TerrorisminFocus

Wednesday, January 03, 2007

இந்து/பார்ப்பினிய மதம்-பிரியானி-கறிவேப்பிலை

திரு. நீலகண்டன் மிகவும் திறமையாக நாட்டார் தெய்வங்களுக்கு பிற மதங்களால் வரும் ஆபத்து குறித்து இடது சாரிகள் பேசுவதில்லையே என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

எல்லா இடங்களிலுமே இந்த மூன்று மதங்களும் மக்கள் விரோத வேலையைச் செய்கின்றன என்பதையும், அவை மூன்றுமே எதாவது காரணத்தை கூறீ சுதந்திர வழிபாட்டு முறையை உடைய நாட்டார் தெய்வங்களையும் அது சார்ந்த மக்களையும் முழங்க முற்படுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறோம்.

இதில் குறிப்பாக பார்ப்ப்னியம் தனது சொந்த நலனுக்காக நாட்டார் வழிபாட்டு நலனுக்கு சேர்த்து அழுவது போல நடிக்கும் பொழுது அதை அம்பலப்படுத்தும் தேவை ஏற்ப்படுகிறது. அதுதான் அவருக்கு பிரச்சனை. அதாவது அவரது மதத்தை நாம் அம்பலப்படுத்துவது. எனது முந்தைய கட்டுரையில் கூட எல்லா மதங்களுமே மக்கள் விரோதமானவை என்றே எழுதியுள்ளேன்.

ஏன் இதே இந்துத்துவ மத வெறியர்களுக்கு நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டு அதன் பாரம்பரியம் அழிக்கப்படுவது ஆக்கிரமிப்பாக தெரிவதில்லை? ஏனேனில் மற்ற மதங்களைப் போலவே இந்து/பார்ப்பினிய மதமும் தனது மத வெறி பிரியானிக்கு இந்த சுதந்திர மக்கள் கூட்டத்தை கறிவேப்பிலையாக பயன்படுத்த முற்ப்படுகிறது. தனக்கு கிடைத்த கறிவேப்பிலை பிறருக்கு கிடைக்கக் கூடாது என்பதுதான் இந்த மத வெறிய்ர்களின் ஆற்றாமை.

நாங்கள் கறிவேப்பிலையாக உபயோகப்படுத்துவதை மறுத்து அதை எதிர்த்து பேசினால். அவன் உபயோகப்படுத்துகிறான் , இவன் உபயோகப்படுத்துகிறான் என்று ஒரு உடலுறவு தொழிலாளியிடம் பேசுவது போல பேசுகிறார்கள்.

நாட்டார் வழிபாட்டு தெய்வங்களுக்கு ஆபத்து என்று பார்த்தால் அதில் இந்து/பார்ப்ப்னியம் நட்புடன் செய்யும் துரோகமே மிகப் பெரிய ஆபத்தாக உள்ளது.
இதற்க்கு பலியான தெய்வங்களை, தனது அழகை இழந்து, மக்களிடமிருந்து பிரிந்து - பூணுல் போட்ட அய்யரிடம் சரணடைந்த, சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்த நாட்டார் தெய்வங்களை பரவலாக காண முடியும்.
அந்த தெய்வங்கள் அவமானமுற்று கோயில் கருவறைக்கும் முடங்கி, மூச்சு முட்ட திணறும் சத்தம் எல்லாருக்கும் கேட்ப்பதில்லை.

குழந்தைகளின் பாதம் படா அந்த தெய்வங்களின் திரு மேனி ஆவாலின் வேர்வைப் பட்டு கூனிக் குருகுகின்றன. காக்கை, குருவி, முதல் இரட்டைக் கால் நாலு கால் பிராணிகள், மனிதர்கள் அனைவரிடமும் பழ்கி அந்த மக்களின் உடை கலாச்சாரத்தை தனதாக கொண்டு வலம் வரும் இந்த தெய்வங்களை இந்து/பார்ப்ப்னிய வெறிய்ர்கள் அவமானப்படுத்தியதை விடவா வேறு யாரும் செய்து விடப் போகிறார்கள்?

இந்து/பார்ப்ப்னிய மதம் எல்லாரையும் ஏற்றுக் கொள்ளும் ஆனால் ஒரேயொரு நிபந்தனை, அது தனது வர்ணாஸ்ரம பசிக்கு இரையாகி வயிற்றில் செட்டிலாகத் தயாராக வேண்டும் எனப்துதான்.
அந்த மதங்களாவது நேர்மையாக் உன்னோட முந்தைய கடவுளை விட்டு விட்டு இங்கே வா என்கிறார்கள். இவர்களோ உன்னோட முந்தைய தெய்வத்தையும் பார்ப்பன் சேவை செய்யும் அடிமை நிலைக்கு தாழ்த்தி என்னுடன் ஐக்கியமாகு என்கிறார்கள்.
இது வரை திருப்பதி சாமியோ அல்லது ராமனோ அல்லது கிருஷ்ணனோ நாட்டார் வழிபாட்டு மரியாதைகளை ஏற்றுக் கொண்டதாக பார்த்ததில்லை. பார்ப்ப்னிய பண்பாடு ஏதோ ஆக சிறந்தது என்ற கருத்தை வைத்து மத அரசியல் செய்கிறார்கள். ஏற்கனவே பல ஆயிரம் வருடம் நிலை பெற்ற இந்த ஒரு கருத்தை இவர்கள் வசதியாக உட்கார்ந்து கொண்டு இன்று அறுவடை செய்கிறார்கள். அதனால்தான் அந்த பார்ப்ப்னியம் சார்ந்த பண்பாடு மிக உயர்ந்தது புனிதமானது என்ற போலி பிம்பத்தை உடைக்க முட்படுபவர்களை இவாள் ருத்ரதாண்டவமாடி இடை மறிக்கிறார்கள்.
இதன் மூலம் தெய்வங்களையும், அதன் பண்பாடுகளையும், அது சார்ந்த மக்கள் கூட்டத்தையும் உறிஞ்சுகிறார்கள்.

சில கேள்விகள்:
ஏன் இந்து/பார்ப்பினிய மதத்திற்க்குள் நுழைக்கப்படும் நாட்டார் தெய்வங்கள் பார்ப்ப்னிய மயமாக்கப்படுகின்றன?
எந்த வகையில் நாட்டார் வழிபாட்டு முறை இழிவானது?
எந்த வகையில் பார்ப்ப்னிய வழிபாட்டு முறை உயர்வானது?
இப்படி மாறுவது எந்த வகையில் சம்பந்தப்பட்ட மக்கள் கூட்டத்தின் குறைந்த பட்ச பிரச்சனைகள் எதாவதிற்க்கு தீர்வு சொல்கிறதா? ஏதாவது பிரச்சனை... எதுவாகிலும் பரவாயில்லை.

இந்த கேள்விகளுக்காவது பதில் சொல்லும் நெஞ்சுறுதி உண்டா மத வெறியர்களுக்கு?

இவர்களின் ஒரே ஆயுதம்/பலம் ஆயிரம் வருட ஆதிக்கம் உருவாக்கியுள்ள கருத்து- அதாவது பார்ப்ப்னிய பண்பாடு உயர்வானது/புனிதமானது என்பதுதான்.
**********
நாட்டார் மரபைப் பின்பற்றும் இக்கோவில்களில் தற்போது தீவிரமாக ஆரியமயமாக்கல் நடந்து வருகின்றன. அதன் முறைகளைக் கீழ்க்கண்டவாறு அ.கா.பெருமாள் பட்டியலிடுகிறார்.

1) ஆகம நெறிப்படி கோவிலைக் கட்டுதல்.

2) பலி, சாமியாட்டம், சடங்குகள் போன்ற கூறுகளுடைய நாட்டார் கலைகள் நிறுத்தப்படல்

3) வழிபாடு, விழாக்களில் வைதீக முறை பின்பற்றப்படல்; வட மொழி மந்திரம் ஓதப்படல்

4) துணைத் தெய்வங்களாக நவக்கிரகங்கள், விநாயகர், சுப்பிரமணியர் போன்ற பெருநெறித் தெய்வ உருவங்களை ஆகம முறைப்படி நிறுவுதல்; கருவறைத் தெய்வ உருவத்தைப் பெருநெறித் தெய்வமாக்கல்

5) கோவில் தொடர்பான பிரயோகங்கள் கூட வைதீக மரபில் கூறப்படல் (அபிஷேகம், நைவேத்தியம், கும்பாபிஷேகம், ஸ்ரீபலி, உற்சவ விக்ரகம், கர்ப்பக் கிரகம் முதலியன)

6) கோவிலின் பூசை செய்பவரைப் பிராமணராக நியமித்தல்

7) கோவிலின் முக்கிய தெய்வத்தின் பழைய கதை மறைக்கப்பட்டு, புராணங்களுடன் தெய்வம் தொடர்பான வரலாறு இணைக்கப்படல்

8) சமயப் பிரச்சாரக் கூட்டங்கள், பட்டி மன்றம், வழக்காடு மன்றம், கருநாடக இசைக் கச்சேரி நடத்தல்

9) பெண்களை ஒரே இடத்தில் கூட்டுவதற்குரிய திருவிளக்கு பூசை முதலியவற்றை நடத்தல் (இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்/ஹிந்து முன்னணி முதலிய அமைப்புகள் துணை நிற்கின்றன)

10) முக்கிய தெய்வத்தை கர்மா, மாயா போன்ற தத்துவார்த்தங்களுடன் இணைத்துப் பேசுதல்.

****
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய நோக்கமே அ.கா. பெருமாள் பட்டியலிட்டுள்ள வழிமுறைகளின்படி செயல்பட்டு, சிறு தெய்வங்களை இந்து மதத்துள் கரைத்து, ஒற்றைப் பண்பாட்டை ஏற்படுத்துவதுதான். ஆயினும், இச்செயல்கள் மூலம் சைவ,வைணவக் கோவில்களுக்கும், நாட்டார் தெய்வக் கோவில்களுக்கும் இடையிலான வேறுபாட்டை முழுமையாக நீக்க முடியவில்லை. இரண்டு வழிபாட்டு முறைகளையும் இணைப்பதற்குத் தடையாக சாமியாடலும், உயிர்ப்பலியும், சாராயமும் உள்ளன.

அண்மைக்காலத்தில், சிறு தெய்வங்களின் கோவில்களில் விநாயகர் சிலை / சிவலிங்கம் நிறுவி, அதனையே சாக்காக வைத்துப் பலியிடலைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். மக்களும் சளைத்தவர்கள் அல்லர். துணி ஒன்றால் விநாயகர் சிலையை மூடி விட்டு அவர்களின் சாமிக்குக் கெடா வெட்டிக் கொண்டனர். சில ஊர்களில் இந்தத் தடங்கலைச் சரி செய்ய, நிறுவப்பட்ட விநாயகர் சிலையைப் பெயர்த்து கோவிலுக்கு வெளியே நிறுவி விட்டு, வழக்கம் போல் கெடா வெட்டை நடத்த ஆரம்பித்து விட்டனர்.

ஆர் எஸ் எஸ் விரும்பிப் போற்றும் வட மொழி சார்ந்த பிராமணீயப் பண்பாட்டுக்கு எதிராய் நாட்டார் தெய்வங்கள் இருப்பதும், பெரும்பான்மை மக்களின் வழிபாடாக அவை இருப்பதும் இடஞ்சலாய் இருக்கின்றது. எனவேதான், இக்கோவில்களில் பூசை செய்து வந்த அ-பிராமணப் பூசாரிகளுக்கு சமஸ்கிருத மந்திரம் கற்றுக் கொடுப்பதும், தந்திரமாக சைவப் படையலுக்கு அச்சாமிகளை மாற்றுவதும் நடக்கத் தொடங்கி உள்ளது.

இது நிச்சயமாகப் பண்பாட்டுப் படையெடுப்புதான். இத் தாக்குதலை நாட்டார் தெய்வங்கள் சமாளிக்குமா ? அல்லது இவர்கள் விரும்பும் ஒற்றை அடையாளத்துள் கரைந்து போகுமா ? என்பதைக் காலம் தான் முடிவு செய்யும்.
*************

ஊரில் உள்ள சில பொறுக்கிக் கூட்டங்களிடையே உள்ள போட்டிக்கும் பொறாமைக்கும், இந்த மத வெறிய்ர்களிடையே உள்ள போட்டி பொறாமைக்கும் என்ன வித்தியாசம்?

இவர்களின் கூச்சலில் தொலைந்து போவது என்னமோ எல்லா மதத்தை சேர்ந்த உழைக்கும் மக்களின் உயிராதார பிரச்சனைக்கான குரல்தான்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி இந்த இருபது வருடங்களிலேயே சில ஆயிரம் உயிர்களை ஒன்றுக்கும் இல்லாமல் பலியிட்டுள்ளனர். இவர்களால்(மத வெறியர்களால்) இது வரை ஏதேனும் உபயோகமாக நடந்துள்ளதா என்றால் ஒன்றும் கிடையாது.

இந்த மக்கள் விரோதிகளை இனம், மதம் அடையாளங்களைத் தாண்டி நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் சுயநல வெறியை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களை முற்றாக நிராகரித்து தனிமைப்படுத்துவதன் மூலம் இவர்களின் குரல் இவர்களுக்கே கேட்க்க முடியாத நிலையை அடையச் செய்ய வேண்டும்.

கலாச்சாரமும், பண்பாடும் அழிவது யாரால் என்ற கேள்விக்கு இது வரை எமக்கு பதில் சொல்ல வக்கற்ற இந்த கயவர்கள் மீண்டும் கோயபல்ஸின் செயல்முறையையே பயன்படுத்துகிறார்கள்.
நேர்மையற்ற கயவர்களின்/கழிசடைகளின் கடைசிப் புகலிடம் மத அடிப்படைவாதம்!!!

அசுரன்
Related Article:

29 பின்னூட்டங்கள்:

said...

Test

said...

//அண்மைக்காலத்தில், சிறு தெய்வங்களின் கோவில்களில் விநாயகர் சிலை / சிவலிங்கம் நிறுவி, அதனையே சாக்காக வைத்துப் பலியிடலைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். மக்களும் சளைத்தவர்கள் அல்லர். துணி ஒன்றால் விநாயகர் சிலையை மூடி விட்டு அவர்களின் சாமிக்குக் கெடா வெட்டிக் கொண்டனர்.//

அசுரன்,

படித்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தேன்.
:)))

உங்கள் ஆனித்தரமான வாதத்தை எதிர்கொள்ளா முடியாதவர்கள் *இவையெல்லாம் அவதூறு* என்ற ஒற்றை வார்த்தையால் உடைக்க முயலுவார்கள்.

said...

இது மாதிரியான பண்பாட்டு அழிப்பும் ஒருமுகப்படுத்துதலும் இந்து வெறியர்களுக்கு ஆதரவான அரசாங்கம் அமைந்தால் எந்த அளவிற்கு போவார்கள் என்பதற்கு சென்ற அதிமுக அரசு கொண்டு வந்த ஆடு,கோழி பலியிடத்தடை சட்டம் ஒரு எடுத்துக்காட்டு. இது தொடர்பான என் பதிவு இங்கே

said...

கோவி கண்ணனின் வருகைக்கு நன்றீ

படிப்பவர்களுக்கு தெரியாதா? அவதூறு எது உண்மை எது என்று...

அசுரன்

said...

அசுரன் ஆழமான கட்டுரை!

"சாஸ்தா" எந்த காலத்தில் பூணூல் அணிந்தது? குற்றாலம் போகிற வழியில் புதிதாக வர்ணம் பூசப்பட்ட சாஸ்தா பூணூலுடன் :)).

பார்ப்பனீய மதத்திற்கு சாஸ்தா மாறியிருக்குமோ? :)))

said...

//Test//

Wny just Test? why not 'public exam'? :))

அசுரன்,

நல்ல கேள்விகளை எழுப்பியுள்ள பதிவு.. இவர்கள் வழக்கமாக பதில் சொலாமல் மழுப்பும் வேறு சில கேள்விகள்-

- எதை இந்து மதம் என்று வரையறுக்கிறீர்கள்?

- இந்திய தத்துவ ஞானமரபு என்பது வெறும் இந்து தத்துவ ஞான மரபு மட்டும் தானா?

- வரலாற்றில் பதிவாகியுள்ள மற்றய தத்துவங்கள் இன்று என்னவானது? எங்கே போனது? யாரால் அழிக்கப் பட்டது?

-வேதங்கள் ஆகமங்கள் வரையறுப்பது தான் இந்து மதம் என்றால், இதெல்லாம் இல்லாத நாட்டார் வழிபாட்டை எந்த மதம் என்று சொல்வீர்கள்?

-அதுவும் இந்து மதம் என்று சொல்வீர்களாயின். ஏன் பார்ப்பனீயம் அதிகாரத்தில் அமர்ந்தவுடன் அவற்றை சமஸ்கிருதமயமாக்க ஆவேசத்துடன் முயற்சி செய்தீர்கள்?

எங்களூர் பக்கத்தில் வேட்டைக்காரன் சாமி கோயில் உள்ளது. கோயில் கொடையின் போது வேட்டைக்காரன் சாமி (பூசாரி) பன்றி வேட்டைக்குக் கிளம்பும்( பிற்பாடு அந்த பன்றி இறைச்சியை எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்து விடுவார்கள்) இது எந்த ஆகமத்தில் உள்ளது? எந்த ஆகமத்திலும் இல்லை என்றால், எந்த மதம் இது?

சிவன் கைலாயத்தில் அமர்ந்திருக்க, 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று பாடுவது ஏன்? எப்போது சிவன் கைலாயம் போனான்?

நான் நேரடியாக கண்டுணர்ந்தது - தமிழ் மடங்கள் - குறிப்பாக சைவ மடங்கள் - ஏன் செகத் குருவின் மேலாதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் எதிர்க்கிறார்கள்?

எப்போதும் ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பி விடும் அசுரனுக்கு வாழ்த்துக்கள்

- ராஜாவனஜ்

said...

குழலியின் வருகைக்கு நன்றி,

உங்களது கட்டுரை அருமை, படங்க்ளுடன் நல்ல முறையில் கிடா வெட்டு பற்றிய கருத்துக்களை பதிந்துள்ளீர்கள்.

அசுரன்

said...

தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"அவனை முதலில் நிறுத்தச் சொல்" எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்....அனத்து மதத்தினரும்... இதனைச் செய்தால் மட்டுமே போதும்.... மத நல்லிணக்கம் வளர!

இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணம் நிர்வாகம் சொல்லியிருப்பது போல, இவையெல்லாம் நம்மிடமிருந்தே நிகழவேண்டும்.

said...

அன்பு அனானி,

தங்களது ஆதங்கம் புரிகிறது, எமக்கும் பொருளாதார பிரச்சனைகளை பிரதானமாக்கி எழுதுவதில்தான் விருப்பம். ஆயினும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முற்ப்படுப்வர்களை கண்டும் காணமல் செல்ல நான் நாகரீக கனவான் இல்லை. எல்லாரும் நல்லவ்ர்கள் என்று நம்பும் அதி உன்னத பரமாதமாவும் இல்லை.

அவர்களுடன் தெருவில் இறங்கி சண்டையிட்டு விரட்டும் கடமையை பிரதானமாக கருதும் ஒரு சாதாரண மனிதன்.//மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
//

அடக்குமுறைகளை குத்திக் காட்டி விமர்சிப்பது குறைத்து மதிப்பிடுவதா? கலாச்சார/பண்பாட்டு அடக்குமுறையே இல்லை என்றூ சொல்கிறீர்களா? நான் பொய் சொல்வதாக சொல்கிறீர்களா? அல்லது அவற்றை இங்கே பேசி எமது நாகரீக மனதில் சஞ்சலங்களை கிளப்பாதே என்கிறீர்களா? அல்லது இந்த மூன்று மதப் பிரிவினரும் மக்களை அணீ திரட்டி தமது மத வெறியை தீர்ப்பதை பார்த்துக் கொண்டு சும்மாயிரு என்கிறீர்களா?

இவர்கள் ஒருவர் மதத்தை இன்னொருவர் வாரி விடுவது என்ற் சண்டையில் நான் தலையிடுவதில்லை. அது அவர்களுக்குள் உள்ள பிரச்சனை. ஆனால் இதை மீறி மக்களை போலியான பிரச்சனைக்ககா அணி திரட்டி மத ரீதியில் மோத விட்டு ரத்தம் குடிக்க முற்ப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அது போன்ற கோரிக்கைகளின் போலி தனத்தை/மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்தியே தீர வேண்டியுள்ளது.

மன்னிக்கவும்..


//இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
///

எவை ஒரு சில நிகழ்வுகள்? எவை எப்பொழுதாவது நிகழ்ந்தவை? நான் எனது இரு பதிவுகளிலும் சுட்டிக் காட்டியவை இன்று வரை நடந்து வரும் மோசடிகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளையே. மேலும் நான் இது நல்ல மதம் அது நல்ல மதம் என்று வாதிடவில்லையே. இந்த குழுவினர் அனைத்திலும் உள்ள மதவெறியர்களிடம் கவனமாக இருந்து தனிமைப்படுத்துங்கள் என்றுதானே கோரிக்கை விடுக்கிறேன். அதில் என்ன தவறுள்ளது?


அசுரன்

said...

The folk and various traditions have survived for thousands of years in India.But in Europe, Africa and elsewhere the record
of Christianity and Islam is poor
in this regard.They have less tolerance for diversity in theology and religious practices.
The religion of Parsis was destroyed in Iran.Parsis and Jews could survive in India and their faith was not anihilated by Hinduism.

Wherever Islam went it had destroyed other relegions as much as possible
(e.g. buddhism).In some places
Islam has been tempered by local
practices.Ask Africans and Latin Americans about
the other side of Semitic religions. Did not christianity
destroy paganism in Europe and
elsewhere.What is happening in India is a process of Sanskritisation. Despite some
tendencies to homogenize and bring in uniformity in Hindu culture, folk and other traditions will survive because Hinduism is not an
organized religion as Islam/Christanity are.
So while some of your concerns are valid your overall assessment is
flawed.Compared to other relegions
like Islam Hinduism is more tolerant and permissive in terms
of diversity of practices and faiths. You can reject Hinduism today but remember the threat of
homogenization by other relegions
is too real to comfort you.Unfortunately many people are blind to this reality.The left is no exception.It fails to realise that it Islam rejects communism and atheism in toto and views them as evil forces.Blasphemy is punishable by death in islamic countries.

said...

அன்பு அனானி,

மதங்கள் குறித்த உங்களது கருத்துக்களை நான் மறுக்கவில்லையே? மேலும் இந்து மதம் டாலரெண்ட் என்பதற்க்கு நட்பாக செய்யும் துரோகம் என்பதுதான் அர்த்தம் அவ்வளவுதான்.

நாட்டார் வழிபாட்டு அழிவு குறித்து நான் வைத்துள்ள கேள்விகள், அல்லது பிற கலாச்சார அடக்குமுறை குறித்தோ எதற்க்கும் பதில் சொல்லவில்லை நீங்கள். ஆயினும் இந்து/பார்ப்ப்னிய மதம் டாலெரெண்ட் என்று நம்பச் சொல்கிறீர்கள்.

இஸ்லாம் கிருத்துவ மதங்களின் மத வெறி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதை ஒரு குழந்தை கூட சொல்லி விடும். ஆனால் ஆயிரம் வருட பார்ப்னிய அடக்குமுறை உருவாக்கியுள்ள பொதுக் கருத்தின் பலத்தில் மிக நைச்சியாக இன்றும் மத வெறி கொண்டு அலையும் இந்து/பார்ப்ப்னிய மதத்தைத்தான் கொஞ்சம் சிரமம் எடுத்து அமபலப்படுத்த வேண்டியுள்ளது.

மற்றபடி மதங்களை வைத்து மக்களை அணி திரட்ட கோரிக்கை வைத்து அடிப்படைவாதிகள் அரசியல் செய்வதைத்தான் கடுமையாக எதிர்க்கிறேன்.

இங்கு தமிழ்மணத்தில் யார் அதை செய்கிறார்கள்?


மத அடிப்படைவாதத்தை எதிர்ப்பது என்பது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

இந்த அம்சத்தில் கழுதை விட்டையில் முன் விட்டை பின் விட்டை இதில் எது சிறந்தது என்றொரு விவாதத்தை தோழர் தருமி அவர்க்ள் தனது 'catch' என்று ஆரம்பிக்கும் ஒரு பதிவில் செய்துள்ளார். அங்கு விவாதம் இன்னும் நடக்கிறது. அங்கு இந்த கழுதை விட்டை ஆராய்ச்சியை நாம் தொடரலாம். நீங்கள் விருப்பபட்டால் :-))

இங்கு இந்த பதிவில் கழுதை விட்டையை புறக்கணியுங்கள், அதை நோண்டாதீர்கள் என்று கோரிக்கை விடுப்பதும், வாசகர்களை இதன் அடிப்படையில் குழப்பி மீன் பிடிக்கும் சிலரின் கேவலமான எண்ணத்தை அம்பலப்படுத்துவதுமே நோக்கம்.

அசுரன்

said...

http://mathy.kandasamy.net/musings/2006/07/20/472

said...

யாரு இந்த அனானிப் பய புள்ளன்னு தெரியல.... மாடன் பட்ட பாட்டை நல்லாவே எழுதிருக்காறு நமம மதி கந்தசாமி அண்ணாச்சி...


//இரவான பிறகுதான் சகல பூஜைகளும் முடிந்தன. நம்பூதிரி குட்டிப் பட்டரை நோக்கிப் ‘பலி கொண்டு வாங்கோ ‘ என்றார். மாடனின் காதும், தொடர்ந்து சர்வாங்கமும் இனித்தன. அதன் ஆவல் உச்சத்தை அடைந்தது. தந்திரி நம்பூதிரி பலி மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார். ‘அவனும், அவனுக்க எளவெடுத்த மந்திரமும் ‘ என்று சபித்தபடி, பலிவரும் வழியையே பார்த்தது, மந்திரத்தினால் ஒரு மாதிரியாக ஆகிவிட்டிருந்த மாடன்.

நாலு பட்டர்கள் சுமந்து கொண்டு வந்த அண்டாவைப் பார்த்ததும் மாடன் திடுக்கிட்டது. ஒருவேளை இரத்தமாக இருக்கலாம் என்று சிறு நம்பிக்கை ஏற்பட்டது. மறுகணம் அதுவும் போயிற்று. சர்க்கரைப் பொங்கலின் வாடை மாடனைச் சூழ்ந்தது. என்ன இது என அது குழமப, தந்திரி பலி ஏற்கும்படி சைகை காட்டினார். ‘ஆருக்கு, எனக்கா? ‘ என்று தனக்குள் சொன்னபடி ஒரு கணம் மாடன் சந்தேகப்பட்டது. மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது. வாளை ஓங்கியபடி, ‘அடேய் ‘ என்று வீரிட்டபடி, அது பாய்ந்து எழ முயன்றது. அசையவே முடியவில்லை. பாவி அய்யன் மந்திரத்தால் தன்னை யந்திர பீடத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டதை மாடன் பயங்கரமான பீதியுடன் உணர்ந்தது.
//

இந்த சுட்டிய கொடுத்தமைக்கு மிக்க நன்றி,

அசுரன்

said...

That story was written by Jayamohan.Of course for Puthiya Jananayagam/Puthiya Kalacharam
gang he is not a 'progressive' writer but a supporter of Hindu fundamentalism.In this PJ/PK and
CPI(M) sponsored 'writers' and 'critics' have the same view.

said...

//அந்த மதங்களாவது நேர்மையாக் உன்னோட முந்தைய கடவுளை விட்டு விட்டு இங்கே வா என்கிறார்கள். இவர்களோ உன்னோட முந்தைய தெய்வத்தையும் பார்ப்பன் சேவை செய்யும் அடிமை நிலைக்கு தாழ்த்தி என்னுடன் ஐக்கியமாகு என்கிறார்கள். //

//இது நிச்சயமாகப் பண்பாட்டுப் படையெடுப்புதான். இத் தாக்குதலை நாட்டார் தெய்வங்கள் சமாளிக்குமா ? அல்லது இவர்கள் விரும்பும் ஒற்றை அடையாளத்துள் கரைந்து போகுமா ? என்பதைக் காலம் தான் முடிவு செய்யும்.//

//இவர்களின் கூச்சலில் தொலைந்து போவது என்னமோ எல்லா மதத்தை சேர்ந்த உழைக்கும் மக்களின் உயிராதார பிரச்சனைக்கான குரல்தான்.//

//இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி இந்த இருபது வருடங்களிலேயே சில ஆயிரம் உயிர்களை ஒன்றுக்கும் இல்லாமல் பலியிட்டுள்ளனர். இவர்களால்(மத வெறியர்களால்) இது வரை ஏதேனும் உபயோகமாக நடந்துள்ளதா என்றால் ஒன்றும் கிடையாது.//

அசுரன், ஆரோக்கியமானதொரு விவாதத்தை எப்போதும் போலவே முன்வைத்துள்ளீர்கள்.

"மதம் எப்போதுமே ஆளும் வர்க்கத்தின் போராயுதமாக விளங்கி வந்துள்ளது" என்பது வெள்ளிடைமலை. குடிபோதையில் வீதியில் வீழ்ந்த ஒருவனை எட்டி மிதிக்கலாம், காறி உமிழலாம், அவன் பணத்தையும், வேட்டியையும் கூட பறிக்கலாம்; அவன் எதிர்க்கப்போவது இல்லை. ஏனென்றால் போதையில் இருக்கிறான். அதைப் போலவே ஆன்மீகப் போதைக்கு ஆளானவர்களும். அவர்களிடம் சொரணையை எதிர்பார்க்க முடியாது. மதம் என்பது அபின் என்று மார்க்ஸ் சொன்னது இதனால் தான். கடவுள், மதம், அதன் கோட்பாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் போன்ற எதைப்பற்றியும் கேள்வி கேட்க நினைப்பது மிக மிக தவறாகும்; ஏனென்றால் அவை புனிதமானவை; அப்படியே நம்பி பின்பற்ற வேண்டும்; சொன்னதைச் செய்ய வேண்டும்; ஆண்டவனிடம் நம்மைப் பரிபூரணமாக ஒப்படைத்து விட வேண்டும் என்ற பண்பாட்டில் இவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்.

புதிய மதங்கள் தோன்றுகிறபோது, அவை ஏற்கனவே இருந்த பழைய சமுதாய நிறுவனங்களையோ, அல்லது சடங்குகள்--சம்பிரதாயங்களையோ எடுத்துக் கொண்டு தமது நோக்கங்களுக்கு ஏற்ப அவற்றை மாற்றிக் கொள்ளும். இந்து மதம் என்ற ஒன்று இருக்கவே இல்லை. செப்படி வித்தைக்காரன் காற்றில் கைக்குட்டையை வரவழைப்பது போன்றே திடீரென இருப்பது போல காண்பிக்கப்படுகிறது. வேத காலத்தில் இருந்ததாக சொல்லப்படும் இந்து மதம், உபநிடத கால இந்து மதத்திலிருந்து வேறுபட்டது; கீதை கால இந்து மதம், உபநிடத கால இந்து மதத்திலிருந்து வேறுபட்டது. சங்கரர் உருவாக்கிய இந்து மதம், இன்றுள்ள இந்து மதத்திலிருந்து வேறுபட்டது. பவுத்த மதத்திற்கு எதிரான போராட்டத்தில்தான் பசுவதை கூடாது என்ற தத்துவத்தையும் விக்கிரகம், கோயில் முதலியவற்றையும் இந்துமதம் உருவாக்கிக் கொண்டது.

காலனிய--நிலப்பிரபுத்துவ கட்டத்திலிருந்து புதிய ஜனநாயக கட்டத்திற்கு சமுதாயம் மாறி வளருகின்றபோது, வர்ண-சாதி வேறுபாடுகளின் சமுதாய ஊற்று அழிந்துவிடும். அதாவது இந்து மதம் உற்பத்தி உறவாகவே, அடித்தளமாகவே இருக்கும் நிலை தகர்ந்துபோய்விடும். இதை உணர்ந்து தான் இவர்கள் தங்கள் ஆதிக்கத்தை உறுதிபடுத்திக் கொள்ளும் பொருட்டு நாட்டார் தெய்வங்களை விழுங்க ஆரம்பித்தார்கள். நிறைய காணாமல் போய்விட்டன. விழுங்க இயலாதவைகள் மாற்று வர்ணச்சாந்து பூசப்பட்டு அவர்களுடையது ஆயின. ஆட்டுக்கறியும், மாட்டுக்கறியும் சாப்பிட்டுக் கொண்டிருந்த முருகன், ஸுப்ரமணியனாக்கப்பட்டு, சிவமைந்தனாக உருமாறி பருப்புச்சாதத்தையும், சர்க்கரைப் பொங்கலையும் நக்கிக் கொண்டிருப்பது இங்ஙணம் தான்.

Rajavanaj -- //வேதங்கள் ஆகமங்கள் வரையறுப்பது தான் இந்து மதம் என்றால், இதெல்லாம் இல்லாத நாட்டார் வழிபாட்டை எந்த மதம் என்று சொல்வீர்கள்?//
//எங்களூர் பக்கத்தில் வேட்டைக்காரன் சாமி கோயில் உள்ளது. கோயில் கொடையின் போது வேட்டைக்காரன் சாமி (பூசாரி) பன்றி வேட்டைக்குக் கிளம்பும்( பிற்பாடு அந்த பன்றி இறைச்சியை எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்து விடுவார்கள்) இது எந்த ஆகமத்தில் உள்ளது? எந்த ஆகமத்திலும் இல்லை என்றால், எந்த மதம் இது? //

ராஜவனஜ், சைவ சமயத்திற்கான ஆகமங்கள் 28 மற்றும் அவற்றின் உபாகமங்கள் 207; வைணவ சமய ஆகமங்களான வைகாசை மற்றும் பாஞ்சராத்திர ஆகமம் என்ற எவற்றிலும் இவை அடங்கவில்லை. எனவே இந்த கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் "லேது".

said...

மதம் என்பது அபின் என்று மார்க்ஸ் சொன்னது இதனால் தான்.
Do you the exact words of Marx
and the context.Your understanding of Marxism is so shallow that you
attribute your views to him.Here is what he has said.
"Religion is, indeed, the self-consciousness and self-esteem of man who has either not yet won through to himself, or has already lost himself again. But man is no abstract being squatting outside the world. Man is the world of man—state, society. This state and this society produce religion, which is an inverted consciousness of the world, because they are an inverted world. Religion is the general theory of this world, its encyclopedic compendium, its logic in popular form, its spiritual point d'honneur, its enthusiasm, its moral sanction, its solemn complement, and its universal basis of consolation and justification. It is the fantastic realization of the human essence since the human essence has not acquired any true reality. The struggle against religion is, therefore, indirectly the struggle against that world whose spiritual aroma is religion.
Religious suffering is, at one and the same time, the expression of real suffering and a protest against real suffering. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people.
The abolition of religion as the illusory happiness of the people is the demand for their real happiness. To call on them to give up their illusions about their condition is to call on them to give up a condition that requires illusions. The criticism of religion is, therefore, in embryo, the criticism of that vale of tears of which religion is the halo"
Does it make sense to you ?.
Marx and Engels knew very well that to challenge religion and
to reduce its influence on men,women and society, the socialist movement
had to go beyond critiques of religion.It had to offer them an
alternative, solutions to their
problems and give them real happiness.In other words communists cannot end up as
just atheists.They have to come
up with real solutions to real
problems and ensure that people
no longer need any crutch like
religion in their daily lives.
It is easy to demolish idols
but it is difficult to create
a society where people no longer
need idols or gods. Periyar never understood this.His crude atheism
never understood the real nature
of religion. Nor the self styled Marxists like you.What a pity.
Capitalists and religious heads
should really be happy with you
and rationalists inspired by
Periyar.You would at the most
have a nuisance value, never a
real challenge.

said...

சங்கரர் உருவாக்கிய இந்து மதம்,
Come on, dont reveal your ignorance like this.He did not create any religion but expounded a
school of philosophy.

said...

Is Religion the Opiate of the Masses?
This quote is reproduced a great deal and is probably the only Marx quote that most people are familiar with. Unfortunately, if someone is familiar with it they are likely only familiar with a small portion that, taken by itself, tends to give a distorted impression of what Marx had to say about religion.

Religious distress is at the same time the expression of real distress and the protest against real distress. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, just as it is the spirit of a spiritless situation. It is the opium of the people. The abolition of religion as the illusory happiness of the people is required for their real happiness. The demand to give up the illusion about its condition is the demand to give up a condition which needs illusions.
Karl Marx, Critique of Hegel’s Philosophy of Right
Usually all one gets from the above is “Religion is the opium of the people“ (with no ellipses to indicate that something has been removed). Sometimes “Religion is the sigh of the oppressed creature“ is included. If you compare these with the full quotation, it’s clear that a great deal more is being said than what most people are aware of.

In the above quotation Marx is saying that religion’s purpose is to create illusory fantasies for the poor. Economic realities prevent them from finding true happiness in this life, so religion tells them that this is OK because they will find true happiness in the next life. Although this is a criticism of religion, Marx is not without sympathy: people are in distress and religion provides solace, just as people who are physically injured receive relief from opiate-based drugs.

The quote is not, then, as negative as most portray (at least about religion). In some ways, even the slightly extended quote which people might see is a bit dishonest because saying “Religion is the sigh of the oppressed creature...” deliberately leaves out the additional statement that it is also the “heart of a heartless world.”

What we have is a critique of society that has become heartless rather than of religion which tries to provide a bit of solace. One can argue that Marx offers a partial validation of religion in that it tries to become the heart of a heartless world. For all its problems, religion doesn’t matter so much — it is not the real problem. Religion is a set of ideas, and ideas are expressions of material realities. Religion is a symptom of a disease, not the disease itself.

Still, it would be a mistake to think that Marx is uncritical towards religion — it may try to provide heart, but it fails. For Marx, the problem lies in the obvious fact that an opiate drug fails to fix a physical injury — it merely helps you forget pain and suffering. This may be fine up to a point, but only as long as you are also trying to solve the underlying problems causing the pain. Similarly, religion does not fix the underlying causes of people’s pain and suffering — instead, it helps them forget why they are suffering and gets them to look forward to an imaginary future when the pain will cease.

Even worse, this “drug” is administered by the same oppressors who are responsible for the pain and suffering in the first place. Religion is an expression of more fundamental unhappiness and symptom of more fundamental and oppressive economic realities. Hopefully, humans will create a society in which the economic conditions causing so much pain and suffering would be eradicated and, therefore, the need for soothing drugs like religion will cease. Of course, for Marx such a turn of events isn’t to be “hoped for” because human history was leading inevitably towards it.

So, in spite of his obvious dislike of and anger towards religion, Marx did not make religion the primary enemy of workers and communists, regardless of what might have been done by 20th century communists. Had Marx regarded religion as a more serious enemy, he would have devoted more time to it in his writings. Instead, he focused on economic and political structures that in his mind served to oppress people.

For this reason, some Marxists could be sympathetic to religion. Karl Kautsky, in his Foundations of Christianity, wrote that early Christianity was, in some respects, a proletarian revolution against privileged Roman oppressors. In Latin America, some Catholic theologians have used Marxist categories to frame their critique of economic injustice, resulting in “liberation theology.”

Marx’s relationship with and ideas about religion are more complex than most realize. Marx’s analysis of religion has flaws, but despite them his perspective is worth taking seriously. Specifically, he argues that religion is not so much an independent “thing” in society but, rather, a reflection or creation of other, more fundamental “things” like economic relationships. That’s not the only way of looking at religion, but it can provide some interesting illumination on the social roles that religion plays.

http://atheism.about.com/od/weeklyquotes/a/marx01.htm

said...

hello Mr.asuran, unga pathivukalai padithuvarukiran - samuthayathinmel ulla ungal akkarai paarattathakathu -
mathathai patiya vizhipunarvai kattayam makkallukku kooravendiya kattaya nilamayil irrukkirom - matham thevaya - manithanai pirikkum matham devaya - ean cinthika marukkirarkal - manithane, manitha neyathai karpi - anbai pothi - mathathai mara - un(your) puthiyai kondu allamal, matham entha vagayil un munnerttathikku uthavipurikirathu entru ninaikirai - orupothum alla - matham moralai pothikirathu - athai yaaravathu pinpattukirarkala ental illai - mathathai oru adaiyala chinnamaga - thangalai uyarvaka kattathan payanpaduthukirarkal - matham sollum nlla visayankalai erinthuvittu - pothithavarkali oru adaiyala name vaithukontu pirivinaikku vithidukirarkal - naan mahankalin pothanaikalai mattume virumpukiren - panivana vendukol - manithane manithanai nesikka kattukol - saka manithanai manithanaka parka muyal - ottumai thanaka varum - manitha neyaththukku munn ontum illai - asuran nallathai eluthikonde irungal - manitharkale pirivinai vendam - mathaththai munnittu.

said...

தோழர் அசுரன்

//நாங்கள் கறிவேப்பிலையாக உபயோகப்படுத்துவதை மறுத்து அதை எதிர்த்து பேசினால். அவன் உபயோகப்படுத்துகிறான் , இவன் உபயோகப்படுத்துகிறான் என்று ஒரு உடலுறவு தொழிலாளியிடம் பேசுவது போல பேசுகிறார்கள்.//

மேலிருக்கும் வாசகத்தில் உடலுறவு தொழிலாளி என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது தவறான வார்த்தை. அவர்கள் உழைப்பிலோ, உற்பத்தியிலோ ஈடுபடவில்லை. பின் எப்படி தொழிலாளி என்று குறிப்பிடுவது?

தோழமையுடன்,
குப்பண்ணன்

said...

மார்க்ஸியர்களின் அரசியல் போர்த்தந்திரத்தில் மத கடவுள் மறுப்பு என்பது கிடையாது, இன்னும் சொன்னால் வர்க்க போராட்டத்திற்க்கு உட்ப்பட்டுதான் மத கடவுள் எதிர்ப்பு போராட்டம் என்பது. ஧

மலும் மார்க்ஸோ அல்லது எங்கெல்ஸோ அல்லது லெனினோ மத கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. அதனை வர்க்க போராட்டத்திற்க்கு உட்படுத்தி செய்ய வேண்டும் என்றே சொல்கீறார்கள்.

இது குறித்து என்னாலும் பல மேற்கோள்களை எடுத்து இட முடியும். ஏன், நாத்திக பிரச்சாரம் செய்ய மறுப்பவர்களை மார்க்ஸியதஹை உருப்பாடமால் செய்பவர்கள் என்று லெனின் திட்டுவதைக் கூட மேற்கோளாக காட்ட இயலும். ஆயினும் இந்த பதிவு மத, கடவுள் மறுப்பு பிரச்சார பதிவு அல்ல. அதனால் இந்த விவாதம் பதிவின் நோக்கத்திற்க்கு அப்பாற்பட்டது.

இங்கு நான் மத அடிப்படைவாதிகளை புறக்கணிக்க கோரிக்கை விடுக்கிறேனேயொழிய மதங்களையோ அல்லது கடவுளையோ அல்ல.

அசுரன்

said...

இங்கு நான் மத அடிப்படைவாதிகளை புறக்கணிக்க கோரிக்கை விடுக்கிறேனேயொழிய மதங்களையோ அல்லது கடவுளையோ அல்ல.

good joke.When somebody questions your understanding you find some
easy escape routes.When the real
words of Marx was quoted and the
claim of Sabapathy Saravanan was
challenged you wanted to find a way out.But how come you did not
challenge his words in the first place.
The problem with you is that you
think you have answers when you
do not even know the right questions to ask.Go beyond what
reductionist marxists like PK/PJ
gang say.Read for yourself works
on Kosambi,Gramsci,Rosa Luxemberg
and other 'unconventional' marxists.Read books like Main Currents of Marxism
by Leszek Kolakowski and journals
like Monthly Review (available
in the net for free) and volumes
like Socialist Register of various
years (cheap indian editions are
available from K.P.Bagchi&Co).
For a change start reading more
and dont waste time in blogs.
good luck

said...

ஏன் எனது பதில் பின்னூட்டத்தின் ஒரே ஒரு வரிக்கு மட்டும் பதில் சொல்லியிருக்கிறீர்கள். நான் கடவுள் மதம் மறுப்பு பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றோ அல்லது அது கம்யுனிஸ்டின் கடமையில்லை என்றோ சொல்லவில்லையே? அதை இந்த பதிவு செய்யவில்லை என்பதுதான் விசயம். அதனாலேயே அந்த அம்சத்தில் இங்கு விவாதிக்க முடியாது என்பதுதான் விசயம்.

பின்னூட்டத்தில் தோழர் சபாபதி சர்வணன் சொன்னதற்க்கு பொறுப்பேற்றுதான் உங்களுக்கான பதிலிலேயே நானும் மதம் கட்வுள் மறுப்பு முக்கியமானது என்று பின்னூட்டயிருந்தேன். அதே நேரத்தில் அந்த அம்சத்தில் விவாதம் செய்வது பதிவின் நோக்கத்தை திசை திருப்பும் தந்திரம் என்பதை உணர்ந்ததால்தான் அதை அத்துடன் நிறுத்தக் கோரினேன்.

மதத்தை அணுகும் விதம் குறித்த கம்யுனிஸ்டு கட்சிகளிடையே உள்ள தத்துவப் போராட்டம் என்பதை இங்கு விவாதம் செய்ய இயலாது என்பதாலேயும், பதிவுன் நோக்கம் அதுவல்ல என்பதாலும், ப்ளாக்கில் எனது நோக்கத்திற்க்கு அது எவ்வகையிலும் உதவி செய்யாது என்பதாலும் அப்படியொரு விவாதத்தை செய்ய நீங்கள் முற்படுவதை என்னால் ஊக்கிவிக்க இயலவில்லை.

மேலும் இந்து பார்ப்ப்னிய மதத்தின் மீதான் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்று இப்படி திசை திருப்பு முயற்சியில் காவி சட்டையின் மீது சிவப்பு சட்டை போட்டு வருவதாகத்தான் உங்களை கருத வேண்டியதாக உள்ளது. அல்லது பதிவு எழுப்பியுள்ள விசயங்க்ளுக்கு பதில் சொல்லுங்கள்.

இன்னும் சொன்னால் உங்களுக்காகத்தான் லெனினின் ஒரு மேற்கோளை எழுதி வைத்திருக்கிறேன். அதில்தான் இது போன்ற பல வண்ண மார்க்ஸிஸ்டுகளை, மார்க்ஸியத்தை உருப்பாடச் செய்யாதவர்கள் என்று கடிந்து கொள்கிறார் லெனின். ஏனேனில் அந்த பல வண்ணக்காரர்கள் நாத்திக பிரச்சாரத்தை மறுக்கிறார்கள் என்பதால். (தற்போது இருக்கும் இடத்தில் ப்ளாப்பி வசதி இல்லை.)

மேலும் இந்தியாவின் இன்றைய நிலையில் இஸ்லாம் மத அடிப்படைவாதம் என்ப்து ரியக்செனரி என்ற அம்சத்தை கடந்து தனக்கான தனி சமூக பொருளாதார அடையாளத்தை அடைந்து விட்டது. அதற்க்கு இனிமேலும் இந்து மத பயங்கரவாதம் போன்ற அம்சங்கள் தேவையின்றி, வெறும் மதக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே பொருளாதார பிரச்சனைகளின் விளைவுகளை அறுவடை செய்யும் முதிர்ச்சியை முழுமையாக அடைந்துள்ளது. இந்து தீவிரவாதம் ஏற்கனவே அப்படித்தான் உள்ளது. இந்த சூழ்நிலையில் மத எதிர்ப்பு பிரச்சாரம் தவிர்க்க இயலாதது/அவசியமானது.

வேறு ஏதேனும் உருப்படியாக இருக்கிறதா? :-))//For a change start reading more
and dont waste time in blogs.
//

தங்களது அக்கறைக்கு நன்றி. ப்ளாக்கை இப்போதைக்கு விடும் எண்ணம் இல்லை.//Good Luck//

நல்ல மார்க்ஸியர்தான் நீங்கள்.. :-))

luck குறித்து மார்க்ஸின் மேற்கோள் எதையாவது பிய்த்து போட முடியுமா?


அசுரன்

said...

Dear Comrade,

Sorry for pulling the debate out of the track. Let me just answer our beloved anony for his 'challenge'

//good joke.When somebody questions your understanding you find some
easy escape routes.When the real
words of Marx was quoted and the
claim of Sabapathy Saravanan was
challenged you wanted to find a way out.//

Dear Anony, The challange what you have thrown is not a vallid one :(.

In The article which you have produced, Marx has not advocated marxians to adore the way of religion. This particular article from Asuran speaks about the fundamentalism of hinduism / cultural invation of parpanism and sanskritisation of various practices and beliefs under the name hinduism..

Although the main battle for marxists is not with religion, marx and the latter marxists like Lennin & Stalin have clearly said no marxians should take the path of religious fundamentalism as a weapon in the class struggle.

Apart from this, today the capitalist forces have taken religious 'values' as a base for their survival. In this scenario, we cannot leave the illusions of the working class towards religion.

When we - the elements of working class - are fighting for the cause of the working class, it is important to remove the illusions of our fellow workers.

Further to this, as a human being.. we cannot allow the oppression of the belief and cultural invations done on our fellow working class people.

I expect some of your views on the core issues discussed in this article

- RV

said...

முதற்கண் தோழர் அசுரன் அவர்கள் எனது பின்னூட்டம் பதிவினை திசைதிருப்பியதற்கு உதவியதற்கு மன்னிப்பாராக. மேலும் திசை

திருப்பல் -- வேறு வழியில்லாமல். ஆனால் மேற்கொண்டு நிகழாது என்று உறுதியளிக்கிறேன்.

மெத்தப் படித்ததாய் டமாரமடித்துக் கொள்ளும் அனானிக்கு இந்தப் பாமர-அறிவிலி சபாபதி சரவணனின் வணக்கங்கள்.

தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும், இல்லையினில் சுடுகாடு தான் என்று சும்மாவா சொன்னார்கள்.

வேலைப்பளு காரணமாக blog பக்கம் வராமல் போனால் ஓடி ஒளிந்துக்கொண்டதாக அர்த்தம் பண்ணிக்கொண்டீர்களே. அடேங்கப்பா.

இந்து மதம் என்றழைக்கப்படுக்கின்ற இந்த மதம் 2000 வருடங்களாக நமது பாரம்பரியத்தில்--இலக்கியங்களில் பிராமண மதம், வைதீக

மதம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பாளர்களால் வைக்கப்பட்ட பெயர் தான்

இந்துமதமாகும். ரிக்வேத காலத்திலிருந்து சங்கரர் காலம் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) வரையிலும் ஏறத்தாழ 2000 வருடங்களாக இந்து

மதத்தின் அடிப்படையே சாதி-வர்ண தத்துவத்தை கொண்ட பார்ப்பனியமாகும். இந்து மதத்தின் மூலாதாரமே சதுர்வர்ண வடிவத்தில்

பார்ப்பனர்களும், சத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்கள் மீது செலுத்திய அடக்குமுறையும் ஆதிக்கமுமேயாகும். நீங்கள் சொல்வது

போல இந்து மதம் ஒன்றும் சுயம்பு கிடையாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் 'பிரித்துக் கட்டப்பட்டது' தான். நீங்கள் சொல்லும் சங்கரரின்

'பிலசாபி' logic கூட நான் சொல்ல வருவதே தான். அவர் கட்டியதும் "so-called" இந்துமதமே தான். இப்போதும் கூட ஒரு புதிய

பரிமாணத்தில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, அதன் மீட்சி தான் நாட்டார் தெய்வங்களின் விழுங்கல் என்று தான் நான் சொல்ல வந்தது.

நீங்கள் மதம் பற்றி எழுதியிருக்கும் மார்க்சிய குறிப்புகளின் மீது காவிப்புழுதி படிந்து கிடக்கிறதே. தெரியாது என நினைத்து விட்டீர்களா?

"ஒரு மார்க்சியவாதி, ஒரு பொருள்முதல்வாதியாகத்தான் இருக்க வேண்டும். அதாவது, மதத்தின் எதிரியாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால், அவர் ஒரு இயக்கவியல் பொருள்முதல்வாதியாக இருக்க வேண்டும். அதாவது, மதத்திற்கெதிரான போரட்டத்தை ஒரு

அருவமான வழியில், மிகவும் ஒதுங்கிய முறையில், சுத்தமான தத்துவார்த்த வழிமுறையில், பிரச்சார முறையில் எவ்வித

வேறுபாடுமின்றி நடத்தக்கூடாது. மாறாக, ஒரு பருண்மையான வழியில் நடைமுறையில் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் வர்க்கப்

போராட்டத்தின் அடிப்படையில், வேறு எந்த முறையைக் காட்டிலும் மேலும் மேலும் அதிகச் சிறப்பான முறையில் மக்களை விழிப்படையச் செய்து, கல்வியறிவு புகட்டும் வர்க்கப் போராட்டத்தினடிப்படையில், மதத்திற்கெதிரான போராட்டத்தை நடத்த வேண்டும்" என லெனின் சொன்னது கூட உங்களைப் போன்ற திரிபுவாதிகளுக்கு குட்டு வைக்கவே.

மேலும், மதம் தொடர்பாக மார்க்சியவாதிகள் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைபற்றி லெனின் வரையறுத்த முடிவுகளையும் இங்கு உற்று நோக்க வேண்டும். "மதத்தை எதிர்ப்பது என்பது வெறும் அருவமான சித்தாந்தப் பிரச்சாரத்துடன் மட்டும் நின்று விடக்கூடாது. அந்த மட்டத்திற்கு தாழ்ந்துவிடக்கூடாது. பிரச்சாரத்தை வர்க்க இயக்கத்தின் திண்ணிய நடைமுறை அனுபவத்தோடு இணைக்க வேண்டும். இதன் நோக்கம் மதத்தின் சமுதாய வேர்களை நீக்குவதாகும்." எனவே அனானி அவர்கள் சொன்னது போன்று மார்க்சியம் மதத்துடன் எந்த சமரசத்தையும் செய்து கொண்டதே கிடையாது.

மக்களுடைய உள்ளங்களிலிருந்து மதத்தை வெறும் கல்வி புகட்டும் புத்தகங்களால் மட்டும் அகற்றிவிட முடியாது. இந்த மக்களே எழுச்சியுற்று மதத்தின் மூல வேர்களை எதிர்த்துப் போராடக் கற்று கொள்ளும் போதுதான், ஒன்றுபட்ட ஸ்தாபன ரீதியான திட்டமிட்ட உணர்வுபூர்வமான வழியில் முதலாளித்துவ ஆட்சியின் சகல வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவதற்குக் கற்றுக் கொள்ளும் பொழுதுதான், மக்களுடைய உள்ளங்களிலிருந்து மதத்தைத் துடைத்தெறிய முடியும்.

முதலாளித்துவ பகுத்தறிவுவாதிகளும் திராவிடர் கழகத்தவரும் பகுத்தறிவு - நாத்திகப் பிரச்சாரத்தின் மூலம் மட்டுமே மதத்தை ஒழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள். கடவுள், மதம் பற்றிய கொள்கைகள் மக்கள் அறியாமையில் இருப்பதனால்தான் நிலைத்து இருக்கின்றன. எனவே, பகுத்துப் பார்த்து, ஆராய்ந்து, முடிவெடுக்கும் முறையை அதாவது, பகுத்தறிவை மக்கள் பின்பற்றினால் மதத்தையும் கடவுளையும் தூக்கி எறிந்து விடுவார்கள் எனக் கருதுகிறார்கள். இது கருத்துமுதல்வாத்தை (கடவுள் மதம், பற்றிய கருத்துகளை) கருத்துமுதல்வாதத்தால் (பகுத்தறிவால்) வென்று விடலாம் என்பதாகும். கருத்துமுதல்வாதம் பிற்போக்காளர்களின் ஆயுதமாகும்; பிற்போக்கிற்கு மட்டும் பொருந்தும் ஆயுதமாகும்; என்வே, அந்த ஆயுதத்தை எடுத்துப் போராடினால் அது பொருள் முதல்வாத்திற்கு எதிராகத்தான் திரும்பும்; பகுத்தறிவுவாதிகளும் திராவிடர் கழகத்தினரும் பல ஆண்டு காலம் எண்ணற்ற வடிவங்களில் பிரச்சாரம் செய்த பிறகும் பக்தியும் கடவுள் நம்பிக்கையும் பெருகியிருப்பதே இதற்குச் சான்றாகும். துன்பதுயரங்களும், வாழ்வில் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிச்சயமற்ற தன்மையும், அதனால் வரும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுதான் பக்தியும் கடவுள் நம்பிக்கையும் பெருகி வருவதற்கு மூலகாரணமாகும். இதை உணர்ந்து இதற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் மக்களைத் திரட்டிப் போராடாதவரை, வெறுமனே நாத்திகப் பிரச்சாரம் மட்டும் செய்து கொண்டிருக்கும்வரை வரம்புக்குட்பட்ட சிலரை மட்டுமே மதப்பிடிப்பிலிருந்து மீட்க முடியும். திரளான அளவில் மக்களை மதப்பிடிப்பிலிருந்து முடியாது; மதத்தையும் கடவுளையும் ஒழிக்கவும் முடியாது.

இது தான் மார்க்சிய-லெனினியவாதிகளின் நிலைப்பாடு. மற்றபடி, நீங்கள் அசுரனுக்கும் எனக்கும் படிக்குமாறு சொல்லக் கொடுத்திருக்கும் பட்டியல் என்னவோ நாங்கள் முற்றிலும் அறியாதது போல நீங்களே கற்பனை செய்து கொண்டது சிரிப்பை வரவழைக்கிறது. தோழர் அசுரனின் பதிவுகளை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்திருக்கும். இந்தப் பதிவினை மேற்கொண்டு திசை திருப்ப விருப்பமில்லை. மேலும் என்னுடன் விவாதிக்கத் தேவையென நினைத்தால் wewakeananda@yahoo.com தனிமடலிடுங்கள். எப்போதும் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன் -- எந்த கோணத்திலும்.

said...

Dear Anony,

When you mail me, it will be greatful if you reveal your identity, since my intention is to set the discussion on the constructive track rather than destructive.

Regards, Sabapathy Saravanan

said...

///முதலாளித்துவ பகுத்தறிவுவாதிகளும் திராவிடர் கழகத்தவரும் பகுத்தறிவு - நாத்திகப் பிரச்சாரத்தின் மூலம் மட்டுமே மதத்தை ஒழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள். கடவுள், மதம் பற்றிய கொள்கைகள் மக்கள் அறியாமையில் இருப்பதனால்தான் நிலைத்து இருக்கின்றன. எனவே, பகுத்துப் பார்த்து, ஆராய்ந்து, முடிவெடுக்கும் முறையை அதாவது, பகுத்தறிவை மக்கள் பின்பற்றினால் மதத்தையும் கடவுளையும் தூக்கி எறிந்து விடுவார்கள் எனக் கருதுகிறார்கள். இது கருத்துமுதல்வாத்தை (கடவுள் மதம், பற்றிய கருத்துகளை) கருத்துமுதல்வாதத்தால் (பகுத்தறிவால்) வென்று விடலாம் என்பதாகும். கருத்துமுதல்வாதம் பிற்போக்காளர்களின் ஆயுதமாகும்; பிற்போக்கிற்கு மட்டும் பொருந்தும் ஆயுதமாகும்; என்வே, அந்த ஆயுதத்தை எடுத்துப் போராடினால் அது பொருள் முதல்வாத்திற்கு எதிராகத்தான் திரும்பும்; பகுத்தறிவுவாதிகளும் திராவிடர் கழகத்தினரும் பல ஆண்டு காலம் எண்ணற்ற வடிவங்களில் பிரச்சாரம் செய்த பிறகும் பக்தியும் கடவுள் நம்பிக்கையும் பெருகியிருப்பதே இதற்குச் சான்றாகும். துன்பதுயரங்களும், வாழ்வில் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிச்சயமற்ற தன்மையும், அதனால் வரும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுதான் பக்தியும் கடவுள் நம்பிக்கையும் பெருகி வருவதற்கு மூலகாரணமாகும். இதை உணர்ந்து இதற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் மக்களைத் திரட்டிப் போராடாதவரை, வெறுமனே நாத்திகப் பிரச்சாரம் மட்டும் செய்து கொண்டிருக்கும்வரை வரம்புக்குட்பட்ட சிலரை மட்டுமே மதப்பிடிப்பிலிருந்து மீட்க முடியும். திரளான அளவில் மக்களை மதப்பிடிப்பிலிருந்து முடியாது; மதத்தையும் கடவுளையும் ஒழிக்கவும் முடியாது.////


வெகு அருமையான விளக்கம்.

said...

///"சாஸ்தா" எந்த காலத்தில் பூணூல் அணிந்தது? குற்றாலம் போகிற வழியில் புதிதாக வர்ணம் பூசப்பட்ட சாஸ்தா பூணூலுடன் :)).

பார்ப்பனீய மதத்திற்கு சாஸ்தா மாறியிருக்குமோ? :))) ///

நண்பர் திரு அவர்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,

*************
///நல்ல கேள்விகளை எழுப்பியுள்ள பதிவு.. இவர்கள் வழக்கமாக பதில் சொலாமல் மழுப்பும் வேறு சில கேள்விகள்-

- எதை இந்து மதம் என்று வரையறுக்கிறீர்கள்?

- இந்திய தத்துவ ஞானமரபு என்பது வெறும் இந்து தத்துவ ஞான மரபு மட்டும் தானா?

- வரலாற்றில் பதிவாகியுள்ள மற்றய தத்துவங்கள் இன்று என்னவானது? எங்கே போனது? யாரால் அழிக்கப் பட்டது?

-வேதங்கள் ஆகமங்கள் வரையறுப்பது தான் இந்து மதம் என்றால், இதெல்லாம் இல்லாத நாட்டார் வழிபாட்டை எந்த மதம் என்று சொல்வீர்கள்?

-அதுவும் இந்து மதம் என்று சொல்வீர்களாயின். ஏன் பார்ப்பனீயம் அதிகாரத்தில் அமர்ந்தவுடன் அவற்றை சமஸ்கிருதமயமாக்க ஆவேசத்துடன் முயற்சி செய்தீர்கள்?
///////


நம்ம ஹரிஹரன் கூட இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் முன்னப் போனா பின்ன கடிக்கீறது பின்ன போன முன்ன உதைக்கிறதுன்னு செஞ்சிக்கிட்டு இருக்கிறாரு. எதையாவது சொன்னால் அது இதில் இல்லை என்பது இன்னொன்னு சொன்னா இது அதில் இல்லை அப்படிங்கிறது. ஆன இது வரை வர்ணாஸ்ரம தர்மம் இந்துத்துவத்தின் ஆன்மா என்பதை மறுக்கவில்லை. மறுக்க இயலாது.

தோழர் ராஜவனஜ் அவர்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,

said...

http://athusari.blogspot.com/2007/01/blog-post_14.html


please see this.

Related Posts with Thumbnails