நேற்று நீதிமன்றத்தில் 2G ஊழல் பற்றி ஆ. ராசா சில விசயங்களை போட்டுடைத்துள்ளார். கேபினெட் அமைச்சகம் அலைக்கற்றையை ஏலம் விடக் கூடாது என்று முடிவெடுத்ததினால்தான், அலைக்கற்றை உரிமத்தை ஏலத்தில் விடாமல் கையளித்ததாக ஆ. ராசா சொல்லியுள்ளார்.
மேலும், "நான் பின்பற்றிய முறை தவறானது எனில், 1993லிருந்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்த அத்தனை பேரும் இதைத்தான் செய்துள்ளனர், அவர்களும் சிறையிலிருக்க வேண்டியவர்கள்தான்" "பாஜகாவின் அருன் சோரி 26 உரிமங்களையும், தயாநிதி மாறன் 25 உரிமங்களையும், நான் (ஆ, ராசா) 122 உரிமங்களையும் கொடுத்துள்ளோம். இவையனைத்துமே ஏலம் விடப்பட்டு கொடுக்கப்பட்டவையல்ல. அவர்கள் செய்தது தவறில்லை என்றால், என்னை மட்டும் விசாரிப்பது ஏன்?" என்று
கேட்டுள்ளார்.
இதைத்தான் பல முறை நாமும் சொல்லி வருகிறோம். உலகமயக் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் வளங்கள் எல்லாம் அடி மாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொள்ளையடிக்கக் கொடுக்கப்படுகிறது என்று. இதில் பாஜக, காங்கிரசு, சிபிஎம், டி எம் சி என்ற பேதம் கிடையாது. அனைவரும் மாமாக்கள் என்று சொல்லி வருகிறோம்.
2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக் கொண்டது ஆ. ராசா எனில் இதே போல அரசு சொத்துக்களை, உரிமங்களை பாஜக காலத்திலிருந்து குறைந்த விலைக்கு விற்றது, இலவசமாகக் கொடுத்தது, கரும்பு தின்னக் கூலி போல தனியார் கையில் காசையும் கொடுத்து அரசு நிறுவனத்தையும் ஒப்படைத்தது போன்ற அயோக்கியத்தனங்களைச் செய்வதற்கு டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் அமைச்சகத்தையே வைத்திருந்தார்கள்
பாஜக மாமாக்கள்.
இவர்களின் ஆட்சியில் அம்பானி, டாடா உள்ளிட்ட தரகு முதலாளி கும்பல் ஆட்டயப் போடாத எண்ணைய் வயலா(உதா: பன்னா மெத்தா, கோதாவரி)? தொலைத் தொடர்புத் துறை உரிமங்களா (உதா: சிடிஎம்ஏ மோசடி, ISD மோசடி)? இவர்கள் ஆட்சியில் டாடா உள்ளிட்ட கொள்ளைக் கும்பல் ஆட்டயப் போடாத நிறுவனங்களா (BSNL, மாடர்ன் பிரட்)?
அது மட்டுமா, டாடா, அம்பானி போன்ற 'கொழுத்த' ஏழைகளுக்கு கொள்ளையடிக்க வசதி செய்து கொடுப்பதில் எதிர்கட்சி, ஆளும் கட்சி பேதமின்றி தோழமையுணர்வுடன் பாஜக-காங்கிரசு கூட்டணி செயல்பட்டுள்ளதற்கு உதாரணங்கள் ஒன்றா இரண்டா?
பாஜக-காங்கிரசு புனித கூட்டணிக்கு அப்படியொரு உதாரணம் நீராராடியா டேப் விவகாரத்தில் வெளிவந்தது. முகேஷ் அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட எரிவாயு வயல்களின் உற்பத்தியின் மீது முன் தேதியிட்டு 91,000 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்வதற்கு 2009 – ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிதம்பரம் வைத்த முன்மொழிதலை, எதிர்க்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தீவிரமாக ஆதரித்துப் பேசுகிறார். ‘தேசிய நலனுக்காக’ ஆளும் கட்சியுடன் ஒன்றுபட்டு நிற்கும்படியான இத்தகைய ‘தேசிய உணர்வை’ பா.ஜ.க.வுக்கு ஊட்டியவர் நீரா ராடியாதான் என்ற உண்மையை புட்டு புட்டு வைத்தது
நீராராடியா டேப்.
கடந்த 18 வருடங்களில் இவர்கள் அனைவரும் சேர்ந்து அள்ளிக் கொடுத்து கொள்ளையிடப்பட்ட நாட்டின் சொத்துக்கள்,
73 லட்சம் கோடிகளுக்கும் மேல். இவர்களின் கூட்டுக் களவானித்தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்தான் கிருஷ்ணா-கோதாவரி எண்ணைய் வயல்
ஊழல். 2G ஊழலுக்கு இணையான இந்த ஊழலை கணக்குத் தணிக்கைத் துறை அம்பலப்படுத்தியது. ஆயினும் பாஜகவோ, சிபிஎம்மோ அல்லது வேறெந்த எதிர்கட்சியுமோ இதனை மக்களரங்கிற்கு கொண்டு வந்து காங்கிரசை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்யவில்லை.விவகாரம் அத்தோடு முடிவுக்கு வந்தது. ஏனெனில் இவர்கள் அனைவருமே கூட்டுக் களவானிகள்.
இதே போல, போன வாரம் கர்நாடக முதலமைச்சர்
கோமாளி எடியூரப்பாவின் மெகா ஊழலை அம்பலப்படுத்தினார் லோகாயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. பல கோடி ரூபாய்க்கு சுரங்க ஊழலிலும், நில ஊழலிலும் எடியூரப்பா நேரடி தொடர்பிருப்பதை அவரது அறிக்கை
அம்பலப்படுத்தியது. இதை வைத்து கர்நாடக எதிர்க்கட்சிகள் பெரும் கலகத்தை உருவாக்கினார்களா என்றால் இல்லை. ஏனெனில் ஹெக்டேவின் அறிக்கை எடியூரப்பாவை மட்டுமல்ல, காங்கிரசின் எஸ். எம். கிருஷ்ணா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி போன்றோரையும் சேர்த்து அம்பலப்படுத்தியிருந்தது. மேலும், எடியூரப்பா மாட்டிக் கொள்வது இது முதல்முறையும் அல்ல. நிலபேர ஊழலிலும், சுரங்க மோசடி ஊழலிலும்,
சட்டமன்ற குதிரை பேர ஊழலிலும், தேவ கவுடாவின் நாற்காலி சண்டை நாடகங்களில் கோமாளியாகவும் இன்னும் பல கோமாளித்தனமாக செயல்பாடுகளிலும் அவமானப்பட்டவன்தான் இந்த எடியூரப்பா. இதற்கு முன்பே சில முறை நீதிபதி ஹெக்டே இவனை அம்பலப்படுத்தி ஒன்றும் வேலைக்காகவில்லை என்று
பத்திரிகையாளர்களிடம் அழுததும் உண்டு. இத்தனை நடந்தும் கோமாளி எடியூரப்பா வெட்கமின்றி சிரித்துக் கொண்டேதான் வலம் வருகிறான். இதே காலகட்டத்தில் பயங்கரவாத கட்சியான பாஜகவின் தலைவன் நிதின் கட்காரியின் மகன் வீட்டில் வருமான வரி ரெய்டு நடக்கிறது(கொஞ்ச காலம் முன்புதான் மிக ஆடம்பரமான திருமணம் ஒன்றை கட்காரி நடத்தியிருந்தான்).
(இன்னுமாடா நம்மள நம்புறாய்ங்க... அது அவிங்க தல விதி....!!)
இவையெல்லாம் காங்கிரசைப் பொறுத்தவரை ஒரேயொரு அம்சத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், 'நீ மட்டும் யோக்கியமா' என்று வாயடைக்கும் கருணாநிதி டெக்னிக்தான் அது. ஏனேனில், பாஜக மத்தியில் ஆட்சி செய்த போதும் சரி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் போதும் சரி ஊழல், மோசடி புகாரில் மாட்டிக் கொண்ட யாரொருவரையும் பொறுப்பிலிருந்து நீக்கியதில்லை. இது தவிர்த்து இந்த விவகாரங்களில் அத்தனை பேறும் ஒன்றாக கை நனைத்து பன்னாட்டு, உள்நாட்டு கொள்ளைக்கார முதலாளிகளுக்கு திருட்டு சேவகம் செய்துள்ளதால் வாயை மூடிக் கொண்டு விவகாரங்களை குழி தோண்டி புதைக்கவே செய்கின்றனர். சிரித்து கொண்டே வலம் வருவது எடியூரப்பா மட்டுமா? ஆ. ராசா, ஜெயலலிதா, அத்வானி, வாஜ்பேயி, வெங்காய நாயுடு, பா. சிதம்பரம், மன்மோகன், பிரகாஷ் கரத், புத்ததேவு, மோடி என அத்தனை அயோக்கியன்களும்தான் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே வலம் வருகிறார்கள்.
மாட்டிக் கொண்ட திருடர்களும், கொள்ளையர்களும் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே வலம் வருவது எதனால்? அது சுற்றியிருக்கும் மக்கள் அவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தால்தான். இங்கு நாம் கடிந்தது கொள்ள வேண்டியது திருட்டு கும்பலின் வெட்கங்கெட்ட நகைப்பையா அல்லது அதை அங்கீகரிக்கும் மக்களின் அரசியல் மொன்னைத்தனத்தையா?
அசுரன்
ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!
ரூ 3,74,937 கோடி ஊழல்!
ஊழல் சிறப்பிதழ்!!