TerrorisminFocus

Wednesday, December 13, 2006

ரஜினி - கழிசடைக்கு பிறந்த நாள் - வர்க்க பிறழிகள்!

ரஜினி என்ற கழிசடைக்கு பிறந்தா நாள் கொண்டாடும் வர்க்க பிறழிகள்!

ஜினி என்ற கழிசடைக்கு பதிவு போடும் முதுகெலும்பற்ற பிறவிகள் உலாவும் இதே தமிழ் மணத்தில் புரட்சிக்காரன் பகத்சிங்கிங்கின் 100 வது பிறந்த நாளுக்கு எவனும் பதிவு போடவில்லை.


இது எனக்கு வருத்தம் தரவில்லை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. சமூகத்தின் யாதர்த்த நிலையை ஒரு கம்யுனிஸ்டை விட யாரும் அதிகமாக உள்வாங்கிவிட முடியாது.


ஆயினும் அதே கம்யுனிஸ்டின் கடைமையாக அந்த யாதர்த்ததின் கேடு கெட்ட அம்சங்களை விமர்சிக்க வேண்டிய கடமையும் உள்ளது.அதனால்தான் இந்த சின்ன பதிவு.


என்ன செய்ய... மக்களின் நாட்டுப் பற்றும், கலை ரசனையும் ரஜினியின் களைந்த முடிகளில் சிக்குண்டு தவிக்கிறது. அவனோ உழைக்கும் மக்களின் காசுகளை சுரண்டி கொழுத்து இன்று தத்துவம் பேசித் திரிகிறான்....


இப்படி ஒரு சாக்கடைப் பன்றியின் பிறந்த நாளை நாமும் ஞாபகம் வைத்து கொண்டாட வேண்டும என்பது மறுகாலனியாதிக்க சூழலில் ஆதிக்கம் செலுத்தும் கழிசடை பண்பாட்டின் விதி.


ஏனேனில் ஏகாதிபத்திய பண்பாட்டுச் சூழல் ஆக பெரும்பான்மையாக கழிசடைத்தனத்தையே கலச்சார தளத்தில் உற்பத்தி செய்கிறது....


அசுரன்

37 பின்னூட்டங்கள்:

said...

இந்த பதிவை நேற்றிலிருந்து இரு முறை பிரசூரம் செய்து விட்டேன். ப்ளாக்கர் பழி வாங்கிவிட்டார். ஒரு வேளை அவரும் ரஜினி என்ற கழிசடையின் ரசிகராய் இருப்பாரோ?

இடையில் சிந்தாநதி அவர்கள் இந்த பதிவு குறித்து சில கருத்துக்களை இட்டிருந்தார். அந்த பின்னூட்டத்தையும் அத்ற்க்கான பதிலையும் இங்கு இடுகிறேன்.

அசுரன்

said...

அசுரன்

பகத் சிங்கை முன்வைத்து தேசத்தின் நிலையை அலசியிருக்கும் பாங்கை பாராட்டுகிறேன். நன்றி

உங்கள் அடுத்த பதிவில் பின்னூட்டப் பெட்டி வேலை செய்யவில்லை அதனால் அதற்கான பின்னூட்டமும்:

உங்களின் அந்த பட்டியலில் என் பதிவும் ஒன்று என்பதனால் இதைக்கூற வேண்டியுள்ளது. சிலருக்கு அது தீவிரமான பக்தியின் பாற்பட்டதெனினும் நான் ஒரு பொழுதுபோக்குப் பதிவாகவே அதை அணுகினேன்.

ரஜினியின் அரசியல் அல்லது கொள்கைகள் குறித்தோ படங்களில் கூறப்படும் கருத்து?கள் குறித்தோ அல்லாமலே நல்ல பொழுதுபோக்கைத் தரக்கூடியவராக பலரும் ரசிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. முதலிரண்டிலும் தீவிர நம்பிக்கையாளர்கள் உண்டெனினும் கூட எல்லோருமே அந்த அளவு தீவிரமானவர்கள் அல்லவே!

இனி பகத்சிங்கிற்கு வருவோம்.

//சமூகத்தின் யாதர்த்த நிலையை ஒரு கம்யுனிஸ்டை விட யாரும் அதிகமாக உள்வாங்கிவிட முடியாது.//

நான் பார்த்தவரை கம்யூனிஸ்டுகள் பகத்சிங்கை நினைவு கூர்ந்ததாகவோ புகழ்ந்துரைத்ததாகவோ கண்டதில்லை. மாறாக பிஜேபியினரால் பகத்சிங் நினைவு கூரப்படுவதையும் கொண்டாடப்படுவதையும் கண்டிருக்கிறேன். அதுவே மிக முக்கியமாக பகத்சிங் பற்றி தீவிரமான நல்லெண்ணம் எதுவும் என்னுள் இதுவரை பதியாத்தற்கும் காரணம்!

நன்றி
commented by சிந்தாநதி, December 12, 2006 9:37 PM

said...

//உங்களின் அந்த பட்டியலில் என் பதிவும் ஒன்று என்பதனால் இதைக்கூற வேண்டியுள்ளது. சிலருக்கு அது தீவிரமான பக்தியின் பாற்பட்டதெனினும் நான் ஒரு பொழுதுபோக்குப் பதிவாகவே அதை அணுகினேன்//

பொழுதுபோக்கு என்பது என்ன? பொழுதுபோக்கு உங்களது ஆளுமையில் பாதிப்பை ஏற்ப்படுத்துவதில்லையா?

உண்மையில் பொழுதுபோக்குகள்தான் ஆளும் வர்க்கங்கள் தஙகளது ஆதரவு மனோநிலையை உருவாக்க பயன்படுத்தும் முக்கிய சாதனங்களில் ஒன்று. இன்றையை மறூகாலனியாதிக்க சூழலில் இது மிக பெரிய அளவிலான பரிணாமத்தை எடுத்துள்ளது.

இது குறித்த மருதையனின் கட்டுரை கரும்பலகையின் தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது.
http://blackboards.blogspot.com/2006/11/2.html

பொழுது போக்கு என்பது, உங்களது பணியிடத்தால் ஏற்ப்பட்ட உடல், மன பாதிப்பை வேறூ விதமான பாதிப்புக்கு அவற்றை ஆளாக்குவதன் மூலம்(உடற்பயிற்சி, ஓவியம் etc) மடை மாற்றுவதுதானேயொழிய, அது உங்களிடம் பாதிப்பை ஏற்ப்படுத்தாது என்பது கற்பனையே.

சரி அதை விடுங்கள், ரஜினி குறீத்த பதிவெழுதிய நீங்கள் உங்கள் பிரச்சனைகள் குறித்து, இந்தியாவின் பிரச்சனைகள் குறித்து நினைவுக் கூறத் தகுந்த ஆட்கள், நாள்கள் குறித்து என்னவிதமான பங்களிப்பை செய்துள்ளீர்க்ள் என்பதை பரீசிலிக்கவும், ரஜினி குறித்த பதிவுகள் போன்றவை இன்றைய கழிசடை பண்பாட்டிற்க்கு நாம் பலியாகியுள்ளோம் என்பதை உணரவைக்கவுமே எனது அந்த பதிவு.

ரஜினி குறித்து அவனது நேர்மையற்ற, உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி(துட்டு கொடுத்து சினிமா பார்ப்பது யார்?) சம்பாதிப்பதை விமர்சித்து கூட பதிவு போட்டிருக்கலாம்.

இந்த விசயத்தில் எனது பதிவை சரியான அம்சத்திலேயே நீஙகள் பார்ப்பது போல தெரிகிறது. வாழ்த்துக்கள்.

உஙக்ளது பொழுது போக்குகளிடம் மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவும்.


//ரஜினியின் அரசியல் அல்லது கொள்கைகள் குறித்தோ படங்களில் கூறப்படும் கருத்து?கள் குறித்தோ அல்லாமலே நல்ல பொழுதுபோக்கைத் தரக்கூடியவராக பலரும் ரசிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. முதலிரண்டிலும் தீவிர நம்பிக்கையாளர்கள் உண்டெனினும் கூட எல்லோருமே அந்த அளவு தீவிரமானவர்கள் அல்லவே!
//

இந்த இடத்தில் பொழுது போக்கு குறித்த எனது பதிலையும், ரஜினியின் நேர்மையற்ற சம்பாத்தியத்தையும் சேர்த்து உள்வாங்கி உங்களது கேள்விக்கான எனது பதிலைப் படிக்கவும்.

முதல் விசயம்: பொழுது போக்குகள் மிக முக்கியமான அரசியல் ஆயுதம் எனில், ரஜினி ஒரு பொழுது போக்கு என்ற வகையில் யாருடைய ஆயுதம்?(அதிக ஆசைப்படற பொம்பளை உருப்பட்டதா சரித்திரம் இல்லை என்பது, வேத சாஸ்திரங்கள் புனிதம் என்பது போல மாயையை உருவாக்குவது இவையெல்லாம் கருத்து/கொள்கை கிடையாதா? இவற்றை எதிர்க்கும் ஒரு படத்தில் எல்லாரும் ரசிக்கும் வகையில் அந்த கழிசடை நாய் வந்து நடிப்பானா? 20 கோடி கொடுத்தால் கூட நடிக்க மாட்டான்.)

இரண்டாம் விசயம்: அரசியல் கொள்கை என்று சொல்லியிருந்தீர்கள். அதில் தீவிரமானவர்கள் என்றும் சொல்லியிருந்தீர்கள். சிந்திக்க தெரிந்த மனிதன் ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு அரசியலில் தீவிரமானவந்தான். வித்தியாசம் concious ஆக அந்த அரசியலில் தீவிரமாக இருப்பது(என்னைப் போல) அல்லது அதுவன்றி தான் வாழும் சூழலில் ஆளுமையில் உள்ள அரசியலுக்கு மயங்கி தீவிரமாக இருப்பது(எ-கா: எனது IT குறித்த பதிவில் தங்களது சொந்த பிரச்சனை குறித்து பேசுவதைக் கூட பிடிக்காமல் சம்பந்தமில்லாமல் எகிறுபவர்கள், விஜயகாந்த நல்லவன் என்ற பத்திரிக்கைகளின் திட்டமிட்ட வதந்தியை-வாந்தியை நம்பி ஓட்டுப் போட்ட ஜனங்கள்)

இப்போ உங்கள் கேள்வியை இன்னும் தெளிவாக வைக்க கடமைப் பட்டுள்ளீர்கள்.

Asuran

said...

ஒரு நடிகரின் பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடி மகிழும் ஆட்டு மந்தைகள் குறித்து நீங்கள் எழுதியது எனக்கு முழு ஒப்புதலே. ஆனால் அதே சமயத்தில் எவ்வாறு நடிகரின் பிறந்த நாள் குறித்து எழுதினவர்களை குறித்து விமர்சித்தீர்களோ, அதே காரணத்திற்காகவே பகத்சிங் பிறந்த நாளை நினைவு கூர்ந்ததற்கும் நீங்கள் பெருமையடித்துக் கொள்ள முடியாது.

பிறந்தநாளை நினைவுகூர்வது, கொண்டாடுவது போன்றவை பூர்ஷீவாத்தனத்தின் அடையாளங்கள். முற்போக்காக சிந்திக்கிறவன், இது போன்ற உதவாக்கரத்தனங்களை கவனமாக தாண்டி வந்துவிடுவான். பகத்சிங்கின் நோக்கங்களும், தியாகங்களுமே கொண்டாடப்பட வேண்டும்.

said...

Great Asuran,
You have the guts to write this article to expose this "Kariyakkirukkan" Rajini.

All blog writers and tamil common public should understand your message and related essays published in Puthiya kalacharam.
Izzath

said...

Sir,
ரஜினிக்கு பிறந்த நாள் கொண்டாடும் கழிசடைகள் என்று வேண்டுமானால், நீங்கள் தலைப்பு வைத்திருக்கலாம்! ரஜினியை அப்படிச் சொன்னதற்கான காரணம் என்ன என்பதை எல்லோரும் அறிவார்கள்! இதே போலக் கீழ்த்தரமான வார்த்தைகள் இல்லாமல் இந்த எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தி இருந்தால் கூட எல்லோரும் உங்கள் பதிவைப் படித்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்!

said...

சிவாஜி படத்தின் பிஞ்ச டலயாக்குகள்

//. கண்ணா சிங்கத்த கொஞ்ச முடியாது.
சிவாஜியை மிஞ்ச முடியாது.//

என்னைவிட யாரும் அஞ்ச முடியாது!

என்னைப்போல யாரும் கெஞ்ச முடியாது!


//2. நான் நல்லவனுக்கு சாமி,
கெட்டவனுக்கு சுனாமி!//

நான் கட்டிக்கிட்டது மாமி!

//3. போன் அடிச்சா ரிங்கு,
சிவாஜி அடிச்சா சங்கு.//

நான் இப்போ இருக்கிறது திரிசங்கு!

(திமுக-வுக்கும் அதிமுகவிற்கும் நடுவில்)

//4. சிதம்பரம் போட்டா பட்ஜெட்டு,
சிவாஜி போட்டா ஆல் அவுட்டு!//

எனக்கு எப்போ நீ சொல்லப்போர கெட் அவுட்டு!

said...

அக்கினிக் குஞ்சு,

ரஸ்ய புரட்சி நாளைக் கொண்டாடுவதோ, நக்சல் எழுச்சியை நினைவு கூர்வதோ, இந்திய விடுதலை நாளன்று அதன் போலித்தனத்தை எழுதுவதோ நமது மனநிலையின் அக விருப்பதிற்க்கு ஏற்ப எடுக்கும் முடிவல்ல.

இந்த நாட்க்கள் சமூகத்தில் ஒரு பொது மனநிலையை உறுதிப்படுத்துகின்றன எனும் போது அந்த மனநிலைக்கேற்ற வகையில் மக்களின் விடுதலைக்கான அரசியலைப் பேசும் சந்தர்ப்பமாக அவற்றைப் பார்க்க வேண்டும்.

அதை விடுத்து இது போல யாதர்த்தத்தை நிராகரிக்கும் வறட்டு கோட்பாட்டு வாதம் கற்பனாவாத கம்யுனிசத்திலும், அராஜகவாதத்திலும்(anarchism) கொண்டு போய் விட்டுவிடும்..

இவை பூர்ஷ்வாத்தனத்தின் அடையாளம் என்று யார் சொன்னது?

சரி இந்தியாவின் புதிய ஜனநாயக புரட்சி நிலைமையில் பாட்டாளியின் பண்பாடு என்பது எதுவாக இருக்க முடியும்?


ஆயினும் அக்கறையான விமர்சனத்திற்க்கு நன்றி

அசுரன்

said...

Asuran,

//என்ன செய்ய... மக்களின் நாட்டுப் பற்றும், கலை ரசனையும் ரஜினியின் களைந்த முடிகளில் சிக்குண்டு தவிக்கிறது.//

I think in Tamil Nadu, the list starts from "attaik kaththi hero" MGR. The amount of time and money wasted by these fans are unimaginable. Because of these fools only a PROS could able to become a CM. A - @*&^%%$##^&*@ Vijayakandu dreams to become CM.
Even this 'podippaiyan' thanush giving 'messages' to tamil community accross the world.

//சாக்கடைப் பன்றியின் பிறந்த நாளை நாமும் ஞாபகம் வைத்து கொண்டாட வேண்டும என்பது மறுகாலனியாதிக்க சூழலில் ஆதிக்கம் செலுத்தும் கழிசடை பண்பாட்டின் விதி.
ஏனேனில் ஏகாதிபத்திய பண்பாட்டுச் சூழல் ஆக பெரும்பான்மையாக கழிசடைத்தனத்தையே கலச்சார தளத்தில் உற்பத்தி செய்கிறது....//

excellent analysis and comparison with neocolonial environment..


-Rajavanaj
rajavanaj@gmail.com
Due to beta issues commenting as anony.
Sorry for english - I am out of station.

said...

அசுரன்,
உங்கள் பதிவை நான் கண்டிக்கிறேன். ரஜினி ஒரு சாதாரண மனிதன். அவருக்கும் ஊசலாட்டங்களும், இன்ன பிற பலவீனங்களும் உண்டு. அவர் ரசிகர்கள், அவர் பிறந்தநாளை கொண்டாடுவது அவர்கள் இஷ்டம், அதை நீங்கள் இது போன்ற வார்த்தைகளால் விமர்சிப்பது அநாகரிகமான செயல்.

இன்றைய கழிசடை பண்பாட்டிற்க்கு நாம் பலியாகியுள்ளோம் என்பதை உணரவைக்கவுமே எனது அந்த பதிவு.

உங்கள் வார்த்தைகளை வைத்தே ஒரு கேள்வி. இந்த "கழிசடை பண்பாடு" வளர காரணம் யார்? யோசித்து பாருங்கள். நிச்சயமாக, ரஜினியை நம்பி வியாபாரம் செய்யும் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும், அதிமுக்கியமாக சினிமாவையே தங்கள் ஜீவன அபயமாக கொண்ட பத்திரிக்கைகளுமே. சாடுவது என்று முடிவெடுத்தால் அவர்களை சாடுங்கள்.

said...

//அதிமுக்கியமாக சினிமாவையே தங்கள் ஜீவன அபயமாக கொண்ட பத்திரிக்கைகளுமே. சாடுவது என்று முடிவெடுத்தால் அவர்களை சாடுங்கள்//

ஹரி அய்யா,

சன் டிவி மாறன் கும்பல், மற்றும் சினிமா வசனகர்த்தா, குத்தாட்ட பிரியர்,ஆயிரம் பட்டம் வாங்கிய அபூர்வ சிந்தாமணி, நம் முதல்வர் எல்லோரும், சோஷலிச முறையில் சாடப்படவேண்டியவர்களே.

பாலா

said...

ஹரி,

கழிசடைப் பண்பாட்டின் அனைத்து ஊற்று மூலங்களையும் அம்பலப்படுத்தி விரிவாக எழுதலாம்... ஆனால், நீங்கள் கூட வந்து படிக்க மாட்டீர்கள்...

இந்த பதிவு ரஜினி பிறந்த நாளை ஞாபகம் வைத்து கொண்டாடும் இழிவான நிலையையும் அதே நேரத்தில் நமது விடுதலைக்காக தியாகம் செய்த தோழர் பகத்சிங்கின் பிறந்த நாளை மறந்த கழிசடை தனத்திற்க்கும் இங்கு மயங்கி கிடப்பவர்களை சிறிது தொடையில் கிள்ளி விடவே

ஆகையால் வேறு விசயங்களை விரிவாக பேச வாய்ப்பில்லை....

பாலாவின் கருத்தில் எமக்கு உடன்பாடே...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் பாலாவுக்கும், ஹரிக்கும் ந்ன்றி

அசுரன்

said...

ராஜவனஜ்ஜின் கருத்துக்களுக்கு நன்றி,

ஒரு சின்ன மொழிபெயர்ப்பு தவறு செய்து விட்டீர்கள்... மறுகாலனியாதிக்கம் என்பதும் Neocolonialism என்பதும் ஒரு வரலாற்றுக் கட்டத்தின் இரண்டு நிலைகள்... வெவ்வேறானவை...

குறிப்பாக மறுகாலனியாதிக்கம் என்பது ஒற்றை துருவ வல்லரசு எனும் அமெரிக்க மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது....

அசுரன்

said...

நெடுநாள் கழித்து வந்துள்ள நண்பர் இசாத்தை அன்புடன் வரவேற்கிறேன்.....

வருகைக்கு நன்றி,
அசுரன்

said...

///
Sir,
ரஜினிக்கு பிறந்த நாள் கொண்டாடும் கழிசடைகள் என்று வேண்டுமானால், நீங்கள் தலைப்பு வைத்திருக்கலாம்! ரஜினியை அப்படிச் சொன்னதற்கான காரணம் என்ன என்பதை எல்லோரும் அறிவார்கள்! இதே போலக் கீழ்த்தரமான வார்த்தைகள் இல்லாமல் இந்த எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தி இருந்தால் கூட எல்லோரும் உங்கள் பதிவைப் படித்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்!
////

உண்மைதான் ஆயினும் ஏற்கனவே சொன்னது மாதிரி உயர் பாண்பாடுகள் அனைத்தும் பின் வாங்கியுள்ள்(பின்வாங்கியுள்ளன எனில் மீண்டும் முன் வரும் என்று அர்த்தம்) நிலையில்... அது போல அய்யா ராசா கவனிச்சுக்கோடா என்று தடவி விட்டு பதிவு போட்டால் சிலர் வந்து வாசித்து விட்டு பாராட்டுவார்கள். உண்மையிலேயே இப்பொழுது இங்கு வந்து விமர்சனம் செய்து கொண்டிருக்கும் ஆட்கள் கண்டுகொள்ளாமலேயே போய்விடுவார்கள்.

அவர்களை விவாதத்திற்க்கு இழுத்து சிந்திக்க தூண்டவே provokation தேவைப்படுகீறது.

என்ன செய்ய.... வேற வழியில்லை...

கருத்துக்களுக்கு மிக்க நன்றி

அசுரன்

said...

//அசுரன்,
உங்கள் பதிவை நான் கண்டிக்கிறேன். ரஜினி ஒரு சாதாரண மனிதன். அவருக்கும் ஊசலாட்டங்களும், இன்ன பிற பலவீனங்களும் உண்டு. அவர் ரசிகர்கள், அவர் பிறந்தநாளை கொண்டாடுவது அவர்கள் இஷ்டம், அதை நீங்கள் இது போன்ற வார்த்தைகளால் விமர்சிப்பது அநாகரிகமான செயல்.

இன்றைய கழிசடை பண்பாட்டிற்க்கு நாம் பலியாகியுள்ளோம் என்பதை உணரவைக்கவுமே எனது அந்த பதிவு.

உங்கள் வார்த்தைகளை வைத்தே ஒரு கேள்வி. இந்த "கழிசடை பண்பாடு" வளர காரணம் யார்? யோசித்து பாருங்கள். நிச்சயமாக, ரஜினியை நம்பி வியாபாரம் செய்யும் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும், அதிமுக்கியமாக சினிமாவையே தங்கள் ஜீவன அபயமாக கொண்ட பத்திரிக்கைகளுமே. சாடுவது என்று முடிவெடுத்தால் அவர்களை சாடுங்கள்.

//

ஆஹா ஆஹா அற்புதமான லாஜிக்னா.

ஏண்ணா, இதே லாஜிக்கை, இன்னொன்னுக்கும் பொருத்தலாமா?

பாராளுமன்ற தாக்குதல் நடக்க காரணம் -> கஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை இந்தியா மறுத்தது தான். எனவே தூக்கில் போடுவது என முடிவெடுத்தால், இந்திய அதிகார வர்க்கத்தை தூக்கில் போடுங்கள்.

லாஜிக் லங்கோடுகளே, பதில் சொல்லுங்கள்.

வணக்கத்துடன்.

said...

அக்கறையான பதிவு. வார்த்தைகளைக் கூட சரியாகத்தான் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

said...

//ரஜினி குறித்து அவனது நேர்மையற்ற, உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி(துட்டு கொடுத்து சினிமா பார்ப்பது யார்?) சம்பாதிப்பதை விமர்சித்து கூட பதிவு போட்டிருக்கலாம்.//

பொழுதுபோக்குகள் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவனவாகவே உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உழைக்கும் மக்களே ரஜினி உள்ளிட்ட சினிமா ஆளுகைகளின் ஆயுதமாகவும் கருவிகளாகவும் கைத்தடிகளாகவும் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள்.

ஒரு புறம் உழைக்கும் பணத்தில் மதுவிற்காக செலவழிப்பதும் மறுபுறம் திரைப்படங்கள் பார்த்தழிப்பதும் தீமை என்று பொதுவில் சொல்லி விடலாம் தான். ஆனால் அவர்களின் மனஅழுத்தங்களுக்கும் உடல் சலிப்பிற்குமான ஆறுதலான அதை எவ்விதம் புறக்கணிக்க முடியும். நித்தம் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் மக்களிடம் அழுகின்ற படங்களையும் கலைநுட்பங்களையும் ரசிப்பதற்கு உள்ள மனநிலையையும் எதிர்பார்க்க முடியாது. இதுவே ரஜினி உள்ளிட்ட கதாநாயகத் தன்மைகளின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமானவை.

அதைப்பிரதிபலிக்கும் சில ஆக்கங்களே இங்கும் சிலபலவாக சிதறிவிடுகின்றவை. உங்களின் ஆக்கமும் அதுசொல்லும் உணர்வும் மிக நுட்பமானவை. ஏற்கத்தக்கவை என்ற போதும் என்னைப் பொறுத்தவரை உங்களளவுக்கு extreme மனோபாவம் இல்லை. மிதமான பத்திரிகையாள உணர்வு, சற்று ஜனரஞ்சகமான என்றும் சொல்லலாம். கொள்கையளவில் அதில் குறைபாடுகளும் இருக்கலாம்.

பார்ப்போம் சிந்தனை முடிச்சுகள் சிக்கலவிழ்க்கும்போது பலவிதமாய் பகிரலாம்.

said...

அசுரன்,

//சாக்கடைப் பன்றியின் பிறந்த நாளை நாமும் ஞாபகம் வைத்து கொண்டாட வேண்டும என்பது மறுகாலனியாதிக்க சூழலில் ஆதிக்கம் செலுத்தும் கழிசடை பண்பாட்டின் விதி//

ரஜினி என்ற நடிகர் அவர் வேலையை செவ்வனே செய்து, அதுக்கான கூலியை சம்பாதித்து அவர் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்படி என்ன கோபம் அவர் மேல்?

பன்றி, கழிசடை என்றெல்லாம் திட்டுவது ஓவர்.

அவர் பாட்டுனு சிவனேனு அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவரின் அபிமானிகள் அவர் பிறந்தநாளை கொண்டாடுவதில் ஒன்றும் பெரிய தவறில்லை. அந்த நாளில் சில பல நல்ல காரியங்கள் நடந்தால் நல்லதே.

பண்ணிட்டுப் போவட்டும் விடுங்க.

( யாருக்கு தெரியும், ரஜினி விளம்பரம் ஒண்ணும் செய்யாமல், ஏதாவது பள்ளிக் குழந்தைகளுக்கோ அனாதத ஆசிரமத்துக்கோ கொடை வழங்கி இருக்கலாம் இல்லியா?. விளம்பரப் படுத்தி பாப்புலாரிட்டி சேர்ப்பதை விட அது எவ்வளவோ மேல்)

இது தேவை இல்லாப் பதிவு. சாரி :)

said...

ரஜினி என்கிற கழிசடைக்கு எல்லாம் பிறந்த நாள் கொண்டாடியும் தனை நியாயப்படுத்தியும் வருகிறவர்கள் யார் எனப் பாருங்கள். ஆரிய ராஸ்கல்கள் தான். ஏன்? இவர்களுக்கு இந்த ஆள் தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யாமல் சுண்னம்பு தடவியது தெரியாதா? காவிரிப் பிரச்னையில் கர்நாடகாவுக்குச் சாதகமான நிலை மட்டுமே கொண்டுள்ளது தெரியாதா?
இல்லை ஆங் அது என்னா? ஒரு துளிவியர்வை etc உடல் பொருள் ஆவி தமிழர்க்குக் கொடுக்கிறது blah blah
இதெல்லாம் சும்மா என்பதாவது தெரியாதா?

எல்லாம் தெரியும் இதை எல்லாம் விட அந்தக் கழிசடை பாஜக ஜாடிதூக்கி என்ற ஒரே காரணம் தான் இவர்களைக் கூஜா தூக்க வைக்கிறது.

அவ்ளோ சீக்கிரம் எப்டியா இந்த ஆள் பல்டி அடிக்கிறத மறக்கிறாங்க?

தைரியலட்சுமி(?) முன்னாடி கைகட்டி வாய்பொத்தி நிக்கிர பவ்யமான கோழை தான் இந்த கழிசடை.

இந்தக் கழிசடை தமிழ்நாட்டிற்குப் பிடித்துள்ள சாபக்கேடு.

இறுதியாக இந்தக் கழிசடையின் ரசிகர்களின் காமெடி நிறைந்த 'மாய' எதிர்வினைகள் குறித்து ஆச்சரியப் படத் தேவையில்லை. இவர்களின் அறிவு முதிர்ச்சி பற்றி மேலும் படிக்க

http://kilumathur.blogspot.com/2006/07/blog-post_10.html

நன்றி: பதிவர் மகேந்திரன்

said...

Thank God, India is not Asuran's socialist utopia.If it were so it would be like Russia under Stalin
or Cambodia under Pol Pot.
One need not hate or like Rajini Kant to apprecaite the sacrifice of Bhagat Singh.One can be critical of negative impacts
of fan culture and hero worship.
By your language and style you will be alienating many. No dialog is possible when you start with
holier than thou article.Many fans of Rajini Kant are not anti-social
elements.They may see no contradiction in being a fan of a star and being patriotic.They may be ignorant about Bhagat Singh.
A real communist will try to win over others through dialog and
understanding. (s)he will concede that the masses will have illusions and blind faith but for
that he will not start calling them as pigs.

said...

Hello sir , How R U

Your Thinking is good

But don't speak about communist, you know the old communists are fine, but now they are bastedes. They are comming out from their rules. They are joining the money side.

But RAJINIKANTH giving some entertainment to our life.
We must need entertainment in our life. So everybody liking rajinikanth. If you can give some entertainment to others, everybody will like you.

So Mr. Rajinikanth is Great GreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreatGreat

said...

sirandha samooga akkarai padhivarnu solli irukkaanga ungala.
kazisadainnu ellaam ezudhuneenganna padhavi poyidap povudhu sir.

said...

////
//ரஜினி குறித்து அவனது நேர்மையற்ற, உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி(துட்டு கொடுத்து சினிமா பார்ப்பது யார்?) சம்பாதிப்பதை விமர்சித்து கூட பதிவு போட்டிருக்கலாம்.//

பொழுதுபோக்குகள் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவனவாகவே உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உழைக்கும் மக்களே ரஜினி உள்ளிட்ட சினிமா ஆளுகைகளின் ஆயுதமாகவும் கருவிகளாகவும் கைத்தடிகளாகவும் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள்.

ஒரு புறம் உழைக்கும் பணத்தில் மதுவிற்காக செலவழிப்பதும் மறுபுறம் திரைப்படங்கள் பார்த்தழிப்பதும் தீமை என்று பொதுவில் சொல்லி விடலாம் தான். ஆனால் அவர்களின் மனஅழுத்தங்களுக்கும் உடல் சலிப்பிற்குமான ஆறுதலான அதை எவ்விதம் புறக்கணிக்க முடியும்.
///

சிந்தாநதி,

ஒரு சுரண்டலை(உழைப்பின் களைப்பு, வாழ்க்கைப் பிரச்சனைகள்) காரணம் காட்டியே இன்னோரு சுரண்டலை(ரஜினி படத்தை பார்ப்பது) நியாயப்படுத்துவது என்ன வகை நியாயம் என்று சிந்தாநதி நீங்களே விளக்குங்கள்.

அப்படிப் பார்த்தால் சீனாவில் ஒப்பியம் விற்ற பிரிட்டிஸ்க்காரன் கூட நல்லவந்தான். ஒரு கஞ்சா வியாபாரியுடன் ரஜினி ஒப்பிடுவதை நான் ஆதரிக்கிறேன் என்றாலும், கஞ்சா வியாபாரி நல்லவன் என்ற உங்களது அபிப்ராயம் தவறு.


உண்மையில் இவை உழைக்கும் மக்களின் உண்மையான பிரச்சனைகளின் பக்கம் அவர்களின் பார்வை செல்லவிடாமல் தடுக்கும் கஞ்சாக்கள்தான் அதனால்தான் இவற்றிலேயே படு கேவலமான கலைப் படைப்புகளையும் கூட அரசாங்கமும் அனுமதிக்கீறது. மாறாக கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் எனில் எல்லாவகை தடைகளையும் அரசு உருவாக்குகிறது(எ-கா: நாகரீக கோமாளி படத்திற்க்கு போலிசும் அரசும் தந்த பிரச்சனைகள். தியேட்டர்காரர்களைக் கூட மிரட்டி படப் பெட்டியை பிடுங்கிச் சென்றனர்).

ஆக, தவிர்க்க இயலாமல் மக்களின் விழிப்புணர்வுக்கு போராடும் சமூக மாற்றம் விரும்புகிறவர்களின் எதிரியாக இந்த கழிசடை ரஜினி முதலான பன்றிகள் இருக்கிறார்கள்.

சுரண்டல் என்பது இதன் பொருளாதார அம்சம். அரசியல் சுரண்டல் என்பது இதன் அரசியல் அம்சம். இந்த இரண்டு அம்சத்திலும் இவனைப் போன்ற கழிசடைகள் மக்கள் விரோதிகளே.
//
நித்தம் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் மக்களிடம் அழுகின்ற படங்களையும் கலைநுட்பங்களையும் ரசிப்பதற்கு உள்ள மனநிலையையும் எதிர்பார்க்க முடியாது. இதுவே ரஜினி உள்ளிட்ட கதாநாயகத் தன்மைகளின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமானவை.
////

இது உழைக்கும் மக்க்ள் குறித்த உங்களது புரிதலின் குறைபாட்டை காட்டுகிறது. ஏனேனில் கலைகள் பிறக்குமிடம்/அடுத்த கட்ட வளர்ச்சி அடையும் இடம் நீங்கள் குறிப்பிட்ட அந்த 'கலைகளை ரசிக்க இயலா' உழைக்கும் மக்கள்தான். இது கலை இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சி குறித்து விரிவான விசயம். நறுக்கு தெறித்தால் போல சுருக்கி சொல்லும் அளவு எனக்கு அறிவு/மொழி வல்லமை இல்லை. வாய்ப்பிருந்தால் எனது எதிர்கால பதிவுகளின் இந்த விசயத்தையும் விரிவாக பேசலாம்.

ரஜினியை ரசித்த அதே உழைக்கும் மக்கள்தான் இளையராஜாவின் இசையையும் ரசித்தார்கள். அந்த உழைக்கும் மக்களால் செத்துப் போன கர்னாடாக இசை ரசிக்க முடியாது என்பது கிளைக் கதை. இங்கு அவர்களின்(உழைக்கும் மக்களின்) கருத்துக்களை ஆளுமை செலுத்தும் ஊடகங்களும் அவற்றின் அரசியலுமே முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான் இன்றைய மறுகாலனியாதிக்க சூழல் ஆக பெரும்பான்மையாக் கழிசடைத்தனத்தையே உற்பத்தி செய்கிறது என்று கூறினேன்.

இதை உறுதிப் படுத்தும் விதமாக பின்னூட்டங்களும், எதிர்வினைகளும் வந்துள்ளன. என்ன செய்ய கழிசடைகளில் இரு வகை உண்டு, வறுமையான வாழ்வியலால் கழிசடையானவர்கள் - இவர்கள் இந்தியச் சூழலில் அரசியல் சக்தியாக பயன்படுத்தக் கூடியவர்கள்தான்.

ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் வனப்பில் கழிசடையான உயர் நடுத்தர வர்க்க புது மேட்டுக் குடி யுப்பி கழிசடைகள். இங்கு தரங்கெட்ட வகையில் எதிர்வினை தொடுத்த பலரும் இந்த இரண்டாம் கேட்டகிரியில் வருபவர்கள்.
//உங்களளவுக்கு extreme மனோபாவம் இல்லை. மிதமான பத்திரிகையாள உணர்வு, சற்று ஜனரஞ்சகமான என்றும் சொல்லலாம். கொள்கையளவில் அதில் குறைபாடுகளும் இருக்கலாம்//

இது எனது உஙக்ளது அல்லது பிறரது மனநிலை குறித்த விவதம் அல்ல என்று கருதுகிறேன், இது பிரதானமாக நம் எல்லார் மீதும் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய கலாச்சார சூழல் குறித்த விவதம். அதனால் நமது தனிப்பட்ட கருத்து நிலைப்பாடுகளை களைந்து விட்ட சமூக யாதர்த்தம் என்னவென்பதை உள்வாங்கி புரிந்து கொள்வதே சிறப்பானதாக இருக்கும். இந்த அடிப்படையில் என்னை குறிப்பிட்டு நீங்கள் உபயோகப்படுத்திய extreme என்ற வார்த்தையை மறுக்கிறேன்.//பார்ப்போம் சிந்தனை முடிச்சுகள் சிக்கலவிழ்க்கும்போது பலவிதமாய் பகிரலாம். ///

நல்லது.. பயனிப்போம்... இது போன்ற விவாதங்களை அடிக்கடி நடத்த உதவுங்கள்...

அசுரன்

said...

BNI,

வருகைக்கு நன்றி,

//பன்றி, கழிசடை என்றெல்லாம் திட்டுவது ஓவர்.//

வேறு எப்படி திட்டலாம்?///ரஜினி என்ற நடிகர் அவர் வேலையை செவ்வனே செய்து, அதுக்கான கூலியை சம்பாதித்து அவர் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்படி என்ன கோபம் அவர் மேல்?
///

அப்படிப் பார்த்தால் எதையுமே திட்டக் கூடாது. எல்லாருமே அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்க்ளுக்கு என்ன பிரச்சனை?


சம்பாதிக்கீற பணமே நேர்மையில்லாமல் இருக்கிறது, இதில் விளம்பரப்படுத்தாமல் சேவை செய்வதற்க்காக பாராட்ட வேண்டுமாம்.... இது மாதிரி எப்படி உங்களால சிந்திக்க முடிகிற்து என்று தெரியவில்லை.

அவன் என்ன செய்துவிட்டான் என்று அவனுக்கு இவ்வளவு பணம்... சொல்லுஙக்ள் இந்த பணம் எங்கிருந்து வந்தது... ம்ரத்துல காச்சாதா? கூலி உழைப்புதான் மூலதனத்தை உருவாக்குகிறது. இவையெல்லாம் எங்கெங்கோ எவனெவனோ உழைக்கும் மக்களை சுரண்டியதை இங்கு இவனிடம் கொட்டி இன்னொரு முறை சுரண்ட ஏற்ப்பாடும் செய்வதுதான்.

எனது முந்தைய பின்னூட்டத்தை படிக்கவும்.

அசுரன்

said...

Thiru Asuran,
your comments on RAJINI is correct.
The pity is, our peopel are not able to differentiate the cenema & politics. They are blindly running after the fake image.i think education only change the situation. then i read, your menu - hai - exactly i too like what you like. - priyamudan - yaaro

said...

///
Thiru Asuran,
your comments on RAJINI is correct.
The pity is, our peopel are not able to differentiate the cenema & politics. They are blindly running after the fake image.i think education only change the situation. then i read, your menu - hai - exactly i too like what you like. - priyamudan - yaaro

///யாரோ,

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி...

educationனும் அவர்களின் அரசியல் விழிப்புணர்வை உறுதிப்படுத்தும் educationஆக இருக்க வேண்டும்.

அசுரன்

said...

இந்த கழிசடையை நல்லவே விமர்சனம் செய்து பதியிட்டுறீர்கள்....
விவாதத்தில்......

கலை , பொழுதுபோக்கின் இன்றைய நிலை....உழைக்கும் எமது மக்கள் இவற்றால் அடைவது என்ன? அவர்களுக்கு தேவையானது என்ன?...என்பதை ஒட்டி சென்று கொண்டு இருப்பது சிறப்பாக உள்ளது......

தோழர் மருதையன் அவர்களின் உரையில் இருந்து

நமக்குத் தேவைப்படுவதோ புதிய உணர்வு. உழைப்பைத் துன்பமாகவும் ஒய்வை இன்பமாகவும் கருத வைக்கும் இந்த முதலாளித்துவ உடைமை உறவினை ஒழிப்பதன் மூலம் உழைப்பையே இன்பமாக உணரும் புதிய சமுகத்தைஉருவாக்கத் தேவையான - விடுதலை உணர்வு.

இந்தப் புதிய உணர்வினைத் தருகின்ற இசையையும், அந்த உணர்வினைப் பெறுகின்ற ரசயனையையும் எந்த விளம்பரதாரரும் நமக்குத் தயாரித்து வழங்க முடியாது.

said...

Art & literature, Science, Politics have start from a same point in theUnwritten history also.

It is like railway track. A growth on one is affect another one also. It is scence approach not so-called stalinist or Pol Pat approach.

It is not Yours Utopia of the Eath paradise of The Rajinis Himalayan Tour and his cinema or real controversed life etc.

Socialism or forthcoming communism is not the Utopia. It is the first step of a Child. Are u accept it.


Do you know aboutRussia under Stalin
or Cambodia under Pol Pot. I want to know to your knowledge depth about above.

//One need not hate or like Rajini Kant to apprecaite the sacrifice of Bhagat Singh.//

Above is like "Can i oppose Hidutva as well as support Vajpayee ...


Continues dialogue is not give the result. It is called Parlimentarian Democracy. MPs have the rights to discuss, but the have not get the rights to do it.
//
Many fans of Rajini Kant are not anti-social
elements.They may see no contradiction in being a fan of a star and being patriotic.They may be ignorant about Bhagat Singh.//
Yes please edit this paragraph like to form withou first sentence form a single sentence you got my answer.

-aasath

said...

பகத்சிங்கை மறந்தது நமது தவறு என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அதே நேரத்தில் எத்தனையோ தியாகிகள் மறக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.

ரஜினி ஒரு நடிகன். அவனது தொழில் நடிப்பது. அதை செவ்வனே செய்து மக்களால் ஆராதிக்கப்படும் நடிகனாக இன்று திகழ்கிறான். இதற்கு காரணம் சினிமா என்ற மாயையில் நம் மக்கள் மயங்கியிருப்பது தான். வேறு எத்தனையோ நடிகர்களால் இந்த இடத்தை அடையமுடியவில்லை என்பது உண்மை. மேலும் அது தொடர்ந்து எண்ணெய் ஊற்றி வளர்க்கப்பட்டு வருகிறது.பாட்டாளி மக்கள் அல்ல படித்தவர்களும் நடிகர்களின் புகழ்பாடுகிறார்கள். இதற்கு காரணம் ஊடகங்கள். இதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். ரஜினியை நிராகரிப்பதும், ஆதரவு அளிப்பதும் மக்கள். இதில் குற்றம் சாட்டப்பட வேண்டியது மக்களையே அன்றி ரஜினியை அல்ல. ரஜினி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தியிருக்கிறார். அதனால் மக்கள் மனதில் இடம் பெற்றும் விட்டார். ரஜினி நல்லவரோ கெட்டவரோ, அவர் செய்யும் தொழிலை செய்கிறார். மக்கள் பணத்தை கொள்ளையும் அடிக்கவில்லை. மக்கள் அவரை நிராகரித்தால் அவரால் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியுமா? எவ்வளவோ நடிகர்கள் இருக்கிறார்களே?
மேலும் நாட்டு மக்கள் திரைப்பட நாயகர்களை தங்கள் கடவுளாக நினைப்பதும், திரைப்படங்களை தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து செயல்படுவதையும் முதலில் நிறுத்தவேண்டும். ஆனால் அது முடியுமா என்பது சந்தேகம். நமது கலாச்சாரம் அப்படி மாறியிருக்கிறது.

இந்த கலாச்சாரம் எதிர்காலத்தில் மாறவேண்டும். அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை யோசிக்கவேண்டும்.

யாரையும் வார்த்தைகளால் தாக்குவதில் எந்த பயனும் இல்லை.

said...

ரஜினி கழிசடையிலும் கழிசடை, கேடுகெட்ட கழிசடை!

இது வரை தமிழகத்திற்காகவும், தமிழுக்காகவும் ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர்.

இந்த பதிலை நான் சொல்லவில்லை.

ரஜினியின் மனைவி லதா சில வருடங்களுக்கு முன் லண்டனுக்கு சென்று அங்கு ரஜினியின் நிகழ்ச்சி ஒன்றை (இங்கு ரஜினி 25 என்ற நிகழ்ச்சி போல) நடத்த திட்டமிட்டு அங்குள்ள தமிழர்களை சந்தித்தார். அப்போது அங்குள்ள தமிழர்கள் சொன்ன பதில் தான் இது.

"இது வரை தமிழர்களுக்காக ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத நீங்கள், வாழ்விடத்திற்காக போராடும் எம்மக்களை சுரண்ட வந்துள்ளீர்களா?"

மறுபேச்சு பேசமுடியாமல் அவமானத்துடன் திரும்பினார் ரஜினி.

said...

அக்கினிக் குஞ்சின் விமர்சனத்தின் ஒரு பகுதி கட்டுரையில் இருந்த 'என்னைத் தவிர' என்ற வார்த்தை என்று கருதுகிறேன். இது என்னுள் இருக்கும் குட்டி முதலாளித்துவ பரவசவாதியின் விளைவு என்று உணர்கிறேன். அந்த வார்த்தைகளை எடுத்துவிட்டு கட்டுரையை மறு பிரசூரம் செய்கிறேன்.

சுட்டிக் காட்டி விமர்சனம் செய்த அக்கினிக் குஞ்சிற்க்கு நன்றிகள்!!

அசுரன்

said...

Manjuur Raaja vukku aasath

Can i introduce some actors like Chaplin, such directors like Eisenstein ... etc.

Great Dictator criticised Hitler & his Politics while his time. Chaplin hadn't compromise with it and capitalism also like "Modern World"

"Warship Pothamkeer" had gave the superior feeling and helped to wake-up of Russian Soviet's Revolution.

"Omar Mukthar" -- Pls see this film for a portrait of strugle against colonial rulers.

But in the case of your so-called ACTOR had acting really on the ere of first round of Liberalization. See and recall Annamalai, Thalapathy, Mannan, Veera, Arunachalam, Muthu ...etc. What is the message to our country.

One minute why he call peoples to against Jeyalalitha on 1996 election. Are you trust him for the concern about peples or fearness of his Cinema market?

Why he call peoples to vote for BJP after the atom bomb explosition?

Why many fans of Rajini have support Vajpayee?

These fellow (ie, his fans had a worst values from his parents and the family members while 80s like lumbans). Do you know it?

-aasath

said...

இங்கு இணையாக பதிலளித்து பங்களிப்பு செய்யும் ஆசாத்துக்கு நன்றிகள்

அசுரன்

said...

this msg is useful one but avoid hard words

said...

வனக்கம paraiyane

said...

சும்மாங்கூட்டி

Related Posts with Thumbnails