TerrorisminFocus

Thursday, April 17, 2008

மீள் பதிவு: "அடிமை நாடும், போலி சுதந்திரமும்"

ந்த கட்டுரை அசுரனில் 2006-ல் பதியப்பட்டது. தற்போதைய சில அவதூறுகளுக்கு பதில் சொல்லும் முகமாகவும், புதிய வாசகர்களுக்கு ஏற்கனவே இங்கு பதியப்பெற்றவற்றை அறிமுகப்படுத்தும் விதமாகவும் மீள் பதியப்படுகிறது. முதல் பதிவு இங்கு உள்ளது. கட்டாயம் அங்கு சென்று படிக்கவும் சுவையான விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.
_____________________________________________________________
சுதந்திரமும் சூழ்ச்சியும்:

1947 - இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளையன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசமான கையாட்களிடம் அவன் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான மும்பை கடற்படை வீரர்களின் எழுச்சியும் தெலிங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டமும் நாடெங்கும் பற்றிப் படர்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும், அன்று காங்கிரசு - முஸ்லிம் லீக் தலைமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு புரட்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தன.

ஒரு மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, இந்தியாவைத் திரைமறைவிலிருந்து ஆட்டி வைக்கும் திட்டத்துடன், தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. இந்தப் போலி சுதந்திரத்திற்கு வயது 60.

இன்று, வாயளவில் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல், வெளிப்படையாகவே நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன ஏகாதிபத்திய வல்லரசுகள். தற்போது நம்மீது திணிக்கப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் உண்மையான பொருள் மறுகாலனியாதிக்கம் என்பதுதான். நமது நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், மக்களின் தேவையையோ நாட்டு நலனையோ கணக்கில் கொண்டு வகுக்கப்படுவதில்லை. மாறாக, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆணையைத்தான் எல்லா அரசாங்கங்களும் பணிவுடன் அமல்படுத்தி வருகின்றன.

இந்தக் கொள்கைகளால் இந்தியத் தரகு முதலாளிகளின் லாபம் விண்ணை முட்டுமளவு உயர்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ மரணக் குழிக்குள் சரிகிறது. இது தெரிந்தும் "இந்தியா ஒளிர்கிறது" என்று குதூகலிக்கிறார்கள் ஏகாதிபத்திய அடிமைகள். உலகையே தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் போர்வெறி பிடித்து அலையும் அமேரிக்க வல்லரசின் எடுபிடியாகவும் ஆசியப் பகுதிக்கான அடியாளாகவும் இந்தியா மாற்றப்பட்டு விட்டது. இந்த அடிமைகளோ, "இந்தியா வல்லரசாவதற்க்கு இதுதான் சிறந்த வழி" என்று குதூகலிக்கிறார்கள்.

இவர்கள் சுதந்திர உணர்வற்ற பிழைப்புவாதிகள், நாட்டுப்பற்றும் சுயமரியாதை உணர்வுமற்ற புழுக்கள் - ஆனால் படித்த புழுக்கள், "ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் எனப் படித்துப் பட்டம் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளாகி லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்; குடும்பத்தோடு அமேரிக்காவில் குடியேறலாம்; பன்னாட்டு முதலாளிகளுடன் சேர்ந்து கூட்டாக இந்தியாவைக் கொள்ளையிடலாம்" என்றெல்லாம் கனவு காணும் இத்தகைய அற்பர்கள்தான் மறுகாலனியாக்க அடிமைத்தனத்தை முன்னேற்றம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள்.

அன்று பகத்சிங் முதலான போராளிகள் நாட்டு விடுதலைக்காக தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த போது இத்தகைய மானமற்ற புழுக்கள் பிரிட்டிஷ் அரசின் பதவி நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். கலெக்டராக, ஜட்ஜாக, போலீசு அதிகாரியாக, அமைச்சராக, துரைமார்களுக்கு தொண்டூழியம் செய்யும் விசுவாசமான அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு வெள்ளைக்காரனின் நிர்வாகத்திறனை மெச்சி, அவன் ஆட்சி நீடிக்க வேண்டுமெனப் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கும் இன்றைக்கும் வேறென்ன வேறுபாடு? அதிகார நாற்காலியில் அந்நியன் நேரடியாக அமர்ந்திருந்தால்தான் காலனியாதிக்கமா? கல்லாவில் அமர்ந்திருந்தால்தான் கடைமுதலாளியா?

"பிரிட்டனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை நிற்க வேண்டுமென்றும், தன்னை மீறி வேறு அரசுகளுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் வெல்லெஸ்லியின் துணைப்படைக் கொள்கை அன்று இந்திய மன்னர்களை நிர்பந்தித்தது. இன்றைய அமேரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கரமிப்புப் போர்களுக்கேல்லாம் இந்திய இராணுவம் அடியாள் வேலை செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறது, இரானுடன் உறவைத் துண்டிக்குமாறு உத்தரவிடுகிறது, இந்திய அணு ஆயத உற்பத்திக்குத் தடை விதிக்கிறது.

அன்று டல்ஹவுஸியின் வாரிசிலிக் கொள்கை, வாரிசு இல்லாத மன்னர்களின் நாட்டை இணைத்துக் கொள்வதாகக் தொடங்கி, பின்னர் எல்லா சமஸ்தானங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதில் முடிந்தது. இன்றோ, 'நட்டமாகும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்' எனத் தொடங்கிய தனியார்மயக் கொள்கை, லாபமீட்டும் பொதுத்துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பசிக்கு விருந்தாக்க வேண்டும் என்று வளர்ந்திருக்கிறது.

அன்று ஜமீன்தாரி, ரயத்வாரி, மகல்வாரி முறைகள் மூலம் விவசாயிகளைப் பிழிந்து கஜனாவை நிரப்பியது பிரிட்டிஷ் அரசு. இன்று அரசுக் கொள்முதல் ரத்து, மானிய வெட்டு, தானியக் கொள்முதலில் அன்னியக் கம்பெனிகள், அதிலும் ஊகவணிகம், விவசாயிகளின் பாரம்பரிய விதைகளையே அன்னியன் உடைமையாக்குவது போன்ற சதிகள் மூலம் விவசாயியைக் கடனாளியாக்கி விவசாயத்தை விட்டே துரத்துகிறது அரசு.

அன்று கந்து வட்டிக்குக் கடன் பட்ட தமிழ்நாட்டின் விவசாயிகளை ஏமாற்றிக் கப்பலேற்றி, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் அவர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. இன்றோ கடன்பட்ட விவசாயிகளின் பிள்ளைகள், 'கொத்தடிமையாவோம்' என்று தெரிந்தே மலேசியாவுக்கு ஓடுகிறார்கள். பஹரைனில் தீக்கிரையாகி சவப்பெட்டியில் வீடு திரும்புகிறார்கள்.

எதுவும் பழங்கதையல்ல. கடந்த காலத்தின் காலனியாதிக்கக் கொடுமைகளைப் பூதக் கண்ணாடியால் பெருக்கிக் காட்டியதைப் போல இன்று நம் கண் முன்னே காட்சி தருகிறது மறுகாலனியாதிக்கம். இதற்கெதிராக நம்மைப் போராட தூண்டும் உந்துவிசையாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக, 200 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளையனுக்கு எதிராக வீரச்சமர் புரிந்திருக்கிறார்கள் தென்னகத்தின் வீரர்கள், தமிழகத்தின் வீரர்கள்!

விடுதலைப் போராட்ட வீர வரலாறு-ஒரு பார்வை:

1801 ஜூன் மாதம் திருச்சியிலிருந்து சின்ன மருது வெளியிட்ட பிரகடனம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. "இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே வெள்ளையர்களை விரட்டியடிக்க சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று திரளுமாறு" மக்களை அறை கூவி அழைக்கிறான் சின்ன மருது. இந்தியா ஒரு நாடு என்ற கருத்து அக்காலத்திய பேரரசர்களிடமே உருவாகியிராத போது துணைக் கண்டத்தின் விடுதலைக்கே குரல் கொடுத்த இந்த அறிக்கைதான் இந்தியாவின் முதல் விடுதலைப் போர்ப் பிரகடனம்.

1795-இல் வெள்ளையருக்கெதிராக திப்பு நடத்திய போரில் தொடங்கி, 1806-இல் வேலூர்க் கோட்டைச் சிறையில் சிப்பாய்கள் நடத்திய புரட்சி வரை நீடித்த இந்தப் போர்தான் இந்தியாவின் உண்மையான முதல் சுதந்திரப் போர். ஆனால் தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிப்பது, இசுலாமியர்களை புறக்கணிப்பது என்ற இந்து தேசியக் கண்ணோட்டத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பெருமைமிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

1799-இல் சீரங்கப்பட்டினம் கோட்டையின் வாசலில் ஒரு சாதரணப் போர்வீரனைப் போலப் போரிட்டு மடிந்தான் திப்பு சுல்தான். நிஜாமும், பேஷ்வாவும், ஆறுகாட்டு நவாபும் துரோகமிழைத்துவிட்ட நிலையில் தென்னிந்தியா முழுவதும் உள்ள விடுதலை வீரர்களுடன் கூட்டணி அமைத்தான். தீரன் சின்னமலை திப்புவுடன் நின்று வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரைக்கு சின்ன மருது பாதுகாப்பு கொடுத்தான். கும்பினியாட்சியை எதிர்த்து சின்ன மருது நடத்திய போருக்கு திப்பு ஆயுதமும் நிதி உதவியும் வழங்கினான்.

திப்பு சுல்தான் கேளிக்கைகளில் திளைத்திருந்த மன்னனுமல்ல, சின்ன மருது கிணற்றுத் தவளையை ஒத்த பாளையக்காரனுமல்ல; இருவரும் ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழி அறிந்தவர்கள். பிரெஞ்சுப் புரட்சியால் கவரப்பட்ட திப்பு தன்னை 'குடிமகன் திப்பு' என்றே அழைத்துக் கொண்டான். சின்ன மருதுவோ "ஏழை மக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ கும்பினியாரை எதிர்த்துப் போரிட வேண்டும்" என்று கூறி விடுதலைப் போருக்கு மக்களையும் அறைகூவி அழைத்தான்.

சின்னமலை, பூலித்தேவன், சின்ன மருது, வேலு நாச்சியார், ஒண்டிப்பகடை, சுந்தரலிங்கம், கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையத்தேவன் போன்றோர் தனித்தனியாகப் போராடி மடிந்த வீரர்கள் அல்ல. அவர்கள் தமக்குள் கூட்டிணைவுகளை உருவாக்கியிருந்தனர். நெல்லைக் கூட்டிணைவுக்கு கட்டபொம்மனும், திண்டுக்கல் கூட்டிணைவுக்கு கோபால நாயக்கரும், கன்னட நாட்டில் துந்தாஜியும், கேரளத்தில் கேரளவர்மனும், கோவையில் கானிஜகானும் தலைமை தாங்கினர். அனைவரும் இணைந்து உருவாக்கியிருந்த 'தீபகற்பக் கூட்டிணைவு' தனது ஆட்சிக்கே பேராபத்து என்று கும்பினிக்காரன் ஆஞ்சினான்.

1800-1801-ஆம் ஆண்டுகளில் மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்தப் போரில் சுமார் 30,000 வீரர்கள் தென்னிந்தியா முழுவதும் கும்பினியாட்சியை நிலைகுலைய வைத்திருக்கின்றனர். சாதி மத வேறுபாடுகளைக் கடந்து கிளர்ந்தெழுந்த இந்தப் போராட்டம் 1806-ஆம் ஆண்டு வேலூர் புரட்சியில் முடிவடைந்தது. இந்த விடுதலை வீரர்கள் காலனியாதிக்கத்தை ஒழிப்பதுடன் தம் கடமை முடிந்ததாகக் கருதவில்லை. கண்ணீரில்லாத மகிழ்ச்சியான வாழ்வை மக்கள் பெற வேண்டும் எனக் கனவு கண்டான் சின்ன மருது. பிரெஞ்சு புரட்சியால் கவரப்பட்ட திப்புவோ நாட்டைத் தொழில்மயமாக்கவும், மக்களுக்கு நல்வாழ்வு வழங்கவும் கனவு கண்டான். ஒரு சோசலிச இந்தியாவைப் படைக்க விழைந்தான் பகத்சிங்.

தூரோக வரலாறும் - தேர்தல் அரசியலும்:

அன்று அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்; இன்றோ அவர்களது கனவும் தோற்றுக் கொண்டிருக்கிறது. பகத்சிங்கின் மண்ணிலிருந்து ஒரு மண்புழுவாம் மன்மோகன் சிங்! மருதுவின் சிவகங்கை மண்ணிலிருந்து சிரழிவுவாதி சிதம்பரம்! வீரர்களின் மண்ணிலிருந்து தப்பிப் பிறந்துவிட்ட இந்த ஈனர்கள், கூசாமல் துரோகிகளின் மொழியில் பேசுகிறார்கள்.

சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட பின் சிவகங்கை அரியணையை கும்பினியாரிடமிருந்து பிச்சையாகப் பெற்ற கவுரி வல்லபத் தேவன், கர்னல் அக்னியூவின் காலில் விழுந்து வணங்கினான் என்கின்றன ஆவணங்கள். "200 ஆண்டுகள் எங்களுடன் வணிகம் செய்தீர்கள். மேலும் 200 ஆண்டுகள் வணிகம் செய்ய உங்களை அழைக்கிறோம்" என்று கூறி இன்றைய ஐரோப்பிய முதலாளிகளிடம் பல்லிளிக்கிறார் ப.சிதம்பரம்.

'கடவுளே' என்று கும்பினியாரை விளித்துக் கடிதம் எழுதிய துரோகி தொண்டைமான், சின்ன மருதுவை 'நாய்' என்று கடிந்து ஏசுகிறான். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங்கோ காலனியாட்சி செய்த நன்மைகளுக்காக பிரிட்டனுக்கு நன்றி கூறுகிறார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக போராடும் உண்மையான நாட்டுப்பற்றாளகளான நக்சல்பாரிகளை "இந்தியாவின் மிகப்பெரிய உள் நாட்டு அபாயம்" என்று கூறி ஒடுக்குவதற்கு திட்டம் தீட்டுகிறார்.

அன்று கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தது தொண்டைமானின் கூலிப்படை. இன்று கோலாவுக்கு எதிராக போராடும் அனைவரையும் ஒடுக்க நெல்லை மண்ணிலேயே எதிரிக்கு ஏவல் செய்கிறது தமிழக போலீசு. அன்று வெள்ளையனை எதிர்த்த விடுதலை வீரர்களைத் தன்னுடைய படைகளைக் கொண்டே ஒடுக்கினான் ஆற்காட்டு நவாப்; இன்று, ஜப்பானிய ஹோண்டா நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் தொழிலாளர்களை நரவேட்டையாடுகிறது அரியானா போலீசு.

மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க உறுதியெடுப்போம்:

முந்தைய காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடியது இந்த மறுகாலனியாதிக்கம். இதனை முன்னேற்றம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். பதவிக்கும் பவிசுக்கும் ஆசைப்பட்டு அன்று ஆங்கிலேயருக்குச் சேவகம் செய்தவர்களை 'ஈனப்பிறவிகள்' என்றான் சின்ன மருது. இன்று நாடே அன்னியனுக்கு அடிமையாகி வருவதை அறிந்தும் அமைதி காப்பதும், அலட்சியம் காட்டுவதும் கூட ஈனச் செயல்தான்.

விடுதலைப் போரில் முதல் குரல் எழுப்பிய தமிழகத்திலிருந்து இன்றைய மறுகலனியாக்க எதிர்ப்புப் போரும் துவங்கட்டும்! விடுதலைப் போராளிகளின் தியாக வரலாறு நம்மை முன்னோக்கிச் செலுத்தும் உந்து விசையாகட்டும்!

************

மேலே உள்ள கட்டுரை புதிய காற்று என்ற வலைப்பூவில் இருந்த ஒரு பதிவிலிருந்து மறுபதிப்பு செய்யப்படுகிறது.

*****

தொடர்புடைய பதிவுகள்:

The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh

Monday, April 14, 2008

பாரதியார், எஸ்.வி.ராஜதுரை மற்றும் சிலகேள்விகள்!!!

மார்க்சிய அறிஞர் என்றும் பெரியாரியல் மேதை என்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்றும் போற்றப்படும் எஸ்.வி.ராஜதுரையின் சொற்பொழிவு ஏப்ரல் 11 அன்று ரோஜா முத்தையா நூலகக் கட்டிடத்தில் நடைபெற்றது. தலைப்பு “ஃபுலே முதல் பெரியார் வரை: சுயமரியாதை ஏடுகள்”.

மகாத்மா புலே, அம்பேத்கர், பெரியார் ஆகிய மூவரும் ஆற்றிய தொண்டுகளை ஒப்பிட்டுப் பேசி வந்த எஸ்விஆர், சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசும்போது அக்காலகட்டத்தில் சாதிகுறித்து இம்மூவரைத் தவிர பிற அறிவுஜீவிகளின் கருத்து என்னவாக இருந்தது என்பதைத் தொட்டுச் செல்ல பாரதியை துணைக்கழைத்தார். இந்து பத்திரிக்கையில் ‘அரசியல் சீர்திருத்தங்களை விட சமூக சீர்திருத்தமே முதலில் செய்யப்பட வேண்டும்’ எனும் சங்கரன் நாயரின் கருத்தை ஆதரித்து பாரதி எழுதிய கடிதத்தைப் பற்றிக் குறிப்பிட்ட எஸ்விஆர், பாரதியிடம் வெளிப்பட்ட தடுமாற்றத்தையும் சரியாகவே குறிப்பிட்டார். ‘சங்கரன் நாயர் சொல்வது போல முதலில் செய்யப்பட வேண்டியது சமூக சீர்திருத்தமே. இதற்கு திலகர் வழிகாட்டி இருக்கிறார்’ என்று பாரதி எழுதிய கடிதத்தை சுட்டிக் காட்டிய எஸ்விஆர் ‘இங்குதான் நமக்குப் பிரச்சினை வருகிறது. ஒன்று சமூக சீர்திருத்தத்தை மட்டும் பேசி இருக்க வேண்டும். அல்லது திலகரை மட்டும் குறிப்பிட்டிருக்க வேண்டும். திலகர் சமூக சீர்திருத்தங்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் செயல்பட்டார்?” என்றும் பூலே,பெரியார் அம்பேத்கர் ஆகியோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பகவத்கீதையை பாரதியார் உயர்த்திப் பிடித்தார்’ என்றும் எஸ்விஆர் ஒப்பிட்டுப் பாரதியின் வர்ணாசிரம ஆதரவுப் போக்கை இலேசாக சுட்டிக் காட்டினார்.

இதை எல்லாம் சொல்வதற்கு முன், பீடிகையாக பாரதியார் இந்துவுக்கு எழுதிய கடிதங்களைத் தேடி எடுத்த ஆ.ரா. வெங்கடாசலபதியைக் கருத்தில் கொண்டு ‘இந்த இளம் முனைவர் ஆரம்பகட்டத்தில் பாரதியார் பிரெஞ்சு இந்தியாவில் இருந்து வெளியேறி பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் வருவதற்காக அழாத குறையாக தெண்டனிட்டு கவர்னருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தைத் தேடி எடுத்தவர். அப்போது பாரதி எதுவுமே செய்யாமல் புதுவையில் முடங்கிக் கிடப்பதற்குப் பதில் எழுதிக் கொடுத்து விட்டு இந்தியாவிற்கு வந்து இயங்கலாமே எனும் உணர்வில் அப்படி செய்திருக்கக் கூடும். மேலும் அவர் அந்தக் காலகட்டத்தின் குழந்தை. இந்தக் கடிதத்தின் மூலம் அவரை மலினப்படுத்தக் கூடாது. அவருடைய அரசியல் மீது எனக்கு விமர்சனங்கள் இருப்பினும் தமிழின் நவீனப் போக்குகளுக்கு பாரதி வற்றாத ஊற்றுக்கண்.” என்றெல்லாம் சலபதியிடம் சொன்னதாக அறிஞர் தனது சொற்பொழிவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அறிஞர் எஸ்விஆர், ஆய்வு என்பது எவ்வாறு காய்தல் உவத்தலின்றி இருக்கவேண்டும் என்றும் அறம் போதித்தார். “பாரதி ஆய்வாளர்கள் கூட பாரதியை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்திருக்கும் இரண்டு நூல்களையும் படித்து விட்டுத்தான் ஆய்வு முடிவுக்கு வரவேண்டும். அதில் ஒரு நூல் பாரதியை ஆர்.எஸ்.எஸ். இயக்க முன்னோடி என்று கூடக் கடுமையாக விமர்சித்திருந்தது. அந்த இரண்டு நூல்களின் ஆசிரியர்களில் ஒருவர் இங்கு வந்திருக்கிறார்” என்று நான்கைந்து முறை அந்த ‘இரண்டு நூல்’களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த அறிஞரோ சொற்பொழிவின் இறுதி வரை நூல்களின் பெயரைச் சொல்லவில்லை. சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தவர்களில் நாம் அந்த ஒருவரைத் தேடினோம். பாரதிய ஜனதாப் பார்ட்டி எழுதிய மதிமாறன் வரவில்லை. பாரதிபக்தர்களின் கள்ளமவுனம் நூலின் ஆசிரியர்களில் ஒருவரான மருதய்யன் எங்காவது ஒளிந்திருக்கிறாரா என்று தேடும் அளவிற்குக் கூட்டமும் அதிகமில்லை. அறிஞரையும் சேர்த்து 31 பேர்கள்தான் இருப்பர். ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ ஆசிரியர் வாலாசா வல்லவன் முதல்வரிசையில் அமர்ந்திருந்தது, கொஞ்ச நேரம் கழித்த பிறகுதான் தெரிந்தது.

கேள்வி நேரத்தின்போது ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார். “நீங்கள் சொன்னீர்களே மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பாரதி எதையாவது உருப்படியாகச் செய்யலாமேன்னு. பாரதி மன்னிப்புக் கடிதம் கொடுத்திட்டு வந்த பிறகு புரட்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லையே? கடலூர் சிறையில் இருந்து வந்தபிறகு அவர் செய்த காரியம் என்னவென்றால் எட்டப்ப மகாராஜாவிடம் தூது விட்டு ‘தங்கள் குலவம்ச வரலாற்றை சிறப்பாக எழுதித்தருகிறேன்’ என்றுதானே செயல்பட்டிருக்கிறார்” என்றார். எஸ்விஆர் இடைமறித்து “பாரதி, அரசியல்வாதி அல்ல. அவர் கவிஞர். அவர் கடுமையான வறுமையில் வாடியவர் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். இளமையிலும் சரி பின்னாளிலும் சரி அவர் புரட்சி ஏதும் செய்ததில்லை” என்றார். “இரண்டு நூல்கள் என்று சொன்னீர்களே! அதன் பெயரைக் கூறலாமே?” என்றதும் “அதுதான் பாரதிய ஜனதா பார்ட்டி..இன்னொன்னு வாலஜா வல்லவனோடது’ என்று குறிப்பிட்டார். (இத்தனைக்கும் மதிமாறனின் கட்டுரைத்தொடர் வெளிவந்த தலித்முரசுவிலே அக்கட்டுரைக்கு பக்கத்திலேயே எஸ்விஆர் கட்டுரைகளும் வெளிவந்தன. பெயரைக் குறிப்பிடாமலே இருக்கும் அளவிற்கு அந்த நூல், ‘அறிஞரை’ ரொம்பவே படுத்தி இருக்கிறது போல)

இன்னொருவர் எழுந்து நின்று “அப்படின்னா நீங்க சுஜாதாவை ஆதரிக்கிறீர்களா? ஏனென்றால் பாரதி,சுஜாதா இந்த ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. இரண்டு பேரும் செத்துப்போவதற்குக் கொஞ்சக்காலம் முன்பு பார்ப்பனர் சங்கத்தின் மாநாடு,பொதுக்கூட்டங்களில் போய்க்கலந்து கொண்டு சாதிப் பற்றாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டனர்” என்றார். இந்த விவாதம் இப்படிப்போனதுமே எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் கீழ் ‘புரட்சிகர’ நாடகங்களை நடத்தி வரும் அ.மங்கை ‘பாரதியும் சுஜாதாவும் ஒன்னா? ரெண்டு பேரும் வாழ்ந்த காலகட்டமும் ஒன்னா?’ என்று சாமியாட முனைந்தார்.

அறிஞர் ‘நான் சுஜாதாவை ஆதரிக்கலை’ என்றார். காலகட்டம் பற்றிய அ.மங்கையின் கேள்விக்குக் கூட்டத்தில் இருந்து கேள்வி கேட்ட முதல் நண்பர் “அவர்கள் வாழ்ந்த காலகட்டம் புரட்சிக்கு இளைஞர்கள் கிளர்ந்தெழுந்த கால கட்டம். ஜாலியன் வாலபாக் படுகொலையில் மக்கள் கொதித்தெழுந்த நேரம். அந்த நேரத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு ஒன்றுமே செயல்படாமல் பார்ப்பன சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்தானே பாரதி. தம்மிடம் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து கொள்ள முயற்சித்து வெற்றி காண்பவர்கள்தான் கதாநாயகர்களாக இருக்க முடியும். முரண்பாடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள் நிறைய பேர் அக்காலகட்டத்தில் இருந்தார்கள். நீங்கள் சொல்வது போல் பார்த்தால் அவர்கள் அனைவருமே கதாநாயகர்கள்தான். காலகட்டம் கோருவதை நிறைவு செய்ய முடிந்தவர்கள்தான் கதாநாயகர்களாக முடியும். பாரதியைக் கதாநாயகனாக முன்னிறுத்துவதால்தான் பிரச்சினை. ஒரு பெரியாரிஸ்டாக, மார்க்சிய லெனினியத்தைப் படித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்துகொண்டு பாரதியை எப்படி ரசிக்க முடிகிறது?” என்று எஸ்விஆரிடம் கேள்வி எழுப்பினார்.

எஸ்விஆர் இதற்கு சரியான பதிலைக் கூறாமல் “இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற கவிஞர் அவர். அவர் காலகட்டத்தின் குழந்தை. நவீன தமிழ் அவரிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது. அதை மதிக்கிறேன்.” என்று சொல்லி நழுவிக் கொண்டார்.

இப்படி பாரதியாரை கவிஞர் என்று மட்டுமே ரசிக்கப் பழகியவர், இதற்கடுத்த கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் ‘பாரதிதாசன், சாதி உணர்வாளர்தான். அவர் தன் சொந்த சாதியில்தான் குடும்பத்தினருக்குக் கல்யாணம் செய்துவித்தார்’ என்று அறிஞர் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தார். பாரதியின் அரசியலைக் குறித்துக் கேள்வி கேட்டால் அவரின் கவிதையை சிலாகித்துக் கொள்ளும் அறிஞர், பாரதிதாசனை மட்டும் ஏன் கவிதைக்கு வெளியில் நின்று விமர்சிக்கிறார் என்பது நமக்குப் புரியவில்லை.

அன்று கேள்வி நேரம் முடிந்துவிட்டாலும் அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் பல இன்னும் மிச்சம் உள்ளன.

1) பெரியார் சமதர்மம் போன்று தலையணை தடிமனுக்குப் புத்தகம் எழுதும் பெரியாரியல் அறிஞர், பாரதி பற்றிய பெரியாரின் கருத்து என்ன என்பதை ஏன் பேசுவதில்லை?

2) பெரியாரைப் பின்பற்றும் அமைப்பினர், மரபாக பாரதியை அவனுடைய பார்ப்பன சார்பைக் காரணமாக்கி ஒதுக்கி வைத்துப் பாரதிதாசனை உயர்த்திப் பிடித்து வருவது அறிஞருக்குத் தெரியுமா? பெரியார் ஆய்வு மையத்தில் இருந்து கொண்டே பாரதிதாசனைத் திட்டிக் கொண்டும் பாரதியை உயர்த்திப் பிடிப்பதும் பெரியாரியல் சிந்தனையா? அந்தக் கருத்துக்களை திரிக்கும் செயல் இல்லையா?

3) பாரதிக்கு அடுத்து தமிழுக்கு தொண்டாற்றியவர் சுஜாதாதான் என்கிறார்களே? வெறுமனே தமிழை, இலக்கியத்தை மட்டும் ரசிப்பவர் எஸ்விஆர் என்றால் சுஜாதாவை மட்டும் உதறித் தள்ளுவது ஏன்?

4) பல இசங்களைக் கரைத்துக் குடித்து விட்டு இப்போதைக்கு பெரியாரியலை ஒருவழி பண்ணிக் கொண்டிருக்கும் எஸ்விஆர், நீதிக்கட்சியைப் பற்றிய பாரதியின் கருத்து பற்றி என்ன கருதுகிறார்? (‘இன்றைக்கு நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் என்பார்கள். . .. இப்படியே போனால் நாளைக்கு காக்கை குருவிகள் கூட நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் எனக் கூறி உரிமை கோருவார்கள்’ என்று பாரதி நீதிக்கட்சியின் கொள்கையை நக்கல் செய்து எழுதினார்.)

5) போகிறபோக்கில் ஒரு மனிதனுடைய சாரம் கடைசிக்காலத்தில் இல்லை என்ற எஸ்விஆரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்காக பெரியாரையும் மாவோவையும் கடைசிக்காலத்தில் தங்களது கொள்கைகளின்பால் நம்பிக்கையற்றுத் தனிமையில் புலம்பியதாக அவதூறு செய்ததுதான் எஸ்விஆரின் அரசியலற்றவாதத்தின் அற்பத்தனம்தானே? ஒரு வாதத்திற்காக எஸ்விஆர் சொல்வது உண்மை என்றால் கூட ‘கராறான கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது’ என்ற எஸ்விஆரின் பிழைப்புவாதக் கண்ணோட்டம்தானே நியாயப்படுத்தப்படுகிறது? விமர்சனம் என்று சொல்லவந்தால் நேர்மையாக பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலை.யில் இருந்து பெரியாரை விமர்சித்து விட்டு ராஜினாமா செய்ய வேண்டியதுதானே?


பாரதியை பாரதிக்குள் நின்று ஆய்வு செய்வதை விட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அறிவுஜீவிகளிடம் இருந்து தொடங்கலாம். ஜாலியன்வாலாபாக்கிற்கு கள்ளமவுனம் சாதித்த பாரதி, ஒருவேளை வசதிவாய்ப்புகள் பெற்ற நபராக இருந்திருந்தால், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கோ, ஃபோர்டு பவுண்டேசனுக்கோ தன்னுடைய கவிதைப்படைப்பைக் காணிக்கையாக்கி இருப்பார். தில்லைவாழ் அந்தணர்களுக்கு ஆதரவாக ஆரிய சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு பராசக்தியையும் அழைத்திருப்பார், பாரதி. தீட்சிதர்களோடு நின்று மீசைக்கும் வெண்ணெய் தடவிப் போரிட்டிருப்பார். சோ ராமசாமிக்கும் அர்ஜூன் சம்பத்திற்கும் வேலை குறைந்திருக்கும்.

எஸ்விஆருக்கோ அல்லது அறிவு ஜீவிகளுக்கோ தம்முடைய படைப்பிற்கு நேர்மையாகத் தாம் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தைக் காலம் என்றென்றைக்கும் கோருகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருக்கவேண்டும் என்பது சாதாரண மனிதர்களுக்கே பொருந்தும்போது பூஜ்யங்களுக்குத் தலைமை வகிக்கும் இவர்களுக்கோ செயலில் மாத்திரம் பிற்போக்கு அவசியமாகிறது. அதுதான் அவர்களது சாரமும் கூட. சமூகம் இப்படித்தான் எல்லோரையும் மதிப்பிடுகிறது. கள்ளுண்ணாமைக்குத் தனி அதிகாரம் எழுதிய வள்ளுவர் எழுதிய களைப்புத் தீர கள்ளருந்தினார் என்று ஒருக்கால் கூறினால் அதனை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? தன்னார்வக்குழுக்களிடம் தாங்கள் சோரம் போன வரலாற்றின் காலகட்டத்தை இப்படித்தான் நியாயப்படுத்துகிறார்கள், இன்றைய அறிவுஜீவிகள். இவர்களுக்கு வகைமாதிரி பாரதி.

பாரதியின் கவிதைகளை ரசிப்பதாகச் சொல்லும் எஸ்விஆர், மகாபாரதத்தினையும் ரசித்தாக வேண்டும். கம்பராமாயணத்தை ரசிக்கத் தெரிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ராமர் பாலப் பிரச்சினையில் மூடநம்பிக்கைக்கெதிராக அதாவது ராமாயணத்துக்கு எதிராகப் போராடுவதை எப்படி வேறு வேறாகக் கருதினார்களோ அப்படித்தான் எஸ்விஆர் பாரதியையும் ரசிக்கிறார். பெரியாரையும் ரசிக்கிறார்.

ஆதிக்க சாதியில் பிறந்து முற்போக்கை அதாவது பரந்துபட்ட மக்களின் விடுதலையை தங்களுடைய extra-curricular activity ஆகப் பார்க்கப் பழகிய அறிவுஜீவிகளுக்கு தத்துவமோ, கட்சியோ கட்டுப்பாடுகள் போலத்தான் தெரிகிறது. இது பாரதியிடமும் இருந்தது. அறிவுஜீவிகளாக மாறி இருந்தாலும், ஆதிக்க சாதிக்கோ, தன்னை உயர்சாதிக்காரன் போலக் காட்டிக் கொள்ளுவதில் அகவிருப்பம், தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சொந்த சாதியின் ஆதிக்கத்திற்கு எதிராக, அரசியல், பண்பாட்டு, கலாச்சாரத் துறைகளில் போராடுவதன் மூலமாகத்தான் உண்மையான கம்யூனிஸ்ட்கள் தங்களைப் புடம்போடுகிறார்கள். அதற்குக் கட்சியும் தத்துவமும் உதவுகின்றன. கட்சி சார்பற்ற அறிவுஜீவிகளுக்கோ தாங்கள் நிலை தடுமாறிய தருணங்களை நியாயப்படுத்தச் சொல்கிறது. அதுதான் பாரதியின் அவலத்தை அவனைக் கண்டுகொள்ளாத சமூகத்தைப் பழிக்கச் சொல்கிறது. அதுதான், தான் போர்டு பவுண்டேசன் முன்னாலும் எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னாலும் கைகட்டி நிற்க நேர்ந்த தருணத்திற்காக சமூகத்தைப் பழிக்கிறது.

எஸ்விஆர், பாரதி, புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்காததற்கான காரணமாக வறுமையை சுட்டிக்காட்டுகிறார். வறுமையிலோ அல்லது இக்கட்டான தருணங்களிலோதான் மனிதனின் சாரமான குணம் வெளிப்படுகிறது.
இன்றைக்கும் அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு இந்துத்துவா, மற்றும் வலதுசாரிகளுக்குத்தான் வறுமையின்மை முன்நிபந்தனையாகிறது. ஆனால் மா-லெ இயக்கங்களுக்கோ இது ஒரு பொருட்டல்ல. வறுமையின்மைதான் பாரதியின் முன்நிபந்தனை என்றால், அதை ஆர்.எஸ்.எஸ். மட்டும் தான் நிறைவு செய்ய முடியும். இல.கணேசனும், ராம.கோபாலனும் பாரதி இலக்கியத்தின் உள்ளடக்கத்தை ரசிப்பதன் மூலம் தங்களது அகண்டபாரதக் கனவிற்கு பாரதியைத் துணைக்கு அழைப்பது, பாரதி அன்பர்களுக்கு கண்ணில் பட்ட முள்ளாக உறுத்துவதே இல்லை.


பாரதியின் அன்பர்கள் உதிர்ந்து கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவ இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள். இவர்களுக்கு முன்னோடிகள், 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சினிமாவில் ‘பா’வரிசைப் படங்களைத் தந்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆம், கடந்த காலம் அற்பவாதிகளுக்குச் சொந்தமானது (நன்றி-கார்ல்மார்க்ஸ்).

நன்றி: இமெயிலில் மருதன்

Thursday, April 10, 2008

புனித பிம்பங்கள்!! நல்லொழுக்க ஆதீனங்கள்!!! ஆனந்த விகடன்கள்!!!

திபெத் பிரச்சினையை ஒட்டி மிகப் பெரும்பாலனவர்கள் தமது புனிதத் தன்மையை விளம்பரப்படுத்திக் கொண்டனர். தமது அரசியல் அரிப்பை சொறிந்து கொண்டனர். பொதுவாகவே ஒடுக்குமுறைகள், காட்டுமிராண்டித்தனங்களுக்கு எதிராக தமது தார்மீக கோபத்தை எப்போதுமே வெளிப்படுத்துபவர்களை இங்கு நான் குறிப்பிடவில்லை. அது போன்றவர்கள் கணக்கில் காஸ்மீரும், ஈராக்கும், வடகிழக்கும், ஈழமும், பாலஸ்தீனமும், திபெத்தும் ஒன்றுதான். மாறாக, திபெத் பிரச்சினை அது சீனாவுடன் சம்பந்தப்பட்டது என்ற ஒரே காரணத்தால் தமது புனிதத்தன்மையெனும் போர்வையில் நல்லொழுக்க ஆதினங்கள் செய்த அரசியல் சித்து விளையாட்டுகளையே இங்கு குறிப்பிடுகிறேன். உடனே சீனாவுக்கு நாம் வக்காலத்து வாங்குவதாக யாரேனும் குறிப்பிட விரும்பினால் மன்னிக்கவும், சீனா என்ற பிற்போக்கு ஜனநாயக விரோத அரசுக்கு பட்டு குஞ்சலம் கட்டும் வரலாற்று கடமை எமதுடையது அல்ல. அந்த வேலையையும் கூட அதே நல்லொழுக்க ஆதினங்கள்தான் செய்து வருகின்றன.

ஆனந்த விகடனின் போலி வீரவேசமும், கேலிக்கூத்தான தார்மீக கோபமும்!!!:
குறிப்பாக - ஒரு வகை மாதிரியாக(prototype) - ஆனந்த விகடனை எடுத்துக் கொள்வோம். ஆனந்த விகடன் மட்டுமல்லாமல் அகில இந்திய RSS பத்திரிகையான டைம்ஸ் ஆப்பு இந்தியா(ஆப்பு இந்தியாவுக்கு) வும் இதுதான் சாக்கு என்று வளைத்து வளைத்து எழுதியிருந்தது. பல்வேறு பத்திரிகைகளும் அவ்வாறே செய்திருந்தன. ஆனந்த விகடனில் பா. ராகவன் என்பவர் எந்தவொரு தர்க்கமும் இல்லாமல், தரவும் இல்லாமல் வெறுமே திபெத் ஒடுக்குமுறையின் உணர்வுப் பூர்வமான பொது புரிதலின் பலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனை படித்தவுடன் மனதில் எழுந்த கேள்வி ஒன்றேயொன்றுதான் இந்தளவுக்கு நல்லொழுக்க சீலரான ஆனந்த விகடன் இதே வாரத்தில் இங்கு சிதம்பரத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து ஒரு துண்டு செய்தி கூட எழுதவில்லையே என்ன அதிசயம் என்பதுதான்.

இவர்கள் கடந்த காலத்திலும் கூட தமது நல்லொழுக்கத்தை செலக்டிவாகவே காட்டியுள்ளனர். அகில உலகமே CPM பாசிஸ்டுகளை காறி உமிழ்ந்த நந்திகிராம் குறித்து இவர்கள் எவனும் இப்படி டே-டு-டே கவர் ஸ்டோரி எழுதவில்லை. இன்று வரை ஒரு பரபரப்பு சினிமாவுக்கு இணையாக நடந்தேறிவரும் ஒரிஸ்ஸாவின் கலிங்காநகர் போராட்டம் பற்றி இந்த நாய்களின் எவனும் மூச்சு கூட விட்டதில்லை. சட்டீஸ்கர அரசை குறிப்பாக சல்வாஜுதம் அமைப்பு எந்தளவுக்கு மக்கள் விரோதமானது என்று போன வாரம் உச்ச நீதிமன்றம் கண்டிக்கும் அளவு இருக்கும் பேயாட்சி சூழல் குறித்து மனித உரிமை போராளியான பினாயக் சென் கைது செய்யப்பட்டு எந்த முகாந்திரமும் இன்றி பினை மறுக்கப்பட்டுள்ள நிலையிலும் இவர்கள் எவனும் எதுவும் எழுதவில்லை. சட்டீஸ்கரில் கிராமப்புறங்களை எரித்து தீக்கிரையாக்கி மக்களை வலுக்கட்டாயமாக முகாம்களில் அடைத்து வைத்துள்ளது குறித்து இவன்கள் எவனும் எந்த காலத்திலும் எழுதப் போவதில்லை. குஜராத் கலவரத்தின் போதும் சரி அதனை தெஹல்கா விரிவாக அம்பலப்படுத்திய போதும் சரி இவர்கள் எல்லாம் எந்த நல்லொழுக்கத்தை பற்றி ஒழுகிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. திபெத்தின் மீது சீனா செய்து வரும் ஆக்கிரமிப்பு குறித்து மனிதாபிமான அங்கலாய்ப்புகளை கடை விரிக்கும் இந்த நாகரிக கோமான்கள் இந்தியாவையே ஆக்கிரமித்து வருசத்துக்கு 17000 விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளி உணவு பஞ்சத்தின் விளிம்பில் நிறுத்தியுள்ள உள்நாட்டு யுத்தத்தை ஒத்த நிலை குறித்து எழுத தமது பேனாவின் ஒரு சொட்டு மையைக் கூட இவர்கள் செலவழித்ததில்லை. அதை விடுங்கள் ஈழத்தில் நடக்கும் யுத்தத்திற்க்கு சிரிலங்காவிற்க்கு ராணூவ ரீதியாக எல்லாவகை உதவிகளும் செய்வதுடன் ஈழத் தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள இந்திய தரகு அதிகார பார்ப்பன அரசு குறித்து மூச்சு கூட விடுவதில்லை இந்த மேன் மக்கள்.

தற்போதைய திபெத் பிரச்சினை போன்ற தருணங்களில் ஜனநாயகம், மனிதாபிமானம், நியாயம், தர்மம், அஹிம்சை என்று பெரிய நன்னூல்கள் போல பிரசங்கம் செய்து போலி ஆவேசங்களையும் தார்மீக பலத்தின்பாற்ப்பட்ட சாபங்களையும் கண்டனங்களையும் எழுதும் இவர்களின் தலையங்கங்கள் உண்மையிலேயே இந்த சொல்லாடல்களின் நடைமுறைக்கு ஆபத்து நிகழ்ந்து கொண்டிக்கும் போது பதுங்கி பம்மி வேறதாவது அலப்பத்தனமான உளறல்களில் முங்கி முத்தெடுக்கின்றன. ரஜினி வீட்டிலும், விஜய் வீட்டிலும் புல் புடுங்கிக் கொண்டிருக்கின்றன.

அட இவர்களின் இந்த செலக்டிவ் புத்தி உள்நாட்டு விவகாரங்களில்தான் என்று பார்த்தால் வெளிநாட்டு விசயங்களிலும் இவர்கள் அப்படியே. லெபனான் மீது மிக சமீபத்தில் மிகக் கோடூரமானதொரு யுத்தத்தை - எந்தவொரு தரக்க நியாயமுமற்ற யுத்தத்தை - இஸ்ரேல் தொடுத்து பேரழிவை உண்டாக்கி தோல்வியடைந்து ஓடியது இந்த கனவான்களின் மனதை கலக்கியதேயில்லை.

இதே திபெத் பிரச்சினை நடக்கும் சமகாலத்தில்தான் ஈராக்கில் யுத்தம் வேறெந்த காலத்தையும் விட தீவிரமடைந்துள்ளது குறித்தும், நாளும் அமெரிக்காவினால் ஈராக் மக்கள் படுகொலை செய்யப்படுவதும், கொத்து கொத்தாக மனிதர்கள் சாகடிக்கப்படுவதுமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதும் பற்றி செய்திகள் வருகின்றன. குறிப்பாக திபெத் பிரச்சினை வரும் அதே சர்வதேச செய்திகள் பக்கத்திலும், மையப் பகுதிகளிலும் இது குறித்து செய்திகள் வருகின்றன(செய்திகள் மட்டுமே அதன் மீதான தார்மீக கோபத்தின் வெளிப்பாடாக அமைந்த கருத்து கட்டுரைகள் அல்ல). அமெரிக்க எனும் ஒரு நாடு வெறும் பொய்களின் அடிப்படையில் ஈராக் என்னும் ஒரு நாட்டை ஒரு இருபது வருடங்கள் தொடர் யுத்ததில் சிதறடித்து வரலாறு இது வரை கண்டிராத மிக கோழைத்தனமானொதொரு யுத்தத்தின் மூலம் தனக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத ஒரு நாட்டில், தனது அவதூறுகள் அனைத்தும் பொய் என்று அப்பட்டமாக நிரூபணம் ஆகிய பிறகும் மிகத் தைரியமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன், ஒரு முழுமையான யுத்தத்தை தொடுத்து வருவது குறித்து இந்த நன்னூல்கள் யாரும் வாய் தவறி கூட பேசுவது இல்லை. இந்த உலகமாகா அயோக்கியத்தனத்திற்க்கு உரை போடக் காணாது திபெத்தில் சீனாவின் அட்டுழியம். ஆயினும் இந்த அன்பர்கள் யாரும் அமெரிக்க தூதரகத்திற்கு முன்போ அல்லது அகில இந்திய அளவிலோ அல்லது அகில உலக அளவிலோ அமெரிக்காவின் இந்த அயோக்கியத்தனத்திற்க்கு எதிரான நடைபெறும் மக்களின் இயல்பான தன்மான உணர்ச்சியின் பாற்பட்ட ஆவேச போராட்டங்கள் குறித்து எழுதுவதில்லை.

ஏனேனில் திபெத்தோ அல்லது ஈராக்கோ அல்லது காஸ்மீரோ இவர்களை உந்தித் தள்ளுவதெல்லாம் இவர்களின் அரசியல்-பொருளாதார நலன்கள்தானேயன்றி பரந்துபட்ட மக்கள் நலன்களல்ல, உண்மையான நல்லொழுக்க கருத்துக்கள் அல்ல, மக்களின் மீதான காதல் அல்ல, மனித குலத்தின் மீதான அன்பு அல்ல. இவர்களின் இந்த அரசியல் கழிசடைத்தனத்தை, அரசியல் மலச்சிக்கலை அல்பத்தனமான சரசரப்பு காகிதங்களின் பலபலப்பில் கட்டிக் கொடுத்தால் அதுவும் மனிதாபிமானம், ஜனநாயகம், அஹிம்சை என்பது போன்ற சொல்லாடல்களின் புனித புகை எபெஃக்ட்டுகளுடன் கொடுத்தால் கேள்வி கேட்க்காமல் தின்று செரிக்க சொந்த புத்தியில்லாத தற்குறிகளாக வாசகர்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கவலையில்லை.

அசுரன்

Related Article:
இன்னொரு கொசோவா உருவாகிறது!

Monday, April 07, 2008

ஒகேனாக்கல் - எச்சப் பொறுக்கி RSS எடியூரப்பாவும், மொள்ளாமாறி பாஜகவும்!!

பாஜக அலுவலக முற்றுகையும், பாஜகவின் பித்தலாட்ட புலம்பலும்!!!

பாஜக அலுவலகம் போன வார இறுதியில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது. அலுவலகத்திற்க்குள் நுழையும் முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயினும் RSS தீவட்டி தடியன் எடியூரப்பாவின் கொடும்பாவி வெற்றிகரமாக எரிக்கப்பட்டது.

புரட்சிகர அமைப்புகளின் முற்றுகையை எதிர்கொள்ள ரவுடிகளை அலுவலகத்தில் வைத்திருந்த பாஜக உண்மையில் அன்றைக்கு அரசின் கருணையால் தப்பித்துவிட்டது. புரட்சிகர அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு பாஜக உள்கட்சி சண்டையில் இந்த ரவுடிகள் அடித்துக் கொண்டனர் என்பது கிளைக் கதை.

இந்த சம்பவத்தையொட்டி, காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடாமல் ஏன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுகிறீர்கள் என்று பெரிய நன்னூல் போல கேள்வி எழுப்புயுள்ளது பாஜக. உண்மையில் இந்த பிரச்சினையில் கர்நாடகாவில் ஒருவிதமாகவும், இங்கு ஒருவிதமாகவும் மொள்ளமாறித்தனமாக பேசி வரும் இந்த இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான பாஜக ஒகேனாக்கல் பிரச்சினையை கிளப்பியதே காங்கிரஸை பிரச்சினையில் சிக்க வைத்து ஆதாயம் பார்க்கும் நோக்கத்துடன் தான். அது குறித்து பார்ப்போம்.

_________________________________

பொய் சொல்லியே பழகிய பாஜக RSS இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் ஒகெனாக்கல் பிரச்சினையிலும் வழக்கம் போல பொய் சொல்லுகின்றனர். கர்நாடகாவில் இந்த பிரச்சினையை கிளப்பியவன் கர்நாடக பாஜக தலைவரான எடியூரப்ப என்ற சொறிநாய். இவன் ஒரு RSS சுயம்சேவக் என்பதாக பெருமையாக கூறி வருபவன். விசயம் இப்படியிருக்க, 1998-ல் ஆட்சியில் இருந்த பாஜக இந்த திட்டத்திற்க்கு ஒப்புதல் கொடுத்த போது இந்த எடியூரப்பா என்ன கிழித்துக் கொண்டிருந்தான் என்று தெரியவில்லை. இப்பொழுது எடியூரப்பா கிழித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கட்சி தலைமையான மத்திய பாஜக என்ன கிழித்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

இவர்களது ஓட்டு பொறுக்கி அரசியலுக்காக ராமர் சேது பாலத்துக்கு இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அனுமதி கொடுப்பதும் ஆட்சியில் இல்லாத போது அதை எதிர்த்து வன்முறை கிளப்புவதும்(பெங்களூரில் தமிழ்நாடு பஸ் கொளுத்தப்பட்டு மூவர் கொல்லப்பட்டனர்) என்று செய்த அதே மோசடியை ஒகேனாக்கல் பிரச்சினையிலும் செய்கிறார்கள் இந்த இழிந்த மிருகங்கள்.

அங்கு ஓட்டு பொறுக்குவதற்க்காக இந்த எடியூரப்பா ஒகேனாக்கல் பிரச்சினையை கிளப்புவானாம், அவனை இங்குள்ள ஏல கனேசன் கண்டிப்பது போல தொட்டிலை ஆட்டிவிடுவாராம், மத்தியில் உள்ள பாஜக இந்த விசயங்களை அமைதியாக *&*&*த்தை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்குமாம்.

இந்த அரசியல் கேப்மாறித்தனத்தை அம்பலப்படுத்த சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டால் பெரிய நியாயவான் போல காங்கிரஸ் பக்கம் கைகாட்டுவானாம். காங்கிரஸை ஏதோ நாம் நல்ல கட்சி என்று சொன்னது போல.

பெரியார் சிலை உடைப்பது முதல் இந்துக்களின் நலன் காக்க எந்த லெவலுக்கும் போகத் தயாரான (தென்காசியில் சொந்த கட்சி அலுவலகத்திற்க்கே குண்டு வைக்கும் அளவு) இந்த வீர பரம்பரையினர், இவர்களது கவுண்டர் பார்ட்டான கன்னட குண்டர்/வானர படை தலைமை பொறுக்கியான எடியூராப்பாவின் மண்டையில் ரெண்டு தட்டு தட்டுவதற்க்கு தனது அமைப்பின் அகில இந்திய தலைமையிடம் போராட வேண்டியதுதானே? அந்த இழவை செய்வதற்க்கு எந்த மக்கள் கலை இலக்கிய கழகக்காரன் தடையாக இருக்கிறான்?

இத்தனைக்கும் RSS பயங்கரவாத பொறுக்கி அமைப்பு வலுவாக உள்ள பகுதி ஒகெனாக்கல் தண்ணீரை வேண்டி நிற்க்கும் பகுதிகள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. போலியான எதிரிகளை உருவாக்கி அந்த அறியாமையில் உள்ள மக்களை தனக்கான அடியாளாக பயன்படுத்தும் இந்த நாய்கள் அந்த மக்களின் மிக அடிப்படையான தேவையில் எப்படி கேடு கெட்ட அரசியல் செய்கிறார்கள் என்பதற்க்கு இதுவும் ஒரு எ-காவாக உள்ளது.

இந்த அமைப்புகளில் மானமிழந்து அடிமைநாய்களாக அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த நபர்கள் செருப்பால் அடித்தால் கூட திருந்தாத தோல் தடித்தவர்கள் என்பது மட்டும் உறுதி.

(ஒசூர், தர்மபுரி பகுதியில் நிலத்தடி நீரில் குறிப்பிட்ட கடினப் பொருளின் (ஃபோளேரைட்) அளவு மிக அதிகமாக இருப்பதால் அவை குடிப்பதற்கு லாயக்கற்றவை. வேறு தண்ணீர் வசதி இல்லையென்பதால் அந்த தண்ணீரை குடிக்கும் அந்த பகுதி மக்களுக்கு 15 வயதிற்க்குள்ளாகவே பற்கள் கரை படிந்து நொறுங்கும் தன்மை பெற்று நாசமாகிவிடுகின்றன. இந்த கோடூரத்தை தடுக்கவே ஒகேனாக்கல் தண்ணீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பது நினைவு கூறத்தக்கது).


தாட்ஸ் தமிழில் வந்த செய்தி

சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை-100 பேர் கைது
சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008

சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஓகனேக்கல் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரம் மூளக் காரணமாக இருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து இன்று சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து முன்பே அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

துணை ஆணையர் லட்சுமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் போக் ரோடு தணிகாசலம் ரோட்டில் அணி வகுத்து நின்றனர். வைத்தியராமன் ரோட்டிற்கு சென்றவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இந் நிலையில் காலை 11 மணியளவில் வெற்றிச் செழியன் தலைமையில் தணிகாசலம் ரோட்டில் இருந்து பாஜக அலுவலகத்துக்கு செல்ல ஓடி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதேசமயம், பா.ஜ.கவினரும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள்.
மாநில துணைத் தலைவர் குமாரவேலு, இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டு ரோட்டுக்கு வந்தனர். போராட்டம் நடத்த வந்தவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

போலீசார் அவர்களை தடுத்து அலுவலகத்துக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டனர். இரு தரப்பினும் மோதல் எண்ணத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் போலீஸார் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்த சமயத்தில், இன்னொரு குழு அங்கு வந்து எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தது.

இது குறித்து பாஜக துணைத் தலைவர் குமாரவேலு கூறுகையில், ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு கடந்த 1998-ம் ஆண்டே ஒப்புதல் அளித்து 2 மாநில அரசுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் ஆட்சியில் இருந்த திமுகவும், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுகவும் இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

இப்போது கர்நாடகாவில் நடக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது. சில சமூக விரோத சக்திகள்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. பாஜக மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவே எங்கள் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது, தாக்குதலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

உண்மையில் இந்த அமைப்புகளுக்கு தமிழ்நாட்டு நலன் மீது அக்கறை இருந்தால் ஓகேனக்கல் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றார்.

Monday, March 24, 2008

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத்சிங்கும்!!

ரலாற்றின் குரலுக்கு சரியாக செவிமடுத்து தனது வரலாற்று கடமையை சிறிது கூட தயக்கமின்றி நிறைவேற்றிய புரட்சிக்காரன் தோழர் பகத்சிங்கும், அவரது தோழர்கள் சுகதேவும், ராஜ்குருவும் தூக்கிலடப்பட்ட நாள் மார்ச் 23. வேறென்றைக்கும் விட இன்றைய மறூகாலனிய தாக்குதல் காலக்கட்டத்தில் இந்திய விடுதலையின் துவக்கமாக முழங்கிய இவர்களின் வரலாற்றுத் தேவை மிக அதிகமாக உணரப்படுகிறது.

தீர்க்கமான தனது பார்வையின் மூலம் தனது கடமையை உணர்ந்து அதற்க்கு நேர்மையாக சிறிதும் சமரசமின்றி வினையாற்றிய பகத்சிங்கை சிறுமைப்படுத்துவது என்பதை ஆளும் வர்க்கம் எப்பொழுதுமே செய்து வருவதுதான். அப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். சமீபத்தில் ஆதவன் தீட்சண்யாவின் புத்தகம் வெளியீட்டு விழாவில் தலித் முரசு ஆசிரியர் பகத்சிங்கை ஏக வசனத்தில் சிறுமைப்படுத்தி பேசியதன் மூலம் தான் யார் என்பதை வெளிப்படையாக வெட்கமின்றி காட்டிக் கொண்டார். அதுவல்ல இங்கு நமது பிரச்சினை. மாறாக அந்த கூட்டத்தை நடத்திய கார்ப்போரேட் கட்சியான, டாடாயிஸ்ட் கட்சியான CPMன் உறுப்பினர்கள் (AKA பங்குதாரர்கள்) இந்த அம்சத்தில் என்ன செய்தார்கள் என்பதும், இதில் அவர்கள் உண்மையாகவே யாராக பரிணமித்துள்ளார்கள் என்பது வெட்கமின்றி வெளிப்படுவதுமே இங்கு பேசப்படவுள்ள விசயம்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பதிவர் ஏகலைவன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதனை இங்கு மறு பிரசூரம் செய்கிறேன்.

பகத்சிங்கின் மேன்மை, அவர் இந்திய சூழலில் யாருடனும் ஒப்பிட முடியாத அளவு தீர்க்கமான பார்வையும், தனது பார்வைக்கு நேர்மையான செயல்பாடும் கொண்டவர் என்பதை விவாதிக்க விரும்புகிறவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள். அப்படியொரு விவாதத்தில் காந்தியின் டவுசர் இதற்க்கு முந்தைய விவாதங்களில் கிழிக்கப்பட்டது போலவே கிழிக்கப்படும் என்ற உத்தரவாததை மட்டும் இப்போதைக்கு கொடுக்க இயலும்.

********************************
சி.பி.எம்.மின் 'கண்ணியத்துக்கு' ஒரு அள‌வே இல்லையா????

சென்ற 19/08/2008 19/03/2008 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.எல்.ஏ. அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவின் 'நான் ஒரு மநு விரோதன்' எனும் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.

நாம் உள்ளே நுழைந்தபோது தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் பேசிக்கொண்டிருந்தார். அரங்கில் சி.பி.எம். கட்சியைச் சார்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். சி.பி.எம். மீது புனிதபாண்டியன் சில விமர்சனங்களை முன்வைத்தார்.

"நான் எந்த உள்நோக்கத்தோடும் இதனைச் சொல்லவில்லை" என்று அறிவித்துக் கொண்டே முன்வைத்தார்.

சி.பி.எம்.ன் சாதி எதிர்ப்பு போராட்டம் எனும் பித்தலாட்டங்களையும், அதன் பார்ப்பனச் சார்புத் தன்மையையும் விமர்சணமாக எடுத்துவைத்தார். "அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக எதிர்க்கும் பொருட்டே புத்தமதத்தைத் தழுவினார். எனவே சி.பி.எம். தோழர்களும் ஏன் புத்தமதததிற்கு மாறக்கூடாது?" என்றும் கேள்வி எழுப்பினார். சி.பி.எம். கட்சியினர் பார்ப்பனர்களை பெரும்பாலும் பிராமனர்கள் என்றே குறிப்பிடுகிறாகள். பார்பனர் என்றால் ஒரு தீய சொல்லைப் போல கருதுகிறார்கள் என்றும் இப்படிப்பட்ட போக்கை மாற்றிக் கொண்டு பார்ப்பனர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேற்கூறிய விமர்சண‌ங்களின் தொடர்ச்சியாகவும், சொரனையற்ற போலிகளுக்கு சொரனையை ஏற்படுத்தும் விதமாகவும், அரங்கில் யாருமே சற்றும் எதிர்பார்த்திராத வகையிலும், ஏகதிபத்திய எதிர்ப்பு சிங்கம் தியாகத் தோழர் பகத்சிங்கை மிகவும் இழிவான முறையில் விமர்சித்தார். "சும்மா ரெண்டு குண்ட வீசிட்டா அவன் பெரிய ஆளா?" என்றார்.

ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது உயிரை துச்சமாக மதித்து இந்த நாட்டு மக்களுக்க்காக மடிந்த மாவீரன் பகத்சிங்கை கீழ்த்தரமாக இழிவுபடுத்தினார். இருந்தும் போலிகளுக்கு சுரனைவராதது துரதிருஷ்டவசமானது தான்.

ப‌க‌த்சிங்கின் ப‌ல‌வித‌மான‌ போராட்ட‌ங்க‌ளை பெரியார் விய‌ந்து பாராட்டிய‌தோடு அத‌ற்கெதிராக‌, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாக‌, கீழ்த்த‌ர‌மாக‌ அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ காந்தியை த‌ன‌து 'குடிய‌ர‌சு' ப‌த்திரிக்கையில் க‌டுமையாக‌ச் சாடி ப‌ல‌முறை எழுதியிருக்கிறார். ஆனால் சிறிதும் கூசாம‌ல், ஒருகையில் துரோகி காந்தியையும் ம‌றுகையில் தியாகி ப‌க‌த்சிங்கையும் உய‌ர்த்திக்காட்டும் சி.பி.எம்.ன் கேவ‌ல‌த்தைக் க‌ண்டிப்ப‌த‌ற்கு ப‌திலாக‌ ப‌க‌த்சிங்கை இழிவுப‌டுத்துவ‌து உள்நோக்க‌முடைய‌து.

இவர்கள் மட்டுமா? மார்க்சிய அறிஞர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் சில பிழைப்புவாதிகளும் இங்கே காந்தியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு உலாவருகிறார்கள். பிர்லா மாளிகையில் இருந்து கொண்டு இந்திய முதலாளிகளின் கைப்பாவையாக, அரை நிர்வாணமாகத் திரிந்த காந்தியை, சமூக போராட்டத்தில் அம்பேத்கரின் பார்வையோடும், ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தில் பகத்சிங்கின் பார்வையோடும், அனுகியிருந்தால் அவரின் முழுநிர்வானமும் அம்பலமாகியிருக்கும். தனது விமர்சணப் பார்வையைத் தவிர்த்து, வெறும் விசுவாசப்பார்வை பார்பவர்களுக்கு காந்தியின் சுயரூபம் புரிய வாய்ப்பில்லைதான்.

ஏகாதிப‌த்திய‌ம் வீசும் எலும்புத்துண்டுக‌ளுக்காக‌ நாக்கைத் தொங்க‌விட்டுக்கொண்டு அலைப‌வ‌ர்க‌ளை மேடைக்கு அழைத்தால் இப்ப‌டித்தான் க‌டிப‌ட‌ வேண்டியிருக்கும். ஆனால் அரங்கில் கடிபட்ட சத்தமல்ல, ஒரு முனகல் கூட கேட்கவில்லை. போலிக‌ளுக்கு இதுபோன்ற‌ அனுபவ‌ங்க‌ள் நிறைய‌ இருக்கிற‌து. ஆனால் போலிக‌ளை விம‌ர்சிப்ப‌த‌ன் ஊடாக‌ ம‌க்க‌ளுக்காக‌ ம‌டிந்த‌ தியாகிளையும் இழிவுப‌டுத்துவ‌து தான் க‌டைந்தெடுத்த‌ அயோக்கிய‌த்த‌ன‌மான‌ யுக்தி.

இப்படிப்பட்ட கைக்கூலிகள், ஏகாதிபத்தியத்தை சந்தோஷப்படுத்த இவ்வாறு செயல்படுவது ஒன்றும் ஆச்சர்யமான செயல் அல்ல. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் தம்மை மாய்த்துக்கொண்ட போராளிகள் மட்டும் தான் இவர்களின் இலக்கு, அவர்களை இப்படி இழிவுபடுத்துவதற்காகத்தானே ஏகாதிபத்தியம் இவர்களுக்கு பிச்சைபோடுகிறது.

த‌லித் ம‌க்க‌ள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக‌ குர‌ல் கொடுப்ப‌தாக‌வும், எழுதுவ‌தாக‌வும், ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தாக‌வும் கூறும் புனித‌ப்பாண்டிய‌னின் 'த‌லித் முர‌சு'க்கு எங்கேயிருந்து ப‌ண‌ம் வ‌ருகிற‌து?

உல‌க‌ம் முழுவ‌தும் கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை ஒடுக்கி, கொண்றொழித்து, அவ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தைக் குடித்து, சுர‌ண்டிக் கொழுத்த‌ ஏகாதிப‌த்திய‌த்தின் எச்சில் காசுதான் அது. ஏகாதிப‌த்திய‌ம் க‌ழிந்த‌தை கையில் வைத்துக் கொண்டு த‌லித் விடுத‌லை பேசும் இந்த‌ பிழைப்புவாதி, ஏக‌திப‌த்திய‌த்திற்கு எதிராக‌ப் போராடி த‌ன‌து 23 வ‌ய‌தில் ம‌ர‌ண‌த்தை எதிர்கொண்ட‌ ஒரு மாவீர‌னை என்றைக்குமே புரிந்து கொள்ள‌ முடியாதுதான்.

அத‌ன் பிற‌கு த‌.மு.எ.ச. பொதுச் செய‌லாள‌ர் ச‌. த‌மிழ்ச்செல்வ‌ன் பேச‌வ‌ந்தார். "நாங்க‌ள் பார்ப்ப‌ன‌ன் என்ற‌ வார்த்தையைப் ப‌ய‌ன் ப‌டுத்துவ‌தில்லை என்று புனித‌ப்பாண்டிய‌ன் இங்கே குறிப்பிட்டார். க‌ட‌ந்த‌ த‌.மு.எ.ச. மாநில‌ மாநாட்டுத் தீர்ம‌ண‌ங்க‌ளை வாங்கிப் ப‌டித்து பாருங்கள், அதில் ப‌த்து இட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ 'பார்ப்பான்' என்று குறிப்பிட்டுள்ளோம்" என்று மிக‌ அருமையான‌தொரு ப‌திலை புனித‌ப்பாண்டிய‌ன் மீது அள்ளித் தெளித்தார். அத‌ன் பிற‌கு "'நான் ஒரு ம‌நு விரோத‌ன்' என்ற‌ புத்த‌க‌த்தை வெளியிட்ட‌ பிற‌கும் ஆத‌வ‌ன் தீட்ச‌ண்யா மீது நாங்க‌ள் (அதான் ந‌ம்ம‌ காம்ரேடுக‌ள்!) எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காம‌ல் இருக்கிறோமே" அதிலிருந்தே எங்க‌ள‌து சாதி சார்ப‌ற்ற‌ த‌ண்மையை விள‌ங்கிக் கொள்ளுமாறு புனித‌ப்பாண்டிய‌னைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார். "இப்ப‌டிப்ப‌ட்ட‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைச் சும‌த்துவ‌து நாம் வில‌கும் புள்ளியையே உறுதிப்ப‌டுத்துகிற‌து. மாறாக‌ நாம் இணையும் புள்ளி என்று ஒன்று இருக்கிற‌து(!) நாம் அதிலிருந்து தொட‌ங்குவோம்" என்று சொல்லி விவாத‌ங்க‌ளைத் த‌விர்த்துவிட்டு, அதிலிருந்து த‌ப்பித்துக்கொண்டார். புனித‌ப்பாண்டிய‌னின் ப‌க‌த்சிங் மீதான‌ கீழ்த்த‌ர‌மான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை அவ‌ர் க‌ண்டுகொள்ள‌வுமில்லை, அத‌ற்காக‌ ப‌தில‌ளிக்க‌வுமில்லை.

பிற‌கு போலிக‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் செய‌ற்குழு த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ச‌ம்ப‌த் பேச‌வ‌ந்தார். அவ‌ரும் த‌ம‌து க‌ட்சி மேடையிலேயே ப‌க‌த்சிங் இழிவுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தை சிறிதும் ச‌ட்டை செய்ய‌வில்லை. பிற‌கு பேசிய‌ பிர‌ள‌ய‌னும் ச‌ரி, ஏற்புரையாற்றிய‌ ஆத‌வ‌ன் தீட்ச‌ண்யாவும் ச‌ரி, அ‌தைத் த‌விர‌ ம‌ற்ற அணைத்து வியாக்கியான‌ங்க‌ளையும் பேசின‌ர்.

இறுதியாக பிரகதீஸ்வரன் என்பவர் தனது நன்றியுரையில் "புனிதப்பாண்டியன் இதைப் போன்று சுதந்திரமாக‌ வேறு எந்த மேடையிலும் பேசமுடியாது என்பது எங்களது கண்ணியத்தை எடுத்துக் காட்டுகிறது" என்று கூறினார்.

இத‌னைக் கடுமையாக‌க் க‌ண்டித்து பேசுவார்க‌ள் என்று க‌டைசிவ‌ரைக் காத்திருந்து நொந்து போய்த் திரும்பினோம். அங்கே இழிவு ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து தோழ‌ர் ப‌க‌த்சிங் ம‌ட்டும‌ல்ல‌, இதைக்கூட‌வா எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என்று எதிர்பார்த்து‌ ஏமார்ந்துபோன‌ என்னைப் போன்ற‌ சில‌ரும்தான் என்ப‌தை உண‌ர்ந்துகொண்டேன்.

இவர்கள் சொரனையோடு பதிலலிக்காதது ஏதோ தற்செயலாக நடைபெற்றது அல்ல. அது தான் போலிகளின் நிஜமுகம். இவர்களுக்குள்ளும் வேர்விட்டிருக்கிற ஏகாதிபத்திய அடிமைப் புத்திதான் இவர்களை பேசவிடாமல் தடுக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறப்பாக இனி எந்த நிக‌ழ்வையும் எடுத்துக்காட்ட‌முடியாது.

ஏகலைவன்.

Related Articles:
மாவீரன் பகத்சிங் விடுதலை போரின் ஒப்பற்ற தலைவன்
விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்

Friday, March 07, 2008

தினமணியின் பூணூலில் பொங்கி வழியும் RSS கொழுப்பு!!!

RSS ன் கொழுப்பெடுத்த அயோக்கியத்தனத்தை தனது பத்திரிக்கையில் வாந்தியெடுத்ÐûÇÐ திணமணி எனும் பார்ப்பனமணி பத்திரிகை. இந்து மக்கள் கட்சி எனும் RSS பயங்கரவாதிகளின் அல்லக்கை கட்சி ஒன்றின் அடியாள் படை தாதா நாயான அர்ஜூன் சம்பத என்பவன் பெயரில் வெளி வந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்த பத்திரிகை(ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால், Friday March 7 2008 00:00 IST, தினமணி). சிதம்பரத்தில் சமீபத்தில் தமிழில் பாடுவதற்க்கு தடையாக இருந்த தீட்சிதர்களை பின் வாங்க வைத்து பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில் ரொம்ப நல்லவன் போல எழுதுகிறான் இந்த கோயம்புத்துர் கொலைகார பொறுக்கி. ²தோ தீட்சிதர்கள் அங்கு தமிழை எதிர்க்கவில்லை என்பது போலும். இன்னாள் வரை தீட்சிதர்கள் அங்கு வேறு சாதியினரையும் தமிழையும் வளர்த்தே வந்துள்ளன்ர் எனபது போலும் மாறாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட திராவிட கம்யுனிஸ்டு கட்சியினர்தான் பிரச்சினை உண்டு பன்னுவதாகவும் கொழுப்பெடுத்து பேசுகிறான் ஒரு பார்ப்பன பயங்கரவாதி. ஆயினும் தீட்சிதர்கள் வரலாறும் சரி இன்றைய நடப்பும் சரி மக்களை அவமதிப்பதாகவே உள்ளது.

ஏதோ இந்துக்கள் எல்லாருக்கும் நான் தான் ஹோல்சேல் பாதுகாப்பு குத்தகை எடுத்துள்ளேன் என்பது போல கதறும் இந்த வெறியர்கள் நேற்று அதாவது 6 மார்ச் 2008 ல் சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடியததற்க்Ì தீட்டு கழித்து தீட்சிதர்கள் நடத்திய பரிகார பூசையை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்?

தீட்சிதர்களின் வரலாறும் ஆக ஆயோக்கியத்தனமானதுதான். இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களை அவமானப்படுத்தி எழுதியுள்ள இந்த தினமணி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவர தமிழ் ஓலைகள் ராஜ ராஜ சோழனால் பூட்டியிருந்த அறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவமே கூட தீட்சிதர்கள் தமிழை எந்தளவுக்கு அவமானப்படுத்தியுள்ளனர் என்பதற்க்கு ஒரு சான்றாகும். லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழ் பாடல்களை ஒரு அறையில் பூட்டி நாசம் செய்ததுடன் இல்லாமல். ராஜ ராஜ சோழன் வந்து அந்த அறையை திறக்க சொன்ன போது திறக்க மாட்டேன் என்று அடாவடித்தனமும் செய்தனர் (இன்று தமிழில் பாடுவதற்க்கு செய்வது போலவே). இதில் பாதிக்கும் மேற்ப்பட்ட தேவரப் பாடல்கள் தீட்சிதர்களின் அயோக்கியத்தனத்தால் அழிந்து போய் மீதியுள்ளவைதான் கிடைத்தன. வரலாறு இப்படியிருக்க அர்ஜூன் சம்பத அல்லது அவன் பெயரில் எழுதிய அல்லக்கை வரலாற்றை திரித்து எழுதுகிறது. அன்றாட சம்பவங்களையே திரித்து எழுதுபவர்களுக்கு வரலாற்றை திரிப்பது பெரிய விசயமில்லைதான்.

இது அன்று வரலாறு என்றால் இன்று கடந்த சில வருடங்கÇ¢ல் மட்டும் சிதம்பரம் கோயிலில் வளாகத்திலேயே சில கொலைகளும், பாலியல் வன்புணர்வு குற்றம் ஒன்றும் நடந்துள்ளது. இவற்றில் எல்லாம் தீட்சிதர்கள்தான் சம்பந்தப்பட்டுள்ளனர். இப்படி சிதம்பரம் கோயிலின் புனிதத்தை தமது சொந்த அரிப்புக்காக கெடுத்து வருபவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஆதரிக்கிறது இந்த RSS கும்பல்.

சாளுக்கிய மன்னனுக்கும், சோழப்பேரரசின் இளவரசிக்கும் பிறந்த குலோத்துங்க சோழனுக்கு முடியுரிமை வழங்குவதா கூடாதா என்ற சர்ச்சை எழுந்தபோது, தில்லை தீட்சிதர்கள் சாளுக்கிய வாரிசினை ஆதரித்துப் பட்டம் சூட்டத் துணை நின்றதாகவும், அதன்பேரில் தீட்சிதர்கள் குலோத்துங்கனிடமிருந்து பல உரிமைகளையும் தில்லைக் கோவில் சொத்துக்களையும் பெற்றதாகவும் வரலாறு சொல்கிறது. அதில் இருந்து தீட்சிதர்கள் சாளுக்கிய வம்சத்தில் இருந்து சோழனாக மாறிக்கொண்ட குலோத்துங்கன் காலத்தில் செப்பேடுகளில் மட்டும் தேவாரம் இருக்கட்டும். தினமும் பாடத்தான் வேண்டுமா? என்று தந்திரமாக தமிழை நடராசனிடம் இருந்து அகற்றி விட்டனர். இந்த சதியினை நக்கீரன் பத்திரிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனால் தினமணியோ வரலாற்றையே புரட்டிப்போடுகிறது.

பார்ப்பன பயங்கரவாத அமைப்பான RSS என்றைக்கும் பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கைய மதித்ததே கிடையாது. நாட்டார் வழிபாட்டு தெய்வங்களையும் மாமிசம் உண்ணும் கடவுளர்களையும், சிறு தெய்வங்களையும் அவமரியாதையாக கருதி அவற்றை புணீதப்படுத்தி பார்ப்பனமயமாக்குவதுடன் இது போல ஏற்கனவே பார்ப்ப்னியமயமாக்க்கப்பட்ட கோயிலகளில் சதாரண மக்களை அவமரியாதை செய்வதையும் எதிர்த்து குரல் கொடுத்ததில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் நுழைவதாகட்டும், தேர் இழுப்பதில் உரிமை கேட்பதாகட்டும் இவர்கள் ஆதிக்க சாதியினர் பக்கமிருந்தே குரல் கொடுப்பர். அது போலவேதான் இப்பொழுதும் கூட பார்ப்பனியத்தின் பக்கமிருந்து குரல் கொடுக்¸¢றார்கள்.

10.5.2005 அன்று ராமகோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும்பகுதியான கோட்டைமேட்டை ஒட்டிய உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார்.1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்துபோயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

அப்பகுதி இளைஞர்கள் அவரைத்தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமையுண்டு என்கிறார் ராமகோபாலன்.

'அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?' 'இங்கிருந்து 10 கி.மீ.தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீவைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?' என்று கூறி இந்துக்களாகிய நாங்கள் அந்த கோயிலில் நுழைவது குறித்து பேசிவிட்டு இந்த கோயிலில் நுழைந்து கொள் என்று தடுத்துள்ளனர் இளைஞர்கள்.

இந்துக்களிடையேயான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். 'அப்படியானால் முதலில் காளப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோயிலுக்கு வருவோம்' என்கின்றார்கள் இளைஞர்கள். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டுத் திரும்புகிறது காவிப்படை.

ஒருவாரம் கழித்து 24-05-2005 அன்று கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன்.

இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச் சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டுவந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். (நன்றி: புதுவிசை)

இன்று இத்தனை வக்கனையாக பேசும் இந்த பொய்யர்கள் ஏன் ஆறுமுகசாமி முதன் முதலில் தமிழில் பாடச் சென்ற பொழுது தாக்கப்பட்டது குறித்து பேச மறுக்கிறார்கள்? கள்ள மௌனம் சாதிக்¸¢றார்கள்?

அப்பொழுது அவருடன் எந்த கம்யூனிஸ்ட் இருந்தான், எந்த மக இகக்காரன் இருந்தான்?

கோவை கலவரத்தில் ரவுடித்தனம் செய்த அர்ஜூன் சம்பத்தை நாளை அவனது மக்கள் விரோத செயல்களுக்காக மக்கள் அவனுக்கு நடு வீதிகளில் தண்டனை கொடுக்கும் போது அவன் அம்மா என்றுதான் கத்தப் போகிறான். மாதாஜி என்றல்ல என்பதை அவன் நியாபகம் வைத்துக் கொள்ளட்டும்.

இத்தனை வக்கனையாக பேசும் RSS மக்கள் விரோத கும்பல் நீதிபதியிடம் ஆறூமுகச்சாமியை விடமுடியாது என்பதற்க்கு மறுப்பாக தீட்சிதருக்கும், சம்ஸ்கிருதத்திற்க்கும் பாரம்பரிய உரிமைகள் இருப்பதாகவும், பிறரை அந்த மண்டபம் வரை அனுமதிப்பது நகைகளுக்கு ஆபத்து என்றும் கூறி வாதாடியதை எதிர்த்து எதேனும் செய்வார்களா?

அதாவது தீட்சிதர் தவிர்த்து, சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் கோயிலில் உரிமையில்லை என்பதுதான் அவர்களின் வாதமெனில் இந்துக்களின் நலனுக்கு போராடும் RSS கும்பல் இன்னேரம் தீட்சிதர்களின் மண்டையில் தட்டி வழிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமல்லவா?

அதாவது தீட்சிதர் தவிர்த்தும், சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் உரிமையில்லை என்பது சாதிவெறியில்லையா? மொழி வெறியில்லையா?

தீட்சிதர் தவிர்த்து மற்றயவர்களை கோயிலில் விட்டால் திருட்டு போய்விடும் என்று சூத்திரன் அத்தனை பேரும் திருடன் என்று சொல்வது RSS வெறியர்களுக்கு தேனாக இனிக்கிறது போலும்.

இவையெல்லாம் சாதி வெறி, மொழி வெறி பிடித்து பெரும்பான்மை மக்களை அவமதிப்பவர்கள் RSS உள்ளிட்ட பார்ப்பன வெறீ கும்பலா அல்லது வேறு யாருமா என்பதை தெளிவாக காட்டுகின்றன.

இவற்றையெல்லாம் பிரசூரிப்பதற்க்கு திணமணியின் கழுத்தில் பாயந்து வயிற்றில் ஊடும் பூனூல் அனுமதிக்காது.


இப்படியெல்லாம் பேசினால் உடனே இஸ்லாமில் வேற்று மொழியில் இருக்கிறதே என்று ஒரு வாதம் வைக்கிறார்கள் இவர்கள். மசூதிகளில் அராபியில் ஓதுகிறார்கள்தான். அங்கு தாய்மொழிக்காகக் குரல் எழும்பி, அதற்கு இமாம்கள் தடைபோட்டால் அதற்கும் குரல்கொடுப்போம். ஆனால் கிறித்தவமோ, இசுலாமோ தமிழ் மொழியை நீச பாசை என்றோ, தமிழ்மக்களை-சூத்திரர்களை 'வேசிமக்கள்'என்றோ சொல்வது இல்லை அதுவும் நீதிமன்றம் முதல் இதோ தினமணியில் அறிக்கை வடிவில் வரை தமிழை அவமானப்படுத்திவிட்டு தைரியமாக வலம் வருவதில்லை அவர்கள் என்பதும் உண்மை.

பிறமதத்துக் காரர்களிடம் தமிழில் வழிபாடு நடத்து என்று வலியுறுத்துவார்களா என்று வக்கனையாக கேட்க்கும் இவர்கள் இங்கு கிறித்துவ வழிபட்டு இடங்களில் தமிழில்தான் வழிபாடு நடக்கிறது. மேலும் பைபிளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து அதனை வாசிக்கக் கல்வியை அவர்கள் தந்ததால்தான் கல்வியும் கிறித்தவமும் ஒடுக்கப்பட்டமக்களிடையே பரவிற்று. முதலில் இந்துமத வேதங்களையும், உபநிசத்துக்களையும், அப்படியே சங்கரர் எழுதிய சரோஜாதேவி புத்தகத்தையும், சவுந்தர்ய லகரியையும் மொழிபெயர்த்துவிட்டு இதைப் பத்திப் பேசலாம்.

இதே முற்போக்கு புரட்சிகர அமைப்பினர்தான் இஸ்லாமிய பிற்போக்கு தனங்களுக்கு, பெண்ணடிமைத்தனங்களையும், தஸ்லீமா நஸ்ரீனுக்கு ஆதரவாகவும் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அமைதியாக அயோக்கியத்தனம் செய்யும் போதெல்லாம் ஏதோ பார்ப்ப்னிய மதத்தில் ஆக சிறப்பாக பல்வெறு விசயங்கள் இருக்கிறது என்று பூ சுற்றுவதும். அவர்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினால் உடனே இஸ்லாமில் இல்லையா, கிருத்துவத்தில் இல்லையா என்றோ அல்லது பாகிஸ்தானில் இல்லாததா, பங்களாதேசில் இல்லாதாதா என்றும் வேறு மாதிரி பேசுவதும் என்பதாக இரட்டை நாக்கு கொண்டவர்கள் இவர்கள். ஏதோ நாம் இஸ்லாம், கிருத்துவம், பாகிஸ்தான், பங்களாதேஸ் எல்லாம் மிக முற்போக்கானவை என்று சொன்னது போல.

இன்று நாத்திகனுக்கு அங்கென்ன வேலை என்று கேட்க்கும் கோயம்புத்தூர் கொலைகாரன் அர்ஜூன் சம்பத என்ற மனிதகுல விரோதி, ஆத்திகரான ஆறுமுகசாமி தனது உயிருக்கு நாத்திகர்களான மக இகவினர் துணையின்றி தீட்சிதர்களால் ஆபத்து என்று கோர்ட்டில் ஒப்படைத்து சிறை புகுந்த போது அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கலாமே? தஸ்லீம நஸ்ரீனுக்கு ஆதரவளிக்க முன் வந்த வாய்களுக்கு ஏன் ஆத்திகரான ஆறுமுகச்சாமிக்கு ஆதரவளிக்க முடியவில்லை?

அதாவது சர்ச்சையின் நோக்கம் ஆன்மிகமாக இல்லாததுதான் இவர்களுக்கு கவலையளிக்கிறதாம். உண்மையில் இவர்களுக்கு கவலையளிப்பது இவர்களின் பார்ப்ப்னிய ஆன்மிக ஆதிகத்திற்க்கு ஆபத்து உருவாகியுள்ளது என்பதே ஆகும். ஆத்திகரான ஆறூமுகச்சாமிக்கெதிராக தமிழுக்கெதிராக வரலாறு நெடுகிலும் தீட்சிதர்கள் சதி செய்த பொழுதெல்லாம் கண்டிக்க வக்கில்லாத முதுகெலும்பற்ற அடிமை கும்பல் தலைவான அர்ஜூன் சம்பத் இன்று தமிழர்களின் உரிமைக்கு போராடும் போது ரொம்ப நல்லவன் போல சதி செய்கிறார்கள் என்று முதலை கண்ணீர் வடிப்பதின் பின்னால் உள்ள சதியை நாம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

என்றைக்கு பெரும்பான்மை மக்களின் பண்பாட்டை அவமதிப்பது என்றும், பெரும்பான்மை மக்களின் உரிமைகளை அவமதித்து மறுப்பதும் என்றும், பிற்போக்குத்தனத்தால் மக்களை முட்டாள் ஆக்குவது என்றும் ஆகிவிட்டதோ அன்றே அங்கு ஆத்திகம் நாத்திகம் என்பதெல்லாம் இல்லை மாறாக மக்களின் உரிமை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது. அதனால் அதற்க்கான போராட்டத்தின் நியாயத்தைத்தான் நேர்மையானவன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் பேச வேண்டுமேயொழிய அதை விடுத்து அப்பொழுது வந்து ஆத்திகம் நாத்திகம் என்று பேசினால் உண்மையில் அவன் ஏதோ சூழ்ச்சி செய்கிறான் என்றுதான் அர்த்தம். அர்ஜூன் சம்பத்தும் சரி அவருக்கு இந்த கட்டுரையை எழுதி கொடுத்த கும்பலும் சரி சூழ்ச்சிகள் செய்வதில் விற்பன்னர்கள் என்பது சமீபத்தில் தென்காசி இந்து முன்னணியினர் குண்டு வைத்து கைதான சம்பவத்திலும், கோவையில் குண்டு இருப்பதாக புரளி கிளப்பி அப்பாவிகளை மாட்டி விட்ட வழக்கிலும் சரி தெளிவாகவே அம்பலமாகியுள்ளது.

ஆறுமுகசாமி சிவபக்தர்தான். அவரின் பக்தியை இந்துமக்கள் கட்சியும் தீட்சிதர்களும் மதிக்கிறார்கள். அவர்களே அவரின் பக்தியை மெச்சி, நாத்திகம் பேசுறவாளிடம் இருந்து தனியாகித் தன்னந்தனியனாகி ஆறுமுகசாமி வந்தால் அவரை அரவணைப்போம் என்கிறார்கள். இதை நாம் நம்புவதற்கு நாம் ஒன்றும் நந்தனார் மாதிரி அப்பாவிகள் இல்லை. ஏனெனில் நேற்று போலிஸ் பாதுகாப்புடனும், மனித உரிமை கழகம், மக இக உள்ளிட்ட தோழமை அமைப்பினரின் பாதுகாப்புடன் சென்ற பொழுதே தீட்சிதர்கள் போலிசையும் தாக்கி போராடியவர்களையும் தாக்கினர் எனும் போது தனியாக வந்தால் இவர்களின் அரவணைப்பு எப்படியிருக்கும் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் அரவணைப்பையும், பின்னர் சோதியில் கலக்கவைக்கும் பித்தலாட்டத்தையும். தில்லைக்கோவிலின் தென்வாயிலே சொல்கிறது. அன்று நந்தன்காலத்தில் ம.க.இ.க. தோழர்கள் இல்லை. நீதிமன்றம் (அநீதியே சொன்னாலும் அதன் பெயரிலாவது) இல்லை. இருந்திருந்தால். நந்தன் கதையை இன்று இருப்பது போல படித்திருக்க நியாயமில்லை.

பார்ப்ப்னியம் அதுவும் குறிப்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் வேற்று சாதியினரையும், மாற்று கருத்துள்ளவர்களையும் அரவணைக்கும் வரலாறு நந்தன், வள்ளலார் முதல் இன்று ஆறுமுகச்சாமி வரை நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நாத்திகர்களான மக இக, மனித உரிமை கழகம் போன்ற அமைப்புகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருந்தால் ஆத்திகர்களான நந்தனையும், வள்ளலாரையும் இன்னும் சில பல பார்ப்ப்னிய எதிர்ப்பு தியாகிகளின் உயிரையும் பாதுகாத்திருக்கலாம்.

இந்தியாவெங்கும் பொய்யையும் புணை சுருட்டையும் ஆயுதமாக கொண்டு வரலாற்று அவமரியாதை துடைக்க கட்டிடங்களை இடித்து தள்ள புறப்பட்ட வாணர கும்பலின் தலைமை கொலைகார தறுதலையான அர்ஜூன் சம்பத். சிதம்பரத்தின் தெற்கு வாயில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களின் அவமரியாதைச் சின்னமாக நிற்கிறதே. இந்து மக்கள் முன்னணி அந்த சுவரை இடிக்க கரசேவை ஆரம்பித்துவிட்டு நியாயவான் போல பேசட்டும்.

இந்த மக்கள் எழுச்சி 19ஆம் நூற்றாண்டில் இருந்திருந்தால், பார்ப்பனியத்தையும், கண்மூடிப்பழக்கங்களையும் மண்மூடிப்போகச் சொன்ன வள்ளலாரையும், பார்ப்பனீயத்தை எதிர்த்துக் கொலையுண்டு வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்ட பல ஆன்மீகவாதிகளையும் படுகொலையில் இருந்து காப்பாற்றி இருகக் முடியும். வள்ளலாரை ஜோதியில் எரித்த அதே வெறி. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னமும் சிவனடியார் ஆறுமுக சாமியை நோக்கிப் பாய்ந்தபோது. நக்சல்பாரிகள்தான் தமிழைக் காப்பாற்றினர். பார்ப்பனியத்தின் கொலைவெறிச் சதியை முறியடித்தனர். ஏனென்றால், எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ,எங்கெல்லாம் உரிமைகள் நசுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் வசந்தத்தின் இடி முழக்கமாய் மக்களுக்கு வெற்றியை கொடுக்க களமிறங்கும் நக்சல்பாரி. அதுதான் சிதம்பரம் தமிழ் வழிபாடு விசயத்திலும் நடந்துள்ளது.

இன்று தமிழ், ஆத்திகம் என்று பேசும் இன்று பார்ப்பன அடியாளும், அவனது கட்டுரையை பிரசூரித்த பார்ப்பன பத்திரிகையும் இது வரை தமிழர் என்ற சொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பிரச்சினைக்கும் சரி, இந்துக்கள் எனப்படுபவர்கள் இந்து என்ற பெயரிலேயே அவமாரியதை செய்யப்படும் பிரச்சினையிலு சரி குரல் கொடுத்ததேயில்லை. அங்கெல்லாம் நாம்தான் கொடுத்துள்ளோம். அதே போலத்தான் ஆறுமுகச்சாமி விசயத்திலும்.

சுயமரியாதையுள்ள ஓவ்வொருத்தனும் அர்ஜூன் சம்பத் போன்ற ரவுடிகளின் திமிர்பிடித்த பேச்சுக்களை பிரசூரிக்கும் பார்ப்பன கொழுப்பெடுத்த தினமணியை கடுமையாக கண்டிக்க வேண்டியுள்ளது.

இதனை அனைத்து நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

அசுரன்

Wednesday, March 05, 2008

தமிழர் வழிபாட்டுரிமை போரில் வென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமிக்கும், தோழர்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!

ன்று காலை சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வெற்றிகரமாக தேவாரத்தை பாடி வழிபட்டிருக்கிறார் சிவனடியார் ஆறுமுகச்சாமி.
( திருத்தம்: இன்று காலை சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது, அது தவறான தகவலாகும் ஆறுமுகச்சாமி காவல் துறையால் கைது செய்யப்பட்ட கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் இந்த நிலையில் காலையில் சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வேறு சில சிவனடியார்களே தேவாரம் பாடி வழிபட்டனர், அரசை பகைத்துக் கொள்ள விரும்பாத தீட்சித ரவுடிக் கும்பல் அவர்களை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்தர் பல்டி அடித்தது.)

மூன்று நாட்களுக்கு முன்பாக சிதம்பரம் திருக்கோவிலில் தமிழில் பாடி வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது, அந்த ஆணையை பெறுவதற்கென, சிவனடியார் ஆறுமுகச்சாமியும் அவருக்கு பக்கத்துணையாக‌ மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான ம.க.இ.க, பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் நடத்திய போராட்டம் நெடியதாகும்.

முன்னொரு சமயத்தில் திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகச்சாமி தேவாரம் பாடுவதற்கு முயன்ற பொழுது அவரது கையை முறித்து கோயிலுக்கு வெளியே வீசியெறிந்தது பார்ப்பன தீட்சித ரவுடிக் கும்பல், பார்ப்பன கும்பலின் இந்த‌ அடாவடித்தனத்திற்கு பிறகு, தமிழில் பாட முயன்று தாக்கப்பட்ட அந்த முதியவருக்காக களத்தில் இறங்கியது மனித உரிமை பாதுகாப்பு மையம்., அதன் தோழமை அமைப்பான‌ மக்கள் கலை இலக்கிய கழகமும் தமிழ்நாட்டில் தமிழில் வழிபட உரிமையற்ற இந்த கேவலமான நிலையை மக்களிடம் விளக்கி தெருமுனை கூட்டம், சுவரொட்டி பிரச்சாரம், பேருந்து பிரச்சாரம், கையெழுத்து இயக்கம் என்று வீச்சாக இயங்கியது, இந்த பிரச்சார இயக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின, அதே சமயத்தில் (மனு)நீதிமன்றமோ மொக்கையான காரணங்களை கூறி தமிழ் வழிபாட்டுரிமையை மறுத்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்பளித்தது, "உங்கள் மனதுக்குள்ளேயே பாடிக் கொள்ளுங்கள்" என்று திமிர் வழிய பேசியது நீதிமன்றம்."

தொடர்ந்து செய்யப்பட்ட‌ மேல்முறையீடுகளாலும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்களின் அயராத உழைப்பு, சிவனடியார் ஆறுமுகச்சாமியின் சமரசமில்லாத போராட்டம் இவற்றின் காரணமாகவும் இறுதியில் அரசும் நீதிமன்றமும் அடிபணிந்தன, சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது.,

தமிழக அரசு வெளியிட்ட இந்த ஆணைய நிறைவேற்றுவதற்காக, சிவனடியார் ஆறுமுகச்சாமியும், மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலின் உள்ளே நுழைந்த பொழுது அவர்களை சுற்றி வளைத்து தாக்கியது தீட்சித பொறுக்கி கும்பல், இந்த தாக்குதலில் சிவனடியாரின் மூக்கு கண்ணாடி உடைந்து சிதறியது, இத்தோடு நிறுத்தாமல் அங்கு 'காவ‌லுக்கு' வ‌ந்திருந்த காவ‌ல்துறையின‌ரையும் சேர்த்து தாக்கியதோடு அவ‌ர்க‌ளை க‌டித்து குத‌றிய‌து தீட்சித‌ வெறிநாய்க‌ள், இருப்பினும் இந்த‌ வெறிநாய்க‌ளை அடித்து உதைகாம‌ல், ப‌வ்ய‌மாக‌ தூக்கி வெளியில்விட்ட‌ போலீசு, போராடிய‌ தோழ‌ர்கள் மீது த‌டிய‌டி ந‌ட‌த்தி தீட்சித‌ர்க‌ளை விட‌ தாங்க‌ள் பெரிய‌ வெறி நாய்க‌ள் என்ப‌தை நிரூபித்த‌து. போலீசு வெறிநாய்க‌ள் ந‌ட‌த்திய‌ இந்த‌ தாக்குத‌லில் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ ஐந்திற்கும் மேற்ப‌ட்ட‌ தோழ‌ர்களின் ம‌ண்டை உடைந்து இர‌த்த‌ம் கொட்டிய‌து, குருதி கொட்ட‌ கொட்ட‌ அவ‌ர்க‌ளை துர‌த்தி துர‌த்தி த‌டியால் தாக்கின‌ போலீசு வெறிநாய‌க‌ள், த‌மிழ்நாட்டில் த‌மிழில் வ‌ழிப‌டும் உரிமை வேண்டி போராடியதற்காக‌ அந்த‌ தோழ‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர், தாக்க‌ப்ப‌ட்ட‌தோடு ப‌ல‌ தோழ‌ர்க‌ள் கைதும் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர், ம‌.க‌.இ.க.

ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌த்தை சேர்ந்த‌ 35 தோழ‌ர்க‌ளை கைது செய்து சிறையில‌டைத்த‌து போலீசு.

இந்த‌ அராஜ‌க‌த்தை க‌ண்டித்து சுவ‌ரொட்டி ஒட்டிய‌தோடு, சென்னையில் ஆர்ப்பாட்ட‌மும் ப‌த்திரிக்கையாள‌ர் ச‌ந்திப்பினையும் ந‌ட‌த்திய‌து ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌ம். இந்த‌ செய்திக‌ளையெல்லாம் எந்த‌ ப‌த்திரிக்கையும் வெளியிட‌வில்லை, க‌ட்டுப்பாட்டாக இவற்றை இருட்ட‌டிப்பு செய்த‌ன‌. இருப்பினும் தோழ‌ர்க‌ளின் வீச்சான‌ போராட்ட‌த்தின் விளைவாக, தமிழில் வழிபடுவதை தடுக்கும் பொறுக்கி தீட்சித‌ர்க‌ளை நேற்று எச்ச‌ரித்து அறிக்கை வெளியிட்ட‌து த‌மிழ‌க‌ அர‌சு, இந்த‌ நிலையில்தான் இன்று காலையில் சிவனடியார் ஆறுமுக‌ச்சாமி, ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌ம் ம‌ற்றும் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ தோழ‌ர்க‌ள் சித‌ம்ப‌ரம் கோவிலின் உள்ளே நுழைந்தனர், அப்பொழுது திருச்சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ஏறிய‌ ஆறுமுக‌ச்சாமி நெஞ்சுருக‌ தேவார‌ம் பாடி சிதம்பரம் நடராசனை வ‌ழிப‌ட்டார்.

தீட்சித பார்ப்பன வெறிநாய்களின் சதி வேலைகளையும் தாக்குதல்களையும், அரசியல் செல்வாக்கினையும் மக்கள் துணையோடு எதிர்கொண்டு வீழ்த்தி த‌மிழ‌ர்க‌ளின் வ‌ழிபாட்டுரிமைக்கென‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ போரில் வென்ற‌ சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி, ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌ம், ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌ம் ம‌ற்றும் அத‌ன் தோழ‌மை அமைப்புக‌ளை சேர்ந்த‌ தோழ‌ர்க‌ளுக்கு எங்க‌ள் செவ்வ‌ண‌க்க‌ங்க‌ளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இமெயிலில் நந்தன்

Related Posts with Thumbnails