மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!!
டாடாவுக்காகவும், சலீம் குருப் என்ற பன்னாட்டு கம்பெனிக்காகவும் நந்திகிராம், சிங்கூரில் ஆளும் போலிக் கம்யூனிஸ்ட்களின் குண்டர் படை '30க்கும் மேற்பட்ட மக்களை கொன்றும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும்' தனது பாசிசத்தை வெளிப்படுத்தியது.
தஸ்லீமா நஸ்ரின் விவகாரத்தில் முஸ்லீம் மதவெறியர்களுக்கு பயந்து தனது மதச்சார்பின்மை என்ற கோவனத்தையும் அவிழ்த்து விட்டது.
தற்போது அம்மணமான பின்னும் நாங்கள் மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் என தொடர்ந்து அறிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை சேர்ந்த பெண்களை ஓட்டுப் போட மறுத்த காரணத்தால் நிர்வாணப்படுத்தி ஓட விட்டு உள்ளனர் இந்த பாசிஸ்டுகள்.
இவ்வாறு நாட்டை மீண்டும் காலனியாக்குவதை செய்து கொண்டே விலைவாசி உயர்வு, 123, புஷ் விவகாரம் போன்றவற்றை கண்டித்து இவர்கள் மக்களை திசைதிருப்புவது தான் இந்த துரோகிகளின் செயல்பாடாக உள்ளது.
மேற்கு வங்கத்தின் 'மின்வாரியத்தின் தற்காலிக ஊழியர்கள் மாற்று சங்கம் அமைத்து போராடியதை' மக்கள் கூடும் இடத்தில் சிஐடியு குண்டர் படை சென்று தாக்கி ஒருவர் கொல்லப்பட்டும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
முக்கிய இடத்தில் மக்கள் முன்னிலையில் இவ்வாறு என்றால் நந்திகிராமில் கேட்கவே தேவையில்லை. இதனை மறுப்பவர்கள் நந்திகிராமில் நடத்திய பாசிசத்தை மறுப்பதில் வியப்பில்லை.
இப்படிப்பட்ட பாசிஸ்டுகளை, 'மக்கள் முன் அம்பலப்படுத்தாமல் உண்மையான எதிரிகளை' புரட்சிகர சக்திகள் இனம் காட்ட முடியாது
செய்திவிமர்சனம்
Related News:
2 பின்னூட்டங்கள்:
அசுரனே,
புரட்சி அரசாங்கம் இது போல் பல மடங்கு வன்முறையை தம் மக்கள் மீது பிரயோகித்தால், அதை வர்கப் போர் என்றுதான் சொல்வாய். 'பாசிசம்' என்ற பிரயோகம் அப்போது இருக்காது.
ஸ்டாலின் காலத்து ரஸ்சியாவிலும், மாவோவின் சைனாவிலும் நடந்த படு கொலைகள், மீறல்கள் எல்லாம் பாசிசமாகாது உனது அகராதியிலே ? நந்திகிராமில் நடக்கும் கொடுமைகள் எல்லாம் அவற்றுடன் ஒப்பிட்டால் சுண்டக்காய்.
அதெல்லாம் பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட வாதங்கள், திருபுவாதிகளின் / முதலாளித்துவ கைக்கூலிகளின் பொய்கள் என்று ஒரே வரியில் மறுப்பது உனது வழக்கம். ஆனால் உலகின் அனைத்து ஆய்வாளர்களும் (மார்க்சிய ஆய்வாளர்கள் உள்பட) அந்த படுகொலைகளை மறுக்கவில்லை. இன்னும் கூட இட்லரின் கொலைகளை மறுப்பவர்களும், நியாப்படுத்துவர்களும் உள்ளனர். அது போன்ற அறிவீலிகளுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் ?
பார்க்க :
Museum of Communism FAQ :
http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm#part1
வாய்யா தேவேந்திரன்...
நீ இங்க பாடிருக்குற பாட்ட பலபேறு பலமுற பாடிருக்குறாங்க. அதுக்கு பதிலும் சொல்லிருக்கு. ஸ்டாலினையும் நாம் விமர்சிக்கிறோம். ரஸ்யா ஏதோ தவறுகளே இல்லாத புனித தேசம் என்று எதுவும் நாம் சொல்லவில்லை. இன்னும் சொன்னால் ஸ்டாலினை நாம் விமர்சன்ப்பூர்வமாகவே அனுகுகிறோம். ஸ்டாலினுடைய தவறுகளை விமர்சிக்கிறோம், அந்த தவறுகளிலிருந்தும் கற்றுக் கொள்கிறோம். ஆனால் இவை அத்தனையும், ரஸ்யாவின் மகத்தான ஒப்பிட இயலாத சாதனைகளின் ஒளியில்தான் பரிசீலிக்கிறோம். அப்படியென்ன CPM சாதித்து கிழித்துவிட்டது என்று நந்திகிராமில் அட்டுழியும் செய்துவருகிறது?
ரஸ்யா ஐரோப்பாவின் சீக்காலியாக இருந்தது, ஜார் அரசன் தொடர்ந்து யுத்தம் செய்து படு தோல்விகளை தழுவினான் அது உள்நாட்டில் பெரும் கேடுகலை விளைவித்தது, பிறகு முதல் உலகப் போர் வந்தது, உடனே உள்நாட்டுப் போர், தொடர்ந்து புரட்சி, அதனை தொடர்ந்து பஞ்சம், மீண்டும் ஏகாதிபத்திய நாடுகள் ரஸ்யா மீது தொடுத்து ஆக்கிரமிப்பு யுத்தம், உள்நாட்டு சதிகள், எல்லைப் போர், இடையில் சில வருடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடைவெளி, மீண்டும் இரண்டாம் உலகப் போர், அதுவும் இந்த முறை வெறெந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாத அளவு மிகக் கடுமையான இழப்புகளை சந்தித்தது ரஸ்யா. இத்தனைக்கும் பிறகும் அது வல்லரசாக்வே வெளிவந்தது. அமெரிக்காவை மூத்திரம் பேய வைத்த்து. ரஸ்யாவின் பொருளாதாரம் பல மடங்கு வளர்ந்து வலுவாக நின்றது.
ஆனால் உங்க ஏகாதிபத்திய பொருளாதாரங்களின் அருகதையை பாருங்கள், 300 வருடம் உலகையே ஆண்ட பிரிட்டிஸ் அரசு இரண்டாம் உலகப் போர் முடிவில் ஓட்டாண்டியாக வெளிவந்தது.
ரொம்ப உங்களுக்கு நேர்மை அரிப்பு எடுத்து என்றால் இதோ கீழே உள்ள லிங்கில் ஸ்டாலின் குறித்த கட்டுரையில் வந்து வாதிடுங்கள். நாம் வெளிப்படையாகவே ஆதாரங்களோடு விசயங்களை வைத்து வாதிடுகிறோம். உங்களைப் போன்றவர்கள்தான் உடனே ஓடி ஒளிந்து விடுகிறார்கள்.
வறட்டுத்தனமாக உங்களுக்கு பிடித்திருக்கீறது என்று நான் பிடித்த முயலுக்கு மூனு கால் என்று வாதிடுகிறீர்கள். ஸ்டாலின் அத்தனை கொடுமைக்காரன் எனில் ஏன் அவரது ஒரு சொல்லுக்கு ஒட்டு மொத்த ரஸ்யாவே எழுந்து நின்றது? உள்நாட்டில் மக்களின் ஆதரவின்றியா ஆக அநீதியான இரண்டாம் உலக யுத்தத்தில் அதிக்கப்படியான இழப்புகளையும் மீறி அந்த நாடு வல்லராசாக அமெரிக்காவை தாண்டி பாய முடிந்தது? உங்களுக்கு பொது அறிவு அதிகமெனில் இந்த சுலபமான கேள்விக்கு பதில் சொல்லவும்.
http://asuran07.googlepages.com/redstar
அசுரன்
Post a Comment