TerrorisminFocus

Thursday, October 11, 2007

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

“paritranaya sadhunam vinasaya ca duskrtam dharma-
samsthapanarthaya sambhavami yuge yuge”

ராமன் ஒரு கடவுளா? ராமாயணம் என்ற இதிகாசப் புரட்டை முன் வைத்தே காவி(லி) கும்பல் தனது ஒவ்வொரு பயங்கரவாத நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகீறது. இந்துக்களின் நம்பிக்கை என்ற பெயரிலேயே இவை அனைத்தும் புனிதப்படுத்தப்படுகின்றன. சமீபத்திய ராமேஸ்வரம் மணல் திட்டு பிரச்சினையில் கூட கருணாநிதியை முதல் குற்றவாளியாக்கி தீர்ப்பளித்தன குமுதம் முதலான அனைத்து மக்கள் விரோத ஊடகங்களும். உச்ச நீதிமன்றமோ முற்றிலும் அம்பலமாகி தான் ஒரு பார்ப்பன பாத தாங்கி என்று அம்மணாமாய் கோக்கரித்தது(இதே உச்சநீதி மன்றம் அணூ விவகாரம் தொடர்பான ஒரு பொது நல வழக்கை எடுக்காமல் தள்ளுபடி செய்தது காரணம் கேட்ட பொழுது, நீதிமன்றம் தனது விருப்பம் போல முடிவெடுக்கும் அதிகாரமுள்ளது, காரணங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று திமிராக பதில் சொல்லியது).

இங்கு தமிழ்மணத்திலும் கூட ராம பக்தர்கள் சிலர் ராமனை திட்டுவது தவறு என்று எழுதியிருந்தனர். ராமன் ஒரு கடவுளா? ராமனை கும்பிடுவது பெரும்பான்மை இந்தியர்களை அவமானப்படுத்துவதாகாதா? அவன் எந்த வகையில் ஒரு கடவுள்? என்பது குறித்தேல்லாம் இவர்களுக்கு என்னவிதமான புரிதல் இருக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் ராமன் என்ற உத்தம புருஷன் குறித்த வந்த தொலைக்காட்சி புரட்டு மற்றும் பல ஊடக வரலாற்று பொய்களை கேள்விக்குள்ளாக்கும் முகமாக சில அடிப்படை கேள்விகளை முன் வைக்கும் ஆர்வம் பலருக்கும் இருந்திருக்கும். அது போன்றதொரு முயற்சியாக பயங்கரவாதம் தளத்தில் ஒரு இ மெயில் கட்டுரை பிரசூரம் செய்யப்பட்டுள்ளது.

ராமன் ஒரு பார்ப்பன சாதி சங்க தலைவன் என்பதையும். அவன் ஒரு மக்கள் விரோத வர்ணாஸ்ரம வெறியன் என்பதையும். சீதாவை ஒரு போகப் பொருளாக கருதிய பிற்போக்கானவன் என்பதையும் அம்பலப்படுத்தியும் மக்கள் மீது காதல் கொண்டவர்கள் உண்மையில் ராமனை குப்பையில் வீசி வெறிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கேள்விகள் கேட்க்கப்பட்டுள்ளன். படித்து பார்க்கவும். விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

Rama.... Rama....

அசுரன்

3 பின்னூட்டங்கள்:

said...

Good one

said...

இராமன் இருந்ததாக ஒப்புகொள்கிறீர்களா அல்லது அது ஒரு கதாபாத்திரம் என்ற அளவில் பேசுகிறீர்களா

said...

//இராமன் இருந்ததாக ஒப்புகொள்கிறீர்களா அல்லது அது ஒரு கதாபாத்திரம் என்ற அளவில் பேசுகிறீர்களா//

அது என் பிரச்சினை அல்ல....

Related Posts with Thumbnails