸ் எஸ்ன் நேரடி தொடர்பு பல குண்டு வெடிப்புகள், சதிகளில் பல்வேறு ஆதரங்களுடனும், சுய வாக்குமூலங்களாவும் வெளி வந்துள்ளன என்ற போதும் இந்த பயங்கரவாத அமைப்பு இன்னும் தடை செய்யப்படவில்லை. இந்நிலையில், உண்மையான சதிகாரர்கள் (குண்டு வைத்த சுவாமி அசெமானந்தாவின் வாக்குமூலம்) இந்து பயங்கரவாதிகள் என்பதால் மலேகான் குண்டு வெடிப்பு நடந்தவுடனே வழக்கம் போல கைது செய்யப்பட்டு 5 வருடம் சிறையில் வைக்கப்பட்டிருந்த முஸ்லீம்களை இப்போது பெயிலில் விடுவித்தது நீதிமன்றம்.

நேற்று வரை குண்டு வைத்த இந்து பயங்கரவாதிகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறி வந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்போ இப்போது கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகளையும் வெளியே விடுங்கள் என்று சொல்கிறது. அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்வாங்களே அது மாதிரி இல்லை?

நல்லவன் எனில் என்ன செய்ய வேண்டும்? நாட்டுக்கு நேர்மையானவன் எனில் என்ன செய்ய வேண்டும்? மக்கள் மீது அன்புள்ளவன் எனில் என்ன செய்ய வேண்டும்? குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளவனை நொங்கை பிதுக்கி உண்மையை வரவைத்து தண்டனை கொடுங்கள் என்றுதானே சொல்ல வேண்டும்? ஆனால் ஆர் எஸ் எஸ் காவி சொறிநாய் என்ன சொல்கிறான் என்றால், குற்றம் செய்தவனையும் வெளியே விடு என்கிறான். உண்மையில் இவனை வெளியே விட்டு வைத்திருப்பதுதான் நாம் செய்கின்ற பெரிய தப்பாக போய்க்கொண்டிருக்கிறது.


அசுரன்

இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !

மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ஒரு ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதியின் கதை!!

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!

நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளே மற்றுமொரு நிரூபணம்!!

Related Posts with Thumbnails