பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வை!!
மியான்மார்ல ராணுவ ஆட்சியாம். என்ன கொடுமை பாருங்க 15 வருசமா ஆங்சான் சூகியி என்ற தலைவரை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனராம். இப்போதான் ரிலீசே செஞ்சிருக்காங்க. ராணுவ ஆட்சின்னா எப்படி இருக்கும்? நம்ம மாதிரி 'ஜனநாயாக' நாட்டுல இருக்குறவங்களுக்கு அந்த கஸ்டம் புரியாதுதான். இப்படியும் பலர் பெருமிதத்துடன் பேசிக் கொள்கிறார்கள்.
அது சரி. ஆங்சான் சூகியியாவது தற்போது விடுதலை செய்யப்பட்டு விட்டார். ஆனால் கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் சர்மிளா. அவரை கைது செய்து 10 வருடங்களாகின்றன. அவருக்கு என்று விடுதலை? 60 வருட ஜனநாயகம் சர்மிளாவுக்கு தராததை, மியான்மார் ராணுவ ஆட்சி ஆங்சான் சூகியிக்கி தந்திருக்கு என்று சொல்லலாமா?
ஜம்மு-காஷ்மீரிலும், மணிப்பூரில் 1961லிருந்தும், பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகளில் 1972லிருந்து ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடுங்கோலாட்சிதான் நடக்கிறது. அரசே ஒத்துக் கொண்ட படி இதுவரை 20,000 பேருக்கும் மேல் காணாமல் போயுள்ளனர் மணிப்பூரில். தேச சேவை செய்வதாகக் கதை விட்டுக் கொண்டு தேக சேவை செய்யும் ராணுவப் பொறுக்கிகள் மீதுள்ள 458 வழக்குகளை விசாரிக்கக் கோரியுள்ளது ஜம்மு காஷ்மீர் அரசு. இன்று இத்தகைய ராணுவ ஆட்சி தண்டகாரன்யா, மத்திய இந்தியா, மேற்கு வங்கம் என விரிவாகி வருகிறது. நிலைமை இப்படியிருக்கு ஈயம் பித்தளையைப் பார்த்து பல்லிளித்த கதையாக இந்திய ஜனநாயகம், மியான்மார் ராணுவநாயகம் என்று வெத்துப் பெருமை பேசி இளித்துக் கொண்டழைகிறார்கள் சிலர்.
பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வைத்தால் அது #$%டேஸ்@#@ திங்காமல் இருந்துவிடப் போகிறதா என்ன? பன்றித் தொழுவத்துக்கு செண்ட் அடிச்சி நாடாளுமன்றமென்று பேர் வைத்தால் அது மியான்மார் ராணுவ ஆட்சியிலிருந்து இந்திய போலி ஜனநாயகத்தை வித்தியாசப்படுத்திவிடுமா என்ன?
அசுரன்
Related:
Irom And Her Sisters
Murder In Plain Sight
Irom And The Iron In India’s Soul
12 பின்னூட்டங்கள்:
அசுரன் நீங்க சமீப காலமா ஏன் பின்னூட்டத்தைவிட சிறிய அளவிலேயே பதிவு போடுகிறீர்கள். கொஞசம் விளக்கமா எழுதினா என்ன மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பயன்படும்.
தோழர் இதுபற்றி பஸ்ஸில் ஒரு உரையாடல்...........
http://j.mp/c809To
மணிப்பூரில் (மற்ற இந்திய பகுதிகளில்) இந்திய ராணுவம் செய்யும் அடாவடிகளைப் போலத்தான் பர்மாவின் ராணுவ ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள், சரிதானே?
பர்மாவின் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சி இயக்கங்கள் பற்றி தகவல் தர முடியுமா?
//மணிப்பூரில் (மற்ற இந்திய பகுதிகளில்) இந்திய ராணுவம் செய்யும் அடாவடிகளைப் போலத்தான் பர்மாவின் ராணுவ ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள், சரிதானே?
பர்மாவின் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சி இயக்கங்கள் பற்றி தகவல் தர முடியுமா?//
//அசுரன் நீங்க சமீப காலமா ஏன் பின்னூட்டத்தைவிட சிறிய அளவிலேயே பதிவு போடுகிறீர்கள். கொஞசம் விளக்கமா எழுதினா என்ன மாதிரி //
மா.சி மற்றும் தமிழ்வினை,
மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பர்மாவில் உள்ள தேசிய விடுதலை இயக்கங்கள், புரட்சிகர, ஜனநாயக இயக்கங்கள் பற்றி என்னால் இயன்ற அளவு விரைவில் எளிமையாக எழுதுகிறேன்.
தோழமையுடன்
அசுரன்
நன்றி ஏழர,
ஐயொவ்ரம் சுந்தர் போன்றவர்கள் தமது வறட்டு அற்பவாத ஈகோவைத்தான் வெளிப்படுத்துகிறார்கள்.
பன்னியக் கேவலப்படுத்தாதீங்க தோழர்...
இந்த பொறுக்கிகளை திட்டுவதற்கு பன்னியை உதாரணம் காட்டுவது பன்னியை இழிவுபடுத்துவதாக இருக்கிறது (பன்னியின் இறைச்சி உடலுக்கு நல்லது) பன்னி என்பதற்கு பதில் காந்தி என்று வைத்துக் கொள்ளலாம். பொறுத்தமாக இருக்கும்
நண்பர் அசுரன் 3மாசத்துக்கு ஒரு பதிவா?
வேற பதிவு போடுங்கண்ணே
ஒங்க பிளாக் கேடக்குற எல்லாப் பதிவையும் படிச்சாச்சு புதுச எதாவது பதிவுப் போடுங்க அண்ணே
//நண்பர் அசுரன் 3மாசத்துக்கு ஒரு பதிவா?
வேற பதிவு போடுங்கண்ணே
ஒங்க பிளாக் கேடக்குற எல்லாப் பதிவையும் படிச்சாச்சு புதுச எதாவது பதிவுப் போடுங்க அண்ணே//
ஆமாம் அசுரன்.....நானும் வழி மொழிகிறேன்....
அசுரன்.
இந்த மாதிரியான ஸ்பெசல் சட்டங்கள் பிரதமர் அளவிலே (பிரதமர் அலுவலகம்) நடக்கிறதா அல்லது பாராளுமன்ற கமிட்டி ஏதாவது அங்கீகரிக்குமா? அப்படி இருப்பின் அந்தக் கமிட்டி உறுப்பினர்கள் யார் யார்?
தகவல் இருந்தால் பகிரவும்.
//அசுரன்.
இந்த மாதிரியான ஸ்பெசல் சட்டங்கள் பிரதமர் அளவிலே (பிரதமர் அலுவலகம்) நடக்கிறதா அல்லது பாராளுமன்ற கமிட்டி ஏதாவது அங்கீகரிக்குமா? அப்படி இருப்பின் அந்தக் கமிட்டி உறுப்பினர்கள் யார் யார்?
தகவல் இருந்தால் பகிரவும்.//
கல்வெட்டு அவர்களே, எனக்கும் இது பற்றிய விவரம் தெரியவில்லை. கூகிள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்க்கிறேன்.
குட்டக்கொழப்பி மற்றும் ஹைதர் அலி,
தொடர்ந்து எழுத விசயங்கள் நிறையவே உள்ளன. அருந்ததிராய் வழக்கு, பெட்ரோல் விலையுயர்வு, தாண்டேவாடா வாந்திபேதி சாவுகள், சில்லறை வணிகத்தில் 51% பன்னாட்டு குழமங்கள் நுழையலாம் என்ற சட்டம் - இப்படி பல... ஆயினும் தொடர்ந்து எழுதுவதில் சில பெரும் தடங்கள் ஏற்பட்டு விடுகின்றன. எனவேதான் குறைந்தபட்சமாக, பதிவு செய்யப்பட வேண்டிய அதிமுக்கிய நிகழ்வுகளை எப்படியாகிலும் எழுதிவிடுகிறேன்.
Post a Comment