TerrorisminFocus

Thursday, October 18, 2007

இந்துத்துவம் என்றால் பொய்த்துவம், பித்தலாட்டம், கருங்காலித்தனம் என்று பொருள்!

ந்துத்துவ பயங்கரவாதிகளின் புளூகு மூட்டைகளுக்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. இங்கு தமிழ்மணத்திலும் கூட நீலகண்டன் போன்ற ஆகாச புளுகர்களும், ஜடாயு போன்ற பொய்யர்களும் பார்ப்பன பயங்கரவாதிகளின் நேர்மையின்மைக்கும், கோழைத்தனத்திற்க்கும் சாட்சியாக கொஞ்ச காலம் இருந்து விட்டு தலைமறைவாக தப்பி ஓடினர். சமீபத்தில் அரசியல் அரங்கை கிடுகிடுக்க வைத்த ஆதாம் பாலம் பிரச்சினையிலும் அவர்களின் பொய்கள் வெகு விமர்சையாகவே அம்பலப்படுத்தப்பட்டன. இது போல வரலாறு நெடுகிலும் இவர்களின் பொய்கள் விரவிக் கிடக்கின்றன. புத்தகங்களை திருத்தி எழுதுவதெல்லா இவர்களின் இன்றைய பண்பாடல்ல. 2000 வருடங்களுக்கு முன்பே அவர்கள் இதனை செய்துள்ளனர். துரதிருஷ்டவசமாக நவீன விஞ்ஞான முறைகள் இந்த போலித்தனங்களை, கருங்காலித்தனங்களை இன்று அம்பலப்படுத்திவிடுகின்றது. இதே போல திண்ணை என்ற இந்துத்துவ பன்றிகளின் தொழுவத்தில் பொய் மன்னர் மலர்மன்னனும் அவரது அல்லக்கைகளும்(நீலகண்டன் உள்ளிட்டோர்) சேர்ந்து கட்டிய பொய் மாளிகைகளை தோழர் கற்பக விநாயகம் வீச்சாக அம்பலப்படுத்தி பல்வேறு கட்டுரைகளை எழுதியிருந்தார். அவற்றில் குறிப்பான இரண்டு பொய்கள் குறித்த கட்டுரைகளை இங்கு மறு பிரசூரம் செய்கிறேன். ஒன்று விவேகானந்தர் மண்டபம் குறித்த பொய், மற்றொன்று கோயில் இடிப்பு குறித்த மலர்மன்னனின் பொய் பிரச்சாரம் குறித்து.

*******************

#1)

கே என் பணிக்கர், தனது நூலில், விவேகானந்தர் நினைவு மண்டபம் குறித்து பின்வருமாறு எழுதுகிறார்.

1963ல் விவேகானந்தர் நூற்றாண்டு விழா கொண்டாடும் முகமாய், கன்னியாகுமரியில் காலம் காலமாய் மீனவர்கள் பயன்படுத்தி வந்த பாறையை மண்டபமாக்க முயற்சித்தார்கள். உள்ளூர் மீனவர்கள் அதை எதிர்த்ததால் அன்றைய காங்கிரசு அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. உடனே இதை அகில இந்தியப் பிரச்சினையாக ஆக்கினர். 235 எம் பிக்களிடம் இதை தேசியத்தலைவருக்கான மண்டபம் எனும் போர்வையில் கையெழுத்து வாங்கி, பார்லிமெண்டில் பிரச்சினை எழுப்பினர். அப்போது ஆர் வெங்கட்டராமன் போன்ற இந்துத்துவ ஆதரவு காங்கிரசு தலைவர்கள் மாநில அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து, இம்மண்டப வேலைக்கு அனுமதி வாங்கித் தந்தனர்.

ஆர் எஸ் எஸ் தரும் விவேகாநந்தர் மண்டபம் சாட்சியம்:

****

ஓர் உள்ளூர் கமிட்டியே, இந்நினைவு மண்டபத்தைக் கட்ட முயற்சி எடுத்தது என்பது போன்ற தோற்றத்தை, நீல கண்டனின் கட்டுரை ஏற்படுத்த முயல்வதால் அதன் முழு வரலாறையும் சொல்லி விடுவது இப்போதைக்கு நல்லது.

1948ல் காந்தி ஆர் எஸ் எஸ் காரரால் கொல்லப்பட்டார். உடனடியாக அவ்வமைப்பு இந்தியாவெங்கும் தடை செய்யப்பட்டது.

அனைத்துத் தரப்பிலும் ஆர் எஸ் எஸ் வெறுக்கப்பட்டது. பல இடங்களில் காந்தி கொல்லப்பட்ட அன்று அதன் அலுவலகங்கள் மக்களால் தாக்கப்பட்டன. திருப்பூர் நகரில் அதன் அலுவலகம் நொறுக்கப்பட்டு அதன் உறுப்பினர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள் என்று திருப்பூர் தியாகி ராமசாமி தனது சுய சரிதையில் தெரிவித்துள்ளார். (இவர் 1970 வரை கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் காங்கிரசிலும் இருந்த சுதந்திரப் போர் தியாகி ஆவார்). தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் வேர் பிடித்து இருந்ததாலும், காந்தி கொலையாலும் ஆர் எஸ் எஸ் ஆல் தமிழகத்தில் 1950களில் நுழையவே முடியவில்லை.இதனை 'தமிழ் நாட்டில் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து எழுச்சியின் கதை ' எனும் ஆர் எஸ் எஸ் வெளியீட்டில் அவர்களே '1980 இன் ஆரம்பம் வரை மிகவும் பலவீனமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது ', என ஒப்புக் கொள்கிறார்கள்.

1949ல் ஆர் எஸ் எஸ் சின் மீதான தடை நீக்கப்பட்டது. அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விசயம் என்ன என்றால் 'சங்கப் பயிற்சிக்குழுக்கள் மீண்டும் பல இடங்களில் தொடங்கப்பட்டன. ஆனால் அவை விரிவடைய முடியவில்லை. பயிற்சிக்குழுக்கள் பரவவில்லை என்றாலும் சங்க சுயம் சேவக்குகள் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.அவை தேசிய நடவடிக்கைகளை முன்னேற வைத்தன.அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று, நமது தாய் நாட்டின் தெற்கு முனைக்கு அப்பால் உள்ள கடலில் விவேகானந்தர் நினைவுப்பாறையை நிர்மாணித்ததாகும்.சுவாமி விவேகானந்தர் அலைந்து திரியும் ஒரு சன்னியாசி என்கிற முறையில் கன்னியாகுமரி கோவிலுக்கு வந்தார். பிரார்த்தனை செய்துவிட்டு கடலில் நீந்திப் போய் கோவிலுக்கு முன்பு, கடலுக்கு நடுவில் எழுந்து நிற்கும் ஒரு பெரும்பாறையில் அமர்ந்தார். 1892 டிசம்பர் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் தியானம் செய்தார். இந்தப்பாறை விவேகானந்தர் பாறை எனப் பெயரிடப் பட்டது. சுவாமிஜி பிறந்த நூற்றாண்டில் அதாவது 1963ல் அந்தப் பாறையின் மீது அவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டுவது என்னும் யோசனை ஆர் எஸ் எஸ் இன் பிராந்திய பிரச்சாரகர் சிறீ தாதாஜி திதோல்கருக்குத் தோன்றியது. சங்கம் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டது. விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டி என்று ஒரு தனி அமைப்பு அந்த ஆண்டு நிறுவப்பட்டது '.

ஆக, அந்நினைவுச் சின்னம் அவ்வூர் மக்களின் கோரிக்கையே அல்ல. அது ஆர் எஸ் எஸ் ஆல் தீட்டப்பட்ட திட்டம் என்பதை அவர்கள் வெளியிட்ட நூலே தெளிவாகச் சொல்லி விட்டது. நினைவு மண்டபம் பற்றிய யோசனை சொன்னவரும் கன்னியாகுமரி ஆள் மாதிரி இல்லை. பேரை வைத்துப் பார்க்கையில் மராட்டியர் மாதிரித் தெரிகிறது. பாறைக்கு புதியதாக விவேகானந்தர் பெயரைச் சூட்டியதும் ஆர் எஸ் எஸ் தான்.

ஏற்கெனவே இம்மண்ணில் பார்ப்பனீய எதிர்ப்பு நிலவியதால் (இவ்வெதிர்ப்பையும் அந்நூலே ஒப்புக்கொண்டுள்ளது) அவர்கள் பார்ப்பனர் அல்லாதாரான விவேகாநந்தரை முன்னிறுத்தி நுழைய முயன்றனர். அவர் ஏற்கெனவே, சனாதன தர்மத்துள் பார்ப்பனர் அல்லாதாரையும் உள்ளிழுக்கும் வகையில் தர்மத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தவர்தாம்.

குமரி மாவட்டத்தில் இந்து நாடார்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவ நாடார்கள் சிறுபான்மையாகவும், மீனவர்கள் முழுக்க கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். இந்து நாடாருக்கும், கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இடையிலான வேற்றுமைகளை ஊதிப்பெருக்கிக் குளிர்காய நினைத்த சங் பரிவார், அதற்கு உகந்த இடமாய் குமரியைத் தேர்வு செய்தது. சமீப நூற்றாண்டுகளில்தான் குமரியில் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்துள்ளது. எளிதில் அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராய் இந்து மக்களை அணிதிரட்டிவிட முடியும் என்று கணக்குப் போட்டிருந்தது.

இந்தக்காரணங்களால் விவேகானந்தர் பாறை விசயத்தைக் கையில் எடுத்த ஆர் எஸ் எஸ், அதற்கு முன்பிருந்த பாறையின் நிலைமையை வெளிப்படையாய் பேசுவதைத் தவிர்த்தது. குமரி முனையை அங்குள்ள மீனவர்கள் மீன்பிடித்துறைமுகமாய்ப் பல நூற்றாண்டுகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அங்கிருந்து வெகு அருகாமையிலுள்ள பாறையை மீன்பிடி வலைகளைக் காயவைக்கவும், கடலுக்குள் சென்று விட்டு வரும் மீனவர்கள் உணவருந்தி ஓய்வெடுக்கவும் பயன்படுத்தி வந்தனர். ஆண்டுக்கொருமுறை நடக்கும் சிலுவை வைத்து வழிபடும் 'குருந்தட்டி ' வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர். இருந்தும் அப்பாறையை அராஜகமாகக் கைப்பற்றி விவேகானந்தர் மண்டபம் அமைக்கும் பணியில் ஆர் எஸ் எஸ் இறங்கியது. ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் சொல்கிறது -

'ஆர் எஸ் எஸ் இன் ஓய்வு பெற்ற பொதுச்செயலாளர் மானனீய ஏக்நாத்ஜி ராணடேயிடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பெரிதும் சிறிதுமாகப் பல பொதுக்கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. இந்தக் கூட்டங்களில் சுவாமி விவேகானந்தரின் இந்து தேசியக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. சென்னை கடற்கரையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. சுவாமி சின்மயானந்தாவோடு, குருஜியும் அக்கூட்டத்தில் பேசினார். தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம் அந்தப் பாறையில் ஒரு கல்வெட்டைத் திறந்து வைத்தார். அதில் 1892 இல் சுவாமிஜி அங்கு தியானம் செய்தார் என்ற அறிவிப்பு இருந்தது.அது, உள்ளூர் கிறித்தவ சபையின் தூண்டுதலின் பேரில் உள்ளூர் கிறித்தவ மீனவர்களால் உடைத்து அழிக்கப்பட்டது. அதோடு அங்கு ஒரு சிலுவையும் நிறுவப்பட்டது. பல தலையீடுகள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சுவாமிஜிக்கு ஒரு மாபெரும் நினைவகம் எழுப்புவதற்காக விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டியிடம் அந்தப் பாறையை இறுதியாக அரசாங்கம் ஒப்படைத்தது. நாடு முழுவதிலும் உள்ள முழு சங்கமும் இந்த வேலையில் ஈடுபட்டு, மாபெரும் நினைவகம் எழுப்பப்பட்டது. அது இப்பொழுது ஒரு பெருமைக்குரிய, மதிப்பிற்குரிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது '.

தென் கோடியில் உள்ள அந்தப் பாறை மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வெவ்வேறு பெயர்களில் முக்கால் வாசி கன்னியாகுமரி ஊரே ஆர் எஸ் எஸ் ஆல் ஆக்கிரமிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தை ஆண்ட பக்தவச்சலமும், டெல்லியை ஆண்ட லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றோர் நேரடியாகவும், காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகவும் உதவி புரிந்தனர். எதிர்த்த மீனவர்களை கேரளாவில் இருந்து இறக்கிய ஆர் எஸ் எஸ் காரர்களும் தமிழ்நாடு போலீசும் கவனித்துக் கொண்டனர்.

ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் 'இந்த நினைவகம் செப். 2, 1970இல் புண்ணியாசனை செய்து வைக்கப்பட்டது. இது பிற்காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து எழுச்சிக்கான விதைகளாஇத் தூவிய ஒரு முக்கியத் திட்டமாக அமைந்தது. ஏக்நாத் ராணடே தலைமையில் விவேகானந்தா கேந்திரம் பரிணமிப்பதற்கு விவேகானந்தா பாறை நினைவகம் நிறுவப்பட்டது அடித்தளமாக அமைந்தது. குறிப்பாக தெற்கில் கிறித்தவ மதத்தின் விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்பதற்குக்கூட இந்தக் கேந்திரம் பங்களித்துள்ளது ' என்று எல்லா விசயங்களையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டது. இந்து எழுச்சி என இவர்கள் குறிப்பிடுவது மண்டைக்காட்டில் கலவரம் செய்ததைத்தான்.

கடலும், கடலைச்சார்ந்த இடமும் யாருக்கு சொந்தம் ? நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் ஆண்டு அனுபவித்துக் கொண்டு வாழும் மீனவர்களுக்குத்தானே அவை சொந்தமாகும் ? ஓரிரு நாளில் விவேகானந்தர் சென்று அங்கு தங்கி இருந்து விட்ட ஒரே காரணத்துக்காக அப்பாறையை, அம்மக்களிடம் இருந்து கைப்பற்றி விடுவது என்ன நாகரீகம் எனத் தெரியவில்லை ?

உடல் உழைப்பை உதாசீனம் செய்வது/இழிவுபடுத்துவது என்பது காலம் காலமாய் வைதீக சித்தாந்தத்தால் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தன்மையையே இச்செயலிலும் காண முடிகிறது. உடலுழைக்கும் மீனவரின் சொத்தை, அவர்களின் அன்றாட செயல்பாட்டில் இருந்து பறித்து மதவெறிப் பிரச்சார நூல்களை விற்கும் இடமாக்கி இருக்கின்றனர்.

***********************

#2)

உண்மையைத் தேடியலைந்தபோது

புதுச்சேரி வேதபுரீஸ்வரரும், இடிக்கப்பட்ட கோவிலும், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ,குழந்தைத் திருமணம், தீண்டாமையும் ஆன்மீகமும்

கற்பகவிநாயகம்

புதுச்சேரி வேதபுரீஸ்வரரும், இடிக்கப்பட்ட கோவிலும்

*****************************************

"புதுச்சேரியில் ஈச்வரன் தர்மராஜா கோவில் இடிக்கப்பட்டு மாதா கோவில் கட்டப்பட்டது" என்றும், "புதுவை ஈச்வரன் தர்மராஜர் கோவில் இடிக்கப்பட்டமைக்கு ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் ஆதாரமுள்ளது. ஈச்வரன் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட கன்னி மேரி மாதாகோவிலின் படிக்கட்டுகளாக ஹிந்துக்கள் வணங்கிய விக்கிரகங்கள் பயன்படுத்தப்பட்டன!" ( அந்த நான்கு பேருக்கும் நன்றி! - மலர்மன்னன் மார்ச்சு 24,2006) என்றும் மலர் மன்னன் சொல்கிறார்.

இவர் குறிப்பிடுவது போல் வேதபுரீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது அந்நாட்குறிப்பில் உள்ளது. ஆனால் அதை இடித்துத்தான் மாதா கோவில் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை.

மலர் மன்னன் சொல்வதைப் போன்றே இந்து முன்னணியும் தனது துண்டுப் பிரசுரம் ஒன்றில் "பாண்டிச்சேரி புனித ஜென்மாக்கினி மாதா கோவில், வேதபுரீச்சுரர் ஆலயத்தை இடித்து விட்டு அதன் மீது கட்டப்பட்டது" என்றும், "1748ல் பிரெஞ்சு கவர்னராக பாண்டிச்சேரியில் இருந்த டியூப்ளேதான் இவ்வாறு கட்டினான்" என்றும் ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை ஆதாரம் காட்டி நீட்டி முழங்குகிறது.

உண்மையில் புதுவையில் அப்போது நடந்தது என்ன என்பதை ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் மூலமே அறிய முயல்வோம்.

1748 இல் இடிக்கப்பட்ட வேதபுரீசுவரர் கோவில் அருகில் ஏற்கெனவே கிறிஸ்தவ ஆலயம் இருந்துள்ளது என்பதனை, ஆனந்த ரங்கம் பிள்ளை, கோவில் இடிக்கப்படுவதற்கு முந்தைய ஆண்டில், 1747 ஆம் ஆண்டின் புது வருஷ ஆசி சொல்ல, சம்பா கோவிலுக்கு (கிறித்துவ கோவில்) போனதன் மூலம் நிரூபணமாகிறது.

ஆகவே, ஈச்சுவரன் கோவிலை இடித்துத்தான் கிறித்துவ ஆலயம் எழுப்பப்பட்டது என்பது உண்மை அல்ல.

துயூப்ளே, மத வெறியுடன் ஈச்சுவரன் கோவிலை இடித்தான் எனச் சொல்லவும் ஆதாரம் இல்லை. ஆனால் அக்கோவிலை அப்புறப்படுத்த சில பாதிரிகள் முனைந்தனர் 1747 ஆம் ஆண்டில். அப்போது துயூப்ளேயிடம் பெரும் செல்வாக்கோடு இருந்த பிள்ளையின் மூலம் சிபாரிசு பெற்றுக்கொண்டு வேதபுரீசுவரர் கோவிலை இடிக்க, காரைக்காலை சேர்ந்த கிறித்துவ மதகுரு முனைந்திருக்கிறார். அதற்கு தூதுவராய் வந்த ஆளின் பெயர் - அன்னபூரணய்யர்.

1747 அக்டய்பர் 8ஆம் தேதி அன்னபூரணய்யர், காரைக்கால் கிறித்துவ மதக்குருவின் தூதராக வந்து வேதபுரீச்வரர் கோவிலை இடித்துப் போடச் சொல்லி, ஆனந்த ரங்கம் பிள்ளையிடம் சிபாரிசு செய்ததை அன்னாரின் டைரி பதிவு செய்துள்ளது. ஆனால், அச்செயலுக்கு பிள்ளை ஒப்பவில்லை.

மாறாக அதற்கு முந்தைய ஆண்டு 1746 செப்டம்பர் 22 ஆம் தேதி, "மக்கள், வேதபுரீஸ்வரன் கோவில் மதில் கட்டுவதற்கு உத்தாரம் கேட்டார்கள். அந்த மதில் கட்டுகிறதற்கு மாத்திரம் கட்டளையிட்டால், வெகு தூரம் கீர்த்தியாய் இருக்குமென்று பின்னையும் தோத்திரமான உபசாரமான வார்த்தைகளாய்ச் சொல்லிக் கேட்டவிடத்திலே நல்லது அப்படியே உத்தாரங் கொடுக்கிறோம் என்கிறதாய்ச் சொல்லிக் கொண்டே நடந்து கணக்கு எழுதுகிற அறையிலே போய் விட்டார்கள்" துயூப்ளே என்று பிள்ளையின் சொஸ்த லிகிதக் குறிப்பு சொல்கிறது.

ஜென்மராக்கினி மாதா கோவிலை புதுவை மக்கள் சம்பா கோவில் என்று அழைத்தல் வழக்கம். இதற்கும் இந்து முன்னணி "அது ஆதியிலே சம்பாலீசுவரர் கோவில்தான்" எனக் கரடி விட்டது. "சாம்பவுலோ" என போர்த்துகீசிய பாதிரிகளை அழைக்கும் சொல்லே மருவி "சம்பா" ஆனது என்பது உண்மை.

(இதே மாதிரி, சென்னையை அடுத்த பரங்கி மலையை 'பிருங்கி முனிவர்' மலை எனக் கயிறு திரித்தனர். பரங்கி என்பது ஐரோப்பியரைக் குறிக்கும் சொல் என்பதும், 18ஆம் நூற்றாண்டு முதல் அம்மலையைச் சார்ந்த இடங்களில் ஐரோப்பிய ராணுவம் பாளையம் அடித்திருந்தது என்பதையும் மத வெறியில் மக்கள் யோசிக்கவா போகின்றனர்? )

சம்பா கோவிலை 1692ஆம் ஆண்டில் பிரான்சு தேசத்தின் மன்னன் உதவியுடன் கட்டியுள்ளனர், புதுவை கிறிஸ்தவர்கள். அடுத்த ஆண்டே டச்சுப் படையெடுப்பில், இக்கோவில் இடிக்கப்பட்டது. அதே இடத்தில் டச்சுக்காரர்களின் சர்ச் கட்டப்பட்டது. 1761 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பில் மீண்டும் அது இடிக்கப்பட்டது. 1791ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டதே இப்போதுள்ள சர்ச்.

1746 ஆம் ஆண்டு, வேதபுரீசுவரருக்கு மதில் கட்ட உத்தாரம் கொடுத்த துயூப்ளே, ஏன் இரண்டே ஆண்டுகளில் இடிக்கச் சொன்னான்?

நாட்குறிப்புகளை வாசிக்கையில் 1746 க்கும், 1748க்கும் உள்ள வேறுபாடு புலனாகின்றது. ஆம். 1748 ஆகஸ்ட் மாதவாக்கில், பிரிட்டிஷ் படைகள் புதுச்சேரியைத் தாக்குவதும், பதிலுக்கு பிரெஞ்சுப் படையின் தாக்குதலும் விலாவாரியாகப் பதிவாகியுள்ளது.

அப்போரில் பீரங்கித் தாக்குதல் இருபக்கத்திலும் நடந்துள்ளது. பிரிட்டிசாரின் பீரங்கிக் குண்டு, தீக்குடுவை போன்றவை புதுச்சேரியுள் குறி தவறாது வீழ்ந்து பலர் கை கால் சிதறி மாண்ட செய்திகளும், பிராஞ்சுப் படையின் குண்டுகள் குறி தவறிப் போய் வீழ்வதும் பிள்ளையின் டைரியில் சொல்லப்பட்டுள்ளன.

இப்போரில், குறி பார்த்துக் குண்டு போட பிரிட்டிஷாருக்கு வேதபுரீச்வரர் கோவில் கோபுரம் நன்கு உதவியுள்ளது.

தூரத்தில் இருந்தே பிரெஞ்சுக் கோட்டையைக் கண்டுபிடிக்கும் வகையில் கோபுரம் இருந்ததால் அது பிரிட்டிஷ் படைக்கு உதவியாய் இருந்தது.

பிரிட்டிஷ் படைகளின் பீரங்கிக் குண்டுகளில் இருந்து புதுச்சேரிக் கோட்டையைக் காக்கவே, கோவில் இடிக்கப்பட்டுள்ளது.

இடிக்கப்பட்டது, அப்போரின்போது வேதபுரீசுவரர் கோவில் மட்டும் இல்லை. கிறித்துவக் கோவில் ஒன்றின் மதிலும் இடிக்கப்பட்டது என்பதனை 1748 ஆகஸ்ட் 25ஆம் தேதி பிள்ளையின் டைரி குறிப்பிடுகிறது.

"இன்றைய தினம் மண்வெட்டி கோடாலி வெட்டுக்கத்தி முதலானதுகளெல்லாம் கொடுத்தனுப்பி அரியாங்குப்பத்துப் பாதிரி கோவில் சமீபத்திலே இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளிப் போடச்சொல்லியும் கோவில் மதிலை இடிக்கச் சொல்லியும் கோவிலிலே நானூறு சிப்பாய்களைக் கொண்டு போய் வைக்க சொல்லி உத்தாரம்" என்கிறது டைரி.

செப்டம்பர் 8, 1748 ல் வேதபுரீசுவரர் கோவில் இடிக்கப்பட்டதை எண்ணி மிகவும் வருந்தி பிள்ளை எழுதி இருக்கிறார். அவ்வாறு அவர் வருத்தப்பட்டு எழுதியதிய செய்திகளும், கோவில் இடிக்கப்பட்டதற்கு எவ்வித மத துவேசக் காரணத்தையும் நமக்கு உணர்த்தவில்லை.

(இங்கிலீஷ் படை) "கோவிலைப் பிடித்தால் நூறு பேர் அன்பது பேர் சாவார்கள் யெல்லாரும் வூரைவிட்டுப் போவார்களென்கிற பயமொன்று நாளது வரைக்கும் இருந்ததுதான். போகாமல் மற்றுப்போய் கொளுத்தும்போது இப்படி செய்கிறோமெ யென்னமோ வென்கிற அனுமானத்தினாலே சொல்தாதையும் (soldiers ??) சிப்பாய்களையும் குதிரைக்காரரையும் யேர்க்கனவே கொண்டு போய் வைத்துக் கொண்டு நடத்தினான்" என்று அக்கோவில் இடிப்பின் சூழலை ஆனந்த ரங்கர் கூறுகிறார்.

போரின்போது கோவிலை இடிக்க யாரெல்லாம் ஆதரவாய் இருந்தார்கள் என்பதையும் அவரின் புலம்பலில் இருந்தே கண்டறிய முடியும்.

"ஆறுமுகத்தா முதலியுங் கொலுத்துக்கார வெங்கடாசலம் தம்பி லச்சிகானும், இரண்டொரு பேரும் அன்னபூரணய்யருக்கு சாவடி துபாசித் தனம் கொடுத்தால் வேதபுரீஸ்வரன் கோயிலை இடித்து அப்பாலே கட்டுகிறதற்கு நாங்கள் வூராருக்கு சம்மதி பண்ணிப் போடுகிறோமென்று வந்து சொன்னவர்கள் உங்களுடனே கூட இருக்கிறார்கள். இப்போ இரண்டு மாசமாய் துரை பெண்சாதியண்டைக்குப் போய் பெரிய துபாசித்தனம், தம்பிச்சா முதலி மகன் மலையப்ப முதலிக்கும், தனக்கு சாவடி துபாசித்தனமும் கொடுத்தால் வேதபுரீஸ்வரன் கோயிலை இடித்துப் போடுகிறோமென்று பேசவில்லையா?

இதுவுமல்லாமல் சம்பாவுலு கோவிலு பாதிரிகளண்டைக்கு அன்னபூரணய்யன் போய் ஊராரையெல்லாம் சம்மதி பண்ணினேன். நீங்கள் தனக்கும், மலையப்ப முதலிக்கும் உத்தியோகம் கொடுத்தால் அந்தப்படிக்கு ஈஸ்வரன் கோயிலை இடித்துக் கட்டிக் கொள்ள பண்ணிப் போடுகிறோமென்று பேசவில்லையா?" என்று வேதபுரீஸ்வரர் கோவில் இடிபட உறுதுணையாய் நின்ற இந்துக்களை ஆனந்தரங்கம் பிள்ளை எழுதி வைத்த டைரியே சாட்சி சொல்கிறது.

மலர்மன்னன் சொல்வது உண்மைக்கு மாறானது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

வேலூருக்கு ஒரு 'ஜலகண்டேஸ்வரர்' கதை என்றால், புதுச்சேரிக்கு 'வேதபுரீஸ்வரர்' புனைகதையா?

இல்லாத ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு எவ்வாறெல்லாம் கலவர விதை ஊன்றுகிறார்கள் இவர்கள்!

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் பற்றிப் போகிற போக்கில் ஒரு கதை சொல்லிப் போனார் மலர்மன்னன்.

அது என்னதென்று ஆராய்ந்து பார்த்த பின்னர்தான், மலர்மன்னன் எப்படி எல்லாம் வரலாற்றைத் தன் இஷ்டம் போல் திரிக்கிறார் எனத் தெளிவானது.

வேலூர் நகரக் கோட்டை கோவிலுக்குள் இருந்து 'லிங்கம் ' அகற்றப்பட்டதற்கு முசுலீம் படையெடுப்புதான் காரணமென்றும், அதை மீண்டும் அங்கு நிறுவுவதற்குத் தடையாகத் தொல்லியல் துறை இருந்ததால் அதையும் மீறி அங்கு லிங்கத்தை நிறுவும் தெய்வீகத் தொண்டை தாம் வீரதீரத்தோடு செய்து முடித்ததாக விஸ்வ ஹிந்து பரிசத் தின் மலர்மன்னன் சரடு விடுகிறார்.

முதலாவதாக, வேலூரில் உள்ள கோட்டைகள் மற்றும் நகரக் கோட்டைக்குள் உள்ள கோவில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்ற உண்மையை அவர் மூடி மறைக்கின்றார். வேலூர் கோட்டைகளும், கோவிலும் இந்து ஆட்சியாளர்களால் கட்டப்படவில்லை. அப்படி ஓர் இந்து ஆட்சி அங்கு நிலவியதாக வரலாறும் இல்லை. அவை முசுலீம் ஆட்சியாளர் காலத்தில்தாம் கட்டப்பட்டன.

ஆங்கிலேயக் காலனிவாதிகளிடம் சரணடைந்து, ஆட்சி அதிகாரத்தை ஆற்காடு நவாபு அடகு வைத்தபோது, விடுதலைப்போர் தொடுத்த மைசூரை ஆண்டு வந்த டிப்பு சுல்தான் குடும்பத்தினர் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். முசுலீம்களால் கோட்டைக்கோ, கோவிலுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆற்காடு நவாப்போடு சேர்ந்து ஆங்கிலேய காலனியவாதிகளுக்கு அடிமை ஊழியம் செய்த புரோகிதர்கள்தாம், 'மைசூரை ஆளும் முசுலீம் மன்னன் படை எடுத்து வருகிறான்; கோவில்களை இடிப்பான்; இந்துக் கடவுள் சிலைகளைத் தாக்கி உடைப்பார்கள்; இந்துக்களைக் கொன்று போடுவார்கள்;பெண்களைக் கற்பழிப்பார்கள் ' என்று புரளி கிளப்பி, கோட்டை கோவில் லிங்கத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்கள்.

ஆனால் ஆர் எஸ் எஸ் காரர்கள் வெளியிட்டுள்ள ஒரு நூலிலே அவர்களே ஒப்புக்கொண்டுள்ளபடி 'அந்தக்கோட்டை கோவில் இன்னமும் சிதிலமடையாமல் அழகாக ' இருக்கிறது என்றால் 'படை எடுத்து வந்த ' முசுலீம்கள் அதற்கு எந்தப் பாதிப்பையும் செய்யவில்லை என்றுதானே அர்த்தம் ? மேலும் அவர்களால் இந்துக்களுக்கு எந்தவிதத் தீங்கும் அங்கு நடந்ததாக சிறு வரலாற்று ஆதாரமும் சம்பவமும் கிடையாது.அதற்கு மாறாக, பாழடைந்த பல 'இந்து 'க்கோவில்களைப் புதுப்பிக்கவும் பூசை நடத்தவும் டிப்பு சுல்தான் உதவியதாகத்தான் சரித்திரம் கூறுகிறது.

ஜெர்மனியில் மட்டுமல்லாது, தான் ஆக்கிரமித்த பலதேசக் கலைக் களஞ்சியங்களைச் சூறையாடிய ஹிட்லர் உட்பட பாசிஸ்டுகள் அனைவருமே வரலாற்றுச் சின்னங்களை மாற்றி அமைத்து, பாமர மக்களின் ஆதரவைத்தேடிக்கொள்ள எத்தணிக்கின்றனர்.அது போன்றதொரு செய்கைதான் வேலூர் கோட்டை கோவிலுக்குள் லிங்கத்தை நிறுவிய செயல்.

காஞ்சி மடாதிபதி முதல் மாவட்ட ஆட்சியர் வரை ஆர் எஸ் எஸ் காரர்களோடு சேர்ந்து நிறைவேற்றியிருக்கும் இந்தச் செயலை ஏதோ கடும் எதிர்ப்புக்கிடையே புரிந்த சாதனையைப் போல இங்கே சித்தரிக்கிறார் மலர்மன்னன். திட்டமிட்டு சுற்றுப்புறக்கிராமங்களில் இருந்து கூட்டம் திரட்டி வந்தபோதும், ஏதோ மக்கள் தாமே திரண்டு வந்ததைப் போல் பிலிம் காட்டுகிறார் அவர்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்ன என்றால், இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி ஊதிப் பெருக்கி பரபரப்பை ஏற்படுத்தியதுதான்.

இதே மாதிரிதான் மண்டைக்காட்டிலும், கடலில் சென்று நீராடிய பிறகே பகவதி கோவிலுக்கு வர வேண்டும் என ஒருப் புதுப் பழக்கத்தைப் புகுத்தி அமைதியைக்கெடுத்தனர் இவர்கள்.

இதன் உள்நோக்கம் என்னவென்றால், கடற்கரையில் பரவி இருக்கும் கிறிஸ்தவ மீனவர்களின் குடியிருப்பு வழியாக ஊர்வலம் விட்டு பதட்டத்தை உருவாக்குவது.

இதே உள் நோக்கத்தில்தான் 1990 வரை தமிழ் நாட்டில் இல்லாத வழக்கமான 'விநாயகர் சதுர்த்தி ' ஊர்வலமும் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

நான் ஒருமுறை சென்னையில் இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைப் பார்த்திருக்கிறேன். போகும் வழியில் முஸ்லிம் ஓட்டல் இருந்தால் கல்லை ஓட்டல் உள்ளே எறிவார்கள் (ஸ்டாரன்சு ரோடு, ஓட்டேரியில் உள்ள தாஸ்மக்கான் ஆகிய இடங்கள்)

'நாலும் நாலும் எட்டு; துலுக்கன வெட்டு ' 'மூணும் அஞ்சும் எட்டு; துலுக்கன் பொண்டாட்டியக் கட்டு ' என்று சில திருக்குறள்களை உரக்கக்கத்தி விநாயகருக்கு பக்தி செலுத்துவார்கள் (இரண்டாவதாய் நான் குறிப்பிட்ட குறள் சரியானதுதானா என்பதை மலர்மன்னன் சமூகம் திருத்திக் கொடுத்தால் தேவலாம்)

நன்றி கற்பக விநாயகம்

5 பின்னூட்டங்கள்:

said...

நல்ல கட்டுரைகள்! மீள்பதிப்பித்தமைக்கு நன்றி.

மற்றபடி தமிழ்மணத்தில்் ஆப்புகள் பல பெற்று "ஆயிரம் ஆப்புகள் வாங்கிய அபூர்வ சிந்தாமனி"
என்னும் பெயரெடுத்த அதே நீலதண்டம் தான் திண்ணையில் எழுதியவனா?

இன்றைய சூழலில் தமிழகத்தில் ஈழ ஆதரவு வேடம் பூண்டு களமிறங்கி இருக்கும்
இந்து வெறியர்களின் செயல்தந்திரங்கள் பற்றியும் அதனை முறியடிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எழுதுங்கள்.

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடியவில்லையே. பதிவுகளும் குறைவாகத்தான்
இடுகிறீர்கள். சொந்த அலுவல்கள் அதிகமோ?

said...

//ஆப்புகள் பல பெற்று "ஆயிரம் ஆப்புகள் வாங்கிய அபூர்வ சிந்தாமனி"
என்னும் பெயரெடுத்த அதே நீலதண்டம் தான் திண்ணையில் எழுதியவனா?
///

Yes that same நன்னாரி.....

அசுரன்

said...

உண்மையில் விவேகானந்தர் பாறை உருவான கதை எனக்கு புதிய செய்தி.இத்தனைக்கும் மண்டைக்காடு கலவ்ரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்...பாசிச பார்ப்பன இந்து வரலாற்று மோசடியை அம்பலப்படுத்தி எழுதும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் ஆதரவும்.

said...

நல்ல கட்டுரை, பல புதிய செய்திகளை தாங்கி வந்திருக்கிறது. கற்பக விநாயகம் அவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள் !

said...

vaNakkam:

Excellent rebuttal to the Hindutwa friends. You have exposed their true colors. Please keep it going. Religious fundamentalism of any kind relies on mass hysteria, lies and false propaganda. India is surrounded by failed states. The hindutwa bri

Related Posts with Thumbnails