TerrorisminFocus

Friday, December 10, 2010

விக்கிலீக்கை ஆதரிப்போம்!!

மீபத்தில் விக்கிலீக் வெளியிட்ட ரகசிய அமெரிக்கத் தூதரக உரையாடல்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. உலகிலுள்ள பல்வேறு அரசுகள், குறிப்பாக யுத்தவெறி பிடித்த அமெரிக்க அரசின் ரகசிய அயோக்கியத்தனங்களை துகிலுரித்தன விக்கிலீக்கின் இந்தச் செயல்பாடுகள். இதனைத் தொடர்ந்து கடும் கோபமுற்றுள்ள அமெரிக்கா விக்கிலீக்கின் ஸ்தாபகர் ஜூலியன் ஆசென்ஜை போலியான பாலியல் பாலாத்கார குற்றத்தில் லண்டனில் கைது செய்துள்ளது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.










இது தவிர விக்கிலீக் தளத்திற்கான பணப்பட்டுவாடாவை கையாண்டு வந்த விசா, மாஸ்டர் கார்டு மற்றும் பே பால் போன்ற தனியார் நிறுவனங்கள் தற்போது தமது சேவைகளை தீடிரென்று நிறுத்திக் கொண்டுள்ளனர். விக்கிலீக் தளம் செயல்பட்டு வந்த அமேசான் வழங்கி தனது சேவையை தடை செய்து விட்டது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், விக்கிலீக் சட்டவிரோதமான செயலில் இறங்கியுள்ளது என்பதே ஆகும். இது நகைப்புக்குரியது, ஏனேனில் ரகசிய ஆவணங்களை பத்திரிகைகளில் வெளியிடுவது சட்டவிரோதமானது அல்ல.










மேலும், அமெரிக்கா மற்றும் அதன் அல்லக்கை நாடுகளின் சகல மூன்றாம்தர இணையப் பொறுக்கிகளும் தற்போது விக்கிலீக்கின் இணையச் செயல்பாடுகளை முடக்க சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சமாளிக்கும் வகையில் பல்வேறு இணையக் திசைதிருப்பித் தளங்களில் (மிரர் சைட்டுகள்) தற்போது விக்கிலீக் செயல்பட்டு வருகிறது. விவரம் இங்குள்ளது: . இவற்றுக்கு எதிராக உலகம் முழுவதிலும் விக்கிலீக்கிற்கு ஆதரவாக ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் இவற்றில் நம்பிக்கை கொண்ட ஆர்வலர்கள் களம் இறங்கியுள்ளனர். அரசு இணையதளங்களும், விக்கிலீக் எதிர்ப்புத் தளங்களான விசா, மாஸ்டர் கார்டு, அமேசான் போன்றவை விக்கிலீக் ஆத்ராவாளர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.


இன்னிலையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விக்கிலீக்கை பாதுகாக்க வேண்டிய அவசியம் உணர்ந்து விக்கிலீக்கின் மீது நடந்து வரும் இந்த அநீதிகளை எல்லாருக்கும் பெரும் அளவில் கொண்டு செல்லவேண்டும். விக்கிலீக்கின் போராட்டத்தில் அதற்கு பக்கபலமாக நிற்க வேண்டும்.

பதிவர்களாகிய நாம் விக்கிலீக்கை ஆதரிப்போம் என்ற லோகோவை நமது தளங்களில் ஒட்டியும், பேஸ்புக், டிவிட்டர்களிலும், இமெயில்களிலும் விக்கிலீக் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டும். நேர் உரையாடல்களில் இது குறித்து பேசியும் தமது ஜனநாயக உணர்வை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளனர்.

தோழமையுடன்,
அசுரன்

விக்கிலீக் லோகோ:






wikileaks facebook: http://www.facebook.com/wikileaks#!/wikileaks?v=wall

தடையை மீறி விக்கிலீக்: http://www.wikileaks.ch/mirrors.html

விக்கிலீக்ஸ் பற்றிய ஒரு தொடர் பதிவு:

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 8

5 பின்னூட்டங்கள்:

said...

அமெரிக்கா எனும் கோடுரக் கொலைகாரன்:

http://www.youtube.com/watch?v=5rXPrfnU3G0&feature=player_embedded

said...

Wikileaks பிரச்சினையத் தொடர்ந்து இன்று இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படுவது, அரசாங்கங்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் எதிரான Operation Payback தாக்குதல். இணையவெளியின் சாதாரண குடிமக்களால் அதிகாரங்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தாக்குதல்கள் வெறும் சிறுபிள்ளை விளையாட்டா; எதிர்ப்பா; போரா; புரட்சியா; கலவரமா?

Operation Payback : பழைய போர்; புதிய போர்க்களம்

http://mauran.blogspot.com/2010/12/operation-payback.html

said...

http://maattru.blogspot.com/

இந்த தளத்தில் உள்ள விட்ஜெட்டையும் சேர்க்கவும்

said...

test

said...

புதிய இடுகைகள் ஏதாவது இருக்கும் என..... நீண்ட நாட்களாக...... உங்கள் தளத்திற்கு வந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.....

Related Posts with Thumbnails