உச்சிக் குடுமி மன்றத்தின் ஆர் எஸ் எஸ் தீர்ப்பு - தாராசிங்
எச்சரிக்கை செய்திருந்தது போலவே உச்சிக்குடுமி நீதிமன்றம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்கில் தாராசிங்கிற்கு மரண தண்டனையை நிராகரித்துள்ளது. மேலும், 11 ஆர் எஸ் எஸ் கிரிமினல்களின் விடுதலையையும் உறுதி செய்துள்ளது.
""
1998இல் பஜ்ரங்தள் கிரிமினல் தாராசிங்கால் பாதிரியார் ஸ்டெயின்ஸம் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கின் நிலை அதைவிடக் கேவலமானது. தாராசிங்கிற்கு மரணதண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2003 இல் தீர்ப்பளித்தது சி.பி.ஐ. நீதிமன்றம். பாதிரியை எரித்த கையோடு சையிக் ரஹ்மான் என்ற வியாபாரியை எரித்துக் கொன்றது பாதிரியார் அருள்தாஸை வெட்டிக் கொன்றது ஆகிய வழக்குகளும் தாராசிங்கின் மீது உள்ளன. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றமோ ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்கப் பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்த படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர் பில்லையென்று கூறியது சி.பி.ஐ. நீதிமன்றம்.
இந்த விளக்கங்களுக்குப் பொருத்தமானதொரு தீர்ப்பாக தாராசிங்கின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் 11 பேரை விடுதலை செய்தும் 2005இல் தீர்ப்பு வழங்கியது ஒரிசா உயர்நீதிமன்றம். பாதிரியாரைக் கொலை செய்யும் வகையில் தாராசிங் தாக்கியதற்கு ஆதாரமில்லை என்று வேறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
"" (புதிய ஜனநாயகம் 2010)
2005ல் இப்படியென்றால், 2010ல் உச்சிக்குடுமி மன்றம் இன்னும் ஒரு படி மேலே சென்று, மத மாற்றம்தான் இந்தப் படுகொலைக்குக் காரணம் என்ற அரியதொரு ஆர் எஸ் எஸ் கண்டுபிடிப்பை மக்களுக்கு வழங்கியுள்ளது.
இதைத்தானே ஆர் எஸ் எஸ்ம் சொல்லுது? அதாவது இனிமே எவனாவது மதமாற்றத்திற்கு பிரச்சாரம் செய்தால் கொலைகள் நிகழும் என்று ஆர் எஸ் எஸ்ன் குரலில் சொல்கிறது உச்சிக்குடுமி மன்றம்.
தாராசிங் திட்டமிட்டு படுகொலைகள் செய்கிறவன் என்பதும், ஆர் எஸ் எஸ்-பஜ்ரங்தள்ளின் தலைவன் என்பதும் மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுள்ள போதும் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை எனவே அவனுக்கு ஆயுள் தண்டனை. அதே நேரத்தில் பினாயக் சென்னுக்கோ அவர் அரசின் அயோக்கியத்தனத்தை அமைதி வழியில் தட்டிக் கேட்டார் என்பதற்காகவே அவருக்கெதிராகக் கொடுக்கப்பட்ட எல்லாமே பொய் ஆதாரங்கள் என்ற போதும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அயோக்கியத்தனத்துடன் ஒப்பிடும் போது பிரிட்டிஷ்காரன் கூட கொஞ்சம் நேர்மையா இருந்தானே?
இப்படி, நீதிமன்றங்களே ஆர் எஸ் எஸ்ன் பினாமிகளாக இருக்கும் போது ஆப்டர் ஆல் பத்ரி சேஷாத்ரியின் கிழக்குப் பதிப்பகமும், பா.ராகவனும் ஆர் எஸ் எஸ் பினாமிகளாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
தங்களை நடுநிலைவாதிகள் என்றும், இந்தியாவில் ஜனநாயகம் என்ற ஏதோ ஒன்று, எங்கோ ஒளிந்து கொண்டிருப்பதாகவும் அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.
காவிக் கறை படிந்த தீர்ப்புகள்
இது துரோகத்தின் விளை நிலம்!
பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!
பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!
டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!
சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே!!!
அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!
23 பின்னூட்டங்கள்:
வெட்கக்கேடு!
உச்ச நீதி மன்றங்கள் + உச்சிக் குடிமிகள் = உச்சிக் குடிமி மன்றங்கள் என்பது மீண்டும் நிரூபனமாகியுள்ளது.
கட்டுரயில் உங்கள் தார்மீக கோவம் தெரிகிறது தோழர்.....இத்தகைய moral decency அனைவருக்கும் தேவை...
உச்ச நீதி மன்றங்கள் + உச்சிக் குடிமிகள் = உச்சிக் குடிமி மன்றங்கள் என்பது மீண்டும் நிரூபனமாகியுள்ளது.
கட்டுரயில் உங்கள் தார்மீக கோவம் தெரிகிறது தோழர்.....இத்தகைய moral decency அனைவருக்கும் தேவை...
இந்தப் பதிவுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டு இது. ஐரோப்பிய முதலாளித்துவவாதி ஒருவருடன் விவாதித்ததில் அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்கு விடை தெரியவில்லை? Communism for Dummies வகையில் என் போன்ற கற்றுக்குட்டிகளுக்குப் புரியும் முறையில் பதிவொன்று போட்டு விளக்கவும்!
1.பொதுவுடமைவாதம் சோவியத், சீனா போன்றவற்றில் பரீட்சித்து தோல்வி கண்டுள்ளதே, கியூபா, வடகொரியா போன்ற நாடுகளில் குற்றுயிரும் குலையுயிருமாக மூச்சைப் பிடித்துக் கொண்டுள்ளன. ஆகையால் ஏற்ற தாழ்வு போன்றவற்றை உலகெங்கிலும், இப்பூமியின் இயல் நிலையான இரு முனை நிலையோடு இயல்பாக உருவாகும் ஒரு பொருளாதாரம், அரசு, சமூகம் என அதன் தாழ்நிலையிலுள்ள மக்கள் கல்வி மூலம் மேல்நிலைக்கு வரும் யதார்த்தமான முறை தானே இயற்கையானது? செயற்கையாகக் கட்டமைக்கப்படும் ஒரு சிஸ்டம் காலப் போக்கில் அழிந்து படும் என்பது உண்மையா?
2)பரவி இருக்காத ஒரு புள்ளியில் மையத்தில் குவியும் அதிகாரம் சர்வாதிகாரிகளைத் தான் தோற்றுவிக்கும்,பொதுவுடமைவாதம் இதுக்கு வாகாக இருக்கிறது? Direct Democracy எல்லாம் நடைமுறைக் கொவ்வாது!
3)பாட்டாளி மக்கள் சர்வதிகாரமானது அறிவு, கல்விசார் சமுகத்துக்கு எதிரானதா? தன் மூளை உழைப்பின் மூலம் ஒரு மருந்தினைக் கண்டுபிடிக்கும் அறிவியல்காரன், கணிதக் கோட்பாட்டாளன், கட்டடம் ஒன்றை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்ட் ஆகியோரின் மூளை உழைப்பின் பங்கு பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரத்தில் ஏதுவாக இருக்கும்?
4)மேல் நாடுகளில் தொழிலாளர் இப்போது கூட Welfare Statesகளில் ஓரளவு போதுமானளவு சம்பளம் பெறுகின்றனரே? அவர்களால் கார், நவீன கைப்பேசிகள் என்று சிறிய ஆடம்பரத் தேவைகளையும் கொஞ்சம் சிரமப்பட்டாவது வாங்கிட முடிகிறது, ஆகையால் உள்ளதையும் கெடுப்பானேன் என இருப்பதிலே திருப்தி கண்டு அமைதியாக வாழவே தலைப்படுவர்? இவர்களை உசுப்பி இருக்கும் சிஸ்டத்தைக் கலைப்பதெல்லாம் நடக்க முடியாதது.
5) முதலாளி என்பவன் வெறுமனே பணத்தோடு மட்டும் வருபவனல்ல. இருக்கும் பெரிய பெரிய கம்பனிகளின் முதல் வேரைப் பார்த்தால், அவை ஒரு புதிய ஐடியா, பயன்தரக்கூடிய திட்டம் ஒன்றுடன் தொடங்கப் பட்டன. அதன் ஆரம்பகர்த்தா ஒருவன் புதுமையான, தொழில் நுட்பக் கூர்மையான ஐடியா ஒன்றுடன் வந்தவன். முதலாளியம் ஒழிகையில் இப்படிப் பட்ட புத்திசாலியானோரும் அழிகின்றனர்?
6) வெளிநாடுகளில் இப்போது இடதுசாரியம் என்றால் வெறுமனே சமவுடைமை, சூழலியல் என்றாகிவிட்டது. அதிலும் பல்கலைக் கழகத்து இளைஞர், அதிதீவிர இளையோர் தவிர இடதுசாரியர் எவரும் பொதுவுடமை பற்றிப் பேசுவதில்லை. அதற்கு மாற்றாக இருக்கும் சமூக அமைப்புக்குள் சமவுடமை பற்றியே அவர்கள் பேச்சு அமைகிறது. மூன்றாம் உலக நாடுகளிலுள்ள நீங்கள் மட்டும் இன்னும் பொதுவுடமை சாலம் காட்டி வருகிறீர்கள்?
சென்ற பின்னூட்டின் தொடர்ச்சி..
7) உருவாகியுள்ள தகவல்சார் சமூகத்தில் பொருளாதார நெருக்குவாரங்கள், இயற்கை மூலங்கள் முடியுங் காலம் என மாறியுள்ள யுகத்தில், சீனா போன்ற நாடுகள் தங்கள் மக்கள் வளத்துடன் உலகின் பொருளாதார முன்னணியாக மாறிட போட்டி போட்டுக் கொண்டுள்ளன. இதில் வளர்ந்த நாடுகளே நடுங்கிக் கொண்டு இருக்கின்றன. இதில் நாம் பொதுவுடமை என்று சிஸ்டத்தை மாற்றிச் செல்வது பின்னோக்கிச் செல்வதாகவே அமையும்? போட்டியிலிருந்து விலகி பாதாளம் நோக்கிச் செல்வதாகவே அமையும்!
8) பொதுவுடமைச் சமுகம் என்பது மத நம்பிக்கையருக்கு சொர்க்கம் போல ஒரு நம்பிக்கைக் குறியீடு மட்டும் தானா? அது அடையமுடியா ஒரு perfect சமுதாயம்? ஒரு Utopia? அதன் முழுமையை உலகம் இருக்கும்வரை அடைய முடியாது, எப்படி பக்தனொருவன் இறந்ததும் வீடுபேறு கிட்டுமென பயபக்தியுடன் காலங்கழிக்கிறானோ அதுபோல் அதனை அடையலாம் என நாம் முயற்சித்துக் கொண்டிருப்போம் வாழ்நாளெல்லாம், என்பது சரியா?
9) பொதுவுடமை அரசை நிறுவுகையில் அந்த அரசுடன் சார்ந்தோர், அதற்காகப் போரிட்டோர் தவிர்த்து ஏனையோர் விலகவே பார்ப்பர். அதுவும் பக்கத்து நாடுகள் வெறு பொருளாதார சுதந்திரங்களுடன் அனைத்து கவர்ச்சிச் சலுகைகளையும் காட்டிக் கொண்டிருக்கையில் பொதுவுடமை அரசில் இருக்கும் அதிருப்தியாளனுக்கு அதை விட்டு ஓடிச் செல்லவே விருப்பம் தோன்றும். மனித மனம் நாடுவது தன் வசதியையே. தான் என்ற ஆதி மனிதக் கூறு களையப் படாது பொதுவுடமை சாத்தியமா? பொதுவுடமை என்பது அரசு என்பதைவிட மனித மனங்களை மாற்றி எல்லாரும் எல்லாருக்காகவும் இருக்கச் செய்வதல்லவா? இது தனிச் சொத்து உரிமையை பல்லாயிரம் ஆண்டுகளாகச் சுவைத்த மனிதனுக்குச் சரிவராதது. நான் என்ற அவன் மனத்தை உறுதியாக மாற்றிட முடியாது! உலகில் எல்லா நாடுகளும் பொதுவுடமையை ஏற்றுக் கொள்கையில் வேண்டுமானால் இது சாத்தியப் படலாம். எல்லா நாடுகளும் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது வேறு விசயம்!
10) எதிர்ப்பரசியல் செய்கையில் தனிமனித சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எனப் பேசும் இடதுசாரியர், தாமே அரசமைக்கையில் முதலாளிய நாடுகளின் ஆக்கிரமைப்பிலிருந்து தம் அமைப்பைக் காக்கும் பொருட்டு கருத்துச் சுதந்திரம், அரசியல் பேசும் உரிமை போன்றவற்றுக்கு பிரியாவிடை அளிக்கின்றனரே. கியூபா ஒரு எடுக்குக்காட்டு இங்கே.
நேர்மையாகப் பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன்!
ஆமா பாகிஸ்தான்ல மத துவேஷ சட்டத்த எதிர்த்த கவர்னர் மற்றும் ஒரு அமைச்சர் மற்றும் ஒரு அப்பாவி பெண்மணி கொல்லப்படிருக்கிறார்கள்.இதுக்கு என்னடா சொல்றா?முஸ்லீமுக்கு புளுக்கடி போடா
அன்புள்ள அசுரன் அவர்களே. கடந்த இரு நாட்களாக உங்கள் பதிவுகளை பார்த்துவருகிறேன் . மிகவும் அருமை. பார்ப்பனியம் பற்றியவைகள் சூப்பர். மற்றும் சில்லறை வணிகம், விவசாயிகளின் பிரச்சனைகள் மீதான பதிவுகளும் அருமை. உங்கள் முழு தளத்தையும் படிக்க துவக்கத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறேன். நாம் இருவரும் ஒத்த கருத்தையும் போராட்டத்தையும் உடையவர்கள்.
இந்திய மதத்தை பற்றி நானும் ஒரு வலை தளத்தை (ப்ளாக் அல்ல) ஆரம்பித்துள்ளேன் . www.indianreligions.webs.com. இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறேன். ஆகையால் குறைந்த பக்கங்கள் தான். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஒரு முறை வந்து போகவும். நன்றி.
//ஆமா பாகிஸ்தான்ல மத துவேஷ சட்டத்த எதிர்த்த கவர்னர் மற்றும் ஒரு அமைச்சர் மற்றும் ஒரு அப்பாவி பெண்மணி கொல்லப்படிருக்கிறார்கள்.இதுக்கு என்னடா சொல்றா?முஸ்லீமுக்கு புளுக்கடி போடா//
அனானிமஸ் ஆர்எஸ்எஸ் கோமாணான்டி அவர்களே, பாகிஸ்தான் மதவெறியர்களும் நீங்களும் உங்களது ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய சொறி பிடித்த மட்டைகள் என்று சுயவாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
சொறி பிடித்த மட்டைகள் ஒழிக்கப்படும் என்பதையும் புரிந்து கொள்வீர்கள். நாய்க்கடி, பன்னிக்கடி தெரியும் புளுக்கடி எனக்குத் தெரியாது. ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் கடிப்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
போராளி அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்கிறேன்....
//1.பொதுவுடமைவாதம் சோவியத், சீனா போன்றவற்றில் பரீட்சித்து தோல்வி கண்டுள்ளதே, கியூபா, வடகொரியா போன்ற நாடுகளில் குற்றுயிரும் குலையுயிருமாக மூச்சைப் பிடித்துக் கொண்டுள்ளன. //
இவை உங்களது நம்பிக்கைகள். முதல் விசயம் சோவியத் ரஸ்யா, சீனாவில் தோல்வியடைந்துள்ளதும் முதலாளித்துவமே ஆகும். அங்கு சோசலிசத்தின் அரசியல் தவறுகள் கம்யுனிஸ்டுகளை அதிகாரத்திலிருந்து வெளீயேற்றுவதை முதலில் செய்தது. பிறகு முதலாளித்துவ பொருளாதாரமாக அவற்றை மாற்றி சீர்குலைத்தது.
வட கொரியா, க்யூபா அடிப்படையில் தேசியப் பொருளாதாரங்களே அன்றி சோசலிசம் அல்ல.
//
ஆகையால் ஏற்ற தாழ்வு போன்றவற்றை உலகெங்கிலும், இப்பூமியின் இயல் நிலையான இரு முனை நிலையோடு இயல்பாக உருவாகும் ஒரு பொருளாதாரம், அரசு, சமூகம் என அதன் தாழ்நிலையிலுள்ள மக்கள் கல்வி மூலம் மேல்நிலைக்கு வரும் யதார்த்தமான முறை தானே இயற்கையானது? செயற்கையாகக் கட்டமைக்கப்படும் ஒரு சிஸ்டம் காலப் போக்கில் அழிந்து படும் என்பது உண்மையா?//
பொதுவில் மாற்றம் எப்படி நடக்கிறது? வளர்சிதைவு என்பார்களே இதில் சிதைவு என்பது என்ன? இதைக் கொஞ்சம் சமூகத்திற்கு அமல்படுத்திப் பாருங்களேன்.
//2)பரவி இருக்காத ஒரு புள்ளியில் மையத்தில் குவியும் அதிகாரம் சர்வாதிகாரிகளைத் தான் தோற்றுவிக்கும்,பொதுவுடமைவாதம் இதுக்கு வாகாக இருக்கிறது? Direct Democracy எல்லாம் நடைமுறைக் கொவ்வாது!//
மாவோவின் சீனாவில் (சோவியத் ரஷ்யாவில் ஆரம்ப கலத்தில்) கலாச்சார புரட்சி நீங்கள் குறிப்பிட்டதற்கு மாறாக மக்கள் கையில் அதிகாரத்தை வைத்திருந்தது. ப்ரவி இருககத புள்ளியில் அதிகாரம் குவிவதை தடுக்கும் மாற்றுச் செயல்பாடு கலாச்சார புரட்சியின் கோட்பாடு ஆகும். அதனை அமல்படுத்துவதில் சீனா நமக்கு நேர்மறை, எதிர்மறை அனுபவங்களை தந்துள்ளது. அதை செழுமைப்படுத்துவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர் கடமை.
//3)பாட்டாளி மக்கள் சர்வதிகாரமானது அறிவு, கல்விசார் சமுகத்துக்கு எதிரானதா? தன் மூளை உழைப்பின் மூலம் ஒரு மருந்தினைக் கண்டுபிடிக்கும் அறிவியல்காரன், கணிதக் கோட்பாட்டாளன், கட்டடம் ஒன்றை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்ட் ஆகியோரின் மூளை உழைப்பின் பங்கு பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரத்தில் ஏதுவாக இருக்கும்? //
இதற்கான பதில் சோவியத் ரஷ்யாவின் அறிவியல், கலை இலக்கிய பங்களிப்பில் கிடைக்கும்.
யார் ஆதர்வும் இன்றி சீனா முன்னேறிய கதையில் காணக் கிடைக்கும்.
//4)மேல் நாடுகளில் தொழிலாளர் இப்போது கூட Welfare Statesகளில் ஓரளவு போதுமானளவு சம்பளம் பெறுகின்றனரே? அவர்களால் கார், நவீன கைப்பேசிகள் என்று சிறிய ஆடம்பரத் தேவைகளையும் கொஞ்சம் சிரமப்பட்டாவது வாங்கிட முடிகிறது, ஆகையால் உள்ளதையும் கெடுப்பானேன் என இருப்பதிலே திருப்தி கண்டு அமைதியாக வாழவே தலைப்படுவர்? இவர்களை உசுப்பி இருக்கும் சிஸ்டத்தைக் கலைப்பதெல்லாம் நடக்க முடியாதது.//
மூன்றாம் உலக நாடுகளை அரசியல் பொருளாதார ரீதியாகச் சுரண்டாமல், ஏகாதிபத்திய அயோக்கியத்தனங்களுக்கு துணை நிற்காமல் நீங்கள் சொல்லும் மேல் நாடுகளின் தொழிலாளிகள் நல்வாழ்வு கிடைக்காது. ஒரேயொரு முதலாளித்துவ நாடு யாரையும் சுரண்டாமல் முன்னேறியதற்கு உதாரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்.
//5) முதலாளி என்பவன் வெறுமனே பணத்தோடு மட்டும் வருபவனல்ல. இருக்கும் பெரிய பெரிய கம்பனிகளின் முதல் வேரைப் பார்த்தால், அவை ஒரு புதிய ஐடியா, பயன்தரக்கூடிய திட்டம் ஒன்றுடன் தொடங்கப் பட்டன. அதன் ஆரம்பகர்த்தா ஒருவன் புதுமையான, தொழில் நுட்பக் கூர்மையான ஐடியா ஒன்றுடன் வந்தவன். முதலாளியம் ஒழிகையில் இப்படிப் பட்ட புத்திசாலியானோரும் அழிகின்றனர்?//
முற்றிலும் மையப்படுத்தப்பட்ட முதலாளித்துவ சமுதாயத்தில் இவையெல்லாமே சம்பளம் அல்லது கூலி கொடுத்து வாங்கக் கூடிய விசயங்கள்தான். இதற்காக ஒட்டு மொத்த லாபத்தையும் சில முதலாளிகள் மட்டுமே சுரண்டிச் செல்வது சரியில்லை.
புத்திசாலி அழிகிறான் என்பது உங்களது அதீத கற்பனையே. இவற்றுக்கு ஆதாரமில்லை. உண்மையில் ஒருவன் முதலாளீ ஆனவுடன் அவனைப் போலவே பல புத்திசாலிகள் உருவாகாமல் அழிப்பதைச் செய்கிறான் என்பதுதான் உண்மை.
மேலும், இந்தியாவில் மா-லே கட்சிகள் செய்யப்போவது அடிப்படையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியே. இதன் பொருளாதார அடிப்படை முதலாளித்துவ மயமாக்குவதையும் அதனை சோசலிசத்தை நோக்கி வளர்த்து செல்வதையும் இலக்காகக் கொண்டிருக்கும்.
//6) வெளிநாடுகளில் இப்போது இடதுசாரியம் என்றால் வெறுமனே சமவுடைமை, சூழலியல் என்றாகிவிட்டது. அதிலும் பல்கலைக் கழகத்து இளைஞர், அதிதீவிர இளையோர் தவிர இடதுசாரியர் எவரும் பொதுவுடமை பற்றிப் பேசுவதில்லை. அதற்கு மாற்றாக இருக்கும் சமூக அமைப்புக்குள் சமவுடமை பற்றியே அவர்கள் பேச்சு அமைகிறது. மூன்றாம் உலக நாடுகளிலுள்ள நீங்கள் மட்டும் இன்னும் பொதுவுடமை சாலம் காட்டி வருகிறீர்கள்?//
அங்கு அதற்கான தேவைஎழவில்ல. ஏனேனில் அந்த அரசுகள் 3ஆம் உலக நாடுகளைச் சுரண்டி தனது சொந்த நாட்டு மக்களை வளமுடன் வைத்துள்ளது. இங்குதான் நமக்கு சுரண்டலை அதிகமாக எதிர்கொள்கிறோம். எனவே இங்குதான் சோசலிசம், புரட்சியின் தேவை உள்ளது. இங்கு அடித்தால் அங்கும் ஆரம்பிக்கும்.
AnIndian அவர்களே,
தங்களது தளத்துக்கு வருகிறேன்.
தோழமையுடன்,
அசுரன்
//7) உருவாகியுள்ள தகவல்சார் சமூகத்தில் பொருளாதார நெருக்குவாரங்கள், இயற்கை மூலங்கள் முடியுங் காலம் என மாறியுள்ள யுகத்தில், சீனா போன்ற நாடுகள் தங்கள் மக்கள் வளத்துடன் உலகின் பொருளாதார முன்னணியாக மாறிட போட்டி போட்டுக் கொண்டுள்ளன. இதில் வளர்ந்த நாடுகளே நடுங்கிக் கொண்டு இருக்கின்றன. இதில் நாம் பொதுவுடமை என்று சிஸ்டத்தை மாற்றிச் செல்வது பின்னோக்கிச் செல்வதாகவே அமையும்? போட்டியிலிருந்து விலகி பாதாளம் நோக்கிச் செல்வதாகவே அமையும்!//
மேற்படி போட்டி உலகம் மொத்த உலகையும் லாப வெறிக்காக, சந்தைத தேவைக்காக வரைமுறையின்றி சுரண்டி அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது. க்ளோபல் வார்மிங்கிற்கு இன்றைய பொருளாதார அமைப்பில் தீர்வுண்டா சொல்லுங்களேன்?
பின்னொக்கி இழுப்பது என்பதெல்லாம் உங்களது கற்பனையே. உண்மையில் முதலாளித்துவம் தனது காலக்கெடு முடிந்த பிறகும் மனித சமுதாயத்தை முன்னோக்கி வளர விடாமல் பின்னோக்கி இழுத்துக் கொண்டுள்ளது.
//8) பொதுவுடமைச் சமுகம் என்பது மத நம்பிக்கையருக்கு சொர்க்கம் போல ஒரு நம்பிக்கைக் குறியீடு மட்டும் தானா? அது அடையமுடியா ஒரு perfect சமுதாயம்? ஒரு Utopia? அதன் முழுமையை உலகம் இருக்கும்வரை அடைய முடியாது, எப்படி பக்தனொருவன் இறந்ததும் வீடுபேறு கிட்டுமென பயபக்தியுடன் காலங்கழிக்கிறானோ அதுபோல் அதனை அடையலாம் என நாம் முயற்சித்துக் கொண்டிருப்போம் வாழ்நாளெல்லாம், என்பது சரியா? //
மார்க்ஸியத்தின் சாரம் மனிதாபிமானமே ஆகும். மற்ற்படி மார்க்ஸியம் மத நம்பிக்கையா, அறிவியலா என்பதை நீங்களே படித்து பகுத்து உணர முயற்சி செய்யலாம். என்னால் இயன்ற உதவிகளையும் செய்கிறேன். இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன புத்தகங்களும், தகவல்களும்.
//பொதுவுடமை அரசை நிறுவுகையில் அந்த அரசுடன் சார்ந்தோர், அதற்காகப் போரிட்டோர் தவிர்த்து ஏனையோர் விலகவே பார்ப்பர். அதுவும் பக்கத்து நாடுகள் வெறு பொருளாதார சுதந்திரங்களுடன் அனைத்து கவர்ச்சிச் சலுகைகளையும் காட்டிக் கொண்டிருக்கையில் பொதுவுடமை அரசில் இருக்கும் அதிருப்தியாளனுக்கு அதை விட்டு ஓடிச் செல்லவே விருப்பம் தோன்றும். மனித மனம் நாடுவது தன் வசதியையே. தான் என்ற ஆதி மனிதக் கூறு களையப் படாது பொதுவுடமை சாத்தியமா? பொதுவுடமை என்பது அரசு என்பதைவிட மனித மனங்களை மாற்றி எல்லாரும் எல்லாருக்காகவும் இருக்கச் செய்வதல்லவா? இது தனிச் சொத்து உரிமையை பல்லாயிரம் ஆண்டுகளாகச் சுவைத்த மனிதனுக்குச் சரிவராதது. நான் என்ற அவன் மனத்தை உறுதியாக மாற்றிட முடியாது! உலகில் எல்லா நாடுகளும் பொதுவுடமையை ஏற்றுக் கொள்கையில் வேண்டுமானால் இது சாத்தியப் படலாம். எல்லா நாடுகளும் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது வேறு விசயம்!
//
பொதுவுடமை அரசு என்று ஒன்று இருக்காவே இருக்காது. சோசலிச அரசுதான் உண்டு அல்லது புதிய ஜனநாயக அரசு.
பொதுச் சொத்துரிமையை பல்லாயிரம் ஆண்டு சுவைத்த மனிதன்தான் பிறகு தனிச்சொத்துடமையை சில ஆயிரம் ஆண்டுகளாக சுவைக்கிறான். இவற்றை வெறுமனே உங்களது சொந்த மனச்சார்புகளிலிருந்து யோசிக்காமல் பொதுவில் மனித குலத்தின் வரலாறு, சொத்துடமையின் வரலாறு. சமூக மாற்றங்களின் வரலாறு இவற்றை படித்து பிறகு பரிசீலியுங்கள் விடை கிடைக்கும்.
//பொதுவுடமை அரசில் இருக்கும் அதிருப்தியாளனுக்கு அதை விட்டு ஓடிச் செல்லவே விருப்பம் தோன்றும்.//
இவற்றுக்கு எதுவும் ஆதாரமில்லை.
//10) எதிர்ப்பரசியல் செய்கையில் தனிமனித சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எனப் பேசும் இடதுசாரியர், தாமே அரசமைக்கையில் முதலாளிய நாடுகளின் ஆக்கிரமைப்பிலிருந்து தம் அமைப்பைக் காக்கும் பொருட்டு கருத்துச் சுதந்திரம், அரசியல் பேசும் உரிமை போன்றவற்றுக்கு பிரியாவிடை அளிக்கின்றனரே. கியூபா ஒரு எடுக்குக்காட்டு இங்கே.
//
க்யுபா ஒரு சோசலிச நாடோ கம்யூனிச நாடோ அல்ல. மேலும், ஒரு அனைவருக்குமான ஜனநாயகம் என்று பொய் சொல்லி ஆட்சி நடத்துகிறான் முதலாளீ. நடைமுறையிலேயோ ஜுலியன் ஆசேஞ்ச் சிறைப்படுகிறார், உலகின் அதிகமானோரை சிறை வைத்துள்ளது அமெரிக்கா, பினாயக் சென் சிறையில் உள்ளார்.
அப்போது இடதுசாரிகள் சொல்கிறார்கள், ஏன் முதலாளிகளே பொய் சொல்கிறீர்கள் அனைவருக்குமான ஜனநாயகம் என்று, நேர்மையாக முதலாளித்துவ சர்வாதிகாரம் என்று ஏற்றுக் கொள்.
சோசலிச அரசு தன்னை பாட்டாளி அவ்ர்க்க சர்வாதிகாரம் என்கிறது. மக்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்யும் வகையில் திருப்பியழைக்கும் உரிமை, காலாச்சார புரட்சி, ஆலை மற்றும் நசிவில் நிர்வாக மக்கள் மன்றங்கள் என பல வடிவங்களில் கீழிருந்து அதிகாரம் செலுத்தப்படுவதை உறுதி செய்கிறது. இவை பல இடங்களில் வெற்றிபெற்றன, பல இடங்களில் அரசியல் ரீதியாக சீரழிக்கப்பட்டன. ஆனால, கோட்பாட்டளவில் கூட மக்களுக்கு அதிகாரம் கொடுக்கும் எதுவும் முதலாளித்துவத்தில் இல்லையே?
ஜனநாயகம் பற்றி முதலாளிகள் பேசிய பொழுதும்கூட நீங்கள் கேட்டது போலத்தான பழைய உலகப் பிரதிநிதிகள் சொன்னார்கள்,
மக்களுக்கு ஜனநாயகம் எனபதெல்லாம் சாத்தியமில்லை, குழப்பம்தான் வரும். பல்லாயிரம் வருடம் ஆளப் பட்டவர்கள் மக்கள், திடிரென்று எப்படி தங்களையே ஆளுபவர்களாக அவர்கள் உயர்வாகள் சாத்தியமில்லை என்று.
சிறிது சிந்தித்துப் பாருங்கள்...
//
நேர்மையாகப் பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன்!//
நேர்மையாக பதிலளித்துள்ளேன் என்று நம்புகிறேன்...
Post a Comment