TerrorisminFocus

Wednesday, May 21, 2008

புதிய உணர்வு, புதிய தளம் - தமிழசர்க்கிள் புதிய வடிவில்!!!

தோழர் ரயாகரன் தமிழரங்கம் என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருவது நாம் அறிந்ததே. தோழரின் தமிழ் சர்க்கிள் என்ற தளத்தில் சிந்தனையை தூண்டும் பல்வேறு கட்டுரைகள், புரட்சிகர பாடல்கள், உரைகள், வீடியோக்கள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், சமர் பத்திரிகைகளின் இணைய பதிப்புகள் ஆகியவற்றை பராமரித்து வந்தார். தமிழ் புரட்சிகர சிந்தனைகளின் களஞ்சியமாக இருந்தது அந்த தளம்.

இந்த தளத்திலுள்ள பல்வேறு குறைபாடுகளை களைந்து கொண்டு முற்றிலும் புதியதொரு தளத்தை வடிவமைக்க சமீப காலமாகவே தோழர் முயன்று வந்தார். அதற்க்கு எதுவும் உருப்படியான பங்களிப்புகள் செய்ய வக்கறவனாக இருந்தது வெட்கமடையச் செய்கிறது. ஆயினும் அந்த முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளது. தோழருக்கும், இந்த தள வடிவமைப்பு, பராமரிப்பில் பங்கெடுத்துள்ள முகம்/பெயர் தெரியா தோழர்களுக்கும்/நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.




புதிய தளம் இங்கே சொடுக்கினால் வரும். பார்த்து விட்டு தோழர் ரயாகரனிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆலோசனைகளை வழங்குங்கள்.

தமிழ்சர்க்கிள் தனது பழைய மஞ்சளும், சிகப்பும் கலந்த பழமையை உணர்த்தும் வண்ணப் பின்னணியிலிருந்து விடுவித்துக் கொண்டு விட்டது. புதிய உலகின் சிந்தனைகளை பரப்பும் களமாக அடர் சிகப்பில் ஆழ்ந்து யோசிப்பது போல இருக்கிறது இப்பொழுது.

தளத்தின் இலச்சினை படமும் கூடசிகப்பு பின்னணியில் வண்ணமயமாக நவீனமாக உள்ளது. தலைப்புக்கு கீழே புதிய ஜனநாயகம், சமர் உள்ளிட்ட பத்திரிகைகளின் லிங்க கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

புகைபடத் தொகுப்பு பகுதியில் படங்களின் மீது அம்புக்குறி சென்றால் பெரிதாக வருமாறு கொடுத்துள்ளது மிகச் சிறப்பாக உள்ளது.

தளத்தின் மேல் பகுதியில் படங்களை ஓடவிட்டுள்ளது நல்ல உத்தியாக மட்டும் இல்லாமல் அவை சிந்தனைகளை தூண்டும் விதமாக பல்வேறு வரலாற்று சம்பவங்களை நினைவுகூறும் முகமாக உள்ளன. படங்களை தொகுப்பாக காட்டும் பக்கத்தில் படங்களை இன்னும் பெரிதாக தெரியத் தரலாம். உலாவியோர் உலவுவோர் பகுதி மொத்தமே இரண்டு வரிகள் வருகிறது அதற்கு வலது கை பக்கத்தில் மொத்த பட்டையையும் ஒதுக்கியுள்ளது தேவையின்றி இடப் பற்றாக்குறையை தோற்றுவிக்கிறது.



புகைப்படங்களை ஓட விடும் மேல் பகுதியிலேயே வலது கை பக்கத்தில் உலவுவோர் விவரங்களை தந்து விட்டால் தளத்தின் முக்கிய பகுதிக்கு அதிக இடம் கிடைக்கும். புகைப் படங்களை தொகுப்பாக காட்டும் பக்கத்தில் படத்தின் அளவை அதிகப்படுத்தவும் இடம் கிடைக்கும்.

தலைப்பு பட்டையில் தமிழ் அரங்கம் என்ற எழுத்துப்படைக்கு வலது பக்கத்தில் மேற்கோள்கள் வருகின்றன. அவற்றின் பின்னணி வெண்மை நிறத்தில் உள்ளது மாறாக 'தமிழ் அரங்கம்' என்று எழுதப்பட்டுள்ள எழுத்துப்படையின் வண்ணத்தையே இதற்க்கும் பின்னணியாக கொடுத்துவிட்டு எழுத்தின் நிறத்தை வெண்மையாக மாற்றி தந்தால் தளம் பார்ப்பதற்க்கு இன்னும் மெருகேறியிருக்கும்.

வலது இடது பக்கங்களில் அதிக இடம் ஒதுக்கி தளத்தின் செய்திகள் இடம்பெறும் பகுதியை சுருக்கி கொடுப்பது சரியில்லை என்பது எனது கருத்து. பக்க பகுதிகள் என்பது முடிந்தளவு சுருக்கப்பட்டு முடிந்தால் அவை முழுவதுமாக எடுக்கப்பட்டு முழு இடமும் உபயோகப்படுத்தப்படுவதே சரி என்பது எனது கருத்து மட்டுமல்ல, முதலாளித்துவ தளங்கள் யாவற்றை பார்த்தாலும் கூட அவை இது போன்ற வடிவங்களையே பயன்படுத்துகின்றன.

அது போன்ற வடிவம் தளம் குறித்து உருவாகும் முதல் அபிப்ராயத்தை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு ஆற்றும்.

இணைப்புகளின் மீது அம்புக் குறியை கொண்டு சென்றாலோ அல்லது காப்பி சார்ட்கட் செய்தாலோ அதில் வருவது புரியாத தமிழ்சர்க்கிள் லிங்காக உள்ளது. மாறாக நேரடியாக அந்தந்த தளங்களின் முகவரி கிடைக்கப் பெறுமாறு செய்வது சரியாக இருக்குமென்று கருதுகிறேன்.

பழைய பதிவுகளை பார்க்க ஆர்செவ் பகுதி சேர்க்க வேண்டும். வேறு தளங்களின் பதிவுகளை தமிழ்சர்க்கிளில் இடும் பொழுது குறிப்பிட்ட பதிவரின் பெயர் வருவதில்லை இந்த குறை களையப்பட வேண்டியுள்ளது. மேலும் பெயரிலோ அல்லது வேறேதாவது இடத்திலோ கிளிக்கினாலே ஒரிஜினல் பதிவின் தளத்திற்கு செல்லுமாறு செய்தால் சிறப்பாக இருக்கும்.

பழைய தமிழ்சர்க்கிள் தளத்தில் சில லிங்குகள் வேலை செய்யவில்லை. ஒருவேளை தள மாற்றம் நடைபெற்று வருவதால் ஏற்ப்பட்ட பிரச்சினையா தெரியவில்லை.

கீழே மார்க்ஸிய மூலவர்களின் படம் உள்ள படம் உள்ளது அந்த படம் இடம் பெற்றுள்ள பகுதி சரியாக இல்லை என்று தோன்றுகிறது. ஒன்று கீழே இறக்க வேண்டும் அல்லது வேறேதாவது செய்ய வேண்டும்.

தளப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றே கருதுகிறேன். நாகாசு வேலைகள் முழுமை பெற்ற பிறகு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள் தோழர் ரயாகரன்.....

தோழமையுடன்,
அசுரன்

5 பின்னூட்டங்கள்:

said...

தோழமையுடன்

இணையத்தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். மற்றும் அபிராயங்கள் கவணத்தில் எடுத்துள்ளோம். இணையத்தில் மற்றங்கள், வெய்தவண்ணம் உள்ளோம். இடது பக்கம் விவாதத்தளம் ஒன்று வரவுள்ளது. மறுமொழிகளை ஒன்றாகத் திரட்டும்.

மற்றும் வேறு என்ன பகுதி தேவை? இணைப்புகளில் விடுபடல், தவறுகள் சுட்டிகாட்டினால் அவை சரி செய்யப்படும்.

ஓடைவசதி செய்யப்பட்டுள்ளது.

மற்றும் தமிழ் மணத்தில் நேரடியாக கொண்ட வர முனைகின்றோம். இன்றும் சரிவரவில்லை. காரணம் தெரியவில்லை.

said...

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகியவற்றை மாதவாரியாகப் பிரித்துப் பிரசுரித்தால் சிறப்பாக இருக்கும்.

கவி

said...

தோழர் ரயாகரன்,

தமிழ்மணத்தில் நேரடியாக கொண்டு வருகிற அம்சத்தில் தமிழ்மண தொழில்நுட்ப குழுவின் உதவியை நாடலாமே?

உண்மையிலேயே தமிழ்மணத்தில் தெரியத் த்ருவது சரியானது. ஏனேனில் தமிழரஙகத்தில் கிளிக்கி அது தமிழ் சர்க்கிளுக்கு சென்றால் பின்னூட்டுபவர்கள் தமிழ்சர்க்கிளிலேயே பின்னூட்டிவிடுவார்கள். அது தமிழ்மணத்தில் தேரியாமலேயே போய்விடும்...

இது குறித்து ஏதாவது செய்தாக வேண்டும்...

அசுரன்

said...

தோழர் ரயாகரன்,

பின்னூட்டமிட்டால் பின்வரும் செய்தி வருகிறது.

""இப் பெயர் பாவனையில் உள்ளது. வேறொன்றைத் தெரிவு செய்யவும்""

said...

Dear comrade,
It's really good work what you have done.
i used to view regularly your site.
Now all the songs are very clear and photos what you have given also.

Related Posts with Thumbnails