TerrorisminFocus

Saturday, February 25, 2012

வங்கிக் கொள்ளையன் மாட்டிக் கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்!!..

சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் போலி மோதலில் போலீசாரால் கொல்லப்பட்டது நமக்குத் தெரியும். வங்கிகளிலிருந்து லட்சக்கணக்கில் மொத்தமாக கொள்ளையடித்தவர்களுக்கு உடனடி தண்டனை வழங்கி போலீசார் தமது 'நீதிபரிபாலனத்தை' நிலைநாட்டியுள்ளனர். தமிழக போலீசின் இந்த 'அருஞ்சாதனை' நிகழ்ந்த காலத்தில்தான் நாமும் இங்கு வாழ்ந்தோம் என்பதே 'பெருமைக்குரிய' விசயம். ஆனால், சென்னை போலீசின் கடமை இத்துடன் முடிவடையவில்லை. இன்னுமொரு வங்கிக் கொள்ளையனின் 'கணக்கை' முடிக்க வேண்டிய பெரும்பொறுப்பு தற்போது அவர்கள் முன் காத்திருக்கிறது. அது வேறு யாருமல்ல, கில்மா காலேண்டர் புகழ் சாராய மல்லையாதான் அந்தக் கொள்ளையன்.


ஏற்கனவே என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள்

கொள்ளைக்காரன் மல்லையா - என்கவுன்டர் வெயிட்டிங் லிஸ்ட்

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் விமானப் பயணச் சேவை வழங்கி வரும் இந்த கொள்ளைக்காரன் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள மக்களின் பணத்திலிருந்து இது வரை ஆட்டையப்போட்டுள்ள தொகை 7000 கோடிகளுக்கும் மேல். இது தவிர கிங்பிஷர் ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் 44 லட்சம், வருமான வரி 422 கோடிகளையும் கொள்ளையடித்துள்ளான் இந்த கேடி பக்கிரி. கிங் பிஷர் ஊழியர்களின் வருமான வரி 42 கோடிகளையும் அரசுக்கு கட்டாமல் ஏப்பம் விட்டுள்ளான் இந்தக் கிரிமினல். 2011 இறுதியில் பணமில்லாமல் தொங்கிச் சரிந்தது கிங் பிஷர் நிறுவனம். உடனே கோடிக்கணக்கில் கொட்டி கைதூக்கி விட்டன இந்திய வங்கிகள். இந்த வகையில் SBI மட்டும் 1457 கோடி கடனாகவும், 180 கோடிகள் கிங் பிஷர் பங்குகளை(5.67% share - இதன் இன்றைய மதிப்பு வெறும் 76 கோடிகள்) துட்டு கொடுத்து வாங்கியதன் மூலமும் கொட்டியது (மொத்தம் 1650 கோடிகள்). இதே போல தனியார் வங்கியான ஐசிஐசிஐ 430 கோடிகள் கடனாகவும், 5.3% பங்குகளை துட்டு கொடுத்து வாங்கியும் உள்ளது. 
 
குதிரை குப்புறத் தள்ளியதோடல்லாமல் குழியும் பறித்த கதையாக, மொத்தத்தில் 19 வங்கிகள் மக்களின் சேமிப்பிலிருந்து பல்லாயிரம் கோடிகளை கடனாக கொடுத்துள்ளதுடன் அல்லாமல், நஷ்டத்தில் ஓடும் இந்நிறுவனத்தின் 23% பங்குகளையும் வாங்கியுள்ளன. 23% பங்குகளை வைத்துள்ள இவ்வங்கிகளின் கூட்டமைப்பு கிங்பிஷரின் செயல்பாடுகளை முறைப்படுத்தி அதனை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற முயற்சி செய்தனரா என்றால் இல்லை. காரணம் இந்நிறுவனம் ஒரு மூழ்கும் கப்பல் என்று தெரிந்தேதான் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொட்டியுள்ளனர். செப்டம்பர் 2011னில் கனடா நாட்டு நிறுவனமான வெரிடாஸ் கிங்பிஷரின் யோக்யதையை அம்பலப்படுத்தி அது ஒரு '420' நிறுவனம் என்று அறிவித்துள்ளது. இதோ இப்போது பிப்ரவரி 2012ல் மீண்டும் ஒருமுறை கடன் கொடுங்கள் அய்யா என்று கொள்ளையடிக்க கிளம்பியுள்ளான் மல்லையா. இப்படியாப்பட்ட நிறுவனத்துக்கு வங்கிகள் மீண்டும் கடன் கொடுத்து கை தூக்கிவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று சர்டிபிகேட் கொடுக்கிறது ரிசர்வ் வங்கி.

இன்றைக்கு 19 வங்கிகள் கிங் பிஷரில் கொட்டிய கோடிக்கணக்கான பணம் கணக்குப் புத்தகத்தில் மட்டும் இருக்கும் பணமாக மாறிவிட்டது(non performing asset). நிலைமை இப்படியிருக்கு இப்போது இன்னொரு முறை கிங்பிஷருக்கு 1500 கோடிகளை கொடுத்துள்ளது SBI. ஊர் பணத்தை எடுத்து உலையில் போடுவது போல, கவனிக்கவும்  நண்பர்களே,  SBIன் பிம்பிலிக்கிபியாப்பியான முதலீடுகளில் பெரும்பகுதி முதலீடு கிங் பிஷரில் இடப்பட்டதுதான். 
 
 
 
ஆஹ, நஸ்டம் என்னவோ கடன் கொடுத்த வங்கிகளுக்கும், குப்பைக்கூடைக்குக் கூட தகுதியில்லாத பங்குகளை கோடிக்கணக்கில் வாங்கிய பங்குதாரர்களுக்கும், கிங் பிஷர் ஊழியர்களுக்கும்தான், நம்ம சாராய மல்லையாவின் சொத்து மதிப்போ 22850 கோடிகளில் கும்மென்றுதான் உள்ளது. இந்த நாதாரிக்கு கடன் கொடுப்பதே ஒரு கிரிமினல் குற்றம் இதில் இவனது சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் கொடுப்பது என்றால் அப்படி ஒரு கடன் தேவையில்லை என்று சொல்கிறான் மல்லையா. 

கிங்பிஷர் மட்டுமல்ல, மல்லையாவின் பிற குடி-கூத்து நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து வங்கிகளுக்கு மொட்டையடித்துள்ள கடன் தொகை 14000 கோடிகள். டாடா, அம்பானி, மித்தல் போன்ற இப்படியாப்பட்ட மலைமுழுங்கித் திருடர்கள்தான் நாட்டின் பெருமைமிகு குடிமகன்களாக வலம் வருகிறார்கள். 

டாடா, அம்பானி, மல்லையாவுக்கு எப்போது?

பீஹாரில் ஒரு திருடரை(மல்லையாவுக்கே மரியாதை கொடுக்கும்  போது....) போலீசுக்காரன் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்று தண்டனை கொடுத்தான். நாட்டு மக்களின் சேமிப்பையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடித்து அந்தப் பணத்தில் 20 அடுக்கு மாட மாளிகைகள், ஹெலிகாப்டர்கள், உல்லாச விடுதிகள், கடலில் மிதக்கும் சொர்க்கம் போன்ற கப்பல்கள், கில்மா கூத்துகள் என உல்லாசமாக கோட்டமடிக்கும் மல்லையா, டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு இந்த தண்டனைகளை யார் கொடுப்பது?

இன்று காலை இந்து பத்திரிகையில் முதல் பக்கத்தில் ஒரு செய்தியறிக்கை சொல்கிறது, ஆந்திர விவசாயிகள் பலர் கடன் வழங்கிய நிறுவனங்கள் தமக்கு செய்த அவமானங்கள் பொறுக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று. 1.5 லட்சம் கடன் வாங்கிய குற்றத்திற்காக ஒரு தாய் வயிற்றுப் போக்கு வந்த தனது குழந்தையை மருத்துவரிடம் காட்ட அனுமதி மறுக்கப்பட்டாள். ஒரு லட்சம் கடனை திருப்பிச் செலுத்து இல்லையென்றால் உன் பிள்ளைகளை விபச்சாரத்திற்கு அனுப்பு என்று மிரட்டப்பட்டதை எதிர்க்க வழியின்றி தற்கொலை செய்து கொண்டாள் இன்னொரு தாய். 
 
இவர்களின் தற்கொலைகள் நாட்டு மக்களுக்கு சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான், 'எங்களுக்கு மானம் ரோசம் இருக்கு நாண்டு கொண்டோம். டாடா அம்பானி மல்லையா உள்ளிட்டவர்களின் முதலாளித்துவ கொள்ளைகளையும், எங்களது தற்கொலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மான ரோசம் இருக்கா? இருந்தால் 'தற்'கொலைகளின் சூத்திரங்களை தலைகீழாக மாற்றுங்கள்' என்பதுதான். மாற்றுவீர்களா?

அசுரன்

(நன்றி தி இந்து மற்றும் நம் கூகிள் உறவினர்கள் எல்லாம்....)
 

அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்!!

இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் ! 

தனியார்மயத்தின் தோல்வி: விமான முதலாளிகளின் வேலை நிறுத்தம்! 

 

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் !

இந்தியாவில் தனியார்மயம்! ஒரு ஊழலின் வரலாறு!!

 

 

 

ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்  

ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!

நானோ கார் : மலிவின் பயங்கரம் !

2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!

நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!  

ரூ 3,74,937 கோடி ஊழல்!

 

1 பின்னூட்டங்கள்:

said...

நல்ல பதிவு தோழர். கண்டிப்பாக இது அனைவரையும் சென்றடைய வேண்டும்.

Related Posts with Thumbnails