TerrorisminFocus

Thursday, August 04, 2011

அவனவன் எடுக்குற முடிவு - வாயில ஈ போனா எனக்கென்ன பீ போனா எனக்கென்ன?

வெளிய போற எடியூரப்பாவுக்கு பதில் அவனோட அல்லக்கை கர்நாடகா 'பன்னீர்செல்வம்' சதானந்த கௌடா என்ற ஒரு விளக்கெண்ணைய் மண்டையன் முதலமைச்சராகப் போறானாம். அவன் வந்து உக்காரதுக்கு முன்னாடியே அவன பத்தின ஊழல் செய்தி வந்திருச்சி.

ஆன வரும் பின்னே மணியோச வரும் முன்னேங்கற மாதிரி, பிக்காலிப் பசங்க அத்தனை பேரும் பொறுக்கிகளா இருக்கானுங்க இதுல நல்ல பொறுக்கியாப் பாத்து பொறுக்கி எடுத்து வோட்டுப் போடனும் என்று சில பேரு பொறுக்கித்தனமா சொல்லிட்டுத் திரியுறானுங்க.

ரப்பர் ஸ்டாம்பும் அதன் மேனுபேக்சரரும்


இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம், கல்மாடி என்ற களவாடிய காமென்வெல்த் பொறுப்புள உக்கார வைச்சது பிரதமர்னு சொல்லி பாஜக குத்தாட்டம் போட்டது, பதிலுக்கு பாஜக எம்.பி. கல்மாடிய ரெகமண்டு பன்னதயும், பதிலுக்கு அந்த எம்.பி.ய கல்மாடி ரெகமெண்ட் செஞ்சதையும் அம்பலப்படுத்தியது காங்கிரசு.

திருடா... திருடா...

சுருக்கமாச் சொல்லனும்னா, பிரதமர் மன்னு மோகன் சிங்கோட வார்த்தயத்தான் கடன் வாங்கனும். இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நாக்கப் பிடுங்கற மாதிரி பாஜகவினர் கேள்வி கேப்பாங்களே என்ன செய்யப் போறீங்க என்று மன்னுவிடம் கேட்டதற்கு அவன் சொன்னான், "பாஜக மட்டும் யோக்யமா, அவனும் என்ன மாதிரி ஊரக் கொள்ளையடிச்ச நாதாரிதாங்கறத பேசுவோம்" என்று. இதுதான் உண்மை. இத நேரடியச் சொல்லாம அத்தன பேரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடிக்கிறாய்ங்க.

மன்னுவோட மேற்படி கருத்துக்கு பதிலா பெரிசா புடுங்கப் போறதா சீன் போட்ட பாஜக ஒரு மண்ணையும் செய்யல. ஆஹ, ரெண்டு பேரும் எதோ அக்கிரிமெண்டு போட்டுக்கிட்டு அமைதியாப் போயிட்டாங்க. நடுவில லோக்பால் பேப்பர எரிச்சி இந்த அக்கப்போருக்கு விளக்குப் பிடிச்சிட்டு இருக்காரு நம்ம அன்னா ஹசாரே என்ற அகில இந்தியா டிராபிக் ராமசாமி.

விளக்குப் பிடிச்ச மன்னாரு அகில இந்திய டிராபிக் ராமசாமி


கூட்டுக் களவானிங்க. அவிங்க என்னவோ தெளிவாத்தான் இருக்காங்க. பாருங்க இத்தன அமளிக்கும் காரணம் பன்னாட்டு, உள்நாட்டு தரகு முதலாளிகளின் பகற் கொள்ளையே. மேற்படி விவகாரங்கள் அனைத்திலும் இதுதான் அம்பலமாகியுள்ளது. 2ஜி மோசடியில் 20கோடி டாடா லஞ்சம் கொடுத்தது, கர்நாடக ரெட்டி சகோதரர்கள் கொள்ளையிடவும், ஜிண்டால் (நம்ம ஊரு திருவண்ணாமலை கிட்ட ஒரு மலைய ஆட்டயப் போட்டுருக்காங்க இவிங்க), அதானி போன்ற நிறுவனங்களின் ஆட்டயப் போடவும்தான் கர்நாடகாவில் சர்வகட்சி அயோக்கியர்களும் ஊழல் செய்துள்ளனர். இன்னும் இதுவரையான அனைத்து ஊழல் கொள்ளைகளும் நாட்டின் வளங்களை கொழுத்த முதலாளிகள் கொள்ளையிடவே செய்யப்பட்டுள்ளன என்ற உண்மையும் இந்த அமளி துமளி நாடகத்தில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. அன்னா ஹசாரே பிடித்த விளக்குக் கூட பாராளுமன்ற அக்கப் போருக்குத்தானேயொழிய அதன் அடிகொள்ளியான பன்னாட்டு-தரகு முதலாளிகளின் பகற் கொள்ளையை வெளிச்சமிட்டு காட்ட அல்ல.

ஏனேனில் இவர்கள் அனைவருமே மேற்படி முதலாளிகளின் ஏவல் நாய்கள்தான். ஏவல் நாய்களுக்கேயுரிய மனோபாவத்துடன் ஒருத்தனை ஒருத்தன் போட்டுக் கொடுக்கிறார்கள் அவ்வளவுதான் விசயம்.  இந்த நாடகத்துக்கு  முடிவு கட்ட வகையின்றி வாயில் ஈ போவது தெரியாமல் வேடிக்கைப் பாக்குது சனம் இதுதான் சகிக்க இயலாததாக உள்ளது....

அசுரன்

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!

ரூ 3,74,937 கோடி ஊழல்!

ஊழல் சிறப்பிதழ்!!


1 பின்னூட்டங்கள்:

said...

http://www.thehindu.com/news/states/karnataka/article2311114.ece

Related Posts with Thumbnails