TerrorisminFocus

Tuesday, January 09, 2007

சாதி வெறியும் - பார்ப்பினியமும்!!

பார்ப்பன இந்துக் கோயில்கள்:
தீண்டாமை மையங்கள்!

ஒவ்வொரு 'இந்து'க் கோயிலுமே, சாதிப் பாகுபாடு நிலவுவதைப் பறை சாற்றும் மையங்களாகத் தான் இருந்து வருகின்றன. ஒரிசா மாநிலம் - கேந்திரபுரா மாவட்டத்திலுள்ள கேரேதகடா கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோ ர் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம், இந்த உண்மையை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.

இந்தக் கிராமத்தில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்தினுள் தாழ்த்தப்பட்டோ ர் சென்று இறைவனை வழிபடுவதைத் தடை செய்யும் தீண்டாமைக் கொடுமை, கடந்த 300 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் சுற்றுப்புறச் சுவரில் போடப்பட்டிருக்கும் ஒன்பது துளைகளின் வழியாகப் பார்த்துதான் இறைவனை வழிபட வேண்டிய கட்டாயத்தில் தாழ்த்தப்பட்டோர் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பு - நவ, 2005-இல் நான்கு தாழ்த்தப்பட்ட பெண்கள் இத்தீண்டாமையை மீறி கோவிலுக்குள் நுழைந்ததால், அப்பெண்கள் மேல்சாதி வெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டுத் துரத்தப்பட்டனர். இத்தாக்குதலையடுத்து, அம்பேத்கர் - லோகியா விசார் மன்ச் என்ற அமைப்பு ஜகந்நாதர் கோயிலில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராக ஒரிசா உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து, ஆலய நுழைவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு பெற்றது.

இத்தீர்ப்பு வழக்கம் போலவே ஒரு கண்துடைப்பு நாடகமாக அதிகார வர்க்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்கிராமத்தைச் சேர்ந்த நான்கு தாழ்த்தப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த டிச. 14 அன்று அவர்களைப் பாதுகாப்போடு கோவிலுக்குள் அழைத்துச் சென்று, இப்பிரச்சனைக்கு மங்களம் பாடியது, அதிகார வர்க்கம். எனினும், யாருமே எதிர்பாராத வண்ணம், அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் கோவிலுக்குள் நுழைந்து, தங்களின் உரிமையை நிலைநாட்டினர்.

இந்தக் கலகத்தால் ஆடிப் போன பார்ப்பன பூசாரிகள், உடனடியாக ஆலயத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். மேல்சாதி வெறியர்கள் சாதிக் கூட்டம் போட்டு, தீண்டாமையை இன்னும் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் எனத் தீர்மானம் போட்டனர். ஜகந்நாதர் கோவில் தீட்டுப்பட்டு விட்டதால், சிறப்பு பூஜை செய்து, ஆலயத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றது பார்ப்பன கும்பல். தாழ்த்தப்பட்டோரின் ஆலய நுழைவை எதிர்க்கும் முகமாக சுற்று வட்டார கிராமக் கோவில்களில் பூசைகள் நிறுத்தப்பட்டன. மேலும், உண்ணாவிரதம், ஊர்வலம் என நடத்தி, மேல்சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைப் பீதியில் ஆழ்த்தினர்.

இப்படி வெளிப்படையாகவே தீண்டாமையைக் கக்கிய மேல்சாதி வெறியர்கள் அனைவரையுமே, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அரசோ ஆதிக்க சாதி வெறியர்களைக் காப்பாற்றும் முகமாகச் சமாதானக் கூட்டம் போட்டது. இக்கூட்டத்தில், தாழ்த்தப்பட்டோ ர் இக்கோவிலுக்குள் நுழைவதை இனி தடை செய்ய மாட்டோம் என மேல்சாதி வெறியர்கள் ஒத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சமாதானக் கூட்டத்தின் இந்த முடிவு ஒரு நாள் கூத்தா, இல்லையான என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.

கேரேதகடா சம்பவம் விதிவிலக்கானதல்ல; நீதிமன்றம்த் தீர்ப்புக்கு பிறகும் கூட, கண்டதேவி கோவில் தேரின் வடத்தை தொடுவதற்க்கு தாழ்த்தப்பட்டோ ரை, மேல்சாதி வெறியர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். கர்நாடகாவில் உள்ள பதனவாலு கிராமத் தாழ்த்தப்பட்டோ ர் ஆலயம் நுழையும் உரிமை கேட்டுப் போராடியதால், மேல்சாதி வெறியர்களால் தாக்கப்பட்டு, மூன்று பேர் கொல்லப்பட்டனர். இவை வெளியுலகுக்குத் தெரிந்த சம்பவங்கள். கிராமங்களுக்குள்ளேயே புதையுண்டு போனவை எத்தனையோ?

"உனக்குக் கடவுள், மதம் வேண்டும் என்றால் உன்னை இழிவுபடுத்தும் இந்து மதத்தில் இருக்காதே" என்றார் பெரியார். அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதத்தைத் தழுவினார். தங்களை ஒதுக்கி வைக்கும் பார்ப்பன சநாதன 'இந்து' மதத்தை, தாழ்த்தப்பட்டோர் புறக்கணிப்பதை தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களுள் ஒன்றாகப் பயன்படுத்த முடியும். இப்புறக்கணிப்பை, மத உரிமை இழப்பாகப் பார்க்க முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு தீண்டாமைத் தாக்குதலும், "இந்து" என்பது ஒரு மதமல்ல. அது ஒரு சாதிப் படிநிலை அமைப்பு என்பதைத்தான் திரும்ப திரும்ப எடுத்துக்காட்டுகிறது!


அசுரன்

நன்றி:
புதிய ஜனநாயகம் - ஜனவரி 2007

8 பின்னூட்டங்கள்:

said...

Test

said...

அசுரன்,

//ஜகந்நாதர் கோவில் தீட்டுப்பட்டு விட்டதால், சிறப்பு பூஜை செய்து, ஆலயத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றது பார்ப்பன கும்பல். //

இதற்கும் தமிழில் பாடியதற்காக மேடையை தீட்டுக் கழித்ததற்கும் என்ன வித்தியாசம்?

//ஆலயம் நுழையும் உரிமை கேட்டுப் போராடியதால், மேல்சாதி வெறியர்களால் தாக்கப்பட்டு, மூன்று பேர் கொல்லப்பட்டனர்.//

இதுவும் கண்டதேவி பிரச்சினையும் இன்னும் எங்கெல்லாம் பார்ப்பனீயத்துக்கு ஆபத்து வருகிறதோ அங்கெல்லாம் மேல்சாதி நாய்கள் தான் அதனைத் தாங்கிப் பிடிக்க / காப்பாற்ற ஓடோடி வருகிறார்கள்.. பார்ப்பனீயத்தின் ஊற்று மூலம் பூனூலில் தொங்கிக் கிடந்தால் / குடுமியில் மேல்சாதித் திமிர் பிடித்த நாய்கள் கட்டுண்டு கிடக்கிறான்கள்.

நல்ல கட்டுரை..

வாழ்த்துக்கள்

ராஜாவனஜ்

said...

//நான்கு தாழ்த்தப்பட்ட பெண்கள் இத்தீண்டாமையை மீறி கோவிலுக்குள் நுழைந்ததால், அப்பெண்கள் மேல்சாதி வெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டுத் துரத்தப்பட்டனர். //

கோவில் எழுப்ப கல் சுமந்தவர்கள் உள்ளே நுழைய கூட அனுமதியில்லை என்று சொல்வது சாதி திமிர்தானே.
சாதித் திமிர் அழிக்கப்படவேண்டும்.

ஆத்திகர் வரும் இடத்தில் நாத்திகரின் சிலையா ? என்று கேட்பவர்கள் மேல் சாதியினர் வழிபடும் இடத்தில் கீழ்சாதியினருக்கு என்ன வேலை ? என்று கூட கேட்பார்கள்.

மண் சுமந்தபடி (பிட்டுக்கு) இன்னொருமுறை சிவன் வந்தால் தாழ்த்தப்பட்டவனாக பார்க்கப்பட்டு கோவிலுக்கு வெளியில் தான் நிறுத்தப்படுவான்.

சாதி பார்க்காத நல்லுள்ளுங்கள் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுக்கவேண்டும்.

said...

அனானி இந்து மதம், மதமல்ல சாதி அடுக்கு சமுதாய அமைப்பு என்ற கடைசி வரிக்கு பொருள் தெரியுமா?

இந்து மதம் என்ற பார்ப்ப்னிய சனதான தத்துவத்தும், மற்ற மதங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக இது சமூதாயம் உற்பத்தி செய்வதற்க்கு மனிதர்களிடையே உறவு வைத்துக் கொள்கிறேதே(நிலபிரபு, நடுத்தர விவசாயி, கூலி விவசாயி, வியாபாரி, அரசன், நாவிதன், சேவை சாதியினர் எட்ச்) இதை கெட்டிப்படுத்தும் தத்துவமாக நிற்கிறது.

அதனால்தான் இந்தியாவுக்குள் வந்த எந்த் மதமும் பார்ப்ப்னியத்தின் மேல் கட்டுமாணத்தில் மட்டுமே பாதிப்பை ஏற்ப்படுத்த முடிந்தது. அதாவது அதன் கலாச்சாரம் இன்னபிற விசயஙக்ளில் அடிக்கட்டுமானமாகிய சாதி ரீதியான சமூக உற்பத்தி முறையில் அது கொண்டிருந்த பிடியை அவைகளும் சுவிகரித்துக் கொண்டன. அதனால்தான் அவற்றிலும் சாதி உள்ளது. ஆயினும் இதன் அளவு பருண்மை, வீச்சு என்பது இந்து மதத்தின் தத்துவத்திலேயும் நடைமுறையிலும் உள்ள அளவு போல கிடையாது என்பதுதான் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

அசுரன்

said...

//இதுவும் கண்டதேவி பிரச்சினையும் இன்னும் எங்கெல்லாம் பார்ப்பனீயத்துக்கு ஆபத்து வருகிறதோ அங்கெல்லாம் மேல்சாதி நாய்கள் தான் அதனைத் தாங்கிப் பிடிக்க / காப்பாற்ற ஓடோடி வருகிறார்கள்.. பார்ப்பனீயத்தின் ஊற்று மூலம் பூனூலில் தொங்கிக் கிடந்தால் / குடுமியில் மேல்சாதித் திமிர் பிடித்த நாய்கள் கட்டுண்டு கிடக்கிறான்கள்.///

ராஜவனஜ்,

மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

அசுரன்

said...

//சாதி பார்க்காத நல்லுள்ளுங்கள் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுக்கவேண்டும். //


கோவி கண்ணன்,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,

இங்கே ப்ளாக் போன்ற குறுகிய ஊடகங்களில் இந்த நடைமுறைக்கு தத்துவ/கலாச்சார பலம் கொடுக்கும் பார்ப்ப்னியத்தை எதிர்த்து குரல் கொடுப்பதன் மூலமாக. இவற்றை புனிதப்படுத்தும்(தமிழில் வழிபாடு தீட்டு, பெண்கள் செல்வது தீட்டு, கருவறைக்குள் வேறு சாதியினர் நுழையக் கூடாது, இன்ன பிற கலாச்சார அடையாளங்கள் குறித்து போலி பெருமிதம் etc) கருத்தாங்களை உடைத்தெறிய குரல் கொடுப்பதே சரியாக இருக்கும்.

இந்திய தத்துவ மரபு என்பது பார்ப்பினியம் காட்டும் மரபு அல்ல என்பதையும் வலுவாக எடுத்து வைக்க வேண்டும்.

அசுரன்

said...

மிகவும் அருமையான மறு பதிவு,வாழ்த்துக்கள்,மீன்டும் வருகிறேன். பவெல்

said...

தமிழினத்தின் சிதைவுக்கு இந்த சாதி வெறியும் பிரதான பங்கு வகிக்கிறது.

"சாதி வெறியும் தமிழீழச் சட்டமும்" எனும் ஆக்கத்தை நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.

http://hongkongtamil.wordpress.com

Related Posts with Thumbnails