TerrorisminFocus

Tuesday, August 24, 2010

இந்திய ஏழைகளும், குழந்தைகளும் மேற்குலகின் கினியாப் பன்றிகள்!!!

தெற்காசியாவில் சீனாவுடன் வல்லரசுப் போட்டியில் இருப்பதாக கருதிக் கொள்ளும் இந்தியா, உகண்டாவுடன் போட்டியிட்டு ஒரு சாதனை படைத்துள்ளது. அமெரிக்க குழந்தைகளுக்கான புதிய மருந்துகளை பரிசோதனை செய்யும் சோதனைச் சாலை எலிகளாக இந்தியாவின் குழந்தைகளும், உகண்டாவின் குழந்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதை சமீபத்திய ஒரு அமெரிக்க அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு செய்வது தார்மீக ரீதியாக தவறு என்று அந்த அறிக்கை சொல்கிறது(கவனிக்கவும் இந்திய அரசு அப்படி நினைக்கவில்லை).

""M Nabeel Ghayur, a pharmacologist who worked in drug development in Pakistan before joining McMaster University in Hamilton, Ontario, Canada, said conditions are similar in India and Pakistan.

“People actually have blind trust in their doctor in South Asia. They have no idea what drug development is, they have no idea what clinical trials are,” he said. ""


இதே நேரத்தில், உ.பியில் அம்மை தடுப்பூசி இட்டுக் கொண்ட 4 குழந்தைகள் உடனடியாக மரணமடைந்தனர். முன்பு 2008ல் தமிழகத்தில் இதே தடுப்பூசி படுகொலைகளுக்குக் காரணமான இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் நிறுவனம்தான் உ.பி. படுகொலைகளுக்கும் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இங்கு அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் என்ற பெயரில் அப்பாவி ஏழைகளின் உடல் கூறுப் போடப்படுவதும், பெண்களின் கருப்பைகள் கூட கொதறப்பட்டுள்ளதும் முன்பு அம்பலமானதையும், பன்றிக் காய்ச்சல் பீதியை பூதகரமாக பரப்பிட ஐ நாவின் சுகாதாரத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள தமது ஆட்களின் மூலம் மருந்துக் கம்பனிகள் வேலை செய்தன என்பது அம்பலமானதும் நினைவில் கொள்ளத்தக்கது.

கினியாப் பன்றி



இந்தியக் குழந்தை:
அண்ணே, பாரின் பன்னி அளவுக்கு நாங்க வொர்த் இல்லையாண்ணே?





இந்தச் சூழலில் மருத்துவத் துறை தனியார்மயம் அப்பாவி மக்களின் வாழ்வில் இழவு கொட்டுவதை விமர்சித்து எழுதப்பட்ட பழைய செய்தி விமர்சனம் ஒன்று இங்கு மறு பதிப்பு செய்யப்படுகிறது. நாட்டைக் கூட்டிக் கொடுத்தாவது வல்லரசாகலாம் என்று பேசுபவர்கள் தமது வீட்டுக் குழந்தைகளை பலி கொடுத்து வல்லரசு லட்சியக்கனவை நனவாக்கிக் கொள்ளட்டும்.

அசுரன்
###########

கினியா பன்றிகளா இந்தியர்கள்?

பார்ப்பனர்களின் கூடாரமாக கொக்கரிக்கும் புது தில்லியைச் சேர்ந்த AIIMS மருத்துவ கல்வி நிலையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உபயோகப்படுத்தி சில தகவல்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன(Times of India, ஆகஸ்டு 18 முதல் பக்கம்) . கடந்த இரு வருடங்களில் அங்கு 49 குழந்தைகள் இறந்துள்ளனர். சரியாகச் சொன்னால் கொல்லப்பட்டுள்ளனர். பன்னாட்டு கம்பேனிகள் தமது புதிய மருந்துகளை சந்தைப்படுத்துவதற்க்கு முன்பு குரங்கு, பன்றி உள்ளிட்டவற்றின் மீது சோதித்துப் பார்த்து பிறகு கடைசியாக நான்காவது கட்டமாக மனிதர்கள் மீது சோதித்து பார்ப்பார்கள். இது போல மருந்துக்களை பரிசோதனை செய்வதற்க்காக இந்த குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அந்த மருந்துகளின் தோல்வி 49 குழந்தைகளின் மரணம். ஏழைக் குழந்தைகள்தானே? குப்பைகள் செத்துத் தொலையட்டும். என்ன வந்தது நமக்கு?






மருத்துவம் அதிகமாக தனியார்மயம் செய்யப்பட்டுள்ள நாடு இந்தியா. குறிப்பாக உலகமயத்திற்கு பிற்பாடு கொஞ்ச நஞ்ச பொது மருத்துவமும் அழிந்து நாசமாகிவிட்டது. இன்னிலையில் விலை அதிகமான மருத்துவம் செய்ய வசதியின்றி வக்கற்று அலையும் இந்திய நோயாளிகள் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையிலேதான் உள்ளனர். ஒன்றும் செய்ய இயலாமல் நோயுடன் இருப்பதைவிட இலவசமாக கொடுக்கப்படும் இந்த பரிசோதனை மருந்தை எடுத்துக் கொண்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்பதுதான் அவர்களின் நிலைமை.

எப்படி இந்தியாவின் உழைப்பாளர்களும், இந்திய மூளைகளும், இந்திய வளங்களும் எடுத்துக் கொள்ள ஆளின்றி சந்தையில் மலிவு விலைக்கு கிடைக்கச் செய்யப்படுவதன் காரணமாகவே குறை கூலி பிரதேசமாக இந்தியா அறியப்பட்டு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாகியுள்ளதோ - அது நியாயப்படுத்தப்படுகிறதோ - அதே போல மருத்துவ பரிசோதனை சாலைகளில் பயன்படும் குறைந்த விலை கினியா பன்றிகளாக இந்திய நோயாளிகள் பன்னாட்டு கம்பேனிகளால் பயன்படுத்தப்படுகின்றனர். மருந்தையும் மருத்துவத்தையும் எட்டாக்கனியாக்கியதன் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இலவசமாக மருந்து கொடுக்கும் தேவதூதர்கள் என்ற பட்டம் வேறு கினியா பன்றிகளிடமிருந்து கிடைக்கும் போது கேட்க்கவா வேண்டும்?

இங்கு பரிசோதனை செய்வது சட்டரீதியாகவும் சிக்கலலில்லதாது, 60% வரை குறைந்த செலவில் செய்ய முடிகிறது என்பதே இந்தியாவை நோக்கி பன்னாட்டு பரமாத்மாக்கள் படையெடுக்கக் காரணம். இதற்கு வசதியாக இரு வருடங்களுக்கு முன்பு சட்டரீதியான சிக்கல்களை எல்லாம் சரி செய்தது இந்திய அரசு. குறைந்த பட்ச பாதுகாப்புகளாக உறுதி செய்யப்பட்டிருந்தவை எல்லாம் குப்பையில் கடாசப்பட்டன, எப்படி அந்த குழந்தைகள் சோதனைச்சாலை பன்றிகளாக கடாசப்பட்டனரோ அப்படி. சர்வதேச காப்புரிமைச் சட்டத்தின் பெயரில் இந்தியாவில் விலை குறைவாக கிடைத்த மருந்துகள் எல்லாம் ராக்கேட் விலைக்கு மாற்றப்பட்டன. கக்கூஸ் போனால் கூட சேவை வரி விதிக்கும் பா சிதம்பரம் இந்தியர்களை கினியா பன்றியாக்கினால் சேவை வரி கிடையாது என்று அறிவித்தார். இதோ கினியா பன்றிகளின் சாவு இன்று வெளி வந்துள்ளது. இது ஒரு இடம் மட்டுமே இன்னும் பல இடங்களில் பல மருந்துகள். தமிழகத்தில் கோவையிலும் கூட குறிப்பான சில மருந்துகள் பரிசோதனை செய்யப்படும் செய்தி முன்பு படித்த ஞாபகம்.

இந்த சோதனைகள் நேர்மையாக செய்யப்படுமா என்பதை கட்டுப்படுத்துவதற்க்கு எந்த சட்டமும் கிடையாது. எந்த அரசு அமைப்போ அல்லது வேறு ஏதேனுமோ கிடையாது. படிக்கத் தெரியாத, படித்தும் பாமரர்களாக உலாவும் பெரும்பான்மை இந்தியனிடம் ஒரு பேப்பரை நீட்டி அதில் கையெழுத்திடச் சொல்லிவிட்டு இந்த மருத்துவ பரிசோதனை அயோக்கியத்தனம் செய்யப்படுகிறது. சட்டப்படி எல்லாம் சரிதான். ஏழை இந்தியக் குழந்தை கினியா பன்றியாக கொல்லப்படுவதும்கூட சட்டப்படி சரிதான். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்க்கு காசு கூட கொடுக்கப்படுவதில்லை. இது இலவசம். இலவசமாக கொடுத்தால் இந்தியன் தொலைக்காட்சி பெட்டியிலிருந்து, பினாயில் வரை வாங்கி வைத்துக் கொண்டு பதிலுக்கு தனது உயிரையே நன்றிக்கடனாக தருவானல்லவா? சுதந்திரத்தையே இலவசமாக கத்தியின்றி ரத்தமின்றி ஆங்கிலேயரிடமிருந்து காந்தி தாத்தா வாங்கி தந்தாரல்லவா?


நாய்க் கூட குரல் கொடுக்க ஒரு மேனாக இருக்கு? எங்களுக்கு?

நாயின் கஸ்டங்களை புரிந்து கொண்டு நாய்களைக் கொல்லாதே என்று போராடினார் பாஜகவைச் சேர்ந்த நாய்க்கு பிறந்த மேனகா காந்தி. ஆடு, குதிரைகளையும் கூட பரிசோதனை என்ற பெயரில் கொல்லாதே என்று போராடினார் அந்த மேனகா காந்தி. அவர் பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த போதுதான் நாய்க்கடி மருந்து தயாரிப்பு நிறுவனமான கிங்ஸ் இன்ஸ்டியுட் மேற்சொன்ன காரணங்களைக் காட்டி முடக்கப்பட்டது. ஒரு பக்கம் நாய்க்கடி மருந்து தயாரிப்பை மிருகாபிமானத்தின் பெயரிலும், காப்புரிமையின் பெயரிலும் முடக்கியதுடன், இன்னொரு பக்கம் நாய்களை கொல்வதையும் நிறுத்தினர். விளைவு பெரு நகரங்களில் கினியா பன்றிகள்..... மன்னிக்கவும் ஏழை உழைக்கும் மக்களின் குழந்தைகள் நாய்களால் கொல்லப்படுகின்றனர்.

இன்னொரு பக்கம் கினியா பன்றிகள்... மீண்டும் மன்னிக்கவும்.. ஏழை உழைக்கும் மக்களின் குழந்தைகள் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் ஏகாதிபத்திய வெறி நாய்களால் கொல்லப்படுகின்றனர். ஆடு, குதிரைகளை மருத்துவ பரிசோதனையிலிருந்து காப்பாற்றிய மேனாகா காந்தி வகையாறாக்களும் வரவில்லை, பசு மாட்டுக்காக கலவரங்கள் நடத்தும் சங் பரிவாரங்களோ அல்லது குழந்தைகளுக்காகவே இன்று வரை தனது சிகை அலங்காரத்தை மாற்றாமல் வைத்து இருக்கும் அரசவை முன்னாள் கோமாளி அப்துல் கலாமுமோ வரவில்லை. மதம் பிடித்த யானைகள், சிக்கன் பிரியானியில் வெந்து சாகும் சிக்கன், ஈ, கொசு இவற்றுக்கு எல்லாம் உச்சு கொட்டி மனஉளைச்சலுக்காளாகும் மென்மையான இதயம் படைத்த மனிதாபிமானத்தின் இலக்கண புத்திரர்கள் இது போன்ற கினியா பன்றிகளின் சாவுக்கு என்ன கொட்டுவார்கள் என்று தெரியவில்லை.

மறுகாலனியாதிக்கம் எதைத்தான் விட்டு வைத்துள்ளது? குறைந்த கூலிக்கு உழைப்பு சக்தி வேண்டும் என்பதற்க்காக விவசாயம் சாகடிக்கப்பட்டு ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை, குறைந்த கூலிக்கு இந்திய மூளைகள் என்பதற்க்காக தன்மானத்தை அடகுவைத்த தற்குறிகளின் தேசம், கூந்தலை விற்று பிழைக்கின்றனர் ஆந்திர பெண்கள், மானத்தை விற்றும்.., சுமங்கலி திட்டத்தில் நவீன கொத்தடிமைகள் கல்யாண கனவுகளுடன், நாய்கள் சுதந்திரமாக அலைந்து தெருக்களில் குதறி தள்ள குழந்தைகளோ கொத்தடிமைகளாக கட்டுமான கூடங்களில், பிரவச வேதனையையும் கூட அவுட் சோர்ஸ் செய்து இந்திய பெண்களை வாடகைத் தாய்களாக்கி விட்டது.... பாரத மாத கி ஜெய். இதோ நமது நோய்களையும், நோயாளிகளையும் கூட அவுட் சோர்ஸ் செய்துவிட்டனர். இது பிணங்களின் நாடாக மாறினால் குறைந்த விலை சுடுகாட்டு கூடமாகவும் இந்திய அவுட் சோர்ஸ் செய்யப்படும். ஏனேனில் இந்தியாவுக்கு அவுட் சோர்ஸ் செய்யும் சுதந்திரம் 1947 ஆகஸ்டு 15ல் இலவசமாக கொடுக்கப்பட்டது. வந்தே மாதரம்......

செய்திரசம்


தொடர்புள்ள கட்டுரைகள்:

மருந்துப் பரிசோதனை: சோதனைச்சாலை எலிகளாக மாற்றப்படும் ஏழைகள்

தெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா?

Clinical Trials in India: ethical concerns

Outsourcing Drugs: Human Guinea Pigs

A Nation of Guinea Pigs

மருந்துப் பரிசோதனை: சோதனைச்சாலை எலிகளாக மாற்றப்படும் ஏழைகள்

பிஞ்சென்றும் பாராது இலாபவெறி

பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வேட்டைக் காடாகிறது இந்தியா!

பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வேட்டைக் காடாகிறது இந்தியா!

சுகாதாரத்துறை தனியார்மயம் - தாய்மையை கருவறுக்கும் அவலம்

5 பின்னூட்டங்கள்:

said...

Who care your article... Women want TV serial... Men want TASMAC sarakku...

said...

படிக்க படிக்க அழுகையா வருது. வேற எதுவும் செய்ய முடியாதாண்னே.

said...

மாற்றவே முடியாது இந்தியாவை ... சுயநலப் பேய்கள் ஆண்டால் இப்படிதான் ஆகும் ... வெறுப்பாக இருக்கிறது ...

said...

இது பற்றி எங்கே சிந்திக்கிறார்கள். நித்யானந்தா என்ன செய்தார்? மானாட மயிலாடவில் மார்புத் தெரியுமா என ஏங்க வைத்ஹ்டிருக்கிறது பாழாஉப் போன ஊடகம்.

said...

கஞ்சி ஊத்த வக்கில்லாத வல்லரசு இந்தியா:

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/12-india-ranks-below-pak-china-hunger-index.html

அசுரன்

Related Posts with Thumbnails